சனி, 20 ஆகஸ்ட், 2016

அதிமுக எம்பி சத்தியபாமாவும் திருச்சி சிவா ,சசிகலா புஷ்பா கூட்டணியில்? சத்தியபாமாவின் கணவர் புகார்,

சென்னை: திமுகவின் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா கூட தன் மனைவி சத்தியபாமா கட்சியை மறந்து அன்யோன்யமா இருந்ததாக கணவர் வாசு பகீர் பேட்டியளித்துள்ளார்.
 அதிமுகவின் லோக்சபா எம்.பி.யான சத்தியபாமா மீது அவரது கணவரே ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அத்துடன் விவகாரத்து கோரி நோட்டீஸும் அனுப்பியிருந்தார்.ந்த நிலையில் ஜூனியர் விகடன் இதழுக்கு வாசு அளித்த பேட்டியில், "சசிகலா புஷ்பா, மல்லிகா பரமசிவம், சத்தியபாமா, திருச்சி சிவா எல்லாருமே கட்சியை மறந்து ரொம்ப அன்யோன்யமா இருந்தாங்க... இது சம்பந்தமா நான் அப்பவே அம்மாவுக்கு ஒரு புகார் அனுப்பினேன்.. ஆனா அதை அம்மாகிட்ட கொடுக்கவிடாம தடுத்துட்டாங்க என கூறியுள்ளார்.
 மேலும் "சசிகலா புஷ்பா மாதிரி என்னைக்காவது ஒருநாள் எல்லா விவரமும் அம்மாவுக்குத் தெரியவரும். அப்ப சசிகலா புஷ்பா மேல எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போல சத்தியபாமா மேலயும் எடுப்பாங்க" என்றும் வாசு கூறியுள்ளார்.  ஆனால் சத்தியபாமாவோ, ‘குடும்ப விஷயத்தை இப்படி பத்திரிகைகளுக்குச் சொல்றது நல்லாவா இருக்கு. அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லிட்டுப் போகட்டும். நான் யாரையும் குறை சொல்லி எப்பவுமே பேச மாட்டேன். மக்களுக்குச் செய்ய வேண்டிய வேலை ஆயிரம் இருக்கு" என விளக்கமும் கொடுத்திருக்கிறார்.  tamiloneindia.com

தீப்பொறி ஆறுமுகம்: காசு வாங்கிட்டுதானே கட்சியில சேர்ந்தேன்னு ஜெயலலிதா கேட்டிச்சு

தனது பதினைந்தாவது வயதில்  தந்தை பெரியாருடன் மேடைகளில் பேசி பேச்சாளராக வாழ்வைத் துவக்கியவர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகம் முழுக்க தி.மு.க. பொதுக்கூட்டங்களில் அனல் பறக்கப் பேசிய நட்சத்திரப் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம். எந்த ஊரில் பொதுக்கூட்டம் என்றாலும் விடிய…... விடிய...…விடிய...… மதுரைத் தமிழில் பொளந்து கட்டும் 73 வயதாகும் தீப்பொறி ஆறுமுகம், இப்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தகவல் கேள்விப்பட்டு தீப்பொறி யாரைச் சந்திக்கச் சென்றோம். >""ஊசி, மருந்து, மாத்திரை, பரிசோதனை, டாக்டர்கள் ஃபீஸ் என்ற வகையில் தினமும் பதினைந்தாயிரம் செலவாகுதுங்க'' என நம்மிடம்  கண் கலங்கினார் தீப்பொறியாரின் மனைவி சங்கரவடிவு.
""அட ஏத்தா இதெல்லாம் போய் தம்பிகிட்ட சொல்லிக்கிட்டு, அவரு என்ன நோட் அடிக்கிற மிஷினா வச்சிருக்காரு''. என மனைவியிடம் கூறிவிட்டு, நம்மிடம் மனம் திறந்தார் தீப்பொறியார்.

பூஜ்ஜியம்! கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் பலன் மத்திய, மாநில அரசுகளுக்கு பசுமை தீர்ப்பாயம் சூடு

புதுடில்லி:''கங்கையை துாய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ், கங்கையில், தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க எடுத்துள்ளதாக கூறப்படும் நடவடிக்கைகளின் பலன் பூஜ்ஜியமே; மத்திய, மாநில அரசுகளும், தொடர்புடைய அமைச்சகங்களும், கங்கை துாய்மையை முக்கியமான பிரச்னையாக எடுத்துக் கொள்ளவில்லை,'' என, தேசிய பசுமை தீர்ப்பாயம் கடுமையாக சாடியது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, மத்தியில் அமைந்த பின், கங்கையை துாய்மைப்படுத்தும் திட்டத்திற்கு, முன்னுரிமை கொடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.   நாராயணா இந்த தண்ணியை தானே போஸ்ட் ஆபீஸ்-இல வாங்கி குடிக்கிறீங்க...... நல்லா குடிங்க...... நியூட்ரல் ஆகவே போயிடுவீங்க........

அமரர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி.. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,ராகுல் காந்தி..


BOFTA சாரு நிவேதா: உலகின் மிகச்சிறந்த திரைப்பட கல்லூரியில்...

கடந்த சனிக்கிழமை முதல் வகுப்பு எடுத்த பிறகு இன்று இரண்டாவது வகுப்பு.  காலை 11.15க்கு ஆரம்பித்தது வகுப்பு.  Empire of the Sun மற்றும் The Artist ஆகிய இரண்டு படங்களை முன்வைத்து மாணவர்களுக்கு சினிமா பற்றி கற்பித்துக் கொண்டிருந்தேன்.  கூடவே இலக்கியமும் இசையும் வாழ்க்கையும்.  ரொம்ப உற்சாகமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் மாணவர்கள்.  ஒரு கட்டத்தில் கல்லூரியின்/ வகுப்பின் ஒருங்கிணைப்பாளர் என்னிடம் வந்து மாணவர்கள் லஞ்சுக்குப் போக வேண்டும், அடுத்த வகுப்பு இரண்டு மணிக்கு இருக்கிறது என்றதும்தான் எனக்கும் என்னைக் கேட்டுக் கொண்டிருந்த மாணவர்களுக்கும் காலப் பிரக்ஞையே வந்தது.  மீதியை அடுத்த வகுப்பில் பார்க்கலாம் என்று விரிவுரையை நிறுத்தினேன்.
தனஞ்சயனின் BOFTA திரைப்படக் கல்லூரியில் திரைப்பட ரசனை பற்றி வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.  இப்போதைக்கு இயக்குனருக்காகப் பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை பதினோரு மணியிலிருந்து இரண்டு மணி நேரம்.  செப்டம்பரில் திரைப்பட ரசனைக்காகவே ஒவ்வொரு வார இறுதியும் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் வகுப்புகள் நடக்கும்.

பிரதமர் மோடியின் விலை உயர்ந்த உடை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று விட்டது.. சாதனை சாதனை

நரேந்திர மோடி அணிந்திருந்த கோட் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் தற்போது இடம்பிடித்துள்ளது. ரூ.4 கோடியே 31 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதையடுத்து, உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட சாதனையை மோடியின் கோட் சாதனை படைத்துள்ளது. ModiSuit sold at auction for Rs. 43,131,311 enters Guinness World Records for being the most expensive suit sold
முகநூல் பதிவு : சின்ன சிவா

சவூதிக்கு சனியன் பிடிக்கிறது ? ஒசாமா மகன் ஹம்சா : சண்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா ?

அமெரிக்காவின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற சவுதி அரசை தூக்கியெறிங்கள் என்று அந்நாட்டு இளைஞர்களை வலியுறுத்தியிருக்கிறார் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன்' என்று பயங்கரவாத கண்காணிப்பு மற்றும் புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. தேதியிடப்படாத ஒலிப்பதிவு செய்தி ஒன்றில், ‘அரேபிய தீபகற்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அல்கெய்தாவில் இணைந்து பயிற்சி பெற்று அனுபவத்தை பெற வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராட முடியும்’ என்று அழைப்பு விடுத்திருக்கிறார். 2009இல் ஏமன் மற்றும் சவுதியில் அல்கெய்தா இயக்கம் தன் நெட்வொர்கை விரிவுப்படுத்தியதாக அமெரிக்கா குறிப்பிடுகிறது.

அமெரிக்கா இந்திய வம்சாவளி எம்பியின் தேர்தல் மோசடி... தந்தைக்கு சிறை வாசம் ,,, ஜனநாயக கட்சியை சேர்ந்த அமி பேரா

Ami Bera's father was sentenced Thursday to a year and a day in ... In 2010 and 2012, Babulal Bera's son Amerish Babulal was a candidate for U.S. Congress. ...
நியூயார்க், அமெரிக்காவில் தேர்தல் நிதி மோசடி வழக்கில் இந்திய வம்சாவளி எம்.பி.யின் தந்தைக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளி எம்.பி. அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி உறுப்பினராக இருப்பவர் அமரிஷ் அமி பெரா (வயது 51). இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரே எம்.பி. இவர்தான். இவரது தந்தை பாபுலால் பாப் பெரா (83). இவர் 2009, 2011 தேர்தல்களின்போது, தன் மகனின் தேர்தல் பிரசாரத்திற்கு சட்டவிரோதமான முறையில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 726 டாலர் (சுமார் ரூ.1 கோடியே 80 லட்சம்) நிதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மோசடி நடந்தது எப்படி? அமெரிக்க சட்டதிட்டப்படி 2009–ம் ஆண்டு தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு ஒருவர் 2 ஆயிரத்து 400 டாலரும், 2011 தேர்தலில் 2,500 டாலரும் தான் நிதி வழங்க முடியும். < ஆனால் பாபுலால் பாப் பெரா அதை மீறி, மொத்தம் 90 பேரிடம் சொல்லி, அவர்களது பெயரில் தன் மகனுக்கு 2 லட்சத்து 68 ஆயிரத்து 726 டாலர் தேர்தல் நிதியை தர வைத்து, பின்னர் அந்த நிதியை அவர், அவர்களுக்கு திரும்பத்தந்துள்ளார்.

இன்னொரு அதிமுக ராஜ்யசபா எம்பியும் சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவு....?

சென்னை: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.க்கு ஆதரவாக மற்றொரு ராஜ்யசபா எம்.பி. விரைவில் குரல் கொடுக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் புகார் கூறி பரபரப்பை கிளப்பினார் சசிகலா புஷ்பா. இதனால் அதிமுகவில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. ஆனால் தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் ஒருபோது எம்பி பதவியை ராஜினாமா செய்ய முடியாது என கூறிவருகிறார் சசிகலா புஷ்பா. தற்போது அவர் மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டுள்ளன. இதனால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றமும் சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மனுவை விசாரித்து வரும் 22-ந் தேதி வரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில் சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுக்கலாம் என கூறப்பட்டது. தற்போது தென்மாவட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக களமிறக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பசு உனக்கு புனிதமென்றால் அதை நீயே சுத்தப்படுத்து ... குஜராத்தில் ... சுயமரியாதை - 11 பற்றி எரியும் நெருப்பு!

subavee.com : இருவேறு மதங்களுக்குள்தான் மோதல் நடைபெறும் என்றில்லை. ஒரே மதத்திற்குள்ளேயே கடும் போர்கள் வரலாற்றில் நடைபெற்றுள்ளன., நடைபெற்றுக் கொண்டும் உள்ளன. சிலுவைப் போர், சன்னி-ஷியா மோதல்கள், சைவ-வைணவச் சண்டைகள் என்று பல எடுத்துக்காட்டுகள் உண்டு. இன்றும் கூட குஜராத்தில் நாம் காணும் தலித் எழுச்சி, ஒரே இந்து மதத்துக்குள்ளேயே நடக்கும் பெரும் யுத்தம்தானே! குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டம், உனா என்னும் இடத்தில்தான் சென்ற மாதம் 11 ஆம் தேதி,இறந்த மாட்டுத் தோலை உரித்தார்கள் என்ற குற்றம் சாற்றி, நான்கு இளைஞரகளைச் சங்கிலியால் கட்டி வைத்து, இரும்புக் கம்பிகளால் "கோ ரக்ஷன் சமிதி" (பசுப் பாதுகாப்புக்கு குழு) அமைப்பைச் சேர்ந்தவர்கள் அடித்தார்கள். அடித்தவர்கள், அடிபட்டவர்கள் இருவருமே இந்து மதத்தினர்தாமே! இந்து மதத்தில், மதத்தை விட, சாதியின் செல்வாக்கே மேலோங்கி நிற்கிறது என்பதற்கு இந்த நிகழ்வே பெரும் எடுத்துக்காட்டாக உள்ளது.

சென்னை கவுன்சிலர்கள் குவித்த கோடிகள் ! From டூவீலர் to ஸ்கார்ப்பியோ... சிங்கிள் பெட்ரூம் to ஆடம்பர பங்களா!

விகடன்.காம் :சென்னை கவுன்சிலர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் குவித்த சொத்துக்கள் பற்றி புலனாய்வு செய்ததில் நமக்குக் கிடைத்த தகவல்கள் எல்லாம் அதிர்ச்சிரகம்.ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்... 2011-ல் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடந்தது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், பெரும்பாலானவற்றில் அ.தி.மு.க-வினர் வெற்றிபெற்றனர். கவுன்சிலர்கள் பதவியேற்று ஓராண்டுக்குள் அவர்கள் மீது வரலாறு காணாத அளவுக்குப் புகார்கள் வந்ததைக் கண்டு அதிர்ந்துபோனார் முதல்வர் ஜெயலலிதா. கவுன்சிலர்கள் அனைவரையும் அழைத்து, ஒவ்வொருவரைப் பற்றி புகார் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார் ஜெயலலிதா. ‘‘பிராத்தல் பன்றவங்கக்கிட்ட எல்லாம் போய், மாமூல் வாங்கியிருக்கியே...’’ என்று கண்கள் சிவக்க ஜெயலலிதா கடுகடுத்ததைக் கண்டு வெலவெலத்துப் போனார் பெண் கவுன்சிலர் ஒருவர். முதல்வரின் கண்டிப்புக்குப்பிறகு கமிஷன், மாமூல், கட்டிங் என எல்லாவற்றையும் கவுன்சிலர்கள் நிறுத்திவிட்டார்களா என விசாரித்தோம். கிடைத்த தகவல்கள் அனைத்தும் தலைசுற்ற வைத்தன.

குழந்தைக்கு கம்மா சாதியினர் ரத்தம் மட்டும் தேவை”: பிரபல ரத்த கொடையாளர் தளத்தின் ட்விட்

மூன்று வயது குழந்தைக்கு கம்மா சாதியினர் ரத்தம் மட்டும் தேவை” என பிரபல ரத்த கொடையாளர் ட்விட்டர் தளமான பிளட் டோனர்ஸ் இந்தியாவின் ட்விட் சர்ச்சைக்குள்ளானது. ரத்தம் பெறுவதிலும் கொடுப்பதிலும் மட்டும் தான் யாரும் சாதி பார்ப்பதில்லை என இந்திய சமூகத்தின் சாதியம் குறித்து பேசும்போது சொல்லவதுண்டு. இப்போது அத்தகைய சிந்தனையிலும்கூட சாதியம் நுழைந்துவிடும் போலிருக்கிறது. சாதியை வைத்து ரத்தம் வாங்கினால் என்ன என்று சிந்திக்கவும் அதை செயல்படுத்தி பார்க்கவுமான சோதனை ஓட்டமாக இந்த ட்விட்டைப் பார்க்கலாம். சமூக வலைத்தளங்களில் எழுந்த கண்டனம் காரணமாக இந்த ட்விட் நீக்கப்பட்டிருக்கிறது. இந்த ட்விட்டர் தளத்தின் நிர்வாகி இந்தத் தவறான ட்விட்டுக்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.  /thetimestamil.com

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

பஞ்சாப் தேர்தலில் 14 பேருக்கு சீட் மனைவிக்கு அமைச்சு .. சித்துவின் பேரம்.. ஆடிபோன ஆம் ஆத்மி

14 பேருக்கு சீட்; மனைவிக்கு அமைச்சர் பதவி சித்து நிபந்தனையால் கெஜ்ரிவால் கலக்கம் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான, நவ்ஜோத் சித்து விதிக்கும் கடுமையான நிபந்தனைகளை ஏற்பதில், பெரும் தயக்கமும், சிக்கலும் உள்ளதால், ஆம் ஆத்மி கட்சியில், அவர் இணைவதற்கான வாய்ப்புகள், குறைந்து வருகின்றன.
பா.ஜ.,வின் நட்சத்திர பிரசாரகர்களில் ஒருவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, அக்கட்சியிலிருந்து, நான்கு முறை எம்.பி.,யாக இருந்தவர். பஞ்சாபில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜூலை, 18ல், தன் ராஜ்யசபா எம்.பி., பதவியை, அதிரடியாக ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.  இந்த சித்துவின் டிமாண்டுகளுக்கு விட்டு கொடுத்தால் ஆம் ஆத்மி இவ்வளவுதான் என்ற எண்ணமே ஏற்படும் . சும்மா இருந்து சித்துவை பெரிய ஆளாக்கவேண்டாம்

மனைவி இறந்த துக்கம்... 2 மகன்களை கொன்று தற்கொலை

திருக்கோவிலூர் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் 2 மகன்களை கொன்று விவசாயி தற்கொலைமனைவி இறந்த துக்கம் தாங்காமல் 2 மகன்களை கொன்று விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலூர்:
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). விவசாயி. இவரது மனைவி அம்பிகா(35). இவர்களுக்கு சிலம்பரசன்(15), அன்பரசன்(13) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.
புத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிலம்பரசன் 10-ம் வகுப்பும், அன்பரசன் 8-ம் வகுப்பு படித்து வந்தனர்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு அம்பிகா இறந்துவிட்டார். இதனால் செந்தில்குமார் மனவருத்தத்தில் இருந்து வந்தார். யாரிடமும் பேசாமல் விரக்தியில் இருந்தார்.

புதியதலைமுறை’ என் கண்டனத்தை மறுத்து விளக்கம் தந்திருக்கிறார்கள்..மதிமாறன்

மரியாதைக்குரிய தோழர் மதிமாறன் அவர்களுக்கு வணக்கம்,
நேற்று இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பான ”விளிம்பின் விடுதலை” என்ற நிகழ்ச்சியில் தங்கள் பேட்டி திருத்தி வெளியிடப்பட்டதாக தாங்கள் முகநூலில் எழுதியுள்ள பதிவு குறித்து விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளவன் என்கிற அடிப்படையில் இந்த பதிவை எழுதுகிறேன்
தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள முதல் விடயம் மோடியின் ஆட்சியில் நடைபெற்ற தலித் தாக்குதல்கள் குறித்து என்னிடம் விளக்கம் கேட்டார்கள் என்பது ஆனால் நிகழ்ச்சியின் தலைப்பே “விளிம்பின் விடுதலை” என்பது தான்.
70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் தலித் மக்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதே நிகழ்ச்சியின் மையப் பொருள். அப்படி இருக்க பிரதமர் மோடி போன்ற ஒருவர் 70 ஆண்டுகள் கழித்தும் தலித் மக்களை சுடாதீர்கள் என்னை சுடுங்கள் என்றும் சொல்லும் இழி நிலையில் இந்த நாடும் சமூகமும் தலித் மக்களை வைத்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவே பிரதமரின் அந்த உரையை முதலில் வைத்தோம்.

