சனி, 21 ஜூலை, 2018

மோடியின் அழுகை கண்ணீர் சோகம் ஏழை தேசபக்தி ... நீ ரொம்ப நல்லவன்டா எவ்வளவு அடிச்சாலும் தாங்குறே..

ஆலஞ்சியார்: ஏழைத்தாயின் மகன்.. ஏதோ சினிமா டைட்டில் போல இருக்கிறதா..
ஆம் நாம் "ஒருதாய் மக்களை" எல்லாம் பார்த்தவர்கள் தாம் ..
இந்த அழுகை .. பதைபதைப்பு .. கண்ணீர் .. சாவு சோகம்.. இரக்கம் இதெல்லாம் அரசியலில் பேசுகிற செய்கிறவர்கள் தங்கள் மீதே நம்பிக்கை இல்லாதவர்கள்.. நான் பெண் என்பதால் .. கைகாசை செலவு செய்து மூக்குத்தியை அடமானம் வைத்து என்றெல்லாம் கதைத்தவரை நம்பியதால் தமிழகம் படுகிற அல்லல்கள் சொல்லி மாளாதவை..
..
என்ன பேசியிருக்கவேண்டும் பிரதமர் அடுக்கடுக்கான குற்றசாட்டிற்கு ஆதாரத்தோடு பதிலளிக்காமல்
காங்கிரஸை ஆட்சியை பிடிக்க எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கிறது. பதவி ஆசையால் பேசிகிறார் என்றெல்லாம் உளறுவதிலிருந்தே சரியான விளக்கம் தர முடியவில்லையென தெரிகிறது .. எல்லா அரசியல் தலைவர்களும் பதவிக்கு வரதான் ஆசைபடுவார்கள் ..ஆனால் அதை ஊர்சுற்றி பார்க்க ஒரு வாய்ப்பாக கொள்ளாமல் மக்களுக்கு ஏதேனும் நம்மால் செய்திட முடியுமென்ற நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள்

50 ஆண்டுகளுக்குப் பின் இமயமலை பனியில் விபத்தில் சிக்கிய இந்திய விமானம், விமானி உடல் கண்டுபிடிப்பு

tamilthehindu : விபத்தில் சிக்கிய விமானத்தின் துருப்பிடித்த பாகங்கள்   -  
படம்: ஏஎன்ஐ; புதுடெல்லி, இமாச்சலப் பிரதேசத்தில், தாஹா பனிமலையில் கடந்த 50ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தின் உடைந்த பாகங்களும், விமானியின் உடலும் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது.
இமயமலைப்பகுதியில் உள்ள லாஹுல் பள்ளத்தாக்கில் தாக்கா பனிப்பகுதியை சுத்தம் செய்யும் பணியில் இந்திய மலையேற்ற அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். ராஜீவ் ராவத் என்பவர் தலைமையில் 11 பேர் இந்தச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரியானா சாமியார் பாபா அமர்புரி கைது 120 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் ..


In yet another shocking incident, a 60-year-old Haryana priest, Baba Amarpuri aka Amarveer was held by the cops on Friday for allegedly raping 120 women. Amarveer is a mahant from Baba Balaknath Temple in Tohana district of Fatehabad. The following arrest came after several videos of Amarpuri raping several women surfaced on various social media platforms
மின்னம்பலம்:  ஹரியானாவைச் சேர்ந்த 60 வயதான சாமியார் ஒருவர் 120 பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு நேற்று (ஜூலை 20) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாபா அமர்புரி என்ற பில்லு என்கிற அந்த சாமியாரை ஹிசார் அருகே ஃபெடஹாபாத் மகளிர் காவல் நிலையத்தின் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பாபா அமர்புரி ஆன்மிகக் காரணங்களுக்காகத் தன்னை நாடிவரும் பெண்களை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தன்னுடைய செல்போன் மூலம் அதை வீடியோவாகப் பதிவு செய்து சம்மந்தப்பட்ட பெண்களை மிரட்டுவது இவர் வழக்கம் என்று ஃபெடஹாபாத் மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் பிம்லா தேவி கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோவை இவருடைய உறவினர் ஒருவர் ஃபெடஹாபாத் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததையடுத்து பில்லு கைது செய்யப்பட்டார். இவர் மீது பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக-பாஜக: மர்மக் கூட்டணி அம்பலமாகிவிட்டது!

அதிமுக-பாஜக: மர்மக் கூட்டணி அம்பலமாகிவிட்டது!மின்னம்பலம்: நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வாக்களித்ததன் மூலம், அதிமுக-பாஜக இடையேயான மர்மக் கூட்டணி அம்பலமாகி விட்டதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காததைக் கண்டித்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தது. தீர்மானத்தின் மீது நேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதிமுக எம்.பி வேணுகோபால் பேசுகையில், மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

ஸ்ரீ ரெட்டி திரையுலகில் உள்ள பெண்களைப் பற்றி தவறாக நினைத்துள்ளார்” என்று நடிகை கஸ்தூரி

ஸ்ரீ ரெட்டியை விமர்சிக்கும் கஸ்தூரிமின்னம்பலம் : ஸ்ரீ ரெட்டி திரையுலகில் உள்ள ஆண்களை அல்ல, பெண்களைப் பற்றி தவறாக நினைத்துள்ளார்” என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைப்பதாகத் தொடர்ச்சியாக புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு மற்றும் போராட்டங்களில் தென் இந்திய சினிமாவே சிக்கி இருக்கிறது. இனி வரும் தலைமுறை நடிகைகளுக்கு இது போன்று நிகழக்கூடாது என்ற நோக்கில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார் ஸ்ரீ ரெட்டி. இது குறித்த அவரது நேர்காணலை நமது மின்னம்பலத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி ஸ்ரீ ரெட்டி விவகாரம் குறித்து தனது கருத்தை முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “இன்றுதான் நான் ஸ்ரீ ரெட்டியின் இணையதள பேட்டியை பார்த்தேன். சினிமா ஆசை காட்டி தங்கள் ஈனபுத்திக்கு பெண்களை இரையாக்கிக்கொள்ளும் ஓநாய்களின் முகத்திரையை கிழித்து தொங்கபோட்டுக்கொண்டிருக்கிறார். மானாவாரியாக பெயர்களை இறைக்கிறார்.

4-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வுபெற்ற எஸ்.ஐ!

எஸ்.ஐ. வீட்டில் முன் குவிந்த மக்கள்அருண் சின்னதுரை; ஈ.ஜெ.நந்தகுமார்; விகடன்: மதுரையில் திரவியம் என்ற ஓய்வு பெற்ற துணை காவல் ஆய்வாளர், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆத்திகுளம் சுவாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திரவம். சுமார் 70 வயதுடைய இவர், காவல் துறை துணை ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், அப்பகுதியில் உள்ள 9 வயது சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுமி இன்று மளிகைப் பொருள்கள் வாங்க தனது வீட்டுக்கு அருகே உள்ள கடைக்குச் சென்றபோது, திரவியம் சிறுமியிடம் அத்துமீற முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்தச் சிறுமி, கதறி அழுதுக்கொண்டே, தன் பெற்றோரிடம் சொல்லியுள்ளார்.

அவினாசி தலித் பெண் சமைப்பதை எதிர்த்த சாதி இந்துக்கள் தலைமறைவு'

BBC :திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்தில், தங்கள் குழந்தைகள்
படிக்கும் பள்ளியில் தலித் பெண் சமைக்கக்கூடாது என்று முற்றுகையிட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாதி இந்துக்கள் 88 பேரும் தலைமறைவாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் சாதி ரீதியான பாரபட்சங்களை சந்தித்ததாக சமையலர் பாப்பாள் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாரத்தில் திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமையலர் பாப்பாள் ஒரு தலித் பெண் என்பதால் சமைக்கக்கூடாது என அந்த ஊரில் சாதி இந்துக்கள் சிலர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இந்த பிரச்சனை தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் வரை கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், பணியிட மாற்றம் ரத்து செய்யப்பட்டு சமையலர் பாப்பாள் மீண்டும் அவரது பணியை செய்து வருகிறார். பள்ளியில் 75 பேர் கொண்ட மாணவ மாணவியரின் எண்ணிக்கையில் இன்று, சனிக்கிழமை, 32 பேர் மட்டுமே வந்துள்ளனர்.

இந்தியா உதவியுடன் இலங்கை முழுவதும் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் - மோடி துவங்கி வைத்தார்

மாலைமலர் : :இந்தியா உதவியுடன் இலங்கை முழுவதும் அவசர சிகிச்சை
ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தினை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும், இந்திய பிரதமர் மோடியும் இன்று கூட்டாக துவக்கி வைத்தனர்.
புதுடெல்லி: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில், இந்திய அரசின் உதவியுடன் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்திய பிரதமர் கடந்த 2015-ம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்தியாவின் உதவியுடன் முதற்கட்டமாக இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 2016-ம் ஆண்டு அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவை துவக்கிவைக்கப்பட்டது.</ இந்நிலையில், இலங்கை முழுவதும் இந்த அவசர ஆம்புலன்ஸ் திட்டத்தை இன்று இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக துவக்கி வைத்தனர். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும், இந்திய பிரதமர் மோடியும் காணொளி காட்சி மூலம் இந்த சேவையை துவக்கி வைத்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமணி

ஐகோர்ட், தலைமை நீதிபதி தஹில்ரமணி, சென்னைதினத்தந்தி : புதுடில்லி : மும்பை ஐகோர்ட் மூத்த நீதிபதியாக தஹில் ரமணியை, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இந்திரா பானர்ஜி பணியாற்றி வருகிறார். அவருக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு அளிக்குமாறு கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து, மும்பை ஐகோர்ட்டில் 2001 முதல் பணியாற்றி வரும் நீதிபதி வி.கே. தஹில் ரமணியை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.மேலும், டில்லி ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படும் கீதா மிட்டலை, காஷ்மீர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி அனிருத்தா போசை, ஜார்க்கண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும், கவுகாத்தி ஐகோர்ட் நீதிபதி ரிஷிகேஸ் ராயை, கேரளா ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும், குஜராத் ஐகோர்ட் நீதிபதி எம்ஆர் ஷாவை, பாட்னா ஐகோர்ட்டிற்கு மாற்றவும் பரிந்துரைத்துள்ளது.

தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது.. உச்சி மன்றம்

தினத்தந்தி  : தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர் களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் அளிக்குமாறு மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்த சுப்ரீம் கோர்ட்டு, 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வை நடத்த அனுமதி வழங்கியது. புதுடெல்லி,< தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுதேர்வை தமிழில் எழுதிய மாணவர் களுக்கு, கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடியால் மதிப்பெண்கள் குறைந்தது.
196 கருணை மதிப்பெண்கள்
 இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்’ என்று தீர்ப்பு கூறியதோடு, மறு தரவரிசை பட்டியலை வெளியிடவும் சி.பி.எஸ்.இ.க்கு (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) அறிவுறுத்தியது.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி சி.பி.எஸ்.இ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 20 மாணவர்கள் தரப்பிலும், ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அழகிரி அரசியலுக்கு .... 6 மாதங்களுக்கு பின்பு அறிவிப்பு! பேருந்தை தவறவிட்டு விட்டார்?

விகடன் : திரு மு,க, அழகிரி கடந்த நான்கு வருடங்களாக  தி.மு.க-விலிருந்து
நீக்கப்பட்டிருந்தாலும், தி.மு.க-வுக்கு தொடர்பாக  தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார்.
அப்படி அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் தி.மு.க-வில் புகைச்சலைக் கிளப்பும். அவ்வப்போது கட்சியையும், ஸ்டாலினையும் மறைமுகமாகச் சாடிவருகிறார். அதற்கு உதாரணம்தான், சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற பி.எம். மன்னன் வீட்டு திருமண விழாவில் பேசியது. ``இப்பொழுது தி.மு.க-வில் இருப்பவர்கள் எல்லோரும் பதவிக்காக இருப்பவர்கள்" என்று கூறி அதிரவைத்தார்.
இதை, தி.மு.க-வினர் மட்டுமல்லாமல் மற்ற கட்சியினரும் அதிர்ச்சியாகப் பார்த்தார்கள். இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையம் வந்த அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவீர்களா என அழகிரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ``ஆறு மாசம் வெயிட் பண்ணுங்க, அரசியல்குறித்து அறிவிக்கிறேன்" எனக் கூறினார். ஆனால், மற்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.

ஜெர்மனி ஓடும் பேருந்தில் 14 பேருக்கு கத்திக்குத்து


ஜெர்மனியில் ஓடும் பேருந்தில் 14 பேருக்கு கத்திக்குத்துமாலைமலர் :ஜெர்மனியில் ஓடும் பேருந்தில் 14 பேரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெர்லின்: ஜெர்மனி வடக்கு பகுதியில் உள்ள லூயிபெக் நகரில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர் தனது இறுக்கையை மூதாட்டி ஒருவருக்கு விட்டுக்கொடுத்துள்ளார். அப்போது அருகில் இருந்த மற்றொரு நபர் இறுக்கையை விட்டுக்கொடுத்தவரின் மார்பில் திடீர் என கத்தியால்  குத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அருகே இருந்த பலரையும் அந்த நபர் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.

சேகுவேரா 1959 இல் இலங்கைக்கு வருகை தந்தார் ... கியூபா தொழில் அமைச்சராக ரப்பர் பயிர் ...

Revolutionary Legendary - Ernesto Che Guevara and his entourage during his Asian Tour to the Pearl of the Indian Ocean, (Ceylon) Sri Lanka.
Mohamed Mujahid : சேகுவேராவின் இலங்கை வருகை 1959= வங்கியின்
தலைவராகவும் தொழிற்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். புதிய கியூபாவுடன் சர்வதேச நாடுகளின் ராஜதந்திர உறவுகளை பலப்படுத்தும் முகமாக ஃபிடல் காஸ்ட்ரோவால் கியூபாவின் சர்வதேச பிரதிநிதியாகவும் சேகுவேராவே நியமிக்கப்பட்டு இருந்தார்.
1959 ஆகஸ்ட் 7அன்று சேகுவேராவின் இலங்கை விஜயம் நிகழ்கிறது.

கியூபாவின் தொழிற்துறை அமைச்சர், கியூபாவின் சர்வதேச பிரதிநிதி என்ற வகையில் இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தின் போதே றப்பர் பயிர் செய்கை முறைகள் பற்றி அறியும் நோக்கில் இலங்கைக்கும் சே விஜயம் செய்திருந்தார்.
ஆகஸ்ட் 08 ஹொரனையில் அமைந்துள்ள 1500 ஏக்கர் பரப்பளவிலான 'யஹல கலே' ரப்பர் தோட்டத்தை பார்வையிட சேகுவேரா சென்றுள்ளார். அப்போது
அங்கு தோட்டப் பராமரிப்பாளராக பணியாற்றிய டிங்கிரி மஹத்தயா சே குவேராவை சந்தித்த விரல்விட்டு எண்ணக்கூடிய இலங்கையர்களில் உள்ளடங்குகிறார்.

வெள்ளி, 20 ஜூலை, 2018

15 வருடங்களாக கொள்ளை... திருச்சியில் பிடிபட்ட இலங்கை தம்பதிகள்

தமிழகத்தில் கணவன் மனைவியாக கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை தம்பதிகள்!தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை தம்பதியினர் இலங்கைக்கு தப்பித்து செல்ல முற்படுகையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை தம்பதியினர் இலங்கைக்கு தப்பித்து செல்ல முற்படுகையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவரம்பூர் துவாக்குடியை அடுத்து உள்ள வாழவந்தான் கோட்டையில் இருக்கும் அகதிகள் முகாமில் வட்டி தொழில் செய்து வருபவர் 50 வயதான இலங்கை அகதி தேவகுமாரி.
இவர் கடந்த 4ம் தேதி அய்யம்பட்டி சாலையில் நடந்து செல்லும் போது 3 பேர் கத்தியை காட்டி 10 பவுன் நகைகளை மிரட்டி வாங்கி சென்றனர்.

செய்யாதுரை .. சிக்கிய சிடி'யில், 42 பேரின் பேச்சுகள் உள்ளனன.. கூவத்தூர் ரகசியங்கள் உள்பட ..

மாலைமலர் : "செய்யாதுரை,ரகசிய சிடி, அரசியல் கட்சினர், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை, வருமான வரித்துறை சோதனை, சிடி விவகாரம், அரசியல் கட்சிகள், சென்னை : நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய பிரமுகர்களின் உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ள 'சிடி' சிக்கியுள்ளது.
இது தொடர்பாக, வருமான வரித்துறை தரப்பில், தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், 'சிடி' விவகாரம் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுர்களுக்கு கசிந்துள்ளது. இதனால் பலர் கலக்கத்தில் உள்ளனர்.
ஏனெனில், 'சிடி'யில், 42 பேரின் உடையாடல்கள் பதிவாகி உள்ளன. ஜெ., மறைந்த பின், சசிகலா முதல்வராவதற்காக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், கூவத்துார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
அப்போது, சசிகலாவிற்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.,க்களுக்கு, கோடிக்கணக்கில் ரூபாய் வழங்கப்பட்டதாக, புகார் எழுந்தது. எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்குவதற்காக, செய்யாத்துரையிடம், பணம் கொண்டு வரும்படி முக்கிய பிரமுகர்கள் பேசியதை அவர் பதிவு செய்து வைத்துள்ளார்.

மோடி : பிரதமர் நாற்காலியில் இருந்து நான் எழ வேண்டும் என்று ஒருவர் விரும்புகிறார்! ( அடுத்தது அழுகையா?

பிரதமர் நாற்காலியில் இருந்து நான் எழ வேண்டும் என ஒருவர் விரும்புகிறார் - பிரதமர் மோடி பேச்சுமாலைமலர் :பிரதமர் நாற்காலியில் யார் அமர வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசினார்
புதுடெல்லி: மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடந்தது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்து விட்டன. இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்தது. எனினும், மசோதா மீதான விவாதம் நடந்தது. மத்திய அரசு மற்றும் பிரதமர் மீது பல்வேறு விவகாரங்களை முன்வைத்து ராகுல் காந்தி பேசினார்.

ராகுல் : பிரான்ஸ் அதிபர் என் முன்னால்தான் கூறினார் .. ரபேல் விமான ஊழல் .. நிர்மலாவும் ...

பிரான்ஸ் அதிபர் என் முன்னால் தான் கூறினார் - ரபேல் விவகாரத்தில் ராகுல் திட்டவட்டம்மாலைமலர் : ரபேல் விமான ஒப்பந்தத்தில் ரகசிய காப்பு அம்சம் இல்லை என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. புதுடெல்லி: மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேச கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, “ரபேல் விமான ஒப்பந்தம் குறித்தான தகவல்களை வெளியிட இருநாடுகளுக்கு இடையில் ரகசிய காப்பு ஒப்பந்தம் இருப்பதாக மோடி அரசு கூறுகிறது. பிரான்ஸ் அதிபர் மாக்ரானுடன் நான் உரையாடிய போது இரு நாடுகளுக்கு இடையில் எந்த ரகசிய காப்பு ஒப்பந்தமும் இல்லை என்றார். மோடியின் நெருக்கடியினால் நிர்மலா சீதாராமன் பொய் கூறியுள்ளார்" என்றார்.

கமலஹாசனின் அழைப்பை நிராகரித்த ஆசிரியர் பகவான் ..

tamiloneindia திருவள்ளூர்: ஆசிரியர் பகவானை தமிழகம் அவ்வளவு சீக்கிரம்
மறந்திருக்காது. மறக்கவும் முடியாது. பள்ளி-மாணவர்களிடையே மறுமலர்ச்சியையும் கல்வித்துறையிலேயே மாற்றத்தையும் ஏற்படுத்தியவர். பணிமாறுதலை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் நடத்திய உணர்ச்சி பிழம்புகள், நாடு முழுவதும் தெறித்து விழுந்தது. அதற்காக பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், மகிழ்ச்சிகளும், நாட்டின் நாலாபுறமுமிருந்தும் ஆசிரியர் பகவானுக்கு வந்து சேர்ந்தன.
வயது வித்தியாசம் இல்லாமல், பதவி, அந்தஸ்து பார்க்காமல், அனைத்து துறைகளிலிருந்தும் பகவானுக்கு நன்மதிப்பு வார்த்தைகள் குவிந்தன.
அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனும் ஆசிரியரை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவிக்கலாம் என்று நினைத்தார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்துகொள்ள வேண்டும் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்களும் பத்திரிகையாளர்களுக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தனர்.

இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்ற படும் முதல் 15 பேர்களின் பெயர்கள் அறிவிப்பு

Ajeevan Veer : மரண தண்டனை கைதிகளின் அட்டவணை !
2011ல் மரண தண்டணை பெற்றோர்
1. சியாமளி பெரேரா
2. எம்.ஏ. சுமணசிரி
3. எஸ். மொகமட் ( பாகிஸ்தான்காரர்)

2002 முதல் 2003 வரை மரண தண்டணை பெற்றோர்
4. எஸ். கே. ஜயதிலக்க
5. தர்மாகரன்
2007 முதல் 2009 வரை மரண தண்டணை பெற்றோர்
6. வேலாயுதம் முரளிதரன்
7. எம்.எஸ். எம். மஸ்தார்
8. பீ.ஜீ. போல்சிங்
9. சிவநேசன் ராஜா
2012 ல் மரண தண்டணை பெற்றோர்
10. எஸ். புண்ணியமூர்த்தி
11. கே. எம். சமிந்த
12. எஸ். கணேசன்
2013 ல் மரண தண்டணை பெற்றோர்
13. டப்ளியூ. வினாயகமூர்த்தி
14. எஸ். ஏ. சுரேஸ்குமார்
2015 ல் மரண தண்டணை பெற்றோர்
15. ரங்க சம்பத் பொண்சேகா
இவர்களது பெயர்கள் நீதி துறைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

நீட் கருணை மதிப்பெண்கள்: இடைக்காலத் தடை! உச்சிக்குடுமி நீதிமன்றம் !

நீட் கருணை மதிப்பெண்கள்: இடைக்காலத் தடை!
மின்னம்பலம்: மொழிபெயர்ப்பால் ஏற்பட்ட குளறுபடியினால், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு, இன்று (ஜூலை 20) உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 6ஆம் தேதியன்று நடைபெற்றது. தமிழ் மொழியில் வழங்கப்பட்ட வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தவறாக மொழிபெயர்த்த 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. புதிய தர வரிசைப்பட்டியல் தயாரித்து கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும், அதுவரை தற்போது நடைபெற்று வரும் கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இலங்கை.. 30க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில் மனித உதவி தேடி வந்த யானை

ramilthehindu :துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் இலங்கை யானை. எஸ். முஹம்மது ராஃபி
இலங்கையின் ஹம்பந்தோட்டா வனப்பகுதயில் 30க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகளுடன் வலியால் அவதிப்பட்ட யானை ஒன்று வனத்தை விட்டு மக்கள் வசிக்கும் பகுதிக்கு மருத்துவ உதவிக்காக மனிதர்களைத் தேடி வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று வகையான ஆசிய யானைகளில் இலங்கை யானையும் ஒன்று. 1986-ம் ஆண்டிலிருந்து இலங்கை யானை அருகி வரும் இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் யானைகளைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். குற்றம் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டால் 2 முதல் 5 வருடங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

எதிர்கட்சிகள் புதிய முடிவு - நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்குமா? வெளிநடப்பு?

எதிர்கட்சிகள் புதிய முடிவு - நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்குமா?
மாலைமலர் :நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான
விவாதத்தை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுடெல்லி: மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடந்து வருகின்றது. மாலை 6 மணியளவில் இதன் மீதான வாக்கெடுப்பு நடக்க உள்ளது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்து விட்டன. இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.

பொறி பறந்த ராகுல் காந்தியின் உரை.. கலங்கிப் போன மோடி..
கத்தி கூச்சல் போட்ட பாஜகவினர்


Kathiravan Mumbai :டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்புக்கு முன்பு நடக்கும் விவாதத்தில் பேசிய உரை பாஜகவினரை கலங்கடிக்க வைத்துள்ளது. ராகுலை பேசுவதை கேட்க கூட பொறுமை இல்லாமல், கூச்சலிட்டு பாஜகவினர் குழப்பம் செய்துள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி சரமாரி விமர்சனம் செய்தார்.
பரபரப்பாக இன்று கூட இருக்கும் இன்றைய லோக் சபா கூட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. இந்த கூட்டம் இன்று மாலை வரை நடக்கும்.

விலைவாசி உயர்வு
இதில் ராகுல் அந்த ஒரு விஷயத்தையும் விட்டுவைக்கவில்லை. மோடியின் அறியாமை காரணமாக செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், பணத்தை தற்போதையை மதிப்பு மொத்தமாக குறைந்துவிட்டது. விலைவாசி பெரிய உயரத்தை ஏற்றிவிட்டது. மோடி சந்தோசமாக ஊர் சுற்றும் போது, பெட்ரோல் டீசல் விலை கூடிவிட்டது. ஆனால் மோடி பணக்காரர்களுக்காக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார், என்றுள்ளார்.

இஸ்ரேல் யூதர்களுக்கான தேசம்: சர்ச்சைக்குரிய சட்டம்!

மின்னம்பலம் : இஸ்ரேல் யூதர்களுக்கான தேசம்: சர்ச்சைக்குரிய சட்டம்!
"மின்னம்பலம் : இஸ்ரேலிலுள்ள சிறுபான்மையினரை ஓரங்கட்டிவிட்டு அந்நாடு யூதர்களுக்கான தேசம் என்பதை அறிவிக்கும் சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது.
நேற்று (19.07.18) இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் இயற்றப்பட்டது. இது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு பேசியதாவது:
"இஸ்ரேல் என்பது யூதர்களின் தேசமாகும் இங்கு அனைத்து குடிமக்களின் தனி நபர் உரிமைகளும் பாதுகாக்கப்படும் நான் திரும்பக் கூறுகிறேன். இது யூதர்களின் தேசமாகும். இது ஜியோனிசத்திற்கான வெற்றியாகும். சமீபத்தில் இந்த நாட்டைச் சீர்குலைக்க சிலர் முயற்சி செய்தனர். அதன் மூலம் நமது இருப்பையும் நமது உரிமைகளையும் சீர்குலைக்க முயற்சி செய்தனர். அதனால் இன்று நாம் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளோம். இது நமது நாடு. இது நமது மொழி. இது நமது தேசிய கீதம். இஸ்ரேல் நாடு நீடுழி வாழ்க."
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு .. பேசுவதற்கு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட நிமிட அளவுகள் ,,

தினத்தந்தி : புதுடெல்லி, மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
மக்களவையில் விவாதம் நடைபெற்று, பின்னர் ஓட்டெடுப்பு நடைபெறுகிறது. மக்களவையில் விவாதத்தில் பங்கேற்று பேசுவதற்கு கட்சிகள் வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு 3 மணி 33 நிமிடங்களும்,
 காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
 மூன்றாவது பெரிய கட்சியான அ.தி.மு.க.வுக்கு 29 நிமிடங்களும்,
திரிணாமுல் காங்கிரசுக்கு 27 நிமிடங்களும்,
பிஜூ ஜனதா தளத்துக்கு 15 நிமிடங்களும்,
சிவசேனாவுக்கு 14 நிமிடங்களும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல தெலுங்கு தேசம் கட்சிக்கு 13 நிமிடங்களும், தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சிக்கு 9 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 7 நிமிடங்கள், சமாஜ்வாதி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 6 நிமிடங்கள், லோக் ஜன் சக்தி கட்சிக்கு 5 நிமிடங்கள். என மொத்தம் 6 மணி 35 நிமிடங்கள் வரை தீர்மானம் மீது விவாதம் நடத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சிரூர் மடாதிபதி விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? -


கர்நாடக மாநிலத்தில் சிரூர் மடாதிபதி விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? - போலீசில் பரபரப்பு புகார்மாலைமலர் : சிரூர் மடத்தின் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமி நேற்று திடீரென மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. மங்களூரு: சிரூர் மடத்தின் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமி நேற்று திடீரென மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், எனவே உரிய விசாரணை நடத்த கோரியும் மடாதிபதியின் தம்பி போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் சிரூரில் அமைந்துள்ளது சிரூர் மடம். பிரசித்திபெற்ற இந்த மடத்தின் 30-வது மடாதிபதியாக இருந்து வந்தவர் லட்சுமிவரதீர்த்த சுவாமி ஆவார். தற்போது 54 வயதான லட்சுமிவரதீர்த்த சுவாமிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

