சனி, 24 மார்ச், 2012

சென்னை பார்ப்பனர்களே. தமிழை கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி

மெரினா படம் சென்னையை சரியாகதானே காட்டியது?
-சிவகாமியின் செல்வன், திருத்துறைப்பூண்டி
சென்னையை சரியாக காட்டவில்லை. ஆனால், மோசமாகவும் காட்டவில்லை. மற்றபடி தமிழ் சினிமா சென்னையை, சென்னை மக்களை சென்னை மொழியை. இழிவானதாக இழிவானவர்களாக தொடர்ந்து சித்திரித்துக் கொண்டு வந்திருக்கிறது.
குறிப்பாக சென்னை மொழியை மிக கேவலமாக அவமானபடுத்திக் கொண்டே இருக்கிறது. சினிமாவில் பேசுவது போன்று செயற்கையான, சென்னை தமிழை சென்னையில் நீங்கள் எங்குமே பார்க்க முடியாது.
சென்னை தமிழை இப்படி கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தியதற்கான முழு காரணமும் சென்னை வாழ் பார்ப்பனர்களே.

Meena Kandasamy சாதிப்பேயை அகற்றும் நோக்கில்


உச்சநீதிமன்றம்: ரம்மி விளையாடுவது சூதாட்டம் இல்லை

சென்னை, மார்ச்.23- பணம் வைத்து விளையாடும் ரம்மி சீட்டாட்டத்தை சூதாட்டமாகவே கருத வேண்டும் என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தியாகராயநகரை சேர்ந்த மகாலட்சுமி கலாச்சார சங்கம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில், சென்னை தியாகராயநகரில் 1981- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் சங்கத்தில் 49 ஆயுள்கால உறுப்பினர்களும், 235 சாதாரண உறுப்பினர்களும் உள்ளனர்.
இவர்களில் பலர் 13 சீட்டுகள் கொண்ட ரம்மி என்ற சீட்டு விளையாட்டை விளையாடுவார்கள். பணம் வைத்தும் வைக்காமலும் இந்த விளையாட்டை உறுப்பினர்கள் ஆடுவது வழக்கம்.

கலைஞர்: பிரதமரை வசைபாடியவர் மூன்றே நாளில் நன்றி நவின்றார்

சென்னை: "இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, தான் தான் கடிதம் எழுதினேன், தீர்மானம் கொண்டு வந்தேன், பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன், என்றெல்லாம் தற்புகழ்ச்சி பாடி, ஊரை ஏமாற்ற நினைக்கிறார் ஜெயலலிதா' என, தி.மு.க., தலைவர்கலைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: கடந்த 20ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைக்கு எதிராக ஐ.நா., சபையில் அமெரிக்கா   கலைஞர் கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என பிரதமர் மன்மோகன் கூறியது, ஒரு மழுப்பலான பதில்' எனக் கூறியிருந்தார். "கருணாநிதியின் கபட நாடகத்துக்கு, பிரதமரே துணைபோகும் வகையில், இலங்கையின் மனித உரிமை மீறல் பற்றி எதையுமே குறிப்பிடாமல், தெளிவற்ற ஒரு பதிலைக் கூறியிருப்பது வருத்தத்துக்குரியது' எனவும் குறிப்பிட்டிருந்தார்.

கணக்கு இடிக்கிறதே!அரசின் தொலைநோக்கு கனவு நிறைவேறுமா?

தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டத்தில், அடுத்த 11 ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் 15 லட்சம் கோடி ரூபாயில், பெரும்பாலும் தனியார் முதலீடுகளை சார்ந்தே உள்ளதால், அரசின் கனவு நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கட்டமைப்புக்கு முக்கியத்துவம்: மொத்தம் எதிர்பார்க்கப்படும் 15 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 13.25 லட்சம் கோடி ரூபாய், உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக எதிர்பார்க்கப்படுபவை. இதில், எரிசக்தித் துறையில் 4.5 லட்சம் கோடி, போக்குவரத்துத் துறையில் 3.7 லட்சம் கோடி, தொழில் மற்றும் வர்த்தகத் துறைக்கு 1.6 லட்சம் கோடி, நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு 2.75 லட்சம் கோடி என, எதிர்பார்க்கப்பட்டுள் ளது.

கனிமொழி:சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை. எனவே, இந்தக் குற்றச்சாட்டுகளை நீக்கவேண்டும்' என்று கோரி, டில்லி ஐகோர்ட்டில் கனிமொழி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், கடந்த ஆண்டு மே மாதம், கனிமொழி கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், குற்றச் சதிக்காகவும் வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு நவம்பரில் கனிமொழிக்கு சி.பி.ஐ., கோர்ட் ஜாமின் வழங்கியது. இதையடுத்து, தற்போது வரை வழக்கு விசாரணையில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.

வெள்ளி, 23 மார்ச், 2012

G.D.Naidu பஸ்ஸில் தானாகவே டிக்கெட் தரும் மெஷினை கண்டுபிடித்தார். கணக்கு போடும் கால்குலேட்டரை உருவாக்கினார்.

இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் எனவும், அகிலம் போற்றும் அதிசய மனிதர் எனவும் புகழப்படுகிற ஜி.டி.நாயுடு மிகப் பெரிய விஞ்ஞானி மட்டுமல்ல, பிஸினஸ் உலகில் தன் முத்திரையை ஆழமாகவே பதித்தவர். நாயுடு சமூகம் தந்த இந்த பிஸினஸ்மேனை பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

கோபால்சாமி துரைசாமி நாயுடு (சுருக்கமாக ஜி.டி.நாயுடு) 1893-ல் பிறந்தார். கோவைக்குப் பக்கத்தில் சூலூருக்கு அருகில் இருக்கிற ஒரு குக்கிராமம்தான் கலங்கல். இந்த கிராமத்தில் ஜி.டி.நாயுடுவின் தந்தை ஓரளவுக்குப் பெரிய விவசாயி. நாற்பது ஏக்கரில் விவசாயம் செய்த கொண்டிருந்தார்.ஜி.டி.நாயுடுவுக்கு சிறுவயது முதலே பள்ளிப் படிப்பில் அவ்வளவு நாட்டமில்லை. பள்ளிக்கூடத்தில், இல்லாத சேஷ்டைகளை எல்லாம் செய்தார். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே பள்ளிக் கூடத்திற்கு முழுக்குப் போட்டு விட்டார்.

கடல்' படத்திற்காக கடலுக்கு நடுவில் ஏ.ஆர்.ரஹ்மான்!

மணிரத்னம் இயக்கிக் கொண்டிருக்கும் ’கடல்’ படத்திற்கும் ரஹ்மான்தான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான இரண்டு பாடல்களுக்கு ரஹ்மான் ஏற்கனவே இசையமைத்துவிட்டார்.
மற்ற பாடல்களை பற்றி பேச ஏ.ஆர்.ரஹ்மான் தூத்துக்குடி வந்தபோது தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் அருகே இருக்கும் ஷூட்டிங்க் ஸ்பாட்டிற்கு ரஹ்மானும் மணிரத்னமும் படகில் சென்றுள்ளனர்.
கடல் படத்திற்கு கடல் மார்க்கமாக சென்று பாடல்களை பற்றி விவாதித்துள்ளனர். கடல், மணிரத்னம் இதற்கு முன்பு எடுத்த ரோஜா படத்தின் மறுபதிப்பாக இருக்குமா? என ரசிகர்களால்

118 கேள்விகளுக்கு பதில்: சசிகலாவிடம் தொடர்ந்து வாக்குமூலம் பதிவு

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலாவிடம் தொடர்ந்து வியாழக்கிழமை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது முன்னாள் தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வியாழக்கிழமை ஆஜராகினர். நீதிபதி மல்லிகார்ஜுனையா குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 313-ன் கீழ் வாக்குமூலத்தை சசிகலாவிடம் தொடர்ந்து பதிவு செய்தார். சசிகலா அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாவது: 

நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடாமல் 10.6 லட்சம் கோடி இழப்பு

புதுடெல்லி : நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடாமல் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அரசுக்கு ரூ.10.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் புகார் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் கணக்குகளை சரிபார்க்கும் கணக்கு தணிக்கை துறை, நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு குறித்து வரைவு அறிக்கை தாயாரித்துள்ளது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக் கல் செய்யப்படவில்லை. அதற்கு முன்பே நேற்று பத்திரிகைகளில் அறிக்கை விவரங்கள் வெளியானது.
அதில், ‘2004 முதல் 2009ம் ஆண்டு வரையான காலத்தில் நிலக்கரி சுரங்கங்களை ஏலத்துக்கு விடாமல் தனியார் மற்றும் பொதுத்துறையை சேர்ந்த 100 நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இன்றைய சந்தை நிலவரப்படி அரசுக்கு ரூ.10.67 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

நித்யானந்தா ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதாக வழக்கு

நித்யானந்தா பெண் பக்தர்களிடம் மட்டும் தவறாக நடந்து கொள்ளவில்லை. இயற்கைக்கு மாறான பாலியல் உறவு வைத்துக் கொள்ளவும் ஆர்வம் காட்டினார். பிதாதி ஆசிரமத்தைச் சேர்ந்த ஆண் பக்தர் ஒருவரை நித்யானந்தா ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தினார்.
 நடிகை ரஞ்சிதாவும்,  நித்யானந்தாவும் படுக்கையறையில் சேர்ந்து இருப்பது போன்ற வீடியோ காட்சி தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

முழுவீச்சில் அணு மின் உற்பத்தி பணி: நிலைய இயக்குனர் தகவல்

: ""கூடங்குளம் அணு மின்சாரம் விரைவில் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கிறது,'' என நிலைய இயக்குனர் மற்றும் முதல் அணு உலையின் திட்ட இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தரன் தெரிவித்தார்.

அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் கூடங்குளம் அணு மின் நிலையப்பணிகள் உடனே துவக்கப்பட்டது. ஐந்து மாத இடைவெளிக்கு பின் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், ஊழியர்கள் என அனைவரும் பணிக்கு செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. இத்திட்டம் மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக துவக்கப்பட்டது. இதை மக்களுக்கு பாதுகாப்புடன் அர்ப்பணிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

திருமணத்திற்குப் பிறகு வாங்கும் சொத்தில் மனைவிக்கு பங்கு: வருகிறது புது சட்டம்

புதுடில்லி: திருமண சட்டங்களை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இதன்மூலம், திருமணத்திற்கு பிறகு கணவர் பெயரில் வாங்கும் சொத்துக்களில், மனைவிக்கும் பங்கு உண்டு. இந்தத் திருத்தப்பட்ட சட்ட மசோதா, இந்த வாரம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வருகிறது.
"திருமண சட்டங்கள் திருத்த மசோதா 2010' இரண்டாண்டுகளுக்கு முன், ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவும் தன் பரிந்துரைகளை அளித்தது. அவற்றில், நான்கு முக்கிய பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

வியாழன், 22 மார்ச், 2012

கதைக்கு அந்த நிர்வாண காட்சி அத்தியாவசியமானது


காதல்' சரண்யா மழைக்காலம்' என்ற புதிய படத்தில் நடித்து வந்தார். ஓவிய கல்லூரியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை இது. புதுமுகம் ஸ்ரீராம் கதாநாயகனாகவும்,  காதல்' சரண்யா கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள். எஸ்.தீபன் டைரக்டு செய்திருக்கிறார்.
சமுதாயத்துக்கு தேவையான நல்ல கருத்துக்களை கூறும் படம் என்று கூறி, தணிக்கை குழுவினர், இந்த படத்துக்கு யு' சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்.
கதைப்படி, காதல்' சரண்யா ஓவிய கல்லூரியில் நிர்வாண போஸ்' கொடுப்பது போலவும், அதை கதாநாயகன் ஓவியமாக வரைவது போலவும் ஒரு காட்சி இடம் பெறுகிறது.இந்த காட்சி, தத்ரூபமாக அமைய வேண்டும் என்று டைரக்டர் தீபன் விரும்பினார். அதை,  காதல்' சரண்யாவிடம் எடுத்து சொன்னார். அதற்கு, சரண்யாவும் சம்மதித்தார். அதன்படி, அவர் நடித்த நிர்வாண காட்சி, மிக தத்ரூபமாக படமாக்கப்பட்டது.
நிர்வாண காட்சியில் நடித்தது பற்றி, காதல்' சரண்யா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

Sri Sri Ravishankar:அரசு பள்ளிக்கூடங்கள் Naxalit கூடார மா ம்அனைத்துமாம்

டெல்லி: இந்தியாவின் அரசு பள்ளிக்கூடங்கள் அனைத்துமே நக்சலைட்டுகளின் கூடாரம் என்று வாழும்கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீரவிசங்கர் கூறியிருப்பதற்கு மத்திய அமைச்சர் கபில்சிபல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த டபுள் ஸ்ரீ ஷங்கர் என்று அறியப்படும் வியாபார சாமியார் மக்களின் அறியாமையை காசாக்கும் மற்றுமொரு போலியாகும்.
இது தொடர்பாக கபில்சிபல் கூறியுள்ளதாவது:
ஸ்ரீரவி சங்கரின் கருத்தை ஏற்க முடியாது. முன்னாள் குடியரசுத் தலைவர்கள் , பிரபல நீதிபதிகள், அரசில் உயர் பதவி வகிப்போர் என்று ஏராளமான பிரபலங்கள் அரசு பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசு பள்ளிக்கூடங்களில் படித்த இவர்கள் எல்லாம் நக்சலைட்டுகளா?'' என்றார் அவர்.
ரவிசங்கர் மறுப்பு

சூறைக் காற்றாக மோதிய பண பலத்தை வெல்ல முடியவில்லை-வைகோ

சென்னை: ம.தி.மு.க. கூட்டணி ஆதரவு ஏதும் இன்றி, களத்தில் போட்டியிட்டது. தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வாக்காளர்களைச் சந்தித்தபோது, அவர்களின் அன்பையும், கனிவான வரவேற்பையும் பெற முடிந்தது. ஆனால், சூறைக்காற்றாக மோதிய பண பலத்தை மீறி வெற்றியைப் பெற முடியவில்லை. எனினும், எங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்கும் விலை மதிக்க முடியாதது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

காதலிக்க நேரமில்லாத தம்பதியரா? இதப் படிங்க !

ஐந்து இலக்க சம்பளம், மல்ட்டிநேசனல் கம்பெனி வேலை என இன்றைய இளையதலைமுறை நிறையவே மாற்றங்களை சந்தித்து வருகிறது. தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்வதால் இருவரும் தங்களின் காதலை சரியாக பகிர்ந்து கொள்ளக்கூட நேரமிருப்பதில்லை.
காலை நேரத்தில் அவசரமாக கிளம்பவும், மாலையில் அயர்ச்சியாக திரும்பி வந்து உறங்கவும்தான் முடிகிறது. இதனால் இல்லற வாழ்க்கை ஒருவித வெறுமை நிரம்பியதாக மாறிவிடுகிறது. நாளடைவில் விரிசலையும் ஏற்படுத்திவிடுகிறது. இதனை தவிர்க்கவும், இல்லறத்தை உற்சாகம் மிக்கதாக மாற்றவும் ஆலோசனை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள். படித்து பாருங்களேன்.
குடும்பத்திற்கான நாள்

Agent Vinod ஏஜென்ட் வினோத்’ திரைப்படம் பாகிஸ்தானில் தடை?

Viruvirupu 
இந்த வாரம் வெளியாகும் ஹிந்தி திரைப்படம் ‘ஏஜென்ட் வினோத்’, பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு காரணம், ‘ஏஜென்ட் வினோத்’ திரைப்படத்தில், பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ., கேலியாகச் சித்தரிக்கப்படுகிறது என்று பாகிஸ்தான் தணிக்கை குழு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இந்தியப் படங்களுக்கு 1965 முதல் நிரந்தர தடை இருந்தது. 43 ஆண்டுகளின் பின் 2008-ம் ஆண்டில்தான், நிரந்தர தடை நீக்கப்பட்டு, படத்துக்கு படம் தனித்தனியாக தணிக்கை செய்யும் முறை அமலுக்கு வந்தது.
இதற்குமுன் த டர்ட்டி பிக்சர், டெரே பின் லேடன் ஆகிய படங்கள் சமீபகாலத்தில் பாகிஸ்தான் தணிக்கை குழுவினரால் தடை செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீராம் ராகவனின் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘ஏஜென்ட் வினோத்’த்தில் ஐ.எஸ்.ஐ.-யை எப்படி கிண்டலடித்திருக்கிறார்கள் என்பது சரியாக தெரியவில்லை.

அணுசக்தி தேவை: கலாம் வலியுறுத்தல்

சென்னை: "அடுத்த பத்தாண்டுகளில், மிகப் பெரிய அணு மின் உற்பத்தி மையமாக கூடங்குளம், உலகில் அடையாளம் காட்டப்படும்' என, முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: மின் தேவையில் இந்தியா தன்னிறைவடைவதற்கு, அணு மின் உற்பத்தி தேவை என்று உணர, கூடங்குளம் அனுபவம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அணு மின் உற்பத்தி செய்யப்படும் முறை, அணு மின் நிலையங்களின் நம்பகத்தன்மை, அவற்றின் பாதுகாப்பு மட்டுமின்றி, 2030க்குள் மின் உற்பத்தியில் தன்னிறைவடைய அணு மின் சக்தி எவ்வளவு அவசியம் என்பதையும் உணர்ந்துகொள்ள, இந்த அனுபவம் உதவியுள்ளது.

இதுபோல் இடைத்தேர்தலை பார்த்ததில்லை: விஜயகாந்த் கருத்து

சென்னை: ""இதுபோல் ஒரு இடைத்தேர்தலை இதுவரை பார்த்ததில்லை. உழைப்பிற்கும், பணத்திற்கும் நடந்த போட்டியில் கடைசியில் பணம் தான் வென்றுள்ளது'' என சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தோல்வி குறித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் என்பது கரன்சிக்கும், கட்சிகளுக்கும் நடந்த போட்டியாகும். தேர்தலில், ஆளும்கட்சி பணத்தை வாரி இறைத்தது. எதிர்க்கட்சிகள் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. வாக்காளர்களை சந்தித்து நேரில் ஓட்டுத்தான் கேட்க முடிந்தது. உழைப்பிற்கும், பணத்திற்கும் நடந்த போட்டியில் கடைசியில் பணம் தான் வென்றுள்ளது. அதிகார துஷ்பிரயோகத்தில் துவங்கி, அளவற்ற வாக்குறுதிகள் வரை தாராளமாக அ.தி.மு.க.,வினர் வழங்கினார்கள்.

இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம்,செல்போன் ரத்து.இடிந்தகரை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது

இடிந்தகரை: உதயக்குமாரைக் கைது செய்தவற்காக ஒட்டுமொத்தமாக இடிந்தகரை மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது தமிழக அரசு. அந்தக் கிராமம் முழுமைக்கும் பால் விநியோகம், மின்சாரம், குடிநீர் விநியோகம் ஆகியவற்றை துண்டித்துள்ளனர். மேலும் செல்போன் டவர்களையும் செயலிழக்க வைத்துள்ளனர்.
இதனால் தமிழகத்தின் இதர பகுதிகளிலிருந்து இடிந்தகரை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்களையும் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ள அரசின் செயல் மனிதநேயமற்றது என்ற கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.
உண்மைகள் வெளியுலகுக்குத் தெரிந்து விடாமல் தடுப்பதற்காக பத்திரிக்கையாளர்களையும் இடிந்தகரைக்கு செல்ல விடாமல் போலீஸார் தடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் சோலார் ஆட்டோ ரிக்ஷாக்கள் விற்பனைக்கு

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத சூரிய சக்தியில் இயங்கும் சோலார் ஆட்டோ ரிக்ஷாக்கள் விரைவில் டெல்லியில் அறிமுகமாகிறது. முதலில் 1000 சோலார் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
நகர்ப்புற போக்குவரத்தில் ஆட்டோ ரிக்ஷாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதே அளவுக்கு ஆட்டோ ரிக்ஷாக்கள் வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசுபடுகிறது.
இதை கருத்தில்க்கொண்டு, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சூரிய சக்தியில் இயங்கும் புதிய ஆட்டோ ரிக்ஷாக்கள் டெல்லியில் அறிமுகம் செய்யப்படுகிறது.

புதன், 21 மார்ச், 2012

94,927 ஓட்டுக்களை 32 ஆல் வகுத்தால், ஒரு அமைச்சர் வெறும் 2966 மட்டுமே!

சங்கரன்கோவிலில் அமைச்சருக்கு விழுந்தது, வெறும் 3,000 ஓட்டுக்கள்!

Viruvirupu,
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி 68757 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எதிர்பார்க்கப்பட்ட முடிவுதான். முத்துச்செல்விக்கு மொத்தமாக 94,927 ஓட்டுகள் விழுந்துள்ளன.
ஆளும் கட்சி என்ற வசதி, ஏற்கனவே பல தடவைகள் ஜெயித்த தொகுதி, 32 அமைச்சர்கள் டோரா அடித்துச் செய்த பிரசாரம் என்று எல்லா பிளஸ் பாயின்டுமே இருந்துகொண்டு, இந்த வெற்றியைக்கூட அடையா விட்டால் எப்படி? எனவே அதில் அதிசயம் ஏதும் கிடையாது.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, 2-ம், 3-ம் இடங்களுக்குத்தான் போட்டி.
டெபாசிட் இழந்தாலும், 2-வது இடத்தை கஷ்டப்பட்டு தக்க வைத்துக் கொண்டுள்ளது தி.மு.க. இந்த 2-வது இடமும், சில தினங்களுக்காவது ஸ்டாலினும், அழகிரியும் ஒற்றுமையாக ஒரே இடத்தில் இருந்ததும்தான் அவர்களுக்கு கிடைத்த பலன்.

சங்கரன்கோவில் சந்தேகமே இல்லை வாங்கப்பட்ட ஒட்டு

அரசின் இலவசப் பொருட்கள் தாராளமாக விநியோகிக்கப்பட்டன. அத்தனை பணிகளையும் முடித்த பிறகுதான் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
சென்னை: சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அதிமுகவின் திராணியை நிரூபித்து விட்டார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் இந்த வெற்றியைப் பெற அவருக்கு 32 அமைச்சர்கள் தலைமையிலான மெகா தேர்தல் பணிக்குழு தேவைப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அரசாங்கமே சங்கரன்கோவிலில் குவிந்து கடுமையாகப் போராடி, கஷ்டப்பட்டு வேலை பார்த்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளது.

சங்கரன்கோவில்-68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி

சென்னை: சங்கரன்கோவில் தொகுதி மக்கள் எப்போதுமே அதிமுகவுக்குத்தான் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்போது தேமுதிகவுக்கு அவர்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர். அதிமுகவுக்கு வாக்களித்து, மற்ற அத்தனை கட்சியினரையும் டெபாசிட் இழக்க வைத்த அத்தனை பேருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

தெய்வம் நின்று கொல்லும்: நடராஜனை சாபம்!

Natarajan
தஞ்சாவூர்: ஜெயா பப்ளிக்கேசனுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நடராஜன் கூறியுள்ளார்.
தஞ்சை விளாரை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சசிகலாவின் கணவர் நடராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை நடராஜனுக்கு ஜாமீன் வழங்கியது. ஆனாலும் அவர் மீது மேலும் ஒரு வழக்கு போடப்பட்டதால் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.
இந் நிலையில் தஞ்சை விளார் ரவுண்டானா பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் ஆல்பர்ட் என்பவர் தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் நடராஜன், இளவழகன், சங்கர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நடராஜன், சங்கர் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் நடராஜனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தஞ்சை நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் தஞ்சை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மாஜிஸ்திரேட் முன் நடராஜனும் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு முருகன், போலீஸ் காவலுக்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து நடராஜன் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைவாசலில் நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில், வழக்கு போடுவது அரசின் கடமை. அதை எதிர்கொள்வது எங்களின் கடமை. தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் (முதல்வர் ஜெயலலிதா) அது போல் நடக்கக்கூடாது.

வித்யாபாலனுக்கு பதிலாக சினேகா!

இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றி பெற்றுள்ள படம் “கஹானி”. தமிழில் ரீமேக் ஆகவிருக்கும் இந்த படத்தில் சினேகாவை நடிக்க வைக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறதாம்.
பிரசன்னாவுடன் மே 11-ம் தேதி திருமணம் நடக்கவிருக்கும் நேரத்தில் சினேகா ஏற்கனவே ஹரிதாஸ் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கஹானி படத்தில் வித்யாபாலன் காணாமல் போன கணவனைத் தேடிக் கண்டுபிடிக்க கொல்கத்தா செல்லும் பெண்ணாக நடித்திருப்பார். 

ஆஸ்பத்திரி: பணம் கேட்டதை யாரிடமும் சொல்ல வேண்டாம்..மருத்துவ காப்பீட்டு திட்ட

விருதுநகர் :மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற, நோயாளிகளிடம் பணம் கேட்கும் ஆஸ்பத்திரிகளால், அத்திட்டத்தின் நோக்கமே கேள்விக்குறியாகி உள்ள நிலையில், விருதுநகரை சேர்ந்த தொழிலாளி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் உயிரை காக்க போராடி வருகிறார்.
விருதுநகர் அல்லம்பட்டி அனுமன்நகரை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி பால்ராஜ், 52, மனைவி மாரீஸ்வரி, 45. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ காப்பீட்டு திட்ட உதவி மையத்தை நாடினார். அவர்கள், மதுரை தனியார் ஆஸ்பத்திரி ஒன்றிற்கு அனுப்பி வைத்தனர். அதன்படி அங்கு மனைவியை அழைத்து சென்று, காப்பீட்டு அடையாள அட்டையை காண்பித்த பால்ராஜிடம், ""ரூ.10 ஆயிரம் கட்டினால் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிப்போம்,'' என டாக்டர் கூற

WallStreet ஆக்கிரமிப்பு' போராட்டத்தின் ஆறாவது மாத நிறைவு: 15 பேர் கைது

நியூயார்க், மார்ச் 19- உலகின் கவனத்தையே தன் பக்கம் திருப்பிய, வால்ஸ்ட்ரீட் ஆக்கிர மிப்பு' போராட்டத்தின் ஆறாவது மாத நிறைவு நாள், நேற்று முன்தினம் நியூயார்க்கில் கொண்டா டப்பட்டது. ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டவர் களை, நியூயார்க் காவல் துறையினர் கைது செய் தனர்.
அமெரிக்க அரசின் பல்வேறு கொள்கை முடிவுகளில், செல்வாக்கு மிக்க தனியார் நிறுவனங் கள் தலையை நுழைத்து, தங்களுக்கேற்ப மாற்றிக் கொள்கின்றன. இதனால் பாதிக்கப்படுவது, ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் தான். இதை உணர்ந்த அமெரிக்க நடுத்தர வர்க்க இளை ஞர் சமுதாயம், கடந் தாண்டு செப்டம்பர் 17ஆம் தேதி, அமெரிக்காவின் நிதி நிறுவனங்கள், பங் குச் சந்தைகள் செயல்ப டும் நியூயார்க் நகரில், வால்ஸ்ட்ரீட் ஆக்கிர மிப்பு' போராட்டத்தைத் துவக்கினர்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் விவகாரம் :மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதுடில்லி :ஓரினச் சேர்க்கை குறித்த விஷயத்தை, மத்திய அரசு, மிக சாதாரணமாக கையாள்கிறது. இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
ஓரினச் சேர்க்கை தொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபத்யாயா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்த கருத்து:ஓரினச் சேர்க்கை குறித்த விஷயத்தை, மத்திய அரசு மிக சாதாரணமாக கையாள்கிறது. மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கை, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. எங்களின் தீர்ப்பில் இது குறித்து, தெரிவிக்கப் போகிறோம். இந்த விஷயத்தில் அரசு ஏதாவது ஒரு கருத்தைத் தெரிவிக்காமல், நடுநிலையாக இருக்கும் விதமாக, மாறுபட்ட கருத்துக்களை கோர்ட்டில் தெரிவித்துள்ளது. ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு எதிரானது என்றும், ஓரினச் சேர்க்கை குற்றமில்லை என்றும், முரண்பட்ட கருத்துக்களை அரசு தெரிவிக்கிறது.

சுற்றிவளைப்பு: உதயக்குமார் சரணடைய மறுப்பு

திருநெல்வேலி:கூடங்குளத்தை அடுத்துள்ள இடிந்தகரையில் உதயக்குமார் உள்ளிட்டவர்கள் வெளியேவராமல் அடம்பிடிக்கின்றனர். அதிவிரைவு அதிரடிப்படையினர் இடிந்தகரையை சுற்றி வளைத்துள்ளனர்.
கூடங்குளத்தில் இன்று இரண்டாவது நாளாக அணுமின்நிலையத்தில் பணிகள் நடந்தது. காலை 6.30 மணி, 7.30 மணி, 9 மணி என மூன்று தடவைகளாக அணுமின்நிலைய வாகனங்களில் ஊழியர்கள் வளாகத்திற்குள் அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு போலீஸ், அதிவிரைவு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ரஷ்ய விஞ்ஞானிகள் இரண்டு பஸ்களில் சென்றனர். பின்னர் அதிவிரைவுப்படையினர் எஸ்.பி.,விஜயேந்திர பிதரி தலைமையில் கூடங்குளத்தில் இருந்து இடிந்தகரை செல்லும் ரோடுகளில் அணிவகுப்பில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களாக கூடங்குளம் வழியே போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.144 போலீஸ் தடையுத்தரவு இருப்பதால் வெளியாட்களின் நடமாட்டத்தையும் காணமுடியவில்லை.

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை

சங்கரன்கோவிலில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில் அதன் வாக்குகள் புதன்கிழமை (21.03.2012) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சங்கரன்கோவில் தொகுதிக்கு கடந்த 18.03.2012 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாயின.  இந்த வாக்குகள் புதன்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. காலை 8 மணிக்கு  வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அநேகமாக, 11 மணிக்குள் வெற்றி வாய்ப்பு நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FEFSI பெப்சியை உடைக்க தயாரிப்பாளர்கள் சதி - அமீர் குற்றச்சாட்டு

சென்னை: சினிமா தொழிலாளர்களின் மிக வலுவான அமைப்பான பெப்சியை உடைக்க தயாரிப்பாளர்கள் சதி செய்வதாக இயக்குநர் அமீர் குற்றம் சாட்டியுள்ளார்.
சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சிக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் மோதல் நீடித்து வருகிறது. நடிகர் கார்த்தியின் படத்துக்கு இடையூறு செய்ததாகக் கூறி பெப்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

இந்தியாவில் டீசல் எஞ்சின் தயாரிக்க ஹோண்டா கார் நிறுவனம் முடிவு

பட்ஜெட்டால் தள்ளிப்போட்டிருந்த டீசல் எஞ்சின் திட்டத்தை தூசி தட்ட ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் டீசல் எஞ்சின் தயாரிப்பு ஆலையை கட்ட திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம் இங்கிருந்து ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளது.
டீசல் கார் இல்லாதது ஹோண்டா கார் நிறுவனத்துக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, டீசல் கார்களை களமிறக்க ஹோண்டா முடிவு செய்தது. ஆனால், இங்கேயே காருக்கான டீசல் எஞ்சினை தயாரித்தால் செலவு குறையும் என்பதால் அந்த திட்டத்தை கையிலெடுத்தது.

செவ்வாய், 20 மார்ச், 2012

மீனா கந்தசாமி: கல்யாணக் கொடுங்கனவை நான் வென்று வர முடியுமா?


நான் திருமணத்திலிருந்து வெளியேற விரும்புகிறேன் என்று அவனிடம் சொன்ன போது ஒரு வேசியாக நான் வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் என வாழ்த்தினான். வாய்ப்புணர்ச்சியில் விஷேசமடையவும் ஆணுறைகளைப் பயன்படுத்தவும் அறிவுரை கூறினான். நான் கூனிக்குறுகி, அவனைத் திட்டிக் கண்ணீர் உகுத்தேன். அவன் வெற்றிக்களிப்பில் புன்னகைத்தான். அவன் என்னை வீழ்ந்த பெண்ணாக உணரச் செய்ய விரும்பினான்
மார்ச் 19, 2012 தேதியிட்ட அவுட்லுக் இதழில் I Singe The Body Electric என்ற தலைப்பில் மீனா கந்தசாமி எழுதியிருக்கும் கட்டுரையின் மொழிபெயர்ப்பு. முறைப்படி அனுமதி பெற்று ழிபெயர்த்திருப்பவர், சி.சரவணகார்த்திகேயன்.

நித்தம் மழை பெய்யும் அந்த விநோதமான கடலோர நக‌ரத்தில், வலியை ஒரு பிரார்த்தனை போல் ஏற்று அதில் பங்கு கொண்டேன். அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் தவிர வேறெதனைக் கொண்டும் என்னை நடத்தாத‌ ஒரு வன்முறையாளனுக்கு வாழ்க்கைப்பட்டு, தன் கதையைத் தானே சொல்வதற்கு போதுமான காயங்களைக் கண்டு விட்டது என் தேகம்.

ஆர்யா வீட்டில் நயன்தாரா கிரஹவப்பிரவேச குத்துவிளக்கு ..

ஆர்யா வீட்டில் நயன்தாரா- சேட்டனும் சேச்சியும்!



செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்தில் பிஸியாக இருந்தார் ஆர்யா. இப்போது ஆர்யா இல்லாத படக்காட்சிகள் கோவாவில் படமாகிக் கொண்டிருக்கும் வேலையில் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை விலைக்கு வாங்கியுள்ளார் நமது இரண்டாம் உலக நாயகன்.அந்த வீட்டின் கிரஹவப்பிரவேசத்திற்கு அனைத்து நண்பர்களையும் அழைக்காமல் தனது நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்துள்ளார் ஆர்யா. புதுவீட்டில் குத்துவிளக்கு ஏற்றுவது தானே சம்பிரதாயம். அதன் படியே குத்துவிளக்கு ஏற்ற அனைவரும் காத்திருந்த போது இந்த 
நிகழ்ச்சிக்கு வந்திருந்த நயன்தாரா தான் அந்த குத்துவிளக்கை ஏற்றியுள்ளார்

போராட்டத்திற்கு தமிழக அரசே ஊக்கம் இன்று போராட்டக்காரர்களையும் காட்டிக் கொடுக்கும்

கூடங்குளம் அணு நிலைய பணிகளை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா, போராட்டக்காரர்களுக்கு ஊக்கமும் கொடுத்துவிட்டு இப்போது அவர்களை கைது செய்து வருவதற்குப் பெயர் தான் நாடகம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைவி ஜெயலலிதா என்ன தான் முதலமைச்சர் பதவியிலே அமர்ந்திருந்தாலும், அவரது நினைவெல்லாம் நிறைந்திருப்பது திமுக மீது தான்.
அது சங்கரன்கோவில் இடைத் தேர்தலாக இருந்தாலும், இலங்கைத் தமிழர் பிரச்சனையாக இருந்தாலும் திமுகவையும், என்னையும் கடுமையாகத் தாக்கி, அதை “ நாடகம்” என்று வர்ணிக்காமல் அவரால் இருக்க முடியாது.

ஜெயா வழக்கு நாளை சசி ஆஜாராவாரா? என்ன என்ன நாடகமோ நாளை


பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி மல்லிகாஜூனையா சிறப்பு நீதிமன்றத்திலிருந்து மாற்றும் லாபி வேகமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாளைய விசாரணைக்கு சசிகலா வருவாரா? அலது வழக்கம்ப்போல "கட்" அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கீச் கீச்' உலக சிட்டுக்குருவி நாள்

சென்னை, உலக சிட்டுக்குருவி நாள் நாள்(செவ்வாய்க் கிழமை) கொண்டாடப் படுகிறது. இதையொட்டி சென்னையில் சிட்டுக் குருவிகளைக்கணக் கெடுக்க இயற்கை ஆர் வலர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
`கீச் கீச்' என்ற இனி மையான குரல். எப் போது பார்த்தாலும் உற் சாக துள்ளல். சாந்தமான, அதே நேரம் எச்சரிக்கை மிகுந்த பார்வை. மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சியின் அடையாளமாக கருதப் படுவது. இவை அனைத் திற்கும் சொந்தமாக இருப் பவை சிட்டுக் குருவிகள் தான். அவற்றை பார்ப்ப தும், கீச் குரலைக்கேட்டு ரசிப்பதும், மனத்திற்கு ரம்மியமாக இருக்கும்.

555 கோடி ஊழல் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

டெல்லி: ஸ்பெக்டரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ.550 கோடி ஊழல் புகாரில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் நிதி ஆவணங்கள் மத்திய அமலாக்கப் பிரிவில் தாக்கல் செய்யப்பட்டன.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் புகார் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தயாநிதியின் ஆவணங்கள்
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான மேக்சிஸ்-ஏர்செல் ஒப்பந்தத்தில் ரூ.555 கோடி ஊழல் நடந்ததாக, தொலைத்தொடர்பு துறை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவருடைய சகோதரரும், சன் டி.வி. நிர்வாக இயக்குனருமான கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

நயன்தாராவின் காத்தாடி பறக்கத் தயாராக

நயன்தாரா மறுபடியும் நடிக்கப் போவதாகக் கூறியதும், பல இயக்குனர்களும், நடிகர்களும் தங்களது படத்தில் நடிக்க நயன்தாராவை நாடியது அனைவரும் அறிந்ததே. கடைசியாக நயன்தாரா ஒரு கதையை தேர்வு செய்துவிட்டார். 
தமிழில் ’ஜெயம்’ ரவி ஹீரோவாக நடித்த ஜெயம் படத்தில் வில்லனாக அறிமுகமான் கோபிசந்த் ஹீரோவாக நடிக்க தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கொட்டை ஆகிய படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இந்த படத்தை இயக்குகிறார். 

மத்திய மந்திரிசபையில் சேர மாட்டோம்: முலாயம்சிங்

உ.பி. தலைநகர் லக்னோவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், "மத்திய மந்திரிசபையில் நாங்கள் சேர மாட்டோம். எங்களை மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ளும்படி நாங்கள் கோரிக்கை விடுக்கவும் இல்லை. மந்திரிசபையில் சேரும்படி காங்கிரஸ் எங்களுக்கு அழைப்பு விடுக்கவும் இல்லை. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுவோம்'' என்று தெரிவித்தார்.

உதயகுமார் மீது தேசிய பாதுகாப்பு.சட்டம் பாயும்?

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, மக்களை பீதியூட்டி பொருளாதார சீர்குலைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக, உதயகுமார் குழுவினர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம், ஆறு மாதங்களுக்குப் பின், நேற்று முடிவுக்கு வந்தது. ஆறு மாதங்களாக சட்டத்திற்கு எதிராக, நாட்டு நலனுக்கு எதிரான போராட்டத்தில் உதயகுமார் தலைமையிலான குழுவினர், போராட்டம் நடத்தி வந்தனர்.இடிந்தகரை லூர்து ஆலய வளாகத்தில் முகாமிட்டு, அணுஎதிர்ப்பு போராட்டம் நடத்தும் உதயகுமார், தனது சொந்த ஊரான நாகர்கோவிலை விட்டுவிட்டு, இடிந்தகரை மக்களின் பாதுகாப்பில், தற்போது தஞ்சமடைந்துள்ளார்.அணுஉலை விஞ்ஞானிகளை வழி மறித்தது, அணுஉலை முன், போலீஸ் உயரதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தது, அனுமதி வாங்காமல் ஆறு மாத கால போராட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில், உதயகுமார் மற்றும் அவரது குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.

கூடங்குளத்தில் மின்உற்பத்திக்கான பணிகள் துவக்கப்பட்டன

திருநெல்வேலி:முதல்வர் ஜெயலலிதா உத்தரவை தொடர்ந்து கூடங்குளத்தில் மின்உற்பத்திக்கான பணிகள் நேற்று துரிதமாக துவக்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில், ஒவ்வொன்றும் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் கட்டப்பட்டுள்ளன. முதலாவது அணுஉலை 99 சதவீத பணிகள் நிறைவடைந்து உற்பத்திக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் அணுமின்நிலையத்திற்கு எதிராக எதிர்ப்பாளர்கள் போராட்டங்களை துவக்கினர்.

திங்கள், 19 மார்ச், 2012

ஆசிரியை குமுது கதறி அழுதபடி இருந்தார். மயங்கியும் விழுந்தார்


சென்னை: என்னால் மாணவனைப் பிரிந்திருக்க முடியாது. அதேபோல அவனாலும் என்னை விட்டுப் பிரிந்து வாழ முடியாது. அவனுக்கு 21 வயது வரும் வரை காத்திருப்பேன். அதற்குப் பிறகு சேர்ந்து வாழ்வேன்.
அதுவரை அவனை எனது மகன் போல பார்த்துக் கொள்வேன் என்று கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த 37 வயது ஆசிரியை குமுது கூறியுள்ளார்.
சமீபத்தில் சென்னையை அதிர வைத்த சம்பவம் 17 வயது மாணவனுடன், 37 வயது ஆசிரியை வீட்டை விட்டு ஓடிப் போன விவகாரம்.

இந்தியாவுல எல்லாம் வந்துடுச்சி… ஆனா ‘இது’ இன்னும் போகல!

மக்கு நல்ல பழக்கமான வசனம் இது. ஆனால் இன்றைய சூழலை அப்படியே பிரதிபலிக்கிற வார்த்தைகளும் கூட!
பொருளாதார அடிப்படையில் உலகின் மிகப் பெரிய நான்கு வல்லரசுகளுள் ஒன்று என்ற பெயர் இந்தியாவுக்கு. வல்லரசு நாடுகள் அங்கம் வகிக்கும் அத்தனை அமைப்பிலும் இந்தியாவுக்கும் இடம் தரப்பட்டுள்ளது.
ஆனால் இதெல்லாம் போலியானது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
உடல் முழுக்க நோயும் அழுக்கும் கொண்ட ஒருவனுக்கு பள பள கோட்டு சூட்டு மாட்டியது மாதிரிதான் இந்தியாவின் இன்றைய நிலை உள்ளது என்பதை பொருளாதார ரீதியான புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்த காட்சிகள் உண்மைதான்


ரஞ்சிதா - நித்தியானந்தா வீடியோ :
தடய அறிவியல் நிபுணர் சந்திரசேகரன்
திடுக்கிட வைக்கும் குற்றச்சாட்டு
நடிகை ரஞ்சிதாவுடன் தனியறையில் இருந்த காட்சி பொய் என்று தவறானது அறிக்கை தருமாறு நித்தியானந்தாவின் சீடர்கள் தம்மை அணுகியதாக தடய அறிவியல் நிபுணர் சந்திரசேகரன் திடுக்கிட வைக்கும் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
தடய அறிவியல் துறையில் நெடுநாள் அனுபவமும் பத்பபூஷன் விருதும் பெற்றவருமான பி. சந்திரசேகரன்,  பெங்களூரில் இதனைக்கூறியுள்ளார்.

