சனி, 13 பிப்ரவரி, 2016

விசாரணையை முன் வைத்து ஒரு குறுக்கு விசாரணை

Visaranaவினவு.com :யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பலியாக்கப்படலாம் என்பதுதான் இங்குள்ள யதார்த்தம். இதை அப்பட்டமாக அம்பலப்படுத்தும் இந்தப் படம், மக்களின் கவனத்தை மட்டுமின்றி அதிகார வர்க்கத்தினரின் கவனத்தையும் கோரி நிற்கிறது. இந்தியச் சட்டங்கள் அவற்றின் உயரிய நோக்கங்களுக்கேற்பப் பயன்படுத்தப்பட வேண்டுமென்றால், அதைச் செய்யக்கூடியவர்கள் அதிகார வர்க்கத்தினர்தான். தங்கள் மனசாட்சியை நோக்கி ஒரு கலைஞன் விடுக்கும் செய்திக்கு அவர்கள் காதுகளும் மனங்களும் திறக்குமா?”

நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்கள் விபரம்

சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் 234 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம், கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 234 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரி்ல் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் கடலூர் மஞ்ச குப்பம் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில் சட்டமன்றத் தேர்தலில் அக் கட்சியின் சார்பாக போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

ஒடிசா: வீடியோ கான்பரன்சிங்கில் பேசியபடியே தூக்குப் போட்டு இறந்த ஆராய்ச்சி மாணவி

ஒடிசாவில் ஆராய்ச்சி மாணவி ஒருவர், தனது நண்பருடன் செல்போனில் வீடியோ கான்பரன்சிங் பேசிக் கொண்டே தூக்குப் போட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஐஎம்எம்டியின் ஆராய்ச்சி மாணவியாக இருந்தவர் சுபலஷ்மி அர்ச்சனா (34).
மான்சேஷ்வரில் தான் தங்கியிருந்த வாடகை வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது தற்கெலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

சிரியாவில் சண்டை நிறுத்தம்? ஐ எஸ் பயங்கரவாதிகளின் முடிவை பொறுத்து உலகநாடுகள்..

முனிச்: மேற்காசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில், பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் அமெரிக்க கூட்டுப்படைகள், தாக்குதலை நிறுத்தி வைக்க ஒப்புக் கொண்டுள்ளன.சிரியாவில், பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சண்டையால், 2 லட்சத்து, 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்; லட்சக்கணக்கனோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.இதையடுத்து, அங்கு அமைதியை ஏற்படுத்த, சண்டை நிறுத்தம் மேற்கொள்வது என, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக முடிவு செய்துள்ளன. இதற்கான நடவடிக்கையை, ஐ.நா., விரைவில் துவங்கவுள்ளது. எனினும், அங்கு செயல்பட்டு வரும், ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களின் முடிவை பொறுத்தே, சண்டை நிறுத்தம் அமலாகுமா என தெரிய வரும். தினமலர்.com

திமுக-காங்கிரஸ் கூட்டணி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..சட்டசபை தேர்தலில்

சட்டசபை தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து
போட்டியிடும் என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். ">இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் உள்ள நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.இந்நிலையில் திமுக
தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொருப்பாளர் குலாம் நபி ஆசாத் சந்தித்துப் பேசினார்.;இதைத் தொடர்ந்து, குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று கூறினார்.மேலும், "தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கேற்பது என்பது காங்கிரஸின் இலக்கல்ல.;வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து திமுகவே முடிவு செய்யும்" என்று அவர் தெரிவித்தார்.webdunia.com

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் ஸ்டாலின் வீட்டு விஜயம்

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஸ்டாலின் இல்லத்துக்கு விஜயம் செய்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.  ரவிசங்கர் பாஜக சார்பாக திமுக கூட்டணி  அமைக்கும்  நோக்கில்  பேச்சுவார்த்தை நடத்ததான்  ஸ்டாலினையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்ததாக பலரும் கருத்துக்கள் கூறிவருவது தெரிந்ததே. அது தவறு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஸ்டாலினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் நெருங்கிய நண்பர் என்பதால்தான் அவரின் நல்லெண்ண வருகை இடம்பெற்றது என்பதை இந்த படம் தெளிவாக காட்டி இருக்கும் என்று நம்புகிறோம்  

அடுக்குமாடி கட்டடங்களில் 'சோலார்' மின் உற்பத்தி கட்டாயம் அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு

தமிழகத்தில், மூன்று மாடிக்கும் மேற்பட்ட அனைத்து அடுக்குமாடி கட்டடங்கள், சிறப்பு கட்டடங்கள், தொகுப்பு குடியிருப்பு கட்டடங்களில், சூரிய சக்தி மின் உற்பத்திக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்காக, விதிகளில் திருத்தம் செய்யும் அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது. 'சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, மின் உற்பத்தியை ஊக்குவிக்க, அனைத்து அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் தொகுப்பு வீடுகள் திட்டங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்படும்; இதற்காக, வளர்ச்சி விதிகளில் திருத்தம் செய்யப்படும்' என, சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, 1971 நகரமைப்பு சட்டத்தில், தேவையான திருத்தங்களை செய்வது குறித்து, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., நகரமைப்புத் துறை, எரிசக்தி துறை, நகராட்சி நிர்வாகத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.   . டூ லேட், இதை ஏற்கனவே  செயல் படுத்தி இருக்க வேண்டும்.. நெட் மீட்டர் பொருத்தி வீடுகளிலிருந்து பகல் நேரத்தில் உற்பத்தியாகும் கரண்டை அரசே விலைக்கு வாங்குவதற்கு ஏதாவது வழி உண்டா என்று முயற்சி செய்யலாம். அதைவிட்டு.... காப்பறேட்டுக்களிடம்  அதிக விலைக்கு வாங்கி கமிசன் அடித்து ......

பாட்டியாலா கோர்ட்டில் ராஜா ஆவேசம்: கொலையுண்டவரை கோர்ட்டில் நிறுத்தட்டுமா?

கிட்டத்தட்ட, கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளேன். சட்டம் வழங்கும்
சலுகைகளை பயன்படுத்தி, என்னை காப்பாற்றி கொள்ளக் கூட நான் விரும்பவில்லை. ஆனால், கொலையுண்ட நபரையே நேரில் அழைத்து வருகிறேன்; நீதி வழங்குங்கள்,” என, முன்னாள் அமைச்சர் ராஜா கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார்.'2ஜி ஸ்பெக்ட்ரம்' முறைகேடு விவகாரத்தில், சி.பி.ஐ., தரப்பின் இறுதி வாதம் முடிவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள், எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் ராஜாவின் வாதம் எப்படியிருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக, டில்லி பாட்டியாலா கோர்ட்டில், அவருக்கு சீனியர் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. மாறாக, மனுசர்மா என்ற இளம் வழக்கறிஞரே ஆஜராகி வருகிறார். இருப்பினும், பெரும்பாலான வேளைகளில், ராஜாவே, நீதிபதி ஷைனியின் முன், தன் வாதங்களை வைக்கிறார்.  இது  பிஜேபி மற்றும் அரசு நிர்வாகத்தில் இருக்கும் R.S.S. கைகூலிகள் சேர்ந்து உருவாகிய சதி வழக்கு. அதனால் தான் ஜீரோ லாஸ் என்பதை மாற்றி கற்பனையான 1.76 லட்சம் கோடி என உத்தேச குற்ற சட்டை விநோத்ராய் கூறினார். அந்த விநோத்ராயிக்கு இந்த பிஜேபி அரசில் பத்ம விருது வழங்கப்பட்டுள்ளது....

அட என்னதான் சொல்ல வாறீங்க?

அங்கே அறுபது கேட்கிறார்கள் இங்கே இருபத்தி ஐந்துதான் கட்டுபடி ஆகும் என்கிறார்கள். கூடவே ஆட்சியில் பங்கும் கேட்கிறார்கள். இங்கோ காட்சியில் மட்டும்தான் பங்கு என்கிறார்கள். அங்கே பூவோடு சேர்ந்ததையும், பிகாரில் வெளுத்து வாங்கியதை எல்லாம் கணக்கு காட்டுராக. இன்னும் வரவேண்டியவங்க நெறய பேரு இருக்காக அதனால கட்டுபாடாக இருக்கணும் என்கிறார்கள்.
சுசாமியின் அடிமை குடும்பம்  நிச்சயம் தாமரை குளத்தில்தான் குளிக்கும்.  சுசாமியின் லேடஸ்ட் வெளக்கெண்ணெய் என்னதான் தலைகீழாக நின்றாலும் இந்த முறை நினைக்கிறது நடக்காது.  தோலிருக்க சுளை விழுங்கும் நரித்தனம் தேர்தலுக்கு முன்பே வெளுத்து விடும்.

கனவுலகுக்கு ஒரு பாலம்......அங்கே உங்களின் நிஜத்தை நீங்களே தரிசிப்பீர்கள்.

கனவுகள் உண்மையானவையா?
இறந்தவர்களுடன் பேச முடியுமா?
ஒருவரோடு ஒருவர் மனத்தால் பேசமுடியுமா?
எதிர்காலத்தில் சந்திக்கபோகும் ஒருவருடன் இப்போதே பேசிக்கொண்டு இருக்கிறோமா?
நேரில் பரிச்சயம் இல்லாத ஒருவரோடு நாம் மனத்தால் பேசமுடியுமா? அல்லது பேசிக்கொண்டுதான் இருக்கிறோமா?
எல்லாவற்றிக்கும் பதில்கள் ஒன்றுதான். ஆம் ஆம் ஆம் .
இந்த கேள்விகள் எல்லாமே சாத்தியம் அற்ற கேள்விகளாக தோன்றக்கூடும்.
உண்மையில் இவை எல்லாமே நிச்சயம் சாத்தியமான விடயங்கள்தான்.
இன்னும் சரியாக சொல்லப்போனால் நாம் எம்மை அறியாமலேயே அடிக்கடி செய்துகொண்டிருக்கும் விடயங்கள்தான் இவை.

டாஸ்மாக் மட்டுமல்ல கல்வி கொள்ளையையும் தடுக்க வேண்டியது அவசியம்!

edit feb 12aanthaireporter.com பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் மகனை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தகப்பன் பற்றிய செய்தியை படித்த கணத்திலிருந்து இரண்டு குழந்தைகளின் தகப்பனாக அதை எப்படி கடந்து போவது என்று தெரியவில்லை. வேதனையாக இருக்கிறது.ஏழை பணக்காரன் என அனைவ ருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய கல்வி இன்று கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டது. ஒரு கந்து வட்டிக்காரனிடம் மிச்சம் இருக்கும் இரக்கம் கூட இவர்களிடம் இல்லை. கல்வி ஏன் இவ்வளவு சிக்கலாகிப்போனது. இந்த நிலையை ஆய்வு செய்து பார்த்தால் மறைமுகமாக வர்ணாஸ்ரமத்தை இந்த கல்விக்கூடங்கள் கட்டமைக்கின்றன. அன்று சாதியின் பெயரால்.. இன்று வர்க்கத்தின் பெயரால் அவ்வளவுதான் வித்தியாசம்.
ஏதேனும் ஒரு பள்ளிக்கு போன் செய்து உங்கள் பள்ளி கட்டணம் எவ்வளவு என்று கேட்டு பதில் வாங்கி விடுங்கள் பார்ப்போம்.. சொல்லவே மாட்டார்கள்.

Bihar பாஜக துணைத்தலைவர் சுட்டு கொலை...விஷ்வேஷ்வர் ஓஜா போஜ்பூர்...

பீகார் மாநில பா.ஜ.க. துணைத்தலைவர் இன்று மர்ம நபர்களால் சுட்டுக்
கொல்லப்பட்டார். பீகார் மாநில பா.ஜ.க. துணைத்தலைவராக இருந்தவர் விசேஷ்வர் ஓஜா (வயது 45). கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஷாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இவர் மீது கொலைக் குற்றச்சாட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், விசேஷ்வர் ஓஜா போஜ்பூர் மாவட்டம், பர்சவுரா கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 12-க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் விசேஷ்வர் ஒஜா காரை வழிமறித்து, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத் தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

உபியில் கடத்தப்பட்ட பெண் மீட்கப்பட்டார்.....ஸ்னாப்டீல் கிளையில் பணிபரியும்....

உத்தரபிரதேசத்தில் கடத்தப்பட்ட தனியார் நிறுவன இளம்பெண் அதிகாரி
மீட்கப்பட்டார். அவரை கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில், பிரபல தனியார் ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான ‘ஸ்னாப்டீல்’-ன் கிளை உள்ளது. இந்த நிறுவனத்தில் அப்பகுதியை சேர்ந்த தீப்தி சர்னா (வயது 24) என்ற இளம்பெண் பணியாற்றி வருகிறார் அந்த நிறுவனத்தின் சட்டத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வரும் தீப்தி சர்னா, கடந்த 10-ந்தேதி மாலையில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பினார். இதற்காக வைஷாலி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்தார். பாதி வழியில் அந்த ஆட்டோ பழுதடைந்தது.

எந்த கூட்டணியில் சேர்வது? சிறிய கட்சிகள் குழப்பம்

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளுமே கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க., மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி இந்திய குடியரசு கட்சி, தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவை, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
தேர்தலுக்கு பின்னர், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை கூட்டணியில் இருந்து வெளியேறி, தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தன.
இதில் புதிய தமிழகம் கட்சியை பொறுத்தவரையில் தி.மு.க. அணியில் நீடிப்பது போன்ற தோற்றமே காணப்படுகிறது. அதே நேரத்தில், மனித நேய மக்கள் கட்சியின் மனநிலையில் மாற்றம் இருப்பது தெரிகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. அணியிலேயே நீடிக்க அக்கட்சி விரும்புகிறது.

ராஜ்யசபாவில் 73 எம்.பி.,க்கள் பதவி இந்தாண்டு முடிவடைகிறது

தமிழக எம்.பி.,க்கள்வரும், ஜூன் மாதம் ௨௯ம் தேதி பதவி காலம் முடிவடையுள்ள,
தமிழக எம்.பி.,க்கள்: ரபிபெர்னார்ட் - அ.தி.மு.க.,சுதர்சன நாச்சியப்பன் - காங்.,
நவநீதகிருஷ்ணன் - அ.தி.மு.க.,
மனோஜ்பாண்டியன் - அ.தி.மு.க.,
கே.பி.ராமலிங்கம் - தி.மு.க.,
தங்கவேலு - தி.மு.க.,
மணிசங்கர் அய்யர் - காங்., (21.3.2016)
 காங்கிரஸ், பா.ஜ., பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் என முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, அரசியல் ஜாம்பவான்கள் உட்பட, 73 பேரின், ராஜ்யசபா, எம்.பி., பதவிகாலம், இந்த ஆண்டுடன் நிறைவடைகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன், பா.ஜ., வெற்றி பெற்றதையடுத்து, நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைந்தது.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

தேமுதிக எம் எல் ஏக்கள் 6 பேர் இடைநீக்கம் உச்ச நீதிமன்றம் ரத்து ....சவுக்கடி வைகோ கருத்து

தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகப் படுகொலை நடத்தியதற்கும்,
ஆளுங்கட்சியினர் எதேச்சதிகாரத்திற்கும், உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்து இருக்கின்றது" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பேரவை தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கதக்கதாகும். ஜனநாகயத்திற்கக் கிடைத்த வெற்றி ஆகும்.

துரைமுருகன் :அந்தம்மா போர்டிகோ கிட்ட வர்றப்போ சபை கப்சிப்னு ஆயிடும். சபாநாயகர் உட்பட அத்தனை பேரும் எந்திரிச்சு நிக்க

"ஒருநாள் கலைஞர்,  குழந்தைகள் மது அருந்தும் வீடியோவை பார்த்துக் குலுங்கி அழுதார். அப்போது என்னிடம், ' யார் செய்திருந்தாலும், நாமே செய்திருந்தாலும் இனி நம் மக்களை இந்த நிலைக்கு ஆளாக்க கூடாது. என் மனம் தாங்கவில்லை'  என சொல்லி அழுதார். மறுநாள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம். என அறிவித்தார்," என திமுகவின் மதுவிலக்கு அறிவிப்பின் பின்னணியை விளக்கியுள்ளார் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்.

Facebook மூலம் மறு காலனித்துவ கருத்துக்கள்...முயற்சிகள்? Free basics பற்றிய விமர்சனங்கள்

வாஷிங்டன்,: இந்தியாவில் நிலவும் இணைய சமநிலையை சீர்குலைக்கும் வகையில், 'ரிலையன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து,'ப்ரீ பேசிக்ஸ்' என்ற பெயரில், இலவச இணையதள சேவை வழங்க முன்வந்த, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தின் முயற்சியை, 'டிராய்' தடை செய்ததால், அதன் அதிகாரிகளில் ஒருவர் கோபமடைந்து, இந்தியா பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்தார்.
அதையறிந்த இந்தியர்கள், அந்த அமெரிக்கரை, சமூக வலைதளங்களில் வசை பாடியதை யடுத்து, அவர்மன்னிப்புக் கேட்டுள்ளார்; பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க்கும், அந்த நபரை கண்டித்து, 'இனிமேல் இதுபோல் கருத்து தெரிவிக்கக் கூடாது' என்றார். இந்த விவகாரம், இரு நாட்களாக, இந்திய இணையதளங்களில்சூட்டை ஏற்படுத்தியது.      .Murugan - Mumbai :வெள்ளைக்காரன் நம் ஊர் அரசியல்வியாதிகளை விட எவ்வளவோ நல்லவன். அதனால் தான் அடிமைப்படுத்திய நாடாக இருந்தாலும் அந்நாட்டு மக்களுக்கும் கல்வி, மருத்துவம், உணவு, அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தான். மூட நம்பிக்கையில் இருந்த நாட்டை கொஞ்சம் சிந்திக்க வைத்தான். விடுதலை என்னும் சுதந்திரம் நாட்டுக்கு மட்டுமல்ல நாட்டின் ஊழலுக்கும் கிடைத்துவிட்டதாலேயே இவ்வளவு பிரச்சனை

தற்கொலை படை பெண் பயங்கரவாதி இஸ்ரத்!': ஹெட்லி புது தகவல்

மும்பை: குஜராத் மாநிலத்தில், 2004ல் நடந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரத் ஜகான், லஸ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் என, பாகிஸ்தான் பயங்கரவாதி டேவிட் கோலமன் ஹெட்லி, தன் சாட்சியத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008ல் நடந்த தொடர் தாக்குதலில் தொடர்புடைய லஸ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி ஹெட்லி, 55, அமெரிக்காவில் இதே வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்த வழக்கில் அப்ரூவரான ஹெட்லி, அமெரிக்காவில் இருந்து, 'வீடியோ கான்பரன்சிங்' மூலமாக, மும்பை கோர்ட்டில் சாட்சியம் அளித்து வருகிறான்.
கடந்த சில தினங்களாக அளித்த சாட்சியத்தின்போது, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., மற்றும் லஸ்கர் - இ - தொய்பா ஆகியவை தொடர்பாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தான்.

ஆன்மீகப்படி ஆண்கள்தான் ஆதிக்கம் செலுத்தனுமா?- ஐயப்பன் கோவில் வழக்கில் சுப்ரீம்கோர்ட் கேள்வி

டெல்லி: ஆண்கள்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என ஆன்மீகம் சொல்லுகிறதா? என்று ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கக் கோரும் வழக்கில் கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பும் 5 பெண் வழக்கறிஞர்களும் உச்சநீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ், ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. 

இறுதிச்சுற்று: தொடப்பக் கட்டையாலேயே அடிக்க வேண்டும்...எதுக்கு பாலசந்தர் பாணி?

வே.மதிமாறன்: ‘முழுமையாக முடிக்கப்பட்ட script பிறகு படமாக எடுக்கப்படுகிறது என்ற முறையான சினிமா பாணி, பெண் குத்துச்சண்டையை முதன்மைப்படுத்துகிறது, அதை விட மிக முக்கியம் இயக்குநர் பெண்.’ இந்தக் காரணங்களால் ‘இறுதிச்சுற்று’படம் பார்க்கலாம் என்றிருந்தேன். இன்று காலை தற்செயலாகத் தொலைக்காட்சியில் அந்தப் படத்திலிருந்து ஒரு காட்சி, சூழல் மீனவ கிராமம். வீடு. நாயகியின் தந்தை சாமிக்கண்ணு, குடித்துவிட்டு வந்து ‘நான் இனி சாமிக்கண்ணு இல்ல. சாமுவேல்’ என்கிறார். மனைவி, மகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ‘அடப்பாவி காசுக்கு மதம் மாறிட்டியா?’ என்று சாமிக்கண்ணு என்கிற சாமுவேலை தொடப்பைக் கட்டையாலேயே அடிக்கிறார்கள்.
கர்ப்பிணியைக் கொலை செய்த ஆர்.எஸ்.எஸ். மதவெறியன் சினிமா எடுத்தால் கூட இவ்வளவு இந்து மதவெறியுடன் இழிவான காட்சியை வைத்திருப்பானா?
கிறிஸ்துவத்திற்கு மதமாறிய மீனவர்கள் எல்லோரும் சாராயத்திற்கும், பணத்திற்கும் தான் மாறினார்களா?

நிர்வாண பூஜை நடத்தும் மருத்துவ கல்லூரி பேராசிரியர் : மனைவி புகார்

தர்மபுரி இலக்கியம்பட்டி பாரதிபுரம் மருத்துவ குடியிருப்பில் வசித்து வரும் டாக்டர் செல்வராஜ் (50), தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி கல்பனா இறந்து விட்டார்.   மனைவி இறந்ததைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எலத்தூர் பகுதியை சேர்ந்த வையாபுரி மகள் கார்த்திகா (28)வை செல்வராஜ் 2–வது திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் நடைபெற்று 1 வருடம் அவர்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினர். இந்த நிலையில் அவ்வப்போது பூஜை செய்ய செல்வராஜ் வெளியில் சென்று வந்தார். இதை கண்ட அவரது மனைவி கார்த்திகா ஏதோ ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளதால் சென்று வருவதாக நினைத்து அதை கண்டு கொள்ளவில்லை. Moral of this story : என்னத்தை படிச்சாலும் பட்டம் வாங்கினாலும்  கேப்மாரி  கேப்மாரிதாய்ன்

இளங்கோவன்: ஜெ.,வும், சசிகலாவும் மகாமக விழாவிற்கு குளிக்கச் செல்லாமல் தவிர்ப்பதே மக்களுக்கு செய்யும் பேருதவி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் விடுக்கும் அறிக்கையில், ’’கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் எனச் செய்திகள்  வெளியாகியுள்ளது.  மகாமக விழாவில் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் கலந்து கொண்டு குளிப்பார்கள் என்ற செய்தியே மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித நீராட வரும் பக்தர்களை அவஸ்தைகளுக்கு ஆளாக்காமல், அவர்கள் நிம்மதியுடன் புனித நீராடிச் செல்ல முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் மகாமக விழாவிற்கு குளிக்கச் செல்லாமல் தவிர்ப்பதே தமிழக மக்களுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன் ஞாபகம் இருக்கிறதா கும்பகோணம்  29: 26.2.92 .இல் நூற்று கணக்கானவர்கள் மிதிபட்டு மரணித்தார்களே...?   nakkheeran,in

ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை....ஈர்ப்பு விசை அலைகள் கண்டுபிடிப்பு

வாஷிங்டன் : விண்வெளி பாதையில் உள்ள இரண்டு கரும்புள்ளிகள் அல்லது நட்சத்திரங்கள் இணைவதன் மூலம் புவிஈர்ப்பு அலைகள் உருவாவதை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பின் மூலம் 100 ஆண்டுகளுக்கு முன் ஆல்பர்ட் எயின்ஸ்டீன் வகுத்த சார்பியல் கொள்கை உண்மை என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பாக கருதப்படும் இந்த ஆய்வில் பங்கு கொண்ட விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.1915ம் ஆண்டு ஈர்ப்பு விசை குறித்த சார்பியல் தத்துவத்தை இயற்பியல் விஞ்ஞானி எயின்ஸ்டீன் வகுத்தார்.

அனிதாவின் Love மோசடி லீலைகள் போலீஸ் விசாரணையில் அம்பலம்

சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக 12 லட்சம் சுருட்டிய
மோசடி ராணி கைது செய்யப்பட்டார். அவரிடம் பணத்தை இழந்து ஏமாந்த அப்பாவி இளைஞர்களிடம் காதல் லீலையிலும் ஈடுபட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.கைதான மோசடி ராணி அனிதா (வயது 26). பி.சி.ஏ. பட்டதாரியான இவர், சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர். இவரது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக தெரிகிறது. தற்போது இவர், இரண்டாவதாக ஒருவரை மணந்து வாழ்கிறார். 1½ வயதில் மகனும் உள்ளான்.
அனிதா மீது சென்னை ஐகோர்ட் போலீஸ் நிலையத்தில் மலையரசன் உள்பட 4 இளைஞர்கள் பரபரப்பு புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில், ‘அனிதா சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.12 லட்சத்தை சுருட்டிவிட்டதாகவும், வேலையும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. பணத்தை கேட்டால், கொலை மிரட்டல் விடுக்கிறார் என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நான் நடிகைதான்... ஜெயலலிதா என்ன அன்னை தெரசா குடும்பத்தை சேர்ந்தவரா? குஷ்பு

ஈரோடு: தம்மை நடிகை என விமர்சனம் செய்யும் அதிமுக அமைச்சர்கள், முதல்வர் ஜெயலலிதா அன்னை தெரசா அல்லது அன்னிபெசண்ட் அம்மையார் குடும்பத்தைச் சேர்ந்தவரா? என விளக்கம் தர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு வலியுறுத்தியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய குஷ்பு கூறியதாவது: நான் நடிகைதான். காங்கிரஸ் கட்சியில் நான் இருக்கிறேன். காங்கிரஸ் கட்சி என் பின்னால் இல்லை. காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொருவரும் என்னை நடிகையாக பார்க்கவில்லை.

மைக்கல் ஜாக்சன்...தொண்டு நிறுவனங்களுக்கு வாரி வாரி....கின்னஸில் இடம் பெற்ற இந்த கர்ணனை கொன்றது யார்?

வினவு:உலகமெங்கும் கோடிக்கணக்கணக்கான இரசிகர்களை கொண்டிருக்கும்
நாயகனை ; கலைஞன், இரசிகன், சந்தை, முதலாளித்துவம், உலகமயம் முதலியனவற்றின் உறவுகளையும் அவற்றின் முரண்பாட்டினையும் அவை எழுப்பும் கேள்விகளிலிருந்து அறவியல் நோக்கில் மாற்று குறித்தும் இந்த கட்டுரை பேசுகிறது. இது சற்றே நீண்ட கட்டுரை!  நிதானமாகப் படியுங்கள், கேள்விகளை எழுதுங்கள், முடிந்த வரை மற்றவர்களிடம் கொண்டு செல்லுங்கள் !!!
1.மறைந்தவர் மீண்டும் எழுந்தார்!
சில ஆண்டுகளாக ஊடகங்கள் மறந்து போன மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகு மீண்டும் செய்திகளில் உயிர்த்து எழுந்திருக்கிறார்.

காவல் ஆய்வாளரை மிரட்டிய அதிமுக பிரமுகர்...அம்மா பேனர் மேலயா கை வைக்கிறாய்?

கன்னியாகுமரி: களியக்காவிளையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அதிமுக பேனரை அகற்றிய காவல் துறை ஆய்வாளரை அதிமுக பிரமுகர் ஒருவர் தொலைபேசியில் மிரட்டிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுகவினர் உரிய அனுமதியின்றி பேனர் வைத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து போக்குவரத்து இடையூராக இருந்த பேனர்களை களியக்காவிளை காவல் ஆய்வாளர் சாம்சன் அகற்ற உத்தரவிட்டதாக தெரிகிறது.  இதை கேள்விப்பட்ட களியக்காவிளை அதிமுக ஒன்றிய செயலாளர் உதயகுமார் சாம்சனுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். அந்த உரையாடலில் உதயகுமார், ஆய்வாளர் சாம்சனை ஒருமையில் திட்டியுள்ளார். ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆளும் கட்சி பிரமுகர் அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் கட்சியினரிடமு, காவல் அதிகாரிகளிடையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
://tamil.oneindia.com

வியாழன், 11 பிப்ரவரி, 2016

விஜயதரணி : ஜெயலலிதா காலில் கோகுல இந்திரா வகையறாக்கள் போன்று நான் விழவில்லை


ஜெயலலிதாவை எதிர்த்தவர்களெல்லாம் அவருடைய காலில் வந்து விழுவது தன் வரலாறு. இளங்கோவனுடன் மோதி பதவியை இழந்த விஜயதரணி தற்போது அம்மாவின் காலடியில் விழுந்துள்ளார் என்பது போல் கிண்டலடித்து பேசி வந்த கோகுல இந்திராவுக்கு விஜயதரணி பதில் கூறியுள்ளார்.அம்மா காலில் விழுந்தேன் என்று என்னை மேடைக்கு மேடை விமர்சிக்கிறார் கோகுல இந்திரா. ஜெயலலிதா காலில் எல்லோரும் விழுகிறார்கள். இதை அவர் கொச்சைப்படுத்துகிறாரா? கோகுல இந்திராவுக்கு கட்சியில ஏதோ பயம் ஏற்பட்டுவிட்டது.அவர் ஜெயலலிதாவை இழிவுபடுத்துகிறாரா என்பதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறிய விஜயதரணி மேலும் தான் யார் காலிலும் விழவில்லை என மறுத்தார். கோகுல இந்திரா கட்சி தலைவியையே அவமதிக்கும் பெருமையை பெறுகிறார்.

பூதாளம் படத்தில்(அரை) நிர்வாணமாகவே மன்சூர் அலிகான் நடிக்கிறார்

Boothalam-6சர்ச்சைக்காரர் என்ற பெயரெடுத்த மன்சூர் அலிகான், அதிரடி’ என்ற படத்தின் மூலம் பல்வேறு தரப் பினரை விமர்சித்ததன் மூலம் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை (பெப்சி) எதிர்த்து, தனியாக ஒரு திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தை ஆரம்பித்தார். தான் ஆரம்பிக்கப்பட்ட சங்க தொழிலாளர்களைக் கொண்டு ‘அதிரடி’ படத்தை முடித்து திரையிட்ட மன்சூர் அலிகான், தற்போது ‘பூதாளம்’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதில் ரொம்ப வித்தியாசமான கேட்டப் போட்டுள்ள மன்சூர், கோவனம் கட்டிக்கொண்டு விவசாயப் பணி செய்யும், ஏழை விவசாயாக வயதான வேடத்தில் நடித்துள்ளார்.

ராஞ்சி: மாணவனை அடித்து கொன்ற ஆசிரியை...மாணவன் இந்து..ஆசிரியை முஸ்லிம்....


ராஞ்சி: ராஞ்சியில் தனது 11 வயது மகளை காதலித்ததற்காக 12 வயது மாணவனை ஆசிரியை அடித்துக் கொலை செய்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ளது சபையர் சர்வதேச பள்ளி. அந்த பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தவர் வினய் மஹதோ(12). அவர் அதே பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியை நசிமா காத்தூனின் 11 வயது மகளை காதலித்துள்ளார். வினய் தனது மகளை காதலிப்பது நசிமாவுக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 1 மணிக்கு மேல் வினய் விடுதி அறையில் இருந்து யாருக்கும் தெரியாமல் ஆசிரியர்கள் குடியிருப்புக்கு சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்நிலையில் மறுநாள் காலை வினய் நசிமாவின் வீட்டிற்கு முன்பு பிணமாக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வினயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் பள்ளி வளாகத்தில் வசிக்கும் ஊழியர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதிமுக பேனர்கள் வைக்க சுடசுட விண்ணப்பம் சுடசுட அனுமதி

சென்னை:அ.தி.மு.க., பொதுக் குழுவுக்காக, பொதுச்செயலர் ஜெயலலிதாவை வரவேற்று, டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு, ஒரே நாளில் விண்ணப்பம் வழங்கப்பட்டு, கட்டணம் செலுத்தப்பட்டு, அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில், சென்னை மாவட்ட கலெக்டர் தாக்கல் செய்த மனுவில், இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
சென்னை, திருவான்மியூரில், அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், 2015 டிசம்பரில் நடந்தது. கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதாவை வரவேற்று, போயஸ் தோட்டத்தில் இருந்து,  பின்னே இன்னாங்க இத்தையும் போயி சொத்து குவிப்பு மாதிரி  இருபது வருஷமா இழுத்தடிக்கவா சொல்றீங்க

தினமலர்: ஸ்டாலின் தரப்பால் ஓரம் கட்டப்பட்டவர்கள் விருப்புமனு தாக்கல் செய்ய கலைஞர் வேண்டுகோள்?


கலைஞர் உத்தரவுப்படி, விருப்ப மனு தாக்கல் செய்துள்ள சிலர்:
* முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம்
* முன்னாள் அமைச்சர்கள் பிச்சாண்டி, திருச்சி செல்வராஜ்
* முன்னாள் எம்.பி.,க்கள் முகமது சகி, பவானி ராஜேந்திரன்
* முன்னாள் செய்தி தொடர்பாளர், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
* முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன்
* முன்னாள் டில்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன்
* மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர்ராமச்சந்திரன்
* ஈரோடு ராஜ்குமார் மன்றாடியார்.
தி.மு.க.,வில் பதவி தராமல் ஓரங்கட்டப்பட்ட பலரையும், உடனடியாக விருப்ப மனு தாக்கல் செய்யும்படி, தி.மு.க., தலைவர் கருணாநிதி உத்தரவிட்டிருப்பது, கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சியாச்சின் வீரர் ஹனுமந்தப்பா வீர மரணம் அடைந்தார்

புதுடில்லி,: சியாச்சின் பனிச் சரிவில் சிக்கி, ஆறு நாட்களுக்கு பிறகு, நேற்று முன்தினம் உயிருடன் மீட்கப்பட்ட, ராணுவ வீரர், கர்நாடகாவைச் சேர்ந்த, ஹனுமந்தப்பா உடல் நிலை, நேற்று மோசமடைந்ததை அடுத்து அவர் இறந்தார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், கடல் மட்டத்திலிருந்து, 20 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள, உலகின் மிக உயரமான போர்க்களம் சியாச்சினில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள், கடந்த 3ம் தேதி, பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். அவர்களில், தமிழகத்தை சேர்ந்த, நான்கு பேர் உட்பட, பத்து பேர் சரிந்து விழுந்த பனிப்பாறைகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.  வீரர் ஹனுமந்தாவை  இழந்து வாடும் குடும்பத்துக்கு எமது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

சசிகலா பழனி கோவிலில் அகண்ட அதிமுக பூஜையில் கலந்துகொண்டார்

ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று (வியாழன்) காலை 11.45 மணி அளவில் பழனி முருகன் கோவிலுக்கு மதுரையில் இருந்து கார் மூலம் வந்தார். அடிவாரத்தில் இருந்து வின்ச் மூலம் மலைக்கு வந்த அவர், மதியம் 12 மணிக்கு நடக்கும் உச்சிகால பூஜையில் கலந்து கொண்டு முருகனை வழிபட்டார். அரை மணி நேரம் கோவிலில் இருந்த அவர் 12.30 மணி அளவில் மதுரை புறப்பட்டார்.முன்னதாக அவர் வரும் செய்தி அறிந்து கோயில் அதிகாரிகள், ரோப் காரை தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் அவர் வின்ச்சில் ஏறி சென்றார். சசிகலா வருவதையொட்டி கோயிலில் பாதுகாப்பு பணிகளும், அவர் விரைவாக தரிசனம் செய்யக்கூடிய வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.nakkheeran,in

விசாரணை : பாண்டேவுக்கு போட்டியாக புதிய தலைமுறை மாலன்


பாண்டேவின் தம்பி ஹரிகரன் போலிசு இமேஜுக்காக போராட்டம் visaranai debate haiharanது ஒரு விவாதம். மாவோயிஸ்ட்டுகளின் ‘வன்முறை’-யை வளர்ச்சியின் பெயரால் கிண்டிய பாண்டேயின் வழக்கமான விவாதம். தலைப்புக்கு பொழிப்புரையால் வலு சேர்க்க அழைக்கப்பட்டிருந்தார் அந்த ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி. முதல் சுற்றிலேயே மாவோயிஸ்ட்டுகள் பயங்கரவாதிகள் இல்லை, கொள்கை, அரசியல் சார்ந்து செயல்படுபவர்கள், அவர்களது செயலில் வன்முறைகள் இருந்தாலும் பயங்கரவாதிகள் இல்லை என்று அவர் சொன்னதும் பாண்டேவுக்கு தாங்கவொண்ணா ஆத்திரம்!
இதற்காகவா இவரை அழைத்தோம் என மாவோயிஸ்ட்டுகளின் ‘வன்முறைகளை’ பட்டியலிட்டு இவை பயங்கரவாதமில்லையா, அவர்களை ஆதரிக்கிறீர்களா என்றதோடு, விட்டால் உடன் போலிஸ் கமிஷ்னருக்கு போன் போட்டு கைது செய்யட்டுமா என்ற ரேஞ்சில் பிபி எகிற காட்டுரைத்தார் திருவாளர் பாண்டே அவர்கள்.

சென்னை குடியிருப்பில் கார் மோதி இரண்டு பேர் பலி 5 படுகாயம்....ஆந்திரா வங்கி மேலாளர் கைது


சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் சாய்சுபோதயா என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் கீழ் தளத்தில் ‘பாங்க் ஆப் மகாராஷ்டிரா’ என்ற வங்கியும், வணிக வளாகமும் உள்ளது. வங்கியின் மேலாளர் வெங்கடேஷ் (45) வங்கியின் அருகே நிறுத்தி இருந்த காரை வெளியே செல்வதற்காக ஓட்டி வந்தார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடியது. இதை கண்டு அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினார்கள். கண் இமைக்கும் நேரத்தில் அந்த கார், குடியிருப்பின் வாசல் அருகே நின்று பேசிக்கொண்டு இருந்த 5 பேர் மீதும் மோதியது. தொடர்ந்து ஓடிய கார், அங்குள்ள ஒரு கட்டிடத்தில் மோதி நின்றது. அங்கிருந்தவர்கள் 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி அப்துல்ரகீம், பியாரிலால் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்ற 3 பேரும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த வங்கி மேலாளர் வெங்கடேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகாத ஜோடிகள் ஒரே ஓட்டல் அறையில் தங்குவதற்கு சட்டம் தடை இல்லை...போலீசாரின் மாமுல்தான் பிரச்னை

திருமணமாகாத பெண்  ஒரு ஆணுடனோ அல்லது திருமணமாகாத  ஆண்
ஒரு பெண்ணுடனோ ஒரே ஓட்டல் அறையில் தங்க முடியுமா ? இப்படியொரு கேள்வியை கேட்டால் , இக்காலத்தில் ஒரு காலாவதியான கேள்வியாகவே அது பார்க்கப்படும். ஆனால் நிச்சயம் அது முடியாது என்கின்றனர் ஓட்டல் துறையினர். புனேயிலிருந்து ஆறு மாணவர்கள், 4 ஆண்களும், 2 பெண்களுமாக கேரளாவை சுற்றி பார்க்க கடந்த வருடம் அக்டோபரில் வந்திருந்தனர். அவர்கள் ஓட்டலில் அறை எடுக்க சென்றபோது, திருமணமாகாத ஜோடிகளுக்கு தங்குவதற்கு ஓட்டலில் அறை தரமுடியாது என சொல்லப்பட்டது. அவர்களில் ஒரு மாணவர் நியூஸ் மினிட்டிடம் பேசிய போது” நாங்கள் இங்கு வருவதற்கு முன்னர் எந்த ஓட்டலிலும் அறைகள் முன்பதிவு செய்யவில்லை.நாங்கள் நேரடியாக மூன்று ஓட்டல்களில் சென்று தங்குவதற்காக அறை கேட்டோம்.ஆனால் அவர்கள் நாங்கள் திருமணமாகாத ஜோடிகளுக்கு அறை வாடகைக்கு விடுவதில்லை என கூறி நாங்கள் தங்குவதற்கு அறையை தரமறுத்துவிட்டனர்.  என்றார்.

மோடியின் கைவிடப்பட்ட மனைவி யசோதா பென் பாஸ்போர்ட் விபரங்களை கேட்கிறார்.

பிரதமர் மோடியின் பாஸ்போர்ட் குறித்த விபரங்களை அளிக்குமாறு அவரது
மனைவி யசோதா பென் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பத்துள்ளார். பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் பெற கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் திருமணச் சான்றிதழ் இணைக்கப்படவில்லை எனக் கூறி அந்த விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்துள்ள யசோதாபென், மோடி முதன் முறையாக பெற்ற பாஸ்போர்ட், புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட், குஜராத் முதலமைச்சராக பதவியேற்ற பின் பயன்படுத்திய பாஸ்போர்ட் ஆகியவற்றின் விபரங்களையும் அதன் பிரதிகளையும் தனக்கு அளிக்குமாறு அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்கட்டிய பெண்ட்டாட்டிய கைகழுவி விட்டவர் நாட்டை காப்பாராம் நம்பலாம் 

புதன், 10 பிப்ரவரி, 2016

கம்யுனிஸ்ட் ராமகிருஷ்ணன் ஏன் அதிமுகவை விமர்சிக்க பயப்படுகிறார்?

அதிமுக அரசை நேரடியாக விமர்சிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலச் செயலாளருக்கு (ஜி.ராமகிருஷ்ணன்) அச்சம் என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கேள்வி - பதில் வடிவில் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இரு திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவர்களின் முன்னேற்றத்துக்காக எதுவும் செய்யவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கூறியிருக்கிறார்.

நடிகர் சல்மான் கான் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றில்

salman feb 10கார் விபத்து வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.பாதிக்கப்பட்ட குடும்பத்தின் இந்த நடவடிக்கை யானது, வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள விசாரணையின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. மும்பையில் கடந்த 2002ம் ஆண்டு நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது நடிகர் சல்மான் கானின் கார் மோதியது. இதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயமடைந்தனர். போதையில் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதாக சல்மான் கான் மீது தொடரப்பட்ட இவ்வழக்கின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட்டில் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.  பணக்காரன் ஏழையை காரால் அடித்து கொல்வது ஒரு கவுரவமான காரியமாக உருமாறி விட்டதோ என்ற சந்தேகம்....கேரளா கிங் பீடி அதிபர், அம்பானி மகன், சல்மான் கான் இன்னும் பல முறைப்பாடுகள் வெளிச்சத்துக்கே வருவதில்லை...

குடிபோதையில் மகனை தூக்கிட்டு கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை..மூடு டாஸ்மாக்கை மூடு


வேடசந்துார் அருகே குடும்பத் தகராறில், போதை தலைக்கேறிய தந்தை மகனை துாக்கிட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.வேடசந்துார் ஒன்றியம் மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தக்கடையை சேர்ந்தவர் கணேசன்,42. கோவை தனியார் நுாற்பு ஆலையில் தங்கியிருந்து வேலை பார்த்தார். இவரது மனைவி ஈஸ்வரி,35. இவர்களுக்கு ஹரிஹரசுதன்,8, சக்திவேல்,5, என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவரும் வேடசந்துாரில் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த ஞாயிறு அன்று கணேசன் கோவையில் இருந்து ஊருக்கு வந்தார். மகன்களுக்கு பள்ளியில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், பணம் தொடர்பாக தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஈஸ்வரி தனது தந்தை ஊரான பொன்மாந்துரை குளிப்பட்டிக்கு, ரூ.22 ஆயிரம் பணம் கேட்கச் சென்று விட்டார்.
அன்று இரவு கணவன் மனைவி இருவரும் அலைபேசியில் பேசியபடி தகராறில் ஈடுபட்டனர். போதையில் இருந்த கணேசன், மனைவி மீதான ஆத்திரத்தில் வீட்டில் படுத்து துாங்கிய மகன் ஹரிஹரசுதனின் கழுத்தில் கயிறை மாட்டி, விட்டத்தில் தொங்கவிட்டார்.

தினமலர்: காங்கிரஸ் திமுகவிடம் 60 தொகுதிகள் கேட்கிறது.. 25 தான் தரமுடியும் என்கிறது திமுக....

சட்டசபை தேர்தலில், எங்கள் கூட்டணியில் சேர்ந்தால், 25, 'சீட்'கள் மட்டுமே தரப்படும்; ஆட்சியில் பங்கு என்ற பேச்சே கூடாது' என, காங்கிரசுக்கு தி.மு.க., நிபந்தனை விதித்துள்ளது. பீஹார், 'பார்முலா'வை இங்கு பின்பற்ற காங்., நினைத்தால், அது நடக்காது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. 'மெகா' கூட்டணி: கடந்த ஆண்டு, பீஹாரில் சட்டசபை தேர்தல் நடந்த போது, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து, 'மெகா' கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் நிதிஷ் குமார் அமைச்சரவையில், கூட்டணி கட்சிகளும் இடம் பெற்றன. அதாவது, தேர்தலின் போது, காங்கிரசுக்கு, 40 சீட்கள் ஒதுக்கப்பட்டன. அதில், 27 இடங்களில், காங்., வெற்றி பெற்றது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவையில், காங்., சார்பில், நான்கு அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். ராகுல்தம்பி காங்கிரசை ஒரு வழிப்பண்ணாம  விடமாட்டார் .

உதயகுமார்: விஜயகாந்த் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டியவர்..

திண்டுக்கல்: தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவராக இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பணியை சரியாக செய்யாமல் பொறுப்பற்ற முறையில் நடந்து வருகிறார். எனவே அவரும் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு தலைவர் என்று கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளரும் பச்சை தமிழகம் கட்சி தலைவருமான உதயகுமார் கூறியுள்ளார். திண்டுக்கல்லில் இன்று கூடங்குளம் அணுஉலை
எதிர்ப்பாளரும், பச்சை தமிழகம் கட்சி தலைவருமான உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில், தமிழகத்தில் மக்களை பாதிக்கும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மீத்தேன் எரிவாயு திட்டம், கெயில் நிறுவன ஒப்பந்தம், கூடங்குளம் அணுஉலை, மீனவர் பிரச்சனை போன்ற எதிலும் மக்கள் நலன் பற்றி சிந்திப்பதில்லை. 

ஜெயலலிதா சொன்ன 'நம்மை நாமே' குட்டிக்கதை! சின்ன பையனும் அப்பாவின் அரசியலும்

ஜெயலலிதா | கோப்புப் படம்
சின்ன பையன் - அப்பா அரசியல் என்ற மையக்கருவுடன் 'நம்மை நாமே' என்று முடியும் வகையில் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரும் ஜெயலலிதா ஒரு குட்டிக் கதை கூறினார்.
அமைச்சர்கள், அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் உட்பட 14 பேரின் இல்லத் திருமணங்களை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இன்று நடத்தி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா கூறிய குட்டிக் கதை:
"அரசியலில் உள்ளவர்களுக்கு அரசியல் வாழ்க்கையே பாடம் கற்றுக் கொடுக்கும். ஒரு சின்னப் பையன் தன் தந்தையிடம் சென்று "அப்பா எனக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடு" என்றான்.

ஸ்டாலின் இல்லத்தில் டபிள் ஸ்ரீ ரவிசங்கர் சந்திப்பு அற்புதமாம்

மு.க.ஸ்டாலின் இல்லத்தில் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் சந்தித்து உரையாடினார்.  இந்த சந்திப்பும் ரவிசங்கருடனான உரையாடலும் அற்புதமாக இருந்ததாக ஸ்டாலின் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த காபறேட் டபிள் ஸ்ரீ நேற்றுவரை அம்மா அம்மான்னு பஜனை பாடினான்  ...அவிங்க கூடாரம் காலியாக போகுதுன்னு அடுத்த பேருந்தில் துண்டு போடுராய்ன். இதே மாதிரிதான் முன்பு கலைஞரை தலைமேல் வைத்து கூத்தாடிய கேடி ஜாக்கி வாசுதேவ் அப்படியே அம்மா பஜனை பாடினான். இவனும் அப்படியே. இந்த டபிள் ஸ்ரீக்காகவே மீண்டும் ஜெயலலிதா பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட வைத்து விடாதீர்கள்  

சென்னையில் மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 169 போலி வாக்காளர்களை நீக்கியே ஆகவேண்டும்

தமிழகத்தில் போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும் என கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து,திமுக தலவைர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-;தமிழ்நாட்டில் வாக்காளர் ;பட்டியலில் ;போலி வாக்காளர்களை எந்த அளவுக்குச் சேர்த்திருக்கிறார்கள் என்பது  பற்றிக்  கடந்த சில மாதங்களாக  அனைத்து எதிர்க்கட்சிகளும்  ஆதாரப் பூர்வமாகப் புள்ளி விபரங்களோடு   எடுத்துச் சொல்லி வருகிறார்கள்.<திமுக சார்பிலும் இது பற்றிய பல புகார் மனுக்கள் தேர்தல் ஆணையரிடம் தரப்பட்டுள்ளன. கடந்த 24-1-2016 அன்று  நான் விடுத்த விளக்கமான  அறிக்கையிலும்,  எந்த அளவுக்குத்   தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைப் பெருவாரியாகச் சேர்த்து  மிகப் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது என்பதை எடுத்துக் காட்டி,  இந்தியத் தேர்தல் ஆணையம் சட்ட ரீதியான அவசர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டோன்.
தகுதியில்லாத  வாக்காளர்களைப் பெரும

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

சரிதா நாயர் கேரளா பிரமுகர்களுக்கு எதிரான பாலியல் ஆதாரங்களை வழங்கினார்

கேரளாவில் சோலார் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சரிதா
நாயர், அரசியல்வாதிகளுக்கு எதிராக கூறியிருந்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கான கூடுதல் ஆதாரங்களை இன்று வழங்கினார். கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள சோலார் மோசடி தொடர்பாக தொழிலதிபர் சரிதா நாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன், கேரள தலைமை செயலக ஊழியர் ஜோப்பன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த கடந்த 2013–ம் ஆண்டு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் முன்பு சரிதா நாயர் உள்பட பலரும் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகின்றனர். அத்துடன் முதல்–மந்திரி உம்மன்சாண்டியும் கடந்த மாதம் இந்த கமிஷன் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

BAFA சான் பிரான்சிஸ்கோ குறும்பட விழா விருதுகள்.....டாப் கியரில் குறும்பட...

பெரும் படங்களை விட இப்போது குறும்படங்கள் அதிக கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துவிட்டன. முன்பெல்லாம் குறும்படங்களைப் பார்க்க வைப்பதே கடினம். இப்போதே கட்டணச் சீட்டு வாங்கி தியேட்டர் நிரம்பி வழிய காத்திருந்து குறும்படங்கள் பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. Buy Tickets BAFA Tamil short film festival கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த விரிகுடா கலைக் கூடத்தின் முதல் குறும்பட விழாவில் இதனை நேரில் காணும் வாய்ப்புக் கிடைத்தது (Bay Area Fine Arts - BAFA). BAFA Tamil short film festival முதல் முறையாக சற்று அதிக பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட முதல் தமிழ் குறும்பட விழாவும் இதுவே.

கோவை : பாதிரியார் இளம்பெண்ணை பலாத்காரம்....சிறப்பு பிரார்த்தனைக்கு அழைத்து

சிறப்பு பிரார்த்தனை என்று இளம்பெண்ணிடம் பலாத்காரம் : கோவை பாதிரியாரிடம் போலீசார் விசாரணை
கோவையில் வயிற்று வலிக்கு சிறப்பு பிரார்த்தனை செய்வதாக கூறி இளம் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் ஜெப கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாய்க்கன் பாளையம் அடுத்துள்ள சாந்திமேடு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் மனைவி கடந்த ஒரு வருடங்களாக தீராத வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்பெண்ணின் வீட்டின் அருகே உள்ள ராணி என்பவரின் ஆலோசனைப்படி, சங்கனூர் பகுதியில் உள்ள சர்ச் ஆப் பெதஸ்தா என்ற ஜப விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு பாதிரியார் ஐசக் வயிற்று வலியை சரி செய்ய பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும், அதற்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும் என கூறியதன் பேரில், அப்பெண் முதற்கட்டமாக 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளனர்.

தமிழக தேர்தல் மே -14ம் தேதி....18ம் தேதி வாக்கு எண்ணிக்கை....?

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலை மே மாதம் 14ம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நாளில் கேரளா, புதுச்சேரிக்கு தேர்தலை நடத்தவும், மே 18ம் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்தவும் வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 12ம் தேதி அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக சட்டசபையின் 5 ஆண்டு பதவி காலம் வரும் மே மாதம் 22ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து சட்டசபை தேர்தலை நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி, தேர்தல் அதிகாரிகள் அச்சல் குமார் ஜோதி, ஓம்பிரகாஷ்ராவத் ஆகியோர் இன்று மாலையில் புதுச்சேரி சென்று தேர்தல் ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்துகிறார்கள்.

பார்ப்பனிய ஆதிக்க சமூகத்திற்கு டி.என்.ஏ ஆதாரம் – பாகம் 1

genes-study-5பார்ப்பன ஆதிக்க சாதி வெறியின் தோற்றுவாய், அதன் ஆதிக்கம் புறமணத்தடையில் இருந்தே வந்துள்ளது – நீங்கள் மறுத்தாலும் உங்களின் இனக்கீற்று அமிலங்கள் (டி.என்.ஏ) மறுக்காது!
டி.என்.ஏ (DNA) அல்லது இனக்கீற்று அமிலங்கள் மனித இனத்தின் மரபணுத் தகவல்கள் மற்றும் மரபணு மாற்றங்களால் ஏற்படும் நோய்களைப் பற்றி மட்டுமே சொல்லும் என நினைத்தால், இல்லை, நாங்கள் சாதிகள் தோன்றி வளர்ந்து மேலாதிக்கம் பெற்ற காலத்தையும் துல்லியமாகச் சொல்வோம் என நிரூபித்துள்ளன. கல்கத்தாவில் இருந்து செயல்படும் தேசிய உயிர்-மருத்துவ மரபியல் நிறுவனம் (NIBMG) மற்றும் இந்தியப் புள்ளியியல் கழகத்தின் மனித மரபியல் பிரிவும் இணைந்து இந்த ஆராய்ச்சி முடிவை எட்டியுள்ளனர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் PNAS என்ற ஆய்விதழில் வந்துள்ள இக்கட்டுரையின் ஆராய்ச்சியை, NIBMG-இன் ஆய்வுப்பிரிவுத் தலைவர் அனலபா பாசு தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.

வேட்பாளர்களை கலைஞரே தெரிவு செய்ய உள்ளதாக திமுக வட்டாரம்...

தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தானே தேர்வு செய்ய உள்ளதாக, கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலரிடம், கருணாநிதி கூறியிருப்பது, ஸ்டாலின் ஆதரவாளர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.
இதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகம் முழுவதும், 'நமக்கு நாமே' பயணத்தை நடத்தி வரும் ஸ்டாலின், ஆரம்பத்தில், 'தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளர் கருணாநிதியே' என, கூறி வந்தார். ஆனால், இப்போது, 'கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, தலைவர் கருணாநிதி முடிவு செய்வார்' என, கூற ஆரம்பித்துள்ளார். இதனால், கருணாநிதி கோபம் அடைந்துள்ளார். அதற்கேற்றார்போல, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் அவரைச் சந்தித்துப் பேசியபோது, ஸ்டாலினின் மாறுபட்ட பேச்சுக்களை பற்றி எடுத்துக்கூறி,அவரின் கோபத்தை மேலும் துாண்டியுள்ளனர். எனவே, சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களைத்தானே தேர்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளார். பயபுள்ள கார் வேணுமுன்னு கேட்கலாம் வீடு வேணுமுன்னு கேட்கலாம்  இந்த பய புள்ள கட்சி வேணும் நாடு வேணும்னுல கேக்குது...வெளங்குமா? 

ஃபரூக் அப்துல்லா கலைஞர் பேச்சுவார்த்தை .......கோபாலபுரத்தில்..

காங்கிரசுக்காக கலைஞருடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? : ஃபரூக்
அப்துல்லா பேட்டி சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கலைஞரை தேசிய மாநாட்டுக்கட்சி மூத்த தலைவர் ஃபரூக் அப்துல்லா சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் ஃபரூக். அப்போது அவர், ’’காங்கிரஸ் கட்சிக்காக கலைஞருடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு சாதகமான முடிவு கிடைக்கும்’’ என்று தெரிவித்தார். அவர் மேலும், ‘’காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக தொடர்ந்து நீடிக்கிறது. அதில் மாற்றமில்லை’’என்று தெரிவித்தார்.nakkheeran,in

மாற்று திறனாளிகளை அடைத்து வைத்து அடித்த போலீசார்


தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், 40 சதவீதம் ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்கவேண்டும், உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாக அதிகரிக்கவேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை முதலே 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜெயலலிதா செல்லும் காமராஜர் சாலையில், மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபடக்கூடாது என்பதற்காக, அங்கு சாலையில் இரண்டு புறங்களிலும், எழிலக வளாகத்திற்குள்ளும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

எல்கேஜி சேர்க்கை...விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்

சென்னையில் எல்.கே.ஜி. சேர்க்கை விண்ணப்பத்தை வாங்குவதற்காக பள்ளி நுழைவு வாயிலில் பெற்றோர்கள் விடிய விடிய காத்திருந்து விண்ணப்பங்கள் வாங்கிச் சென்றனர். பிரபலமான பள்ளிகளில் சேர்த்தால் தான் குழந்தைகள் படிப்பார்கள் என்ற மனநிலை பெற்றோர் மனதில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக தனியார் பள்ளிகளில் போட்டி அதிகரித்து விண்ணப்ப விற்பனை மூலமே லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் கல்வியாண்டுக்கு முன்பாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ளக்கூடாது. நுழைவு தேர்வு நடத்தக்கூடாது. விண்ணப்பங்கள் வழங்குவதே ஏப்ரல் மாதம் மேற்கொள்ளவேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதை பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள் பொருட்படுத்துவதில்லை. 

கலைஞர்: கண்ணின் வலியா கழகத்தின் வலிவா ?

சென்னை: கண்ணின் வலியா? கழகத்தின் வலிவா? எதில் கவனம் செலுத்துவது? என்ற நோக்கத்தோடு தான் பணியாற்றுவதால், கழகத் தொண்டர்களும் வெற்றிக்காக ஓயாது உழைக்க வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1953 ஆம் ஆண்டு திருப்பத்தூரில் ஏற்பட்ட விபத்தில் கண்ணில் ஏற்பட்ட பாதிப்பையும், "மணிமகுடம்" நாடகத்தின் கடைசி காட்சிகளை எழுதிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று என் இடது கண்ணில் ஏற்பட்ட பாதிப்பையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி.  கலைஞர் அல்லவா சொல்லாமல் சொல்லியே விட்டார்.... கண்ணின் வலி இருக்கட்டும்.அதுவே கழகத்தின் வலியாகமல் பாத்துகோங்க. நாமளும் சொல்லாமல் சொல்லியே விட்டோம்   

திங்கள், 8 பிப்ரவரி, 2016

இந்தியாவை தலைகுனிய வைத்த பங்களூரு இனவாதம்...தான்சானியா மாணவர்கள் மீதான தாக்குதல்


tanzania girl(N)
பெங்களூரு - கர்நாடகா மாநிலம், பெங்களூருரில் தான்சானியா மாணவி தாக்குதல் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பெங்களூருரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற விபத்து ஒன்றில் 35 வயது பெண் ஒருவர் இறந்தார். இதையடுத்து இறந்து போன பெண்ணின் உறவினர்கள், விபத்து ஏற்படுத்தியதாக நினைத்து அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள் அந்த காரில் இருந்த தான்சானிய நாட்டைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவரை கீழே இழுத்து அடித்து உதைத்தனர்.

பிரான்சில் நிர்வாணமான ராணிபேட்டை தோல் தொழிற்சாலையின் வண்டவாளம்

பிரம்மாண்டமான சுற்றுச்சுவர் இடிந்து கழிவுநீர் வெள்ளம் பாய்ந்து, உறங்கிக்
கொண்டிருந்த வெளிமாநில கொத்தடிமைத் தொழி லாளர்கள் பத்து பேர் கொல்லப்பட்டார்கள். இத னால் ராணிப்பேட்டை சிப்காட்டில் இயங்கிய 67 தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. முதலாளிகள், நிர்வாகிகள், அரசு அதி காரிகள் என பத்துபேர் கைது செய்யப்பட்டார்கள்.கடந்த ஆண்டு நடந்த இந்தக் கொடுமையை மக்கள் மறக்கவில்லை. இதன் விளைவு...?""உங்கள் தயாரிப்புகள் எங்களுக்கு வேண் டாம்!'' என்று சொல்லி ராணிப்பேட்டையில் சில தொழிற்சாலைகளுக்கு கொடுத்திருந்த 30 கோடி ரூபாய் கொள்முதல் ஆர்டரை அதிரடியாக கேன்சல் செய்திருக்கிறது, ஃபாரீஸில் உள்ள "கபீர்' என்ற புகழ்பெற்ற காலணி விற்பனை நிறுவனம்.

மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்‘ திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கும் மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்‘ திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்கூட்டர் ‘ஆம்புலன்ஸ்‘ தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்தில் போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் விரிவடைந்து வருகின்றன.

வீட்டை நகர்த்த 25 லட்சம் செலவு செய்த டீ வியாபாரி...நீர்பிடிப்பு பகுதியில்....

நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்த 1,078 சதுரடி வீட்டை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் அதற்கு மனமின்றி ரூ.25 லட்சம் செலவில் 59 அடி தொலைவுக்கு வீட்டை நகர்த்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே இசுக்கழிக்காட்டேரி கிராமத்தில் வசிப்பவர் டீ வியாபாரி வெற்றிச்செல்வன் (57). இவருக்கு, அதே கிராமத்தில் உள்ள வெள்ளங்குட்டை குளம் அருகே விவசாய நிலம் உள்ளது. குளக்கரை அருகே நீண்ட காலமாக வசித்த வந்த இடத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு புதிய வீடு கட்டி குடியேறினார்.

எஸ் வி எஸ் கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்யவில்லை...பிரேத பரிசோதனையில் தெரியவந்தது

கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா
மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த 3 மாணவிகள் கடந்த மாதம் 23-ம் தேதி கல்லூரி அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டனர். கல்லூரி நிர்வாகத்தின் சித்ரவதை காரணமாக அவர்கள் மூவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அவர்களின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மாணவிகள் உயிரிழப்பு தொடர்பான விசாரணை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது. கல்லூரி தாளாளர் வாசுகி, நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மாணவிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

தமிழக - இலங்கை மீனவர்கள் விரைவில் மீண்டும் பேச்சு?

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் இலங்கை பயணத்தைத் தொடர்ந்து, தமிழகம் - இலங்கை மீனவர் பிதிநிதிகளின் பேச்சு, விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்வு காணும் விதமாக, அதிகாரிகள் முன்னிலையில், இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளும் சந்தித்த, மூன்று கட்ட பேச்சு நடந்தன.'பாக்., நீரிணைப்பகுதியில், ஆண்டுக்கு, 90 நாட்கள் மீன் பிடிக்க அனுமதி தர வேண்டும்' என்ற கோரிக்கையை, இலங்கை மீனவர்கள் ஏற்காததால், பேச்சில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில்,வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கை சென்று, அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் தமிழ் தலைவர்களை சந்தித்து பேசினார்.

பேஸ்புக் நிறுவனத்திற்கு பின்னடைவு: இணையதள சமநிலைக்கு டிராய் ஆதரவு

புதுடில்லி: இலவச இணையதள சேவை என்ற பேஸ்புக் நிறுவனத்தின் திட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், இந்தியாவில் இணையதள சமநிலைக்கு டிராய் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இணையதள சேவையில் உள்ள மாறுபட்ட கட்டணங்களுக்கு தடை விதித்துள்ளது. இதன்படி அனைத்து இணையதள சேவைக்கும் சமமான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இதனை மீறும்பட்சத்தில் ஒரு நாளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என டிராய் எச்சரித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம், இணையதள சேவையில் வெவ்வெறு விலைகள் என்ற நோக்கத்திற்கு அடித்தளமிடும் திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளம் உள்ளிட்ட அவசர காலகட்டங்களில், இணையதள சேவைக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் டிராய் உத்தரவிட்டுள்ளது.

விஜயகாந்த் கட்சியில் விருப்புமனு வாங்க ஆளில்லை....கூட்டம் கலைஞ்சு போச்சு

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம் என்று அறிவித்து 4 நாட்கள் கூட முடியவில்லை அதற்குள் கட்சி அலுவலகத்தில் காற்றாடுகிறது. யாருடன் கூட்டணி என்று இன்னமும் கட்சித்தலைவர் விஜயகாந்த் முடிவு செய்யவில்லை என்பதால் தேர்தலில் போட்டியிடவும், விருப்பமனுக்களைப் பெறவும் தேமுதிகவினர் ஆர்வம் காட்டவில்லை என்றே கூறப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவை தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை பெறும் நிகழ்வு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கடந்த 5ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை தொடங்கியது. அப்போது ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை அளித்தனர். சுதீசிட்டையும் பிரேமாவிடமும் காசையும் கொடுத்து விட்டு குடிகாரன்ட்ட அடியும் வாங்கணுமா ?

தமிழிசையின் வீட்டு திருமணம் கலைஞர், இளங்கோவன்,ஜெயலலிதா......சகலருக்கும் அழைப்பு

சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று திடீரென காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை சந்தித்தால் பரபரப்பு ஏற்பட்டது. மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்கத்தான் சத்தியமூர்த்திபவனுக்கு தாம் வந்ததாக தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்ததால் பரபரப்பு ஓய்ந்தது. மேலும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க தமிழிசை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றாக கூடுவது என்பது எப்போதாவதுதான் அரிதாக நடைபெறும்.

ஸ்டாலின் உபயத்தில் திமுக மீது சவாரிசெய்ய பாஜக கடும் முயற்சி.....

சட்டசபை தேர்தல் கூட்டணி விவகாரத்தில், கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே மல்லுக்கட்டு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கி உள்ளது. அதனால், கூட்டணி அமைப்பதற்காக, தமிழகத்தின் பிரதான கட்சிகளான, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில் ரகசிய பேச்சுகள் துவங்கி உள்ளன. அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை, அக்கட்சியின் தலைமை என்ன நினைக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்வோர் மட்டுமே கூட்டணி பேச்சில் பங்கேற்க முடியும்.ஆனால், தி.மு.க.,வில் அப்படியில்லை. கூட்டணி சேரும் கட்சிகள், தொகுதிகளை நிறைய கேட்டு, கடைசி வரை பலம் பார்ப்பது வாடிக்கையானது. இந்நிலையில், 'தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., கூட்டணி அமையப் போகிறது; அப்படி அமையும் கூட்டணி வெற்றி பெற்றால், முதல்வராக ஸ்டாலின் இருப்பார்' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியிருப்பது, தி.மு.க.,வில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 'நமக்கு நாமே' பயண திட்ட நிகழ்ச்சிகள் உட்பட, அனைத்து நிகழ்ச்சிகளிலும், 'தி.மு.க., தலைவர் கருணாநிதியே அடுத்த முதல்வர்' என, சொல்லி வந்த ஸ்டாலின், சாமியின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவிக்காததுடன் அமைதியாகவும் உள்ளார்.

சொந்த தொகுதிகளில் போட்டியிட அமைச்சர்கள் தயக்கம்

தொகுதி மக்களை எட்டிப் பார்க்காதது உட்பட, பல பிரச்னைகள் சூழ்ந்து நிற்பதால், தமிழக அமைச்சர்கள் பலர், இம்முறை சொந்தத் தொகுதியில் போட்டியிடும் விஷயத்தில் கலக்கம் அடைந்துள்ளனர். மக்கள் கவிழ்த்து விடலாம் என்ற அச்சத்தில், தொகுதி மாறவும் விரும்புகின்றனர். இருப்பினும், அதை எப்படி கட்சித் தலைமையிடம் சொல்வது என, புரியாமல் தவிக்கின்றனர்.
தமிழக அமைச்சரவையில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 28 அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும், வரும் தேர்தலில் எப்படியாவது, 'சீட்' பெற்று விட வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளனர்.  எந்த அமைச்சருங்க தொகுதிக்கு என்ன செஞ்சாங்கன்னு அவிங்களுக்கும் தெரியாது....தலைமைக்கும் தெரியாது....பொத்தாம் பொதுவா கிரைண்டர் ,மிக்க்ஷி கொடுத்தோம்ன்னு சொல்லுவாங்க...ஆடு ,மாடு கொடுத்தோம்ன்னு சொல்லுவாங்க.....

வேலூர்.. விண்கல் தாக்கி ஒருவர பலி


தமிழகத்தில் விண்கல் தாக்கி பேருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதை
தமிழக அரசு உறுதி செய்துள்ளது.
வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி வட்டத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் வளாகத்தில் அது விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில், அக்கல்லூரியின் பேருந்து ஓட்டுநரான காமராஜ் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அந்த ஓட்டுநரின் குடும்பத்துக்கு தமிழக அரசு இழப்பீடு அளிக்கும் என முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஞாயிற்றுகிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பலியான காமராஜின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், அவரது குடும்பத்துக்கு தமது அனுதாபத்தையும் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஜெயலலிதா...கலைஞர் கைது ... குருவாயூருக்கு யானை கொடுத்து...ஒரு ப்ளாஷ் பேக்

ஜுன் 30, 2001. இந்த நாளை தமிழகம் மறந்திருக்க முடியாது. திமுக தலைவர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நாள் அது. 
தி.மு.க.ஆட்சியில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் இரவோடு இரவாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. திமுக தலைவர் விசாரணைக்கு அப்பாற்பட்டவரோ, விசாரிக்கப்படக் கூடாதவரோ கிடையாது. ஆனால், 1996-ல் ஜெயலலிதாவை கைது செய்வதற்கு முன், திமுக அரசு,எப்படி முழுமையான பூர்வாங்க விசாரணையை முறையாக நடத்தி, அதன் பிறகு, ஜெயலலிதாவை கைது செய்ததோ, அப்படியல்லவா அதைச்செய்திருக்க வேண்டும்? ஆனால், அதைவிட்டுவிட்டு இரவோடு இரவாகப் போய், வலுக்கட்டாயமாக கருணாநிதியைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? பழிவாங்கும் உணர்ச்சிதான். அதைத்தவிர ஜெயலலிதாவிற்கு அதில் வேறு காரணம் இருக்கவே முடியாது.