சனி, 8 ஜனவரி, 2022

:திராவிட + கம்யூனிஸ்டு கட்சிகளின் செலக்டிவ் பகுத்தறிவு! இஸ்லாம் தவிர்த்து எல்லா மாற்று மதங்களையும் விமர்சிக்கலாம்?

May be an image of 2 people, people standing, animal, outdoors and text that says '*Leftist Parties DMK பகுத்தறிவுவாதி AneeshJasyST பகுத்தறிவுவாதி DMK VOTE BANK LORRY'

May be an image of 1 person, beard, outdoors and text that says 'EXMUSLIM BLOODY ATHEIST'

Aneesh Jasy ST   : Aneesh Jasy ST : குத்தகை  நாத்திகர்கள்
1) இடதுசாரி கட்சிகளும், இஸ்லாமிய வாதிகளும் , மற்றும் மதவாதிகளும் நாத்திகத்தை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள்.
2) இவர்கள் சொல்லும் எதுவும் சரி என்று நாத்திகர்களும் சொல்ல வேண்டும்...
3) இவர்கள் பேசுவதை தான் நாத்திகர்களும் பேச வேண்டும்.
4) இவர்கள் ஆதரிப்பதுதான் நாத்திகர்களும் ஆதரிக்கவேண்டும்.
5) சுயசிந்தனை நாத்திகர்களுக்கு இருக்கக்கூடாது. எப்படி, என்ன சிந்திக்க வேண்டும் என்பது இவர்கள்தான் தீர்மானிப்பார்கள்.
6) இவர்கள் சொல்லும் விஷயங்களுக்கு நாத்திகர்கள் :- மிச்சர் தின்னு கொண்டு இருக்கவும், ஆமீன் ஆமீன் என்று கூடக் கூட சொல்லிக் கொண்டே இருக்கவும்.., கோஷம் போட்டுக் கொள்ளவும் , சரணம் பாடவும், ஜங் ஜங் என்று கூடக்கூட அடிக்கவும், இப்படித்தான் ஆடு மந்தை போல் நாத்திகர்களை தமிழகத்தில் பயன்படுத்திக்கொள்கிறார்கள்...

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு- உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு

 மாலைமலர் : உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும்.
புதுடெல்லி:  உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தொடர்பான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று அறிவித்தார். அவர் கூறியதாவது:-
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்தல்களை நடத்தப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் மத்திய, மாநில அதிகாரிகள் அனைவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்.

மறைந்த எஸ் டி சோமசுந்தரத்தின் மனைவி சகுந்தலா காலமானார்! தன் தாய் வீட்டு சீதனத்தை அண்ணாவிடம் வழங்கியவர்

sakunthala passed away in chennai

நக்கீரன் -பகத்சிங்   : சீனா இந்தியாவுடன் போர் தொடுத்த போது தன் தாய் நாட்டை காக்க தன் தாய் வீட்டு சீதனங்களை அனைத்தையும் நிதி திரட்டி அறிஞர் அண்ணாவிடம் கொடுத்த சகுந்தலா சோமசுந்தரம் அம்மையார் நேற்று (06/01/2022) காலமானார். அவரது உடல் பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலிக்கு பிறகு சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள செண்டாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.டி.எஸ் என்கிற எஸ்.டி.சோமசுந்தரம். முன்னாள் அமைச்சரான இவரை தெரியாதவர்களே யாரும் இருக்க முடியாது. மாணவ பருவத்திலேயே இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்கு மாணவர்களை ஒன்றிணைத்து போராடியவர்.

நீட் விலக்கு: இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

 மின்னம்பலம் : நீட் விலக்கு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
திமுக ஆட்சி அமைத்து நடந்த முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் ஆளுநர் மூலம் அந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவில்லை.
நீட் விலக்கு மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்தது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவினர் குடியரசுத் தலைவரிடம் நீட் விலக்கு மசோதா தொடர்பாக மனு அளித்தனர்.

இயக்குனர் மணிவண்ணன் பாணி என்றோர் ---- போக்கு தமிழ் சினிமாவில்,,,,

May be an image of 3 people and people standing

Arivalagan G. :  இயக்குனர் மணிவண்ணன் பாணி என்றோர் குப்பைப் போக்கு சினிமாவில் இருந்தது .
அது தன்னை அதிதீவிர அறிவுஜீவிப் புண்ணாக்காக காட்டிக்கொண்டு
விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில்
எது தமிழர்களுக்கு இருப்பதில் சிறந்த நன்மையைக் கொடுத்ததோ அந்த அரசியலை இடைவிடாது நக்கல் நையாண்டி செய்துகொண்டு இருப்பது .
இத்தனைக்கும் தனது சினிமாவில் இருப்பதில் மோசமான சாதி மேட்டிமை பெண்ணடிமைத்தனம் பிற்போக்குத்தனம் இவைகளை விடாமல் தொடர்ந்து கொண்டே ... திராவிட இயக்கத்தின் ஆதரவாளராக காட்டிக் கொண்டு திமுகவை தொடர்ந்து நக்கல் செய்து கொண்டிருப்பதை அந்த நபர் கடைசிவரை செய்தார் .
அதன் மூலம் தன்னை அதிதீவிர கொள்கையாளனைப் போலவும் காட்டிக் கொண்டார் .

கார்கா சட்டர்ஜி : இந்தி பேசாத மக்கள் அனைவரையும் வழிநடத்துகிறார் மு.க.ஸ்டாலின்” : மேற்கு வங்கத்தில் ஒலிக்கும் குரல்!

Peralai - ஸ்டாலின் தான் எங்கள் வழிகாட்டி | garga chatterjee | indra kumar |  peralai | ban neet | ak rajan | Facebook

Garga Chatterjee   : Love to Thiru @mkstalin
, commander of DMK  for mentioning the emerging Bengali nationalist struggle of @BanglaPokkho
 against Hindi Imperialism. Tamil martyrs of 1965 are martyrs for Bengalis just like Bengali martyrs of 19 May 1961 are martyrs for  Tamils. VelgaTamil  JoyBangla

கலைஞர்  செய்திகள்  :  மேற்கு வங்க மக்களுக்கான அமைப்பின் பொதுச்செயலாளர் முதல்வர் ஸ்டானிலை பற்றி குறிப்பிடுகையில்   : இந்தி பேசாத மக்கள் அனைவரையும் வழிநடத்துகிறார் மு.க.ஸ்டாலின்” : என்கிறார் வங்கத்தில் ஒலிக்கும் குரல்!
“நீட் தேர்வு விவகாரத்தில் இந்தி பேசாத அனைத்து மாநில மக்களையும் தளபதி மு.க.ஸ்டாலின் வழிநடத்துகிறார்” மேற்கு வங்க மக்களுக்கான அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் கார்கா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.  ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்கு ஒன்றிய மோடி அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஓபிசி பிரிவினருக்கு மருத்துவப்படிப்பில் 4,000 இடங்கள் கிடைக்கும் - வில்சன், வழக்கறிஞர்

 மின்னம்பலம் : மருத்துவக் கல்வியில் சேரும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுவதன் மூலம் 4000 இடங்கள் கிடைக்கும் என்று மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடும் வழங்கி மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கில், திமுக சார்பில் நடப்பு கல்வியாண்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதில் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

செங்கல்பட்டு - மொய்தீன்- தினேஷ் என்கவுண்டரில் சுட்டு கொலை ! இரட்டைக் கொலையில் தொடர்புடையவர்கள்

 tamil.news18.com - : செங்கல்பட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பியது.
செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி அடுத்தடுத்து இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பயங்கர சம்பத்தில் ஈடுபட்ட இருவரை வைது செய்ய முயன்றபோது அவர்கள் காவல்துறையினரை தாக்கியதால், தற்காப்பிற்காக அவர்களை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

வெள்ளி, 7 ஜனவரி, 2022

சமூகநீதியை உறுதிசெய்த உச்சநீதிமன்றம்.. OBC இடஒதுக்கீடு தி.மு.க மேற்கொண்ட தொடர் முயற்சிகள்..!

கலைஞர் செய்திகளை Vignesh Selvaraj  : மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதியின்பால் பற்றுகொண்ட தி.மு.கழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி!" என தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். OBC இடஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க மேற்கொண்ட தொடர் முயற்சிகள் இங்கே:

26.07.2019 - OBC இடஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் பி.வில்சன் எம்.பி. பேச்சு.

01.11.2019 - OBC இடஒதுக்கீடு தொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம்.

ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் உறுதி!

 மின்னம்பலம் : மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகிதம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்துவது குறித்துக் கடந்த ஜூலை 19 ஆம் தேதி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது.
ஆனால் இந்த அரசாணைக்கு எதிராக பல்வேறு முதுகலை நீட் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த சூழலில் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவை ஆளுநர் உரையின்போது விடுதலை சிறுத்தைகள் வெளியேறியது! உண்மையில் ஒன்றிய அரசுக்கு எதிராகவா மாநில அரசுக்கு எதிராகவா?

tamil.samayam.com  : தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின் நடக்கும் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் முதன் முதலாக அவர் உரையாற்றினார்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், தமிழக ஆளுநரின் உரைக்கு திடீரென எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக உள்ள விசிக கட்சி வெளிநடப்பு செய்தது.
இதை பார்த்து ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் வாயடைத்து போனாலும் திருமாவளவன் வெளியிட்டு இருக்கும் விளக்கம் பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் 7,000- ஐ நெருங்கியது கரோனா பாதிப்பு!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :   கரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"தமிழ்நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 4,862-ல் இருந்து 6,983 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 6,939 பேர், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 44 பேர் என 6,983 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,28,736 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கரோனா பாதிப்பு 6,983 ஆக உள்ளது.
சென்னையில் மேலும் 3,759 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல், செங்கல்பட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 816 ஆகவும், திருவள்ளூரில் 444 ஆகவும், கோவையில் 309 ஆகவும், வேலூரில் 223 ஆகவும், காஞ்சிபுரத்தில் 185 ஆகவும், தூத்துக்குடியில் 132 ஆகவும் திருச்சியில் 123 ஆகவும் சேலத்தில் 92 ஆகவும் உயர்ந்துள்ளது.

சேர் பொன் .இராமநாதனை ஆறுமுக நாவலர் அரசியலுக்கு கொண்டுவந்த கதை - என்.சரவணன்

namathumalayagam.com- ந.சரவணன் : 1879ஆம் ஆண்டு என்பது முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த வருடம். குறிப்பாக தமிழர் வரலாற்றில். அதற்கு முந்திய மூன்று வருடங்களாக யாழ்ப்பாணத்தில் பரவியிருந்த கொலரா நோயினால் ஏறத்தாள 7000பேர் இறந்தனர். கொலரா எதிர்ப்பு – நிவாரண நடவடிக்கையின் விளைவாக பல தமிழ் பிரமுகர்கள் சாதி மத பேதமின்றி ஒன்றுபட்டார்கள். 1879 அளவில் கொலரா நோய் நின்று நிலைமை வழமைக்குத் திரும்பியது. இந்த ஆண்டு தான் ஆறுமுக நாவலர் இறந்தார். சேர் முத்துக்குமாரசுவாமியும் இறந்தார். சேர் பொன்னம்பலம் இராமநாதனின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. சேர் முத்துக்குமாரசாமி; இராமநாதனின் தாய்மாமனான முத்துக்குமாரசாமியின் அரவணைப்பில் வளர்ந்தவர் தான் இராமநாதன்.

வியாழன், 6 ஜனவரி, 2022

கோயம்புத்தூர் முன்னாள் முஸ்லிம் ஜனநாயக செயற்பாட்டாளர் தோழர் அனீஷ் கைது! பின்னணியில் இஸ்லாமிய தீவிரவாதிகள்?

  Rishvin Ismath   : கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னாள் முஸ்லிம் செயற்பாட்டாளரான தோழர் அனீஷ் அவர்கள் 29.12.2021 அன்று கைதுசெய்யப்பட்டு தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மதநிந்தனைக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் போலீசார் சுயமாக மேற்கொண்டதாக சித்தரிக்கப்படும் இந்தக் கைதின் பின்னணியில் இஸ்லாமியவாதிகள் இருக்கலாம் என்பதை இலகுவாக ஊகிக்க முடியுமாக உள்ளது.
முற்போக்குவாத முகமூடி அணிந்து கொண்டு முன்னாள் முஸ்லிம்கள் மீது மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு தொடர்ந்தும் வன்மத்தைக் கக்கிவரும் ஆஷிக் அலி எனும் இயற்பெயர் கொண்ட ஆஷிக் மாறன்.
 என்ற பெயரில் சமூக ஊடகங்களில் உலவி வரும் தீவிர இஸ்லாமியவாதி.
 கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தோழர் அனீஷை சிறைக்கு அனுப்பிக் காட்டுவதாக பகிரங்கமாக அச்சுறுத்தி இருந்தான்.
அந்த அச்சுறுத்தலின் பின்னணியில் அனீஷ் பகிர்ந்து இருந்த மீம்ஸ் சிலவற்றைக் காரணமாகக் காட்டி இந்த அநீதியான கைது இடம்பெற்றுள்ளது.

கிரகங்களுக்கும் ஜாதி உண்டாம் ... ? குரு பார்ப்பனராமே? சந்திரன் சூத்திரனாமே? அப்புறம் நெப்டியூன் யுரேனஸ் புளூட்டோ இத்தியாதி?

 Dhinakaran Chelliah :   RedPix 24X7 சேனலில் சமீபத்தில் வெளியான Sri Ramji அவர்களின் நேர்முகம் நிகழ்ச்சியைக் கேட்டேன். இதில்,Sri Ramji ஐயா அவர்கள் ஜோதிடத்திற்கும் வர்ணாசிரமத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றும், வர்ணம் மாறக் கூடியது அதை தொழில் சார்ந்தது பிறப்பால் அல்ல எனப் பல பொய்களைக் கூறியிருக்கிறார்…
ஜோதிட சாஸ்திரம் வர்ணாஸ்ரமம் சாராதது என அவர் கூறியது பொய் என இப்பதிவை வாசிப்பவர்களுக்கு விளங்கும்.
ஜோதிட நூல்கள் அனைத்தும் வர்ணம் சாதியை அடிப்படையாகக் கொண்டவை. உதாரணத்திற்கு சில ஜோதிட நூல்களில் உள்ளவற்றைத் தருகிறேன்…
முதல் நூல்:Bangalore Venkata Raman (Editor,The Astrological Magazine) அவர்கள் எழுதிய Hindu Predictive Astrology
எனும் நூலில் உள்ள குறிப்பைத் தருகிறேன்;
கிரகங்களின் ஜாதிகள்:

ராஜேந்திர பாலாஜி கைதில் அவசரம் ஏன்?- தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

 மாலைமலர் : கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி வரை பெற்று மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மதியம் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் காரில் சென்ற ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

 மாலைமலர் :  தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொண்டு கல்லூரிகளைத் திறந்து வைக்க பிரதமர் மோடி ஜனவரி 12-ம்தேதி தமிழகம் வர இருக்கிறார். மேலும், விருதுநகரில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொள்ள இருக்கிறார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்.. திமுக எம்.பி டி.ஆர் பாலு பேட்டி

 Rayar A  -  Oneindia Tamil  : டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் உயிரை விட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் தொடர்ந்து எதிப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழக சட்டசபையில் நீட் விலக்கு தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா தமிழக ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நீட் மசோதாவை தமிழக ஆளுநர் இதுவரை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை.
தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் முகாம் தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் முகாம் இது தொடர்பாக ஆளுநரிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் நீட் தேர்வு மசோதா 100 நாட்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

மோடி பஞ்சாப் கூட்டம் - 7000 நாற்காலிகள் தயார்- வெறும் 700பேர்கள்தான் வந்தனர்! மோடி திரும்பிச் சென்ற காரணம்

 கலைஞர் செய்திகள் : "70,000 பேருக்காக நாற்காலிகளை பா.ஜ.கவினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் 700 பேர்தான் நிகழ்ச்சிக்கு வந்தனர். இதன் காரணமாகவே நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர்” என பஞ்சாப் முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று பஞ்சாப்பில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார். இதற்காக பதிந்தா விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பயணிக்க இருந்தார்.
மோசமான வானிலை காரணமாக 20 நிமிடங்கள் விமான நிலையத்தில் காத்திருந்தார் மோடி. வானிலை சீரடையாததால் 100 கி.மீ தொலைவுக்கு சாலை மார்க்கமாக கடப்பது என முடிவு செய்தார்.

கண்டி நட்சத்திர விடுதியில் A/C கேஸ் வெடிப்பு -இளைஞர் தீக்கிரையாகி உயிரிழப்பு

 மலையக குருவி :  கண்டி – இரண்டாவது ராஜசிங்க மாவத்தையிலுள்ள நட்சத்திர விடுதியில் குளிரூட்டிக்கான வாயு (A/C GAS) வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
ஹோட்டலிலுள்ள குளிரூட்டிக்கான வாயு திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த தருணத்தில், இந்த வெடிப்பு சம்பவம் நேர்ந்துள்ளது.
வெடிப்பு சம்பவத்தில் தீ காயங்களுக்கு உள்ளான இளைஞன், பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மாத்தளை – வரகாமுர பகுதியைச் சேர்ந்த 23 வயதான மொஹமட் ஹிஷாம் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

புதன், 5 ஜனவரி, 2022

பஞ்சாபில் பிரதமர் மோடி : "உயிருடன் திரும்பியிருக்கிறேன்..முதல்வருக்கு நன்றி சொன்னேன் எனச் சொல்லிவிடுங்கள்" - பஞ்சாப் அதிகாரிகளிடம்

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  பிரதமர் நரேந்திர மோடி, இன்று பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூரில் 42 ஆயிரத்து 750 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, அங்கு நடைபெறும் பேரணியில் உரையாற்றுவதாக இருந்தது. இந்தநிலையில் பஞ்சாப் வந்த பிரதமர் மோடி, வானிலை காரணமாக விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டார்.
இந்தநிலையில் பிரதமர் சென்ற வழியில், போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்துள்ளனர். இதன்காரணமாக மேம்பாலம் ஒன்றில் 15 முதல் 20 நிமிடம் வரை பிரதமர் மோடி சிக்கிக்கொண்டார். பின்னர் பிரதமர் மீண்டும் விமான நிலயத்திற்கே திரும்பி சென்றார். இந்த பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், பஞ்சாப் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது .. கர்நாடகாவில் பிடிபட்டார்

 மாலைமலர் : கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை கர்நாடகாவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
சென்னை:  அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. மேலும் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பி உள்ளிட்ட சிலரும் இந்த மோசடியில் உடந்தையாக செயல்பட்டனர் என புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க அவர் முன்ஜாமின் மனுக்களை தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுக்கள் கீழ் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் தள்ளுபடி ஆனது.

தமிழ்நாட்டில் நாளை முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு - அரசு அறிவிப்பு

 மாலைமலர் : தமிழ்நாட்டில்  நாளை முதல் அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில்  கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா தடுப்பு பணி தொடர்பாக கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கினர்.

நாகினி சீரியல் நடிகர்களை பார்க்க யாழ்பணம் ஊடாக இந்திய செல்ல முயன்ற சிங்கள சிறுமிகளை போலீசார் மீட்டனர்

kuruvi.lk : ‘நாகினி’களை சந்திக்க யாழ். ஊடாக இந்தியா செல்ல திட்டமிட்ட சிறுமிகள்! நடந்தது என்ன?
தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் நாளாந்தம் ஒளிபரப்பாகும் பிரபல இந்திய தொலைக்காட்சி நாடகம் ஒன்றில் நடிக்கும் ஷிவன்யா மற்றும் சேஷா ஆகியோரை நேரில் பார்க்க படகு மூலம் இந்தியாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த மூன்று சிறுமிகளை இடைநடுவில் ஹார்ப்பர் பொலிசார் கடந்த 31 ஆம் திகதி கண்டுபிடித்துள்ளனர்.
இலங்கை சிங்கள தொலைக்காட்சி அலைவரிசைகளில் இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ஹிந்தி நாடகங்கள் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன.

மோடியின் வருகை.. வைகோ திடீர் முடிவு எடுப்பாரா ? திசை மாறுமா தமிழக அரசியல்?

Who Is Vaiko - #vaiko | Facebook

Josephraj V | Samayam Tamil:  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென எடுத்துள்ள முடிவால் தமிழக அரசியலின் திசை மாறுமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகத்துக்கு பிரதமர் மோடி வரும் போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ என்கின்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆகும்.
அந்தளவுக்கு, திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகளின் போராட்ட அடையாளங்களில் முக்கிய ஒன்றாக ‘கோ பேக் மோடி’ என்ற ஹேஷ்டேக் மாறியது.
இதில் முக்கியமாக நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி துரோகம் செய்ததாக குற்றம்சாட்டி, ‘கோ பேக் மோடி’ ஹேஷ்டேக் எதிரொலிக்கச் செய்யப்பட்டது.
ஆனால் எந்த பிரச்சனைகளுக்காக பிரதமர் மோடியை திமுக எதிர்த்து வந்ததோ அந்த பிரச்சனை இன்னமும் தீர்க்கப்படாமல் தான் உள்ளது. அதே சமயம் மோடி எதிர்ப்பு என்ற நிலை மட்டும் திமுக வட்டாரத்தில் தற்போது மிஸ் ஆகி இருக்கிறது.

Rowdy Baby Surya, சிக்காவின் யூடியூப் சேனல்கள் முடக்கம்?.. காவல் துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்!

  Vishnupriya R  -   Oneindia Tamil :  கோவை: இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோரின் யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கோவை எஸ் பி செல்வ ரத்தினம் தெரிவித்துள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்தவர் ரவுடி பேபி சூர்யா. இவர் ஸ்பா நடத்தி அதில் விபச்சாரம் செய்வதாக போலீஸ் கைது செய்யப்பட்டதாக சில ஆண்டுக்கு முன் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தனக்கும் அந்த ஸ்பாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ரவுடி பேபி சூர்யா தெரிவித்து வந்தார்.
டிக்டாக் முடக்கப்பட்ட நிலையில் யூடியூப் சேனல் மூலம் தினந்தோறும் லைவ்வாக பேசி லைக்ஸ்களையும் நல்ல, கெட்ட கமெண்ட்களையும் இவர் பெற்று வந்தார்.

தமிழ் வழி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு... தேர்வுத்துறை உத்தரவு சொல்வது என்ன?

 கலைஞர் செய்திகள் : தமிழைப் பயிற்றுமொழியாக கொண்டு தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.
அதேபோல, கண்பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், அரசுப் பள்ளியில் படிக்கும் எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

திரிகோணமலை பெட்ரோலியக் களஞ்சியம் - இந்தியாவுக்குப் பின்னடைவு!

 மின்னம்பலம் : இலங்கையின் கிழக்கு முனைப்பகுதியான திருகோணமலை துறைமுகத்தில் பெட்ரோலியக் களஞ்சியத்தைக் கட்டுப்படுத்துவது யார் என்பதில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன் ஆட்சிக்காலத்தில் தமிழர் தாயகப் பகுதியான திருகோணமலையில் மிகப் பெரும் பெட்ரோலியக் களஞ்சியம் அமைக்கப்பட்டது.
இதில், ஒரே சமயத்தில் 80 இலட்சம் பேரல்களில் பெட்ரோலியப் பொருள்களை சேமித்துவைக்க முடியும். இவ்வளவு வசதி கொண்ட உலக அளவில் சிறந்த சில சேமிப்புக் களஞ்சியங்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.

பிறந்தநாள் காணும் கலைஞர் கனிமொழி வாழ்கவே!

 திருமதி கனிமொழி கருணாநிதி (January 5, 1968)
இவரை ஒரு மாபெரும் தலைவரின் மகளாகவோ ஒரு சீனியர் எம்பியாகவோ.
ஒரு பெரிய கட்சியின் மகளிர் அணி தலைவியாகவோ அந்நியப்படுத்தி பார்க்க எவராலும் முடியாது.
உரிமையோடு ஒரு சகோதரியிடம் பேசுவது போல பேசமுடியும் பழக முடியும்.
எந்த வித அதிகார மமதையும் இவரிடம் கிடையாது .
சாதாரண அரசியல்வாதிகள் காட்டும் எளிமையையும் தாண்டி,
உண்மையும் உணர்வும் இவரிடம் இயல்பாகவே இருக்கிறது.
எந்த மனிதரையும் தன்னவராக கருதும் " யாவரும் கேளீர்" என்ற பண்பு இவரிடம் இருக்கிறது.
பலருக்கும் வாய்க்காத அரிய பண்பு இது .
வாயால் எவரும் யாவரும் கேளீர் என்று உச்சரிக்கலாம்
ஆனால் அதை வாழ்வியல் கோட்பாடாக கொண்டிருப்பது அரிது.
குருவி தலையில் பனங்காய் என்பது போல 2 ஜி வழக்கில் இவரை மாட்டிவிட்டு திகாரில் தள்ளியது சுயநல கூட்டம்.
அந்த சதியை இவர் எதிர்கொண்ட விதம் இவரின் மென்மையான சுபாவத்திற்குள் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் மேன்மையை உலகம் கண்டு கொண்டது

குளிர்காலத்தில் உதிரும் கூந்தல்.. கலைஞர் டிவியில் என்ன நடக்கிறது?

 Panimalar Panneerselvam  :  Them: என்னங்க 2021 ல எல்லாமே நல்லாதான் நடந்த மாதிரி சொல்றீங்க, எதுவுமே கெட்டதா நடக்கலயா?
Me: நடந்துச்சு, நடந்துகிட்டாங்க. எப்பயும்போல என் பின்னாடி பேசுறது, போட்டுக்குடுக்குறது, கேரக்டர் அசாசினேஷன் பண்றது, கூட இருந்தே குழி பறிக்குறது, அஃபிசியல் போன் நம்பர தப்பான குரூப்ல பரப்பிவிட்டது, வேலை செய்யும்போது சேலை விலகுன வீடியோவ ட்ரெண்ட் ஆக்கிவிட்டது, ஆன்லைன் புல்லியிங், பாதிக்கப்பட்ட நம்மலயே குத்தம் சொன்னது, ஏன் கடைசியா வேலையவிட்டு தூக்கிட்டாங்கனு கதை கட்டிவிட்டதுனு நிறைய நிறைய நிறைய….
Them: அப்ப அதப்பத்தி அவுங்களப் பத்தி ஏன் எழுதல?
Me: ஏன்னா அவுங்களுக்கெல்லாம் குளிர்காலத்தில் உதிரும் என் கூந்தலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்கூட கொடுக்கல.
Just ignore negativity, move o

ஒரிஜினல் பெங்காலி ஓம் ! டுப்ளிகேட் சம்ஸ்கிருத ஓம் !

 செல்லபுரம் வள்ளியம்மை : ஒரிஜினல் பெங்காலி ஓம் ! டுப்ளிகேட் சம்ஸ்கிருத ஓம் !
கர்கா சாட்டர்ஜி: இடது புறம் பெங்காலி எழுத்தில் ஓம் எழுதப்பட்டுள்ளது -
இது பெங்காலிகளுக்கு உரியது சரியானது
பெங்காலியில் எழுதப்பட்ட ஓம் என்ற எழுத்தை இடது புறத்தில் சம்ஸ்கிருத ஓம் என்று திரித்து எழுதுகிறார்கள்
சமஸ்கிருதத்திற்கு சொந்தமாக எழுத்தே கிடையாது
சமஸ்கிருத மொழியானது வங்காள மண்ணில் வங்காள (பெங்காலி) எழுத்தில் எழுதப்பட்டுள்ளது, சமஸ்கிருதம் உத்தர பிரதேசத்தில்

நாகிரி என்ற பழங்குடி மக்களின் எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.
இன்று இந்தியின் ஆதிக்கம் பெங்காலிகளின் இந்து மதத்தில் கூட காணப்படுகிறது.
இப்போதெல்லாம், சாலைகள், கோயில்கள், வீடுகள் போன்ற எல்லா இடங்களிலும் ஓம் என்ற எழுத்து ஹிந்தி திரிபு எழுத்தில் எழுதப்படுகிறது.
இன்னும் சில இந்து வங்காளிகளின் வீட்டில் தவிர வங்காள மொழியில் எழுதப்பட்ட 'ஓம்' இன்று அழிந்துவிட்டது.
பல வங்காளிகளுக்கு இன்னும்கூட தங்கள் மொழி பற்றிய சுயநினைவு இல்லை,
தங்கள் சொந்த மாநில விடயங்களை விட்டுவிட்டு,
ஹிந்தி மொழியிடம் தங்கள் மதத்தை இழப்பது கூட இவர்களுக்கு தெரிவதில்லை

செவ்வாய், 4 ஜனவரி, 2022

தாலிபான்கள் பாகிஸ்தான் எல்லை வேலிகளை நொறுக்குகிறார்கள் விஸ்தரிப்பு ஆரம்பம்? Taliban destroy border fences with Afghanistan in push for Pashtun unification

 BBC - அஜிஃஜுல்லா கான்  -     பிபிசி உருது.காம், பெஷாவர் : ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட முள்வேலிகள் வேரோடு பிடுங்கப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளிவருகின்றன.
இந்த எல்லையை தாங்கள் ஏற்கவில்லை என்று இந்த வீடியோக்களுக்குப் பிறகு வெளியான ஆப்கன் தாலிபன் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை பாகிஸ்தான் அரசு தரப்பில் இது குறித்து முழு அமைதி நிலவியது. ஆனால் திங்களன்று வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியின் அறிக்கை வெளிவந்தது.

மனைவி தற்கொலை: கணவனை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்!

Police arrest husband and imprison him!

நக்கீரன் : திருச்சி உறையூர், காந்திபுரத்தைச் சேர்ந்த சினேகா என்பவருக்கும், புள்ளம்பாடியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்று உள்ளது.
திருமணத்தின் போது 17 பவுன் நகை, சீர்வரிசை, 5 லட்சம் திருமண செலவு செய்யப்பட்டு உள்ளது.
அதன் பின்னரும் சினேகாவின் மாமியார் சகாயராணி என்பவர் கொடுமைப்படுத்தி உள்ளார். இதன் காரணமாக கணவன், மனைவி இருவரும் தனிக்குடித்தனம் வந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா மாத்திரை: விலை 35 ரூபாய்.. Molnupiravir

 மாலைமலர் : இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்காக மோல்னுபிராவிர் (மோல்ஃப்ளூ) என்ற மாத்திரையை அறிமுகம் செய்யவுள்ளதாக டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள் கடந்த வாரம் அறிவித்தன.
தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மாத்திரைகளை பயன்படுத்தலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த மாத்திரையின் விலை 35 ரூபாய் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரெட்டி ஆய்வகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-
மோல்ஃப்ளூ மாத்திரைகள் அடுத்த வாரம் முதல் மருந்து கடைகளில் கிடைக்கும். அதிகம் கொரோனா பாதிப்புகள் உள்ள மாநிலங்களுக்கு இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் எப்படி பொறிவைத்து பிடிக்கிறது? ஆய்வு கட்டுரை - பனிமலர் பன்னீர்செல்வம்

May be an image of 2 people and people standing

Panimalar Panneerselvam :  ஆன்லைன் சூதால் மற்றுமொரு அழகிய குடும்பம் சிதைந்திருக்கிறது.
பார்க்ளேஸ் வங்கியில் வேலை. ஆண்டுக்கு 28 லட்சம் சம்பளம்.
அத்தனை அழகான இரண்டு பிள்ளைகள் என வரம் வாங்கி வாழ்ந்திருந்த வாழ்வை,
ஆன்லைன் ரம்மி ஒரு நொடியில் முடித்து வைத்த கொடூரத்தால் மனம் பற்றி எரிகிறது.
மற்ற மரணங்கள் போல இதிலும் சூது விளையாட்டாய்த்தான் ஆரம்பித்திருக்கிறது.
பாதியில் விட முடியாமல் நண்பர்களிடத்தில் கடன் பெற்றும் விளையாடியிருக்கிறார்.
ஒரு கோடிக்கு மேல் இழந்து பரிதவிக்க அப்போது தான் இது மனைவிக்கு தெரிய வந்திருக்கிறது.
பிரச்சினை வெடிக்க, கோபத்தில் மொத்த குடும்பத்தையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்!.. கார்த்திகேய சிவசேனாதிபதி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்

May be an image of 5 people, beard, people sitting and people standing

Karthikeya Sivasenapathy  : மாண்புமிகு  திராவிட  முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அவர்களுக்கு , எனது வேண்டுதல் மடல் !!
திரு உதய நிதி ஸ்டாலின் , சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரை ஏன்  அமைச்சராக்க வேண்டும் ??
என்று பொதுவான கேள்விக்கான காரணங்களை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.
கழக தலைவராக எங்கள் அனைவர்க்கும் ஒரு குடும்ப தலைவராக வழி நடத்தி செல்லும் தங்களுக்குத் தெரியாதது  என்று ஏதும் இல்லை.
ஒரு சட்டமன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர் , ஆளும் கட்சியின் உறுப்பினர் அமைச்சர் ஆக்கப்படுவதற்கு எல்லா தகுதியும் சட்டப்படி உண்டு.

கந்துவட்டி மரணம்: கைது செய்து தப்பவிட்ட போலீஸார் - என்ன பின்னணி?

 மின்னம்பலம் : கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி, திங்கட்கிழமை டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ கான்பிரன்ஸ் மீட்டிங் நடத்தினார்.
கூட்டத்தில் டிசி மற்றும் எஸ்பி முதல் டிஜிபி அந்தஸ்து வரையில் அனைத்து ஐபிஎஸ் ஆபீஸர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய டிஜிபி, “கடலூர் மாவட்டத்தில் ஒரு இறப்பு நடந்துள்ளது. போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில் மல்ட்டிபிள் ஃபிராக்சர் என்று இருக்கிறது.
அது கொலையா, இல்லையா என்று தெரியாமல் வைத்திருக்கிறார்கள். ஐஜி கேட்டால் ஐஜிக்குத் தெரியலை. டிஐஜிக்கும் தெரியலை. எஸ்பிக்கும் தெரியலை என்கிறார்கள்” என்று கடுமையாகப் பேசியிருக்கிறார். இதையடுத்து கடலூர் எஸ்பி சக்தி கணேசன் தனக்கு கீழே பணிபுரியும் ஓர் அதிகாரியிடம், “என்ன நடக்கிறது? ஒரு மாசமா விசாரிக்கிறீங்க? கைது செய்ய யோசிக்கிறீங்களா? டிஜிபி என்னைக் கடுமையாகத் திட்டுகிறார்? ஏன் கைது செய்யலை?” என்று சத்தமாகப் பேசி லைனைத் துண்டித்துவிட்டார்.

பட்டியல் சாதி (Scheduled Caste ) சான்றுகள் விற்பனை? ...இதுவரை 67 சான்றுகள்.. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்...

No photo description available.

Arumugam Selvi :  பட்டியல்  சாதி (Scheduled Caste ) சான்றுகள் விற்பனை ...?
பட்டியல் சாதி அல்லாத பிற்படுத்தப்பட்ட சாதி மகாலிங்கம் என்பவருக்கு கையூட்டு பெற்றுக்கொண்டு SCகுறவர் சான்றினை தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டாச்சியர் திரு. ஆதிநாராயணன்  வழங்கி வருகிறார்.
இவ்வாறு 67 சான்றுகள் வழங்கி உள்ளார் என தகவல் வருகிறது.   பட்டியல் சாதியினர் இட ஒதுக்கீடு பறிபோகும் அபாயம்.
திருநெல்வேலி களக்காட்டில் ஒரு வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவரின் மனை வி பெயர் எஸ்தர் என்பதால் அவருக்கு சாதி சான்று கொடுக்க வாட்சையார் மறுத்துவிட்டார்.
இதனால் வன்கொடுமை வழக்கில் குற்ற அறிக்கை தாக்கல் செய்யவில்லை. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் முடமாகி கிடக்கிறார்.

உலகின் முதல் இசை தமிழிசையே! ஏஆர்ரஹ்மான் ஃபவுண்டேஷனும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கும் இணைந்த வெளியீடு கவிஞர் முத்துலிங்கம்

May be an image of 3 people and text
May be an image of 1 person

Kutti Revathi  :   நண்பர்களே, ஏஆர்ரஹ்மான் ஃபவுண்டேஷனும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கும் இணைந்து மு. ஆபிரகாம் பண்டிதரின் நூலை “தமிழிசையை எளிதாகக் கற்றுக் கொள்ளுங்கள்’, என்ற புதிய பதிப்பாகக் கொண்டுவருமிடத்து,  இன்றைய தினமணி இதழில் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள், “உலகின் முதல் இசை தமிழிசையே!”, என்ற அருமையான
 கட்டுரையை தமிழிசையின் பின்னணி விளங்குமாறு எழுதியுள்ளார்.
நாம் பதிப்பிக்கும் நூலுக்கு இந்தக் கட்டுரை சிறந்த முகவுரையாக இருக்கிறது. நண்பர்கள், தமிழிசை ஆர்வலர்கள் அனைவரும் இந்தக் கட்டுரையை வாசித்துப் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கவிஞர் முத்துலிங்கம் அவர்களுக்கும் தமிழிசையின் நவீன திசை காட்டும் இக்கட்டுரையை இக்காலத்தில் வெளியிட்டிருக்கும் தினமணி இதழுக்கும் மனமார்ந்த நன்றி.

உலகின் முதல் இசை தமிழிசையே!
கவிஞர் முத்துலிங்கம்
மார்கழி மாதம் தொடங்கிவிட்டால் சென்னையில் இசை விழாக்கள் பல கலையரங்குகளில் சிறப்பாக நடைபெறுகின்றன. அதில் அண்ணாமலை மன்றத்தில் தான் தமிழ்ப்பாடல்கள் முழுக்க முழுக்கப் பாடப் பெறுகின்றன. அதற்குக் காரணம் தெலுங்கிசை ஆதிக்கத்திலிருந்து தமிழிசையைக் காப்பதற்காக அண்ணாமலை செட்டியார் தான் தமிழிசைச் சங்கத்தைத் தோற்றுவித்தவர். அவர் தான் அண்ணாமலை மன்றத்தையும் உருவாக்கியவர்.

உள்ளத்தில் நல்ல உள்ளம் .. வஞ்சகர் கூட்டமடா .. சீர்காழியும் சித் ஸ்ரீ ராமும்

May be an image of 1 person and text that says 'Ullathil Nalla Ullam...'
May be an image of 1 person

Govi Lenin :  வருவதை எதிர்கொள்ளடா...       உள்ளத்தில் நல்ல உள்ளத்தை அவர் எப்படிப் பாடினார் என்பதைவிட, ஏன் பாடினார் என்பது முக்கியமானது.
சங்கீத மும்மூர்த்திகளில் முதன்மையானவரான, தியாகராஜர் எனும் தியாகய்யர் கர்நாடக சங்கீத வித்வான்களுக்குத் தியாகப் பிரம்மம். இசையின் பிரம்மாவான அவர்.
 அடைக்கலமான திருவையாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் தியாகராஜர் ஆராதனையில் பங்கேற்றுப் பாடுவது என்பது அவர்களைப் பொறுத்தவரை வரம்.

12 toll gates - வழிப்பறி கொள்ளையா? ! சென்னைலிருந்து கன்னியாகுமரிக்கு மொத்தம் 12 சுங்க சாவடிகள்!

No photo description available.

Kannan Kannan  :  சென்னைலிருந்து கன்னியாகுமரிக்கு
காரில் வர, மொத்தம் 12 சுங்க சாவடிகளை (toll gates) குறுக்கிட வேண்டியது இருக்கிறது.
செங்கல்பட்டு டோளில் 50 ரூபாயில் ஆரம்பித்து, அதிகபடியாக 90 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க படுகிறது... மொத்தம் 750 ரூபாய் ஆகுது.
1. இந்த கட்டணம் gst- ல வருமா? st- ல வருமா? Road tax-ல? இல்ல எதுல வரும்?
2. சாலை போட்டதற்கு கொடுக்கிறோமா? இல்லை சாலையை பராமரிக்க கொடுக்கிறோமா?
3. யாருக்கு கொடுக்குறோம்? Sai sai enterprise  - ல ஒரு பில் போட்டிருக்காங்க. அந்த கம்பனிக்கு ஒரு வெப்சைட் கூட இல்ல. யாரு அவங்க?
4. அந்த நிறுவனங்களுக்கு எத்தனை வருசம் இப்படி மொய் எழுதணும்?
5. அப்புறம் எதுக்கு road tax கட்டுறோம்?
எல்லா விசயத்திலேயும் எங்களை எமாத்திட்டே இருந்தா நாங்க எங்கே போவோம், சர்கார்???

திங்கள், 3 ஜனவரி, 2022

தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தவரை காப்பாற்றிய பெண் போலீஸ்! வைரல் வீடியோ

 மாலைமலர் : இந்த வீடியோவை இதுவரை 93,000 பேர் பார்த்துள்ளனர். 5,700 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மும்பை: மும்பையில் ரயில் ஓட்டுநர் ஒருவர், தண்டவாளத்தில் படுத்திருந்த நபரை காப்பாற்ற திறமையாக ரயிலை நிறுத்திய வீடியோவை மத்திய ரயில்வேதுறை அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
மும்பையில் நேற்று காலை 11.45 மணி அளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயில் வருவதை கண்டு தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துக்கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்காக அவ்வாறு செய்தாரா அல்லது குடி போதையில் செய்தாரா என தெரியவில்லை. ஆனால் ரயில் அருகில் வந்துவிட்ட நிலையில், ஒருவர் படுத்திருப்பதை அறிந்த ரயிலின் ஓட்டுநர் சட்டென்று பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்திவிட்டார்.

சைடு டிஷ் லாபம் 90 கோடி: செந்தில்பாலாஜி மாஸ்டர் பிளான்(டாஸ்மார்க்) பின்னணி!

சைடு டிஷ்  லாபம் 90 கோடி:  செந்தில்பாலாஜி  மாஸ்டர் பிளான்  பின்னணி!

மின்னம்பலம் : டாஸ்மாக் மது பான பார் டெண்டரில் முறைகேடு நடப்பதாக இன்று (ஜனவரி 3) பார் உரிமையாளர்கள் அத்துறைக்கான அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டின் முன் போராட்டம் நடத்திய நிலையில், அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து, “டெண்டர்கள் இப்போதுதான் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. எந்த முறைகேடும் இல்லாமல் வெளிப்படையாக நடந்திருக்கிறது” என்று பதிலளித்துள்ளார்.
அதேநேரம், “டெண்டர் நிபந்தனைகளைப் பின்பற்றாதவர்கள் யாராக இருந்தாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அவர்கள் யார், எந்த கட்சி என்பது பற்றிய எந்த விறுப்பு வெறுப்பும் இல்லை” என்றும் சொல்லியிருக்கிறார்.

புதுக்கோட்டை துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு ! சிகிச்சை பலன் அழிக்கவில்லை!

மாலைமலர் :  புதுக்கோட்டை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகேயுள்ள கொத்தமங்களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன், கூலித் தொழிலாளி. இவரது மகன் புகழேந்தி (வயது 11). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் நார்த்தாமலையில் உள்ள தனது தாத்தா முத்து என்பவரது வீட்டிற்கு வந்திருந்தான். சிறுவன் புகழேந்தி தனது பாட்டி வீட்டில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் டெல்லியின் வலைப்பின்னல்! பேராசிரியர் ஜெயரஞ்சன் விலாவாரியாக விளக்கம்

தமிழக  நிர்வாகத்தில் டெல்லியின் வலைப்பின்னல்: போட்டுடைத்த ஜெயரஞ்சன்

மின்னம்பலம் : புத்தக வெளியீட்டு விழாக்களுக்கும் தமிழ்நாடு - இந்திய அரசியலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. புத்தகங்களில் இருக்கும் தகவல்களை விட அதிக அதிர்ச்சியான பரபரப்பான தகவல்கள் புத்தக வெளியீட்டு விழாக்களில் எதேச்சையாக வெளிப்பட்டு விடுவதுண்டு.
சென்னைப் புத்தகக் காட்சி ஒமிக்ரான் ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டாலும், புத்தக வெளியீடுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் தமுமுகவின் பொறுப்புப் பொதுச் செயலாளரும், பேராசிரியருமான கவிஞர் ஆரூர் புதியவன் என்கிற ஹாஜா கனியின், ‘சூடு’ கவிதைத் தொகுப்பு நேற்று (ஜனவரி 2) சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியிடப்பட்டது.

ஆறுமுக நாவலர் அருட்பெரும் ஜோதி வள்ளலார் மோதல் .. உண்மையில் நடந்தது என்ன? கவிஞர் வைரமுத்துவின் விளக்கம்

 இராதா மனோகர் : கவிஞர் வைரமுத்து அவர்கள் வடலூர் ராமலிங்க வள்ளலாரின் வரலாற்றை தனது தமிழாற்று படையின் தொடர்களில் ஒன்றாக மேடையேற்றி உள்ளார்  அந்த ஆற்று நீரில் சற்று நனைந்து பாருங்கள் .
கிழக்கிந்திய கம்பனியோடு வந்த கிறித்துவம் ஒரு கோடி மக்களை மதம் மாற்றியதற்கும் ராமலிங்கரின் மனமாற்றத்திற்கு உள்ள தொடர்பு ஊன்றி உணரத்தக்கது .மதமாற்றம் இந்த மண்ணில் எந்தவழி நுழைந்தது? அந்நியர் இம்மண்ணில் எவ்வழி புகுந்தனர்?
வருணங்களென்றும் குலங்கள் என்றும் ஜாதிகள் என்றும் பிளந்து வைத்த சந்து வெளி புகுந்தது.
அந்நியரை ஓட்டவேண்டும்  அதற்கு முன்னால் அந்நியரை வரவழைத்த மதச்சண்டைகளின் பிற்போக்குத்தனத்தின் பிடரியை பிடித்து ஆட்டவேண்டும் என்று சிந்தித்த முதல் புரட்சி துறவி வள்ளலார் என்றே சொல்ல தோன்றுகிறது.
இந்து மதம் துறவின் நிறம் காவி என்றது   வள்ளாளரோ வெள்ளை என்றார்.

சென்னை விமான நிலையம் உலக தரத்தில் எட்டாவது இடத்தில் .. இந்தியாவில் வேறெந்த விமான நிலையமும் இதில் இல்லை

சென்னை விமான நிலையத்திற்கு கிடைத்த பெருமை... இந்தியாவிலேயே இந்தப் பெயர் பெற்ற ஒரே ஏர்போர்ட்..!
கலைஞர் செய்திகள்  : சென்னை விமான நிலையத்திற்கு கிடைத்த பெருமை... இந்தியாவிலேயே இந்தப் பெயர் பெற்ற ஒரே ஏர்போர்ட்..!
முதல் 20 விமான நிலையங்களின் பட்டியலில் சென்னை விமான நிலையம் 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
சா்வதேச அளவில் 2021ஆம் ஆண்டில் விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்படுவது பற்றிய கணக்கெடுப்பில், முதல் 20 விமான நிலையங்களின் பட்டியலில் சென்னை விமான நிலையம் 8வது இடத்தைப் பிடித்துள்ளது. அந்த பட்டியலில் இந்திய விமானநிலையங்களில் சென்னையை தவிர வேறு விமானநிலையங்கள் இடம் பெறவில்லை.சா்வதேச அளவில் விமான போக்குவரத்து, விமான நிலையங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகளை லண்டனை தலைமையிடமாக கொண்டுள்ள சிரியம் என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது.

மனைவி, 2 மகன்களை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை! ஆன்லைன் விளையாட்டில் ஒரு கோடியை இழந்த சென்னை....

சென்னை: மனைவி, 2 மகன்களை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை

தினத்தந்தி : ஆலந்தூர்,  சென்னையை அடுத்த பெருங்குடி பெரியார் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மணிகண்டன் (வயது 36). இவருடைய மனைவி தாரா என்ற பிரியா (35). இவர்களுக்கு தரன் (10), தாஹன் (1) என 2 மகன்கள் இருந்தனர்.
இவர்களது சொந்த ஊர் கோவை ஆகும். மணிகண்டன், லண்டனில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்புதான் பெருங்குடியில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடிவந்தார். அதன்பிறகு இங்குள்ள ஒரு தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். பிரியாவும், வங்கியில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது.

மும்பாய் வரதராஜ முதலியார் நினைவு நாள் - தாராவி மக்களின் உள்ளத்தில் வாழ்கிறார்.

