சனி, 1 ஜூலை, 2023

கச்சதீவை விட 80 மடங்கு வளம் கொண்ட மேற்கு கரையோர பகுதியை இந்தியாவுக்கு தாரைவார்த்துள்ளோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில்

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு பாதிப்பு இல்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thaainaadu – கச்சதீவு ஒப்பந்தத்தால் கச்சதீவைப் போல் 80 மடங்கு வளம் கொண்ட“வெட்ஜ் பாங்” பகுதியை இந்தியாவுக்கு தாரைவார்த்துள்ளோம் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு.
1974ஆம் ஆண்டு கச்சதீவு ஒப்பந்தத்தின் பிரகாரம் கச்சதீவினைப் பெற்றுக் கொண்ட நாங்கள் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் கச்சதீவைப் போல் 80 மடங்கு வளம் கொண்ட“வெட்ஜ் பாங்” பகுதியை தாரைவார்த்துள்ளோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மேற்கொள்ள உத்தேசித்துள்ள தேசிய கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பிலான நாடாளுடன்றில் நடைபெறும் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
1974 ஆம் ஆண்டு கச்சதீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 7

திடீரென வெடித்த டயர்.. பற்றி எரிந்த பேருந்து 0 25 பேர் உடல் கருகி உயிரிழப்பு . மகாராஷ்டிரா

 கலைஞர் செய்திகள் - KL Reshma :  மகாராஷ்டிரா மாநிலம் விதர்பாவில் அமைந்துள்ளது யவமத்மா. இங்கு இருந்து புனே நோக்கி பேருந்து ஒன்று சுமார் 33 பயணிகளுடன் நேற்று இரவு கிளம்பி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து சம்ருத்தி மகாமார்க் சாலையில் இன்று அதிகாலை நேரத்தில் சென்றது. அப்போது அந்த பேருந்து புல்தானா என்ற இடத்தில் வந்தபோது, திடீரென அதன் தடயர் யார் வெடித்தது.
இதனால் நிலைதடுமாறிய பேருந்து அருகில் சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி சாலையோரம் கவிழ்ந்தது.
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் கடும் காயமடைந்தனர். தொடர்ந்து அதில் இருந்து வெளியே வர முயன்றபோது, அந்த பேருந்தின் டீசல் டேங்கில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றிக்கொண்டது. இதனால் அந்த பேருந்து மளமளவென எரிய தொடங்கியது.

சிதம்பரம் கோவில் - அரசு தலையிடும்- அமைச்சர் சேகர்பாபு பேட்டி

மாலைமலர் :  சென்னை  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆணையர் அலுவலகத்தில் துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணிமுன்னேற்றம் குறித்த சீராய்வுக்கூட்டம் நடை பெற்றது.
பின்னர் அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 2 ஆண்டுகளில் 812 கோவில்களில் குடமுழுக்குகள் நடை பெற்றுள்ளதோடு, ரூ.4,754 கோடி மதிப்பீட்டிலான 5,060 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

அவர்களுக்குதான் கலைஞரும் கலைஞருக்கு பின்வந்தவர்களும் வீடு வழங்கினர்!

 சுந்தர் சுந்தர் :  ஊடகத் துறையினர்,  இலக்கியவாதிகள், திரைப்படத் துறையினர், முற்போக்காளர்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள் கலைஞரை இருட்டடிப்பு செய்வதிலும் நக்கல் செய்வதிலும் நைச்சியமாக அவரை வில்லனாக கட்டமைப்பதிலும் வெற்றி பெற்றனர்.
ஆனால் அவர்களுக்குதான் கலைஞரும் கலைஞருக்கு பின்வந்தவர்களும் வீடு வழங்கினர்!
ஒருகட்டத்தில் கலைஞரை நக்கல் நய்யாண்டி செய்தால்தான் முற்போக்காளர்/இலக்கியவாதி பட்டமே கிடைக்கும் என்ற சூழல் நிலவியது. ஜெயமோகன் என்ற கழிசடை கலைஞர் இலக்கியவாதியே இல்லை என்றது. அதனுடைய குட்டிகளும் அதையே வாந்தி எடுத்தன.
மேற்கண்டுள்ளவர்களின் எல்லா தந்திரங்களையும் வன்மங்களையும் மீறிதான் கலைஞர் யாவற்றிலும் வென்று வாகை சூடினார். சாதிவெறியில் ஊறி உடலெங்கும் அரிப்பெடுத்தோர் கலைஞரின்  விஸ்வரூபம் கண்டு குமையாத நாளில்லை.
இவ்வகை அரிப்பெடுத்தோரில் கட்டமைக்கப்பட்ட சமூக படிநிலையில் அடிநிலையிலிருந்து மேல்நிலை வரையுள்ள அனைத்து சாதியாட்களும் உண்டு.

பிரான்ஸ் சிறுவனை சுட்டு கொன்றதால் வெடித்த வன்முறை அரசு திணறல்

 tamil.oneindia.com  - Mani Singh S :  பிரான்சில் அடங்காத வன்முறை.. கையை பிசையும் மேக்ரான்.. பெற்றோர்கள் ஹெல்ப் பண்ணுங்க என கோரிக்கை
பிரான்சில் அடங்காத வன்முறை.. கையை பிசையும் மேக்ரான்.. பெற்றோர்கள் ஹெல்ப் பண்ணுங்க என கோரிக்கை
வாஷிங்டன்: பிரான்ஸ் நாட்டில் சிறுவன் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் பலியானதால் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை மூன்றாவது நாளாக பற்றி எரிகிறது. இதனால், வன்முறையை கட்டுப்படுத்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் பெற்றோர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகர் அருகே நான்டர் எனும் இடம் உள்ளது. இங்கு அல்ஜீரிய மற்றும் மொராக்கோ வம்சாவளியை சேர்ந்த 17 வயது நிரம்பிய நேல் என்ற சிறுவன் சென்றான்.

ரஷ்ய அதிபர் புதினின் நாட்கள் எண்ணப்படுகின்றனவா?

BBC Tamil : அதிபர் புதினின் ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என யுக்ரேன் கருதுகிறது.
யுக்ரேன் தலைநகரின் கவனம் முழுவதும் வாக்னர் படைகள், அதன் தலைவர் எவ்கெனி ப்ரிகோஜின், வாக்னர் கிளர்ச்சியினால் புதின் சந்திக்கவிருக்கும் சவால்கள் மற்றும் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் ஆகியவற்றின் மீது குவிந்திருக்கிறது.
ரஷ்யாவுக்குள் நிலவும் தற்போதைய அரசியல் பிரச்சினைகளை மையப்படுத்தி, அதிபர் புதினின் ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என கீயவ் கருதுகிறது.
“அவரது நாட்கள் எண்ணப்படுவதாகவே நான் கருதுகிறேன்,” என யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் ஆண்ட்ரி யெமாக் கூறுகிறார்.
கீயவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 2014ம் ஆண்டு கிரைமிய தீபகற்பத்தை தன்னகப்படுத்துவதற்காக ரஷ்யா முதன்முதலாக யுக்ரேன் நாட்டை ஆக்கிரமித்ததை நினைவுகூர்ந்தார்  2014ம் ஆண்டு யுக்ரேன் எப்படிப்பட்ட பிரச்னைகளை எதிர்கொண்டது என்பது உலகறிந்த விஷயம்,” என்றார் யெமாக்.

வெள்ளி, 30 ஜூன், 2023

ஆம் ஆத்மி : மத்திய அரசின் அவசர சட்ட நகலை எரிப்போம்!

மாலை மலர் : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜூலை 3ம் தேதி, மத்திய டெல்லியில் உள்ள அவரது ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற அவசர சட்டத்தின் நகலை எரிப்பார் என்று அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.
செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரும், டெல்லி அமைச்சருமான சௌரப் பரத்வாஜ் கூறியதாவது:
கருப்பு அவசரச் சட்டம் மூலம் டெல்லியை சட்டவிரோத கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது.
இதனை எதிர்த்து, ஜூலை 3ம் தேதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேபினட் அமைச்சர்கள் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்சி அலுவலகத்தில் கருப்பு அவசரச் சட்டத்தின் நகல்களை எரிக்க வேண்டும். பிறகு, ஜூலை 5ம் தேதி, 70 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவசரச் சட்டத்தின் நகல்கள் எரிக்கப்படும்.

சூனியம் வைத்ததாக சந்தேகம்: தந்தையை கண்காணிக்க மகன் வைத்த கேமிராவில் அம்பலமான கற்பழிப்பு காட்சி

 மாலைமலர் : புதுடெல்லி டெல்லியில் உள்ள புராரி பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவருக்கும், அவரது 40 வயது மகனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தந்தை தனக்கு சூனியம் செய்வதாக அவரது மகன் சந்தேகப்பட்டுள்ளார். இதனை கண்டுபிடிப்பதற்காக அவர் வீட்டிலேயே தந்தைக்கு தெரியாமல் அவரை கண்காணிப்பதற்காக வீட்டில் மொபைல் கேமிரா பொருத்தி உள்ளார்.
இந்நிலையில் அந்த கேமிராவில் பதிவான காட்சிகளை பார்த்த மகனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த முதியவர் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வது மொபைல் கேமிராவில் பதிவாகி இருந்தது.
இதை பார்த்த மகன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீடியோவில் இருக்கும் பெண் குறித்து அவர் விசாரித்த போது தான் அது பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுமி என்பதும், அந்த சிறுமியை முதியவர் ஆசை வார்த்தைகள் கூறி வீட்டுக்கு வரவழைத்து ஒரு அறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை நிறுத்தி, ஆளுநர்.. முதல்வருக்கு இன்னொரு கடிதம்!

 tamil.oneindia.com - Vignesh Selvaraj  :  அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை நிறுத்தி வைத்த ஆளுநர்.. முதல்வருக்கு இன்னொரு கடிதம்!
சென்னை: செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பாக அட்டர்னி ஜெனரலிடம் சட்ட ஆலோசனை பெற ஆளுநர் ரவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
இதனால், அவர் அமைச்சராக பொறுப்பு வகித்த இலாகாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் முத்துச்சாமி ஆகியோரிடம் பிரித்துக் கொடுத்தார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து வந்தார்.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார்.

சுவீடனில் நேற்று குர் ஆன் எரித்து ஆர்ப்பாட்டம்; ஈராக்கிலிருந்து புலம்பெயர்ந்தவரின் செயற்பாடு

 வீரகேசரி : சுவீடனில் நேற்று குர் ஆன் எரித்து ஆர்ப்பாட்டம்; ஈராக்கிலிருந்து புலம்பெயர்ந்தவரின் செயற்பாடு
சுவீடனில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது, புனித குர் ஆன் நூல் எரிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ஸ்டொக்ஹோமிலுள்ள பள்ளிவாசலுக்கு வெளியே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரால் புனித குர் ஆன் தீக்கிரையாக்கப்பட்டது.
சல்வான் மோமிக்கா எனும் 37 வயதான நபரே இவ்வாறு குர் ஆன் நூலின் சில பக்கங்களை எரித்தார். இவர் சில வருடங்களுக்கு முன்னர் ஈராக்கிலிருந்து சுவீடனுக்கு வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சல்வான் மோமிக்கா அனுமதி கோரியிருந்தார். சுவீடன் பொலிஸார் அதற்கு அனுமதி வழங்கியிருந்தனர்.

வியாழன், 29 ஜூன், 2023

முதல்வர் ஸ்டாலின் : ஆளுநருக்கு அதிகாரமில்லை . சட்டரீதியாக சந்திப்போம்! செந்தில் பாலாஜி ..

மின்னம்பலம் - Jegadeesh : தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(ஜூன் 29) உத்தரவிட்டார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில்,அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை எதிர்மறையாகப் பாதிக்கும்.
இது இறுதியில் மாநிலத்தில் அரசமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்ற நியாயமான அச்சங்கள் உள்ளதால் அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்- ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு

 மாலை மலர்  : சென்னை சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டதையடுத்து அவரது இலாகாக்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துச்சாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன.
மின்சாரத்துறை தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை முத்துச்சாமி வசமும் ஒப்படைக்கப்பட்டன.
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி முதலில் அனுமதி மறுத்த நிலையில், மீண்டும் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.

சாதி அரசியலை மாமன்னன் பேசுகிறது: சமூக வலைதள விமர்சனம்

tamil.indianexpress.com :  மாரி செல்வராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள மாமன்னன் திரைப்படம் திராவிட ஆட்சி காலத்தில் நடைபெறும் சாதி அரசியலை தோலுரித்து காட்டியுள்ளதாக சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டு படங்களின் மூலம் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ள மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 3-வது படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைத்துள்ளார்.

ராகுல் காந்தி இம்பாலில் தடுத்து நிறுத்தம்! மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விடாமல் தடுத்த பாஜக அரசு

மாலை மலர் : மணிப்பூர்  நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டம். விஷ்ணுபூர் மாவட்டத்தில் ராகுல் காந்தியின் கான்வாய் போலீசாரால் தடுத்த நிறுத்தப்பட்டது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3ம் தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது.
100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின் விமர்சனமாகும்.
இதைதொடர்ந்து, இன்று மற்றும் நாளை மணிப்பூரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று நேற்று கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார்.

ம.பி.யிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வாய்ப்பு.. வெளியான கருத்து கணிப்பு முடிவுகளால் அதிர்ச்சியில் பாஜக

kalaingar seythikal -Praveen  : பாஜக ஆட்சி நடத்திவரும் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் கட்சியுடம் ஆட்சியை பறிகொடுக்கும் என சமீபத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது.
தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பாஜவுக்கான தென்னிந்திய கதவுகள் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், கர்நாடகாவில் பாஜக அடைந்த தோல்வி பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என காங்கிரஸ் தரப்பிலும் எதிர்க்கட்சி தரப்பிலும் கூறப்பட்டது.

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளில் இருந்து மனித எச்சங்கள் மீட்பு - அமெரிக்க கடலோர காவல்படை

மாலை மலர்  :  வாஷிங்டன் ஆழ்கடல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்த ஓசியானிக் எக்ஸ்பெடிஷன்ஸ் எனும் நிறுவனத்தின் டைட்டன் எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு சென்றது.
வட அட்லாண்டிக் கடலின் கேப் கோட் எனும் இடத்திலிருந்து, கிழக்கே 900 மைல் தொலைவில் சுமார் 13,000 அடி ஆழத்தில், அதனிடமிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போனது.
நீண்ட தேடுதலுக்கு பின், துரதிர்ஷ்டவசமாக, அது வெடித்து சிதறியதாகவும், இதில் பயணித்த அனைவரும் பலியானார்கள் எனவும் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த பயங்கர விபத்து குறித்து அமெரிக்க கடலோர காவல்படை விசாரணையை தொடங்கியுள்ளது.

புதன், 28 ஜூன், 2023

எப்படி இருக்கீங்க செந்தில் பாலாஜி?” - கேள்விகளை அடுக்கிய நீதிபதி

nakkeeran : அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக,
 அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு
அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டது.

5 கிலோ இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்கப்படும்- கர்நாடக அரசு முடிவு

மாலை மலர்  :; பெங்களூரு: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
அதன்பின்னர் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றத் தொடங்கி உள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு (பிபிஎல் கார்டுதாரர்கள்) மாதந்தோறும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் 5 கிலோ இலவச அரிசி ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. மீதம் வழங்க வேண்டிய 5 கிலோ இலவச அரிசிக்குப் பதிலாக பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம்... திமுக ரோல் என்ன?

 மின்னம்பலம்  - Aara  : தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே. எஸ். அழகிரி ஜூன் 27ஆம் தேதி பிற்பகல் டெல்லியில் அளித்த பேட்டியின் வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதை பார்த்த பிறகு வாட்ஸ் அப் நம்பர் மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.
“2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட கே. எஸ். அழகிரி அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட இருக்கிறார் என்று அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டே இருந்தன.
ஜூன் 25ஆம் தேதி அவரது டெல்லி விசிட்டை அடுத்து அழகிரி தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவது பற்றிய  யூகங்கள் வலிமை அடைந்தன ‌‌‌.

செவ்வாய், 27 ஜூன், 2023

ஆர்ப்பரிக்கும் இசை ஆர். டி. பர்மன். இன்று பிறந்த நாள்!

 Janarthanan KB :    அப்பாவைத்தான் புக் பண்ண வந்தார் நடிகர் மெஹமூத் தன் படத்துக்கு இசையமைக்க. ஆனால் அவரிடம் தேதி இல்லை.
ஹாலில் தபேலா வாசித்துக்கொண்டிருந்த மகனைப் பார்த்தார். சட்டென்று அவரை புக் செய்து விட்டார். இசைப் பேரலையொன்றை இயக்கி விட்டிருக்கிறோம் என்று அப்போது அவருக்குத் தெரியாது.
படம் ‘Chote Nawab.' பாடல்கள் வெற்றி.  
ஆர்ப்பரிக்கும் இசை! யார்  அது? என்று எல்லாரும் பார்க்க ஆரம்பித்த அவர் ஆர். டி. பர்மன். இன்று பிறந்த நாள்!
அந்தக் குழந்தை முகம்! அதன் பின்னே ஒரு இசை மேதை.. ‘Pancham’ இவர் செல்லப் பெயர். அஞ்சாவது நோட். பஞ்சமி.
மெஹ்மூதின் அடுத்த ‘Bhoot Bangla’ வில் கலக்கிவிட்டார். ‘Aavo Twist Karen…’’வும் ‘Pyar Karta Jaa..’ வும் இளைஞர்களை அப்படி ஈர்த்தன என்றால் ‘O Mere Pyar Raja...’ உருக வைத்தது.

ஞானதிரவியம் எம்.பி (திமுக )மீது வழக்குப்பதிவு!

மின்னம்பலம் -Selvam : திருநெல்வேலி திருமண்டல சி.எஸ்.ஐ அலுவலகத்தை பூட்டி பாதிரியாரை தாக்கிய வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியம் சிஎஸ்ஐ திருமண்டலத்தில் கல்வி நிலைக்குழு செயலாளராகவும், நெல்லை ஜான்ஸ் மேல் நிலைப்பள்ளியில் தாளாளராகவும் பணியாற்றினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஞானதிரவியத்தை தாளாளர் மற்றும் கல்வி நிலைக்குழு செயலாளர் பதவியிலிருந்து நீக்கி திருநெல்வேலி பிஷப் பர்னபாஸ் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து ஜான்ஸ் பள்ளி தாளாளராக வழக்கறிஞர் அருள் மாணிக்கம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

எங்கே போனார் ரஷிய அதிபர் புதின்? வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சிக்கு பிறகு நடந்தது என்ன?

 tamil.abplive.com  - சுதர்சன் : கடந்த 16 மாதங்களாக, உக்ரைன் போர் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி  வரும் நிலையில், அதில் திடீர் திருப்பமாக ரஷியா ஆதரவு கூலிப்படை ரஷியா ராணுவத்திற்கு எதிராகவே திரும்பியது.
குறிப்பாக, ரிஷிய நாட்டு ராணுவ தலைமையை கவிழ்க்க போவதாக வாக்னர் கூலிப்படை எச்சரிக்கை விடுத்தது.
ரஷிய தலைநகர் மாஸ்கோவை நோக்கி படையெடுத்து செல்ல, தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படைக்கு அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உத்தரவிட்டார்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உத்தரவு பிறப்பித்த வேகத்துடனேயே அதனை திரும்ப பெற்றார் வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின்.
இரவு நடந்த ரகசிய பேச்சுவார்த்தையில் ரஷிய அரசுக்கும் வாக்னர் கூலிப்படைக்கும் சுமூகமான தீர்வு ஏற்பட நாட்டை விட்டு செல்ல பிரிகோஜின் ஒப்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.

நடராஜர் கோயில் கனகசபை விவகாரம்: “தீட்சிதர்களின் அறிவிப்பு பலகை அகற்றம் ! - அதிரடி காட்டிய அறநிலையத்துறை !

 Kalaignar Seithigal - KL Reshma  : சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் வைத்திருந்த சர்ச்சைக்குரிய அறிவிப்பு பலகையை, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
தமிழ்நாட்டில் பிரபல கோயில்களில் ஒன்றாக கருதப்படுவது சிதம்பரம் நடராஜர் கோயில். இந்த கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவர்.
இந்த சூழலில் இந்த கோயிலில் இருக்கும் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட முன்னால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.  

மதிமுக எம்.எல்.ஏ பூமிநாதன் ராஜினாமா?

minnambalam.com -Selvam : : மதுரை மாநகராட்சி கூட்டத்தில் தனது தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் பணிகள் எதுவும் நடைபெறாததால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் மனநிலையில் இருப்பதாக மதுரை தெற்கு தொகுதி மதிமுக சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியில் 19-ஆவது மாமன்ற கூட்டம் இன்று (ஜூன் 26) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமை தாங்கினார்.
கூட்டம் துவங்கியதும் ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களது வார்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசி வந்தனர்.
மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் பேசும்போது, “எனது வார்டில் சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை பணிகளையும் இதுவரை துவங்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதில் எதுவும் சொல்லவில்லை. துணை மேயர் என்ற பொறுப்பு பெருமைக்கா? துணை மேயராக இருக்கும் எனக்கே இந்த அவலநிலை நீடிக்கிறது” என்று கோபத்துடன் பேசி அமர்ந்தார்.

1952 ஆம் ஆண்டு ஆசியாவின் அதிசயம் என்று அறியப்பட்ட இலங்கை எப்படி வீழ்ந்தது?


 ராதா மனோகர்
  : 1952 ஆம் ஆண்டு ஆசியாவிலேயே அதிகமான மோட்டார் வண்டிகளை கொண்டிருந்த  ஐந்தாவது நாடு இலங்கை
முதலாவது நாடு இந்தியா  ஆறாவது நாடு சீனா ..  சுவாரசியமான வரலாற்று பதிவு
ceylon fifth in Asian motor vehicle count 22 ஜூலை 1952 UNP party paper
according to the 1952 World motor census compiled by the American Automobile, a publication for the automotive industry.
latest registration figures supplied for the census show that Ceylon has in operation this year a total of 54 828 motor cars, lorries and buses.
in addition to 8188 motor cycles
that  total compare with
 274 206 vehicles for  India 163 325  vehicles for japan
96 650  vehicles  for Philippines
64 800  vehicles   for Indonesia
54828  vehicles car for  Ceylon
54000 vehicles  for china
51125 vehicles  for Malaya (brittish)
33000 vehicles  for Iran
31500  vehicles r for Pakistan
30000  vehicles r  for Burma
இதில் குறிப்பிட்ட அத்தனை நாடுகளுக்கும் நிலப்பரப்பு அளவிலும் சரி மக்கள் தொகை அடிப்படையிலும் சரி இலங்கையை விட பல மடங்கு பெரிது
அன்று சிங்கப்பூர் என்ற நாடு இருக்கவில்லை  மலயாவுடன் இணைந்த ஒரு பகுதியாகதான் இருந்தது.
இந்த அடிப்படையில் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அன்று இலங்கை ஆசியாவிலேயே ஒரு வளம் பொருந்திய நாடகத்தான் இருந்திருக்கிறது.

திங்கள், 26 ஜூன், 2023

பொறியியல் தர வரிசையில் 102 பேர் 200-க்கு 200: திருச்செந்தூர் மாணவி நேத்ரா முதலிடம்

மாலை மலர் : அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் சுமார்1.5 லட்சம் இடங்கள் உள்ளன. அவை ஆண்டு தோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது. இதற்கான இணைய தள விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ந்தேதி முதல் ஜூன் 9-ந்தேதி வரை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,175 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீட்டான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 31,445 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
அவர்களுக்கான ரேண்டம் எண்கள் கடந்த 6-ந்தேதி ஒதுக்கப்பட்டன.

அசைவ உணவும் அதிகரிக்கும் ஆபத்தும்

 மாலை மலர்  : உணவை பசிக்காக சாப்பிட்டு வந்த காலம் போய், ருசிக்காக சாப்பிடத் தொடங்கிவிட்டோம். வீடுகளில் சமைத்து சாப்பிடுவது குறைந்து, ஓட்டல்களில் சென்று சாப்பிடுவது நாகரிகமாக மாறிவருகிறது.
குடும்ப விழா, கோவில் விழா என எத்தனையோ விழாக்களை கொண்டாடிய நாம் இன்று உணவு திருவிழாவையும் கொண்டாடுகிறோம்.
அறுசுவை உணவு என்ற நிலை மாறி, ஆயிரம் சுவைகளில் உணவு தயாரித்து வயிறு புடைக்க சாப்பிடுகிறோம்.
 இதனால் உணவு திருவிழாவும் ஒருவித பண்டிகையாக மாறிவருகிறது. இந்த மனித பிறப்பே தினமும் வகை, வகையாக சாப்பிடத்தான் என்ற சிந்தனை கொண்டவர்களும் இருக்கின்றனர்.
அசைவம்

புதின் பயந்து போய் விட்டார்; எங்காவது பதுங்கி இருக்கலாம்: ஜெலன்ஸ்கி

தினத்தந்தி :  வாக்னர் அமைப்பால் புதின் பயந்து போய், எங்காவது பதுங்கி இருக்கலாம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது உரையில் கூறியுள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் தினசரி உரையாற்றி வருகிறார்.
அவர் ரஷியாவில் வாக்னர் அமைப்பின் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்களை பற்றி இன்று கூறும்போது, விளாடிமிர் புதின் இந்த அச்சுறுத்தலை அவராகவே உருகாக்கி கொண்டார் என கூறியுள்ளார்.

ஞாயிறு, 25 ஜூன், 2023

மிரட்டும் தொனியில் பேசினார்; வேறு வழியின்றி கைது செய்தோம்''-அமலாக்கத்துறை பதில் மனு

nakkeeran :   அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
கடந்த 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அனுமதி கேட்டு அமலாக்கத்துறை கொடுத்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 14 ஆம் தேதி முதல் இன்று மாலை 3 மணி வரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்து காணொளி வாயிலாக செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.

வெண்புள்ளி ஏன் ஏற்படுகிறது? விரைவாக கண்டறிந்தால் குணப்படுத்த முடியுமா? விட்டிலிகோ- வெண்புள்ளி

BBC : விட்டிலிகோ என்று அழைக்கப்படும் வெண்புள்ளி என்பது சருமம் சார்ந்த ஒரு நோய். வெண்புள்ளி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25ஆம் தேதி உலக வெண்புள்ளி தினமாகக் (World Vitiligo Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கருபொருள் `விட்டிலிகோ- எதிர்காலம் குறித்து பார்ப்பது` என்பதாகும்.
தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) கூற்றுப்படி, இந்தியாவில் வெண்புள்ளி பாதிப்பு 0.25% முதல் 4% வரை உள்ளது. குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்த பாதிப்பு 8.8 சதவீதம் வரை செல்கிறது.
வெண்புள்ளி காரணமாக சிலர் உடல்ரீதியாக பாதிக்கப்படுவதோடு மன ரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சமூகத்தில் புறக்கணிப்புகளைச் சந்திக்கும் அவர்கள் இதன் காரணமாக தாழ்வு மனநிலைக்குச் செல்கின்றனர். வெண்புள்ளி என்றால் என்ன, அது ஏன் ஏற்படுகிறது, எப்படி சிகிச்சை அளிப்பது என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.