பெரியார் கொடுத்த தார் சட்டியும், பிரஷும் இருக்கிறது; அழித்தே தீருவோம்: நெய்வேலி என் எல் சி ...

பெரியார் கொடுத்த தார் சட்டியும், பிரஷும் இருக்கிறது; அழித்தே தீருவோம்: கி.வீரமணி நெய்வேலி - என்.எல்.சி. நிறுவனத்தின் பெயரில் உள்ள நெய்வேலி என்பதை அகற்றி என்.எல்.சி.இண்டியா லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதைஎதிர்த்துபுதிய பெயரைத் தார் கொண்டு அழிக்கும் போராட்டத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்தார். குறிஞ்சிப்பாடிபத்மாவதிதிருமணமண்டபத்தில்இன்று(19.8.2016)காலைநடைபெற்றதிராவிடர் கழகத்தோழர்களின்கலந்துரையாடல்கூட்டத்தில்இந்தப்போராட்டஅறிவிப்பினை வெளியிட்டார்கழகத்தலைவர். அறிவிப்புவருமாறு:நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பெயரிலிருந்து (என்.எல்.சி. நெய்வேலி என்ற பெயரை) நெய்வேலியை நீக்கிவிட்டு என்.எல்.சி. இண்டியா லிமிடெட் என்ற பெயரை மத்திய அரசு சூட்டியிருக்கிறது.

மாடுகளை ஏற்றிய வாடகை வாகன ஓட்டுனர் கொலை! RSS பசுநேசன்களால் பாஜக ஓட்டுனர் கொலை


பசுக்களைச் சந்தைக்கு விற்பனை செய்ய எடுத்துச் செல்கிறவர்களையும், இறந்த மாட்டின் தோலை உரிக்கிறவர்களையும் பசு பாதுகாப்பு இயக்கத்தினர் என்று தங்களை அழைத்துக் கொள்கிறவர்கள், கட்டி வைத்து தாக்குகின்றனர். இது நாடு முழுக்க கடுமையான சர்ச்சைகளை உருவாக்கியதோடு சட்டம் ஒழுங்கு பிரச்னைகளையும் உருவாக்கியது. இது பற்றி மவுனமாக இருந்த மோடி, சில நாட்களுக்கு முன்னர் “தாக்குவதாக இருந்தால் என்னைத் தாக்குங்கள். தலித்துக்களை தாக்காதீர்கள்” என்றார்.
இன்னொரு பக்கம் குஜராத் மாநிலத்தின் உனாவில் தலித்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அரசியல் வடிவம் எடுத்து, குஜராத் பாஜக-வை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் மாடுகளை ஏற்றி சந்தைக்கு விற்கச் சென்ற பாஜக நிர்வாகியை இந்து அமைப்பினர் கம்பியால் தாக்கி அடித்துக் கொலை செய்துள்ளனர்.

திமுக நடத்திய போட்டி சட்டமன்றம்!


மின்னம்பலம்.காம்:  :எதிர்க்கட்சிகள் ஒன்றும் ஊடகங்களைக் கவர்வது அத்தனை எளிதல்ல. ஆனால், தன் பல்வேறு எதிர்ப்பு வடிவங்களால் ஊடகங்களைக் கவர்வதில் இன்னும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை இன்று போட்டி சட்டமன்றம் நடத்தி காட்டியிருக்கிறார்கள் திமுக எம்எல்ஏ-க்கள்.
நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் பின்னர் ஸ்டாலின் உட்பட திமுக-வின் 80 உறுப்பினர்கள் ஏழு நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் மன்றத்திலும், நீதி மன்றத்திலும் நியாயம் கேட்டு, போராடி வரும் திமுக உறுப்பினர்கள் 80 பேரும் நேற்று சட்டப்பேரவையின் நான்காம் எண் வாயில்கேட்டின் முன்பாக அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்த, சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டி சட்டமன்றக் கூட்டத்தை நடத்தினர்.

மத்திய அமைச்சர் வி.கே.சிங் மீது அதிகார முறைகேடு குற்றச்சாட்டு..உச்ச நீதிமன்றில் ராணுவ தளபதி தல்பீர் சிங் முறையீட்டு மனு தாக்கல்

http://ns7.tv/ :ராணுவத்தில் பதவி உயர்வைத் தடுக்க முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் சூழ்ச்சி செய்ததாக தற்போதைய ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்ற ரவிதஸ்தனே என்பவர் உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2012ல் தனக்கு கிடைக்க வேண்டிய தலைமை கமாண்டர் பதவிக்கு அப்போதைய ராணுவ தளபதி வி.கே.சிங் தனக்கு விருப்பமானவரை நியமித்ததாகக் கூறியிருந்தார். இது குறித்து ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தல்பீர் சிங் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், கடந்த 2012ம் ஆண்டு அப்போதைய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங் தனக்கு பிராந்திய தலைமை கமாண்டர் பதவி கிடைக்காமல் செய்ய போலியான குற்றச்சாட்டுகள் கூறி பதவி உயர்வை நிறுத்தி வைத்ததாகவும், பின்னர் விசாரணையில் போலியான குற்றச்சாட்டு என்பதால் பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். 

மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவின் காரை நிறுத்திய காவலருக்கு சரமாரி அடி ..விடியோ ஆதாரம்


காசியாபாத்: வாசலில் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா காரை நிறுத்திய காவலர்களை, அவரது உதவியாளர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குள்ளான பாதுகாவலர் ஒருவர் கூறுகையில், வாசல் கதவை திறக்க ஓரிரு நிமிடங்கள் தாமதமாகியுள்ளது. இதனால் அமைச்சர்களின் உதவியாளர்கள் எங்களை கடுமையாக தாக்கியும் கடுமையாகவும் திட்டியதாக கூறினார். நேற்று, ரக்சா பந்தன் விழாவை முன்னிட்டு, மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, காசியாபாத்தில் உள்ள அஷினா கிரீன் குடியிருப்பில் வசிக்கும் தனது சகோதரியை பார்த்து திரும்பும்போது, இந்த சம்பவம் நடந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ துவங்கியது. அந்த வீடியோவில், குடியிருப்பு பாதுகாவலர்களை அமைச்சரின் உதவியாளர்கள் தாக்கியதும், திட்டுவதும் பதிவாகியுள்ளது.

சாக்ஷி மாலிக் இந்தியாவின் முதல் பதக்கத்தை பெற்றார் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் Sakshi Malik, the female wrestler who got India's first medal

ரியோ ஒலிம்பிக் மகளிர் 58 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத்தந்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வியாழக்கிழமை அதிகாலையில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் 0-5 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்த சாக்ஷி மாலிக், கடைசி நிமிடத்தில் சரிவிலிருந்து மீண்டதோடு 8-5 என்ற புள்ளிகள் கணக்கில் கிர்கிஸ்தான் வீராங்கனை அய்சூலு டைனிபெகோவாவை தோற்கடித்தார். முன்னதாக புதன்கிழமை நடைபெற்ற காலிறுதியில் சாக்ஷி மாலிக் 2-9 என்ற புள்ளிகள் கணக்கில் ரஷியாவின் வேலரியா கோப்லோவாவிடம் தோல்வி கண்டார். இதன்பிறகு தொடர்ந்து சிறப்பாக ஆடிய வேலரியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதால், மல்யுத்த விதிமுறைப்படி சாக்ஷி மாலிக்கிற்கு "ரெபிசேஜ்' சுற்றில் (வெண்கலப் பதக்கம் வெல்வதற்கான மறுவாய்ப்பு) விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
"ரெபிசேஜ்' சுற்றில் நேரடியாக 2-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்ற சாக்ஷி மாலிக், அதில் 12-3 என்ற புள்ளிகள் கணக்கில் மங்கோலியாவின் பியூர்டார்ஜின் ஆர்கோனை தோற்கடித்தார்.

ஈஷா யோக ஜாக்கி வாசுதேவின் உல்லாசம் பாரீர் ! ஊரான் பணத்தில் ஹெலிகாப்டர்,, ஹம்மர் கார், கோல்ப் விளையாட்டு ,அரண்மனை



சுவாதி கொலை திருப்பம்... ஆடியோ ஆதாரம் சிக்கியது


சுவாதியின் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பெண், காவல்துறையினர் தன்னை கொலை முயற்சி செய்வதாக கூறி வெளிநாட்டுக்கு தப்பி ஓடியுள்ளதாக தமிழச்சி தனது முந்தைய பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
சுவாதியின் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பெண், காவல்துறையினர் தன்னை கொலை முயற்சி செய்வதாக கூறி வெளிநாட்டுக்கு தப்பி ஓடியுள்ளதாக தமிழச்சி தனது முந்தைய பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், சுவாதி படுகொலை தொடர்பான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது, வெளிநாட்டில் தப்பி ஓடியுள்ள பெண்ணுடன் நடந்த உரையாடலை ஆதாரமாக பதிவு செய்து வைத்துள்ள தமிழச்சி, அதில் சில நிமிட பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு மற்றும் ஆடியோ, சுவாதியின் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பெண் காவல்துறையில் உள்ள இருவர் கொலை முயற்சி செய்வதாக கூறி வெளிநாட்டுக்கு தப்பி சென்ற பின் பல அதிர்ச்சிகர தகவல்களை தருகிறார்.

