சனி, 22 பிப்ரவரி, 2020

விமர்சனம்: மாஃபியா... வில்லங்க வியாக்கியான வீடியோ


மின்னம்பலம் : விமர்சனம்: மாஃபியாமாஃபியா திரைப்படம் ஒரு போலீஸ் ஸ்டோரி. துருவங்கள் 16 திரைப்படத்தில் போலீஸ்-விசாரணை-திருடன் என கார்த்திக் நரேன் கோர்த்திருந்த நான்-லீனியர் கதையின் அதிரடியான வெற்றியால் மாஃபியா திரைப்படத்துக்கு இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அருண் விஜய்-பிரசன்னா ஆகிய இருவரையும் தன் கதையில் எப்படியும் சிறப்பாகவே காட்டிவிடுவார் என்று ரசிகர்கள் கருதினர். ஆனால், மாஃபியாவில் என்ன நடந்திருக்கிறது?
நார்காடிக்ஸ் டிபார்ட்மெண்டில் போதை தடுப்பு அதிகாரியாக வேலை செய்கிறவர் அருண் விஜய். இவருடன் நார்காடிக்ஸ் பயிற்சியில் இருந்த நண்பர்களான பிரியா பவானி ஷங்கர் மற்றும் வருண் ஆகிய இருவரும் இருக்கின்றனர்.

கொடைக்கானலில் ஐ டி ஜோடிகள் ... போதை வலையில் சிக்குகிறார்கள் ... வீடியோ



/tamil.news18.com : கொடைக்கானலில் கஞ்சா, மது உள்ளிட்ட போதை வஸ்துக்களுடன் நள்ளிரவு கேளிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டவர் உட்பட 260-க்கும் மேற்பட்டோரை போலீசார் சுற்றிவளைத்தனர். 5 மணிநேர விசாரணைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூவர் பிடிபட்டனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த காய்கறி வியாபாரம் செய்து வரும் 26 வயதான ஹரீஸ்குமார், ராஜக்காப்பட்டியைச் சேர்ந்த 23 வயதான தருண்குமார் ஆகியோர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு முகநூலில் ஒரு இடுகையை பதிவு செய்தனர்.
அதில், கொடைக்கானல் அருகே உள்ள மேல்மலை கிராமமான குண்டுபட்டியில் உள்ள தனியார் தோட்டத்தில் 6ஆம் தேதி நள்ளிரவு மதுவுடன் கேளிக்கை விருந்து நடப்பதாக அதில் கூறியிருந்தனர்.

இஸ்லாமியர்களின் எண்ணிக்கை.. நண்பர்களே,அது தவறான தகவல்

சாவித்திரி கண்ணன் : சார், தவறான தகவல்!’’ ’’தோழரே, இதை மீண்டும் சரிபாருங்கள்…’’என்பதாக உரிமையுடன் பலர் பேசினர் சென்ற பதிவு தொடர்பாக! இவை, இஸ்லாமியர்களின் அதிகரிக்கும் எண்ணிக்கை தொடர்பாக நான் கூறியிருந்தது பற்றி!
நண்பர்களே,அது தவறான தகவல் என்றால்,அதை திருத்திக் கொள்வதற்கு எனக்கு ஒரு சிறிதும் தயக்கமில்லை! உண்மை தான் முக்கியமே தவிர, இதில் பிடிவாதம் தேவையற்றது.
நான் விசாரித்த வகையில், என் இஸ்லாமிய நண்பர்களே சொன்னார்கள்! ’’படிப்பறிவின்மை,அறியாமை காரணமாகவும், உலாமாக்களின் முட்டாள்தனமான பிரச்சாரம் காரணமாகவும் இஸ்லாமியர்களில் பாதிபேர் அதிக குழந்தை பெற்றுக் கொண்டுள்ளது உண்மை தான்! அது மட்டுமல்ல, வங்க தேசத்திலிருந்து அதீத அளவில் இஸ்லாமிய அகதிகள் வந்ததும் ஒரு காரணம்’’ என்றனர்.
ஆனால், எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் இது நடந்துவிட்டதாக நான் குற்றம் சொல்ல மாட்டேன். இந்துக்களிலேயே கூட, இப்படி அதிக குழந்தைகள் பெறுகின்ற போக்குகள் சமீபகாலத்தில் தான் முடிவுக்கு வந்தது.
ஏனெனில், நானே என் பெற்றொருக்கு எட்டாவது குழந்தை தான்!

BBC : உத்தர பிரதேசம்: “ 3000 டன் தங்க சுரங்கம் இல்லை” - புவியியல் ஆய்வு நிறுவனம் மறுப்பு

சமீரத்மாஜ் மிஷ்ரா- பிபிசி ஹிந்தி :   உத்தர பிரதேச சோனபத்ர மாவட்டத்தில் 3000 டன்கள் தங்கம் உள்ள சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது என செய்திகள் பரவிய நிலையில், அதனை மறுத்துள்ளது இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம். கனிம வளத்துறை உத்தர பிரதேசத்தின் சோன்பத்ர மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான டன் தங்கம் நிலத்தில் புதைந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் கனிம வளத்துறை இதை உறுதி செய்ததுடன், விரைவில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என அறிவித்தது
இந்தியாவின் புவியியல் ஆய்வுக் குழு சோன்பத்ரில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. சோன்பத்ரில் தங்கம் புதைந்து கிடப்பது எட்டு ஆண்டுகளுக்கு முன்பே புவியியல் ஆய்வு குழுவால் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலத்தில் உள்ள தங்கத்தைத் தோண்டி எடுக்கும் நோக்கத்துடன் இணையம் மூலம் நிலத்தை ஏலம் விட்டு விற்பனை செய்யவும் உத்தர பிரதேச அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதே சோன்பத்ர மாவட்டத்தில் யுரேனியம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் மத்திய அரசாங்க குழுக்கள் சில ஆய்வு நடத்தி வருகின்றனர் என சுரங்க துறை அதிகாரி கே கே ராய் கூறினார்.
ஆனால், இப்படியான சூழலில், இதனை மறுத்துள்ளது இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம்

மன்மோகன் சிங் : பாரத் மாதா கீ ஜெய் கோஷம்.. தீவிர வாதத்துக்கு பயன்படுத்தப்படுகிறது


tamil.oneindia.com- Veerakumar :  டெல்லி: இந்தியாவைப் பற்றிய ஒரு உணர்ச்சிபூர்வமான கருத்தை உருவாக்க தேசியவாதமும் 'பாரத் மாதா கி ஜெய்' என்ற முழக்கமும் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
 "பாரத் மாதா யார்" என்ற புத்தகத்தின் கன்னட மொழிபெயர்ப்பு டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார், மன்மோகன்சிங். நேருவை ஒரு சிறந்த தொலைநோக்கு பார்வையாளர் என்று வர்ணித்த அவர், இந்தியாவின் முதல் பிரதமர் இந்தியாவை நவீன தேசிய அரசாக வடிவமைப்பதற்கான அடித்தளத்தை அமைத்தார் என்றார்.
இந்த புத்தகம் பண்டித நேருவை மறுபரிசீலனை செய்வதற்கான முயற்சியை மேற்கொள்கிறது என்று குறிப்பிட்ட மன்மோகன் சிங், தேசத்தை கட்டமைக்கும் நாட்களில் நேரு பிரதமராக பதவி வகித்தவர். நமது நாடு அவர் தலைமையில், ஒரு ஜனநாயக வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டது, மாறுபட்ட சமூக மற்றும் அரசியல் கருத்துக்களுக்கு இடமளித்தது. இந்திய பாரம்பரியத்தைப் பற்றி மிகவும் பெருமிதம் கொண்ட நேரு, அதை ஒருங்கிணைத்து, ஒரு புதிய நவீன இந்தியாவை உருவாக்கினார்.

உபியில் 3500 டன் தங்கம் ... பச்சை பொய்யை பரப்பும் பாஜக

Devakar Kaliyaperumal : 3500 டன் தங்கம் கண்டுப்பிடிப்பு... இப்படி தான் எங்க மோடிஜி குஜராத் முதல்வரா இருக்கும் போது கேஜி பேசின்ல 2.5 லட்சம் கோடி மதிப்புள்ள பெட்ரோலிய பொருட்கள் இருப்பதாக ஒரு அரிய கண்டுப்பிடிப்பை கண்டுபிடிச்சாரு...
அதை தூர் வார 20000 கோடி ரூ குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ப்பரேசன் மூலமாக செலவு பண்ணாரு...ஐ மீன் கடல்ல கொட்டுனாரா ஊழல் பண்ணாரானு எனக்கு தெரியாது... கடைசியில அதெல்லாம் ஒண்ணும் இல்லை பிம்பிளிக்கி பிளாப்பினு சொல்லிட்டாரு...
அப்படி தேசத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதற்கு சன்மானமா நாட்டுக்கே பிரதமர் ஆக்குனாங்க... அப்புறம் என்ன பண்ணாருனா குஜராத் மாநில கடனா இருந்த அந்த 20000 கோடியை சில,பல தில்லாலங்கடி வேலை பார்த்து இந்திய தேசத்தின் கடனா மாத்திட்டாரு...
So இப்ப தங்கம் இருப்பதாக சொல்லி எத்தனை லட்சம் கோடிகளை ஆட்டைய போடப்போறாங்கனு பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்... பாரத் மாதா கீ ஜே....

கேரளா.. மதத்தை குறிப்பிடாததால் மாணவனை 1-ம் வகுப்பில் சேர்க்க மறுத்த பள்ளி


மாலைமலர் :கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் மதத்தை குறிப்பிடாததால் மாணவனை 1-ம் வகுப்பில் சேர்க்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நசீம். இவரது மனைவி தன்யா. இந்த தம்பதியின் மகனை 1-ம் வகுப்பில் சேர்க்க முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல் நிலைப்பள்ளிக்கு சென்ற நசீம் தனது மகனை அந்த பள்ளியில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டார்.
விண்ணப்பத்தை அவர் நிரப்பியபோது அதில் மதம் என்று இருந்த இடத்தில் மதம் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார். அதை பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தார். அப்போது அதை சரிபார்த்த தலைமையாசிரியர் என்ன மதம் என்று குறிப்பிடாவிட்டால் அவரது மகனை பள்ளியில் சேர்க்க முடியாது என்று கூறிவிட்டார்.
ஆனால் மதம் பற்றி விண்ணப்பத்தில் குறிப்பிட முடியாது என்பதில் நசீம் உறுதியாக இருந்தார். பள்ளி நிர்வாகமும் தனது முடிவில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டது.

27 நாள்களுக்குப் பின்னரே கொரோனா அறிகுறி!' - தகர்ந்த 14 நாள்கள் நம்பிக்கை; அதிர்ச்சியில் சீனா

சீன மருத்துவப் பணியாளர்கள்விகடன் :சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, 27 நாள்களுக்குப் பிறகே அதற்கான அறிகுறிகள் தெரியவந்திருக்கிறது
சீனாவின் ஹூபே மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா, அந்நாட்டு வரலாற்றில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சார்ஸ் தாக்குதலைவிட, இதன்பாதிப்புகள் பெருமளவு என்பதால், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மிகப்பெரிய அளவில் முயற்சிகளை எடுத்துவருகிறது சீனா. உலக சுகாதார நிறுவனமும் தடுப்பு மருந்து, பரவலைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது.

பிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரண.. வீடியோ


nakkheeran.in - ஜெ.டி.ஆர். : கடந்த முறை திருச்சியில் தேசம் காப்போம் பொதுக்கூட்டத்திலும் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. இந்த முறை தேசம் காப்போம் பொதுக்கூட்டத்திற்கு திருச்சி மாநகர காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்காக வழக்கு தொடுத்தனர்.
ஆரம்பத்தில் நீதிமன்றமும் அனுமதி மறுத்த நிலையில் 3000 பேர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று திருச்சி மாநகர செயலாளர் அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. எம்ஜிஆர் நசிலையிலிருந்து உழவர் சந்தைக்கு பேரணியாக செல்வது என அனுமதி கொடுக்கப்பட்டது.
ஆனால் திருச்சி உளவுத்துறை போலீஸோ லட்சக்கணக்கில் திரளுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் வரதராஜூலு தகவல் கொடுத்ததால் அவர் நீதிமன்றம் மூலம் வாங்கின அனுமதி இடத்தை மறுத்து இரவோடு இரவாக திருச்சியின் புறநகர் பகுதியில் சில இடங்களில் காண்பித்தார்.

டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் எச்சரிக்கை

காங்கிரஸ்டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் எச்சரிக்கைமாலைமலர் : புதுடெல்லி : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் இடையே ஆமதாபாத்தில் பிரதமர் மோடியுடன் சிறப்பு பொதுக்கூட்டம் (நமஸ்தே இந்தியா) ஒன்றிலும் அவர் உரையாற்றுகிறார். டிரம்பின் இந்த வருகையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், வெறும் புகைப்படம் எடுக்கும் நிகழ்வாக மட்டும் நடத்தக்கூடாது என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.

பெண் கிளார்க்குகளை நிர்வாணப்படுத்தி சோதனை!


மின்னம்பலம் : குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில், அண்மையில் 68 மாணவிகளிடம் அவர்களது ஆடையைக் கழற்ற சொல்லி மாதவிடாய் சோதனை செய்தது பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்தையடுத்து ஸ்ரீ சாஹ்ஜானாந்து பெண்கள் கல்லூரி முதல்வர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த சர்ச்சை ஓய்வதற்குள் குஜராத்தில் மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது பெண்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரத் பகுதியில் முனிசிபல் கார்பரேஷனில் பணிபுரியும் பெண்களை நிர்வாணமாக நிற்கவைத்து, அந்தப்பெண்களுக்குக் கருத்தரிப்புச் சோதனை நடத்தப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுகுறித்து சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் அளித்த புகாரில், திருமணமாகாத பெண்களையும் மற்றவர்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி, அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா? இல்லையா? என்று சோதனை நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் இலங்கையிலும் .. .. மலையக மக்கள் நாடற்று போன கதை

Thavamuthalvan Davan : இந்திய  தேசமெங்கும் கடந்த பல மாதங்களாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்
நடந்துகொண்டேயிருக்கின்றன. கைதுகள், வழக்குகள் , வன்முறை வெறியாட்டங்கள், போலீஸ் துப்பாக்கி சூட்டில் மக்கள் பலி என ஒவ்வொரு நாளும் போராடும் மக்களை அடக்கி ஒடுக்குகிறது மத்திய-மாநில அரசுகள்.
இலங்கையில் மலையக மக்களாகவும் ,
தமிழகத்தில் தாயகம் திரும்பியோர் என்ற சொல்லிலும் அழைக்கப்படும் நாங்கள் ஏறக்குறைய இரண்டு நாடுகளிலும் முப்பது லட்சத்திற்கும் மேற்பட்ட ஜனத்தொகை கொண்டவர்களாக வாழ்கிறோம்.
சமூகப் பொருளாதார வாழ்வில் மற்ற மக்களோடு ஒப்பிடும்போது, எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் , தேயிலைத் தோட்டத்தில் தொடரும் "நவீன கொத்தடிமை" வாழ்வே இன்றுவரை நீடிக்கிறது.
ஆயிரத்து எண்ணூற்று இருபதுகளில் தொடங்கிய இந்த அவல வாழ்வு இன்னுமும் நீடிக்க, புறச்சூழல் மட்டும் காரணங்களாக கொள்ள முடியாது.
இலங்கை: சிங்களவர்கள்,மலையகத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள், பறங்கிகள், தமிழ் பேசும் முஸ்லிம்கள், கிறித்தவர்கள், என பல்வேறு இன,மொழி பண்பாடு, கலாச்சாரங்களைக் கொண்ட தேசம் தான். இந்த பன்மைத்துவம் கொண்ட நாட்டை சிங்களப் பேரினவாதம் என்கிற ஒற்றை துருவத்தில் யோசித்து, சிங்களத்தலைவர்கள் செயல்பட்டதன் விளைவே மலையகத் தமிழர் வெளியேற்றம்.

ரஜினிகாந்தின் மன நிலை பாதிப்படைந்தது ஏன்? பணம் .. flashback பாலு மகேந்திரா


பாலு மகேந்திரா : பலவருஷங்களுக்கு முன்னாடி மிக பிரபலமான ஒரு நடிகர். (ரஜினிகாந்த்) .. மிக மிக பிரபலமான ஒரு நடிகர் . நான் ஒரு நாள் அவரை பார்க்கிறபோது அவர் அழுதுகிட்டு இருகாரு .
என்ன விஷயம் என்று கேட்டேன் . . ஒண்ணுமில்லை இந்த black money எல்லாம் என்ன  பண்றதுன்னு எனக்கு தெரியல்லை .. யாருகிட்ட கொடுக்கிறது ?  எங்கே வைக்கிறது ?  இது எனக்கு தெரியல்லை .. நினைச்சா ஒரு மாதிரி மூளை குழம்புது ..
அப்படீன்னு சொல்லி வருத்தப்பட்டுகிட்டு அழுது கொண்டிருதாரு..
அதுக்கு இரண்டு வாரம் கழிச்சு கேள்விப்பட்டேன்  .
அவர் மெண்டல் டிப்பிரேசன்ல ஆசுபதிரித்தில அனுமதிக்கப்பட்டு ... ஆசுபத்திரில்லா இருக்கார்னு .
வை ?  எதுக்கு இந்த வேண்டாத பணம்?

இந்தியன் 2 விபத்து ... இது சினிமாவுக்கு Use பண்ற Crane கிடையாது.! Cinema Crane Operator

அன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்.. ஆதி மனிதனுக்கு முதல் நண்பனே நாய் தான்


Mahalaxmi : மனிதனின் கருணை என்பது பயங்கரவாதத்தை விட கொடியது.
Clara Anita பக்கத்திலிருந்து! ஏன் “தெரு நாய்கள்”
மட்டும் எங்கும் உள்ளது...?
இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்ளும்
அல்லது வேட்டையாடி உண்ணும்.
ஆடு,மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்து கொள்ள புற்கள், இலை தழைகள் உள்ளன.
ஆனால் இந்த நாய்கள் மட்டும் மனிதன் கொடுத்தால் தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது
ஏன்...?
உங்கள் வீட்டில் மணக்க மணக்க சமையல் தயாராகிக் கொண்டிருக்கும்
போது உங்கள் வீட்டையே ஏக்கத்துடன் சுற்றிச் சுற்றி ஏன் வருகிறது???
வீட்டிற்குள் இருந்து யாராவது வந்து அந்த உணவிலிருந்து ஏதாவதும் ஒரு சிறுபங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் நப்பாசை கொள்கிறது..?
சாலையோரக் கடையிலோ,
தள்ளு வண்டிக் கடையிலோ
நீங்கள் திண்பண்டங்களை ருசித்துக் கொண்டிருக்கும் போது, கல்லைத் தவிர வேறெதாவதும் வந்து விழாதா என வெறித்து வெறித்து பார்த்து
ஏன் இடையூறு செய்கிறது...?
குறிஞ்சி, முல்லை என நகர்ந்து மருத நிலத்திற்கு மனிதகுலம் இடம் பெயருகிறது.

சீமானும், அவர் கட்சியும் மிக மிக பயங்கரமான கட்சி”- நடிகை விஜயலட்சுமி ஆவேசம்


நக்கீரன் :  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை சித்திரவதை செய்ததாக நடிகை விஜயலட்சுமி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஃபேஸ்புக்கில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பினர். சீமானுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டை சாதாரண ஒன்று சீமான் முடித்துக்கொண்டார். ஆனால், சீமானின் தம்பிகளும், கட்சி நிர்வாகிகளும் சமூக வலைதளங்களில் நடிகை விஜயலட்சுமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி காளியம்மாள் ஒரு மேடையில் நடிகை விஜயலட்சுமியை கடுமையாக விமர்சித்தார். இதனை அடுத்து மீண்டும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு சீமானுக்கு தனக்கும் என்ன நடந்தது? ஏன் அந்த வீடியோவை வெளியிட்டேன்? என்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.
அதில்,  “இந்த போராட்டம் எனக்கும் சீமானுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். இப்போது கூட நான் சொல்கிறேன் என் பின்னால் எந்த கட்சியும், அரசியல் தலைவர்களும் இல்லை. எத்தனையோ கட்சி இருக்கிறது. கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள். அதிமுகவில் ஜெயலலிதா அம்மா இருந்தவரை பெண்களுக்கு எந்தவித தொந்தரவும் யாரும் கொடுக்க மாட்டார்கள். அதேபோலதான் திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளிலும் யாரும் உங்களுக்கு உயிர் பயம் தரவே மாட்டார்கள்.

நைனார் நாகேந்திரன் நடத்த முயன்ற கட்டப் பஞ்சாயத்து

savukkuonline.com : நைனார் நாகேந்திரன் நடத்த முயன்ற கட்டப் பஞ்சாயத்து தமிழக பாஜக தலைவராக யாரை நியமிப்பது என்ற சிக்கலில் இறுதியாக இருக்கும் இரு பெயர்களில் ஒருவர் நைனார் நாகேந்திரன்.   மற்றொருவர் எச்.ராஜா.    எச்.ராஜாவை நியமிக்க வேண்டும் என்று, கட்சியில் பலரின் ஆதரவு அவருக்கு இருந்தாலும், கட்சி தலைமை நைனார் நாகேந்திரனை நியமித்தால் என்ன என்று நினைக்கிறது.  நைனார் நாகேந்திரன் முக்குலத்தோர் சாதியை சேர்ந்தவர் என்பது ஒரு காரணம்.  மேலும் அவரை தலைவராக்கினால், அதிமுகவிலிருந்து பல தலைவர்களை பிஜேபிக்கு அழைத்து வருவார் என்பது மற்றொரு காரணம். ஆனால் எச்.ராஜா தரும் அழுத்தம் காரணமாக ஆறு மாதத்துக்கு மேல், தமிழகத்துக்கு யாரை தலைவராக போடுவது என்று பிஜேபி தலைமை தலையை பிய்த்துக் கொண்டு உள்ளது.
நைனார் நாகேந்திரன் இப்போது எந்த பெரிய பொறுப்பிலும் இல்லை. ஆனாலும், கட்டப் பஞ்சாயத்து செய்து வருகிறார்.   இவருக்கு பதவி கிடைத்தால் என்ன ஆகும் என்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

பா.ரஞ்சித்... சமுக வலையில் விவாதம் .. கபிலன் காமராஜ் : பார்வையில்

கபிலன் காமராஜ் : அண்ணல் அம்பேத்கரும் பெரியாரும் அவர்கள் வாழும்
காலத்தில் ஒன்றாக இணைந்து தானே செயலாற்றினார்கள் பின்ன ஏன் பா.ரஞ்சித் பெரியாரை அண்ணலுக்கு எதிர்புறம் நிறுத்துகிறார் என்ற கேள்விக்கு பதிலில்லை.
சரி இதுவரை பெரியாரின் சமூக நீதி போராட்டம் பற்றி ரஞ்சித் செய்த ட்வீட் ஏதாவது காட்டுங்க என்றால் அதுக்கும் பதிலில்லை.
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு அவர் மகனே கண்டித்து பதிவிட்டார். திராவிட இயக்கத்தவர் எல்லோரும் கண்டித்து பதிவிட்டார்கள். இப்போ பா.ரஞ்சித்தும் கண்டித்து பதிவிடுகிறார்.
ஒரு வேறுபாடு மட்டும் தான், திராவிட இயக்கத்தவர் ஆர்.எஸ்.பாரதியை மட்டும் கண்டிக்கவில்லை, ரஜினி, ரஜினியின் மைத்துனர் Y.G.மகேந்திரன், ரஜினியின் மைத்துனர் மகள் Y.G.மதுவந்தி என பாரபட்சமில்லாமல் எல்லோரையும் கண்டித்தனர்.
பா.ரஞ்சித் ரஜினியையோ அவரை சார்ந்தவர்களையோ கண்டித்து பதிவிட்டு பார்த்ததேயில்லை.
அம்பேக்கர், வள்ளுவருக்கெல்லாம் காவிச் சாயம் பூசி இந்துத்துவம் விழுங்க ஆரம்பித்து பல காலம் ஆகிறது. அதை எதிர்த்து நீலச் சட்டை பேரணியில் ரஞ்சித் கலந்து கொள்ளவில்லை. ஏன் என கேட்டால், ரஞ்சித் தனித்து இயங்குவார் என்கின்றனர். அம்பேத்கர் கூட்டாகத்தான் இயங்கினார். பெரியார் கூட்டாகத்தான் இயங்கினார். நீங்க அவர்களை விட பெரிய மனிதர், தனியாகவே இயங்குங்கள்.

ஜாக்கியின் ஈவென்ட் மானேஜ்மென்ட் சிவராத்திரி கொள்ளை* கங்கா 50,000 ரூ.., யமுனா 20,000 ரூ., நர்மதா 5,000...


Mahalaxmi : *ஈஷா ஆதி யோகி சிவராத்திரி கொள்ளை*
கங்கா 50,000 ரூபாய்..,
யமுனா 20,000 ரூபாய்..,
நர்மதா 5,000 ரூபாய்..,
கோதாவரி 1,000 ரூபாய்,
கடைசியாக,
காவிரி 500 ரூபாய்..

இதெல்லாம் சிவராத்திரி ஈஷா யோகா விழாவிற்கான., அந்த அந்த காலரிக்கான பெயரும் அதன் இருக்கை கட்டணமும் தான்.. இதுல கூட காவிரி கேவலமாகி கடைசில..
’50,000 ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கும் என்ன வித்தியாசம் தெரியுமா, ’’50,000 ரூபாய்க்கு ஆதியோகிக்கு அருகில் உட்கார்ந்து பார்க்கலாம், 20,000 ரூபாய் கொடுத்தால் கொஞ்சம் பின்னால். 10,000 ரூபாய்க்கு அதற்கும் பின்னால். 5,000 ரூபாய் கொடுத்தால் எல்.சி.டி. ஸ்க்ரீனுக்கு முன்னால்.., 500 கொடுத்தால், தூரத்தில் இருந்து பார்க்கலாம்.., அப்போ அந்த இலவச அனுமதி ?! அதையும் தாண்டி தடுப்பு கட்டைகளுக்கு பின்னே, தரையில் உட்காந்து பார்க்கலாம், கேட்கலாம்.. இப்படி அங்கே சிவன் விலைக்கு கிடைப்பார் என சென்ற மக்கள்தான் முதலில் திருந்த வேண்டும்..
பக்தியை விலைக்கு விற்ற கார்ப்பரேட் சாமி !!

சமுக வலையில் ஜாதி பதிவுகள் .. Karthikeyan Fastura பார்வையில்

Karthikeyan Fastura : எனக்கு சங்கிகள் பிரச்சனை இல்லை. சீமான் தம்பிகள் கூட பிரச்சனை இல்லை. அவர்கள் எதிர் சிந்தனை கொண்டவர்கள். நாளையே திருந்தக்கூடும். பாபர் மசூதியை இடித்தவர் கூட திருந்தி மனம் வருந்தி நிறைய பள்ளிவாசல்களை கட்டி கொடுத்திருக்கிறார்
பெரியாரையும், அம்பேத்கரையும் புகழ்ந்து கொண்டே மறுபக்கம் சாதிய சிந்தனையில் இருந்து முழுதாக வெளிவர முடியாமல் அவதூறுகளை பரப்புபவர்களை கண்டால்தான் மிகவும் எரிச்சலாக இருக்கிறது. நம்மைச் சுற்றிய முகநூல் வட்டத்திலேயே நிறைய ஆர்.எஸ்.பாரதிகள் இருக்கிறார்கள்.
கபிலன் காமராஜ் என்ற பதிவர் ரஞ்சித்தின் நேற்றைய டிவிட்டுகளை போட்டு ரஞ்சித் பெரியாரை அவமதிக்கிறார் என்று பக்கம் பக்கமாக எழுதுகிறார். இத்தனைக்கும் அந்த ட்வீட்டில் ரஞ்சித் பெரியாரை இரண்டு முறை குறிப்பிட்டு அவரது சிந்தனையை மறந்துவிடாதீர்கள் என்று வலியுறுத்திக் கூறியும் அதை கணக்கில் எடுக்காமல் ரஞ்சித் திராவிட இயக்க வரலாற்றோடு அயோத்திதாசர் இரட்டைமலை சீனிவாசன், எம் சி ராஜா உள்ளிட்ட பெரியவர்களை குறிப்பிட்டதற்காக பெரியாரை மதிக்கவில்லை என்று கபிலன் ரஞ்சித் மீது அவதூறை முன்வைக்கிறார்.

ஜொ்மனி: துப்பாக்கி சூடு 9 போ் இறப்பு ... கொலையாளி வீடியோவில் ...


Theneeweb : ஜொ்மனியில் இனவாதக் கொள்கைகளையுடைவா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 போ் உயிரிழந்தனா். அதனைத் தொடா்ந்து தனது தாயைக் கொன்று அந்த நபா் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஜொ்மனியின் ஹனாவ் நகரிலுள்ள ஹூக்கா எனப்படும் புகைப்பிடிப்பதற்கான இரு கூடங்களில், தொபியாஸ் ராதேன் (43) என்ற நபா் செவ்வாய்க்கிழமை சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இந்தத் தாக்குதலில் 9 போ் உயிரிழந்தனா்.
அதையடுத்து, போலீஸாா் நடத்திய தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, தொபியாஸின் இல்லத்தில் அவரும், அவரது 72 வயது தாயாரும் பிணமாகக் கிடந்தது கண்டறியப்பட்டது. தாயைக் கொன்றுவிட்டு, தொபியாஸ் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் கூறினா்.
தாக்குதலுக்கான இரு கூடங்களுக்கும் குா்து இனத்தவா் அதிக அளவில் வந்து செல்லும் நிலையில், அவா்களைக் குறிவைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கருதுகின்றனா்.

அரிசிக்கு பதில் பணம்: புதுவை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு செல்லும் - ஐகோர்ட் நாராயணசாமி கவலை

மாலைமலர்  :புதுவையில் இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரி: புதுவையில் மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்படாத பிரச்சினை தொடர்ந்து சட்டசபையில் எழுப்பப்பட்டது. இலவச அரிசி வழங்குவதற்கான டெண்டருக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்கவில்லை என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முதல்-அமைச்சர்  நாராயணசாமி தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழுவினர், துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் கிரண்பேடியை சந்தித்தனர். அரிசி வழங்குவதற்கான கோப்புக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அவரிடம்  வலியுறுத்தினர். ஆனால் அந்த கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பி விட்டார். இதுகுறித்து, ஆளுநர் கிரண்பேடி கூறுகையில், புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்க நான் தடையாக இல்லை. மக்கள் தரமான அரிசியை வாங்கிக்கொள்ள இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்க கூறினேன் என தெரிவித்தார்.

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி .. தீவிர சிகிச்சை பிரிவில் .

திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிமாலைமலர் : தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை: தி.மு.க. பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மற்றும் நவம்பரிலும்கூட  திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராதாரவி : ஹாலிவூட் ரேஞ்சுக்கு படம் எடுக்க ஆசைப்படுறீங்க.. பாதுகாப்பை கவனிக்க மாட்டீங்களா.. ஷங்கரை சாடிய..

tamil.filmibeat.com/ :சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேற்று முன்தினம் இரவு லைட்டுகள் அமைக்கப்பட்டிருந்த கிரேன் சரிந்து விழுந்தது. இதில் உதவி இயக்குநர் கிருஷ்ணா புரடெக்ஷன் உதவியாளர் மது, கலை உதவியாளர் சந்திரன் ஆகியோர் மரணமடைந்தனர்.
இந்த சம்பவம் தமிழ்த் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திரை பிரபலங்கள் பலரும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட தொழிலாளர் சம்மேளமான ஃபெப்சியில் இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் டப்பிங் யூனியன் தலைவரும் நடிகருமான ராதாரவி கலந்து கொண்டு:  . அப்போது பேசிய நடிகர் ராதாரவி, விபத்தில் மரணமடைந்த சந்திரனுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் சந்திரன் பார்ப்பதற்கு கரடு முரடாக இருப்பார். ஆனார் பழக மிகவும் இனிமையானவர். பலாப்பழத்தை போன்றவர் சந்திரன். அவரது இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது.
 இது சாதாரணமாக சொல்வதில்லை. மனதில் இருந்து சொல்கிறேன் என்றார். மேலும் மது, மற்றும் கிருஷ்ணாவின் மறைவுக்கும் ராதாரவி இரங்கல் தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் ஒரு கோடி ரூபாய் நிதி அறிவித்ததற்கு நடிகர் ராதா ரவி பாராட்டு தெரிவித்தார்

அதிமுக .: இஸ்லாமியர்களை குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பெயரால் திமுக குழப்பி வருகிறது

மின்னம்பலம் : என்பிஆர், என் ஆர்சி : அதிமுக விளக்கம்! தமிழகத்தில் அதிமுக அரசுக்கு அனைத்து தரப்பிலும் ஆதரவு பெருகுவதை பொறுத்துக் கொள்ள ம் முடியாமல் இஸ்லாமியர்களை குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பெயரால் திமுக குழப்பி வருகிறது என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. முதல்வர் சட்டமன்றத்தில், ‘குடியுரிமை சட்டத்தில் யார் பாதிக்கப்பட்டார்கள் ?” என்று ஆவேசமாக கேட்டது முதல் அதிமுக மீதும் இஸ்லாமியர்கள் கோபமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில், இது தொடர்பாக இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இஸ்லாமிய சமூகத்தினர் குழப்பத்துக்கு ஆளாகவேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஹஜ் மானியமாக 5 கோடி ரூபாய், ரம்ஜான் கஞ்சிக்காக 5145 மெட்ரிக் டன் அரிசி, மாவட்ட ஹாஜிகளுக்கு 20 ஆயிரம் மதிப்பூதியம், உலமாக்களின் ஓய்வூதியம் அதிகரிப்பு உள்ளிட்ட அதிமுக அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டுள்ள துணை முதல்வரும், முதல்வரும்,
“இஸ்லாமிய சமுதாயத்துடன் அதிமுகவுக்கு இருக்கும் நெருக்கமான உறவையும், புரிதலையும் பிரிக்க முயற்சிக்கும் சக்திகளை முறியடித்து எல்லாரும் ஓரினமாக எழுச்சியுடன் முன்னேற்றம் கண்டிட இஸ்லாமிய சகோதர சகோதரிகளைக் கேட்டுக்கொள்கிறோம்.