May be an image of 1 person and text that says '238.13 Bombay Don Varadharaja Mudaliar வரதராஜன் முனிசுவாமி முதலியார் அல்லது வரதா பாய் (01.03.1926-02.01.1988)'

Thulakol Soma Natarajan : 13 ஆசற்றாண்டில்,பிரிட்டனில் வாழ்ந்த ராபின் ஹூட் (Robin Hood)
வசதியுள்ளவர்களிடமிருந்து எடுத்து, வரியவர்களுக்கு வழங்குதல் (Tap The Rich And Pat The Poor) என்ற
கொள்கையுடன் வாழ்ந்தவன்.
20 ஆம் நூற்றாண்டில் அe கொள்கையுடன் ஒருவர்  வாழ்ந்தார்.
அவர்தான் #மும்பை_வரதராஜன்_முதலியார்.
அவரின் நினைவுநாள் இன்று 2, ஜனவரி (1988).  அவரைப் பற்றிய காய்தல் உவத்தல் அற்ற வரலாற்றும் பதிவு உங்கள் பாவைக்கு இங்கே தருகிறேன்.
சற்றே நீண்ட பதிவுதான். ஆனால் ஒரு தமிழனின் இனம், மொழிப்பற்று எப்படி ஒரு புதிய கோணத்தில் இருந்திருக்கிறது என்பதை விளக்கும்,  அரிய செய்திகள் உள்ளடக்கிய பதிவு. தவிர்க்காது படியுங்கள !

சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு!

 Rayar A -  Oneindia Tamil :  சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைந்துள்ளது.
இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அருகிலுள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை, அடிப்படை வசதிகள் இல்லை உட்பட பல புகார்கள் எழுந்தன.
பாக்ஸ்கான் தொழிற்சாலை பெண்கள் போராட்டம் பாக்ஸ்கான் தொழிற்சாலை பெண்கள் போராட்டம் அதில் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இருப்பினும், சில பெண்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

கோவை ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமை தடுத்து நிறுத்துங்க - கல்வி கூடங்களில் மத நிகழ்வுகளா? மா. கம்யூனிஸ்ட்

 Rayar A -  e Oneindia Tamil News சென்னை: கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியின் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்ற கோவை துணை ஆணையர் ஜெயச்சந்திரனை, இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறத
இது தொடர்பாக இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுவரை ரூ.1,640 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு... வேட்டை தொடரும்” : அமைச்சர் சேகர்பாபு உறுதி!

“இதுவரை ரூ.1,640 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு... வேட்டை தொடரும்” : அமைச்சர் சேகர்பாபு உறுதி!

கலைஞர் செய்திகள் - Vignesh Selvaraj : நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 24 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

தமிழக எம்பிக்களை அமித் ஷா சந்திக்க மறுத்தது ஏன்? டி.ஆர்.பாலு விளக்கம்!

 Vishnupriya R  -   Oneindia Tamil :  டெல்லி: தமிழக எம்பிக்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்காததில் எந்த அரசியலும் இல்லை என எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சருக்கு ஆதரவாக திமுக எம்பி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் இப்படிப்பட்ட நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சட்டசபை கூட்டத் தொடரில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தற்போது பரிசீலனையில் உள்ளது.
இதனிடையே அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் எம்பிக்கள் என தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக குடியரசு தலைவரிடம் மனு அளிக்க முயன்றனர்.
கொரோனா புரோட்டோகாலை காரணம் காட்டி அவரை சந்தித்து மனு அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பெங்களூர் - நடுரோட்டில் தாயை வெட்டிக் கொலை செய்த மகள் - சொத்துக்கு ஆசைப்பட்ட மகள்

“செலவுக்கு பணம் தரவில்லை..” : நடுரோட்டில் தாயை வெட்டிக் கொலை செய்த மகள் - விசாரணையில் ‘பகீர்’!

கலைஞர் செய்திகள் : சொத்துக்கு ஆசைப்பட்டு பெற்ற தாயையே, மகள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி. இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். முதல் கணவருடன் விவாகரத்து ஆனதை அடுத்து நவீன்குமார் என்பவரை இரண்டாவதாக அர்ச்சனா திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து முதல் கணவருக்கு பிறந்த பிள்ளைகளுடன் சேர்ந்தே இருவரும் குடும்பமாக இருந்து வந்தனர். இந்நிலையில், அர்ச்சனா நெடுரோட்டில் கடந்த 27ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நடிகர் வடிவேலு குணமாகி நலமாக வீடு திரும்பினார்

 மின்னம்பலம் : கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நடிகர் வடிவேலு, தான் நல்ல நலத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு, இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுக்கு லேசான சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா தொற்றிக்கான அறிகுறி இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
பரிசோதனயில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, டிசம்பர் 23 அன்றிரவு போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இலங்கை வல்லிபுரக்கோயில் 1902 ஆம் ஆண்டுவரை புத்தர் கோயிலாகவே இருந்ததா? அந்த புத்தர் விக்கிரகம் தற்போது தாய்லந்தில் உள்ளது!

செல்லபுரம் வள்ளியம்மை : இலங்கை வடமராட்சியில் பருத்திதுறைக்கு அருகாமையில் உள்ள வல்லிபுரம் பிரதேசத்தில் 1902 ஆம் ஆண்டுவரை இங்கே காணப்படும் இந்த புத்தர் சிலை இருந்திருக்கிறது .
அதன் பின்பு இந்த சிலை யாழ்ப்பாண பழைய பூங்காவில் உள்ள ஒரு அரச மரத்தின் கீழே வைக்கப்பட்டு இருந்தது.
அதன் பின் 1906 ஆம் ஆண்டு அப்போதைய கவர்னர் சர் ஹென்றி பிளேக் என்பவரால் சியாம் (தாய்லாந்து) மன்னரின் விருப்பத்திற்கு ஏற்ப அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டது.
அதற்கு பின் இந்த சிலை பற்றி மக்கள் மறந்தே விட்டார்கள் ..
அப்போதெல்லாம் இலங்கையில் சிங்கள பௌத்தம் என்பதாக அல்லாமல்.வெறும் பௌத்தம் என்றே கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இது பற்றி சுவீடனை சேர்ந்த பேராசியர் திரு பீட்டர் ஷாக் அவர்கள் ஆய்வு செய்துள்ளார் இது பற்றிய நிகழ்ச்சிகளையும் அவர் முன்னெடுத்தது வருகிறார்

அமரர் பெரியசாமி சந்திரசேகரன்! ஒற்றை எம்பி பதவியை வைத்து சந்திரிகா ஆட்சியை அமைத்த மலையக தலைவர்

P. Chandrasekaran - Wikipedia

Periyasaamy Chandrasekaran  :  1994 இல் 'கிங்மேக்கராக' உருவெடுத்து மலையக மக்களின் வாக்குபெறுமதியை தேசிய மட்டத்தில் அடையாளப்படுத்திய அமரர்.பெ. சந்திரசேகரன்!
1994 ஆகஸ்ட் 16 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில்
நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சையாக களமிறங்கிய மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் 23,453 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையிலான மக்கள் கூட்டணி 14 போனஸ் ஆசனங்கள் சகிதம் 105 ஆசனங்களே கைவசம் இருந்தன. இந்நிலையில் ஆட்சியமைக்க ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேசக்கரம் நீட்டியது. (6+1) ஏழு ஆசனங்கள்.
இதனால் ஆட்சியமைப்பதற்கு (113) சந்திரிக்கா தலைமையிலான கூட்டணிக்கு மேலுமொரு ஆசனம் (எம்.பியின் ஆதரவு) தேவைப்பட்டது.