சுவாதியை நான் கொலைசெய்யவில்லை.. ராம்குமார் வாக்குமூலம்

சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அவரை நான் கொலை செய்யவில்லை என்றும், போலீசார் தன் மீது பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றும் ராம்குமார் நீதிமன்றத்தில் கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த ஜீன் மாதம் 24ஆம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.<அந்த கொலை தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது முயற்சியின் போது அவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டதால், அப்போது வாக்குமூலம் பெறமுடியவில்லை.அதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் உடல் நிலை தேறிய பின் அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

SRM.பச்சமுத்து கொலை குற்றச்சாட்டில் விரைவில் கைது ..? வேந்தர் மூவீஸ் மதனின் தற்கொலை கடிதம் போலி?

சென்னை: நீதிபதிகளின் சரமாரி கேள்விகளுக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினர் பதில் அளித்துள்ளார். இரண்டு வாரங்களில் வேந்தர் மூவிஸ் மதனை கைது செய்து விடுவோம் என்றும் தேவைப்பட்டால் பச்சமுத்துவை கைது செய்ய தயக்கம் ஏதுமில்லை என்றும் கூறியுள்ளார்.
பச்சமுத்துவின் பினாமியாக செயல்பட்டவர் இந்த மதன் என்பவர்.  SRM கல்வி குழுமங்களில்  சேர்வதற்கு  இவரை பிடித்துதான்  லட்சகணக்கில்  பெற்றோர்கள் லஞ்சம்  கொடுத்தனர்.  அந்த  திருட்டு பணத்தை  திரையுலகில்  முதலிட்டு   மேலும் இருவரும்  பணம் சம்பாதித்தனர். தற்போது வியாபர நஷ்டமோ அல்லது  வேறு ஏதாவது தொல்லைகளோ தெரியவில்லை. திடீரென்று மதனை காணவில்லை. அவர் காசி போயிட்டர்ந்னு ஒரு கதை விட்டார்கள். பின்பு அவரை தேடி போலீசும் அவரது படத்தை  இயக்கி வரும் லாரன்ஸ் ராகவேந்திராவும்   வடநாட்டுக்கு படை எடுத்தார்கள். ஒருவிதமான  முன்னேற்றமும்   ஏற்படவில்லை. இப்பொழுது  சந்தேகம் வலுத்து விட்டது. 
பச்சமுத்துவின்  வாக்கு மூலங்கள் மிகுந்த சந்தேகத்தை  கொடுக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியுடனும்  முதல்வர்  ஜெயலலிதாவுடனும் நல்ல கொடுக்கல் வாங்கல்களை இவர் பேணி வருகிறார். கடந்த தேர்தலில் இறுதி நேரத்தில் தனது உடையார் சமுக வாக்குகளை அதிமுகவுக்கு பெற்று தந்ததால் அதிமுக வெற்றி பெற்றது என்பது இங்கு கவனிக்க தக்கது  

நந்திவரம் - கூடுவாஞ்சேரியில் புறநகர் பேருந்து நிலையம்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை வண்டலூருக்குப் பதிலாக நந்திவரம் - கூடுவாஞ்சேரியில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்துக்கு உரிமை மாற்றும் பணி நடைபெற்று வருவதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
தமிழகத்தின் தென் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளுக்காக சென்னை வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என கடந்த 30-4-2013-ல் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்த ஜி.எஸ்.டி. மற்றும் வெளிவட்டச் சாலையை ஒட்டியுள்ள நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒலிம்பிக் பாட்மின்டன்:சிந்து வெற்றி; இந்தியாவிற்கு அடுத்த பதக்கம் உறுதி?

ரியோ டி ஜெனிரோ: பாட்மின்டன் அரையிறுதிபோட்டியில் சிந்து வெற்றிபெற்றார். ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு அடுத்தபதக்கம் உறுதியானது. ரியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான பாட்மின்டன் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து மற்றும் ஜப்பான் வீராங்கனை நொசாம்பி ஓக்குஹாரா ஆகியோர் மோதினர். துவக்கம் முதலே முன்னிலை பெற்று வந்த இந்திய வீராங்கனை சிந்து முதல் செட்டில் 19-21 என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை கைபற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் அபாரமாக விளையாடிய சிந்து 21-10 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். இதையடுத்து இந்தியாவிற்கு அடுத்த பதக்கம் உறுதியானது. இறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினுடன் மோதுகிறார். இதையடுத்து ஒலிம்பிக்கில் இந்தியா தங்க பதக்கம் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  dinamalar.com

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

பசுப்பாதுகாப்பு பாசிச படைகள் உருவாக்கம்.. ISIS பாணியில் RSS கவ் ரக்‌ஷா தள் cow rakshak dal

சுப்பாதுகாப்பு என்ற பெயரில் இந்துமதவெறி அமைப்புகள் தலித்துகள் மற்றும் முஸ்லீம்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வரும் நிலையில் பசுப்பாதுகாப்பு குண்டர் படைகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளன, மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா பா.ஜ.க அரசுகள். “பசுவதைத் தடுப்பு சட்டத்தை” நடைமுறைப்படுத்த சமூகத்தின் பங்களிப்பும் அவசியம் என்ற பெயரில் இந்துமத வெறி இயக்கங்களுக்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கியிருக்கின்றன இம்மாநில அரசுகள். இதன்படி மாடுகள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்று வாகனங்களை சோதனையிடவும்; போலீஸ் வரும் வரை வண்டியை தடுத்து நிறுத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மஹாராஷ்டிர அரசின் பசுப்பாதுகாப்பு குண்டர் படைக்கு இதுவரை 1900 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பயமுறுத்தும் புள்ளி விபரங்கள்.. எதிர்காலம் பற்றி காபறேட்டுக்களிடம் கேட்காமல் உண்மையான புள்ளி விபரங்களை கொஞ்சம் பாருங்கள் ...

எண்கள் 1:  2016-ம் ஆண்டு ஜூன் 30 நிலவரப்படி தமிழகத்தில் 83 லட்சத்து 35 ஆயிரம் பேர் வேலையின்றி வேலை வாய்ப்பு அலுலவங்களில் பதிவு செய்திருக்கின்றனர். இவர்களில் கலை பட்டம் பெற்றோர் 4.50 லட்சம் பேர். அறிவியல் பட்டம் பெற்றோர் 6.14 லட்சம் பேர். வணிகவியல் பட்டதாரிகள் 3.40 லட்சம் பேர். பட்டதாரி ஆசிரியராக பதிவு செய்தோர் 3.82 லட்சம் பேர். மொத்தம் 14 லட்சம் பட்டதாரிகள் வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர்.
எச்சரிக்கை: தனியார் சுயநிதிக் கல்லூரிகள், பள்ளிகள் பிதுங்கி வழியும் தமிழகத்தில் பணத்தை பறிகொடுத்து வேலை வாய்ப்பிற்காக காத்திருப்போர் 83 லட்சம் – கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேர். இவர்களது குடும்ப உறுப்பினர்களையும் கணக்கிட்டால் தோராயமாக மூன்று கோடி மக்கள் கிரமமான வருமானம், வேலையின்றி வாழ்கின்றனர். ‘மிஸ்டு’ கால் கொடுத்தே பல இலட்சம் பேரை உறுப்பினராக்கிய தமிழக பாரதிய ஜனதாவும், ஒரு ‘கோடி’ உறுப்பினர்களை கொண்டிருப்பதாக பீற்றும் அ.தி.மு.க அரசும் வேலை வெட்டியற்று இருக்கும் ஒரு கோடிப்பேருக்கு என்ன பதில் சொல்லும்?

திருச்சி : தடையை மீறி நீதித்துறை சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டம்

இது ஜனநாயக நாடு மக்களுக்கான எல்லா உரிமைகளும் உள்ளது என வாய்க்கிழிய பேசுகின்றனர். ஆனால் சாதாரண பேச்சுரிமை, கருத்துரிமை கூட கிடையாது. நம் உரிமைக்காக நாம் போராடுவதே மிகப்பெரிய குற்றம் என்கின்றனர். இதில் நேரடியாக நீதிமன்றமே தலையிடுகிறது.
peoples-power-trichy-rally-05ழக்கறிஞர்கள் போதையில் திரிகிறார்கள், நீதிபதியிடம் கைநீட்டி பேசுகிறார்கள், சத்தம் போட்டு வாதாடுகிறார்கள், கண் புருவத்தை உயர்த்தி பார்க்கிறார்கள்’ என தலைமை நீதியரசர்கள் ஒன்று கூடி தனிச்சட்டம் போட்டு அனைத்து வழக்கறிஞர்களின் உரிமையை பறிக்க முயல்வதை எதிர்த்து கடந்த இரு மாத காலத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு வகையான போரட்டங்களை நடத்தி வருகிறார்கள்..

அதிமுக தேசத்தொண்டர்கள் போயசுக்கு குமாரசாமி பாணி கணக்கு? பின்னே அம்மாவுக்கு ஆத்திரம் வராதா?

சபைக்கு வெளியே அத்தனை அமளிதுமளி நடந்துகொண்டிருந்தபோது முதலமைச்சர் ஜெயலலிதா சபைக்குள்தான் இருந்தார். அவருக்கும் இதுபற்றிய தகவல்கள் சொல்லப்பட்டிருக்கிறது. தர்ணாவில் ஈடுபட்டிருக்கும் திமுக எம்எல்ஏ.க்களை கைது செய்யலாமா எனவும் அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. 'நோ..' எனச் சொல்லிவிட்டாராம் முதல்வர். கைது நடவடிக்கை என்று போனால் அது திமுக-வுக்கு சாதகமாகவும், மக்களிடம் சிம்பதியும் உண்டாக்கிவிடும். இதைவைத்தே திரும்ப அரசியல் செய்வார்கள். அதனால் நடடிக்கை எதுவும் வேண்டாம் என முதல்வர் நினைத்ததாகச் சொல்கிறார்கள்’ என்பதுதான் அந்த மெசேஜ்.
ஃபேஸ்புக் ஸ்டேட்டஸும் தயாராக இருந்தது.
‘மீண்டும் அதிமுக-வில் ‘புஷ்பா’ புயல் வீசத் தொடங்கியிருக்கிறது. இரண்டு மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி, நிர்வாகிகள் பலரை தூக்கி வீசியிருக்கிறது புஷ்பா புயல். ஜெயலலிதாபற்றி பகிரங்கமாக புகார்களைச் சொல்ல ஆரம்பித்தார் அதிமுக எம்.பி.யான சசிகலா புஷ்பா.

ஜாக்கி வாசுதேவ் இஷா யோகாவின் அனைத்து கிரிமினல் நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்துவோம் .. அமிர்தம் .. ஜனநாயக மாதர்சங்க துணை தலைவி


கோவையில் ஜனநாயக மாதர் சங்க மாநில துணை தலைவர் அமிர்தம் , ஈசா மையம் மீது தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டு இருப்பதாகவும் எனவே ஈசா மையம் மீதான புகார்கள் குறித்து உயர்மட்ட குழு விசாரணை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் ஈசா மையத்தால் பாதிக்கப்பட்ட பலர் தங்களிடம் முறையிட்டு இருப்பதாகவும் ஈசா மையத்தில் உள்ள பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட் டுள்ளதுடன் , அங்கு மோசமான சம்பவங்களும் நடைபெற்று இருக்கிறது. ஈசா மையத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் அவற்றை வெளியிட இருப்பதாகவும் அமிர்தம் தெரிவித்தார். தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் ஈசா மையம் மீது தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் முக்கியமான ஆதாரங்களை வெளியிடப்போவதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நக்கீரன்.இன்

தரையில் அமர்ந்து ஸ்டாலின் தர்ணா போராட்டம்

சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவாதத்தின்போது சபாநாயகரின் உத்தரவால் திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். ஒரு வாரம் பேரவைக்கு நுழைய தடை விதித்தும் சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பித்தார் சபாநாயகர்.>இந்நிலையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவை வளாகத்தில் பேரவை 4-ம் எண் வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். படங்கள் ...

பிரிட்டனின் அன்ஜெம் சௌத்ரிக்கு பத்து வருட சிறை தண்டனை... சட்டத்துக்குள் இத்தனை ஒளிந்திருந்தவன்

மின்னம்பலம் :உலக யுத்தம் ஒன்று இப்போது இல்லை. ஆனால், யுத்தங்கள் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது. பயங்கரவாத தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், நாம் கற்பனை செய்ய முடியாத அளவிலான நீஸ் வடிவ தாக்குதல் என மக்கள் மீது தீவிரவாதம் நடத்தும் யுத்தம் இந்த உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தீவிரவாதம் என்பது உலகின் அத்தனை அரசுகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பது ஒருபக்கம் என்றால், அதன் இன்னொரு பகுதி பிள்ளைகளைப் பிடித்து, மூளைச் சலவை செய்து, துப்பாக்கிகளைக் கையில் கொடுத்து அவர்களின் வாழ்வை சீரழிப்பதுதான். ஒவ்வொரு பெற்றோருமே தங்கள் பிள்ளைகளை தீவிர மூளைச்சலவைகளில் இருந்து காப்பாற்றியாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள். இந்த சர்வதேச பிரச்னையில் மூளைச்சலவை நடத்துகிறவர்களில் நுட்பமான முகங்களை புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும்.

மின்னம்பலம் : ரூ.690 கோடி - இன்டர்நெட் உலகின் சாதனை!

இந்தியாவில் ‘opera mini’ பிரவுசர் மூலம் இணையத்தைப் பயன்படுத்துவோர் வருடத்துக்கு 36,000 டெராபைட், அதாவது 40,135, 582 GB டேட்டா (Data)வை சேமித்து வருகின்றனர். opera mini-ன் கம்ப்ரஷன் தொழில்நுட்பத்தின் உதவியால், இணையப் பயன்பாட்டாளர்கள் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் டேட்டாவை மிச்சப்படுத்துவதால் 1 GB-க்கு ரூபாய் 173 என வருடத்துக்கு ரூ.690 கோடியை சேமிக்கின்றனர். தேடல் (Search) இணையம் மூலம் ஆன்லைன் செல்ல முதன்மையான காரணம், இந்தியாவில் opera mini பயன்படுத்துபவர்களில் பத்தில் எட்டு பேர் தேடல் தளமாக கூகுளை பயன்படுத்துகின்றனர். தேடல் வலைத்தளங்களை பயனாளர்கள் அதிக அளவு பயன்படுத்தினாலும், அதிகமாக பயன்படுத்தப்படும் 100 இணைய தளங்களில், தேடல் (Search) பக்கங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 10 சதவிகிதமாகவே உள்ளன. இதை அடுத்து முறையே 28 சதவிகிதம் மற்றும் 17 சதவிகிதம் என செய்தி, பதிவிறக்கம் ஆகிய தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உள்ளன. கூகிள் பயன்படுத்தாமல் எதைப் பயன்படுத்துகிறார்கள்? என்ற கேள்வி எழுகிறதா?

நீ ஒரு தாசி, நீ எப்பவுமே தாசிதான்...’ - ஒரு கிழவன் ஒரு பெண்ணைப் பார்த்துக்... ராதிகா ஆப்தே

இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் ராதிகா ஆப்தேவின் நிர்வாணக் காட்சியை பலர் பார்த்திருக்கக் கூடும். ‘குமுதவள்ளியின் வீடியோ’ என்று தமிழகத்திலும் உலா வருகிறது. ‘பார்சுடு’ என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி அது. நிர்வாணக் காட்சியில் ராதிகா ஆப்தேவோடு இருந்தவர் அடில் ஹுசைன். இருவர் நடித்திருந்த இந்தக் காட்சியை, வட இந்திய ஊடகங்கள் ‘ராதிகா ஆப்தேவின் செக்ஸ் சீன்’ என பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து, தங்களது படத்தின் ஒரு காட்சி வெளியானதைவிட மிகவும் கோபப்பட்டிருக்கிறார் அடில் ஹுசைன். ‘அந்த வீடியோவைப் பார்த்து, ஏன் ராதிகாவின் நிர்வாணப் படமென்று கூவுகிறீர்கள்? அந்தக் காட்சியில் நானும்தான் இடம் பெற்றிருக்கிறேன். என் பெயரை பயன்படுத்தியிருக்கலாமே.

மருத்துவ நுழைவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் 3.21 லட்சம் பேர் தகுதி பெறவில்லை ... அதிக அளவில் இடம் பிடித்த மாணவிகள்

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் நிரப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வையும், கடந்த ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வையும் நடத்தியது. இந்த 2 கட்ட தேர்வு முடிவுகளையும் சிபிஎஸ்இ நேற்று முன்தினம் வெளியிட்டது.

ஜாக்கி வாசுதேவ் மீது உ.வாசுகி புகார்.. அடியாட்களை வைத்து கொண்டு என்ன விசாரணை நாடகம்? ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் ...


இளம்பெண்களை முன்னே வைத்து அடியாட்களை பின்னே வைத்து.... பணத்தை வீசி அதிகாரிகளையும் ஊடகங்களையும் வாங்கி .. மாமாவேலை பார்த்து அரசிலையும் ..
கோவை, ஆக. 17 – ஈஷா மையத்தின் மீது அடுத்தடுத்த வெளிவரும் புகார்கள் அரசு நிர்வாகத்தின் பலதுறைகளும் சம்பந்தப்பட்டிருப்பதால் இதனை முழுமையாக வெளிக்கொணர பதவியில் உள்ள நீதிபதியை தலைமையாகக் கொண்டு பல வல்லுனர்கள் உள்ளடக்கிய குழு விசாரணை மேற்கொள்ள
வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி வலியுறுத்தினார்.
கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் காட்டூர் மில்தொழிலாளர் சங்கத்தில் புதனன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி பங்கேற்று பேசினார். ஈஷா யோகமையத்தின் முறைகேடுகள் குறித்து அவர் பேசுகையில், கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையத்தின் மீது கட்டிட விதிமுறை மீறல், யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, விதி மீறிய கட்டிடங்களுக்கு தடையில்லா மின்சாரம், கல்வி கட்டணத்தில் முறைகேடு, இளைஞர்களை மூளைச்சலவை செய்வது என அடுத்தடுத்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தன்னுடைய மகள்களை மீட்டுத்தரக்கோரி பேராசிரியர் காமராஜின் புகாரின் மேல் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வருகின்ற 22 ஆம் தேதி கலைஞர் தலைமையில் கண்டன கூட்டம்... ஜனநாயகம் படும் பாடு

சட்டப்பேரவையில் இன்று (17-08-2016) அனைத்து திமுக உறுப்பினர்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்  உள்பட திமுக உறுப்பினர்கள் குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்டு, அவையில் இருந்து வெளியேற்றப் பட்டனர். இதனையடுத்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு வார காலத்திற்கு அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்காதவாறு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதுமுள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சபாநாயகரின் உருவப்பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

புதன், 17 ஆகஸ்ட், 2016

வர வர ராமதாசுக்கு காதல் கசக்குதையா....: 200 முஸ்லீம் பெண்களை காதலித்து திருமணம் செஞ்சிக்கிட்டாங்க... முழுபேட்டி விடியோ !


