ஞாயிறு, 10 மே, 2026

விஜய் முதல்வராக பதவி ஏற்றார் 9 அமைச்சர்களும் பதவி ஏற்பு

 தினமலர் : தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார். விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் ஆண்டவன் மேல் ஆணையிட்டு என உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆதவ் அர்ஜூனா மட்டும் ஆண்டவனை தவிர்த்து உளமாற என்று கூறினார்.
தமிழகத்தில் இன்று தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்தது; அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார். தற்போது, தமிழக அமைச்சரவை இடம்பெற்றுள்ளவர்கள் விபரம் பின்வருமாறு:
1. விஜய்
2. ஆனந்த்
3. ஆதவ் அர்ஜூனா
4. அருண் ராஜ்
5. செங்கோட்டையன்
6. வெங்கட்ரமணன்
7. நிர்மல்குமார்
8. ராஜ்மோகன்,
9. பிரபு
10. கீர்த்தனா
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழாவில் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் ஆண்டவன் மேல் ஆணையிட்டு என உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆனால் ஆதவ்அர்ஜூனா மட்டும் ஆண்டவனை தவிர்த்து உளமாற என்று கூறினார்.

சங்கீதாவுக்கும் மகன் ஜேசனுக்கும் மகள் ஷாஷாவுக்கும் மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கவேண்டும்

No photo description available.

 ராதா மனோகர் : இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்?
எந்த குழந்தைகளுக்கும் தந்தை தாயன்பு  என்பது அடிப்படை உரிமை! 
அடிப்படை ஆதாரம்!
அதிலும் தந்தை நாட்டின் முதலமைச்சராக பதவி  ஏற்கிறார்!
இதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல எங்கோ ஒரு தூரத்தில் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள் 
இத்தனைக்கும் காரணமான அப்பன்காரன் நாட்டுக்கே எழுச்சியும் உயர்ச்சியும் வழங்க போகிறேன் என்று ஊரை கூட்டி கதை அளந்து கொண்டிருக்கிறான்.
ஏற்கனவே 41 உயிர்களை கொன்றுவிட்டு . அதை பற்றி எந்த கவலையும் அற்று அதைப்பற்றி ஏதோதோ கதைகள் எல்லாம் கூறிவிட்டு, 

May be an image of one or more people and people smiling

அந்த அப்பாவி உயிர்களின் குடும்பத்தினரை  தன்வீட்டிற்கே அழைத்து ரொம்ப சாரிங்க என்று கூறிவிட்டு அலட்சியமாக கடந்து விடுகிறார்!
இவர்தான் நாட்டை காக்கப்போகிறேன் நாகரிக கோமாளி வந்தேன்ங்க என்று கூறுகிறார் 
ஒரு மனிதன் தன்குடும்பத்தினரோடு எப்படி நடந்து கொள்கிறார் என்பது முக்கியமாக கவனத்தில் எடுத்து கொள்ளவேண்டிய விடயம்தான் 

முதல்வர் விஜய்யுடன் நாளை பதவியேற்கும் அமைச்சர்கள்!- பார்ப்பனர் வெங்கட்ராமன் – பள்ளி கல்வித்துறை

 minnambalam.com -Mathi  : முதல்வர் விஜய்யுடன் பதவியேற்கும் அமைச்சர்கள்- உத்தேச பட்டியல்- காங்-க்கு 1 இடம்- ராகுல் காந்தி வருகை!
தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் நாளை (மே 10) காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் நாளை பதவியேற்கின்றனர். விஜய் பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.
பதவியேற்போர் விவரம் (உத்தேச பட்டியல்)
விஜய்- முதலமைச்சர் -பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை
அமைச்சர்கள்
1) புஸ்ஸி ஆனந்த்- நகராட்சி நிர்வாகத்துறை
2) செங்கோட்டையன் – பொதுப்பணித்துறை –
3) ஆதவ் அர்ஜூனா – விளையாட்டு மற்றும் மது விலக்குத்துறை
4) அருண்ராஜ் – பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை
5) வெங்கட்ராமன் – பள்ளி கல்வித்துறை
6) ஜேசிடி பிரபாகர்
7) ராஜேஷ்குமார் (கிள்ளியூர் தொகுதி, காங்கிரஸ்)
8) நிர்மல்குமார்- மின்சாரத்துறை
9) ராஜ்மோகன் – ஆதிதிராவிடர் நலத்துறை
ஜோசியர் ஆலோசனைப்படி..

முதல்வராகும் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படி நாளை விஜய்யுடன் 9 அமைச்சர்கள் மட்டும் பதவியேற்கின்றனர்.
ராகுல் காந்தி வருகை

தமிழகத்தில் 1967-க்குப் பின்னர் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக இடம் பெறுகிறது. இதனால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை விஜய் பதவியேற்பு விழாவுக்கு வருகை தருகிறார்.

EVM மோடி மோசடியால் திமுக தோற்கடிக்கப்பட்டது!

May be an image of thermostat and text that says "வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் o বহর RSS WPAT 002 अ२े அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும் சங்கி தற்குறி கூட்டணி imgflip. com"

 Giri Sundar :  திமுக எங்கேயும் தோற்கவில்லை! EVM மோசடியால்!  மோடியால்!  தோற்கடிக்கப்பட்டது! 
திமுக மக்களால் புறக்கணித்து  தோற்கவில்லை! 
புதுச்சேரியில் தவெக தடந்தெறியவில்லை! காரணமே அங்கே பாஜக கூட்டணியாட்சி! EVM மோசடியை நிகழ்த்தவில்லை! 
EVMல் சந்தேகம் வலுக்கிறது VVPADஐ எண்ண வைத்தால் ஞானேஷ்குமார் மோசடி அம்பலமாகிவிடும்! 48Hours கடந்ததும் Automatic program Zonal zip டையோடு மூலமாக VOTE TRANSFER ஆகிவிடும் என்று பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் நிபுணர்கள் கூறுவதை நாம் புறந்தள்ள முடியாது! 
மக்கள் வாக்களித்தது திமுகவுக்கு என்பதும் முழு உண்மைதான்!
திமுக கூட்டணியின் உள்ளடி துரோகத்தால் வீழ்ந்ததா? என்றால்! ஆம்! வீழ்த்தப்பட்டது! உண்மைதான்!
வேறென்ன? திமுக கட்சிக்குள்ளும் உள்ளடி வேலையைச் செய்தார்களா? ஆம் செய்தார்கள்தான்! தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற உட்புற ஆதங்கவேட்டையுணர்வும் வேட்டுவைத்தது என்பதும் உண்மைதான்!