சனி, 1 ஏப்ரல், 2017

சில்க் ஸ்மிதாவுக்கு ஆதார் கார்ட் வழங்கிய அதிமேதாவிகள்

சமீப காலமாக ஆதார் அட்டையைச் சுற்றி
எக்கச்சக்க களேபரங்கள் நடந்து வருகின்றன. ஓட்டுநர் உரிமம், பான் கார்டு என ஒவ்வொன்றிற்கும் ஆதார் கார்டு அவசியம் என அறிவுறுத்தி வருகிறது மத்திய அரசு. மறுபக்கம் உச்சநீதிமன்றமோ அரசின் மானியத் திட்டங்களுக்கு ஆதார் கார்டு அவசியம் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் மத்திய அரசு கேட்பதாக இல்லை.
இந்நிலையில், வி.வி.ஐ.பிகளின் ஆதார் கார்டு விவரங்கள் வரிசையாக லீக்காகி வருகின்றன. சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆதார் விவரங்கள் வெளியாகி வைரலானது. அதற்கு தோனி கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். ஏற்கெனவே ஆதார் பாதுகாப்பில்லை எனக் கூறி வந்தவர்களின் குரல் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மேலும் வலுப் பெற்றுள்ளது.

சீனா எச்சரிக்கை : தலாய் லாமாவை அனுமதிப்பதன் மூலம் இந்தியா பெரிய தவறை செய்கிறது!


பெய்ஜிங்: அருணாச்சல பிரதேசத்திற்குள் திபெத் தலைவர் தலாய்லாமாவை அனுமதிப்பதன் மூலம், இந்தியா பெரிய தவறை செய்கிறது என சீனா குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லுகாங் கூறியதாவது: தலாய் லாமா அருணாச்சல் செல்வது என்பது இந்தியா, சீனா இடையிலான உறவில் பெரிய சேதத்தை ஏற்படுத்தும். அவரது பயணத்திற்கு நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். எங்களின் கவலையை இந்தியாவிடம் தெரிவித்துள்ளோம். சீனா - இந்தியா இடையிலான கிழக்கு பகுதி எல்லையில், எங்களின் நிலை தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது.
தலாய் லாமா நீண்ட காலமாக பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், இதனை கருத்தில் கொள்ளாமல், தலாய் லாமாவை அருணாச்சல் செல்ல அனுமதிக்கிறது இந்தியா. இவ்வாறு அவர் கூறினார்.தினமலர்

கையில் வளர்ந்த காது : சீனாவில் மருத்துவ சாதனை!


மின்னம்பலம் : யாராலும் நம்பமுடியாத ஒரு அதிசயம் மருத்துவ உலகில் நடந்துள்ளது. சீனாவில் காதை கையில் வளர்த்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சீனாவில் சியான் நகரத்தைச் சேர்ந்த ஜி எனும் நபர், கடந்த 2015ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கி தனது காதை இழந்ததுடன் கேட்கும் திறனையும் இழந்தார். எனவே, இவருக்கு கேட்கும் திறனை மீட்டுக்கொடுப்பதற்காக சியான் ஜியோடோங் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணராக பணியாற்றும் குவோ சூசோங் என்பவர் வினோத சிகிச்சை ஒன்றை மேற்கொண்டார். அதாவது, 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விலா குருத்தெலும்பை காதுபோல் வடிவமைத்து, அது ஜியின் கையில் வளர்க்கப்பட்டது. மருத்துவர்களின் உதவியால் கடந்த நவம்பர் மாதம் முதல் ஜி தனது கையில் காதை வளர்க்கத் தொடங்கினார். இந்நிலையில், காது வளர வளர உடம்போடு ஒட்டி உணர்ச்சிமிக்கதாக மாறிவந்தது என மருத்துவர் சூசோங் தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 4 மாதங்களாக காது ஜியின் கையில் வளர்க்கப்பட்டது.

தலை வழுக்கை: மாணவிக்கு பள்ளியில் சேர்க்கை மறுப்பு!


மின்னம்பலம் : உடல் நலக்குறைவால் தலை வழுக்கையான மாணவியை பள்ளியில் சேர்ப்பதற்கு மறுத்த தனியார் பள்ளியின் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க கல்வித்துறைக்கு டெல்லி பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த 13 வயதான மாணவி ஒருவர், வணஸ்தாலி பப்ளிக் பள்ளியில் 9ஆம் வகுப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றுள்ளார். இவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் தலையில் வழுக்கை விழுந்துள்ளது. இந்நிலையில், நேர்காணலுக்குச் சென்றபோது அவர் தலை வழுக்கையாக இருந்ததைக் கண்டு பள்ளியில் சேர்ப்பதற்கு பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஜியோ பிரைம்: கால அவகாசம் நீட்டிப்பு! சித்திரை 15 வரை ..


மின்னம்பலம் :ஜியோ பிரைம் திட்டத்தில் இணைவதற்கான கால அவகாசம் நேற்றுடன் (31-03-2017) முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கால அவகாசத்தை வருகிற (ஏப்ரல்) 15ஆம் தேதி வரையில் நீட்டிப்பதாகவும், மேலும் ரூ.303 அல்லது அதற்குமேல் ரீசார்ஜ் செய்தால் வரும் ஜுன் மாதம் வரை அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் எனவும் ஜியோ அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, கடந்த செப்டம்பர் மாதம் தனது இலவச வாய்ஸ் கால் மற்றும் இலவச இன்டர்நெட் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இச்சலுகை டிசம்பர் மாதம் வரையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர், மூன்று மாதங்களுக்கு நீட்டித்து மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை (நேற்று) வழங்கப்படும் என்று அறிவித்தது.

ஆர் கே நகர் இடைதேர்தல் தேதி மாற்றப்படலாம்? தினகரன் மீது அன்னியசெலாவணி (Fera) வழக்கு மீண்டும்?

ஆர்.கே. நகரிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன். ஜூ.வி அட்டையைத் தயார் செய்யவும்’ என வாட்ஸ்அப்பில் வந்து விழுந்தது கழுகார் மெசேஜ். கூடவே, ‘ஃபெரா பொறியில் தினகரன்... தள்ளிப்போகுமா ஆர்.கே. நகர் தேர்தல்?’ என்ற தலைப்பும் வந்தது.சில நிமிடங்களில், முகத்தில் வியர்வை முத்துகள் படர்ந்த நிலையில் வந்த கழுகாருக்காக ஏ.ஸி-யின் டெம்பரேச்சரை குறைத்தோம். ‘‘ஆர்.கே. நகர் அரசியல் டெம்பரேச்சர் நாளுக்கு நாள் அதிகரித்த படியே இருக்கிறது’’ என முன்னோட்டம் கொடுத்துவிட்டு, குறிப்பு நோட்டைப் புரட்ட ஆரம்பித்தார் கழுகார்.“டி.டி.வி.தினகரன் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டோம்.‘அவர் மற்ற வேட்பாளர்களைவிட கூடுதல் நம்பிக்கையோடும், மற்ற வேட்பாளர்களைவிட கூடுதல் டென்ஷனாகவும் இருக்கிறார்” என்றார் கழுகார்.<‘‘டென்ஷனுக்கு என்ன காரணம்?‘‘மற்ற வேட்பாளர்களுக்கு ஆர்.கே. நகரில் தேறுவோமோ... மாட்டோமோ என்ற கவலை மட்டும்தான் இருக்கிறது. தினகரனுக்கு ஆர்.கே. நகர் தேர்தலோடு, ஃபெரா வழக்கு டென்ஷனும் இந்த நேரத்தில் சேர்ந்துள்ளது. அதுதான் அவருடைய டென்ஷனுக்குக் காரணம். ‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்?’ என்பதைத் தாண்டி, ‘அங்கே இடைத்தேர்தலே நடைபெறுமா?’ என்கிற சந்தேகங்கள் படர ஆரம்பித்திருக்கின்றன. இதற்குக் காரணகர்த்தா, தினகரன். அவர்மீதான ஃபெரா வழக்கை வைத்து அரசியல் சதுரங்கம் ஆட ஆரம்பித்திருக்கிறது பி.ஜே.பி.’’

கொடைநாடு எஸ்டேட் ஜெயாவால் எப்படி விழுங்க முடிந்தது ? ஜெயாவின் அடியாள் புரோக்கர் ராமசாமி உடையார்(போரூர் ராமசந்த்ரா மருத்துவ மனை) துணை...

கொடநாடு எஸ்டேட்டை சசிகலாவுக்கு வாங்கித் தர, ராமசாமி உடையார் குடும்பம் ஏன் உதவியது என்பதற்கு அரசியல் செல்வாக்கு மட்டும்தான் காரணமா? இல்லை அதைத் தாண்டி என்ன இருந்தது? வழக்கின் 89-வது சாட்சியான கொடநாடு எஸ்டேட் சொந்தக்காரர் பீட்டர் கிரேக் ஜோன்ஸ் என்ன சாட்சியம் அளித்தார்? அதையும் பார்ப்போம்.‘‘என் பெற்றோர் இங்கிலாந்து பிரஜைகள். எனக்கு நான்கு சகோதரிகள். எங்களுக்கு மொத்தம் 298 ஏக்கர் காபி எஸ்டேட் உள்ளது. காபி கொட்டைகளை ஏற்றுமதி செய்கிறோம். 1975-ல் கொடநாடு டீ எஸ்டேட்டை சுமார் 33 லட்சம் ரூபாய்க்கு வாங்கினோம். அப்போது, அதனுடைய விஸ்தீரணம் 958 ஏக்கர். 1976-ம் ஆண்டு அதில் 60 ஏக்கரை விற்றுவிட்டோம். மீதமுள்ள 898 ஏக்கர் எங்கள் வசமிருந்தது. இந்த எஸ்டேட்டை விலைக்கு வாங்கியபோது வங்கிக்கு 30 லட்சம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டியிருந்தது. அந்தக் கடன்  3.50 கோடி ரூபாயாக உயர்ந்தது. கொடநாடு எஸ்டேட்டை விற்க முயற்சி எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் ராஜரத்தினம், சசிகலா, உடையார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொடநாடு டீ எஸ்டேட்டை பார்த்தனர். 

மக்களே நீங்கதான் ஏப்பிரல் பூல் !

Karthikeyan Fastura:   மாட்ரிக்ஸ் படம் பார்த்திருப்பீர்கள். 2199 ஆம் ஆண்டில் உயிரோடு இருக்கும் மனிதர்கள் 1999இல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதாவது அவர்கள் உடல்கள் அனைத்தும் ஒரு கேப்ஸ்யுலில் வயர்களால் இணைக்கப்பட்டு இருக்கும். மூளையானது ஒரு சூப்பர் கம்ப்யுட்டருடன் இணைக்கப்பட்டு பிறந்தது முதல் இறப்பு வரை ஒரு கற்பனை உலகத்தில் 1999இல் மட்டுமே வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். நிஜமானது அவர்களின் உடம்பு மின்சாரம் உற்பத்தியாகும் ஒரு பாட்டரி செல்லாக மட்டுமே பாவிக்கப்பட்டு சக்தி அனைத்தும் உறிஞ்சப்படும்.
இப்போது நாம் வாழ்க்கையும் அப்படிதான். நம்மை சுற்றி கண்ணுக்கு தெரியாத எண்ணற்ற வயர்கள் இணைக்கப்பட்டு நம் சக்தி அனைத்தும் உறிஞ்சப்படுகிறது. பால், காய்கறி, பெட்ரோல், பஸ் கட்டணம், பிள்ளைகளின் கல்வி கட்டணம், வருமானவரி , இன்ஸ்யுரன்ஸ், பேங்க் கட்டணங்கள், குண்டூசி முதல் வாங்கும் எல்லாப்பொருளிலும் நுகர்வோரிடம் உறிஞ்சப்படும் வரி, வாகன வரி, சுங்க வரி, Cashless Payment என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் பிடிக்கப்படும் வரி என்று நடுத்தர வர்க்கத்தையும், ஏழை வர்க்கத்தையும் மேலே எழும்பவே முடியாத அளவிற்கு எவ்வளவு உழைத்தும் உறிஞ்சுக்கொண்டே இருக்கும் அரசாங்கம் மறுபக்கம் பணம் படைத்தவர்களுக்கு விலக்கு மேல் விலக்கு கொடுத்துக்கொண்டே இருக்கும்.
இந்த பொருளாதார சுரண்டலை மறைக்க மதவெறியையும், சாதிய ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்து தினம் தினம் மக்களுக்கு ஒரு பிரச்சனையை கொடுத்துக்கொண்டே இருந்து நம்மை சிந்திக்க விடாமல் செய்வது தான் இன்றைய அரசாங்கம் என்னும் பொருளாதார அடியாள் செய்யும் வேலை. சாதி, மதம், இனம் என்னும் சிரங்கை சொரிந்து கொண்டே இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை சரியாக செய்து மக்களை நையப்புடைத்து சக்கையாக பிழிந்து அவர்களின் உழைப்பை உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதில் மக்கள் ஏமாறாத நாள் , ஏமாறாத கணம் என்று ஒன்று தனியே இருக்கிறதா.. நமக்கு எல்லா நாளும் ஏப்ரல் ஒன்னு தான். வாங்க கொண்டாடுவோம் ஏமாளிகளே..   முகநூல் பதிவு

காதலியை சுத்தியலால் அடித்து கொன்ற காதலன் தற்கொலை!

திருப்போரூர்: மாமல்லபுரம் சவுக்குத் தோப்பில் சுத்தியலால் இளம்பெண்ணை அடித்து கொலை செய்த காதலன், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் காணிக்கைதாஸ். இவரது மகன் ஜான் மாத்யூஸ் (22). இவர், தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தார். சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகள் ஜெனிபர் (20). இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பெண்கள் கல்லூரியில் 3-ம் ஆண்டு பிசிஏ படித்து வந்தார்.

கங்கை அமரனை வரிக்கு வரி ஜாதியை சுட்டி பேசிய ஜாதிவெறி வானதி சீனிவாசன்


சென்னை: தமிழக பாஜக தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் வானதி சீனிவாசன் வரக் கூடாது என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு வானதியின் பேச்சு அமைந்து விட்டது. இவர் மட்டும் தமிழக பாஜக தலைவரானால் ஜாதி ரீதியாக பல பிரச்சினைகளுக்கு இவர் காரணமாக அமைவார் என்ற அச்சமும் எழுந்துள்ளது மக்கள் மத்தியில். வார்த்தைக்கு வார்த்தை எஸ்.சி., எஸ்.சி என்று இவர் அழுத்தம் திருத்தமாக கூறிய வார்த்தை மக்களை அதிர வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் வானதியின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து கொண்டுள்ளன. சட்டமெல்லாம் படித்தவரான, வானதி சீனிவாசன் இவ்வளவு பேசியும், மிகுந்த முதிர்ச்சியுடன், மிகுந்த நிதானத்துடன், மிகுந்த பொறுப்புணர்வுடன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பதிலை பலரும் வாயார பாராட்டி வருகின்றனர்.

நாடாரும், மார்வாடியும் காவிக்கும்பலுக்கு ஆதரவாகவும், இஸ்லாமியருக்கு எதிராகவும் இணைவது ஏன்?

vinayagar sathurthi rallyகீற்று : தமிழகத்தில் 1980 ஆம் ஆண்டு ஆரிய பார்ப்பனான ராமகோபாலன் என்ற ஆர்எஸ்எஸ் குடுமியின் தலைமையில், இந்து முன்னணி என்ற பயங்கரவாத அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட பின்னர், 1982 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அது நடத்திய மண்டைக்காடு கலவரம், 1998 ஆம் ஆண்டு கோவையில் நடத்திய கலவரம் ஆகிவற்றைத் தொடர்ந்து இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்த இந்தக் கும்பலுக்கு பொருளாதார உதவிகளை வாரிக் கொடுக்கும் கூட்டமாக வணிகம் செய்யும் நாடார் சாதியையும், குஜராத்தி மார்வாடி சேட்டுகளும் மாறிப் போயினர்.

குளத்தூர் மணி :இனி தோழமையை முடிவு செய்ய வேண்டியது இஸ்லாமிய அமைப்புகள்தான்!”

farook periyar 600பெரியார் இயக்கத்துடனான தோழமையை முடிவு செய்ய வேண்டியது, இஸ்லாமியர் அமைப்புகள்தான் - இதுவே கழகத்தின் நிலைப்பாடு என்று சென்னையில் பாரூக் படத்திறப்பு நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார்.
இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் இறை மறுப்பாளராக இருந்த ஒரே காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக் படுகொலைக்கு கண்டனக் கூட்டம் கருத்தரங்கமாக சென்னையில் மார்ச் 26 மாலை இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் கழக சார்பில் நிகழ்ந்தது. ‘பாரூக் படுகொலையும் நமது நிலையும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகரன், ‘சேவ் தமிழ்’ செந்தில், திருமுருகன் காந்தி (மே 17), வழக்கறிஞர் திருமூர்த்தி, இஸ்லாமியராக பிறந்தாலும், இஸ்லாமிய மதக் கருத்தியலை மறுக்கும் தோழர்கள் நடத்தும் நாத்திகர் பண்பாட்டுக் கழகம் சார்பில் அலாவுதின் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  கழகத் தோழர்கள் கவிஞர்கள் இரவி பாரதி, இராமசாமி வீரவணக்கக் கவிதைகளை வாசித்தனர்.

நன்கொடையில் முதல் இடம் பிடித்த ஷிவ் நாடார்!

அதிக நன்கொடை வழங்கியத் தமிழர் கடந்த ஆண்டில் அதிக நிதி நன்கொடையாக அளித்தவர்கள் பட்டியலில்  ஹெச்.சி.எல் நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் இந்தியாவிலேயே முதலிடத்தை பிடித்துள்ளார். பணத்தில் மட்டுமல்ல, குணத்திலும் தமிழர்கள் சிறந்தவர்கள் என்பதை இந்தியாவுக்கு எடுத்துக் காட்டியுள்ளார் ஷிவ் நாடார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார், கடந்த 1976-ம் ஆண்டு ஹெச்.சி.எல் நிறுவனத்தை தொடங்கினார். தற்போது இந்த நிறுவனத்தில் ஒன்றரை லட்சம் பேர் பணிபுரிகின்றனர். 32 நாடுகளில் ஹெச்.சி.எல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவை பி.எஸ்.ஜி தொழில் நுட்பக் கல்லூரியில் பட்டம் பெற்றபிறகு, டெல்லியில் உள்ள டி.சி.எம் (DCM)  நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த ஷிவ் நாடார், ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன், ஐ.பி.எம். நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

உச்சநீதின்றம் உத்தரவு: தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை அவசர அவசரமாக இடமாற்றம் செய்யும் தமிழக அரசு!

இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் நேற்றுடன் காலகேடு விதித்திருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் தமிழகத்தில் உள்ள மது கடைகளை மூட போதிய கால அவகாசம் தந்திருப்பதால் இனியும் அவகாசம் தர முடியாது என்றும் உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் திட்டவட்டமாக கூறியிருந்தது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களுக்கு செப். 30 வரை அவகாசம் தருவதாக உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. தமிழக அரசின் தரப்பு தேசிய நெடுஞ்சாலைகளின் 3321 கடைகள் இருப்பதாக சொல்லி இருக்கும் நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற உடனடியாக உத்தரவை பிறப்பித்து இருக்கிறது தமிழக அரசு.

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 100 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த பிப்ரவரி 15 ந் தேதி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 37 நாட்கள் போராட்டம் நடந்த்து. அந்த போராட்டங்களை தொடர்ந்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விவசாயிகள் விரும்பவில்லை என்றால் திட்டம் செயல்படாது என்று கடந்த 22 ந் தேதி சொன்னவர் 27 ந் தேதி நெடுவாசல் திட்டம் உள்ளிட்ட 31 திட்டங்களுக்கும் ஒப்பந்தம் கையெழுத்து போடப்பட்டது.

தமிழ் ராக்கர்ஸ் நிர்வாகி கைது செய்யபடுவார் .. இயக்குனர் மிஷ்கின் சூளுரை!

 எங்கள் அணி வெற்றியடைந்தால் ஒரே மாதத்தில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ அட்மின் கைது செய்யப்படுவார் என இயக்குநர் மிஷ்கின் ஆவேசத்துடன் குறிப்பிட்டார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் ஏப்ரல் 2-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணி, விஷால் தலைமையில் ஒரு அணி, கேயார் தலைமையில் ஒரு அணி என 3 அணிகள் போட்டியிடுகின்றன. இதில் விஷால் தலைமையிலான அணியின் கொள்கை, கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை விளக்கும் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தை கடுமையாக சாடிப் பேசினார் இயக்குநர் மிஷ்கின்.

வாகனப்பதிவுகளுக்கு இன்றுமுதல் ஆதார் கட்டாயம் ஆகிறது

சென்னை : புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண், பான் எண், மொபைல் போன் எண் ஆகியவற்றை அளிப்பது இன்று முதல் கட்டாயமாகிறது.
ஆதார் கட்டாயம் : இது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் போக்குவரத்துத் துறை கமிஷனர் தயானந்த் கட்டாரியா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதன்படி புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான பதிவு சான்றிதழில் ஆதார் எண், பான் எண், மொபைல்போன் எண் ஆகியவை கட்டாயம் இடம் பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.தினமலர்

நெடுவாசல் தீர்மானம் : போராட்டத்துக்கு ஆயத்தம்!

நெடுவாசலில் கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தம் கடந்த திங்கள்கிழமை கையெழுத்தானது. இதில், நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஜெம் என்ற கர்நாடகாவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதியை மாநில அரசு கொடுத்துவிட்டால் ஜெம் லெபாரட்டரி நிறுவனம் தன் பணியை தொடங்கிவிடும்.

பசுவதை .. ஆயுள் தண்டனை:குஜராத் அரசு! ஆனால் பசு இறைச்சி ஏற்றுமதி செய்யலாம்?

குஜராத்தில் இனி பசுவதை செய்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என, அம்மாநில அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, 1954ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட குஜராத் விலங்குகள் பாதுகாப்புச் சட்ட மசோதாவில் திருத்தம் செய்து, பசுக்களை கடத்துதல் மற்றும் வதைசெய்தல் முழுமையாக தடை செய்யப்பட்டது. அதிலிருந்து பசுவதை செய்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும்படியான சட்டம் குஜராத்தில் நடைமுறையில் இருந்து வந்தது.
தற்போது அதில் சில மாற்றங்களைச் செய்து புதிய சட்ட மசோதாவாக இன்று மார்ச் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை குஜராத் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வெள்ளி, 31 மார்ச், 2017

ஹிந்தி மொழி ஆதிக்கம் .. பானிபூரி விற்க மட்டுமே லாயக்கான மொழி..

Venkat Ramanujam
தமிழை அழிக்கவில்லை ஆங்கிலத்துக்கு பதிலாக தான் #ஹிந்தி என்று அழுகிறார்களே முஸ்லீம் பேரை கையில் பச்சை குத்தி மஹாத்மாவை கொலை செய்தும் கலவரம் துண்டை முயன்று தோற்று போன நாதுராம் #DNA வழித்தோன்றல்கள் .. தமிழர்கள் என்றில்லை ஹிந்தி பேசாத 800 milion speaking மாநிலங்களுக்கு ஆங்கிலம் வேண்டுமா ஹிந்தி வேண்டுமா என்று referandram கேட்டு பாருங்கள் 1200 million people speaking ஆங்கிலம் தான் வேண்டும் என்பார்கள் . ஆங்கிலம் தெரிந்த திராவிடர்கள் மாநிலத்தில் ( taminadu kerala karnataka andra telegana ) தான் #Software #exports US$ 160 billion 112000 கோடிகள் வருமானம் வந்து மேன்மை அடைந்து இருக்கிறார்கள் .. ஹிந்தி தெரிந்த மாநிலத்தில் பானிபூரி விற்க தான் லாயக்கு மற்றும் saravana bavan சர்வர் வேலைக்கு தான் லாயக்கு என்பது நடைமுறை என்று இந்த வழித்தோன்றல்களுக்கு நன்றாகவே தெரியும்.. #கீழடி விஷயத்தில் அதிகாரிகள் 25 பேர் குழுவை மாற்றி அமைந்ததற்கு தீர்ப்பாயம் தீர்ப்பின் மூலம் #செருப்படி வாங்கிய மோடியின் மத்திய அரசு சரிந்து கொண்டு வரும் #GDP #ஏற்றுமதி சரி செய்யவதை விட்டு விட்டு தமிழகத்தை நொய் நொய்ன்னு நோண்டாமல் இருக்க வேண்டும் .. முகநூல் பதிவு

ஆர் கே நகரில் கனிமொழிக்கு ஸ்டாலின் தடை ! 43000 நாடார் வாக்குகள் கனிமொழி உபயம் என்றாகி விடக்கூடாதாம்?

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் பிரசாரம் செய்ய ஸ்டாலின் தரப்பு விதித்த தடை நீடிப்பதால் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுகவின் செயல் தலைவரான பின்னர் கட்சி தொண்டர்களிடத்தில் நெருக்கமாக இருப்பதற்கான சில நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதே நேரத்தில் தமது குடும்ப உறுப்பினர்கள் யாருமே ஆதிக்கம் செலுத்திவிடாமல் 'கண்ணும் கருத்துமாக' இருந்து வருகிறது ஸ்டாலின் தரப்பு.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 43,000 நாடார் சமூக வாக்குகள் உள்ளன. திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியை களமிறக்கினால் எளிதாகவே நாடார் சமூக வாக்குகளை அள்ள முடியும் என்பது திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு.

நீதிபதி கர்ணன் :நீதிக்கு எதிராக நீதிபதிகள் !

சென்னை உயர்நீதி மன்ற ஊழல்கள் பற்றி பலரும் பேசிவிட்டனர் இவர்தான் தைரியமாக அதனைப்பற்றி பேசுகிறார் வெளிப்படையாக சொல்கிறார் அது பாராட்டுக்குரியது  மேலே வந்துவிட்ட ஒரு தலித்துக்கு எதிராக மற்றவர்கள் எளிதில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்பது இவருக்குப் புரியவில்லையோ என்னவோ? .அதிலும் வடஇந்தியர்களும் தெற்கு மேற்கு மாவட்டத்தாரும் ஒருநபரின் பெயரை அறிவதற்குமுன் சாதியைத்தான் பார்ப்பார்கள் என்பது கசப்பான உண்மை நேரடியான எதிர்ப்பில் இவர் வெற்றிபெறவே முடியாது. சாமர்த்தியமாக செயல்பட்டு மாட்டிவிடுவது ஒரு கலை அது இவருக்கு வராது . சாதியற்ற பாரதம் என்றுதான் உருவாகுமோ அன்றுதான் நேர்மையான நீதியும் கிடைக்கும்
இருபது நீதிபதிகள் மீது உள்ள குற்றச்சாட்டை உச்ச நீதி மன்றம் ஏன் விசாரிக்கவில்லை. நீதிபதி கர்ணன் மீது மட்டும் ஏன் அவசரம் ?
புதுடில்லி: இயற்கையாக கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக செயல்படுவதாக சுப்ரீம் கோர்ட் 7 நீதிபதிகள் மீது கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக விவசாயிகளின் 18ஆம் நாள் யுத்தம்! டெல்லி ஜந்தர் மந்தரில் கனிமொழி !


தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து 18வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வறட்சி காரணமாக பயிர்கள் கருகியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து விவசாயிகளின் தற்கொலைகள் நிகழ்ந்தன. அதனால், மத்திய அரசு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவு : ஸ்டாலின் டெல்லி பயணம்!


டெல்லியில் நடைபெறும் விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று 31 ஆம் தேதி வியாழன்கிழமை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.
விவசாயிகள் தற்கொலைக்கு நஷ்ட ஈடு, கடன் தள்ளுபடி, காவிரி மேலாணமை வாரியம், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 14ஆம் தேதி டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தொடங்கிய போராட்டம் 17ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களும், வடமாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டு வருகின்றனர்.

குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுக தயவு இல்லாமலே பாஜக வெற்றி பெறமுடியும் . இனி அதிமுகவின் தயவு தேவை இல்லை!


மின்னம்பலம்: பாஜக அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது, 75 நாட்களும் சசிகலா குழுவினர் கூறிய செய்திகளை எடுத்துக்கொண்டு, நடுவண் அரசின் எந்தத் தலையீடும் செய்யாமல் ராகுல் காந்தி வருகையால் பாதிக்கப்பட்டவர்களாக, ஓடி, ஓடி வந்து அன்றைய அதிமுக தலைமையையும், அவர்களின் அரசாங்கத்தையும் ஆதரித்து, உதவிசெய்யும் நோக்கிலேயே எல்லா வேலைகளையும் செய்து வந்தது. ஜெயலலிதா மரணத்துக்கு வந்த பிரதமர் மோடி, அங்கேயே ஓ.பன்னீர்செல்வத்தை கட்டிப்பிடிப்பதும், சசிகலாவை தலையில் கைவைத்து ஆறுதல் கூறுவதுமாகத்தான் இருந்தார்கள். இப்போது ஏன், மோடியின் நடுவண் அரசும், பாஜக-வும் இன்றைய அதிமுக அரசை ‘விழுந்து கடிக்கிறார்கள்?’ இடையில் நடந்து என்ன? அல்லது பாஜக-வின் ‘தந்திரம்’ இப்போது மாற்றப்பட்டுள்ளதா?

தென் கொரிய முன்னாள் குடியரசு தலைவர் கைது .. ஊழல் குற்றச்சாட்டு ..

அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பார்க் கியன் ஹை வெள்ளிக்கிழமையன்று சியோல் காவல் மையத்திற்கு வந்தார். அதிகார துஷ்பிரயோகம், ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சியோல் மாவட்ட நீதிமன்றம் பார்க்கின் மீதுள்ள லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், கட்டாயப்படுத்துதல், அரசு ரகசியங்களை வெளியிடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் நிமித்தம் அவரை கைது செய்ய உத்தரவிட்டது.
பார்க்கை கைது செய்வது அவசியம் எனவும், அவரை வெளியிட்டால் ஆதாரங்களை அவர் அழிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.

வீடு வாடகைக்கு எடுப்பது இலகுவல்ல ! இஸ்லாமியருக்கு மட்டுமல்ல?

ஜெயமோகன் :வாடகைக்கு வீடு கிடைக்காதது குறித்து மனுஷ்யபுத்திரன் தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மிகவும் அந்தரங்கமான கட்டுரை. அவர் என் நண்பர் என்பதனால் அது வருத்தம் அளித்தது. அவருக்கு வீடு கிடைக்கவேண்டும் என விரும்புகிறேன்
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உருவாகிவரும் இடைவெளியைப்பற்றி அச்சத்துடனும் ஆதங்கத்துடனும் நான் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். [வளரும் வெறி] சமூகவலைத்தளங்களில் கொதித்துக் கிளம்பினார்கள். இந்துக்களும் இஸ்லாமியரும் ஓருடல் ஈருயிராக மாமன்மச்சானாகப் பழகுவதாகச் சொல்லி பலநூறு கட்டுரைகள் வந்தன. அப்படி என்றால் நல்லதுதானே என நானும் எண்ணிக்கொண்டேன். இப்போது நான் சொன்னதையே வேறுவடிவில் ஹமீது சொல்லியிருக்கிறார்.
ஆனால் வாடகைக்கு வீடுகிடைப்பதைப் பற்றிய பிரச்சினையை இத்தனை எளிதாக இந்து -முஸ்லீம் பிரச்சினையாக ஆக்கிவிடமுடியுமா? உணர்ச்சிகரமாக அப்படி ஆக்கிக்கொண்டால் உண்மையான சிக்கலை நோக்கிச் செல்லமுடியுமா? மீண்டும் இந்துக்களைக் குற்றவாளிகளாக்க, இஸ்லாமியருக்கு இந்தத் தேசத்தில் இடமில்லை என்னும் வழக்கமான பாடலை இசைக்க, மட்டுமே அதனால் உதவும்
நான் நேரடியாக அறிந்த யதார்த்தத்தை மட்டுமே எழுதுகிறேன்.

யார் நமது எதிரிகள்? போராடும் இளைஞர்கள்..

thetimestamil.com : ஜல்லிக்கட்டு போராட்டம் அதன் தொடர்ச்சியாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம்,விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் என மாணவர், இளைஞர்கள் பல்வேறு வகைகளில் தங்களது சமூக அக்கரைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முகநூல், வாட்சப் போன்ற நவீன ஊடக தொடர்பு சாதனங்களால் விரைவாக பகிரப்படுகிற கருத்துகள்,அரசியல் உணர்வுகளின் இணைப்பு சாதனமாக வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. அரசியல் உணர்வுகள் தீவிரம் பெறுகிறது.
இந்த சூழலில் நமது சமகால பிரச்சனைகளை எவ்வாறு புரிந்து கொள்வது?இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் அடிப்படை காரணமாக இருப்பது என்ன?அரசு என்றால் என்ன?நாம் கோருகிற மாற்றம் என்ன?போன்ற அடிப்படை கேள்விகளுக்குள்ளாக நாம் சென்றாகவேண்டும்.
மேலும்,கடந்த அறுபதாண்டு கால ஆட்சி அதிகார முறையானது வெளிப்பார்வைக்கு மாபெரும் ஜனநயாக நாடாக காட்சியளிக்கிற காரண த்தாலும்,சினிமா,ஊடகம்,மாற்று சிந்தனை என அனைத்து தளங்களிலும் இந்த அதிகார முறை மீதான மயக்கங்கள் நீக்கமற கலந்துள்ள காரணத்தாலும் சமகால அரசியல் நிலைமைகளை புரிந்துகொள்வது மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது.

கலைஞரின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும்: மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கலைஞர், பேரவை உறுப்பினராகி இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
விரைந்து நலன்பெற்று மீண்டும் கலைஞரின் குரல் அங்கே ஒலிக்கும் நாளுக்காக தமிழகம் காத்திருக்கிறது எனதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அறிக்கை விவரம் வருமாறு:-"கலைஞரின் வழிகாட்டும் வைரவிழா""
உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே உங்களில் ஒருவன் எழுதும் பெருமித மடல்.">தமிழ்நாடு, தமிழ், தமிழர் நலன் காக்கும் திராவிடப் பேரியக்கமாம் கழகத்தின் சீரிய வரலாற்றில் ஒவ்வொரு நாளுமே பெருமைக்குரியவைதான். இன்றைய இனிய நாள் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. நூறாண்டு கடந்த திராவிட இயக்கத்தின் பயணத்தில் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக அயராது உழைத்து-இன்றும் நம்மை வழிநடத்துகிற ஆற்றல் மிக்க தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்த 60ஆம் ஆண்டு நிறைவு பெறுகிற தருணம் இது. 

யாருக்கு மாதவிலக்கு.. 70 மாணவிகளின் ஆடைகளை கழற்றி சோதனை..வார்டன் அட்டூழியம்


கழிவறையில் ரத்தக் கறை காணப்பட்டதால் யாருக்கு மாதவிலக்கு ஏற்பட்டுள்ளது என்ற சோதனை செய்ய 70 மாணவிகளின் ஆடைகளை கழற்றி வார்டன் அட்டூழியத்தில் ஈட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ: மாணவிகளை இழிவு செய்யும் வகையில் உறைவிடப்பள்ளியில் தங்கி இருந்த 70 மாணவிகளை வார்டன் உடைகளை அகற்றி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் கஸ்தூரிபா காந்தி பெண்கள் உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் இந்தியாவே அதிர்ச்சி அடையும் சம்பவம் அரங்கேறியுள்ளது. மாதவிலக்கின் போது வெளியேறும் ரத்தக் கழிவு கழிவறையின் ஏதோ ஒரு மூலையில் படிந்திருந்துள்ளது. முறையாக நீர் ஊற்றாமல் அப்படியேவிட்டுவிட்டு வந்த மாணவி யார் என்பதை கண்டறிய மிக கேவலமான வேலையை அந்தப் பள்ளியின் வார்டன் செய்துள்ளார்.

சுனைனா சிங் .... நாளந்தா பல்கலை கழக துணைவேந்தர் . பணம், பார்பனீயம், வெள்ளைத்தோல், ஊழல் போன்ற தகுதிகள் ...

பண்டைய இந்தியாவில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தில், இந்தியர்கள் மட்டுமல்லாமல், சீனர்கள், கிரேக்கர்கள், பாரசீகர்கள் என்று பல நாடுகளின் அறிஞர்கள் வந்து தத்துவப் பயிற்சிப் பெற்றுச் சென்றுள்ளனர். அன்றைய இந்தியாவின் தத்துவத்தை, கல்வியின் மகத்துவத்தை நாளந்தா உலகறியச் செய்தது என்றால் அது மிகையல்ல. கால மாற்றத்தில் படையெடுப்புகளால் நாளந்தா சிதைந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், சசிதரூர் போன்றவர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். நாளந்தா என்றால் ஞாலம் + தா = நாளந்தா என்றானது என்று சசிதரூர் குறிப்பிடுகிறார். நாளந்தா என்பது ஒரு தமிழ் பெயர்தான். இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் தமிழ்ப்பெயரில் அமைந்தது என்பதில் தமிழர்கள் பெருமை கொள்ளலாம்.

கோயம்பேடு மாணவி பாலியல் பலாத்காரம் கொலை .. கல்லூரி நிர்வாகி சரவணன் ...

சென்னை: சென்னை கோயம்படே்டில் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சின்மயாநகரை சேர்ந்த பள்ளி மாணவி உயிரிழப்புக்கு காரணமான பள்ளி நிர்வாகியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவி உயிரிழப்புக்கு காரணமான பள்ளி நிர்வாகி சரவணனை கைது செய்ய கோரி மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி மாணவியை சரவணன் பலாத்காரம் செய்ததால் மாணவி உயிரிழந்ததாக புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தினரகரன் 

புத்துயிர் பெறும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ... ஜெயலலிதாவின் மறைவால் சாத்தியமான அறிவு கருவூலம் ....

காழ்ப்புணர்வு அரசியலை நடத்திய ஜெயலலிதாவால், உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம், எச்சில் இலைகளைக் கொட்டும் குப்பை மேடான துயர வரலாறு பலரும் அறிந்ததுதான். ஜெ மறைவுக்குப் பின், காழ்ப்புணர்வு அரசியல் மெல்ல மறைந்து வருவதையும் செம்மொழிப் பூங்கா, பறக்கும் சாலை திட்டம் ஆகியவை மீண்டும் உயிர் பெறுவதையும் காணமுடிகிறது. இந்த வரிசையில் அண்ணா நூற்றாண்டு நூலகமும் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

மைல் கற்களில் இந்தி! எதிர்ப்பு முனை மழுங்கி விடவில்லை ... ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழ் மொழியை மட்டம் தட்டும் உணர்வில் செயல்பட்டால் பா.ஜனதா அரசு புதிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை சந்திக்கவேண்டியது இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பேராபத்து உருவாக்கும் விதத்தில் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு தமிழகத்தில் உள்ள வேலூர், கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் மைல் கற்களில் ஆங்கில எழுத்துகளை அழித்துவிட்டு இந்தியில் எழுதி வருவதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தேசிய நெடுஞ்சாலை 75, 77 ஆகிய முக்கிய சாலைகளின் வழியாக உள்ள மைல் கற்களில் இப்படி எழுதி, இந்தி ஆதிக்கத்தை கொல்லைப்புற வழியாகத் தமிழகத்திற்குள் கொண்டுவர துடிப்பது தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத பா.ஜனதாவின் எண்ண ஓட்டத்தை காட்டுகிறது.

இந்திய வம்சாவளி பெண் சவுதியில் படுகொலை .. மாரடைப்பு என சவூதி அரசு தில்லு முல்லு!

மலையகத்தில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற ஹட்டன் – மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்ட பெண்மணி ஒருவரின் சடலம் 5 மாதங்களுக்கு பிறகு அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி கற்பகவள்ளி (41) என்ற மூன்று பிள்ளைகளின் தாய், தனது பிள்ளைகளை விட்டு, குடும்ப வறுமைக்காக சவுதி சென்றுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு சவுதியின் றியாத் நகரில் செல்வந்தர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய இவர் அங்கு சித்திரவதைக்குள்ளானதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

RK நகர் தேர்தல் களநிலவரம் .. இந்து பத்திரிக்கை நேரடி ஆய்வு .. திமுக ...

பிரச்சாரத்துக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. களத்தில் நிற்கும் 62 வேட்பாளர்களில் மருது கணேஷ் (திமுக), இ.மதுசூதனன் (அதிமுக புரட்சித் தலைவி அம்மா), டிடிவி தினகரன் (அதிமுக அம்மா), கங்கை அமரன் (பாஜக), ஜெ.தீபா (எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை), ஆர்.லோகநாதன் (மார்க்சிஸ்ட்), மதிவாணன் (தேமுதிக) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாக உள்ளனர். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் தினகரன் தரப்பினர் தொப்பி சின்னத்தையும், ஓபிஎஸ் தரப்பினர் 2 விளக்குகளை கொண்ட மின்கம்பம் சின்னத்தையும் காட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் தவறாமல் செயல்படுத்துவேன் என்பது தினகரன் அளிக்கும் முக்கியமான வாக்குறுதி. குடும்ப ஆதிக்கத்தில் இருந்து கட்சியையும் ஆட்சியையும் விடுவிக்கவும், போயஸ் தோட்ட இல்லத்தை மீட்டு நினைவிடமாக்கவும் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று ஓபிஎஸ் தரப்பில் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஊழல் அதிகாரி ராம் மோகன ராவுக்கு மீண்டும் பதவி .. தமிழனைத் தவிர மற்ற எல்லாருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு.

சென்னை: ராம மோகன ராவிற்கு தொழிற்கு முனைவோர் மேம்பாட்டு இயக்குநராக மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தலைமை செயலாராக நியமிக்கப்பட்டவர் ராம மோகனராவ், இவருடைய வீட்டிலும், தலைமை செயலகத்தில் உள்ள இவருடைய அறையிலும் கடந்த டிச., 21ம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சுமார் 30 லட்ச ரூபாய்க்கு புதிய ரூபாய் நோட்டுக்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டாலும், அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதற்கிடையில் தலைமை செயலாளராக இருந்த ராம மோகனராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

தமிழகம், புதுச்சேரி... 6 மாநிலங்களில் லாரி ஸ்டிரைக் .. காய்கறி விலை உயரும்?

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு உயர்த்தியதற்கும், 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை போக்குவரத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டு இருப்பதற்கும் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சென்னை, தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை உயர்த்தியதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
மேற்கண்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று கோரியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் 30–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்(‘ஸ்டிரைக்’) ஈடுபடப்போவதாக தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.

வியாழன், 30 மார்ச், 2017

ஆன்லைன் விற்பனைகளை தூக்கி அடித்த நேரடி விற்பனைகள் !



கடைகள் மற்றும் வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் சில்லறை விற்பனை குறித்து ஜெப்ரா டெக்னாலஜி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில் ஆன்லைன் வாயிலாக பொருட்கள் வாங்கும் நடைமுறை அதிகரித்துவந்தாலும், நேரடி விற்பனை முறையில்தான் பெரும்பான்மையான விற்பனை நடைபெறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பாஜக ராஜாவின் கொடும்பாவி எரிப்பு .. சோனியாவை தரம் தாழ்ந்து பேசிய பாஜக...


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தரக் குறைவாக பேசியதாக ஹெச். ராஜா உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர் காங்கிரஸார். சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விஜய் இளஞ்செழியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது எச்.ராஜாவுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார்கள். அவரது உருவபொம்மையை தீவைத்து கொளுத்தினார்கள். பின்னர் விஜய் இளஞ்செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தரக் குறைவாக விமர்சித்த ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்க உள்ளோம். சோனியா காந்தியை ஹெச்.ராஜா தொடர்ந்து அவமதித்தால் அவருக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர்கள் விக்டரி ஜெயக்குமார், ஹசன் ஆரூண் மற்றும் டி.எம்.தணிகாசலம், அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மோட்டார் சைக்கிள் விலை கடும் வீழ்ச்சி 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வண்டிகள் 2 நாட்களில் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம்

மும்பை: பாரத் ஸ்டேஜ் -4 (பி.எஸ்.4) விதிமுறைகளை பூர்த்தி செய்யாத வாகனங்களை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அந்த பைக்குகள் விலை கிடுகிடுவென குறைந்துள்ளது.
 நாட்டில் புகை மாசுவை கட்டுப்படுத்த சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம், வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை வரையறுத்து விதிமுறைகள் வகுத்து வெளியிட்டு வருகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்து, பாரத் ஸ்டேஜ் (பி.எஸ்) 3 என்ற விதி முறை ஏற்கனவே அமலில் இருந்தது. இதன் பிறகு, கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாகன இன்ஜின் தயாரிக்கும் வகையில் பி.எஸ்-4 விதிமுறை, 2010முதல் நாடு முழுவதும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் உற்பத்தியைதான் அந்த அறிவிப்பு குறிக்கிறது, ஏற்கனவே உற்பத்தி செய்த வாகனங்களை விற்பனை செய்யவோ, ரிஜிஸ்டர் செய்யவோ வலியுறுத்தவில்லை என கருதின மோட்டார் வாகன நிறுவனங்கள்.

ரஜினி இலங்கை வருகை .. லைக்காவை பகைக்காமல் அடித்தட்டு மக்களை இழிவு படுத்தும் போலி தமிழின போராளிஸ் ..

த. கலையரசன்
யாழ்ப்பாண‌த்தில் ந‌ட‌ந்த‌ ர‌ஜ‌னி ஆத‌ர‌வு போராட்ட‌ம் தொட‌ர்பாக‌:
ஜ‌ல்லிக்க‌ட்டு மாடுக‌ளுக்காக‌ போராடிய‌வ‌ர்க‌ள், ர‌ஜ‌னிகாந்த் என்ற‌ ந‌டிக‌னுக்கான‌ போராட்ட‌ம் “நியாய‌ம‌ற்ற‌து” என‌க் கூறுகிறார்க‌ள். ஈய‌த்தை பார்த்து பித்த‌ளை இளித்த‌தாம் என்றொரு ப‌ழ‌மொழி உண்டு. எது நியாயம்? எது நியாயமற்றது? அதை தீர்மானிப்பது யார்?
இத‌ற்குப் பின்னால் உள்ள‌ வ‌ர்க்க‌ அர‌சிய‌லைப் புரிந்து கொள்ளுங்க‌ள். ஜ‌ல்லிக்க‌ட்டு மாடுக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ போராடிய‌வ‌ர்க‌ள், வாழ்க்கை வ‌ச‌திக‌ளை அனுப‌விக்கும் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இளைஞ‌ர்க‌ள். ஏற்க‌ன‌வே சொந்த‌ வீடு, உய‌ர் க‌ல்வி, உத்தியோக‌ம் எல்லாம் கிடைக்க‌ப் பெற்ற‌வ‌ர்க‌ள். ஆயிர‌ம் வ‌ச‌திக‌ள் இருந்தும் த‌மிழீழ‌ம் இல்லையே என்ப‌து ம‌ட்டுமே அவ‌ர்க‌ள‌து க‌வ‌லை.
ர‌ஜ‌னி என்ற‌ ந‌டிக‌னுக்காக‌ போராடிய‌வ‌ர்க‌ள், வாழ்க்கையில் எந்த‌ வ‌ச‌தியும‌ற்ற‌ அடித்த‌ட்டு உழைக்கும் ம‌க்க‌ள். போரினால் பாதிக்க‌ப் ப‌ட்டு, இட‌ம்பெய‌ர்ந்து குடிசைக‌ளில் வாழும் ஏழைக‌ள். அவ‌ர்களுக்கு லைக்காவோ, அல்ல‌து‌ தொண்டு நிறுவ‌ன‌மோ இல‌வ‌ச‌மாக‌ க‌ட்டிக் கொடுக்கும் வீடுக‌ளை ம‌ன‌முவ‌ந்து ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ள‌வ‌ர்க‌ள்.
லைக்கா க‌ட்டிய‌ வீடுக‌ளின் சாவிக‌ளை கொடுப்ப‌த‌ற்கு ர‌ஜ‌னிகாந்தை வ‌ர‌வ் சொன்ன‌தும் கார‌ண‌த்தோடு தான். அது த‌யாரிக்கும் எந்திர‌ன் ப‌ட‌த்திற்கான‌ விள‌ம்ப‌ர‌மும் இத‌ற்குள் அட‌ங்கியுள்ள‌து. லைக்கா த‌ன‌க்கு ஆதாய‌ம் கிடைக்கும் என்ப‌தால் தான், 150 வீடுக‌ளை ஏழைக‌ளுக்கு க‌ட்டிக் கொடுத்த‌து. இதைத் தான் கோயில்க‌ளில் அன்ன‌தான‌ம் கொடுக்கும் “வ‌ள்ள‌ல்க‌ளும்” செய்கிறார்க‌ள். எல்லாம் விள‌ம்ப‌ர‌ம் தேடும் ம‌லின‌ உத்தி தான் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை.

டெல்லியில் தமிழக விவசாயிகள் 17-வது நாளாக போராட்டம்... வாயில் கறுப்புத்துணி கட்டி...

வாயில் கறுப்புத்துணியை கட்டிக்கொண்டு தமிழக விவசாயிகள் டெல்லியில் இன்று போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் இருந்து பெருகும் ஆதரவால் 17 ஆம் நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் சார்பில் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் சுமார் 100 விவசாயிகள் போராட்ட துவக்கத்தில் இருந்தனர். டெல்லியில் கூடிவிட்ட சுட்டெரிக்கும் வெயிலால் பல விவசாயிகளின் உடல்நிலை குன்றத்துவங்கி உள்ளது. இதனால், போராட்டத்துற்கு வந்த விவசாயிகள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தாலும், தமிழகத்தின் மேலும் பல விவசாயச் சங்கத்தினர் டெல்லி வந்து குவிந்தபடி உள்ளனர்.

தலாக் தலாக் தலாக் விவாகரத்து வழக்கு : அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமிய பெண்களை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி: இஸ்லாமிய வழக்கப்படி "தலாக்' என்ற வார்த்தையை பிரயோகித்து விவகாரத்து செய்து கொள்ளும் நடைமுறை காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையால் பெண்களுக்கு பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இம்முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது குறித்து பதிலளிக்கும்படி, அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, 'நோட்டீஸ்' அனுப்பியது. முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை "தலாக்" என கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை அரசியல் சாசன விதிகளின்படி ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது  மாலைமலர்

கலைஞரை எதிர்ப்போம் அதுதான் எங்க அரசியல் கொள்கை .. எம்ஜியாரிசம் , ஜெயாவிசம், சசியிசம், பன்னீரிசம்.. ...

நீ திமுகக்காரன் என ஒப்புகொள், சும்மா ஏன் நடிக்கின்றாய்.." என பலர் வந்து இன்பாக்ஸில் கொதிக்கின்றார்கள், கொதிப்பவர்கள் யாரென்றால் அம்மா கோஷ்டி, கொஞ்ச நேரம் பேசியாகியது
"எல்லா கட்சிக்கும் அடிப்படை கொள்கை, கோட்பாடு உண்டு, அதிமுகவின் கொள்கை என்ன?"
அது..கொள்கை.....ம்ம்ம்.. அதெல்லாம் உனக்கு எதற்கு?
சொல்லுங்கள், கொள்கை இல்லாமல் என்ன கட்சி? அதனை ஏன் நடத்தவேண்டும்? சீமானின் கட்சிக்கு கூட கொள்கை இருக்கும் பொழுது, உங்களுக்கு ஒன்று இல்லாவிட்டால் எப்படி?
ம்ம்..அப்படியா கேட்கின்றாய் திமுக என்ன கிழித்தது? அவர்கள் கொள்கை என்ன?
அவர்களுக்கு தமிழ் , தமிழ்நாடு உட்பட பல கொள்கைகள் உண்டு, ஆட்சிக்கு வருமுன்னே பேச்சு தமிழை மாற்றினார்கள், "ஸ்ரீமான்களே" அன தொடங்கிய பொதுகூட்டத்தை "பெரியோர்களே.." என மாற்றினார்கள், அபேட்சகர் என இருந்த பெயரை வேட்பாளர் என மாற்றினார்கள், ஆட்சிக்கு வந்த பின் தமிழ்நாடு என மாநிலத்தை மாற்றினார்கள், "சத்யமேவே ஜயதே.." என்பதை "வாய்மையே வெல்லும்" என தமிழ்படுத்தினார்கள்..இன்னும்......
நிறுத்து..."அபேட்சகரா" அப்படி ஒரு வார்த்தை இருந்ததா?

பன்னீர் மீது ஸ்டாலின் பாய்ச்சல் பின்னணி!

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சராம் அனல் பறக்கிறது. திமுக வேட்பாளர் மருது கணேஷ்க்கு வாக்கு கேட்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கடந்த 28ஆம் தேதி ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் போட்டுப் பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் திமுக-வின் கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்றன. கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ஜெயலலிதா குறித்துப் பேசும்போது ‘அம்மையார் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் தாக்கிய செய்தி, அதன்பிறகு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு நடந்த சிகிச்சை, அதிலிருக்கும் மர்மங்களெல்லாம் பன்னீர்செல்வத்துக்கு தெரியுமா, தெரியாதா? கடைசி வரை முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தநேரத்தில், இரண்டாவது இடத்தில் நீங்கள்தானே அவரைப் பார்த்தது.

ஜெயலலிதா படம் போட்ட டைல்ஸ் ... அதிகாரிகள் கலக்கம்



தமிழகத்தில் அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள், சுனாமி வீடு, மீனவர்கள் குடியிருப்பு, பசுமை வீடுகளின் முகப்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா படம் பதித்த டைல்ஸ் ஒட்டினால்தான் பில் பாஸ்-செய்வார்கள் பி.டி.ஓ.-க்கள். கடந்த 2016இல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது, முதல்வர் ஜெயலலிதா உருவம் பதித்த டைல்ஸ்களை அரசு அதிகமாக கொள்முதல் செய்தது.
இந்நிலையில், ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மறைந்தபிறகு, தற்காலிக முதல்வராக ஓ.பி.எஸ். பதவியேற்றார். பின், அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுள்ளார்.
ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு குழப்பமான நிலையே தொடர்ந்து இருப்பதால், எதிர்க்கட்சியான திமுக-வினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

மெரீனாவில் திடீரென்று இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக ... ஹைட்ரோ காபனுக்கு எதிராக?

சென்னை: மெரினா கடற்கரையில் குழுக்களாக மாணவர்கள் அடுத்தடுத்து திரண்டு வருகின்றனர். 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென விவேகானந்தர் இல்லம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் இளைஞர்கள் அணி அணியாக மெரினாவுக்கு திரண்டு வருகின்றனர். அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசைக் கண்டித்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டனர். tamiloneindia

தலித் தலைவர்கள் மட்டுமல்ல தலித் இளைஞர்கள் கூட தடம் மாறுகிறார்கள்? முத்துகிருஷ்ணன் தற்கொலை .....

j-muthukrishnan-from-jnu
சேலத்தைச் சேர்ந்த தலித் பி எச் டி மாணவன் முத்துகிருஷ்ணனின் தற்கொலை நம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது. அது தொடர்பான செய்திகளை சமூக வலைதளங்களில் நிறைய பகிர்ந்துகொண்டோம்.
அச் செய்திகளில் ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தினை பலரும் தவறவிடுவதாக எனக்குத் தோன்றியது. ஆனால் அது குறித்து அந்நேரத்தில் எழுத தயக்கமாயிருந்தது. அது அபசுரமாகக் கருதப்படக்கூடும் என்ற அச்சம்.
தலித் மாணவர்களின் அவலநிலை குறித்து எல்லோரும் விவாதிதுக்கொண்டிருக்கும்போது நான் அதி மேதாவித்தனமாக, ஆனால் சற்றும் இரக்க உணர்வேயின்றி எழுதுகிறேன் என்று குற்றச்சாட்டுக்கள் எழக்கூடும் என்பதால் ஏதும் எழுதவில்லை. நேரம் வரட்டும் என்று நினைத்தேன்.

பஜகவினரே எதிர்பாராத காவி உத்தரபிரதேசம்?


PTI3_11_2017_000139B
சவுக்கு : உத்திரப்பிரதேச தேர்தல் முடிவுகள், பிஜேபியினரையே வியப்பில் ஆழ்த்தியிருக்கும்.   இது போன்ற பிரம்மாண்டமான வெற்றியை அவர்கள் எதிர்ப்பார்த்து இருக்க மாட்டார்கள்.  இந்துக்கள் பெரும்பாலாக இருக்கும் ஒரு நாட்டில், சாதி வேறுபாடுகளை கடந்து, இந்து என்ற ஒரு உணர்வை தட்டி எழுப்பி அவர்களை ஒரு நூலில் இணைக்கும் பணியில் பிஜேபி வெற்றி பெற்றிருப்பதாகவே இந்தத் தேர்தல் முடிவுகளை பார்க்க முடியும்.
இந்திரா மற்றும் ராஜீவ் மறைவுக்குப் பிறகு, சாதி மதம், மொழி பாகுபாடுகளைக் கடந்து அனைத்து பிரிவினருக்கும் ஏற்புடைய ஒரு தலைவர் இந்தியாவில் உருவாகவில்லை.   இதன் காரணமாகவே 1996க்கு பிறகு எந்த ஒரு கட்சிக்கும் மத்தியில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நிலை நீடித்து வந்தது. 

உபியில் மோடியின் வெற்றி கூறுவது என்ன?

aa-Cover-es6sbqcjc447k80jm3oai6o030-20170311095639.Mediசவுக்கு : உத்திரபிரதேசத்தில் பாரதீய ஜனதா ஈட்டியுள்ள இமாலய வெற்றியைக் கண்டு எல்லோருமே பிரமிக்கின்றனர். 2019ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அக் கட்சி மீண்டும் வெற்றி பெறும், மோடி ஆட்சி தொடரும் என்று பொதுவாக ஊகிக்கப்படுகிறது.
அதெல்லாம் சரி, அதன் பிறகு? ராமர் கோயில் கட்டுவார்களா? பொது சிவில் சட்டம் கொண்டு வருவார்களா? கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆர் எஸ் எஸ் ஷாகாக்களா? பாடத்திட்டத்தில் பாரதூர மாற்றங்கள் ஏற்படுமா? பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசுவார்களா? ட்ரம்புடன் சேர்ந்துகொண்டு முஸ்லீம்கள் இந்த நாட்டுப் பிரஜைகளே இல்லை என அறிவிப்பார்களா? இதற்கெல்லாம் விடையில்லை.

பொன்முடி : ஜெயலலிதா மரணத்தில் பன்னீர்செல்வத்தையும் விசாரிக்க வேண்டிய காலம் வரும்

ஓ.பன்னீர்செல்வம், பொன்முடி | கோப்புப் படம். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் விசாரிக்க வேண்டிய காலம் விரைவில் வரும் என முன்னாள் அமைச்சர் க.பொன்முடி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆர்.கே.நகரில் மார்ச் 28-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து முதல்வராக இருந்தபோது விசாரணை நடத்த உத்தரவிடாதது ஏன்? சேகர் ரெட்டியுடன் உள்ள தொடர்பு என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விக்கணைகளை தொடுத்திருந்தார்.

திங்கள், 27 மார்ச், 2017

குஷ்புவின் தைரியத்தில் 1000ல் ஒரு பங்கு கூட ரஜினிக்கு இல்லை..

திருமாவுக்கும், வேல்முருகனுக்கும் பயந்து வீட்டோடு முடங்கி கிடக்கின்றார் ரஜினிகாந்த் திருமாவிற்கு கூட பயமா? மிஸ்டர் ரஜினிகாந்த். குஷ்பூ கூட புலிகள் பயங்கரவாதிகள் என சொல்லிவிட்டு எவ்வளவு "தில்லாக சமாளித்தார். எத்தனை எதிர்ப்புகள், மிரட்டல்கள் வந்தாலும் எப்படி சமாளித்து நின்றார்?. அந்த தைரியத்தில் 1000ல் ஒரு பங்கு கூட ரஜினிக்கு இல்லை.. இத்தனைக்கும் தேசிய ஆளும் கட்சி, மாநில ஆளும்கட்சி எல்லாம் கொண்டாடும் நபர் ரஜினி, மோடி முதல் ஜெட்லி வரை அவருக்கு காத்திருப்பார்கள் அப்படி இருந்தும் இப்படி ஒரு பயமா? நாளை ரஜினி எந்த படத்தில் நடிக்கவேண்டும் என்பதை திருமாவளவன் தான் முடிவு செய்வார் போல‌ "அண்ணே ரஜினியினை 4 படம் நடிக்க சொல்லி சொல்லுங்கண்ணே, நீங்க சொன்னாதான் கேட்கிறாம்ணே".. இப்படி இனி தயாரிப்பாளர்கள் திருமா வீட்டு வாசலில் நிற்கலாம். இனி யாரெல்லாம் ரஜினியினை மிரட்ட போகின்றார்களோ.. "நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்.." பாடலை நினைத்தால் இப்பொழுது சிரிப்பு சிரிப்பாக வருகின்றது. தைரியம் என்றால் என்ன என்பதை குஷ்பூவிடம் இருந்து ரஜினி கற்றுகொள்வது நல்லது.. இதே லைக்கா நிறுவணம் குஷ்பூவினை விழாவிற்கு அழைத்திருந்தால் மிக தைரியமாக சென்றிருப்பார் அவர் அதுவும் 4 வார்த்தை "நச்சென்று" சொல்லிவிட்டுத்தான் சென்றுவருவார், அதுதான் குஷ்பூ,
Stanley Rajan முகநூல் பதிவு

பசுக்களை கொலை செய்தால் கை, கால்களை உடைப்பேன்!'

முசாபர்நகர் : உ.பி.,யில், பசுக்களை கொன்றாலோ, அவமரியாதை செய்தாலோ, அவர்களின் கை, கால்களை உடைத்து விடுவதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத், சமீபத்தில் முதல்வராக பதவியேற்றார். இந்த மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம், மாநில அமைச்சர் சுரேஷ் ராணாவை பாராட்டும் நிகழ்ச்சி நடந்தது; அதில் பங்கேற்று பேசிய, பா.ஜ., - எம்.எல்.ஏ., விக்ரம் சைனி கூறியதாவது: பசுக்களை அனைவரும், தாயாக மதிக்க வேண்டும். பசுக்களை கொன்றாலோ, அவமரியாதை செய்தாலோ, அவர்களின் கை, கால்களை உடைப்பேன். 'வந்தே மாதரம்' எனச் சொல்ல தயங்குபவர்களையும், 'பாரத் மாதாவுக்கு ஜே' எனச் சொல்ல கஷ்டப்படுபவர்களையும், சும்மா விடமாட்டேன். அவர்களின் கை, கால்களையும் உடைப்பேன்.

இரட்டை இலை சின்னத்தை முழுங்கிய பாஜக ....

அதிமுகவில் இரு தரப்பும் சின்னத்துக்கு உரிமை கோரிய நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் விவாதித்தார் அக்கட்சியின் தலைவர் அமித்சா. அவர்களோ, "தமிழக மக்களிடம் சின்னம்தான் பேசும். வேட்பாளர்களைவிட சின்னம் பார்த்து வாக்களிக்கும் மக்கள் இங்கு அதிகம். அதனால், இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலையை முடக்கிவிட்டால் அ.தி.மு.க. வாக்குகளை நாம் அறுவடைசெய்ய முடியும். ஜெயலலிதாவுக்காக அ.தி.மு.க.வை ஆதரித்து வந்தவர்களில் கணிசமானவர்கள் பா.ஜ.க.வைத்தான் ஆதரிப்பார்கள். அதனால் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு சின்னம் முடக்கப்படுவது நல்லது” என்று கூறியுள்ளனர். அமித்சாவும் அதை ஆமோதித்திருக்கிறார். இதை பிரதமர் மோடியின் கவனத்துக்கும் கொண்டுசெல்ல, அங்கு பச்சை சைகை காட்டப்பட்டுள்ளது. அதையடுத்து, வெளிநாட்டுக்குச் சென்றிருந்த தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி 21-ம் தேதி காலையில் டெல்லிக்குத் திரும்பியினார். அன்று இரவு அவருடன் அமித்சா 40 நிமிடம் பேசினார். மறுநாள் 22ஆம் தேதி சின்னம் ஒதுக்குவது குறித்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்தது.நக்கேஈரன்

நானே வாரிசுகள் ஒருபுறம்.. தமிழ்த்தாயின் அவலம் பாரீர் ?


மக்கள் பணி எதுவும்  ஆற்றிடாமல், திடீர் திடீரென்று முளைத்து, ‘நானே வாரிசு‘ என,  அரசியலைப் பாடாய்ப் படுத்தும் காமெடி ஒரு புறம் நடக்கிறது. இன்னொரு புறமோ,    போற்றுதலுக்கு உரியவர்களின் வாரிசுகள் அலைக்கழிக்கப்பட்டு வரும் கொடுமையும் நடந்த வண்ணம் இருக்கிறது."நீராரும் கடலுடுத்த'…எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அறியாதவர்கள் கிடையாது. தனது படைப்பான  மனோன்மணீயம் என்னும் கவிதை நாடக நூலில் வரும் இந்தப் பாடலை எழுதியவர் பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை.  1970-இல், இந்தப் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக கலைஞர் தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது. அதுவே பாடநூல்களிலும் இடம் பெற்றது. ஆண்டுகளே வாழ்ந்த சுந்தரனார், தத்துவப் பேராசிரியராக, கல்லூரி முதல்வராக, வரலாற்று ஆராய்ச்சி அறிஞராகத் திகழ்ந்தவர். திருநெல்வேலி பூர்விகம் என்றாலும்,  கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் பிறந்தவர் சுந்தரம் பிள்ளை.  திராவிட இன ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர், தென்னிந்தியாவில் திராவிட இன உணர்வுக்கும் வித்திட்டார்.தன்னுள் பொதிந்திருந்த திராவிட உணர்வு குறித்து சுந்தரனாரே வெளிப்படுத்திய சம்பவம் இது :‘1982-இல், தான் மேற்கொண்ட ஆன்மீகப் பயணத்தின் போது, என் வீட்டுக்கு விருந்தினராக வந்தார் விவேகானந்தர்.  விருந்துக்குப் பிறகு, பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, எதிர்பாராத வகையில், என்னைப் பார்த்து, “தங்களின் கோத்திரம் என்ன?” என்று கேட்டார் விவேகானந்தர். நான் ஒரு நிமிடம் அமைதி காத்தேன். வேறு யாரேனும் இது போன்ற வினாவினை எழுப்பியிருந்தால், நான் வெகுண்டிருப்பேன். விருந்துக்கு வந்த உத்தம நண்பர் என்பதால், அவரிடம் மெல்லிய குரலில், ‘எனக்கும் கோத்திரத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன்.’ என, ஆத்திரமின்றி, விவேகானந்தரின் கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்.’ என்று தனது குறிப்பு புத்தகத்தில் எழுதியிருக்கிறார் சுந்தரம் பிள்ளை.

ஞாயிறு, 26 மார்ச், 2017

19 பேர் வாபஸ் வாங்கினால் மின்னனு வாக்குப்பதிவு: இல்லையேல் வாக்குச்சீட்டு முறை

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 127 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. வேட்பு மனுக்கள் பரிசீலனையில் 45 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 82 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை நாளை வரை வாபஸ் வாங்கலாம். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும். தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் 82 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் 12 பேர் மாற்று வேட்பாளர்களாக உள்ளனர். இந்த மாற்று வேட்பாளர்கள் நாளை அல்லது நாளை மறுதினம் வாபஸ் வாங்குவார்கள். மேலும் சிலரும் வாபஸ் வாங்கலாம். இறுதியாக 63 வேட்பாளர்களுக்கும் குறைவானவர்கள் களத்தில் இருந்தால் மட்டுமே, தேர்தலின்போது வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த முடியும்.

அயோத்தி விவகாரம் - வெர்சையில்ஸ் ஒப்பந்தம் போலாகுமா?

என்னுடைய தோழி ஒருவர் நிறைய செய்தித்தாள்களை அள்ளி மேஜை மீது வைத்தார். எனக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தார். “நண்பா... நமது இஸ்லாமியர்கள் வெர்சையில்ஸ் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஜெர்மானியர்கள் உணர்ந்ததைப்போல இப்போது உணர்ந்திருக்க வேண்டும்” என்றார்.

வெர்சையில்ஸ் ஒப்பந்தம்
நான் புரியாமல் குழம்பிப் போனேன். எனக்கு வெர்சையில்ஸ் ஒப்பந்தத்தை பற்றி ஞாபகமே இல்லை. முதல் உலகப்போரின் முடிவில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. அவமானப்படுத்தும்விதமாக மட்டும் இந்த ஒப்பந்தம் ஜெர்மனியின் மீது திணிக்கப்படவில்லை, முதல் உலகப்போரை தூண்டியதற்காக குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்து, இந்த ஒப்பந்தத்தில் ஒப்புதல் வாங்கப்பட்டது. போரில் ஜெர்மனி முறியடிக்கப்பட்டதால் அந்த ஒப்பந்தத்தை ஜெர்மனி ஒப்புக்கொண்டது.
ஆனால், எனக்கு புரியவில்லை. “என்னைச் சுற்றி எந்த ஒரு போரும் நடக்கவில்லையே... போர் இல்லாமல் ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் இல்லையே” என்றேன்.
எனது சந்தேகத்தை தீர்க்கும்விதமாக எனது தோழி பதிலளித்தபோது, பாபர் மசூதி பிரச்னையில் தலைமை நீதிபதி கேகார் நடுவராக இருந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என கூறியதை சுட்டிக்காட்டினார். இப்பிரச்னையில் இரு வழக்காளிகள் இருக்கிறார்கள். ஒருவர் இஸ்லாமியர்களும் மற்றவர் இந்துக்களும் ஆவர்.