சனி, 21 ஜனவரி, 2012

சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு போலீஸ் வலை வீச்சு!

ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை விட சசிகலா மீதான உணர்ச்சி போராட்டதிற்குதான் முக்கியம் கொடுக்கிறார்.நேற்று வரை ஜெயா வேறு அல்ல சசி வேறு அல்ல ஆனால் இன்றோ சசியோடு தொடர்புள்ள எல்லோரையும் சித்ரவதை செய்வார் போல் தெரிகிறது.ம்ம்ம் இதெல்லாம்  ஒரு கட்சி இதற்கு ஒரு ஆட்சி பொறுப்பு இந்த கட்சிக்கெல்லாம்  போயி ஒட்டு போட்ட மகா ஜனங்கள் ...விளங்கிடும் 
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலாவின் தம்பி திவாகரன் மீது கொலை மிரட்டல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பரவாக்கோட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் திவாகரனை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் நெருங்கிய தோழியான சசிகலாவை திடீரென கட்சியை விட்டும், போயஸ் கார்டனை விட்டும் வெளியேற்றினார் ஜெயலலிதா. இந்நிலையில் சசிகலாவின் தம்பி திவாகரன் மீது ரிஷியூரைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார்.

பஞ்சாபில் ஆட்சியை இழக்கிறது பா.ஜ., ; காங்கிரசுக்கு கூடுதல் இடம் கிடைக்க வாய்ப்பு

அமிர்தசரஸ்: நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.,தலைமையிலான கூட்டணி ஆட்சியை இழக்கும் அபாயம் உள்ளதாகவும், வளர்ச்சி பணிகள் சரிவர எதுவும் நடக்கவில்லை என்பது வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தி இருப்பதாகவும், இங்கு காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட கூடுதல் இடம் கிடைக்கும் என்றும் இந்தியா டூடே நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அன்னா ஹசாரேயின் கருத்தை ஏற்று வாக்களிப்பீர்களா என்று கேட்டதற்கு அவ்வாறு செய்ய மாட்டோம் இதனை ஏற்க போவதில்லை என்றும் 46 சதவீதத்தினர் கருத்து கூறியுள்ளனர்.

வருணாசிரம மோகத்தால் வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டுக் கொன்றான்

வீரன் வாஞ்சிநாதன் வெள்ளைக்கார ஆஷ் துரையை சுட்டுக் கொன்று நூற்றாண்டு ஆகிறது. அந்த மாவீரன் வாஞ்சிநாதனை பற்றி?
-சுந்தரவடிவேலன். திருப்பூர்
வாஞ்சிநாதன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ராபர்ட் வில்லியம் ஆஷை சுட்டுக்கொல்வதற்கு முன்பு வரை எந்தவகையான சுதந்திர போராட்டங்களிலும் கலந்து கொண்டதில்லை.
இத்தனைக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வ.உ.சியும், சுப்பிரமணிய சிவாவும் மூட்டிய தீ திகு திகுவென்று எரிந்து கொண்டிருந்தபோது, அதில் ஒரு சுள்ளியை கூட எடுத்து போட்டவர் இல்லை வாஞ்சி.
ஆஷ் மீது வாஞ்சிநாதன் கொண்ட வெறுப்பு சுதந்திர தாகத்தால் ஏற்பட்டதல்ல. வருணாசிரம மோகத்தால் ஏற்பட்டது.

சசி ஜெயா பங்கு பிரிப்பு இலகுவானதல்ல

''சசிகலா சும்மா இருந்தாலும் எம்.நடராஜனும் கருணாநிதியும் அவரை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போல!'' என்று சொல்லிச் சிரித்தபடியே நம் முன்னால் ஆஜரானார் கழுகார்.
கழுகாருக்கு இடைஞ்சல் தராமல் அமைதி காத்தோம்.
'' 'தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று காத்திருந்த சசிகலா அண்டு கோ-வுக்கு மேலும் வலிதான் ஏற்படப்போகிறது. ஆட்சி மேலிடத்துக்குக் கோபத்தை ஏற்படுத்திய விவகாரங்கள் என்று இரண்டு விஷயங்களைச் சொல்கிறார்கள். ஒன்று எம்.நடராஜனின் தஞ்சாவூர் பேச்சு. இன்னொன்று கருணாநிதியின் முரசொலி எழுத்து!'' என்று சொல்லி சிறிது இடை வெளிவிட்டுத் தொடர்ந்தார் கழுகார்!
''நடராஜனின் தஞ்சாவூர் விழாவைக் கண்கொத்திப் பாம்பாக உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித் தார்கள். வெளிப்படையாக ஜெயலலிதாவை அவர் அட்டாக் பண்ணவில்லை என்றாலும், 'காத்திருங்கள். நேரம் வரும்போது செயல்படுவேன்’ என்று சொல்லி இருப்பது ஆட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலைக் கிளப்பி உள்ளது!''

தொழிலார்களின் பாகெட்டுக்குள் கைவைக்கும் ராமதாஸ்

பாட்டாளி தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரும், தங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்' எனராமதாஸ் அழுதுள்ளார் .தானே' புயல் தாக்கியவர்களைப் பார்த்து, "வெறும் கை' குலுக்கி, ஆறுதல் வார்த்தைகளை மட்டும் சொல்லிவிட்டு திரும்பிய, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி தொழிற்சங்க உறுப்பினர்களின் ஒரு நாள் ஊதியத்தை நிவாரணமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு.. தாழ்த்தப்பட்டவர்களைவிட மாடுகள் மேன்மையானவை???

ஜல்லிக்கட்டை ஏன் எதிர்க்கிறார்கள்?


தமிழர்களின் வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டை ஆதிக்க சாதிக்காரர்கள்,  ஏன் எதிர்க்கிறார்கள்?
-க. மாயாண்டி, மதுரை.
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கு சாராயம் குடிக்க வைப்பது, கண்ணில் மிளாகய் பொடி தூவுவது, வாலை கத்தியால் குத்துவது போன்ற கொடுமைகள் நடக்கிறது.
மாடுகள் துன்புறுத்தப்படுகிறது என்பதினால்தான் அதை சைவ ஜாதி அறிவாளிகள் எதிர்க்கிறார்கள்.
ஆனால், இவைகள் எல்லாவற்றையும்விட இந்த ஜல்லிக்கட்டில் ஈடுபடும் இளைஞர்கள் உடல்ரீதியாக மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். உயிரையும் இழக்கிறார்கள். ஆகவே, அது தடை செய்யப்படுவதில் தவறு இல்லை.

சுப்பிரமணியசாமி மீது நடவடிக்கை சோனியா, ப.சிதம்பரத்துக்கு எதிராக அவதூறு

  புதுடெல்லி : ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது சோனியா காந்தி, ப.சிதம்பரத்துக்கு எதிராக அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்திய சுப்பிரமணிய சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

குமுதம் பத்திரிகைக்கு ஸ்ருதி நோட்டீஸ் தனுஷுடன் கிசுகிசு


Shruti Haasan

நடிகர் தனுஷுடன் இணைத்து செய்தி வெளியிட்டதற்காக குமுதம் வார இதழுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகை ஸ்ருதி.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் 3 என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார் ஸ்ருதி. இதில் ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். படத்தில் நடிக்கும்போது தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் காதல் அரும்பியதாகவும், இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் செய்திகள் வெளியாகின.

வெள்ளி, 20 ஜனவரி, 2012

பால் தாக்கரேயின் வெறியூட்டும் பேச்சுக்கள் காங்கிரஸ் மறந்தது

பால்-தாக்கரே
கூகுள் இணையதளம், பேஸ்புக் ஆகியவைகூட குற்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கையில், சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் வெறியூட்டும் பேச்சுக்கள் தொடர்பாக எத்தனை பழைய வழக்குகள் நடவடிக்கையின்றி விடப்பட்டுள்ளது என்பதை காவல்துறை ஆவணங்கள் காட்டுகிறது.
மத்திய ஆளும் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில்சிபல் இணைய தளங்களில் “மக்களில் இரு குழுக்களிடையே விரோதத்தை தூண்டும்” விதத்திலான வெறுக்கத்தக்க பேச்சுக்கள் வெளியானதால், கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் மீது குற்றவழக்கு தொடர அவரும், அவரின் அமைச்சகமும் அனுமதி அளித்துள்ளது.  ஆனால் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி அரசு சிவசேனாத் தலைவர் பால் தாக்கரேயின் வெளியூட்டும் பேச்சுக்கள், குற்றங்களின் மீதான வழக்கு தொடரும் நடவடிக்கையில் மிக தாமதப்பட்டு நிற்கிறது.  அவையாவும் கடுமையான குற்றங்களாகும்.
விரோதத்தை தூண்டும் வகையிலான வன்முறை என பேஸ்புக் மற்றும் இதர தளங்களில் உள்ள சில பிரசுரங்களை அபாயம் என அரசு கருதுகிறது. ஆனால் அது போலல்லாமல், திரு தாக்கரேயின் எழுத்துக்கள் மும்பையில் 1992 மற்றும் 1993ல் பல நூறு மக்களின் உயிர்களை பலிகொண்ட வன்முறையை தோற்றுவித்தது என ஸ்ரீ கிருஷ்ணா கமிஷ‌ன் விசாரணை அறிக்கையில் தெளிவுபட சொல்லப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து அடி வாங்கும் அதிமுக அரசு...சட்ட அடி

முக்கியப் பிரச்சினைகளில் அடுத்தடுத்து  வாங்கும் அதிமுக  ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட 7 மாதங்களாகியுள்ள நிலையில் தொடர்ந்து சட்ட ரீதியாக பல்வேறு தோல்விகளை ஜெயலலிதா அரசு சந்தித்து வருகிறது.

அதிமுக அரசின் பல முக்கிய முடிவுகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தடைகளைச் சந்தித்துள்ளன.
மே 16ம் தேதி 3வது மறையாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே அதாவது மே 22ம் தேதி திமுக அரசு அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறி அதை நிறுத்தி வைப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

கேரளக்காரர் தமிழக இளைஞர் காங் பொறுப்பாளராக நியமனம்!

முல்லைப் பெரியாறு-தமிழக இளைஞர் காங்.கை ஒடுக்க பொறுப்பாளராக கேரளக்காரர் நியமனம்!

விவகாரத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸிலிருந்து ஒரு சத்தமும் வராமல் பார்த்துக் கொள்ளும் நோக்கில் கேரளாவைச் சேர்ந்த ஒருவரை மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமித்துள்ளது காங்கிரஸ் மேலிடம்.
நூறாண்டுகளைக் கடந்து தடபுடலாக ஓடிக் கொண்டிருக்கும் தேசியக் கட்சியான காங்கிரஸ், மாநிலங்களில் உள்ள தனது கட்சி நிர்வாகத்தைக் கண்காணிக்க மேலிடப் பொறுப்பாளர் ஒருவரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் நியமிக்கும். இவர்கள் மாநில கட்சி நிர்வாகத்தைக் கண்காணித்து வருவார்கள். கோஷ்டிப் பூசல் உள்ளிட்ட விவகாரங்களில் தலையிட்டு பஞ்சாயத்து செய்வார்கள். மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த பூசாரிகள் மூலமாகத்தான் மேலிடத் தலைவர்களை அணுக முடியும், பேச முடியும், கருத்துக்களைத் தெரிவிக்க முடியும்.
மாநில காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸுக்கென தனித் தனி பொறுப்பாளர்கள் இருப்பார்கள்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக இதுவரை ஆந்திராவைச் சேர்ந்த அகமது இருந்து வந்தார். தற்போது இவரைத் தூக்கி விட்டனர். அவருக்குப் பதில் கேரளாவைச் சேர்ந்த எம்.லிஜு என்பவரை நியமித்துள்ளனர். இது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தீண்டத்தகாதவராக அறிமுகப்படுத்தப்பட்ட மார்ட்டின் லூதர் கிங்!


Martin Luther King Jr
அட்லாண்டா: உலக அமைதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், நிறவெறிக்கு எதிராகவும் போராடிய, அமெரிக்க சிவில் உரிமைப் போராளி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு முன்பு வந்திருந்தபோது அவரை பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்த அந்தப் பள்ளியின் முதல்வர், அமெரிக்காவிலிருந்து வந்துள்ள தீண்டத்தகாதவர் என்று கூறியதால் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அதிர்ச்சி அடைந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவின் உதவியுடன் ராணுவப் புரட்சியை முறியடித்த வங்கதேசம்-பின்னணியில் பாக்.?



Sheikh Hasina
டெல்லி: வங்கதேச ராணுவத்தில் உள்ள இந்திய எதிர்ப்பு ராணுவ அதிகாரிகள் சிலர் சேர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்து கைதாகியுள்ளனர்.
இந்தியாவின் உதவியுடன் இந்தப் புரட்சி முயற்சியை வங்கதேச அரசு முறியடித்துள்ளது. இதற்கிடையே, இந்த சதி வேலையின் பின்னணியில் பாகிஸ்தான் இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்தியாவின் முதல் தலைவலி பாகிஸ்தான் என்றால் 2வது தலைவலி வங்கதேசமாகும். பாகிஸ்தானாவது பகிரங்கமாக இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது. ஆனால் வங்கதேசத்திலோ ரகசியமான முறையில் இந்தியாவுக்கு எதிரான பல வேலைகள் தொடர்ந்து கொண்டுள்ளன.

மும்பை Oprah Winfreyவின் பாதுகாவலர்கள் கைது!


மும்பை: செய்தியாளர்களைத் தாக்கிய பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துனர் ஓப்ரா வின்ப்ரேவின் பாதுகாவலர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் பிரபல டிவி நிகழ்ச்சி நடத்துநர் ஓப்ரா வின்ப்ரே. இவர் இப்போது தனது புதிய டிவி நிகழ்ச்சியான நெக்ச் சேப்டர் படப்பிடிப்புக்காக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருக்கு பாதுகாவலர்களாக இந்தியாவைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக்க உயர்நீதிமன்றம் தடை!

புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். அது கிடைக்கும் வரை அப்பணிகளைத் தொடங்கக் கூடாது என்று கூறி புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது.
சென்னை வாலாஜா சாலையில் உள்ள அரசினர் தோட்ட வளாகத்தில் பிரமாண்டமான அளவில் பல நூறு கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் புதிய சட்டசபையை கடந்த திமுக ஆட்சி கட்டியது. அங்கு சட்டசபையும் இடமாற்றம் செய்யப்பட்டு கூட்டமும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் புதிய தலைமைச் செயலகத்தையும், சட்டசபையையும் மூட உத்தரவிட்டு விட்டது.

கலாம் இன்று இலங்கை பயணம்: மும்மொழி கல்வித் திட்டத்தை துவக்கி வைக்கிறார்

Abdul Kalam
சென்னை: இலங்கையில் மும்மொழிக் கல்வித் திட்டத்தை துவக்கி வைக்க முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று கொழும்பு செல்கிறார்.
இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுத்து வரும் அதிபர் ராஜபக்சே, உலக நாடுகளை ஏமாற்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், இலங்கையில் மும்மொழி கல்வித் திட்டத்தை ராஜபக்சே அமல்படுத்த உள்ளார். இதற்கான தொடக்க விழா நாளை மாலை கொழும்பில் உள்ள பண்டாரநாயக நினைவு மண்டபத்தில் நடைபெற உள்ளது.

பில்லா -2 வெளிநாட்டு உரிமை: 1 மில்லியன் டாலருக்கு விலைபோனது!!


அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமை, இதுவரை அவரது படங்கள் விற்காத அளவு 1 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பு நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளதால், படத்தை வாங்க உள்ளூரில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.

பில்லா 2-ன் வெளிநாட்டு உரிமையை ஜிகே மீடியா என்ற நிறுவனம் ஒன்று ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கு விலைக்கு வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது 1 மில்லியன் டாலர்.

சிபிஐ விசாரணையில் தொய்வு..மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு:

புது தில்லி, ஜன. 19:÷வெளிநாடுகளிலிருந்து தகவல்களைத் திரட்டுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் டிவி நெட்வொர்க் உரிமையாளர் கலாநிதி மாறன் ஆகியோர் மீதான வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, மலேசியாவின் மாக்ஸிஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான குளோபல் கம்யூனிகேஷன்ஸ் சர்வீசஸ் ஹோல்டிங் லிமிடெட் மூலமாக ஏர்செல்லின் (ரூ. 7,880 கோடி மதிப்புள்ள) 99.3 சதவீத பங்குகள் வாங்கப்பட்டன.  இது தொடர்பாக புகார் தெரிவித்த ஏர்செல் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன், தனது நிறுவனத்தை மாக்ஸிஸýக்கு விற்பனை செய்யுமாறு மாறன் சகோதரர்கள் மிரட்டிக் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்தார். மேலும், அதைத் தொடர்ந்து மாக்ஸிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணன், கலாநிதி மாறனுக்குச் சொந்தமான நிறுவனங்களில் அதிகளவில் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.  அனந்த கிருஷ்ணனுக்குச் சொந்தமான ஆஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சுமார் ரு. 700 கோடி வரை சன் டிவி நெட்வொர்க்கில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்துக்கு நிதி உதவிக்கான ஆதாரங்கள் சிக்கின


அணு உலை எதிர்ப்பாளர்களுடன் தொடர்புடைய தொண்டுநிறுவனங்களில், மத்திய அரசு அதிகாரிகள் ரெய்டு நடத்தி முடித்து, நேற்று டில்லி திரும்பினர். தொண்டு நிறுவனத்திற்கு வந்த வெளிநாட்டுப் பணம் தொடர்பாக, கத்தை, கத்தையான ஆவணங்களை, அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவுக்கு பின்னணியில், வெளிநாட்டு சக்திகள் உள்ளதாக, அணுசக்தி ஆணையத் தலைவர் ஸ்ரீகுமார் கூறியிருந்தார். தொண்டு நிறுவனம் மூலம், அணு எதிர்ப்பாளர்களுக்கு பணம் வருவதாக, மத்திய அமைச்சர் நாராயணசாமி புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தூத்துக்குடி பல்நோக்கு சேவை சங்கம், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களில், மத்திய அரசு அதிகாரிகள், கடந்த 10 நாட்களாக விசாரணை நடத்தினர்
 ஆவணங்கள் பிடிபட்டன: தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் மற்றும் அவரது அலுவலக நிர்வாகிகளிடமும், விசாரணை நடத்தினர். அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். மாப்பிள்ளையூரணி அகதிகள் முகாமுக்கு, கழிவறை கட்டிக் கொடுத்ததாக காட்டப்பட்ட கணக்கு, முத்துக்குவியல், ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவி செய்ததாக சொல்லப்பட்ட கணக்கு குறித்தும் ஆய்வு நடத்தினர்.

வியாழன், 19 ஜனவரி, 2012

முற்றிலும் மாறுபட்ட அஜித்!

பில்லா-2 படத்திற்கு பின்னர் அஜித், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கிறார். பில்லா படத்தின் முதல் பாகம் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. பில்லா-2 படத்தில் விஷ்ணுவர்தன் இல்லாததற்கு கருத்து வேறுபாடுகள காரணமாக கூறப்பட்டன.
 சக்ரி டொலட்டி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் பில்லா-2 படம் முடிந்ததும் அஜித்-விஷ்ணுவர்தனுடன் கைகோர்க்கிறார். புதிய படம் பற்றி கூறுகையில் விஷ்ணுவர்தன்” அஜித் சாருக்கு இந்த படத்தை பற்றி தெரிந்தது ஒரே ஒரு வரி கதை தான்.

மீண்டும் தடை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற தமிழக அரசுக்கு

சென்னை : அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய சென்னை ஐகோர்ட் மீண்டும் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, இந்த நூலகத்தை டிபிஐ வளாகத்துக்கு மாற்றுவதாகவும், நூலகம் இருந்த இடம் அதிநவீன குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆதார்: விலை போகும் உங்கள் தகவல்கள்!

நந்தன் நீலகேணி
இந்த செய்தித்தாள் நடத்திய விசாரணை ஒன்றில் உங்கள் ஆதார் எண்ணைப் பெறுவதற்காக நீங்கள் தனியார் சேர்க்கை ஏஜன்சிகளிடம் கொடுக்கும் முக்கியமான உடற்கூறு மற்றும் மற்றும் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஆதார் திட்டத்தின் கீழ் திரட்டப்படும் தகவல்களின் பாதுகாப்பு குறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவின் அச்சங்களை உறுதி செய்வதாக இது இருக்கிறது.
இந்தியக் குடிமக்களிடமிருந்து மதிப்பு வாய்ந்த தகவல்களை திரட்டும் பொறுப்பை பெற்றுள்ள சேர்க்கை ஏஜன்சிகள், இந்திய தனிப்பட்ட அடையாளஅட்டை ஆணையம் (UIDAI) அமைத்துள்ள விதிமுறைகளை மீறி, சேர்க்கை பணிகளை உள்ளூர் நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக வழங்கியிருக்கிறார்கள்.

கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்!


Anurp with kid
டெல்லி: கையால் உணவு ஊட்டுவது தவறு என்று கூறி நார்வேயில் வசிக்கும் இந்திய தம்பதிகளின் 2 குழந்தைகளை அந்நாட்டு அதிகாரிகள் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் அனுருப். அவரது மனைவி சகாரிகா பட்டாச்சாரியா. அவர்களுக்கு 3 வயதில் மகனும், 1 வயதில் மகளும் உள்ளனர். அனுருப் தனது குடும்பத்துடன் நார்வேயில் வசித்து வருகிறார்.
அனுருப் தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு நம் நாட்டு வழக்கப்படி கையால் உணவு ஊட்டியுள்ளனர். இதைப் பார்த்த நார்வே நாட்டு குழந்தைகள் பாதுகாப்பு சேவைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கடுப்பாகி விட்டனர்.

சிறார் காப்பகத்தில் செக்ஸ் சில்மிஷம்-நிர்வாகிக்கு இரும்புக் கம்பி அடி

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே சிறார் காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட நிர்வாகிக்கு இரும்புக் கம்பியால் சரமாரி அடி விழுந்தது.இதில் அவர் காயமடைந்தார். இதையடுத்து அவரைத் தாக்கிய சிறுமியின் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி என்ற பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான ஸ்டீபன் ஜோசப். லிட்டில் ஏஞ்சல் என்ற பெயரில் இவர் சிறுவர் காப்பகம் நடத்தி வருகிறார்.
இதில் 13 மாணவர்களும், 23 மாணவிகளும் தங்கியுள்ளனர்.

வங்கி கணக்கில் 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!


Parijat Saha
நேர்மையாளர்கள் எங்கே என்று சகல துறைகளிலும் தேட வேண்டிய ஒரு காலகட்டத்தில், அவ்வப்போது சிலர் தலையை நீட்டி இதோ அப்படி ஒரு ஆள் இருக்கிறேன் என்று நம்பிக்கையூட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பாரிஜாத் சஹா மாதிரி.
யாரிந்த பாரிஜாத் சஹா? ஒரு பள்ளி ஆசிரியர். மேற்கு வங்கத்தில் உள்ள பாலுர்கட் என்ற சிறிய நகரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். மாதச் சம்பளம் ரூ 35000.

மருத்துவமனையாக மாற்ற மத்திய அரசிடம் அனுமதி பெறுவீர்களா?- உயர்நீதிமன்றம்


New Assembly
சென்னை: புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று மனுதாரர்களின் வக்கீல் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறப்படுமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Vadivelu:அதுக்கெல்லாம் நாம பதில் சொல்லிட்டிருக்க முடியுமாண்ணே',

Vadivelu
சினிமாவில் நான் தொடர்ந்து நடிப்பேன். அடுத்து ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். அதற்காகத்தான் இத்தனை நாள் இடைவெளி, என்று கூறினார் வடிவேலு.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வடிவேலு பிரச்சாரம் செய்தபோது, விதிமுறை மீறல் நடந்ததாக தேர்தல் ஆணையம் வடிவேலு மீது வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் நேற்று நத்தம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் வடிவேலு.
விசாரணை முடிந்து, வெளியில் வந்த நடிகர் வடிவேலு நிருபர்களிடம் பேசுகையில், "நானாகத்தான் சினிமாவுக்கு ஒரு இடைவெளி கொடுத்துள்ளேன். தொடர்ந்து நான் சினிமாவில் நடிப்பேன். புதிய படத்தில் ஒன்றில் நான் கதாநாயகனாக நடிக்க உள்ளேன்.

மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை?

சமீபத்தில் மரணம் அடைந்த அதிபர் 2வது கிம் ஜோங் மறைவின்போது இரங்கல் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கும், இறுதி சடங்கில் கலந்து கொண்டபோது வாய்விட்டு அழாதவர்களுக்கும் தண்டனை கொடுக்க அந்த நாட்டு நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர்கள் தொழிலாளர் வேலைவாய்ப்பு முகாமில் 6 மாதம் உழைக்க வேண்டும். 2வது கிம் ஜோங்கின் தந்தை கிம் 2வது சுங் 1994ம் ஆண்டு மறைந்தபோதும் இவ்வாறு தண்டனை அளிக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்காக, யார் அதிக அளவில் அழுதது? யார் அதிக அளவில் துக்கத்தை வெளிப்படுத்தியது? என்றெல்லா

வேட்டை வசூல் வேட்டை

பொங்கல் பண்டிகையின் குதூகல மூடுக்கேற்ப வந்துள்ள படம் என்றால் லிங்குசாமியின் வேட்டைதான். இத்தனைக்கும் படத்தின் கதை ஒன்றும் புதிதில்லை. எம்ஜிஆர் கால பார்முலாதான். ஆனால் அதை காட்சிப்படுத்திய விதமும், யுவன் சங்கர் ராஜாவின் துள்ளல் இசையும் படத்தை உற்சாகமாக ரசிக்க வைக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன் பாக்யராஜ் இயக்கம் நடிப்பில் 'அவசர போலீஸ் 100' என்று ஒரு படம் வந்தது (அமரர் எம்ஜிஆர் நடித்த காட்சிகளை சேர்த்து). கிட்டத்தட்ட அதே கதையை கொஞ்சம் ரிப்பேர் பண்ணி வேட்டையாக்கியிருக்கிறார் லிங்குசாமி.

சுற்றிவளைக்கப்படும் சீனா!அமெரிக்க மேலாதிக்கம் :

ஆப்பிரிக்க கண்டத்தில் தனது காலனியாதிக்க ஆக்கிரமிப்பையும் மேலாதிக்கத்தையும் நிறுவியுள்ள அமெரிக்க வல்லரசு, இப்போது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் மீது தனது மேலாதிக்க இரும்புப் பிடியை உறுதிப்படுத்தக் கிளம்பியுள்ளது. குறிப்பாக, இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைத் தகர்த்து, அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்துடன் இப்போது போர்த் தாக்குதலுக்கான ஏற்பாடுகளை வேகமாகச் செய்து வருகிறது. மேற்காசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றிலிருந்து சீனா மூலப்பொருட்களைப் பெறுவதை முடக்குவது, இதற்காக கடற்பாதைகளில் முற்றுகையிடுவது  என சீனாவுடன் மோதல் போக்கை மேற்கொள்வதே அமெரிக்காவின் உடனடித் திட்டமாக உள்ளது. அமெரிக்காவின் இம்மேலாதிக்கத் தாக்குதலுக்கு விசுவாசமாக அடியாள் வேலை செய்ய இந்திய ஆளும் வர்க்கம்  கிளம்பியுள்ளது.

ஜலதோஷம், தும்மல் என்றாலும் சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு டெஸ்ட்டுகளை

இன்றோ, மருத்துவம் வணிகமாகிவிட்டதுகடவுள் மாதிரி வந்து என் புள்ளை உயிரை காப்பாத்துனீங்க டாக்டர்...’’

- ஒரு காலத்தில் டாக்டர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு நோயாளிகளின் உறவினர்கள் சிந்தும் கண்ணீர் கலந்த வார்த்தைகள் இவை!
இன்றோ, மருத்துவம் வணிகமாகிவிட்டது; நோயாளிகளின் நாடியைப் பிடித்து சிகிச்சை செய்த மருத்துவர்கள் இப்போது கரன்சியின் வாசத்தைப் பார்த்தே நோயாளிகளைப் பார்க்கிறார்கள். அன்று டாக்டர்களின் கையில் இருந்த ஆபரேஷன் கத்தி உயிரைக் காப்பாற்றியது; இன்றோ அந்தக் கத்திகள் கசாப்புக்காரனின் கைகளுக்கு மாறிவிட்டன. இந்த ‘ஆரோக்கிய மாற்றம்(!?)’தான் நமது ஸ்பெஷல் ஸ்டோரியின் கரு...

உம்மன் சாண்டியை ஞானதேசிகனும்... அச்சுதானந்தனை ஜி.ராமகிருஷ்ணனும் மனமாற்றம் செய்ய முடியுமா?

முல்லையில் தொல்லை தரும் ரெட்டைச் சுழிகள்!'சென்னை நகரம் ஆந்திராவுக்கே சொந்தம்’ என்று தெலுங்கு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்த நேரம் அது.

'ஆந்திராவுக்கும் தமிழகத்துக்கும் சேர்த்து ஒரே தலைநகரமாக சென்னையை வைத்துக்கொள்ளலாம்’ என்று பிரதமர் நேருவை பலரும் மனமாற்றம் செய் தார்கள். அப்போது, சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர் ராஜாஜி.
நேரு, டெல்லித் தலைமை, காங்கிரஸ் கட்சி பற்றி எந்தக் கவலையும்படாத ராஜாஜி, ''சென்னை நகரம் தமிழ்நாட்டுடன் இணைந்த பகுதி. சென்னை நகர நிர்வாகம் பற்றிப் பேசவும் நிபந்தனைகள் விதிக்கவும் ஆந்திரர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது’ என்று கர்ஜித்தார்.

புதன், 18 ஜனவரி, 2012

திருடி, ‘வொய் திஸ் கொலைவெறி’யாக மாற்றி இருக்கிறார்கள்.


கொலவெறி பாடலில் யாரை சொல்கிறார்; சூப்பர் ஸ்டாரையா உலக நாயகனையா?



‘கொலைவெறி’ பாடல் பற்றி, ஏன் எழுதவில்லை?
-வெ. பாலாஜி, சென்னை.
ஏன் எழுதணும்? அப்படிங்கறதனாலதான் எழுதல.
‘ஏன் இந்த கொலவெறி?’ நடிகர் வடிவேலுவால் புகழ்பெற்ற இந்த வாக்கியத்தை அவரிடம் இருந்து திருடி, ‘வொய் திஸ் கொலைவெறி’யாக மாற்றி இருக்கிறார்கள்.
யாரு வேண்டுமானாலும் எளிதில் பாடிவிட முடிகிற, பேசுவது போன்றே அமைந்த பாடல். பொறுப்பற்று. ஊதாரித்தனமாக இருப்பதை நியாயப்படுத்துகிற வார்த்தைகள். ஆங்கிலம் தெரியாதவர் எப்படி ஆங்கில வார்த்தைகளை கொச்சையான முறையில், பயன்படுத்துவாரோ அதுபோன்ற மொழி நடை.
இந்த நடை இந்தியா முழுக்க பெரும்பான்மையானவர்களால், பேசப்படுகிற, புரிந்துகொள்ளப்படுகிற நடை. இவைகளால்தான் அந்த பாடல் ‘இந்திய தேசிய பாடலாக’ நாடு முழுவதும் பிரபலமாகியிருக்கிறது.
எல்லா மதக்காரர்களும் தாங்கள் வணங்குகிற கடவுள் பற்றிய பக்திப் பாடல்களில் தரக் குறைவான, பொறுப்பற்ற வார்த்தைகள் வந்தால், கெலைவெறி கொள்கிற அளவிற்கு மாறிவிடுவார்கள்.
இப்படி, தங்கள் இறை நம்பிக்கையில் ஒழுக்கமானவர்களாக, 
நேர்மையானவர்களாக அடையாளப்படுத்திக் கொள்பவர்கள், சமூகம் சார்ந்து வியாபாரம், அரசியல், சினிமா, பத்திரிகை, திரை இசை என்று வருகிறபோது அதில் எவ்வளவு சீர்கேடுகள் இருந்தாலும், அதை பொறுத்துக்கொள்கிறார்கள், விரும்புகிறார்கள்.

ஆந்திராவில் வரலாறு காணாத குளிர் 0 டிகிரியை விட குறைந்து 2 நாட்களில் 15 பேர் பலி

ஆந்திராவில் வரலாறு காணாத அளவு கடுங்குளிர் நிலவுகின்றது. குளிர் தாங்க முடியாமல் கடந்த 2 நாட்களில் மட்டும் 15 பேர் பலியாகியுள்ளனர்.
ஆந்திராவில் இந்த ஆண்டு கடுங்குளிர் நிலவி வருகின்றது. ஆந்திராவில் உள்ள 23 மாவட்டங்களில் 3 முதல் 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகின்றது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் குளிர் தாங்க முடியாமல் கரீம்நகர் மாவட்டத்தில் 5 பேரும், விசாகப்பட்டினத்திலும், குண்டூரிலும் தலா 4 பேர் பலியாகியுள்ளனர்.
நல்கொண்டா மற்றும் வாரங்கல் மாவட்டங்களில் குளிர் தாங்க முடியாமல் தலா 1 பேரும் பலியாகினர். 13 மாவட்டங்களில் வெப்பநிலை 10 டிகிரியை விட குறைந்து காணப்படுகின்றது.

உடற்பிறவா தோழி என கூறிவிட்டு... : கலைஞர் அறிக்கை


எனக்கு எல்லாமே என் உடற்பிறவா தோழிதான்’ என, கூறிவிட்டு, கஷ்ட காலத்தில் எல்லாம் அவரோடு ஒன்றாக இருந்துவிட்டு, வாழ்வு வந்ததும் விரட்டியடிக்கும் சுயநலமி, நான் அல்ல.
‘’வெற்றி, தோல்வி மாறி, மாறி வரக் கூடியவை. எம்.ஜி.ஆர்., காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலிலும், ஜெயலலிதா அ.தி.மு.க.,வுக்கு தலைமையேற்ற பின், 1996 மற்றும் 2006லும் சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க., படுதோல்விகளைச் சந்தித்துள்ளது.
பர்கூர் தொகுதியில், ஜெயலலிதாவும் தோல்வியடைந்துள்ளார். எனவே, அ.தி.மு.க.,வை யாராலும் சாய்க்க முடியாது என ஜெயலலிதா கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது.
என்னை, வேரோடு சாய்த்துவிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இயற்கையைத் தவிர என்னை யாராலும் சாய்க்க முடியாது.

தீயசக்தி என்று ஜெலலிதா என்னைக் குறிப்பிடுகிறார்.

இசை மேதை எஸ்டி பர்மன் வாழ்ந்த வீடு இன்று கோழிப்பண்ணை!


எஸ்டி பர்மன்... இந்தியாவின் இசை மேதைகளுள் முக்கியமானவர். நாற்பது ஆண்டுகள் பாலிவுட்டைக் கலக்கிய சாதனையாளர். தேசிய விருது, மாநில அரசின் விருதுகளைப் பெற்றவர். அவரது ஒவ்வொரு பாடலும் வைரம் மாதிரி காலத்தை வென்று ஜொலித்துக் கொண்டிருக்கின்றன.
ரசிகர்களால் 'தாதா (Dada)' என அன்புடன் அழைக்கப்பட்ட சச்சின் தேவ் பர்மன், திரிபுரா மன்னரின் நேரடி வாரிசு. ஆனால் அரண்மனை அரசியல் காரணமாக, அகர்தலாவிலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்து இசையமைப்பாளரானார். பத்தோடு பதினொன்றாக இல்லால், இசையமைப்பாளர்களில் மன்னராகத் திகழ்ந்தார். கைடு, ஜூவல் தீஃப், பேயிங் கெஸ்ட், ஆராதனா என வெள்ளிவிழாப் படங்களின் இசையமைப்பாளர் எஸ்டி பர்மன்தான். இவர் மகன்தான் இந்திப் பட இசையின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ஆர் டி பர்மன்.'காலம் பூரா காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் அளவுக்கு பெரிய மேதை எஸ்டி பர்மன்' என்பார் இசைஞானி இளையராஜா அடிக்கடி.

ஜால்ராக்கள்தான் ராமதாஸுக்குப் பிடிக்கும்!'வேல்முருகன் பாய்ச்சல்..


'பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப, பொங்கல் அன்று புதிய கட்சியைத் துவங்கி இருக்கிறார் வேல்முருகன். கட்சியின் பெயர் 'தமிழர் வாழ்வுரிமைக் கட்சி’. அதாவது டி.வி.கே. அவரை சந்தித்துப் பேசியதில் இருந்து...


''தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஏராளமான கட்சிகள் இருக் கின்றன. எதைச் சாதிக்க இந்தப் புதிய கட்சி?''

'' கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு துன்பங்களைத் தாங்கிக்கொண்டு ஒரு கட்சிக்காக உழைத்தேன். ஆனால், விளக்கம்கூட தராமல் வெளியேற்றினார்கள். என்னை நேசித்த மக்கள், தமிழ்ச் சமூகத்தில் மாற்று அரசியலை உருவாக்கும் வகையில் ஒரு புதிய கட்சியைத் துவக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அதனால், கட்சியைத் துவக்கினேன்.

சசிகலாவின் 2 வழக்கறிஞர்களும் திடீர் விலகல்

பெங்களூர்: பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சார்பில் ஆஜராகி வந்த இரு வழக்கறிஞர்கள் திடீரென விலகிக் கொண்டுவிட்டனர்.
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந் நிலையில் சசிகலாவுடனான தனது 25 ஆண்டு நட்பை முறித்துக் கொண்ட ஜெயலலிதா, அவரையும் அவரது குடும்பத்தினரையும் வீட்டை விட்டும் கட்சியை விட்டும் விரட்டினார்.
இந் நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான வெங்கடேசன் உட்பட 2 வழக்கறிஞர்கள் வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாகக் கூறினர். இதையடுத்து அவர்களுக்குப் பதிலாக மணிசங்கர் என்பவர் ஆஜரானார்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உடன் வர மக்கள் படையுண்டு, முடிவெடு தலைவா!'-நடராஜன் நடத்திய விழா


தஞ்சாவூர்: சென்னையில் சங்கமம் விழா நடத்தியவர்கள் எல்லாம் (திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர்) திகார் சிறையில் சங்கமமாகும் நிலையில் உள்ளனர். அந்த நிலை நமக்கு வராது. நான் வரவும் விடமாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலாவின் கணவரும் புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் கூறினார்.
நடராஜன் மருதப்பா அறக்கட்டளை சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழர் கலை இலக்கிய விழா நடத்தப்படுகிறது. போயஸ் கார்டனிலிருந்து சசிகலா குடும்பத்தினர் விரட்டப்பட்ட நிலையில் தஞ்சையில் இந்த விழா நடந்தது.

தங்கம்-வெள்ளி! கடும் உயர்வு... இன்னும் 'காஸ்ட்லியாகிறது'

டெல்லி: தங்கம், வெள்ளி ஆகிய உயர்தர உலோகங்களின் உற்பத்தி மற்றும் இறக்குமதி வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதால், இவற்றின் விலை கடுமையாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உலகஅளவில், தங்கத்தை அதிகஅளவில் இறக்குமதி செய்யும், பயன்படுத்தும் நாடு, இந்தியாதான். இங்குதான் தங்கத்தின் விலை எந்த அளவு உயர்ந்தாலும் கவலைப்படாமல் வாங்கித் தள்ளுகிறார்கள். வாழ்க்கையில் தங்கத்துக்கு அத்தனை முக்கியத்துவம் தருபவர்கள் இந்தியர், குறிப்பாக தமிழர்கள்.
தங்கம், வெள்ளி மீது ஒரு குறிப்பிட்ட தொகை, இறக்குமதி வரியாகவும், உற்பத்தி வரியாகவும் இதுவரை வசூலிக்கப்பட்டு வருகிறது.

காணும் பொங்கலை கொண்டாட குவிந்த கூட்டம் – கண்காணிப்பு தீவிரம்

சென்னை : காணும் பொங்கலை ஒட்டி சென்னை மெரீனா கடற்கரை, வண்டலூர் மிருகக்காட்சி சாலை, சிறுவர் பூங்கா போன்ற சுற்றுலா மையங்களில் பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதனால் சுற்றுலா மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையின் நான்காம் நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. குடும்பத்தோடு அனைவரும் உறவினர்கள் வீட்டுக்கு சென்று ஒருவரை ஒருவர் கண்டு வாழ்த்துவது இந்த நாளின் சிறப்பாகும். சகோதரிகள் தங்களின் உடன்பிறந்த சகோதரர்களுக்கு புத்தாடைகள் எடுத்து கொடுத்து வாழ்த்துவது வழக்கம். உணவுகளை தயாரித்துக் கொண்டு, சுற்றுலா பகுதிகளுக்குச் சென்று மகிழ்வதும் இந்த நாளின் சிறப்பம்சமாகும்.
மெரீனாவில் மக்கள் கூட்டம்

நடிகை ஆசைகாட்டி சென்னைக்கு கடத்திவரப்பட்ட கேரள இளம்பெண் எங்கே? 8 மாதமாகியும் கிடைக்கவில்லை


சென்னை : கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளி. இவரது மகள் லட்சுமி (16). அதே பகுதியில் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், 2011 மே மாதம் 29ம் தேதி லட்சுமி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து வடக்கு எர்ணாகுளம் டவுன் போலீ சார் விசாரித்து முகமது ஷபிக்(23) என்பவரை கைது செய்தனர்.  போலீசில் அவர் அளித்த வாக்குமூலம்:

சசிகலா குடும்பத்தினர் திமுக பக்கம்?


ஜெயாவின் தோழி தனது கணவரை சந்தித்தை தாங்கி கொள்ள முடியாமல் தான் சசிகலாவுடன் உள்ள தனது உறவை ஜெயலலிதா முறித்துக்கொண்டார்.
 சசிகலா குடும்பத்தினர், தி.மு.க., பக்கம் செல்வதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், தமிழக அரசியலில் அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், பிற பதவிகளில் இருந்தும், சசிகலா மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை, முதல்வர் ஜெயலலிதா கூண்டோடு நீக்கினார். மேலும், போயஸ் தோட்டத்திலிருந்தும் அவர்களை வெளியேற்றினார். சசிகலா குடும்பத்தின் மீதான நடவடிக்கைகள் இதோடு நிற்காமல், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுபவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்; பலர், வேறு வழியின்றி ராஜினாமாவும் செய்தனர். இதனால், ஜெயலலிதா மீது கடும் கோபத்தில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர்.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

தி.மு.க.,வில் பரபரப்பை கிளப்பும் "ஹைடெக்' பிரசாரம்

திருச்சி:பொங்கல் விழாவையொட்டி, "ஸ்பெக்ட்ரம்' வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜாவின் ஆதரவாளர்கள், "ஹைடெக்' பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட போராட்டத்துக்கு பின், 100 நாட்களுக்கும் மேலாக சிறையிலிருந்த கனிமொழி, ஜாமினில் விடுவிக்கப்பட்டார். திகார் சிறையில் உள்ள ராஜா இதுவரை ஜாமின் கோரவில்லை. கனிமொழிக்கு இளைஞர் அணியில் முக்கிய பதவி வழங்கப்படும் என, பேச்சு அடிபட்டது. இதையடுத்து, இளைஞரணியில் உறுப்பினராக 30 வயது, நிர்வாகியாக 40 வயது என, வயது மேல்வரம்பு குறைக்கப்பட்டது.அரசியலில் கனிமொழிக்கு முக்கிய பொறுப்பு கிடைத்துவிடக் கூடாது எனவும், தனது மகன் உதயநிதிக்கு இளைஞரணி செயலர் பதவி பெற்றுத் தரவும் ஸ்டாலின் காய் நகர்த்தி, இந்த வயது வரம்பைக் கொண்டு வந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஐயப்ப பக்தர் சாந்தவேல் கொலை மலையாளிகளைக் கைது செய்ய வேண்டும் :



’’சென்னையை அடுத்த திருவேற்காடு திருவேங்கட நகரைச் சேர்ந்த சாந்தவேல் என்ற ஐயப்ப பக்தர் சபரி மலைக்குச் சென்றபோது, பம்பையில் கேரளக்காரரின் தேநீர்க் கடையில் இவருக்கும் கடைக்காரருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதில் ஆத்திரமடைந்த மலையாளியான கடைக்காரர் தேநீர் போடுவதற்காகக் கொதிநிலையில் வைத்திருந்த பாய்லர் தண்ணீரை சாந்தவேல் மீது ஊற்றியுள்ளார். இதனால் கடுமையாக அவரின் முதுகுப் பக்கம் வெந்துள்ளது.

கோழிக்கூடு என நினைத்து கொச்சியில் விமானத்தை இறக்கிய விமானிகள்

கொச்சி: திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கூட்டுக்கு செல்ல வேண்டிய விமானம் தவறுதலாக கொச்சியில் இறங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அல்லையன்ஸ் ஏர் விமானம் 32 பயணிகளுடன் நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பியது. அந்த விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கூடு, கொச்சி வழியாக அகதி(லக்ஷதீப்) செல்வது.
விமானம் கோழிக்கூட்டுக்கு பதிலாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. தரையிறங்கியவுடன் கோழிக்கூடு வந்ததாக பயணிகளிடம் பணியாட்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா ஒன்றும் சீனா அல்ல: டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூகுள் வாதம்

இணையதளங்களில் இருக்கும் ஆபாசமான கருத்துகளை நீக்க வேண்டும் என்று கூறுவதற்கு இந்தியா ஒன்றும் சீனாவைப் போன்று சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடு அல்ல என்று கூகுள் இந்தியா நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கூகுள் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமானவைகள் போஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து வினய் ராய் என்ற பத்திரிக்கையாளர் போலீஸில் புகார் கொடுத்தார். இயேசு கிறிஸ்து, முகம்மது நபி மற்றும் பல்வேறு இந்து கடவுகள்களின் ஆபாச சித்திரங்கள் கூகுள் மற்றும் பேஸ்புக்கில் வெளியிடப்படுவதாக அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து டெல்லியில் உள்ள மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அதில் கூகுள், பேஸ்புக் உள்பட 21 இணையதளங்கள் மீது அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

சினேகா:பிரசன்னாவுடன் ஜூனில் திருமணம்


அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் பிரசன்னா, சினேகா இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த ஆண்டு இது பற்றி பிரசன்னா அறிவித்தார். ஆனால் இது குறித்து சினேகா பதில் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்துவந்தார். இந்நிலையில் இது பற்றி சினேகா, ’’பொங்கல் எனக்கு நல்ல ஆரம்பமாக அமைந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாத மத்தியில் எனது திருமணம் நடக்கும். சென்னையில் இதை பெரிய விழாவாக கொண்டாட உள்ளோம்.

சூப்பர் ஹிட்டான நண்பன்!3 இடியட்ஸ் re make

அதிரடி ஆக்ஷன் இல்லாமல், டாடா சுமோக்கள் பறக்காமல், பிரமாண்ட கிராபிக்ஸ்கள் இல்லாமல் விஜய்-ஷங்கரின் கூட்டணியில் நல்ல கதையுடன் வந்திருக்கும் நண்பன், 2012ம் ஆண்டின் முதல் மெகா ஹிட் தமிழ்ப் படம் என்ற பெயரை வாங்கியுள்ளது.
வசூலில் அள்ளிக் குவித்து வரும் இந்தப் படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுந்துள்ளது.
3 இடியட்ஸ் என்ற மாபெரும் வெற்றிப் படத்தை அப்படியே சீனுக்கு சீன் மாற்றாமல் எடுத்திருந்தாலும், ஷங்கர் தனது வேலையைக் காட்டி தமிழுக்கு ஏற்ற மாதிரி ட்யூன் செய்து அசத்தியிருக்கிறார்.

விஜய் ஜீவா ஸ்ரீகாந்துக்கும் இது மிக மிக வித்தியாசமான அனுபவமாகவே இருந்திருக்கும். எதிரிகளை நோக்கி சுட்டு விரலை நீக்கி அடிக்குரலில் கத்தாமல், பார்வையாலேயே எதிரியை துளைக்காமல், மிக யதார்த்தமான பக்கத்து வீட்டு பையன்கள் மாதிரியான  கேரக்டர்கள்.

Velmurugan:ராமதாஸ் பேச்சை தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டு

பா.ம.க.வில் இருந்து வெளியேற்றப் பட்டதும், வேல்முருகனுக்குக் கிடைத்த ஆதரவு ராமதாஸே எதிர்பாராதது. கட்சியில் இருந்து விலகி மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், புதிதாக கட்சித் தொடங்குவதாக அறிவித்திருக்கிறார் வேல்முருகன்.
வன்னியர் மக்கள் அதிகம் நிறைந்த கடலூர் மாவட்டம் ‘தானே’ புயலால் தலைகுப்புறக் கிடக்க, அவர்களுக்கு உதவி செய்ய பா.ம.க.வினர் ஒருவரையும் காணோம். வேல்முருகன் மட்டும் மோட்டார் சைக்கிளில் பரபரப்பாக சுற்றிக்கொண்டே நிவாரணப் பணிகளில் மக்களோடு மக்களாக இருக்கிறார். அவரை சந்தித்தோம்...
புதிய கட்சியைத் தொடங்கும் வேலைகள் எப்படி இருக்கிறது? பா.ம.க.வினர் யாராவது உங்களோடு வருகிறார்களா?

திங்கள், 16 ஜனவரி, 2012

சோவின் குஜராத்: மோடியின் கொலைக்களம்!

மகாராஷ்டிரா மாநிலம்  மும்பய் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், அவரது நண்பர் ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை மற்றும்  பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று குஜராத் போலீசாலும், மைய உளவுத்துறையாலும் குற்றம் சாட்டப்படும் அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நால்வரும் கடந்த ஜூன் 15, 2004 அன்று குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். “இந்நால்வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ  தொய்பா அமைப்பினைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் பயங்கரவாத நோக்கத்தோடு குஜராத்துக்கு வந்துகொண்டிருந்தபொழுது அகமதாபாத் நகரக் குற்றப்பிரிவு போலீசாரால் வழிமறிக்கப்பட்டனர்.  அப்பொழுது நடந்த மோதலில்தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக” குஜராத் மாநில அரசு அறிவித்தது.  அச்சம்பவம் நடந்து ஏழாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அது ஒரு போலிமோதல் கொலைதான் என்பதனை குஜராத் உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருக்கிறது.

6,654 கோடியில் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு


Urban Development
சென்னை: வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் என்ற திட்டம் ரூ.6,654 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வளர்ந்து வரும் நகர்ப்புற மக்கட்தொகை மற்றும் தொடர்புடைய வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்ப நகரக் கட்டமைப்புகளை அதிகப்படுத்துவதிலும், மேம்படுத்து வதிலும், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

சென்னை எழிலகத்தில் பயங்கர தீ: கட்டடம் இடிந்து தீயணைப்பு வீரர் பலி

சென்னை சேப்பாக்கத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கும் எழிலகம் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க முயன்ற தீயணைப்புப் படை வீரர் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

ஷகிலா: நான் பீர் குடிச்சேனா... சேச்சே.. அப்படின்னா என்னன்னே தெரியா

ஆசாமி படத்தில் நான் பீர் குடித்ததாக வந்தது வெறும் வதந்திதான். உண்மையில் அந்த டேஸ்ட் எப்படி இருக்கும் என்றே தெரியாது, என்று நடிகை ஷகிலா கூறியுள்ளார்.
பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலீ. இவர் ஏராளமான ஆபாசப்படங்களில் நடித்ததாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இப்போது ஆபாசப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு, நல்ல படங்களில் நகைச்சுவை கலந்த வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது ஆசாமி என்ற படத்தில் ஷகிலா நடித்து வருகிறார். இதில் பீர் குடித்து குறி சொல்லும் போலி சாமியார் கேரக்டரில் வருகிறாராம்.

பாகிஸ்தான் அரசியலின் கதி என்ன? இன்று தெரியவரும்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று மூன்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் நடக்க உள்ளன. சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடக்க உள்ள இரு வழக்கு விசாரணைகளில், அதிபர் சர்தாரி மற்றும் பிரதமர் கிலானி இருவரின் எதிர்காலம் என்ன என்று தெரிய வரும்.

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே, மெமோகேட் விவகாரம் என்ற வழக்கு நடந்து வருகிறது. இதற்காக சுப்ரீம் கோர்ட் தனியாக ஒரு குழுவை நியமித்து விசாரணையை நடத்தி வருகிறது. இக்குழுவின் முன், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தானி தொழிலதிபர் மன்சூர் இஜாஸ் இன்று ஆஜராகிறார்.

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

நண்பன் படத்துக்கு எதிரி’யான திரையரங்கம்!


           பொங்கல் திருவிழாவை ஒட்டி விஜய் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவானது ஹிந்தி 'த்ரீ இடியட்ஸ்' ரீமேக்கான 'நண்பன்',  இரண்டு நாட்கள் முன்னதாகவே நாடு முழுவதும் திரையிடப்பட்டது. சேலத்திலும் கிட்டத்தட்ட ஒன்பது திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இதில் ஐந்து திரையரங்குகள் ரிலைன்சின் பிக் சினிமா திரையரங்கம்.
இதுக்கப்புறம் ரசிகர் மன்றம் பேனர்,விளம்பர சுவரொட்டி போன்ற செலவுகள் காரணமா கொஞ்சம் கூடுதல் விலை வச்சு விக்கணும் ஆனா தியேட்டர்லயே அதிக வெலை என்பதால நிறைய பேரு இந்த முறை டிக்கெட் எடுக்கலை.'

இந்துத்வா கும்பலின் சுதேசிப் பித்தலாட்டம்!

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசின் முடிவு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க பெற்றெடுத்த குழுந்தையாகும்
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசின் முடிவு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க பெற்றெடுத்த குழுந்தையாகும்










கூட்டுக் களவாணிகள்
ஒரே வகை வணிகமுத்திரை கொண்ட சில்லறை வர்த்தக நிறுவனங்களில் 100 சதவீதமும், பல்வேறு வணிகமுத்திரைகள் கொண்ட பொருட்களை விற்கும் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீதமும் அந்நிய
நேரடி மூலதனத்தை அனுமதிப்பது எனக் கடந்த மாதம் மைய அமைச்சரவை முடிவெடுத்தது. இந்த முடிவை பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திருணாமுல் காங்கிரசும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கவே ஓரடி பின்வாங்கியிருக்கிறது, ஐ.மு.கூ. அரசு.

Cho:ஜெயலலிதாவைப் பிரதமராக்க பாஜக ஆதரவளிக்கவேண்டும்

சோ : ‘மோடியாக ஆசைப்படுகிறார் ஜெயலலிதா!’


தமிழ் பேப்பர் வாசகர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். நான் கடந்த பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்துவரும் காரியங்களுள் ஒன்று துக்ளக் ஆண்டுவிழாவில் கலந்துகொள்வது. காரியம் என்று சொன்னதை யாரும் தப்பர்த்தம் பண்ணிக்கொள்ளக்கூடாது. நேற்று (14 ஜனவரி 2012) நடந்த 42வது ஆண்டு விழாவில் கூடுதல் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டேன். காரணம், விழா நடந்த இடம், வள்ளுவர் கோட்டம்.
ஆறரை மணிக்கு விழா தொடங்கும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் மூன்றரை மணிக்கெல்லாம் நியூஸ் சேனல்களில் ஃப்ளாஷ் நியூஸ் ஓடத் தொடங்கிவிட்டது. அத்வானியும் மோடியும் சென்னை வந்துள்ளனர்; சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் என்பதாக. அடித்துப் பிடித்து வள்ளுவர் கோட்டத்தைத் தொட்டபோது மணி ஐந்தரை. தேசிய பிரமுகர்கள் வந்திருந்ததால் எக்கச்சக்க பாதுகாப்புக் கெடுபிடிகள். உள்ளே நுழைந்தபோது வள்ளுவர் கோட்டம் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது.
துக்ளக் சோ, மியூசிக் அகாடமியில் பேசினாலும் ஹவுஸ்ஃபுல். காமராஜர் அரங்கத்தில் பேசினாலும் ஹவுஸ்ஃபுல்.

மருமகளுக்கு செக்ஸ் டார்ச்சர் மகனை அடித்துக் கொலை

மகனை அடித்துக் கொலை செய்து சடலத்தை சாலையில் வீசிய தந்தை?

சென்னை : மருமகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த தொழில் அதிபர், சொந்த மகனையே கொலை செய்து, சடலத்தை சாலையில் வீசியதாக போலீசில் பரபரப்பு புகார் செய்யப்பட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் 15வது மேற்கு குறுக்கு தெருவை சேர்ந்தவர்  ஏழுமலை (55). தனியார் காஸ் கம்பெனி உரிமையாளர். இவரது மகன் சீனிவாசன் (30). இவருக்கும் வேலூரை சேர்ந்த தாட்சாயிணிக்கும் (28), 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி திருமணம் நடந்தது.

அ.தி.மு.க., எங்கள் இயல்பான கூட்டணி: அத்வானி

சென்னை: ""அ.தி.மு.க., எங்கள் இயல்பான கூட்டணிக் கட்சி,'' என, பா.ஜ.,வின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான அத்வானி கூறினார். அவரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் நேற்று சென்னை வந்தனர். அத்வானி, தனியார் விமானம் மூலம் டில்லியிலிருந்து நேற்று மதியம் 2.00 மணிக்கு வந்தார். மோடி, தனி விமானம் மூலம் ஆமதாபாத்திலிருந்து 2.45க்கு வந்தார். அவரை, மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். சமீபத்தில் காலமான, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் நம்பியார் வீட்டுக்குச் சென்ற இருவரும், அவரது உறவினர்களிடம் ஆறுதல் கூறினர். அங்கிருந்து கிளம்பி, "துக்ளக்' ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அத்வானி பேசியதாவது: தமிழக முதல்வராக ஜெயலலிதா இருக்கும் நிலையில், சோவுடைய நிகழ்ச்சியில் அத்வானியும், மோடியும் கலந்து கொண்டால், கிசுகிசுக்களுக்குப் பஞ்சமிருக்காது.

பா.ம.க.வேல்முருகன். புதிய கட்சி தொடங்கியுள்ளார்

பா.ம.க. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் இன்று புதிய கட்சியை சென்னையில் தொடங்கினார். தமிழர் வாழ்வுரிமை கட்சி என தனது கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். மேலும் கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து அவர் கூறுகையில்- நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும் யாருடனும் கூட்டணி வைப்போம் என்று கூறிய வேல்முருகன் காலத்திற்கேற்ப இந்திய அரசியல் சட்டத்திலும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றார்.