சனி, 25 ஜூலை, 2020

சகோதர போராளிகள் படுகொலை .. கலைஞர் உட்பட நாம் நம்பிக்கை இழந்தோம் ... ஒப்பந்தம் வந்த வரலாறு - 11


அமரர். திரு.அ.அமிர்தலிங்கம் : இந்த திட்டத்தை டெல்லி சென்று நேரில் கையளித்ததோடு பல மணித்தியாலங்கள் வெளிநாட்டு அமைச்சரின்
செயலாளரோடும் ஏனைய அதிகாரிகளோடும் உரையாற்றினோம்.
எமது முயற்சி விரும்பிய பயனைக் கொடுத்தது. இந்திய அரசின் போக்கில மீன்டும் எமக்குச் சார்பான மாற்றம் தோன்றியது.
"இலங்கை அரசின் திட்டத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி விரிவான ஆக்கப்பூர்வமான மாற்று திட்டத்தைக் கொடுத்திருக்கின்றது' - என்று பத்திரிகைகளுக்குக் கூறிய திரு ராஜீவ் காந்தி, டாகாவில் கூடிய தெற்காசிய பிராந்திய மகாநாட்டில் ஜனாதிபதி ஜயவர்த்தனாவிடம் அதை நேரில் கையளித்தார். எமது திட்டத்தை முற்றாக நிராகரித்து, ஜனவரி 30-ம் திகதி இலங்கை அரசு ஓர் விரிவான பதிலைக் கொடுத்தது.
இந்த பதில் பிரதமர் ராஜீவ் காந்திக்கு இலங்கை அரசின் உண்மையான போக்கைக் காட்டிக்கொடுத்தது. அவருக்கு மேலும் விளக்கம் கொடுக்கும் பொருட்டு ஓர் சந்திப்பை நாடினோம். திருவையாறு தியாகையர் உற்சவத்தோடு தென்பிராந்திய கலாச்சார நிலையத்தை அவர் திறந்து வைத்துத் திரும்பிச் செல்லும் போது நாமும் உடன் விமானத்தில் சென்று . விரிவாகப் பேச நேரம் கொடுத்தார்.
நானும் திரு சிவசிதம்பரம், திரு. சம்பந்தன் ஆகிய மூவரும் திருச்சி சென்று அங்கிருந்து டெல்லி வரை இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக அவரோடு விமானத்தில் உரையாடினோம். வடக்குக் கிழக்கு இணைப்பைப் பற்ற அவருக்குத் தவறான கருத்து தரப்பட்டிருந்தது. வட மகாணமும் கிழக்கு மாகாணமும் தொடரான நிலப் பரப்பல்ல என்று கூறப்பட்டிருந்தது. அந்தத் தப்பான கருத்தைத் தெளிவுபடுத்தினோம்.

ஆர் எஸ் எஸ் இன் அமைதி வேஷம் அப்துல் கலாம்.. குஜராத் கொலைகளால் குடியரசு தலைவர் ஆனவர்

Balamurugan S : வணக்கம் தம்பி, எப்படி இருக்கீங்க? என்ன படிச்சிருக்கீங்க?
வணக்கம்....கோவையில் உள்ள பிரபல கல்லூரில பொறியியல் படிச்சேன்...
ஓ...எப்படி சீட்டு கிடைச்சிச்சு?
என்னோட... கட்ஆஃப்க்கே கிடைச்சிடுச்சு...
வெரி குட்...பி.சி கட் ஆஃப்....தான!!!அப்புறம் மேல் படிப்பு என்ன படிச்சீங்க?
ஆமா!!! பி.சி கட்ஆஃப்....அப்புறம் ஐஐஎம் லக்னோல மேலாண்மை படிச்சேன்...
ஓ...ஐஐஎம் ஆ!!!! அங்க எப்படி சீட் கிடைச்சிச்சு தம்பி?
Yeah....coaching...hard work....
சரி...தம்பி அதுல எதும் கோட்டா இருந்ததா???
நான் OBC ....So........அப்படியே...
ரொம்ப நல்லது தம்பி... வேலைக்கு எப்படி சேர்ந்தீங்க...!!
Civil services exam எழுதுனேன்... ஐபிஎஸ் என்னோட Passion.... So....
மெயின்ஸ்....இன்டெர்வியூ நல்ல ஸ்கோர்....
இதுல எதுவும் கோட்டா தம்பி!!!
ஒபிசி...ங்க...
ஓ....சரி...தம்பி...மகிழ்ச்சி....ஏன் தம்பி இன்னும் சில கேள்விகள்....கேட்கலாமா?
கேளுங்க..
கோவைல பொறியியல் படிச்சீங்களே.... அந்த பிசி இட ஒதுக்கீடு யாரு கொடுத்தாங்க? அது.....19.....70's ல
அது....திமுக ஆட்சில தலைவர் கலைஞர் கொடுத்தது தம்பி...1975....சரிங்களா... அப்புறம் ஐஐஎம் ல மேனஜ்மெண்ட் படிச்சீங்களே அதுக்கு இட ஒதுக்கீடு எப்ப கொடுத்தாங்க?
அது 2006 Central educational institution reservation act....
அது யாரு ஆட்சில கொடுத்தது?