ரஷ்யாவின் ரஸ்புடின்! .. தேவனா? சாத்தானா? கண்டுபிடிக்கவே முடியாத மர்மங்கள் நிறைந்த வாழ்வும் ... முடிவும்

nanrinanba.blogspot.com  ரஷ்யாவின் வரலாற்றில் மறக்க முடியாத பெயர் கிரிகோரி எபீமொவிச் ரஸ்புடின் சைபீரியாவின் மேற்கு பகுதி ஒன்றின் சிறுவிவாசாயி எபீமொவிச்சிர்க்கும் அண்ணாவிற்கும் 1872  ஆம் ஆண்டு பிறந்தவர்  ரஸ்புடின் அன்றைய சைபீரியாவில் படிப்பறிவு பெற்றவர்கள் மிக சொற்பமே ஆனால் ரஸ்புடின் தந்தை கொஞ்சம் கல்வியறிவு பெற்றவர் ஆதாலால் இரவு நேரங்களில் தனது குடும்பத்தினருடன் பைபிளினை படிப்பதில் செலவிட்டார். இதன் தாக்கமே ரஸ்புடினை பிற்காலத்தில் புனித மனிதனாகவும் ,ஜார் அரசவையில் கோலோச்சவும் உதவியது.
;இளம் வயது முதலாகவே ரஸ்புடினுக்கு அதிசய சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. தனது எட்டாம் வயதில் மூத்த சகோதரனை கபவாதத்தில் இழந்த துயரம் வெகுவாக ரஸ்புடினை தாக்குகிறது  ஆனாலும் அவனுடைய அசாத்திய சக்திகள் மங்கவில்லை, ஒரு சமயம் ரஸ்புடினின் தந்தையும் அவர் நண்பர்களும் கிராமத்தில் நடந்த குதிரை திருட்டு குறித்து விவாதித்த போது  தன்  படுக்கையில் இருந்து துள்ளி எழுந்த ரஸ்புடின் குறிப்பிட மனிதரை சுட்டி இவர்தான் குதிரயை  திருடியது என கூறியபோது அவனது கூற்றினை ஏற்க்க மறுத்துவிட்டனர்.பிறகு ரஸ்புடின் உறவினர்கள் இருவர் ரஸ்புடின் சுட்டிய மனிதனை ரகசியமாக கண்காணித்தபோது அவரே குற்றவாளி என அறிந்து வியந்தனர்.

ஸ்டாலின் : 180 கோடிக்கு மேல் பணமும், 100 கிலோவிற்கு மேல் தங்கமும்.. ஏன் இன்னும் பதில் இல்லை?

M. K. Stalin : முதலமைச்சரின் சம்பந்தியின் நிறுவனங்களில் பார்ட்னராக ீட்டிலும், அலுவலகங்களிலும் 180 கோடி ரூபாய்க்கு மேல் பணமும், 100 கிலோவிற்கு மேல் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் உதவியாளர் வீடுகளில் இருந்து எல்லாம் ஆவணங்களும், பணமும் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. ஜூலை 16 ஆம் தேதி தொடங்கிய "ரெய்டு" இன்னும் முடிவுக்கு வராமல் தொடருகிறது.
இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் டெண்டர்களை முதலமைச்சரின் துறையிலேயே எடுத்த ஒப்பந்ததாரர் நாகராஜன் செய்யாதுரை வ
இந்நிலையில் மூன்று நாள் மவுனத்தைக் கலைத்திருக்கும் முதலமைச்சர், “வரி கட்டாத, வரி ஏய்ப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்துவது வழக்கமான ஒன்றுதான்” என்றும், “எனக்கு தமிழ்நாடு முழுவதும் உறவினர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள்” என்றும் ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே என்ற கட்டாயத்தில் கூறியிருக்கிறார்.
ஆனால் முதலமைச்சரின் சம்பந்திக்கும், அவர் பார்ட்னராக இருக்கும் நிறுவனங்களுக்கும் தனது துறையிலிருக்கும் டெண்டர்களை கொடுத்தது ஏன் என்பதற்கு குறிப்பிட்டு எந்த விளக்கத்தையும் முதல்வரால் சொல்ல முடியவில்லை.

வியாழன், 19 ஜூலை, 2018

நடிகை ஸ்ரீ ரெட்டி : பயன்படுத்தியவர்கள் உறுதி அளித்த வாய்ப்புக்களை தரவில்லை! பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் தேவை?


Palai Karthik : ஸ்ரீரெட்டி விசயத்தில் இவரை தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி கொண்டவர்கள் சொன்ன மாதிரி இவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை, நேர்மை தவறிவிட்டார்கள் என்பதே திரும்ப திரும்ப இவர் வைக்கும் குற்றச்சாட்டு. ஒருவேளை இன்று இவர் ஒரு பெரிய நடிகையாக வலம் வந்திருந்தால் இதை ஒரு இழப்பாக அவர் எண்ணியிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.
நேற்று கூட ஒரு பேட்டியில் லாரன்ஸ் மாஸ்டருக்கு 6 Packஆ இருக்கிறது அவருடன் படுத்ததற்கு என்று கூறியது அவர்கள் விரும்பியதை கொடுத்தேன் ஆனால் அவர்கள் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்பது தான்.
உண்மையில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது.
கடைசியில் பிரச்சனை மஞ்சள் பத்திரிக்கை ரேஞ்சிக்கு தான் போகுது! இவரை வைத்து ஊடகங்கள் தங்கள் வியாபாரத்தை வளர்த்து கொள்கிறார்கள் அவ்வளவு தான்

கார்த்திக் : நடிகை ஸ்ரீ ரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படும்

ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படும்: கார்த்திமின்னம்பலம்:  நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராவது ஸ்ரீரெட்டி மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். விவசாயம், கூட்டுக்குடும்ப வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்குநர் பாண்டியராஜ் இயக்க, சாயிஷா, சத்யராஜ் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, நடிகர் கார்த்தி மற்றும் படக்குழுவினர் ஒவ்வொரு ஊராக திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

Aircel Maxxis சிபிஐ குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம் குற்றவாளியாக சேர்ப்பு

tamilthehindu :ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிபிஐ இன்று தாக்கல் செய்த
குற்றப்பத்திரிகையில், முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3500 கோடி முதலீடு செய்ய மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.< ஆனால், ரூ.600 கோடி முதலீட்டு வரை மட்டுமே மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளிக்கும். அதற்கு மேல் உள்ள தொகைக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கும். ஆனால், விதிமுறைகளை மீறி அனுமதி வாங்கப்பட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அரசியலை காக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

Savukku ·: வரும் 2019 மக்களவைத் தேர்தலைப் பற்றி யோசிக்கும்போது, நம் மனது நம்மையறியாமலே 1977ஆம் ஆண்டின் அவசர நிலைக்குப் பிந்தைய தேர்தலுக்குச் சென்றுவிடுகிறது; ஏதோ ஒரு தந்திரம் நிகழ்ந்ததுபோல, நம்மைப் பிடித்து ஆட்டி எதிர்காலத்தைப் பாதிக்குமோ என நாம் பயந்த கருமேகங்கள் அந்தத் தேர்தலுக்குப் பின்னர் சட்டென்று விலகிவிட்டன.
1977ஐ நினைவுகூரும்போது நினைவுகள் அமைதியற்றே உள்ளன: ஜனதா ஆட்சி என்ற பரிசோதனையின் மாபெரும் தோல்வி, அதனால் இந்திரா காந்தி பதவிக்குத் திரும்ப  உதவியது, காலப்போக்கில் தோல்வியடைந்த ஜனதா (ஆட்சி) பரிசோதனையில் பிழைத்த மோசமான ஒரு வாரிசான பாரதிய ஜனதா கட்சி (பாஜக)…
வரும் 2019 மக்களவைத் தேர்தலில் எல்லா வித அரசியலும் முடிவுக்கு வந்து நிரந்தர இருட்டு படரும், ‘இந்து ராஷ்டிரத்தை’ நோக்கிய பயணம் தொடங்கும் என்னும் அச்சம் நிலவும் பின்னணியில் 1977 தேர்தலைப் பார்க்க வேண்டும்.
நரேந்திர மோடியும் அமித் ஷாவும் உருவாக்கிய வலுவான தேர்தல் இயந்திரம் சமீபத்திய மக்களவை இடைத்தேர்தல்களில் சாதாரணமான, தற்காலிகமான எதிர்க்கட்சிக் கூட்டணிகளால் தோற்கடிக்கப்பட்டதால் மட்டுமே மீண்டும் நம்பிக்கை – மிகச் சிறிய அளவு என்றபோதிலும் – துளிர்ந்துள்ளது.

ப்ளஸ் டூ மாணவர்கள் டேட்டாவின் விலை 2 லட்சம்.

Savukku : மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வு நீட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்கும் நிலையில், பிடிக்கிறதோ இல்லையோ ஆனால் நீட்டை  தவிர்க்க முடியாது என்றுணர்ந்த மாணவர்கள் அதற்கு தங்களை தயார் படுத்த தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் சில ஆங்கில ஊடகங்கள் நீட்டில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தியா டுடே பத்திரிகை நடத்திய “ஆபரேஷன் விட்டமின் சி” என்ற ஸ்டிங் ஆபரேஷனில், தனியார் மருத்துவக்கல்லூரி நீட் தேர்வில் மிகவும் குறைந்த மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு, இடங்களை ப்ரீ புக்கிங் முறையில் 15 லட்சம் முதல் விற்கப்படுவதை கண்டறிந்தது. கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படாத சீட்டுகளை கல்லூரிகள் மானேஜ்மேன்ட் கோட்டா மூலம் நிரப்பிக்கொள்ளுவது வாடிக்கை ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் திட்டமிட்டு கவுன்சிலிங்கில் நிரப்படப்படாமல் அதை முன்கூட்டியே விற்கப்படுகிறது

அயனாவரம் .. கைது செய்யப்பட்டாலே குற்றவாளிகள் என்று எப்படி முடிவுக்கு வரமுடியும்?

கைது செய்ய பட்டாலே குற்றவாளி..அவன் தலையை வெட்டனும்..வக்கில் வைத்து வாதாட கூடாது என்று நம் கைபேசி தட்டச்சில் தீர்ப்பு வாசிக்கும் நாட்டாமைகள்
Ashok Kumar, earlier the prime accused in the Ryan school murder case, spoke to Firstpost about police brutality. Image Courtesy: 101Reporters
Nanda Kumaar : சென்ற வருடம் ஹரியானா மாநிலம் குர்ஹானிம் ரேயான்
இண்டர் நேஷனல் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த குழந்தை அந்த பள்ளி பாத் ரூமில் கழுத்தறுக்க பட்டு கொலை செய்ய பட்ட செய்தி படித்து இருப்போம்.
பஸ் கண்டக்டர் அஷோக் குமார் பாத் ரூமில் சுய இன்பம் செய்த போது அந்த குழந்தை பார்த்து விட்டதாகவும்.. அவனை வன்புணர்வு
செய்ததாகவும் , எல்லோரிடமும் சொல்லி விடுவான் என்று பயந்து கத்தியால் கழுத்து அறுத்து கொல்ல பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் சொல்ல பட்டது..

பத்திரிக்கைகள் முன் அஷோக் ஆஜர் செய்ய பட்டார்.அவரை பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டனர்.
Why did you kill the boy?
ஏன் அந்த பையனை கொன்றாய் .
Buddhi kharaab ho gaya tha. Hosh nahi raha. (I was out of my mind. I had lost my senses.)
நான் என் அறிவை இழந்து விட்டேன்..கட்டுபாட்டில் இல்லை.
Why did you kill him?
ஏன் அந்த பையனை கொன்றாய்.

அவிநாசி ..ஜாதிவெறி பெற்றோர்கள் , பணியிடை மாற்றம் செய்தவர்கள் மீது வன்கொடுமை சட்டம் ...

அவிநாசி , கவுண்டபாளைய அரசு உயர்நிலை பள்ளியில் ஜாதி வெறி பிடித்த பெற்றோர்கள் மீது  மட்டுமல்லாது அங்கு சமையலராக பணியாற்றி வந்த பாப்பம்மாளை பணியிட மாற்றம் செய்த BDO மேலும் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

Shalin Maria Lawrence : எனது அத்தைகள் இருவரும் அரசு பள்ளிகளில் சத்துணவு பொருப்பாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தலித்தான்.அவர்கள் கீழ் இயங்கும் சத்துணவு ஆயாக்கள் என்று அழைக்கப்படும் உணவை தயார் செய்பவர்கள் எல்லாம் தலித்துக்களே.கிட்ட தட்ட 25 வருடமாக பார்த்து வருகிறேன்.
சென்னையை பொறுத்தவரை கிராமங்கள் போல் இல்லாமல் பள்ளிகளில் மாணாக்கர்கள் அதிகம் என்பதால் வேலை பலுவும் மிக அதிகம் அவர்களுக்கு.சொச்ச சம்பளமே ஆனாலும் அவர்களின் சுறுசுறுப்பும் ,பணி சிரத்தையும் அசாதாரணமாக இருக்கும் ஆனால் அதே நேரத்தில் அநேக குழந்தைகளின் பசியை போக்கும் அவர்களுக்கு பெரிய அங்கீகாரம் எல்லாம் கிடைக்காது.

அவினாசியில் தீண்டாமை கொடுமை... சாதி என்பது விதியா... பா. ரஞ்சித் கொதிப்பு

Kathiravan Mumbai : போராட்டம் வெற்றி. சத்துணவு அமைப்பாளர் பாப்பம்மாளுக்கு அதே இடத்தில் மீண்டும் பணி நியமனம், சாதி வெறியர்கள் மீது வழக்கு பதிவு... களத்தில் நின்ற அனைவருக்கும் நன்றி... "மரியாதைக்குரிய பாப்பம்மாள் அவர்களை மீண்டும் அதே பள்ளியில் அமர்த்தப்படுவர் , சம்பத்தப்பட்ட அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மூலம் நடவடிக்கை " - ஆதிதிராவிட நலத்துறை
Director Pa.Ranjith tweet about Anganwadi cook transfer incident
tamiloneindia லக்ஷ்மி பிரியா : சென்னை: அவினாசியில் தீண்டாமை கொடுமையால் அங்குள்ள சமையலரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்த அவலத்தை இயக்குநர் பா.ரஞ்சித் கண்டித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவினாசியில் திருமலைக்கவுண்டம்பாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சமையலராக பாப்பம்மாள் என்பவர் சமையலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு ஜாதியை சேர்ந்தோர் பாப்பம்மாள் சமைத்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பள்ளி முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கூகிள் நிறுவனத்துக்கு அபராதம் .. ஆதிக்கத்தை நிலைநாட்ட மோசடி.. அம்பலம் !

தினத்தந்தி : ஆண்ட்ராய்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி இண்டெர்நெட் பயன்பாட்டில்
தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட கூகுள் நிறுவனம் முயற்சித்ததாக கூறி ஐரோப்பிய யூனியன் சுமார் 3.42 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
 ஆதிக்கத்தை நிலைநாட்ட மோசடி - கூகுள் நிறுவனத்துக்கு 3.42 லட்சம் கோடி ரூபாய் அபராதம் பிரசெல்ஸ்: பிரபல தேடுபொறியான அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் இணைய உலகில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், இணையதளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆண்ட்ராய்ட் அமைப்பை கூகுள் நிறுவனம் விதிகளை மீறி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதன் மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்துள்ளதாகும்
இந்த புகாரின் பேரில் கடந்த மூன்றாண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்திற்கு இன்று 5000 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.34,26,25,00,00,000) அபராதம் விதிக்கப்பட்டது.

கலைஞர் மருத்துவ மனையில் அனுமதி

பிந்திய செய்தி  : சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார் திமுக தலைவர் கலைஞர் டிரக்கியாஸ்டமி குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் பொருத்தப்பட்டதையடுத்து வீட்டிற்கு புறப்பட்டார்
விகடன் - கார்த்திக்.சி : தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி, சிறிய
அளவிலான அறுவைசிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கலைஞர்  வயது முதிர்வின் காரணமாகவும், உடல்நலக் குறைபாட்டின் காரணமாகவும் ஒரு வருடத்துக்கும் மேலாக கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் ஓய்வில் இருந்துவருகிறார். அவருக்கான பணிவிடைகளை உதவியாளர்கள் செய்துவருகின்றனர்.
கலைஞர் பேரக் குழந்தைகளுடன் விளையாடும் போட்டோக்களும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகிவந்தன.

ராஜ்ய சபாவில் 22 மொழிகளில் பேச அனுமதி

தினமலர் : புதுடில்லி : 'ராஜ்யசபாவில், உறுப்பினர்கள், 22 இந்திய மொழிகளில் பேசலாம்' என, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.ராஜ்யசபாவில், ஏற்கனவே, தமிழ், அசாமி, வங்கம், குஜராத்தி, ஹிந்தி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது உள்ளிட்ட, 17 மொழிகளில் பேச அனுமதி வழங்கப்பட்டது. உறுப்பினர்கள், இந்த, 17 மொழிகளில், ஒன்றில் பேசினால், அதை பிற உறுப்பினர்கள் புரிந்து கொள்ளும் வகையில், மொழிமாற்றம் செய்து அளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், புதிதாக, தோக்ரி, காஷ்மீரி, கொங்கணி, சாந்தாலி, சிந்தி ஆகிய ஐந்து மொழிகளுக்கு, மொழி மாற்ற வசதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 'புதிதாக சேர்க்கப்பட்ட ஐந்து மொழிகள் உட்பட, 22 இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றில், ராஜ்யசபா உறுப்பினர்கள் பேசலாம்' என, ராஜ்யசபா தலைவர், வெங்கையா நாயுடு நேற்று அறிவித்தார். இருப்பினும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மொழிகளில் பேச விரும்பினால், ராஜ்யசபா செயலகத்தில், முன்னரே தெரிவிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் : நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கவேண்டும் மத்திய அரசு மீது எதிர்கட்சிகள் கொண்டுவரும் ...

tamilthehindu : நம்பிக்கை இல்லாதீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்று
மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு பதிலளித்த ஓபிஎஸ் வரும் 29-ம் தேதி வரை பொறுப்போம் என்று பதிலளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது:< “தெலுங்கு தேசம் கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் அவர்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு கொண்டு வருவது. எநாம் காவிரி மேலாண்மை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறோம். இரண்டும் ஒன்றல்ல, இரண்டையும் ஒன்றிணைத்து முடிச்சு போட வேண்டாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தி அதன் தீர்மானங்களை அனுப்பி வைத்துள்ளோம்.
காவிரி மேலாண்மை அமைக்கும் காலக்கெடு முடிய மார்ச் 29 வரை நாள் உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது முடிவெடுக்க வரும் 29-ம் தேதி வரை பொறுத்திருப்போம். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம்

முட்டை விலையில் பாஜக மாநிலங்களை விட தமிழகம் குறைவுதான் .. எடப்பாடி போன்னாருக்கு பதில்

பாஜக மீது எடப்பாடியின் முதல் பாய்ச்சல்!
மின்னம்பலம்: பாஜக பற்றி கடந்த ஓராண்டாக அதிமுகவில் இருந்து துணை சபாநாயகர் தம்பிதுரையோ, அமைச்சர் ஜெயக்குமாரோதான் எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள். அதுவே அதிமுகவின் அதிகபட்ச பாஜக எதிர்ப்பாக இருக்கும். ஆனால், ஜூலை 9ஆம் தேதி சென்னை வந்த பாஜக தலைவர் அமித் ஷா, அதிமுகவை ஊழல் அரசு என்று விமர்சித்த பிறகு முதன்முறையாக பாஜகவுக்கு எதிராக பேசியிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இன்று (ஜூன் 19) மேட்டூர் அணையைத் திறப்பதற்காக நேற்று விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவைக்குப் புறப்பட்டார் முதல்வர்.
நேற்று காலை தனது செயலாளர்களிடம் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் சத்துணவு முட்டை விநியோகம் பற்றிய புள்ளிவிவரங்களைக் கேட்டதோடு... மற்ற மாநிலங்களில் அரசு என்ன விலைக்கு முட்டை கொள்முதல் செய்கிறது, முட்டை விலை என்ன, குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் முட்டை என்ன விலை என்று லிஸ்ட் கேட்டுள்ளார். சில மணி நேரங்களில் முதல்வர் கைக்குப் பட்டியல் வந்துவிட அதை கையோடு எடுத்துக்கொண்டுதான் கோவைக்கு விமானம் ஏறினார் முதல்வர்.
வழக்கம்போல் கோவை விமான நிலையத்தில் ரிலாக்ஸாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சொல்லைத் தத்தெடுங்கள்!.. வழக்கில் இல்லாது அழிந்து போகும் சொற்களின் களஞ்சியம்

மின்னம்பலம் - ரவிக்குமார்:  சிறப்புக் கட்டுரை: சொல்லைத் தத்தெடுங்கள்!மனிதக் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தானது மொழி தான். மனிதகுலம் பொருட்களால் கட்டியெழுப்பிய உலகைவிடவும் சொற்களால் உருவாக்கி வைத்திருக்கும் உலகம் பெரியது. நாம் பௌதீக உலகில் இருப்பதாக நம்பினாலும் சொற்களின் உலகில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மாளிகைகளும், அரண்மனைகளும், காவல் நிலையங்களும் சிறைக்கூடங்களும் நிறைந்த எந்த ஒரு நாட்டைவிடவும் மனிதர்கள் வாழத் தகுதியுடையதாக இருக்கிறது சொற்களால் ஆன உலகம். அங்கு எல்லைகள் இல்லை. எனவே, சட்டங்களின் ஆதிக்கமோ, தண்டனைகளின் அச்சமோ இல்லை. அங்கு ஆள்பவர்கள் இல்லை. எனவே, அடிமைகளும் இல்லை. அங்கு உரிமையாளர்கள் இல்லை. எனவே, ஏதிலிகளும் இல்லை. பூமியைப் பணம் கொடுத்து உரிமையாக்கிக்கொள்வதுபோல் அங்கு எவரும் சொற்களை உரிமையாக்கிக்கொள்ள முடிவதில்லை. எவரும் எதையும் பயன்படுத்தலாம் என்ற எல்லையற்ற சுதந்திரம் நிலவுகிற உலகமாக இருக்கிறது சொற்களின் உலகம்.

திருவண்ணாமலையில் ரஷ்ய பெண் பாலியல் வன்முறை... மயங்கிய நிலையில் மருத்துவ மனையில்... தூதுவர் வருகை


Representational image. CNN-News18தி.மலை: திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள ஒரு விடுதியில் வைத்து ரஷ்ய பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்க பட்டார் . அவரை மயங்கிய நிலையில் ஊழியர்கள மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். இன்னும் அவருக்கு சுய நினவு வரவில்லை என்று தெரிகிறது .
இதுவரை இச் சம்பவத்தில் தொடர்பு உடைய அறுவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 ரஷியப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பாரடைஸ் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நீதிபதி உட்பட பல அரசு அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணின் நிலை பற்றி அறிந்து வந்தனர்.
நேற்றைய தினம் ரஷ்ய தூதரக முக்கிய அதிகாரி ஒருவரும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து பெண்ணுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விபரங்களை சேகரித்துள்ளார்,
ரஷ்ய ஊடகங்களில் இந்த சம்பவம் பெரிதாக பேசப்படுகிறது.

தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய நாள்

tamilthehindu : அண்ணா தமிழ்நாடு என பெயர் சூட்டிய இன்றைய தினத்தில் மாநிலத்தின்
பெருமைகளையும், உரிமைகளையும் மீட்க உறுதியேற்க வேண்டும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “முதல்வராக இருந்த அண்ணாவால் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று. எழுச்சியூட்டும் இந்த நன்னாளில், நமது பண்டைய வரலாற்று நிகழ்வுகளை நினைவில் தாங்கி, தமிழகத்தின் உரிமைகளையும் தனிச்சிறப்புமிக்க விழுமியங்களையும் காக்கவும் மீட்கவும் உறுதியேற்போம். செம்மொழிப் பெருமையும் உலகின் மூத்த நாகரிக சிறப்பையும் கொண்ட தமிழ் நிலத்திற்கு, சென்னை மாகாணம் என்றிருந்த பெயரை மாற்றி, தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை திமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தொடர்ந்து வலியுறுத்தி வந்தது; 1957-ல் சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக நுழைந்தபோதே, இதுகுறித்துப் பேசி பதிவு செய்துள்ளது.

ஜாதி அமைப்பு ஆண்களையும் பெண்களையும் காட்டுமிராண்டிகளாக்கிக் களிக்கிறது.

. Kutti Revathi : மிக நீளப்பதிவு ஒன்றை எழுதவேண்டும் என்று தோன்றுகிறது.
இன்று சிறுமி மீதான பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் வெவ்வேறு வயதுடைய அடித்தட்டுத் தொழிலாளர்கள்.
இவர்கள் மட்டும் தான் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்களா. இவர்கள் தாம் சமூகத்தில் மோசமானவர்களா. இவர்களை விட, யார் கையிலும் சிக்கிக்கொள்ளாமல் பாலியல் வன்முறையில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள், உயர் சாதி, அதிகார வர்க்கம் கொண்டவர்கள்.
ஶ்ரீரெட்டி அம்பலப்படுத்துவது போல் சினிமாவில் மட்டும் தான் பாலியல் துய்ப்பில் ஈடுபடுகிறார்களா. இல்லை. ஒரு சினிமா இயக்குநர் கூறியது, என் காதில் விழுந்தது: வேண்டாம் என்றால் சொல்லிவிட்டு விலகிச்செல்ல வேண்டியது தானே. ஏன் அம்பலப்படுத்துகிறார்கள். இதன் வரிகளுக்கு இடையில் மறைந்திருக்கிறது, அழைப்பதில் ஒன்றும் வன்முறை இல்லையாம். ஶ்ரீரெட்டியும், சரியான ஆள் இல்லை. தனக்கு ஆண்கள் வழியாக ஆதாயம் கிடைக்காத போது தான் அம்பலப்படுத்துகிறார். எல்லா துறைகளிலும் இது நீக்கமற நிறைந்திருக்கிறது.
எனக்கு கமலாதாசின் கவிதைகள் நிரம்பப் பிடிக்கும் தொடக்கத்தில். ஆனால், காலப்போக்கில் தோன்றியது இது மாதிரியான, ஆதிக்கசாதிச் சூழலிலிருந்து வரும் பெண்கள் முன்வைக்கும் பாலியல் விழைவு என்பது, அவர் தம் சாதி அதிகாரத்திற்குக் கிடைக்கும் சலுகையே அன்றி வேறில்லை.

அயனாவரம் கட்டுக்கதையா? சிறுமி பலாத்கார சம்பவமே நடக்கலியா? ஊழல் ரெயிட் திசை திருப்பு நாடகமா? சமுகவலை ..

Devi Somasundaram : டவுட்_சீரிஸ்_2 ..
1 . போலிஸ் தரப்பில் சொல்ல பட்ட அபார்ட்மெண்ட் கட்டியே முடிக்க படலயாம் ?..
2. பாதிக்கபட்டதா சொல்ல படும் குழந்தை தாய் தந்தை பேர் வெளியிட படாதது ஏன் ? .
3 ..அந்த பகுதி யில் அப்படி ஒரு குற்றம் நடந்த பர பரப்பே இல்லயே ஏன் ?
4 ..அப்படி ஒரு குற்றம் நடக்கவே இல்லை என்பது உண்மையா?
.#அயனாவரம்..

பிரதாபன் ஜெயராமன்  2. போஸ்கோ சட்டப்படி குழந்தையின் எந்த அடையாளமும் வெளியே தெரியக்கூடாது. எனவேதான் தாய் தந்தை பெயர் மறுக்கப்படுகிறது. மீதமுள்ள  டவுட் விசாரணை முடிந்தால்தான் ஓரளவு புரியவரும்..
Anbu Nithi   எதற்கான டைவர்சன் இது? ஆராயப்படனும் இதை பற்றி ஒரு வார்த்தைக்கூட இப்பவரை சொல்லவில்லை முதல்வர்! கோடிகோடியாய் பணமும் நதங்கமும் சாதாரண வீட்டிலிருந்து கைப்பற்ற படுகின்றது மதியம் 400 கோடிமேல் சொல்லப்பட்ட ரூபாய்நோட்டுக்ளின் எண்ணிக்கை ராத்திரி 200கோடி என செய்திகளில் வாசிக்கப்படுகிறது நேர்முகதலையீடு ஒப்பந்தம் அதுவும் முதல்வரே அவரின் நெருங்கிய சொந்தங்களுக்கு சீமான் தமிழிசை ராமதாஸ் யாரும் வாயை திறக்கவில்லை ஏன்? .
ராஜவம்சம் :  நேற்று (பிஜேபி/அதிமுக) வர்தக ரீதியாக ஏதாவது புது ஒப்பந்தம் நடைபெற்றதா?

புதன், 18 ஜூலை, 2018

எட்டு வழிசாலை திட்டத்தை கைவிட முடிவு? கதை கந்தல் ஆவது கண்ணுக்குள் தெரிகிறது ..?

டிஜிட்டல் திண்ணை: எட்டு வழிச் சாலை, கைவிடும் எடப்பாடி?மின்னம்பலம்:“தமிழகத்தில் ரெய்டு நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கிறது மத்திய அரசு. தமிழக அரசியல் சூழ்நிலையை பொறுத்தவரை அமித் ஷா வருகைக்கு முன்பு, அமித் ஷா வருகைக்குப் பின்பு என மாறிவிட்டது.
அமித் ஷா சென்னைக்கு வந்து போனதும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ’இவ்வளவு நாளா மத்திய அரசு சொல்ற எல்லாத்துக்கும் நாங்க பொறுத்துட்டுதான் இருந்தோம். இப்போ ஏதோ தமிழ்நாடுதான் ஊழல் மாநிலம் என்பது போல பேசிட்டு போய்ட்டாரு அமித் ஷா. அம்மா மறைவுக்குப் பிறகு இதுவரைக்கும் நாங்க யாரும் பிஜேபியை எதிர்த்துப் பேசவே இல்லை. அதுக்கு காரணம் உங்களுக்கும் தெரியும். பிஜேபிக்கு எதிராகப் பேசினால் நிச்சயமாக எங்க ஆட்சிக்கு தொல்லை கொடுப்பாங்க. அதனால்தான் தமிழ்நாட்டில் அவங்களுக்கான எதிர்ப்பு பலமாக இருந்தும் நாங்க இவ்வளவு நாளா ஒரு வார்த்தைகூட யாரும் எதிர்த்து பேசவில்லை.