சனி, 11 மே, 2013

ராமதாசுக்கு ஞானியின் கடிதம்: மிரட்டிப் பணம் வசூலிக்கும் கட்டப் பஞ்சாயத்தை நானும் ஆதரிக்கவில்லை.

அன்புள்ள டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு
வணக்கம்.
மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், என் மீது நீங்கள் வைத்திருந்த மதிப்பினால் என் வீடு தேடி வந்து நீங்கள் என்னுடன் ஒரே கட்டிலில் அமர்ந்து ஒரு மூத்த உறவினர் போல எந்த தயக்கமும் தடைகளும் இன்றி மூன்று மணி நேரம் உரையாடியது என் மனதில் இன்னமும் பதிந்திருக்கிறது.
விடை பெற்றுப் புறப்படும்போது காரில் ஏறியதுமே நீங்கள் தன்னிச்சையாக பாதுகாப்பு பெல்ட்டை அணிந்ததையும், உங்கள் ஓட்டுநர் முதல் உடன் வந்திருந்த இதர நண்பர்கள் வரை அனைவரும் யாரும் சொல்லாமலே அப்படிச் செய்ததையும் கண்டு நான் வியந்து பாராட்டியது உங்களுக்கும் நினைவில் இருக்கலாம்.

லட்சுமி மேனன் :அஜீத்துடன் நடிக்க சம்பளம்கூட தேவையில்லை

சுந்தரபாண்டியன், கும்கி திரைப்படங்களில் தனது பாராட்டுதலையும், இளவட்டங்களின் மொபைலிலும் இடம்பிடித்துள்ளார் நடிகை லட்சுமி மேனன். 
அசாதரமாண நடிப்பின் மூலம் நடுத்தர வயது ரசிகர்களின்
லட்சுமிமேனனுக்கு இன்று பல ரசிகர்கள் இருந்தாலும் 17 வயதே ஆகும் லக்‌ஷ்மிமேனன் அஜித் மற்றும் சூர்யாவின் தீவிர ரசிகையாம். 
இதுகுறித்துபேசிய போது லக்‌ஷ்மி மேனன் “ ஒருவேளை எனக்கு அஜித் சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் அந்த திரைப்படத்தில் நடிப்பேன்” என்று கூறினார்

கல்வீசுக்களில் இருந்து தப்ப இனி ஓட்டுனர்கள் ஹெல்மெட் அணியவேண்டும்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஅரியலூர்: பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய கோரியும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடையடைப்பு, சாலைமறியல், வாகனங்களுக்கு தீ வைப்பு, வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதனால் அரியலூர், ஜெயங்கொண்டம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. மாலை 6 மணிக்கு மேல் கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

மகனை மீட்டுதருமறு ISI இடம் கெஞ்சும் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஜிலானி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ,கடத்திச் செல்லப்பட்ட தனது மகனை கண்டுபிடித்து தருமாறு ஐ.எஸ்.ஐ.யின் உதவியை நாடியுள்ளார் முன்னாள்
பிரதமர் யுசுப்ராஸா கிலானி. />பாகிஸ்தானில் இன்று பலத்த பாதுகாப்புடன் பார்லிமென்ட் தேர்தல் நடக்கிறது. 342 தொகுதிகளுக்கான பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளது. 8.6 கோடி மக்கள் ஓட்டளிக்க உள்ளனர். பார்லிமென்ட் தேர்தலுடன், நான்கு மாகாண தேர்தல்களும் நடைபெறுகின்றன.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி, அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவல் புட்டோ தலைவராக உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி, மாஜி கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின், தேரிக்-இ-இன்சாப் கட்சி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன.இந்நிலையில் கடந்த 5-ம் தேதி (சனிக்கிழமை) , பாகிஸ்தானில் முல்தான் நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதமர் யுசுப்ராஸா கிலானியின் 27 வயது மகன் அலி ஹைதர் (27), 8 பேர் கொண்ட மர்ம கும்பலால் துப்பாக்கி முனையில் கடத்திச்செல்லப்பட்டார். இதுவரை அவர் குறித்த தகவல் இல்லை.

வெள்ளி, 10 மே, 2013

தறுதலைப் பிள்ளையைப்போல சி.பி.ஐ. ? ஆம், அப்படித்தான் செய்தேன்; அதற்கென்ன, இப்போது?

சி.பி.ஐ. நாய் வால்இந்தியாவின் மிகபெரும் குற்றவாளிகள் போன்று கனிமொழியையும் ராசாவையும் ஆயிரமாண்டு பகை முடிக்க பழிவாங்கிய சக்திகள் இன்று நிர்வாணமாக நிற்கின்றன 
 காங்கிரசின் கைப்பாவையாகி இன்று வெட்கமில்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் பெரியமனிதர்கள் 
2 ஜி அலைக்கற்றை மற்றும் நிலக்கரி ஒதுக்கீடு வழக்குகளில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீளமுடியாது கடும் அரசியல் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குதூகலிக்கின்றன. பெரும்பாலான செய்தி ஊடங்களும் அவ்வாறுதான் சித்தரிக்கின்றன. மீளமுடியாத கடும் அரசியல் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பது ஆளும் கூட்டணி மட்டுமல்ல; நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார அமைப்பும்தான்.
திருத்த முடியாத சி.பி.ஐ. (அரசு அமைப்பு)
இவ்விரு வழக்குகளிலும் பொதிந்துள்ள அடிப்படை உண்மைகள் மூடிமறைக்கப்பட்டு, பரபரப்பூட்டும் அரசியல் மற்றும் சட்டநுட்ப விவரங்கள் முன்னிறுத்தப்படுகின்றன. நிலக்கரி ஒதுக்கீடுகளில் நடந்த ஊழல் முறைகேடுகளால் மூன்றரை இலட்சம் கோடி ரூபாய்கள் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுவிட்டதாக இந்தியப் பொதுத் தணிக்கையாளர் கூறுகிறார்.

கர்நாடகா சித்தாரமையா முதல் மந்திரியாக தெரிவு

கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டசபைக்கு முதல் மந்திரியாக தேர்வு
செய்யப்பட்ட சித்தராமைய்யாவுக்கு, தி.மு.க. தலைவர் கலைஞர் அனுப்பிய வாழ்த்து செய்தியில்,  ‘’கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டசபைக்கு முதல் மந்திரியாக தாங்கள் தேர்வு செய்யப்பட்டதால் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தாங்கள் தேர்வு பெற்றதற்கு என்னுடைய இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய நீண்ட கால அனுபவம் கர்நாடக மாநில பிரச்சினைகளை தீர்க்கவும், ஏழைகள் மற்றும் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டவர்களை பாதுகாக்கவும் உதவும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அத்துடன் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களும் உங்கள் கைகளில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும், இனிமையான பதவியும் கிடைக்க வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று கூறி உள்ளார்

ராமதாஸ் நாளை விடுதலலையாகிறார் ! பேரம் படிந்தது?

5 வழக்குகளிலும் ஜாமீன்: நாளை விடுதலை ஆகிறார் ராமதாஸ்?மரக்காணம் கலவரம் தொடர்பாக விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு, ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட வழக்கு உள்பட 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஏற்கனவே நான்கு வழக்குகளில் ஜாமீன் கிடைத்துவிட்ட நிலையில் இன்று மற்றொரு வழக்கிலும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.இதற்கான கோர்ட்டு உத்தரவு இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் திருச்சி மத்திய சிறையில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது மகன் அன்புமணி நேற்று மாலை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் நாளை விடுதலை ஆவார் என்று தெரிகிறது.

மத்திய railway அமைச்சர் பவன்குமார் பன்சால் ராஜினாமா செய்தார்

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து பவன்குமார் பன்சால் ராஜினாமா செய்தார். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்திப்பையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார் பன்சால்.
பன்சால் உறவினர், ரயில்வேயில் பணிபுரியும் ஒருவரிடம் உயர் பதவி வாங்கித் தருவதாக கூறி பேரம் பேசி, அதில் முன்பணம் வாங்கியதில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பன்சால் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் பதவி விலக வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கினர்.

சொல்வதெல்லாம் பொய் ! செய்வதெல்லாம் ஃபிராடு !!

சொல்வதெல்லாம் உண்மைலஷ்மி ராமகிருஷ்ணன், “இந்தப் பொண்ணு சொல்றது பொய்யா இருந்தா இந்நேரத்துக்கு எழுந்து அடிச்சிருப்பீங்க” என அந்தப் பெண்ணின் அம்மாவை உசுப்பேற்றிவிடுகிறார். சற்றுநேரத்தில் அந்த அம்மா, செருப்பை கழற்றி மகளை அடிக்கிறார். சொல்வதெல்லாம் உண்மை’ -  இந்த பெயரில் ஜீ (Zee) தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல வீடுகளில் இரவு நேரங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சியின் உள்ளடக்கம் ஒன்றும் புதியது அல்ல. ஏற்கெனவே விஜய் டி.வி.யில் ‘கதையல்ல நிஜம்’ என்ற பெயரில் நடிகை லஷ்மி தொகுத்து வழங்கிய அதே அக்கப்போர்தான். அன்றாட குடும்பப் பிரச்சினைகளில், உறவுச் சிக்கல்களில் சிக்கி, மீள வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் மக்களை ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்து ஒளி வெள்ளத்தில் கேமராவின் முன்பு நியாயம் கேட்டு குமுற வைக்கும் அதே பழைய மசாலா. கண்ணீர், கோபம், ஆவேசம், அடிதடி எல்லாம் இதிலும் உண்டு. விஜய் தொலைக்காட்சியில் லஷ்மி செய்த வேலையை ஜீ (Zee) தமிழில் இப்போது நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் செய்து வருகிறார். (முன்பு நிர்மலா பெரியசாமி செய்தார்). தாங்க முடியாத அருவருப்பும், ஏழை மக்களின் அந்தரங்க வாழ்கையை அம்பலமேற்றி காசு பண்ணும் வக்கிரமும் நிறைந்த இந்த நிகழ்ச்சி சமூக உளவியலில் பாரதூரமான விளைவுகளை உண்டு பண்ணக்கூடியது.

காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது


 பாமக எம்எல்ஏ ஜெ. குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை ஏற்று, அம்மாவட்ட காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வன்முறையை தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட ஜெ.குரு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாமக தலைவர்கள் ஜாமீனில் விடுதலையான நிலையில் ஜெ.குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. இதனால் அவர் ஜாமீனில் வெளியே வருவது கடினம்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் ஜெ.குரு. வன்னியவர் சங்க தலைவராகவும் உள்ளார்.

பேருந்து மீது கல்வீச்சு ஒருவர் மரணம் !

ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வன் (42). நாட்டு
மருத்துவரான இவர் நோயாளி ஒருவருக்கு மருந்து கொடுப்பதற்காக கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு சென்றுவிட்டு, நேற்று இரவு சேலம் திரும்பியுள்ளார். சிதம்பரத்தில் இருந்து சேலம் வரும் அரசு பேருந்தில் அவர் வந்துகொண்டிருந்தபோது, சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி என்ற இடத்தில் பேருந்து வந்தபோது, அந்த பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் பேருந்தின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன. பேருந்துக்குள் பயணம் செய்து கொண்டிருந்த செல்வனின் தலையிலும் கல் அடி விழுந்துள்ளது.

நல்ல கதைபோதும்! அஜீத்தும் விஜயும் தேவை இல்லை! நடிகை ரம்யா நம்பீசன்

தமிழ்த் திரையுலகத்தில் இரண்டு படங்களுக்கு மேல் வெற்றிபெற்றுவிட்டால் போதும், பெரும்பாலும் நடிகைகள் சொல்லும் வார்த்தை அஜித், விஜய் கூட நடிக்கனும் என்பது தான். தமிழ்த் திரையுலகின் கிளாஸ், மற்றும் மாஸ் ஸ்டார்களான அவர்கள் இருவருடன் நடிக்கவேண்டும் என்ற கனவு எல்லா நடிகைகளுக்கும் இருப்பதில்லை.
அத லிஸ்டில் சேர்ந்திருக்கிறார் ’பீட்சா’ பட நாயகி நடிகை ரம்யா நம்பீசன். சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் ரம்யா நம்பீசன் “ எல்லாரும் இதே கேள்வியைத் தான் கேப்பீங்களா. எனக்கு அவங்களோட நடிக்க ஆசை இருக்கு. ஆனா கதை ரொம்ப ரொம்ப முக்கியம். நல்ல கதையா இருந்துட்டா அஜித், விஜய் தான் வேணும்னு இல்ல.

Total 730 பேருந்துகள் உடைப்பு 17 பேருந்துகள் எரிப்பு ! பா மா காவுக்கு அங்கீகாரம் ரத்து ?


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் ஒரு வாரத்தில் 730 அரசுப் பேருந்துகள் உடைக்கப்பட்டுள்ளன. 17 பஸ்கள் எரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 6,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பா.ம.க. சார்பில் விழுப்புரத்தில் கடந்த 30-ஆம் தேதி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்தக் கட்சி நிறுவனர் ராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாய் சேய் நலத்தில் அதிர்ச்சி புள்ளி விபரம் ! இந்தியா, 142வது இடத்தில்

பீஜிங்: உலகிலேயே, மிகச்சிறந்த, தாய்-சேய் நலனில், பின்லாந்து நாடு
ஐந்து விதமான பட்டியல்
கர்ப்ப காலத்தில், பெண்களின் உடல்நிலை, குழந்தை பிறப்பு, கல்வி, வேலை மற்றும் வருவாய், அரசியல் சூழ்நிலை ஆகிய ஐந்து அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில், காங்கோவில், கர்ப்ப காலத்தில், 30 பேரில் ஒருவர் வீதம் சராசரியாக இறந்து விடுகிறார்கள். அதுவே, பின்லாந்தில், 12,200 பேரில் ஒருவர் மட்டுமே இறக்கிறார்.கல்வியைப் பொறுத்தவரை, காங்கோவில், 8 ஆண்டுகள் மட்டுமே பள்ளிகளுக்கு பெண்கள் அனுப்பப்படுகின்றனர். பின்லாந்தில், 17 ஆண்டுகால கல்வியை பெண்கள் பெறுகின்றனர். பின்லாந்து பார்லிமென்டில், பெண்களின் பங்கு, 43 சதவீதமாக உள்ளது. காங்கோவில், 8 சதவீதமாக இது, இருக்கிறது.
இந்தியா

ஜவுளிக்கடையில் வேலைபார்த்தே மாநிலத்தில் முதலிடம் பிடித்த தனலட்சுமி

ஏழ்மை காரணமாக கோடை விடுமுறையில், ஜவுளிக்கடை ஒன்றில்
வேலைபார்க்கும், விலங்கியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற, சிவகாசி இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவி தனலெட்சுமி

தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் பரீட்சைகளில் சாதனை ! எப்படி சாத்தியம்?

நன்றாக படிக்கக் கூடிய மாணவ, மாணவியருக்கு, "சீட்' கொடுத்து, அவர்களை,
தூங்கும் நேரம் தவிர்த்து, இதர நேரம் முழுவதும், படிக்க வைப்பதும், தேர்வு எழுத வைப்பதும் போன்ற செயல்களில், தொடர்ந்து ஈடுபட வைப்பது தான், நாமக்கல் மாவட்ட பள்ளிகளின் சாதனைக்கு காரணம் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து, கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் படித்து, மாநில அளவில், "ரேங்க்' எடுத்த மாணவ, மாணவியரின், சொந்த மாவட்டத்தை விசாரித்தால், பெரும்பாலும், அவர்கள், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதில்லை. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களாகத் தான் இருப்பர்.
நன்றாக படிக்கக் கூடிய புத்திசாலி மாணவ, மாணவியருக்குத் தான், அங்கே, "சீட்' கொடுக்கின்றனர். திறமையான மாணவர்களை, மேலும் "பட்டை' தீட்டுவது, பெரிய சாதனை கிடையாது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், சாதாரண மாணவ, மாணவியர் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். "சராசரி' மாணவர்களுக்கு, நாமக்கல் பள்ளிகளில் "சீட்' கிடையாது.
நன்றாக படிக்கும் மாணவர்களை சேர்த்துக் கொண்டு, முக்கிய பண்டிகை நாட்கள் தவிர, மற்ற அனைத்து நாட்களும், பள்ளி வேலை நாட்களாக வைத்துக் கொள்கின்றனர். மாணவர்கள் தூங்கும் நேரம் தவிர, மற்ற அனைத்து நேரங்களிலும், படிக்க வைப்பது, படித்ததை, தேர்வெழுத வைப்பது என்ற வேலையை, பிரதானமாக செய்கின்றனர். இதையே, திரும்ப திரும்ப செய்கின்றனர்.

வியாழன், 9 மே, 2013

வன்னியர்: ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?

social
‘வன்னியர்கள் ஆண்ட பரம்பரை.. வீர பரம்ரை’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் முன் வந்து மீசை முறுக்குகிறார்கள் வன்னிய அறிவாளிகள்.
‘வன்னியர்கள் ஆண்ட பரம்பரை இல்லை’ என்றோ, அவர்களை இழிவானவர்கள் என்றோ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரும் மறுப்பதில்லை. வன்னியர்களிடம் மரியாதையாகத்தான் நடந்து கொள்கிறார்கள். வன்னியர்களுடன் திருமணம் செய்து கொள்வதை தாழ்த்தப்பட்ட மக்கள் இழிவாக கருதுவதுமில்லை.
ஆனால்; நாயுடு, முதலியார், செட்டியார், பிள்ளை, உடையார் போன்ற பல பல ஆதிக்க ஜாதிகள், வன்னிய உழைக்கும் மக்களை ‘பள்ளிப் பய..’ என்று இழிவாகவும், தாழ்த்தப்பட்ட மக்களோடு தொடர்புபடுத்தி ‘இவன் தொடற பறையன்’ என்றும் பேசிக் கொள்கிறார்கள். இன்றும் கிராமபுறங்களில் தலித்தல்லாத வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகளிடம் இந்த வழக்கு இருக்கிறது.
சக்கிலியர், பறையர், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஆண், வன்னியப் பெண்ணை திருமணம் முடித்தால் எகிறி குதிக்கிற வன்னியர்களைப்போலவே,
வன்னியர் ஆண்; பார்ப்பனர், நாயுடு, முதலி. பிள்ளை வீட்டு பெண்ணை திருமணம் முடித்தால், அதை இழிவாகவும் தன் ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாகவும் கருதுகிறார்கள் தலித்தல்லாத கூட்டணியில் உள்ள வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகள்.
தன் வீட்டுப் பெண்ணை தலித் இளைஞன் திருமணம் முடித்தால், தன் ‘ஆண்ட பரம்பரை ஜாதி’க்கு ஏற்பட்ட இழிவாக கருதி, தலித் மக்களுக்கு எதிராக கொதித்தெழுகிற வன்னிய ஜாதி உணர்வாளர்கள்,
வன்னிய ஜாதி பெண்ணை பார்ப்பனரோ, செட்டியோ, பிள்ளையோ, முதலியோ காதல் திருமணம் முடித்தால், அதை காதல் நாடகம் என்றோ அல்லது தன் ஆண்ட பரம்பரை ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி, அந்த ஆதிக்க ஜாதிகளுக்கு எதிராக கிளர்தெழாமல் சுமூகமாக இருக்க வைப்பது எது?
இப்படியாக தன்னை இழிவாக கருதுகிற ஆதிக்க ஜாதிகளிடம் அடக்கி வாசிப்பதும், தன்னை உயர்வாக மதிக்கிற தாழ்த்தப்பட்ட மக்களிடம் மீசை முறுக்குவதுதான் வீரமா?
வன்னியர் ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?
குறிப்பு: இந்தக் கேள்வி கள்ளர் ஜாதி உணர்வாளர்களுக்கும் பொருந்தும்.
தலித் உட்ஜாதிகளுக்குள் பறையரையும், சக்கலியரையும் தங்களை விட கீழானவராக கருதுகிற பள்ளர் ஜாதி உணர்வாளருக்கும், சக்கலியரை தன்னைவிட கீழானவராக கருதுவகிற பறையர் ஜாதி உணர்வாளருக்கும் பொருந்தும்.  mathimaran.wordpress.com

இந்தியச் சிறையில் தாக்கப்பட்ட பாகிஸ்தானிய கைதி மரணம்

இந்தியச் சிறையில் சக கைதியால் கடந்த வாரம் தாக்கப்பட்ட பாகிஸ்தானியை கைதி மரணமானார்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள பாகிஸ்தான் அரசாங்கம், அவரது சடலத்தை நாட்டுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கேட்டிருக்கிறது. பாகிஸ்தானியை சிறையில் இருந்த பிரபலமான இந்தியக் கைதியான சரப்ஜித் சிங், சக கைதியால் தாக்கப்பட்டு இறந்ததை அடுத்து இந்தப் பாகிஸ்தானிய கைதி மீதான தாக்குதலும் நடந்தது. பாகிஸ்தானிய தீவிரவாதியாக குற்றங்காணப்பட்டு சனுல்லாஹ் ரஞ்ஜாய் என்னும் இந்தக் கைதி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்

நல்ல மதிப்பெண் வாங்கியும் மருத்துவம் படிக்க முடியாதேன்னு தற்கொலை செய்துகொண்ட மாணவி

பிளஸ்டூ தேர்வில்நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச் சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் அந்த மாணவி. நெல்லை மேலகரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். பேருந்து நடத்துனர். இவரது மனைவி பிரேம பாக்கியம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சிந்துஜா. 17 வயதான இவர் இலஞ்சியில் உள்ள பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ்டூ படித்திருந்தார். இந்த பள்ளிதான் நெல்லை மாவட்டத்திலேயே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. நன்கு படிக்கக்கூடியவர் சிந்துஜா. தேர்வில் அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்திருந்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். இந்த நிலையில் இன்று வந்த தேர்வு முடிவைப் பார்த்த அவர் 1063 மதிப்பெண்கள் வாங்கியிருந்தார். இதனால் பெரும் ஏமாற்றமடைந்தார் சிந்துஜா. டாக்டர் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்று பெரும் வருத்தமடைந்தார். இந்த நிலையில் திடீரென வீட்டில் துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டு பரிதாபமாக உயிரை மாய்த்துக் கொண்டார் சிந்துஜா. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றாலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் மாணவி தற்கொலை இதேபோல் கோவை மாவட்டத்தில், எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்ற காரணத்தால் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோவை மாவட்டம் நரசிம்மன் நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த மாணவி 990 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவியின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
tamil.oneindia.in

2 பாமாகவினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது ! வைகொநெடுமாசீமாபாண்டி ஜாக்கிரதை ! கலைஞர் மாதிரி தயவு காண்பிக்கமாட்டார்

தர்மபுரி மாவட்டத்தில், தரை பாலத்தை, வெடிகுண்டு வைத்து சேதப்படுத்திய
வழக்கில், பா.ம.க.,வைச் சேர்ந்த இரண்டு பேரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில்
போலீசார் கைது செய்துள்ளனர். இது, பா.ம.க.,வினருக்கு பீதியை ஏற்படுத்தி
உள்ளது.மரக்காணம் கலவரத்துக்கு நீதி விசாரணை கோரி, விழுப்புரத்தில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் மணி
உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வன்னியர் சங்க தலைவர்
 காடுவெட்டி குரு, அன்புமணி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, வடமாவட்டங்களில், பஸ்கள் மீது கல்வீச்சு, தீ வைப்பு, பெட்ரோல்
குண்டுகள் வீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கண்டெய்னர்
லாரி மீது, பெட்ரோல் குண்டு வீசியதில், அரியானாவைச் சேர்ந்த டிரைவர்
செகர்கான் என்பவர் பலியானார்.
வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், டாஸ்மாக் கடைகள் பெட்ரோல்
குண்டு வீசி எரிக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த
கர்த்தாங்குளம் அருகே கடந்த, 3ம் தேதி, தரை பாலம், வெடிகுண்டு வைத்து
தகர்த்தப்பட்டது. இதில், அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய் சேதம்
அடைந்தது.

பாகிஸ்தானியரிடம் 1 கோடி ரூபா இந்திய போலி கரன்சி! தோஹாவில் இருந்து காத்மாண்டு வந்த பயணி

ஒரு கோடி ரூபாய் போலி இந்திய ரூபாய் நோட்டுடன் காத்மாண்டு விமான
நிலையத்தில் வந்திறங்கிய பாகிஸ்தானிய பயணி ஒருவரை நேபாள போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் சட்டவிரோத ‘பணச் சுழர்ச்சி’ (illegal money laundering) செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பணம் இது என ஊகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யால் இப்படியான மறைமுக காரியம் ஒன்று செய்யப்படுவதாக முன்னரே தெரியவந்திருந்தது. இந்திய பொருளாதாரத்தை வீழ்த்துவதற்காக செய்யப்படும் நடவடிக்கை இது எனவும் அறியப்படிருந்தது. இதற்கு முன் கடந்த மாதம் 15-ம் தேதி, இதே நேபாளம் காத்மாண்டு விமான நிலையத்தில் பாகிஸ்தானை சேர்ந்த தாய் மற்றும் மகனிடமிருந்து, 47 லட்ச ரூபாய் இந்திய போலி கரன்சியை அந்நாட்டு போலீசார் பறிமுதல் செய்தனர். லேட்டஸ்டாக நேற்று முன்தினம் காத்மாண்டு விமான நிலையத்தில் வந்திறங்கிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஷேக் முகமது பாக்ரன் என்ற 48 வயதான நபரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி இந்திய கரன்சியை மறைத்து வைத்திருந்தார். இவர் தோஹாவில் இருந்து பயணம் செய்திருந்தார். ஷேக் முகமதுவும், அவருடன் வந்த நேபாள நாட்டவர் நூருல்லாவும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.>viruvirupu.com

800க்கு விற்ற மல்லிகை கிலோ 60 ரூபாய் வாடும் விவசாயிகள். திருவிழா, திருமணம் குறைந்தது

ஆரல்வாய்மொழி: திருவிழா, திருமணங்கள் குறைந்ததால் பூக்கள் விற்பனை
டல் அடித்துள்ளது. குமரி மாவட்டம் தோவாளை மார்க்கெட்டில் கிலோ ரூ.800&க்கு விற்று வந்த மல்லிகை பூ இன்று ரூ.60&க்கு விற்கப்பட்டது. இதனால் பூ உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.குமரி மாவட்டம் தோவாளையில் பூக்கள் சந்தை உள்ளது. ஆரல்வாய்மொழி, தோவாளை, காவல்கிணறு, பழவூர், ஆவரைகுளம், ஆகிய பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், தோவாளையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரளி பூவும், மதுரை, ராஜபாளையம், சங்கரன்கோவில், கொடைரோடு ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை பூவும், பெங்களூர் அருகே உள்ள ஒசூரில் இருந்து மஞ்சள் கிரேந்தி மற்றும் பட்டர் ரோஸ், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி ஆகிய பகுதிகளில் இருந்து பச்சை மற்றும் துளசி வருகிறது. தோவாளை சந்தையில் இருந்து குமரி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், கேரளா, வெளிநாடுகளுக்குகூட பூக்கள் செல்கிறது.

கர்நாடகா: சட்டமன்ற தேர்தல் கட்சிகள் வெற்றி பெற்ற விபரம்

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜக 110 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து பாஜக தனித்து ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மதசார்பற்ற ஜனதா தளம் 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மற்றவர்கள் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். 2013 மே மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 121 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கிறது. பாஜக 40 தொகுதிகளிலும், ம.ஜனதா தளம் 40 தொகுதிளிலும் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக ஜனதா தளம் 6 தொகுதிகளிலும், மற்றவர்கள் 16 தொகுதிளும் வெற்றி பெற்றுள்ளனர்.

காங்கிரசுக்கு பூஸ்ட் கொடுத்த கர்நாடகம்.. பொதுதேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகிறது?

கர்நாடக மக்கள், ஒரு நல்ல மாற்றம் கொண்டு வருவதற்கான வாய்ப்பை இழந்து விட்டனர் என்றே, நேற்று வந்த தேர்தல் முடிவு தெரிவிக்கிறது. இது காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி என்று, கூற முடியாது. மாறாக, பா.ஜ.,விற்கு எதிரான ஓட்டு என்று தான் கூற முடியும். இதன் ஒரு விளைவாக, அழிவை நோக்கி பயணித்து கொண்டு இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், மீண்டும் உயிர் பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்து உள்ளது. எடியூரப்பாவை நீக்காமல் இருந்திருந்தால், பா.ஜ.,வுக்கு இந்த நிலை வந்திருக்காது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், இது தவறு; எடியூரப்பா இருந்திருந்தால், பா.ஜ., பிரதான எதிர்க்கட்சியாக வாய்ப்பு இருந்திருக்குமே ஒழிய, மீண்டும் ஆட்சியை பிடித்து இருக்க முடியாது.

புதன், 8 மே, 2013

கர்நாடக புதிய முதலவர் யார்?சித்தராமையா, கிருஷ்ணா, பரமேஸ்வரா,வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜூன கார்கே ஆகிய 5 பேர் போட்டி

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெ ற்றியை
பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. அடுத்து கர்நாடகாவின் புதிய முதல்-மந்திரி யார்? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, சீனியர் தலைவர் சித்தராமையா, மத்திய மந்திரிகள் வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜூன கார்கே ஆகிய 4 பேர் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது. மாநில காங்கிரஸ் தலைவ ரான பரமேஸ்வரா தேர்தலில் தோல்வி அடைந்த தால் முதல்-மந்திரி பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. வீரப்பமொய்லியும், மல்லிகார்ஜூன கார்கே ஆகிய இருவரும் மத்திய மந்திரி சபையில் முக்கிய இலாகாக்களில் உள்ளனர். இதனால் இந்த இருவரும் முதல்-மந்திரி பொறுப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. மூத்த தலைவரான சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டாக எதிர் கட்சி தலைவர் பதவியில் அவர் திறம்பட பணிபுரிந்தார். இதனால் சித்தராமையாதான் கர்நாடக முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் முன்னிலையில் இருக்கிறார்.

தமிழக அரசு அதிரடி! குட்கா பான்பராகிற்கு தடை ! Well Done

சென்னை: சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110;ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் கூறியதாவது:
டெங்கு, சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல் போன்ற பல நோய்களை கண்டறியும் பரிசோதனை வசதிகளை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் அரசு ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பல்வேறு வகையான வைரஸ் நோய்களை கண்டறிவதற்கான பரிசோதனை வசதி,  சென்னையில் உள்ள அரசு கிங் இன்ஸ்டிடியூட்டில் மட்டுமே உள்ளது. இதனால், அசாதாரண வைரஸ்களால் ஏற்படும் நோயை கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க முதல்கட்டமாக சென்னை, மதுரை, கோவை, நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நுண்ணணு தொற்று நோய் ஆய்வகம் துவக்கப்படும். இத்திட்டம், படிப்படியாக அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

Flashback: ஏய் இங்க வா ! zee TV யில் அய்யங்கார் ஆத்து அடாவடி பஞ்சாயத்து:

ஜீ டிவியில் வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் நல்ல பல
கருத்து பரிமாற்றங்கள் நடை பெற்றுள்ளமை உண்மையே.
குறிப்பாக திருமதி நிர்மலா பெரியசாமி அவர்கள் நடத்தும் பொழுது கொஞ்சம் கண்ணியமாக உண்மையிலேயே  கொஞ்சம் சமுகம் பற்றிய நல்ல புரிதலுடன் காணப்பட்டது .
தற்போது பாலக்காட்டு பிராமணர் வகுப்பை சேர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் என்ற பெண்மணி இந்த நிகழ்ச்சியை நடாத்தி வருகிறார் ,
இவரது நேற்றைய நிகழ்ச்சியை பார்த்து நான் அதிர்ந்து விட்டேன், அது முதல் நாள் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாகும் . அதில் பேசிய சமாச்சாரங்கள் பற்றி எல்லாம் நேற்றே ஓரளவு குறிப்பிட்டிருந்தேன் , அதுவல்ல நான் இப்போ சொல்ல போகும் விடயம்<அந்த பாதிக்கப்பட்ட பெண்ணை இவர் நடத்தும் முறை இருக்கிறதே , இதுவரை எந்த தொலைகாட்சியிலும் காண முடியாத அளவு படு மோசமான அடக்கு முறை வன்முறை அதாவது Verbal Abuse Psychological Threatening  very brutal treatment அந்த பெண்ணோ பயந்தது பயந்து எப்படியாவது தப்பி ஓடினால் போதும் என்ற எண்ணத்தில் இருப்பது இவருக்கு பார்க்க வேடிக்கையாக இருக்கிறதுஅங்காடி தெருவில் வரும் அய்யங்கார்  வீட்டு எஜமானி சமுகத்தின் அடித்தட்டை சேர்ந்த ஒரு வீட்டு வேலைக்காரியை treat பண்ணிய விதத்தை பார்க்கு எவருக்கும் ரத்தம் கொதிக்கும்,  அதே போல அல்ல அல்ல அதைவிட படு வக்கிரமாக இந்த பாலக்காட்டு அய்யர் ஆத்து  பெண்அந்த அபலை பெண்ணை ஒரு பிடி பிடித்து தனது வக்கிர ரசனைக்கு தீனி போட்டுள்ளார் ,அந்த பெண்ண போக முயற்சிக்கும்போது ஏய்  இங்க வா என்று  உரத்த தொனியில் உத்தரவிடுவாரே என்ன ஆணவம் என்ன ஜாதி திமிர், ஆமாம் இந்த தொனியில் ஜாதி திமிர் தெரிகிறது

Kerala நகைகளை தரமறுத்த 22 ஆசிரியர்கள் பணி நீக்கம் இஸ்லாமிய பள்ளி

கேரளாவில் நகைகளை தர மறுத்த 22 ஆசிரியர்களை நீக்கிய பள்ளி நிர்வாகம் மலப்புரம்: கேரளாவில் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பள்ளிக்காக தங்க நகைகளை கொடுக்க மறுத்த 22 ஆசிரியைகள் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருனவயா மாவட்டத்தில் உள்ள இடக்குளம் என்ற ஊரில் உள்ளது ஹித்மத் இஸ்லாமிய பள்ளி. இங்குதான் சர்ச்சைக்குரிய அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு பள்ளியின் மேலாளராக முகம்மது குட்டி என்பவர் வேலை செய்து வருகிறார். ஒரே நேரத்தில் 22 ஆசிரியைகள் பள்ளியை விட்டு நீக்கப்பட்டது பற்றி கேட்டபோது, அவர்களின் தகுதிக் குறைபாட்டினாலேயே பள்ளியை விட்டு நீக்கப்பட்டதாக கூறியுள்ளார். தங்க நகை எதுவும் ஆசிரியைகளிடம் இருந்து கேட்கவில்லை என்றும், அந்த ஆசிரியைகள் பற்றி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் புகார் கூறியதாகவும், அதனாலேயே அவர்கள் நீக்கப்பட்டதாகவும் கூறினார். பள்ளியை விட்டு நீக்கப்பட்டது தொடர்பாக ஆசிரியைகள் அனைவரும், முதல்வர், கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடந்த ஏப்ரல் 20 தேதி தொலைபேசி மூலம் புகார் தெரிவித்துள்ளனர். மாதரஸ்ஸாவின் கீழ் இயங்கும் இந்த பள்ளியில் 65 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கணைய புற்று நோயை கண்டுபிடிக்கும் ‘டிப்ஸ்டிக் பேப்பர்’ சோதனை,,அமெரிக்க சிறுவன் சாதனை

Last year, then-15-year-old Jack Andraka became an international sensation by inventing a cheap and accurate pancreatic cancer sensor, so it was only logical for him to begin working on a universal disease scanner inspired by Stark Trek.
நியூயார்க்: கணைய புற்று நோயை கண்டுபிடிக்க 'டிப்ஸ்டிக் பேப்பர்' என்ற புதிய சோதனை முறையை அமெரிக்க சிறுவன் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளான்.அமெரிக்காவில் மேரிலேண்டு பகுதியை சேர்ந்தவன் ஜேக் ஆண்ட்ரகா (15). இவன் அங்குள்ள உயர்நிலை பள்ளியில் படித்து வருகிறான். சமீபத்தில், இவனது மாமா கணைய புற்று நோய் பாதித்து மரணம் அடைந்து விட்டாராம். கணைய புற்று நோயால் தனது மாமா இறந்ததை எண்ணி வருத்தப்பட்ட ஜேக் இந்த நோயின் ஆரம்ப நிலை அறிவது குறித்து ஆய்வு மேற்கொண்டான்.ஆய்வில் பல்வேறு சோதனைகளை தாண்டி தற்போது வெற்றிக் கனியோடு 40 இலட்சம் பரிசும் பெற்றுள்ளான் சிறுவன் ஜேக்.கணைய புற்றுநோய்னா...தொடக்கத்தில், கணைய புற்று நோய் அறிகுறி தெரிவதில்லை. அது ஓரளவு முற்றிய பிறகுதான் நோயின் தாக்கம் குறித்து தெரிய வரும். அதனால், இந்த நோய் தாக்கி உயிர் பிழைப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தற்போது இந்நோயினால் அமெரிக்காவில் 8 ஆயிரம் பேரும், இங்கிலாந்தில் 45 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.'ஜேக்'கின் ஆய்வு...சிறுநீரகம் அல்லது ரத்தத்தில் கணைய புற்று நோயை உருவாக்கும் 'மீசோதெலின்' என்ற புரோட்டீன் அளவை 'டிப்ஸ்டிக் பேப்பர்' சோதனை மூலம் கண்டு பிடிக்க முடியும் என அறிந்தான்.

கர்நாடகாவில் காங்கிரசுக்கு கூட்டணி தேவை இல்லை அறுதி பெரும்பான்மை

பெங்களூரு: கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது. ஆச்சர்யப்படத்தக்க வகையில் முன்னேறியுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் 2வது இடத்தையும், பா.ஜ., மூன்றாவது இடத்தையும் பிடிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 105 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., 34 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 42 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறன. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 18 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப்பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளதால் தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகா காங்கிரஸ் வெற்றிமுகம் : காங்கிரஸ்116 பா ஜா க 42 மதசார்பற்ற ஜனதா தளம் 34 எதியூரப்பா கட்சி 12

கர்நாடக சட்டசபை தேர்தல் முன்னணி நிலவரம்  
காங்கிரஸ்- 116
பாஜக- 42
மதசார்பற்ற ஜனதா தளம்- 34
எதியூரப்பா கட்சி- 12
ரெட்டி-ஸ்ரீராமுலு கட்சி- 3
சுயேச்சைகள்- 10

செவ்வாய், 7 மே, 2013

வடக்கை மிஞ்சிய தென் மாநிலங்கள் ! விழிப்புணர்ச்சி காரணமாகவே இந்த வளர்ச்சி

பெங்களூரு: சிறந்த அரசாங்கம், கல்வி மற்றும் திறமையான ஆட்சி
ஆகியவற்றால் தென் மாநிலங்கள் வடமாநிலங்களை விட மேம்பாடான நிலையில் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனமான பப்ளிக் அபயர்ஸ் சென்டர் (பிஏசி) என்ற நிறுவனம், நாட்டின் வடக்கு மற்றும் தென் மாநிலங்களில் வசிப்போர்களின் தனிநபர் வருமானம், வறுமைக்கோடு உள்ளிட்ட முக்கிய விஷயங்களைக் கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவை உள்ளடக்கிய தென் மாநிலங்களில் நிலவும் நிலையான அரசாங்கம் மற்றும் திறமையான ஆட்சி காரணமாக, தனிநபர் வருமானம் அதிகரித்து. அதன் காரணமாக வறுமை பெருமளவு குறைந்துள்ளது. கடந்த 2009-10ம் ஆண்டில் தென் மாநிலங்களின் தனிநபர் வருமானம் ரூ. 19 ஆயிரத்து 531 ஆகும். இதுவே வடமாநிலங்களில் (பீகார், ம.பி., ராஜஸ்தான், உ.பி., உத்தர்கண்ட், ஜார்க்கண்ட் மற்றும் சட்டீஸ்கர்) ரூ. 8951 ஆகும். இதே போல், 2009-10ல் வறுமையில் வாடுபவர்கள் தென்மாநிலங்களில் 19 சதவீதமாகவும், வடமாநிலங்களில் 38 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் காங்கிரஸ் அமோக வெற்றி Exit Poll கருத்து கணிப்பு ! முழு விபரமும் நாளையே வெளிவரும்

Three exit polls have predicted that Congress is likely to emerge winner in Karnataka, with the ruling BJP
heading for a massive defeat. The survey, conducted by psephology firms C Voter, Today's Chanakya and CNN IBN-The Week, said Congress would get a simple majority and would not require any support from other parties in forming the government in the state.
 வாக்களிப்புக்கு பின்னாலான எக்சிட் போல் எனப்படும் கருத்து கணிப்புகள் கர்நாடகாவில் காங்கிரசுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று கூறுகிறது .
BJP ஆட்சியின் ஊழல் அலங்கோலம் ரெட்டி சகோதரர்களின் மாபியா ராஜ்ஜியம் அதைவிட மிகவும் கேவலமாக முன்னாள் முதல்வர் எடியுரப்பவுக்கும் கட்சிக்கும் இடையே நடைபெற்ற குழாயடி சண்டை போன்ற காரணங்களால் BJP இந்த வீழ்ச்சியை நோக்கி உள்ளது,
கட்டுப்பாட்டுக்கும் கண்ணியத்திற்கும் மொத்த குத்தகை எடுத்தவர்கள்  போல பேசி வந்த பா ஜா காவினர் ஆட்சி அதிகாரம் கிடைத்த கொஞ்ச நாளிலேயே ஊழலில் கின்னஸ் சாதனை புரிந்து தென் இந்தியாவில் முதல் முதலாக கிடைத்த அரிய வாய்ப்பை போட்டு உடைத்து விட்டார்கள்,

எகிறப்போகும் எமியின் மார்கெட்! ஐ படத்தை எதிர்பார்த்து கல்லா

“மதராசப்பட்டினம்” படத்தில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன் முதல்
படத்திலேயே நடிப்பிலும்,அழகிலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர்.
Amy-Jakson-20130507-01தொடர்ந்து ஹிந்தி வெர்ஷனான “விண்ணைத் தாண்டி வருவாயா”, அதன்பிறகு அதே விஜய் இயக்கத்தில், “தாண்டவம்’ இப்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ஐ என படுபிஸியாக நடித்து வருகிறார்.
இதுவரை இல்லாத அளவுக்கு ‘ஐ’ படத்தில் விக்ரமுடன் படு நெருக்கம் காட்டியிருக்கிறாராம் எமிஜாக்சன்.

ராமதாஸ் கைதினால் தலித் வாக்குகள் இனி அதிமுகவிற்குத்தான் ???

ராமதாஸ் அரசியல்தைலாபுரம் தோட்ட மாளிகையில் ஜெனரேட்டர், ஏசியோடு வாழ்ந்தவருக்கு திருச்சி சிறை சென்ற பிறகுதான் தமிழ்நாட்டில் மின்வெட்டு அமலில் இருப்பதும், அதனால் மக்கள் படும் துன்பமும் கொஞ்சமாக தெரிய வந்திருக்கிறது. கூடங்குளம் வழக்கு, மதுரை ரஜினி ரசிகர்களை தாக்கிய வழக்கு உட்பட பழைய வழக்குகளெல்லாம் தூசி தட்டப்பட்டு ராமதாஸ் மீது போடப்படுவது, விழுப்புரம் நீதிமன்றம் வழங்கிய பிணையை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றம் சென்றது குறித்தெல்லம் பலருக்கும் பல கேள்விகள் இருக்கின்றன. பாமக கும்பல் கூடிய சீக்கிரத்தில் வெளியே வரக்கூடாது என்று ஜெயலலிதா இவ்வளவு தீவிரமாக இருப்பதற்கு காரணம் என்ன?
மாமல்லபுரம் வன்னியர் சங்க கூட்டத்தில் நடந்த நாடகமொன்றில் ஜெயா, சசிகலா வேடமிட்டவர்கள் பேசிய பேச்சுதான் ஜெயாவின் கோபத்திற்கு முக்கிய காரணம் என்று சில ஊடகங்கள் எழுதுகின்றன. அப்படி கோபப்படும்படி அந்த நாடகத்தில் ஏதுமில்லை என்பதே உண்மை. அரசியலிலும், அறிக்கையிலும் கூட ஜெயலலிதாவை நேரடியாக கண்டிக்க முடியாதவர்கள் நாடகத்தில் மட்டும் விசுவரூபமெடுப்பார்களா என்ன? எனில் வேறு என்ன காரணம்?
ஜெயலலிதாவின் ஈகோவை யாராவது சீண்டிவிட்டால் அவரது கோபத்தை யாரும் அது அவாளாகவோ இல்லை ‘ஆண்டவ’னாவாகவோ இருந்தால் கூட தடுக்க முடியாது. அதுவும் அவர் முதலமைச்சராக இருப்பதாலும், போலீஸ், நீதிமன்றம், அதிகார வர்க்கம் என்று பல்வேறு அதிகார அமைப்புகள் அவருக்கு சேவை செய்யக் காத்திருக்கும் போது அந்த கோபத்தின் அளவையும், வீச்சையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆயாளும் ஞானும் தம்மில் : வியாபாரமாகிவிட்ட மருத்துவ உலகில் மனிதம்

மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் லால்ஜோஸ். அவருடைய
பிரதாப்போத்தன் மருத்துவத்தின் மகத்துவத்தை அவனுக்கு உணர்த்துகிறார்.
இயக்கத்தில் ப்ருதிவிராஜ் பிரதாப் போத்தன் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாட படம் அயாளும் ஞானும் தம்மில். தன்னை சுற்றியிருக்கிறவர்களை நேசிக்கிற, அவர்களுக்காக உருகி உழைக்கிற, எதையும் இழக்க தயாராயிருக்கிற எளிமையான மனிதர்களின் கதையை அழகாக கோர்த்து படமாக்கியிருப்பார் லால்ஜோஸ். நாம் செய்கிற தொழில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது யாருக்காக செய்யப்படுகிறது. அதன் நோக்கம் என்ன? என்பதை உணர்வுப்பூர்வமாக உணர்ந்தால் மட்டுமே நம்மால் அதை உளத்தூய்மையோடு செய்ய முடியும். மனிதர்களுக்கு செய்கிற சேவையை காட்டிலும் மகத்தான ஒன்றை இறைவனுக்கும்கூட நம்மால் செய்துவிட முடியாது என்பதை ஆணித்தரமாக நம் நெஞ்சில் பதிய வைக்கிற அற்புதம் இப்படத்தை காணுகிற ஒவ்வொருவருக்கும் நிகழும். பொறுப்பில்லாமல் வாழ்க்கை குறித்த பெரிய நோக்கமோ அக்கறையோ இல்லாத இளம் மருத்துவர் பிருத்விராஜ். மூனார் அருகில் இருக்கிற ஒரு சிறிய கிராமத்து மருத்துவமனையில் இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டிய கட்டாயம் உண்டாகிறது. அங்கே அவர் முதிர்ந்த மருத்துவரான பிரதாப் போத்தனை சந்திக்கிறார். பிரதாப் போத்தன் அந்த இளைஞனின் வாழ்க்கையையே மடைமாற்றுகிறார். அவனுடைய நோக்கங்கள் மாறுகின்றன. நாம் செய்கிற தொழிலை எப்படி நேசிக்கவேண்டும் என்பதை உணருகிறான். காதல் தோல்வியை சந்திக்கிறான்.. தோல்வியின் வலியை தன்னுடைய தொழிலில் பிரதிபலிக்கிறான். அது அவனுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டுபண்ணுகிறது. பிரதாப் போத்தன் சொல்கிற ஒரு பொய்யினால் தப்பிக்கிறான்.

சி.பி.ஐ., இயக்குனர்: விசாரணை அறிக்கையை அமைச்சர் திருத்தியது உண்மையே

புதுடில்லி: "நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்து, சி.பி.ஐ., தயாரித்த விசாரணை
எதிர்க்கட்சிகள் கிடுக்கிப்பிடி
தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், பெரும் முறைகேடு நடந்தததாக, புகார் எழுந்ததை அடுத்து, இது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ., விசாரணையில், மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் தலையிட்டதாகவும், விசாரணை அறிக்கையில், திருத்தம் செய்ததாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., இயக்குனர், ரஞ்சித் சின்கா, கடந்த வாரம், சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், "சி.பி.ஐ., விசாரணையின் வரைவு அறிக்கையை, மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார், பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சக அதிகாரிகளிடம் காட்டியது உண்மையே' என, தெரிவித்திருந்தார்.

திங்கள், 6 மே, 2013

பெண்ணை படுமோசமாக intimidate செய்யும் சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன்

ஜீ டிவியில் சொல்வதெலாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் ( may 06 2013 ) இன்று
பார்த்த  ஒரு
மோசமான கட்டை பஞ்சாயத்து கண்டிப்பாக விமர்சிக்க படவேண்டி உள்ளது,
பெண் அடிமை தனம் பெண்களிடமே மிக மிக அதிகமாக இருக்கிறது என்பதற்கு மிக சரியான உதாரணமாக இன்றைய நிகழ்ச்சி அமைந்தது .
லட்சுமி ராமகிருஷ்ணன் என்ற பெண்மணி ஒரு குடிகார உதவாக்கரை சைக்கோ கணவனுக்காக ஒரு பெண்ணிடம் வற்புறுத்திய பலாத்காரம் இருக்கிறதே . போலீஸ் ஸ்டேஷன் பிச்சை வாங்கணும் .
அந்த பெண் எதோ தையல் வேலைக்கு போய் தன்னையும் தனது மகளையும் பாதுகாத்து கொண்டு மூன்று வருடங்களாக வாழ்ந்து வருகிறாள்.
குடிகார பொறுக்கி கணவனோ ஒரு நாளும் நல்ல ஒரு கணவனாக இருந்திருக்கவே மாட்டான் என்பது எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது .
அவன் போதையில் பலதடவை தற்கொலை முயற்சி வேறு செய்திருக்கிறான் .அவனுக்கு குடியின் தாக்கத்தால் ஒரு கையும் காலும் வழங்காமல் போய் தற்போது ஓரளவு சுகம் , அதற்குள் குடித்து விட்டு மீண்டும் தன்னை தானே கத்தியால் கீறி பார்க்கவே பயமாக இருக்கிறது ,
மனைவியை வேறு கொல்லுவேன் சிலிண்டரை திறந்து விடுவேன் என்றெல்லாம் பயமுறுத்துகிறான்
அந்த பெண்ணோ அய்யா சாமி உன் சங்காத்தமே வேண்டாம் நான் என் குழந்தையை காப்பாத்த வேணும் என்று தன்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சுகிறாள் .
இந்த லட்சுமி ராமகிரிஷ்ணன் என்ற பெண்மணியோ  இல்லை அவன் தற்போது திருந்தி விட்டதாக கூறுகிறான் அவனை நீதான் வைத்து காப்பாற்ற வேண்டும் என்று மிரட்டுகிறார், ஆமாம் படு மோசமாக மிரட்டுகிறார்
போதாதற்கு அவளுக்கு வேறு எதோ ஆண் நண்பர்கள் இருக்கிறார்களா என்று அறிவதில் கடும் பிரயத்தனம் செய்கிறார் ,
எடுத்துக்கொண்ட விடயத்திற்கு அவசியமா என்பதை விட  லட்சுமி  ராம கிரிஷ்ணனுக்குஅவர்களின் அந்தரங்க விடயங்களை  அறிவதில் பயங்கர த்ரில்,
பரவாயில்லை சொல்லுங்க அம்மா என்று நாவில் இனிப்புடன்  கேட்பார்
பொதுவாக ஆண் பெண்களின் கள்ள தொடர்பு போன்ற விடயங்களை அறிவதில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அதீத ஆர்வம் இருப்பது எல்லோரும் அறிந்ததே , இது ஒரு மன நோய் ,

நிறைவேறாத ஆசைகள் அதிகம் இருப்பவர்கள் இந்த மாதிரி சமாச்சாரங்களில் தீர்ப்பு சொல்கிறேன் பேர்வழி என்று தங்களது அபிலாசைகளை பூர்த்தி செய்வது வழக்கம் தான்< அந்த  பெண்ணை படுமோசமாக  intimidate செய்ய இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது , பெண் அடிமை தனத்திற்கு சப்போர்ட் பண்ணுவதன் மூலம் ஆணாதிக்க வாதிகளின் good book இல் இருக்க ஆசைப்படுகிறார் 

துளு’ சினிமாவின் மறுமலர்ச்சி!

thulu3
பாறையில் விதைக்கப்பட்ட விதை முளைத்து மரம் ஆனால் சாதனைதானே? கன்னட சினிமாவே கால்காணி நிலத்தை வைத்துக்கொண்டு தத்தக்கா… பித்தக்கா… என்று தவழ்ந்துக் கொண்டிருக்கிறது. அந்த குட்டியூண்டு இண்டஸ்ட்ரிக்குள்ளும் அமீபா சைஸில் உருவான இன்னொரு இண்டஸ்ட்ரி முளைத்து வருவது அதிசயம். அவ்வாறு வீறுகொண்டு எழுந்துக் கொண்டிருப்பது ‘துளு’ சினிமா. தென் கர்நாடகாவிலும், கேரளாவின் சில இடங்களிலும் திராவிட மொழியான ‘துளு’ இன்னமும் வாழ்கிறது. மங்களூர், உடுப்பி, காசர்கோடு பகுதிகளில் துளு பேசுபவர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.
இந்திய சினிமாவுக்கு வயது நூறு என்றாலும் துளு சினிமா இன்னும் இளைஞன்தான். நாற்பத்தி இரண்டு வயதுதான் ஆகிறது. 1971ல் வெளிவந்த ‘என்ன தங்காடி’தான் துளுவில் வெளிவந்த முதல் திரைப்படம். பத்து, பதினைந்து தியேட்டர்களில் ஒரு படத்தை திரையிட முடிந்தாலே இன்றும் அது சாதனைதான். வருடத்துக்கு ஒன்று, இரண்டு திரைப்படங்கள் வந்தாலே ஆச்சரியம். இன்னும் மொத்தமாக நாற்பது படங்கள் கூட வரவில்லை. கன்னட சினிமாவில் பணிபுரிபவர்கள் பெத்த மனசு வைத்து அவ்வப்போது துளுவிலும் பங்காற்றுகிறார்கள் (தகவலுக்காக : உதயம் NH4 திரைப்படத்தின் நாயகி அஷ்ரிதா கூட துளுதான்).

மத்திய ரயில்வே அமைச்சர் குடும்பம் 5 ஆண்டுகளில் சேர்ந்த ரூ.152 கோடி சொத்து!


பா ம க : பஸ்கள் மீது தாக்குதல் நடத்துவது நாங்கள் அல்ல? கண்றாவியை நம்பி தொலைக்கிறோம் நிறுத்துங்க சார்



பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தி, அந்தப் பழியை பா.ம.க. மீது போட சதி நடந்து வருகிறது. இதில் பா.ம.க.வினர் சிக்கி விடக் கூடாது. அமைதி வழியில் தங்களது போராட்டங்களை அவர்கள் நடத்த வேண்டும்” என்று பா.ம.க. தலைமை நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரக்காணம் கலவரத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியதற்காக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு, அன்புமணி ராமதாசு உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் உடைக்கப்படுவதாகவும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதற்கு பா.ம.க.வினர் தான் காரணம் என்றும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு மற்றும் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அறவழியில் அமைதியாக போராட்டம் நடத்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசு அறிவுறுத்தியுள்ளார். அதன்படியே ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள், கறுப்புக்கொடி ஏற்றுதல் உள்ளிட்ட அறவழிப் போராட்டங்களில் பா.ம.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வன்முறைகளுக்கு பா.ம.க. மீது பழி போடப்படுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எவரும் எங்கும் பேருந்துகள் மீது கல்வீச்சு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் போன்ற செயல்களில் ஈடுபடவில்லை.

சீனா பாஸ்போர்ட் விசா திடீர் கெடுபிடி

பீஜிங்: விசா, பாஸ்போர்ட் தொடர்பாக கெடுபிடி உத்தரவுகளை அமல்படுத்தி
வந்த சீனாவின் போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அறிவியல், கல்வி துறை நிபுணர்களை அதிகளவில் ஈர்ப்பதற்காக விசா விதிமுறைகளை தளர்த்தியுள்ளன.சீனாவுக்கு வெளிநாட்டினர் விசா வாங்கிக் கொண்டு வருவதற்கு இதுவரை கடுமையான விதிகள் கடைபிடிக்கப்பட்டது. திடீரென்று வெளிநாட்டை சேர்ந்த திறமைசாலிகளை கவர்ந்திழுக்கும் வகையில் விதிகளை தளர்த்தி இருக்கிறது. நிர்வாகம், கல்வி, அறிவியல் துறைகளில் திறமை வாய்ந்தவர்களுக்கு உடனடியாக விசா வழங்கும் வகையில் புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி ஆர் 1, ஆர் 2 என இரு வகை விசா வழங்கப்படுகிறது. ஆர் 1 விசாவில் சீனா வருபவர்களுக்கு அங்கு தங்கும் உரிமையும் வழங்கப்படுகிறது. ஆர் 2 விசாவில் வருபவர்கள் சீனாவுக்கு எத்தனை முறையும் வந்து செல்லலாம் என்று சலுகை அளிக்கப்படுகிறது.

ராமதாஸ் கைது 500 பேருந்துகள்சேதம் 13 பேருந்துகள் சாம்பல்


விழுப்புரத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாமகவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதுவரை 500 பஸ்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன. 13 பேருந்துகள் மற்றும் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இரவு நேர போக்குவரத்தில் சில மாற்றங்களை காவல்துறை செய்துள்ளதுடாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பாமக தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாமகவினரும், வன்னியர் சங்கத்தினரும் வட மாவட்டங்கள் சிலவற்றில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

உழவர் சந்தையை மீண்டும் தொடங்க தீர்மானம் ! அப்படியே திமுகாவின் மற்ற நல்ல திட்டங்களையும் ......

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- குறைந்த விலையில் காய்கறி விற்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் துவக்கிவைக்கப் போவதாகவும், இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு நுகர்வோர், விவசாயிகள் நேரடியாகப் பயன்பெறுவார்கள் என்றும் செய்தி வந்திருக்கிறதே?. பதில்:- குறைந்த விலையில் மக்களுக்கு காய்கறி விற்கப்பட வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம்தான் உழவர் சந்தைகள் திட்டம். இந்தத் திட்டத்திலே பஸ்களிலே காய்கறிகளை ஏற்றிவருவதற்கான லக்கேஜ் கட்டணம் கிடையாது. விவசாயிகள் உழவர் சந்தைகளிலே தங்கள் பொருட்களை வைத்து விற்பதற்கு வாடகை கிடையாது. தராசு எடைக் கற்களைக் கூட அரசே இலவசமாக வாங்கி வழங்கும். 14-11-1999 அன்றுதான் முதன்முதலாக இத்திட்டம் மதுரை மூதூரில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட நாளன்றே 4,500 கிலோ காய்கறிகள் 115 விவசாயிகள் மூலம் கொண்டு வரப்பட்டு அவை அனைத்தும் பிற்பகல் 4 மணி அளவிலேயே விற்கப்பட்டுவிட்டன. 4 ஆயிரம் பொதுமக்கள் நேரடியாக வந்து அந்தக் காய்கறிகளை விலைக்கு வாங்கிச் சென்றார்கள்.
100-வது உழவர் சந்தை 14-11-2000 அன்று காஞ்சீபுரம் மாவட்டம் பல்லவபுரத்திலே திறந்து வைக்கப்பட்டது. ஒரே ஆண்டில் 100 உழவர் சந்தைகள் திறந்து வைக்கப்பட்டன என்ற ஒன்றில் இருந்தே அந்தத் திட்டத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த உழவர் சந்தைகள் திட்டத்தைத்தான் தற்போது இந்த ஆட்சியினர் மீண்டும் தொடங்கிட முடிவு செய்துள்ளார்கள்.
இவ்வாறு கூறியுள்ளார். 

ஜாதி, மத கூட்டங்களுக்கு கெடுபிடி! போலீசார் தீவிர ஆலோசனை

பா.ம.க.,வினருக்கு கூட்டம் நடத்த அனுமதியளித்து, கற்றுக் கொண்ட பாடத்தால், தமிழகத்தில், மாநாடு, கூட்டம் நடத்தும் அனைத்து தரப்பினருக்கும், கடுமையான விதிகளை, தமிழக போலீஸ் அமல் படுத்த உள்ளதாக தெரிகிறது. ஜாதி, மத அமைப்புகள் இனி கூட்டம் நடத்தும் முன் உத்தரவாதம் தர வேண்டிய நிலை ஏற்படலாம்.அரசியல் கட்சிகளோ, அமைப்புகளோ, திருவிழா, கூட்டம், மாநாடு என எதை நடத்துவதாக இருந்தாலும், போலீசில் முறையான அனுமதி பெற வேண்டும். சில நேரங்களில், கலெக்டர் அலுவலகத்திலும் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. அனுமதியளிக்கும் போது, பாதுகாப்பு, வாகன போக்குவரத்து உள்ளிட்டவற்றில் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. நிபந்தனைகள் மீறப்படும் போது, நடவடிக்கை எடுக்கப்படுவதும் உறுதிப்படுத்தப்படுகிறது.
மத ரீதியாக, ஜாதி ரீதியாக நடத்தப்படும் கூட்டங்கள், ஊர்வலங்களில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சமீபத்தில், விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மாநாடு மற்றும் ஊர்வலம் தொடர்பாக, போலீசார் அனுமதி மறுத்த போது, கோர்ட் உத்தரவு பெறப்பட்டது. அப்போது, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டு, அனுமதி வழங்கியது.

ஞாயிறு, 5 மே, 2013

தெலுங்கு சினிமா சித்தப்புக்களின் லொள்ளு ஜொள்ளு


கொஞ்சம் கலராய்க் கண்ணை அடிக்கும் கலரில் டிரெஸ் போட்டிருந்தால்
'தெலுங்கு சினிமா ஹீரோவாட்டம் இருக்கியே மச்சான்’ என்பார்கள். தெலுங்கு சினிமாவில் கலர் மட்டுமா கண்ணை அடிக்குது? இதோ எது எது எப்படியெல்லாம் வெரட்டி அடிக்குதுனு கொஞ்சம் அலசி ஆராய்வோமா?  அது என்னமோ தெரியலை. பொதுவாகவே சீனியர் ஆந்திர ஹீரோக்களின் டான்ஸில் பாத்ரூம் போகும் அவசரம் தெரியும். இடுப்பை வெட்டி வெட்டி இவர்கள் ஆடுவதைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். இப்ப இருக்கும் யூத் ஹீரோஸ் பட்டையைக் கிளப்பினாலும் பல வருடங்களாக டான்ஸில் பதறவைத்தவர்கள் சீனியர்கள்.

பழைய ரஜினி ராமதாஸ் மோதல் விவகாரம் இப்போது ஜெயில் வரை வந்துள்ளது


தற்போது திருச்சி சிறையில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் , ஜாமினில் வெளிவர முடியாத மதுரை சம்பவத்தில் கைது செய்வதற்காக திருச்சி சிறையில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அது என்ன மதுரை சம்பவம்.
அப்படி ஒரு சம்பவம் நடந்ததே யாருக்கும் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு இருக்கும், உயிரைக் கொடுத்து படம் எடுத்த ஒரு புகைப்படக் கலைஞரால் வெளிச்சத்திற்கு வந்த சம்பவம் அது.
அந்த புகைப்படக்கலைஞரின் பெயர் சார்லஸ்.
மொத்தத்தில் ஐந்து நிமிடத்திற்குள் நடந்து முடிந்த அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் ஈரக்கொலையை நடுங்கவைக்கிறது என்று சொல்கிறார்.
கடந்த 2004ம் வருடம் நடிகர் ரஜினிகாந்திற்கு எதிராக ராமதாஸ் சில கடுமையான கருத்துக்களை கூறியிருந்தார், அதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராமதாஸ்க்கு கறுப்புக் கொடி காட்ட முடிவு செய்தனர்.
மதுரை பார்லிமென்ட் தொகுதிக்கான பிரச்சாரத்திற்கு மதுரை வந்த அவர், தல்லாகுளம் பகுதி ஒட்டலில் இருந்து கிளம்பிவரும் வழியில், நெல்பேட்டை அண்ணாசிலை அருகே கறுப்புக்கொடி காட்டுவது என ரஜினி ரசிகர்கள் முடிவு செய்தனர்.
இதை கேள்விப்பட்ட புகைப்படக் கலைஞர் சார்லஸ் தான் சார்ந்த வாரப்பத்திரிகைக்காக படம் எடுப்பதற்காக அங்கு போய் ரசிகர்களோடு காத்திருந்தார்.

சந்தானம் வேண்டாம் ! கார்த்தி பிடிவாதம் ஏனுங்க ?


கார்த்தி இனி தனது படத்தில் சந்தானம் நடிக்கவே கூடாது என்று கடுமையான
நிபந்த்தனை விதித்து
உள்ளாராம் . ஏனுங்க சமாசாரம் எதோ வில்லங்கம் மாதிரில்லா தெரியறது

கர்நாடக BJP க்கு எடியூரப்பாவின் ஆப்பு ! மாபியாக்களின் கை ஓங்குமா?

பெங்களூர்:கர்நாடகாவில் இன்று சட்டசபைக்கான தேர்தல் நடக்கிறது.
கர்நாடகாவில் முதல் முறையாக பாரதீய ஜனதா கட்சி, 5 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. இந்நிலையில் கட்சியில் பல்வேறு பிரச்சினை மற்றும் எடியூரப்பா விலகல் ஆகிய காரணங்களால் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது.பி.ஜே.பி.,யிலிருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனிக்கட்சி தொடங்கி போட்டியிடுவதால், அவரது லிங்காயத் சமுதாயத்தினரின் வாக்குகள் பிரிந்து பாரதீய ஜனதாவுக்கு சவாலாக இருப்பார்‌ என்று சொல்லப்படுகிறது.இதனை தொடர்ந்து காங்கிரசும், பாரதீய ஜனதா கட்சியும் மீண்டும் ஆட்சி அமைக்க இரு கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்வர் குமாரசாமியின் முக்கிய கட்சியாக மதசார்பற்ற ஜனதா தளமும் விளங்குவதால், இந்த கர்நாடகா சட்டசபை தேர்தல் மிகுந்த பரபரப்பாக்கி உள்ளது.தேர்தலுக்கு முன்பான கருத்துகணிப்பில் காங்கிரஸ்க்கு சாதகமான சூழ்நிலை இருக்கும் என சொல்லப்படுகிறது.இந்நிலையில் இந்த சட்டசபை தேர்தல் பி,ஜே.பி.,க்கு பலத்த சவாலாக இருக்கும் என எதிர்பார்ப்பை ஏற்பத்தியுள்ளது

அரசியலுக்கு அடிமைப்பட்டுப் போன சி.பி.ஐ

ஒரு காலத்தில், பலருக்கு உதறல் எடுக்கும் அளவுக்குப் பணியாற்றிய அமைப்பு, சி.பி.ஐ., என்ற, "சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்!' அரசியலுக்கு அடிமைப்பட்டுப் போன அதை, எதிர்க்கட்சியினரும், பிரபல பத்திரிகையாளர்களும், "காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்' என்றே கூறினர். அதுவும் சரியல்ல, "ஐ' என்பதற்கு, "இன்வெஸ்டிகேஷன்' என்பதற்கு பதிலாக, "இன்ஜஸ்டிஸ்' (நீதி இல்லாத) என்று சொல்வதே பொருத்தம். இப்போது இதை வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.மத்திய அரசு, அதன் ஒரு துறையான சி.பி.ஐ.,க்கும் இதை விடக் கேவலமான விமர்சனம், இதுவரை வந்ததில்லை. உச்ச நீதிமன்றம் இப்படிச் சொன்ன மறு நிமிடமே, மன்மோகன் சிங் ராஜினாமா செய்திருக்க வேண்டும். செய்யவில்லை; அவரது மனச்சாட்சி, அவரை உறுத்தவில்லை. ஏனென்றால், அவர் சி.பி.ஐ., யார் மீதும் ஏவி விடவில்லை.சரி, அவர் பிரதமர் பதவியில் இருக்கட்டும். சி.பி.ஐ., தலைவராவது கொஞ்சம் வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு ராஜினாமா செய்திருக்கலாம். செய்யவில்லையே... அவரிடம் இழிவுக்கு நாணப்படும் மான உணர்வு இல்லையா? அப்படி எந்த மனிதரையும் சொல்ல முடியாது. அவர் விரும்பினாலும் ராஜினாமா செய்ய முடியாது. விமர்சனத்தை அடுத்து ராஜினாமா செய்தால், அது உண்மை என்பது தெரிய வந்துவிடும். அதனால் ராஜினாமா செய்யாதீர்கள் என்று, அவருக்குக் கட்டளை வந்திருக்கலாம். யாரிடமிருந்து?

இழந்த ஒட்டு வங்கியை பிடிக்க பேருந்துகளை கொழுத்தும் அரசியல் கட்சி

2011-ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில், தி.மு.க. தலைமையில் அமைந்த
கூட்டணியில் இடம் பெற்றிருந்த, பா.ம.க. படுதோல்வி அடைந்தது. சட்டசபை தேர்தலில் வன்னியர், ஆதிதிராவிடர் ஆகிய இரு சமுதாயத்திலிருந்தும், சுமார் 50 சதவீதம் ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தன.
அதையடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டது. வட மாவட்டங்களில் பெருவாரியான வெற்றியை பெற்றது. தனித்துப் போட்டியிட்ட பா.ம.க. 3.5 சதவீதம் வோட்டுகளை தான் பெற முடிந்தது.
இந்தக் கணக்கை பார்த்த அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுமே பா.ம.க.வின் செல்வாக்கு சரிந்துள்ளதை உறுதி செய்து கொண்டன.

பொது சொத்துகளை சேதப்படுத்தும் பா மா காவிடம் நஷ்டஈடு வசூலிக்க வேண்டும்

தர்மபுரி மோதலின் வடு மறையும் முன், மரக்காணத்தில் கலவரம்

இச்சம்பவங்கள் ஜனநாயக முறைகளுக்கு எதிரானது. ஒரு சமூகத்தை, பிற சமூகங்களுக்கு எதிராக திருப்பும் செயல். சேதம் ஏற்படுத்தியவர்களிடம், இழப்பீட்டை வசூலிக்க வேண்டும், என, கோரிக்கைகள் எழுந்தபடி உள்ளன. இதுகுறித்து, அரசியல் கட்சிகளின் கருத்துகள் இதோ:
நாட்டில் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று, பல ஆண்டுகள் சிறை சென்ற, அரசியல் தலைவர்கள் பலர் தமிழகத்தில் உள்ளனர். அவர்களுக்காக, எந்த வன்முறையும் நிகழ்ந்ததில்லை. அரசு தொடர்ந்த வழக்கை நடத்தி, நிரபராதி என,விடுதலையாகி வெளியில் வருவது தான் ஜனநாயகம்.ஆனால், மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா நடத்த விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு, கூட்டம் நடத்துவதாக பா.ம.க., ஒப்புக் கொண்டது. ஆனால், எந்த நிபந்தனையையும் அவர்கள் பின்பற்றவில்லை.
மாற்றுக் கட்சித் தலைவர்களை தாறுமாறாக திட்டியுள்ளனர். குடித்து விட்டு, பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கட்சித் தலைவரே, "நிபந்தனையை மீறுகிறேன்; கைது செய்து பார்' என, சவால் விடுகிறார். இது, பொறுப்புள்ள கட்சித் தலைவருக்கு அழகல்ல.வழக்கு போட்டுப் பார் என, ராமதாஸ் சவால் விட்டார். அரசு, அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.