“சுப்பிரமணிய சாமியின் வாதங்களில் நாங்கள் முற்று முழுதாக திருப்தி அடைந்திருக்கிறோம். மற்றவை பற்றி பேச வேண்டாம். resjudicata (முன்தீர்ப்பு) அதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்”.
விசாரணை முடிந்த பின் எதிர் தரப்பான தமிழக அரசின் வழக்குரைஞருடைய தோளில் கை போட்ட படியே, சுப்பிரமணிய சாமி வெளியில் வந்தார். “உங்கள் அரசாங்கம் எனக்கு நட்பான அரசாங்கம்தான். கருணாநிதி ஆட்சி என்பதால்தான் நான் இந்த வழக்கில் தலையிட்டேன். நீங்கள் கருணாநிதி போட்ட அரசாணையை வாபஸ் வாங்குவதுதான் நல்லது என்று ஆலோசனை கூறுங்கள்” என்று யோகேஷ் கன்னாவிடம் பேசியபடியே நடந்து சென்றார் சுப்பிரமணிய சாமி.
சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து அறநிலையத்துறை கையகப் படுத்தியதற்கு எதிராக தீட்சிதர்கள் தொடுத்திருந்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் சுருக்கத்தை கீழே தருகிறோம்.
    என்ன வேலையா? ஏற்கனவே செய்யற வேலைய தொடர்ந்து செய்யுங்கோ, போதும்!உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் யோக்கியதையை இதனைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
என்ன வேலையா? ஏற்கனவே செய்யற வேலைய தொடர்ந்து செய்யுங்கோ, போதும்!
சுப்பிரமணிய சாமி என்ற ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனத் தரகனின் ஆட்சிதான் உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
கோயிலை மீண்டும் தீட்சிதர்கள் வசமே ஒப்படைப்பதற்கு தோதாக, அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞர்களைக் கூட நியமிக்காமல் வழக்கை அநாதையாக விட்டிருக்கின்ற ஜெ அரசின் சதியைப் புரிந்து கொள்ள முடியும்.
சுப்பிரமணிய சாமியுடனும் பாரதிய ஜனதாவுடனும் ஜெயலலிதா அரசு வைத்திருக்கும் கள்ளக்கூட்டைப் புரிந்து கொள்ள முடியும்.
இந்த வழக்கில் நாம் தோற்றால்,
பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கோயிலின் பொதுச்சொத்துக்கள் தீட்சிதர்கள் எனும் திருட்டுப் பார்ப்பனக்கும்பலின் சொத்தாக மாறும்.