வெள்ளி, 3 செப்டம்பர், 2010

கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' தெய்வமும் இன்றே கொல்லும்

அவினாசி : "அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்ற பழமொழி பழசாகி விட்டது; தெய்வமும் இன்றே கொல்லும் என்பதை போல, அவினாசி பெருமாநல்லூர் அருகே கள்ளக்காதல் கொலை சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொங்குபாளையம் - கணக்கம்பாளையம் ரோட்டில், பழனிசாமி தோட்டத்தின் வேலி ஓரம், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, 32 வயது மதிக்கத்தக்க பெண் உடல், கொலை செய்யப்பட்டு கிடந்தது. பெருமாநல்லூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, விசாரித்தனர். திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த அன்பு தண்டபாணி மனைவி சீதாலட்சுமி (32) என்பது தெரிந்தது. இத்தம்பதியருக்கு ஏழு வயதில் மகன் உள்ளான். இந்நிலையில், தன் மனைவியை 5ம் தேதி முதல் காணவில்லை என கணவர் அன்பு தண்டபாணி, அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதனால், சீதாலட்சுமி, 5ம் தேதியே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்து விசாரணையை துவக்கினர்.

அவினாசி டி.எஸ்.பி., பழனிசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலையாளியை தேடினர். கொலையுண்ட சீதாலட்சுமியின் மொபைல் போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணை துவங்கியது. ஆரம்பத்தில் குழம்பிய போலீசாருக்கு மொபைல் போன் மூலம் கிடைத்த விவரங்கள் விசாரணையை வேகப்படுத்தியது. சீதாலட்சுமி போனுக்கு, ஆக., 5ம் தேதி காலை முதல் மாலை 6.00 மணி வரை ஒரே எண்ணில் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு வந்துள்ளது; அந்த எண்ணுக்குரிய நபரின் முகவரி குறித்து விசாரித்தனர். அந்த எண், 15 வேலம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் ரமேஷ் என்பது தெரிந்தது. போலீசார், ரமேஷ் வீட்டுக்குச் சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. அதே, ஆகஸ்ட் 5ம் இரவு 10.00 மணிக்கு தன் நண்பர் மாதேஷ் உடன் பைக்கில் சென்ற ரமேஷ், அவினாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது. அவினாசி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருந்தனர். விபத்தில் பலியான ரமேஷுக்கும், கொலையான சீதாலட்சுமிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை துவங்கியது.

விபத்தில் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாதேஷிடம், போலீசார் தீவிரமாக விசாரித்தனர். ஆனால், விசாரணையில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்க முடியாதவாறு மாதேஷ், கோமா நிலைக்கு சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியுற்ற போலீசார், சீதாலட்சுமி வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில் விசாரித்தனர். அதில், பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகின.

கள்ளத்தொடர்பு அம்பலம்: கொலையான சீதாலட்சுமி வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில், லேபர் கான்ட்ராக்டராக ரமேஷ் பணியாற்றியுள்ளான். ஓராண்டாக காதலித்த இருவரும், ஊட்டி, கொடைக்கானல் என்று ஜாலியாக சுற்றியுள்ளனர். ரமேஷை தன் கணவனாகவே பாவித்த சீதாலட்சுமி, அவனின் தங்கை திருமணத்துக்கு பணமும், செலவுக்கு தன் நகைகளையும் கொடுத்துள்ளார். ரமேஷ் வீட்டில், அவனுக்கு பெண் பார்க்கத்துவங்கியதும் சீதாலட்சுமியை கழற்றி விட திட்டமிட்டான். பல நேரத்தில் இதுகுறித்து ரமேஷ் பேசியபோது, இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சீதாலட்சுமியை கொலை செய்ய திட்டமிட்ட ரமேஷ், ஆகஸ்ட் 5ம் தேதி அவளை வெளியே அழைத்துச் செல்வதாகக் கூறி, பொங்குபாளையம் - கணக்கம்பாளையம் ரோட்டுக்கு அழைத்துச் சென்றான். பொங்குபாளையம் - கணக்கம்பாளையத்தில் உள்ள பழனிசாமி தோட்டம் பகுதிக்கு அழைத்து வந்தான். அங்கு ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த கத்தியால், அன்று இரவு 7.45 மணிக்கு அவளது வயிறு மற்றும் கழுத்தில் குத்தியுள்ளான். அவள் இறந்ததை உறுதிப்படுத்தி விட்டு, அங்கிருந்து வீட்டுக்குச் சென்றான். கொலை செய்தபோது அணிந்திருந்த சட்டையை கழற்றி, பைக்கில் வைத்து விட்டு, வேறு சட்டையை அணிந்து புறப்பட்டான். அவினாசி ரோட்டில் உள்ள குப்பை தொட்டியில் ரத்தக்கறை படிந்த சட்டையை போட்டான். பின், நண்பர்கள் ஜெயராஜ், செல்வமணி, மாதேஷ் ஆகியோருடன் மதுக்கடைக்குச் சென்று மது குடித்துள்ளான். அங்கிருந்து மாதேஷை மட்டும் ஏற்றிக் கொண்டு, தெக்கலூர் சென்றபோது,  அவினாசி - ஆட்டையாம் பாளையம் அருகே லாரி மோதி இறந்தான்.

இவ்வழக்கு குறித்து அவினாசி டி.எஸ்.பி., பழனிசாமி கூறியதாவது: ஒரே பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த இருவரும் பழகி, பல ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அவ்வப்போது சீதாலட்சுமியிடம் பணத்தை பெற்ற ரமேஷ், நகைகளை வாங்கி அடமானம் வைத்து செலவு செய்துள்ளான். கொலை நடந்த அன்று காலை கூட, திருப்பூரில் உள்ள பிரபல வங்கிக்குச் சென்று பணம் எடுத்துள்ளான். இதை வங்கியில் உள்ள கேமரா மூலம் உறுதிப்படுத்தினோம். அவன் அணிந்திருந்த சட்டையை ரத்தக்கறையுடன் குப்பை தொட்டியில் இருந்து கைப்பற்றினோம். கொலை நடந்த ஆகஸ்ட் 5ம் தேதியும், அதற்கு முந்தைய ஒரு வாரத்திலும் சீதாலட்சுமி தன் மொபைல் போனில் இருந்து ரமேஷ் எண்ணை தவிர வேறு யாருக்கும் போன் செய்யவில்லை. ஆகஸ்ட் 5ம் தேதி காலையில் இருந்து மாலை வரை இருவரும் 900 வினாடி, 1,500 வினாடி, 700 வினாடி என்று இடைவிடாமல் பேசி உள்ளதும் தெரிந்தது. ரமேஷை கணவன் போல் எண்ணி வாழ்ந்த சீதாலட்சுமிக்கு, அவன் திருமணம் செய்து கொள்வது பிடிக்கவில்லை. கூடுமானவரைக்கும் சீதாலட்சுமியிடம் பணத்தை பெற்றுக் கொண்ட ரமேஷûக்கு, அவள் மீது வெறுப்பு ஏற்பட்டது. இந்த வெறுப்பு கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.

கொலை நடந்த இரவு 7.02 மணி முதல் 8.00 மணி வரை ரமேஷûக்கு, அவனது நண்பர்கள் தொடர்ந்து போன் செய்துள்ளனர். ஆனால், அவன் போனை எடுக்கவில்லை. இரவு 8.15 மணிக்கு, "மிஸ்டு காலில்' இருந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு ரமேஷ் பேசியுள்ளான். அதன் பிறகே நண்பர்களுடன் குடித்து விட்டு, பைக்கில் சென்று லாரியில் மோதி இறந்தான். கள்ளக்காதலி சீதாலட்சுமியை கொலை செய்த ரமேஷ், அடுத்த இரண்டரை மணி நேரத்தில் விபத்தில் இறந்தது ஆச்சரியமாகவே உள்ளது. இவ்வாறு டி.எஸ்.பி., பழனிசாமி கூறினார்.

அன்றே கொன்ற தெய்வம்: "அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்பது பழமொழி. ஆனால், ரமேஷ் - சீதாலட்சுமி விஷயத்தில், இது மாறி விட்டது. கணவனுக்கு துரோகம் இழைத்த சீதாலட்சுமி கொலையான இரண்டரை மணி நேரத்தில் நடந்த விபத்தில் ரமேஷ் உடல் நசுங்கி இறந்துள்ளான். கள்ளக்காதலுக்கு உதவிய ரமேஷின் நண்பன் மாதேஷ், சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி இறந்து விட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

subburaj - theni,இந்தியா
2010-09-03 07:27:25 IST
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு தான் மணம் அதிகம், அணில் கடித்த பழம் தான் டேஸ்ட் என்பது, துபாய் சதாசிவத்திற்கு ‌தெரியாமல் இருக்கிறதே....
சிவா - இந்திய,இந்தியா
2010-09-03 07:19:43 IST
Police File closed...
ரிஷி - எரோடே,இந்தியா
2010-09-03 07:01:38 IST
இது ஒருவேளை சீதாலட்சுமியின் ஆவி செய்த வேலையாக கூட இருக்கும்.... பேய்யும் நின்று கொல்லும்...
அருண் - ராமநாதபுரம்,இந்தியா
2010-09-03 06:51:38 IST
நல்ல செய்தி இதை பார்த்தாவது கட்டிய கணவனுக்கு துரோகம் செய்ய நினைக்கும் பெண்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் வாழ்க தமிழ் பண்பாடு...
arthy - chennai,இந்தியா
2010-09-03 06:23:24 IST
அரசன் அன்று கொல்வான்; தெய்வம் இன்று கொல்லும்...
ப. மாதவன் - சென்னை,இந்தியா
2010-09-03 06:18:53 IST
தெய்வம் அன்றே கொள்ளும் என்ற நிகழ்ச்சியை வெளிப்படுத்தியதற்கு தினமலர் பத்ரிகைக்கு நன்றி. இனி அரசன் செயல் இழந்துவிட்டான் என்பதும் உண்மை. ஆதாலால் நீதி, நேர்மை இனி வெற்றிப் பெறுவது நிச்சயம் என்பது தான் இந்தியாவின் நீதிக் கட்சியின் கருத்து....
sathish - cbe,இந்தியா
2010-09-03 05:54:08 IST
ஆஹா என்னே காதல்,, காதல் வாழ்க,,,முன்பெல்லாம் அப்பன் ,,அம்மா செய்த குற்றத்திற்கு மகன்,,மகள் தண்டனை அனுபவிக்கும் காலம் போய் இப்போ அவனவனே தண்டனை அனுபவிக்கும் காலம் தான் இந்த கலி காலம்,, இந்த கால இளசுகளுக்கு புரிந்தால் சரி ,,,,...
KIM - TN,இந்தியா
2010-09-03 05:44:07 IST
மீண்டும் கள்ளக் காதல் !! மனைவிமார்கள் சரியாக வைத்து கொண்டால் இது மாதிரி நடக்காது !!இறைவன் எல்லாவற்றையும் பார்க்கின்றான் என்ற பயம் வேண்டும் !...
கோபிநாதன். k - Chennai,இந்தியா
2010-09-03 05:38:43 IST
டியர் தினமலர் சார்! நல்ல ஒரு தலைப்பு....எந்த மதத்தையும் சாராமல் இப்படி ஒரு செய்திய வெளியிட்டதுக்கு தேங்க்ஸ்......மேலும் இதுமாதிரி தெய்வ நம்பிக்கைய கொஞ்சம் சேர்த்து செய்தி போட்டீங்கன்னா ...இது மாதிரி கொஞ்சம் தப்பு பண்றவங்களுக்கு கொஞ்சம் பயம் வரும்.....மேலும்...." இதை வங்கியில் உள்ள கேமரா மூலம் உறுதிப்படுத்தினோம் " இதுவும் ஒரு நல்ல செய்திதான்.......ஏனா ATM குற்றம் குறையும் .....ரொம்ப நல்ல செய்தி சார்! தொடருட்டும் உங்கள் பணி....கோபி...
சாமி - கோவை,இந்தியா
2010-09-03 05:14:11 IST
எல்லாம் தொலைகாட்சி தொடர்களும், சினிமாவும் படுத்தும்பாடு. பொழுதுபோக்காக இருக்க வேண்டியவை புரையோடிய வக்கிரபுத்தி கொண்ட நிகழ்வுகளை மக்களுக்கு வழங்கி மூளை சலவை செய்வது போல இருக்கு. அதுக்காக நல்ல விஷயங்கள் இல்லை என்று சொல்லவில்லை. எது அதிகமாக காட்டபடுதோ அவையே கலாசார சீர்கேடுக்கு வழி செய்யும் என்பது யாவரும் அறிந்த உண்மையே. நல்ல நிகழ்சிகளை பாருங்கள். தவறில்லை....
மு.சதாசிவன். - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-03 03:51:00 IST
நல்ல காதலோ கள்ள காதலோ எல்லா காதலுக்கும் காமம் தான் அடிப்படை, கட்டிலில் சந்திக்கும் வரை கண்ணே மணியே என்று கொஞ்சுவதெல்லாம் பசப்பு வார்த்தைகளும் கட்டிலில் சேருவதற்கான அலங்கார வார்த்தைகள்தான். 2 நிமிட இளைப்பாறுதலுக்காக வாழ்க்கையை நாசமாக்கி கொள்ளத்தான் வேண்டுமா? பொன்னான இளம்பருவத்தை எதிர் பாலினத்தை தேடி ஓடுவதில்தான் கழிக்க வேண்டுமா? சினிமாவை பார்த்து பார்த்து கற்பனை உலகத்திலையே கழிக்க ஆரம்பித்து விட்டார்கள். துருதுருவென்று இருக்கின்ற உடலை லேசாக சோர்ந்து போக செய்கின்ற ஒரு செயல்தான் உடலுறவு. உடலினுடைய சக்தியை வீனடிக்காமலே தளர்ச்சி அடையாமலே அமைதியை அடைய முடியும், அதற்கு உதவுவதுதான் தியானம். முன்னதில் கிடைக்கும் சோர்வு குடிகாரன் குடித்து விட்டு மயங்கி கிடப்பதற்கு சமம், பின்னதோ குழந்தையின் அமைதிக்கு சமம். காதல் கண்றாவியெல்லாம் தெய்வீகம் என்று சொல்வதெல்லாம் ஒன்றை உயர்த்தி சொல்லி பிறரை கவருவதற்காகவும், தான் எடுக்கும் சினிமா வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் தான். கண்ணாடி மட்டும் இல்லை என்றால் உலகில் உள்ள காதல்களில் 50 பங்கு காணாமல் போயிருக்கும், கண்ணே இல்லாமல் போயிருந்தால் மீதி 50 பங்கு காதலும் இல்லாமல் போயிருக்கும் என்று கண்ணதாசன் சொல்வார். ஆக காதல் கன்றாவிஎல்லாத்தையும் விட்டு விட்டு அம்மா அப்பாவை பாருங்கடா! தேவை பட்டா கட்டிக்கிடுங்க, அடுத்தவன் தொட்ட எச்சில் எதற்கு? சசி தரூர் போல அலையாதுங்க, அடுத்தவன் கட்டுன தாலி மேல படுக்கிறது வெட்கமா தெரியல?...
அ. சிவகுமார் - நியூஜெர்சி,யூ.எஸ்.ஏ
2010-09-03 01:40:23 IST
புது படத்துக்கு கதை ரெடி. "சீதாலட்சுமி கொலையான இரண்டரை மணி நேரத்தில் ரமேஷ் உடல் நசுங்கி இறந்துள்ளான்". இந்த இரண்டரை மணி நேரத்தில் என்ன நடந்திருக்கும்னு எப்படியும் படம் வந்துடும்....
Kadarkaraisamy - வெர்மில்லியன்,யூ.எஸ்.ஏ
2010-09-03 00:56:17 IST
எல்லாம் சரி. எந்த தப்பும் பண்ணாத அன்பு தண்டபாணி மற்றும் அவரது மகனுக்கு ஏன் இந்த தண்டனை?...
கள்ளக்காதல். பெண்களே கூடாது...

கருத்துகள் இல்லை: