வியாழன், 2 செப்டம்பர், 2010

பாரதிராஜா: நான் பேசுவதில் எந்த அரசியலும் இருக்காது; எனக்கு அரசியலும் தெரியாது’

எனக்கு அரசியல் தெரியாது:  பாரதிராஜா பேச்சு

முதல்வர் கருணாநிதியின் 87 வயதை முன்னிட்டு 87 முக்கியமானவர்கள் முதல்வர் பற்றி தெரிவித்த கருத்துக்களை டெல்லி மேல்- சபை திமுக எம்.பி. வசந்தி ஸ்டான்லி தொகுத்த “கலைஞர் 87” நூல் வெளியீட்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறறது
 ரஜினி இந்த விழாவை வாழ்த்தி கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதம் மேடையில் படிக்கப்பட்டது.
புதுச்சேரி முதல்வர் கைத்தியலிங்கம், க.அன்பழகன், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, கனிமொழி எம்.பி., ராஜாத்தி அம்மாள், வைரமுத்து, பாரதிராஜா, நடிகர் பார்த்திபன் உட்பட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
பாரதிராஜா பேசும் போது,  ‘’நான் நேற்று முன்பு வைரமுத்துவிடம் எனக்கு உடல் நிலை சரியில்லை.  அதனால் என்னால் இந்த விழாவுக்கு வரமுடியாது என்று கலைஞரிடம் சொல்லிவிடு என்று சொன்னேன். 

உடனே வைரமுத்து அதற்குள் உடல்நிலை
சரியாகிவிடும்.  நீங்கள் கட்டாயம் வந்துவிடுவீர்கள் என்று சொன்னார்.   அதே போல் வந்துவிட்டேன்.
இங்கே வந்து பார்த்தால் 87 வயதுடைய அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக உட்கார்ந்திருக்கிறார்.  அவரைப்போல்  யாரும் உழைக்க முடியாது.
ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் போட்டுக்கொண்டு இளமையாக தெரிவதால் என் மீத எத்தனையோ பேர் கண் வைக்கிறார்கள்.  உனக்கு வயசே ஏறாதா என்று கேட்பார்கள்.  அதனால் எனக்கு அடிக்கடி திருஷ்டி வந்துவிடுகிறது.
கலைஞருக்கு அந்த திருஷ்டி வராது.   அவரது பார்வையே வரும் திருஷ்டிகளை எரித்துவிடும்.
இந்த புத்தகத்தில் என்னையும் எழுதச்சொல்லி கேட்டார்கள்.  எனக்கு அரசியலும் தெரியாது; எழுதவும் தெரியாது.  பேசமட்டுமே தெரியும்.  கலைஞரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டு வருகிறேன்.
இதனால்தான் நான் முதலில் தயங்கினேன்.  அப்புறம் எழுத ஆரம்பித்ததும்...கலைஞரைப்பற்றி எழுதியதால் அது அருவி போல் கொட்டியது.
நான் பேசுவதில் எந்த அரசியலும் இருக்காது; எனக்கு அரசியலும் தெரியாது’’என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: