சனி, 22 அக்டோபர், 2011

புலம்பெயர் கல்வியலாளரின் பங்களிப்புடன் யாழில் தனியார் பல்கலைக்கழகம்


புலம்பெயர் கல்வியலாளரின் பங்களிப்புடன் யாழில் தனியார் பல்கலைக்கழகம்
உலகெங்கும் சிதறி வாழும் தமிழ்க் கல்வியலாளர்களின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக்கழகமொன்றை அமைக்க முடியும் என்று கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின்போதும், யுத்தத்தின் பின்னைய சூழலிலும் பல கல்வியலாளர்கள், மருத்துவர்கள் தமது பிரதேசத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர் என்று குறிப்பிட்ட யாழ் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி கலாநிதி யமுனானந்தா, இவர்களில் பலர் உலகில் மிகச்சிறந்த பேராசிரியர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் பல முன்னணிப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பிக்கின்றனர் என்று தெரிவித்தார்.

சோனியாகாந்தியுடன் கருணாநிதி சந்திப்பு: இன்று மாலை கனிமொழியை பார்க்கிறார்!

புதுடெல்லி:தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு ஏர்-இந்தியா விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி. யின் மகன் ஆதித்யா, மத்திய மந்திரி பழனிமாணிக்கம் ஆகியோர் சென்றனர்.

டெல்லி விமான நிலையத்தில் கருணாநிதியை டி.ஆர்.பாலு மற்றும் எம்.பி.க்கள் வரவேற்றனர். பிறகு கருணாநிதியும், அவர் குடும்பத்தினரும் லீலா ஓட்டலுக்கு சென்று தங்கினார்கள். இன்று (சனிக்கிழமை) காலை மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித் ஆகியோர் லீலா ஓட்டலுக்கு வந்து கருணாநிதியை சந்தித்தனர். அவர்கள் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகத் தெரிகிறது.

நடிகை ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள் கலாஷேத்ராவிடம் ஒப்படைக்கப்படும்: கேரள அமைச்சர்


நடிகை ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள் அவரது உயில்படி விரைவில் கலாஷேத்ரா அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என்று கேரள அமைச்சர் கணேஷ் குமார் தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் நடிகை ஸ்ரீவித்யா பெயரில் விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் மோகன்லால், ஜெகதி ஸ்ரீகுமார், தயாரிப்பாளர் ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 2011 ம் ஆண்டில் சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கபட்ட ஸ்வேதா மேனனுக்கு கேரள கலாச்சார அமைச்சர் கே.பி.கணேஷ்குமார் ஸ்ரீவித்யா விருது வழங்கினார்.
இந்த விழாவில் அவர் பேசுகையில், "இன்று நடிகைகளை திரையில் பார்க்கும் போதும் நேரில் பார்க்கும் போதும் எனக்கு ஸ்ரீவித்யாவை பற்றிய நினைவுகள்தான் வருகின்றன.

ஜெயலலிதாவின் 14 ஆண்டு 'வழக்கு வாசம்’ ஒருவழியாக முடிவுக்கு


ஜெயலலிதாவின் 14 ஆண்டு 'வழக்கு வாசம்’ ஒருவழியாக முடிவுக்கு வ‌ந்து விட்டது. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், கடந்த 20-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன ஹள்ளி அக்ரஹாரா மத்தியச் சிறைச்சாலை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஜெயலலிதாஆஜரானார். அவருடன் சசிகலா, இளவரசி ஆகியோர் வந்தார்கள்.
இந்த இடத்தில் ஒரு அவசிய பிளாஸ்பேக்!
1991-96 ஆம் ஆண்டுகளில் முதலமைச்​சராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, தி.மு.க. ஆட்சியில் வழக்குப் பதிவானது. அவருடன் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டன‌ர். சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த இந்த வ‌ழக்கில், குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. 2001-ல் மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார். உடனே, 'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டதால் சாட்சிகளை கலைக்கக்கூடும்’ என்ற காரணத்தைக் காட்டி வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்துக்குப் போனார் .

கனிமொழி:அரசியலைக் கற்றுக் கொடுத்த எதிரிகள்!

கனிமொழி என்ற பெயரைச் சொன் னால்கூட பிரச்னை யாகி விடுமோ எனப் பலரும் தயங்கும் நேரத்தில், என்னைப்பற்றி சிலாகித்து எழுதியவர் அவர். 'தமிழுக்கு அவரால் தகவுகள் அமைய இருக்கையில் அரசியல் அவரை ஆட் கொண்டுவிட்டதில் எம்மனோர்க்குச் சிறிது வருத்தம்தான்’ என அவர் எழுதி இருந்த வரிகள் மனதுக்குள் திரும்பத் திரும்ப எதிரொலிக் கின்றன. முடிந்தால், அவருக்கு என் நன்றியை மறக்காமல் சொல்லுங்கள்!
கனிமொழி கசிந்துருகுவது கவிஞர் வாலியின் வரிகளுக்காக. 5.10.11 ஆனந்த விகடன் 'நினைவு நாடாக்கள்’ பகுதியில் கவிஞர் வாலி, கனிமொழி குறித்து எழுதி இருந்தார். அந்த வரிகளுக்குத்தான் இந்த நன்றி!

''முடிந்தால் கனிமொழியை நேரில் பாருங்க சார். அப்போதான், அவங்க எவ்வளவு தைரியமா இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியும். ஆரம்பத்தில் சிறுசிறு சங்கடங்களையோ... விமர்சனங் களையோ... தாங்கிக்க முடியாதவர்தான் கனிமொழி. ஆனால், இன்றைய நிலையில் எத்தகைய சங்கடமும் அவரை இம்மியளவுகூட பாதிக்காது. பத்திரிகைச் செய்திகளையோ, பிறரின் புறக்கணிப்பைப்பற்றியோ அவரிடம் சொன்னால், மெலிதான புன்னகைதான் பதிலாக வருகிறது. அந்தச் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். மென்மையான மனம்கொண்ட அந்த இலக்கியவாதியை, எதையும் கடக்கத் துணிந்த இரும்பு மனுஷியாக திகார் மாற்றிவிட்டது என்பதுதான் உண்மை!'' - சிறைக்குள் கனிமொழி இருக்கும் பகுதியில் சில நாட்கள் பாதுகாப்பு பணியாற்றிய தமிழக போலீஸ்காரர் ஒருவரின் பகிர்வு இது.
''தன்னை எல்லோரும் கைவிட்டு விட்டார்கள் என்கிற மனநிலையில் கனிமொழி வருந்துவதாகச் சொல்கி றார்களே...'' என அவரிடம் கேட்டால், சத்தம் போட்டுச் சிரிக்கிறார். தமிழக அரசியல் நிலவரங்களையும் கனிமொழியின் மன ஓட்டத்தையும் மிகத் தெளிவாக அறிந்தவராக நமது கேள்விக்குப் பதில் சொன்னார்.

நான் நம்பினேன்.. அது நடந்துவிட்டது: ஜெயலலிதா

சென்னை: இந்த ஆட்சியைப் பற்றி நீங்கள் என்ன எடை போட்டிருக்கிறீர்கள் என்பதை உலகம் தெரிந்துகொள்ள திருச்சி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் முடிவுகள் அமையும் என்று நான் உறுதிபட நம்பினேன். என்னுடைய நம்பிக்கை மெய்ப்பட்டிருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மேற்கு இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் அளித்த ஆதரவான தீர்ப்புகளுக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது தலைமையில் நடந்து வரும் எம்.ஜி.ஆர். ஆட்சியை பற்றி மக்களின் மனநிலையை, இந்த தேர்தல் முடிவுகள் மூலம் உலகம் அறிந்து கொள்ளும் என நம்பி இருந்தேன். என் நம்பிக்கை மெய்யானது.
தமிழக மக்கள் அளித்த மகத்தான தீர்ப்புக்கு, மிகுந்த மனநெகிழ்ச்சியோடு, அன்புப்பெருக்கோடு மீண்டும் மீண்டும் நன்றி கூறி கொள்கிறேன். பொருளாதார பற்றாக்குறைகள், நிர்வாக சீர்கேடுகள், கடன் சுமைகள் என எண்ணற்ற இடர்பாடுகளின் இடையே தத்தளித்து கொண்டிருந்த தமிழக அரசை கடந்த 5 மாதங்களுக்கு முன் என்னிடம் அளித்தீர்கள்.

தேமுதிக, பாமக, கம்யூனிஸ்டுகளை பின் தள்ளிய பாஜக!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 125 நகராட்சிகளில் (municipal corporations) 89 நகராட்சிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது.
மொத்தமுள்ள 125 நகராட்சிகளில் ஈரோடு மாவட்டம், வெள்ளக்கோவில் நகராட்சி வேட்பாளர் மரணம் அடைந்ததால், அங்கு மட்டும் தலைவர் தேர்தல் நடைபெறவில்லை. மீதி உள்ள 124 நகராட்சிகளில் அதிமுக 89 இடங்களை கைப்பற்றியுள்ளது.
திமுக 23 நகராட்சிகளையும், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக ஆகியவை தலா 2 நகராட்சிகளையும், மதிமுக ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 5 நகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
தேமுதிக-பாஜக-சிபிஎம் சமம்:
தேமுதிக பல்லடம் மற்றும் கூடலூரிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சிவகங்கை, குழித்துறையிலும், பாஜக நாகர்கோவில் மற்றும் மேட்டுப்பாளையத்திலும் வெற்றி பெற்றுள்ளன. மதிமுக குளித்தலையிலும் வெற்றி பெற்றுள்ளது.
அனகாபுத்தூர், குமாரபாளையம், காயல்பட்டினம், நரசிங்கபுரம் மற்றும் போடி ஆகிய 5 நகராட்சிகளை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றி ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
529ல் 300 பேரூராட்சிகளை பிடித்த அதிமுக:
அதே போல தமிழகத்தில் மொத்தமுள்ள 529 பேரூராட்சிகளில் (town panchayats) சுமார் 300 இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது.
526 பேரூராட்சி தலைவர் தேர்தல் முடிவுகள் வெளியானதில் அந்தக் கட்சி 287 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக 119 பேரூராட்சிகளையும் காங்கிரஸ் 23 பேரூராட்சிகளையும் கைப்பற்றியுள்ளன.
பாஜகவை விட பின் தங்கிய தேமுதிக:
மிக ஆச்சரியமான விஷயமாக பாஜக 13 பேரூராட்சிகளையும், மதிமுக பேரூராட்சிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 பேரூராட்சிகளையும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக வெறும் 3 பேரூராட்சிகளையும், பாமக- இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை வெறும் 2 பேரூராட்சிகளையும் வென்றுள்ளன.
65 பேரூராட்சிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

ராசா, கனிமொழி மீது நம்பிக்கை துரோக குற்றச்சாட்டு: நீதிமன்றம் பதிவு செய்தது


Raja and Kanimozhi
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, திமுக எம்பி கனிமொழி ஆகியோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 409ன் கீழ் நம்பிக்கை துரோக வழக்கை நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் கடந்த மாதம் 26ம் தேதி இந்திய தண்டனைச் சட்டம் 409-ம் பிரிவின் கீழ் நம்பிக்கை துரோக மோசடி என்ற புதிய குற்றச்சாட்டை இந்த 17 பேர் மீதும் சிபிஐ பதிவு செய்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். இதனால் சிபிஐயின் இந்த புதிய குற்றச்சாட்டுக்கு 17 பேரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந் நிலையில் இன்று இது தொடர்பாக நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவு பிறப்பித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும், ரிலையன்ஸ்
டெலிகாம், ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் வயர்லெஸ்-தமிழ்நாடு ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120ன் கீழ் கிரிமினல் சதி (criminal conspiracy) குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
அதே நேரத்தில் ராசா, கனிமொழி ஆகியோர் மீது நம்பிக்கை துரோக மோசடி குற்றச்சாட்டை பதிவு செய்யவும் உத்தரவிட்டார்

சரத்குமார் வாக்காளர்களுக்கு நன்றி சொல்கிறாருங்கோ

சரத்குமார் அறிக்கை அதிமுக வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு நன்றி

சென்னை: அதிமுக வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் சமக தலைவர் சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
சமக தலை வர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பிலும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பிலும், போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை அளித்தமைக்கு தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

விஜய் - சூர்யாவின் தீபாவளி ரிலீசால் முடங்கிய 15 புதுப்படங்கள்!


Dhanush and Richa


தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள வேலாயுதம் மற்றும் சூர்யா நடித்த 7 ஆம் அறிவு ஆகிய இரு படங்கள் வெளியாவதால், 15-க்கும் மேற்பட்ட புதிய படங்கள் முடங்கியுள்ளன.
7 ஆம் அறிவு 340-க் கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் 40 அரங்குகள் இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளன.
வேலாயுதம் சுமார் 300 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இவ்விரு படங்களும் தமிழகம் முழுவதும் கூடுதல் தியேட்டர்களை பிடித்துக்கொண்டதால் வேறு படங்களுக்கு தியேட்டர்களே கிடைக்கவில்லை.

McDonald’s அறிவித்த லாபத்தின் ரகசியம் என்ன?

ஃபாஸ்ட் ஃபூட் செயின் McDonald’s அறிவித்த லாபத்தின் ரகசியம் என்ன?Viruvirupu

பாஸ்டன், அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய ஃபாஸ்ட்-ஃபூட் செயின் McDonald’s, மூன்றாவது காலாண்டில் தமது எதிர்பார்ப்பைவிட அதிக லாபம் பெற்றிருப்பதை அறிவித்துள்ளது. செப்டெம்பர் மாதத்துடன் முடிவடையும் 3வது காலாண்டு லாபமாக 1.51 பில்லியன் டாலர் (ஒரு ஷேருக்கு $1.45) அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது கடந்த வருட 3வது காலாண்டு லாபம், 1.39 பில்லியன் டாலர் அல்லது, ஷேருக்கு $1.29.
மற்றைய போட்டியாளர்களிடம் இருந்து மார்க்கெட் ஷேரின் ஒரு பகுதியைக் கைப்பற்றியுள்ள இந்த வளர்ச்சி, ஃபாஸ்ட்-ஃபூட் விற்பனை அதிகரிப்பாலேயே பெறப்பட்டுள்ளது. கடந்த மாத (செப்டெம்பர்) ஒட்டுமொத்த விற்பனை 6.6 சதவீதம் எகிறியுள்ளது.
பிரேக்-டவுனைப் பார்த்தால், அமெரிக்காவில் 5 சதவீதம், ஐரோப்பாவில் 6.9 சதவீதம், ஆசியாவில் 6.8 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. ஐரோப்பிய விற்பனை அதிகரிப்பின் பெரிய சதவீதம் ஜேர்மனியில் இருந்து கிடைத்துள்ளது.
ஆசியாவில் 6.8 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.
McDonald’s இந்த காலாண்டில் எதிர்பார்த்த விற்பனை அதிகரிப்பு 5.1 சதவீதம் மாத்திரமே! எதிர்பார்ப்பைவிட நடப்பு விற்பனை அதிகரித்து, லாபத்தை அதிகரித்துள்ளது.

கடாபி கதை முடிந்தது… அடுத்து வருகிறது உமது அத்தியாயம்!

Viruvirupu
டமாஸ்கஸ், சிரியா: “கடாபி போய்விட்டார். அடுத்தது உமது முறை வருகின்றது” என்ற கோஷம் இன்று உக்கிரமாக ஒலிக்கத் தொடங்கி இருப்பது, லிபியாவின் அல்ல, சிரியாவில்! மத்திய நகரமான ஹாமாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆயிரக் கணக்கான மக்கள், தமது அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் குதித்தார்கள்.
தமது ஜனாதிபதிக்கு எதிராக அவர்கள் எழுப்பிய பிரதான கோஷம்தான், “கடாபி போய்விட்டார். அடுத்தது உமது முறை வருகின்றது”
சிரிய ராணுவம் தருவிக்கப்பட்டு, ஆர்ப்பாட்டம் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட்டது. கலகக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், 14 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு

வாஷிங்டன் : கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஈராக் போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதனையடுத்து, இந்தாண்டின் இறுதிக்குள்ளாக, ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகி உடனான வீடியோ கான்பரன்சிங்கிற்கு பிறகு, வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை அதிபர் ஒபாமா சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈராக்கில், முன்னாள் அதிபர் சதாம் உசேன் மறைவின் போதிலிருந்து அங்கே அமைதி திரும்பத் துவங்கி விட்டது. ஆனால், ஈரான் <மற்றும் பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளால் ஈராக்கிற்கு அச்சுறுத்தல் தொடர்ந்தவண்ணம் இருந்தது. அதற்காகவே, அமெரிக்கப் படைகள் அங்கு தங்கியிருந்தது. தற்போது அங்கு சகஜநிலை திரும்பியுள்ளது. மேலும் பொருளாதாரத்தில் சிறந்த ஸ்திரத்தன்மையும் உருவாகும் நிலை ஏற்பட்டது. இதன்மூலம், ஈராக் புத்துயிர் பெறும் என்று தங்களுக்கு நம்பிக்கை வந்ததையடுத்து, அங்கிருந்து படைகள் வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு, ஈராக் பிரதமர் மாலிகியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

கடாபியை அடித்துக்கொன்று தெருவில் இழுத்து சென்றனர்: கடாபியின் கடைசி நிமிடங்கள்



லிபியாவை 42 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிபர் கடாபிக்கு எதிரான புரட்சிப்படை லிபியாவின் தலைநகர் திரிபோலியை கைப்பற்றியதும் அவர் ரகசியமாக தன் சொந்த ஊரான சிர்ட்டேக்கு ஓடி வந்து விட்டார். அங்கு அவர் பதுங்கி இருந்தார். அவரது ஆதரவு ராணுவம் அந்த ஊரில் அவருக்கு பாதுகாப்பாக இருந்தது.
கடந்த வியாழக்கிழமை அதிகாலை கடாபி தன் ஆதரவு ராணுவ வீரர்கள் சூழ சிர்ட்டே நகரை விட்டு வெளியேறினார். அவருடன் ராணுவ தளபதி அபு பக்கீர் யூனிஸ் ஜபீர் உடன் இருந்தார். அவர்கள் மேற்கு திசை நோக்கி புறப்பட்டனர்.
கடாபியும் வீரர்களும் வாகனங்களில் பயணம் செய்தபோது பிரான்சு நாட்டு போர் விமானங்கள் கடாபி ஆதரவு படையின் வாகனங்கள் மீது குண்டு வீசி தாக்கின. இதில் கடாபி காயம் அடைந்தாரா என்பது தெரியவில்லை.
சிர்ட்டேக்கு மேற்கு திசையில் 2 கி.மீ. தொலைவில் 15 ராணுவ வாகனங்கள் கருகி கிடந்தன. இந்த வாகனங்கள் விமானத்தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த தாக்குதலில் இருந்து தப்பிய கடாபியும், சில ராணுவ வீரர்களும் தெருக்களில் ஓடினார்கள்.
கடாபி பிரதான சாலைக்கு வந்ததும் சில வீரர்களுடன் அங்கு இருந்த சாக்கடை குழாய்க்குள் இறங்கி பதுங்கிக் கொண்டனர். அப்போது சாலையில் நின்று இருந்த புரட்சிப்படை வீரர்கள் அவர்களை பார்த்து விட்டனர். இந்த வீரர்களில் ஒருவரான பக்கீர் அப்போது நடந்த சம்பவத்தை பற்றி கூறியதாவது:
கடாபியும் அவரது பாதுகாவலர்களும் சாக்கடை குழாயில் பதுங்கி இருந்ததைப் பார்த்ததும் நாங்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டோம். இதில் யாரும் காயம் அடையவில்லை.
இதனால் நாங்கள் அவர்களை நோக்கி நடக்க தொடங்கினோம். அப்போது எங்களை நோக்கி கடாபி ஆதரவாளர் ஒருவர் தன் கையில் இருந்த துப்பாக்கியை அசைத்தபடி வந்தார். அவர் சரண் அடைவதாக கூச்சல் போட்டார்.
அவர் என் முகத்தை பார்த்ததும் என்னை நோக்கி சுட தொடங்கினார். சுடவேண்டாம் என்று கடாபி அவரை தடுத்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் என்னிடம் கடாபி இங்கே தான் இருக்கிறார். அவர் காயம் அடைந்து இருக்கிறார் என்று சத்தம் போட்டு கூறினார்.
நாங்கள் அவருடன் சென்று சாக்கடை குழாய்க்குள் இருந்த கடாபியை வெளியே கொண்டு வந்தோம். அப்போது அவர் கால்களில் குண்டு காயங்கள் இருந்தன. அவரை நாங்கள் காரில் ஏற்றினோம். இவ்வாறு பக்கீர் கூறினார்.
கடாபியை அவரது ஆதரவு படை வீரர்களே சுட்டுக்கொன்று விட்டனர் என்று அவர் கூறினார்.
ஆனால் காரில் கடாபியுடன் நகரின் முக்கிய பகுதிக்கு சென்றபோது மேலும் அதிகமான புரட்சிப்படை வீரர்கள் அங்கு வந்து விட்டார்கள். அவர்கள் கடாபியை காரில் இருந்து வெளியே இழுத்துப் போட்டு அடித்து உதைத்தனர். இப்படி அடித்து உதைத்ததில் தான் அவர் இறந்து போனார்.
இறந்து போன அவரது உடலை புரட்சிப்படை வீரர்கள் தெருவில் இழுத்துச் சென்றனர்.
கடாபியை பிடித்தபோது அவர் தங்கத்துப்பாக்கியை வைத்து இருந்தார் என்றும் அதை தாம் பார்த்தாகாவும் ஒரு புரட்சிப்படை வீரர் கூறினார்.

சிவாஜி கணேசனை தோற்கடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் மக்களை ஏமாற்றும் பேச்சுவார்த்தை நாடகத்தின் நடிகர்கள் editor@valampurii.com

அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்துவது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கெனப் பலரும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் அது நிஜமன்று. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை சர்வதேச அழுத்தத்திற்கு உடனடியாக ஒத்தணம் கொடுக்கவேண்டும். இல்லையேல் நிலைமை மோசமாகி விடும். இதன் காரணமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது போல நடிக்க வேண்டும்.
அந்த நடிப்பிற்கு அரங்கும் நடிபங்காளர்களும் தேவை. அதே நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே ஒரு இயங்கு தளம் பேச்சுவார்த்தை நடத்துவதாகும்.
இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் விட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பு அடியோடு உடைப்பட்டு போகும். எனவே பேச்சுவார்த்தை மூலம் எந்த நன்மையும் இடம் பெறப் போவதில்லையென்ற உண்மை தெரிந்திருந்தும், பேச்சுவார்த்தை என்ற நாடகத்தில் அரசுடன் சேர்ந்து நடிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடன்பட்டுள்ளது. ஆக, அரசு-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இருதரப்பும் உலகையும் தமிழ் மக்களையும் ஏமாற்றுகின்றன.
எனினும் இதை நாம் சொன்னால் அது தமிழ்த் தேசியக் கூட்டமை ப்புக்கு எதிர் என்று பிரசாரம் செய்யப்படும். என்ன செய்வது! தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக விழிப்படையாத வரை ஏமாற்று நாடகங்கள் அரங்கேறவே செய்யும். நல்லூர்ப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணிகளை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது - காணிப்பதிவுக்கு எதிராக விநாயகமூர்த்தி எம்.பி. பாராளு மன்றத்தில் பிரேரணை கொண்டு வந்த போது அதனை வழி மொழிவதற்கு ஆளில்லாமல் அந்தப் பிரேரணை செத்துப் போன பின், உண்ணாவிரத நடிப்பு இருக்கிறதே அது தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ஒரு மூலைக்குள் தள்ளிவிட்ட நடிப்பு எனலாம். உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணிப்பதிவுக்கு எதிராக செயற்படுவதாக இருந்தால், நல்லூரில் காணிப்பதிவு இடம் பெறுவதற்கு முன்னதாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டிரு ப்பதுடன் அன்புக்கினிய தமிழ் மக்களே! காணிப்பதிவை ஒட்டு மொத்தமாக எதிர்ப்போம். நீங்கள் எவரும் காணிப் பதிவை மேற்கொள்ளாதீர்கள் என்று குரல் கொடுத்திருந்தால் பதிவு நடந்திருக்காதல்லவா?
என்ன செய்வது! பங்குனி மாதத்தில் நெல்லு விதைத்து கடுமையாக பாடு பட்டேன் என்று கூறுவது எவ்வளவு அறியாமையோ அது போலத் தான் காலம் கடந்த முயற்சிகளும் - உண்ணாவிரதப் போராட்டங்களும்.

முடிவு சாதகமாக இல்லை: 16 அதிகாரிகளை வெளியேற்ற வைத்த அதிமுகவினர்

நாகை: முடிவுகள் சாதகமாக வரவில்லை என்பதால் சீர்காழி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த 16 தேர்தல் அதிகாரிகளை அதிமுகவினர் வெளியேற்றச் செய்தனர். கடந்த 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலான இடங்களில் அதிமுக முன்னிலையில் உள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுகவுக்கு சாதகமாக முடிவுகள் வரவில்லை என்று அக்கட்சியினர் குற்றம்சாட்டினர். பின்பு அந்த மையத்தில் இருந்த 16 அதிகாரிகளை உடனே வெளியேற்றாவிட்டால் தீக்குளிப்போம் என்று கூறி போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து எந்தவித விசாரணையும் இன்றி அந்த 16 அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டனர். அதிமுகவுக்கு ஆதரவான வேறு 16 அதிகாரிகளை வைத்து அங்கு வாக்கு எண்ணப்பட்டு வருகிறது

லிபிய தலைவரின் மறைவு மனித சுதந்திரத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்

அணிசேரா நாடுகளின் அமைப்பின் பலம்வாய்ந்த அடித்தளமாக விளங்கிய லிபியாவின் தலைவர் கேணல் முஅம்மர் கடாபி நேற்றுமுன்தினம் கொல்லப்பட்டார்.
கடாபியை அழித்தால் தங்களுக்கு எதிராக அரபு நாடுகளில் தோன்றிவரும் எதிர்ப்பை முறியடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் ஏகாதிபத்திய வாதசக்திகள் லிபியாவிலும் தலையிட்டு எவருக்கும் அச்சமின்றி இருந்துவந்த கேணல் கடாபியையும் இறுதியில் தங்கள் மோசடி வலையில் வீழ்த்தி அவரின் உயிரைப் பறித்துவிட்டனர்.
லிபியத் தலைவர் கேணல் கடாபி, இலங்கை போன்ற சிறியநாடுகளினதும், வறுமை நிலையிலுள்ள நாடுகளினதும் நண்பனாக விளங்கினார். அவர் இந்த நாடுகளுக்கு சலுகை அடிப்படையிலும், நீண்டகாலக் கடன் அடிப்படையிலும் மசகு எண்ணெய்யை வேண்டியளவுக்கு விற்பனை செய்தும் உதவியளித்தும் இருக்கிறார். 1976ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட லிபியத் தலைவர் கடாபி, அந்த உச்சிமாநாடு மகத்தான வெற்றியீட்டுவதற்கு அன்றைய யூகோஸ்லேவியாவின் தலைவர் மார்ஷல் ரிட்டோவுடன் இணைந்து அம்மாநாட்டை நடத்துவதற்கான நிதியுதவியையும் தாராளமாக வழங்கினார். லிபியத் தலைவர் கடாபியின் மறைவு வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இன்றி சுதந்திரமாக இருக்கவிரும்பும் லிபியா போன்ற மற்ற நாடுகளுக்கும் ஏற்படக்கூடிய அனர்த்தங்களுக்கு கட்டியம் கூறுவதாக அமைகின்றது.

புலிகளின் தவறுகளுக்காக பாவவிமோசனம் கேட்கும் இரா.சம்பந்தன்

வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் கைச்சாத்திடப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழர்களுக்கு இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவறுகளுக்காக, இலங்கைத் தமிழ் மக்களை அரசாங்கம் தண்டித்துவிடக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் பல்கலைகழகமும் ராகிங் காடுமிராண்டிகளும்

விழுந்தது அறை, வெடித்தது செவிப்பறை - யாழ் பல்கலை ராகிங்விழுந்தது அறை, வெடித்தது செவிப்பறை - யாழ் பல்கலை ராகிங்
தமது மாணவர் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து எதிர்ப்புப் போராட்டம் நடத்திவரும் யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள், புதுமுக மாணவர்கள் மீது தொடர்ந்தும் ராகிங் என்ற போர்வையில் தாககுதல் நடத்திவருவதாக முறையிடப்பட்டுள்ளது.

புதுமுக மாணவர்கள் வெட்கம், தயக்கம் நீங்கி பல்கலைக்கழக சமூகத்துடன் இயல்பாக ஒன்றித்து வாழக் கற்றுக்கொடுப்பதற்காக என்று சொல்லப்படும் ராகிங், நீண்ட காலமாகவே வன்முறையும், வக்கிரமும் நிறைந்ததாக பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்து வருகிறது.
யாழ் பல்கலைகழகமும் ராகிங் காடுமிராண்டிகளும்
அண்மைக்காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் ராகிங் என்ற சாக்கில் வன்முறை ரீதியான தாக்குதல்கள் புதுமுக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படுவது அதிகரித்திருப்பதாக மாணவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகங்களில் ராகிங் முழுமையாகத் தடைசெய்யப்பட்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்திருந்தும், யாழ் பல்கலைக்கழகத்தில் மோசமான ராகிங் கலாசாரம் நிலவுவதாக புதுமுக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் புதுமுக மாணவர் ஒருவருக்கு சிரேஷ்ட மாணவர் கன்னத்தில் அறைந்ததில் அவரது செவிப்பறை வெடித்து தற்போது அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல மாணவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும், அச்சம் காரணமாக அவர்கள் இதுபற்றி வெளியில் தெரிவிக்காமல் மௌனமாக இந்த ராகிங் கொடுமைகளைச் சகித்து வருவதாகவும் மாணவ வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. அதிலும், புதுமுக மாணவிகள் மீது மிகவும் பாலியல் வக்கிரம் நிறைந்த ராகிங் நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாககுதலை எதிர்த்து எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுவரும் சூழ்நிலையில், இதே மாணவர்கள் மத்தியில், புதுமுக மாணவர்களை இலக்கு வைத்து இவ்வாறு மோசமான வன்முறைகள் மேற்கொள்ளப்படுவது, வன்முறைகளுக்கு எதிரான அவர்களது குரலின் தார்மீக நியாயத்தைக் கேள்விக்குள்ளாக்காதா என்று, செவிப்பறை பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் மாணவரின் உறவினர்கள் வேதனையுடன் கேட்டனர்.
www.adaderana.lk

சம்பூரில் எஞ்சிய காணிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படுவர்

கிழக்கில் சம்பூர் அனல்மின்நிலையத்துக்குத் தேவையான காணி எடுக்கப்பட்ட பின்னர் எஞ்சிய பகுதிகளில் மக்கள் மீளக்குடியேற்றப்படுவார்கள். அதுவரை அவர்கள் தற்போதுள்ள இடங்களிலேயே இருக்கலாம் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிழக்கில் மட்டுமல்ல கெரவலப்பிட்டிய, கொத்மலை, நுரைச்சோலை போன்ற பகுதிகளிலும் காணிகள் எடுக்கப்பட்டன. அபிவிருத்திப் பணிகளுக்காக காணிகள் எடுக்கப்படுகின்றன. அதிவேக பாதை அமைப்பின் போதும் காணிகள் எடுக்கப்பட்டன. காணிகள் எடுக் கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப் படுகிறது.
இதேபோன்றுதான் கிழக்கில் சம்பூரிலும் இந்திய அரசின் உதவியுடன் அனல்மின் நிலையத்துக்கு காணி பெறப்படவுள்ளது. இப்போது அனல் மின்நிலையம் அமைப் பது தொடர்பாக இந்திய அரசுடன் இறுதித்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

புலிகளின் புலனாய்வுப் பிரிவில் முக்கியமானவனாக இருந்த ‘அம்புறோஸ்’

ltte torture-3புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (19)
19. R 140
காந்தியும் அவனுடைய பரிவாரங்களும்; தாங்கள் கொண்டுவந்த ‘கைதிகளை’ அந்த இடத்தில் இறக்கி அடைத்துவிட்டு, என்னையும் தோழர் விவேகானந்தனை (அன்ரன்) சந்திக்க வைத்த பின், மீண்டும் பழைய இடத்துக்குத் திரும்பி வந்தார்கள். அப்பொழுது நேரம் பின்னிரவைத் தாண்டியிருந்தது. திரும்பி வரும்போது மீண்டும் என் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டிவிட்டு, வாகனத்தின் பின்பக்கத்தில் ஏற்றிக் கொண்டார்கள். காந்தியின் அடியாட்கள் என்னைச் சுற்றிவளைத்து அமர்ந்து கொண்டனர்.

நாம் சென்ற இடம் எதுவென்று அந்த நேரத்தில் அறியமுடியாவிடினும், எனது பின்னைய சிறை வாழ்க்கையின் போது அது எந்த இடம் என்பதை, சக கைதிகள் மூலம் விபரமாக அறிந்து கொண்டேன். அந்த இடம் கொடிகாமத்துக்கு அண்மையில் உள்ள வரணிப் பகுதியின் எருவன் என்ற இடமாகும். அங்குள்ள தென்னந்தோட்டமொன்றில், புலிகள் புதிதாக அந்தச் சிறைச்சாலையை நிர்மாணித்திருந்தனர்.
அந்த இடத்தை புலிகள் ‘மேலுலகம்’ என அழைப்பது வழமை. அதேநேரத்தில் கைதிகள் அந்த இடத்தை ‘மஸ் கடை’ ( இந்த சிங்களச் சொல்லுக்கு ‘இறைச்சிக் கடை’ என அர்த்தம்) எனத்தான் குறிப்பிடுவர். அந்தக் குறியீட்டுச் சொல் அந்த இடத்துக்கு மிகவும் பொருத்தமானது என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன். அவ்வளவு தூரம் அந்த இடம் புலிகளின் சித்திரவதை முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் பெயர் பெற்றிருந்தது.

அத்தனை நிதியொதுக்கீடுகளும் SLMC உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்- பசில் ராஜபக்ச

ஆளும் கட்சி மாகாண சபை உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அத்தனை நிதியொதுக்கீடுகளும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுடனான சந்திப்பின் போது அமைச்சர் பசில் ராஜபக்ச உறுதியளித்துள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

புலிகளுக்காக நிதி திரட்டிய ஐவருக்கு நெதர்லாந்து ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது!

புலிகள் அமைப்பின் சார்பில் நிதி திரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஐந்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
நெதர்லாந்து வாழ் தமிழ் மக்களிடம் குறித்த நபர்கள் சட்டவிரோதமான முறையில் நிதி திரட்டியதாகவும், அந்த நிதியை புலிகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
குறித்த ஐந்து இலங்கைத் தமிழர்களுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச பட்சமாக ஆறு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் இளைஞர் அமைப்பு, நெதர்லாந்து தமிழ் கலை கலாச்சார அமைப்பு போன்ற பெயர்களில் புலி ஆதரவு அமைப்புக்களை உருவாக்கி பல மில்லியன் யூரோ நிதியை குறித்த நபர்கள் திரட்டியுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வாறு திரட்டப்பட்ட பணம் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளி, 21 அக்டோபர், 2011

அம்பானியை ஆட்டிப்படைக்கும் வாஸ்து!!உலகின் மிக காஸ்ட்லியான காலி வீடு!..




அன்டிலியா - முகேஷ் அம்பானியின் 27 அடுக்கு சொகுசு மாளிகை இது. மும்பையில் உள்ள இந்த அபாரமான பங்களாவில் 6 மாடி பார்க்கிங், 3 ஹெலிபேட்கள், சொகுசு திரையரங்குகள், தொங்கும் தோட்டங்கள், மெகா பார்ட்டி ஹால், கான்ஃபரன்ஸ் அறைகள் என ஒரு மினி நகரமே உள்ளடக்கியுள்ளது. இந்திய பணக்காரர்களில் யாருக்கும் இப்படியொரு மெகா வீடு கிடையாது.
கடந்த ஆண்டு இந்த வீட்டுக்கு கிரகப் பிரவேசம் நடத்தினர் முகேஷ் அம்பானி குடும்பத்தினர்.- இதுவரை இந்த வீட்டுக்கு அவர்கள் இடம்பெயரவில்லை.
காரணம்.... வாஸ்துதான்!
இந்த மாளிகையின் கிழக்குப் பக்கத்தில் அதிக ஜன்னல்கள் இல்லையாம். மேற்குப் பக்கம் மட்டும்தான் ஜன்னல்கள் உள்ளனவாம்.

சர்வேதேசத் திரைப்பட விழா சென்னையில் தொடங்கியது

 சர்வேதேசத் திரைப்பட விழா சென்னையில் தொடங்கியது
சென்னை, அக்.21 (டிஎன்எஸ்) சர்வேதேசத் திரைப்பட விழா சென்னையில் நேற்று (அக்.20) தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவினை, இண்டர்நேஷனல் தமிழ் பிலிம் அகாடமி மற்றும் செவன்த் சேனல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன.

அக்.20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவை, இயக்குநர் வசந்தபாலன் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய வசந்தபாலன், "இந்தத் திரைப்பட விழாவை தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் திரைப்படத் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் திரையுலகுக்கு பல நன்மைகளைச் செய்துள்ளார். ஒரு தயாரிப்பாளராக படங்களைத் தயாரித்து பணம் சம்பாதிப்பதை மட்டும் குறுக்கோளாகக் கொள்ளாமல் சினிமா ஆர்வலர்களுக்கு அவர் செய்து வரும் இந்த அரிய பணி பாராட்டுக்குரியது.

ஜெயலலிதாவுடன், இலவச இணைப்பாக சுதாகரன்!பெங்களூருவில்

பெங்களூரு, இந்தியா: சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டாவது நாளாக இன்றும் ஆஜராகியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. நேற்று வந்தது போலவே இன்றும் தனி விமானத்தில் ஹந்துஸ்தான் ஏர்போர்ட்டுக்கு வந்த அவர், அங்கிருந்து கார்களில் நீதிமன்றம் வந்தடைந்தனர்.
இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன் குற்றவாளிகளாக பட்டியலில் உள்ளவர்கள், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர். நேற்று கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜராகியபோது சசிகலாவும், இளவரசியும் அவருடன் வந்திருந்தனர். இன்று சுதாகரனும் அவர்களுடன் சேர்ந்து வந்திருந்தார்.
முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுடன் போயஸ் கார்டன் தற்போது சுமுகமான உறவில் இல்லை. இதனால், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவரும் ஒரே காரில் வந்து இறங்க, சுதாகரன் மற்றொரு காரில் வந்து இறங்கி உள்ளே சென்றார்.

கலைஞர் ராஜாத்தியம்மாளுடன் டெல்லி பயணம்: சோனியாவை சந்திக்க

சென்னை: திஹார் சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியைப் கலைஞர் பார்ப்பதற்காக திமுக தலைவர் கலைஞர், தனது மனைவி ராஜாத்தி அம்மாள் மற்றும் பேரன் ஆதித்யாவுடன் டெல்லி செல்கிறார். அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
2ஜி ஊழல் வழக்கில் திமுக எம்பி கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டதையடுத்து சுமார் 6 மாதங்களாக திஹாரில் உள்ளார். ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவரை ஜாமீனில் வெளியேவிட சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.
கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி லஞ்சப் பணம் கைமாறியதாக சிபிஐ கூறியுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் கலைஞர் டிவியின் ஒரு பங்குதாரர் என்ற அடிப்படையில் கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சமீபத்தில் சிபிஐ புதிய குற்றச்சாட்டை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் நம்பிக்கை துரோகம் செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரைசிறைத் தண்டனை கிடைக்கும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த குற்றச்சாட்டை கனிமொழி உள்ளிட்டோர் மறுத்துள்ளனர்.
இந்நிலையில் திமுக தலைவர் கலைஞர் தனது மகள் கனிமொழியைப் பார்க்க இன்று மாலை விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அவருடன் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளும், அவரது மகன் ஆதித்யாவும் செல்கின்றனர்.
அவர்கள் இன்று மாலை திஹார் சென்று கனிமொழியை சந்திக்கவிருக்கின்றனர்.
வரும் 24ம் தேதி முதல் 2ஜி வழக்கில் கைதாகியுள்ள கனிமொழி உள்ளிட்ட சிலரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தொடரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க கலைஞர் திட்டமிட்டுள்ளார். இதற்காக சோனியாவிடம் அபாய்ண்ட்மென்ட் கேட்டுள்ளார், கிடைத்தால் அவரை சந்திப்பார் என்று தெரிகிறது.

அதிமுக அலையில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் காணாமல் போன தேமுதிக


Vijayakanth
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ளாட்சி இடங்களில் அதிமுக பெருவாரியாக வெற்றி பெற்றுவரும் நிலையில் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டசபைத் தேர்தலை சந்தித்து தற்போது தனிதத்துப் போட்டியிட்ட தேமுதிக மிகப் பெரிய அடியை வாங்கியுள்ளது.
மாநகராட்சிகளிலும் சரி, நகராட்சிகளிலும் சரி இந்தக் கட்சி அதிமுகவின் வெற்றியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. பேரூராட்சிகளில்தான் இக்கட்சிக்கு ஓரளவு வார்டுகள் கிடைத்து வருகின்றன.

CCTV கமராவில் அம்பலம் வெள்ளையர்கள் பை காணாமல் போனதாக பொய்


பை காணாமல் போனதாக பொய் நாடகம் ஆடிய வெள்ளையர்கள்! CCTV கமராவில் அம்பலம்தங்களுடைய பை காணாமல் போனதாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் செய்த முறைப்பாடு முற்றிலும் பொய்யானது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் கொழும்பு அலெக்சேன்டர் வீதியில் வைத்து தங்களுடைய பை களவாடப்பட்டதாக கடந்த 2011 - 08 - 15 அன்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்திய பொலிஸார் சந்தேகபநபர்களை கண்டுபிடிக்கவென பை காணாமல் போனதாகக் கூறப்படும் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராவில் (CCTV) உள்ள காணொளிகளை பரிசீலித்துள்ளனர்.
இதன்படி குறித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அலெக்சென்டர் வீதிக்குப் பயணித்தபோது அவர்கள் கைகளில் பைகள் எதுவும் இருக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அவர்கள் செய்த முறைப்பாடு பொய்யானது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

5 Star ஹோட்டல்-சீன நிறுவனத்துடனான ஒப்பந்தம் இடை நிறுத்தப்பட்டுள்ளது : அமைச்சர் பஷில் ராஜபக்ஷ!

காலி முகத்திடலுக்கு அருகாமையிலுள்ள காணியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அமைக்கும் வகையில் சீனாவின் கெற்றிக் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை இடை நிறுத்தப்பட்டிருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நேற்று சபையில் தெரிவித்தார்.
சீனாவின் கெற்றிக் நிறுவனமானது எமது நிபந்தனைகளின் பிரகாரம் செயற்படுவதற்கு இணங்கும் பட்சத்திலேயே மேற்படி உடன்படிக்கை நீடிக்கக்கூடியதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரித்துக் கொள்வதான விவாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. கபீர் ஹாசிம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.இந்த சந்தர்ப்பத்தில் கபீர் ஹாசிம் எம்.பி. க்கும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது. இதன்போதே அமைச்சர் பஷில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

திமுக படு தோல்வி!10 மாநகராட்சியையும் இழந்து 2வது இடத்தைப் பிடித்து


Karunanidhi and Stalin
சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. 2006 தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற அக்கட்சி இந்த தேர்தலில் 10 மாநகராட்சிகளையும் இழந்து பெரும் அடியை வாங்கியுள்ளது. அது உருவாக்கிய புதிய மாநகராட்சிகளிலும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது திமுக. பெரும்பாலான இடங்களில் திமுகவுக்கு 2வது இடமே கிடைத்துள்ளது.
கடந்த தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றதிமுகவால் இந்த முறை ஒரு மாநகராட்சி மேயர் பதவியைக் கூட கைப்பற்ற முடியவில்லை. மேலும் கடந்த முறை மிக படோடபமாக வெற்றி பெற்ற சென்னையை இந்த முறை மிகப் பரிதாபமாக அது இழந்துள்ளது. ஆரம்பத்தில் வேலூரில் மட்டும் முன்னணியில் இருந்தது. ஆனால் அதுவும் பின்னர் கை நழுவிப் போனது. அனைத்து இடங்களிலும் அக்கட்சி 2வது இடமே கிடைத்தது.
மதிமுகவிடம் படு தோல்வி
இதை விட கேவலமாக குளித்தலை நகராட்சித் தலைவர் தேர்தலில் மதிமுகவிடம் தோல்வியைத் தழுவியது திமுக.

சுரேஷுக்கு விசா மறுப்பு கனடாவில் மனைவி பிள்ளைகளை

எதிர்வரும் 30ம் திகதி அளவில் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமெரிக்கா செல்லவுள்ளனர்.சுரேஷுக்கு விசா மறுப்பு இக்குழுவில் சம்பந்தன், மாவை, சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்தின் ஆகியோர் அடங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா செல்லவுள்ள இவர்கள் கனடா சென்று அங்கு மக்களை சந்திக்கவும், அங்கு நிகழவுள்ள கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் ஏற்றபாடாகியுள்ளது.
இந்நிலையில் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கான கனடிய வீசா மறுக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள கனடியத்தூதரம் இவருக்கான வீசாவினை மறுத்துள்ளது. இலங்கையின் ராஜதந்திர கடவுச் சீட்டினை கொண்டுள்ள இவரின் வீசா மறுக்கப்பட்டமை தொடர்பாக பல்வேறு தரப்பினரும் பலதரப்பட்ட சந்தேகங்களை வெளியிடுகின்றனர்.
அமெரிக்கா செல்லும் இவர் கனடாவில் உள்ள தனது மனைவி பிள்ளைகளை சந்திக்கும் நோக்கில் இவ்வீசாவிற்கான விண்ணப்பத்தினை சமர்பித்திருந்தபோதும் வீசா மறுக்கப்பட்டதன் பின்னணி இவர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.
இலங்கையில் இவர் (புலி)கொலைக்கும்பலை இயக்கியதுடன் பல்வேறுபட்ட மனித உரிமைமீறல்களை மேற்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உட்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவ்வாறே சுரேஸ் பிறேமச்சந்திரனும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்பதைத் கனடா இதுவரையும் மறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோர்ட்டில் ஜெ.விடம் இன்றும் சரமாரி கேள்வி!

 சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக பெங்களூர் தனி கோர்ட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று 2-வது நாளாக ஆஜராகி, நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். கடந்த 1991 முதல் 96 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடிக்கு சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, தற்போது பெங்களூர் தனி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில், 109 முறை ஜெயலலிதா தரப்பில் வாய்தா வாங்கப்பட்டது.

வங்க தேசம்: கொத்தடிமை தேசம்!

வங்க தேசம்: கொத்தடிமை தேசம் ! ரெடிமேட் என அழைக்கப்படும் ஆயத்த ஆடைகளைத்தான் இன்று உலகம் முழுவதும் விரும்பி அணிகின்றனர். பல்வேறு வடிவமைப்புகளில் பல பெயர்களில் இவை விற்கப்பட்டாலும், இவற்றைச் சந்தைப்படுத்துவது விரல்விட்டு எண்ணக்கூடிய சில பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களே.  அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் சில்லரை விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் வால்மார்ட், மெட்ரோ, டெஸ்கோ போன்ற மிகப் பெரிய சங்கிலித் தொடர் நிறுவனங்கள் ஆயத்த ஆடை வர்த்தகத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. இந்த ஆயத்த ஆடைகளின் மீது ஒட்டப்பட்டிருக்கும் பெயர்கள் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களுடையவை. ஆனால் அவற்றைத் தயாரித்துத்தரும் உழைப்பு முழுவதும் ஏழை நாடுகளின் தொழிலாளர்களுக்குச் சொந்தமானது.

ஏராளமான கேள்விகள் பாக்கி...ஜெவிடம் இன்றாவது விசாரணை முடியுமா..?

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்றும் இன்றும் விசாரணை நடத்தப்பட்டு வந்தாலும் கேள்விகள் ஏராளமாக இருப்பதால் இன்றே விசாரணை முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. நாளையும் இந்த விசாரணை தொடரலாம் என்று தெரிகிறது.
முன்னதாக ஜெயலலிதாவிடம் 500 கேள்விகள் கேட்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டன. நேற்று சுமார் 380 கேள்விகள் கேட்கப்பட அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு எனக்குத் தெரியாது, எனக்கு நினைவில்லை, அந்த முதலீட்டில் நான் சைலண்ட் பார்ட்னர் தான் என்று ஒற்றை வரிகளிலேயே முதல்வர் பதிலளித்தார்.
இந் நிலையில் இன்னும் சுமார் 100 கேள்விகள் மிச்சமிருப்பதாகக் கூறப்பட்டு இன்று விசாரணை நடந்து வருகிறது. ஆனால், ஜெயலலிதா மேலும் 1005 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தனை கேள்விகள் மிச்சமிருந்தால் இந்த விசாரணை இன்றுடன் முடிய வாய்ப்பில்லை. மேலும் ஒரு நாளோ அல்லது சில நாட்களோ தொடரலாம் என்று தெரிகிறது.
  • வெற்றி முகத்தில் அதிமுக- முதல் முறையாக சென்னை மேயர் பதவியைக் கைப்பற்றுகிறது!
  • உசிலம்பட்டி நகராட்சியில் அதிமுக வேட்பாளர் வெற்றி !
  • ஒட்டன்சத்திரம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் வெற்றி !
  • தூத்துக்குடி மேயர் பதவி-அதிமுகவின் சசிகலா வெறறி

மனோ கணேசன்:அடுத்த இலக்கு கொழும்பில் ஒரு லட்சம் வாக்குகள்

கொழும்பு மாவட்டத்திலே 30,000 ஆயிரம் வாக்குகளை தனித்துவமான எமது ஏணிச் சின்ன தமிழ் கொடியின் கீழ் திரட்டி காட்டியிருக்கின்றோம். இது ஒரு மகத்தான ஆரம்பம். கொழும்பு மாவட்டத்தில் ஒரு இலட்சம் வாக்குகள் என்ற அடுத்த இலக்கை நோக்கிய எமது வெற்றிப்பயணம் தொடருகின்றது. எம்மை புறந்தள்ளிவிட்டு எவரும் தலைநகர பிரதேசத்தில் அரசியல் நடத்த முடியாது என்பதை நிரூபித்து காட்டியிருக்கின்றோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பரிதாபமாக, தே.மு.தி.க உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்

சென்னை, இந்தியா: இன்னமும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்து சேரவில்லை என்றாலும், இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தனக்கு அரசியலில் இருந்த இமேஜை இழக்கப் போகின்றது தே.மு.தி.க.
இதுவரை வெளியான முடிவுகள் எதுவுமே இவர்களுக்கு சாதகமாக இல்லை.
ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் தற்போதைய நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னணியில் இருக்கும் எந்தவொரு பகுதியிலும், தே.மு.தி.க. வேட்பாளர்களால் இனி ஓவர்-டேக் பண்ண முடியாத அளவில் உள்ளன ஓட்டு வித்தியாசங்கள்.
தற்போது இவர்கள் முன்னணியில் இல்லாத அனைத்து இடங்களிலும் தோல்வி என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவில் உள்ளது லீடிங் எண்ணிக்கை வித்தியாசம்.

10 மேயரும் அ.தி.மு.க.,தான் - தி.மு.க., மீது அனுதாப அலை இல்லை -மவுசு குறைந்த தே.மு..தி.க.,

சென்னை: தமிழகத்தில், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 759 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல், கடந்த 17, 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக, பெரிய அளவில் வன்முறை ஏதுமின்றி நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, மாநிலம் முழுவதும் 822 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை துவங்கியது. தற்போதைய நிலவரப்படி சென்னை, திருச்சி, கோவை, மது‌‌‌ரை, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், வேலூர் என 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க., முன்னிலை வகிக்கிறது. வேலூர் மாநகராட்சியில் எண்ணிக்கை துவங்கிய நேரத்தில் மட்டும் தி.மு.க., முன்னிலை வகித்தது.

புலிகளின் நிதிப் பொறுப்பாளர் அய்யா என்ற பொன்னையா ஆனந்தராஜாவை கைது செய்ய உத்தரவு!

புலிகள் அமைப்பின் நிதிப் பிரிவின் முன்னாள் தலைவர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனின் நிதி பொறுப்பாளராக இருந்த அய்யா என்ற பொன்னையா ஆனந்தராஜா என்பவரை உடனடியாக கைதுசெய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ நேற்று உத்தரவிட்டதுடன் அதற்கான சிகப்பு அறிக்கையும் வெளியிட்டார்.
அமெரிக்க பிரஜையான இந்த நபர் ஒரு கணக்காய்வாளர் எனவும் இவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ரியாஸ் பாரி தெரிவித்தார்.
புலிகளுக்கு நிதி சேகரித்ததாக ஆனந்தராஜாவுடன் சேர்த்து குற்றம்சுமத்தப்பட்டுள்ள யாழ்ப்பாணம் நீராவியடி பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 42 வயதான சுப்ரமணியம் சிவக்குமார் என்பவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவருக்கு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
2007 ஜனவரி மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையான கால பகுதியில், அமெரிக்காவிலும் இலங்கையிலும் தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்புக்காக நிதி சேகரித்ததாக இலங்கை சட்டமா அதிபர சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் இவர்கள் தண்டனை பெறக் கூடிய குற்றத்தை செய்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை, தேர்தல் ஆணையத்துடன் அதிமுக புதிய கூட்டணி: சுப. வீரபாண்டியன்

மதுரை: உள்ளாட்சித் தேர்தலில் காவல்துறை, தேர்தல் ஆணையத்துடன் அதிமுக புதிய கூட்டணி அமைத்துள்ளதாக திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அப்போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. அதில் பல இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மேலும் பல இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த தேர்தலிலும் திமுகவுக்கு தோல்வி தான்.
இந்த நிலையில் தோல்வி குறித்து திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியதாவது,
இந்த தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று வருகின்றது என்றும், இதனால் திமுகவிற்கு எதிர்காலம் இல்லை எனவும் சிலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை வைத்து திமுகவை தவறாக எடை போடக் கூடாது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது எல்லாம் சகஜம்.
ஏனென்றால் கடந்த முறை பென்னாகரம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்தது. அதே போல புதுச்சேரி இந்திரா நகர் தொகுதியிலும் அதிமுக டெபாசிட் இழந்தது.
எனவே, தற்போதுள்ள நிலவரத்தை வைத்து திமுகவின் எதிர்காலத்தை யாரும் தவறாக எடை போடக் கூடாது. திமுகவிற்கு நல்ல எதிர்காலம் உண்டு.
சட்டசபை தேர்தலில் அதிமுக பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. தற்போது உள்ளாட்சித் தேர்தலில் காவல்துறை, தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துள்ளது என்றார்

உள்ளாட்சி தேர்தல் : பெரும்பாலான இடங்களில் அதிமுக முன்னிலை!.

:உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆளும் அதிமுக பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கான தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்தது. மொத்தம் 1,32,401 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நேர்முக தேர்தல் நடக்கிறது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 12,759 உள்ளாட்சி பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

3 மாநகராட்சிகளில் மதிமுகவுக்கு அதிக ஓட்டு- பலஇடங்களில் கணிசமான வாக்குகள்


Vaiko
சென்னை: மதிமுகவினர் நிச்சயம் இந்தத் தேர்தலை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். காரணம் 3 மாநகரட்சிகளில் அக்கட்சிக்கு எதிர்பாராத அளவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. மேலும் பல இடங்களில் ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன.

அனைவராலும் சீந்தப்படாத கட்சியாகவே இந்த தேர்தலை சந்தித்தது மதிமுக. இருந்தாலும் கூட்டணிக்காக யாரிடமும் போய் கெஞ்சாமல், அடிபணியாமல் துணிச்சலுடன் தனியாகவே தேர்தல் களத்திற்கு அனுப்பினார் வைகோ. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.

கனிமொழி மீதான புதிய குற்றச்சாட்டு ஏற்கப்படுமா?பழிவாங்குதல் தொடருமா?

புது தில்லி, அக். 20: 2ஜி அலைக்கற்றை வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்பட 17 பேர் மீது  சுமத்தப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கிறது. இந்த உத்தரவின் அடிப்படையிலேயே கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது தெரியவரும்.  புதிய குற்றச்சாட்டு: 2ஜி அலைக்கற்றை வழக்கில் கடந்த மாதம் 26-ம் தேதி இந்திய தண்டனைச் சட்டம் 409-ம் பிரிவின் கீழ் நம்பிக்கை மோசடி எனும் புதிய குற்றச்சாட்டை சி.பி.ஐ. பதிவு செய்தது. இதில் ராசா மட்டும் இன்றி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் சேர்க்கப்பட்டனர்.  இந்தக் குற்றச்சாட்டு தாக்கலாகும் முன்னர் கனிமொழிக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது, புதிய குற்றச்சாட்டால் கனிமொழி உள்பட அனைவருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்  நாளை உத்தரவு: இந்த வழக்கில் ராசா, கனிமொழி உள்பட 17 பேர் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகளை இறுதி செய்து நீதிபதி ஓ.பி.சைனி சனிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கிறார்.  சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என்று நீதிபதி கருதினால் அந்தக் குற்றச்சாட்டை பதிவு செய்யலாம். குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை என்றால் குறிப்பிட்ட குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிடலாம்.  புதிய குற்றச்சாட்டுக்கான 409 பிரிவு (நம்பிக்கை மோசடி) உத்தரவையும் அன்றைய தினம் நீதிபதி பிறப்பிக்கிறார்.

இன்னும் 90 ஆண்டுகளில் கடல் மட்டம் 2 அடி உயரும்

பூமி வெப்பமயமாகி வருவதால் அடுத்த 90 ஆண்டுகளுக்குள் கடல் நீர் மட்டம் 2 அடி உயரும் என கோபன்ஹெகன(டென்மார்க்) பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது உலகம் முழுவதும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் காபனீரொட் சைட் மற்றும் இதர சுற்றுச் சூழல் சீர்கேடு காரணமாக பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது.
இதனால் அட்லான்டிக் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது உள்ள நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் 2 அடியும், அதற்கடுத்த 4 ஆண்டுகளில் 6 அடியும் உயரும். இதனால் கடற்கரையை ஒட்டி உள்ள தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடல் மட்டம் சில இடங்களில் உயர்வதாலும், சுனாமி ஏற்படுவதாலும் சிறிய தீவுகள் காணாமல் போவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

தயாநிதிக்கு ஆதரவாக ஆவணங்கள் அழிப்பு : அதிர்ச்சி தகவல்

சென்னை: தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்ற குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் தயாநிதிக்கு ஆதரவாக, ஆவணங்களை அழிக்கும் முயற்சி நடந்துவரும் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் சுப்ரமணியன் அறையை நேற்று முற்றுகையிட்டனர். முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது, சென்னை தொலைபேசியின், 323 இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. தயாநிதி வீட்டில் இருந்து, சன், "டிவி' அலுவலகத்திற்கு, "ஆப்டிகல் பைபர் கேபிள்' இணைப்பு மூலம், அதிநவீன தொடர்பு, முறைகேடாக வழங்கப்பட்டிருந்தது. கடந்த 10ம் தேதி, தயாநிதி வீட்டில் ரெய்டும் நடந்தது. இந்த இணைப்புகளை வழங்கியபோது, வேலுச்சாமி என்பவர், சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளராக இருந்தார். இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். இவரிடம், பி.எஸ்.என்.எல்., நிர்வாகம், இணைப்பு குறித்து விசாரணை நடத்தியது. விசாரணையில் அவர் தெரிவித்த தகவல்களை, சி.பி.ஐ., ரெய்டு நடத்தியபோது, சென்னை தொலைபேசி அதிகாரிகள், சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதுதொடர்பான ஆவணங்களையும் ஒப்படைத்தனர்.

அம்பேத்கருக்கு நிகராக காந்தியை காட்ட முடியுமா ?


‘ஒவ்வொரு இந்தியருக்குள்ளும் ஒரு காந்தியும் அம்பேத்கரும் மேலாதிக்கத்துக்காகப் போட்டியிடுகிறார்கள்.’ ராமச்சந்திர குஹாவின் இந்த வாக்கியம் உண்மையானது. ஆனால், தன் கட்டுரையை  நிறைவு செய்யும்போது அவர் முற்றிலும் எதிரான திசையில் நகர்ந்து செல்கிறார். அம்பேத்கரும் காந்தியும் ‘அவர்கள் வாழ்ந்த காலத்தில், அரசியல் ரீதியில் ஒருவருக்கொருவர் எதிரானவராக இருந்தனர். பல பத்தாண்டுகள் கழிந்த நிலையில், இன்று நாம் அவர்கள் பங்களிப்பை ஒன்றை நிறைவு செய்ய இன்னொன்று என்ற வகையில் அணுகமுடியும்.’ ராமாயணத்துக்கு ஒரு கதாநாயகன் இருந்தால் போதும். ‘வரலாற்றுக்கு அப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இல்லை. தலித் விடுதலையின் வரலாறு இன்னும் நிறைவடையவில்லை. அதில் எழுதப்படாத பாகங்கள் பல உள்ளன. பல கதாநாயகர்களுக்கு அங்கே இடம் இருக்கிறது.’
அதாவது, தலித் விடுதலை வரலாற்றில் அம்பேத்கருக்கு உரிய இடம் இருப்பது போல், காந்திக்கும் ஓரிடம் உண்டு என்கிறார் ராமச்சந்திர குஹா. அல்லது கொடுக்கப்படவேண்டும் என்கிறார். இடம் கொடுப்பதைப் பற்றிப் பின்னர் யோசிப்போம்.

மும்மொழிக் கொள்கை நாட்டில் ஐக்கியத்தை வலுப்படுத்தும்

மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலமே நாட்டு மக்கள் அனைவரும் சம உரிமையுடனும், மன நிறைவுடனும் சகல மத, இன மக்களுடன் நட்புறவுடன் வாழ முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ள கருத்து உண் மையிலேயே யதார்த்தபூர்வமான, நாட்டின் மேம்பாட்டுக்காக முன் வைத்த ஒரு சிறந்த யோசனையாகும்.
தற்போது தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சராக இருந்துவரும் வாசுதேவ நாணயக்கார 1960-70ம் ஆண்டு தசாப்தங்க ளில் லங்கா சமசமாஜக் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவராக இருந்த போது, மொழிகளுக்கு சம உரிமை கொடுத்தால்தான் நாட்டில் உண்மையான இன ஐக்கியமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுமெ ன்று பலதரப்பட்ட போராட்டங்களை அன்றைய அரசாங்கங்களுக்கு எதிராக மேற்கொண்டு வந்திருக்கிறார்.
அவ்விதம் தேசிய மொழிகளில் ஆர்வமும் அபிமானமும் கொண்ட ஒரு வரே தேசிய மொழிகளுக்கு பொறுப்பான அமைச்சராக சிறந்த சேவை யாற்ற முடியும் என்பதை நன்கு உணர்ந்து, சமயோசிதமாக அத்துறை க்கு பொறுப்பான அமைச்சராக வாசுதேவ நாணயக்கார அவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்தார்.

அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் வடக்கில் மாகாண சபை தேர்தல்; முதலமைச்சர் வேட்பாளர் டக்லஸ்.

அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் வடக்கில் மாகாண சபை தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலதிக பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதாகவும், அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் வடக்கில் மாகாண சபை தேர்தல் நடத்துவது தொடர்பாக கருத்துக்கள் பறிமாறப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவை நிறுத்துவதற்கு தயாராகி வருதாக தெரிய வருகிறது.

திரிபோலியில் மக்கள் ஆரவாரம்!கேணல் கடாபி கொல்லப்பட்டார்

உலகின் மிகக் கொடிய பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் போன்று அவர் வெள்ளைக்கொடியுடன் கிளர்ச்சிப்படைகளிடம் சரணடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது !
லிபியத் தலைவர் கேணல் மொஹம்மர் கடாபி லிபிய கிளர்ச்சிப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடாபியின் பிறந்த இடமான  சேர்டே பகுதியில் வைத்து அவர் பிடிபட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. 1969ம் ஆண்டு லிபியாவின் தலைவரான கேணல் கடாபி தொடர்ச்சியாக 42 ஆண்டுகள் லிபியாவை ஆட்சி செய்து வந்தார். அண்மையில் கடாபி பதவி விலக வேண்டுமென அந்த நாட்டுக் கிளர்ச்சிக் குழுக்கள் வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் மக்கள் என்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்’


குடிநீர்த்திட்ட நிகழ்வில் மகிந்த ராஜபக்ஷ
நாட்டில் குறுகிய இனவாத அரசியலுக்கு தான் இடமளிக்கப் போவதில்லை என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மட்டக்களப்பில் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கூட்டுக் குடிநீர் விநியோகத் திட்டத்தை இன்று புதன் கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும், யாரும் எவருக்கும் அடிமையாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை தொடர்ந்தும் தாழ்ந்த நிலையில் வைத்திருக்க சில அரசியல் தலைமைகள் முற்படுவதாகவும் அதற்கு இடமளிக்க முடியாத வகையில் அரசாங்கம் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கின்றது என்றும் ஜனாதிபதி கூறினார்.
தமிழ் மக்கள் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார்.

வியாழன், 20 அக்டோபர், 2011

5 Ex புலிகளுக்கு நெதர்லாந்தில் 20 வருடகால சிறைதண்டனை வழங்கப்படலாம்

புலிகள் இயக்க உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர் மீது நெதர்லாந்து நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு நாளையுடன் நிறைவுக்கு வருகிறது.
சர்வதேச தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணியமை, குண்டுத் தாக்குதல், கொலை என்பவற்றுக்கு துணைபோனமை, உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமாயின் ஐந்து சந்தேகநபர்களும் 20 வருடங்களுக்கு மேல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிவருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளுக்கு
இலங்கையில் கொலைகள் இடம்பெறுவதற்கு இந்த சந்தேகநபர்கள் தமிழ் இளைஞர்களை ஊக்குவித்ததாக அரச தரப்பு சட்டத்தரணி நெதர்லாந்து நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
சுமார் 6 வாரங்களாக விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா விசாரணை: கோர்ட்டில் நிஜமாக என்னதான் நடந்தது?


Viruvirupu

பெங்களூரு, இந்தியா: ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தபடி கிரிமினல் கேஸ் ஒன்றில் குற்றவாளியாக ஒன்றுக்காக கோர்ட் படி ஏறுவது, எந்தவொரு அரசியல்வாதிக்கும் அவமானகரமான அனுபவம்தான். அந்த வகையில், இறுக்கமான முகத்துடனேயே கோர்ட்டுக்குள் இன்று பிரவேசித்தார் ஜெயலலிதா.
இன்று ஜெயலலிதா ஆஜராகும்போது, கோர்ட் நடவடிக்கைகள் எப்படி இருக்கப் போகின்றன என்பதை பல மீடியாக்கள் இஷ்டத்துக்கு ஊகித்து வெளியிட்டிருந்தன. ஆனால், கோர்ட் இன்று எப்படி இயங்கப் போகின்றது என்பதில் எந்த ரகசியமும் இருக்கவில்லை. ஜெயலலிதா கோர்ட்டுக்கு வருவதற்கு முன்னரே, இன்று நடக்கப்போவது என்ன என்பதை தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
புரொசிகியூட்டிங் லாயர் சந்தேஷ் சௌத்தா, தன்னிடம் கேள்வி கேட்டவர்களுக்கு நிதானமாகவே கோர்ட் நடைமுறைகளை விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார்.“இன்று கோர்ட்டில் நடைபெறவுள்ளது வழக்கின் இறுதிக் கட்ட நடைமுறை. குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியா இல்லையா என்பது பற்றிய விசாரணை அல்ல. கோர்ட்டைப் பொறுத்தவரை குற்றவாளியின் குற்றம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவை தொடர்பான முடிவுகளுக்கு குற்றம் சாட்டும் தரப்பு எப்படி வந்தது என்பதை குற்றவாளிக்கு அறிவிக்க வேண்டிய நடைமுறைதான் இன்று நடைபெறவுள்ளது.

லூஸ் மோகன் கண்ணீர்!மகன் சாப்பாடு போடவில்லையே... காமெடி நடிகர்


சென்னை: சாப்பாடு போட மகன் மறுக்கிறார் என நடிகர் லூஸ்மோகன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.
மயிலாப்பூரில் வசித்து வருகிறார் நடிகர் லூஸ்மோகன். எம்ஜிஆர் காலத்திலிருந்து சினிமாவில் நடித்து வருபவர் லூஸ் மோகன். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.
இன்று காலை போலீஸ் நிலையத்துக்கு ஆட்டோவில் வந்த அவர் போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தார்.
அதில், "எனது மகன் கார்த்திக், மனைவியுடன் சேர்ந்துகொண்டு சாப்பாடு போட மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நான் வேறு எதுவும் கேட்க வில்லை. மூன்றுவேளை சாப்பாடு கொடுத்தால் போதும். வேறு எதுவும் வேண்டாம்," என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜெயலலிதாவிடம் 380 கேள்விகள் இன்று நீதிபதியால் கேட்கப்பட்டது மீதி நாளை தொடரும்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். முற்பகல் 11 மணிக்கு அவரிடம் தொடங்கிய விசாரணை மாலை 4.30 மணிக்குத்தான் விசாரணை முடிந்தது. அவரிடம் 380 கேள்விகளை நீதிபதி மல்லிகார்ஜூனய்யா மற்றும் அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யா கேட்டு விசாரணை நடத்தினர்.

உச்ச நீதிமன்றத்தின் கிடுக்கிப் பிடி உத்தரவைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா இன்று காலை தனி விமானம் மூலம் பெங்களூர் கிளம்பினார்.

கடாபி சுட்டுக்கொலை!:-Qadhafi killed, says field commander!

An anti-Gaddafi fighter points at the drain where Muammar Gaddafi was hiding before he was captured in Sirte October 20, 2011.

லிபிய இடைக்கால அரசாங்கப் படைகளுக்கும் கடபியின் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிப் போரில் காயங்களுக்கு உள்ளான கடாபி மரணித்துள்ளதாக அல்ஜசீரா தொலைக்காட்சி அறிவித்துள்ளது< டிரிபோலி : லிபிய அதிபர் கடாபி இன்று பிடிபட்டுள்ளதாக நேசனல் டிரான்சிசனல் கவுன்சில் கமாண்டர் தெரிவித்துள்ளார். லிபியாவை பல ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வந்த அதிபர் கடாபி மீது மக்கள் கொதித்து எழுந்ததன் விளைவாக அங்கு பெரும் புரட்சி வெடித்தது. லிபிய மக்களோடு இணைந்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் இணைந்து போராட்டத்தில் குதித்தன. இந்நிலையில், கடாபி தலைமறைவானார். அவரது எதிர்ப்பாளர்கள், லிபிய நாட்டில் கடாபிக்கு ஆதரவான பகுதிகளை ஒவ்வொன்றாக கைப்பற்றிய வண்ணம் இருந்தனர். அதேசமயத்தில், கடாபியின் உறவினர்கள் அவ்வப்போது கொல்லப்பட்டு வந்தனர். ஆனால், கடாபி மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்கும் முயற்சியில், நேட்டோ உள்ளிட்ட சர்வதேச படைகள் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில், கடாபி பிறந்த இடமான ஷிர்தே நகரில், நேட்டோ படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு நின்றுகொண்டிருந்த வாகனம் ஒன்றில், காயமடைந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்டார். பின், அவர் அதிபர் கடாபி என்பதை நேசனல் டிரான்சிசனல் கவுன்சில் கமாண்டர் உறுதி செய்தார்.

தீபாவளி டிரெஸ் பிடிக்காததால் தூக்கில் தொங்கிய 2 சகோதரிகள்

மதுரை: தீபாவளி பண்டிகைக்கு குறைந்த விலையில் புத்தாடை எடுத்துக் கொடுத்ததால் அதிருப்தியடைந்த சகோதரிகள் 2 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மதுரை மாவட்டம், செல்லூர், கட்டபொம்மன் நகரில் உள்ள பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன். வடை வியாபாரி. அவரது மனைவி செண்பகம். அவர்களுக்கு பாரதிராஜ் என்ற மகனும், சந்திரா(17), தமிழ்ச்செல்வி(15) என்ற 2 மகள்களும் உள்ளனர்.
சந்திரா அதே பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். தமிழ்செல்வி 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகைக்காக குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள் வாங்கினர். சாமிநாதன் தன் சக்திக்கு ஏற்ப குறைந்த விலையில் புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தார்.

T.Nagar ரங்கநாதன் தெருவுக்கு ஆபத்து காத்திருக்கிறது



முழுத்தமிழ் நாட்டிலேயே ரங்கநாதன் தெரு போல ஒரு அங்காடி தெரு இல்லை என்றே கூறலாம் ம்ம்ம் சரியான நெரிசல் ஜவுளி மற்றும் வீட்டு பொருட்கள் என்றாலே எல்லோருக்கும் வரும் ஞாபகம் தி நகர் தான். ஏன் என்றால் எல்லாம் ஓர் இடத்தில் அணைத்து பொருள்களும் கிடைக்கும் என்பதால் தான். இங்கு உள்ளூர் மட்டும் இன்றி வெளியூரிலும் இருந்து இங்கு வருகிறார்கள். ஆகையால் இந்த இடம் நெரிசல் மிகுந்த இடமாக உள்ளது.

அப்படிப்பட்ட இடத்தை பாதுகாப்போடு வைத்திருப்பது நம் அரசின் கடமை. ஏன் என்றால் நம் நாட்டில் தீவிரவாதி அச்சுறுத்தல் இருப்பதாலும், தீ விபத்து போன்ற அசம்பாவிதம் ஆதேனும் நேரிட்டாலும் இருக்கும் இடத்தை விட்டு மக்கள் வெளியேற வேண்டும். ஆனால் தி நகரில் குறிப்பாக ரங்கநாதன் தெருவில் வெளியேற முடியாத, நெரிசல் மிகுந்த இடமாக உள்ளது. விபத்தில் மாட்டி உயிர் இழப்பு, காயம் ஏற்படுவதை விட நெரிசலில் மாட்டி உயிர் இழப்பு, காயம் ஏற்படுவது தான் அதிகம் .

வேலாயுதத்துக்கு பெரிய தியேட்டர் வேணும் - கொடி பிடிக்கும் விஜய் ரசிகர்கள்

Vijay Fans Protest


தீபாவளிக்கு வெளியாகும் விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு பெரிய தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலாயுதம் படம் சென்னை மற்றும் புறநகர்களில் 38 திரையரங்குகளில் வெளியாகிறது. பெரும்பாலான பெரிய தியேட்டர்கள் ஏழாம் அறிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அடுத்த நிலையில் உள்ள அரங்குகளே வேலாயுதத்துக்கு கிடைத்துள்ளன.
அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்க வளாகத்திலும் இந்தப் படம் வெளியாகிறது. தேவி வளாகத்தில் 4 அரங்குகள் இருந்தாலும் இரண்டுதான் பெரியவை. தேவி கலா, தேவி பாலா இரண்டும் சிறிய அரங்குகள். இந்த சிறிய அரங்குகள்தான் விஜய் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தேவி மற்றும் தேவி பாரடைஸ் ஆகிய இரு பெரிய அரங்குகளும் உதயநிதி ஸ்டாலினின் ஏழாம் அறிவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன.
வேலாயுதத்துக்கு இந்த பெரிய அரங்குகளில் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று கோரி 300-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் தேவி திரையரங்க வளாகத்தில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜெயலலிதாவிடம் 3 மணி நேரமாக விசாரணை

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். முற்பகல் 11 மணி முதல் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
உச்சநீதிமன்றத்தின் கிடுக்கிப் பிடி
உத்தரவைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா இன்று காலை தனி விமானம் மூலம் பெங்களூர் கிளம்பினார். பெங்களூர் பழைய எச்ஏஎல் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர் அங்கிருந்து கார் மூலம் ஒசூர் ரோட்டில் பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா முன்பு ஆஜரானார்.
ஜெயலலிதாவுடன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது தோழி சசிகலாவும், சசிகலாவின் உறவினர் இளவரசியும் ஆஜரானார்கள். அதன் பின்னர் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா விசாரணையைத் தொடங்கினார்.

நேருவை சிறையிலே போட்டு இடைத்தேர்தலை நடத்தியவர்களின் வீரத்தை


ஜெயலலிதா பயன்படுத்திய அந்த வார்த்தையை
நான்  பயன்படுத்த விரும்பவில்லை : கலைஞர்
 திமுக தலைவர் கலைஞர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நீண்ட நாட்களாக வாய்தா வாங்கிக் கொண்டிருந்த ஜெயலலிதா, உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பிறகு இன்றைய தினம் பெங்களூரில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
 இறுதியாக நீதிக்கு தலை வணங்கியிருக்கிறார்கள்.
 குற்றவாளி என்ற அடிப்படையில் நீதி மன்றத்தில் ஆஜராகியிருப்பதை வைத்து, அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டுமென்று நீங்கள் கேட்பீர்களா?
நான் கேட்க வில்லை. எதற்கெடுத்தாலும் ராஜினாமா செய்ய வேண்டுமென்று ஒவ்வொரு அறிக்கையிலும் ஜெயலலிதா பயன்படுத்துவதுதான் அந்த வார்த்தை. நான் அதைப் பயன்படுத்த விரும்ப வில்லை.
வழக்கிலே ஆஜராகாமல் நூற்றுக்கு மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருந்தாரே, நேற்றைய தினம் கூட உச்ச நீதி மன்றத்திற்கு சென்று நீதி மன்றத்திலே ஆஜராகாமல் இருப்பதற்கான முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டாரே, அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
 நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க வேண்டும் என்பது தான் காரணம். தற்போது நீதி மன்றம் வலியுறுத்தியிருக்கிறது. எனவே இன்று ஆஜராகியிருக்கிறார்.
 கூடங்குளம் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலே இடம் பெற்றுள்ள  நீங்கள் விலகிட வேண்டுமென்று கேட்டிருக்கிறார்களே?
தி.மு.க. மத்திய அரசிலே இடம் பெற்றிருக்கிறது. மத்திய அரசிலே மாநில கட்சிகளில் ஒன்று இடம் பெற்றிருந்தால், அதை விரும்பாதவர்கள் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் உடனே மத்திய அரசிலிருந்து அக்கட்சி விலக வேண்டுமென்று தான் கேட்பார்கள்.

 கூடங்குளம் பிரச்சினைக்காக போராடுகின்ற மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

 ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அங்கேயுள்ள மக்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் பாதுகாக்கப்பட வேண்டும். அப்துல்கலாம் கூட ஆய்வு செய்வதாக சொல்லியிருக்கிறார். மக்களின் நன்மைக்காக மத்திய, மாநில அரசுகள் உதவிட முயற்சிக்க வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை.

 திருச்சியிலே நடைபெற்ற இடைத்தேர்தல் நேர்மையாக நடந்திருப்பதாக நினைக்கிறீர்களா?


 கே.என்.நேரு அதே தொகுதியில் கடந்த முறை 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தார். தற்போது காலை கட்டிப் போட்டு விட்டு ஓட்டப்பந்தயத்தில் ஓட விடுவதைப் போல, நேருவை சிறையிலே போட்டு விட்டு இடைத்தேர்தலை நடத்தியவர்களின் வீரத்தைப் பாராட்டித் தான் ஆக வேண்டும். அந்த நிலையிலே கூட தற்போதுள்ள வாக்கு வித்தியாசத்தைப் பார்க்கும்போது, தி.மு.க.வுக்கு சாதகமாகத்தான் உள்ளது.

வெடி இல்லாமல் கொண்டாடுங்கள் : மாணவர்களுக்கு வேண்டுகோள்


தீபாவளி பண்டிகை 26-ந் தேதி வருகிறது. தீபாவளியின்போது சிறுவர்களும் பெரியவர்களும் வெடி வெடிப்பார்கள். இதனால் புகை அதிகமாகி காற்று மாசுபடுகிறது. ஏற்கனவே இப்படிப்பட்ட மாசு காரணமாக ஓசோன் அடுக்கில் ஓட்டை விழுந்துள்ளது.
மேலும் இப்படிச்சுற்றுச்சூழலை கெடுக்கவேண்டாம் என்பதை வலியுறுத்தி சிப்லா என்ற நிறுவனம் சார்பில் சென்னை மைலாப்பூரில் உள்ள பி.எஸ்.மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வாமை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன் பேசுகையில் `மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய ஒவ்வாமை நோய்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று புகை ஆகும். அதுவும் வெடி வெடித்ததனால் ஏற்படும் புகை மிகவும் மோசமானது.

முதல்வருக்கு இப்படியும் ஒரு ‘ஷார்ட்-கட்’ இருக்கிறதா?


பெங்களூரு, இந்தியா: உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்த கையோடு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கண்டம் காத்திருந்தது. 19ம் தேதி 2ம் கட்ட வாக்களிப்பு முடிந்து 24 மணி நேரத்துக்குள், சொத்துக் குவிப்பு வழக்குக்காக அவர் பெங்களூரு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்பது கோர்ட் உத்தரவு.
இம்முறையும், அந்தத் தேதியில் ஆஜராகாமல் தவிர்க்க முயற்சி செய்கிறார் முதல்வர்! பாதுகாப்பு காரணம் ஒன்றைக் காட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) சுப்ரீம்கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார் அவர். ஆஜராக வேண்டிய தேதிக்கு இரண்டே தினங்கள் உள்ளதால், இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அஞ்சாநெஞ்சரை மதுரையில் ‘அஞ்ச வைக்கும்’ சில ஏற்பாடுகள்!


 லோக்கல் தி.மு.க. பிரமுகர்கள், “அண்ணனை வேறு எந்தக் கேஸில் சிக்க வைத்தாலும், நில அபகரிப்பு கோஸில் மாத்திரம் சிக்க வைக்க முடியாது” என்று மதுரையில் மார்தட்டிக் கொண்டு இருந்தாலும், அண்ணன் நில அபகரிப்பு விவகாரங்களில் லேசாக மாட்டிக்கொண்டுதான் உள்ளார். இங்கு குறிப்பிடப்படும் அண்ணன் யார் என்று சொல்ல தேவையில்லாதபடி, தி.மு.க.வினருக்கு மதுரையில் ஒரு அண்ணன், அழகிரிதான்.
கோவில் நிலம் ஒன்று இதோ.. அதோ.. என்று மாயமான்போல அண்ணிக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்தாலும், இன்னமும் அது ஃபுல் ஃபோர்ஸில் கோர்ட்டுக்கு வரவில்லை. காந்தி அழகிரியை அதில் சிக்க வைக்க தேவையான வாக்குமூலம் பெறுவதில் ‘ஏதோ’ சிக்கல் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

பெங்களூரில் ஜெ.வுக்கு எதிராக தலித்கள் போராட்டம் பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து


பெங்களூர்: பரமக்குடியில் தலித் சமுதாயத்தினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து பெங்களூர் பரப்பன்ன அக்ரஹாரா சிறக்கு வெளியே கர்நாடகத்தைச் சேர்ந்த தலித் அமைப்பு முதல்வர் ஜெயலலிதா பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

109 முறை வாய்தா வாங்கி கோட்டுக்கு முதல் முறையாக வரும் ஜெ.வுக்கு தடபுடலாக வரவற்பு


ஜெ.வை வரவேற்று தடபுடல் தட்டிகள்; நீதிமன்ற வளாகம் வெள்ளை அடித்து புதுப்பிப்பு!

1000 கேள்விகளுடன் காத்திருக்கும் நீதிபதி
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் முதல் முறையாக ஆஜராக வரும் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று ஓசூர் சாலை நெடுகிலும், பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் வரை கோட்டுக்கு அதிமுகவினர் சாலையின் இரு மருங்கிலும் தட்டிகளை வைத்து தடபுடலாக வரவற்பு கொடுக்கின்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் இதுவரை ஜெயலலிதா ஒருமுறை கூட ஆஜரானதில்லை. தற்போதுதான் முதல் முறையாக அவர் பெங்களூர் வருகிறார். இதையடுத்து ஜெயலலிதாவை வரவேற்று கர்நாடக அதிமுக சார்பில், ஒசூர் ரோட்டிலிருந்து சிறை வளாகம் வரை வரவேற்பு தட்டிகளை வைத்துள்ளனர்.

அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி வெற்றி திருச்சி இடைத்தேர்தலில்




 திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி,  68,804 வாக்குகள் பெற்று, 14,608 வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திமுக சார்பில் போட்டியிட்ட கே.என்.நேரு 54,196  வாக்குகள் பெற்றார்.
 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு 7 ஆயிரத்து 178 வாக்குகள் வித்தியாசத்தில் கே.என்.நேருவை வென்றார் மரியம் பிச்சை.  இதையடுத்து அதிமுக அமைச்சரவையில் இடம்பிடித்தார்.  கார் விபத்தில் அவர் மரணம் அடைந்ததால் திருச்சி மேற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.
அதிமுக சார்பில் பரஞ்சோதி களம் இறக்கப்பட்டார்.   திமுக சார்பில் மீண்டும் கே.என்.நேரு களம் இறங்கினார்.  திருச்சி
மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடைபெற்றது.     வாக்கு எண்ணிக்கை இன்று 20.10.2011 காலை தொடங்கியது.
 14 மேஜைகளில் 18 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 18 சுற்றுகளின் முடிவில் இறுதி நிலவரம் அறிவிக்கப்பட்டது.  
அதன்படி  பரஞ்சோதி 14, 608 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டார்.