சனி, 27 செப்டம்பர், 2025

நடிகர் விஜய் கூட்ட நெரிசல் 31 பேர் உயிரிழப்பு! மேலும் பலர் கவலைக்கிடம் எச்சரிக்கையை புறக்கணித்த விஜய்!

 tamil.oneindia.com  - Shyamsundar : பிற்பகலே நடந்த சம்பவம்.. நாமக்கல் அடித்த எச்சரிக்கை மணி.. சுதாரிக்காத விஜய்.. இத்தனை உயிர் போச்சே
கரூர்: கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் பலர் பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்சியின் தலைவர் விஜய் கொஞ்சம் சுதாரித்து செயல்பட்டு இருந்தால் இது போன்ற கொடுமையான நிகழ்வுகளை தடுத்து இருக்கலாம்.
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 40 பேர் வரை பலியானதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 31 பேர் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிகாரபூர்வ பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் 6 குழந்தைகள் பலியானதாக கூறப்படுகிறது.

பலர் ஆம்புலன்சில் கொண்டு வரப்படுவதால் கரூர் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தற்போது தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் கரூர் விரைந்துள்ளார்.

அமெரிக்க நகைக்கடை கும்பல் கொள்ளை 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள்

 அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பட்டப்பகலில் நகைக்கடை ஒன்றில் நுழைந்த கும்பல், 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் ராமோன் நகரில் மிக பிரபலமான வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள நகை கடைக்கு நேற்று மதியம் 25 பேர் கும்பல் ஒன்று நுழைந்தது.
ஆறு வாகனங்களில் வந்த அந்த கும்பல், துப்பாக்கி, கத்தி, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வாடிக்கையாளர்களையும், ஊழியர்களையும் மிரட்டியது.
பின்னர் அக்கும்பல் அங்கு வைக்கப்பட்டிருந்த நகைப்பெட்டிகளை உடைத்து, 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றது. பொலிஸார்  அக்கும்பலின் வாகனங்களை துரத்திச் சென்றனர்.

பீகார்: சொல்லி அடிக்கும் ராகுல்- பரிதாப பாஜக கூட்டணி- Lok Poll ' சர்வே முடிவுகள்

 மின்னம்பலம் - Mathi :  பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்கிறது Lok Poll கருத்து கணிப்பு.
பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ)- பாஜக கூட்டணிக்கும் காங்கிரஸ்- ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பீகாரில் மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 122 இடங்கள்.
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக Lok Poll நிறுவனம் தமது கருத்து கணிப்பு முடிவுகளை இன்று (செப்டம்பர் 26) வெளியிட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டம் சாதித்தது என்ன?

 Raja Rajendran Tamilnadu : நான் முதல்வன் !
எனக்கு புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டங்கள் பற்றித் தெரியும்.  அரசுப்பள்ளிகளில் படித்து கல்லூரி மேற்படிப்புக்காக போகும் உரிய மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்குகின்றனர் !
ஆனால் நான் முதல்வன் திட்டம் பற்றி உண்மையில் ஒன்றுமே தெரியாது.  வெறுமனே அரசு அறிவுப்புகளைப் பார்ப்பதில்தான் அந்தத் தலைப்பு தெரியும்.
ஆனால் அந்தத் திட்டம் சாதித்திருப்பது என்ன தெரியுமா ?  எவ்வளவு தெரியுமா ??
முதலில் நான் முதல்வன் திட்டம் என்ன செய்கிறது என்று திட்டத்தின் இயக்குனர் சாந்தி அவர்கள் சொன்னதைக் கேட்டு மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

போதை பொருள் கடத்தல்; தமிழரை தூக்கிலிட்ட சிங்கப்பூர்

 தமிழ் முரசு : சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்காக, மலேசிய நபரொருவர் துக்கிலிடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என சிங்கப்பூரில் கோரிக்கைகள் இருந்தபோதிலும், இந்த வருடத்தின் 11வது மரணதண்டனையாக இது பதிவாகியுள்ளது.
39 வயதான தட்சிணாமூர்த்தி கட்டையா என்பவருக்கே இவ்வாறு மரணதண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் சிங்கப்பூருக்கு சுமார் 45 கிராம் (1.6 அவுன்ஸ்) ஹெரோயின் கடத்தியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு” : இன்று (செப்.25) தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம்!

