வியாழன், 2 செப்டம்பர், 2010

யாழ்: மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்

யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டiயை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை புலோலி தெற்கு புலோலியை சேர்ந்த தமது மூன்று வயது மகனான ராஜ்குமார் என்பவரை கொலை செய்த குற்றத்துக்காகவும் தமது மனைவியின் கை ஒன்றை துண்டித்தமை மற்றும் மற்றும் ஒரு கை விரலை துண்டித்தமை ஆகிய குற்றத்திற்காக ராசதுரை ராஜதுரை என்பவருக்கு இன்று யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதனையடுத்து மரண தண்டனை கைதியை காவலர்கள் நீதிமன்ற கட்டிடத்தில் இருந்து அழைத்து வரும் போது அவா நீதிமன்ற மாடிக்கட்டிடத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இதனையடுத்து காயங்களுடன் அவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த குற்றவாளி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறி சட்டமா அதிபரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மனைவியின் கையை துண்டித்தமைக்காக 10 வருட கடுழிய சிறைத்தண்டனையை நீதிபதி விதித்தார்.
அத்துடன் 25000 ரூபா அபராதத்தையும் விதித்தார். மகனை கொன்றமைக்காக மரண தண்டனையை நீதிபதி விதித்து தீர்ப்பளித்தார்.

கருத்துகள் இல்லை: