சென்னைக்கு, "கிரீன் பீல்டு' விமான நிலையம் வேண்டுமா, வேண்டாமா என்பது அரசியல்வாதிகள், அதிகாரிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஒன்றுகூடி, விவாதித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு விஷயம். ஆனால், இப்பிரச்னை இப்போது அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. ஒரு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்க போக்குவரத்து, உணவு உற்பத்தி, சிறந்த கல்வி, சுகாதாரம் ஆகியவை மேம்பட வேண்டும். இந்த வகையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களான டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னையில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் ஸ்ரீபெரும்புதூர் அருகே கிரீன்பீல்டு விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த மாநில அரசு முடிவு எடுத்தது. இதனால், தங்களின் விவசாய நிலங்கள், வாழ்வாதார இடங்கள் பறிபோய்விடும் என்று சம்பந்தப்பட்ட கிராம மக்கள் கிரீன்பீல்டு விமான நிலையம் அமைக்க தேவையான நிலங்களை கொடுக்க மறுத்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூரில் கிரீன்பீல்டு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் கிராம மக்களுக்கு, எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க.,வும், பா.ம.க.,வும் ஆதரவு தெரிவித்துள்ளன. கிராம மக்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க., சமீபத்தில் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. கிரீன்பீல்டு விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாசும் கோரி உள்ளார்.
இது குறித்து, முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நாடு முழுவதும் விமான போக்குவரத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களை விரிவு படுத்தவும், புதிய விமான நிலையங்கள் அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்து நிறைவேற்றி வருகிறது. அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ஏற்கனவே கிரீன்பீல்டு விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு தமிழகத்தை முந்திக் கொண்டன. ஆனால், தற்போது கிரீன்பீல்டு விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு குந்தகம் ஏற்படும் வகையில் போராட்டங்கள் நடத்துகின்றனர். இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டால் அதனால் இழப்பு தமிழகத்திற்கு தான். கையகப்படுத்தும் இடங்களுக்கு தகுந்த இழப்பீடு கொடுக்க தமிழக அரசு அக்கறையோடு உள்ளது. இதை எல்லாம் மறைத்து விட்டு புதிய விமான நிலையம் தேவையில்லை, விரிவாக்கமே தேவையில்லை என ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இப்பிரச்னையில் பொருளாதார நிபுணர்களின் கருத்து வேறு கோணத்தில் உள்ளது. "தமிழகத்தில் பல தொழிற்சாலைகளை வெளிநாட்டு நிறுவனங்கள் தொடங்கி உள்ளன. இதனால் ஏராளமான வெளிநாட்டவர்கள் தமிழகத்திற்கு அடிக்கடி வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் தொழில் வளர்ச்சி அதிகரித்து வருவதுடன் அன்னிய செலாவணியும் அதிகமாக கிடைக்கிறது. இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் கிரீன்பீல்டு விமான நிலையம் அமைப்பதற்கு ஆதரவு தருவதற்கு பதிலாக, எதிர்ப்பு தெரிவிப்பது தமிழக வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும்' என்று அவர்கள் கூறுகின்றனர்.
மற்றொரு தரப்பினர், "திரிசூலத்தில் தற்போதுள்ள விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் போது, அது சர்வதேச தரத்துடன் கூடியதாகவே இருக்கும். இந்த விமான நிலையம் அடுத்த 15 ஆண்டுகளுக்கு போதுமானது. மேலும், திரிசூலம் விமான நிலையத்தை பன்மடங்கு விரிவுபடுத்த போதிய இடம் உள்ளது. இங்கேயே பன்னாட்டு விமான நிலையமும், உள்நாட்டு விமான நிலையமும் தனித் தனியாக அமைக்கலாம். இதன் மூலம் கூடுதல் வசதி கிடைக்கும். இந்நிலையில், தற்போதுள்ள விமான நிலையத்திற்கு அருகிலேயே மற்றொரு விமான நிலையம் அவசியமா என்பதை அரசும், அதிகாரிகளும் சிந்தித்து பார்க்க வேண்டும்' என்கின்றனர். மொத்தத்தில், கிரீன்பீல்டு விமான நிலையம் குறித்த விஷயம் பல்வேறு அமைப்புக்களும், பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டிய ஒரு விஷயம். இந்நிலையில், இப்பிரச்னை அரசியலாக்கப்பட்டுள்ளது. இதற்கு, எதிர்வரும் சட்டசபை தேர்தல் தான் காரணம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. குட்டையை கலக்கினால் தான் மீன் கிடைக்கும் என்ற தத்துவமே இப்பிரச்னையின் பின்னணி.
Nanda - Chennai,இந்தியா 2010-08-30 14:33:33 IST
தற்போதுள்ள விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் கடந்த 5 ஆண்டு காலமாக நடந்து வரிகிறது இந்த சமயத்தில் ஏன் கிரீன் பீல்டு' விமான நிலையம் அமைக்க வேண்டுமா. பல கோடிகள் ஏன் இதில் முடங்கவேண்டும். கிரீன் பீல்டு' விமான நிலையம் அமையும் பட்சத்தில் ஆதாயம் பெறுபவர்கள் யார் என்பதை நன் பதிவு செய்ய விரும்புகிரன். மஞ்சத்துண்டு(பினாமி?) நண்பர் ஸ்டார் குழுமத்தின் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் கிரீன் வேலீ நிறுவனம்மும் தான் மற்றும் பல பன்னாட்டு மற்றும் உள்நாட்டு ரியல் எஸ்டேட் நிறுவனம் இதில் அடங்கும். கடந்த 5 வருட காலம் இந்த கிரீன் பீல்டு' விமான நிலைய பற்றி கண்டு கொள்ளாமல் ஏன் தற்போது ஆக்கறை கட்டுகிறார் மஞ்சத்துண்டு....
ரகுராம் - NELLAI,இந்தியா 2010-08-30 14:12:08 IST
இப்போதுள்ள சென்னை ஏர்போர்ட் விரிவாக்கம் செய்தால் போதுமானது. மேலும் மதுரை ஏர்போர்ட் சர்வதேச தரத்திற்கு மாறுவதால் க்ரீன்பீல்ட் ஏர்போர்ட் அவசியமாக தெரிய வில்லை நன்றி...
M Indian - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் 2010-08-30 14:10:53 IST
என்னதான் குட்டி கரணம் போட்டாலும் மஞ்சள் துண்டு விவசாயத்தை பாதுகாக்க மாட்டார். ஒவ்வொரு மணி துளியும் எப்படி விஞ்ஞான ஊழல் செய்து வாரிசுகளை வல்லரசு ஆக்குவதில்தான் உள்ளது. விவசாயம் என்றால் மின்சாரம், பயிர் மானியம், உர மானியம், முல்லை, காவேரி தண்ணீர், கொள்முதல் நிலையங்கள், நியாயமான விலை இப்படி அரசு தரப்பில் இருந்து நிறைய முயற்சிகள்,பணம் செலவிடவேண்டும். இப்படி ஊக்குவித்தால் அவருக்கு ஒரு நன்மையையும் இல்லை. இதை தவிர்த்து இலவச டிவி, இலவச வீடு , இலவச மோட்டார், காப்பீடு இப்படி கொடுத்தால் அதில் நிறைய ஊழல் செய்யலாம். வெளிநாட்டுகாரன் கிட்ட கட்டிங்கை வாங்கிகிட்டு தொழிசாலைகளை கொண்டுவந்து இருக்கும் விளைநிலங்களை நாசபடுத்தி தொழில்புரட்சி கொண்டுவந்தேன் என்று பீத்திக்கலாம். தொழிற்சாலை ஆரம்பித்து அதில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலானவை வெளிநாட்டுக்கே ஏற்றுமதி செய்யபடுகிறது. குறைந்த அளவில் தான் நம் நாட்டு மக்கள் பயன்படுத்துகின்றனர். வெள்ளகாரன் நம்ம நிலத்தை மாசுபடுத்தி, நம்ம உழைப்பை பயன்படுத்தி நமக்கே கடன் கொடுக்கிறான். இன்னும் பத்து வருஷம் kazhitthu நமக்கு சோறும் அவன்தான் போடபோறான். அதுக்குள்ளே நம்ம நிலம், நிலத்தடி நீர் எல்லாம் மாசு பட்டு விவசாயமே செய்ய முடியாத நிலைக்கு வரபோவுது. விவசாயத்தை ஊக்கு வித்து நிறைய விவசாய கல்லூரிகளை ஆரம்பித்து விவாசய துறையில் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கலாமே. அதுவும் தொழில் புரட்சிதானே. அப்படி செய்தால் அவன் அவன் சொந்த ஊரிலே வேலை செய்வான். சென்னையை நோக்கி படை எடுக்க அவசியம் இல்லை. இதை எல்லாம் செய்ய மாட்டார். ஏன் என்றால் அதில் லஞ்சம், ஊழல் செய்ய குறைந்த வாய்ப்பே உள்ளது....
govind - singapore,சிங்கப்பூர் 2010-08-30 14:09:13 IST
அரசியலுக்கு அப்பாற்பட்டு பேசுனாதான் இதுல விசயம் புரியும். ஒரு நாட்டுக்கு வளர்ச்சி வேணும்னா உள்கட்டமைப்புகள் இருக்கணும். பல நாட்டுக்கு போயிட்டு வந்த அனுபவத்த்துல சொல்றேன், சென்னை விமான நிலையம் பல நாடுகளோட உள்நாட்டு ஏர்போர்ட்டுகளை விட சின்னது. மஞ்ச துண்டு, பச்ச பொடவ அப்படின்னு பேசரதவிட்டுட்டு கொஞ்சம் அறிவ பயன்படுத்தி யோசிங்க. அமெரிக்கா முன்னேறிட்டான், சீனா முன்னேறிட்டான் இந்தியா உருப்புடாதுன்னு மட்டும் பேசுவிங்க, ஆனா இந்த மாதிரி திட்டம் கொண்டுவந்தா ஏதாவது லூசு தனமா பேச வேண்டியது. அந்த வெவசாய நெலத்த பிளாட் போட்டா நல்ல வெல கெடக்கும்னா அல்வா மாதிரி ஓடுவாங்க. ரெண்டு ஏர்போர்ட் வந்தாதான் என்ன? போயி உலகம் எங்க போவுதுன்னு பாருங்க சார்....
நெல்லை டவுன் ப.லெனின் துரை - கத்தார்,கத்தார் 2010-08-30 13:49:54 IST
தமிழகத்தின் தென் பகுதி மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படுகிறது. இவர்கள் தொழில் வளர்ச்சியை பற்றி சிந்திபவர்கள் போல் இல்லை. இதன் பின்புறம் ஊழல் உறுதியாக இருக்கும்....
A.Thirumalai - vedaranyam,பஹ்ரைன் 2010-08-30 13:49:06 IST
this airport should be based in trichy. if you located in trichy south part of tamilnadu will develope very quickly. now chennai was already overflow. why your people wanted to more pressure to chennai?...
சிவ - பெங்களூர்,இந்தியா 2010-08-30 13:03:55 IST
Why can we plan this airport in northern madras, its underveloped when compared to other parts, please grow the city evenly. I think govt can work on alternatives, instead of sripremumdur...
பாலமுருகன் .k - அபுdhabi,இந்தியா 2010-08-30 13:00:38 IST
நல்ல திட்டங்களை வரவேற்போம்....
எட்வர்ட் - Chennai,இந்தியா 2010-08-30 12:56:44 IST
Don’t write foolish comments on the name of development. As of now Sri perumaputhur is 4 hrs drive from most part of the Chennai city. Also not Chennai is very distance from most part of tamil nadu. Trichy/Madurai could be the ideal place....
ராம்குமார் - பவானி,இந்தியா 2010-08-30 12:36:37 IST
ஹெலோ அரபுதமிழன்-பஹ்ரைன், இந்த செய்திக்கு எதற்கு சிவனையும் முருகனையும் இழுக்கிறாய்? சொன்ன செய்திக்கு மட்டும் கருத்து சொல். உன் அதிமேதாவித்தனத்தை இங்கு காட்டதே....
தமிழச்சி - தமிழ்நாடுஇந்தியா,இந்தியா 2010-08-30 12:25:35 IST
எதிர் கட்சிகள் இந்த நாட்டை குட்டிச்சுவர் ஆக்காமல் விடமாட்டார்கள். ஒருநாடு முன்னேற வேண்டுமானால் திடமான அரசு அமைய வேண்டும். எதிர் கட்சிகள் ஆளும் கட்சியை செயல்படவிடாமல் தடுக்கிறார்கள். இது நாட்டின் வளர்ச்சியை நிச்சயம் பாதிக்கும். இது நானும் உருப்பட மாட்டேன், நீயும் உருப்பட கூடாதுன்ற மாதிரி இருக்கு....
கபிலன் வ. - சென்னை,இந்தியா 2010-08-30 12:23:04 IST
ராஜ் பவன் மற்றும் மிலிடரி லேண்ட்ஸ் எல்லாம் சும்மா தான் இருக்கு. அங்க வர வேண்டியது தானே , , இல்லன்னா மவுண்ட் ரோடு, அடையார் ல போட வேண்டியது தானே , ஏழை கிட்ட மட்டும் போரீங்க....
வாசுதேவன் - சென்னை,இந்தியா 2010-08-30 12:21:16 IST
தமிழ் நாடு அரசு நிலம் கையகபடுத்தும் திட்டம் குறித்து எந்த நிலைப்பாடு கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இழப்பிடு குறித்து எந்த தகவலும் இல்லை . மறு வாழ்வு குறித்து எந்த தகவல் இல்லை.இந்திய நாடு விவசாயம் சார்ந்த நாடு . விவசாய நிலங்களை கையகபடுத்தும் போது விவசாயிகளிடம் கருத்து கேட்கவேண்டும். அதை யாரும் மறுக்க முடியாது . அந்த பகுதி எளிய விவசாயிகளின் நிலங்களை கையகபடுத்தும் முன் அவர்களின் கருத்தை அரசாங்கம் கேட்கவேண்டும் . அதை விடுத்து தன் விருபம்ம் போல செயல் பட்டால் மேற்கு வங்கத்தில் டாட்டா நிலை தான் தமிழ்நாடு அரசுக்கும் ஏற்படும்....
Vaithianathan - Muscat,ஓமன் 2010-08-30 12:08:10 IST
இருக்கிறதை ஒழுங்கா விரிவாக்கி பராமரித்தாலே போதும். இந்த ஆளும் கட்சி தலைவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக மக்களை முட்டாளாகி கொண்டிருக்கிறார்கள்....
sankar - Pune,இந்தியா 2010-08-30 11:59:27 IST
Being a democratic country, we need to consider the people who would loose their land if the green field comes into exist. Will this Govt pay the actual compensation amount to these people, I don't think so! Please consider Thirisul project and get out from this Barrier. Why do politicians always think about only Chennai, why can't they start looking other part of land of Tamil?...
அரபு தமிழன் - Manama,பஹ்ரைன் 2010-08-30 11:53:24 IST
Kim, தன், இந்தியா சொல்வது போல கடலின் மீது air port காட்ட ஆரம்பித்தால் அங்கேயும் கட்டக்கூடாது என்று போராட்டம் நடத்துவார்கள். எப்படி என்றால் அந்த இடத்தில தான் சிவனுக்கும் பார்வதிக்கும் வாக்குவாதம் நடந்தது, அந்த இடத்தில தான் முருகனும் தெய்வானையும் அடிக்கடி சந்தித்து பேசுவார்கள், விநாயகர் அங்கு வந்து தான் எப்போதும் கொழுக்கட்டை சாப்பிடுவார் என் நம் அரசியல் வாதிகளும், மதவாதிகளும் பீலா விட ஆரம்பித்து விடுவார்கள், ஜெயை -போல சு. சாமி போல. அதனால் எந்த நல்ல திட்டம் வந்தாலும் எதிர்க்கும் குணம் கொண்ட நம் அரசியல்(வியாதி)வாதிகளை மக்கள் புறம் தள்ள வேண்டும்....
senthil - singapore,இந்தியா 2010-08-30 11:36:23 IST
ஸ்ரீபெரும்புதூரிலேயே அரசியல்வாதிகளும், வெளிநாட்டு தொழிற்சாலை நிறுவனத்தினரும் வளைத்து போட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விமான நிலையப் பணியை தொடங்குங்கள்.Don't occupy Poor people land.......
மணி - சென்னை,இந்தியா 2010-08-30 10:59:18 IST
தனியார் கட்டுப்பாட்டில் அமையப்போவது ஸ்ரீபெரும்பூதூர் நிலையம். அப்போது மீனம்பாக்கம் தளத்தை மூடினல்தான் லாபகரமாக இருக்கும் எனசொல்லி மூட வைப்பார்கள்.(பெங்களுரு, ஹைதராபாத்தில் அதுதான் நடந்தது!) அப்படி இருக்கும்போது பல்லாயிரம் கோடி செலவில் மூடப்படப்போகும் மீனம்பாகத்திற்க்கு மெட்ரோ ரயில் எதற்கு?காண்ட்ராக்டில் காசு பார்க்கத்தானே? 2 வருடத்துக்கு முன்பே ஸ்ரீபெரும்புதூர் அருகே மஞ்சத்துண்டு(பினாமி?) நண்பர் ஸ்டார் குழுமம் பல்லாயிரம் ஏக்கரை குறைந்த விலையில் வளைத்துப்போட்டிருப்பதுதான் இந்த புதிய விமான நிலையத் திட்டத்திற்கு தூண்டுதலோ?அந்த நிலத்தை விமான நிலையத்திற்கு கையகப் படுத்துவார்களா?இந்த ஆட்சியில் எல்லாம், எதிலும், எங்கும் ஊழலே!...
M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் 2010-08-30 10:51:57 IST
இப்போதுள்ள சென்னை விமான நிலையத்தை நன்றாக விரிவு படுத்தினாலே போதும் இந்த உலகம் அழியும் வரை அது வடதமிழகத்துக்கு போதும். தமிழ்நாடு சென்னையோடு முடிந்துவிடவில்லை. ஏன் அனைத்தையும் சென்னையிலே திணிக்கிறீர்கள். இப்படி திணித்தால் தினமலர் குறிப்பிடுவது போல் 15 வருடங்கள் அல்ல 5 வருடங்களுக்கு கூட போதாது.சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள நகரங்களிலே இவ்வளவு ஏற்ற தாழ்வுகள். மத்தியஅமைச்சர் பிரபு படேல் ஸ்ரீபெரும்புதூரில் தான் இந்த விமானநிலையம் அமைய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை. சொல்ல போனால் மாநில அரசு கையகபடுத்தும் நிலத்தில் இந்த திட்டம் அமையும் என்று தெளிவாக கூறியுள்ளார். ஜெயாவும் மற்ற எதிர் கட்சிகள் கூறுவதே ஏழை எளிய மக்களின் விவசாய நிலங்களை கைப்பற்றி அதையும் சென்னையிலே அமைக்கத்தான் எதிர்ப்பே தவிர திட்டத்தை கைவிட அல்ல. இந்த விசயத்தில் எதிர் கட்சிகளை குற்றம் சொல்வதை ஒப்புக்கொள்ளமுடியாது. எதிர் கட்சிகள் இதை அரசியல் ஆக்கினாலும் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ரெண்டு ஏக்கர் நிலம் தருகிறேன் என்று பீலா விட்டு அதை இன்று வரை செயல்படுத்தாமல் கிடப்பில் கிடக்கையில் அதில் உள்ள 55000 ஏக்கர் நிலங்களை பயன்படுத்தலாமே. திருச்சி, கோவை போன்ற இடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தலாமே. திருச்சியை பயன்படுத்தினால் ஒட்டு மொத்த தமிழ்கத்துகே நன்மை. இந்த வளர்ச்சி திட்டம் நிச்சயம் கைவிடபடகூடாது. அவசியம் தமிழ் நாட்டுக்கு தேவை. ஆனால் சென்னையில் வேண்டாம்....
பி.பட்டு ராஜ் - Dubai,இந்தியா 2010-08-30 10:36:53 IST
துபாயில் நூறு வருடங்களுக்கு பிறகு செயல் படுத்தப்படும் திட்டங்களுக்கு இப்பொழுதே அடிப்படை வசதிகளை(கேபிள்,சாலை,குடிநீர் குழாய்கள்,கழிவு நீர் குழாய்கள்,மின்சார கேபிள்,OFC கேபிள் முதலியவை) செய்து கொண்டு இருக்கின்றனர்.வளர்ந்து வரும் தமிழகத்திலும் தொலைநோக்கு பார்வையில் கிரீன் பீல்ட் விமான நிலையத்தை உடனடியாக நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.அரசியல் லாபத்திற்காக ஆதாயம் தேடும் கருப்பு ஆடுகளை மக்கள் விரட்ட வேண்டும்.பட்டு ராஜ்,துபாய்....
Kalaichelvan - coimbatore,இந்தியா 2010-08-30 10:29:37 IST
நாட்டின் முன்னேற்றத்திற்கு எல்லோரும் பங்கு அளிக்க வேண்டும். யார் யார் நிலம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு அதே மதிப்பில் மற்றவர்களிடம் இருந்து வாங்கி அரசாங்கமே தர வேண்டும். எல்லோருக்கும் நன்றாக தெரியும் அரசாங்கம் கொடுக்கும் விளைக்கும் மார்க்கெட் விளைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பது....
danraj - singapore,இந்தியா 2010-08-30 10:24:18 IST
குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட்டுவது என்பது தான். இந்த கட்சிகளின் போராட்டமா? நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் நிச்சயம் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். சர்வதேச விமானநிலையம் என்பது ஒரு சில கட்டமைப்புகளுக்கு உகந்ததாக அமையவேண்டும். இன்றைக்கு சென்னையிலே இடமில்லை தவிர்த்தால் ஸ்ரீ பெரும்புதுரைவிட சிறந்த இடம் வேறாக இருக்கமுடியாது. பெங்களூர் விமானநிலையம் மற்றும் ஹைதராபாத் விமானநிலையங்களை சிறப்பானாதொன்று ஸ்ரீபெரும்புதுரினில் அமைவதே சிறந்தது...
ச.அதியமான் - சென்னை,இந்தியா 2010-08-30 10:01:54 IST
வணக்கம், வழக்கம்போல இந்த பின்னூட்டம் வெளியிடப்படுமா என்பது கேள்வி? இந்த பிரச்சினையில் அரசு எந்த ஒரு மாற்று திட்டத்தையும் மக்கள் மன்றத்தின் முன் வைக்காமல், விளைநிலங்களை கையகப்படுத்த முற்படுவதின் விளைவே இந்த போராட்டம். அரசியல் கட்சிகள் போராடுவதினால், இந்த பிரச்சினைக்கு அரசியல் முலாம் பூசப்படுகிறது. இது போன்ற நில ஆக்கிரமிப்பு மற்றும் கையக படுத்துதல் போன்றவற்றிக்கு மத்திய சட்ட திருத்தம் அவசியம்....
விக்ரம் - kovai,இந்தியா 2010-08-30 10:01:39 IST
ஜெயலலிதா , ராமதாஸ் போன்ற ஒன்றுக்கும் உதவாத ஜென்மங்கள் தாங்களும் நாட்டை உயர்த்த மாட்டோம் ...மற்றவர்களையும் நாட்டை உயர்த்த விட மாட்டோம் என்று அலைபவர்கள் .... பேசாமல் போயஸ் தோட்டத்தில் ஜெயா வீட்டை இடித்துவிட்டு விமான நிலையம் கட்டலாம் அவ்வளவு பெரிய இடம் அது ...... யாரும் எதற்கும் ஒத்து போகவில்லை என்றால் எங்கே வேலை வாய்ப்பு பெருகும் ...எங்கே நாடு உருப்படும் ?? விவசாயம் செய்ய வேறு இடத்தை அரசாங்கம் உருவாக்கிவிட்டு இந்த வெட்டி பசங்களை அடித்து துரத்த வேண்டும்...
kiruba - Porur,இந்தியா 2010-08-30 09:35:58 IST
விடுங்க பாஸ், இவனுங்கோ எப்பவும் எதையும் யோசிக்க தெரியாதவனுங்கோ......
சம்பத் - அட்லாண்டா,யூ.எஸ்.ஏ 2010-08-30 09:27:24 IST
ஒரு நாட்டின் என்ட்ரி பாயிண்ட் ஏர்போர்ட் மட்டுமே, ஆனால் IAA இந்த திட்டதிருக்கு ஒத்துக்கொள்ளவில்லை, காரணம், விதிப்படி இரண்டு ஏர்போர்ட் நடுவில் குறைந்தது 150 கிமி இடைவெளி தேவை. இதற்கு பதிலாக தென்னகத்தில் இருக்கும் திருச்சி அல்லது மதுரை ஏர்போர்ட் இன்டர்நேஷனல் வீரிவாக்கம் செய்யலாம். இங்கே பலர் குட்டைய குழப்பிக்கொண்டு இருக்கின்றனர்....
Bharathi - Chennai,இந்தியா 2010-08-30 09:26:51 IST
Dont distuped improments.......... : by:- tamilan...
mike - NJ,இந்தியா 2010-08-30 08:56:16 IST
GO AND TAKE THE LAND FROM THE POLITICIAN GUYS INSTEAD OF POOR AGRICULTURIST LANDS......
க நடராஜன் - கோவை,இந்தியா 2010-08-30 08:28:55 IST
எதை எடுத்தாலும் சென்னையில் தான். இந்த திட்டத்தை கோவை ,திருச்சி ,மதுரயில் எதாவது ஒரு நகரில் செயலாம். தமிழ்நாடு என்றால் சென்னை மட்டும் இல்லை ....
s .sivakumar - singapore,இந்தியா 2010-08-30 08:15:55 IST
"கிரீன் பீல்டு" விமான நிலையம் தமிழ் நாட்டிற்கு அவசியம் தேவை . நல்ல திட்டங்களுக்கு பொது மக்கள் அதரவு தர வேண்டும் ....
ரா. முரளி - Singapore,இந்தியா 2010-08-30 08:15:49 IST
கட்ச்சதீவை வித்தப்பவே உசாராகாத தமிழ் மக்களே, காங்கிரஸ் கட்ச்சதீவுக்கு எத்தனை கோடி வாங்கி ஏப்பம் விட்டதோ தெரியாது. ஸ்ரீலங்கா தமிழர்களோட பாதுகாப்பையும் தொலைத்திட்டு நாற்காலி மற்றும் பதவி அரசியல் கொடி கட்டி பறக்கிறது தமிழ்நாட்டில். என்னைக்கு தி மு க அல்லது அதிமுக ஏதெனும் ஒரு கட்சி ஒழியுதோ அன்னைக்குத்தான் தமிழ்நாட்டையும், தமிழர்களின் பாதுகாப்பையும் வித்துக்கிட்டு இருக்கிற சேட்டுகளிடமிருந்து, சர்தர்ஜிகளிடமிருந்து காங்கிரஸ் இடமிருந்து நமக்கு விடிவுகாலம் வரும். அது வரைக்கும் தமிழக அரசியல் வாதிகள் தயவால் காங்கிரஸ் சென்னையே கூறுபோட போறாங்க. இதை தடுக்க மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தா தமிழகம் தப்பிக்கும். இல்லையினா ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு ஏற்ப்பட்ட அதே கதி தமிழ்நாட்டுக்கும் ஏற்படுவது உறுதி....
mathi - singapore,இந்தியா 2010-08-30 08:10:46 IST
விமான நிலையம் விரிவு படுத்த வேண்டும் tamilnadu முனனேற்றம் அடைய vaandum !...
KIM - தன்,இந்தியா 2010-08-30 08:10:45 IST
ஜப்பான் ( ஒசாக ),,ஹாங்காங் விமானநிலையங்கள் கடலில் கட்டப்பட்டுள்ளது !அதுபோல் இந்தியாவில முதன் முதலாக இந்த சென்னை விமானநிலையத்தை கடலில் பிரமாண்டமாக கட்ட முடியும். தமிழக அரசு இந்த கோணத்தில் உடனடி ஆய்வு செய்யவேண்டும் !வரும் காலங்களில் தற்போது உள்ள Chennai Airport பத்தாது !தயவு செய்து அரசியலாக்காமல் உடனடி தீர்வு காணுங்கள் ! CHENNAI GROWING FAST >> தேங்க்ஸ்...
vinoth - singapore,இந்தியா 2010-08-30 08:08:51 IST
if govt decides greenfield airport is very important to tamilnadu,then they should interview each and every land owners individually and handle them. we should attract the foreigners by firstly impressing through nice airports. if tamilnadu will get good revenue through is greenfield airport pls go ahead dont get stopped by few landowners, does landowners decide the fate of tamilnadu?...
Senthil - chennai,இந்தியா 2010-08-30 08:03:23 IST
We have more population and less land. We need to consider the feelings of people who's loosing the land. Here is the deal, Is TN govt. ready to give the complete land of current chennai airport to the affected people, if so then they can leave it. I am sure they will not do because that land will cose very high. Before procedding any infrastructure project consider reducing the population....
mani - singapore,சிங்கப்பூர் 2010-08-30 07:30:04 IST
முதலில் நம் மக்களுக்கு தான் விழிப்புணர்வு வேண்டும் .....அ தி மு க ,ப ம க ....போன்ற கட்சிகள் தன சுய லாபத்திற்காக தான் இந்த போராட்டம் ...இதில் மக்கள் நலன் பற்றிய எண்ணம் எல்லாம் இல்லை ...ஆளும்கட்சி ஒரு திட்டம் அறிவித்தால் உடனே எதிர்ப்பு தெரிவிப்பதில் தான் இந்த பன்னாட கட்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள் .......முதலில் ஒரு நாட்டின் மரியாதையை (வெளிநாட்டவர்க்கு )தெரிவிப்பது விமான நிலையம் தான் ...வாழ்வாதார இடங்கள் என்று எந்த இடத்தை தான் நீங்கள் சொல்லவில்லை ....ஒரு குவாடருக்கும் ,ஒரு சிக்கன் பிரியாணிக்கும் அடி பணியும் எதோ ஒரு 100 பேர் செய்யும் போராட்டத்துக்கு இந்த அரசாங்கம் அடி பணியக்கூடாது ......
