Shanmugam Poothappar : இந்திய வானிலை ஆய்வு மையம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்
'டித்வா' சூறாவளி இலங்கைக்கு அண்மையிலுள்ள கடற்பரப்பில் உருவாகிய நாள் முதல் அதன் தாக்கம் தொடர்பில் இந்திய வானிலை ஆய்வு மையம் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக த இந்தியன் எஸ்பிரஸ் செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி தங்களுடன் இதனை பகிர்ந்து கொண்டதாக அந்த செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை மற்றும் முன்னெடுப்பபுகள் என்ற தலைப்பில் கடந்த 13ஆம் திகதி இலங்கைக்கு அண்மையில் தாழழுக்க நிலை ஒன்று உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முதன்முதலில் கணித்திருந்தது, மேலும் நவம்பர் 20 ஆம் திகதி புயல்(cyclogenesis) சாத்தியம் குறித்து எச்சரிக்கையை வெளியிட்டது.Why Cyclone Ditwah caused large-scale damage in Sri Lanka
அதாவது சூறாவளியாக மாறி காற்றின் வேகம் அதிகரிப்பு மற்றும் அதிக மழைவீழ்ச்சி ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளது.
திங்கள், 8 டிசம்பர், 2025
இலங்கை டித்வா சூறாவளி பற்றி எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம் Why Cyclone Ditwah caused large-scale damage in Sri Lanka
ஞாயிறு, 7 டிசம்பர், 2025
25 மாணவர்கள் சேர்ந்து அடித்தே கொன்றுவிட்டனர்! கும்பகோணம் - எங்கள் நிலை யாருக்கும் வரக்கூடாது'' - கதறி அழுத பெற்றோர்
![]() |
Vikatan : கும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிகிச்சையில் இருந்த 12ஆம் வகுப்பு மாணவன் கவியரசன் உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்ற மாணவன் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் 11ஆம் வகுப்பு மாணவன் மூக்கில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துள்ளார்.
காஞ்சியில் பிறந்த ராவணன்.. சங்கரமடத்தில் அகழாய்வு நடத்த கோரி ஜன. 22-ல் முற்றுகை போராட்டம்!
![]() |
மின்னம்பலம் - Mathi : காஞ்சிபுரம் சங்கரமடம் அமைந்துள்ள இடத்தில்தான் ராவணன் பிறந்தார்;
அதனால் சங்கர மடத்தில் அகழாய்வு நடத்த கோரி ஜனவரி 22-ந் தேதி சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டணி அறிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டணி வெளியிட்ட அறிக்கை: ராமர் அயோத்தியில் பிறந்தால், ராவணன் பிறந்த இடம் இல்லாமலா போகும். அதுவும் தமிழரின் மெய்யியல் சிந்தனைக்கூடங்கள் தழைத்தோங்கிய காஞ்சியில் இராவணன் பிறக்காமலா இருந்திருப்பார்.
காஞ்சியின் சங்கரமடத்தின் கிழே அகழ்வாராய்ச்சி செய்தால் உண்மை உலகிற்கு வருமென நாம் நம்புவது தவறா? ராமன் பிறந்த இடம் அயோத்தியின் பாபர் மசூதியின் கீழே என உச்சநீதிமன்றம் நம்புமெனில் காஞ்சிகாமகோடி சங்கரமடத்திற்கு கீழாக இராவணனின் பிறந்த இடம் இல்லாமலா போகும். ஆகவே காஞ்சி சங்கரமடத்தை தமிழர்களிடத்தில் ஒப்படைத்துவிட்டு சங்கராச்சாரியார் அவரது பூர்வீக ஆந்திராவிற்கு சென்று தங்குவது நல்லது.
தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தின் வாட்டர்லூ! பேரறிஞர் அண்ணா!
ராதா மனோகர் தமிழக வரலாற்றில் பேரறிஞர் அண்ணா பெற்ற புகழை இதுவரை எவரும் பெறவில்லை!
கலைஞரும் எம்ஜியாரும் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக மோதிக்கொண்ட போதும் அண்ணாவை புகழ்வதில் அவர்களுக்கு இடையே ஒரு போட்டியே இருந்தது என்று கூறினால் மிகையல்ல.
முழுத்தமிழ்நாடும் எந்தவிதமான தயக்கம் இன்றி தமிழ்நாடு அண்ணாநாடுதான் என்று கூறுமளவுக்கு அண்ணா மிகப்பெரிய வரலாற்று ஆளுமையாக அறியப்படுகிறார்!
பேரறிஞர் அண்ணா அப்படி என்னதான் செய்துவிட்டார்?
ஏன் எல்லோரும் அவரை அளவு கணக்கில்லாமல் புகழ்கிறார்கள்?
இதுவரை பேரறிஞர் அண்ணாவின் வரலாறு போதிய அளவு பொதுவெளியில் கூறப்படவில்லைஎன்று கூட ஒரு கருத்து உண்டு.
இன்னும் கூட அண்ணாவின் சாதனைகள் பற்றி புரிதல் பொதுவெளிக்கு இல்லை என்ற சந்தேகம் கூட எனக்கு உண்டாவதுண்டு!

