வெள்ளி, 3 செப்டம்பர், 2010

அமீர்கான் படத்தை ரசித்து பார்த்த மன்மோகன்சிங்

அமீர்கான் தயாரித்திருக்கும் புதிய படமான பீப்பிளிலைவ் படத்தை பிரதமர் மன்மோகன்சிங் குடும்பத்துடன் ரசித்து பார்த்தார். விவசாயிகள் பிரச்சினையை மையமாகக்கொண்டு இந்தி நடிகர் அமீர்கான் தயாரித்திருக்கும் படம் பீப்பிளிலைவ். இந்த படத்தை பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு போட்டுக் காட்ட வேண்டும் என்று அமீர்கான் விரும்பினார். இதற்கு பிரதமர் மன்மோகன்சிங் சம்மதித்தார். இதையடுத்து டில்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து பீப்பிளிலைவ் படத்தை பிரதமர் மன்மோகன்சிங் அவரது மனைவி குர்ஷரன் கவுர் மற்றும் குடும்பத்தினர் ரசித்து பார்த்தனர்.

தயாரிப்பாளர் நடிகர் அமீர்கான், படத்தின் டைரக்டர் அனுஷ் ரிஷ்வி, வினியோகஸ்தர் ரோனி செர்வாலா, நடிகர்கள் ராஹ்வீர் யாதவ், ஓம்கார்தாஸ் மானிகபூர் ஆகியோரும் உடன் இருந்தனர். ஏற்கனவே இந்த படத்தை பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மராட்டிய நவநிர்மான்சேனா தலைவர் ராஜ்தாக்ரே ஆகியோருக்கும் திரையிட்டு காட்டியுள்ளார் அமீர்கான். பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அவற்றை மையமாகக்கொண்டு பீப்பிளிலைவ் கதை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு அமீர்கான் இந்த படத்தை திரையிட்டு காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆமிர் கான் சார் மாதிரி எல்லா ஹீரோசும் பொதுமக்களோட பிரச்சனைகள சொல்றமாதிரி படம் எடுத்து இத மாதிரி தலைவர்களுக்கு போட்டு காமிக்க முன்வந்தங்கான பொதுமக்களுக்கு எதாச்சும் நல்லது நாடாகும் ப்ளீஸ் இப்புடி மகள் குறிகள சொல்றமாதிரி படம் பண்ணுங்க நடிகர்களே இதுதான் என்ன மாதிரி மக்களோட தாழ்மையான வேண்டுகோள் .....

கருத்துகள் இல்லை: