மின்னம்பலம் - Raj : பாகிஸ்தான் உட்பட 41 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா செல்ல தடை விதிக்க முன்மொழிவு தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி புலம் பெயர்ந்து சட்டவிரோதமாகத் தங்கி இருப்பவர்கள் மற்றும் சட்டவிரோதமான வழிகள் மூலம் நாட்டுக்குள் நுழைய முற்படுபவர்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெரும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். List of 41 countries banned by US
இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் வசிக்கும் சட்ட விரோத குடியேறிகளுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இந்தியாவும் ஒன்று.
ஞாயிறு, 16 மார்ச், 2025
பாகிஸ்தான் உட்பட 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல தடை?
பட்டலண்ட அறிக்கையும் இலங்கை அரசும்! ஏமாந்தது யார்?
Ceylonmirror.net - Jeevan : ரணிலை துாக்கிலிட “திசைகாட்டி” முயற்சிக்கிறதா? – பட்டலந்த அறிக்கையின் உண்மைகள்!
பத்தளந்த அறிக்கையை வைத்து ரணில் விக்கிரமசிங்கவை பொசுக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா?
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அமைக்கப்பட்ட கமிஷனின் அதிகாரங்கள் என்ன?
“தாத்தா”வின் பொய்யான வாக்குறுதிகளை “திசைகாட்டி” அல்லது ஜே.வி.பி அல்லது NPP அரசு நம்பி ஏமாந்ததா?
2001ல் தாக்கல் செய்யப்பட்ட பத்தளந்த அறிக்கையை, “திசைகாட்டி” அறிவில்லாமல் , மீண்டும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ததா?
பத்தளந்த அறிக்கையின் மூலம் ரணில் விக்கிரமசிங்கவை தூக்கிலிடும் வரை அல்லது சமூக உரிமைகளை பறிக்கும் வரை காத்திருக்கும் “திசைகாட்டி” ஆதரவாளர்களை மீண்டும் ஏமாற்ற அரசாங்கம் முயல்வது தெளிவாகிறதா? இதுதான் பேசப்படவுள்ள விடயம்!
கனடிய நீதி அமைச்சராக திரு ஆனந்த சங்கரியின் (TULF) மகன் கரி ஆனந்த சங்கரி பதவி ஏற்றார்
![]() |
வீரகேசரி : கனேடிய வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ். ஈழத்தமிழர் கரி ஆனந்தசங்கரி!
கனடா (Canada) வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே கரி ஆனந்தசங்கரி ஆவார்.
இலங்கையில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து, தனது 13 ஆவது வயதில் புலம்பெயர்ந்து அவர் கனடா சென்றார்.