சனி, 24 மே, 2014

பழமையை போற்றுதும் பழமையே தெய்வம் பழமையே புனிதம் ! இந்த பழைய மயக்கம் ?

பழமையான தத்துவங்கள் பழமையான கோட்பாடுகள் எல்லாமே மிகவும்
புனிதமானவை போற்றுதற்கு உரியவை .
ஒரு போதும் அந்த பழமையான தத்துவங்களை நாம் கைவிடவே கூடாது
சனாதன தர்மங்கள் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அற்புத கருத்துக்கள் ஆகும் , இதுதான் நமக்கு காலகாலமாக இந்த சமூகமும் சமயமும் நமக்கு கற்று தந்திருக்கும் பாடம்.
இது மிகவும் பிற்போக்கு தனமான ஒரு பாடமாகும் .
சனாதனம் என்றாலே கைகூப்பி தொழவேண்டும் அர்ச்சனை செய்யவேண்டும் என்றால்லாம் பெருசுகள் வரிந்து கட்டி கொண்டு வந்து விடுவார்கள்.
இந்த சனாதனம் என்று இவர்கள் எதை குறிப்பிடுகிறார்கள்?

மொரோக்கோவில் ஜீவா உட்பட யான் படக்குழுவினர் அனைவரும் கைது !

என்றென்றும் புன்னகை படத்திற்குப் பிறகு ஜீவா நடிக்கும் படம் யான்.
இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக துளசி நடிக்கிறார். மற்றும் நாசர், ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படப்பிடிப்புகளை நடத்தி முடித்துள்ள இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை மொராகோ நாட்டில் நடத்தியிருக்கிறார்கள். அங்கு தீவிரவாதிகள் சிலர் ஜீவாவை கடத்தி செல்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. இதையறிந்த அந்நாட்டு போலீஸார் உடனே படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்குச் சென்று படப்பிடிப்பை நிறுத்தியயோடு ஜீவா மற்றும் யான் படக்குழுவினர் அனைவரையும் கைது செய்தனர்.

கவர்ச்சியா நடிக்கும் போது தெரியலியா'..சுருதியின் புகாருக்கு தயாரிப்பாளர் பதிலடி !

தன்னை ஆபாசமாகப் படம் பிடித்துவிட்டார்கள் என தெலுங்கு சினிமாக்காரர்கள் மீது நடிகை ஸ்ருதி ஹாஸன் புகார் கூறியதைத் தொடர்ந்து, அவருக்கு தெலுங்கில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் ஆபாசமாக ஆடியதைத்தானே படமாக்கினோம்... அதற்கு புகார் செய்வதா என்று கேட்க ஆரம்பித்துள்ளனர். தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழும் ஸ்ருதி, சமீபத்தில் எவடு படத்தில் படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருந்தார்.
இந்தப் படங்கள் இன்டர்நெட்டில் வெளியாயின. கிட்டத்தட்ட அரை நிர்வாணம் எனும் அளவுக்கு ஆபாசம் தெறித்தது அந்தப் படங்களில். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தின. படத்தில் நடிக்கும்போது இதுபற்றி கவலையே படாமல், முன்னழகு வெளியில் பளிச்சென்று தெரியும்படி ஆடிய ஸ்ருதிக்கு, அதுவே புகைப்படங்களாக வெளியானபோது அதிர்ச்சியாகிவிட்டது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய்  பாலகுமாரா அல்லது கமல ஹாசா ?

மோடியின் மனைவிக்கு பதவி ஏற்பு விழா அனுமதி இல்லை ? அழைத்தால் கலந்து கொள்வேன் ! திருமதி யசோதா பென்

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு
அழைப்பு வந்தால் நிச்சயம் பங்கேற்பேன். ஏன் நான் பங்கேற்கக் கூடாது என்று மோடியின் மனைவி யசோதாபென் கூறியுள்ளார். குஜராத் மாநில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், மோடி, தன்னை மனைவியாக வேட்பு மனுவில் குறிப்பிட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வளவு காலம் பிரிந்து வாழ்ந்தாலும், அவர் என்னை மறக்கவில்லை என்பதே எனது மகிழ்ச்சிக்குக் காரணம்.

பெயரோடு வரும் ஜாதியை தடுத்தவர் பெரியார் ! இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் ஜாதி பெயர் ஒழிந்திருக்கிறது ,

உங்கள் கணிப்பைப் பொய்யாக்கிவிட்டு மோடி பிரதராகிவிட்டார்.
என் கணிப்பு மட்டுமல்ல பலருடைய கணிப்புகளைத் தவிடுபொடியாக்கிவிட்டிருக்கிறார். ஆனால், ஜெயலலிதா தமிழகத்தில் அமோக வெற்றியைப் பெற்றுவிட்டிருக்கிறார். மோடியின் வெற்றியைவிட அதிக பயத்தை அதுதான் தருகிறது.
மோடியின் வெற்றி பயத்தையா தருகிறது உங்களுக்கு. முதல் வேலையாகத் தன் தாயிடம் ஆசிகள் வாங்கியிருக்கிறார். அத்வானியின் காலில் விழுந்து மூத்தோர்களுக்கான மரியாதையை வெளிப்படுத்தியிருக்கிறார். கங்கையில் ஆரத்தி வழிபாட்டில் பங்கெடுத்திருக்கிறார். அகமதாபாத்திலும் வாரணாசியிலும் அவர் ஆற்றிய உணர்ச்சிமயமான உரைகள் நம்பிக்கையைத் தரவில்லையா..? அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் தன்னுடைய தாரக மந்திரம் என்று அவர் தெளிவாக அறிவித்த பிறகும் உங்களுக்கு பயமா?

அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் உண்டு ! ஆனால் தமிழக கட்சிகளுக்கு கிடைப்பது சந்தேகமே ?

புதுடெல்லி: மத்திய அமைச்சர் பட்டியலுக்கு இறுதி வடிவம் கொடுப்பது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிராந்திய கட்சி  தலைவர்களுடன் நரேந்திர மோடி தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக பாஜ வட்டாரங்கள் தெரிவித்தன. மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய  ஜனநாயாக கூட்டணி 336 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க இருக்கிறது. நாளை மறுநாள் நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்க இருக்கிறார்.  பாஜ மட்டும் 282 இடங்களில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு அளிக்கப்படும் என  அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி அறிவித்திருந்தார்.

ஆப்கன் தாக்குதல் எதிரொலி ! மோடியின் இரவு விருந்து நிகழ்ச்சி ரத்து!

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியன் எதிரொலியாக டெல்லியில் வரும் 26ம் தேதி பதவி ஏற்பு  விழாவில் பங்கேற்கும் வெளிநாட்டு தலைவர்களுக்கு மோடி ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்து ரத்து செய்யப்பட்டிருப்பதாக உள்துறை வட்டாரங்கள்  தெரிவித்தன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியாவின் தூதரகம் அமைந்துள்ளது. ஹீரட் நகரில் இந்திய துணை தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்தின்  மீது நேற்று அதிகாலை 4 தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கிருந்த 9 தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்  தப்பினர்.

சந்திரபாபு நாயுடு :எனது உயிருக்கு ஆபத்து உள்ளது

சீமாந்திரா புதிய முதல்–மந்திரியாக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு அடுத்த மாதம் 9ந் தேதி பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில் அவர் கவர்னர் நரசிம்மனை சந்தித்து ஒரு புகார் கடிதம் அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:–
கடந்த 2003–ம் ஆண்டு திருப்பதி அலிபிரியில் என் மீது கன்னி வெடி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் மாபியா கும்பலைச் சேர்ந்த கங்கிரெட்டி முக்கிய குற்றவாளி ஆவார்.
பல சமூக விரோத செயல்களில் அவனுக்கு தொடர்பு உள்ளது. சந்தன கடத்தல் வழக்கில் அவன் முக்கிய குற்றவாளி ஆவான்.
சிறையில் இருந்த அவன் பெயிலில் வெளியே வந்து துபாய்க்கு தப்பி ஓடிவிட்டான்.
அவனால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இதுபற்றி எதிர்கட்சி தலைவராக இருந்தபோதே போலீசில் புகார் செய்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

அங்காடிதெரு அஞ்சலி கவர்ச்சிக்கு தயாராம் !

தமிழ் சினிமாவில் நல்ல நடிகை என்று பெயர் எடுத்தவர் அஞ்சலி. அவர் நடித்த
கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில்அவரின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. தமிழ் சினிமாவிற்கு ஒரு திறமையான நடிகை கிடைத்துள்ளார் என்ற நம்பிக்கையை அஞ்சலி ஏற்படுத்தினார். போட்டி அதிகரிக்க, என்ன செய்வது என தெரியாமல் கவர்ச்சியை கையில் எடுத்தார் அஞ்சலி. அது அவருக்கு கைகொடுக்காமலே போனது.தன் குடும்ப விஷயங்களால் ஏற்பட்ட குழப்பத்தால் ஆந்திராவிற்கு ஓட்டமெடுத்தார் அஞ்சலி. ஆந்திராவில் வெங்கடேஷ், ரவிதேஜா என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வெற்றியக் கொடுத்தாலும், தற்போது படவாய்ப்புகள் இல்லாத நிலைதான் இருக்கிறது அஞ்சலிக்கு கன்னடத்தில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.

24 வருடமாக முடங்கி கிடக்கும் அம்பேத்கர் படம்


திருவனந்தபுரம்: 24 வருடமாக திரைக்கு வராமல் முடங்கி கிடக்கிறது அம்பேத்கர் வாழ்க்கை சரித்திர படம். சட்ட மேதை அம்பேத்கர் வாழ்க்கை சரித்திர படம் மலையாளத்தில் உருவானது. அம்பேத்கர் வேடத்தில் மம்முட்டி நடித்தார். 1990ம் ஆண்டு உருவான இப்படம் முடிந்து 24 வருடத்துக்கு மேல் ஆகியும் ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடக்கிறது. ‘படத்தை ரிலீஸ் செய்யாமல் தடுத்து வைத்திருப்பது ஏன்? என்று மல்லுவுட் குணச்சித்திர நடிகர் இன்னசென்ட் கேள்வி எழுப்பி உள்ளார்.

வீட்டில் இருந்தபடியே டயாலிசீஸ் சிகிச்சை: ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தொடக்கம்

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகள் ‘டயாலிசீஸ்’ சிகிச்சை பெறுவது
அவசியம்.
அதற்கு நோயாளிகளின் உடலில் உள்ள ரத்த குழாய்களில் செயற்கை குழாய்கள் பொறுத்தப்பட வேண்டும். அவ்வாறு பொறுத்தும்போது நோயாளி அதிகநாள் மருத்துவமனையில் தங்க வேண்டும். அது மட்டுமின்றி அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து செல்ல வேண்டும்.
இது நோயாளிகளின் அன்றாட வேலைகளை பாதிக்கும். அதனால் இதற்கு மாற்றாக வேறு ஒரு தொழில் நுட்பத்தை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் சிறுநீரகத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய திட்டத்தின்படி நோயாளியின் அடிவயிற்றுப் பகுதிகளில் ஒரு சிறிய குழாய் பொறுத்தப்படும். அந்த குழாயின் மூலம் ரத்தத்தை சுத்திகரிக்கும் திரவத்தை நோயாளிகள் செலுத்தி கொள்ள முடியும்,

வெள்ளி, 23 மே, 2014

சவுதியில் நாத்திகர் கதி என்ன ?

சவுதி மன்னர்தில்களுக்கு வழியில்லாத கேள்விகளால் துளைப்போரை ஓயாமல் ”வாங்கடா விவாதிக்கலாம்” என்று பணிவோடு அழைக்கும் தவ்ஹீதுவாதிகளையும் அவர்களின் ‘ஜனநாயக மாண்பையும்’ நாம் அறிவோம். பகிரங்க விவாதம் எனும் ஜனநாயக வழிமுறையை மதமோ இல்லை மார்க்கத்தை பின்பற்றும் இசுலாமிய நாடுகளோ அனுமதிப்பதில்லை.  ஏன் அனுமதிப்பதில்லை என்று கேட்டால் அப்படிக் கேட்பது மதத்தை இழிவுபடுத்துவது என்கிறார்கள். சவுதி மன்னர் – அரசை எதிர்த்து கருத்து தெரிவிப்பது, அரசரை எதிர்த்து கருத்து தெரிவிப்பது, நாத்திக கருத்துக்களை கொண்டிருப்பது, இசுலாத்தை விமர்சிப்பது போன்ற கருத்து சுதந்திரம் சார்ந்த நடவடிக்கைகளை தீவிரவாத செயல்களாக சித்தரிக்கிறார்கள்.
இவர்களே இப்படியென்றால் இவர்களுக்கு ஜனநாயக ’விழுமியங்களை’ கற்றுக் கொடுத்த சித்தாந்த மூலவர்களான சவுதி அரேபியாவின் அரசியல் சூழல் எப்படியிருக்கும்? சவுதியில் குழந்தைகள் மண்ணில் குழி தோண்டி விளையாடினாலே பெட்ரோலும் டீசலும் பீறிட்டு அடிக்கும் என்கிற  அம்புலிமாமா கதைகளை விடுத்து அங்கே ஜனநாயகம் என்கிற வஸ்து கிலோ என்ன விலைக்கு விற்கிறது என்ற இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

கோச்சடையான்: உடம்புக்கு முடியல ஆனாலும் பணம் பண்ணுமே ? அதான் கிராபிக் ! கம்புட்டர் ! ஓவர் பில்டப் !

வே.மதிமாறன்;
kochadaiyaan-rajinikanth சூப்பர் ஸ்டார் தீவிர சீக்காளியாக நடக்கக் கூட முடியாமல் இருந்தபோதுதான், ‘கோச்சடையான்’ படப்பிடிப்பு நடந்தது.
ஆனாலும் அவர் அந்தப் படத்தில் Action Hero வாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்றனர்.
அப்படியானல் வழக்கத்தைவிட அதிகமாக ரசிகர்களை ‘கூமுட்டை’யாக்குவார்கள் என்று நினைத்தேன்.
அதுபோலவே அந்தப் படத்தின் பத்திரிகை விளம்பரங்களில் ரஜினி சாயலில் ஒருவர் நடித்திருக்கறார் என்பதாகவே இருந்தது. அதனால், ரஜினியின் பாபா, நாட்டுக்கொரு நல்லவன் படங்களின் வசூலை ‘கோச்சடையான்’ முறியடிக்கும் என்று நினைத்தேன்.
ஆனால், அதன் முன்னோட்டக் காட்சிகளை youtube ல் பார்த்தபு் பிறகு, பாபா, நாட்டுக்கொரு நல்லவன் படங்களின் வசூல் சாதனையை ‘கோச்சடையான்’ முறியடிக்காது என்று முடிவானது;

யசோதா பென்: மோடி அழைத்தால் சேர்ந்து வாழத்தயார் !

பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு யசோதா பென் என்ற பெண்னுடன் இளம் வயதில் திருமணம் நடந்தது. பின்னர் சேர்ந்து வாழாமல் குறுகிய காலத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டனர் என்று செய்திகள் வெளியாயின.
 இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மோடி  வேட்பு மனுதாக்கலின் போது தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தனது மனைவி பெயர் யசோதா பென் என்று முதன்முதலாக குறிப்பிட்டார். இதனையடுத்து அவரை கண்டறிந்த ஊடகங்கள், தொடக்க பள்ளி ஆசிரியையாக இருந்தவர் என்றும், கிராமத்தில் வசித்துவருவதாகவும் செய்திகள் வெளியிட்டடன.

காங்கிரசை காப்பாற்ற பிரியங்கா வருகிறார் ? ராகுல் மெதுவாக ஒதுங்குவார் ?

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பை பிரியங்கா காந்தி ஏற்க வேண்டும்
முன்னாள் மத்திய மந்திரி கே.வி. தாமஸ் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து உள்ளது. அக்கட்சிக்கு 50–க்கும் குறைவான இடங்களே கிடைத்தன. சவாலான போட்டியை காங்கிரஸ் கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரை எப்போதும் பெற்றிடாத தோல்வியை கண்டிருப்பது அக்கட்சியின் தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
44 இடங்களை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்குமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை கட்சியின் தொண்டர்களிடம் இருந்து எழுந்துள்ளது.

பாஜகவின் நிர்மலா சீதாராமன் : ராஜபக்சேவை அழைப்பதில் மறுபரிசீலனைக்கே இடம் இல்லை !

டெல்லி: ராஜபக்சேவை அழைப்பதை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு இல்லை என்று பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்கும் விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இதற்கு முன்பெல்லாம் இப்படி அழைக்கவில்லை என்று சுட்டிக்காட்டி கூட்டணி கட்சிகள் கூறி இருக்கும் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். அதே நேரத்தில் இதற்கு முன்பு கடை பிடிக்காததை, ஒரு புது முறையை, புதுமையான ஆலோசனைகளோடு மோடி எடுத்துள்ளார். அவருடைய இந்த நடவடிக்கை தான் முத்திரை பதித்துள்ளது. பாரத தேசம் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்து அதன் தொடர்ச்சியாக பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்க உள்ளார்.

மக்களவைத் தலைவர் மனது வைத்தால் காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து

பத்து சதவீத இடங்களைப் பெறும் கட்சிக்கு மட்டுமே எதிர்க்கட்சி தலைவர்
அந்தஸ்து கிடைக்கும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும் மக்களவைத் தலைவர் மனது வைத்தால் காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்புள்ளது.
16-வது மக்களவை அமையவுள்ள நிலையில் எதிர்க்கட்சி அந்தஸ்து வகிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சம்பளம் மற்றும் படிகள் சட்டம், 1977 மற்றும் நாடாளு
மன்றத் தலைவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கொறடாக்கள் மற்றும் குழுக்கள் சட்டம் 1998 ஆகிய இரண்டு சட்டங்கள் தான் எதிர்க்கட்சி அந்தஸ்து குறித்து தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் சிதம்பரம்!

சிவகங்கையில் மீண்டும் போட்டியிட மறுத்து விட்ட, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கர்நாடகாவில் இருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவர் ராஜ்யசபா எம்.பி., ஆவதற்கு, காங்கிரஸ் மேலிடம் பச்சைக் கொடி காட்டி உள்ளது. காங்கிரஸ் மேலிடத்தின் போக்கால், ஏற்கனவே கடும் அதிருப்தி அடைந்துள்ள, கப்பல் போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன், இந்த விவகாரத்தில், என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற, பரபரப்பு தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
காங்கிரஸ் கலாசாரம்: தமிழக காங்கிரஸ் கட்சியில், வாசனுக்கும், சிதம்பரத்துக்கும் இடையே உள்ள பகை உச்சத்தில் உள்ளது. இருவரும் இணைந்து செயல்பட முடியாத அளவுக்கு, நிலைமை முற்றிப் போய் விட்டதாக, இருவரது ஆதரவாளர்களும் கூறுகின்றனர்.  எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் சிதம்பரம் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியவர் என்பதில் சந்தேகமில்லை. ஒரோருவரின் தராதரம் பற்றி மக்களுக்கு தெளிவில்லாமல் இருக்கலாம், நாட்டை வழிநடத்த வேண்டிய அரசியல் கட்சிகளும் அப்படி இருந்து விட முடியாதே........

முற்பிறவியில் கோடாரியால் வெட்டிக் கொன்றவனைக் காட்டிக் கொடுத்த 3 வயது 'சிரிய' குழந்தை


A 3-year-old boy in the Golan Heights region near the border of Syria and Israel said he was murdered with an axe in his previous life. He showed village elders where the murderer buried his body, and sure enough they found a man’s skeleton there. He also showed the elders where the murder weapon was found, and upon digging, they did indeed find an axe there.டமாஸ்கஸ்: சிரியாவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தன்னை முற்பிறவியில் கொலை செய்தவனைக் காட்டிக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சிரியாவில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை பிறக்கும் போதே தலையில் சிறிய கோடு போன்ற அடையாளத்துடன் பிறந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் தங்களது முற்பிறவியை நினைவில் கொண்டிருப்பார்கள் என்பது ட்ருஸ் தனி இனக்குழுவின் நம்பிக்கையாம். அதை உண்மையென்று நிரூபிக்கும் விதமாக அந்த சிறுவன் பேசும் வயதை எட்டியவுடன் தனது முற்பிறவி ரகசியங்களை கூறியுள்ளான்.

அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க வலுவான கோரிக்கை ! கலைஞர் பிறந்த நாள் விழாவில் திருப்பங்கள் இடம்பெறும் !

தி.மு.க., தலைவர் கருணாநிதி யின், 91வது பிறந்த தினத்தை ஒட்டி, தந்தை என்ற முறையில், அவரை, கோபாலபுரம் இல்லத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, நேரில் சந்தித்து, ஆசி பெற வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தவிரவும், பிறந்த நாள் காரணத்தை வைத்து, சமீபத்தில் ஏற்பட்ட கசப்பு நிகழ்ச்சிகளுக்கு, தீர்வு காண்பதுடன், கட்சிப் பொறுப்பை மீண்டும் தரவும், முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
கட்சிக்கு எதிராக செயல்பட்ட தாக கூறி, தென் மண்டல அமைப்பு செயலர் பதவி, அழகிரியிடம் இருந்து பறிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அழகிரி ஆதரவாளர்கள் 'சஸ்பெண்ட்' நடவடிக்கைகள், அதன் உச்சகட்டமாக, லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், 'அழகிரியை நான் மறந்து விட்டேன்' என்று, தி.மு.க., தலைவர் கூறும் அளவுக்கு, கசப்பு உணர்வுகள் அதிகரித்திருக்கிறது.;சொன்னது நடந்தது:
கட்சியில் இருந்து 'டிஸ்மிஸ்' ஆனபின், தி.மு.க.,வுக்கு எதிராக கருத்து சொல்ல ஆரம்பித்தார், அழகிரி. 'தமிழகத்தில், தி.மு.க., போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் தோற்கும்,' என, சாபம் விட்டு பேசினார். அவர் சொன்னது போலவே, தேர்தல் முடிவுகள் அமைந்துவிட, கட்சிக்குள் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.

வியாழன், 22 மே, 2014

பாஜகவை எதிர்த்து போராடுவோம்: சோனியாவை சந்தித்த பின் லாலு பேட்டி

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ்  சந்தித்து பேசினார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பா.ஜனதாவின் வெற்றி என்பது ஒரு புயல் மாதிரி. அது நீண்ட நாள் நீடிக்காது. பா.ஜனதாவை முழுமூச்சுடன் எதிர்த்து போராடுவோம். பீகாரில், பா.ஜனதாவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்குத்தான் புதிய ஐக்கிய ஜனதாதள அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தோம். இருப்பினும், அரசை கண்காணித்து வருவோம். இவ்வாறு அவர் கூறினார்

தாய்லாந்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது !

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் கடந்த ஆறு மாதங்களாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அங்கு சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்காக ராணுவச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதாக அந்நாட்டு ராணுவம் நேற்று முன்தினம் திடீரென அறிவித்தது. தாய்லாந்து நாட்டின் பிரதமராக இருந்த யிங்லக் ஷினவத்ரா பதவி விலகக் கோரி ஆறு மாதங்களுக்கும் மேல் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தது. இதையடுத்து, அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அந்நாட்டு நீதிமன்றம் யிங்லக் ஷினவத்ராவை பதவியிலிருந்து நீக்கியது. இதைத்தொடர்ந்து, நிவட்டும்ராங் பூன்சாங்பைசன் என்பவர் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ஆனால், அந்த தற்காலிக பிரதமரையும் பதவி விலகக்கோரி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில்,இடைக்கால பிரதமர் பதவி விலக மறுத்துவிட்டதால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

Saudi மக்காவில் SR4.5 மில்லியன் நகை கொள்ளை !

சிக்கிய நகை மற்றும் பணம்புனித யாத்திரை செல்லும்  மக்காவிலேயே சவுதி ரியால் 4.5 மில்லியன் பெறுமதியுள்ள நகைகளை கொள்ளையடித்த 4 பேர், திருட்டு நடந்து 24 மணி நேரத்துக்குள் அகப்பட்டுள்ளார்கள். மக்கா சி.ஐ.டி. போலீஸால் கைது செய்யப்பட்டுள்ள இந்த நால்வரும், ஏமன் நாட்டவர்கள்.
இரவில் மக்காவில் உள்ள நகைக்கடை ஒன்றின் காங்கிரீட் சுவரில் துவாரம் ஏற்படுத்திய இந்த கும்பல், ஆக்சிஜன் சக்தி டார்ச் ஒன்றின் உதவியுடன் உள்ளேயிருந்த உருக்கு சுவரையும் வெட்டி உள்ளே நுழைந்தனர்.
அதையடுத்து அங்குள்ள எலக்ட்ரிக் ஒயர்களை வெட்டி பாதுகாப்பு கருவிகளை செயலிழக்க வைத்தனர்.  சவுதியை பற்றியும் மக்காவை பற்றியும்  நம்ப A.R.ரஹ்மான் ரொம்ப அலட்டுவரே ?

Iran பெண்களும் ஆண்களும் நடனமாடியதற்காக கைது !


அமெரிக்கப் பாடகர் பரேல் வில்லியம்சின் 'ஹேப்பி' என்ற ஆல்பத்தின் பாடல் ஒன்றுக்கு ஈரானைச் சேர்ந்த மூன்று பெண்களும், இளைஞர்களும் இணைந்து வீட்டுக் கூரையின் மீதும், குறுகிய சந்துகளிலும் நடனம் ஆடியதாக
எடுக்கப்பட்டிருந்த வீடியோ பதிவு ஒன்று அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இணையதளத்தில் 2,65,000-க்கும் மேற்பட்டமுறை மக்களால் பார்க்கப்பட்ட இந்த நடனக்காட்சியில் இடம் பெற்றிருந்த ஆறு பேரையும் நேற்று ஈரான் காவல்துறை கைது செய்தது. இத்தகைய நடனங்கள் பொதுமக்களின் புனிதத்தைக் காயப்படுத்தியதாக டெஹ்ரான் காவல்துறை தலைவர் ஹோசன் சஜடெனியா தெரிவித்திருந்தார்.

அழகிரிக்கு அடுத்து கனிமொழியை ஓரம் கட்ட ஸ்டாலின் ஓவர் டைம் வேலை ! அதிமுகவின் அனுகூல சத்ரு ஸ்டாலின் ?

திமுகவில் இருந்து அழகிரி ஓரம்கட்டி உட்கார வைக்கப்பட்டிருப்பதைப் போல கனிமொழியையும் ஒதுக்கி வைக்கும் வரை மு.க.ஸ்டாலினின் 'உட்கட்சி போராட்டம்' தொடரும் என்றே சொல்லப்படுகிறது. லோக்சபா தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. முட்டைதான் வாங்கியது. திமுக தேர்தலில் தோல்வியடைந்ததைப் பயன்படுத்தி அழகிரி தரப்பும், கனிமொழி தரப்பும் ஸ்டாலினுக்கு வேட்டு வைப்பதில் படுமும்முரம் காட்டியிருக்கின்றன.
தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே அழகிரி, ஸ்டாலினை நோக்கி காட்டம் காட்டினார். மறுநாள் கருணாநிதியை சந்தித்த கனிமொழி, கட்சியில் இனிமேலாது ஒழுங்கு நடவடிக்கை எடுங்க.. மாவட்ட செயலர்களை மாற்றிடுங்க.. எனக்கு இப்படித்தான் தேர்தல் முடிவு இருக்கும்னு தெரியும் என்றெல்லாம் ஏகத்துக்கும் பில்டப் கொடுத்திருக்கிறார் அழகிரி.
இது அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மு.க.ஸ்டாலினின் காதுகளுக்குப் போய்ச்சேர உச்சகட்ட கடுப்புக்குப் போயிருக்கிறார். வெளியில் இருந்து அழகிரி குடைச்சல் கொடுக்கிறார். உள்ளே இருந்து கொண்டே கனிமொழி குழிபறிக்கிறார் என்பது ஸ்டாலினின் கொந்தளிப்பு.

ஜெகன் மோகன் ரெட்டியை விட சந்திரபாபு நாயுடு அதிகம் கொடுத்தார் ! அங்கும் இங்கும் பணமே வெற்றி !

holy-election-11சில நாட்களுக்கு முன் திருப்பதியிலிருந்து சென்னை வந்த என் நண்பனை சந்திக்கச் சென்றிருந்தேன். திருப்பதியிலேயே தங்கி வேலை செய்து வருபவன் என்பதால், அவனிடம் ஆந்திர அரசியல் நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்பது திட்டம்.
ஆனால் அவனோ தேர்தல் பற்றி பேச்செடுத்தாலே எரிச்சலாக பேசினான். ”தேர்தல் எல்லாம் சுத்த ஹம்பக் (பொய்)” என்றான்.
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. நான் தேர்தல் புறக்கணிப்பை பற்றி பேசினால், “அதெல்லாம் தப்பு, நாம் நிச்சயம் ஓட்டுப் போட வேண்டும், பிடிக்கவில்லை என்றால், 49-ஓ போட வேண்டும். தேர்தல் ஆணையம் நேர்மையாகத் தான் இந்தியாவில் தேர்தல் நடத்துகிறது” என்பான். ஆனால் இப்பொழுது திடீரென்று எங்கிருந்து இந்த ஞானோதயம் வந்திருக்கிறது, ஏன்?
ஆந்திராவில் இந்த முறை தேர்தலில் பணம் பயங்கரமாக விளையாடி இருக்கிறது. பொதுவாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதெல்லாம் தமிழ் நாட்டில் மட்டும் தான் என்றும், அது திராவிடக் கட்சிகள் மாத்திரம் செய்யும் அசிங்கமான வேலை என்றும் நினைப்பவர்கள் உங்கள் அறியாமையை மாற்றிக் கொள்ளுங்கள்! பா.ஜ.கவுடன் புனிதக் கூட்டணி வைத்திருக்கும் தெலுங்கு தேசம் கட்சியும், ஜகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும் ஆந்திர தேர்தல் களத்தில் பணத்தை வாரி இறைத்துள்ளன.

நடிகர் ஷாருக்கான் உலகப் பணக்கார நடிகர்களில் 2வது இடம் ! ஒரு வறுமையான நாட்டில் இது ???

ஹாலிவுட் மற்றும் பாலிவுட் உட்பட உலகில் உள்ள அனைத்து திரையுலகத்தைச் சேர்ந்த நடிகர்களில் மிகவும் பணக்கார நடிகர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஹாலிவுட் காமெடி நடிகர்ஜெர்ரி செயில்பீல்ட் சுமார் ரூ.4,800 கோடி சொத்துகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவர் பற்றி அதிகம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் நமது பாலிவுட் நடிகர் ஷாருக்கான்தான். சுமார் ரூ.3,600 கோடி சொத்துகளுடன் உலக பணக்கார நடிகர்களில் ஷாருக்கான் 2வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். பாலிவுட் நடிகரான ஷாருக், ஐபிஎல் அணியின் உரிமையாளராகவும், விளம்பரங்கள் மற்றும் பல்வேறு தொழில்கள் மூலமாகவும் லாபம் ஈட்டி வருகிறார். ரூ.3000 கோடி சொத்துக்களுடன் டாம் குரூஸ் 3வது இடத்தில் உள்ளார்.dinamani.com

ரூ. 5,600 கோடி முதலீட்டாளர்கள் பணத்தை ஏமாற்றிய ஜிக்னேஷ் ஷா !

ஜிக்னேஷ் ஷா, இந்தப் பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க
மாட்டார்கள். ரூ. 5,600 கோடி முதலீட்டாளர்கள் பணத்தை ஏமாற்றிய குற்றத்துக்காக தண்டனையை எதிர்நோக்கி சிறையில் இருப்பவர்.
யார் இந்த ஜிக்னேஷ் ஷா? 1960-களில் குஜராத்திலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தது இவரது குடும்பம். இவரது தந்தை இரும்பு வியாபாரி. பள்ளி நாள்களிலேயே தனது எதிர்காலத் தைத் திட்டமிட்டு அதன்படி முன் னேறியவர். பொறியாளராக வேண்டும், அமெரிக்காவில் சில காலம் பணி புரிய வேண்டும், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும், சக மாணவி ரூபாலை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவரது ஆசை கள் இவற்றில் அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்பதைத் தவிர மற்ற அனைத்துமே அவர் திட்டமிட்டபடி நடந்தது.

ராகுல் காந்தியை முன்னிறுத்தியதே காங். படுதோல்விக்கு காரணம் ! கூட்டணி கட்சி புகார் !

டெல்லி: மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை முன்னிறுத்தியதே காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு காரணம் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் குற்றம்சாட்டியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் அதிகாரப்பூர்வ நாளேடான சந்திரிகாவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் ராகுல் காந்தியின் ஒரு நபர் ராஜ்ஜியம் எடுபடவில்லை என விமர்சிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கு செல்வது மட்டுமே மக்களின் ஆதரவை பெறுவதற்கு போதுமானது அல்ல என்று ராகுல் உணரத் தவறிவிட்டதாகவும் அக்கட்டுரையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வெங்கட்பிரபு :உண்மையான நட்பு எது என்று காட்டிய அவிந்த்ர பிரதாப் பாண்டே.!


திரைப் பிரபலங்களின் சமூக வலைதள செயல்பாடுகள் அவ்வபோது பரபரப்பை ஏற்படுத்தி வருவது இப்போது வழக்கமாகிவிட்டது. சர்ச்சைக்காக மட்டுமின்றி, சில நல்ல விஷயங்களும் பிரபலமாகி வருகின்றன.
திரைப்பட இயக்குனர் வெங்கட்பிரபு, சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து தமது கருத்துகளைப் பகிர்ந்து வரும் சினிமா பிரபலங்களில் ஒருவர்.
வெங்கட்பிரபுஇந்த நிலையில், அவர் இன்று பதிவேற்றிய ட்வீட் மற்றும் ஸ்டேட்டஸ்
ஒன்று, தமிழ் இணையவாசிகள் பலரால் பாரட்டப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது. அதன் விவரம்:
"ஒரு வருடத்திற்கு முன்னால், டெல்லியில் ஓடும் பேருந்தில், தன் கண் முன்னால் தன்னுடைய தோழி 6 கயவர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாவதைக் கண்டார். இரும்புக் கம்பியால் அடி வாங்கியும் தன்னால் இயன்ற அளவு போராடினார். அந்த இளைஞரின் காலை குற்றவாளிகள் உடைத்தனர். அவரது உடைமைகளைத் திருடினர், ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கினர், அவரது தோழியை இரும்பு கம்பியைக் கொண்டு மேலும் சிதைத்தனர். அந்தப் பனி மிகுதியான இரவில் ஓடும் பேருந்திலிருந்து, தனது தோழியுடன் அவரும் வெளியே தூக்கி எறியப்பட்டார்.
உடலில் ஆடைகளின்றி, போராடத் தெம்பின்றி, ரத்தம் கசிய இருவரும் ரோட்டோரத்தில் கிடந்தனர். அப்போதும் அந்த இளைஞர் அவ்வழியே சென்ற கார்களை தடுத்து நிறுத்தி உதவி கோர முயன்றார். தனது தோழியின் உடலை மூட ஒரு சால்வை வேண்டி வழியில் வந்தவர்களிடம் கெஞ்சினார். அவர் கோரியது 40 நிமிட போரட்டத்திற்கு பின்னர்தான் கிடைத்தது.

ஊதா கலரு நாயகனுக்கு எதிராக குழிபறிக்கும் ஹீரோக்கள்!

சினிமா வட்டாரத்தில் இளம் ஹீரோக்கள் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளிக்கும்
போதும்., போஸ் கொடுக்கும் போது நாங்கள் நல்ல நண்பர்கள், சகோதரர்கள் என கூறிக்கொண்டாலும் பொறாமைகளும் அதிகமாகவே உள்ளன.
 நேற்று வந்தவனுக்கு நம்மைவிட அதிகமான படவாய்ப்புகளும், அதிகமான ஊதியமும் கிடைக்கிறதே என்ற ஒருவித வெறுப்புடனே இளம் ஹீரோக்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களில் யாராவது ஒருவரின் படம் ஊத்திக்கொண்டால் சக ஹீரோக்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து விடிய விடிய சரக்கு அடித்து கொண்டாடி மகிழ்வார்கள்.

அவதூறு வழக்கில் கேஜரிவாலுக்கு 2 நாள் சிறை

பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜாமீன்
பத்திரம் அளிக்க மறுத்ததால், முன்னாள் தில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை இரு தினங்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
ஊழல் செய்ததாகக் கூறப்படும் முக்கிய அரசியல் தலைவர்களின் நாடு தழுவிய பட்டியலை, தில்லி முதல்வராக இருந்தபோது அரவிந்த் கேஜரிவால் கடந்த ஜனவரி 31லிஇல் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் வெளியிட்டார். அதில், பாஜகவின் மூத்த தலைவர் நிதின் கட்கரி பெயரும் இடம் பெற்றிருந்தது.

அரசு ஊழியர்களிடம் தி.மு.க., செல்வாக்கு சரிவு

அரசு ஊழியர்களிடமும், தி.மு.க.,வின் செல்வாக்கு சரிந்து வருவது, தேர்தல் முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், தி.மு.க.,விற்கு செல்வாக்கு அதிகம். காலம் காலமாக இதுதான் யதார்த்தமாக இருந்து வந்தது. ஆனால், அது தற்போதைய தேர்தல் மூலம் உடைக்கப்பட்டிருக்கிறது.அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சி மாறி, மாறி வந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், பெரும்பாலானோர் தி.மு.க., ஆதரவாளர்களாக இருந்து வந்தனர். போலீசாரில் அ.தி.மு.க., விற்கு ஆதரவு அதிகம். சமீப காலமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், தி.மு.க.,வின் செல்வாக்கு, வேகமாக சரிந்து வருகிறது. அவர்களின் ஓட்டு வங்கியை, அ.தி.மு.க., சத்தமின்றி கைப்பற்றி வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் ஓட்டு யாருக்கு போகிறது என்பதை, தபால் ஓட்டுகள் மூலம் அறிய முடிகிறது. 
இத்தனைக்கும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மத்தி்ய அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் வழங்க ஆணையிட்டது தி்முக அரசுதான் மேலும் பொதுமக்களின் விமர்சனத்துக்கு உளளான வகையில் ஆசிரியர்களின் சமபளம் உயர்த்தி்யது தி்முக சங்க பிரதி்நிதி்களை மதி்த்து பேச்சுவார்த்தை நடத்த அழைத்த அரசு தி்முக ஆனால் இதற்கு நேர் மாறாக ஒரே கையெழத்தி்ல் ஒட்டு மொத்த அரசு ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தது ஆயிஅதி்முக அரசு புதி்ய ஓய்வூதி்ய தி்ட்டத்தை கொண்டுவரமாட்டேன் பழைய ஓய்வூதி்ய தி்ட்டமே தொடரும் ஓய்வூதி்யம் பெறுவோர் பேருந்தி்ல் இலவச பயணம் செய்ய ஆணையிடுவேன் என வாக்குறுதி் அளிததுவிட்டு வெற்றி பெற்று முதல்வரானதும் கொடுத்த வாக்குறுதி்க்கு எதி்ராக புதி்ய ஓய்வூதி்யதி்ட்டத்தை கொண்டுவந்து வஞ்சித்து நம்பிக்கை துரோகம் செய்தது அதி்முக அரசு

பா.ஜ., கூட்டணியில் பதவிக்கு அன்புமணி சுதீஷ் வைகோ இடையே கடும் போட்டி!

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமின்றி; தோற்றவர்களும் மத்தியில்
அமைச்சராவதற்கு முயற்சிப்பதால், பா.ஜ., கூட்டணியில் யாருக்கு பதவி என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் அமைக்கப்பட்ட, தேசிய ஜனநாயக கூட்டணியில், இரண்டு பேர் மட்டுமே வெற்றி பெற்று, எம்.பி., ஆகி உள்ளனர். மற்ற கட்சிகளும், அதன் தலைவர்களும் தோல்வி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே பா.ஜ., எம்.பி, என்ற அடிப் படையிலும், கட்சியின் மாநில தலைவர் என்ற முறையிலும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, பா.ஜ., வட்டாரத்தில் எழுந்துள்ளது. மேலும், தமிழகத்தில் கட்சியை வளர்க்கவும், கட்சியினருக்கு உதவவும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என்று, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில், பா.ஜ., மூத்த நிர்வாகி இல.கணேசன், இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என, பா.ஜ.,வினர் பெரிதும் எதிர்பார்த்தனர்.
ஒழுங்கா ஜெயிச்சு பாராளுமன்றம் போனாலே நம்ம பேச்சு எடுபடுமான்னு தெரியாது...இதுல ஓசியில குடுத்த சீட்ட வைச்சுகிட்டு எங்க மக்களுக்காக ஓங்கி ஒலிக்கிறது.. தேமுதிக இனி வெள்ளை யானை அதுக்கு தீனி போட முடியாது. அத காட்டுல கொண்டு விட்டுடவேண்டியது தான்.

6.0-magnitude earthquake இந்திய கரையோரமான கொணர்கா என்ற இடத்தில பூமி அதிர்ச்சி

A 6.0-magnitude earthquake struck in the Bay of Bengal off India's east coast on Wednesday, US seismologists reported, but no tsunami warning was immediately issued. The epicentre of the quake, which hit at 1621 GMT, was located 275 kilometres southeast of the coastal Indian town of Konarka, the United States Geological Survey (USGS) said. The quake struck at a depth of 39 kilometres. இன்று வங்காள விரிகுடாவில் கிழக்கு இந்திய கரையோரமான கொணர்கா என்ற இடத்தில பூமி அதிர்ச்சி ஏற்பட்டு ள்ளது . இதன் தாக்கம் டெல்லி சென்னை ஓடிஸா போன்ற பல நகரங்களிலும் உணரப்பட்டது,

கிரண் பேடி டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளராக

கடந்த வருடம் நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால், அம்மாநில சட்டப்பேரவை தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று அரசியலில் குதிக்க தயார் என அறிவித்த கிரண் பேடி, இன்று மீண்டும் ஒரு படி மேலே போய் பாரதீய ஜனதா கட்சி டெல்லி மாநில முதல் மந்திரி வேட்பாளராக தன்னை நியமித்தால் அதை ஏற்க தயார் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு முறை டெல்லி மாநில முதல்வர் பதவிக்கு போட்டியிடுவீர்களா என்று கேட்பதாலேயே கிரண் பேடி இவ்வாறு கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே மோடிக்கு ஆதரவாக கிரண் பேடி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.nakkheeran.in

மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு சாக் நாட்டு தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு !

புதுடில்லி: நாட்டின், 15வது பிரதமராக, பா.ஜ.,வின் நரேந்திர மோடி, வரும் திங்கள் கிழமை பொறுப்பேற்க உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கன் அதிபர் கர்சாய், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்ஷே உறுதி தெரிவித்துஉள்ளதால், இலங்கை தமிழர் விவகாரத்தை காரணம் காட்டி, பா.ஜ., கூட்டணி கட்சிகளின் தலைவர்களான, ம.தி.மு.க.,வின் வைகோ, பா.ம.க.,வின் அன்புமணி ஆகியோர் அந்தநிகழ்ச்சியில் பங்கேற்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது. டில்லி, பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்த, பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டத்தில், லோக்சபா, பா.ஜ., கட்சித் தலைவராக, ஒருமனதாக மோடி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவரை பிரதமராக அங்கீகரித்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடிதம் வழங்கியுள்ளார்.

புதன், 21 மே, 2014

பாக்கை அணுகுண்டு போட அழைக்கும் நிதின் கட்காரி



ஹெட்லைன்ஸ் டுடேஆர்.எஸ்.எஸ் எவ்வளவு ‘அடக்கமாக’ பேசினாலும் ஜனநாயகத்தை ஏற்காது என்பதற்கு மற்றொரு உதாரணமாக ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி சேனலில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் பாஜக அடிப்பொடி தலைவர் நிதின் கட்காரி நிரூபித்திருக்கிறார். ஆள் அரவமற்ற சிவன் கோவில் திண்ணையில் குடியும் சீட்டுமாக வாழும் ஒரு ரவுடி போல, அடாவடியாகவும், பொறுப்பின்றியும் பேசி, பாகிஸ்தானைச் சேர்ந்த தாரிக் பிர்சாதாவை ஒருமையில் திட்டியிருக்கிறார் முன்னாள் பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி.தாரிக் பிர்சாதா பாக் அரசில் பொறுப்பு வகித்தாலும், இந்தியா-பாக் உறவு குறித்து நாகரீகமாக பேசக் கூடியவர். அதன் பொருட்டே அவரை இந்திய தொலைக்காட்சிகள் அவ்வப்போது விவாதத்துக்கு அழைக்கின்றன. கட்காரியைப் போன்ற காட்டுமிராண்டிகள் காட்டுமிராண்டித்தனமாக பேசுவது அதிசயமில்லைதான். ஆனாலும் ஆட்சி அமைக்கும் பொழுதில், அமைச்சராக வாய்ப்புள்ள கியூவில் நிற்கும் ஒரு தொழிலதிபர், தறுதலை போல பேசியதுதான் குறிப்பிடத்தக்கது.

39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் மறுதேர்தல் நடத்தக்கோரி டிராபிக் ராமசாமி வழக்கு ! தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் !

சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் ‘’பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முன்பு 144- தடை உத்தரவை, தமிழக தேர்தல் ஆணையர் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பிறப்பித்தார். இந்த தடை உத்தரவு காலத்தில், ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுத்தனர். இதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெரும்பான்மையான வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா
செய்யப்பட்டுள்ளது.எனவே, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 30-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பம் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் மனுவை பரிசீலித்து, தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதி களுக்கும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’’என்று கூறப்பட்டு இருந்தது.>இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.ரவிசந்திரபாபு ஆகியோர் முன்பு  விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, இந்த மனு குறித்து பதிலளிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு, மனுதாரர் நோட்டீசு அனுப்பவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தனர். .nakkheeran.in
செய்துள்ள மனுவில், 

ராஜீவ் காந்தி நினைவு தின நிகழ்ச்சி ரத்து - தமிழக அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

சென்னை: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பார்கள். ஆனால் மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று இந்த நிகழ்ச்சியை தமிழக அரசு ரத்து செய்து விட்டது குறிப்பிடத்தக்கது. அறிக்கை மூலமாகவும் கண்டனம் இதற்கிடையே, ஞானதேசிகன் ஒரு அறிக்கையும் விட்டுள்ளார். அதில், மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் 'பாரத ரத்னா' ராஜீவ்காந்தி அவர்கள் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தால் ஸ்ரீபெரும்புதூர் தமிழ் மண்ணில் மனித வெடிகுண்டால் சாய்க்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரஸ் - அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு சிரித்த முகத்தோடு தமிழகம் வந்திறங்கிய அந்த ரோஜா மலரை பாவிகள் இந்த மண்ணில் குற்றுயிரும், குலை உயிருமாக ஆக்கிவிட்டார்கள். பயங்கரவாதம் எந்த ரூபத்தில் இருந்தாலும் ஜாதி, இன, மத என்று எந்த போர்வையிலும் அதனை எதிர்க்க வேண்டும் என்கிற உறுதிமொழியை ஏற்கிற நாளாக அமரர் ராஜீவ்காந்தி அவர்கள் மறைந்த நாளில் உறுதிமொழி ஏற்கப்படுகிறது.

ஹன்சிகா தத்தெடுத்த 25 குழந்தைகள் கோடை விடுமுறையில் குலுமனாலி பயணம்

நடிகை ஹன்சிகா சமூக சேவை பணிகளில் ஆர்வம் உள்ளவர். சம்பாதிக்கும்
பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு ஒதுக்கி ஓசை இல்லாமல் உதவிகள் செய்து வருகின்றார். அத்துடன் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதுவரை 25 குழந்தைகளை தத்தெடுத்து இருக்கிறார். அந்த குழந்தைகளுக்கான உணவு, தங்கும் இடம், படிப்பு செலவு எல்லாவற்றையும் ஹன்சிகாவே கவனித்து கொள்கிறார். தற்போது கோடை விடுமுறையில் தத்தெடுத்த 25 குழந்தைகளையும் குலுமனாலிக்கு 5 நாள் இன்ப சுற்றுலாவாக அழைத்து செல்ல முடிவு செய்து இருக்கிறார். தமிழ், தெலுங்கில் ஹன்சிகா பிசியாக நடித்து வருகிறார். இந்த அலைச்சலிலும் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி குலுமனாலி போகிறார். ஜூன் முதல் வாரம் பயணத்தை தொடங்குகின்றனர்.

கனிமொழி மருத்துவமனையில் ! தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது 1.

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது மகள் கனிமொழிக்கும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.   இந்த நிலையில் சமீபத்தில் தயாளு அம்மாளுக்கு திடீரென உடம்பில் நீர்ச்சத்து குறைந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் கனிமொழிக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்று பிற்பகலில் அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கனிமொழிக்கு என்ன பிரச்சினை என்பது தெரியவில்லை.
tamil.oneindia.in

143 ? அமரகாவியம்: நடிகர் ஆர்யா தயாரித்து வரும் படம்

தனது தம்பி சத்யாவை ஹீரோவாக வைத்து, நடிகர் ஆர்யா தயாரித்து வரும்
படம் தான் 'அமரகாவியம்'. ‘நான்’ என்ற த்ரில்லர் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இந்த காதல் கதையை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்த பின்னர் தயாரிப்பாளர் என்ற முறையில் ஆர்யாவும் அவருடைய ஓரிரு நண்பர்களும் படம் பார்த்தனர். காட்சி முடிந்தவுடன் ஆர்யாவின் கண்களில் கண்ணீர் துளிகள் தென்பட ஈரமான கண்களுடன் யாரிடமும் பேசாமல் அவர் திரையரங்கை விட்டு வெளியேறினார். எதையும் மறைத்து பேசி பழக தெரியாதவர் என்ற அறியப்படும் ஆர்யா, கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படத்தின் படப்பிடிப்புக்கு சென்றார்.

பீகார் அரசுக்கு காங்கிரஸ் நிபந்தனை அற்ற ஆதரவு !

பிகார் மாநில அரசுக்கு அளித்துவரும் ஆதரவை தொடர்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய ஜனதா தள அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை பிகார் ஆளுநர் டி.ஒய். பாட்டீலிடம் பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சௌத்ரி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அசோக் சௌத்ரி, "காங்கிரஸ் மேலிடம் எடுத்த முடிவின்படி, எங்கள் கட்சியின் 4 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளோம். ஆட்சியில் பங்கேற்பது குறித்து கட்சி மேலிடம் எதுவும் அறிவுறுத்தவில்லை.
ஐக்கிய ஜனதா தள ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளோம்' என்று கூறினார்.

100 படுக்கை வசதி கொண்ட 15 புதிய மருத்துவமனைகள்

சென்னையில் 100 படுக்கை வசதி கொண்ட 15 புதிய மருத்துவமனைகளை தொடங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
நகர்ப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் விதமாக நகர்ப்புற சுகாதார திட்டத்தை (அர்பன் ஹெல்த் மிஷன்) மத்திய அரசு செயல்படுத்துகிறது.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு மருத்துவ வசதிகளை ஏற்படுத்த அரசு நிதியளிக்கிறது.
இந்த திட்டம் சென்னையிலும் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, சென்னையில் எத்தனை மருத்துவமனைகள் தேவை, அவற்றுக்கான நிதி எவ்வளவு என்பது போன்ற விவரங்கள் திரட்டப்பட்டன. இதன்படி முதல் கட்டமாக 140 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகளையும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மெகா திட்டங்களை தயாரியுங்கள்: துறை செயலர்களுக்கு கேபினட் செயலர் உத்தரவு

Gujarat BABY FACTORIES"
India's surrogacy industry is vilified by women's rights groups who say fertility clinics are nothing more than "baby factories" for the rich. In the absence of regulation, they say many poor and uneducated women are lured by agents, hired by clinics, into signing contracts they do not fully understand.
புதுடில்லி: மோடி தலைமையிலான புதிய அரசில், நிறைவேற்றப்பட மோடி தான், அடுத்த பிரதமர் என்பது உறுதியானதும், கேபினட் செயலராக இருக்கும் அஜித் சேத், அனைத்து துறை செயலர்களையும் போனில் அழைத்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்குமாறு உத்தரவிட்டு உள்ளார். மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான துறை செயலர்கள், தாங்கள் சுதந்திரமாக செயல்பட்டால், எந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பர், அவற்றில் தடையாக உள்ள அம்சங்கள் என்ன என்பது குறித்து, விளக்க அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
வேண்டிய புதிய திட்டங்கள் எவை, தற்போது முடங்கியுள்ள திட்டங்கள் எவை, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து, விரிவாக அறிக்கை அளிக்குமாறு, அனைத்து துறை செயலர்களுக்கும், கேபினட் செயலர் உத்தரவிட்டு உள்ளார். மெகா திட்டம். மெகா லாபம். தேர்தலில் விட்ட காசை பிறகு எப்படி பிடிப்பது? சுஷ்மா, ஜெட்லி எல்லாம் முற்றும் துறந்த சாமியார்கள? புகுந்து விளையாட போகிறார்கள்

தனி கட்சி தொடங்க வாசன் தீர்மானம் ? கேம் ஓவர்ன்னு இன்னுமா புரியல ?

தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ் 
தேர்தல் தோல்விக்கு பின், தமிழக காங்., கட்சியில், இப்போது தான் மெல்ல
புகைச்சல் கிளம்ப துவங்கி உள்ளது. 'தமிழக காங்., தலைவர் பதவியில் இருந்து, ஞானதேசிகனை நீக்க வேண்டும்' என, தேர்தலில் தோற்ற வேட்பாளர் ஒருவர், முதல் குரல் கொடுத்து, முதல் திரியை கொளுத்தி போட்டுள்ளார். இந்த குரலுக்கு பின்னணியில், சிதம்பரம் அணியினர் இருப்பதால், விரைவில் இது கொழுந்து விட்டு எரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு 3 கட்சிகள் கூட்டணி?

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து என்பது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. மேலும் அதன் தலைவருக்கு மத்திய மந்திரி அந்தஸ்து உள்பட பல சலுகைகளும் உண்டு. பாராளுமன்ற சட்டம் 1977-ன் படி பார்த்தால் தற்போதைய பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்து இருக்கவேண்டும். ஆனால் 1998-ம் ஆண்டு அந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி பாராளுமன்ற மொத்த உறுப்பினர்கள் (543) எண்ணிக்கையில் 10 சதவீதம், அதாவது 55 உறுப்பினர்கள் ஒரு கட்சிக்கு இருக்கவேண்டும். இதன் அடிப்படையில்தான் பிரதான எதிர்க்கட்சி மற்றும் அதன் தலைவர் அந்தஸ்து அளிக்கப்பட்டு வருகிறது.

பா.ஜ.,விடம் விஜயகாந்த் அமைச்சர் பதவி கேட்கிறார் ! ஜெயாவை சமாளிக்க சுதீசுக்கு புரோமோஷன் தேவையாம் !

இரண்டு ஆண்டுகளுக்கு, முதல்வர் ஜெயலலிதாவை சமாளிக்க
வேண்டுமானால், தே.மு.தி.க.,விற்கு, மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, பா.ஜ., மேலிட தலைவர்களிடம், விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட, தே.மு.தி.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. எப்படி வழிநடத்துவது...: எதிர்பாராத இந்த தோல்வியால், தே.மு.தி.க., கூடாரம் கலகலத்து கிடக்கிறது. தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் என, பலரும் தங்கள் அரசியல் வாழ்க்கை குறித்த கவலையில் உள்ளனர். சட்டசபை தேர்தல், தமிழகத்தில், 2016ம் ஆண்டு நடக்க உள்ளது. இரண்டு ஆண்டுகள் வரை, அதற்கு கால அவகாசம் இருப்பதால், அதுவரை கட்சியை எப்படி வழிநடத்துவது என தெரியாமல், தே.மு.தி.க., தலைமையும் விழிபிதுங்கி நிற்கிறது. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே எந்தன் ஐயனே. யாராவது பார்த்து என் குடும்பத்துக்கு பிச்சை போடுங்கப்பா.

செவ்வாய், 20 மே, 2014

பாரதம் என்னுடைய தாய்.. பாஜக என் தாய்... கண்ணீர் விட்ட மோடி !

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மோடி ஏற்புரை ஆற்றினார்.
அப்போது,   ‘’தாயின் இடத்தை யாராலும் நிறைவு செய்ய முடியாது.  பாரதம் என்னுடைய தாய்.. பாஜக என் தாய்..  நாட்டு மக்களின் நம்பிக்கை, கனவு, விருப்பம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகத்தான் நாம் அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம்; பதவிக்காக இல்லை.
  ஜனநாயக நாடான இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கையோடு இந்த வெற்றியை அளித்துள் ளார்கள்.  நாட்டில் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் ஏழைகளின் குரலுக்கு செவிசாய்க்கும் அரசாக இந்த அரசு இருக்கும்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுவதை நான் நம்ப வில்லை.   அவர்கள் அரசு தங்களால் முடிந்ததை செய்திருக்கிறார்கள்.   மக்களின் நலத்திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன். மக்களின் பிரச்னைகளுக்குத் தான் முக்கியத்துவம் தர வேண்டுமே தவிர பதவிக்கு அல்ல. இதுவரை இந்தியா கண்ட பிரதமர்களிலேயே கண்ணீர் விட்டவர் இவர்தான் , மக்கள் எதிர்காலத்தில் கண்ணீர் விடாமல் இருக்க பிரார்த்திப்போமாக ! அத்வானியின் சோகம் ஊமை கண்ட கனவானதே ?

விசுவாசத்திற்கு கிடைத்த வெகுமதி: ஒரு அடிமையின் ஒப்புதல் வாக்குமூலம் !அமைச்சர் கோகுல இந்திரா!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக
வெற்றி பெற்றது. இத்தேர்தலில் அதிமுக கூட்டணியின்றி தனித்து நின்றதால் கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்பட்டது. கருத்து கணிப்புகளும் அதிமுகவிற்கு கணிசமான இடங்கள் கிடைத்தாலும் திமுகவும் ஒரு சில இடங்களில் வெற்றி பெறும் என்று கூறி வந்தன. அந்த வகையில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் மத்திய சென்னை தொகுதியில் திமுக வெற்றி பெறும் என்று தெரிவித்தபோதிலும், அ.தி.மு.க.வின் அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள கோகுல இந்திரா, தங்கள் கட்சி தலைமையின் நம்பிக்கையை பொய்யாக்காமல் கட்சிக்கு விசுவாசமாக அடிமை போல  உழைத்தார். 

Social Media's Victory சமுக வலை தளங்களால் வாக்குகளை அள்ளிய பாஜகவும் அதிமுகவும் !

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 18115825
வாக்குகள் கிடைத்துள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட, இரு மடங்கு வாக்குகளை அதிகம் பெற்று அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. இத்தேர்தலில் புதிதாக வாக்களித்தவர்களில் பெரும்பாலானவர்களின் வாக்குகளை அதிமுக அள்ளிக் குவித்திருக்கிறது. இதற்கு காரணம் முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி வியூகம் தான். அவரது அதிரடி வியூகத்தின் காரணமாக அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பிரசார யுக்தி, இளைஞர்களின் வாக்குகளை அதிக அளவில் ஈர்த்தது.

கத்தோலிக்க பாதிரியார்களை திருமணம் செய்ய அனுமதியுங்கள் ! பெண்கள் கடிதம்


கத்தோலிக்க பாதிரியார்களை திருமணம் செய்ய அனுமதிக்கும்படி போப்
ஆண்டவருக்கு பெண்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை. இந்த பழக்கம் கடந்த 1000 ஆண்டகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இத்தாலியை சேர்ந்த 26 பெண்கள் போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நாங்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவ மத பாதிரியார்களை காதலிக்கிறோம். அவர்களும் எங்களை மனமாற விரும்புகின்றனர்.

சீமாந்திரா தலைநகர் விஜயவாடா:

சீமாந்திரா மாநில சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் அமோக வெற்றி
பெற்று ஆட்சியை பிடித்தது. தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு சீமாந்திரா மாநிலத்தின் முதல்–மந்திரியாக பதவி ஏற்க உள்ளார்.
ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதால் அங்கு பதவி ஏற்க சந்திரபாபுநாயுடு விரும்புவில்லை. சீமாந்திராவில் உள்ள விஜயவாடாவில் பதவி ஏற்க திட்டமிட்டு உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
பதவி ஏற்றதும் குண்டூரில் அமைக்கப்படும் அலுவலகத்தில் முதல்–அமைச்சர் பொறுப்பை கவனிக்க திட்டமிட்டு உள்ளார். இதற்கிடையே சீமாந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்கும் பணியில் மத்திய அரசு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். இங்கு குழுவினர் பல்வேறு நகரங்களை பார்வையிட்டது.
புதிய தெலுங்கான மாநிலம் உருவானதே காங்கிரசின் தயவால்தான் . ஆனால் அதன் பயனை முழுக்க முழுக்க பெற்றது சந்திரசேகரராவும் சந்திர பாபு நாயுடுவும்தான் , எல்லாப்பக்கத்திலும் இடிவாங்கி நொந்து போனது காங்கிரஸ். கிட்ட தட்ட இலங்கை விடயத்திலும் தமிழர்களுக்கு உண்மையில் நன்மை செய்தும்  துன்பம் தான் வாங்கியது காங்கிரஸ். . தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்களை வளர்த்து கொண்டார்களே தவிர கட்சியின் சாதனைகளை மக்களிடம் சரியாக கூறவே இல்லை, எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்

கேரளாவில் எல்லா எம்பிக்களும் நரேந்திர மோடிக்கு எதிர் அணியில்!

திருவனந்தபுரம்: கேரளாவில் வெற்றி பெற்ற எந்த ஒரு எம்பியும் நரேந்திர மோடிக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்பதால் கேரளத்து குரல் நாடாளுமன்றத்தில் தனித்து, ஆட்சியாளர்களுக்கு எதிர்த்து ஒலிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அந்த மாநிலத்தில் வென்ற இடதுசாரிகளும் காங்கிரசும் பாஜகவை எந்த நிலையிலும் ஆதரிக்கப் போவதில்லை.  நேர் எதிர் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் மட்டும்தான் பாஜக தனது கணக்கை துவங்கவில்லை. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பாஜகவோ அல்லது அதன் ஆதரவு கட்சிகளோ எம்.பிக்களை பெற்றன. ஆனால் நேர் எதிர்மாறாக கேரளாவில் உள்ள 20 இடங்களிலும் பாஜகவுக்கு எதிர் நிலைப்பாட்டை கொண்டுள்ள கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன. பாஜகவுக்கு முட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், இடது சாரி ஆதரவு பெற்ற சுயேச்சைகள் இரு இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2 இடங்களிலும், புரட்சிகர சமூக கட்சி, கேரளா காங்கிரஸ் (மணி), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பல தனித்தன்மைகள் இந்திய அளவில் கர்நாடகாவில் அதிகபட்சமாக 9 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது, அதற்கு அடுத்த பெரிய வெற்றி அக்கட்சிக்கு கேரளாவில்தான் கிடைத்துள்ளது. அதேபோல ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கேரளாவை சேர்ந்த 6 பேர் அமைச்சர்களாக இருந்தனர். அவர்கள் அனைவருமே மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல வெற்றி பெறவில்லை.
tamil.oneindia.in

தேர்தலில் அதிமுகவுக்கு போதிய வாக்குகளை வாங்கி தர தவறிய 3 அமைச்சர்களுக்கு கல்தா !

தமிழக கவர்னர் மாளிகையில் இருந்து நேற்று
மாலை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
அமைச்சரவை மாற்றம்
தமிழக அமைச்சரவையில் இருந்து வேளாண்மைத்துறை அமைச்சர் எஸ்.தாமோதரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால், வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரை நீக்க வேண்டும் என்ற முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையை தமிழக கவர்னர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதுபோல, அமைச்சரவையில் கலசபாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி, அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.கோகுல இந்திரா ஆகியோரை சேர்க்க வேண்டும் என்ற முதல்–அமைச்சரின் பரிந்துரையை கவர்னர் ஏற்றுக்கொண்டுள்ளார்.  முழுக்க முழுக்க ஒரு கட்டை பஞ்சாயத்து இயக்கம் மாதிரியே அதிமுக எப்போதும்  இயங்கி வந்துள்ளது , அடிமைகள் கூடாரம் 

ராஜ்யசபாவில் மோடி அரசுக்கு நிலைமை தலைகீழாக உள்ளது.

புதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், ராஜ்யசபாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த அந்த சபையில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தான் அதிக, எம்.பி.,க்கள் உள்ளனர்.மொத்தம், 543 லோக்சபா எம்பி.,க் களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த, பா.ஜ., 282 இடங்களைப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. அதன் கூட்டணி கட்சிகள், 53 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம், 335 ஆகியுள்ளது. அதே நேரத்தில், கடந்த 2009 தேர்தலில், 206 இடங்களில் வெற்றி பெற்றிருந்த, சோனியா தலைமையிலான காங்கிரஸ், இந்த முறை, 44 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகள், 15 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 59 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. பா ஜ க தன்னிச்சையான முடிவினை எடுக்கவே இயலாது ! காங்கிரஸ் ஆட்சிக்கு வெறும் அரசியல் நோக்கத்தோடு முட்டு கட்டைகள் போட்டதன் பலனை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது

அழகிரி மீண்டும் தி.மு.க.,வில் சேருவதை தட்டுக்க ஸ்டாலின் ராஜினாமா நாடகம் !

தேர்தல் தோல்விக்கு பின், தி.மு.க.,வில் திடீர் ராஜினாமா செய்திகள்
பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சியின் பொருளாளர், இளைஞரணி செயலர் போன்ற பதவிகளில் இருந்து ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக, நேற்று முன்தினம் வெளியான செய்தியைத் தொடர்ந்து, கட்சியின் மாவட்டச் செயலர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளதாக, நேற்று செய்தி வெளியானது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 35 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க.,வால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. தலித் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் அமைத்திருந்த கூட்டணியும், தி.மு.க.,வுக்கு கை கொடுக்கவில்லை. மிக மோசமான ஒரு தோல்வியை, 91க்கு பின் இக்கட்சி சந்தித்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை வளைக்க அ.தி.மு.க., - திரிணமுல் முயற்சி?

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற, அ.தி.மு.க.,வும், திரிணமுல் காங்.,கும், ஒரு குழுவாக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை, திரிணமுல் தரப்பு உறுதி செய்தாலும், 'இது தொடர்பாக, இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என்றும் தெரிவித்து உள்ளது.< லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு, பெரும்பான்மை இடங்கள் கிடைத்துள்ளன. காங்., படுதோல்வியை சந்தித்து உள்ளது. லோக்சபாவில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறும் அளவுக்கு கூட, எம்.பி.,க்கள் பலம், காங்கிரசுக்கு கிடைக்கவில்லை. மொத்த இடங்களில், குறைந்தது, 10 சதவீத எம்.பி.,க்களை பெறும் கட்சிக்குத் தான், எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும். காங்கிரசுக்கு, 44 எம்.பி.,க்கள் மட்டுமே இருப்பதால், இந்த விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி, லோக்சபாவில், மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி. காபினட் அந்தஸ்துடன் கூடிய அந்த பதவி, எந்த கட்சிக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ., காங்கிரசுக்கு அடுத்ததாக, அ.தி.மு.க., 37 இடங்களையும், திரிணமுல் காங்., 34 இடங்களையும் வைத்துள்ளன. இரு கட்சிகளும் இணைந்து, ஒரு குழுவாக செயல்பட்டால், 71 இடங்கள் கிடைக்கும். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்காக, இந்த இரு கட்சிகளும், இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

திங்கள், 19 மே, 2014

நாட்டின் 70% மக்கள் பாஜக பக்கம் இல்லை.. பாஜக- 30 % மட்டுமே பெற்றது !

டெல்லி: 10 ஆண்டுகால காங்கிரஸ் எதிர்ப்பு அலை பலமாக வீசிவிட்டது.. இந்த எதிர்ப்பு அலையை மோடி சுனாமியாக மாற்றிய பாரதிய ஜனதா அதன் முன்னுள்ள விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் 'சித்தாந்தங்களை' நிறைவேற்ற முனைந்தால் காங்கிரஸுக்கு நேர்ந்த கதிதான் நாளை அக்கட்சிக்கு ஏற்படும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்த 10 ஆண்டுகாலம் நாட்டை ஆண்டது. அக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் 100 நாள் வேலைத்திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் போன்ற ஒருசில நடவடிக்கைகள்தான் மக்களுக்கு பயனைத் தந்தது.
அதே நேரத்தில் இப்படியான சட்டங்களை இயற்றிவிட்டு கண்மூடித்தனமாக விலைவாசி உயர்வுக்கு வழியையும் ஏற்படுத்தியது காங்கிரஸ் அரசு. அதனால்தான் மக்கள் கோபத்தில் கொந்தளித்துப் போயினர். அந்த கோப அலைதான் வலுவான மாற்றம் தேவை என பாரதிய ஜனதாவுக்கு வாக்குகளாகவும் மாறியது.

தி.மு.க., கோட்டையை அசைத்த அதிகார மையம் !

ஊட்டி:கோடநாடு எஸ்டேட் பங்களாவை, அதிகார மையமாக வைத்து, ஜெயலலிதா வகுத்த தேர்தல் வியூகம், தி.மு.க.,வின் கோட்டையான நீலகிரியை அசைத்து பார்த்துள்ளது. இது, தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர் சட்டசபை தொகுதிகள், தி.மு.க.,வின் செல்வாக்கு மிகுந்த தொகுதிகள். மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் ஆகியவை அ.தி.மு.க., செல்வாக்கு பெற்ற தொகுதிகள். இந்த அடிப்படையில் தான், அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுத்து வந்தன.அதிகார மையமான கோடநாடு<முதல்வர் ஜெ., கோடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்தபடியே நீலகிரி லோக்சபா தொகுதியை தக்க வைக்க, பல்வேறு வியூகங்களை வகுத்தார். எத்தனை வியூகம் அமைத்தாலும் திருமங்கலம் பார்முலா + 144 உபயோகப்படுத்தியதால்த்தான் வெற்றி என்று என்னும் நிலை உள்ளது. வெற்றிக்கு உதவிய ஒரு முக்கிய புள்ளிக்கு இன்னோவா இலவசமாக வழங்கியதாக வத்திகள் உலா வருவதும் அதை உறுதி செய்கின்றன...என்னதான் முயற்சி செய்தாலும் பிரதமர் பதவி கை நழுவிப்போனதில் அம்மாவுக்கு பெரிய ஏமாற்றம்தான்..

ஞாயிறு, 18 மே, 2014

ஸ்டாலினின் ராஜினாமைவை ஏற்க கழகம் மறுப்பு ! வழமை போல சகல பதவிகளிலும் ஸ்டாலின் நாடகம் தொடரும்

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக திமுக வட்டாரம் தெரிவித்துள்ளது. லோக்சபா தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு பொறுப்பேற்று அதற்குக் காரணமானவர்கள் விலக வேண்டும் என்று மு.க.அழகிரி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இன்று மதியம் தகவல் வெளியானது. நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் 35ல் திமுக போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலவில்லை. ''விலகுகிறேன்'' .. பரபரப்பேற்படுத்திய ஸ்டாலின்.. சில மணி நேரங்களில் முடிவு வாபஸ்! இதனால், இத்தோல்விக்கு முழுப் பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை திமுக தலைவர் கருணாநிதியிடம் அளித்ததாகவும், ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள கருணாநிதி மறுத்ததாகவும் செய்திகள் தெரிவித்தன. ஆனால், இது தொடர்பாக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இதற்கிடையே சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, இத்தேர்தலில் திமுக தோல்விக்குக் காரணமானவர்கள் விலக வேண்டும் என கோரியிருந்த நிலையில் ஸ்டாலின் விலகல் குறித்த வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கூட்டியது. இதனால், மீண்டும் கட்சிக்குள் அழகிரி அழைக்கப்படுவாரா என்ற கருத்தும் நிலவியது. இதனால் ஸ்டாலின் வீட்டு வாசலில் செய்தியாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், கட்சித் தலைமை ஏற்றுக் கொள்ளாததால் ஸ்டாலினின் ராஜினாமா வாபஸ் பெறப்பட்டதாக கட்சி துணைப் பொதுச் செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார். என்ன பொறுப்பில் இருக்கிறார் ஸ்டாலின்? திமுக இளைஞர் அணி ஸ்டாலின் வசம்தான் நீண்ட காலமாக இருந்து வருகிறது. கட்சியின் பொருளாளராகவும் அவர் முக்கியப் பொறுப்பு வகிக்கிறார். இந்த இரு பொறுப்புகளையும் ராஜினாமா செய்வதாகத்தான் தனது கடிதத்தில் கூறியிருந்தாராம் ஸ்டாலின். இந்தத் தேர்தலில் ஸ்டாலின் பொறுப்பு என்று பார்த்தால் கூட்டணி குறித்த திட்டமிடல், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பிரசார உத்திகள், பிரசாரம் என அனைத்திலுமே ஸ்டாலின்தான் முக்கியப் பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவரின் அறிவுறுத்தலையும், கட்சித் தொண்டர்களின் கோரிக்கையையும் தொடர்ந்து ராஜினாமா முடிவை கட்சித் தலைமையிடம் வலியுறுத்தப் போவதில்லை என ஸ்டாலின் தீர்மானித்துள்ளதாக துரை முருகன் தெரிவித்துள்ளார்.
tamil.oneindia.in

பாஜக தனித்தே மந்திரி சபை அமைக்கும் ! கூட்டணி கட்சிகளுக்கு பெப்பே ! அந்த 13 நாட்கள் வரலாற்றில் மறக்க கூடியதா ?

பாஜக தனித்தே மந்திரி சபை அமைக்கும் ! கூட்டணிகளுக்கு பெப்பே ! வாஜ்பாய் ஜெயாவிடம் கெஞ்சிய அந்த 13 நாட்கள்  பாஜாகவால்  மறக்க கூடியதா?
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 330 இடங்களை
கைப்பற்றி உள்ளது. பாஜக மட்டும் 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இந்த நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை டெல்-யில் நடைபெறும் பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் நரேந்திர மோடி முறைப்படி பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார். இதனைத் தொடர்ந்து அன்று மாலை நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்திலும், அக்கூட்டணியின் நாடாளுமன்றத் தலைவராக நரேந்திர மோடி தெர்வு செய்யப்பட உள்ளார். அதற்கு பிறகு நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பதவி ஏற்கும். இதனிடையே, மத்தியில் நரேந்திர மோடி தலைமையில அமையும் புதிய அரசில் கூட்டணி கட்சிகளை சேர்ப்பதில்லை என்று பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யும்போது கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று பாஜக உயர்மட்டத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் பாஜக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. (பாஜக 282, சிவசேனா 18, தெலுங்கு தேசம் 16, லோக்ஜன சக்தி 6, அகாலிதளம் 4, அப்னாதளம் 2, என்.ஆர்.காங்கிரஸ் 1, பா.ம.க. 1) tamil.oneindia.in

ஸ்டாலின் அனைத்து பதவியில் இருந்தும் ராஜினாமா.! தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கலைஞரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்



பாராளுமன்ற தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியை தழுவின. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு தலைமை தாங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
தி.மு.க. வேட்பாளர் தேர்வில் அவர் தலையிட்டதாகவும் கூட்டணி முயற்சியில் ஈடுபடவில்லை என்றும் அதனால் தி.மு.க. தோல்வியை தழுவியதாகவும் புகார் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து தி.மு.க. தோல்விக்கு பொறுப்பு ஏற்று அனைத்து பதவியில் இருந்தும் ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.
இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். மு.க.ஸ்டாலின் தி.மு.க. பொருளாளராகவும், இளைஞர் அணி செயலாளராகவும் இருந்தார். தேர்தல் பணிக்குழுவில் முக்கிய இடம் வகித்தார் maalaimalar.com/ .மிகவும் வரவேற்கதக்க ஒரு நடவடிக்கை  , கட்சியை பலப்படுத்த அழகிரியுடனும் இதர குஷ்பூ போன்றவர்களிடமும் சமரசமாக வேண்டும் 
  

மாயன் காலண்டரின் அர்த்தம் நாம் புரிந்துகொள்ளமுடியாத தாத்பரியம் அதற்குள் மறைந்திருக்கிறதோ?

mayat4பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 36
நாம் என்ன எண்முறை பயன்படுத்துகிறோம்? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10.
இவற்றின் முன்னோடியாக இந்தியா வழிகாட்டிய காரணத்தால், இந்த எண்கள் இந்து அராபிய எண்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த எண் முறையின் பெயர் தசாம்ச முறை (Decimal System). தசம் என்றால் பத்து. அதாவது, இந்தக் கணித முறை தச அடிப்படையைக் கொண்டது. அது என்ன தச அடிப்படை?
உதாரணமாக 2875 என்ற எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். இடமிருந்து வலமாக எண்களைப் பாருங்கள்.