காவிரி பாதுகாப்பு மண்டலம்! "தமிழக அரசின் சட்டம் வெறும் கானல் நீர்!" -உண்மையை தோலுரிக்கும் ரிப்போர்ட்!

sundarrajan.nakkheeran.in - இரா. இளையசெல்வன் : கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறைவேற்றக்கூடாது என்றும், தமிழ் நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த வாரம் சேலம் மாவட்டம் தலைவாசலில், மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வெளியிட்ட அறிவிப்பு  மக்களிடம் நம்பிக்கையை விதைத்தது. பல்வேறு குடிமைச் சமூக அமைப்புகளும் இந்த அறிவிப்பை வரவேற்றன.
மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த தமிழக மக்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ள சட்டம், மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்கிறது  'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு.

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அட்சய பாத்ராவின தண்டனை பூண்டு வெங்காயம் இல்லாத உணவாம்

tamil nadu, tamil nadu noon meal scheme, aiadmk, சென்னை மாநகராட்சி பள்ளி காலை உணவு, அட்சய பாத்ரா, பூண்டு வெங்காயம் இல்லாத உணவு, akshaya patra foundation, akshaya patra food, iskcon, Tamil indian express/tamil.indianexpress.com : சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 32,000 மாணவர்களுக்கு காலை உணவை வழங்குவதற்காக, அட்சய பாத்ரா அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஈடுபடுத்த அதிமுக அரசு எடுத்துள்ள...
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 32,000 மாணவர்களுக்கு காலை உணவை வழங்குவதற்காக, அட்சய பாத்ரா அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஈடுபடுத்த அதிமுக அரசு எடுத்துள்ள முடிவால் தமிழ்நாட்டின் சிறப்புமிக்க நண்பகல் உணவு திட்டமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தின் சிந்தனையில் திட்டமிடப்பட்ட இந்த திட்டத்திற்கு ஆளுநரின் விருப்ப நிதியில் இருந்து ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட சமையலறைகளை அமைப்பதற்காக என்.ஜி.ஓ.க்கு சென்னையில் உள்ள பிரதான இடங்களில் மாநகராட்சி நிலம் ஒதுக்கியுள்ளது.

பாஜக நாராயண் திரிபாதி : வின் டிவி மட்டும் தான் நல்ல டிவி

வின் டிவி மட்டும் தான் நல்ல டிவிவெப்துனியா : வின் டிவி மட்டும் தான் நல்ல டிவி சமீபத்தில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைக்குரிய சில விஷயங்கள் குறித்து பேசியதை எந்த ஊடகமும் பெரிதாக கண்டிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் பாஜக பிரமுகர் நாராயண் திரிபாதி தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவு செய்துள்ளதாவது:'
வின்' தொலைக்காட்சியை தவிர வேறு எந்த தொலைக்காட்சியும் தி மு க மீது தமிழ் தொலைக்காட்சிகளுக்கு உள்ள பாசத்தையோ அல்லது அச்சத்தையோ வெளிப்படுத்துகிறது.
பாஜகவினர் தனிப்பட்ட முறையில் தங்களின் கருத்துக்களை தெரிவித்தாலும் கூட, அதை கட்சியின் கருத்தாக்கி இடது சாரிகள், திராவிட அடைமொழி கொண்ட இயக்கங்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் என்ற அணிவகுப்போடு பாஜகவின் மீது தாக்குதல் தொடுக்கும் ஊடகவியலாளர்கள் மிக கொச்சையாக, தரம் தாழ்ந்து, கேவலமாக பணத்திற்காக எதையும் செய்யும் விபச்சாரிகள் என்று திமுக சொன்னது ஏன் என்ற கேள்வியை கேட்க கூட தயங்குவது மிக கொடுமை

கொரோனா சீனாவில் 2236 பேர் உயிரிழப்பு .... ஒரே நாளில் பெருமளவு சரிந்த கொரோனா பாதிப்பு


தினத்தந்தி : கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2236 ஆக அதிகரித்துள்ளது.
பெய்ஜிங், சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன.
நேற்று கொரோனா வைரஸ் தாக்குதல் பெரிய அளவில் இருந்து குறைய தொடங்கியுள்ளதாக சீன அரசு அறிவித்தது. இந்நிலையில், சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2236 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75, 465 ஆக உள்ளது.

சீனர்கள் ஆன்லைன் மூலமே பொருட்களை வாங்குகிறார்கள் .. கொரோன வைரஸ் பாதுகாப்பு ...

Theneeweb : பெய்ஜிங்: சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஒட்டு மொத்த மக்களும், தங்களது தேவைகளை இன்டர்நெட் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் யாரும் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்று சீன அரசு அறிவுறுத்தியது.
இதையடுத்து, தங்களது உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை சீன மக்கள் அனைவரும் இணையதளம் மூலம் பொருட்களை வாங்கினால், வீடுகளுக்கேக் கொண்டு வந்து கொடுக்கும் வசதியை பெரிதும் நம்பியுள்ளனர்.
இது பற்றி சீனப் பெண் வாங் கூறுகையில், அவர்களது சேவை இல்லாவிட்டால் எங்களால் இவ்வளவு எளிதாக வாழ்ந்திருக்கவே முடியாது என்கிறார்.

வியாழன், 20 பிப்ரவரி, 2020

கூகிள் - விக்கிபீடியா இந்திய மொழகளில் தமிழ் முதலிடம் ..

Neechalkaran Raja : சர்வதேச அமைப்புகளான கூகிள் மற்றும் விக்கிப்பீடியாவின் போட்டியில் தமிழ் விக்கிப்பீடியா முதலிடம் பெற்றுள்ளது. ஏதோ போட்டிக்கு எழுதிக் காட்டிக் கொள்ள நடந்ததல்ல. தமிழகத்தில் அதிகம் தேடப்படும் தலைப்புகள், இந்திய அளவில் முக்கியமான தலைப்புகள் என அனைத்தும் இந்தச் சமூகம் பயன்படும் தலைப்புகளில் எழுத வேண்டும் என்று முன்முடிவோடு தரத்தில் சமரசமின்றி எழுதப்பட்டவை. அனைத்தும் தன்னார்வத்தில் எடுத்துக் கொண்டு தமிழ் உள்ளடக்கத்தை இணையப்பரப்பில் அதிகரிக்கும் நோக்கோடு எழுதப்பட்டவை. இனி நீங்கள் கூகிள் இத்தலைப்புகளில் தேடும் போது காணக்கிடைக்கும் முதல் பதிலே இந்தப் போட்டியில் எழுதப்பட்டதாக இருக்கலாம். இணையத்தில் தமிழின் வளர்ச்சிக்கு இந்த முன்னெடுப்பு முக்கியமானதே.
கூட்டு முயற்சியில் இந்திய அளவில் கடந்த மூன்று மாதங்களாக நடந்துவந்த அனைத்து மொழி விக்கிப்பீடியக் கட்டுரைப்
ஒரு காட்டில் எத்தனைப் புலிகள் உள்ளன என்பதைக் கொண்டு அந்தக் காட்டின் இயற்கை வளத்தை கணித்துவிடலாம். அதாவது புலி வாழ்வதற்கான இரை விலங்குகளும், அவை வாழ்வதற்கான புல்வெளிகளும், புல் வளர்வதற்கான நீர் ஆதாரங்களும் என ஒரு தொடர் சங்கிலி அந்தக் காட்டின் சூழலைப் பிரதிபலிக்கிறது. அதுபோல ஒரு மொழியின் வளர்ச்சியை அம்மொழி விக்கிப்பீடியாவின் கட்டுரை எண்ணிக்கை காட்டும். அதனடிப்படையில் இந்தக் கட்டுரைப் போட்டியின் பெயரே வேங்கைத் திட்டம் என்று கொண்டு போட்டி நடந்தது.

உனக்கென்னப்பா... நீ பைத்தியம். எது வேணாலும் பேசலாம். 5 மில்லியன் டன் அமித் ஷா உளறல்

Shahjahan R : உனக்கென்னப்பா... நீ பைத்தியம். எது வேணாலும் பேசலாம்...
என்று ஒரு டயலாக் இப்போதெல்லாம் அடிக்கடி பேஸ்புக்கில் பார்க்கிறேன். ஏதோவொரு திரைப்படத்தில் வந்திருக்க வேண்டும். எந்த்த் திரைப்படம், யார் பேசும் டயலாக் என எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் இந்த டயலாக் இன்றைய காவிகளின் ஆட்சிக்காலத்தில் ஏகப்பட்ட பேருக்குப் பொருந்துகிறது என்பதால், எந்தவொரு உளறலைப் பார்த்தாலும் இந்த டயலாக்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. இன்று ஜக்கியின் உளறல்.
ஐந்து மில்லியன் டன் எகானமி என்று அமித் ஷா உளறியபோது பொத்திக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்ததுபோல, இந்த ஆள் இஷ்டத்துக்கு உளறும்போதும் எவனும் வாய்பேசாமல் கேட்டுக் கொள்கிறான். ஆனால், அந்த உளறலைப் பற்றி கேள்வி கேட்டால் மட்டும் ஏகப்பட்ட கேள்விகள், விளக்கங்கள் வருகின்றன. அதனால் இந்தப் பதிவு.
இன்பாக்சில் கேள்வி கேட்டவர்கள், விளக்கம் அளித்தவர்கள் மீது எந்தக் கோபமோ வருத்தமோ இல்லாமல்தான் இதை எழுதுகிறேன். ஏனென்றால், அவர்கள்தான் என்னைப் படிப்பிக்கிறவர்கள். புதிது புதிதாக பல விஷயங்களைக் கற்க வைப்பவர்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி கூறிக்கொண்டுதான் இதை எழுதுகிறேன்.
ஜக்கி உளறலில் குறிப்பான இரண்டு அம்சங்கள் –
1. ஆண் குழந்தை பிறந்தால் ஒரு வகையான பால் சுரக்கும், பெண் குழந்தை பிறந்தால் ஒரு வகையான பால் சுரக்கும்.
2. இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் இரண்டு மார்புகளிலும் இரண்டு வகையான பால் சுரக்கும்.

டி.எம். கிருஷ்ணா அதிரடி : கர்நாடக ஹிந்துஸ்தானி எல்லாவற்றிலும் ஜாதி இருக்கு

.

இப்ப கலையுலகத்திலேயே மாற்றங்கள் நடக்கிறது , ஆனால் மிகவும் மெதுவாக நடக்கிறது .
டிசெம்பர் சீசன்ல விசேஷமாக மாற்றங்கள் வந்திருக்கிறதா என்றால் ,
என் கண்பார்வையில் பெரிதாக ஒன்றும் இல்லை.
நான் வந்து இன்னும் கர்நாட்டக இசை உலகத்தில் இருக்கிற ஆளுதான்.
அதில இருக்கிற பெனிபிட்ஸ்சும் இன்னும் வருகிறது.
அதை நான் சொல்ல விரும்புறேன் .
இப்படி நான் பேசுறதை கேட்டுவிட்டு என் கர்நாடிக் கச்சேரிக்கு வர்றவங்க வராம இருக்க போறாங்கள ?  இல்லையே!
அந்த பெனிபிட் எனக்கு இன்னும் வருதில்லை ?
நெறைய பேர் நினைக்கலாம் இது நல்ல பிராடு ஆக இருக்கு .
இந்த ஆளு வந்து இப்படி எல்லாம் பேசுறான் .
உள்ள இருக்கிற பெனிபிட்டும் எடுத்துக்கிறேன் .
வெளியே இருக்கிற பெனிபிட்டும் எடுத்துக்கிறான் .
அதுதான் நிஜம் .. அதுதான் ஜாதி . அதுதான் என்னோட ஜாதி .
அதுதான் என்னோட ஜாதில எனக்கு லைவ் பூரா இருக்கிற பெனிபிட் .
நான் ஜாதி இல்லைன்னு எவ்வளவு கத்தினாலும் என்னோட ஜாதியோட பெனிபிட் எனக்கு இருக்கு .
மைய்லாப்பூர்ல இருக்கிறவங்க இன்னும் என்பாட்டை கேப்பாங்க .
மாற்றங்கள் வருமா ? வரலாம் . .நான் இருக்கிறேனோ இல்லையோ மாற்றங்கள் வந்தால் நல்லது.

இந்தியன் 2 .. விதிமீறல்தான் விபத்துக்கு காரணம் .. அளவுக்கு அதிகமான சுமையை கிரேனில் ஏற்றிய படக்குழு

tamil.filmibeat.com : சென்னை: நேற்று இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த கிரேன்
விபத்துக்கு என்ன காரணம் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது. நேற்று அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். நேற்று காயம் அடைந்த எல்லோருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள்.
இந்த விபத்துக்கு சின்ன விதிமீறல்தான் காரணம் என்று கூறுகிறார்கள். நேற்று படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்டு இருந்த லைட் கீழே விழுந்துதான், இந்த விபத்து ஏற்பட்டது. பொதுவாக கிரேன்களில் ஒரு குறிப்பிட்ட அளவுதான் எடை வைக்க முடியும். ஒரு அளவிற்குத்தான் தாங்க முடியும்.அதற்கு மேல் எடை போனால், கிரேன் விழுந்துவிடும். இந்த நிலையில் நேற்று அதிக அளவில் கிரேனில் லைட் கட்டியிருக்கிறார்கள். இரவில் எடுக்கப்பட்ட சூட். மிக முக்கியமான காட்சி. இதனால் அதிக ஒளி வேண்டும் என்று கூறி நிறைய லைட்டுகளை கட்டி இருக்கிறார்கள்.

கேரள போலீஸின் 25 ரைஃபிள்கள்; 12,061 தோட்டாக்கள் எங்கே?!’ – சிஏஜி அறிக்கை

கேரள முதல்வர் பினராயி விஜயன்vikatan.com - தினேஷ் ராமையா : கேரள அரசு துறைகளில் நடைபெற்ற ஊழல் குறித்து தணிக்கைத் துறை சார்பில் அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரள அரசு துறைகளில் அம்மாநில தணிக்கைத் துறை 2013-18 ஆண்டுகளில் நடத்திய ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை அம்மாநில சட்டப்பேரவையில் கடந்த 12ம் தேதி சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் இருந்த விவரங்கள் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்ன.
அரசு துறைகளிலேயே மோசமான செயல்பாடு கொண்ட துறையாக வீட்டு வசதித் துறையை அந்த அறிக்கை பட்டியலிட்டது. ஐந்து ஆண்டுகளில் ரூ.96.77 கோடி மதிப்பிலான பணிகளைச் செய்ய வீட்டு வசதித் துறை சார்பில் ரூ.289.96 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படாதால் வரி வருவாய் இழப்பும் கேரள அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறியது அந்த அறிக்கை. குறிப்பிட்ட இந்தக் கால இடைவெளியில் மட்டும் எர்ணாகுளம் பகுதியில் கட்டட ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இடையே செய்யப்பட்ட 237 ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்படாததால், அரசுக்கு ரூ.11.06 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்பது தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் கிடையா!து

Santhanam Krishnan : தமிழகத்தில் சமூகநீதி என்ற சொல்லுக்கு வேறு ஒரு பெயரும் உண்டு.
ஒரு ஐடி கம்பெனியின் நிறுவனரான நண்பரின் வீடியோவில் இருந்து எடுத்த குறிப்புகளை வைத்து இப்பதிவை எழுதுகிறேன்.
தமிழகத்துடன் தொழில் துறையில் நமக்கு ஓரளவு அருகில் இருப்பது மஹாராஷ்டிரா. ஆனாலும் தமிழகத்தில் 38000 தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால் 2ம் இடத்தில் இருக்கு மஹாராஷ்டிராவில் 28000 தான். எவ்வளவு பெரிய வேறுபாடு. தமிழக தொழிலாளர் எண்ணிக்கை 33லட்சம். அங்கு 28லட்சம் மட்டுமே.
அதை போல் கல்வியில் தமிழகம் 50% என்கிறார் நண்பர். (இணைப்பு முதல் பின்னூட்டத்தில்) அதாவது 12ம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரி சென்றவர்களை மட்டும் வைத்து எடுத்த கணக்கெடுப்பு இது. சீனாவின் சராசரியே 43% தான். இந்தியாவின் சராசரி வெறும் 25% தான். இந்தியாவை விட நாம் இரட்டிப்பு வளர்ச்சி கண்டிருக்கிறோம். இந்தியா தமிழகத்தை நெருங்க இன்னும் 25 ஆண்டுகளாவது ஆகும். அப்போது எட்ட முடியாத தூரத்தில் தமிழகம் இருக்கும் என்பது உறுதி.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த13 ( பார்பனர்) கடற்படை அதிகாரிகள்

பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை விற்றதாக 13 இந்திய கடற்படை அதிகாரிகள் கைது. இவர்கள் தங்களின் ஃபேஸ்புக் பக்கங்களில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பதிவுகளாக பிழிந்து தள்ளியிருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை பாருங்கள்:
1) சதீஷ் மிஸ்ரா
2) தீபக் திரிவேதி
3) பங்கஜ் ஐயர்
4) சஞ்சீவ் குமார்
5) பப்லு சிங்
6) சஞ்சய் திருபாதி
7) விகாஸ் குமார்
8) ராகுல் சிங்
9) சஞ்சய் ராவத்
10) தேவ் குப்தா
11) ரிங்கோ தியாகி
12) ரிஷி மிஸ்ரா
13) வேத்ராம்
இவ்வளவு பெரிய நிகழ்வு மீடியாக்களில், சமூக வலைதளங்களில் எதிலும் ஒரு பெரிய விவாதமாக தென்படவே இல்லை. ஒரே ஒரு காரணம் தான்...கைதானவர்கள் ஒருவர் கூட முஸ்லீம் இல்லை.
ஒரே ஒரு முஸ்லிம் பெயர் மட்டுமே இருந்திருந்தால் இந்நேரம் தேசபக்தர்கள் பொங்கி எழுந்து தங்களின் உணர்வுகளை கொட்டி தீர்த்து இருப்பார்கள். CAA, NRC, NRP எல்லாம் ஏன்? எதற்கு? என்றெல்லாம் போகாத ஊருக்கு வழி போற வர்றவன் தலை மேல் என்று ஏறியிருப்பார்கள்.
வடை போச்சே!!! --   கிளர்ச்சி சூரியா

பாகிஸ்தானுக்கு உளவு: 13 இந்தியக் கடற்படையினர் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு: 13 இந்தியக் கடற்படையினர் கைது!மின்னம்பலம் : பாகிஸ்தான் உளவுத் துறை செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு வைத்து தகவல்களைப் பரிமாறியதாக 13 இந்தியக் கடற்படை அதிகாரிகள் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
ராணுவ ரகசியங்களைக் கசியவிடும் உளவாளிகளைத் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்து வருகின்றனர். அண்மையில் கடற்படை அதிகாரிகள் சிலர், பாகிஸ்தானுக்குத் தேசியப் பாதுகாப்பு ரகசியங்களைக் கூறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆந்திர போலீசாருடன் இணைந்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இதில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கடற்படை அதிகாரிகள் இணைந்து பாகிஸ்தானுக்குத் தகவல்களை பரிமாற்றம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்கா : புதிய இந்தியா குடியுரிமைச் சட்டம் நாட்டின் முஸ்லிம் சமூகத்தை மோசமாக பாதிக்கும்!

தினத்தந்தி : இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம் சமூகத்தை மோசமாக பாதிக்கும் என சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) தெரிவித்துள்ளது.
வாஷிங்டன். சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- குடியுரிமை (திருத்த) சட்டம் 2019 மற்றும் தேசிய குடியுரிமை பதிவு ஆகியவை பாஜகவின் இந்துத்துவ சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டவை, மேலும் இந்தியாவில் முஸ்லிம்கள் நிலையற்றவர்களாக மாறக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ளது.
முஸ்லிம்கள் முதன்மையாக தேசிய குடியுரிமை பதிவில் இருந்து விலக்கப்படுவதன் மூலம் விளைவுகளைச் சுமப்பார்கள், அதில் நிலையற்ற தன்மை, நாடுகடத்தல் அல்லது நீண்டகால தடுப்புக்காவல் ஆகியவை அடங்கும். முஸ்லிம்களை இந்தியாவில் இருந்து விலக்குவதற்கான திட்டங்களை வெளிப்படுத்திய பாஜகவின் பல்வேறு தலைவர்களின் கருத்துகளையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

iஇந்தியன் 2 படுகொலைகள் ... ஊழலை ஒழிக்க படமெடுக்கும் கமல் சங்கர் லைக்கா கூட்டணி!

Jeeva Sagapthan : பிரம்மாண்ட சினிமாக்களின் படு கொலைகள் - ஜீவசகாப்தன்
தொடக்க காலத்தில் வசனங்கள் வழியே கதை சொன்னார்கள். பின்னர் காட்சிகளின் வழி பேசினார்கள். 90 களுக்குப் பிறகு தொழில் நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துகிறோம் என்ற பெயரில் பிரம்மாண்ட சினிமாக்கள் அதிகம் வரத் தொடங்கின. கதையை விட கிராபிக்ஸ் காட்சிகளும், ஒலி அமைப்பு முறையும் அதிகம் பேசப்பட்டன. திரைப்படங்களில் எதார்த்தம், மண்ணுக்கேற்றத் தன்மை, ஊர் அமைப்பு எதுவும் தேவையில்லை. பிரம்மாண்டம் என்ற ஒன்று போதும் என்ற மனநிலையை இளைஞர்களுக்கு உருவாக்கினார்கள்.
அப்படி ஒரு மனநிலையை உருவாக்கியவர்களுள் முக்கியமானவர் ஷங்கர். அரசியல்வாதிகளின் ஊழலும், உதிரி தொழிலாளர்களின் அலட்சியமும்தான் நாட்டின் அவலத்திற்கு காரணம் என்பதுதான் இவருடைய படங்களின் சாரம்சமாக இருக்கும். இந்த உண்மையை மக்களிடம் கொண்டு செல்வதற்காக, பல கோடி ரூபாயைச் செலவழிப்பார். அதற்காக, சினிமா டிக்கெட்டுகளும் பல மடங்கு அதிகமாக விற்கப்படும். என்ன செய்ய? அரசியல்வாதிகளின் ஊழலை ஒழிக்க ஷங்கர் பிரம்மாண்டமாகச் செலவு செய்கிறார். அவ்வளவுதான்.

ரீமிக்ஸ் பாடல்கள் எரிச்சலூட்டுகின்றது ... ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் !

rahmanவெப்துனியா :  ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ! இந்திய இசையின் அடையாளமாகப் பார்க்கப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசையமைப்பில் வெளியாகும் பாடல்கள் யாவும் உலக அளவில் பிரபலமாகிவிடும். இந்நிலையில், ரீமிக்ஸ் பாடல்கள் மிகவும் மோசமாகவும் எரிச்சலூட்டுவதாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
தனது பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்படுவது குறித்து அவர் கூறியதாவது : கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ஓகே ஜானு என்ற படத்தில் ஹம்மா ஹம்மா என்ற ரீமிக்ஸ் பாடல் பிடித்திருந்தது. ஆனால் அதன் பிறகு வெளியான பாடல்கள் எனக்குப் பிடிக்கவில்லை; அவை எனக்கு எரிச்சலூட்டுவதாக உள்ளது என தெரிவித்திருந்தார். மேலும் ரிமிக்ஸ் டிரெண்ட் இப்போது முடிந்துவிட்டது என தெரிவித்தார்.

சென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் காமெரா ...உதவி பேராசிரியர் சுபம் பானர்ஜி கைது

சென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் நடந்த கொடுமைவெப்துனியா : சென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் நடந்த கொடுமை சென்னை ஐஐடியில் பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த உதவி பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
;சென்னை ஐஐடியில் விண்வெளி பொறியியல் துறை ஆய்வுகூடத்தில் பெண்கள் கழிவறை ஒன்று உள்ளது.
இதில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் சென்றபோது, அதே துறையைச் சேர்ந்த உதவிப்பேராசிரியரான சுபம் பானர்ஜி என்பவர் கழிவறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
பெண்கள் கழிவறையில் இவருக்கு என்ன வேலை என சந்தேகம் அடைந்த அந்த மாணவி கழிவறைக்குள் சென்று உற்று கவனித்தபோது தண்ணீர் குழாய்களுக்கு இடையே இருந்த ஒரு கேப்பில் செல்போன் ஒன்றின் கேமிரா ஆன் செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
;இதனையடுத்து அந்த கழிவறையில் மறைந்து நின்று கொண்டிருந்த உதவிப்பேராசிரியர் சுபம் பானர்ஜியிடம் அந்த மாணவி இதுகுறித்து விசாரித்த போது, அந்த செல்போன் அவருடையது என்பது உறுதி செய்யப்பட்டது.

திருப்பூர் - சேலம் கோர விபத்து: 25 பேர் உயிரிழப்பு

திருப்பூர் - சேலம் கோர விபத்து: 25 பேர் பலி!மின்னம்பலம் : திருப்பூரில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் 20 பேர் பலியாகி உள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரள அரசுக்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று பெங்களூருவிலிருந்து எர்ணாகுளம் நோக்கி நேற்று இரவு 8 மணிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. அதுபோன்று கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்றும் சென்றுள்ளது.
இன்று அதிகாலை 3.15 மணி அளவில் அவிநாசி அருகே சென்று கொண்டிருக்கும்போது வேகமாக சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கேரள பேருந்து மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்து முற்றிலுமாக சேதமடைந்தது. குறிப்பாகப் பேருந்தின் வலது புறம் முழுவதும் சுக்கு நூறாக நொறுங்கியது.

கொரோனா வைரஸ் தாக்குதல் குறைய தொடங்கியுள்ளது - சீன அரசு


தினத்தந்தி : பெய்ஜிங், சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. இந்நிலையில், சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2118 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,576 ஆக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் பெரிய அளவில் இருந்து குறைய தொடங்கியுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது

திருப்பூரில் லாரி - பேருந்து மோதி ; 20 பேர் உயிரிழப்பு .. பயங்கர விபத்து


தினத்தந்தி : திருப்பூர் மாவட்டம் அவினாசி தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் பலியாகினர். திருப்பூர், திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து  திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரியும் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில், 3 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல்,  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நரிப்பள்ளம் பகுதியில் சுற்றுலா பேருந்தும் ஆம்னி பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.   < 20-க்கும் மேற்பட்ட பயணிகள்  படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்தில் பலியானவர்கள் நேபாள நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.&

இந்தியன் -2 படப்பிடிப்பில் மூவர் உயிரிழப்பு . கிரேன் சரிந்து விழுந்தது


  தினத்தந்தி : சென்னை, லைகா நிறுவனம் தயாரிப்பில் சங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்திற்காக சென்னை அருகே பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று செட் அமைக்கும் பணிகள் நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விபத்து ஏற்பட்டதில் உதவி இயக்குனர் மது, சங்கரின் இணை இயக்குனர் கிருஷ்ணா, உதவி நடன இயக்குனர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

CAAவை எதிர்ப்பவர்கள் Vs CAAவை ஆதரிப்பவர்கள்! ... இரண்டே பிரிவுகள்தான் .. Stand up before the nation falls

சுமதி விஜயகுமார் : Unity in diversity என்பதெல்லாம் இப்போது இல்லை.
இரண்டே இரண்டு பிரிவுகள் தான்.
CAAவை எதிர்ப்பவர்கள் Vs CAAவை ஆதரிப்பவர்கள்
ரத்தம் சிந்தி போராடும் மாணவர்களின் பக்கம் துணை நிற்பவர்கள் Vs மாணவர்களின் போராட்டத்தில் தீவிரவாதிகள் கலந்து விட்டார்கள் என்று கூறுபவர்கள்
இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையையே மாற்றி விட்டார்கள் என்று அறைகூவல் விடுபவர்கள் Vs இந்துக்களின் பாதுகாப்பிற்கு தாங்கள் தான் காவலர்கள் என்று கூறுபவர்கள்
இதுவரை அமைதியாய் இருந்தவர்கள் கூட இப்போது ஏதாவது ஒரு பக்கம் சாய்ந்து தான் ஆக வேண்டும். அது எந்த பக்கம் என்பது அவரவர் விருப்பம். ஆனால் அப்படி எடுக்கப்படும் முடிவு இது எப்போதும் போல் காந்தி நாடாகவே இருக்க போகிறதா இல்லை சில நாடுகளை போல அடிப்படைவாத நாடாக மாறி நாட்டையே மத குழிக்குள் தள்ள போகிறதா என்பதை முடிவு செய்யும்.
6 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியா அடைத்திருந்த வளர்ச்சி என்பது அவ்வளவு எளிதாக வந்ததில்லை. எத்தனை குறைகள் இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சியாளர்களால் கட்டமைக்கப்பட்ட சாம்ராஜ்யம். அந்த ஊழல் கட்சி கட்டமைத்த பொதுத்துறை நிறுவனங்களைத்தான் இப்போது இந்த தேசபக்கத்தி பற்றி நமக்கு வகுப்பெடுப்பவர்கள் தனியார் நிறுவனத்திற்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் என்ன முதலில் இந்த துலுக்கர்களை நாடு கடத்த வேண்டும் அதுதானே அத்தியாவசியம்.

இலங்கை .. பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறும் வாய்ப்பில்லை?

Jeevan Prasad : எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும்
பெரும்பான்மையான ஆசனங்களை பெறும் வாய்ப்பில்லை.
நுனிப் புல் மேய்கிறேன் ........ - ஜீவன்
ரணில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும் அவர் முன்னைய ஆட்சியினர் வாங்கிய கடனை அடைப்பதில் கவனம் செலுத்துவாரே தவிர , தனது கட்சிக்காரர்களுக்கு எந்த ஒரு நன்மையையும் செய்தவரல்ல. ஒரு சிலருக்கு வேலைகளைக் கூட கொடுத்ததில்லை என குற்றம் சாட்டுகிறார்கள். அது காலம் காலமாக நடக்கும் ஒன்றாக இருந்து வருகிறது. அவரது சிந்தனைகள் நல்லவையாக இருக்கலாம். ஆனால் அதை செயல்படுத்தும் திறனோ அல்லது முதுகு பலமோ அவரிடம் இல்லை. இதுவே அவரால் தொடர்ந்து ஆட்சியை தொடர முடியாமல் போனதற்கான காரணம். ரணில் வெள்ளைக்காரன் போல ஆங்கிலத்தில் சிந்திப்பவர். அது இலங்கையில் வாழும் சிங்களவர்களாலேயே ஏற்க முடியாதது. ஆகக் குறைந்தது முன்னைய ஆட்சியாளர்கள் நியமித்த அதிகாரிகளைக் கூட மாற்றி தமக்கு ஆதரவான அதிகாரிகளை நியமித்து தமது கட்சியினருக்கு வேலை வாய்ப்பையாவது கொடுக்க திராணியற்றவர். கேம் மூலம் காய் நகர்த்துவதில் வல்லவர். ஆனால் கேம் எப்போதும் வெற்றியளிப்பதில்லை. காலத்தை இழுத்தடிப்பவர். இதனால் அடிமட்ட தொண்டர்கள் விரக்தியாக உள்ளனர். பரம்பரை ஐதேகவினர் கூட உட் கட்சி மோதலால் உள்ளே என்ன நடக்கிறது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள். ரணிலின் நடத்தையால் ஒரு காலத்தில் ஒரு போஸ்ட்டர் அடிக்கக் கூட ஆள் இல்லாத நிலை இருந்தது. ரணில், சஜித்தை அழிப்பதாக நினைத்து ஐதேகவை அழித்துக் கொண்டிருக்கிறார். அதை அநேகர் உணருகிறார்கள். மைத்ரி சுதந்திரக் கட்சியை இல்லாமல் செய்தது போல , ரணில், ஐதேகவை இல்லாமல் செய்துவிட்டே வீடு செல்வார் என சொல்கிறார்கள் !

புதன், 19 பிப்ரவரி, 2020

குடியுரிமையை நிரூபிக்க 127 பேருக்கு நோட்டீஸ் ? ஆதார் அடையாள அட்டை:உண்மை என்ன?


தீப்தி பத்தினி - பிபிசி தெலுங்கு : ஹைதராபாத்தில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் முகாமில் உள்ள அகமது கபீர் மற்றும் அவரது மனைவி. இவர்கள் 2016-இல் ஹைதராபாத்துக்கு வந்தனர் (கோப்புப்படம்) தவறான தகவல்களை அளித்து ஆதார் அடையாள அட்டையை பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், ஹைதராபாத்தில் வாழ்ந்துவரும் மொஹம்மத் சத்தார் கான் என்பவர், இது தொடர்பாக தனக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆதார் பிராந்திய அலுவலகம், தான் இந்திய குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிபிசி செய்தியாளர் தீப்தி பத்தினியிடம் பேசிய சத்தார் கான், தான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்றும், தனது தந்தை மத்திய அரசால் நடத்தப்படும் ஆல்வின் நிறுவனத்தில் பணியாற்றியதாகவும், தற்போது தனது தாய் ஓய்வூதியம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
தன்னிடம் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பத்தாம் வகுப்பு கல்வி சான்றிதழ் போன்ற ஆவணங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
மூன்று நாட்களுக்கு முன்னதாக இந்த நோட்டீஸை தான் பெற்றதாக தெரிவித்த அவர், அதன் விவரங்கள் புரியாததால் அது குறித்து அறிய உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரை அணுகியுள்ளார்.
ஆதார் ஒழுங்குமுறைகள் சட்டம் 2016-ன் பிரிவு 6 மற்றும் சட்டவிதி 30-இன்படி இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மக்கள் பயன்படுத்திய பணத்தை அழிக்கும் சீன அரசு.. கொரோனாவைத் தடுக்க அதிரடி நடவடிக்கை!

யுவான் - சீனப் பணம்vikatan.com - சத்யா கோபாலன் : கொரோனாவைக் கட்டுப்படுத்த சீன மக்கள் பயன்படுத்தும் யுகான் பண நோட்டுகளை அழிக்க அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருக்கும் இறைச்சி சந்தையிலிருந்து மக்களின் உயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸ் உருவானதாகக் கூறப்படுகிறது. இந்த வைரஸ் சீன மக்களைப் பெரும் பாடுபடுத்திவருகிறது. சீனா மட்டுமல்லாது 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சீனா பல்வேறு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 70,000 -த்தை தாண்டி விட்டது.
இறந்தவர்களின் எண்ணிக்கை 1,700 பேருக்கு மேல் போய்க்கொண்டிருக்கிறது. போக்குவரத்துக்குத் தடை, வெளியில் நடமாடக் கட்டுப்பாடுகள், ஒரே வாரத்தில் மிகப் பெரும் மருத்துவமனை, பல்வேறு மருத்துவ வசதிகள் எனத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துவருகிறது. வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு ரோபோக்களின் உதவியுடன் உணவு போன்ற தேவையான அனைத்துப் பொருள்களும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. > அதேபோல் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் போன்ற அனைவரும் தங்களின் குடும்பங்களைப் பிரிந்து பாதிக்கப்பட்டவர்களுக்காக இரவு பகலாக வேலை செய்துவருகின்றனர்.

டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது அதிருப்தி.. நாங்கள் நன்றாக நடத்தப்படவில்லை


tamil.indianexpress.com : அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிய போதிலும் அமெரிக்கா - இந்தியா வர்த்தக உறவுகள் குறித்து
வெளிப்படையான அதிருப்தியை, தாங்கள் இந்தியாவால் சிறப்பாக...
அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிய போதிலும் அமெரிக்கா-இந்தியா வர்த்தக உறவுகள் குறித்து வெளிப்படையான அதிருப்தியை, தாங்கள் இந்தியாவால் சிறப்பாக நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். “நாங்கள் இந்தியாவால் நன்றாக நடத்தப்படவில்லை. பிரதமர் மோடியை நான் மிகவும் விரும்புகிறேன்”என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியவுடன் ஒரு பெரிய ஒப்பந்தத்தை செய்வதாகவும் அது நவம்பரில் அதிபர் தேர்தலுக்கு முன்பு செய்யப்படுமா என்பது அவருக்கு தெரியாது என்றும் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 24 -25 தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அதற்கு இன்னும் ஒருவாரம் உள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப், “”நாங்கள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யலாம். ஆனால், பின்னர், நான் உண்மையில் பெரிய விஷயங்களைப் பெறலாம். நாங்கள் இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை செய்கிறோம். அது அதிபர் தேர்தலுக்கு முன்னர் செய்யப்படுமா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் இந்தியாவுடன் எங்களுடைய மிகப் பெரிய ஒப்பந்தம் இருக்கும்” என்று கூறினார்.

அதிர வைத்த சிஏஏ போராட்டம்: குழம்பிய காவல் துறை!


ஸ்தம்பிக்க வைத்த சிஏஏ போராட்டம்: குழம்பிய காவல் துறை!மின்னம்பலம் : சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமிய கூட்டமைப்புகள் சார்பில் சென்னையில் இன்று (பிப்ரவரி 19) சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதுபோல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இஸ்லாமிய கூட்டமைப்பினர் தேசியக் கொடி மற்றும் சிஏஏ எதிர்ப்பு பதாகைகளுடன் சென்று முற்றுகையிட்டனர்.
அவர்களை கைது செய்த காவல் துறையினர் தனியார் திருமண மண்டபங்களில் தங்கவைத்து சிறிது நேரத்திற்குப் பிறகு விடுவித்தனர். போராட்டங்களின்போது கைது செய்யப்பட்டவர்கள் மாலை 5 மணிக்கு விடுவிக்கப்படுவது வழக்கம் என்ற நிலையில், முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது தொடர்பாக விசாரித்தோம்...
இஸ்லாமியர்களின் போராட்ட அறிவிப்பு வெளியானதும் போராட்டக்காரர்களை கைது செய்து அழைத்துச் செல்ல வாகனங்கள், தங்க வைக்க திருமண மண்டபங்கள், அவர்களுக்கான மதிய உணவு உள்ளிட்டவற்றுக்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்துவைக்கும்படி காவல் துறை மேலிடத்திலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

ஜல்லிகட்டு போராட்டத்தால் பயனடையும் கர்நாடகா கம்பாலா .. நிசாந்த் ஷெட்டி .. சீனிவாச ரெட்டி உலக சாதனை


தமிழகத்தில் நடந்த ஜல்லிகட்டு போராட்டம் இந்திய அளவில்
மட்டுமல்லாமல் உலக அளவிலும் உற்று நோக்கப்பட்டது.
அதில் போராடி அடிபட்டு வெற்றி பெற்றவர்கள் தமிழர்கள். அந்த வெற்றியின் பலனை எந்த போராட்டமும் செய்யாமல் அனுபவிக்க தொடங்கி உள்ளார்கள் கர்நாடக ஆந்திரா தெலுங்கான மக்கள் .
அண்மையில் கம்பாலா பந்தயத்தில் ஓடிய சீனிவாச ரெட்டி உசேன் போல்டின் உலக சாதனையை முறியடித்ததை தொடர்ந்து அந்த சாதனையும் முறியடித்துள்ளார் நிஷாந்த் ரெட்டி என்ற இளைஞர்.
இந்த நிகழ்வுகள் நிச்சயம் உலகின் கவனத்தை பெறும்.
மொழி உரிமையாகட்டும் சமுகீதி ஆகட்டும் சுயமரியாதை ஆகட்டும் பகுத்தறிவாகட்டும் இந்திய உபகண்டதிலேயே தமிழகம் நிச்சயமாக ஒரு முன்னோடியாகத்தான் இருக்கிறது!
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யுமாம் மழை

கொரோனா வைரஸ் ; சீனாவில் 2000 பேர் உயிரிழப்பு

பெய்ஜிங், சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. இந்நிலையில், சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,185 ஆக உள்ளது.

துரத்தி வந்த யானையை கண்டு’… ‘அஞ்சாமல் செய்த காரியம்’… நீலகிரி வைரல் வீடியோ


மாலைமலர் :நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே தன்னைத் துரத்தி வந்த யானையை கண்டு அஞ்சாமல், துணிச்சலாக வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
 உதகையில் இருந்து முதுமலை வழியாக மைசூர் செல்லும் சாலையில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவர், சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தெப்பக்காடு அருகே சாலையோர மறைவில் இருந்து திடீரென வெளிப்பட்ட யானை ஒன்று அந்தப் பெண்ணையும், காரில் வந்தவர்களையும் துரத்தத் தொடங்கியது.
கார் வேகமாக சென்றுவிட, சைக்கிளில் இருந்து இறங்கி தள்ளிக்கொண்டே சிறிது தூரம் ஓடிய அந்தப் பெண், பின் சுதாரித்துக் கொண்டு ஓடாமல் நின்றார். அவர் நின்றதைப் பார்த்து யானையும் நிற்கவே, மெல்ல சைக்கிளை பின்னோக்கி தள்ளிக்கொண்டே தப்பினார். யானையும் அங்கிருந்து விலகிச் சென்றது. சமயோசிதமாக செயல்பட்டதால், பெண் சுற்றுலாப் பயணி யானையிடமிருந்து உயிர் தப்பினர். சக சுற்றுலாப் பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த செல்போன் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்டன்ட் நடிகர் கிருஷ்ணன்.. அப்போ ரஜினி, விஜய், ஷாருக் வரை… இப்போ தள்ளுவண்டிக் கடை!

Mr Tamilnadu KrishnanKrishnanநடிகர் கிருஷ்ணன்vikatan.com - சே. பாலாஜி : “நான் சினிமா ஆர்ட்டிஸ்ட். பவுன்சரும்கூட. இருந்தாலும் இப்போ எனக்கு சோறு போடுறது என் தள்ளுவண்டி பீஃப் கடைதான்” – நடிகர் கிருஷ்ணன் திரைத்துறையில் 20 வருடங்கள் ஸ்டன்ட் நடிகராகப் பணியாற்றியர் நடிகர் கிருஷ்ணன். தற்போது சென்னை அடையாற்றில் தள்ளுவண்டிக் கடை போட்டிருக்கிறார் என்ற செய்தி கிடைக்க, அவரைப் பார்க்கச் சென்றோம்.
அடையாற்றில் கிருஷ்ணன் வழக்கமாகத் தள்ளுவண்டிக் கடை போடும் இடத்துக்குச் சென்று, அக்கம் பக்கம் விசாரித்து, கிருஷ்ணன் வீட்டை அடைந்தோம். சிறிய, பழைய வீடு. கிருஷ்ணனிடம், பள்ளியில் தாங்கள் போட்டிகளில் வென்ற கதை சொல்லிக்கொண்டிருந்தார்கள் அவரின் பெண் குழந்தைகள். ‘சொல்லுங்க பிரதர்’ என்று நம்மிடம் திரும்பிய கிருஷ்ணனிடம், அவரைப் பற்றிக் கேட்டோம். மெல்ல, ஹஸ்கி வாய்ஸில் பேச ஆரம்பித்தார்.< “நான் சினிமா ஆர்ட்டிஸ்ட். பவுன்சரும்கூட. இருந்தாலும் இப்போ எனக்கு சோறு போடுறது என் தள்ளுவண்டி பீஃப் கடைதான்.

சீமானின் கொள்ளையை தட்டி கேட்டதால் விலக்கப்பட்ட வியனரசு .. (ஸ்டெர்லைட் மாமூல்)


Shankar A: நாம் தமிழர்  நாறக் கதைகள்-4
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு வெளியேற்றப்பட்டதிற்கு காரணம் சீமான் கொள்ளையை தட்டி கேட்டதே. ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்றபோது தமிழகம் முழுவதும் பல்வேறு இயக்கங்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்தன..அதில் மக்கள் அதிகாரம் ,புஇமு,அரசியல் கட்சிகளில் நாம் தமிழர் கட்சி,இடதுசாரி கட்சிகள். இந்த போராட்டத்தில் போராட்ட குழுவில் முன் நின்று நடத்தியவர்களில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசும் ஒருவர். இந்த போராட்டத்தில் காவல்துறை சுட்டதில் 14 பேர் இறந்து போயினர். பல்வேறு அடக்குமுறை நடைபெற்றது. இதில் போராட்டத்தில் போராடத்திலிருந்து ஒதுங்கி கொள்ள பல்வேறு இயக்க தலைவர்களுக்கும்,கட்சியின் தலைவர்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தால் பெரிய நிதி பேரம் பேசப்பட்டது. நாம் தமிழர் கட்சியை தவிர யாரும் சமரசம் செய்து கொள்ளவில்லை. நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளாராக இருந்த நெல்லை சிவக்குமார்தான் சீமானுக்கும்,ந்ஸ்டெர்லைட் ஆலைக்கும் புரோக்கராக செயல்பட்டார்.

மாதவிடாயோடு சமைக்கும் பெண்கள் பாலியல் தொழிலாளியாக பிறப்பார்கள் ! - சுவாமி குருஷ்னஸ்வரப் அடாவடி பேச்சு


வெப்துனியா:  மாதவிடாய் காலத்தில் சமையல் செய்யும் பெண்கள் பாலியல் தொழிலாளியாக பிறப்பார்கள் ! -
சுவாமி குருஷ்னஸ்வரப் சர்ச்சை பேச்சு
 மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமையல் செய்தால் அவர்கள் அடுத்த பிறவியில் பாலியல் தொழிலாளியாக பிறப்பார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய குருஷனஸ்வரப் தாஸ்ஜிக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குஜராத்தின் பூஜ் நகரில் ஸ்ரீ சஹ்ஜானந்த் என்ற பெண்கள், கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகள், மாதவிடாய் காலங்களில் பூஜை அறைக்குச் செல்கிறார்கள் எழுந்ததால், 60 மாணவிகளின் உள்ளாடைகளை கழற்ற சொல்லி கல்லூரி நிர்வாகம் சோதனை செய்துள்ளது என சில நாட்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது.

அதிமுகவின் ராஜ்யசபா ரேஸ்: முந்தும் மூவர்!

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவின் ராஜ்யசபா ரேஸ்: முந்தும் மூவர்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனுக்கு வந்தது.
“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற சட்டமன்றத் தேர்தலை கட்சிக்குள் யாருக்கும் எவ்வித குறையும் இல்லாத அளவுக்கு எதிர்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். ஏற்கனவே ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்ததைத் தொடர்ந்து ஆட்சியை முழுமையாக முடிக்க எவ்வித ‘நம்பர் ‘ தடையும் இல்லாத நிலையில், அதிமுகவில் அடுத்து ராஜ்யசபா தேர்தலுக்கான புயலையும் சமாளிக்கத் தயாராகிவிட்டார் எடப்பாடி.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

பிப்ரவரி 18, 1992 மகாமகம் உயிரிழந்த 48 மனிதர்கள் .. ஜெயா சசி குருர ஜலக்கிரீடை Flashback விபரங்கள

ஜெயாவும் சசிக்யும் ஒருவர் மாறி ஒருவர் தலையில் தண்ணீரை ஊற்றி கொண்டிருதனர் . கொஞ்சம் தள்ளி மக்கள் உயிரை விட்டுக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சியை வர்ணித்தவர்களின் வர்ணனை ஒலியில் மக்களின் மரண ஓலம் ஜெயலலிதா-சசிகலாவின் காதுகளில் விழவில்லை. போலீஸ் தரப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 48 என்று சொல்லப்பட்டது
Mahalaxm : பிப்ரவரி 18, 1992
வரலாற்றில் இன்று.
கும்பகோணம் மகாமகத்தில்,48
பக்தர்கள் பலர் பலியான தினம் இன்று
1992ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர்
ஜெயலலிதாவுக்கு அவரின் ஜோதிடர்கள் கணித்துக் கொடுத்து இருந்தார்கள்... “நீங்கள் மகாமக குளத்தில் குளித்தீர்கள் என்றால், உங்களது எதிர்காலம் சுபிட்சமாக இருக்கும்” என்று.
பிப்ரவரி 18, 1992. ஜெயலலிதா கும்பகோணம் வருகிறார். அந்த நகரமே அல்லோலப்பட்டது. எப்போதுமே மகாமகம் என்றால், அந்த சிறு நகரத்தில் லட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள். இதில் முதல்வரும் வருகிறார் என்றால் கேட்க வேண்டுமா என்ன...? கட்சிக்காரர்கள், பக்தர்கள், காவலர்கள் என அந்த ஊரே அல்லோலப்பட்டது. அவருக்காக மேற்குக்கரையில் குண்டு துளைக்காத கண்ணாடியிலான குளியல் அறை தயாராக இருந்தது. அங்கு ஜெயலலிதா அமர, சசிகலா தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்க... இன்னொரு பக்கம் கூட்டம் முந்தியடித்துக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் வடக்குக்கரையில் இருந்த தர்மசாலாவின் தடுப்புச் சுவர் உடைந்து விழுந்தது.
சரியாக அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவும் நீராடிவிட்டுக் கிளம்பினார். அவருடன் பெரும் கூட்டம் கிளம்பவே நெரிசல் மேலும் மேலும் அதிகமாகியது... அந்த நெரிசலில் சிக்கி மிதிபட்டு 48 பக்தர்கள் இறந்தனர் அவர்களை தெய்வங்களும் காப்பாற்றவில்லை. அ.தி.மு. க அரசும் காப்பாற்றவில்லை....

குஜராத் 'தீண்டாமை' சுவர்.. ட்ரம்ப் இந்தியா வருகை.. குடிசைவாசிகளை காலி செய்ய அகமதாபாத் நகராட்சி உத்தரவு

  Tamil.indianexpress.com: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வருகையையொட்டி குடிசைவாசிகளை காலி செய்ய அகமதாபாத் நகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரது மணைவி மெலானியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக வருகிற 24ஆம் தேதி இந்தியா வரவுள்ளனர். அவர்களது பயணத்தில் முக்கியமாக குஜராத் மாநிலம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினர் மத்தியில் ட்ரம்ப்பும், மோடியும் இணைந்து ஹவுடி மோடி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர். அதேபோல், கெம்ச்சோ ட்ரம்ப் (குஜராத்தில் மொழியில் கெம்ச்சோ என்றால் எப்படி இருக்கிறீர்கள் என அர்த்தம்) என்ற நிகழ்ச்சியில் மோடியும் ட்ரம்ப்பும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வானது மொதேரா பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் புதிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தை ட்ரம்ப் திறந்து வைக்கவுள்ளார். “மிஸ்டர். டிரம்ப் 3 மணி நேரம் இருப்பார், 100 கோடியை ஒதுக்கு” குஜராத் பாஜக அதிரடி!

கம்பாலா 9.51 வினாடியில் 100மீ - ஸ்ரீனிவாச கௌடா சாதனையை விஞ்சிய நிஷாந்த் ஷெட்டி

ஜல்லிகட்டு போராட்டம் வெற்றி பெற்று சட்ட அங்கீகாரத்தை பெற்றதன் பலனை தற்போது கர்நாடக தெலுங்கான ஆந்திரா போன்ற மானிலங்கள அனுபவிக்கின்றன . கம்பாலா பந்தயத்தில் தற்போது அடுத்தது உலக சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள் சீனிவாச ரெட்டியும் நிஷாந்த் ரெட்டியும் ..இதுவும் ஜல்லிகட்டு போராளிகளின் வெற்றிக்கு சூட்டப்பட்ட மற்றொரு மகுடமாகும்

tamil.indianexpress.com : அவர் முதல் 100 மீட்டர்களை 9.51 நொடிகளில் ஓடிக் கடந்துள்ளார். இது ஸ்ரீனிவாச கௌடாவின் 9.55 நொடிகள் எனும் நேரத்தைவிட குறைவு என்று பி.டி.ஐ செய்தி...
ஓட்டப்பந்தயத்தில் உசைன் போல்ட் உடன் ஒப்பிடப்பட்ட கம்பாலா வீரர் ஸ்ரீனிவாச கௌவுடாவின் வேகத்தையே மிஞ்சியுள்ளார் நிஷாந்த் ஷெட்டி எனும் கம்பாலா எருமைப் பந்தைய வீரர்.
பிப்ரவரி 1 கர்நாடகாவில் நடந்த கம்பாலா எருமைப் பந்தயத்தில் 142 மீட்டர் தூரத்தை 13.62 நொடிகளிலேயே 28 வயதாகும் ஸ்ரீனிவாச கௌடா கடந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சென்ற ஞாயிறன்று பஜகோலி ஜோகிபேட்டு எனும் ஊரைச் சேர்ந்த நிஷாந்த் ஷெட்டி என்பவர் 143 மீட்டர் தூரத்தை தனது அணியின் எருமைகளை விரட்டிக்கொண்டு 13.68 நொடிகளில் ஓடிக் கடந்துள்ளார் என்று கம்பாலா எருமை பந்தைய ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்படுகிறது. வென்னூரில் நடைபெற்ற சூர்ய – சந்திர கம்பாலா போட்டியில் இந்த சாதனையை படைத்ததாக கூறப்பட்டுள்ளது. அதன்படி கணக்கிட்டால் அவர் முதல் 100 மீட்டர்களை 9.51 நொடிகளில் ஓடிக் கடந்துள்ளார். இது ஸ்ரீனிவாச கௌடாவின் 9.55 நொடிகள் எனும் நேரத்தைவிட குறைவு என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமஸ்கிருதத்துக்கு 29 மடங்கு நிதி ..தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஒரிய மொழிகளை விட அதிக தொகை..

dinakaran.com : இதுதான் மோடியின் பற்று: தமிழ் உள்ளிட்ட மொழிகளை விட சமஸ்கிருதத்திற்கு 643.84 கோடி ஒதுக்கீடு...மு.க.ஸ்டாலின் அறிக்கை சென்னை: நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத வளர்ச்சி குறித்து பா.ஜ.க உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் பதிலளித்தார். அப்போது, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக  டெல்லியில் தேசிய சம்ஸ்கிருத மையம் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதற்கு, 2019-20-ல் ரூ.231.15 கோடி, 2018-19-ல் ரூ.214.38 கோடி, 2017-18-ல் ரூ.198.31 கோடி என கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.643.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.
இதன் மூலம், மத்திய பா.ஜ.க அரசு, கடந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழிக்காக 643.84 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொகை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரிய மொழிகளுக்கு செலவிட்ட தொகையைவிட 29  மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், பா.ஜ.க அரசின் இந்த துரோகத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக நாடுகள் எங்கும் பயணம் செல்லும் பிரதமர்,  உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரையும், உலகத்தையே உறவாகக் கொண்ட கணியன் பூங்குன்றனாரையும், மேற்கோள் காட்டுகிறார்.

Corona virus: “சீனாவில் தொடங்கி ஆப்ரிக்கா” கண்டங்கள் தாண்டிய பேராபத்து - எதிர்கொள்ள தயாரா? #GroundReport ... BBC

அன்னே சோய் - பிபிசி : கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனாவுடன் நெருங்கிய உறவை கொண்டுள்ள ஆப்பிரிக்க கண்டத்தில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எகிப்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தை வளர்ச்சியில் பின்தங்கிய ஏழை நாடுகளால் எதிர்கொள்ள முடியாது என்ற அச்சத்தின் காரணமாகவே, இதை உலக சுகாதார அவசர நிலையாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்தது.
<>"இந்த பிரகடனத்துக்கு சீனாவை விட மற்ற நாடுகளில் கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கமே முக்கிய காரணம். வலுவற்ற சுகாதார அமைப்பை கொண்டுள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் என்னவாகும் என்பதே எங்களது அச்சத்துக்கு முக்கிய காரணம்" என்று கூறுகிறார் எத்தியோப்பியாவை சேர்ந்தவரும், உலக சுகாதார அமைப்பின் தலைவருமான டெட்ரோஸ் அடனோம்.
ஏற்கனவே இருக்கும் சுகாதார பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கே திணறி வரும் ஆப்பிரிக்க நாடுகளால், போன்ற அதிவேகமாக பரவி உயிரிழப்பை ஏற்படுத்த கூடிய கொரோனா வைரஸ் அளிக்கும் சவாலை சமாளிக்க முடியுமா?
கொரோனா வைரஸின் தொடக்க நிலையை எதிர்கொள்வதற்கு தேவையான வசதிகளை சில ஆப்பிரிக்க நாடுகள் கொண்டிருப்பதாக கூறுகிறார் ஆப்பிரிக்காவுக்கான உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரியான மைக்கேல் யாவ்.

Anti CAA Protest : களத்தில் நிற்கும் சாமானிய பெண்கள்

tamil.indianexpress.com:  Anti CAA Protest, Chennai live
Chennai Shaheen Bagh protest Live News: சிஏஏ சட்டத்திற்கு ஆதரவளிக்க மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சி வரும் 19-ம் தேதி சட்டபேரவை முற்றுகை போராட்டத்தை அறிவித்தது. இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்- 19 சட்டமன்றம் முற்றுகை! தமிமுன் அன்சாரி அறிவிப்பு
மதுரை மஹபூப்பாளையம் ஜின்னா திடலில் சிஏஏ-என்ஆர்சி-என்.பி.ஆர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், நெல்பேட்டையில் மற்றொரு சிஏஏ சட்டத்திற்கு எதிராக தொடர் தர்ணாப் போராட்டம்  தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் சென்னை அடித்து மதுரையில் முக்கியத்துவம் பெறுகிறது என்று மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

1849 ஆம் ஆண்டு தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்கள் கண்டுபிடிப்பு!


thanjavur sengipatti
thanjavur sengipatti.nakkheeran.in - பகத்சிங் : சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் தமிழ் எண்கள் புழக்கத்தில் இருந்துள்ளது என்பதை வெளிக்காட்டும் வகைளில் அடுத்தடுத்து தமிழ் எண்களுடன் கூடிய மைல் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர்  மாவட்டம் செங்கிப்பட்டியில், திருச்சி -  தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே பயணியர் விடுதியின் சுற்றுச்சுவரின் அருகே தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட இரண்டு மைல்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கல் கிடப்பதாக கந்தர்வகோட்டை ஒன்றியம் குரும்பூண்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மூ.சேகர் அளித்த தகவலைத்தொடர்ந்து, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் மங்கனூர் ஆ.மணிகண்டன், தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் கரு.ராஜேந்திரன் , ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் து.மணிசேகரன் ஆகியோரடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.