ஐஸ்கட்டிகளுக்கு கிராக்கி மின்வெட்டால் உற்பத்தி பாதிப்பு படகுகளுக்கு டீசல் பிடிப்பதில் சிக்கல்

மின்வெட்டால் ஐஸ் உற்பத்தி பாதிப்பு, விசைப்படகுகள், பைபர் படகுகளுக்கு டீசல் பிடிப்பதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால், தமிழகம் முழுவதும் மீன்பிடி தொழில் வேகமாக முடங்கி வருகிறது. இதனால், ஒன்றரை லட்சம் மீன்பிடி தொழிலாளர்கள் மட்டுமின்றி, அதை சார்ந்துள்ள ஒரு கோடிக்கு அதிகமானவர்கள் வருவாய் இழப்பில் சிக்கி தத்தளிக்கின்றனர்.
தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடக்கிறது. இது மட்டுமின்றி, மாநிலம் முழுவதும், ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள், ஒரு லட்சத்திற்கும் அதிகமான கட்டுமரங்கள் மூலமும், மீன்பிடி தொழில் நடக்கிறது.

காங்கிரசுடனான உறவு பற்றியும் முலாயம்சிங்கே முடிவு செய்வார்

லக்னோ: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் இணைவது பற்றி சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் தான் இறுதி முடிவெடுப்பார் என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்டுள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளதாவது:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை சமாஜ்வாதி கட்சி ஏற்கெனவே ஆதரித்து வருகிறது. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இணைவதா? இல்லையா? என்பது பற்றி கட்சித் தலைவரான நேதாஜிதான்(முலாயம்சிங்) முடிவு செய்வார்.

IPL பிரபு தேவா, சல்மான், ப்ரியங்கா நடனத்துடன் தொடங்குகிறது

2012-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நடிகர் / இயக்குநர் பிரபு தேவாவின் அட்டகாச நடனத்துடன் ஆரம்பிக்கிறது.
ஏப்ரல் 3-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கோலாகலத்துடன் தொடங்குகிறது போட்டி.
அன்றைக்கு பிரபலமான தமிழ் மற்றும் இந்திப் பாடல்களுக்கு மேடையில் நடனமாடுகிறார் பிரபுதேவா.
அவருடன் பிரபல இந்தி நடிகர்கள் சல்மான்கான், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் கலந்து கொண்டு நடனமாடுகிறார்கள். மிகப் பிரமாண்டமான நிகழ்வாக இதனை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

வீரப்பனுடன் இருந்து கடத்தியவரும் கடத்தப்பட்டவரும் சந்தித்தவேளையில்

உயிரோடு இருந்து அதிரடி அட்டகாசங்கள் செய்த போதும் சரி, சுட்டுக் கொல்லப்பட்டு இத்தனை ஆண்டுகளான பிறகும் சரி... செய்திகளுக்குப் பஞ்சம் வைக்காத மனிதர் வீரப்பன்.
இந்த செய்திகள், வீரப்பன் கதைகள் பலரை இன்னும் வாழ வைப்பதைப் பார்க்க முடிகிறது.
வீரப்பனின் கதை இப்போது தமிழ் - கன்னடத்தில் பிரமாண்ட சினிமாவாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் ராஜீவ் கொலையை மையமாக வைத்து குப்பி என்ற அருமையான படத்தைத் தந்த ஏஎம்ஆர் ரமேஷ்.
கிஷோர் வீரப்பனாகவும், அர்ஜூன் போலீஸ் அதிகாரி விஜயகுமாராகவும் நடித்துள்ள படம் இது. முழுக்க முழுக்க வீரப்பன் வாழ்ந்த, அதிரடி சாகஸங்கள் செய்த, தாக்குதல் நடத்திய, சுட்டுக் கொல்லப்பட்ட இடங்களிலேயே நேரில் போய் இந்தப் படப்பிடிப்பை முடித்துள்ளனர்.

ஞாயிறு, 18 மார்ச், 2012

அமைதியாக முடிந்தது சங்கரன்கோயில் இடைத் தேர்தல் - 78 சதவீத வாக்குப் பதிவு!

By Poll
சங்கரன்கோயில் இடைத்தேர்தல் மிக அமைதியாக நடந்து முடிந்தது. தோராயமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிடுகிறார்கள்.
காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.வேட்பாளர்களும் தங்கள் வாக்குகளை செலுத்தினர். அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி, காலையிலேயே தனது வாக்கைப் பதிவு செய்தார். தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமார், தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமார் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 8 வேட்பாளர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

மாணவனை விட்டு பிரித்தால் தற்கொலை செய்வேன் : ஆசிரியை மிரட்டல்


சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த 17வயது மாணவனை 37 வயது பள்ளி ஆசிரியை கடத்திச் சென்றதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினர்.

டெல்லி அருகே பதுங்கியிருந்த 2 பேரையும் போலீசார் பிடித்தனர். மாணவன், பெற்றோருடன் செல்ல மறுத்து விட்டதால், காப்பகத்தில் மாணவன் ஒப்படைக்கப்பட்டான். பள்ளி ஆசிரியை சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர்கள் மீட்கப்பட்டது குறித்து திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

அமிதாப்பச்சனின் ‌ சொத்து சுமார் 493 கோடி ரூபாய்

அமிதாப்பச்சனின் ‌குடும்ப சொத்துமதிப்பு சுமார் 493 கோடி ரூபாய் என ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்‌காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் முலாயம் அணியில் சேர்ந்த அமிதாப் மனைவி ஜெயாபச்சன் சமாஜ்வாடிகட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காக வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

பழங்குடி பெண்கள் குளிப்பதை படம்பிடித்த இத்தாலியர்களை கடத்திய மாவோயிஸ்டுகள்!


Maoists
டெல்லி: இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரிசா மாநிலத்திற்கு சுற்றுலா வந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நேற்று கடத்திச் சென்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் கந்தமால் மாவட்டத்தில் ஆற்றில் பழங்குடியினப் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தததை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டனர் என்று கூறப்படுகின்றது. பழங்குடியினப் பெண்களைப் புகைப்படம் எடுக்க ஒரிசா அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜேந்தர்,பாக்யராஜ் பாதையில் விஜய் அரசியலுக்கு வரப் போ.....

விஜய் வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவரது மக்கள் இயக்கம் பற்றியும் மற்றும் எதிர்கால அரசியல் வருகை பற்றியும்கூறியுள்ளார்.அந்த பேட்டியில் விஜய் “ என்னுடைய ரசிகர் மன்றத்தை அப்பா மக்கள் இயக்கமாக மாற்றியமைத்துள்ளார்
கடலூர் மாவட்டத்தில் தானே புயல் வந்த போது மக்கள் இயக்கத்து சகோதரர்கள் மக்களுக்கு செய்த நற்பணிகள் பற்றி அனைவருக்கும் தெரியும். தென் மாவட்டத்தில் இருக்கும் இயக்கத்தினரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து பேசி வருகிறேன்.

சொந்த காசில் தொந்தரவை வாங்கிய ஜெயா

ஜெயலலிதாவுக்கு சங்கடம் கொடுக்க இலங்கை வி.ஐ.பி.களின் விசிட்கள்!

Viruvirupu
“இலங்கை வி.ஐ.பி.கள் தமிழக விஜயத்தை மேற்கொள்ளும்போது, அது குறித்து தமிழக அரசுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும்” என்று இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் சிங், “இலங்கை வி.ஐ.பி.களின் வருகைகளுக்கு ஏற்பாடு செய்யும்போது, அது குறித்து மாநில அரசுக்கும் அறிவிக்குமாறு மத்திய அரசு அதிகாரிகளை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா மார்ச் 7-ம் தேதி எழுதிய கடித

திருப்பதியில் இன்று தேவஸ்தான அலுவலகத்தில் பணியாளர் கொலை

திருமலை, மார்ச் 17- திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான அலுவலகம் கீழ்திருப்பதியில் இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
கணக்கு பிரிவில் பணிபுரியும் மல்லிகார்ஜூனா (வயது35) இன்று காலை வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு வந்தார். அலுவலகத்துக்குள் நுழைந்தபோது 4 பேர் கும்பல் அவரை வழிமறித்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் கும்பல் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதை பார்த்து அங்கு இருந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்.

தமிழக இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, கடைசி இடம் சர்வேயில் வெட்ட வெளிச்சம்

திறமையான இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து, 16 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தமிழக இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, கடைசி இடம் கிடைத்துள்ளது. டில்லி, பீகார், உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், திறமை மற்றும் ஆங்கில பேச்சுத்திறன் உள்ளவர்களாக இருப்பதால், இவர்களுக்கே அதிகளவில் உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என்றும், ஆய்வில் தெரிய வந்துள்ளது.
22 மாநிலங்களில் ஆய்வு: தனியார் வேலை வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்தும், "ஆஸ்பையரிங் மைன்ட்ஸ்' என்ற நிறுவனம், "தேசிய அளவிலான வேலை வாய்ப்பு அறிக்கை - 2011'யை, சமீபத்தில் வெளியிட்டது. வட மண்டலத்தில், டில்லி, அரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 9 மாநிலங்கள்; கிழக்கு மண்டலத்தில் அசாம், சத்திஸ்கர், மேகாலயா, ஒடிசா, திரிபுரா, மேற்கு வங்கம்; மேற்கு மண்டலத்தில் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கோவா. தென் மண்டலத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் என, மொத்தம், 22 மாநிலங்கள், 250 பொறியியல் கல்லூரிகள், 2011ல் படிப்பை முடித்த, 55 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் ஆகியோரைக் கொண்டு, மிகப்பெரிய ஆய்வை இந்நிறுவனம் நடத்தியது.

இடைத்தேர்தலுக்குப் பிறகு உருவாகிறது புதிய கூட்டணி?

சட்டசபை பொதுத் தேர்தலின்போது உருவான ஆளுங்கட்சி கூட்டணி, பத்து மாதம் கூட தாக்குப் பிடிக்காமல் உடைந்து போயுள்ளது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியை எதிர்த்து, கூட்டணிக் கட்சியாக இருந்த தே.மு.தி.க., களமிறங்கியது; மற்றொரு கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது. பிரசாரத்தின்போது, ஆளுங்கட்சி மீதான கடுமையான விமர்சனத்தை வைத்து, விஜயகாந்தும் வெளுத்து வாங்கி ஓய்ந்துள்ளார்.
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியிலும் திருப்திகரமான அணுகுமுறை இல்லை. இடைத்தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பெரிதாக அக்கறை காட்டவில்லை. இலங்கைத் தமிழர் விவகாரம் திமுகவுக்கு எப்போதும் சாதகமாக இருந்ததில்லை .நெடுமாறன் சீமான் வகையறாக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில்லை என்ற திமுகவின் கொள்கை சீமான் போன்றவர்களை நடராஜன் போன்ற அதிமுக அடியாளாக மாற்றியுள்ளது

சங்கரன்கோயில் எந்தக் கட்சி எவ்வளவு காசு கொடுக்கும் என்பதே முக்கியம்


Jayalalitha, Vaiko ,Karunanidhi and Vijayakanth
-எஸ் ஷங்கர்
சென்னை: தமிழகமே ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் சங்கரன்கோயில் இடைத் தேர்தல் நாளை நடக்கிறது.
பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 1 ஆண்டை நெருங்கும் அதிமுக ஆட்சி, பல்வேறு துறைகளிலும் சறுக்கல்களைச் சந்தித்துள்ளது. மின்வெட்டுப் பிரச்சினையில் மக்களை கிட்டத்தட்ட நரகத்தில் தள்ளிவிட்டது. சிறு, குறு தொழில்கள் முற்றாக ஸ்தம்பித்துவிட்டன. எனவே ஆட்சி குறித்த மக்களின் மதிப்பீடுதான் இந்தத் தேர்தல் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் நடப்பதைப் பார்த்தால் மக்களை அப்படியெல்லாம் 'தப்பாக' எடைபோட்டுவிடக் கூடாது என்றே தோன்றுகிறது.
அதிமுகவின் ஆட்சி நன்றாக உள்ளதா இல்லையா என்பதல்ல சங்கரன்கோயில் பெரும்பான்மை வாக்காளர்களின் பிரச்சினை. எந்தக் கட்சி எவ்வளவு காசு கொடுக்கும் என்பதே முக்கியம் என வெளிப்படையாகவே பல வாக்காளர்கள் கருத்துக் கூறி, அதிர வைத்துள்ளனர்.

இசைத் தட்டுகளைத் தேடித் தேடிச் சேகரிக்கிறார் நந்தனம் சேகர்

காளிதாஸ்’ முதல் ’ரிக்‌ஷாக்காரன்’ வரை!

ஓர் இசைப் பயணம்
'மூன்றாம் ஆப்பிள் யுகத்தில் வாழ்ந்தாலும் பழைய (எல்.பி. அதாவது நீண்ட நேரம் இசைப்பது) இசைத் தட்டுகளைத் தேடித் தேடிச் சேகரிக்கிறார் நந்தனம் சேகர். இவர் தி.நகர் ரெங்கநாதன் தெருவில் உள்ள கடை ஒன்றில் இவற்றைச் சேகரித்துவைத்து இருக்கிறார்’ என்று வாய்ஸ் ஸ்நாப்பில் தகவல் சொன்னார் தி.நகர் இளங்கோவன்.
நந்தனம் சேகரைச் சந்தித்தோம்.
'சொந்த ஊர், சிவகங்கை பக்கம் உள்ள சின்ன உசிலம்பட்டி. சின்ன வயசுலஇருந்தே இசை, இசைக் கலைஞர்கள் மீது எனக்கு ஈடுபாடு அதிகம். அந்தக் காலத்துல யார் வீட்டுலயாவது கிராமபோன் இருந்துச்சுனா ராஜ மரியாதை. கிராமபோன்ல பாட்டுப் போட்டுட்டா அதைக் கேட்க ஊரே ஒண்ணுகூடிடும்.
எங்கத் தாத்தா, பர்மாவில் வேலை பார்த்தார். அப்ப அங்க அவர் சேகரிச்சு வெச்சிருந்த இசைத் தட்டுகளையும் கிராம போன்களையும் இங்க எடுத்து வந்தார்.