வியாழன், 2 செப்டம்பர், 2010

மலையக குழந்தைகள் ‘வேலைக்காரப் பிள்ளைகள்’ என்று வேலைக்கு அமர்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர்

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு எந்த வகையிலும் குறையாத அளவிலேயே எமது மலையக குழந்தைகள் ‘வேலைக்காரப் பிள்ளைகள்’ என்று வேலைக்கு அமர்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர், படுகின்றனர். அவர்களின் வறுமையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த கொடுமைகள் இலங்கையிலும் நடைபெறுகின்றன. இதன் அடிப்படையி லேயும் இக்கட்டுரை இங்கு பிரசுரமாகின்றது. – சாகரன்

சமூகத்தின் அடித்தட்டில் அமுக்கிவைக்கப் பட்டுள்ள அருந்ததிய மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம் அண்மைக்காலமாக தீவிர மடைந்து வருகிறது. அந்த சமூகத்தின் குழந்தை கள் நிலை மிகவும் பரிதாபகரமானதாகவே இன் னும் நீடிக்கிறது. இது கைப்புண், இதற்கு கண் ணாடி தேவையில்லை. ஆயினும், சமீபத்தில் இதுகுறித்து அருந்ததிய மனித உரிமை அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வ றிக்கைகள் வெளிவந்துள்ளன.

கோவை, ஈரோடு, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 11 முதல் 14 வயதிற்கு உட்பட்ட 666 அருந்ததியர் குழந்தை களிடம் ஆய்வுகள் மேற்கொண்டதில் 262 குழந் தைகள் சாதிய அடிப்படையில் பாகுபடுத்தப் படுகிறார்கள். கொடுமை என்னவெனில் 666ல் 607 குழந்தைகள் பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ள னர். 148 குழந்தைகள் ஆசிரியர்களின் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 228 குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட் டுள்ளனர். 50 சதவீத குழந்தைகளுக்கு உதவித் தொகை மறுக்கப்பட்டுள்ளது. இத்தகைய பாகுபாடு காரணமாக 532 குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வெளியேறி யிருக்கிறார்கள்.

24 விழுக்காடு அருந்ததியர் குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு ஏதா வது வேலையில் ஈடுபடுகிறார்கள். நான்கில் மூன்று பாகம் சிறுவர்களும், நான்கில் ஒரு பாகம் சிறுமியர்களும் இவ்வாறு பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு பணியில் ஈடுபடுகிறார்கள். பெரும் பாலும் கொத்தடிமைகளாக கழிப்பிடங்களை சுத்தம் செய்வது, மலம் அள்ளுதல் போன்ற பணி களில் இக்குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகிறார் கள் என்பது வேதனைக்குரியது.

சத்திய மங்கலத்தில் 35 அருந்ததியர் குடும் பங்களை ஆய்வு செய்த போது, அதில் 50 விழுக் காடு குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு பெற்றோரின் கடனுக்காக கொத்தடிமைகளாக்கப்பட்டுள்ளனர். இந்த குழந் தைகள் தினசரி சுமார் 11 மணிநேரத்திற்கு குறை யாமல் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். 6வயது குழந்தை கூட இக்கொடு மையில் இருந்து தப்பவில்லை. இதற்கான காரணங்கள் பல. மேலே சுட்டிக் காட்டிய பள்ளிக் கூடத்தில் காட்டப்படும் சாதிய பாகுபாடு ஒரு காரணம். இன்னொரு காரணம் குடும்பத்தா ரின் வறுமையும், கடன் சுமையும் ஆகும்.

கோவை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 200 பெண் குழந்தைகளிடம் ஆய்வு செய்யப்பட்ட போது, 12 வயதிற்கு மேற்பட்ட 85 விழுக்காடு பெண் குழந் தைகள் ‘சுமங்கலி திட்டத்தின்’ கீழ் பல மணி நேரம் ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தப்படு கிறார்கள். வெறும் 30 ஆயிரம் ரூபாய்காக நான்கு ஆண்டு, ஐந்தாண்டு என ஒப்பந்த அடிப்படை யில் கிட்டத்தட்ட கொத்தடிமைகளாக்கப்பட்டி ருக்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு விபரமாக பார்த்தால் கண் கள் குளமாகும். தமிழக அரசு அருந்ததியர் நல் வாழ்விற்காக நிறைய செய்வதாக பேசுகிறது. உண்மையில் என்ன நடக்கிறது என்பதை மேலே உள்ள விபரங்கள் படம் பிடித்துக் காட்டி விட்டன. தமிழக அரசு இனியும் காலம் கடத்தா மல் கொத்தடிமை ஒழிப்புச் சட்டம், மனித மலத் தை மனிதன் சுமப்பதை ஒழிக்கும் சட்டம், தீண் டாமை ஒழிப்புச் சட்டம் உட்பட உள்ள சட்டங் களை கறாராக அமலாக்க வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளும் சமூக நீதி மறுக்கப்பட் டுள்ள இந்த அடித்தட்டு குழந்தைகள் வாழ் நிலை மேம்பட - குழந்தை உரிமை பேணப்பட உரக்க குரல் எழுப்ப வேண்டும்.

(தீக்கதிர்)

கருத்துகள் இல்லை: