ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

டெல்லியில் - நண்பர் விஜய் or அண்ணன் ஸ்டாலின்.. இன்று ராகுல் முடிவு செய்வார் - பின்னணி

May be an image of one or more people

 tamil.oneindia.com- ஷியாம் சுந்தர் :   டெல்லியில் கிளைமேக்ஸ்.. நண்பர் விஜய் or அண்ணன் ஸ்டாலின்.. இன்று டிக் அடிக்கும் ராகுல்? பின்னணி
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக-காங்கிரஸ் இடையிலான பத்தாண்டு கால உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. திமுகவுடன் கூட்டணியைத் தொடர்வதா அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கைகோர்ப்பதா என்பது குறித்து விவாதிக்க, காங்கிரஸ் மேலிடம் டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது.
டெல்லி விரைந்த செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. செல்வப்பெருந்தகை இந்த முக்கியக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவசரமாக டெல்லி விரைந்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.