சனி, 30 நவம்பர், 2019

இந்தியாவின் மொத்த எம் எல் ஏக்கள் 4139.. பாஜகவின் மொத்த எம் எல் ஏக்கள் 1516 .

Venkat Ramanujam : தென் இந்தியா + மராட்டி + ஒடிசா + வங்கம் எல்லாம்
சேர்ந்தால் வரும் #GDP , இந்தியாவின் 71% GDP ஆகும் ..
படிப்பறிவு இல்லா ஹிந்தி மொழி மட்டும் பேசும் மாநிலங்கள் சுமையை திராவிட + மராட்டிய + ஒடிசா + வங்க மா நிலங்கள் சுமக்கா விட்டால் .. ஹிந்தி பேசும் மாநிலங்கள் சோமாலியவை விட கேவலமாக இருக்கும் .. இந்த லட்சணத்திலே #Bjp #RSS குஸ்மாக்களுக்கு ஹிந்தி பரப்ப ஆசையோ ஆசை

நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்

பாஜகவில் இணைந்தார் நடிகர் ராதாரவிமாலைமலர் : நடிகர் ராதாரவி இன்று பாஜகவில் இணைந்தார். கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். சென்னை: திமுகவில் இருந்த நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ராதாரவி, கடந்த ஜூன் மாதம் அதிமுகவில் இணைந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

கீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மரணம்: அறிக்கை கேட்கும் ஆணையம்!

கீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மரணம்: அறிக்கை கேட்கும் ஆணையம்!மின்னம்பலம் : கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இறந்தவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யமாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில், கடந்த 10 நாட்களில் மட்டும் நான்கு பேர், பல்வேறு காரணங்களால் மரணமடைந்துள்ளனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, நோயாளிகளை வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியானதுஇதனை அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்து கொண்டது.

ஆவணங்களை ஒப்படைக்க முடியாது: பொன்.மாணிக்கவேல்

ஆவணங்களை ஒப்படைக்க முடியாது: பொன்.மாணிக்கவேல்மின்னம்பலம் : கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்க முடியாது என்று தமிழக அரசின் அரசாணைக்குப் பொன்.மாணிக்கவேல் பதில் தெரிவித்துள்ளார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் 2018ல் சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் சிலை கடத்தல் சிறப்புப் பிரிவுக்கு அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறி அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.அதுபோன்று பொன் மாணிக்கவேலுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டி வந்தது. இதற்கிடையில் 30ஆம் தேதியுடன் தனது பணிக்காலம் முடிவடைவதையொட்டி, பணிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதைவிசாரித்த நீதிமன்றம் வழக்கை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுபோன்று அவரது பணி நீட்டிப்புக்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அனகோண்டாவும் குண்டு மாங்காயும் 🏃🏃🏃

Devi Somasundaram : ஸ்ரீ ரெட்டி ஒரு பேட்டில விஷாலோடது அனகோண்டா
போல இருக்கும்னு சொன்னதா ஒரு வீடியோ சுத்துது .
ஸ்ரீ ரெட்டிக்கு அனகோண்டா மேல என்ன கோபம்னு தெரில.
அவர் அனகோண்டாவையும் பார்த்ததில்லன்னு தெரியுது .😬.அவ்வளவு பெரிய பெனிஸ் எவ்லோ கஷ்ட்டம்னு ஆண்கள கேட்டா தான் தெரியும் 😬
ஏன் விஷாலை இழுத்தார்ன்னு தெரில ..உயரமா இருப்பவர்க்கு பெரிசா தான் இருக்கும்ன்ற நம்பிக்கைல சொன்னாரான்னு புரியல . ஆங்கிலததில் ஒரு சொற்றொடர் உண்டு . "big in the shoes = big in the pants...ஆனா அதுவே தவறான வாதம்னு நிறைய ரிசர்ச் வந்தாச்சு.
https://www.google.com/…/big-hands-big-feet-what-actually-d…
ஒப்பிட்டு அளவில் உறுப்பு பெரிசா இருக்கும்னு சொல்லப்படும் மெக்ஸிகன் ஆண்களின் உயரம் மிக சராசரியானது .
பெரிசா இருப்பதால் அது சரியானதுன்னு அர்த்தமில்லை ..உலகின் ஆவரேஜ் பெனிஸ் சைஸ்ல இந்தியா ,சீனா, இந்தோனேஷியா போன்ற கிழக்காசிய நாடுகள் தான் மிகச் சிறிய பெனிஸை கொண்டது ( இந்திய ஆவ்ரேஜ் சைஸ் 4 இன்ச், சீனா 4.5 இன்ச்) .
இந்த நாடுகளில் தான் அதிக மக்கள் தொகை..( புள்ளை பெத்துகறது தான் ஆண்மையின் அடையாளமான்னு தனி விவாதமா பேசலாம் ) .
சைஸ் பெரிசுன்னு சொல்லப்படும் வட அமெரிக்க, காங்கோ, தென் ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் தொகை குறைவு .
( நம்ம ஆட்களுக்கு செக்ஸ் என்பது வெறும் புள்ள பெத்துகிற விஷயம் தான்..கொண்டாடத்துகானது என்பதில் எந்த தெளிவும் கிடையாது ) ..
சோ ..சைஸ் என்பது ஆண்மையின் அடையாளம் இல்லை ..பெரிய சைஸ் வச்சுகிட்டு முட்டி போட்டு பிரேயர் செய்ய முடிலன்னு பொலம்பும் கதைகளாம் இருக்கு .

கோவையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவியை 4 நண்பர்கள் பாலியல் கொடுமை

அருள்குமார்- நக்கீரன் : கோவையில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அதேபகுதியில் உள்ள பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ராகுல்(22), பிரகாஷ்(22),நாராயணமூர்த்தி(32),கார்த்திகேயன்(22) ஆகியோருடன் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே 26.11.2019 அன்று பிறந்தநாள் கொண்டாடுவதற்காக வெளியில் சென்றனர். அங்கு 4 பேரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய சிறுமி சோர்வாக இருப்பதைக் கண்ட பெற்றோர் விசாரித்தபோது, தன்னை 4 பேர் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியது குறித்து கூறினார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ஆர்எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுல் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
 
 Veerakumar -   /tamil.oneindia.com : கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அப்பகுதியிலுள்ள ஒரு பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ராகுல் (22), பிரகாஷ் (22), நாராயணமூர்த்தி (32), கார்த்திகேயன் (22) போன்ற வயதில் மூத்த வாலிபர்களுடன், அந்த மாணவிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் சில தினங்கள் முன்பாக, நண்பரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக அந்த மாணவி கூறியுள்ளார்.

மகாராஷ்டிர உத்தவ் தாக்கரே அரசு சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி


மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி
பட்னாவிஸ்மாலைமலர் :மகாராஷ்டிர சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து “மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி” என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சிக்கு வந்துள்ளன.சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் முதல்- மந்திரியாக பதவி ஏற்றார். அவருடன் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
உத்தவ் தாக்கரே சட்ட சபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை வரும் 3-ந்தேதிக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு மூலம் நிரூபித்து காட்ட வேண்டும் என்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டடார். அதன்படி மகாராஷ்டிர மாநில சட்டசபையின் 2 நாள் சிறப்பு கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட இடத்திலேயே இன்னொரு பெண் உடல் கண்டெடுப்பு


tamil.oneindia.com - shyamsundar : ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட இடத்திலேயே இன்னொரு பெண்ணின் உடல் கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த 26 நிரம்பிய கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் போலீசார் சரியாக 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். கொலையாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
 ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து, அதன் பின் அந்த பெண்ணின் மூக்கை மூடி கொலை செய்து, பின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இருக்கும் பாலத்தின் கீழ் வைத்து எரித்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவாவிலும் ஆட்சி மாற்றம் .. சிவசேனா தலைவர் அறிவிப்பால் பரபரப்பு

webdunia.com : இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்
தனிப்பெரும் கட்சியாக பாஜக நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. இருப்பினும் அந்த கட்சி மாநிலங்களில் ஒவ்வொன்றாக ஆட்சியை இழந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
>சமீபத்தில் மகாராஷ்டிராவில் ஆட்சியை இழந்த பாஜக, அடுத்ததாக கோவா மாநிலத்திலும் ஆட்சியில் இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
கோவா மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டமன்ற தொகுதிகளில் 13 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக அமித்ஷாவின் மேஜிக்கால் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவு தற்போது ஆட்சி அமைத்து வருகிறது
இந்த நிலையில் 17 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு

ஜிடிபி 4.5%; வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாது: மன்மோகன் சிங்

ஜிடிபி 4.5%; வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாது: மன்மோகன் சிங் மின்னம்பலம் :  மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் வந்தபின், நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக நிறைய சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ள போதிலும், பொருளாதார சரிவு இப்போதைக்கு மீள்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிலையில் 2ஆவது காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்த விவரங்கள் நேற்று(நவம்பர் 29) வெளியிடப்பட்டன.
2ஆவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த காலாண்டிற்கான ஜிடிபி ஏற்கனவே 5 சதவீம் என்ற நிலையில் இருந்தது. அதே சமயம், கடந்த ஆண்டு இதே 2ஆவது காலாண்டில் ஜிடிபி 6.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிலக்கரி உற்பத்தி துறையில் வளர்ச்சி விகிதம் 17.6 சதவீதம் குறைந்துள்ளது.

லண்டனில் பயங்கரவாதி தாக்குதல் .. இருவர் உயிரிழப்பு .. பலர் காயம்

தினமலர் : லண்டன் : லண்டன் பிரிட்ஜ் அருகே பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.
இங்கிலாந்தில் லண்டன் பிரிட்ஜ் பகுதியில் பகல் 2 மணியளவில் மர்மநபர் ஒருவர், அங்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்களை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். அப்போது சிலர் அந்த மர்ம நபர்களை தாக்கி, மர்ம நபர் பொதுமக்களை தாக்குவதை தடுத்தனர். இந்த தாக்குதலில் 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீசார் மர்ம நபரை, சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் போலி பாதுகாப்பு கவசங்களும், போலி வெடிகுண்டுகளும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த நபர் எந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவற்றில் ஏதாவது ஒரு விடயமாவது தவறு என்று நிருபிக்க முடியுமா? சமுக வலையில் ஒரு சவால்!

Suresh Kumar Sundaram : · ஏதாவது ஒரு point தப்பு என்று நிருபித்தால் பரிசு நிச்சயம்...குறிப்பாக அவுஸ்திரேலிய ஒறவு மற்றும் சிங்கள தமிழர்கள் நிருபித்தால்  இலவச சினிமா டிக்கெட் பரிசு
Karuththu Kannaayiram : கோயம்பேடு பேருந்து நிலையம் வேண்டுமென்று எந்த சென்னை குடிமகனும் கொடி பிடிக்கவில்லை,
👍மெட்ரோ ரயில் வேண்டுமென்று யாரும் கனவு காணவில்லை,
 👍வள்ளுவருக்கு கோட்டமும், சிலையும் வேண்டுமென்று எந்த தமிழ் ஆர்வலரும், குடிமகனும் குரல் கொடுக்கவில்லை,
👍கணினி என்பதைக் கேள்விபடுவதற்கு முன்னதாகவே டைடல் பார்க் வேண்டுமென எந்த மாணவர் சங்கமும் கொடி பிடிக்கவில்லை.
👍தங்களது கிராம சாலைகள் சிமென்ட்டில் அமைக்கப்படும் என எந்த கிராமவாசியும் கனவு கூட கண்டதில்லை,
👍பள்ளியில் படிக்க தம்பிள்ளைகளை இலவசமாகவே பேருந்தில் அரசு அனுப்பும் என பெற்றோர் நினைத்துக் கூட பார்த்ததில்லை,
 👍தம் நிலத்திற்கு தண்ணீர பாய்ச்ச அரசே இலவச மின்சாரம் தரும் என விவசாயி கனவு கண்டதில்லை தம் பொருளை தானே விற்க உழவர் சந்தை வரும்,
 👉பட்டிக்காட்டிற்கும் மினிபஸ் வரும்,
👉நாமும் படித்து அமெரிக்காவில் வேலை பார்ப்போம் என எந்த கிராம மாணவனும் கனவு காணவில்லை,

மும்பையில் மு.க.ஸ்டாலின் – அதிரும் வட இந்திய அரசியல்* வீடியோ


மகாராஷ்டிரா முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்ற விழாவில் பங்கேற்க, தமிழ்நாட்டில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் விழாவில் பங்கேற்றதும், மும்பையில் அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பும் பாஜகவை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை சென்ற ஸ்டாலினுக்கு சிவசேனா கட்சியினர் மிக சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். மேளதாளம் முழங்க, விண்ணதிர கோஷமிட்டு ஸ்டாலினை வரவேற்றனர். வெளி மாநில அரசியல் தலைவருக்கு இந்தளவு வரவேற்பு கிடைத்திருப்பது இதுவே முதல்முறை.
பிரதமர் மோடி உள்பட தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கு கூட இந்தளவுக்கு மும்பை மாநில கட்சிகள் வரவேற்பளித்தது இல்லை.
இதற்குமுன், சிவசேனா - திமுக இடையில் பெரிய அளவில் உறவு எதுவும் இருந்தது கிடையாது. தற்போது பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியில் இரண்டு கட்சிகளும் இணைந்துள்ளன.
தற்போது லோக்சபாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுகதான். அதனால் திமுக தேசிய அளவில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. நேற்று உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவிலும் ஸ்டாலினுக்கு தனியாக மரியாதை அளிக்கப்பட்டது. ஸ்டாலினை சிவசேனா தனியாக கவனித்துக் கொண்டது.
அதனுடன் போட்டிப்போடும் வகையில் தேசியவாத காங்கிரஸ் வரவேற்பளித்து நெருக்கம் காட்டியது.

யாழ்ப்பாணத்தில் பார்பனீய ஜாதியும் மதமும் வேருன்றியது எப்படி? யாரால்?.

இந்துபோர்ட் ராசரத்தினம்
சேர் பொன்.ராமநாதன்
இலங்கை தமிழர்களின் அரசியல் 
கலாச்சாரம், சமுகவியைல்  என்பது
எல்லாம் ஒரு குறிப்பிட்ட வகைய சார்ந்தது  என கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் அப்படிஅல்ல!
வடமாகாண மக்களின் கலாச்சாரம் அரசியல் சார்ந்த சிந்தனையும் கிழக்குமாகாண மக்களின் நிலையும் சில வேறுபாடுகளை கொண்டிருக்கிறது.
சேர் பொன்அருணாசலம்
மலையக மக்களின் சிந்தனையானது முற்றிலும் வேறு ஒரு விதமாக இருக்கிறது .
மணி அய்யர்
எல்லோரும் தமிழர்கள்தான் என்றாலும் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன.
கிழக்குமாகாணம் ஓரளவு பல்லின மக்கள் வாழும் இடமாக இருப்பதுவும்,
வடக்கு மாகாணம் பெருமளவு தமிழர்கள் மட்டுமே வாழும் இடமாக  இருப்பதுவும் கவனத்தில் கொள்ளவேண்டிய
விடயமாகும்.
மலையக மக்கள் வடக்கு மக்களோடு தொடர்புகள் அற்ற நிலையில் இருப்பது வெறுமனே ஒரு பூகோள ரீதியான விடயம் மட்டும் அல்ல.
இங்கேதான் வடமாகாண மக்களின் ஜாதீய மதவாத சிந்தனையின் பரிணாமம்  பற்றி கவனத்தில் கொள்ளவேண்டியதாக உள்ளது .
இதன் பின்னணியில் நடந்து முடிந்த போராட்டத்தின் பல  தன்மைகளை உற்று நோக்கவேண்டி உள்ளது.
விடுதலை போராட்டத்தை பாசிச சக்திகள் ஹைஜாக் பண்ணி முழுக்க முழுக்க ஒரு பாசிச வெறியாட்டமாக ஆடி முடித்த வரலாறு ஒரு பெரிய பாடத்தை உலகுக்கு வழங்கி இருக்கிறது
ஜாதி மத பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உள்ளகத்தே ஒழித்து மறைத்து கொண்டு எழும் குறுந்தேசிய வாதம் எப்படி இருக்கும் என்பதை இது காட்டுகிறது.
இந்த பாசிச சக்திகளின் உருவாக்கம் வளர்ச்சியானது  வடமாகாண தமிழர்களின் வாழ்வியலின் ஒரு அரசியல் பரிணாம வளர்சியாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது.

வெள்ளி, 29 நவம்பர், 2019

BBC :தமிழக மீனவர் படகுகள்:விடுவிக்கப்படும் ..ஜனாதிபதி கோத்தபாய அறிவிப்பு! நல்ல நிலையில் கிடைக்குமா?


இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து நடத்திய பேச்சுவார்தைக்கு பின் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில், இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட இந்திய மீனவர்களின் அனைத்து படகுகளும் விடுவிக்கப்படும் என அறிவித்தார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு படகை இழந்த விசைப்படகு உரிமையாளர் அருளானந்தம் உடன் பிபிசி தமிழ் பேசியது.
தனக்கு நேர்ந்த அனுபவங்களை விவரிக்கிறார் அருளானந்தம்.
என்னுடைய படகு 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து ஐந்து மீனவர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றது. அன்று இரவு சுமார் 11.30 மணியளவில் சர்வதேச கடல் எல்லை அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படை எனது விசைபடகையும் படகில் இருந்த மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்தாக வழக்கு பதிவு செய்து இலங்கை யாழ்பாணம் அழைத்துச் சென்றனர்."

1 லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 குழந்தைகளுக்கு வழங்கும் உத்தர பிரதேச பாஜக அரசு வீடியோ


தினமணி : சோன்பத்ரா: உத்தரபிரதேச மாநில பள்ளி ஒன்றில் ஒரு லிட்டர் பாலில் நீர் கலந்து 81 குழந்தைகளுக்கு விநியோகம் செய்துள்ள பரிதாபம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டம் மாநிலத்தின் வளர்ச்சி குறைந்த பகுதிகளில் ஒன்றாகும். இங்கு பல குடும்பங்கள் வறுமையின் பிடியில் உள்ளதால், மதிய உணவு திட்டத்தின் கீழ் ஒரு வேளை உணவாவது கிடைக்கும் என்பதற்காக குழந்தைகள் அரசு பள்ளிகளுக்கு செல்கின்றன.
இங்குள்ள சோப்பன் பகுதியில் உள்ள அரசு முதன்மை பள்ளியில் 171 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் குறிப்பிட்ட பள்ளியில் ஒரு லிட்டர் பாலில் நீர் கலந்து 81 குழந்தைகளுக்கு விநியோகம் செய்துள்ள பரிதாபம் நிகழ்ந்துள்ளது. பசியுடன் பள்ளிக்கு வந்த 81 பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு சமைக்கும் பெண் ஊழியர், 1 லிட்டர் பாலை அலுமினிய வாளியில் ஊற்றி அதில் தண்ணீர் கலந்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்த விடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

6 வருடங்களில் இல்லாத இமாலய பொருளாதார சரிவு.. நாட்டின் ஜிடிபி 4.5% ஆக குறைந்தது

என்ன பேசினார் tamil.oneindia.com - shyamsundar : டெல்லி: நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபியில் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது.
இந்தியா பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக நிறைய சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது. ஆனால் இந்த பொருளாதார சரிவு இப்போதைக்கு மீள்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
ஆட்டோமொபைல் துறையில் பலர் வேலையை இழந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி மோசமான சரிவை சந்தித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த காலாண்டிற்கான ஜிடிபி ஏற்கனவே 5% என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவே 6 ஆண்டுகளில் மிக குறைவான ஜிடிபி ஆகும். தற்போது 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த வருடம் இதே இரண்டாவது காலாண்டில் ஜிடிபி 6.9% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வருடம் மோசமான வீழ்ச்சியை அடைந்துள்ளது.

இலங்கைக்கு 400 மில்லியன் டாலர்கள் கடனாகவும் ,50 மில்லியன் டாலர்கள் அன்பளிப்பாகவும் இந்தியா வழங்கியது


மின்னம்பலம் : இலங்கை அதிபராகப் பதவியேற்றதும் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக டெல்லி வந்த கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு இன்று (நவம்பர் 29) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தனர்.
கோத்தயப சீனாவுக்கு ஆதரவானவர் என்ற பிம்பம் இருக்கும் நிலையில், அவர் தேர்தலில் வெற்றிபெற்ற சில நாட்களிலேயே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கரை கொழும்புவுக்கு அனுப்பிவைத்த மோடி, கோத்தபயவை முதலில் இந்தியாவுக்கு வரச் சொல்லுங்கள் என்றும் சொல்லியனுப்பினார்.
அதன்படியே முதலில் சீன பயணத்தைத் தவிர்த்துவிட்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார் கோத்தபய. இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட வரவேற்குப் பின் பேசிய கோத்தய ராஜபக்‌ஷே, "இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு வர விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டார்.
கோத்தபயவை வரவேற்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவுகளில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் வரவேற்றிருந்தார்.

பணமதிப்பழிப்பு: பாட்டிகளுக்கு உதவிய திருப்பூர் கலெக்டர.. பணத்தை மாற்றிக்கொள்ள வழி உள்ளதா...?

பணமதிப்பழிப்பு: பாட்டிகளுக்கு உதவிய திருப்பூர் கலெக்டர்மின்னம்பலம் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், பூமலூர் கிராமத்திலுள்ள கருப்பராயன் கோயில் பகுதியை சேர்ந்தவர் தங்கம்மாள் (வயது-82). கணவர் பெயர் பழனிசாமி. இவரது சகோதரி ரங்கம்மாள் (வயது-77). கணவர் பெயர் காளிமுத்து. கணவரை இழந்த இவர்களுக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் இருக்கின்றனர்.
வெளியுலகத் தொடர்புகள் இல்லாத சகோதரிகள் இருவரும் விவசாய கூலிவேலை செய்து வந்துள்ளனர். பணதிப்பழிப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளாக ரூ.46 ஆயிரத்தை இருவரும் சேமித்து வைத்திருந்தனர். காச நோய் தாக்குதலுக்கு உள்ளான ரங்கம்மாள் மருத்துவரிடம் சிகிச்சைக்காக சில நாட்களுக்கு முன் சென்றபோது, பத்திரமாக வைத்திருந்த பழைய நோட்டுகளை நீட்டியிருக்கிறார். அப்போதுதான் இந்த நோட்டுகள் செல்லாது என்பது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

இலங்கை சீனாவோடு இருந்த 99 ஆண்டுகள் ஹம்பந்தொட்டா துறைமுக ஒப்பந்தத்தை மீளப்பெற்றது!

கோத்தபய ராஜபக்‌ஷேசீனாஇலங்கை ஹம்பந்தொட்டாவிகடன் :ஹம்பந்தொட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகள் சீனாவுக்கு குத்தகைக்கு விட்டதை இலங்கை அரசு ரத்துசெய்துள்ளது. இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள ஹம்பந்தொட்டா, ஒரு வர்த்தக நகரமாகத் திகழ்ந்துவருகிறது. 2017-ம் ஆண்டு இலங்கையின் அதிபராக இருந்த மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவும், ஹம்பந்தொட்டாவில் இருக்கும் துறைமுகத்தை சுமார் 99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு குத்தகைக்கு விட்டனர்.
ஹம்பந்தொட்டாஹம்பந்தொட்டா துறைமுகத்தை குத்தகைக்கு விட்டால், அதை போர் கப்பல் நிறுத்தும் தளமாக சீனா பயன்படுத்தும். அதனால், இந்தியாவுக்கு அதிக அச்சுறுத்தல் ஏற்படும் என்று இலங்கையின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தது. ஆனால், இதை முற்றிலும் மறுத்த சீனா, ஹம்பந்தொட்டா துறைமுகம் இந்தியா -ஐரோப்பாவை இணைக்கும் பாலமாக இருக்கும். இதன்மூலம் வர்த்தகம் மேம்படுத்தப்படும், இலங்கையின் பொருளாதாரம் உயரும் என விளக்கம் அளித்தது.

ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பலாத்காரம் .. எரித்து கொலை ... நான்கு இளைஞர்கள் கைது!


தினமணி :ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், நான்கு இளைஞர்களை குற்றவாளிகள் என்று போலீஸ் கைது செய்துள்ளது. 26 வயதாகும் பொடுலா பிரியங்கா ரெட்டி கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். அவரது உடல் நேற்று தேசிய நெடுஞ்சாலை அருகே எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு கொலை செய்து, எரிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
புதன்கிழமை இரவு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வழியில் பிரியங்கா மாயமாகியுள்ளார். இந்த நிலையில், ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள பாலத்துக்கு அருகே அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கச்சிபௌலியில் உள்ள தனது மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பு அவர் டோண்டுப்பள்ளியில் உள்ள ஓஆர்ஆர் சுங்கச் சாவடி அருகே தனது வாகனத்தை நிறுத்துவது வழக்கம். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் போது, தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.

இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோவில் இடங்கொடுத்த அமரர் பிராசாத் ... ஒட்டகத்துக்கு இடங்கொடுத்த நிலை?


சாவித்திரி கண்ணன் : முதலில் நானும் எல்லோரையும் போல பாரதிராஜா தலைமையில் திரைதுறையினர் நேற்று பிரசாத் ஸ்டுடியோவை
முற்றுகையிட்ட சம்பவத்தை இளையராஜாவுக்கு
ஆதரவான போராட்டம் என்று தான் நினைத்தேன்.
அது மட்டுமின்றி,இவ்வளவு மரியாதைக்குரிய கலைஞர்கள் இதை மீடியாக்களை அழைத்து ரோட்டில் இறங்கியா அணுகவேண்டும்? தனிப்பட்ட முறையில் பாரத்திராஜா உள்ளிட்ட நான்கைந்து பேர் பிரசாத் ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனரை சந்தித்து சுமூகமாக பேசியிருக்கலாம் என்றும் நினைத்தேன்!
ஆனால்,பாரதிராஜா ஸ்டுடியோவிற்கு வெளியே மீடியாக்களிடம் பேசும் போது புரிந்து கொண்டேன் - அவர் நட்பு அடிப்படையில் இளையராஜாவிற்கு பரிந்து பேசிய அதே நேரத்தில், எல்.வி.பிரசாத் என்ற மாபெரும் திரை ஆளுமை இளையராஜாவை மதித்து அந்த இடத்தை பயன்படுத்த அனுமதித்தையும், அது இரு தரப்புக்குமே பெருமை சேர்த்ததையும் நெகிழ்வாக கூறினார்.
45 வருடங்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் தொழில் செய்துவிட்டு ஒரு கலைஞனை நீங்கள் மாற்று இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது செண்டிமெண்டாக அந்த இடத்தை இழப்பதற்கு அவர் மனம் இடம் தர மறுக்கிறது....!

தேர்தல் பத்திரம் என்னும் ஊழல் திமிங்கிலம்!

சிறப்புக் கட்டுரை: தேர்தல் பத்திரம் என்னும் ஊழல் திமிங்கிலம்!நா. ரகுநாத் - மின்னம்பலம் : இந்த வாரம் திங்கட்கிழமை ‘மின்ட்’ எனும் வணிகப் பத்திரிகையில் ‘எது நல்ல ஊழல், எது மோசமான ஊழல் என்பதை இந்தியா வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்’ என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டிருந்தது. ‘மக்கள் மனத்தில் பயமும் பீதியும் இருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இதுவே பொருளாதாரம் தொய்வு அடைந்துள்ளதற்குக் காரணம்’ என்று மன்மோகன்சிங் ‘தி இந்து’ பத்திரிகையில் சமீபத்தில் எழுதியிருந்தார். அவருக்குப் பதில் சொல்லும்விதமாகத் தொடங்கிய இந்த மின்ட் கட்டுரை, அரசு ஊழலுக்கு எதிராக எடுத்துக்கொண்டிருக்கும் கடும் நடவடிக்கைகள் இந்த பயத்துக்கும் பீதிக்கும் முக்கியக் காரணம் எனலாம் என்ற வாதத்தை முன்வைத்தது.
இதைப் படித்தவுடன் அடக்கிக்கொள்ள முடியாத அளவுக்குச் சிரிப்பு வரத் தொடங்கிவிட்டது. காரணம், அதற்கு முந்தைய நாள் இரவு, ஊழலை நிறுவனமயப்படுத்த இந்த மோடி அரசு, ‘சட்டப்படி’ மேற்கொண்ட அறமற்ற நடவடிக்கைகள் பற்றிய தொடர் ஒன்றை நான் படித்ததே. இந்திய ஜனநாயகத்தின் தலையாய அமைப்புகளான ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் மற்றும் நாடாளுமன்றம் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக Electoral Bonds எனப்படும் தேர்தல் பத்திரங்களை அவசர அவசரமாக 2017 பிப்ரவரி மாதம், மோடி அரசு அறிமுகப்படுத்தியது என்னும் தகவல் உட்பட, தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக இதுவரை வெளிவராத மேலும் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை Huffington Post என்னும் இணையப் பத்திரிகை சென்ற வாரம் திங்கள் முதல் சனி வரை ஆறு பாகங்களாக வெளியிட்டுள்ளது.

ஐடிவிங் மீது அதிருப்தியில் ஸ்டாலின்.... தெரிந்தது ஜால்ரா- தெரியாதது திமுக வரலாறு?

மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“திமுக தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் கலைஞர் இருந்தபோது முதல்வராக இருந்த எம்ஜிஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி., ஒவ்வொரு நாளும் டென்ஷனாக இருப்பது கலைஞரின் அறிக்கைக்காகத்தான். ’இன்னிக்கு என்ன ஏழரையைக் கூட்டப் போறாரோ?’ என்பதுதான் அவர்களின் அந்த டென்ஷனுக்குக் காரணம்.
ஏனெனில் ஆட்சியாளர்களுக்கு ஒரு நாள் சுமுகமாய் போனால் கூட அதற்கு பதிலாக நான்கு நாள் நம்மை அதாவது எதிர்க்கட்சித் தலைவர்களை சும்மா விடமாட்டார்கள் என்று கருதினார் கலைஞர். அதனால் அவர் தினமும் சந்திக்கும் திமுக பிரமுகர்கள், சக அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள், இலக்கிய நண்பர்கள், ஏன் குழந்தைகளிடமிருந்து கூட அடுத்த நாள் முரசொலியில் தான் எழுத வேண்டிய கடிதத்துக்கான அறிக்கைக்கான எரிபொருளைப் பெற்றுக்கொள்வார் கலைஞர்.
அதேபோல தான் வாசிக்கும் தினமணியிலோ, தினத்தந்தியிலோ ஏதாவது ஒரு செய்தி கண்ணை உறுத்துகிறது என்றால் காலை 5 மணியாக இருந்தாலும் கன்னியாகுமரியோ, காஷ்மீரோ போன் போட்டு அந்தப் பிரச்சினையின் முழுமையான கோணம் என்ன என்பதை அறிந்துகொள்வார். இதுதான் அன்று பிற்பகலோ, மாலையோ சில சமயங்களில் இரவோ முரசொலிக்கு மடலாக வரும். கலைஞரின் கடிதம் கைக்கு வந்த உடனேயே, அதன் தீவிரத்தையும் எக்ஸ்க்ளுசிவ் தனத்தையும் உணர்ந்து, ‘இந்தப் பிரச்சினைதான் இன்னும் ஒரு வாரத்துக்கு கோட்டையை உலுக்கப் போகுது’ என்று முரசொலி ஊழியர்களே முன்கூட்டி கணித்துச் சொல்லும் காலம் இருந்தது.

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

மின்னம்பலம் : உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2016ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மாநிலத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து தீவிரம் காட்டிவருகிறது. இதனிடையே மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தேர்தலைச் சுமுகமாக நடத்துவது தொடர்பாக நேற்று மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தங்களது கருத்துகளை அரசியல் கட்சியினர் எடுத்துவைத்தனர். மேலும், ஊரகப் பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்துவது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று (நவம்பர் 28) திமுக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

சோனியா காந்தி : பாஜக அரசு அதிகார போதையில் இருக்கிறது

பாரதீய ஜனதா கட்சி மீது சோனியா பரபரப்பு குற்றச்சாட்டு தினத்தந்தி :  மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பதை தடுக்க பாரதீய ஜனதா முயற்சி செய்தது என சோனியா காந்தி குற்றச்சாட்டு சுமத்தினார். புதுடெல்லி, காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கிப்பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மராட்டியத்தில் ஜனநாயகத்தை தகர்த்தெறிய நடந்த வெட்கமற்ற முயற்சிக்கு பின்னர் நாம் இங்கே கூடி இருக்கிறோம். கவர்னர் இதுவரை இல்லாத வகையில், மிகவும் கண்டிக்கத்தக்க விதத்தில் நடந்து கொண்டுள்ளார். அவர் பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியின் அறிவுறுத்தலின்படிதான் செயல்பட்டார் என்பதில் சந்தேகம் இல்லை. மராட்டியத்தில் பாரதீய ஜனதா கட்சி தேர்தலுக்கு முன்பாக அமைத்த கூட்டணி, அந்த கட்சியின் ஆணவத் தாலும், அதீத நம்பிக்கையாலும்தான் நிலைத்து நிற்காமல் போய் விட்டது.

இலங்கை சிங்கள மக்களிடையே நிலவும் ஜாதி பாகுபாடுகள்

சிங்கள சாதியமைப்பை விளங்கிக் கொள்ளல்!
18/12/2008 by isoslo - t;என். சரவணன் :
இலங்கையில் முரண்பாடுகளின் நிரல்படுத்தலின் போது தமிழ்த் தேசப்போராட்­டமானது முதன்மை பெற்றதன் பின் ஏனைய சமூக முரண்பாடுகள் அதன் பின்னர் நிரற்படுத்தலின் போது பின்னுக்குத் தள்ளப்படவும் செய்தன. எனவே பெருங்கதையாடலாக தமிழ்த்தேசப் போராட்டத்தோடு மையப்பட்ட கருத்தாடல்கள் அமைந்தன. அவ்வாறு நிரல் ஓழுங்கில் பின்னுக்குத்தள்ளப்பட்டவற்றுள் வர்க்க மற்றும் பெண்களின் பிரச்சி­னைகள், சாதியப் பிரச்சினைகள் என்பனவும் முக்கியமாக அடங்குகின்றன. இந்த நிலையில் சாதியம் குறித்த போதிய ஆய்வுகள், விவாதங்கள் தமிழ்ச் சூழலில் அருகி வருவதையும் இனங்காணலாம்.
சிங்கள சிவில் சமூக கட்டமைப்பில் தமிழ்ச் சமூகம் அளவுக்கு இறுக்கமான சாதிய கட்ட­மைப்பு மோசமாக இல்லாவிட்டாலும் அங்கு பல்வேறு ஆய்வுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக தேர்தற் காலங்களில் சிங்களச் சூழலில் சாதியம் தலைதூக்குவதைப் பற்றி பல்வேறு கட்டுரைகள் வெளிவரும். தேர்தல் ஆரவாரங்களின் போது அது அதிகமாக தலைகாட்டத் தொடங்கும்.
சிங்கள சாதிய கட்டமைப்பு குறித்த ஆய்வுகள் 15ஆம் நூற்றாண்­டிலேயே காணக்கிடைக்கின்ற போதும் இந்த 20ஆம் நூற்றாண்டில் அதுவும் குறிப்பாக 1971இல் ஏற்பட்ட ஜே.வி.பி. கிளர்ச்சியைத் தொடர்ந்து சாதியம் குறித்த ஆய்வுகள் பல கோணங்களில் பல ஆய்வுகளாக வெளிவரத் தொடங்கின. 71 கிளர்ச்சிக்கு காரணமான அம்சங்களில் சாதிய பிரச்சினை முக்கியமான பாத்திரமாற்றியது என்பதை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். 71 கிளர்ச்சியின் பின் அது பற்றிய புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்ட அரச தரப்­பினர் கைது செய்யப்பட்டவர்கள், மற்றும் கொல்லப்பட்ட இளைஞர்களிடமிருந்து சாதியவாரியாக தரவுகளை திரட்டியதும் அதன் காரணமாகத் தான். இந்தத் தரவுகள் பின்னர் பல ஆய்வுக­ளுக்கு மூல ஆதாரங்களாக அமைந்தன.

யேமன் படகை கடத்தி இந்தியா திரும்பிய தமிழக மீனவர்கள் ... சவுதியில் சிக்கி இருந்தவரகள்

மீனவர்கள்மீனவர்கள் மீன்பிடிக்கும் விசைப்படகுvikatan.com - சிந்து ஆர் - ரா.ராம்குமார் : விசைப்படகில் மீன் பிடிக்கச் செல்வதாகக் கூறி கடலுக்குச் சென்ற மீனவர்கள், அந்த விசைப்படகை அப்படியே இந்தியாவை நோக்கித் திருப்பினர். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த ஆல்பிரட் நியூட்டன், எஸ்கலின், வினிஸ்டன், பெரியக்காட்டைச் சேர்ந்த விவேக், மணக்குடியைச் சேர்ந்த சாஜன், உவரியைச் சேர்ந்த சகாய ரவிகுமார், குளச்சலைச் சேர்ந்த ஜெகன் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் என 9 பேர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏமன் நாட்டுக்குச் சென்றனர். அங்கு சவுதி அரேபியாவைச் சேர்ந்த சுல்தான் என்பவரது விசைப் படகில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். ஆனால், சுல்தான் இந்த மீனவர்களுக்குத் தினமும் ஒரு வேளை மட்டும் உணவு கொடுத்ததாகவும், இதுவரை சம்பளம் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

உடல் முழுவதும் சிகரெட் சூடு கூட்டு வன்புணர்ச்சி படுகொலை... வன்னிய ஜாதி வெறியர்கள்

க.இரா. தமிழரசன் : உடல் முழுவதும் சூட்டுக் கொப்பளங்கள்.
திட்டமிட்டு துன்புறுத்தி வன்புணர்ச்சி படுகொலை செய்திருக்கிறது சாதிவெறிக் கும்பல்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாசாபாத் ஒன்றியம் - ஆன்டிசிறுவள்ளூர் காலனியை சேர்ந்த ரோஜாவை கூட்டுவன்புணர்ச்சி செய்து தூக்கிலிட்டு சாவடித்திருக்கிறார்கள்.
காரை கிராமத்தைச் சேர்ந்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை இரண்டு ஆண்டுளாக காதலித்து வந்துள்ளார் ரோஜா. ஆனால் ராஜேஷ் ஏற்கனவே யாதவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து தனது வீட்டில் குடும்பம் நடத்தி வருகிறார். இதனை மறைத்து ரோஜாவை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி ஆசை வார்த்தைகள் கூறி கடந்த 21-11-2019 அன்று அழைத்துச் சென்றுள்ளான் ராஜேஷ்.
அவன் மீதுள்ள நம்பிக்கையின் பேரில் உடன் சென்றிருக்கிறார் ரோஜா. பின்னர் கடந்த 26-11-2019 அன்று ரோஜாவின் தம்பிக்கு போன் செய்து உன் அக்காவை சிறுவாக்கம் புதுரோடு அருகில் விட்டுவிட்டேன். பறப் பொண்ணை வைத்து நான் குடும்பம் நடத்த முடியாது. கல்யாணம் பன்னிக்க முடியாது. உன் அக்காவை வந்து கூட்டினு போ என்று திமிராக பேசிவிட்டு போனை துண்டித்திருக்கிறான் கொடூரன் ராஜேஷ்.

வியாழன், 28 நவம்பர், 2019

அமித் ஷாவை உடைத்த சரத் POWER பவார்.. ட்ரோஜன் குதிரை’ அஜித் பவார்…

சரத்பவார், அமித்ஷாஅஜித் பவார், தேவேந்திர பட்னவிஸ்உத்தவ் தாக்கரே, சரத்பவார்vikatan.com - ந.பொன்குமரகுருபரன் : ராமாயணத்தில் ராவணனின் சகோதரன் விபீஷணனைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டு, ராவணனை வீழ்த்துவார் ராமன். மகாராஷ்டிராவில் இதைத்தான் அமித் ஷாவும் செய்ய நினைத்தார். ஆனால், பி.ஜே.பி-க்குள் அஜித் பவார் என்னும் `ட்ரோஜன் குதிரையை’ அனுப்பி மொத்த திட்டத்தையும் சிதைத்துவிட்டார் சரத்பவார் மகாராஷ்டிரா முதல்வர் பதவியை பி.ஜே.பி-யின் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கடந்த ஒருவாரமாக அம்மாநிலத்தில் நிலவி வந்த அரசியல் குழப்பம் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அஜித் பவாரை வைத்து சரத்பவார் ஆடிய சதுரங்க ஆட்டத்தில் அமித் ஷா வீழ்ந்துவிட்டதாகக் கூறுகிறது மும்பை வட்டாரங்கள்.
2019 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 105 இடங்களைப் பெற்றிருந்த பி.ஜே.பி, 56 இடங்களை வைத்திருந்த சிவசேனா கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முடிவெடுத்தது. முதல்வர் பதவி உட்பட, அமைச்சரவையில் 50 சதவிகித இடத்தை சிவசேனா எதிர்பார்த்ததால் கூட்டணி முடிவு எட்டப்படவில்லை. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளிடமும் ஆட்சியமைக்கும் அளவுக்கு போதிய பலமில்லாததால், நவம்பர்12-ம் தேதி மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது மத்திய அரசு.

வங்கத்தில் மமதா அதிரடி சாதனை .. தவிடுபொடியான கணிப்புகள்.. இடைத்தேர்தலில் மாஸ் வெற்றி

tamil.oneindia.com :" கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மூன்று தொகுதிகளில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 
உத்தரகாண்டில் ஒரு தொகுதியில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 
மேற்கு வங்கத்தில் தனிப்பெரும் தலைவராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மமதா பானர்ஜி வலம் வந்தார். அங்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் வீழ்ச்சி காரணமாக திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எழுச்சி பெற்றது. ஆனால் மேற்கு வங்கத்தில் தற்போது மிக மோசமான வேலையில்லா தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதேபோல் மாநில அரசு மீதும் மக்கள் கடும் கோபத்தில் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். 
என்ன எதிரொலி?  மக்களின் இந்த கோபம் கடந்த லோக்சபா தேர்தலில் அங்கு எதிரொலித்தது. 2014ல் மேற்கு வங்கத்தில் வெறும் 2 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக கடந்த லோக்சபா தேர்தலில் 18 இடங்களை வென்றது. இதனால் அங்கு பாஜக மாபெரும் கட்சியாக உருவெடுத்தது. 
ஆனால் 2014ல் 34 இடங்களை வென்ற திரிணாமுல் காங்கிரஸ் 2019ல் 22 இடங்களை மட்டுமே வென்றது. 

BBC : இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்சா இந்தியா வந்தார் .. மூன்று நாள் வருகை

 
 புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங் அவரை வரவேற்றார். அதிபர் பதவியேற்ற பிறகு கோட்டாபய மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணம் இது.
இலங்கை உள்நாட்டுப் போரில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோட்டாபய. அந்த இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளும், பொதுமக்களும் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதாக புகார்கள் உண்டு.
இந்தப் பின்னணியில் கோட்டாபய இந்திய வருகையை ஒட்டி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினார்.
கோட்டாபய பதவியேற்றவுடன் இலங்கைக்கு நேரடியாக சென்று வாழ்த்துத் தெரிவித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.

மகாராஷ்டிரா உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்பு (வீடியோ)


nakkheeran.in - பா. சந்தோஷ் : மஹாராஷ்டிரா மாநில முதல்வராக
பதவியேற்றார் உத்தவ் தாக்கரே. மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரேவுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவியேற்றவுடன் பொதுமக்கள் முன்னிலையில் தரையில் விழுந்து வணங்கினார்.  பதவியேற்பு விழாவில் திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவின் மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மஹாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், சிவசேனா கட்சியின்  ஆதித்ய தாக்கரே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள், மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வேண்டும்: மாநிலங்களவையில் வைகோ கோரிக்கை

.dinakaran.com : சென்னை: உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவ வேண்டும் என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ கோரிக்கை விடுத்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் பேசியதாவது: உயர் நீதிமன்றங்கள் அளிக்கின்ற தீர்ப்பில், வழக்கு தொடுத்தவர்கள் நிறைவு அடையவில்லை என்றால், தீர்ப்பு தவறானது எனக் கருதினால், அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம். ஆனால், தென்னிந்திய மக்கள், உச்ச நீதிமன்றத்தை எளிதில் நாட முடியவில்லை. மொழி வேறுபாடு, நெடுந்தொலைவு பயணம், மிக உயர்ந்த கட்டணம், பயணத்தில் வீணாகும் நேரம், டெல்லியில் தங்கும் இடம் ஏற்பாடு, நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வழக்குரைஞர்கள் கட்டணம் போன்றவை, எதிர்கொள்ள முடியாத கேள்விகள். மேற்கண்ட காரணங்கள், ஏழை எளிய அடித்தட்டு மக்களால், உச்ச நீதிமன்றத்திடம் இருந்து உரிய நீதியைப் பெற முடியாமல் தடுக்கின்றன.

தமிழ் அறிவிப்பு பலகைகள் சேதம்; இலங்கை பிரதமர் கண்டனம்


தினமலர் : கொழும்பு : "அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்திய பயணத்தை தடுக்கம் நோக்கிலேயே தமிழ் அறிவிப்பு பலகைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன'' என இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே கூறினார்.இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பேற்றார். தன் அண்ணனும் முன்னாள் அதிபருமான மகிந்தா ராஜபக்சேவை அவர் பிரதமராக நியமித்தார். இதையடுத்து அதிபர் கோத்தபய தன் முதல் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு 29ம்தேதி வருகிறார். இந்நிலையில் இலங்கையில் தமிழில் எழுதப்பட்டிருத்த அறிவிப்பு பலகைகளை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இது அங்கு தமிழர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ;
இது குறித்து பிரதமர் மகிந்தா ராஜபக்சே கூறியதாவது: அதிபர் கோத்தபயவின் டில்லி பயணத்தை சீரழிக்கும் நோக்கில் தான் தமிழ் அறிவிப்பு பலகைகளை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். புதிய தமிழ் அறிவிப்பு பலகைகளை மீண்டும் அதே இடத்தில் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளேன். இலங்கை - இந்தியா உறவை சீரழிக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மகிந்தா ராஜபக்சே கூறினார்.

ஆ. ராசாவின் பேச்சை இடைமறித்த பாஜக எம்பி ...கோட்சே தேசபக்தர்: ... வீடியோ


கோட்சே தேசபக்தர்: மக்களவையில் பாஜக எம்.பி மின்னம்பலம் :  கோட்சே ஒரு தேசபக்தர் என பாஜக எம்.பி பிரக்யா தாகூர் மக்களவையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்பிஜி பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று (நவம்பர் 27) நடைபெற்றது. விவாதத்தின் மீது பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, “காந்தியைச் சுட்டுக்கொன்றது தொடர்பாக நாதுராம் கோட்சே அளித்த வாக்குமூலத்தில் சில வரிகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கோட்சே தனது வாக்குமூலத்தில், தான் காந்தி மீது 32 ஆண்டுகளாக வெறுப்பை வளர்த்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை நம்பியதால் அவர் காந்தியைக் கொன்றார்” எனப் பேசினார்.
ஆ.ராசா பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர், “தேசபக்தர் பற்றிய உதாரணம் எதையும் நீங்கள் கூறக்கூடாது” என இந்தியில் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பிரக்யா தாகூரை அமரும்படி சக பாஜக எம்.பி.க்கள் அறிவுறுத்தினர். ஆ.ராசாவின் பேச்சு மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என சபாநாயகர் தெரிவித்தார்.

குழந்தைகளை கடத்திக் கொலை செய்த மனோகரனின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை

குழந்தைகளை கடத்திக் கொலை செய்த மனோகரனின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை தினத்தந்தி :  கோவை மனோகரனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை, கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 10 வயது சிறுமி  மற்றும் 7-வயது சிறுவன் ஆகியோர் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் பொள்ளாச்சி அருகே மீட்கப்பட்டன. பின்னர் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் சிறுமி  பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதனையடுத்து நடைபெற்ற  விசாரணையில் வாடகை கார் ஓட்டுநர் மோகன்ராஜ் என்பவரும், அவரது நண்பன் மனோகரனும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சீமான் உண்ணும் விதத்தை நோட்டு புத்தகத்தில் குறிப்பெடுத்த புலிகள் - சீமான் நெகிழ்ச்சி!


நக்கீரன் : விடுதலை புலிகள் தலைவர் பிறந்த நாளையொட்டி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, " ராஜூவ் காந்தி மரணத்தை பற்றி நான் பேசியதற்கு அவருடைய மாமன், மச்சான், தம்பி, பெரியப்பன், சித்தப்பன் எல்லாம் நம்மை திட்டி தீர்த்துவிட்டார்கள்.
இதோ பாருங்கள்,  பேசியவர்கள் எல்லோர் பேரையும் என் இதயத்தில் வைத்திருக்கிறேன். உங்களுக்கு சரியாக வாதிட தெரிந்தால், நல்ல ஆண் மகனாக இருந்தால் விவாதத்திற்கு வாருங்கள், நாம் சேர்ந்து பேசுவோம். வரலாற்றில் யார் பிழை செய்தது என்று பேசுவோம். வாங்க பேசி முடிவெடுப்போம். நீங்க என்ன பேசினாலும் நான் இப்படிதான் பேசுவேன். இப்படி பேசினால் எனக்கு ஓட்டு போட மாட்டேன் என்றால் அந்த ஓட்டே எனக்கு தேவையில்லை. ராஜூவ் காந்தி வாழ்க என்று சொன்னால் தான் ஓட்டு விழும் என்றால், ராஜூவ் காந்தி கட்சிக்கே யாரும் ஓட்டு போடவில்லையே.
நாங்கள் தான் கொன்றோம் என்று சொல்லும் நீங்கள், அப்படியே பஞ்சாப் சென்று சீக்கியர்கள் தான் இந்திரா காந்தியை கொன்றார்கள் என்று சொல்ல முடியுமா?

அண்ணன் ஒரு இயக்கம் தம்பி வேறொரு இயக்கம் யார் துரோகி? யார் போராளி?

Eela Mani : மாவீரத் தாயா?  மாதுரோகத் தாயா?  அரை மாவீரர்,  அரைத் துரோகத் தாய்க்குலமா ? 
மாவீரர்தின சிந்தனை 2019 கிழக்கு மாகாணம் மட்டக்கிளப்பில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, யுத்த நிறுத்தம் ஏற்பட்டிருந்த காலத்தில் மட்டக்கிளப்பில் மோட்டார் வாகனமொன்றில் சென்றுகொண்டிருந்த PLOTE இயக்க போராளிகள் மீது (13 09 1987) கண்ணி வெடித்தாக்குதல் நடத்தினார்கள் புலிகள். வாசுதேவா ,கண்ணன் போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் துரோகிகள் என்ற போர்வையில் படுகொலை செய்யப்பட்டனர்
சிறை மீண்டு, மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு, களுவாஞ்சிகுடி போலீஸ் நிலைய தாக்குதலில் (22 09 1984) வீரமரணமடைந்த கிழக்கு மாகாணம், கல்லடியை சேர்ந்த மாவீரன் பரமதேவா புலிகளின் முன்னணித்தலைவர்களில் ஒருவர். அவரின் சகோதரர் தான் வாசுதேவா. அவர் போராடியதும் தமிழீழ மண்ணின் விடுதலைக்காகத்தான். PLOTE இயக்கத்தில் இணைந்து போராடியதால் அவன் துரோகியா???
வாசுதேவா ,பரமதேவாவின் தயார் அரைமாவீரர் அரைத்துரோகத் தாயா ???

வடமாகாணம் நாவலியிலும் இரண்டு சகோதரர்கள் , ஜெயக்குமார் இராசநாயகம் TELO இயக்கத்திலும் தேவசகாயம் இராசநாயகம் .புலிகள் இயக்கத்திலுமிணைந்து போராடினார்கள். இயக்கம் தடைசெய்யப்பட்டு சிலமாதங்களின் பின்னர் இந்தியாவிலிருந்து நாடுதிரும்பிய ஜெயக்குமார் இராசநாயகம் புலிகளினால் கைதுசெய்யப்பட்டு கந்தன்கருணை முகாமில் புலிகளின் சித்திரவதைகள் பின் 8 10 1986 அன்று கொல்லப்பட்டார்.அண்ணன் புரட்சிமாறன் புலிகள் இயகத்திற்கு விசுவாசமாக போராடி யாழ்ப்பாணம் கோட்டை தாக்குதலில் 5 08 1990 களப்பலியானார் .
தேவசகாயம் இராசநாயகம். ஜெயக்குமார் இராசநாயகம் சகோதரர்களின் தாயார் அரைமாவீரர் அரைத்துரோகத் தாயா ???

மராட்டிய சிவசேனா கடந்து வந்த பாதை ...

JP Prakash : காங்கிரஸ் கட்சியானது சிவசேனைக்கு ஆதரவு கொடுத்ததை,
ஹிந்துத்வாவுக்கு ஆதரவு போன்று சிலர் திரிகிறார்கள்.. சிவசேனை ஒன்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்ட ஹிந்துத்துவா கட்சி கிடையாது..
சங்பரிவார் என்று அழைக்கப்படும் ஆர்எஸ்எஸ் பிஜேபி பஜ்ரங்தள் விஹெச்பி போன்ற இயக்கங்களின் பட்டியலில் சிவசேனை கிடையாது..
சங்பரிவார் அமைப்புகளின் ஒரே குறிக்கோள் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவது..
ஆனால், சிவசேனையை பால்தாக்கரே ஆரம்பித்தது மகாராஷ்டிராவில் மராட்டிய மக்களுக்கான உரிமைகளுக்காக போராட.. குறிப்பாக மும்பை மாநகரில் அதிகளவில் குஜராத்திகள் மார்வாடிகள் மற்றும் தென்னிந்தியர்கள் குடியேறி, வேலைவாய்ப்புகளில் சொந்த மாநில மராட்டிய மக்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அவர்களின் உரிமைகளுக்காக போராட பால்தாக்ரேவால் துவக்கப்பட்டது தான் சிவசேனை..
பிஜேபி RSS போன்ற சங்பரிவார் அமைப்புகளின் மேல்மட்ட தலைவர்களாக பிராமணர்கள் மட்டும் தான் இருப்பார்கள், ஆனால், சிவசேனா கட்சியை உருவாக்கிய பால்தாக்கரே மற்றும் அதன் முக்கியத் தலைவர்களும் பிராமணர்கள் கிடையாது, மராட்டிய மாநில ஓபிசி பிரிவு மக்கள் தான் அதிகளவில் சிவசேனையில் இருக்கிறார்கள்..

திராவிட அரசியலை புரிந்து கொள்ள தவறிய ஈழ அரசியல் .. பெரியாரை புறக்கணித்த புலிகள் ..

Kanimozhi MV : பத்து ஆண்டுகளுக்கு முன் வரை தீவிர ஈழ - புலிகள் ஆதரவாளராக இருந்தேன் ; திராவிடர் இயக்க பின்னனியில் இருந்து வருவோருக்கு அது இயல்பான ஒன்று!
கலைஞரை குற்றம் சொல்ல தொடங்கியபோதும் அமைதியாக இருந்தேன் ; ஆனால் அடித்தளம் ஆட்டம் கண்டது! பொதுவில் அதைப் பற்றி பேசியது இல்லை;
திமுக அழிந்தே தீர வேண்டும் என்ற போது புலிகள் யாரை எல்லாம் அழித்தார்கள் - ஈழ விடுதலையால் தமிழ் நாடு 90 களுக்குப் பின் எப்படி ஆட்டம் கண்டது என்பதை படிக்க தொடங்கினேன்!
அப்போதும் பொதுவில் பேசியது இல்லை!

தந்தை பெரியார் கன்னடர் அவர் என்ன செய்தார் தமிழர்களுக்கு என்றபோது நரம்புகளில் கட்டப்பட்டிருந்த ஈழம் அறுபடும் சத்தம் எனக்கு நன்றாக கேட்டது!
இங்கே பேசும் பதர்களுக்கு ஈழ மக்கள் என்ன செய்வார்கள் என்பது அரசியல் அறியாதவர் பேசலாம் ; எந்த உந்து சக்தி ? எந்த பணம் ? எந்த அரசியல் இவர்களை பேச வைக்கிறது என்று ஆராய்ந்த போது புலம் பெயர்ந்த தமிழர்கள் பெருமளவில் இருந்தனர் ;
ஒரே கேள்வி தான் ! ஈழ மண்ணில் போராட்டம் நடந்த போது திராவிட அரசியலும் இயக்கமும் தான் ஆதரவு தந்தது ; அந்த அரசியலை அழிக்க நீங்கள் பின்னனியில் இருப்பீர்களா? என்ற என் கேள்வியில் என்ன அநீதி உள்ளது ?
இந்த மண்ணில் தந்தையாக இருந்து போராடியவரை அய்யா என்று அழைத்து புது விளக்கம் கொடுத்த போது பெரியாருக்கு பட்டத்தை பிச்சை போட இவர்கள் யார் ? என்ன தகுதி இருக்கிறது இவர்களுக்கு?

புதன், 27 நவம்பர், 2019

பாக்யராஜூக்கு எதிராக மகளிர் ஆணையம்.. வீடியோ

  மின்னம்பலம : பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவு செய்த பாக்யராஜ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
சென்னையில் கருத்துகளை பதிவு செய் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பாக்யராஜ், ”ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது. பெண்கள் வாய்ப்பளிப்பதுதான் தவறுகளுக்கு மூலகாரணம் ஆகிவிடுகிறது. எனவே பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். பொள்ளாச்சியில் தவறு நடந்தது என்றால் அதற்கு பசங்க மட்டுமே காரணமல்ல. பெண்களுடைய பலவீனத்தைச் சரியாகப் பயன்படுத்தி அவர்களைக் கொண்டு சென்றுவிட்டனர். அவன் செய்தது பெரிய தவறென்றால் அந்த வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்த பெண்கள்தான் ரொம்பத் தவறு செய்துவிட்டனர்” என்று பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு பெண்கள் அமைப்பினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாலியல் வன்கொடுமைக்குப் பெண்கள் மீது பழி சுமத்த வேண்டாம் என்று சொல்லி, சொல்லிச் சோர்வாகிவிட்டது. இதுபோன்ற ஒரு மன நிலை நீடித்துக்கொண்டிருப்பதால் தான் பெண்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்,

சரிவைத் தொடங்கிவைத்த 5 மாநிலத் தேர்தல்!' - பலிக்காத மோடி-அமித்ஷா வியூகம்

சத்யா கோபாலன் - விகடன் :  கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் உச்சத்திலிருந்த பா.ஜ.க-வின் மாநில செல்வாக்கு தற்போது கிடுகிடுவென சரியத் தொடங்கிவிட்டது. இந்திய அரசியலில் 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதுவரை யாராலும் அசைக்க முடியாமல் இருந்த காங்கிரஸின் கோட்டையை ஒரே தேர்தலில் முற்றிலும் தகர்த்தது மோடி -
அமித்ஷா கூட்டணி.
காங்கிரஸ் அந்த ஆண்டு இந்தியாவில் வெறும் 7 மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், அதுவே அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 21 மாநிலங்களை பா.ஜ.க கைப்பற்றியது. நாடு முழுவதும் வீசிய மோடி அலையே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. மோடியும் அமித்ஷாவும் இணைந்து இந்திய அரசியல் வரைபடத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தனர் என்றே கூற வேண்டும். இந்தியா முழுவதும் நீல நிறமாக (காங்கிரஸ்) காட்சியளித்த மாநிலங்களை, 2014-ம் ஆண்டு இவர்கள் இருவரும் காவி நிறமாக (பா.ஜ.க) மாற்றினர். அரசியல் வரலாற்றில் இவர்கள் செய்த மாற்றம் அனைத்துத் தரப்பினரையும் உற்றுக் கவனிக்க வைத்தது.
ஆனால், அமித்ஷாவின் தேர்தல் வியூகம் நீண்ட நாள்களுக்கு பலன் கொடுக்கவில்லை. 2017-ம் ஆண்டு பல மாநிலங்களை தங்கள் வசம் வைத்திருந்த பா.ஜ.க-வின் பிடி 2018-ம் ஆண்டின் பிற்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக நழுவத் தொடங்கியது.

1000 ரூபாய் பொங்கல் பரிசு நாளை மறுநாள் முதல் விநியோகம்- முதல்வர் துவக்கி வைக்கிறார்

மாலைமலர் : அரிசி ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு 1000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை நாளை மறுநாள் முதல்வர் துவக்கி வைக்க உள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை: பொங்கல் பண்டிகைக்காக இந்த ஆண்டு அரிசி ரேசன் கார்டுகளுக்கு தலா ரூ.1,000 ரொக்கமும், பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காக தமிழக அரசு ரூ.2363.13 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுதினம் (நவ.29) துவக்கி வைக்க உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்து, குறிப்பிட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க உள்ளார். இந்த திட்டத்தின்மூலம், அரிசி ரேசன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் ரொக்கப் பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புத் துண்டு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பும் வழங்கப்படும். சுமார் 2 கோடி ரேஷன் அட்டை தாரர்கள் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1,000 பணம் பெற உள்ளனர்.

வி பி சிங் விமான நிலையங்களுக்கு அண்ணா காமராஜர் .பெயர்களை ... அதுவும் கலைஞர் மேடையில் வைத்தே ...


Muralidharan Pb : 2/12/1989 அன்று இந்தியாவின் 7வது பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட விபி சிங் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது,"தேசிய முன்னணி தொடக்க விழாவை சென்னையில் நடத்தி, அந்த முன்னணியின் ஆட்சி அமைகிற அளவுக்குப் பாடுபட்ட கருணாநிதி, என்டி ராமராவ், மற்ற தலைவர்கள் எனது நன்றிக்குரியவர்கள்" என்று பாராட்டினார்.
எப்பற்ப்பட்ட தலைவர்?
50களில் ஆச்சரிய வினோபா பாவே பூதான இயக்கம் நடத்திய போது வி பி சிங் தந்து நிலங்களை தனமாகத் தந்தார். வினோபா மனம் நெகிழ்ந்து உங்களுக்கென்று கொஞ்சம் நிலத்தை வைத்துக் கொண்டு மீதியுள்ளதை தந்தால் போதும் என்று ஒரு பகுதி நிலத்தை வி. பி. சிங்கிடமே கொடுத்துவிட்டார். அப்படி வினோபா கொடுத்த நிலத்தை தனது சொந்த பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளவில்லை வி பி சிங். மாறாக கல்வி நிறுவனம் ஒன்றிற்கு எழுதி வைத்து விட்டார். அப்படியே மக்களின் நன்மதிப்பை பெற்று ஒரு கட்டத்தில் முதல்வரானார். அப்போது உத்தர பிரதேசத்தில் கொள்ளையர்கள் வன்முறை தலைவிரித்து ஆடிய போது கொள்ளைக் கூட்டத்தை அடியோடு ஒழிப்பேன் என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார்.

நடிகர் பாலா சிங் காலமானார்.. திரைத்துறையினர் அதிர்ச்சி!

கடைசியாக மகாமுனி தமிழில் அறிமுகம் tamil.filmibeat.com - bahanya ; சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் பாலாசிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 67.
நடிகர் பாலா சிங் 1952ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் பிறந்தார். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் கல்லூரி நாட்களிலேயே மேடையில் நடிக்கத்தொடங்கினார்.
மேடை நாடக கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் மலையாள திரையுலகின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானவர் பாலாசிங். 1983 ஆம் ஆண்டு வெளியான மலைமுகலிலே என்ற மலையாள படத்தின் முலம் நடிகராக அறிமுகமானார்.
நடிகர் நாசர் எழுதி இயக்கி நடித்த ‘அவதாரம்' படத்தின் மூலம் தமிழில் நடிகராக கால் பதித்தார். அவதாரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் பாலாசிங்.

திருப்தி தேசாய் சபரிமலை செல்ல பாதுகாப்பு வழங்க முடியாது!' - கைவிரித்த கொச்சி போலீஸ்?


சபரிமலை செல்ல வந்த திருப்தி தேசாய் சிந்து ஆர் - விகடன்  : சபரிமலையில் அமைதியாக நடக்கும் மண்டல மகரவிளக்கு காலத்தை அலங்கோலப்படுத்த சிலர் நினைக்கிறார்கள். அதற்கு கேரள அரசு இடம் கொடுக்காது. சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என சிலர் விரும்புவதாக இதன்மூலம் புரிந்துகொண்டோம். சபரிமலை சந்நிதானத்தில் தரிசனம் செய்வதற்காக சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் விமானம் மூலம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொச்சி வந்தடைந்தார். அவருடன் ஹாயா பாண்டே, காம்ப்லர் ஹரிநாக்‌ஷி, மீனாக்‌ஷி ஷிண்டே, மனிஷா ஆகியோர் வந்துள்ளனர். கடந்தமுறை சபரிமலை சந்நிதானத்தில் தரிசனம் செய்த கேரளத்தைச் சேர்ந்த பிந்து அம்மிணியும் விமான நிலையத்திலிருந்து திருப்தி தேசாயுடன் சேர்ந்துகொண்டார். சபரிமலை செல்லுவதற்கான உச்ச நீதிமன்ற ஆணை தங்களிடம் உள்ளதாக பிந்து அம்மிணி தெரிவித்தார். இந்த நிலையில், கொச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் பிந்து அம்மிணியின் முகத்தில் ஒருவர் திடீரென மிளகாய்ப் பொடி ஸ்ப்ரே அடித்தார். ஹிந்து ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநாத் மிளகாய் ஸ்ப்ரே அடித்ததாக போலீஸார் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

நித்தியானந்தா .. நடு இரவில் சிறுமிகள மீது பாலியல் துன்புறுத்தல், மர்ம மரணம்..

மின்னம்பலம் :  சர்ச்சை சாமியாரான நித்யானந்தா மீதான குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தனன் சர்மாவின் மகள்களைக் கடத்திய வழக்கு ஒரு பக்கம் பூதாகரமாகியுள்ள நிலையில், தற்போது கனடாவைச் சேர்ந்த முன்னாள் சிஷியை சாரா லாண்ட்ரி நித்யானந்தா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றதாகப் பெங்களூரு ராம்நகர் காவல் நிலையத்தில் சாரா லாண்ட்ரி புகார் தெரிவித்துள்ளார். நித்யானந்தா பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு 2015ல் பிடதி ஆசிரமத்திற்கு இவர் வந்துள்ளார். அங்கு சமூக வலைதள குழு தலைவராக இருந்துள்ளார். 2018ல் இவருக்கு நித்யானந்தாவின் உண்மை முகம் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆசிரமத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்.< இதுகுறித்து மின்னஞ்சல் மூலம் அவர் அளித்த 22 பக்க புகாரில், ”ஆன்மீகத்தின் பெயரில் ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளை நித்யானந்தா பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவார்” என்று குற்றம்சாட்டியுள்ளார். ஆசிரமத்தில் நடக்கும் பாலியல் தொந்தரவுகள், இதனால் நித்யானந்தாவை எதிர்த்தவர்கள் பற்றி பொய்யான தவறான அவதூறுகளை சமூக வலை தளங்களில் பரப்பத் தனது தலைமையில் நித்யானந்தாவால் குழு அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே முதல்வர்- காங்கிரஸ் என் சி பிக்கு இரு துணை முதல்வர் பதவிகள்!

மகாராஷ்டிராவின் முதல்வராகவும், கூட்டணி தலைவராகவும் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்எல்ஏ-க்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே முதல்வர்- இரு துணை முதல்வர்கள்!மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் ஆட்சி அமைப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று(நவம்பர் 26) தீர்ப்பளித்தது. அதில், “நாளை(இன்று) மாலை 5 மணிக்குள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது" என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், மகாராஷ்டிர அரசியலில் திருப்புமுனையாக அஜித் பவார் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் முதல்வராக பதவியேற்று மூன்று நாட்களே ஆன நிலையில் தேவேந்திர பட்னவிஸும் ராஜினாமா செய்தார். ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியிடம் தனது ராஜினாமா கடிதத்தை பட்னவிஸ் கொடுத்தார். அதன் பின், பாஜகவின் காளிதாஸ் கொலம்ப்கர் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.