சனி, 23 மே, 2020

ஆர் எஸ் பாரதி மீதான தாக்குதல்கள் .. திமுகவை தலித் எதிரியாக சித்தரிப்பதற்கான சதி?

Prabaharan Alagarsamy. : ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணா காலத்து
அரசியல்வாதி. தன்னுடைய 18ஆவது வயதில், தான் சார்ந்த பரங்கிமலை தொகுதியில் எம்.ஜி.ஆர் வேர்பாளராக நிறுத்தப்பட்டது குறித்த தன்னுடைய அதிருப்தியை நேராக அண்ணாவிடம் போய் விவாதிக்கும் அளவுக்கு துணிச்சலானவர்.
55 ஆண்டுகாலம் ஒரே கட்சி , ஒரே தலைமை, ஒரே கொடி, ஒரே கொள்கை என்று உறுதியாக நிற்பவர், இத்தனைக்கும் 50 ஆண்டுகாலம் அவர் உழைப்புக்கு ஏற்ற எந்த பதவியையும் அனுபவித்திராதவர். முழுநேர கட்சிக்காரராக இல்லாமல், மற்றவர்களைப் போல சொந்த தொழிலில் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் இன்றைக்கு சென்னையில் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞராக பெரிய வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்திருக்கக்கூடும்.
கட்சியினர் மத்தியில் ஆர்.எஸ்.பாரதி என்றால் கண்டிப்பானவர், கடும்கோபக்காரர் என்கிற பெயர் உண்டு. யாரும் எளிதில் குறை சொல்லிவிடமுடியாத நேர்மையும் துணிச்சலும்தான் அவருடைய பலம்.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்கிற ஒரு அவதூறு பிரச்சாரத்தை சட்டரீதியாக முறியடிக்கும் பணியை கட்சி அவருக்கு கொடுத்தது. இடைத்தேர்தல் காலத்தில் , திமுகமீது இந்த அவதூறை முன்னெடுத்தது பாமக. தேர்தலிலும் இதன் தாக்கம் கொஞ்சம் இருக்கவே செய்தது.

கொரோனா வைரஸ்: 152 ஆண்டுகளாக உணவு வழங்கும் வடலூரின் அணையா அடுப்பு

சாதியு மதமுஞ் சமயமும் பொய்யெனஆதியில்  உணர்த்திய அருட் பெருஞ்ஜோதி
;பிரமிளா கிருஷ்ணன் - பிபிசி தமிழ் கொரோனா ஊரடங்கு காரணமாக
வீடற்றவர்கள் பசியில் வாடும் நேரத்தில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் வடலூர் சத்திய தரும சாலையில் ஆன்மீகவாதி வள்ளலார் தொடங்கிய அணையா அடுப்பு திட்டத்தின் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் உணவருந்துகின்றனர். பசி என்னும் பிணியை நீக்குவதுதான் உயர்ந்த தர்மம் எனக் கருதிய வள்ளலார் தொடங்கிய இலவச உணவு வழங்கும் திட்டம் இன்றளவும் தொடர்ந்து செயல்படுகிறது.
வடலூரில் உள்ள தரும சாலைக்கு வரும் நபர்களுக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்கும் எனக்கூறி 1867ல் மார்ச் 23ம் தேதி வள்ளலார் ஏற்றிய அடுப்பு, தற்போதும் செயல்படுகிறது.

நடிகை வாணிஸ்ரீயின் மகன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை: .. செங்கல்பட்டு அருகே


தினகரன்: செங்கல்பட்டு: பிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய் வெங்கடேஷ் ( மருத்துவர்)  செங்கல்பட்டு அருகே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொண்ட வெங்கடேஷ் மருத்துவர் ஆக பணிபுரிந்து வந்தார். மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்கொலை குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

10000ஐ நெருங்கும் சென்னை.. இன்று மட்டும் தமிழகத்தில் 759 பேருக்கு கொரோனா!

ராணிப்பேட்டை எப்படி செங்கல்பட்டு நிலை என்ன shyamsundar -/tamil.oneindia.com: சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா தொற்று தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக மீண்டும் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த நான்கு நாட்களாக தினமும் 700+ கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் ஏற்பட தொடங்கி உள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது. இன்று வரை சென்னையில் 9989 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 15512 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 363 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 7491 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 7915 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். தமிழகத்தில் இன்று 5 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 103 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 397940 மாதிரிகள் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 379811 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று மட்டும் 12155 மாதிரிகள் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 11879 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது

ஆர் எஸ் பாரதி விடுதலை . வழக்கு உய ர்நீதிமன்றத்தில் இருப்பதால்

மாலைமலர் :  திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதிக்கு சென்னை குற்றவியல்
முதன்மை நீதிபதி செல்வகுமார் இடைக்கால ஜாமீன் வழங்கினார்,
திமுக மூத்த வழக்கறிஞர் NR இளங்கோ நீதிமன்றத்தில் வாதிடும்போது இவ்வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது எனவும், அதில் பாரதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோரியுள்ளோம், தேவைப்பட்டால் அவர் நேரில் ஆஜராக தயாராகவுள்ளதாகவும் கூறியுள்ளோம், இந்நிலையில் அவரது கைது சட்டத்திற்கு எதிரானது, அதிமுக அரசின் ஊழலை அவர் வெளிக்கொண்டு வருவதால் கைது செய்யப்பட்டுள்ளார் என என்ஆர் இளங்கோ வாதிட்டார், மேலும் குற்றவியல் நடைமுறை சட்டம் 41A ன் படி 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வழக்கில் முதலில் சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும், இவை கடைபிடிக்காததால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார் என் ஆர் இளங்கோ. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது

அதிமுக அரசு மீதான ஊழல் புகார் பயத்தில் ஆர் எஸ் பாரதி கைது ..

Nilavinian Manickam : ஆர்_எஸ்_பாரதி_கைது_ஏன்?
நூறு நாட்களுக்கு முன்பு பேசியதற்கு விளக்கமும் வருத்தமும் தெரிவித்த கருத்துக்கு இன்று காலை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.
அதுக்கு காரணங்கள் :
➡️➡️ "நெடுஞ்சாலைத் துறையில் நடைபெற்றுள்ள ரூ.1165 கோடி ஒப்பந்த ஊழலில் தொடர்புடைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ஊழல் கண்காணிப்பு &; தடுப்புப் பிரிவு ஆணையரிடம் புகார்.
➡️➡️ "200 கோடி ஊழல் : கோவையில் கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடந்துள்ளது" என்று நேற்று அறிக்கை விடுத்தார். வழக்கும் தொடுக்க போவதா சொல்லியிருக்கிறார்.
அறிக்கை விடுத்த 12 மணிநேரத்தில கைது.
.அடுத்து சில கேள்விகள் தமிழக அரசுக்கு :
❓ ஹைக்கோர்ட்டை இழிவு படுத்திய ஹெச்.ராஜாவையும்..
❓பெண்களை இழிவு படுத்திய எஸ்.வி.சேகரையும்.. (முன்ஜாமீன் வாங்கும் வரை தேடிக்கொண்டே இருந்தது காவல்துறை)
❓ எடப்பாடியையும் - பன்னீர்செல்வத்தையும் 'Impotent' அதவாது 'ஆண்மையற்றவர்கள்' என்று விமர்சித்த ஆடிட்டர் குருமூர்த்தியையும்.. ❓பழங்குடியின சிறுவனை அழைத்து தன் செருப்பை கழட்டி சொன்ன திண்டுக்கல் சீனிவாசனையும்.. கைது செய்யாதது ஏன்..?
இவர்களை கைது செய்ய வக்கற்றுப்போன தமிழக அரசு ஏன் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தது..?

கடைமடைக்கும் கரன்சி- அதிமுகவின் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் பதவி நீக்க ரகசியம்

டிஜிட்டல் திண்ணை:  கடைமடைக்கும் கரன்சி- அதிமுகவின் அதிரடித் திட்டம்!மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: கடைமடைக்கும் கரன்சி- அதிமுகவின் அதிரடித் திட்டம்! மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“ஓ.பன்னீர் அணியும், எடப்பாடி அணியும் இணைந்து நடத்திய பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் பதவியை நீக்கியதைத் தவிர, அன்று முதல் அதிமுக கட்சி அமைப்புகளில் பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யத் துணியாதவர்கள் இப்போது அதிரடியாக ஒரு மாற்றத்தைச் செய்திருக்கிறார்கள். தமிழகம் முழுதும் அதிமுகவில் இருக்கும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிக் கழகச் செயலாளர்களை அந்தப் பதவியில் இருந்து தூக்கி அந்த பதவியையே ரத்து செய்திருக்கிறார்கள். நீக்கப்பட்ட அனைவருக்கும் மாற்றுப் பொறுப்பும் வழங்கப்படும் என்று தாஜா அறிவிப்பும் கூடவே வந்திருக்கிறது. இவ்வளவு பெரிய நடவடிக்கையை ஒரே ஒரு அறிவிப்பின் மூலம் செய்துவிடக் காரணம் என்ன என்று விசாரிக்கையில் மேலும் மேலும் தகவல்கள் கிடைத்து வருகின்றன.

தயாநிதி மாறனுக்கு எதிராக களமிறங்கும் பாஜக... அப்செட்டான திமுக தலைமை... என்ன நடந்தது?

dmkநக்கீரன் :  கோட்டையில் தலைமை செயலாளரிடம் நடந்த சந்திப்பு பற்றி சர்ச்சை பேட்டி கொடுத்த தயாநிதி மாறன், தாழ்த்தப்பட்டவர்கள் போல் நடத்தப்பட்டோம் என்று மூன்றாம் தரமாக நடத்தினார்கள் என்று கூறியது கூட்டணிக்குள்ளேயே அதிருப்தியை உண்டாக்கியதாக சொல்கின்றனர். சமூக நீதியையும், சுயமரியாதையையும் வலியுறுத்தும் இயக்கமான தி.மு.க.வின் தலைமை குடும்பத்து உறவினரான தயாநிதி இப்படி பேசியதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் வெளிப்பட்டது. கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் இது பற்றிய தன் எதிர்ப்புக் கருத்தைப் பதிவு செய்தார்.

சோனியா காந்தி : கூட்டாட்சி தத்துவம் மறக்கடிக்கப்பட்டுள்ளது

tamil.indianexpress.com/ : Sonia Gandhi : அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ஒன்றிற்கு 10 கிலோ அரிசி உள்ளிட்ட தானியங்கள் வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். 100 நாட்கள்...
அனைத்து அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்திலேயே இருப்பதாகவும், கூட்டாட்சி தத்துவம் மறக்கடிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் தற்போதைய அரசியல் சூழல் ஆகியவை குறித்து 22 கட்சிகளின் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆலோசனை நடத்தினார்.
அப்போது சோனியா காந்தி பேசியதாவது, இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், தற்போது எதுவும் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. எல்லா அதிகாரங்களும் ஒரே ஒரு அலுவலகத்தில் தான் குவிந்து கிடக்கின்றன.

ஆர் எஸ் பாரதி கைது .. திமுக அமைப்பு செயலாளரை இன்று அதிகாலை

RS_பாரதி : நேற்று மாலை OPS மீது 200 கோடி ஊழல் செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டேன், கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் பல கோடி முறைகேடு, ரூ.4,000க்கு வாங்கிய வெண்டிலேட்டருக்கு 16,000 ரூபாய்க்கு பில் செய்துள்ளனர், தற்போது இது தொடர்பாக ஆவணங்கள் தயார் செய்து கொண்டுள்ளேன், இன்று ஆதாரங்களுடன் புகார் அளிக்கவுள்ளதை உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்டு கைது நடவடிக்கை எடுத்துள்ளனர், சீப்பை ஒழித்து வைத்தால் திருமணம் நின்று விடாது. R.S.பாரதி, எம்.பி, நிதானமாக பேட்டி.

தினத்தந்தி :சென்னை, திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை இன்று காலை போலீசார் திடீரென கைது செய்தனர். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் சென்று போலீசார் கைது செய்ததால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த  பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்  தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து  ஆர்.எஸ் பாரதி பேசியது  சர்ச்சையை கிளப்பியது.
ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் சுந்தரம் என்பவர் ஆர்.எஸ் பாரதி மீது புகார் அளித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் ஆர்.எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு  உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், ஆர்.எஸ் பாரதியை இன்று அதிகாலை கைது செய்தனர்.  மருத்துவ பரிசோதனைக்காக  ஆர்.எஸ் பாரதியை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச்சென்றுள்ளனர்.

சூத்திரர்களின் வாலை அவ்வப்போது நறுக்கி வைக்க வேண்டும். .. 1971 ஆண்டு தேர்தலில் ராஜாஜி காங்கிரஸ் கூட்டணி துண்டறிக்கை

வாசகன் வாசகன் :  ‘பிராமண தர்மம் ஓங்குக’ . “பிரியமுள்ள பிராமண
குலத்தில் வந்த எல்லோர் கவனத்துக்கும்;
இப்போது நடைபெறப்போகும் தேர்தல் ஏதோ அரசியல் தேர்தல் என்று விஷய ஞானம் உள்ளவர்கள் நினைத்தால் ஏமாந்து போவோம்!
ஸ்லோகம் சொல்வது போல் பெரியவர்கள் இது தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடைபெறும் யுத்தம் என்று சொல்லியிருக்கிறார்கள்!
இதனுடைய பாஷ்யம் என்ன என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.
தி.மு.க.காரன் ஆட்சி என்றால் என்ன அர்த்தம்?
நான்காம் வர்ணத்துக்காரன் சூத்திர ஆட்சி என்று அர்த்தம்!
அசிங்கம் பிடித்த குடிசை, சேரிக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள், கேவலமான ஜாதிக்காரர்கள் திமிர்பிடித்து அலைகிறார்கள், இந்த ஆட்சியில்!
அவாளுக்கெல்லாம் ஆதரவு கருணாநிதி.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உழைப்பேன் என்று கருணாநிதி சொல்கிறாரே. என்ன அர்த்தம்?
சூத்திரன் நான்; சூத்திரர்களுக்காகவே உழைப்பேன்! என்பதுதானே!
இப்படிச் சொன்ன பிறகு பிராமணர்களாகிய நாம், பிரம்மாவின் முகத்தில் அவதரித்தோம் என்று வேதங்களால் சொல்லப்படும் நாம் சும்மா இருக்கலாமா?
சூத்திரன் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரலாமா?
சேரியிலும் அசுத்தத் தெருவிலும் வசிக்கும் சூத்திரர்கள் ஆட்சி வரலாமா? சூத்திரர்களை நாம் அவ்வப்போது வாலை நறுக்கி வைக்க வேண்டும்.
சூத்ர பாஷையான தமிழை ஒழித்து வேத பாஷையான சமஸ்கிருதத்தைப் பரப்ப வேண்டும்.

தூத்துக்குடி கொலைகள் அதிமுகவையும் பாஜகவையும் கண்டிக்க மறுக்கும் திருமுருகனின் மே 17

திருமுருகன் காந்தி : ஸ்டெர்லைட் நச்சு ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தால் (அதாவது அதிமுக அரசினால் அல்ல) படு கொலை
செய்யப்பட்ட .. 15 தமிழ்நாடு காப்பரெட் கம்பனி மார்வாடிகளின் வேட்டை காடல்ல . ( அதிமுகவுக்கும் பாஜகவுக்கு வலிக்கும் .. அதான் மெதுவா தடவுறேன்)
Thirumurugan Gandhi : மே 22 - தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்கம்!
ஸ்டெர்லைட் நச்சு ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 15 தமிழர்களுக்கு வீரவணக்கத்தினை செலுத்துவோம்!
விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவினால் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்விலிருந்து பாடம் கற்போம்!
மத்திய, மாநில அரசுகளே!
ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் திறக்க முயலாதே!
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி இடித்துத் தள்ள உத்தரவிடு!
கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக மக்களை சூறையாடாதே!
ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமான அதிகாரிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்கு!

வெள்ளி, 22 மே, 2020

சின்னகுத்தூசி நினைவு நாள் (மே 22).. திராவிட இயக்க சிந்தனையாளர்

திரு.சின்னகுத்தூசி
Govi Lenin : நடுநிலை முகமூடிகளைக் கிழித்த பேனா
மூத்த பத்திரிகையாளர்-திராவிட இயக்க சிந்தனையாளர் சின்னகுத்தூசி நினைவு நாள் (மே 22)
சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு சிறிய வாடகை அறையில், படுப்பதற்கான இடம் தவிர மற்ற எல்லா இடத்திலும் புத்தகங்களை நிறைத்து வைத்து, வாழ்நாளெல்லாம் அறிவுச்செல்வம் தேடியவர்.
ஏற்றுக் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தவர். தான் ஆதரித்த இயக்கத்தையும் அதன் தலைமையையும் நோக்கி வந்த எதிர்ப்புக் கணைகள் அனைத்திற்கும் தன் பேனாவையே கேடயமாகப் பயன்படுத்தியும், வாளாகச் சுழற்றியும் கருத்து யுத்தத்தில் கலங்காது நின்றவர். நடுநிலை என்ற பெயரில் உலவும் போலிகளின் முகமூடிகளைக் கிழித்துத் தொங்கவிட்டவர்.
எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் திராவிட இயக்கத்திற்கும் அதனுடைய கொள்கைகளுக்காகவும் மட்டுமே தன்னுடைய சிந்தனையையும் பேனாவையும் அர்ப்பணித்தவர் மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி.

ஜெயாவின் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு அவசரச் சட்டம்

BBC :மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் வீட்டை
நினைவில்லமாக மாற்றுவதற்கு அந்த நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் நினைவு இல்லம் அமைக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவு இல்லம் அமைப்பதற்காக அந்த அமைப்பின் தலைவராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம், செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதா நிலையத்தையும், அங்குள்ள பொருட்கள், நகைகள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பராமரிக்க இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையம் மற்றும் அங்குள்ள பொருட்களை அரசுடைமையாக்க வழிவகை செய்யும் வகையில் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் கொல்லப்பட்ட ஜமால் ..பின்னணியில் சவுதி இளவரசர் ..

hindutamil.in/ : ஜமாலைக் கொன்றவர்களை மன்னிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை: ஜமாலின் தோழி விமர்சனம் என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிடுகிறேன் என்று ஜமால் கஷோகியின் மகன் தெரிவித்ததற்கு ஜமாலின் தோழி கடுமையாக விமர்சித்துள்ளார்.
jamal-khashoggi-s-fiancee-says-no-one-has-right-to-pardon-his-killersஜமால் கஷோகி மகன் சாலா கஷோகிஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜமால் கஷோகியின் மகன்களாகிய நாங்கள் எங்கள் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிடுகிறோம்” என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் ஜமாலின் தோழியான ஹடிஸ் சென்ஜின் கூறும்போது, “ஜமாலைக் கொன்றவர்களை மன்னிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஜமாலின் கொலைக்கு நீதி கிடைக்கும் வரை நானும் மற்றவர்களும் இந்தப் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை. அவரைக் கொல்ல கொலையாளிகள் சவுதியிலிருந்து வந்தார்கள். நாங்கள் ஜமாலைக் கொன்றவர்களையும், அவரைக் கொல்ல ஆணையிட்டவர்களையும் மன்னிக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்

ஆ ராசாவுக்கு துணை பொசெ கொடுக்காத காரணம்.... எனக்கு தலித் கோட்டாவுல இப்போதைக்கு பதவி வேணாம்!

மின்னம்பலம் : “திமுகவின் மாநில நிர்வாகிகளில் முக்கிய இடம் வகிக்கும் வி.பிதுரைசாமியை அப்பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அவரது
பதவியிடத்துக்கு மாநிலங்களவை எம்பி அந்தியூர் செல்வராஜை மே 21 ஆம் தேதி நியமித்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இந்த நடவடிக்கை கூட சற்று தாமதமாகத்தான் மேற்கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் வி.பி. துரைசாமி நேற்று அளித்த பேட்டிகள்தான் அவரது நீக்கத்துக்கு உடனடி காரணமாக அமைந்துவிட்டன. மே 18 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் முருகனை, திமுக துணைப் பொதுச் செயலாளர் என்ற தலைமைக் கழக பதவியில் இருக்கும் வி.பி. துரைசாமி நேரடியாக சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தது
பரபரப்பைக் கிளப்பியது. திமுக கரைவேட்டியோடு தன் மகன், மச்சானோடு போன வி.பி. துரைசாமியின் சந்திப்பு பற்றி பாஜகவின் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டதும்தான் திமுக தலைமைக்கே தெரியவந்திருக்கிறது.

சசிகலா அடுத்த மாதம் விடுதலை...குற்றவாளிகள் மூவரும் ஜூன் ஜூலைக்குள் விடுதலை ...

மின்னம்பலம் போயஸ் கார்டன் இல்லத்தை ஜெ.வின் நினைவு இல்லமாக்க
இன்று (மே 22) தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்திருக்கும் நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் விடுதலை ஆக இருப்பதால்... விடுதலைக்குப் பின் அவர் போயஸ் கார்டன் இல்லத்துக்கு வரக் கூடாது என்பதாலும் அதை பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவும் அவசர அவசரமாக இந்த அவசர சட்டத்தை பிறப்பித்திருக்கிறார்கள் என்று தகவல்கள் பேசப்பட்டு வருகின்றன.
சசிகலா விரைவில் விடுதலையாகிறார் என்ற தகவல்கள் சில மாதங்களாகவே வந்துகொண்டிருக்க, அமமுக பொதுச் செயலாளர் தினகரனும் அவ்வப்போது ஊடகங்களில், “சட்ட ரீதியான முயற்சியில் இருக்கிறோம். விரைவில் சொல்கிறோம்’ என்று பதில் சொல்லி வந்தார். இந்த நிலையில் சசிகலா எப்போதுதான் விடுதலையாவார் என்று அவரது வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியனிடம் மின்னம்பலம் சார்பில் கேட்டோம்.

இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை.. ரஷ்ய ஆயுதங்களை வாங்கினால்..

latest tamil newss400 missile, India, America, Russia, us, sanctions, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா   தினமலர்: வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து அதிநவீன ஏவுகணைகள் வாங்கவுள்ள இந்தியா, பொருளாதார தடையை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து, 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 'எஸ்-400' ரக அதிநவீன ஏவுகணைகளை வாங்க, கடந்த ஆண்டு இந்தியா ஒப்பந்தம் போட்டது.
இதற்கு, முன்பணமாக, 6,000 கோடி ரூபாய் (800 மில்லியன் டாலர்), ரஷ்யாவுக்கு கொடுக்கப்பட்டது. இதனால், அமெரிக்கா ஆத்திரமடைந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க துணை அமைச்சர் ஆலிஸ் வெல்ஸ் கூறியதாவது: அமெரிக்க பொருளாதார தடைகள் சட்டமான கேட்சா சட்டப்படி, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் 107 பேருடன் விமானம் விழுந்து நொறுங்கியது

pakistan-passenger-plane-with-98-on-board-crashes-near-karachi-officials
hindutamil.in :பாகிஸ்தானில் லூகூரிலிருந்து 98 பயணிகள், 9 ஊழியர்கள் என மொத்தம் 107 பேருடன் இன்று புறப்பட்டுச் சென்ற பிஐஏ விமானம் கராச்சி நகர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானத்தில் 98 பயணிகள் உள்பட 107 பேர் பயணித்ததாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் காக்கர் தெரிவித்துள்ளார். விமானத்தில் பயணித்தவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. லாகூர் நகரிலிருந்து 107 பேருடன் பாகிஸ்தான் அரசின் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனத்தின் ஏ320 என்ற விமானம் கராச்சி நகருக்குப் புறப்பட்டது விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு தரையிறங்க ஒரு நிமிடம் இருந்தபோது, மலிர் பகுதியுள்ள மாடல் காலனி குடியுருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது. விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 முதல் 8 வீடுகள் வரை சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுகவை துவம்சம் செய்த ராஜீவ் காந்தி படுகொலை .. அதிமுக காங்கிஸ் கொலை வெறியாட்டம் Flashback 1991 - May 22

Arumugam Karthikeyan : இன்றக்கு ஈழம் பேசும் குழந்தைகளுக்கு தெரியுமா 29 வருடம் முன் இந்த நாளில் ஈழம் பற்றி பேசிய திமுககாரனுக்கு நடந்த சம்பவத்தை உங்கள் வீட்டுல உள்ளவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்க..
ஈழத்துக்காக செத்து பிழைத்தவர்கள் திமுககாரன் தான்...
இன்று மறக்கமுடியாத நாள். அந்த கொடூரமான தாக்குதல் இன்றும் மனதில் நீங்காது இருக்கிறது. அந்த கொலைவெறி தாக்குதலில் இருந்து உயிருடன் வெளியே வருவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு சிறிதும் இல்லை. என் தாயை வணங்கி நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். தொடர்ந்து 4 மணி நேரம் கதவை புட்டி ஒரு நாற்காலியை வைத்து முட்டுகொடுத்து தடுத்து நின்றார். அவர் அப்படி தடுத்து எங்களுடன் நிற்கவில்லை என்றால் என் தாய் தந்தை என்னுடன் சேர்ந்து ஏழு உயிர்கள் 29 ஆண்டுகளுக்கு முன்பே பலியாகியிருக்கும் அந்த கொலைவெறி தாக்குதலுக்கு.
அது வரை எவரும் வெற்றி பெற முடியாத அளவு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று என் தந்தைக்கு உளவுத்துறையில் இருந்தவர்கள் அறிக்கை ஒன்றை தந்தனர். பல லட்சம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் செங்கற்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெறுவீர்கள் என்று அந்த அறிக்கை சொன்னது. நிச்சயம் வெற்றி என்பதால் டெல்லிக்கு ப்ளைட் டிக்கெட் புக்கிங் செய்துவிட்டார்கள். ஆனால் 21ஆம் தேதிக்கு பின்னர் எல்லாம் மாறிவிட்டது.

செருப்பில்லா பிஞ்சு கால்கள் கொளுத்தும் வெயிலில்



சாவித்திரி கண்ணன் : ஏன் முடியாது?
எது தடுக்கிறது உங்களை?
உலகின் மிகப் பெரிய ரயில்வே கட்டமைப்பு கொண்டது இந்தியா! 20,000 ரயில்களை கொண்டது நமது ரயில்வேதுறை!
இந்தியாவில் அரசுகள்,மற்றும் தனியார்கள் ஆகிய இரு தரப்பிலுமாக மூன்று லட்சம் பேருந்துகள் உள்ளன!
ஒரே நாளில் 6,400 விமானங்களை பறக்கவிடும் சக்தி கொண்டது இன்றைய இந்தியா!
நமது அரசாங்கம் மனம் வைத்தால் ஒரே நாளில் அல்லது அதிகபட்சம் மூன்றே நாளில் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களையும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பிட முடியும்.!
ஏன் செய்ய மறுக்கிறீர்கள்…?
இந்த உழைக்கும் மக்கள் அல்லவா இந்தியாவைக் கட்டமைத்தவர்கள்.
இந்தியாவின் மகத்தான செல்வமே இந்த உழைப்பாளர்களின் மாபெரும் மனித வளம் தானே!
அந்த மனித வளத்தை மதித்து கண்ணும் கருத்துமாக கட்டிக் காக்கவேண்டியது பொறுப்புள்ள அரசின் கடமையல்லவா….?

அன்றும் இன்றும் நமக்கு நாமே .. பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்


மின்னம்பலம் : ஊரடங்கு மற்றும் அதனால் நெருக்கடியை சந்தித்துள்ள பொருளாதார சூழல்கள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று (மே 21) 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்க திட்டம் குறித்து வெளியே தெரியாத பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
ஜெயரஞ்சன் உரையாற்றும்போது, “அரசின் வரி வருவாயிலிருந்து செலவு செய்வது அல்லது வரிவிலக்கு செய்வதுதான் இயல்பு ஊக்கத் திட்டம் ஆகும். ஆனால், 20 லட்சம் கோடி பொருளாதார திட்டம் என்பது முழுவதும் அரசு கஜானாவிலிருந்து பணத்தை எடுத்து செலவு செய்யும் திட்டம் கிடையாது. வெறும் 2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே அரசுப் பணத்திலிருந்து செலவிடப்படுகிறது. மீதமுள்ள பெரும்பாலான நிதி ரிசர்வ் வங்கி தனது பணக் கொள்கையில் அறிவித்திருக்கக் கூடியவை. இதன் மூலம் அரசின் பொருளாதாரத்தை மீட்டெடுத்துவிடுவோம் என்பதுதான் அரசின் நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.

அந்தியூர் செல்வவராஜ் திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமனம்


oneindia.com : அந்தியூர் செல்வராஜ் நியமனம்! 
சென்னை: தமிழக சட்டசபை முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. துரைசாமியிடம் இருந்து துணைப் பொதுச்செயலர் பதவியை திமுக பறித்துள்ளது. வி.பி. துரைசாமிக்குப் பதில் ராஜ்யசபா எம்.பி.யான அந்தியூர் செல்வராஜ், திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். 
திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருந்தார் வி.பி. துரைசாமி. அண்மைக்காலமாக திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார் துரைசாமி. தமக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. 
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகனை நேரில் சந்தித்து வி.பி. துரைசாமி வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் திமுக தலைமையை விமர்சித்தும் பேட்டிகளை கொடுத்து வந்தார் விபி துரைசாமி. 
இதனால் அவர் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது கட்சி பதவி மட்டுமே வி.பி.துரைசாமியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

இன்று பாஜகவில் இணைகிறார், விபி துரைசாமி

இன்று பாஜகவில் இணைகிறார், விபி துரைசாமி தினத்தந்தி : விபி துரைசாமியிடம் இருந்து நேற்று திமுக துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது.
சென்னை, பாஜக தலைவர் முருகனைச் சந்தித்ததாலும், திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி அளித்ததாலும் முன்னாள் துணை சபாநாயகரும், திமுக துணை பொதுச்செயலாளருமான வி.பி.துரைசாமியின் பதவி நேற்று பறிக்கப்பட்டது. அவருக்குப் பதில் அந்தியூர் செல்வராஜ் திமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தான் பாஜகவில் இன்று இணைய இருப்பதாக விபி துரைசாமி தெரிவித்துள்ளார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்குமாறு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தியின் இந்திய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது;.. சுமந்திரன் எம்பி

hindutamil.in/ : ஏன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்றும் முக்கியமானதாகிறத?
ஜூலை 29, 1987 என்பது இலங்கை வரலாற்றின் முக்கியமான நாள்.
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனேயுடன் கொழும்பு நகரில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க இலங்கை அதில் வாக்குறுதி அளித்திருந்தது.
அதே நாளில் பின்னர் நடந்த அணிவகுப்பு மரியாதையின்போது இலங்கைக் கடற்படை வீரர் ஒருவர் திடீரென துப்பாக்கியின் அடிக்கட்டையால் ராஜீவைத் தாக்க முயன்ற சம்பவத்தையும் மறக்க முடியாது. ராஜீவ் காந்தி மட்டும் உள்ளுணர்வு காரணமாகத் திரும்பிப் பார்த்துவிட்டு தலையைக் குனிந்திருக்காவிட்டால் அவருடைய மண்டை உடைபட்டிருக்கும்.
அவருக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தால் இலங்கையின் வரலாறே வேறு மாதிரியாகியிருக்கும்; நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படாமல் இருந்திருந்தால் இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்க்கையும் மாறியிருக்கும்.
இந்திய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது;
இறையாண்மை மிக்க இரண்டு நாடுகள் பரஸ்பரம் செய்துகொண்ட சர்வதேச உடன்பாடு இது. தமிழின மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உள்நாட்டு அரசியல் அமைப்பு திருத்தியமைக்கப்படும் என்று ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு உறுதிமொழி அளித்த உடன்பாடு. இலங்கையின் ஒற்றுமை, இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பெரிய லட்சியமாக மக்களிடையே பேசிப் பிரபலப்படுத்திய அதிபர் ஜெயவர்தனே, உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கப் பக்கத்து நாட்டுக்கு வாக்குறுதி அளித்து உடன்படிக்கை செய்துகொண்டது,

வியாழன், 21 மே, 2020

தாயின் சேலையை கிழித்து.. கழுத்தை நெரித்து.. அந்த பாழாய்போன குடிதான்!.. கன்னியாகுமரி ..

m.dailyhunt.in : கன்னியாகுமரி: பெற்ற தாயின் சேலையை கிழித்து உருவி.. அவரது கழுத்தையும் நெரித்து கொல்ல முயன்றுள்ளார் மகன்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த நாசமா போன குடிதான்!!! மகன் அம்மாவின் புடவையை கிழித்ததும், கழுத்தை நெரிப்பதும் வீடியோவாக வெளிவந்து மிகப்பெரிய அதிர்ச்சியை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
டாஸ்மாக் 55 நாட்களாக திறக்காத தமிழகத்தில் வன்முறை எண்ணிக்கை குறைந்தே இருந்தது.. யாரும் வீடுகளை விட்டு வராததாலும், கொரோனா அச்சத்தாலும் திருடுவதும், பெண்களை மானபங்கப்படுத்துவதும் இல்லாமல் இருந்தது.
ஆனால் டாஸ்மாக்கை திறந்த அன்றே மாவட்டங்களில் ரத்தவாடை வீச தொடங்கிவிட்டது.. கொலை, குத்துகள், சர்வசாதாரணமாக இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன.. நாளுக்கு நாள் குடிமகன்களின் அட்டகாசமும் பெருகியபடியே உள்ளது.

தூத்துக்குடி வடமானில தொழிலார்களை 3 சிறப்பு ரயில்ககள் மூலம் ...

tutucorin-collector-interviewhindutamil.in :தூத்துக்குடியில் இருந்து இந்த வாரத்தில் 3 ரயில் மூலம் பஞ்சாப், உத்தரப் பிதேசம் மற்றும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்து மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று சமூகப் பரவல் ஏற்படவில்லை. முதலில் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள், தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள், தற்போது மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வருவோருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் தான் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

சோனியா ஆலோசனை: பங்கேற்கும் ஸ்டாலின்

சோனியா ஆலோசனை: பங்கேற்கும் ஸ்டாலின்மின்னம்பலம் : சோனியா காந்தி நடத்தும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 21ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இதனால் அன்றாடப் பணியாளர்கள் உள்பட பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இல்லாததால் பசிக் கொடுமையின் காரணமாக ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் தங்களது சொந்த கிராமங்களுக்கு நடந்தே செல்கின்றனர்
. நடந்து செல்லும்போது பசி, சோர்வு காரணமாகவும் விபத்திலும் ஏராளமானோர் உயிரிழந்துவிட்டனர். புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா உறுதி ...

வெப்துனியா :சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
இநிநிலையில் கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
4 வது கட்ட பொது ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது.
 இன்று ஒரே நாளில் கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர் .இதுவரை மாநிலத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால்

மதமும் அரசியலும் ஒருவரை முற்றிலுமாக சிந்திக்க விடாது

Dhinakaran Chelliah : ஒரு நண்பர் தொலை பேசியில் கூறினார் இந்த வட
மாநிலத்தவர்கள் கொழுப்பெடுத்துப் போய் தங்களது ஊர் நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று.
இன்னொருவர் சொன்னார் இந்திய ஊடகங்கள் அனைத்தும் வட மாநில தொழிலாளர்கள் பற்றித் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள் என்று.
மற்றொருவர் எழுதியிருந்தார் முன்னாள் BJP மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போன்றவர்கள் ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஆளும் அரசை எதிர்ப்பதுதான் அவர் போன்றவர்களின் வேலை என்று.
வடமாநிலத் தொழிலாளர் ஒருவர் ரோட்டில் நடந்து கொண்டே “மோடிஜி எங்களைப் பற்றி கவலை வேண்டாம், இது வரை 700 கி.மீ நடந்திருக்கிறோம், இன்னும் எத்தனை கி.மீ நடந்தாலும் எங்களைப் பற்றி கவலை வேண்டாம், நீங்கள் நாட்டை மட்டும் பாதுகாத்தால் போதும்” என்று கூறிய வீடியோவை பதிவு செய்திருந்தார்.

ஸ்டாலினுக்கு வி.பி.துரைசாமி சொன்ன பதில்!.

 தான் வகித்து வரும் துணைப் பொதுச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்காது என்றும், அந்தப் பதவி ஆ.ராசாவுக்குத் தரப்படப் போகிறது என்ற அதிருப்த்தியா?
ஸ்டாலினுக்கு வி.பி.துரைசாமி சொன்ன பதில்! மின்னம்பலம் : :  மே 18ஆம் தேதி மாலை திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வி.பி.துரைசாமி தமிழக பாஜக தலைவரான எல்.முருகனை கமலாலயத்தில் சென்று சந்தித்து வாழ்த்தியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழக பாஜகவின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான குறிப்பைத் தவிர வேறு விளக்கங்கள் உடனடியாக பகிரப்படவில்லை.
இதுகுறித்து வி.பி.துரைசாமியிடம் கருத்துக் கேட்க பல பத்திரிகையாளர்கள் முயன்றும் அவர் பிடி கொடுக்கவில்லை. ‘திமுகவில் மரியாதை இல்லை! - வி.பி. துரைசாமி - முருகன் சந்திப்பு பின்னணி!’ என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் வெளியான செய்தியில், வி.பி.துரைசாமி நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களிடம் இந்தச் சந்திப்பு குறித்து பேசியதைப் பதிவு செய்திருந்தோம்.

ராஜீவ் மீதான கொலை முயற்சிகள்!.. சிறப்புக் கட்டுரை

மின்னம்பலம்:   ஆர்.முத்துக்குமார் அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்துகொண்டிருந்த
தணு-  -    நளினி
தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுக்குப் பலியானார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. 1991 மே 21இல் நடந்த அந்தப் படுகொலை இந்தியாவில் நிகழ்ந்த பயங்கரவாதச் செயல்களுள் முக்கியமானது. அந்தக் கொலையைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி ரத்த வெள்ளத்தில் மிதந்த காட்சி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியெடுத்துவிட்டது. அந்தக் கொலைக்குக் காரணம் யார் என்ற கேள்வியில் தொடங்கிய விசாரணை பல ஆண்டுகளுக்கு நீடித்து, ஒருவழியாகக் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தண்டனைகளும் விதிக்கப்பட்டன.
 உண்மையில், ஸ்ரீபெரும்புதூரில் நடந்தது ராஜீவைக் கொல்வதற்கான இறுதி முயற்சி. அது அவருடைய உயிரைக் குடித்துவிட்டது. ஆனால், அதற்கு முன்னரே ராஜீவ் காந்தி மீது வெவ்வேறு காலகட்டங்களில் கொலை முயற்சிகள் நடந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றில் இருந்தும் நல்வாய்ப்பாகத் தப்பியிருக்கிறார் ராஜீவ் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். அப்படித்தான் சொல்கின்றன வரலாற்றுப் பக்கங்கள்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 1,561 பேர் கொரோனா உயிரிழப்பு

தினத்தந்தி :வாஷிங்டன், கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் வசப்படுத்தி விட்டது. ஒவ்வொரு நாடும் இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பு உத்திகளை வகுத்து செயல்படுத்தி வந்தாலும்கூட, கொரோனாவின் ஆதிக்கம் குறைந்தபாடில்லை. சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக இந்த வைரஸ் வெளிப்பட்டது. இந்த 5 மாத காலத்தில் அது 200 நாடுகளில் கால் பதித்து விட்டது. உலக அளவில் வல்லரசு நாடான அமெரிக்காதான் கொரோனா பாதிப்பால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,561- பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 94,994- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,591,991 ஆக உள்ளது

இன்று அமரர் ராஜீவ் காந்தி நினைவு நாள் ..


Uma Magi :இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட நாள்...
💥பயங்கரவாத எதிர்ப்பு நாள்
💥தமிழகத்திற்கு தீரா களங்கம் உண்டான நாள்
💥எவனோ செய்த பாதகத்திற்கு திமுக பழி சுமந்த நாள்.
💥அடைக்கலமும்,போர்ப்
பயிற்சியும் அளித்த நாட்டின் மேனாள் பிரதமரையே படுகொலை செய்து தங்கள் நன்றி கொன்ற குணத்தை புலிகள் உலகிற்கு படம் போட்டு காட்டிய நாள்.
💥சகோதர இயக்கங்களைக்கூட தீவிரவாத வழியில் தீர்த்துக்கட்டிவிட்டு ஏகபோக போராளிகளாக தங்களை பிரகடனப்படுத்திக் கொண்ட இயக்கத்தினரின் தமிழக படுகொலை சம்பவத்தால் அவர்கள் மீது தமிழர்கள் வெறுப்பும், கோபமும் கொண்ட நாள்.
💥இந்தியப்பிரதமரை கொன்ற குற்றவாளியான ஒரு இயக்கத்தின் தலைவனை தனது ஆதர்ஷமாக வெளிப்படையாக கொடி பிடித்து கோஷம் போடுபவர்களை இன்று நாம் மெளனமாய் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிகிறது.
💥இனம்,மொழி, சாதி, மதம் என எதன் பெயரால் நடந்தாலும் தீவிரவாதத்தை ஆதரிக்க முடியாது.
💥என்ன காரணம் சொல்லியும் இந்தப்படுகொலையை நியாயப்படுத்த இயலாது.

முள்ளி வாய்க்காலுக்கு பிந்திய திடீர் கோடீஸ்வரர்கள்.. லண்டன்

கலா ஶ்ரீரஞ்சன் : ; முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஓர் ஆனித்திருநாளில் மறைந்த திரு.அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு உரித்தான வீடொன்று லண்டனில் சீல் வைக்கப்பட்டது. அது தெரியாமல், நான் பாட்டுக்கு வீட்டில் இரண்டு குழந்தைகளுக்கும் படிப்பித்துக் கொண்டிருக்க கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன்.
இரண்டு வளர்ந்த ஆங்கிலேய குழந்தைகள், படங்களில் வரும் கதாநாயகர்கள் போல் சொல்லி வைத்தாற்போல் ஒரே நேரத்தில் தமது அடையாள அட்டையை என் முகத்துக்கு நேரே பிடித்தார்கள். கோதாரி விழ, ஸ்கொட்லண்ட் யார்ட் ( Scotland Yard) வந்து கைது செய்யுமளவுக்கு நான் என்னத்தை செய்தன் எண்டு யோசித்து முடிக்க முன்னமேயே அவர்கள் வலும் பௌவியமாக தமது காருக்குள் இருக்கும் ஒரு பெண்ணையும் மூன்று குழந்தைகளையும் காட்டி இவர்களைத் தெரிகிறதா? இவர்களுக்குப் படிப்பித்தாயா? என்றதும், நான் படிப்பிச்சது சரியில்லையோ என்றொரு கவலையும் மின்னலாய் வந்து போயிற்று.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக புலிகள் அரங்கேற்றிய கொடூரங்கள் .. முழு விபரம் . வீடியோ


 Soodram :  பிரபாகரன் யார்? : 78ஆயிரம் ஈழத்தமிழ் முஸ்லிம்களை காத்தான்குடியில் இருந்து துரத்தி,
140 ஈழத்தமிழ் முஸ்லிம்களை சுட்டுகொன்ற விடுதலை புலிகள் தலைவன் பிரபாகரன். தமிழினத்தையே கேவலப்படுத்தி தலைகுனிய வைத்த தமிழ்ப் பாசிசப் விடுதலைப்புலிகளின் படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்...
இந்த அரசியல்வாதிகள் பொய்யுரைப்பதன் காரணம் என்னவெனில் வெளிநாடுகளில் எஞ்சியிருக்கின்ற புலிப்பயங்கரவாதிகள் கொடுக்கின்ற பெருந்தொகைப்பணத்திற்காகவும், அரசியல் சுயலாபத்திற்காகவு மேயாகும்
தமிழ்நாட்டு மக்கள் உண்மைநிலையை அறியும் பொருட்டு புலிகள் செய்த அட்டூழியங்களை வீடியோ புகைப்பட ஆதாரங்களுடன் தருகிறோம்...
இதனைப் பார்த்து விட்டு தீவிரவாதிகளான அந்த அரசியல்வாதிகளிடம் உண்மை நிலையை தெரிவியுங்கள்... அப்போதாவது தீவிரவாதத்தை கைவிடுகிறார்கள் என்று பார்ப்போம்....
புலிகள் முஸ்லிம் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் எமக்கு இரத்த கண்ணீரை வரவழைக்கும். கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்கை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்து அதனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம்..... இப்படி அவர்களின் காட்டுமிராண்டி கொலைகளை சொல்லக் கொண்டே போகலாம். புலிகள் செய்த படுகொலைகளில் சில...
இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு ; வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர்.
யாழ்ப் பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது

புதன், 20 மே, 2020

அயோத்தி தாசர் ..முதல் Resistant. சாதி மதங்களற்ற திராவிட சித்தாந்தத்தை வடிவமைத்தத்தவர்

Karthikeyan Fastura : · இணையமோ, முகநூலோ அற்ற உலகத்தையும்
பார்த்திருக்கிறேன். புத்தகங்கள் என்றால் நூலகத்திற்கு தான் செல்ல வேண்டும். எந்த ஊருக்கு சென்றாலும் அங்கே நூலகம் எங்கே இருக்கிறது என்பதை தேடுவது தான் என் முதல் வேலை. நான் தொலைந்து போனால் என் உறவுகள் தேடுவது நூலகத்தில் தான். இப்படித்தான் அறிவை தேடிக் கொண்டே இருந்தேன். எல்லாத் துறைகளிலும் ஆர்வமும் கொஞ்சம் அறிவும் கிடைத்தது இப்படித் தான். ஆனால் ஒருவரை பற்றி அறியாமல் இருந்திருக்கிறேன் பல காலமாக என்றால் அது அயோத்திதாசர் தான். பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு வினவு கட்டுரையில் கேள்விப்படுகிறேன். ஆனால் அதற்கு முன்பு உலகத்தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை நான் படிக்காத பெரும் ஆளுமைகள் இல்லை எனும் அளவிற்கு பார்த்துவிட்டேன். கம்யூனிச மூலதன புத்தகத்தை தொடும்போது எனக்கு 13 வயது. 18 வயதில் காரல் மார்க்ஸ் ஜென்னி தம்பதிகளின் காதல் வரை பார்த்தாயிற்று. பிறகு பெரியார் உள்ளே வந்தார். அம்பேத்கார் உள்ளே வந்தார். மதமும் சாதியும் வெளியே போனது எல்லாம் வேறு கதை
அயோத்திதாசரை நான் ஏன் மிகத் தாமதமாக அறிந்துகொண்டேன். ஏன் நான் படித்த சமூக வரலாற்று நூல்களில் இல்லாமல் போனார்? என்ற கேள்விக்கு ஒரே பதில் பார்ப்பனியம். இதை பார்ப்பனர்கள் உருவாக்கினாலும் அவர்களை விட தீவிரமாக கடைபிடிப்பவர்களாக எல்லா சமூகத்தினரும் இருந்திருக்கிறார்கள்.

தைலா மரக்காட்டில் சிறுமி அடித்து கொலை 13 வயது மாணவி புதுக்கோட்டை... வீடியோ


tamil.oneindia.com : புதுக்கோட்டை: தைல மரக்காட்டில் உடம்பெல்லாம் ரத்த காயங்களுடன் விழுந்து கிடந்த 13 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.. தீவிர சிகிச்சை அளித்தும் அந்த பிஞ்சை காப்பாற்ற முடியாமல் போய்விட்ட நிலையில், தற்போது அதிர்ச்சி தரக்கூடிய அவரது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துள்ளது.
கந்தர்வகோட்டை அருகே உள்ளது நொடியூர் என்ற கிராமம்.. இந்த கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கு வயது 13 ஆகிறது.. 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.. இந்த கிராமத்தை ஒட்டி பாப்பான்குளம் என்ற பகுதி உள்ளது.. நேற்றுமுன்தினம் அங்குள்ள குளத்துக்கு அருகே உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சிறுமி சென்றிருக்கிறார்.. அப்போது மர்மநபர்கள் சிறுமியை தைல மரக்காட்டிற்கு தூக்கி சென்றுள்ளனர்.. இந்த பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் தைல மரக்காடு உள்ளது. காட்டுக்குள் சிறுமி செல்வதை பார்த்து பின்தொடர்ந்து வந்துள்ளனர் போல தெரிகிறது... சிறிது நேரம் கழித்து, சிறுமி தைலமரக்காட்டில் படுகாயங்களுடன் விழுந்து கிடப்பதை அவ்வழியாக சென்ற பொது< காட்டுக்குள் சிறுமி செல்வதை பார்த்து பின்தொடர்ந்து வந்துள்ளனர் போல தெரிகிறது...
 சிறிது நேரம் கழித்து, சிறுமி தைலமரக்காட்டில் படுகாயங்களுடன் விழுந்து கிடப்பதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் சொன்னார்கள். அவர்கள் விரைந்து வந்து பெண்ணை மீட்டு தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. தீவிரமான சிகிச்சை தரப்பட்டும் சிறுமி பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேற்கு வங்கத்தில் பல பகுதிகளை புரட்டி போட்ட ஆம்பன் புயல்

மேற்கு வங்காளத்தில் பல பகுதிகளை புரட்டி போட்ட ஆம்பன் புயல் தினத்தந்தி : மேற்கு வங்காளத்தில் ஆம்பன் புயல் பல பகுதிகளை புரட்டி போட்டுள்ளதுடன் வெள்ள காடாக உருமாற்றி உள்ளது. கொல்கத்தா, தெற்கு வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, இன்று மதியம் 2.30 மணியளவில் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி கரையை கடக்க தொடங்கியது.  தொடர்ந்து முன்பகுதி, நடுப்பகுதி பின்னர் கடைசி பகுதி என மாலை 3.30 மணி முதல் 5.30 மணிவரைக்குள் புயல் முழு அளவில் கரையை கடந்தது.
இந்த புயலால், மேற்கு வங்காளத்தில், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட கூடும்.  கொல்கத்தா, ஹூக்ளி, ஹவுரா மற்றும் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் காற்று மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் வீசும்.  இது மணிக்கு 135 கி.மீட்டர் வரை வேகமெடுக்கும் என கூறப்பட்டது. இந்த புயலானது ஒடிசாவின் பத்ரக் மற்றும் பாலசோர் பகுதிகளில் தொடர்ந்து 2 முதல் 3 மணிநேரம் வரை பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை.. புக்கிங்கை திறந்த தனியார் விமான நிறுவனங்கள்

Velmurugan P tamil.oneindia.com/  :  டெல்லி: தனியார் விமான நிறுவனங்கள் மே 25  முதல் உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்க உள்ளதாக முன்பதிவை திறந்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு தழுவிய லாக்டவுன் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான சேவைகள் மே 31 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக விமான ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 
 இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை மாலை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி, "உள்நாட்டு விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவெடுப்பது விமான போக்குவரத்து துறை அமைச்சகமோ அல்லது மத்திய அரசு மட்டும் அல்ல. கூட்டுறவு கூட்டாட்சிவாதத்தின் உணர்வில், இந்த விமானங்கள் புறப்படும் மற்றும் சேரும் மாநில அரசுகளின் கையில் உள்ளது. 

பிரியங்கா : 1000 பேருந்துகளை அனுமதியுங்கள் ..பாஜக பேனர்களை வேண்டுமென்றால் தொங்க விடுங்கள்

.hindutamil.in : புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா வதேராவின் பேருந்து உதவிகளை யோகி ஆதித்யநாத் அரசு ஏற்றுக் கொண்டு அனுமதிக்க வேண்டுமென்று கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்கிறோம் என்று காங்கிரஸ் செய்தித் தொர்பாளர் அபிஷேக் சிங்வி கேட்டுக் கொண்டுள்ளார்.
தொழிலாளர்கள் உணவு, குடிநீரின்றி சாலைகளில் நடந்து வருகின்றனர், இந்தச் சமயத்தில் வெட்கங்கெட்டத் தனமாக அரசியல் செய்கிறது உ.பி. அரசு என்று சிங்வி சாடினார்
இது தொடர்பாக அபிஷேக் சிங்வி செய்தியாளர்களை தொலைமாநாட்டில் சந்தித்து பேசிய போது, “கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். ஆதித்யநாத் அரசு அவர்களுக்கு உதவ முடியவில்லை எனில் பிரியங்காஜி உதவிக்கு அனுமதிக்க வேண்டும்
இன்னும் காலம் கடந்து விடவில்லை, மீண்டும் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன், பிரியங்கா காந்தி கூறுவது போல் உங்கள் பெயரயோ, கட்சியின் பேனரையோ பஸ்களில் வைத்துக் கொள்ளுங்கள், குறைந்தது நாங்கல் அளிக்கும் உதவியையாவது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நான் இந்தச் செய்கையைக் கண்டிக்கிறேன், தேசம் இதைக் கண்டிக்கிறது. இது வெட்கங்கெட்ட அரசியல், நெருக்கடியிலும் புலம்பெயர் தொழிலாளர்களின் கஷ்டத்தில் செய்யப்படும் அரசியலாகும் இது.

புதுசேரியில் 10 மாதம் சம்பளம் வழங்கவில்லை... பொதுப்பணித்துறை ஊழியர்கள் தர்ணா போரட்டம்!

வெப்துனியா :புதுச்சேரியைச் சேர்ந்த பொதுப்பணித்துறையில் பணியாற்றிவரும் தினக் கூலித் தொழிலாளர்கள் நிலுவையில் உள்ள சம்பளத்தைக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறையில் 1311 தினக்கூலி பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10
மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதால் சம்பளத்தை வழங்கக் கோரி தலைமைப் பொறியாளர் அலுவலக ஊழியர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் புதுச்சேரி சட்டமன்றம் நோக்கி ஊர்வலமாக வந்தனர் அவர்களை போலீஸார் சட்டமன்றத்திற்கு முன்பாகவே தடுத்தி நிறுத்தினர். அதனால், பணியாளர்கள் சாலையில் அமர்ந்து 10 மாத சம்பளத்தை தர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் போலீஸார் அனைவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது<

உதயநிதியை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிய ஸ்டாலின்

உதயநிதியை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிய ஸ்டாலின்மின்னம்பலம் : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக இளைஞரணி பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று (மே 20) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது. ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டைன் நேற்று அறிவித்தார். இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி ஜூலையில் தேர்வை நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை எழுந்து வந்தது.
அதுபோன்று திமுக இளைஞரணி பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று திடீரென தலைமைச் செயலகத்தில், அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்து பத்தாம் வகுப்புத் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதியுடன் திமுக. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

‘பேருந்து போர்’- காங்கிரஸ் பேருந்துகளை நிறுத்திய உ.பி. அரசு.. பிரியங்கா காந்தி .. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு


hindutamil.in/  :புலம்பெயர் தொழிலாளர்களை முன் வைத்து மிகவும் கசப்பான ‘பேருந்து போர்’ நடைபெற்று வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளை நொய்டாவின் செக்டார் 39 அருகே உ.பி.போலீசார் தடுத்து நிறுத்தி மேலும் செல்வதற்குத் தடை விதித்தனர்.
இது தொடர்பாக உ.பி. காங்கிரஸ் கமிட்டி நிர்வாகியும் முன்னாள் ஷாம்லி எம்.எல்.ஏ.வுமான பங்கஜ் மாலிக் கூறும்போது, “எங்கள் தலைவர் பிரியங்கா காந்தி 1000 பஸ்களை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் பாஜக அரசு அரசியல் செய்கிறது, உதவுவதற்குப் பதிலாக இடையூறு செய்கிறது” என்றார்.
இதற்கிடையே பிரியங்கா காந்தியின் தனிப்பட்ட உதவியாளர் சந்தீப் சிங் உ.பி. அரசுக்கு கடிதம் எழுதி புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பேருந்துகள் அந்தந்த நுழைவாயில்களில் காத்திருக்கின்றன. அதிகாலை 4 மணி வரை உ.பி அரசு அனுமதிக்காகக் காத்திருக்கிறோம், என்று மின்னஞ்சல் செய்துள்ளார்.
உபி அரசு பேருந்துகளைநொய்டாவுக்கும் காஸியாபாத்துக்கும் கொண்டு செல்லக் கோரியுள்ளது.

இலங்கையில் பெருமழை.. நீரில் மூழ்கிய நகரங்கள் – 5 பேர் உயிரிழப்பு


இலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் பெருமளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் மத்திய மற்றும் தென் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மழையுடனான வானிலை நிலவிவருகின்றது. இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் பெய்த கடும் மழையுடனான வானிலையினால் இன்று நண்பகல் பல நகரங்கள் நீரில் மூழ்கின. குறிப்பாக ரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகரம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது.
பலாங்கொடை நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. நகர் பகுதிகளில் 5 அடி வரை வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாகவும், நகரை அண்மித்த பகுதிகளில் சுமார் 10 அடியை விடவும் அதிக உயரத்திற்கு நீர் உட்புகுந்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

கொரோனாவில் இருந்து 4 நாட்களில் குணமடைய புதிய மருந்து கலவை - வங்காள தேச டாக்டர்கள் சாதனை

தினத்தந்தி :கொரோனாவில் இருந்து 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்து கலவையை கண்டறிந்துள்ளதாக வங்கதேச டாக்டர்கள் அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் பரிதவித்து வருகின்றன.உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிய கடந்த 6 மாதமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இன்றளவும் அதிகாரப்பூர்வமாக எந்த நாடும் தடுப்பு மருந்தினை கண்டறியவில்லை.
சில நாடுகள் விலங்குகளிடம் சோதனை செய்யப்பட்டு வெற்றிப் பெற்றதாகவும், மனிதர்களுக்கு சோதனையிட இருப்பதாகவும் கூறி வருகின்றன.
இந்நிலையில், வங்கதேச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த தரெக் ஆலம் என்ற டாக்டரின் குழு, கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்து கலவையை கண்டறிந்துள்ளது. தரெக் ஆலம் தலைமையிலான குழு, கொரோனா குறித்து ஆய்வு செய்து வந்தனர்.
அதற்கான தடுப்பு மருந்தினை உருவாக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு மெக்டின் மற்றும் டாக்ஸி-சைக்ளின் ஆகிய மருந்துகளை கலந்து அளித்தும் சோதித்துள்ளனர். 60 பேரிடம் நடத்தப்பட்ட இந்த சோதனையின் முடிவில் 4 ஆம் நாளிலேயே 60 பேரும் வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

இங்கிலாந்தில் இறந்தவர்கள் அனைவருமே உறுப்பு தானம் செய்வோர்தான் ... புது சட்டம்

All adults in England will be considered organ donors when they die, after a change to the law this week that will presume consent unless the family intervenes or the individual opts out.
Jeyan Deva : · The Guardian · இன்று (மே 20) இங்கிலாந்தின் மருத்துவ சேவையில் ஒரு பெரும் மாற்றம் நிகழும் தினமாகும்.. வளர்ந்த பிரஜைகள் ஒவ்வொருவரும் தமது உறுப்புக்களைத் தானமளிப்பவராக ( organ donor) இன்றிலிருந்து சட்டத்தின் முன் கருதப்படுவர்..
ஒரு நபர் இறக்கும் போது, அவரது சிறுநீரகம், இதயம் முதலான உடலுறுப்புக்களைத் தேவையான ஒருவருக்கு மாற்றும் அதிகாரத்தை மருத்துவர்களுக்கு சட்டம் வழங்குகிறது..
இவ்வளவு காலமும் தனது மரணத்தின் பின் தனது உடலுறுப்புக்களைத் தானமாக ஙழங்குவது ஒருவரது விருப்பத் தெரிவாக இருந்தது. இச் சட்ட மாற்றத்தின் மூலம், சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புக்களின் மாற்று சிகிச்சைக்காகக் காத்திருக்கும் ஆயிரக் கணக்கான நோயாளர் பயனடவர் என எதிர்பார்க்கப் படுகிறது..
 https://www.theguardian.com/society/2020/may/19/deceased-uk-adults-to-be-deemed-organ-donors-in-opt-out-system?CMP=share_btn_fb&fbclid=IwAR2WexJczOQek2Odkv9YMl7V_PKQR_KG01mLWy-vmuXs98KgqTj8KyXPXCM

ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றை புலிகளின் மடியில் தேடாதீர்கள்!.. Rubasangary Veerasingam Gnanasangary :

செல்வம் வைரம் : தோழர் திலீபனின் மரணத்தை கொச்சைபடுத்துவதை தவிர்க்கவும் சொட்டு தண்ணீர் கூடுடிக்காமல் உயிர் நீத்தவர் திலீபன் இன்றும் கூட கண்ணாடி அணிந்திருக்கும் அவரது முகம் என் ஞாபகத்தில் உள்ளது...
Rubasangary Veerasingam Gnanasangary :  மரணத்தை யாரும் கொச்சைப் படுத்தவில்லை. ஆனால் தியாகம் என்று எங்களுக்கு பாடம் எடுக்காதீர்கள். வற்புறுத்தலின் பேரால் திலீபன் உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்து கொண்டார்.
திலீபனின் பிணத்தை வைத்து நடாத்திய திருவிழாக்கள் முடியும் தருவாயில் குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிருவர் கட்டாயப்படுத்தி தற்கொலை செய்துகொள்ள வைக்கப்பட்டனர். இலங்கை தொலைக்காட்சி ஊடகவியலாளட்கள் உட்பட புலிகளின் பாதுகாப்பில் இருந்த இராணுவத்தினர் சிலர் கொலைசெய்யப்பட்டு பொது மக்களுக்கு காட்சிப் படுத்தினர். மறுநாள் இந்திய இராவத்தினர் மீது தாக்குதல் நடாத்தி போரை ஆரம்பித்து வைத்தனர். முட்டாள் பிரபாகரனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஒன்றா இரெண்டா எல்லாவற்றையும் மறந்துவிட...
 வளன்பிச்சைவளன் செல்வம் வைரம் அவர் தியாகத்தை யாம் கொச்சை படுத்துவதாக தாம் தவறாக எண்ணிக் கொண்டு உள்ளீர். உண்ணாவிரதம் ஆரம்பம் ஏன் என்பதே அன்று பிரபாகரன் பேச்சு வார்த்தை க்கு வரும் போது அவரை கைது செய்ய அல்லது சுட்டுக் கொல்ல தீட்சித் உத்தரவு அது நல்லெண்ண இந்திய அதிகாரிகள் அதை புலிகளுக்கு தெரியப் படுத்த அங்கு செல்வதை தவிர்க்க உண்ணாவிரதம் எனும் திசை திருப்பல் துவங்கப் பட்டது. புலிகள் திலீபனை பலி கொடுத்தார்கள் என்பதே உண்மை.....
 Arul Narayana : உங்களின் பதிவில் இருப்பது போல் 50 இலட்சம் மாதாமாதம் இந்திய அரசால் புலிகளுக்கு தரப்பட்டது என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறீர்? *திமுக ஆட்சியை கலைத்ததில் சூனாசாமியை பற்றி மூச்சு கூட விடாமல் பாதுகாப்பதின் இரகசியமென்ன? * திலீபன் உண்ணாவிரதத்தை கூட கேவலப்படுத்தவும் உங்களுக்கு வருமென்றால் ...  மற்ற போராளி குழுக்கள் அந்த நேரத்தில் என்ன செய்து சாதித்து கொண்டிருந்தனர்? பிரபாகரனின் பிம்பத்தை உடைப்பதாக எண்ணி... உங்களின் பிம்பத்தை தான் உடைத்துக் கொண்டுள்ளீர்.....

ராஜீவ் படு கொலை .. வி பி சிங் பிரதமராவதை தடுத்தது . திமுகவை தோற்கடித்து ஈழத்துக்கு சவக்குழி தோண்டியது


வளன்பிச்சைவளன் :  பகுதி - 1
 ஊரைப் பகைக்கின் வேருடன் கெடும் உலகைப் பகைக்கின்?
சர்வதேச நாட்டு தூதர்கள் மீது  அர்டிலெறி தாக்குதல்!
தமிழகத்தில் ஈழப்போரட்டத்தை  முன்னிறுத்தி அரசியல் பிழைப்பு வாதம்.
ஈழ விடுதலைப் போராட் டத்திற்கான தார்மீக ஆதரவை மிகச்சரியாக முழுமையாக செய்த தமிழகம். தமிழகத்தில் அரசியல் படுகொலைகள் மூலம் தமிழக மக்களின் ஈழ விடுதலை ஆதரவுத் தளத்தை சிதைத்த விடுதலைப் புலிகள்.
ராஜீவ்படுகொலைக்குமுன் :
1983 ஈழத்தில் இனக் கலவரம் இந்திய அரசு தலையிட்டு படுகொலைகளைத் தடுக்க ஒரு மாத காலம் தமிழகம் போர் கோலம் பூண்டது இந்திய பிரதமர் இந்திரா காந்தி திமுக உறுப்பினர்களின் ஆவேச உரையைத் தொடர்ந்து இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலை எனஅறிவி த்தார் தமிழ் இளைஞர்களுக்கு இந்திய அரசு இராணுவ பயிற்சி அளித்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முகாம்கள் அமைத்தனர் ஈழத் தமிழ் இளைஞர்கள்.
தமிழகம் ஈழ விடுதலைப் போரா ட்ட த்தை வீறுகோள்ள வைத்த
தமிழக த்தின் வெற்றி.

உஸ்மான் ரோடு... யார் இந்த உஸ்மான்? Khan Bahadur Sir Mohamad Usman

Mitheen : சென்னையின் மிக முக்கியமான ஒரு சாலையின் பெயர் உஸ்மான் ரோடு.யார் இந்த உஸ்மான்.
Khan Bahadur Sir Mohamad Usman
1916 ம் ஆண்டு ஜஸ்டிஸ் பார்ட்டி என அழைக்கப்பட்ட நீதிக் கட்சியில் சேர்ந்த உஸ்மான் சில ஆண்டுகளிலேயே சென்னை மாகானப் பொதுச் செயலாளராகத் தேர்வானார்.
1920 ல் நீதிக் கட்சி வேட்பாளரான உஸ்மான் சென்னை நகர முஸ்லிம் தனித் தொகுதியில் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினரானார்.
1932-1934 திரு .பொப்பிலி ராஜா மாகாண பிரதம மந்திரியாக இருந்த போது உஸ்மான் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
உஸமான் முனைப்புடன் செயல்படுத்திய முக்கிய சீர்திருத்தங்கள்.
 சென்னை சிறுவர் குற்றவாளிகள் பள்ளிச் சட்டம் 1925ஐ கொண்டு வந்தார்.இதன் காரணமாகவே சிறுவர் குற்றவாளிகள் கல்வி பயில முடிந்தது.
தோட்டத் தொழிலாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம் 1927 ம் ஆண்டு.இச்சட்டத்தின் வாயிலாக ஒப்பந்தக்காரர்களாலும் தரகர்களாலும் இன்னலில்லாமல் தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பு பெற்றனர்.
1930ம் ஆண்டு விபச்சார ஒழிப்புச் சட்டம்.

செவ்வாய், 19 மே, 2020

பெண்களை “மதிப்பதில்” புலி இலக்கியவாதிகள் பாஜகவுக்கே முன்னோடிகள்!

LR Jagadheesan : பெண்களை “மதித்து கௌரவிப்பதில்” ஈழத்து புலி இலக்கியவாதிகள் பாஜகவுக்கே முன்னோடிகள்!
பெருமளவு புலம்பெயர் ஈழத்தமிழரின் வெளிநாட்டு வெள்ளிக்காசு உபயத்தில் மட்டுமே இன்னமும் ஆண்டுக்கொருமுறை தமிழ்நாட்டில் உயிர் பெறும் தமிழ்த்தேசியர்களின் வருடாந்த இருநாள் திவசத்துயர் முடிந்த களைப்பு ஒரு பக்கம். பொதுவாழ்வில் தம்மை விமர்சிக்கும் அல்லது எதிர்தரப்பு பெண்களை எதிர்கொள்வதில் பாஜகவினர் தொடர்ந்து பொதுவெளியில் வெளிப்படுத்தும் கீழ்மையால் கனன்று கொண்டிருக்கும் கொந்தளிப்பு மறுபுறமுமாக இருக்கும்
தமிழ் சமூக ஊடக வெளியில் நான்காண்டுகளுக்கு முன் நடந்த இந்த சர்ச்சையை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.
தமிழினி என்று அறியப்பட்ட சிவகாமி ஜெயக்குமரன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மகளிரணித் தலைவியாக இருந்தவர். ஈழப்போரில் தம் ஒட்டுமொத்த வாழ்வையும் தொலைத்த பல்லாயிரம் பெண்களில் ஒருவர். இறுதிவரை இயக்கத்தில் இருந்து போராடி முள்ளிவாய்க்காலின் கோரமுடிவுக்குப்பின் இலங்கை இராணுவத்திடம் பிடிபட்டு சிறைக்கொடுமை அனுபவித்து விடுதலையானதும் புற்றுநோய்க்கு பலியானவர். போராட்டமே வாழ்வென வாழ்ந்த அவர் மறைவுக்குப்பின் அவரது தன் வரலாற்று நூலை அவர் கணவர் கூர்வாளின் நிழல் என்கிற பெயரில் புத்தகமாக வெளியிடுகிறார்.

கரு. நாகராஜன் வந்தால் பெண்கள் வரமாட்டோம்: விவாதத்தில் ஆபாசம்!

பாஜக பங்கேற்கும் எந்த நியூஸ் 7 தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் திமுக பங்கேற்காது - .ஸ்டாலின் .

 கரு. நாகராஜன் வந்தால் பெண்கள்  வரமாட்டோம்:  விவாதத்தில் ஆபாசம்!மின்னம்பலம் : தமிழக செய்தித் தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்களில் பெண்களுக்கு எதிரான ஆபாசத் தாக்குதல்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் நியூஸ் 7 தொலைக்காட்சியில் நேற்று (மே 18) நடந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியிடம், பாஜகவைச் சேர்ந்த கரு. நாகராஜன் கடுமையாக தனி நபர் தாக்குதலில் ஈடுபட்டார். இதையடுத்து விவாதத்தில் இருந்து வெளியேறினார் ஜோதிமணி.

திருத்தணிகாசலம் மீது மேலும் இரு வழக்கு! பிணையில் வெளியில் வரமுடியாது .

ஜாமீன் மறுப்பு: திருத்தணிகாசலம் மீது மேலும் இரு வழக்கு!மின்னம்பலம் : கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்துக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இரு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா வைரசுக்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம், தான் மருந்து கண்டுபிடித்து விட்டதாகத் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தார்.

பத்மபிரியா, ஹேமபிரியா.. ஒரே ரூமில்.. ஒன்றாக தூக்கில் தொங்கிய இரட்டையர்கள்.. காட்பாடி!

Hemavandhana tamil.oneindia.com :  வேலூர்: பத்மபிரியா, ஹேமபிரியா.. சகோதரிகள் இருவருமே ஒரே ரூமில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் காட்பாடியில் நடந்துள்ளது.
காட்பாடியை சேர்ந்தவர்கள்தான் பத்மபிரியா, ஹேமபிரியா.. இருவரும் இரட்டையர்கள்.. பிளஸ் 2 படித்து வருகிறார்கள். இவர்களுக்கு பொது தேர்வு நெருங்கி விட்டதால் வீட்டில் இவ்வளவு நாள் படித்து கொண்டிருந்தனர்.

இன்றும் படிப்பதாக சொல்லி, 2 பேரும் வீட்டின் மாடியில் உள்ள ரூமுக்கு சென்றனர்.. ஆனால், ரொம்ப நேரமாகியும் 2 பேருமே திரும்பி வரவில்லை.. அதனால் வீட்டில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து மாடிக்கு சென்று பார்த்தனர்..
அப்போதுதான் 2 பேருமே தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அலறி துடித்தனர்.. எதற்காக இப்படி செய்து கொண்டார்கள் என உடனடியாக தெரியவில்லை.
தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இரட்டை சகோதரிகளின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினர்..

பிரபா உருப்படியாக ஒன்றும் செய்யமாட்டார் ... மறைந்த வேங்கை செல்லகிளி கூறியது

லெப்டின் கேர்னல் செல்லகிளி
Left செல்லகிளி
லெப்டினென்ட் கேர்னல் செல்லக்கிளி அன்று பிரபாகரன் பற்றி: :
 " உவனோட ஒண்டும் உருப்படியாக செய்ய முடியாது . இவன் ஒரு நாளைக்கு என்னையும் தட்டுவான் ."
என்று பிரபாவை பற்றி செல்லக்கிளி தனக்கு நெருங்கியவர்களிடம் கூறுவது தெரியும்.
செல்லக்கிளி எதற்கு பயப்படாத ஒரு காட்டு யானை போன்றவர் நேர்மையானவர் மிகவும் நல்லவர்.
அவர் பிரபாவை வெறுத்து இதொன்றும் சரிவாராது என்ற முடிவில் இந்தியாவுக்கு சென்று விட்டார் . அப்போது பிரபா டெலோவில் குட்டிமணி தங்கத்துரையோடு சேர்ந்து இயங்கி அவர்களை போலீசிடம் காட்டி கொடுத்துவிட்டு பணத்தோடும் ஆயுதங்களோடும் அடுத்து என்ன செய்வது என்று முழி முழி என்று முழித்து கொண்டிருந்த காலம் .
அவருக்கு ஏதாவது ஒரு பெரிய தாக்குதல் செய்யவேண்டும் அதன் மூலம் பல மாங்காய்களை விழுத்த முடியும் என்ற கருத்தில் இருந்தார். அப்போது சிறையில் இருந்த குட்டிமணி தங்கத்துரை ஜெகன் உட்பட சுமார் ஐம்பது போராளிகளை கொழும்பில் இருந்த சிங்கள தமிழ் அண்டர் கிரவுண்ட் குழுக்களோடு ஒரு உடன்பாட்டுக்கு வந்திருந்தனர் ஸ்ரீ சபாரதினம் குழுவினர்.
அவர்கள் இதை ஏனைய இயக்கங்களுக்கு ரகசியமாக கூறி அதுவரை ஒரு தாக்குதல்களும் செய்யவேண்டாம் என்று கேட்டு கொண்டார்.ஏனெனில் தாக்குதல்கள் நடந்தால் கொழும்பில் ராணுவ போலீஸ் கெடுபிடிகள் முடுக்கி விடப்பட்டு விடும் .அதன் காரணமாக இந்த திட்டம் நிறைவேறாமல் போய்விடும்.

அதிமுக-வில் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து

மாலைமலர் : அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக-வில் ஒன்றிய அமைப்புகளின் கீழ் செயல்படும் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. இதுவரை ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும் மாற்று பொறுப்பு வழங்கப்படும்.
இதேபோன்று அதிமுகவில் தொழில் நுட்ப பிரிவு சென்னை, கோவை, மதுரை மற்றும் வேலூர் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. நான்கு மண்டலங்களுக்கும் சென்னை - அஸ்பயர் சுவாமிநாதன், வேலூர் - கோவை சத்யன், கோவை - ஜி.ராமச்சந்திரன், மதுரை - ராஜ் சத்யன் ஆகியோர் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா.. மொத்தம் 11 ஆயிரத்து 760

நக்கீரன் :சென்னை: தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 760 ஆக இருந்தது.
மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 406 பேர் குணமடைந்திருந்தனர்.
ஆனாலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 81 இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது . அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 448 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 895 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது.

டாஸ்மாக் காலை வாரியது .. விற்பனை வீழ்ச்சி !.. கையை பிசையும் தமிழக அரசு!

ுப நக்கீரன்:  இந்தியா முழுவதும் கரோனா காரணமாக, கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. இதனால் தொழிற்சாலைகள் முதல் பள்ளிக்கூடங்கள் வரை அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் மதுக்கடைகளும் மூடப்பட்டு இருந்தன. மூன்றாவது ஊரடங்கின்போது மத்திய அரசு மதுக்கடைகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கியது.
அதன்படி சிவப்பு மண்டலங்கள் இல்லாத பகுதிகளில் மதுக்கடைகள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதன் அடிப்படையில் தில்லி, கர்நாடகம், அஸ்ஸாம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மதுக்கடைகளை திறந்தது. கர்நாடகாவில் மதுகடைகளை திறந்ததால் தமிழக எல்லையோர மாவட்டத்தில் உள்ள மக்கள்  கர்நாடகத்திற்கு படையெடுத்தனர்.

ரஜினி 74 தோல்வி படங்கள் கொடுத்த உச்ச நடிகரின் அதீத உல்லாசம்


m.dailyhunt.in : தமிழ் மட்டுமின்றி இந்திய திரையுலகில் பல நடிகர்கள் தொடர்ந்து ஹிட் படங்க ளை கொடுத்து வருகின்றனர். ஆனால்
ஒருகட்டத்திற்கு பிறகு, அவர்களது மார்க்கெட் சரிந்தால், அவர்களால் ஆடம் பரமான சிறப்பு வாழ்க்கையை வாழ முடியாது.
ஒருகாலத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்து, பின்னாளில் காணாமல் போன எத்தனையோ நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் 74 பிளாப் படங் களை கொடுத்து ஆடம்பர வாழ்க்கை வாழும் ஒரு நடிகர் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை ரஜினிகாந்த்.
தென்னிந்தியா மட்டுமின்றி இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இன்னும் சொல்லப் போனால், உலகளவிலும் பிரபலமடைந்தவர் தான் ரஜினி. ரஜினி படம் என்ற காரணத்திற்காகவே ரூ.100 கோடி வசூலை நிச்சயம் கடந்துவிடும் என்ற அளவுக்கு அவரின் படங்களுக்கு இன்றளவும் எதிர்பார்ப்பு உள்ளது.