 கலைஞர் செய்திகள் : சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று (25.9.2025) நடைபெறும் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்வு!
சமூகநீதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு அரசு, கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் சென்று சேரவேண்டும் என்கிற நோக்கத்தோடு அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண்’ என்கிற திட்டத்தின்கீழும், மாணவர்களுக்கு ‘தமிழ்ப் புதல்வன்’ என்கிற திட்டத்தின்கீழும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.

வியாழன், 25 செப்டம்பர், 2025

'புத்த கயா' மீட்புக்காக 'புனித யுத்தம்' நடத்தும் பௌத்தர்கள்- பின்னணி என்ன?

 மின்னம்பலம் - Mathi  :  விஷ்ணுவின் அவதாரமா புத்தர்? பார்ப்பனர்கள் ஆக்கிரமித்த ‘புத்த கயா’ மீட்புக்காக ‘புனித யுத்தம்’ நடத்தும் பவுத்தர்கள்- பின்னணி என்ன?
“சிக்கிம் தலைநகர் காங்டாங்கில் ‘புத்தகயா’வை மீட்க வலியுறுத்தி பவுத்த – புத்த பிட்சுகள் நூற்றுக்கணக்கானோர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்”.. இது அண்மைய செய்தி.
புத்தகயா மீட்புக்கான பவுத்தர்களின் இத்தகைய போராட்டம் என்பது பல நூற்றாண்டுகளாக தொடர் சங்கிலியைப் போல நடந்து வருகிறது என்கிறது வரலாறு.
புத்த கயாவின் பின்னனி என்ன?
பீகார் மாநிலத்தில் உள்ளது மகாபோதி புத்த கயா ஆலயம். சித்தார்த்தன் என்ற கவுதம புத்தர் ‘ஞானம்’ பெற்ற இடமாக போற்றப்படுகிறது. இந்த புத்தகயா ஆலயத்தை கிமு 3-ம் நூற்றாண்டில் கட்டி எழுப்பியவர் மவுரியப் பேரரசர் அசோகர்.

இலங்கையில் 7 பௌத்த பிக்குகள் உயிரிழப்பு! கேபிள் கார் விபத்து

 மதுசா : இலங்கை  மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த தலா ஒரு பௌத்த பிக்கு உட்பட ஏழு பிக்குகள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் ஆறு பிக்குகள் காயமடைந்துள்ளனர்.
மேல்சிறிபுர, பன்சியகம, நா உயன ஆரண்ய சேனசனா விகாரை. இந்த விகாரையில் பிக்குகள் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் கம்பித் தடத்தில் இயங்கும் வண்டி, கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏழு பௌத்த பிக்குகள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ருமேனியா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒவ்வொரு பிக்கு அடங்குவர்.

சகோதர படுகொலைகளில் திலீபனுக்கே முதலிடம்

Denzil Leo:  டெலோ ஈ.பிஆர்.எல் எப் புலிகள் ஈரோஸ் ஆகிய நான்கு இயக்கங்கள் ஓரு கூட்டுமுன்னணியாக இயங்கிய காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் இந்த இயக்கங்களின் இரண்டாம் கட்டத்தலைமைகளின் சந்திப்பு நடைபெற்று வந்தது. 
அப்போது புலிகள் இயக்கத்தின் சார்பில் திலீபன் கலந்துகொண்டு ஏனைய சிறிய இயக்கங்களை செயல்படாமல் தடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். 
மற்றைய இயக்கங்கள் தீலீபனின் கோரிக்கையை முற்றிலும் நிராகரித்துவிட்டன. 
அப்போது திலீபன்; கூறினார் உங்களால் முடியாவிடடடால் சொல்லுங்கள் நாங்கள் செய்கின்றோம் என்றார். அதன்பின்னர் செயலில் டெலி ஜெகன்  அகிம்சாவாதி திலீபன். 

டெலி என்ற இயக்கம் யாழ்ப்பாணத்தில் உள்ளவெளியான கல்லுண்டாய் வெளியில் கடற்படையினர் ரோந்து செல்லும் பாதையில் பல கண்ணிவெடிகளை புதைத்துவிட்டு இரண்டு நாட்களாக காத்திருந்தனர். 

புதன், 24 செப்டம்பர், 2025

கனவில் மிதக்கும் காங்கிரஸ்.. காலி செய்யும் 'ஸ்டாலின் தில் ஸ்கெட்ச்'- பரபரக்கும் கூட்டணி!

Digital Thinnai : சீட் பேரத்துக்கு வாரீகளா?ஸ்டாலினின் "புது பார்முலா" ரெடி... | EPS | DMK | Congress

  மின்னம்பலம் -  Mathi : பாஜக- அதிமுக கூட்டணி அக்கப்போர்தான் தெரியுமே.. திமுக கூட்டணியிலுமா?
திமுக கூட்டணியில் சலசலப்புன்னு சொல்ற மாதிரி பெருசா இல்லைதான்.. நீலகிரியில் நேற்று (செப்டம்பர் 23) எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணியை பற்றி பேசியிருக்காரு..
ஓஹோ.. பாஜக- அதிமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறுவதால கவுண்ட்டர் அட்டாக்கா?
அப்படித்தான்.. அதுல எடப்பாடி பேசும் போது, “காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோலங்கர், சரிபாதி தொகுதிகள்- அதாவது 117 தொகுதிகளை திமுக கிட்ட கேட்கனும் சொல்லி இருக்காரு.. ஆட்சி அதிகாரத்துல பங்கு கேட்போம்னு பேசியிருக்காரு.. இதே மாதிரி கே.எஸ். அழகிரி, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பேசியிருக்காங்க.. அதனால திமுக கூட்டணியில் சலசலப்பு, விரிசல்”னு கொளுத்திப் போட்டிருக்காரு..

தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஜெயிக்க நாம வேலை செய்யனும்? அசால்ட்' திமுக எம்.பிக்கள்.. 'ரெட் அலர்ட்' கொடுத்த ஸ்டாலின்...

 மின்னம்பலம் :  ‘தேர்தல் வேலைகளை எப்படி செய்யனும்னு நிமிடத்துக்கு நிமிடம் உத்தரவு கொட்டுதய்யா’ என சொல்லியபடியே டைப் செய்தது வாட்ஸ் அப்.
திமுக எம்.பி.க்கள் கூட்டமாப்பா?
ஆமாம்.. எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சிஎம் ஸ்டாலின்.. திமுக எம்.பிக்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்த மாதிரி உத்தரவுகளும் போட்டிருக்கிறாரே..
அட்வைஸ் என்ன, அலர்ட் என்ன விளக்கமாக சொல்லுமய்யா..
திமுக எம்.பிக்கள் தங்களோட தொகுதியில் வாரத்துல 4 நாட்கள் தங்கி மக்களை சந்திக்கனும்; 15 நாட்களுக்கு ஒருமுறை ரிப்போர்ட் கொடுக்கனும் என்றெல்லாம் ஸ்டிரிட்டாக அட்வைஸ் பிளஸ் ஆர்டர் போட்டுள்ளார் சிஎம் ஸ்டாலின்..

புலிகளுக்கு நிதி உதவி செய்ய மும்பை வங்கியில் இருந்து 40 கோடியை மாற்ற முயன்றேன்”

 இலக்கியா :  புலிகள் அமைப்புக்கு நிதி உதவி செய்ய வங்கிப் பணமான ரூ 40 கோடியை மாற்ற முயன்றதாக இலங்கை பெண் ஒருவர் புழல் சிறையில் இருந்தபடியே வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மும்பை கிளையில் சேமிப்புக் கணக்கில் ஹமிதா ஏ லால்ஜி என்பவர் 40 கோடி ரூபாய் பணம் வைத்திருந்தார். அவர் இறந்துவிட்டதால் அவருடைய வங்கிக் கணக்கு கையாளப்படாமல் இருந்தது.
இதை அறிந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த டென்மார்க்கில் வசிக்கும் உமா காந்தன் என்பவர் அந்த பணத்தை தங்கள் இயக்கத்திற்கு அபகரிக்க முடிவு செய்தாராம்.

