சனி, 30 ஜனவரி, 2021
பிரிட்டனின் COVID-19 இறப்புகள் 100,000 ! UK COVID-19 death toll exceeds 100,000
இரண்டாம் உலகப் போரின்போது இறந்த பொதுமக்களின் எண்ணிக்கையை விட இங்கிலாந்தில் கோவிட்-19 நோயால் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். இந்த இறப்பு உச்சநிலையை எட்டியபோது, பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் ஒரு டவுனிங் ஸ்ட்ரீட் (அவரது குடியிருப்பு) இல் ஊடக சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார், அதில் அவர் அந்த மோசமான புள்ளிவிவரத்திலுள்ள துக்கத்தை கணக்கிடுவது கடினம் என்று துயரத்தை அறிவித்தார். இழந்த வாழ்க்கையின் ஆண்டுகள், குடும்பங்கள் இறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை மற்றும், பல உறவினர்கள் இறுதி வழியனுப்பி வைக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் — அன்புக்குரியவரை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுக்கு சாப்பாடு இலவசம் ! மாநகராட்சி அறிவிப்பு
இயக்குனர் சங்கருக்கு 'பிடிவாரண்ட்.. எந்திரன் கதைத்திருட்டு வழக்கில்....
.nakkheeran.in : கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எந்திரன் கதைத்திருட்டு வழக்கில் ஆஜாராகாமல் வழக்கை இழுத்தடித்து வரும் இயக்குனர் சங்கருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாகப் பிடிவரண்ட் பிறப்பித்திருக்கிறது.
1996 ஆம் ஆண்டு "இனிய உதயம்" தமிழ் பத்திரிகையில், நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன், எழுதிய "ஜுகிபா" என்ற கதை வெளியானது. அதே கதை மீண்டும் ‘தித் திக் தீபிகா’ என்ற நாவலிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் "எந்திரன்" திரைப்படம் வெளியான பின்பு தான் ’ஜுகிபா’ கதை திருடப்பட்டு, எந்திரன் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மற்றும் இயக்குனர் சங்கர் இருவருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில், எந்திரன் படத்தின் இயக்குனர் ஷங்கர் மீதும், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதும் காப்புரிமை சட்டப்படி புகார் அளித்திருந்தார்.
சசிகலா நாளை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
tamil.news18.com : கொரோனா சிகிச்சை பெற்று வந்த சசிகலா குணமடைந்து நலமுடன் இருப்பதால் அவரை
நாளை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று பெங்களூரு
விக்டோரிய மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் சில
நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம்
அறிவுறுத்தி உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை அனுபவித்த சசிகலா,
கடந்த, 27ல், விடுதலை செய்யப்பட்டார்.அதற்கு முன்பே, அவருக்கு கொரோனா
தொற்று ஏற்பட்டதால், பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகிறார். அவருக்கு இப்போது, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை.
உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது. இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், இன்றுடன்
சசிகலாவிற்கு 10 நாட்கள் சிகிச்சை நிறைவு பெற்றது. அவருக்கு கொரோனா அறிகுறி
ஏதும் இல்லை.
கனிமொழி குறித்து தரக்குறைவு விமர்சனம்.. சொந்த கட்சிக்காரருக்கு எதிராக பொங்கி எழுந்த குஷ்பு
![]() |
டெல்லி 25-28 போராட்ட கால நிகழ்வுகள்.... உள்ளூர் ஆட்கள் என்ற போர்வையில் வலதுசாரி...
![]() |
வெள்ளி, 29 ஜனவரி, 2021
திமுகவில் இணையும் பாமகவினர் .. ராமதாஸ் அதிர்ச்சி! தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளில் இருந்தும் ஏராளமானோர் திமுகவில் இணைகிறார்கள்
Velmurugan P - tamil.oneindia.com : சென்னை: டாக்டர் ராமதாஸ் சொந்த ஆதாயத்திற்காக - சுய நலத்திற்காக, தி.மு.க., வன்னியர் சமுதாயத்திற்குச் செய்த சாதனைகளை மறைத்து பொய் பிரசாரம் செய்து வருகிறார். ராமதாஸ் தி.மு.க.வைப் பற்றி விமர்சிக்க விமர்சிக்க, அக்கட்சியில் உள்ள பாட்டாளிகள் தி.மு.க.வை நோக்கி இன்னும் அதிகமாக வரப் போகிறார்கள்.
அதில் சந்தேகம் இல்லை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கடலூர் மேற்கு மாவட்டம், நெய்வேலி தொ.மு.ச. அலுவலக வளாகத்தில், தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.வெ.கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராசேந்திரன் ஆகியோர் முன்னிலையில் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியத்திலிருந்து மணிவர்மா தலைமையில் பா.ம.க.விலிருந்து 500 பேர், தே.மு.தி.க.விலிருந்து ஒன்றியப் பொறுப்பாளரும் அரசடிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருமான வீரபாண்டியன் தலைமையில் 60 பேர் ,இணைந்தனர்.
இதேபோல் தே.மு. தி.க.விலிருந்து முன்னாள் ஒன்றியச் செயலாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான அனந்தராமன் தலைமையில் 200 பேர், பண்ருட்டி பெரியகாட்டுப்பாளையம் பா.ம.க.விலிருந்து ஒன்றிய துணைச் செயலாளர் எ.சின்னத்தம்பி தலைமையில் 90 பேர், நாம் தமிழர் கட்சியிலிருந்து வடக்குத்து ஊராட்சி செயலாளர் பிரபாகரன் தலைமையில் 120 பேர், நெய்வேலி நகர எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் சொரத்தூர் சேகர் தலைமையில் 60 பேர், பண்ருட்டி ஒன்றியம் ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து ஒன்றிய அமைப்பாளர் கே.வெங்கடேசன் தலைமையில் 80 பேர் உள்பட பலர் தி.மு.க.வில் இணைந்தனர்.
டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி; விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை - பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!
விவசாயிகள் போராட்டம்: குடிநீர், மின்சாரம், இன்டர்நெட் துண்டிப்பு... டெல்லி எல்லைகளில் நடப்பது என்ன?
vikatan :``வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவில்லை என்றால், நான் தற்கொலை செய்துகொள்வேன். போராட்டக் களத்தைவிட்டு நாங்கள் நகரமாட்டோம். தேவைப்பட்டால் புல்லட்டுகளைத் தாங்கி நிற்கவும் தயார்!'' -
டெல்லி எல்லைகளில் நிலவும் பதற்றம்... என்ன நடக்கிறது? மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என, இந்தியத் தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் 65 நாள்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாகக் கடந்த ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது வன்முறை வெடித்தது. விவசாயிகளில் ஒரு பகுதியினர் அனுமதிக்கப்பட்ட பாதைகளிலிருந்து விலகி செங்கோட்டையை நோக்கி பயணம் செய்ததே வன்முறை நிகழக் காரணம் என செய்திகள் வெளியாகின. ....
ஆனால், செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறைக்கு, பஞ்சாபி நடிகர் தீப் சித்து தலைமையிலான ஆள்கள்தான் என்றும், அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை என்றும் விவசாயச் சங்கங்கள் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து. சில விவசாயச் சங்கங்கள் போராட்டத்திலிருந்தும் விலகிக் கொண்டன. அதே நேரத்தில், மீதமுள்ள விவசாய சங்கங்கள், `வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டத்தை திரும்பப்பெறுவோம்' என்று உறுதியாகப் போராடி வருகின்றன.
பெங்களூரு மருத்துவமனையில் சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் திடீர் அதிகரிப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே 4 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் அவர் தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், சசிகலாவுக்கு 6 நாட்களுக்கு பிறகு திடீரென்று ரத்த அழுத்தம் அதிகரித்து உள்ளது. இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவரது உடலில் சர்க்கரை அளவும் 278 ஆக உயர்ந்து உள்ளது. இதற்காக அவருக்கு இன்சுலின் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சசிகலா நாளை (சனிக்கிழமை) டிஸ்சார்ஜ் ஆக இருந்த நிலையில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்தம் அதிகரித்து இருப்பதால், அவர் டிஸ்சார்ஜ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவை: 10 ஆண்டுகளில் 153 யானைகள் உயிரிழப்பு!
புதுச்சேரி நமச்சிவாயம் (Ex minister) தீப்பாய்ந்தான் ( ex MLA ) டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
![]() |
இலங்கைக்கு 5 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை இந்தியா பரிசாக அனுப்பியது. அதிபர் ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்
![]() |
இந்த தடுப்பூசிகளை போடும் மிகப்பெரிய பணி இந்தியாவில் தொடங்கியுள்ள நிலையில் உலகின் பல நாடுகள், இந்தியாவை தடுப்பூசிகளுக்கு எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.
நேபாளம், வங்க தேசம், மியான்மர், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு ஒரு வாரத்தில் 55 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா பரிசாக அளித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி, கொழும்புவுக்கு நேற்று வந்து சேர்ந்தது. இதனைப் பெற்றுக் கொண்டதும், இலங்கை அதிபர் ராஜபக்சே டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
உதகை மண்டலத்தில் (OOTY)) அதி உயர்ந்த தொட்ட பெட்டா மலையிலிருந்து ..சாஸ்திரி...சிறிமா வதைப்படலம் பழையன நினைத்தல்--07
![]() |
![]() |
![]() |
வடலூர் ராமலிங்க சுவாமிகள் சனவரி 30, 1874 மர்ம மரணம் .. நாவலரின் சந்தேக மௌனம்!
![]() |
| ஆறுமுக நாவலர் - வடலூர் ராமலிங்க வள்ளலார் |
வாழ்த்துகள், வாழ்த்துக்கள்- எது சரி? வாழ்த்துகள் என்பதே வாழ்த்து என்பதன் பன்மை வடிவம்.
வியாழன், 28 ஜனவரி, 2021
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா காலமானார்.
chakkaram.com :ஈழத்து சஞ்சிகையான ‘மல்லிகை’ ஆசிரியர் டொமினிக் ஜீவா தனது 94வது வயதில் இன்று (2021.01.28) கொழும்பில் காலமானார். டொமினிக் ஜீவா, ஒரு விளிம்புநிலை மனிதர், படிக்காத மேதை, சிறந்த மனிதாபிமானி, முற்போக்கு சிந்தனையாளர், தலை சிறந்த தமிழ் மொழி ஊடகவியலாளர், சிறந்த எழுத்தாளர், திறனாய்வாளர், சிறுகதையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, உன்னதமான மேடைப்பேச்சாளர், கடின உழைப்பாளி, நவீன தமிழ் இலக்கியத்தின் வற்றாத ஜீவன் என பன்முக ஆளுமை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. keetru.com : “கலை, இலக்கியம் என்பனவற்றின் இன்றியமையாத பண்புகளிலொன்று மனித நேய உணர்வாகும். இவற்றைப் படைக்கும் கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோர் தம்மளவிலும் இவ்வுணர்வை உடையவர்களாகவே திகழ்வர் எனச்சமுதாயம் எதிர்பார்ப்பது இயற்கையே. ஆயினும் பெரும்பான்மையான கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோரிடம் இவ்வுணர்வை நிறைவாக நாம் கண்டுகொள்ள முடிவதில்லை. ஓரு சிலரிடம் அதனை நாம் முழுமையாக அவதானிக்க முடிகிறது. அத்தகைய மிகச் சிலருள் ஒருவர் நம் மத்தியில் வாழும் இலக்கியவாதி டொமினிக் ஜீவா.” என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கலாநிதி சு.வித்தியானந்தன் புகழ்ந்துரைத்துள்ளார்.
டொமினிக் ஜீவா, ஒரு படிக்காத மேதை, உன்னத மனிதாபிமானி முற்போக்கு சிந்தனையாளர், தலை சிறந்த பத்திரிக்கையாளர், சிறந்த எழுத்தாளர், திறனாய்வாளர், சிறுகதையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, கனல் கக்கும் பேச்சாளர், கடின உழைப்பாளி, நவீன தமிழ் இலக்கியத்தின் வற்றாத ஜீவன் - எனப் பன்முக ஆளுமை படைத்தவர்.
திமுகவுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கு மான கூட்டணியின் இன்றைய நிலவரம்...
சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்... "கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள் தங்கள் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு தங்களது சின்னத்தில் போட்டியிடுமாறு கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்துவது வழக்கம் தான். அதே நேரம் நாங்கள் எங்கள் தனித்துவத்தை இழக்காமல் கூட்டணியின் வெற்றிக்கும் பாதிப்பு ஏற்படாமல் நல்ல முடிவெடுப்போம்" என தெரிவித்திருந்தார்.
இரவுக்குள் இடத்தை காலி செய்யுங்கள்: போராடும் விவசாயிகளுக்கு எச்சரிக்கை! Delhi Police To End Farmers Protest
dailythanthi.com : புதுடெல்லி, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த சூழலில், குடியரசு தினத்தன்று சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டிருந்த விவசாயிகள், போலீஸ் தடுப்புகளை உடைத்து டெல்லி நகரத்திற்குள் நுழைந்தனர். ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும், டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறி, பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளை தடுக்க முயன்றனர்.
ஆனால், விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி, தடுப்புகளை முட்டி மோதி, இடித்து உள்ளே நுழைந்தனர். தடையை மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதே போல காஜிப்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.
திமுக கூட்டணி பற்றி திமுக ஆதரவாளர்கள் கூறுவது .. அழகிரி ஸ்டாலின் மோதல் முடிவுக்கு வந்தது..
tamil.oneindia.com- Hemavandhana : சென்னை: திமுக தலைவரின் கூட்டணி கணக்கு சரியான திசையிலேயே போய் கொண்டிருக்கிறது என்றும், விரைவில் திமுகவே ஆட்சிக்கட்டிலில் ஏறும் என்றும் உடன்பிறப்புகள் புளகாங்கிதம் அடைந்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
கூடிய சீக்கிரம் தேர்தல் நடக்க போகிறது என்பதால் அரசியல் களமே பரபரத்து காணப்படுகிறது.. ஆனால் கூட்டணிதான் இன்னும் எந்த பக்கமும் முடிவாகவில்லை.. எதிலும் அவசரப்பட்டு விடக்கூடாது என்பதால், பொறுமையாகவும், நிதானமாகவும் கூட்டணி தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் திமுகவின் வியூகம் சற்று தூக்கலாகவே இருக்கிறது.. உண்மையிலேயே எந்த கட்சிகள்தான் அதன் கூட்டணிக்குள் இருக்கின்றன? பாமக உள்ளே வருமா? கமலுக்கு சான்ஸ் இருக்கிறதா? காங்கிரசுக்கு எத்தனை சீட்தான் தரப்படும்? வைகோ நிலைமை என்ன? என்பன போன்ற பல கேள்விகளும் வட்டமடித்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த கேள்விகளை தீவிரமான திமுகவினர் சிலரிடம் நாமே முன்வைத்தோம்.. அவர்கள் சொன்னதாவது: முன்னாடி மாதிரி இல்லை தலைவர்.. எதையும் பார்த்து பார்த்து முடிவுகளை எடுக்கிறார். . இப்பகூட பார்த்தீங்கன்னா எந்த கூட்டணி கட்சியையும் அவர் கழட்டி விடணும்னு நினைக்கவே இல்லை.. காங்கிரசுக்கு ஒரு சீரியஸ்தன்மை வரணும்னு தான் புதுச்சேரி விஷயத்தை அப்படி டீல் செய்தாரே தவிர, காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி வைக்க யோசிக்கவே இல்லை.
தாய்மகனை கொன்ற வடமாநில கொள்ளையர்கள்! மிரட்டுவதற்கு பயன்படுத்திய பொம்மை துப்பாக்கி
செங்கோட்டையில் அத்துமீறியவர்கள் மீது தேசத் துரோக வழக்கு.. குடியரசு தின...
செங்கோட்டைக்குள் கொடியேற்றியவர் மோடியோடு இருப்பது எப்படி?- விவசாய சங்கங்கள் கேள்வி
![]() |
Facebook. Like, comment ஏன் போட வேண்டும்???...சோசியல் மீடியாக்களின் System தெரிந்து கொள்ளவே இக்கட்டுரை
![]() |
மணிமேகலையின் காதலும் துறவும் .. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று ..
காவலன் பேர்ஊர் கனைஎரி ஊட்டிய
மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள் (2: 54-57)
இவ்வடிகளில் மாதவி, மணிமேகலையைக் கண்ணகி மகள் என்று சிறப்பிப்பதோடு இவள் தவத்திற்குரியவள் என்றும் கணிகையாகத் தீத்தொழில் புரிந்து வாழமாட்டாள் என்றும் தெளிவு படுத்துகின்றாள். ஆக மணிமேகலை, தாய் மாதவியால் ஆடலும் பாடலும் கூடிய பரத்தமை வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்பட்டு தவ வாழ்க்கைக்கு உரியவளாகிறாள்.
கலைஞர் நினைவிடத்தில் கோரிக்கை வைக்கும் அதிமுக தொண்டர்கள் .. அம்மாவை கொன்ற குற்றவாளிகளை நீங்கதான் கண்டு பிடிக்கணும்
ரூ91 கோடி மக்கள் வரி பணத்திலே செலவு செய்து செய்யப்பட்ட விழாவுக்கு பேருந்துகளில் கிராமத்தில் இருந்து தொண்டர்களை அழைத்து வந்தனர்.
மந்திரிகள் MLAக்கள் எல்லாம் பிங் கலர் கரன்சி பணபட்டுவாடா ஜோரில் உயர் ரக கார் ஜில் AC யில் திளைக்க .. அழைத்து வரப்பட்ட கிராமவாசிகள் மெதுவாக அணி அணியாக கால் நடையாக வேர்க்க விறுவிறுக்க நேராக Kalaignar Karunanidhi யின் நினைவிடத்துக்கு சென்றனர் .
இந்த காட்சியை கண்டுகொண்டிருந்த அதிமுக நிர்வாகி ஒருவர் " அம்மா வின் மர்ம சாவுக்கு நியாயம் உங்க திமுக ஆட்சியிலே வேணும்னு " கலைஞர் புகைபடத்தை பார்த்து கண்கலங்க கேட்டது தான் ஹைலைட் ..
அயோத்தியில் நிகழ்ந்ததற்கும் நேற்று தில்லி செங்கோட்டையில் நிகழ்ந்ததற்க்கும் இடையிலான ஒற்றுமை
![]() |
சீக்கிய விவசாயிகளின் டிராக்டர் பேரணி இப்படி கண்முன்னால் சீரழிவதை, அதை சங்கிகள் கொண்டாடுவதை, அவர்களுடைய டி.வி சேனல்களில் நெறியாளர்கள் ஒரு குஷியுடன் “பாருங்கள் பாருங்கள், என்னென்ன செய்கிறார்கள், போராட்டம் கலவரமாவதைப் பாருங்கள்” எனக் கூவுவதைப் பார்க்க சகிக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுத்தியது -
இதுவரை சீராக பொறுமையாக போராடியவர்கள் குதிரை மீது வேஷம் அணிந்து அமர்ந்து கையில் வாளுடன் வருவதை, அவர்களை போலிசார் அமைதியாக அனுமதிப்பதை, சிலர் டிராக்டர்களை போலிசார் மீது மோத வருவதைப் போல செலுத்துவதை, செங்கோட்டைக்கு எதிரில் உள்ள கொடிக்கம்பத்தில் ஒருவன் ஏறி சீக்கிய கொடியை ஏற்றி கொக்கரிப்பதை பார்க்கையில் இவற்றில், இந்த அப்பட்டமான அராஜக செயல்கலில் இதுவரை நாம் பார்த்த விவசாயிகளின் தோரணை, உடல்மொழி, கண்ணியம் இல்லை. இது வேறொரு கூட்டம். இவர்களை எப்படி தலைநகரின் மையம் வரை வந்தார்கள்?
புதன், 27 ஜனவரி, 2021
ஐதராபாத்தில் 18 பெண்களை கொலை செய்த கொடூரன்.. Psycho Serial killer Ramulu Arrested
தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள தயக்கம் தேவையா? எவ்வாறு செயல்படுகின்றன?
இந்தியாவின் சர்வதேச நோய் எதிர்ப்பு சக்தி திட்டம், உலகின் மிகப்பெரியது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 26 மில்லியன் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்து நிர்வகிக்கப்படுகிறது.
சீர்காழியில் வடமாநில கொள்ளையர்கள் 16 கிலோ நகை கொள்ளை. இருவர் கொலை!
BBC : சீர்காழியில் இரண்டு பேரைக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றவர்களில் ஒருவர் காவல்துறையின் என்கவுன்டரில் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில்வே ரோடு பகுதியில் தன்ராஜ் சௌத்ரி என்பவர் அடகுக்கடை நடத்திவந்தார். மொத்தமாக நகைகளை வியாபாரம் செய்தும் வந்தார். இவர் தனது மனைவி ஆஷா, மகன் அகில், மருமகள் நிகில் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்தவந்தார். இந்த நிலையில், புதன்கிழமையன்று அதிகாலையில் அவரது வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர் தன்ராஜ் சௌத்ரியின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகியோரை கொள்ளையர்கள் தாக்கியதில் அவர்கள் அங்கேயே உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் தன்ராஜும் அவரது மருமகள் நிகிலும் படுகாயமடைந்தனர்.
சசிகலா விடுதலையானார் . அடுத்து இளவரசி விடுதலையாவார் சுதாகரன் தாமதமாகவே விடுதலை?
அதேநேரம், அவரோடு சிறையில் அடைக்கப்பட்ட சுதாகரன் எப்போது விடுதலை ஆவார் என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன். இவரும் ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 வருடம் சிறை தண்டனை மற்றும் ஜெயலலிதா தவிர்த்த மற்ற மூவருக்கும், தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இளவரசி ரிலீஸ் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்ட நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் சசிகலா, நான்காண்டு தண்டனை காலம் முடிந்து இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் 10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதத் தொகையை செலுத்தினார். இளவரசியும் அபராதத் தொகையை செலுத்தி விட்டார். அவர் பிப்ரவரி 5ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா இன்று விடுதலை - சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று கையெழுத்து பெறுகிறார்கள்
Farmers Protest: விவசாயிகள் மீது போலிஸ் கொடூர தாக்குதல்; விவசாயி பலி : போர்க்களமானது டெல்லி!
nakkeeran : மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்த நிலையில் குடியரசுத் தினமான இன்று டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். இதற்கு டெல்லி காவல்துறையும் அனுமதி அளித்திருந்தது......
அதனைத் தொடர்ந்து, டிராக்டர்கள் மூலம் டெல்லிக்கு நுழைந்த விவசாயிகள் செங்கோட்டைக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்து மாநில எல்லைகளில் இருந்து செங்கோட்டைக்கு விவசாயிகள் படையெடுத்து வந்தனர்டெல்லி செங்கோட்டையைச் சுற்றி 500-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் வந்துள்ளனர். பின்னர் செங்கோட்டையில் இருந்த கோபுரம் மீது சிறிய கொடிக்கம்பத்தில் விவசாயிகள் தங்கள் கொடியேற்றினர். வழக்கமாக தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் கொடிகள் ஏற்றப்பட்டன. டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட உள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையே டெல்லி வன்முறைக்கு காரணம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு 20 இடங்கள் .
காங்கிரஸ் கூட்டணியில் தொடர்கிறதே ஒழிய திமுக இந்த முறை தொகுதிகளின் எண்ணிக்கையில் மிக கறாராக இருக்கும் என்று கூறுகிறார்கள் திமுக உடன்பிறப்புகள். கடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு இடங்களை வாரி இரைத்ததனாலேயே வெற்றி வாய்ப்பு பறிபோனதாக திமுகவினர் கூறுகின்றனர். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தது. 2ஜி விவகாரத்தில் கலைஞர் டிவியை தொடர்புபடுத்தி அதிலும் குறிப்பாக கலைஞரின் மனைவி தயாளு அம்மாளை சிபிஐ விசாரித்தது.
கூட்டணி விவகாரம்: ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடா?
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்ற மிகவும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் அடுத்தக்கட்டத்தை அடைந்திருக்கின்றன. அதன்படி, வரும் 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டத் தலைநகரங்களிலும், வன்னியர்களுக்கு இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்படவுள்ளது இதை முன்னிறுத்திதான் அந்த கடிதத்தை எழுதியுள்ளார் ராமதாஸ்..
மகள்களைக் கொன்ற பெற்றோரின் மூடநம்பிக்கை - முஸ்லிம்களின் சிந்தனைக்கு
செவ்வாய், 26 ஜனவரி, 2021
பழைய வாகனங்கள் மீது பசுமை வரி.. நிதின் கட்கரி ஒப்புதல்.. யார் யார் கட்டணும்..!
டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு,, விவசாயிகள் போராட்டம் எதிரொலி!
நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா!
பாமகவுக்கு கதவு சாத்தியது திமுக.... முற்றுப்புள்ளி!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி அதன் பலனாக மக்களவை தொகுதிகள் எதையும் ஜெயிக்க முடியவில்லை என்றாலும்... ராமதாஸின் மகன் அன்புமணி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற்றார். இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க... வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற போராட்டத்தை அதிமுக அரசை குறிவைத்து துவக்கினார் ராமதாஸ்.
டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முற்றுகை, தாலுகா அலுவலகங்கள் முன்பு போராட்டம், விஏஓ அலுவலகங்கள் முன்பு போராட்டம் என்று ராமதாஸ் பல போராட்டங்கள் நடத்தியும்... அதிமுக அரசு சார்பில் வன்னியர்களுக்கான ஒதுக்கீடு குறித்து ஏதும் உறுதிமொழி தரப்படவில்லை. இந்நிலையில், கடந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த எம்.பி.சி 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற முழக்கத்தை கையில் எடுத்தார் ராமதாஸ்.
பேரணி.. கண்ணீர் புகை குண்டு.. தடியடி.. 144 தடை... தலைநகரை திணறடித்த விவசாயிகள் போராட்டம்
tamil.news18.com : டிராக்டர் பேரணி நடத்த டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகளுக்கும்,
போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தடையை மீறி செங்கோட்டையில்
விவசாயிகள் கொடியை ஏற்றினர்.
டெல்லிக்குள் நுழையும் பிரதான எல்லைகளான சிங்கு, திக்ரி, காசிபூர் வழியாக
லட்சக்கணக்கான விவசாயிகள் தடைகளை அகற்றி பேரணியை காலையில் தொடங்கினர்.
குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பின்னர் பேரணியை நடத்த போலீசார்
அறிவுறுத்தியிருந்த நிலையில், கர்னல், காசிபூர் பகுதியில் 10 மணியில்
இருந்தே விவசாயிகள் வாகனங்களிலும், டிராக்டர்களிலும் அணிவகுத்து சென்றனர்.
ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்குள் வராததால் சாலைகளில் கண்டெய்னர் லாரிகளை
நிறுத்தியும், தடுப்புகளை அமைத்தும் போலீசார் விவசாயிகளை தடுத்து
நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதனையடுத்து
போலீசார் தடியடி நடத்தினர். காசிப்பூர் எல்லையில் கண்ணீர் புகைகுண்டுகளை
வீசி விவசாயிகளை தடுத்து நிறுத்த போலீசார் முயன்றனர்.....
காசிபூர் எல்லையில் இருந்து பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பாண்டவ் நகர்
பகுதிக்குள் விவசாயிகள் நுழைந்து போராட முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து
நிறுத்தினர்.
முன்கூட்டியே கிளம்பிய டிராக்டர்கள்.. தடுப்புகளை தகர்த்த விவசாயிகள்.. டெல்லி எல்லையில் பதற்றம்
Veerakumar - tamil.oneindia.com : டெல்லி: டெல்லி எல்லையில் முன்கூட்டியே விவசாயிகள் பேரணியை துவங்கியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் குடியரசு தின நாளில் டிராக்டர் பேரணி நடத்தி 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்த பேரணிக்கு, டெல்லி போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிங்கு, திக்ரி, காஜிபூர் எல்லைப் பகுதிகளில் இருந்து குறிப்பிட்ட தொலைவு மட்டுமே டிராக்டர் பேரணி நடத்த வேண்டும். திக்ரி எல்லையில் இருந்து 63 கி.மீ., சிங்கு எல்லையில் இருந்து 62 கி.மீ., காஜிபூர் எல்லையில் இருந்து 46 கி.மீ. தொலைவுக்கு பேரணி நடத்தலாம். பேரணியில் 5 ஆயிரம் டிராக்டர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஒரு டிராக்டரில் 3 பேர் முதல் 5 பேர் வரை மட்டுமே இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 37 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் டிராக்டர் பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்பு ... 26 January Tractor rally farmers protest Kisan andolan
டிஆர்பி முறைகேட்டுக்காக ரூ. 40 லட்சம் அர்னாப் லஞ்சம் கொடுத்தார்....
![]() |
புலிகளின் சித்திரவதையில் மரணித்த தோழர் முகுந்தனின் செய்தி வரலாற்று ஆவணம்
![]() |
சசிகலா நாளை விடுதலை - தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு
![]() |
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை சுப்ரீம் கோர்ட்டால் விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலாவின் தண்டனை காலம் வருகிற பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.
Dravidian Languages Day ... tribute to 700+ Tamils Martyrs sacrificed their life in the 1965 Anti Hindi Agitation.
![]() |
We Dravidians 2.0
![]() |
Kathir RS : · This is an Initiative from Bengal!! আজ এক পবিত্র দিন। ৬৫ বছর আগে আজকের দিনে আমাদের 700 অধিক তামিল ভাইবোন প্রাণ দিয়েছিল হিন্দি সাম্রাজ্যবাদকে ধ্বংস করতে। তাদের আত্মবলিদান ভারতকে হিন্দি রাষ্ট্র হতে দেয়নি। হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা হতে দেয়নি। অহিন্দি জাতির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হিন্দি সম্রাজ্যবাদকে ধ্বংস করাই হবে সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের ভয়ঙ্করতম প্রতিশোধ।
Today is a holy day. 65 years ago today, more than 700 of our Tamil brothers and sisters gave their lives to destroy Hindi imperialism. Their sacrifice did not allow India to become a Hindi state. Hindi was not allowed to be the state language of India. Our worst revenge against the oppression is to destroy Hindi imperialism through the united movement of the non-Hindi nations.
திங்கள், 25 ஜனவரி, 2021
சுபாஸ் சந்திர போஸ் ஒரு நாசி போர் குற்றவாளி? .....நேரு உண்மையில் நேதாஜியை காப்பாற்றினார்....

நேதாஜி
சுபாஸ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணமாக வில்லை.அந்த விபத்து சம்பவம்
நடந்ததா இல்லையா என்ற வாதப்பிரதி வாதங்கள் ஒரு புறம் இருக்க இப்படித்தான்
நடந்திருக்கும் என்று பலராலும் யூகிக்கப்படும் தியரி ஒன்று உலவுகிறது, அது
நேதாஜிக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.என்னதான் சுதந்திரம் அவசியம் என்றாலும் அவர் ஹிட்லரோடு மிகவும் அன்னியோன்னியமாக உறவாடி உதவி கேட்டமை
நாகரிக உலகில் யாராலும் மன்னிக்க முடியாத ஒரு போர் குற்றம் ஆகும்.
இன்றும்
கூட பழைய நாசிகளை உலக நாடுகள் வேட்டை ஆடிக்கொண்டுதான் இருக்கின்றன.
ஹிட்லரின் நாசிப்படையினரின் கொடிய போர்குற்றம் இழைத்ததாக நூரம்பெர்க்
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான பழைய நாசிப்படையினர்
இன்றும் கூட வேறு வேறு பெயர்களில் வேறு வேறு நாடுகளில் பயந்து பயந்துதான் வாழ்கிறார்கள்.
நேதாஜி
அவர்கள் நாசிப்படையில் இணையவில்லை என்றாலும் அவர்களிடம் ராணுவ உதவி
கேட்டமையானது சாதாரண குற்றம் அல்ல. ஹிட்லரின் மனித குலவிரோத நடவடிக்கைகள்
எல்லாம் நேதாஜிக்கு மிகவும் நன்றாகவே தெரியும். அவர் அதை
பொருட்படுத்தவில்லை.
நல்ல
காலம் ஹிட்லர் நேதாஜிக்கு கடைசியில் கைவிரித்து விட்டார். இந்தியர்களை
இன்னும் பல ஆண்டுகள் பிரிட்டிஷாரே ஆளவேண்டும் என்ற கொள்கையை நேதாஜியிடம்
கூறி அவரை பக்குவமாக சகல வசதிகளும் செய்து கொடுத்து ஒரு நீர்மூழ்கி கப்பல்
மூலம் ஜப்பானுக்கு அனுப்பி வைத்தார். ஹிட்லர் நினைத்தால் நேதாஜியை என்னவும்
செய்திருக்க முடியும் ஆனால் செய்யவில்லை.
30 எம்எல்ஏக்கள் ? சசிகலா தயார்..? உடையும் அ.தி.மு.க! கவர்னர் ஆட்சி?
மகள்களை நரபலியிட்ட பெற்றோர் உடல் முழுவதும் மஞ்சள் குங்குமம்.. ...ஆந்திர மாநிலம் சித்தூர்

![]() |
nakkeeran - கலைமோகன் ": கல்வியறிவு, தொழில்நுட்பம் எனப் பல்வேறு வழிகளில் மனித சமுதாயம் மூடநம்பிக்கைகளை கைவிட்டு சற்று விலகி நடந்தாலும் அவ்வப்போது ஆங்காங்கே மூடத்தனமான நம்பிக்கையின் மூலம் சில சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கல்வியாளர்களாக இருக்கக்கூடிய, படித்த பெற்றோர்களே செய்திருக்கும் இந்த மூடத்தனமான செயல், ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் அரசுப் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பத்மஜா டுடோரியல் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். இருவரும் நன்கு படித்தவர்கள். கல்வித்துறையில் இருவரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 27 வயதில் அலக்கியா என்ற மகளும், 22 வயதில் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
BBC : பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் வி.சி.க. இடம்பெறுமா?: திருமாவளவன் பிரத்யேகப் பேட்டி
முரளிதரன் காசிவிஸ்வநாதன் - பிபிசி தமிழ் ": தமிழக சட்டமன்றத் தேர்தல், தனிச் சின்னத்தில் போட்டி, பா.ம.கவுடன் கூட்டணி சாத்தியமா என்பது குறித்து எல்லாம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனுக்கு அளித்த பேட்டியின் இரண்டாவது பகுதி இது. பேட்டியிலிருந்து:
கே. தி.மு.க. கூட்டணிக்குள் பாட்டாளி மக்கள் கட்சி வரக்கூடும் என்ற பேச்சுகள் தற்போது அடிபடுகின்றன. அப்படியான சூழலில் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? பாட்டாளி மக்கள் கட்சி எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கும். இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துவிட்டு, இரு கட்சிகளுடனும் கூட்டணி வைப்பார்கள். நாங்களும் இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்திருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், பெரும்பாலும் தி.மு.க. கூட்டணியில்தான் இருந்திருக்கிறோம். ஒரு முறை அண்ணா தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். தவிர்க்க முடியாத நிலையில், அந்த நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க வேண்டியிருந்தது.
இந்தத் தருணங்களில் கொள்கை ரீதியான விமர்சனங்களை வைத்திருக்கிறோம். ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான விஷயங்கள் குறித்து விமர்சனங்களை வைத்திருக்கிறோம். ஆனால், தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை வைத்தது கிடையாது.
மிரட்டல்- கெஞ்சல்: காங்கிரசுக்கு ஸ்டாலின் போட்டிருக்கும் புதுக் கணக்கு! (காங்கிரசுக்கு 20 தொகுதி?)
2011 தேர்தலில் பெற்ற பாடத்தையடுத்து 2016 சட்டமன்றத் தேர்தலிலேயே காங்கிரசுக்கு அதிக பட்சம் 30 தொகுதிகள் தான் என்பதில் கலைஞர் தெளிவாக இருந்தார். அப்போதைய திமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளிடமும் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை கொடுக்கக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் கலைஞர்.
டெல்லியில் நாளை பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்
இதையடுத்து, காசிப்பூர், சிங்கு, திக்ரி 3 எல்லைகள் வழியாக டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.
தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை .. மும்பை உயர் நீதிமன்றம்
- பாலியல் நோக்கத்துடன் ஒருவரை தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை
- விருப்பம் இல்லாத ஒருவரை வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறைக்கு கீழ் வராது
- ஆடையின் மேல் அத்துமீறித் தடவுவது பாலியல் வன்முறை அல்லது அத்துமீறலில் வராது நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒருவருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் அமர்வு அதிர்ச்சிகரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் பாமக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!
இந்த நிலையில்தான் ஜனவரி 21ஆம் தேதி தர்மபுரி மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணியோடு கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, ‘வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை திமுக ஏற்றுக்கொண்டால் கூட்டணி பற்றி டாக்டர் ராமதாஸ் முடிவு செய்வார்’ என்று பேசியது அதிமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவையில் மருத்துவர் உமாசங்கர் திட்டமிட்ட கொலை ? உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கோவையில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவமனை விவகாரத்தில் கைதான மருத்துவர் உமாசங்கர் கார் மோதி உயிரிழந்த விவகாரத்தில் நடந்தது விபத்தில்லை திட்டமிட்ட கொலை என்று உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மருத்துவர் சாந்தா : ஒருவேளை நான் நாளை விடைபெறக் கூடும். உடனே அழுது புலம்பி ஒரு நாள் பணி இங்கே கெடக் கூடாது
![]() |
| மருத்துவர் சாந்தா |
மகாபாரதம் என்ற நாவல் கிபி 400க்கு பின்புதான் புனையப்பட்டது .. ஆதாரத்தோடு நிறுவிய திரு. கிருஷ்ணவேல் டி எஸ்
கேரளா கடத்தல் கஞ்சா இலங்கை எங்கும் அமோக விநியோகம்? கட்டுக்கடங்காமல் பெருகும் கஞ்சா பாவனை
ஞாயிறு, 24 ஜனவரி, 2021
தளவனூர் தடுப்பணை உடைந்தது-பொன்முடி தலைமையில் திமுக அதிரடி போராட்டம்!
கதவணையால் மண் வெளியேற்றம் ! இது தொடர்பாக விசாரணை நடத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள், கட்டப்பட்ட தடுப்பணை உறுதியாகவே உள்ளது. கதவணை திறக்கப்பட்டதால் மண் அடித்துக் கொண்டு வெளியேறுகிறது. இது பைப்பிங் ஆக்ஷன் என்போம். இப்படி நிகழ்வது எதிர்பார்த்ததுதான். இதனால் தடுப்பணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளனர்.
டெல்லியில் குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி; போலீசார் அனுமதி
இலங்கைக்கு 500,000 தடுப்பூசிகளை பரிசாக வழங்கும் இந்தியா..!
/zeenews.india.com : Covid-19 தடுப்பூசிகளின் 'பரிசு' ஒன்றை அடுத்த வாரம் இலங்கைக்கு அனுப்பப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது என இலங்கை அதிபர் (Gotabaya Rajapaksa) கோட்டபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இந்த தடுப்பூசி ஜனவரி 27 ஆம் தேதி இலங்கைக்கு வந்து சேரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு, "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட" 500,000 கோவிஷீல்ட் தடுப்பூசி (Covishield) டோஸ் கிடைக்கும். ஜனவரி 16 ஆம் தேதி நாடு தழுவிய மெகா நோய்த்தடுப்புத் திட்டத்தைத் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் Covid-19 தடுப்பூசிகளைப் (Corona vaccines) பெற்ற எட்டாவது நாடாக இலங்கை திகழ்கிறது. புதன்கிழமை தொடங்கி, இந்தியா தனது அண்டை முதல் கொள்கையின் ஒரு பகுதியாக பிராந்தியத்தில் உள்ள ஏழு நாடுகளுக்கு, பூட்டான் 150,000 டோஸ், மாலத்தீவுக்கு 100,000 டோஸ், நேபாளத்திற்கு 1 மில்லியன் டோஸ், பங்களாதேஷுக்கு 2 மில்லியன் டோஸ், மியான்மர் (Myanmar) 1.5 மில்லியன் டோஸ் ஆகியவற்றைப் பரிசாக வழங்கியுள்ளது. சீஷெல்ஸ் 50,000 டோஸ் மற்றும் மொரீஷியஸுக்கு 100,000 Covid-19 டோஸ் பரிசாக வழங்கப்பட்டது.
தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப "உதயசூரியன்?".. விறுவிறு விசிக..
காங்கிரசின் தடுமாற்றமும் திமுகவின் திசைமாற்றமும்!
![]() |
சாவித்திரி கண்ணன் : காங்கிரசின் தடுமாற்றமும், திமுகவின் திசைமாற்றமும்!·சரியான தலைமையை அங்கீகரிக்க மறுப்பது, தகுதியற்ற தலைமையை திணிப்பது என்ற சர்வாதிகாரத்திற்கான விலையைத் தான் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அனுபவித்துக் கொண்டிருக்கிறது புதுச்சேரியில்! கடந்த ஐந்தாண்டுகளாக புதுச்சேரி அரசியலில் கையாலாகத்தனம், கோமாளித்தனம் ஆகியவற்றின் அம்சமாக சொந்தக் கட்சிக்காரர் களாலேயே பார்க்கப்பட்டு வருபவர் தான் நாராயணசாமி! புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கோ, புதுச்சேரி மக்கள் நலனுக்கோ எந்த விதத்திலும் பாடுபட்டு அரசியலில் உயர்ந்தவரல்ல நாராயணசாமி! புதுச்சேரி தலைவர்களில் ஒருவரான ப.சண்முகத்தின் நம்பிக்கையைப் பெற்று, அவருக்கு பின்பு டெல்லி அரசியல் தலைமையின் அணுக்கத்திற்கு உரியவராக மாற்றியவர் தான் நாராயணசாமி! நிர்வாகத் திறமையோ, நாணயமோ, பொது நலன் சார்ந்த அக்கரையோ இல்லாமல் மேலிடத்து லாபி மூலம் அதிரடியாக புதுச்சேரி அரசியலில் பிரவேசித்து, நமச்சிவாயத்திற்கு அல்லது வைத்தியலிங்கத்திற்கு சென்றிருக்க வேண்டிய முதல்வர் பதவியை அடைந்தார்!
இப்பவெல்லாம் தினம் தினம் பூஜைதான்...அய்யர் காட்டில் அடைமழை தான்.
கொறைச்சலும் இல்லாமல் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கிட்டிருக்கானுக... நான் ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் சிவன் கோவிலுக்கு தவறாமல் சென்றுவிடுவேன்...25 வருடத்துக்கு முன்பெல்லாம் எங்க ஊரு சிவன் கோவிலில் விஷேசம் நடப்பதெல்லாம் வருடத்துக்கு ஒருமுறைகூட இருக்காது. . அப்படியே இருந்தாலும் கூட்டம் அவ்வளவாக இருக்காது, மேலும் பிரதோஷத்துக்கு உற்சவர் பிரகாரத்தில் வலம் வர பல்லாக்கை தூக்குவதற்கு ஆள் கிடைக்காது... ரோட்டுல போகிறவர் வருபவரை கெஞ்சி அழைத்து தூக்கவைத்ததாக ஊர்ப் பெரியவர்கள் இப்பொழுது ஆன்மீகம் என்னும் பெயரில் கோவில்ளில் மக்கள் பொழுதுபோக்கு கூத்தடிப்பதைப் பார்த்து வேதனையுடன் சொல்லக் கேட்டிருக்கிறேன்



















