சனி, 19 ஜூலை, 2014

ஓம் சாந்தி ஓம் படக்குழுவினரின் பணத்தை கையாடல் செய்தவர்கள் மாட்டினார்கள்

சென்னையில் திரைப்பட தயாரிப்பாளரிடம் மோசடி செய்ததாக ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
 சென்னை சாலிகிராமம் கண்ணய்யா தெருவைச் சேர்ந்தவர் அருமைச்சந்திரன். இவர் சிங்கப்பூரில் ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறார். அருமைச்சந்திரன் எயிட் பாயிண்ட் எண்டர்டெய்மெயிண்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை அண்மையில் தொடங்கினார். இந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் ஓம் சாந்தி ஓம் என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாரித்து வருகிறார்.

BAR களில் வேலை செய்ய அதிக பெண்கள் முன் வருகிரார்கள் !

பணிகள் பலவற்றிலும் பாலின பேதங்கள் இருப்பது நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரிந்தவைதான். இன்று லாரி ஓட்டுவதிலிருந்து ராணுவப் பணிகள் வரை பலவிதமான வேலைகளில் பெண்கள் ஈடுபட்டுவருகிறார்கள்.
மதுபான அரங்குகளில் மது விற்பனை, மது வகைகளைப் பரிமாறுதல் ஆகிய பணிகளையும் பெண்கள் இன்று திறம்படச் செய்துவருகிறார்கள். ஆனால், 'கால் சென்டரில் வேலை பார்க்கிறேன்' என்றோ, 'ஐ.டி. கம்பனியில் வேலை' என்றோ, 'எம்.என்.சி. வேலை' என்றோ பெருமையாய்ச் சொல்லிக்கொள்பவர்கள், "நான் பாரில் வேலை பார்க்கிறேன்" என்பதை இயல்பாகச் சொல்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.
ஆண்களே இதற்குத் தயங்கும்போது, பெண்களின் நிலை பற்றிக் கேட்கவே வேண்டாம் என்கின்றனர் சிலர். மதுபானக் கடைகளில் செய்யப்படும் இந்தப் பணி, பார் டெண்டிங் என்று சொல்லப்படுகிறது. மதுபானங்களைச் சரியான அளவுகளில் கலப்பது, பரிமாறுவது, மதுப்புட்டிகளைச் சுழற்றி வித்தைகள் காட்டுவது ஆகியவை இந்தப் பணியில் அடக்கம்.
"பார் டெண்டிங் என்பது ஒரு கலை. சரியான அளவுகளில் மதுபானங்களைக் கலப்பதைத் தாண்டி, இதில் ஒவ்வொருவருக்கும், ஒரு தனி ஸ்டைல் உள்ளது"

2013 தற்கொலையில் தமிழகம் (16,927 பேர்) முதலிடம்: கடந்த வருடம் (1,34,799 பேர்) தற்கொலை செய்தவர்களில் ஆண்களே அதிகம்

கடந்த 2013-ம் ஆண்டு, இந்தியாவிலேயே அதிகமான தற்கொலைகள் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பதாக தேசிய சுகாதார புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
2013-ம் ஆண்டிற்கான தேசிய சுகாதார விவரத் தொகுப்பை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடந்த வியாழக்கிழமை டெல்லியில் வெளியிட்டார். அதில், 2005-ம் ஆண்டுமுதல் தற்கொலைகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் 1,34,799 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
தமிழகம்தான் தற்கொலைகள் அதிமாக நடந்த மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. இங்கு 2013-ம் ஆண்டு மட்டும் 16,927 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரமும் (16,112), 3-வது இடத்தில் மேற்கு வங்கமும் (14,957), 4-வது இடத்தில் ஆந்திரமும் (14,238), 5-வது இடத்தில் கர்நாடகமும் (12,753) உள்ளன. தமிழ்நாட்டில்தான் ஹீரோ வொர்ஷிப் அதிகமாக இருகிறது இது  தன்னம்பிக்கை இன்மையின் அடையாளம் ரஜினி கடவுள் ஜெயலலிதா கடவுள் ? அடிமைத்தனமே தற்கொலைக்கு நிகரானதுதான் , சட்ட சபையில் புரத்சி தலைவி அம்மா புகழ் பாடும் அரசியல்வாதிகள் மக்களை அழைத்து செல்வது இந்த தற்கொலை பாதையில்தான்  Self Esteem இல்லாத சமூகமாகிவிட்டது

விமான விபத்தில் எய்ட்ஸ் மாநாட்டுப் பிரதிநிதிகள் 100 பேர் பலி ! ஆஸ்திரேலியா சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டு பிரதிநிகள் ..


உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதிநிதிகள் சுமார் 100 பேர் பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது.
20-வது சர்வதேச எய்ட்ஸ் மாநாடு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. சுமார் 12,000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மாநாட்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ராக் பாடகரும் ஏழ்மைக்கு எதிராக போராடி வருபவருமான பாப் கெல்டாப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச மாநாட்டில் எய்ட்ஸுக்கு எதிரான பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நிதிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுவது வழக்கம்.

யாவரும் நலம் @ நண்பேன்டா ஷூட்டிங் ஸ்பாட்!

உதயநிதியும், சந்தானமும் நயனதாராவும் நண்பேன்டா என்ற திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடித்துவருகிறார்கள் நண்பேன்டா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் படத்தின் ஹீரோ உதயநிதி ஸ்டாலின் தற்கொலைக்கு முயன்றதாக ஒரு வதந்தி பரவியது. சந்தானம், நயன்தாரா என தனது நெருக்கமான நண்பர்களுடன் நண்பேன்டா திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த உதயநிதிக்கே இந்த விஷயம் அதிர்ச்சியாக இருந்ததாம்.

ஓடிசாவில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவன் கைது !

புவனேஸ்வர்: ஒடிசாமாநில மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவனாக செயல்பட்டு வருபவர் சபயாசாசி பாண்டா (48). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தெற்கு ஒடிசாவில் வன்முறைகளில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது 60 கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதுவரை 25 பாதுகாப்பு படையினரையும், 34 பொதுமக்களையும் கொன்றுள்ளார். இவரை சரண் அடையும்படி மாநில அரசு பலமுறை விடுத்த கோரிக்கையை ஏற்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவரை பிடிக்க துப்பு தருபவருக்கு 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பெர்ஹாம்பூரில் பதுங்கியிருந்த இவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு சுற்றிவளைத்து கைது செய்தனர்.  அவரிடம் இருந்து துப்பாக்கி, 2 லட்சம், 500 கிராம் தங்கம், 10 செல் போன்கள், 2 சிடி மற்றும் 5 பென் டிரைவ் கைப்பற்றப்பட்டுள்ளன. மாவோ ஒழிப்பு நடவடிக்கையில், பாண்டாவின் கைது பெரிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. dinakaran.com

சரத் பவாருக்கு 89 ஏக்கர் நிலத்தை அரசு கொடுத்துள்ளது !

சரத்பவார் தலைமையில் செயல்படும் நிறுவனத்துக்கு 89 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி இருப்பதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. சிவசேனா செய்தி தொடர்பாளர் நீலம் கோரே  மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

89 ஏக்கர் நிலம் புனேயில் ‘வசந்ததா சுகர் இன்ஸ்டிடியூட்’ என்ற கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் அறக்கட்டளை தலைவராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளார். மேலும் அதற்கு 11 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு 89 ஏக்கர் நிலத்தை 1 ரூபாய்க்கு 30 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் அரசு ஒதுக்கி கொடுத்து உள்ளது.  அவரது வரலாறு பூரா இதுதானே நடந்திருக்கிறது! இப்ப மட்டும் எதோ புதுசா கண்டு பிடிச்ச மாதிரில்லா சொல்றான்ய்ங்க , முன்னாடி ஜுஹு பீச்சில ஏராளமான நிலம் கொடுதாய்ங்க, போதும் போதாததுக்கு இவரு கிரிகெட் வாரிய தலையா இருந்து வாரி வாரி குவிசாய்ங்க , எந்த கட்சி வந்தாலும் இவரும் இவரின்  வாரிசுகளும்  எப்பவுமே ஜிகிர்தண்டா ஜாலிதான்

பள்ளிகளில் முதல் உதவி பெட்டி ! தீயணைப்பு சாதனைங்கள் எல்லாம் இருக்கவேண்டுமாமே? அப்ப இதுவரை அது ஒன்றும் இல்லையா ?

பள்ளிக்கூடங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் சரியாக இருக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை விடுத்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுபடி பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

* மழைக்காலங்களில் இடி, மின்னல் ஆகியவற்றின் போது மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ மரத்தின் அடியில் நிற்கக்கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும்.  கும்பகோணம் தீவிபத்து ஞாபகம் வந்திடுச்சு ! டோன்ட்வொர்ரி இரண்டு வாரத்துல மறந்துடுவோம்ல?

மலேசிய விமான விபத்து: ரஷ்யா மீது ஒபாமா குற்றச்சாட்டு

மலேசிய ;நிறுவனத்தின் எம்.எச்.-17 விமானம் நேற்று உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த 298 பேரும் இறந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக உக்ரைன் அரசும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்து வருகின்றனர்.உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது:-உக்ரைனில் உள்ள நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் இப்போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு கிட்டத்தட்ட 300 பேர் பலியாகி உள்ளனர்.

இந்து ஆன்மீக சேவை கண்காட்சியில் வன்னியர் ஸ்டால் ! அய்யர் ஸ்டால் ! ஜாதிகளுக்கு எல்லாம் தனி தனி ஸ்டால் !

வன்னியர் சாதி கடை வீரமணி யாதவ சாதிக்காரர் பெரியார் திடலில் யாதவர்களுக்கு தான் முன்னுரிமை தெரியுமா? வினவு ஆசிரியர்குழுவில் எத்தனை தலித்துங்க இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? அதை நடத்தற மாதையன் ஒரு ஐயர்னு உங்களுக்குத் தெரியுமா”ன்னு கேட்டார்.
வினவு அண்ணனுக்கு
வணக்கம்,
என்னோட பெயர் மனோஜ் குமார், நெல்லை மாவட்டம் வள்ளியூர் பக்கத்துல ஒரு கிராமத்த சேந்தவன். மெக்கானிக்கல் டிப்ளமா முடிச்சிட்டு இப்ப சென்னையில தங்கி வேலை தேடறேன்.
இந்த லெட்டரை ஏன் எழுதறேன்னு எனக்கே தெரியல, உங்கள்ட்ட சொல்லனும்னு தோணிச்சி. எழுதுறேன்.
வருசநாடு, கொடியங்குளம், தருமபுரி .. மாதிரி எங்க ஊர்ல பெரிய கலவரங்கள் நடக்கலேன்னாலும், எங்க ஊருல ஜாதி பாகுபாடு உண்டு. எங்க ஊருனு இல்ல,  எங்க மாவட்டமுமே அப்படிதான். தூத்துக்குடியில்  நான் பாலிடெக்னிக் படிக்கும் போது அங்க இருந்த மாணவர்கள் எல்லாருமே ஜாதி செட்டா குரூப் குரூப்பாத் தான் இருப்போம். சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கது மாதிரி ராக்கெட் ராஜா, சுபாஷ் பண்ணையார், பசுபதி பாண்டியன் இவங்களுக்கும் ரசிகர்கள் இருக்காங்க. “நாடு பாதி நாடார் பாதி”, “எக்குலமும் வாழனும் முக்குலம் தான் ஆளனும்”னு மாணவர்கள் நிறைய பஞ்ச் டயலாக்கு வெச்சுருக்காங்க. பள்ளிக்கூட சுவர்லயும் பாக்கலாம்.

நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேந்தவன். என் தாத்தாவோட பழைய காலம் மாறி இல்லைன்னாலும் நானும் ஜாதி பாகுபாட்டை அனுபவிச்சிருக்கிறேன்.

வெள்ளி, 18 ஜூலை, 2014

வாரணாசி தேர்தல் வழக்கு ! மோடிக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் !

அலகாபாத்: வாரணாசி வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அஜய்ராய் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். மோடி தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் அவரது மனைவி யசோதாபெண்ணின் வருமானம் குறித்த தகவல்களையும், கணக்கு எண்ணையும் குறிப்பிடாமல் விட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்று கூறியுள்ளார்.  இப்படிதாய்ன்  முந்தி  இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாதுன்னு  ராஜ்நாராயணன் என்கின்ற யூரின் தெரபிஸ்ட் இதே அலகாபாத்தில் வழக்கு போட்டார் .எல்லா பயலுவளும் இது பத்தி கண்டுக்காம இருதாக , ஆனா அந்த வழக்குல ராஜநாராயணன் வெற்றி பெற்றார் இது எப்படியோ ?

நடிகை அனன்யாவின் அலப்பறையும் அடாவடி செலவும் ! நூடுல்ஸான தயாரிப்பாளர் ?

அனன்யா நடித்த 'அதிதி' படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தை நிகேஷ்ராம் தயாரித்து இருந்தார். இவரே இதில் வில்லன் கேரக்டரிலும் நடித்தார். அனன்யாவின் அடாவடி மற்றும் ஊதாரிதனமான செலவுகளால் ரூ.50 லட்சத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நிகேஷ்ராம் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:– ‘அதிதி’ படத்தில் நடிக்க அனன்யாவை அணுகியதும் ரூ.22 லட்சம் சம்பளம் கேட்டார். அதை கொடுத்தோம். படப்பிடிப்புக்கு கணவர் என சொல்லப்படும் ஆஞ்சயேலுவை அழைத்து வந்தார். இருவரும் வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை ஒதுக்கினோம். பத்திரிகையாளர்களும், திரையுலகினரும் தங்களை பார்த்து விடுவர் எனச்சொல்லி அதில் தங்க மறுத்தார். அண்ணாசாலையில் உள்ள ஓட்டல் உணவுதான் பிடிக்கும். எனவே அங்கே ரூம் போடுங்கள் என்றார். அதையும் செய்தோம். சொந்த உபயோகத்துக்காக சொகுசு காரை எங்கள் செலவில் வாடகைக்கு எடுத்து ஊர் சுற்றினார். கருமம் கருமம்

ஜெயலலிதா மீது டிராபிக் ராமசாமி வழக்கு ! ஆளுனரிடம் அனுமதி கோரி மனு !


ஜெயலலிதா  மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு

பதவிப்பிரமாணத்தை மீறும் வகையில் நடந்துகொள்ளும் ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் சென்னையைச்சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.முதல்வர் ஜெயலலிதா எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு எதிராக தம்மீதான ஊழல் வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று  அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவரே மனுதாக்கல் செய்துள்ளார்.இதனை சுட்டிக்காட்டி கடந்த ஜூன் மாதம் ஆளுநருக்கு ஒரு மனு வழங்கியிருந்ததாகவும், அந்த மனு மீது ஆளுநர் அலுவலகம் இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால்,  அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றுதாம் அம்மனுவில் கூறியு ள்ளார். குடியரசு தலைவருக்கும், பிரதமருக்கும் முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று மனு அனுப்பியிருப்பதாக தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.nakkheeran,in

துப்பரவு பணியாளர் இருவர் பலி ! செப்டிக் டான்க் சுத்தம் செய்யும் தந்தையும் மகனும் தவறி விழுந்து ...

பேராவூரணி: தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் ராமர் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (56). சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மகன் மணிகண்டன்(27). இவர் 2ம் புலிக்காடு ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் முத்துப்பேட்டை சுரேஷ் (28).நேற்று இரவு 7.30 மணிக்கு தங்கவேலு, மணிகண்டன் மற்றும் சுரேஷ் ஆகியோர், மல்லிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய அதன் மூடியை திறந்தனர். அப்போது சுரேஷ் எதிர்பாராதவிதமாக செப்டிக் டேங்கில் விழுந்து விட்டார். அவரை காப்பாற்ற தந்தையும், மகனும் உள்ளே குதித்தனர். அவர்கள் டேங்கில் மூழ்கி விட்டனர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாதையில்தான் பிரதமர் மோடியின் விமானமும் பின்னால் பறந்து வந்தது !

  எம்.எச்.17 மலேசிய விமானம் ஏவுகணை தாக்குதலில் வீழ்த்தப்பட்டதை அறிந்ததும் மோடி பயணம் செய்த விமான பயணத்தடம் மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் பின்னால் பறந்து வந்த நரேந்திர மோடி விமானம்!மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம், நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்டது. அந்த விமானம், உக்ரைன் நாட்டு வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ‘ராடார்‘ கருவியின் பார்வையில் இருந்து மறைந்தது. சற்று நேரத்தில், விமானம் தீப்பிடித்தபடி, வானத்தில் இருந்து நெருப்புக் கோளமாக தரையில் விழுந்தது மலேசிய விமானம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 298 பேர் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளான பகுதியில்தான் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். விமானத்தை கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்திவிட்டர் என்று உக்ரைன் அரசு தரப்பு கூறியுள்ளது. உக்ரைன் ராணுவம் தான் விமானத்தை வீழ்த்தியுள்ளது என்று கிளர்ச்சியாளர்கள் தரப்பு கூறியுள்ளது.உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் பின்னால் அதே வான்வழியில்தான் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானமும் வந்துள்ளது. மலேசிய விமானம் ஏவுகணை தாக்குதலலில் வீழ்த்தப்பட்டிருக்காவிட்டால் சம்பவம் நடந்த பகுதி வழியாகவே பிரதமர் மோடி பயணித்த ஏர் இந்தியா-001 விமானமும் சென்றிருக்கும் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுளது.

உதயநிதி ரொம்ப ரொம்ப ? நயன்தாராவுக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை!

சமீபத்தில் வெளியான வாரபத்திரிகை ஒன்று , உதயநிதி மற்றும் நயன்தாராவின் காதல் செய்தியை வெளியிட கோடம்பாக்கமே பரபரப்பாகியுள்ளது. < அதாவது உதயநிதி, நயன்தாராவை காதலிக்கிறார் என்றும் , நயன்தாரா இப்போது மறுக்கிறார் என்றும் மிக பெரிய செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது அந்த பத்திரிக்கை. இதுப்பற்றி அவர்கள் இருவரது பின்னணியில் பணிபுரிந்தவர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரித்தோம், அவர்கள் சொன்ன விபரம் முழு விபரமாக இங்கே….
ஐயாவில் நயன்தாரா அறிமுகம்…
நயன்தார, தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாக வேண்டிய முதல் படம் சுள்ளான். போட்டோ சூட் எடுத்து பார்த்து கொஞ்சம் அழகில்லை ,இந்த ரோலுக்கு சூட் ஆக மாட்டார் என்று கேரளாவுக்கு திருப்பி அனுப்பட்டவர் நயன்தாரா. அதன் பிறகு கேரளாவில் கொஞ்சம் படங்களில் நடித்தவர், ஹரி இயக்கத்தில், ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார்.

பசு வழிபாடும் யாகத்தில் பசுவை கொல்லும் பார்ப்பனர்களின் யாக கூத்துக்களும் !

(பசுவதைக்காக நீலிக் கண்ணீர் விடும் சங்கராச்சாரியார்கள் இந்து மத சாஸ்திரங் களில் பசுவைக் கொன்று யாகம் நடத்துவது குறித்து அலங்காரமாகப் பேசப்படுகிறதே - இதற்கு என்ன பதில்) (அய்தரேயப் ராஹ்  மணம் பஞ்சிகா  2காண்டம் 6)
பொருள்: யாகத்திற்கு கொண்டு வந்த பசு மரணத்தைக் காண்கிறது; மரணத்தி னின்றும் தேவர்களைக் காண்கிறது. தேவர் கள் பசுவைப் பார்த்து: நாங்கள் உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லு கின்றோம் என்பார்கள். பசு கொல்லப்பட்டபிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை மந்திரமாவது:-t;
அந்த ரே வோஷ் மாணம் வாரயத்வா திதி பசுஷ் வேவதத் ப்ராணன் தாதி ஸ்யேன மாஸ்ய வக்ஷ க்ருணுதாத் ப்ரசஸா பாஹு சலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித் ரேஸ்ரோணீ கவவேஷாரூஸ்ரேக பர் ணாஷ்டீ வந்தாஷட்விம் சதி ரஸ்ய வங்கா யஸ்தா அனுஷ்ட யோச்யா வயதாத்; காத்ரம் காத்ரமஸ் யானூனம்.

மீண்டும் காங்கிரசும் திமுகவும் நெருங்கி வருகிறது ? விரைவில் ஒரே மேடையில் ?

சென்னையில், நாளை (19ம் தேதி) நடைபெறவுள்ள சமூக நீதி மாநாட்டின் மேடையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் 'கை' கோர்க்க இருப்பதால், மீண்டும் தி.மு.க., - காங்கிரஸ் உறவு புதுப்பிப்பதற்கு, அச்சாரமாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும், கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வும், காங்கிரசும் தனித்து போட்டியிட்டதில், இரு கட்சிகளும் படுதோல்வியை தழுவின. தேர்தலுக்கு முன், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி அமைய வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு, தென் மாவட்டங்களில் கணிசமான ஓட்டு வங்கி உள்ளது என்றும், தி.மு.க., தனித்து போட்டியிட வேண்டாம் எனவும், இந்திய சுவிசேஷ திருச்சபையின் பிஷப் எஸ்றா சற்குணம், தி.மு.க.,வில் உள்ள முன்னணி தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். காங்கிரசுடன் கூட்டணி வைக்க கூடாது என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பிடிவாதமாக இருந்ததால், கூட்டணி உருவாகவில்லை.

 காங்கிரஸில் எத்தனை மத்திய அமைச்சர்கள் ? எத்தனை முறை அமைச்சராக இருந்தாலும் குறைந்த பட்சம் ஒரு வார்டு கவுன்சிலர் ஆக கூட முடியாத நிலை. EVKS இளங்கோவன் வாய் காலவாயை விட பெரியது. அவர் வாழும் வீதியில் கூட அவரால் அதிக வோட்டு வாங்க இயலவில்லை.கொஞ்சம் சொந்த செல்வாக்கு வைத்திருந்த திருநாவுக்கரசு கூட பன்னியுடன் சேர்ந்த கன்றுகுட்டி ஆகிவிட்டார். வாக்கில் உறுதி - பேச்சில் நாணயம் - மக்களுக்கு பிரச்சினை என்றால் தெருவுக்கு வந்து போராடுதல்- சாமான்யன் சாதாரணமாக தொடர்பு கொள்ளும் வண்ணம் எளிமை- இவைகள் இல்லாதனால் தான் DMK ஆட்சிக்கு வந்தது. நீங்கள் நேரு குடும்பத்திற்கு சேவகம் செய்வதை நிறுத்தும் வரை இவை நடக்கப்போவதில்லை. ஒரு விஜயகாந்திற்கு உள்ள தன்னம்பிக்கை கூட உங்களுக்கு இல்லை- நீங்கள் செய்த மிக பெரிய தவறு சைக்கிள் ஐ கைவிட்டது தான். தமிழக காங்கிரஸ் அப்படி ஒன்றும் கோமாளி கட்சி அல்ல. கொஞ்சம் கோஷ்டி கானத்தை நிறுத்தி விட்டு நாட்டை பற்றி யோசியுங்கள். இன்றைய தேதியில் ஒருவர் கூட காமராசரின் வாரிசு இல்லை.

தமிழக பாஜகாவினர் டெல்லி தலைவர்களை சந்திக்க புதிய கட்டுப்பாடுகள் ! அமித்ஷா கண்ட்ரோல் ?

சென்னை : பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவின் அதிரடியான உத்தரவுகளால், தமிழக பா.ஜ.,வினர் கலங்கிப் போயிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்களில் கூறியதாவது: பா.ஜ.,வின் தேசியத் தலைவராக இருந்த ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதும், புதிய தலைவராக, பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர் அமித் ஷா, பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட பின், அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டே இருக்கிறார். குறிப்பாக, டில்லியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து செயல்படும் அமைச்சர்களை தேவையில்லாமல், மாநிலங்களில் இருந்து வந்து கட்சியினர் பார்க்கக் கூடாது என்று முதலில் உத்தரவு போட்டார்.

பயிற்சி டாக்டர்கள் ஸ்டிரைக் ! ஊதிய உயர்வு கோரிக்கை ! நோயாளிகள் அவதி !

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி டாக்டர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 3,500 பயிற்சி மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைகளில் மொத்தம் 600 பேர் பணியாற்றுகின்றனர். தமிழகத்தில் பயிற்சி டாக்டர்களுக்கு ஊக்க ஊதியமாக ரூ.8200ம், முதுநிலை மாணவர்களுக்கு ரூ.17,400ம் வழங்கப்படுகிறது. இது மற்ற மாநிலங்களில் பயிற்சி டாக்டர்களுக்கு அளிப்பதை விட குறைவாகும். பயிற்சி டாக்டர்களுக்கு ஊக்க ஊதியத்தை ரூ.20 ஆயிரமாகவும், முதுநிலை மாணவர்களுக்கு ரூ.45 ஆயிரமாகவும் உயர்த்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பயிற்சி டாக்டர்களும், முதுநிலை மாணவர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

142 அடிக்கு தண்ணீர் ! முல்லைபெரியாறு அணை அளவை உயர்த்தும் பணி ஆரம்பம் !

முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்தும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின. தண்ணீரைத் தேக்கும் அளவை உயர்த்துவதற்கான 13 கதவணைகளை (ஷட்டர்கள்) மூவர் குழு முன்னிலையில் தமிழக அரசு கீழே இறக்கியது.
முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்கும் அளவை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த மே 7-ஆம் தேதி தேதி உத்தரவிட்டது. மேலும், அணையைப் பராமரிக்கவும், கண்காணிக்கவும், மத்திய நீர்வளத் துறையின் கீழ் கண்காணிப்புக் குழு அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் எல்.ஏ.வி. நாதன் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் தமிழக அரசின் சார்பாக பொதுப் பணித் துறையின் முதன்மைச் செயலாளர் சாய்குமாரும், கேரளத்தின் சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளரும், கேரள நீர்ப்பாசனத் துறையின் முதன்மைச் செயலாளருமான வி.ஜே.குரியனும் நியமிக்கப்பட்டனர்.

வியாழன், 17 ஜூலை, 2014

ஏவுகணைத் தாக்குதல் ? 295 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானம் விழுந்து நொறுங்கியது

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் இன்று விபத்துக்குள்ளானது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூருக்கு 295 பேருடன் இந்த எம்எச்-17 என்ற விமானம் புறப்பட்டுச் சென்றது. ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள உக்ரைன் பகுதியில் சென்றபோது விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனுக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக மலேசிய ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.< உக்ரைன் ராணுவம், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வரும் பகுதியில் விமானம் விழுந்ததாக கூறப்படுகிறது. எனவே, விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.maalaimalar.com

லிங்கா படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மயங்கி விழுந்தார் !

சென்னை: லிங்கா பட ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் திடீரென மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கே.எஸ்.ரவிக்குமார் டைரக்ஷனில் லிங்கா படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 2 தினங்களுக்கு முன் நடந்தது. எதிரிகளுடன் ரஜினி சண்டை போடுவது போல் காட்சி. இதில் டூப் பயன்படுத்தலாம் என ரவிக்குமார் கூறினார். காரணம், ரிஸ்க்கான காட்சிகளில் சிரத்தை எடுத்து ரஜினி நடிக்க கூடாது என ஏற்கனவே டாக்டர்கள் அவரை எச்சரித்துள்ளனர். இதனால்தான் ரவிக்குமார் அப்படி கூறினார். ஸ்டன்ட் நடிகர்களை காலால் எட்டி உதைப்பது, கொஞ்சம் வேகமாக திரும்பி தாக்குவது போன்ற ஸ்டன்ட்தானே நானே செய்துகொள்கிறேன் என்று ரஜினி சொன்னாராம்.

எச்.ஐ.வி. பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா: ஐ.நா. தகவல்

உலக அளவில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா, மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது.
ஐ.நா.வின் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் கண்காணிப்பு அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள நாடுகளில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
2013-ஆம் ஆண்டு முடிவில், இந்தியாவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் 21 லட்சம். அதாவது, ஆசிய - பசிபிக் பகுதியில் இந்தப் பாதிப்பு உள்ளவர்களில் 10-ல் நான்கு பேர் இந்தியர் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
தற்போதைய ஆய்வின்படி, உலக அளவில் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 50 லட்சம். இவர்களில் 1 கோடியே 90 லட்சம் பேர் மட்டுமே தங்கள் நோயின் தன்மை அறியாதவர்களாக இருக்கிறார்கள். எனவே, உலகில் எய்ட்ஸை முற்றிலும் ஒழிப்பது என்பது 2030-ல்தான் சாத்தியம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜகவை ஆளுநர் அழைக்கிறார் ! குதிரை பேரம் படிந்தது ?

டெல்லி: பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க ஆளுநர் நஜீப் ஜங் அழைப்பு விடுக்கப்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 70 எம்.எல்.ஏக்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 31 இடங்களைக் கைப்பற்றியது. 28 எம்.எல்.ஏக்களுடன் ஆம் ஆத்மி கட்சி 2வது இடத்தைப் பெற்றது. காங்கிரஸ் கட்சி 8 இடங்களைப் பெற்றது. அதிக இடங்களை பாரதிய ஜனதா கைப்பற்றிய போதும் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வரானார். டெல்லியில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கிறார் ஆளுநர்? ஆம் ஆத்மி கொந்தளிப்பு! ஆனால் அந்த ஆட்சியும் நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி ராஜினாமா செய்தது. இதனால் டெல்லி சட்டசபை முடக்கப்பட்டு இருக்கிறது.

Microsoft 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது !: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?

மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. 2015க்குள் தங்களது ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 18000 பேரை குறைக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது தகவல் தொழில்நுட்ப துறையில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அந்நிறுவனம் கையகப்படுத்தியுள்ள நோக்கியா நிறுவனத்தில் பணிபுரியும் 12500 ஊழியர்களுக்கு வேலை நீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாடெல்லா ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் உற்பத்தி மற்றும் அடித்தளத்தை கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். அடுத்து வர உள்ள ஆறு மாதங்களில் படிப்படியாக இந்த ஊழியர்கள் தங்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் இஸ்ரேல் விவாதம் நடைபெறும் ! BJP முயற்சி தோல்வி!!

டெல்லி: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை குறித்து ராஜ்யசபாவில் விவாதிக்க கூடாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் ஹமீத் அன்சாரி நிராகரித்துவிட்டார். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் அட்டூழிய தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் 200க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலையை நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே கண்டித்து வருகின்றன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.tamil.oneindia.in

சென்னை Chennai Pride March – Photo Essay

(This Photo Essay was put together by Soorya Sriram, a member of Chennai Freethinkers)
On 29th June 2014, Chennai saw a group of loving, caring and awesome people come together and march for Chennai Pride 2014 .
மிகவும் வண்ண மயமாக இந்த ஊர்வலம் நடைபெற்றது , ஏனோ வழக்கம்போல பொதுவான ஊடகங்கள் இதை கண்டு கொள்ளவில்லை, அவர்களுக்கு கொலை கற்பழிப்பு போன்ற செய்திகள்தான் முக்கியம் .

டாக்டர் ராமதாஸ் : பள்ளிகளில் சமஸ்க்ருத வாரம் கொண்டாட கூடாது !

பள்ளிகளில் சமஸ்கிருத வார கொண்டாட்டங்கள் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் வரும் ஆகஸ்ட் 7 முதல் 13 ஆம் தேதி வரை சமஸ்கிருத வாரம் கொண்டாடப் பட வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் சி.பி.எஸ்.இ நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இச்செயலை ஒருவகையான மொழி மற்றும் கலாச்சாரத் திணிப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
சமஸ்கிருதம் என்பது இந்தியாவில் ஒருசாராரின் மொழியாகவும், கலாச்சார அடையாளமாகவுமே பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சுமார் 14 ஆயிரம் பேர் மட்டுமே அம்மொழியை பேசுவதாக மத்திய அரசின் புள்ளி விவரம் கூறுகிறது. இத்தகைய சூழலில் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளைப் பேசி, தனித்தனி கலாச்சாரத்தைக் கடைபிடிக்கும் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் மீது சமஸ்கிருத மொழியையும், கலாச்சாரத்தையும் திணிக்க முயல்வதை ஏற்க முடியாது.

வைகோ கண்டனம்! பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் ! இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு கேடு

மேல்நிலை கல்வி வாரியத்தின் (Central Board of Secondary Education-CBSE) இயக்குநர் டாக்டர் சாதனா பராஸ்ஹர், ஜூன் 30, 2014 தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்றை இந்தியா முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். நாட்டிலுள்ள 15 ஆயிரம் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் ஆகஸ்ட் 7 முதல் 13 ஆம் தேதி வரை ‘சமஸ்கிருத வாரம்’ கொண்டாடப்பட வேண்டும் என்று பள்ளி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.>பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சமஸ்கிருத மொழி கற்றல் - கற்பித்தல் ஆகியவற்றை பயிற்றுவித்து, சமஸ்கிருதத்தை வளர்க்கவும், சமஸ்கிருத மொழி கற்கும் ஆர்வத்தை பள்ளி மாணவர்களிடம் உருவாக்கவும், சமஸ்கிருத மொழியில் படைப்புத் திறனை ஊக்குவிக்கவும் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. இயக்குநர் தெரிவித்துள்ளார்.>தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Sanskrit... Myth and Truth

The mother Sanskrit theory is one of the greatest hoaxes in the modern history.Claims were made about this language is indeed a fraud.Soon came to be believed in all literatures. During the age of Anglo Indian elites, Max Muller helped to propagate the study of Sanskrit through out the World.Europian scholars developed an interest in India,their primary source of Indology were Pro sanskrits.
 
This article is not against to any body.History needs to be revisit again and again.Always there are untold stories in the past.Historians are basically story tellers.This article is very interesting and informative.It's highlighting very important side of Pre Aryan Era.`Anti-Sanskrit Scripture' by Shyam Rao. It is available for free public
distribution as per the Ambedkar Library Public Licence: You may freely
distribute this work, as long as you do not make money from it.
Sanskrit is Dead Sanskrit is for all intents and purposes, a dead language.

The Brahmans are in the habit of glorifying the era ofAnglo-Brahman colonialism; yet even during this `golden age' of Sanskritology when the likes of Max Mueller helped propagate the study of Sanskrit throughout the world, a mere handful of people spoke it. Nor was it, even during the hypothesised `Gupta Golden Age' spoken outside the closely knit circle of Brahmins, who jealously hid all knowledge, including that of Sanskrit, to themselves. As will be shown later on, nor did it exist during the Vedic Dark Age; Sanskrit arose as a mongrel language much later on. As per the 1951 Census, out of a total population of 362 million Indians, only 555 spoke Sanskrit ! Even languages like Italian and Hebrew, spoken by a handful of travellers, were more widely spoken than `Mother Sanskrit' ! This is evident from the following table :class=Number of Speakers as per 1951 Census ( Chat. 73-74 )Census of India reveals that a whole 356 people spoke the language in the entire Indian subcontinent, during what is considered a `Golden Age' for Sanskrit revival, the era of Anglo-Brahmin colonialism.

குமுதம் மடத்தில் ரஜினி சுட்ட வடை !


குமுதம் ரஜினி அட்டை
ஜால்ராகிராமத்துல மோடி அலை, உபியில நக்மா வலை, கூட்டணி எப்போன்னா கேப்டன் சிலை, மோடிக்கு வைகோ போட்ட மாலை, கூட்டணியில்லாத கலைஞர் நிலை, சிபிஎம், தாபாவை சீப்பா அம்மா விரட்டுன கலை…….. இதெல்லாம் ஞாபகம் இருக்காடே? ஒத்தக்கடை மச்சான் பாட்டுக்கு போட்டியா ஒத்த விரலை காட்டி ஓட்டு போட்டேன்னு பீத்திக்கிட்டீல்லா? ஒன்னை மலிவா பட்டி பாத்து ஓட்டுப்போட அனுப்பன பத்திரிகைக்காரனுவ அதுல ஜூவிக்காரன்லேர்ந்து, சூம் பண்ற டீவிக்காரன் வரை இப்பிடித்தாம்லே எலக்சன் நியூஸ்ன்னு அடிச்சு வுட்டானுவ!
ராதா வூட்ல பாதாம் அல்வா, சிம்ரன் காருல சிங்கப்பூர் குல்லா, சமந்தா பேக்குல சீனத்து கல்லுன்னு ஒன்னோட பொது அறிவ வளர்க்குற ஊடக விளக்கமாறுங்க, சினிமா கிசகிசுவ வெச்சுத்தாம்டே கல்லா கட்டுதானுவ. பெறவு இதே லேகியத்தை அரசியல் செய்திலயும் போட்டுத் தாளிச்சு உன்னோட மூளையில மொக்கை வைரசை புகுத்தி அல்லாரையும் இம்ச பண்ணுதான். கலைஞர் வூட்டுக்கு வந்த மர்மக்கார், அம்மா கேட்டுக்கு வந்த செவப்பு சூட்கேஸ், கேப்டன் காருக்கு வந்த பாரின் ஃபுல்லுன்னு இவனுவ எழுதுத நியூசக் கேட்டா அந்த செய்தி தேவதையே ப்ராந்து புடிச்சு தூக்கு மாட்டுவா!   ரஜினி போன பிறவியில  ராகவேந்தராக இருந்ததை கண்டுபிடித்த வாண்டு மாமா  அதுக்கு முந்திய பிறவியில  ஆக்கி மீடிசாகவும் இருந்தாராம் என்பதையும் தற்போது  கண்டு பிடித்துள்ளார்

ஒரு லவுட் ஸ்பீக்கரின் கதை ! அட இன்னுமா புரியல்ல ?

காவி கல்லுளிமங்கன்ல்ல காலம் வரப் போகுது, நாட்டு மக்களுக்கு நரேந்திர மோடியால் நல்ல காலம் வரப் போகுது” என பா.ஜ.க.வும் அக்கட்சியின் கூலிப்படையாக வேலை செய்துவரும் ஊடகங்களும் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே குறி சொல்லி வந்தன. “பேச வாய் திறந்த பிள்ளை எப்பம்மா தாலியறுப்பே” என்று கேட்ட கதையாக அதிர்ச்சியூட்டும் விதத்தில் பிறந்திருக்கிறது அந்த நல்ல காலம். டீசல் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு – என அடுத்தடுத்து மக்களின் தலையில் இடியை இறக்கியிருக்கும் மோடியின் ‘நல்லாட்சியை’ வேறெப்படிக் கூற முடியும்?
டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தைப் படிப்படியாக வெட்டி, அதன் விலையை சர்வதேச ‘தரத்திற்கு’ உயர்த்துவது என்ற அடிப்படையில்தான் டீசலின் விலையை மாதமொன்றுக்கு 50 காசு உயர்த்தும் முடிவை முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு எடுத்தது. அதே முடிவின்படிதான் மோடி அரசும், தான் பதவியேற்ற 35 நாட்களுக்குள்ளாக டீசல் விலையை இரண்டு முறை உயர்த்தியிருக்கிறது.

Chennai mobile Toilets"நம்ம டாய்லெட்', "நடமாடும் கழிப்பறைகள்'

சென்னையில், அண்ணா மேம்பாலத்துக்கு கீழே ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன கழிப்பறை. சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ள "நம்ம டாய்லெட்', "நடமாடும் கழிப்பறைகள்' (மொபைல் யூரினல்) மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள இந்தக் கழிப்பறைகள் நகரம் முழுவதும் அதிக எண்ணிகையில் பரவலாக அமைக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் சுமார் 850-க்கும் மேற்பட்ட பொதுக் கழிப்பிடங்கள், முக்கிய சாலைகள், பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை, உள்ளூர் ரெüடிகள் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் இருந்தாலும் சென்னைவாசிகளுக்கு மட்டுமின்றி வெளியூர்வாசிகளுக்கும் இவை மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகின்றன.
ஆனால், நகரின் முக்கிய இடங்களில் பொதுக் கழிப்பிடங்கள் அமைக்க முடியாத நிலை இருப்பதால், அந்தப் பகுதிகளில் "நம்ம டாய்லெட்', நடமாடும் கழிப்பிட (மொபைல் யூரினல்) கூடாரங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

தங்க வியாபாரிகளின் கொள்ளை ! 916 மி கிராமுக்கு பதிலாக 800 மி கிராம் தங்கம் மட்டுமே சேர்கிறார்கள் !

சத்தியத்தை கடைபிடித்து சுதந்திரம் பெற்றுத் தந்த காந்தியடிகள் பிறந்த நாட்டில் இன்று சத்தியத்திற்கு பெரும் கேடு ஏற்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் சத்தியத்தை கைவிட்டு மனம் போன போக்கில் அதர்மமான வழியில் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரங்களில் சத்தியம் தவறி நடக்கும் பல தரப்பினரை பற்றி பார்த்தோம். இந்த வாரம் தங்க நகை விற்பன்னர்களை பற்றி பார்ப்போமா... நமது செய்தித்தாள்களில் ஒவ்வொரு தினமும் தங்கத்தின் விலை நிலவரம் பற்றி தகவல் வரும். அதன்படி 24 காரட் தங்கத்தின் விலையும், 22 காரட் தங்கத்தின் விலையும் செய்தித்தாள்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது 24 காரட் என்பது சுத்தமான தங்கம். அதை வைத்து நகைகளை செய்யமுடியாது. எனவே 22 காரட் தங்கம் உருவாக்கப்படுகிறது. அதாவது 916 மி.கிராம் தங்கமும் 84 மி.கிராம் செப்பும் சேர்த்தால் அது 22 காரட் தங்கம் எனப்படுகிறது. இவையே ஆபரணத்தங்கம் எனப்படுகிறது.

Chennai Airport வாகனங்கள் கட்டாய கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ! கொள்ளையோ கொள்ளை ?

சென்னை விமான நிலையத்தின், உள்நாட்டு முனைய வருகை பகுதிக்கு வரும், வாகனங்கள் இனி கட்டணம் செலுத்தாமல், விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லாத வகையில், புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய விதியால், முதியோர், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சென்னை விமான நிலைய, உள்நாட்டு முனையத்தின் வருகை பகுதியில், 'அலைட்டிங் பாயின்ட்' எனப்படும், 'போர்ட்டிகோ' பகுதியில், வெளியூர்களில் இருந்து வரும் உள்நாட்டு விமான பயணிகளை, அவரவர் வாகனங்களில் வந்து அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த வார இறுதியில் இருந்து, உள்நாட்டு முனைய வருகை பகுதியில், பயணிகளின் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், பன்னாட்டு முனையத்தின் புறப்பாடு மற்றும் வரவேற்பு பகுதி, உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதியில், வாகனங்களுக்கு கட்டுப்பாடு இல்லை. அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், உயர் அரசு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் வாகனங்களைத் தவிர்த்து, மற்ற வாகனங்கள் செல்ல, உள்நாட்டு முனையத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.  அம்மா உணவகம் மாதிரி 'அம்மா ஏர்போர்ட்' கட்டுனாத்தான் இந்த பிரச்னை முடியும்

புதன், 16 ஜூலை, 2014

தமிழ் பொண்ணு ! சுருதி ஹாசன் சிம்புதேவன் விஜய் கூட்டணியில் !

கத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிந்துவிடும் நிலையில் இருக்க, விஜய்யின் அடுத்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடக்க ஆரம்பித்துவிட்டன. ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படத்தை அடுத்து விஜய் சிம்பு தேவன் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது முன்பே முடிவுசெய்யப்பட்டது தான். ஆனாலும் படப்பிடிப்பிற்கான வேலைகளை விட, திரைக்கதையை சீரமைக்கும் பணியிலேயே ஈடுபட்டு வந்த சிம்புதேவன் தற்போது தான் படவேலைகளை துவங்கியிருக்கிறார்.

துபாயில் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் குடும்பத்தோடு கொலைசெய்யப்பட்டார் ?

Santhosh  Kumar, who owns the production company Souparnika Films in the south Indian state of Kerala, was a co-producer of hit Malayalam movie Madambi and remakes of classic hits like Neelathaamara and Rathinirvedham.
துபாயில் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். கேரளாவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். சோபார்னிகா பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் இவர் 5 ஆண்டுகளுக்கு முன் துபாய் சென்ற அவர் அங்கு வர்த்தக நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார். இந்நிலையில் சந்தோஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை வியாழக்கிழமை முதல் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவரது உறவினர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சந்தோஷ் குமார் வசித்த வீட்டிற்குச் சென்றனர். வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று சோதனை செய்தனர்.; அப்போது சந்தோஷ் குமார், அவரது மனைவி மஞ்சு மற்றும் மகள் கவுரி ஆகியோர் படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களின் உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. சடலங்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் maalaimalar.com

Brics வங்கி- 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் சீனாவில் தொடங்கப்படுகிறது! முதல் தலைவராக இந்தியர் !

போர்ட்டலேசா: இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் உலக வங்கியைப் போல 'பிரிக்ஸ்' நாடுகளுக்கான வங்கி தொடங்கப்பட உள்ளது. ‘பிரிக்ஸ்' எனப்படும் அமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார். ஏற்கனவே இந்த உள்ள இதர நாடுகளும் இதே கருத்தை வலியுறுத்தின. இதனைத் தொடர்ந்து 100 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடாக கொண்டு பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கியை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்த வங்கியின் தலைமையகத்தை சீனாவில் அமைப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் முதல் தலைவராக இந்தியாவை சேர்ந்த ஒருவரும் முதல் ஆளுநர்கள் குழுவில் ரஷ்யாவும் இடம் பெறுகிறது.
tamil.oneindia.in

உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் காதலாமே ? தற்கொலை முயற்சியாமே ? வெறும் புகையா ? நெருப்பில் இருந்து புகையா ?

திரையுலகில் அண்மைக் காலமாக மீண்டும் பட வாய்ப்புகள் பெற்று அடுத்த சுற்றில் வலம் வரும் நடிகை நயன்தாராவுடன் உதயநிதிக்கு காதல் பிரச்னை இருப்பதாகவும், அதனால் அவர் மனவருத்தத்தில் மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதாகவும் ஒரு வலைத்தளத் தகவலும் சமூக வலைத்தளங்களில் செய்திகளும் வேகமாகப் பரவின. உதயநிதி மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது தற்கொலை முயற்சி குறித்து மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்ததாகவும் சமூக ஊடகங்களில் இன்று காலை முதலே பரவலாக விவாதிக்கப்பட்டது.

அதிகாரி அசோக் கெம்கா ! மத்திய அரசு பணிக்கு மாற்றம் !

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவின் நில முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால், அரியானா காங்கிரஸ் அரசால் தொடர்ந்து வேட்டையாடப்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அசோக் கெம்கா, 49, நேற்று மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார்.கடந்த, 1991ல், ஐ.ஏ.எஸ்., அதிகாரி யாக தேர்ச்சி பெற்ற அசோக் கெம்கா, பல மாநிலங்களில் பணியாற்றிய பிறகு, சில ஆண்டுகளுக்கு முன், அரியானா மாநில பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள, காங்கிரசை சேர்ந்த முதல்வர், பூபிந்தர் சிங் ஹூடா அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தினார்.குறிப்பாக, காங்கிரஸ் தலைவர், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவுக்கும், டி.எல்.எப்., கட்டுமான நிறுவனத்திற்கும் இடையே உள்ள தொடர்பையும், அது தொடர்பான நில முறைகேடுகளையும் அம்பலப்படுத்தினார். இதனால், அரியானா அரசின் கோபத்திற்கு ஆளான கெம்கா மீது, வழக்குகள் தொடரப்பட்டன. மூத்த அதிகாரியான அவரை, சாதாரண பொறுப்புகளில் நியமித்து, மாநில அரசு அவமதித்தது.  கெம்காவை வெறும் காங்கிரச பழிவாங்கும் குறடாக யூஸ் பண்ணுவார்கள் ? குறிப்பாக ஹரியானா அரசு மற்றும் சோனியா குடும்பத்தையும் , ராபர்ட் வத்ராவையும் பழிவாங்க மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன், அதையும் தாண்டி இவரை சுதந்திரமாக செயல்பட விடுவார்களா என்பது சந்தேகமே....

செவ்வாய், 15 ஜூலை, 2014

புதியதோர் உலகம் செய்வோம் ! திரைப்பட கல்லூரி மாணவரின் படம்

புதுமுகங்கள் நடிக்க ‘புதியதோர் உலகம் செய்வோம் என்ற படத்தை முடித்திருக்கிறார் இயக்குனரான திரைப்பட கல்லூரி மாணவர் பி.நித்தியானந்தம். இப்படத்தின் ஆடியோ ரிலீஸில் அவர் கூறியதாவது:அப்பாவை திருத்தும் 3 சிறுவர்கள் கருவை வைத்து தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே.எஸ்.நாகராஜன்ராஜா கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். ஆஜித், அனு, யாழினி உள்ளிட்டோருடன் முக்கிய வேடத்தில் இமான் அண்ணாச்சி நடிக்கிறார். பிரவின்சைவி இசை. பாலாஜிரங்கா, விஸ்வநாதன் ஒளிப்பதிவு. எம்.எஸ்.ஜெய்குமார், கே.என். சூரியகலா தயாரிப்பு. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து இறுதி கட்ட பணிகளும் நிறைவடைந்திருக்கிறது. - .tamilmurasu.org

Brics மாநாட்டில் மோடி : தீவிரவாதம் எந்த ரூபத்திலும் வந்தாலும் மனித குலத்துக்கு எதிரானது !

பிரேசில்: தீவிரவாதம் எந்த ரூபத்திலும் வந்தாலும் மனித குலத்துக்கு எதிரானது என்று மோடி தெரிவித்துள்ளார். பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ஆப்கன் முதல் ஆப்பிரிக்கா வரை பல நாடுகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்படுகின்றது. தீவிரவாதத்தை சிறிது கூட சகித்துக் கொள்ள கூடாது என நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தீவிரவாதத்தை எதிர்க்காமல் விட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்றும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.dinakaran.com

சிதம்பரம் அருகே இறந்த பள்ளி மாணவி அடையாளம் தெரிந்தது:ஜெயபாரதி நாகை மாவட்டம் !

ஜி.சுந்தரராஜன், சிதம்பரம்
சிதம்பரம் அருகே எம்ஜிஆர் திட்டில் உடல் சிதைந்த நிலையில் இறந்துகிடந்த மாணவி நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தென்னலக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி கெளசல்யா (18) எனத் தெரியவந்துள்ளது.
சிதம்பரம் அருகே கிள்ளையில் கடலோர பகுதியில் புதிய எம்ஜிஆர் திட்டுக்கும், பொன்னந்திட்டுக்கும் நடுவில் கால்வாய் ஓரம் வியாழக்கிழமை மாலை நிர்வாண நிலையில் 16 வயது மதிக்கத்தக்க அரசு பள்ளி மாணவி சடலம் கிடந்துள்ளது. உடலுக்கு அருகாமையில் அரசு பள்ளி சீருடையும், ஸ்கூல் பை, காலணிகள் இருந்துள்ளது. ஸ்கூல் பையில் சீருடை அல்லாத சாதாரண கலர் உடையும், பேஸ்ட், பிரஷ், ரப்பர் ஆகியவை இருந்துள்ளது. ரப்பரில் செல்வி, 10-ம் வகுப்பு என எழுதப்பட்டுள்ளது.
இறந்த போன மாணவி கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

செம்மஞ்சேரி ஹேமலதா தற்கொலை ! ஜேப்பியார் பல்கலைகழகத்தின் எல்லையில்லா அடாவடி !

posterசாராய ரவுடியாக தொழிலை ஆரம்பித்த ஜேப்பியார் பின்னர் கல்வி வள்ளலாக அவதரித்து சத்யபாமா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஜேப்பியார், பனிமலர், மாமல்லன், செயின்ட் ஜோசப் போன்ற ஜேப்பியாரின் கல்லூரிகள் அனைத்தும் அங்கு பயிலும் மாணவர் நோக்கில் கிளைச் சிறைகள் என்றால் சத்தியபாமா பல்கலைக்கழகத்தை மத்திய சிறை என்று கூறலாம்.
வெளியிலிருந்து பார்த்தால் பளபளப்பான சுதந்திர நவநாகரீக வளாகமாக காட்சியளிக்கும் சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு உள்ளே சென்று பார்த்தால் இது உண்மையிலே ஒரு கல்வி நிறுவனம் தானா என்கிற சந்தேகம் வரும். பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் மாணவர்களும் மாணவிகளும் பேசிக்கொள்ளக்கூடாது. செல்போன் வைத்திருக்கக் கூடாது, அதை செய்யக்கூடாது, இதை செய்யக்கூடாது என்று ஆயிரத்தெட்டு நிபந்தனைகள், வளாகத்திற்குள் சிரிக்கக்கூடாது என்கிற நிபந்தனை இருக்கிறதா என்று தெரியவில்லை. பொதுவாக கல்லூரிகளில் மாணவர்களின் பயிற்சி, வளர்ச்சியை முன்னிட்டு கட்டுப்பாடுகள் இருப்பது சரியென்றாலும் இங்கே அது எல்லை மீறி ஜேப்பியாரின் பண்ணையடிமைத்தனமாக மாற்றப்பட்டுவிட்டது. எம்ஜியார்  செய்த  எத்தனையோ  பாவங்களில் இந்த ஜேப்பியார் போன்ற  அடியாட்களை கண்டெடுத்து வளர்த்து விட்டது  உண்மையில் மிகபெரும் சாபகேடுதான்

Delhi Gang Rape குற்றவாளிகள் இருவரின் மரண தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை

டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரில், இரண்டு பேரின் தண்டனைக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை, இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.டில்லியில், 2012 டிச., 16ல், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி ஒருவர், ஆறு பேர் கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் துாக்கி வீசப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.இந்த வழக்கில், வினய் சர்மா, அக் ஷய் தாக்கூர், பவன் குப்தா மற்றும் முகேஷ் என்ற நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை, பின், டில்லி உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.இதையடுத்து, தண்டனையை எதிர்த்து, முகேஷ் மற்றும் பவன் குப்தா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களுக்கான தண்டனையை நிறைவேற்ற தடை விதித்தது. சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு குற்றம் நிரூபணம் ஆகி விட்டது,தூக்கில் போட என்ன தயக்கம்? நீதி வழுவுகிறது? பின்னணியில்  பணமா அரசியலா ?

கிரிகெட் கிளப்பில் பஞ்ச கச்சத்திற்கு அனுமதி ஆனால் வேட்டிக்கு அனுமதி இல்லை ! யாகம் ஹோமம் பூஜை ?

by
‘தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்பிற்குள் வேட்டி கட்டி சென்றதால் நீதிபதிக்கே அனுமதி மறுப்பு.’- செய்தி.
ஆனால், வேட்டியை பஞ்ச கச்சமாக கட்டி சென்றவர்களுக்கு அனுமதி.
ஆமாங்க, கிரிக்கெட் கிளப் உள்ளே நடக்கும் பூஜை, யாகம், கணபதி ஹோமம், புதிய கட்டிட துவக்க பூமி பூஜை, கட்டிட திறப்பு விழா இதையெல்லாம் மந்திரம் ஓதி நடத்தி வைக்கப் போன அய்யர்; கோட். சூட் போட்டுக்கிட்டா போயிருப்பாரு?

அத்தியூர் விஜயா மரணம் ! புதுவை போலீசாரால் பாலியல் சித்ரவதை அனுபவித்த பெண் போராளி !

செஞ்சியை அடுத்த அத்தியூரை சேர்ந்தவர் விஜயா, பழங்குடியின பெண்.
புதுவையில் நடந்த ஒரு கொள்ளையில் விஜயாவின் பெரியப்பா மகன் வெள்ளையன் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வந்ததையடுத்து 1993–ம் ஆண்டு புதுவை போலீசார் அங்கு விசாரிப்பதற்காக சென்றனர். அப்போது போலீசார் தன்னை கற்பழித்ததாக விஜயா புகார் கூறினார். இந்த சம்பவம் புதுவை மற்றும் தமிழ்நாட்டில் பூதாகரமாக வெடித்தது. இதைத்தொடர்ந்து தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார், புதுவை பெரியக்கடை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நல்லாம்பாபு மற்றும் போலீசார் ராஜாராமன், சசிக்குமார், பத்மநாபன், முனுசாமி, சுப்புராயன் ஆகியோர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். விழுப்புரம் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 11–8–2006–ல் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட புதுவை போலீசார் 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கங்கையில் கழிவுகளைக் கலக்கும் 48 தொழிற்சாலைகளை மூட மத்திய அரசு உத்தரவு

இந்தியாவின் புதிய பிரதமராக கடந்த மே மாதம் நரேந்திர மோடி பதவியேற்றபோது கங்கையை சுத்தப்படுத்துவதே தனது முதல் குறிக்கோளாக இருக்கும் என்று கூறியிருந்தார். இந்துக்களின் புனித நதி என்று கூறப்படும் கங்கையிலும், அதனுடைய துணை நதிகளிலும் ஏற்கனவே சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றுவரும்போதும் நேற்றைய கூட்டத்தில் இது பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டன. அப்போது மொத்தம் 764 மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் 501 மில்லியன் கழிவு நீரை தினமும் வெளியேற்றுகின்றன என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

வீடுதோறும் சினிமா' புதிய நிறுவனம் தொடங்கினார் இயக்குநர் சேரன்

டி.வி.டி., டி.டி.எச், இணையதளம், செட்ஆஃப் பாக்ஸ் உள்ளிட்ட வழிகளில் வீடுதோறும் சினிமாவை எடுத்துச் செல்லும் "சினிமா டு ஹோம்' என்ற புதிய நிறுவனத்தை இயக்குநர் சேரன் தொடங்கினார்.
 இந்நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநரும், "சினிமா டு ஹோம்' நிறுவனத்தின் நிறுவனருமான சேரன் பேசியது:
 தொழில்நுட்ப வளர்ச்சி, மக்களின் ரசனை மாற்றம் உள்ளிட்ட பலவற்றால் சினிமா தொழில் நாளுக்குநாள் நலிவடைந்து வருகிறது. நட்சத்திர நடிகர்களின் படங்களைத் தவிர்த்து மற்ற படங்களுக்கு திரையரங்குகள் இல்லாத நிலை அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ளது. சினிமாவை நம்பி பயணம் செய்பவர்களில் இன்னும் நிறைய பேர் கரை சேரவில்லை. இருந்தாலும் அடுத்த பயணத்துக்கான படகுகளை தினம் தினம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

வேடிக்கை பார்த்த போலீஸ் ! பஸ் மோதி கால் துண்டிக்கப்பட்டவர் நடுரோட்டில் துடித்த அவலம்: உயிருக்கு போராடியவரை

திருநெல்வேலி: நெல்லை அருகே அரசு பஸ் மோதியதில் கால் துண்டிக்கப்பட்டவர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். மீட்க முயற்சிக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்தனர்.>திருநெல்வேலியில் இருந்து நேற்று தென்காசிக்கு புறப்பட்ட அரசு பஸ் ஆலங்குளம், பாவூர்சத்திரத்திற்கு இடையே சாலைப்புதுாருக்கு மதியம் மதியம் 1.20 மணிக்கு வந்தது. எதிரே பைக்கில் வந்த பாவூர்சத்திரம் பிஸ்கட் நிறுவனத்தில் பணியாற்றும் கல்லுாரணி முருகன்,45, மீது மோதியது. இதில் அவரது வலது முழங்காலுக்கு கீழ் பகுதி துண்டானது. இதனால் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பஸ்சில் வந்தவர்கள், 108 இலவச ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். 20 நிமிடங்களுக்கும் மேலாக ஆம்புலன்ஸ் வரவில்லை.  கிராமங்களில், குறிப்பாக படிக்காத மேதைகள் இன்னும் மனிதாபிமானத்துடன் தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். படித்தவர்களிடம் தான் அந்த போக்கு குறைந்து வருகிறது. எல்லாவற்றிலும் எச்சரிக்கை குணம்

திங்கள், 14 ஜூலை, 2014

குஜராத் படுகொலைகளுக்கு எதிராக வழக்காடுவது சாத்தியமா ?

தீஸ்தா சேதல்வாத் கார்ப்பரேட் முதலாளிகளின் அதிகார பலம், பண பலம், சட்ட வல்லுநர்கள் படை, அரசு அதிகாரம் ஆகிய அனைத்து வலிமைகளும் பொருந்திய ஒரு பாசிஸ்டுக்கு எதிராக, நீதிமன்றத்தில் இத்தகைய விடாப்படியானதொரு சட்டப்போராட்டம் நடத்துவதென்பது சாதாரண விசயமல்ல. தன் உயிரைப் பணயம் வைத்துத்தான் இத்தகைய நடவடிக்கையில் யாரும் இறங்க முடியும்.
குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டில் நடந்த இந்துவெறி பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்காக இந்திய நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடிவரும் மனித உரிமை ஆர்வலரான தீஸ்தா சேதல்வாதைப் பழிவாங்க அவர்மீது பொய்வழக்கு போட்டு, அவரைக் கைது செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது குஜராத் அரசு.
குஜராத் அரசால் பொய்வழக்கு போடப்பட்டு பழிவாங்கப்படும் தீஸ்தா சேதல்வாத் (கோப்புப் படம்).

பயங்கரவாதி ஹபீஸ் சயீதுடன் ராம்தேவ் நண்பர் சந்திப்பு: மாநிலங்களவையில் காங்கிரஸ் அமளி

யோகா குரு பாபா ராம்தேவின் நெருக்கமான நண்பரும், பத்திரிகையாளருமான பிரதாப் வைதிக், பயங்கரவாதி ஹபீஸ் சையீதை சந்தித்து பேசிய விவகாரம், மாநிலங்களவையில் பெரும் அமளியை ஏற்படுத்தியது.
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் என்று கூறப்படும் நிலையில், அவரை சென்று சந்தித்த பிரதாப் வைதிக்கை, தேச நலனை காத்திட கைது செய்ய வேண்டும் என்று அவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுப்பட்டனர்.
அப்போது அவையில் பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங், பயங்கரவாதிக்கும் பிரதாப் வைதிக்கும் நடந்த சந்திப்பிற்கு அரசுக்கு தொடர்பு உள்ளதா? என்று விளக்கம் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தணிக்கை குழுவில் போதிய உறுப்பினர்கள் இல்லை ! கியூவில் படங்கள் தாமதம் !

சென்னை: சென்சார் போர்டில் உறுப்பினர்கள் பற்றாக்குறையால் சான்றிதழுக்காக தமிழ் படங்கள் காத்திருக்கின்றன.இம்மாத வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட பல தமிழ் படங்கள் ரிலீஸ் தேதி முடிவு செய்ய முடியாமல் காத்திருக்கின்றன. இதற்கு காரணம் அப்படங்கள் சென்சார் ஆகாததுதான். சென்சார் குழுவில் சான்றிதழ் வழங்கும் உறுப்பினர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் 2 படங்கள் மட்டுமே சென்சார் செய்யப்பட்டது. இன்னும் பல படங்கள் சென்சாருக்காக நீண்ட கியூவில் காத்திருக்கிறது. சான்றிதழ் பெற்ற பிறகுதான் அரசின் வரி சலுகைக்கும் விண்ணப்பிக்க முடியும் என்பதால் தயாரிப்பாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தியாவில் உள்ள திரைப்பட தணிக்கை குழு அமைப்பில் 2வது பெரிய அமைப்பு சென்னையில் அமைந்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் 13ம் தேதி தொடங்கி இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை 380 படங்கள் சென்சார் செய்யப்பட்டது.

ஸ்டாலினின் உப்பு சப்பில்லாத பேச்சு ! கலைஞர் வருத்தம் அல்லது கண்டனம் ?

சென்னை மவுலிவாக்கத்தில், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, வலியுறுத்தி, கவர்னர் அலுவலகம் நோக்கி, தி.மு.க., சார்பில் நேற்று முன்தினம் மாபெரும் பேரணி நடந்தது.'இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் மத்தியில், உணர்ச்சிகரமாக பேசவில்லை' என, பேரணியை தலைமை ஏற்று நடத்திய, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினை, கட்சித் தலைவர் கருணாநிதி கண்டித்து உள்ளார். இதுபற்றி, அறிவாலய வட்டாரங்கள் கூறியதாவது: 'மவுலிவாக்கத்தில், 11 கட்டடம் கட்ட அனுமதி வழங்கியதில், பல தவறுகள் நடந்திருக்கின்றன. அதனால், சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என, தி.மு.க., தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதை ஏற்காத தமிழக அரசோ, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில், ஒரு நபர் விசாரணை கமிஷனை அமைத்துள்ளது. இருப்பினும்,சி.பி.ஐ., விசாரணை கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த, 12ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணியை, தி.மு.க., நடத்தியது.ஏராளமான தொண்டர்கள், அந்த பேரணியில் பங்கேற்றனர். ஆனால், பேரணியை துவக்கி வைத்து, உரையாற்றிய கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், சில நிமிடங்கள் மட்டுமே பேசினார். அந்த பேச்சும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் அளவுக்கு இல்லை.

ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 18 பேர்

புதுடில்லி: சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் அரசுகளுக்கு எதிராக, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்தி வரும் சண்டையில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, தமிழகத்தைச் சேர்ந்த சிலர் பங்கேற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.மேற்காசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக இருக்கும், பஷார் அல் - அசாத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள், கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அதில், அல் - குவைதா ஆதரவு பயங்கரவாதிகளும் சேர்ந்து கொண்டுள்ளதை அடுத்து, அங்கு பயங்கர ரத்தக்களறி நடைபெற்று வருகிறது.அது போல், ஈராக்கிலும், பிரதமர் அல் - மாலிகி தலைமையிலான அரசுக்கு எதிராக, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர்.இந்த பயங்கரவாத குழுக்களில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த, 18 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் இருவர், தானே நகரைச் சேர்ந்தவர்கள் என்பதை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்து உள்ளனர்.பயங்கரவாதிகளுடன் இணைந்திருப்பதில் பெரும்பான்மையினர், தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் என்ற அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகியுள்ளது.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் போன்ற நாடுகளில், அல் - குவைதா, தலிபான் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. அந்த அமைப்பில், இந்தியா போன்ற பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் சேர்ந்துள்ளதாக, அவ்வப்போது தகவல்கள் வெளியாகிஉள்ளன. dinamalar.com

ஞாயிறு, 13 ஜூலை, 2014

மேனகா காந்தி : சிறுவர்களுக்கான தண்டனை வயது 16 ஆக விரைவில் குறைப்பு! விரைவில் சட்ட திருத்தம் !

டெல்லியில்  நடந்த  பாலியல்  பயங்கரவாதத்தின்  பின் பலரும் சிறுவர் தண்டனை வயதை  பதினாறாக குறைக்குமாறு கோரிக்கைகள் விடுத்தனர்.  ஏனெனில் அந்த சம்பவத்தில்  பாதிக்கப்பட்ட ஜோதி சிங்மீது அதிகப்படியான பாலியல் பலாத்காரம் புரிந்து அவரின் மரணத்திற்கு காரணமானவன் அதன் பதினாறு வயது சிறுவன்தான் . ஆனாலும் காங்கிரஸ் அரசு  அதில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை . அதன் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்தான், தற்போது  மகளிர் நலத்துறை அமைச்சராக இருக்கும் மேனகா காந்தி அவர்கள் இன்று சென்னையில் பேசும் பொழுது  விரைவில்  தண்டனைக்கு உரிய வயது எல்லை பதினாறாக குறைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

கேரளா இடுக்கி மாவட்ட தமிழ் கல்வி கேள்விக்குறியாகிறது ? தமிழ் ஆசிரியர்கள் பணிநீக்கம் !

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் தங்கி அங்குள்ள தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்களில் பணியாற்றி வருகிறார்கள். மேலும் ஏராளமானோர் அங்குள்ள ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களிலும் வேலை செய்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் அங்குள்ள தமிழ்வழி பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.
தமிழ்வழி கல்வி பயிலும் மாணவ–மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதற்காக தினச்சம்பள அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

நோயாளிகளுக்கு பொருத்தும் சாதனங்களில் கொள்ளை லாபம் பார்க்கும் மருத்துவமனைகள்

நோயாளிகளுக்கு பொருத்தும் மருத்துவ சாதனங்களான ஸ்டென்ட்ஸ்(ட்யூப் வடிவிலான குழாய்), இம்ப்ளான்ட்ஸ்(பிளேட்டுகள் மற்றும் இதர சாதனங்கள்), பேஸ் மேக்கர் போன்றவைகளுக்கு மருத்துவமனைகள் நிர்ணயிக்கும் விலை கேட்டாலே மாரடைப்பு ஏற்பட்டுவிடும். அதன் வழக்கமான விலையை இரண்டு முதல் மூன்று மடங்கு விலை உயர்த்தி மருத்துவர்கள் கொள்ளை லாபம் பார்ப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த சாதனங்கள் வெளிச்சந்தையில் கிடைக்காததால், நோயாளிகளும் இந்த விலைகளை சரிபார்க்க முடியாது. அதனால் பணயக்கைதி நிலையில் உள்ள நோயாளி மருத்துவர்கள் கேட்கும் தொகையைத் தான் கட்டவேண்டி இருக்கிறது. அநேக மருத்துவமனைகளில் இந்த சாதனங்கள் அன்றாடம் பல நோயாளிகளுக்கு பொருத்தப்படுவதால் மருத்துவமனையின் ஒட்டுமொத்த லாபத்தில் 30 சதவிகித தொகையை இச்சாதனங்கள் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.

ராமானுஜன் திரைப்படம் ! சாஸ்திரங்களால் சாகடிக்கப்பட்ட மேதையின் கதை இது !

வரலாற்றில் தன் முத்திரையை பதித்த ஒரு மனிதனின் வாழ்வை படமாக்குவதில் ஆயிரம் சவால்கள் இருக்கின்றன. பாரதி, பெரியார் என இரண்டு மிகப்பெரும் ஆளுமைகளை நம் கண்முன் நிறுத்தி, அதில் வெற்றி கண்டவர் இயக்குனர் ஞானராஜசேகரன். இப்போது ஆங்கிலேயர்களையே வியக்க வைத்த ராமானுஜரைப் பற்றிய வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார்.கணித மேதையாக பரவலாக அறியப்பட்ட ராமானுஜன், கணிதத்தில் சாதித்தவை என்ன என்று தெரிந்து கொள்ள ஒரு சரியான வாய்ப்பு இந்தத் திரைப்படம். இன்று பயன்படுத்தப்படும் எ.டி.எம் கார்ட்டுகள் கூட ராமானுஜரின் கணிதத்திலிருந்து பிறந்தவை என்பது நமக்கு பெருமையை கொடுக்கிறது.

தப்பியோட முயன்ற தொழிலாளர்களின் கையை வெட்டி தண்டனை கொடுத்த முதலாளி. ஆந்த்ராவில் கொத்தடிமைகள் !

வேலை பிடிக்காமல் தப்பியோட முயன்ற தொழிலாளர்களின் கையை வெட்டி தண்டனை கொடுத்த முதலாளி. கொடுமையான  சம்பவம்
140516643313aஆந்திர மாநிலத்தில் ஐதராபாத் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் செங்கல் சுள்ளையில் கொத்தடிமையாக வேலைபார்த்த சிலர் தப்பிக்க முயன்ற குற்றத்திற்காக வலது கையின் ஒரு பகுதியை வெட்டி கொடுமையான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த தகவல் தற்போதுதான் தெரியவந்துள்ளதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் இன்னும் அடிமைத்தனம் மட்டும் ஒழியவில்லை என்பதற்கு அவ்வப்போது ஒருசில எடுத்துக்காட்டு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
ஐதராபாத்தின் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் உள்ள செங்கல்சுள்ளையில் ஒரிசாவில் இருந்து பிழைக்க வந்த ஒரு கும்பல் வேலைபார்த்து வந்தது.
மிகவும் கடினமான வேலையாக இருந்ததாலும், கூலி சரியாக கிடைக்காததாலும், அங்கிருந்து 12 பேர் கொண்ட ஒரு குழு தப்பிக்க முயன்றனர். ஆனால் அவர்களுள் மூன்று பேர் செங்கல்சுள்ளை முதலாளியிடம் பிடிபட்டனர்.