V.Subbarao - Singapore,இந்தியா 2010-08-30 07:25:12 IST
ஸ்ரீபெரும்புதுரிலென்ன, சென்னைக்கு அருகிலே பெரிய விமான நிலையம் வந்தால், அரசியல்வாதிகள்,அதிகாரிகள், பெரிய வியாபாரிகள், வெளிநாட்டு முதலாளிகள் ஆகிய யாவர்க்கும் வசதியே. இதற்காக அவர்கள் எந்த ஒரு சதுர அடி நிலத்தையும் தரப்போவதில்லை; எந்த தியாகத்தினையும் செய்யப்போவதில்லை. தவறி தந்தாலும், அதன் தற்போதைய விலையை விட அதிகமாக அறுவடை செய்துவிடப்போகிறார்கள். தொழிற்சாலைகள் தமிழகத்தின் எந்த மூலையிலிருன்தாலும் - முதலாளிகள், வியாபாரிகள், எம் என் சி யினர் மற்றயாவரும் மாற்றான்/ அரசு/தோழிலக செலவில் பயணித்து அனுபவிக்கப்போகிறார்கள். இன்னும் ஏன் தமிழகத்தின் வளர்ச்சியை சென்னைக்குள் சுறுக்கிக் கொள்ளுகிறார்கள். பரந்த தமிழகம் மறந்தனரா....
Siraz - Dubai,இந்தியா 2010-08-30 07:09:38 IST
ஸ்ரீபெரும்புதூரிலேயே அரசியல்வாதிகளும், வெளிநாட்டு தொழிற்சாலை நிறுவனத்தினரும் வளைத்து போட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விமான நிலையப் பணியை தொடங்குங்கள்.Don't occupy Poor people land....
INDIAN - sINGAPORE,சிங்கப்பூர் 2010-08-30 07:02:47 IST
GO AND TAKE THE LAND FROM THE POLITICIAN GUYS INSTEAD OF POOR AGRICULTURIST LANDS...
ரா.ராம - chennai,இந்தியா 2010-08-30 06:53:51 IST
parallel runway கை விட பட்டது. க்ரின்பில்ட் டை கை விட பட்டது.வாழ்க வளர்க தமிழ்நாடு முன்னேற்றம்...
singapooran - Singapore,சிங்கப்பூர் 2010-08-30 03:14:46 IST
ஹலோ, Greenfield Airport very IMPORTANT . p.m.k. and A.D.M.K. please be quiet and support to the Government. Thanks....
IBRAHIM - JEDDAH,சவுதி அரேபியா 2010-08-30 02:18:45 IST
முதல்வர் சொல்வதுதான் சரி .சிங்கப்பூர் தூரத்தில் இல்லை.அங்கும் தமிழர்கள் தான் ஆட்சியில் உள்ளனர்.அதன் விமான நிலையம் தான் உலகத்தில் முதல் தரத்தில் உள்ளது.தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா ஆசியாவில் சீனா உடன் போட்டி இட தூர நோக்குடன் செயல் படவேண்டும்.வரும் 20 ஆவது ஆண்டுவரை காத்திருக்காமல் ஆந்திரா,கர்நாடகம் போல் தென் இந்தியா மிகப் பெரிய விமான நிலையம் அவசியம் வர இப்போத வேலையை ஆரம்பிக்க வேண்டும். இல்லையெனில் திட்டசிலவு கூடி விடும். நெருக்கடி ஏற்படுமுன் செயல் படுவதுதான் உசிதம். கேரள வில் கம்னிஸ்ட் ஆட்சியில் கூட சொந்த பணத்தில் விமான நிலையங்கள் கட்டி வணிக ரீதியாக வெற்றி பெற்று வருகின்றனர். தமிழர்கள் கட்டமிப்பில் தூங்கு கின்றனர். உடன் விழிக்க வேண்டும்....
ரவி - தோஹா,கத்தார் 2010-08-30 02:16:43 IST
இன்றைய சூழ்நிலையில் அரசு எ........ந்......த திட்டம் கொண்டு வந்தாலும் அல்லது முயற்சி செய்தாலும் எதிர்ப்பதற்கு ஒரு கூட்டமே ரூம் போட்டு விழி பிதுங்கி யோசித்துக்கொண்டிருக்கிறது!!...
தமிழ் - chennai,இந்தியா 2010-08-30 02:08:55 IST
இவர்கள் இந்த அரசியல்வாதிகள் நாட்டை குட்டிச்சுவர் ஆக்காமல் விடமாட்டார்கள். ஒருநாடு முன்னேற வேண்டுமானால் திடமான அரசு அமைய வேண்டும். இங்கு எதிர் கட்சிகள் ஆளும்கட்சியை செயல்படவிடாமல் தடுக்கிறார்கள். இது நாட்டின் வளர்ச்சியை நிச்சயம் பாதிக்கும்.அதுவும் இந்த கைப்புள்ள ராமதாஸ் தொத்தரவு இதில் அதிகமாக இருக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக