![]() |
ராதா மனோகர் யாழ்ப்பாணத்தில் 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர் காலத்தில் ஒரு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெற்றது
அதில் மூன்றாவது பெரிய ஜாதியாக மடைப்பள்ளி என்ற ஜாதி குறிப்பிடப்பட்டிருக்கிறது
இன்றும் கூட கோயில்களில் உள்ள சமையல் அறையை மடப்பள்ளி என்றுதான் அழைக்கிறார்கள்
சமைப்பவரை மடைப்பள்ளி என்றும் முன்பு அழைத்தார்கள்
இது பற்றிய செய்திகளை சைமன் காசி செட்டி simon kasi chetty அவர்களின் வரலாற்று ஆவண குறிப்புக்களில் காணலாம்
இப்போதும் அந்த வழக்கம் அற்று போய்விட்டது.
மொத்த யாழ்ப்பாண மக்கள் தொகையில் இந்த மடைப்பள்ளி என்ற ஜாதி ஐந்தில் ஒரு பகுதியாக உள்ளது
பின்பு காலப்போக்கில் இந்த ஜாதி காணாமல் போய்விட்டது
இவர்களும் ஏனைய பல ஜாதிகளை போலவே வெள்ளாள ஜோதியில் கலந்திருக்க வாய்ப்புள்ளது
குறிப்பாக இசைவேளாளர் தேவேந்திர குல வெள்ளாளர் போன்று பல ஜாதிகள் தங்கள் ஜாதிப்பெயர்களோடு வெள்ளாளர்கள் லேபிளை ஒட்டி கொள்ளுதல் ஒரு மரபு
அந்த வகையில் விஜய்யின் பெற்றோரும் வெள்ளார் ஜாதி லேபிளை ஒட்டியிருக்க கூடும்.





