புதன், 1 செப்டம்பர், 2010

வைகோ: கட்சி நடத்தும் போது சில வேளைகளில் நீக்கு போக்காக நடந்துகொள்ள வேண்டும்

சில நேரங்களில் சமரசமும் ஒரு ஆயுதம்: வைகோ பேச்சு

கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கூட்டம் கோவை சித்தாப்புதூரில் உள்ள மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர்,   ‘’மதிமுக மாநாடு அண்ணா பிறந்த ஊரான காஞ்சீபுரத்தில் வருகிற 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு இளைஞர்களை அழைத்துவரவேண்டும். நமக்கு எதிர்காலம் உள்ளது. வெற்றி வாய்ப்பு வரும் போது பல லட்சம் பேர் நமக்கு வருவார்கள்’’என்று பேசினார்.

அவர் மேலும்,  ‘’மதிமுக பல்வேறு இன்னல்களை கடந்து வந்துள்ளது. கட்சி நடத்தும் போது சில வேளைகளில் நீக்கு போக்காக நடந்துகொள்ள வேண்டும்.

சில நேரங்களில் சமரசமும் ஒரு ஆயுதம்.
ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியோடு இருப்பதோடு எந்த காரணத்தை கொண்டும் பின் வாங்ககூடாது. கோவை தான் தமிழக அரசியலில் இருவிதமான திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
ஈழப்பிரச்சனையை மறைக்கத்தான் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தினார்கள்.

சமூக நீதியை கொண்டு வந்தது. திராவிட இயக்கம், மக்களிடம் இனப்பற்று, மொழிப்பற்று மற்றும் சிந்திக்கும் ஆற்றலை கொண்டு வந்ததும் திராவிட இயக்கம். அந்த இயக்கத்துக்கு இப்போது சோதனைக்காலம்.

மிக குறைந்த சதவீத ஓட்டுகளில் மதிமுக அங்கீகாரம் ரத்தாகிவிட்டது. ஆனாலும் நாம் அங்கீகாரத்தை மீண்டும் பெறுவோம். ஒரு கட்சி தனது அங்கீகாரத்தை இழந்ததில் இருந்து 6 ஆண்டுகள் வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சின்னத்தை பயன்படுத்தி கொள்ளலாம். எனவே நமது சின்னமான பம்பரத்தை தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு நாம் பயன்படுத்தி கொள்ள முடியும்.
 
கோவை மற்றும் திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரண்ட மக்கள் கூட்டத்தை பார்த்து தி.மு.க. அதிர்ச்சி அடைந்து விட்டது.

இந்த கூட்டம் அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல. உணர்வுப்பூர்வமாக வந்த கூட்டம். அதிமுகவுடன் கூட்டணி வலுவாகவும், உறுதியாகவும் உள்ளது’’என்று பேசினார்.
He is preparing for another double crossing 

கருத்துகள் இல்லை: