"தேமுதிக-வில் பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தபோது
அதிமுகமீது மென்மையான போக்கைத்தான் கடைப்பிடித்தார். எப்படியாவது அதிமுக
கூட்டணியில் தேமுதிக-வை சேர்த்துவிடத் துடித்தார். நினைத்ததுபோலவே
கூட்டணியும் அமைத்தார். சில காலத்துக்குப் பிறகு தேமுதிக-வில் இருந்து
விலகி, அதிமுக-விலேயே ஐக்கியமாகிவிட்டார்.
இப்போது திருநாவுக்கரசரையும் திமுக அப்படித்தான் பார்க்கிறது. அதிமுக, பிஜேபி என மாறி காங்கிரஸுக்கு வந்தவர் திருநாவுக்கரசர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆகிவிட்டார் திருநாவுக்கரசர். ஆனாலும் அதிமுக மீதான பாசம் மட்டும் அவருக்கு குறையவே இல்லை என்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைக்கலாம் என ராகுல் காந்திக்கு அப்போது ஐடியா கொடுத்து காய் நகர்த்தியவர் திருநாவுக்கரசர். ஆனால் அது நடக்கவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு திருநாவுக்கரசர் தலைவராக ஆனபிறகும்கூட அதிமுக பற்றியோ, ஜெயலலிதா பற்றியோ விமர்சனங்கள் எதுவும் முன்வைக்காமல் தவிர்த்துவந்தார் திருநாவுக்கரசர். ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆனதிலிருந்து தினமும் ராகுலுக்கு அப்டேட் கொடுத்தவரும் திருநாவுக்கரசர்தான்.

விகடன்,காம் ; காவிரிக்காக உண்ணாவிரதம்!செப்டம்பர்
22-ம் தேதி இரவு 9 மணி. போயஸ் கார்டன் தூங்கி வழிந்துகொண்டு இருந்தது.
ஆனால், 9 மணிக்குப் பிறகு, வேதா நிலையத்துக்குள் இருந்து, மெல்லக் கிளம்பிய
தகவல், “காவிரிப் பிரச்னைக்காக முதலமைச்சர் ஜெயலலிதா உண்ணாவிரதம்
இருக்கப்போகிறார்; அதற்காக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்; சசிகலா
புஷ்பாவை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் பேசினார்’’ என்றெல்லாம்
சுற்றி, கடைசியில் அப்போலோவில் போய் நின்றது. போயஸ் கார்டனில் இருந்து ஒரு
ஆம்புலன்ஸ் கிளம்பி, கிரிம்ஸ் ரோடு அப்போலோ போனது என்று தகவல் உறுதி
செய்யப்பட்டது.