காவ்யா மாறன் 1094 கோடிக்கு நார்தேன் சூப்பர் சார்ஜஸ் அணியை சன் நெட்வெர்க் சார்பில் வாங்கி உள்ளார்.

 காவ்யா மாறன் 1094 கோடிக்கு நார்தேன் சூப்பர் சார்ஜஸ் அணியை சன் நெட்வெர்க் சார்பில்  வாங்கி உள்ளார். 
இது பற்றி ஒரு துரோகிஸ்தானியர்  படு பயங்கரமாக பொங்கி பொரிந்துள்ளார்!
தமிழர்களை உறிஞ்சி விட்டார்களாம்.  
துரோகிஸ்தானியர்கள் புதிதாக ஒன்றும் சங்கிகளாக மாறவில்லை.
துரோகிஸ்தானே ஒரு சங்கிஸ்தான் என்பதுதான் உண்மை!
அந்த சங்கிக்கு என் பதில் :  
தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொழில் துறையையும் திட்டமிட்டு களவாடுகிறார்கள் மார்வாடிகள் 
சங்கிகள் சத்தம் போடாமல் செயலாற்றுகிறார்கள் 
தமிழ்நாடு மட்டுமல்ல இதர தென்னிந்திய முதலாளிகளையும் அழித்து ஒழிக்கும் வேலையை பாஜக அரசு செய்து கொண்டுவருகிறது 
ஆனாலும் இவற்றை எல்லாம் கண்டுகொள்ள மாட்டீர்கள் 

செவ்வாய், 23 செப்டம்பர், 2025

ஜாதி அடையாளங்களுக்கு தடை! தமிழகத்தை பின்பற்றும் உத்தர பிரதேசம்

 tamil.oneindia.com - Pavithra Maniலக்னோ: தமிழகத்தை பின்பற்றும் விதமாக உத்தரப்பிரதேச மாநிலத்திலும் காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறை ஆவணங்களில் பெயர்களுக்கு பின்னால் உள்ள ஜாதிய ரீதியான அடையாளங்களை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
மேலும் அங்கு ஜாதி ரீதியான பேரணிகள் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இதற்கு வரவேற்பு இருந்தாலும், அங்குள்ள எதிர்க்கட்சிகள் யோகி ஆதித்யநாத்தை கண்டித்துள்ளனர்.

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

பாலத்தீனை தனி நாடாக பிரிட்டன் இன்று அங்கீகரிக்கிறது

 BBC Tamil : பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் ஞாயிற்றுக்கிழமை அந்த அறிவிப்பை வெளியிட உள்ளார்.
பாலத்தீனை தனி நாடாக அங்கீகரிக்கும் அறிவிப்பை பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் ஞாயிற்றுக்கிழமை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நகர்வு பிரிட்டன் வெளியுறவு கொள்கையில் குறிப்பிடத்தகுந்த மாற்றமாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம், இஸ்ரேல் போர் நிறுத்தம், அமைதி ஒப்பந்தம் மற்றும் காஸாவில் இருநாட்டு தீர்வுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் செப்டம்பர் மாதத்தில் பாலத்தீன் தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றப்போவதாக பிரிட்டன் அரசு அறிவித்திருந்தது.

H1B Visa: குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி.. வந்தது முக்கிய அப்டேட்.. ஐடி ஊழியர்கள், ஐடி நிறுவனங்கள் நிம்மதி

 tamil.goodreturns.in- .Prasanna Venkatesh :  அமெரிக்க டிரம்ப் அரசின் சமீபத்திய H-1B விசா தொடர்பான அறிவிப்பு, டெக் துறையை தலைகீழாக புரட்டிப்போட்டு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். 
இந்த அறிவிப்பு வெளியான உடன் மைக்ரோசாப்ட் உடன் பல பெரும் டெக் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அடுத்த 24 மணிநேரத்திற்குள் அமெரிக்க வரவும் உத்தரவிடப்பட்டதால் உலக நாடுகளில் இருக்கும் விமான நிலையங்கள் பரப்பரப்பானது.
செப்டம்பர் 19ஆம் தேதியன்று டிரம்ப் கையெழுத்திட்டு வெளியான உத்தரவில், ஹெச்1பி விசா விண்ணப்பங்களுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் விதிப்பதாகத் தெரிவித்தது. 

யாழ்ப்பாணத்து தெருவில்..... இங்கே சுட்டு வீழ்த்தப்பட்டு கிடப்பது யார் தெரியுமா? Prof ராஜினி திறனகம ராஜசுந்தரம்

 ராதா மனோகர் : இந்த படம்..... யாழ்ப்பாணத்து தெருவில்..... இங்கே சுட்டு வீழ்த்தப்பட்டு கிடப்பது யார் தெரியுமா?
 இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ  பீடாதிபதி பேராசிரியர் டாக்டர் ராஜினி திரணகம! . 
இவர் லண்டனில்  பார்த்த வேலையை உதறி தள்ளிவிட்டு யாழ்ப்பாண மருத்துவ பீடத்தை செயல்படுத்த  வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நாடு திரும்பியவர். 
இங்கே  குண்டடி  பட்டு இறந்து வீதியில் கிடக்கிறார். . 
அந்த வீதி வழியே செல்பவர்கள் ஏதும்  அறியாதவர்களாக போகிறார்கள் வருகிறார்கள்!
 ஏன் தெரியுமா?
 பயம் பயம் பயம் ..  புலிகளுக்கு பயம் . ஜெர்மன் நாசிகளை  விட நாசகாரிகளான பிரபாகரன்  குண்டர்களின் அடுத்த சூடு எவருக்கு என்றே தெரியாத காலம் அது .
தங்களோடு தங்கள் ஊரில் பிறந்து வளர்ந்து தங்கள்   யாழ்மண்ணுக்கே சேவையாற்ற  திரும்பி வந்த ஒரு தமிழ் பெண் டாக்டர் இவர் என்பதை கூட  சிந்திக்க அனுமதி மறுக்கப்படடவர்கள்!
வீழ்ந்து  கிடைக்கும் பேராசிரியை மீது ஒரு சின்னஞ்சிறு அனுதாப பார்வை செலுத்தி  விட்டாலே புலிகளின் சந்தேக குறிக்கு இலக்காக வேண்டிவரும் என்ற மயான பயம்  

திலீபன் - சகோதர படுகொலைகளை கொடூரமாக நிகழ்த்திய கொடூரன்

  Suhan Kanagasabai  :   நேற்று முழுதும் தியாக தீபம் ,தியாகத் திருவுரு, அஹிம்சாமூர்த்தி என நினைவுகூரப்பட்ட திலீபன் குறித்த மறுபக்கம் இது.
திலீபனை நெஞ்சில் இருத்துபவர்கள் இந்தக் கசப்பான உண்மைகளையும் அறிந்திருப்பது நல்லது.
 " உண்மைகளில் இருந்து உண்மையைத் தேடுங்கள் " 实事求是 என்றொரு சீனப் பழமொழி இருக்கிறது.
பொதுவாக இன்று திலீபனை நினைவுகூர்பவர்கள் 1987 உண்ணாவிரதத்துடன் திலீபனை அறிந்தவர்கள்.
1985 இற்கு முன் மாற்று இயக்கங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட போராளிகளிற்கு இந்தத் திலீபனை பெரும்பாலும் சொல்ல அறிமுகப்படுத்தத் தேவையில்லை.
1980 -1983 காலப்பகுதியில் படித்துக்கொண்டிருந்த யாழ் பல்கலைக் கழக மாணவர்களுக்கு திலீபனும் கிட்டுவும் 
எப்படி கண்காணிப்பிலும் மாணவர்களிடையே உளவுச் செய்திகளுக்காகவும் வந்துபோபவர்கள் எனத் தெரியும். 
யாழ் மாவட்டத்தில் புலிகளின் அனைத்து முடிவெடுக்கும்  அதிகாரங்களையும் கொண்டிருந்த கிட்டுவும் திலீபனும் நிகழ்த்திய ,பரவலாக அறியப்பட்ட  கடும் விமர்சனத்திற்குள்ளான படுகொலை  ரெலி இயக்கத் தலைவரான ஜெகன் மீதானது.