சனி, 15 அக்டோபர், 2011

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரம், சேலத்தில் வசமாக சிக்கினார்!!

தமிழகத்தில் காங்கிரஸ்காரர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். வெளியே உள்ள எதிரிகளைப் பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. போதும் போதும் என்னும் அளவுக்கு, உள் வீட்டிலேயே எதிரிகளை கூடவே வைத்திருக்கும் பாக்கியசாலிகள் அவர்கள்.
பொதுவாக காங்கிரஸ்காரர்களுக்கே இந்த சிறப்பு அம்சம் இருந்தால், தமிழகத்தில் அவர்களுக்கு எல்லாம் மகா தலைவராக உள்ள தங்கபாலு ஐயாவுக்கு இந்த சிறப்பு அம்சம் எவ்வளவு உச்சத்தில் இருக்க வேண்டும்?
அவருக்கு வஞ்சகம் செய்யாமல் வாரிக் கொடுத்திருக்கிறார் கடவுள். “2ஜி ஊழல் குற்றச்சாட்டு குறித்து ப.சிதம்பரம் மீது உரிய நேரத்தில், உரிய நடவடிக்கை எடுப்பார் சோனியா” என்று சேம்-சைட்-கோல் போட்டு அதிர வைத்திருக்கிறார் இந்த தங்கத் தலைவர்.
தமிழகத்தை ஒரு வழி பண்ணாமல் விடுவதில்லை என்ற வைராக்கியத்துடன், தமிழகம் முழுவதும் சூறாவளி (!) சுற்றுப் பயணம் செய்து, தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் தலைவர். பிரச்சாரத்தின் நிறைவு நாளான இன்று, அண்ணனின் பாதக் கமலங்கள் சேலத்தில் பதிந்தன.

ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை...: விஜயகாந்த் புலம்பல்


அழகிரியின் கோட்டையான மதுரையில் திமுக வேட்பாளராக பாக்கியநாதனும், அதிமுக வேட்பாளராக மாஜி எம்பியான ராஜன் செல்லப்பாவும், விஜயகாந்த் கட்சியான தேமுதிக சார்பாக கவியரசும், காங்கிரஸ் கட்சி சார்பாக சிலுவையும், மதிமுக சார்பாக பாஸ்கர சேதுபதி மற்றும் சுயேட்சை உள்பட 28 வேட்பாளர்கள் மதுரை மாநகராட்சி மேயர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

மு.க.அழகிரியின் விருப்பப்படி பாக்கியநாதனும், மு.க.ஸ்டாலின் ஆதரவாளர் கே.ராமச்சந்திரனம், கலைஞர் சார்பாக பொன்.முத்துராமலிகமும் சீட்டு கேட்க, சில நாட்கள் இழுபறிக்கு பின்னர் மு.க.அழகிரியின் ஆதரவாளர் பாக்கியநாதன் களம் இறக்கப்பட்டார். களம் இறக்கிய கையோடு மு.க.அழகிரி, இன்று வரை பாக்கியநாதன் பிரச்சாரத்திற்கு வரவில்லை. அழகிரி வராதது பாக்கியநாதன், பாக்கியமில்லாத வேட்பாளராக களத்தில் உள்ளார்.

நயன்தாரா -பிரபுதேவா காதல் முறிந்தது : திருமணம் ரத்து?


டிகை நயன்தாரா மலையாள நடிகர் மோகன்லாலை  காதலித்து பின்னர் பிரிந்ததாக கூறப்படுகிறது.  இதையடுத்து நடிகர் சிம்புவை காதலித்து பிரிந்தார்.
இதையடுத்து நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை வந்தது.  இப்போதும் அந்த
காதலும் முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
நயன்தாரா -பிரபுதேவா காதலுக்கு பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். தனது கணவரை நயன்தாராவிடமிருந்து மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியேறினார் ரமலத்.

எதியூரப்பா கைது;டிராமாவுக்கு' பின் சிறையில் நில மோசடி வழக்கு

Yeddyurappa
பெங்களூர்: பெருமளவில் லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசு நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு முறைகேடாக ஒதுக்கிய வழக்கில், கர்நாடக பாஜக மாஜி முதல்வர் எதியூரப்பாவின் ஜாமீன் மனுவை லோக் ஆயுக்தா நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து அவர் இன்று பெரும் 'டிராமாவுக்கு' பின் கைது செய்யப்பட்டார்.
இந்த நில மோசடி விவகாரத்தில் எதியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, ராகவேந்திரா மருமகன் சோகன்குமார் உட்பட 5 பேர் மீது லோக் ஆயுக்தா வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி இவர்கள் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

விருப்பு வாக்கு தேர்தல் முறை விரைவில் மாற்றப்படும்

ஜே. ஆர். ஜயவர்தன ஜனாதிபதியாக இருந்த போது தன்னுடைய ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் எதிர் காலத்தில் நடக்கும் சகல தேர்தல்களிலும் மாபெ ரும் வெற்றியை அடைய வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, இலங்கையில் நடைமுறையில் இருந்து வந்த தேர்தல் முறையை மாற்றியமைத்து விருப்பு வாக்கு தேர்தல் முறையை அறிமு கம் செய்த தினத்திலேயே, எங்கள் நாட்டின் ஜனநாயக முறை யில் நடைபெறும் தேர்தல்கள் சீர்குலைந்து, வன்முறை கலாசா ரமொன்று தேர்தல் காலத்தில் உருவெடுப்பதற்கான அடித்தள த்தை அமைத்தார்.

Imelda Sukumar:வன்முறைகளை எதிர்த்து வீதியில் இறங்கத் தயார்

யாழில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை எதிர்த்து வீதியில் இறங்கத் தயார்

யாழ்.குடாநாட்டில் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகள் ஆதாரங்கள் மூலம் தமக்குக் கிடைக்கப் பெற்றிருப்பதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமர் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எனக்கு கடிதங்களாகவும், சீடிகள் மற்றும் தகவல் மூல ஆவணங்களாகவும் கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே, தயவு செய்து பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் முதலில் அதை நிறுத்துங்கள்.

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான சம்மனை (புலிகளின்)தமிழ்நெட் இணையத்தில் வெளியிடமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

அமெரிக்காவின் கொலம்பியா நீதிமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட சம்மனை ராஜபக்ச தொடர்ந்து வாங்க மறுத்ததால் அதனை (புலிகளின்)தமிழ்நெட் இணையத்தில் வெளியிடமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் மகிந்த ராஜபக்ச மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் போர்க்குற்ற வழக்குகளே. இவற்றின் மீது பிறப்பிக்கப்படும் அழைப்பாணை (சம்மன்) எதையும் ராஜபக்சவோ இலங்கை அரசோ பெற்றுக் கொள்ளாமல் திருப்பியனுப்புவது வழக்கமாகி உள்ளது.

புலிகளுக்கு உதவி நாடுகள் தகவல்களும் வெளியிடப்படும்

வெளிநாடுகளில் உள்ள புலிகளுக்கு சொந்தமான பெரும் தொகையான பணம் சுவிஸ் வங்கிகளில் இருப்பதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்!

வெளிநாடுகளில் உள்ள புலிகளுக்கு சொந்தமான பெரும் தொகையான பணம் சுவிஸ் வங்கிகளில் இருப்பதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா ஆட்சியில் இதுவரை 154 கொலை, 165 கொள்ளை, 102 செயின்பறிப்பு, 27 வழிப்பறி: கலைஞர்


சென்னை மாநகராட்சி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திருவான்மியூரில் 14.10.2011 அன்று நடந்த தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
உள்ளாட்சிகளில் நாம் வெற்றி பெறுவதை தடுப்பதற்காக ஆளுங்கட்சியாக பொறுப்பேற்ற, தினந்தோறும் நம்மை வதைத்துக் கொண்டிருக்கிற, ஏழை எளியோர்களை வாட்டிக் கொண்டிருக்கிற கட்சியின் பெயரை நான் சொல்ல மாட்டேன் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும், முன்னணி வீரர்களை முடக்கிப் போட வேண்டும், சிறையில் தள்ளிவிட்டு தேர்தலை நடத்தி தேர்தலில் வேலை செய்யக் கூட தி.மு.க.வினர் அஞ்சிட வேண்டும் என்று அதற்கான பணிகளை, ஆதாரங்களை சேர்த்து வைத்துக் கொண்டு நம்மை விரட்டிக் கொண்டிருக்கிற ஆட்சி தான் ஜெயலலிதா தலைமையில் நடக்கும் ஆட்சி.
இந்த ஆட்சியில் கொள்ளையர்கள் ஆந்திராவுக்கு ஓடிவிட்டனர் என்று கூறினார். இந்த ஆட்சியில் இதுவரை 154 கொலை, 165 கொள்ளை, 102 செயின்பறிப்பு, 27 வழிப்பறி நடந்துள்ளது. அமைதியாக ஜெயலலிதா ஆட்சி இருக்கிறது என்பதற்கு அடையாளங்களா? சட்டம், ஒழுங்கு, அமைதி இப்படி இருக்கிறது. இவ்வாறு பேசினார்.

அளவுக்கதிகமான ஆஞ்சியோகிராம் சிறுநீரகத்தை பாதிக்கும்

இதயநோய் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக ஆஞ்சியோகிராம் செய்வது வழக்கம் ஆனால் அவசியமில்லாமல் அடிக்கடி ஆஞ்சியோகிராம் செய்து கொள்வது சிறுநீரகத்தை பாதிக்கும் என இருதய நோய் நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆஞ்சியோகிராம் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடைமுறைகளால் அதிக அளவில் கதிர்வீச்சுக்கு உள்ளாகி பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அறிவாலயத்தைத் தொட்டால் ஆட்சிக்கு முடிவு: கருணாநிதி ஆவேசம்


சென்னை, அக். 14: அண்ணா அறிவாலயத்தைத் தொடும் நாள்தான் அதிமுக ஆட்சிக்கு முடிவு நாளாக இருக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி பிரசாரப் பொதுக்கூட்டத்தில் எச்சரித்தார்.  தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் மேயர் வேட்பாளர் மா.சுப்பிரமணியன், மன்ற உறுப்பினர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரப் பொதுக்கூட்டம் திருவான்மியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில் கருணாநிதி பேசியது:  "நிலங்களை மீட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் ஒப்படைப்பதாகச் சொல்கின்றனர். எத்தனை பேருக்கு எவ்வளவு நிலம் இப்படி ஒப்படைக்கப்பட்டது என்று கேட்டால் அரசிடம் பதில் இல்லை. ஊரை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே இப்படிக் கதை கட்டுகிறார்கள்.

காவல் நிலையம் எதிரே இன்ஸ்பெக்டர்&முன்னாள் போலீஸ் கட்டிப்புரண்டு சண்டை

வேலூர் காவல் நிலையம் எதிரே நடுரோட்டில் இன்ஸ்பெக்டரும், முன்னாள் போலீஸ்காரரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் அடுத்த சித்தேரியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. போலீஸ்காரராக பணியாற்றிய இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இவர் அடிக்கடி வேலூர் தெற்கு காவல் நிலையத்துக்கு வந்து, போலீஸ் அதிகாரிகளை பற்றி தரக்குறைவாக திட்டிக்கொண்டு இருப்பார்.

மக்கள் ரசனையில் குறையில்லை..வசந்தபாலன்

மக்கள் ரசனையில் குறையில்லை... நல்ல படங்கள் அதற்கான மரியாதையைப் பெற்றே தீரும்! - வசந்தபாலன்


பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் மீது படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் வைக்கும் குற்றச்சாட்டு, 'ரசனை மாறிவிட்டது' என்பதுதான். நல்ல படம் கொடுத்தாலும் ரசிக்கமாட்டேன் என்கிறார்களே என பலரும் புலம்புவதைக் கேட்க முடிகிறது.

ஆனால் வசந்த பாலன் பார்வை வேறு. மக்கள் ரசனையில் பழுதில்லை. நல்ல படைப்புகள் அவற்றுக்குரிய மரியாதை - அங்கீகாரத்தைப் பெற்றே தீரும், என்கிறார்.

யாழில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி கொள்ளையில் ஈடுபட்டோர் மடக்கிப்பிடிப்பு

கொள்ளை மற்றும் மக்களை மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்ட யாழ் பல்கலைகழக மாணவரொருவர் உட்பட 4 பேர் கொண்ட குழுவொன்றை நேற்று(ஒக்-14) பொதுமக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.
இக் குழுவினர் தங்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவர்கள் எனக் கூறி உஸ்ஸன் முருசுவில் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டினுள் நுழைந்ததாகவும், பதிவுசெய்வதற்காக வருகை தந்திருப்பதாக கூறி, பின் குடும்ப அங்கத்தவர்களை மிரட்டி அங்கிருந்த 130,000 ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் கையடக்க தொலைபேசியை திருடி வீட்டை விட்டு வெளியேறும் போது அயலவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார்கள் என கொடிகாமம் பொலிஸ் தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட சம்பவத்தின் மூலம் இராணுவத்தினரின் பெயரை குறிப்பிட்டு பலர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவது தெளிவாகின்றது.

லியம் பொக்ஸ் இராஜினாமா லியம் பொக்ஸ் இராஜினாமா


லியம் பொக்ஸ் இராஜினாமாபிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையின் இறுதிப்போர் இடம்பெற்ற காலத்திலும் ஏனைய காலப்பகுதியிலும் லியம் தமது இலங்கை விஜயத்தின் போது தமது நண்பரான அடம் வெரிட்டி என்பவரையும் அழைத்து சென்றதுடன், ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் உட்பட்ட பலரையும் சந்திக்கும் போது நண்பரும் இருந்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் லியம் பொக்ஸ், பிரித்தானிய நிழல் பாதுகாப்பு அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார். இது பிரித்தானிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் என்று அண்மையில் சனல் 4 வெளியிட்ட செய்தியில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இப்பின்னணியில், இன்று அவர் ராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த துமிந்த சில்வாவின் மூளையில் பாதிப்பு!

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. இதேவேளை கண்களுக்கோ கண்பார்வைக்கோ எந்தவொரு பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.மண்டையோட்டில் துப்பாக்கிச் சன்னம் இருக்கின்றமையால் குணப்படுத்துவதற்கு சில நாட்களாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் முழுமையாகக் குணமடைவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று குறிப்பிடப்படவில்லை.
முல்லேரியாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் உட்பட ஐவர் பலியானதுடன் துமிந்த சில்வா உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வாழ்க, தலைவர்கள்! தலைவர்கள் காமெடி


ramathasKARUNANIDHI-0309நகைச்சுவை உணர்வில் தமிழக அரசியல் தலைவர்களை மிஞ்சக் கூடிய தலைவர்கள், மற்ற மாநிலங்களில் இருப்பார்களா என்பது சந்தேகமே. நம்மூர் தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு காமடி கருத்துகளைச் சரமாரியாக வெளியிடுவதால், யாருடைய காமடியைப் பாராட்டுவது என்ற குழப்பமே ஏற்பட்டு விடுகிறது.
‘சட்டசபைத் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டிருந்தால், 40, 50 தொகுதிகளில் ஜெயித்திருக்கும்’ என்று சீரியஸாக ஜோக் அடித்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். தனியாக நின்றால் நாற்பது, ஐம்பது இடங்களில் ஜெயிக்கக் கூடிய கட்சி எதற்காக 30 இடங்களுக்கு ஒப்புக் கொண்டு தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது என்று கேட்கிற அளவுக்கு சிந்திக்கக் கூடியவர்கள், பா.ம.க.வில் இருக்க மாட்டார்கள் என்ற தன்னம்பிக்கைதான் அவரது பலம்.

அமெரிக்கா கோரியதைக் காட்டிலும் குறைவாக ராஜரட்னம் 11 வருட சிறைத் தண்டனையே பெற்றுள்ளார்.

 ரொய்ட்டர் செய்தியாளர் --  கிரான்ட் மக்கூல் 
    rajaratnam 151011
  • அரச வழக்கறிஞ்ர்கள் குறைந்தது 25 வருடங்களையாவது பெற்றுக் கொடுக்க தீவிரமாக முயன்றார்கள்
  • இடர் நிதிய மேலாளர் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்கிறார்
  • பேர்னாட் மடோஃப் இருக்கும் அதே சிறையையே இவரும் கேட்கிறார்
  • உடனடி சிறுநீரக செயலிழப்பை எதிர்நோக்குகிறார் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்
சுயமாக உருவாக்கிக் கொண்ட இடர் நிதிய ஜாம்பவான் ராஜ் ராஜரட்னம் இந்த தலைமுறையிலேயே மிகப்பெரிய வோல் ஸ்ரீட் பங்கு விற்பனை மோசடியில் ஈடுபட்டதுக்காக தண்டனை விதிக்கப் பெற்றார். உள்ளக பங்குப் பரிவர்த்தனையில் முன்னெப்போதும் விதிக்கப் பட்டிராத மிக அதிகபட்ச தண்டனையாக 11 வருட சிறைவாசம் அனுபவிக்கும்படி ஆணையிடப் பட்டுள்ளது. ஆனால் இது அரச வழக்கறிஞ்ர்கள் கோரியதிலும் எவ்வளவோ குறைவானது.

வெள்ளி, 14 அக்டோபர், 2011

கலைஞர் அனுப்பிய ஆளை, ‘வெறும் கையுடன்’ திருப்பி விட்டார் ஆ.ராசா!

புதுடில்லி, இந்தியா: “ஏங்க, ராசா அதிரடியா வம்பு பண்ண தொடங்கிட்டாராமே” இந்தப் பேச்சு தற்போது தி.மு.க. வட்டாரங்களில் அடிபடுகிறது. இவர்கள் கூறும் நபர், வேறு யாருமல்ல, திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாதான்!
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொற்படி நடக்காமல், அவர் சொந்தமாகவே காரியங்களைச் செய்யத் தொடங்கி விட்டார் என்பதே இவர்களது பேச்சின் சாராம்சம். இதென்ன புதுக் கதை என்று விசாரித்தால், சில டில்லி விவகாரங்கள் விறுவிறுப்பாக வந்து விழுகின்றன.
கனிமொழியின் ஜாமீன் மனு திங்கட்கிழமை (17-ம் தேதி) ஹியரிங்குக்கு வருகிறது. அதற்கிடையே எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தக் கூடாது என்பது கலைஞரின் அட்வைஸ் என்கிறார்கள். ஆனால், ராசாவின் சிந்தனை வேறு திசையில் செல்கிறதாம்.

மோடி முகத்தில் வழியும் எச்சிலைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்.

மக்கள் கண்காணிப்பகம் பன்னாட்டு முதலாளிகளின் கள்ளக் குழந்தை!

மதுரை சின்ன சொக்கிக்குளத்தில் ஹென்றி டிபேன் என்பவரை செயல் இயக்குனராகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மக்கள் கண்காணிப்பகம். கடந்த 02.10.2011 அன்று மதுரை உயாநீதிமன்ற வழக்கறிஞர் திரு.வல்லரசு என்பவர் கொடுத்த  புகாரின் பேரில் மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் குற்ற எண். 1697/2011-ல் இ.த.ச.பிரிவுகள் 147, 323, 355, 427,294(பி), 506(i) மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் 1989 ன் படி 1.ஹென்றி டிபேன், அவரது மனைவி 2. சிந்தியா டிபேன்,  மருமகன் 3. பிரதீப் சாலமோன்,  மகள் 4. அனிதா மற்றும் பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விஜயகாந்த் ஓட்டுக்கு ரூபாய் 200 பிரேமலதாவோ ஓவராக தம்பட்டம்


தான் நடித்த ரமணா படத்தைப்போல நிஜத்திலும் லஞ்சத்தை ஒழிக்க பாடுபடுவேன் என்று தம்பட்டம் அடித்து வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இவரின் மனைவி பிரேமலதாவோ, ஒரு படி மேலே போய், இல்லை...கொஞ்சம் ஓவராக போய், இல்லை...இல்லை.....ரொம்பவே ஓவராக போய்.... கேப்டன் விஜயகாந்த் லஞ்சம் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்த பிறகுதான் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தார்; ஆர்ப்பாட்டம் செய்தார் என்று கொக்கரித்து வருகிறார். ஆனால் தேமுதிகவினரோ வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து வருகிறார்கள்.கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு தேமுதிகவினர் பணம் கொடுப்பதாக புகார் வந்தது.

44 நாட்கள் ஃபைலை பார்த்த தயாநிதி-ரூ.550 கோடி ஆதாயம் பெற்றார்- சிபிஐ

Dayanidhi Maran
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குடும்பத்தினர் ஏர்செல் - மேக்ஸிஸ் ஒப்பவந்தம் மூலம் ரூ 549.96 கோடி ஆதாயம் பெற்றார் என குற்றம்சாட்டியுள்ளது சிபிஐ.
மேலும் ஏர்செல் தொடர்பான ஃபைலை மட்டுமே அவர் 44 நாட்கள் பார்த்து வந்ததாகவும் சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் தயாநிதி மாறனின் அண்ணன் கலாநிதி மாறனுக்கு சொந்தமான நிறுவனம் ரூ 550 கோடியை ஆதாயமாகப் பெற்றுள்ளது. இது ராசா - கனிமொழி மீது சாட்டப்பட்டுள்ள ரூ.200 கோடி மோசடியை விட பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பலர் நாடு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தாயகம் திரும்புவோர் தொகை அதிகரிப்பு நேற்றும் 37 பேர் கப்பல் மூலம் நாடு திரும்பினர் –யு. என். எச். சி. ஆர்.

மோதல்கள் காரணமாக இடம் பெயர்ந்து இந்தியா சென்ற இலங்கையர்களில் ஒரு தொகுதியினர் நேற்று கப்பல் மூலமாக தாயகம் திரும்பினர்.சுமார் 20 வருடங்களுக்கு பின் முதற் தடவையாக கப்பல் மூலம் இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து தாயகம் அழைத்து வரப்பட்டது இதுவே முதற் தடவையாகும் என்றும் இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் ஐ. நா. வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

"நீதிமன்றில் சந்திக்கிறேன்" சம்பந்தனுக்கு சங்கரி சவால்!

நீதிமன்ற உத்தரவை மீறி தனது அனுமதியோ அனுசரணையோ இன்றி யாழ்ப்பாணத்தில் பொதுக்கூட்டம் நடத்தித் தெரிவு செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாக சபை செல்லுபடியற்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரியவுக்கு அறிவித்துள்ளார். 
சம்பந்தன் பழையவற்றை மறந்து பேசுகிறார்



தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாடு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் தலைவராக எஸ்.கனகராஜாவும், பொதுச் செயலாளராக வீ.ஆனந்தசங்கரியும் தெரிவு செய்யப்பட்டதுடன் புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்தப் புதிய நிர்வாக சபையே சட்டரீதியாகச் செல்லுபடியற்றது என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றையும் அவர் ஆணையாளருக்கு அனுப்பி அவர் வைத்துள்ளார்.

தொலைபேசி இலக்கங்களை சுவிஸ் இலங்கைக்கு வழங்கியுள்ளது

புலிகளின் வலையப்பின் முகவர்கள் - அவர்களது தொலைபேசி இலக்கங்களை சுவிஸ் இலங்கைக்கு வழங்கியுள்ளது - திவயின!

சுவிஸர்லாந்தில் உள்ள புலிகளின் வலையப்பின் 235 கொழும்பு முகவர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் தொலைபேசி இலக்கங்கள் மாத்திரமின்றி, புலிகளின் வலையமைப்புடன் சம்பந்தமுள்ள தொலைபேசி நிலையங்கள் குறித்த தகவல்களை சுவிஸ் அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாக திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக் கொலை!உடவலவ - பனகடுவ பிரதேசத்தில்

உடவலவ - பனகடுவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மெக்சி புரொக்டர் தெரிவித்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 32 வயதான இந்திரானி (தாய்), 37 வயதுடைய லலித் (தந்தை), 12 வயதுடைய சிலான் சத்துரங்க (மகன்) மற்றும் 08 வயதுடைய நதீக்கா செவ்வந்தி (மகள்) ஆகியோரே நேற்றிரவு 7.40 அளவில் இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
உடவலவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆழ்கடலில் மீன் பிடிப்பு: இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை!

ஆழ்கடலில் மீன் பிடிக்க வடமேற்கு இலங்கை மற்றும் தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இலங்கை நிராகரித்து விட்டது.

இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார். இவ்வாறு ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதிப்பதன் மூலம் குறுகிய பாக் ஜலசந்திப் பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பாக அடிக்கடி மீனவர்களிடையே ஏற்படும் மோதல்களைத் குறைக்கலாம் என்று கூறியிருந்தார்.

சட்டவிரோத ஆயுதங்களை முற்றாக ஒழிக்க நடவடிக்கை ஜனாதிபதி அறிவிப்பு!

பிரபுக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொலிஸ் உத்தி யோகத்தர்கள் சீருடையில் இருக்கிறார்களா? அவர்களி டம் உத்தியோகபூர்வமாக கொடுக்கப்பட்ட ஆயுதங் கள் மாத்திரம் இருக்கின்றனவா? என்பது பற்றிய சோதனைகள் ஆரம்பமாகியிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களுடனும், ஊடகங்களின் செய்திப் பிரிவின் பொறுப்பதிகாரிகளுடனும் நேற்று நடத்திய கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

இலங்கை-இந்திய கடற்படையினர் கூட்டு கண்காணிப்பு!

இலங்கை – தமிழக மீனவர்கள் பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்காக, இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் சர்வதேச கடற்பரப்பில் கூட்டுக் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்தியா இந்த யோசனையை முன்வைத்துள்ளது.

தைரியம் எனக்கு கொஞ்சம் ஜாஸ்தி! - சினேகா சிறப்புப் பேட்டி


நடிக்க வந்து முழுசாக பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன.... தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசியாக இன்னமும் வீற்றிருக்கிறார் சினேகா.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து பிரபல நடிகை என்ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

தட்ஸ்தமிழின் தீபாவளி ஸ்பெஷலுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
இந்த பதினோரு ஆண்டு திரையுலக அனுபவங்கள் குறித்து....
கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். திரையுலகில் இன்றைக்கு இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிப்பதே கஷ்டம்தான். எனக்கு அந்த வாய்ப்ப்பு கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் நான் எவ்வளவோ படங்கள் நடித்தாலும், என்னைத் திரையில் பார்த்து அல்லது என் நடிப்பைப் பார்த்து யாரும் முகம் சுளித்ததில்லை. இது எனக்கு பெரிய அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. நிறைய பாடங்களை இந்த பதினோரு ஆண்டுகளில் கற்றுக் கொண்டேன்.

பாரதிராஜாவின் புதிய படம் அன்னகொடியும் கொடிவீரனும்


அடுத்தடுத்து தோல்வி படங்களே கொடுத்து வந்த பாரதிராஜா அன்னகொடியும் கொடிவீரனும் என்ற பெயரில் புதிய படம் தயாரித்து இயக்குகிறார். நமகென்னவோ அன்னக்காவடியும் கொடிவீரனும் என்று பாரதிராஜா ஆகிவிடக்கூடாதே என்ற கவலை.
பாரதிராஜா படத்தின் நாயகி என்ற பெருமையைப் பெற்றுள்ளார், வாகை சூடவா படத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய இனியா.
இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. பார்த்திபன் ஹீரோவாகநடிக்கிறார். மீனாள் முக்கிய வேடத்தில் வருகிறார்.
படத்தின் நாயகி யார் என்று பாரதிராஜா முடிவு செய்யாமல் இருந்தார். வாகை சூடவா படம் பார்த்த பிறகு, தனது படத்தின் நாயகி என்ற அந்தஸ்தை இனியாவுக்கு வழங்கியுள்ளார்.

சித்தார்த் - ஸ்ருதி பிரிந்தனர்!இனி அடுத்த வல்லரசு நாம்தான்


Shruti Hassan and Sidhardh
நடிகர் சித்தார்த்தும் ஸ்ருதியும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு நடிகர் சித்தார்த்தும், ஸ்ருதி ஹாஸனும் ஒரு படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணமாகாமலேயே இணைந்து வாழ்வதாக கடந்த சில மாதங்களாகக் கூறப்பட்டு வந்தது. கமல் ஹாஸனுக்கும் மகளின் இநத உறவு குறித்து தெரியும் என்றும் கூறினர்.
இதனை ஸ்ருதி மறுக்கவில்லை. அவரிடம் கேட்டபோதெல்லாம், அது எனது தனிப்பட்ட விவகாரம் என்றே கூறி வந்தார். சித்தார்த்தும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து வந்தார்.

உடல் தானம் செய்ய முடிவு: நடிகை சினேகா

சமூகத்துக்கு ஒவ்வொரு வரும் நல்லது செய்ய வேண்டும். எனது பிறந்த நாள் விழாக்களை ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி கொண்டாடுகிறேன். இவ்வருட பிறந்த நாளை மாற்றுத் திறனாளிகளுக்கு விருந்து கொடுத்து கொண்டாடினேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இரு வருடங்களுக்கு முன் எனது கண்களை தானம் செய்தேன். விரைவில் உடல் தானம் செய்யவும் முடிவு செய்துள்ளேன். ரசிகர்கள் கண்களை தானம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்

சூரியசக்தி – ஃப்ரிட்ஜுடன் பறக்கும் குளவி


ஒரு பன்னாட்டுக் கம்பெனி இருக்கிறது. பெயரைச் சொல்லக் கூடாது; அவர்களுக்கு இங்கேயும் அலுவலகம் உள்ளது. பூமியின் மண்டைஓடு முழுவதும் துளைபோட்டு எண்ணெயை உறிஞ்சிப் புகைவிட்டு நம் சுற்றுச்சூழலை நாசமாக்குவதில் நம்பர் ஒன் கம்பெனி அது. அவர்களின் இணையத்தளத்துக்குப் போய்ப் பார்த்தேன் – பச்சைப் பசுமை. கார்ட்டூன் மரங்கள், ஃப்ளாஷில் குறுக்கும் நெடுக்கும் பறக்கும் பறவைகள் என்று கிளி கொஞ்சுகிறது!
இது மட்டுமல்ல; இப்போதெல்லாம் பெரும்பாலான மகா எனர்ஜி கம்பெனிகளின் இணையப் பக்கங்களையும் வழவழா பத்திரிகை விளம்பரங்களையும் பார்த்தால் ஒரே பச்சையாக இருக்கிறது. க்ரீன் எனர்ஜியாம். விடுகிற கார்பனையும் விட்டுவிட்டு, வெப் சைட்டுக்குப் பச்சை நிறம் பூசி ஏமாற்றுவது ஒரு மனோதத்துவ ஏமாற்று வேலை.
எந்த முகத்தை வைத்துக்கொண்டு இப்படி ஒரு தாவா செய்கிறார்கள் என்று பார்த்தால், ஒரு ஓரத்தில் சூரிய சக்தியையும் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்கிறார்கள்.

ஷமீலாவா இப்படி செய்தார்?, நம்ப முடியவில்லை- உறவினர்கள், நண்பர்கள்

சென்னை: நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர் ஷமீலா. அவரது குடும்பத்தினர் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்கள். ஆனால் ஷமீலாவின் செய்கைகள் குறித்து மகேஷ் குமார் எழுதியுள்ள கடிதம் எங்களுக்கு வியப்பளிக்கிறது. இதை நம்ப முடியவில்லை என்று ஷமீலாவின் உறவினர்கள், சிறு வயது முதல் ஷமீலாவை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக மகேஷ் குமார் தரப்பு கடிதங்களை மட்டும் முழுமையாக நம்பாமல், ஷமீலா தரப்பு உண்மைகளையும் அறிய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

அனுஷ்கா:சினிமாவை விட்டு ஓடிவிடலாம் என்று நினைத்தேன்

காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதற்கு தயங்க மாட்டேன்!நான் நடிகையாவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எதிர்பாராமல் அது நடந்தது. அறிமுகமானபோது ரொம்ப கஷ்டப்பட்டேன். சினிமாவோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை. சினிமாவை விட்டு ஓடிவிடலாம் என்று நினைத்தேன் என தெரிவித்துள்ளார் அனுஷ்கா.

கார்டனில் இருந்து விஜய் தரப்புக்கு, கொஞ்சம் ‘ஹாட்’டான எச்சரிக்கை!


Viruvirupu,





சென்னை, இந்தியா: நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் ‘மக்கள் இயக்கம்’ மற்றொரு ட்ராக்கில் தமது அரசியல் ஆசைகளை பூர்த்தி செய்ய சில நகர்வுகளை சொந்தமாக செய்வது அ.தி.மு.க. தரப்பை எரிச்சல் படுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது. அதையடுத்து, விஜய்யின் தகப்பனார் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஹாட்டான எச்சரிக்கை ஒன்று அ.தி.மு.க. தரப்பில் இருந்து சென்றிருப்பதாக, தெரியவருகிறது.
விறுவிறுப்பு.காமில் ஏற்கனவே வெளியான “இளைய தளபதி (விஜய்) அரசியலில், ஸ்டார்ட், ஆக்ஷன், கேமரா!” நியூஸ் ஸ்டோரியில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அதில் கூறப்பட்ட பிரச்சினை, சட்டமன்றத் தேர்தல் நாட்களில் அ.தி.மு.க. தலைமையை எரிச்சல் படுத்தியிருந்தது.

334 கொலைகள் மோகம் காதல் மூன்றாண்டுகளில் அதிகளவில்

கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம், கேரளாவின் சுற்றுலாத்தலமான மூணாறு, குந்தலா அணைக்கட்டின் அருகே, கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம். யாரென அனைவரும் அதிர்ந்து நிற்க, அருகில், புதுப்பெண்ணான மனைவி வித்யாலட்சுமி. தேனிலவு வந்த இடத்தில், யாரோ அனந்தகிருஷ்ணனை கொன்றுவிட்டு, நகைகளை பறித்துச் சென்றதாக அவர் கூற, போலீஸ் விசாரணையும், மொபைல் போன் குறுந்தகவல்களும் உண்மையை வெளிக்கொண்டுவந்தன.

அடுத்தடுத்து அதிர்ச்சித் திருப்பங்கள்... திருமணமான ஏழே நாளில், அனந்தகிருஷ்ணன் கட்டிய மஞ்சள் கயிற்றின் ஈரம் கூட காயாத நிலையில், கள்ளக்காதலன் ஆனந்துடன் சேர்ந்து, வித்யாவே கணவனை கொன்றது அம்பலமானது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை, அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறிக்கொண்டிருந்த இதுபோன்ற விஷயங்கள், தற்போது, தினசரி செய்தியாக மாறிவிட்டன. கணவனுக்கு தெரியாமல் மனைவி, மனைவிக்கு தெரியாமல் கணவன், மற்றொருவருடன் உறவு வைத்திருப்பது, சாதாரணமாகிவிட்டது.

334 கொலைகள் : மேற்கத்திய மோகமும், தகவல் தொழில்நுட்பக் கலாசாரமும் தமிழகத்தில் ஊடுருவத் துவங்கியபோதே, நாகரிகம் என்பதற்கான அடிப்படை விதிகளும் மாறிவிட்டன. இந்த வரிசையில், கள்ளக்காதலும் புதிய கலாசாரமாகிவிட்டது. ஆண், பெண் நட்பில், உடல் ரீதியான ஈர்ப்பு, பிரதான இடம் பிடித்துவிட்டது.

புலி அங்கத்தினரது மறுவாழ்வு,மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஒரு பெரிய வெற்றி

ampe-1முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி அங்கத்தினரது மறுவாழ்வு,மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஒரு பெரிய வெற்றி  (பகுதி 1)
-   ராணி விஜேபால
(புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம்: மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு)
Rehablitationஎல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக நடைபெற்ற   மனிதாபிமான நடவடிக்கைகள் நடந்து முடிந்து கிட்டத்தட்ட மூன்று நீண்ட வருடங்கள் ஆகிவிட்ட போதும் மோதலுக்கு பின்னான பாரிய சவால்கள் ஸ்ரீலங்காவில் இன்னமும் மீதமிருக்கின்றன. இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதும் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வளித்து அவர்களைச் சமூகத்துடன் மீள் ஒருங்கிணைப்பு செய்வதுமே இவற்றுள் முன்னுரிமை வழங்கப்பட்டு நிறைவேற்றப் படவேண்டிய நடவடிக்கைகளாகவுள்ளன.
சர்வதேச சமூகம் ஸ்ரீலங்காமீது தவறுகள் கண்டுபிடிக்க முயற்சிகள் செய்தபோதும் அரசாங்கம் இந்தச் சவால்களை மிகத் திறமையாக எதிர்கொண்டது. இந்த சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் அநேகமாக இடம் பெயர்ந்த சகல பொதுமக்களையும் அவர்களது கிராமங்களில் மீளக் குடியேற்றுதலை நிறைவு செய்து அனைத்து நலன்புரி நியைங்களையும் மூடியதன் மூலம் ஸ்ரீலங்கா முழு சர்வதேச சமூகத்துக்கும் ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.

மனோவின் ஆதரவு தேவையில்லை; நிபந்தனைக்கு ஐ.தே.க. அடிபணியாது

கொழும்பு மாநகரசபை நிர்வாகத்தை கொண்டுநடத்துவதற்கு மனோ கணேசனின் ஆதரவு எமக்குத் தேவையில்லை. ஜனநாயக மக்கள் முன்னணி யின் நிபந்தனைகளுக்கு ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சி அடிபணியாது. இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகராஜன்.மக்களுக்காகப் பேரம் பேச மக்கள் சக்தி அவசியம் எனக் கூறி தேர்தல் பிரசாரம் செய்தவர்கள் இன்று தேசியப்பட்டியல் எம்.பி. பதவிக்காகப் பேரம் பேசுகின்ற னர் என்றும் அவர் கூறினார்.ரணில் விக்கிரமசிங்கவை துரோகி என விமர்சித்து வசைப் பாடியவர்கள் இன்று விழுந்தடித்துக்கொண்டு ஓடி வந்து சமரசம் பேசுவது ஏன்?  இதுதான் மக்களுக்காக பேரம் பேசுதலா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றி னால், மனோ கணேசனுடன் பேரம் பேசாது என தேர்தலுக்கு முன்னர் யோகராஜன் எம்.பி. தெரிவித்திருந்தார்.ஆனால், தேர்தல் முடிவடைந்த பின்னர் கொழும்பு மாநகர சபையின் நிலையான ஆட்சிக்கு ஒத்துழைக்குமாறு மனோ கணேசனிடம் ஐ.தே.க. தலைமை பேச்சு நடத்தியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Raj Rajaratnam 11 ஆண்டு சிறை; அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க பங்குச் சந்தையில் உட்சந்தை மோசடியில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கையரான ராஜ் ராஜரட்னத்திற்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கெலோன் நிதி நிறுவனத்தின் ஸ்தாபகரான ராஜ் ராஜரட்னம் உள்ளகத் தகவல்களைப் பயன்படுத்தி 72 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பாரிய உட்சந்தை மோசடி இதுவெனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு அமெரிக்க மாவட்ட நீதவான் ரிச்சட் ஹொல்வெலினால் இன்று வழங்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு 11 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இருபத்து நான்கரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அரச தரப்பு சட்டத்தரணிகள் கோரியிருந்த நிலையில்இ ராஜ் ராஜரட்னத்தின் நோய்களைக் காரணம் காட்டி தண்டனையை குறைக்குமாறு அவரது சட்டத்தரணிகள் கோரியூள்ளனர். இதனையடுத்து அவருக்கான தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் அதனை மீறிச் செயல்பட்டவர் சம்பந்தன்- வீ.ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரான தனது அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தி புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். புதிய நிர்வாக சபை செல்லுபடியற்றதெனவும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதும் சட்டவிரோதமானதும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு தான் கடித மூலம் அறிவித்துள்ளதாக சம்பந்தன் கூறுகிறார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாடு கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நல்லூரில் நடைபெற்று தலைவராக எஸ்.கனகராஜாவும் செயலாளராக வீ.ஆனந்தசங்கரியும் தெரிவு செய்யப்பட்டதுடன் புதிய நிர்வாக சபையும் தெரிவானது. இது குறித்து பதிலளித்த வீ.ஆனந்தசங்கரி நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் அதனை மீறிச் செயல்பட்டவர் சம்பந்தன். நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக விடுதலைப் புலிகளைத் தலைவராக ஏற்று செயற்பட்டவர். அப்படியிருக்கையில் கட்சியின் பொதுச் செயலாளர் என்று உரிமைகோர அவருக்கு அதிகாரம் எதுவும் இல்லை. கடந்த மூன்று தேர்தல்களில் அவரைக் கேட்காமல்தான் கட்சி போட்டியிட்டது. அவர் இல்லாமல்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி இயங்குகிறது. கட்சியின் மாநாட்டை நிறுத்தக் கோரி இரு தடவைகள் கடிதங்கள் அனுப்பினார். ஆனால் நான் அவற்றைக் கவனத்தில் எடுக்கவில்லை. முடிந்தால் அவர் சட்ட நடவடிக்கையை எடுக்கட்டும் என்கிறார்.

பிரேம்குமாருக்கு புலி ஆதரவாளர்கள் நிதி உதவி

ஜே.வி.பி கிளர்ச்சிக்குழு தலைவராகக் கருதப்படும் பிரேம்குமாருக்கு புலி ஆதரவாளர்கள் நிதி உதவி வழங்குகின்றார்களா என புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

ஜே.வி.பி கிளர்ச்சிக்குழு தலைவராகக் கருதப்படும் பிரேம்குமார் குணரட்னத்திற்கு புலி ஆதரவாளர்கள் நிதி உதவி வழங்குகின்றார்களா என புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாடுகளில் வாழும் புலிச் செயற்பாட்டாளர்கள் பிரேம்குமாருக்கு பண உதவிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முல்லேரியா சம்பவத்துடன் தொடர்புடையவர் இந்தியாவில் கைது!.


முல்லேரியா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவூகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
முல்லேரியாவில் இடம்பெற்ற பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் இருவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் கிட்டி உள்ளது.

குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி

சென்னை:போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிக்கரணை ராஜேஷ் நகர் நேரு தெருவை சேர்ந்தவர் சந்திரா. இவர் நேற்று காலை தனது மகள் ராஜேஸ்வரி, மருமகன் சக்திவேல், பேரன், பேத்தியுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். கமிஷனரை சந்திக்க அவரை போலீசார் அனுமதிக்கவில்லை. ஆத்திரம் அடைந்த சந்திரா, மகள், மருமகன், பேரன், பேத்தியுடன் கமிஷனர் அலுவலகம் வாசலில் வந்து நின்றார்.

வறுமைக்கோடு நிர்ணயம் மானியங்களை வெட்டவே

ஒரு நாளைக்குத் தேவையான உணவு, மருத்துவம், கல்விச் செலவுகளைச் சமாளிக்க, நகர்ப்புறத்தில் வசிக்கும் ஒரு தனிநபரின் ஒருநாள் வருமானம் ரூ.32/ ஆகவும், கிராமப்புறத்தில் வசிக்கும் ஒரு தனிநபரின் ஒருநாள் வருமானம் ரூ.25/ ஆகவும் இருந்தால் போதும் எனத் திட்ட கமிசன் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கிறது.  திட்ட கமிசனின் இந்தத் தெளிவான வரையறைக்கும் அன்றாட நடப்புக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

அதிபர் கடாபியின் மகன் கைது

லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் கைது!.

சிர்தே: லிபியாவில் அதிபர் கடாபியின் மகன் முடாசிம் கடாபியை புரட்சி படையினர் கைது செய்துள்ளனர். லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த அதிபர் கடாபியை எதிர்த்து மக்கள் புரட்சி ஏற்பட்டது. மாற்று அரசு கவுன்சில் என்ற பெயரில் புரட்சி படையினர் கடாபியை எதிர்த்து போரிட தொடங்கினர். அவர்களுக்கு அமெரிக்கா உள்பட பல நாடுகள் ஆதரவு அளித்ததில் குடும்பத்துடன் கடாபி தலைமறைவானார். முக்கிய நகரங்கள் புரட்சி படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. சிர்தே மற்றும் சில பகுதிகள் மட்டும் கடாபியின் ஆதரவாளர்கள் மற்றும் ராணுவத்தினரிடம் இருந்தன.

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வந்தார்!

வியட்நாம் ஜனாதிபதி ட்ரோங் டென் சென்ங் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார்.
வியட்நாமிற்கு சொந்தமான விசேட வானூர்தி மூலம் அவர் இலங்கை வந்தார்.
அவருடன் விசேட வர்த்தக தூதுக்குழு ஒன்றும் இலங்கை வந்துள்ளது.
அவர்களை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ வரவேற்றார்.
2009ம் ஆண்டு வியட்நாம் சென்ற ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ விடுத்த அழைப்பைத் தொடர்ந்தே அவர் இலங்கை வந்துள்ளா

வியாழன், 13 அக்டோபர், 2011

போலிஸ் சுதந்திரமாக செயல்பட்டால் வாச்சத்திகள் தொடரும்

வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்!
போலீசு, அதிகாரிகளின் கைகள் கட்டப்படாமல், அரசியல் தலையீடின்றிச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று அக்கிரகார அரசியல்வாதிகள் பேசுவது ஊடகங்களால் ஊதி முழக்கப்படுகிறது. போலீசும் அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்பட்டால் மக்களுக்கு என்ன நேரும் என்பதற்கு வாச்சாத்திகளே சாட்சியமாகியுள்ளன.









வாச்சாத்தி கிராம மக்கள் சந்தனமரக் கடத்தலில் ஈடுபடுவதாகவும், ஆற்றுப் படுகையில் சந்தனக் கட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாகவும்  கூறிக்கொண்டு, 1992 ஜூன் பத்தாம் நாள் வாச்சாத்தி பழங்குடி கிராமத்திற்கு நூற்றுக்கணக்கில் வந்திறங்கினர், போலீசு, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் ஊழியர்களும்.  அதிகார போதையும் காமவெறியும் தலைக்கேற காட்டுமிராண்டித்தனமாகப் பாய்ந்து, பெற்ற தாய்மார்கள் கண்முன்பாகவே 13 வயது பள்ளிச் சிறுமி உட்பட 18 இளம்பெண்களை நிர்வாணப்படுத்திக் கும்பல் பாலியல் வன்முறை செய்தார்கள். ஆண்களில் பலர் உயிருக்கு அஞ்சி காடுகளுக்குள் ஓடி ஒளிந்து கொள்ள, கையில் சிக்கியவர்களையும் பெண்களையும் அடித்து நொறுக்கினார்கள்.

வைகோ:அதிமுக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்

சொன்னது நீதானா சொல் சொல் என் உயிரே சம்மதம் தானா எனக்கு விமோசனமே இல்லையா சொல் அம்மாவே
புளியங்குடி: தொடர்நது மக்களுக்கு எதிராக செயல்பட்டால் அவர்களே அதிமுக அரசை தூக்கி எறிவார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். புளியங்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு மதிமுக சார்பில் டாக்டர் சதன் திருமலைக்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர்
வைகோ புளியங்குடியில் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில்,

பலருடன் தொடர்பு வைத்து உறவு கொண்டதால் ஷமீலாவைக் கொன்றேன்


Mageshkumar and Shameela
கோபிசெட்டிபாளையம் என்னைக் காதலித்து மணம் புரிந்த ஷமீலா, என்னைத் தவிர மேலும் பல ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, நேரம் காலம் இல்லாமல் உல்லாசமாக இருந்து வந்ததால்தான் அவளைக் கொன்றேன். மேலும் டிவியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் நடிகனும் நேரம் காலம் இல்லாமல் தொடர்ந்து அவளுடன் தொடர்பு வைத்திருந்தான். இந்த ஆத்திரத்தையெல்லாம் அவளிடம் காட்டிக் கொலை செய்தேன் என்று தற்கொலை செய்து கொண்ட கணவர் மகேஷ் குமார் பரபரப்பு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

மகேஷ்குமார் வாழ்க்கையைக் கெடுத்த அத்தனை பேரையும் கைது செய்ய ஈரோடு போலீஸ் முடிவு


ஈரோடு : ஈரோடு மாவட்டம் பட்டிமணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்த மகேஷ் குமார், தனது மனைவி ஷமீலா குறித்தும், அவருடன், அவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர்கள் குறித்தும், இவர்களால் தனது காதல் வாழ்க்கை வீணாகிப் போனதைக் குறித்தும் எழுதி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை நபர்களையும் கைது செய்ய ஈரோடு போலீஸார் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.

காதலியை கொன்றுவிட்டு தற்கொலை செய்யுமுன் கடிதம்


Magesh Kumar

அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கே குழந்தையாக,மகளாகப் பிறப்பேன்: மகேஷ்குமார் உருக்கம்

 தமிழ் சினிமா என்னமா கெடுத்து வைத்திருக்கிறது?
கோபிசெட்டிபாளையம்: அப்பா எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கே குழந்தையாக பிறக்க விரும்புகிறேன் என்று தற்கொலை செய்துகொள்ளும் முன்பு மகேஷ்குமார் எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்துள்ளது.
மூணாறில் சென்னையைச் சேர்ந்த பெண் ஷமீலாவை கொலை செய்த அவரது கணவர் மகேஷ்குமார் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு ஒரு நோட்டில் 21 பக்கத்திற்கு தந்தை சுப்பிரமணியன், தாய் அமிர்தம், தங்கை பிரபா, மைத்துனர் ஈஸ்வரன் ஆகியோருக்கு உருக்கமான கடிதம் எழுதி அந்த நோட்டை தன் வீட்டு குளியலறையில் வைத்திருந்தார். இது தவிர போலீசாருக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார். அவற்றை போலீசார் கைப்பற்றினர்.தனது குடும்பத்தாருக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,அப்பா... கடந்த 10 ஆண்டுகளாக நான் உங்களை இவ்வாறு கூப்பிட்டது இல்லை. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இந்தோனேசிய நாணயத்தில் விநாயகர்

 சில ஆண்டுகளுக்கு முன்பால் இந்தோனேசிய வெளியிட்ட ஒரு இருபதாயிரம் ரூப்பியா நாணயத்தில் பிள்ளையார் உருவம் பதியப்பட்டது.
இந்தோனேசிய ஒரு இஸ்லாமிய நாடு இது உண்மையில் மிகவும் ஆச்சரியத்திற்கு உரியதாகும். நல்லவேளை அங்கு ஒரு நரேந்திர மோடி இருக்கவில்லை.
இதற்கு நாம் வரலாறை ஆய்ந்து பார்க்கவேண்டும். பாரம்பரியமாக ஜாவாவை ஆண்ட மன்னர்கள் சமண பௌத்த ஆதி சைவம் போன்ற மதங்களின் வளி தோன்றல்களாகும்.

சட்டப்படி விபசாரம் தவறில்லை, உடலுறவுக்கு ஆண்களை அழைப்பதுதான் தவறு

சட்டப்படி ஒழிக்கமுடியாது (ஹாய் அட்வகேட்!)

ஹாய் அட்வகேட்!
விபசாரம் தவறில்லை, உடலுறவுக்கு ஆண்களை அழைப்பதுதான் தவறு என்கிறார்கள் சிலர். இது உண்மையா? சட்டத்தால் விபசாரத்தை ஒழிக்கமுடியாதா?
ஹரன் பிரசன்னா, ராயப்பேட்டை
 On the edge: Mumbai's Kamathipura, Asia's largest red-light district.
விபசாரம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருந்தால் அது குற்றமாகாது.
விலைமாதர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளக்கூடாது. தன்னுடைய தொலைபேசி எண்ணை பொதுமக்களிடம் பிரசுரிக்கக்கூடாது. ஆடவரை வசீகரித்தல், வாடிக்கையாளர்களைத் தருவித்தல் குற்றமாகும்.
பொது இடங்களிலும் அரசால் பகிரங்கப்படுத்தப்பட்ட இடங்களிலும் (Notified Areas) விபசாரம் செய்வது குற்றமாகும்.
வாடிக்கையாளர் விலைமாதரிடம் பொது இடத்திலிருந்து 200 கஜம் தூரத்துக்கு உட்பட்ட இடத்தில் சல்லாபித்திருந்தால் அது குற்றமாகும்.

கே.என்.நேரு!: வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?


வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?
பத்திரிகையாளர்களிடம் கேள்வி கேட்ட கே.என்.நேரு!
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரான மரியம்பிச்சை சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.
இதனால் காலியாக உள்ள அந்த தொகுதிக்கு இன்று (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மு.பரஞ்சோதியும், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் போட்டியிடுகிறார்கள்.