பாமக நிறுவனர் ராமதாஸ், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தலித்துகள், பிரபல தலித் தலைவரின் தூண்டுதலின் பேரில் இஸ்லாமிய பெண்களை காதல் நாடகமாடி திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் 200 முஸ்லீம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக அந்த ஊர் இமாம் இதைத் தங்களிடம் தெரிவித்தாக கூறியுள்ளார்.
இந்தப் பேட்டியில் ராமதாஸ் கூறியுள்ள சில கருத்துகள்:
  • அஞ்சாவது படிச்சவன் செல்போன் பயன்படுத்தறான். செல்போன் மூலம் சமூக வலைத்தளங்களில் பெண்களை காதல் வலையில் விழ வைக்கிறார்கள்.
  • நரிக்குறவர்கள் இருக்காங்களே, அதான் பாசி மணி ஊசி மணி விக்கிறவங்க(சிரிக்கிறார்) அவங்க வந்து எம் பொண்டாட்டியைத் தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னு சொல்றாங்க.

ஜாதிவெறி தாண்டவமாடும் சென்னை ஐ ஐ டி .. மாணவர் அபினவ் சூர்யாமீது துவேஷ அம்புகள்.. இயக்குனர் பா.ரஞ்சித் பங்கேற்ற....

சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர் அபினவ் சூர்யா. சமீபத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் பங்கேற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டார்.  இயக்குநர் ரஞ்சித்துடன் எடுத்துக்கொண்ட படத்தை தன்னுடைய முகநூலில் பகிர்ந்திருக்கிறார். இந்தப் படத்தைப் பார்த்து, பலர் அபினவ் சூர்யாவின் இன்பாக்ஸில் மிகக் கீழ்தரமான குறுந்தகவல்களை அனுப்பியுள்ளனர்.
“இடஒதுக்கீட்டில் வந்தவனே…உன் தலையை வெட்டி கூறுபோட்டு பன்றிக்குப் போட வேண்டும்!”
“சராசரி அறிவுகூட இல்லாத இடஒதுக்கீட்டில் வந்தவர்கள்” என்று தொடங்கி எழுத முடியா வசைகளை அனுப்பியுள்ளனர்.
அபினவ் சூர்யா, “இவையாவது பரவாயில்லை. என் தாயையும் என் சகோதரிகளையும் கீழ்த்தரமாக எழுதி அனுப்பிய குறுந்தகவல்கள் பகிர முடியாதை” என்கிறார்.
ஐஐடியில் நிலவி வரும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான வன்மத்தைக் காட்டுகின்றன இந்தக் குறுந்தகவல்கள். தலித் மாணவர்களின் தற்கொலை சம்பவங்களின் பின்னணியுடன் இத்தகைய வன்மமான தாக்குதல்கள் இருப்பதை கவனிக்க வேண்டும்.  thetimestamil.com

தயவு செய்து வரலாற்றில் அவனது வாழ்க்கையை தவறாக இடம் பெறச் செய்து விடாதீர்கள்”: நா. முத்துக்குமாரின் சகோதரர் நா. ரமேஷ்குமார்

thetimestamil.com   :காலமான கவிஞர் நா. முத்துக்குமார் குறித்து பல்வேறு கருத்துகள் சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் அலசப்படுகின்றன. அத்தகைய கருத்துகளுக்கு விளக்கம் சொல்லும் வகையில் நா.முத்துக்குமாரின் சகோதரர் நா.ரமேஷ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,
“ஆம் நண்பர்களே…!
‘அம்மா’ என்றழைக்க தெரியாத வயதில் எங்கள் தாயை இழந்தோம். அதற்குப் பிறகான ஒரு நிகழ்ச்சியில் ‘பாவம் தாயில்லாப் பிள்ளைகள்…” என எங்களைப் பரிதாபப் பார்வை பார்த்ததை விரும்பாத எங்கள் தந்தை, உறவினர்கள் ஒன்றுகூடும் எல்லா விருந்து விசேஷங்களிலும் விபரம் தெரியும்வரையில் எங்களைத் தவிர்த்தார். அதே மனநிலையில் தான் நாங்களும் வளர்ந்தோம்.
இன்று காலம் அதே கொடூர மனநிலைக்கு எங்கள் பிள்ளைகளைத் தள்ளியிருக்கிறது. எங்களது பிள்ளைகள் மீதும் அந்த பரிதாபப் பார்வைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.
உங்கள் அனைவரது நோக்கமும், எங்களுக்கு உதவ வேண்டும் என்கிற நினைப்பும், என் அண்ணன் நா.முத்துக்குமார் சம்பாதித்த நண்பர்களையும், உறவுகளையும் பார்க்கையில், அவன் திருப்தியான வாழ்வு வாழ்ந்ததாகவே எங்களை எண்ண வைக்கிறது.

சட்டசபையில் காவல்துறை கோரிக்கை மீது ஸ்டாலின் பேசக்கூடாது என்று திட்டம்போட்டு... சபையை திருடிய கூட்டம்

அடுத்தடுத்து, இரண்டாவதுமுறையாக பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான சட்டமன்றத்தில் திமுக, அதிமுக உறவு ஒப்பீட்டளவில் சுமுகமாகவே இருந்தது. ஆனால் கடந்த 15 நாட்களில் இருமுறை அவை ஒத்திவைக்குமளவுக்கு சட்டமன்ற நிகழ்வுகள் சூடு கிளம்பியது. இன்று, நமக்கு நாமே திட்டம் தொடர்பாக அதிமுக உறுப்பினர் குணசேகரன் கொளுத்திய நெருப்பு, ஸ்டாலின் உட்பட 80 திமுக உறுப்பினர்களின் ஒரு வார சஸ்பெண்டில் முடிந்துள்ளது. நாளை தொடங்கி அடுத்த ஏழு நாட்களுக்கு இந்த 80 உறுப்பினர்களும் அவை நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. இது தொடர்பாக, சட்டமன்றத்தில் ஐ விட்னஸாக இருந்த நெய்வேலி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரனிடம் பேசியபோது,
“முதல்வர் வழக்கமாக சட்டமன்றத்துக்கு வராமல் தலைமைச் செயலகத்தில் இருக்கும் முதல்வர் அறையில் அமர்ந்துகொண்டார். சட்டமன்றத்துக்குள் நாங்கள் போகும்போது அதுவே எங்களுக்கு ஒருமாதிரி மிரட்சியாக இருந்தது. காரணம், எப்போதும் இல்லாதளவுக்கு சபை காவலர்கள் பத்து மடங்கு அதிகமாகக் குவிக்கப்பட்டிருந்தார்கள். அப்போதே நாங்கள் நினைத்தோம், ஏதோ பெரிய சதித் திட்டம் ஒன்றை அரங்கேற்றப் போகிறார்கள் என்று.

கமிஷன் கணக்கில் கோளாறு... நமக்கு வாய்த்த மாவட்ட அடிமைகள் கலக்கத்தில்...

சென்னை: அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனின் கட்சிப்பதவியை அதிரடியாக பறித்து உத்தரவிட்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா. எஸ்.பி.சண்முகநாதனின் கட்சிப்பதவி பறிக்கப்பட்டதன் பின்னணியில் சசிகலா புஷ்பா விவகாரம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா பேசிய பேச்சினால் அதிமுகவில் எழுந்த புயல் இன்னும் ஓயவில்லை... அது சசிகலா புஷ்பாவிற்கு நெருக்கமானவர்களை சுழன்றடித்து வருகிறது.
அதிமுகவில் சசிகலா புஷ்பா உடன் நெருக்கமாக இருந்தவர்களின் கட்சிப்பதவிகளை பறிக்கும் படலம் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகிறது. லேட்டஸ்ட் ஆக மாவட்ட செயலாளர் பதவியை பறிகொடுத்துள்ளார் பால்வளத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன்.
சாதாரண பள்ளி ஆசிரியையாக வாழ்க்கையைத் தொடங்கியவர்

தமிழக ஆளுநராக ரோசையாவே நீடிப்பார்... பன்னீர்செல்வத்தை எல்லாம் ஆளுநராக்க முடியாதுல?


சென்னை, தமிழ்நாட்டின் கவர்னராக கே.ரோசய்யா  கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி பதவி ஏற்றார்.அவரது 5 ஆண்டு பதவிக் காலம் முடிவடைவதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. இதையடுத்து தமிழகத்தின் புதிய கவர்னராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சங்கரமூர்த்தி தமிழக கவர்னராக நியமனம் செய்யப்படலாம் என்று கடந்த வாரம் தகவல் வெளி யானது. ஆனால் தமிழ்நாட்டுக்கும் கர்நாடக மாநிலத்துக்கும்  இடையே காவிரி நதி நீர் பிரச்சினை இருப்பதால்  கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை தமிழகத்துக்கு கவர்னராக நியமிப்பது சரியாக இருக்காது என்று கருதப்பட்டது. இதனால் சங்கர மூர்த்தியை தமிழக கவர்னராக நியமிக்கும் முடிவை மத்திய அரசு கை விட்டு விட்டதாக தெரிகிறது.
சங்கரமூர்த்தி தெலுங் கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.. ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தம்..

தமிழக சட்டப்பேரவையில் இன்று அதிமுக உறுப்பினர் கலைச்செல்வன் அவையில் பேசும் போது ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் பற்றி விமர்சித்தார். நமக்கு நாமே பயணம் பற்றி தேவையின்றி பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திமுக உறுப்பினர்கள் மீது அதிமுக உறுப்பினர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். அதிமுக உறுப்பினர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் பேரவைத் தலைவர் தனபால் அதிமுக உறுப்பினர் கலைச்செல்வன் பேச்சை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக திமுக உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். இதன் பின்னர் திமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தமிழக சட்டமன்றத்திலிருந்து எதிர்கட்சியான திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கமாண்டன்ட் பிரமோத் குமார் இது ஒரு முக்கியமான் நாள் என்று பேசிய சில நிமிடங்களில் தீவிர வாதிகளின் குண்டு வீச்சுக்கு பலியானார்

இது மிகவும் முக்கியமான நாள்’ போலீஸ் அதிகாரி கடைசி பேச்சு: சில நிமிடங்களில் தீவிரவாதிகள் குண்டுக்கு பலியானார் 
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் நேற்று முன்தினம் 70வது சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள். இதனை முன்னிட்டு 49வது பட்டாலியன் சிஆர்பிஎப் கமாண்டன்ட் பிரமோத் குமார் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய பின்னர் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய கமாண்டன்ட் பிரமோத் குமார், “இந்தியா 70வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. பாதுகாப்பு படையினருக்கான பொறுப்புகள் அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் மற்றும் கல்வீச்சு போன்ற சம்பவங்களை நாம் திறமையாக சமாளிக்க வேண்டும்” என்றார். தனது உரையை முடிப்பதற்கு முன்பாக தனது கை கடிகாரத்தை பார்த்த அவர் “இது மிகவும் முக்கியமான நாள் ஆகும்” என்றார்.

நம்பூதிரியும் நாயரும் கூட்டு கொள்ளை? ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில் 186 கோடி தங்கம் திருட்டு ... Rs 186 crore Gold missing from Kerala's Sree Padmanabha Swamy ...


ரூ.186 கோடி தங்க குடத்தில் கை வைத்தது யார்? பத்மநாப சுவாமி கோவிலில் தொடரும் சர்ச்சை& புதுதில்லி:திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி
கோவிலில், 186 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க குடங்கள் மாயமாகியுள்ளதாக, சுப்ரீம் கோர்ட்டில், தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்க குடங்கள் மாயமானது எப்படி என்ற விவரத்தை கண்டுபிடித்து, அதை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்' என,பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது; இங்கு, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இருக்கும் ரகசிய அறைகளில் பல கோடி ரூபாய் மதிப்புடைய தங்க நகைகள், ஆபரணங் கள் கண்டுபிடிக்கப் பட்டன. இதுதொடர்பான விசாரணை, சுப்ரீம் கோர்ட் டின் கண்காணிப்பில் நடக்கிறது. நகைகள் திருடு போனதாக எழுந்த புகாரையடுத்து, தணிக்கை செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினேத்ராய் தலைமையிலான கமிட்டியை, சுப்ரீம் கோர்ட், நியமித்தது.இக்கமிட்டி, தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

குஜராத்தில் மீண்டும் தலித்கள் மீது வன்முறை..19 பேர் காயம் . உனா மாநாட்டுக்கு சென்று வந்ததால் தண்டனை

With caste tension seething in this south-western part of Gujarat, 19 people, including three policemen, were injured in clashes last evening and hospitalized.
குஜராத் மாநிலம் உனாவில் மாநாட்டுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய தலித்களை மற்றொரு பிரிவினர் வழிமறித்துத் தாக்கியதில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் தலித்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையிலும் தலித்துகள் மீதான தொடர் வன்முறைகளில் இருந்தும், சாதிய பாகுபாடுகளில் இருந்தும் சுதந்திரம் தேவை என்ற கோரிக்கைகளுடன் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனாவில் மாநாடு நடைபெற்றது. தலித் அஸ்மிதா யாத்ரா என்ற பெயரில் கடந்த ஜூலை 31ஆம் தேதி அகமதாபாத்தில் இந்த யாத்திரை தொடங்கப்பட்டது. 400 கி.மீ. தூரம் இந்த யாத்திரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த பேரணிக்கு உனாவில் மட்டுமில்லாமல், குஜராத் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும்பரவலாக ஆதரவு பெருகியது. இஸ்லாமியர்களும் பெரிய அளவில் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் ஐதராபாத் மாணவர் ரோகித் வெமுலாவின் தாய் ராதிகா, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், குஜராத்தில் தாக்குதலுக்குள்ளான தலித் இளைஞரின் தந்தை பாலு சர்வையா, திரைப்படத் தயாரிப்பாளர் ஆனந்த் பட்டவர்த்தன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அதிமுக பிலால் பேட்டி: சசிகலா புஷ்பா விவகாரத்தில் பொய்யாக கதைகள் கட்டி... வேதனையில் உள்ளேன்..

ஜூனியர் விகடன் : சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சசிகலா புஷ்பாவை தாம் திருமணம் செய்ததாக வெளியான செய்திகள் தவறு என்றும் அவருடன் பேசியே ஓராண்டாகிவிட்டது என்றும் அதிமுக தலைமை நிலையத்தில் பணிபுரிந்து வந்து முன்னாள் ஊழியர் பிலால் விளக்கம் அளித்துள்ளார்.
சசிகலா புஷ்பா விவகாரத்தில் பிலால் என்ற அதிமுக தலைமை நிலைய முன்னாள் ஊழியர் பெயரும் தொடர்ந்து அடிபட்டு வருகிறது. பிலாலுடன் சசிகலா புஷ்பா நெருக்கமாக இருக்கும் படங்களும் வெளியாகி இருந்தன.
சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்த பணிப்பெண்கள் பானுமதியும் ஜான்சிராணியும் பிலால் குறித்து நிறையவே தகவல்களைத் தெரிவித்திருந்தனர். சசிகலா புஷ்பாவும் பிலாலும் திருமணம் செய்து கொண்டதாகவும் இதை தட்டிக் கேட்ட கணவர் லிங்கேஸ்வரனிடம், நான் அப்படித்தான் இருப்பேன் என சசிகலா புஷ்பா மிரட்டியதாகவும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் ஜூனியர் விகடன் இதழுக்கு பிலால் நடந்தது என்ன என்பது தொடர்பாக விளக்கமான பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
சசிகலா புஷ்பா அறிமுகம் ஆனது சில ஆண்டுகளுக்கு முன்புதான். இளைஞர், இளம் பெண்கள் பாசறையின் மாநில துணைச் செயலாளராக அவர் பதவிக்கு வந்தபோது, ஒரு நாள் என்னிடம் வந்து புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வேண்டும் என்று பணம் கட்டினார்.

மும்பை : ஆறுபேரை கொன்று தோட்டத்தில் புதைத்த ஹோமியோ டாக்டர்


டாக்டர் நடத்திய மரண விளையாட்டு: ஆறு பேரை கொலை செய்தது அம்பலம் மும்பை: மஹாராஷ்டிராவைச் சேர்ந்த டாக்டர், ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேரை கொன்றது, போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை மங்கல் ஜெதே, 49, சமீபத்தில் காணாமல் போனார். அவரை கண்டுபிடிக்க வலியுறுத்தி, உள்ளூர் ஆசிரியர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது.

அந்த 570 கோடிகள் எண்ணப்படும் விடியோ காட்சி.. வழக்கறிஞர் பிரம்மா... தகவல் அறியும் உரிமை மூலம்


கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திருப்பூர் அருகே பிடிபட்ட ரூபாய் 570 கோடியை எண்ணும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. மே 13ஆம் தேதி திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் வேகமாக சென்ற 3 கண்டெய்னர் லாரிகளை சோதனை செய்ததில் பணம் இருந்தது தெரிய வந்தது. இந்த பணத்தை கோவையில் இருந்து விசாகப்பட்டிணத்திற்கு தாங்கள்தான் கொண்டு சென்றதாக எஸ்.பி.ஐ. வங்கி தெரிவித்தது. பணம் யாருடையது என்பதில் 3 நாள் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

கேரளா கன்னியாஸ்திரி மேரி செபஸ்டியன் மீது உடல், உள துன்புறுத்தல்கள் மேற்கொள்ளும் திருச்சபை

கத்தோலிக்க திருச்சபையானது அன்பு, இரக்கம், தொண்டுள்ளம் ஆகியவற்றை  நாம் ஒவ்வொருவருக்கும் போதித்து வருகிறது. ஆனால்
கத்தோலிக்க சபையில் துறவறம் மேற்கொண்டு வரும் கன்னியாஸ்திரீ மேரி செபாஸ்டின் விவகாரத்தில் அவ்வாறு இல்லை. 45 வயதான சகோதரி மேரி செபாஸ்டின் தான் 25 ஆண்டு காலம் சேவை செய்து வந்த நிறுவனம் தனக்கு துன்புறுத்தல்களைத் தரக்கூடும் என்ற அச்சத்தில் தற்போது உள்ளார். இதனை தொடர்ந்தே அவர், கத்தோலிக்க சபையிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
கேரளா மாநிலம் கோட்டையத்தை அடுத்த பாலாவில் சீரோ மலபார் சபையின் மதர் ஆப் கார்மலின் கீழ் வரும் சேர்த்துங்கல் நாசரேத்து பவன் கான்வெண்டில் தான் மேரி கன்னியஸ்தீரியாக இருந்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் அவருக்கு, சபையில் அவருக்கு மேலிருக்கும் பொறுப்பாளர்களால் தொடர்ச்சியாக துன்புறுத்தல்கள் தரப்படவே அவர், சபையை விட்டு வெளியேறுவது என இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவெடுத்தார்.

விஜயகாந்த் மக்கள் நல கூட்டணி தலைவர்களை சந்திக்கிறார் ... இன்னுமா கூத்து ?


ம.ந.கூ., தலைவர்களுடன் சந்திப்பு விஜயகாந்த் திடீர் ஒப்புதல் நீண்ட அலைக்கழிப்பிற்கு பின், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை சந்திப்பதற்கு, விஜயகாந்த் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில், ம.ந.கூ., கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., போட்டியிட்டது. தே.மு.தி.க.,விற்கு, 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஒரு தொகுதியில் கூட அக்கட்சியால் வெற்றி பெற
முடியவில்லை.உளுந்துார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், 'டிபாசிட்' இழந்தார். இதனால், 'ம.ந.கூ., கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும்' என, தே.மு.தி.க.,வினர் கூறி வருகின்றனர்.
அதே நேரம், கூட்டணி முறிவு குறித்து எந்த அறிவிப்பையும் விஜயகாந்த் இன்று வரை வெளியிடவில்லை. இருந்த போதும், தன்னை சந்திக்க நேரம் கேட்ட, ம.ந.கூ., தலைவர்களைசந்திக்க, விஜயகாந்த் நேரம் அளிக்காமல் இருந்தார்.

புதிய தமிழக ஆளுநராக சங்கரமூர்த்தியை நியமிக்க முதலவர் ஜெயலலிதா எதிர்ப்பு? காவிரி....? சொத்துகுவிப்பு...?

தமிழக ஆளுநராக கர்நாடக மாநிலத்தவரை நியமிக்க ஜெயலலிதா எதிர்ப்பு? தமிழக ஆளுநராக உள்ள ரோசய்யாவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் சட்ட மேலவை உறுப்பினராக நீண்ட காலம் பதவி வகித்த சங்கரமூர்த்தியை ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கலாம் என்று அம்மாநில முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா பரிந்துரை செய்துள்ளார்.

ஜோக்கர் ... தமிழ் சினிமா இதுவரை காணாத தமிழக வாழ்வு.. இலக்கியம் .. உண்மைகள்

சவேரா :நேற்று 28 வருடமாக விடாமல் நட்புடன் தொடரும் பள்ளி தோழனுடன் நைட் ஷோ ‪#‎ஜோக்கர்‬ ..
"துடைப்பம், துடைப்போம் " என்று சைக்கிளில் விற்பவரை வேடிக்கை பார்க்கும் காலை கடன்களை வெளியில் கழிக்கும் சிறுவர்கள் காட்சியில் ஆரம்பித்த படம் .. "நாளை ஓரு போராட்டம், வீதிக்கு வா தோழா " என்று முடியும் வரை சமூக அவலங்களை:
a) மன்னர்மன்னர் முலமாக ..
b)மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் சாயலில் உள்ள பொன்னூஞ்சல் முலமாக ..
c)கொடுக்காவிட்டால், தட்டிப்பறி என்ற Che Guevara memoirs அந்த செக்யூரிட்டி தாத்தா முலமாக ..
என்று நாம் தொலைத்து கொண்டு இருக்கும் மனசாட்சியை விடாமல் கிள்ளி இருக்கிறார் இயக்குனர் ...

1) ஆளும்கட்சிகளை முக்கியமாக ஊழலுக்கு என உருவாகும் திட்டம் சொல்லப்பட்ட விதம் condensed narrative correlation பிரமாண்டத்தை காட்சி அமைப்பில் இல்லாமல் cut short scene வசனத்தில் முலமாக இப்படியும் காட்டலாம் என்ற முன்மாதிரி தமிழ் சினிமாவுக்கு புதுசு ..

புதிய தலைமுறை பாஜக தலைமுறையாகிவிட்டது? ஜால்ரா .. மதிமாறன் பேச்சை திரித்த...


தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தன்னை மோடியின் ஆதரவாளைனைப் போல் சித்தரித்த புதியதலைமுறைக்கு எழுத்தாளர் வே. மதிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவருடைய முகநூல் பதிவில் அவர் பின்வருமாறு தெரிவிக்கிறார் “புதிய தலைமுறையில் திங்கள்கிழமை 8.30 மணியிலிருந்து 9 மணிவரை ஒளிபரப்பான ‘விளிம்பு நிலை மனிதர்கள்’ நிகழ்ச்சியில் மோடியின் பேச்சை மையமாக வைத்து, அதற்கு வலு சேர்ப்பது போல் பங்கேற்பாளர்களின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, முற்போக்காளர்களையே மோடியின் ஆதராவாளர்களைப்போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதற்கு சாட்சி நான் பேசும் போது ‘2000 ஆண்டுகளில் இந்த இரண்டு ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சியில்தான் மிக மோசமான தலித் வன்முறை நிகழ்கிறது’ என்று சொன்னதில் பா.ஜ.க என்று சொன்னதை நீக்கிவிட்டிருக்கிறார்கள்.

வழக்கறிஞர்கள் போராட்டம் நிறுத்தம் .. மீண்டும் நீதிமன்ற பணிகளை ஆரம்பிப்பார்கள் .. தற்காலிக ஏற்பாடு!

வழக்கறிஞர்களுகெதிரான புதிய சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கூறி, தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், நீதிமன்றப் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்கள் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் போராட்டக்குழுவில் உள்ள 126 வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்தது இந்திய பார் கவுன்சில். இதையடுத்து, வழக்கறிஞர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. அதைத் தொடர்ந்து, வழக்கறிஞர்களின் கூட்டுக்குழு பிரதிநிதிகள் மற்றும் தமிழக பார் கவுன்சில் மற்றும் அகில இந்திய பார் கவுன்சில் கலந்து கொண்ட பேச்சு வார்த்தை கடந்த 9ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது.

கனிமொழி : ஜி எஸ் டி மசோதாவுக்கு எமது திருத்தங்கள் ஏற்கப்பட்ட பின்புதான் ஆதரித்தோம் !


திருத்தங்களுடன் கூடிய சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா, மக்களவையில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி ஒருமனதாக நிறைவேறியது. அவையில் இருந்த 443 உறுப்பினர்களும் அந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியுள்ளதால் வரும் நிதியாண்டு முதல் ஜிஎஸ்டி சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி மசோதாவில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பொருட்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களின் நலனுக்காக கூடுதலாக ஒரு சதவிகித வரி விதிக்க வகை செய்யும் அம்சத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த ஷரத்து நீக்கப்பட்டது. மேலும், ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்படுவதன் மூலம் மாநிலங்களுக்கு ஏதேனும் வருவாய் இழப்பு ஏற்பட்டால், முதல் ஐந்தாண்டுகளுக்கு மத்திய அரசு 100 சதவிகித இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் ஏற்கப்பட்டது.

ஆணவ நோயும் இன்னபிற நோய்களும் கொஞ்சமும் குறையாத இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள்


இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நட்பும் பாசமுமாக பொங்கி வழிந்திருக்கிறார். அதை தலைப்பு செய்தியில் போட்டு கொண்டாடுகிறது சில பத்திரிகைகள். கடந்த முறை முதல்வராக இருந்தபோது, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலே சொல்லாமல் அலட்சியப்படுத்துவார் அல்லது கடுமையான குரலில் பதில் சொல்வார். இந்த முறை கடுமை போய், நெளிவு சுளிவு வந்திருக்கிறது. காரணம், எதிர்க்கட்சியின் பலம்.

தங்கம் தென்னரசு
கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அனுபவத்தின் காரணமாக, அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்தார். கேள்விகளை எதிர்கொள்ள முடியாத அதிமுக அமைச்சர்கள் குறுக்கீடு செய்து, குறுக்கீடு செய்து அவரை பேசவிடாமல் அவரது நேரத்தை அபகரித்தனர். அதை தட்டிக் கேட்டபோதுதான், முதல்வர் ஜெயலலிதாவின் கீதாபோதேசம் வெளிப்பட்டது.
“நட்பின் அடிப்படையில் ஒரு ஆலோசனை சொல்கிறேன். நீங்கள் கேள்விகளாகக் கேட்டால் அமைச்சர்கள் இடைமறித்து பதில் சொல்லத்தான் செய்வார்கள். நீங்கள் அதற்கு தகுந்தாற்போல் பேசவும்”. இதில் ஜெ சொல்ல வருவது, எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்பதுதான்.