ஆர் எஸ் எஸ் இன் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிய புலிகள்..

அர்ஜுன் சம்பத் - காசி ஆனந்தன்  - நெடுமாறன் ...
Kalai Selvi  : திராவிட கட்சிகாரர்களை 80 லிருந்து ஈழ பிரச்சினையை பேச விட்டு ஜாதி சங்கங்களும் RSS ம் மெதுவாக மீனாட்சிபுரம் மண்ட காட்டிலிருந்து துவங்கி கடைசியில் எங்க வந்து நின்று இருப்பதை  கூர்ந்து
கவனியுங்க, ;எந்த  புலிகளுக்கரகாக குரல் கொடுத்தார்களோ, அந்தப் கூலிப்படை புலிகள் + அவர்கள் ஆதரவாளர்கள் புலம் பெயர் ஈழ தமிழர்கள் இன்று RSS வாசலில் நின்றுள்ளனர்,இந்து என்று கூறிக் கொண்டு தமிழகமும் நாசமாகி விட்டது 40 வருட பின்னோக்கி விட்டது. அனைத்து இந்திய தலைவர்களை அழைத்து கலைஞரின் நடத்திய TESO மாநாட்டின் போது சபாரத்தினத்தை கொன்றார்கள்.">13 வருடம் கழித்து ஆட்சி அமைத்து ஒரு வருடம் ஆறு மாதம் கூட முடியாத ஆட்சியை IPKF ஐ திரும்ப பெற்று / அதை வரவேற்காமலும் | அவர்களுக்கு ஒரு தீர்வு வேண்டி PM V P Singh இடம் அனைத்து இலங்கை கட்சியினரை அழைத்துக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு சென்ற போது பத்மநாபாவை கொன்றனர்.அதனால் கலைஞர் / திமுக ஆட்சியை இழந்து பிறகு 1991ல் ராஜீவ் காந்தியை கொன்று V P சிங் ஆட்சி வருவதை தடுத்து காங்கிரஸ் மிக சிறுபான்மையில் வென்று ஒரு RSS பார்ப்பான் நரசிம்மராவ்' PM ஆகினார்.
அவர்  92ல் பாபர் மசூதி இடித்து அதைத் தொடர்ந்து மும்பையில் குண்டு வெடித்து முஸ்லீம்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டமைத்த பிரச்சாரத்தினால் நாடே  Polarise ஆகி இந்த RSS சங்கிகள் ஆட்சி அமைக்க  வாய்ப்பு வழங்கியது யார்?
அத்தனை வழி களையும் பயன்படுத்திய Rss கூலிப்படையான LTTE யும் அவர்களுக்கு துணையாக இருந்து நாசமாக்கி, இந்த நாடே அல்லோலக்கல்லோலப்படும் நிலைக்கு தள்ளியது யார்? 
RSS ன் கூலியாட்களாக வேலை செய்து தமிழகத்தை ஈழத்தை நாசமாக்கியது யார் ? என அந்த கயிறை தொடர்ந்து சென்றால் அது MGR - LTTE இடம் தான் வந்து நிற்கும்

சென்னை மே. மாவட்ட திமுக பொறுப்பாளராக நே.சிற்றரசு நியமனம்

தினகரன் : சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நே.சிற்றரசு
நியமனம்.: ஸ்டாலின் அறிவிப்பு சென்னை: சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நே.சிற்றரசு நியமித்து ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் மறைவை அடுத்து பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக ராஜா அன்பழகன் நியமிக்கப்பட்டார்
hindutamil.in  : சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நே.சிற்றரசுவை நியமித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
 சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்த ஜெ.அன்பழகன், கடந்த ஜூன் 10-ம் தேதி கரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் அறிவித்தார். அதேபோன்று, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பிலும் புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை.

"கோவையில்" மேலாடைகள் இன்றி ஆயுதங்களுடன் சுற்றும் கும்பல் – மக்கள் பீதி

coimbatoreவெப்துனியா : கோவை மாவட்டம் இருகூர் பகுதியில் ஒரு கும்பல் மேலாடைகள் இன்றி சுற்றித் திரிவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கும்பல் எதாவது சதி வேலைகள் செய்யவோ இல்லை குற்றச் செயலில் ஈடுபடவோ அப்பகுதிகள் சுற்றித்திரிவதாக பலரும் தெரிவித்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்தக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஜெயாவின் போயஸ் வீட்டை கைப்பற்றியது தமிழக அரசு .. ஜெய .தீபா போர்க்கொடி


’வேதா இல்லம் எங்களுடைய பூர்வீக சொத்து' - ஜெ.தீபாமாலைமலர் : சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்தியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது.  24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்தது.

WHO கொரொனா வைரஸ்: போட்டியில் 200க்கும் மேற்பட்ட தடுப்பூசி உள்ளதால் வெற்றிக்கு அதிக வாய்ப்பு-

கொரொனா வைரஸ்: போட்டியில் 200க்கும் மேற்பட்ட தடுப்பூசி உள்ளதால் வெற்றிக்கு அதிக வாய்ப்பு-  டாக்டர் சவுமியா சுவாமிநாதன்தினத்தந்தி : கொரொனா வைரஸ் தொற்று தடுப்பூசி போட்டியில் 200க்கும் மேற்பட்டது உள்ளதால் வெற்றிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் உள்ளார்.
ஜெனீவாவிலிருந்து உலக சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஒரு சமூக ஊடக நேரடி நிகழ்ச்சியில்,  இயற்கை நோயெதிர்ப்பு சக்தியின் ஒரு கட்டத்திற்கு வர நோய்த்தொற்றின் அதிக அலைகள் தேவைப்படும்.
ஆகையால், விஞ்ஞானிகள் தடுப்பூசி சோதனைகளில் பணிபுரியும் போது, ​​கொரோனா வைரஸ் தொற்றை தக்க வைத்துக் கொள்ள முடிந்த அனைத்தையும் செய்ய, அடுத்த ஆண்டு அல்லது அதற்கு மேலாக, உலகம் "தயாராக" இருக்க வேண்டும் . சிகிச்சை முறைகள் இறப்பு விகிதங்களை குறைக்கவும், மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடரவும் உதவும்.
இந்த நோயெதிர்ப்பு சக்தியை உண்மையில் பரப்புவதற்கு அந்த சங்கிலிகளை உடைக்க ஏதுவாக இருக்க 50 முதல் 60 சதவீதம் மக்கள் தேவை.
இதனை ஒரு தடுப்பூசி மூலம் செய்வது மிகவும் எளிதானது; மக்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து போகாமல் நாம் அதை விரைவாக அடைய முடியும். எனவே, இயற்கை தொற்றுநோய்களின் மூலம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கு, அவ்வாறு செய்வது மிகவும் நல்லது.

தமிழக ஆர் எஸ் எஸ் இன் Tamilnadu Young Thinkers Forum என்ற அமைப்பு

கவனமாகப் படியுங்கள் .-பா. ஜீவ சுந்தரி
உங்களில் யாருக்காவது Tamilnadu Young Thinkers Forum என்ற அமைப்புப் பற்றி தெரியுமா? தெரியவில்லை என்றால், தயவுசெய்து கூகுளில் தேடுங்கள். பல அதிர்ச்சிகரமான வலைப்பின்னல்களை அறிந்து கொள்ளலாம்.
இது ஆர்.எஸ்.எஸ்-ன் மறைமுக அமைப்பு. இப்போது யாரெல்லாம் வலதுசாரி அரசியல் கருத்துக்களைச் சமூக ஊடகங்களில் பரப்புகிறார்களோ.. மாரிதாஸ் முதல் பத்ரி சேஷாத்ரி வரை, ரங்கராஜ் முதல் ஷ்யாம் சேகர் வரை… இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் புள்ளி இதுதான். தமிழக வலது அரசியல் போக்குகளின் aggregator இந்த அமைப்பு. Young Thinkers Forum--> Swarajya --> RSS – என்று இந்த வலைப்பின்னல் போகிறது.
2016-ல் தமிழ்நாட்டில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. அந்தத் தொடக்க விழாவில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ், ஆர்.எஸ்.எஸ். இணைப் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸபலே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஹோஸபலே, ‘அறிவுத்துறையில் நமக்கான போர் வீரர்களை உருவாக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். இதைத்தான் இந்த அமைப்பு செய்து வருகிறது.

புலிகளின் ஆட்சேர்ப்பை ‘லபக்’, ‘ஆள்பிடி’, ‘கொள்ளை’ என்ற சங்கேதப் பெயர்களில் மக்கள் ..

புலிகளின் துணுக்காய் சித்திர வதை கூடம்
தமிழ் மாணவன் : பகுதி-2 வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு
புலிகள் எதிர்பார்த்திராத அளவுக்கு சிறிலங்கா இராணுவத்தின்
நடவடிக்கைகள் அமைந்தன. மரபு வழியில் படைக் கட்டமைப்பையும் அதே வகையிலான தாக்குதல் மற்றும் படை நடவடிக்கைகளையும் குலையவிடக் கூடாது என்ற கவனத்தோடு புலிகள் செயல்பட்டனர். ஆனால் சிறிலங்கா ராணுவமோ மரபுவழி ராணுவமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதும் அதன் ஒரு பிரதான அம்சமாக ஒரு முக்கிய அலகு கெரில்லா போர்முறையைப் பின்பற்றிப் புலிகளின் மீது நடவடிக்கைகளில் ஈடுபட்டது. புலிகளை நிலைகுலைய வைக்கும் தாக்குதல்களை சிறிலங்கா ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் மிகக் கச்சிதமாக நடத்தின. இந்தத் தாக்குதல்களில் புலிகளின் முக்கியத் தளபதிகள் பலரும் கொல்லப்பட்டனர்.
இவ்வாறான ஒரு தாக்குதலின்போது புலிகளின் கொழும்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சார்ள்ஸ் என்பவர் (கேனல் சார்ள்ஸ்) மூன்று உதவியாளர்களுடன் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வன்னியின் புவியியல் அமைப்பு (காடும் ஆறுகளும் பெருங்குளங்களும்) இராணுவத்துக்கு வாய்ப்பாகியது. புலிகள் தமது திறன் வாய்ந்த கெரில்லாப் போர்முறையை முழுதாகக் கைவிட்டு முற்று முழுதாக மரபுவழிப் போர்முறையைக் கையாண்டனர். இதே வேளை புலிகளின் கடல்வழி ஆயுத வருகையை-விநியோகத்தை, சிறிலங்கா விமானப் படையும் கடற்படையும் இணைந்து முழுமையாகத் தடுத்திருந்தன. புலிகளின் நான்கு ஆயுதக் கப்பல்கள் கடலில் தாக்கி அழிக்கப்பட்டிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. இதன் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் இருந்ததாக நம்பப்படுகிறது.

மகளின் ஆன்லைன் வகுப்புக்கு மாட்டை விற்று செல்போன் வாங்கிய அப்பா.. உதவி செய்ய தேடும் பிரபல நடிகர்!

பசுமாட்டை விற்றார் tamil.filmibeat.com - Raj|: சென்னை: தனது பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புக்காக, பசுமாட்டை விற்று ஸ்மார்ட் போன் வாங்கியவருக்கு உதவ, பிரபல நடிகர் அவரை தேடி வருகிறார்.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இருந்தும் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, கடந்த 4 மாதமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது<. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதன் காரணமாக பலர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். பலருக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்கள் வாழ்வாதாரங்களை ஏராளமானவர்கள் இழந்துள்ளனர். பல நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்குச் சம்பள குறைப்பை அறிவித்துள்ளன. பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். தினசரி வேலை பார்த்து சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் கடும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

தினகரன் -அழகிரி: அணிகளை மாற்றும் ஆரோவில் சந்திப்பு?

டிஜிட்டல் திண்ணை: தினகரன் -அழகிரி: அணிகளை மாற்றும் ஆரோவில் சந்திப்பு?மின்னம்பலம் : சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வந்துகொண்டிருப்பதை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் தங்கள் இப்போதைய வியூகங்களை மதிப்பீட்டு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளன. நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் நிர்வாகிகளோடு காணொலி காட்சியிலும், வாட்ஸ் அப் கால்களிலும் ஆலோசனைகள் நடந்துகொண்டே இருக்கின்றன ஒவ்வொரு கட்சியிலும்.
அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி முந்தைய தலைவர்கள் போல அல்லாமல் முக்கியமான நிர்வாகிகள், கட்சியின் சீனியர்கள், அபிமானிகள் ஆகியோரிடம் தினம் தினம் உரையாடி வருகிறார். கடந்த சில வாரங்களாக திமுகவின் துணையின்றி அதாவது காங்கிரஸ் தன் சொந்தக் காலிலேயே போராட்டங்கள் நடத்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அழகிரி. கூட்டணி என்பது ஒருபக்கம் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் வகையிலான போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மொழிவாரி அரசாக . இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு - - 10


   அமரர் .அ.அமிர்தலிங்கம்: டெல்லி உடன்படிக்கை!
இந்த இருதலைவர்களின் மறைவினால் எமக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஏற்பட்டதென்பதை யாரும் மறுக்க முடியாது. யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் நடை பெறும் சம்பவங்களை எமக்கு ஒவ்வொரு நாளும் தொலை பேசியில் கொடுத்துக் கொண்டிருந்தவர் திரு. ஆலாலசுந்தரம். எமக்கு மாத்திரமின்றி உலக மக்கள் தொடர்புச் சாதனங்களுக்கெல்லாம் யாழ்ப்பாணத்தில் செய்தி நிலையமாக விளங்கியவர் ஆலாலசுந்தரம் என்று இக் கொலைச் செய்தியைப் பிரசுரித்த இங்கிலாந்து 'கார்டியன்' பத்திரிகையே குறிப்பிட்டது. மோட்டார் வண்டி ஓட முடியாவிட்டாலும்
கந்தரோடையிலிருந்து சைக்கிளில் யாழ்ப்பாணம் வந்து ஆலாலசுந்தரத்துக்கு ஆலோசனை வழங்கி உறுதுணையாக இருந்தவர் திரு. தர்மலிங்கம். மக்களுக்கு என்ன துன்பம் ஏற்பட்டாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியை இயங்க விடக்கூடாது என்று யாரோ தீட்டிய திட்டத்திற்கு யாரையோ கருவியாகப் பாவித்து இப்படுகொலை நடத்தப்பட்டது. இதனால் எமக்கு செய்திகள் கிடைப்பதும் டெல்லியோடு தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதும் பெரிதும் தடைப்பட்டது. இந்த நேரத்தில் டெல்லியில் இலங்கை அரசாங்கத் தூதுக்குழுவிற்கும், இந்திய வெளிநாட்டு அமைச்சுக்கும் இடையில் எமது பிரச்னைக்கு தீர்வுகாண அடிப்படை பற்றி ஓர் உடன்படிக்கை ஆகஸ்ட் 31 ந்திகதி ஏற்பட்டது. இந்த உடன்படிக்கை பற்றி தமிழ் இயக்கங்கள் எல்லாம் ஒரே கருத்தை இந்தியாவிற்கு தெரிவிக்க வேண்டியது அவசியம் என்பதைக் கண்டோம். எம் சகாக்களை கொலை செய்த துயரத்தையெல்லாம் ஒதுக்கி வைத்து போராளி இயக்கங்களோடு கலந்து உரையாடினோம். பிரதமர் ராஜீவ் காந்திக்கும் ஓர் விரிவான கடிதம் மூன்று அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தமிழ் மக்கள் விட்டுக் கொடுக்க முடியாது என்பதை வலியுறுத்தி 9.9,85-ல் எழுதினோம்.

வெள்ளி, 24 ஜூலை, 2020

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த விவகாரம்: முதல்வர் பழனிசாமி கண்டனம்

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த விவகாரம்: முதல்வர் பழனிசாமி கண்டனம் தினத்தந்தி :  எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை, புதுச்சேரி வில்லியனூர் விழுப்புரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை.   நேற்று  அடையாளம் தெரியாத நபர் சிலர் எம்.ஜி.ஆர். சிலை மீது காவித் துண்டு  அணிவித்ததாக கூறப்படுகிறது. இதனால்,  அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அதிமுக வை சேர்ந்த தொண்டர்கள் அந்த இடத்தில் முற்றுகையிட்டனர்.  மேலும் எம்.ஜி.ஆர். சிலை மீது காவித் துண்டு போர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இச்சம்பவத்தை முன்னிட்டு பாதுகாப்புக்காக காவல்துறையின் அங்கு குவிக்கப்பட்டனர்.

10000 கோடிகளும் சுவாஹா...

COO Varoon Raghavan
CEO, Rangnath

கீழே தரப்பட்டுள்ள இரண்டுமே டுபாக்கூர்கள்.
1. Princeton, Singapore:
இது ஒரு சாதாரன Data Center மற்றும் ரியல் எஸ்டேட் ஏஜென்ஸி.
👉இதன் இணையதளத்தில், தொலை பேசி எண் தரப்பட வில்லை.
👉வெளிநாடு என்ற போர்வையில் உள்ளுக்குள்ளேயே நடக்கும் 750 கோடி பரிமாற்றம்
👉இதன் CEO, Rangnath (Rangu)   .  👉இதன் COO,Varoon Raghavan

👉MD,Vipin Shirsat     . 2. Continube, USA:
MD,Vipin Shirsat
இது ஒரு Risk Management tool running on SaaS Platform.
👉இதன் இணையதளத்தில், முகவரி மற்றும், தொலை பேசி எண் தரப்பட வில்லை.
👉இதன் ட்விட்டர் அக்கௌன்ட், ஃபேஸ் புக் அக்கௌன்ட் எதுவும் வேலை செய்யவில்லை.
இந்த இரண்டும் சேர்த்து மொத்தமுள்ள 10 கம்பனிகள் இரு நாட்களுக்கு முன்பு தமிழக அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே 10 ஆண்டுகள் பாழ், 10000 கோடிகளும் சுவாஹா.
அமெரிக்க வாழ் இந்தியர் பகிர்ந்தது.

பாஜக தலைவர்களின் மகள் மகன்கள் படிப்பது .... அமெரிக்கா இங்கிலாந்து ... நாடுகளில்தான்

முழு ஆங்கில கட்டுரை ..
Maha Laxmi : ராஜ் நாத்சிங்கின் மகன் இங்கிலாந்தின் "லீட்ஸ்" பல்கலைக்கழகத்தில் படிக்கிறான்.
நிர்மலா சீதாராமன் மகள் "வாங்மயிபரகலா" அமெரிக்காவின் நார்த் வெஸ்ட் பல்கலைக்கழத்தில் படிக்கிறாள்.
வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கரின் மகன் "துருவ்" ஜியாஜ் டவுன் பல்கலைக்கழகத்திலும், மகள் "மேதா" டெனிசன் பல்கலைக்கழகத்திலும் படிக்கிறாள்.
அமைச்சர் ப்யுஸ்கோயல் மகள் "ராசிகா" மகன் "துருவ் "ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்கள்.
அமைச்சர் பிரகாஷ் சவடேகர் மகள் "அபூர்வா" பாஸ்ட்டன் பல்கலைக்கழத்தில் படிக்கிறாள்.
அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மகள் "ஆதித்யா " அமெரிக்காவின் கார்னகி பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள்.
அமைச்சர் சுஜேந்திர சிங் செகாவத் மகள் "சுபாஷினி" ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள்.

கேரளா அனுஜித் ...உயிர்களை காக்க பிறந்தவர்க்கு கண்ணீர் அஞ்சலி.. வீடியோ

  BBC : கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த அனுஜித், ஐ.டி.ஐ படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ரயில் தண்டவாளத்தை கடந்து சென்ற சமயத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலைக் கண்டார். அந்த வழியாக ரயிலும் வந்தது. உடனே, அந்த மாணவர் தனது கையில் இருந்த சிவப்பு நிற புத்தக பையை தூக்கி பிடித்தபடி
  தண்டவாளத்தில் ஓடினார். சுமார் அரை கிலோமீட்டர் தூரம் ஓடிச் சென்று ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை கொடுத்தார்.
ஆபத்து என்பதை உணர்ந்துகொண்ட ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். இதனால் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. இது நடந்தது 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி.
மறுநாள் செப்டம்பர் 1-ம் தேதி வெளியான அனைத்து பத்திரிகைகளிலும் அனுஜித்தும் அவரது சிவப்பு நிற பேக்கின் புகைப்படமும் நிறைந்திருந்தது.
கடந்த 14-ம் தேதி கொட்டாரக்கரைக்கு அருகில் பைக்கில் அனுஜித் சென்றபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது.திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டார். அவரது உயிரை காக்க மருத்துவர்கள் முயற்சித்தனர். ஆனால் கடந்த 17-ம் தேதி அனுஜித் மூளைச்சாவு அடைந்தார்.17 வயதில் மாணவனாக இருக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காத்த அனுஜித் தனது 27 வயதில் மரணமடைந்த பிறகும் 8 பேருக்கு வாழ்வளித்துள்ளார்.

உயிருடன் இருந்தபோது சோறு போடாத பாவிகள்... "மன்னிச்சிருங்கப்பா.. அம்மா"..

elderly couple committed suicide near chennai due to povertytamil.oneindia.com - hemavandhana : சென்னை: பசி கொடுமையால் வயதான தம்பதியினர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.. "எங்க சடலங்களுக்கு பிள்ளைகள் 3 பேருமே கொள்ளி வைக்கக்கூடாது" என்று ஒரு லெட்டரையும் போலீசுக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டனர்.. எனினும் மகன்கள் கதறி கதறி அழுததால், அவர்களிடம் பெற்றோர் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் எரியூட்டப்பட்டது.
சென்னை செம்பியத்தை சேர்ந்தவர் குணசேகரன்-செல்வி தம்பதி.. இவர்களுக்கு 3 மகன்கள்.. இதில் 2 மகன்களுக்கு கல்யாணம் செய்து வைத்தனர்.. அவர்கள் 2பேரும் கல்யாணம் ஆன உடனேயே தனிக்குடித்தனம் போய்விட்டனர்.. கடைசி மகனுக்கு இன்னும் கல்யாணம் ஆகாததால் பெற்றோருடனே வசித்து வந்தார்.
ஆனால், அந்த மகனும் வீட்டு செலவுக்கு காசு தராமல் இருந்திருக்கிறார்.. பணம் தராததால் வீட்டில் மளிகை உட்பட எந்த பொருளும் இல்லை.. இதனால் பசியை அவர்களால் சமாளிக்க முடியாமல், வயதான காலத்தில் செக்யூரிட்டி வேலைக்கு போனார் குணசேகரன்

வெறும் வயிற்றில் காலை நேர உணவாக சாப்பிடக்கூடாத உணவுகள் எவை...?

Empty stomachவெப்துனியா :காலையில் முதல் உணவாக இருப்பதால், எதைச் சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இது நாள் முழுவதும் நம் உடலை சீராகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள உதவும். இல்லையெனில் ஒருவர் எந்த நேரத்திலும் நோய்வாய்ப்படக்கூடும்.
இரவு வெகுநேரம் உணவு உண்ணாமல் உறங்குவதால், ஏற்கனவே வயிற்றில் அமிலம் அதிகமாக சுரந்திருக்கும். அப்போது, காபி, டீ பருகினால், இரைப்பையில்  அலர்ஜி உண்டாகும். செரிமானம் பாதிக்கப்படும். வயிறு பொருமல் ஏற்படும். காபி நல்லதுதான். ஆனால் ஏதாவது நன்றாக உணவு சாப்பிட்டுவிட்டுப் பின்னர், காபி  குடிக்கலாம்.இளம் சூடான நீர் - காலையில் காபி/டீக்கு பதிலாக இளம் சூடான தண்ணீர் குடித்தால், உடல் எடை குறையும், கழிவுகள் வெளியேறும், நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கும், சருமம் இளமையாகும், புத்துணர்வு கிடைக்கும், செரிமானம் சீராகும், மலச்சிக்கல் சரியாகும். யில் எரிச்சல் ஏற்படுத்தும்.

பேவிபிராவிர் மாத்திரைகள். கொரோனாவுக்கு நல்ல பலனைத்தரும் ...- மருத்துவ பரிசோதனையில்

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிற நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிற மருந்துகள் சோதனை ரீதியாக பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் ஜப்பானில் இன்புளூவென்சாவுக்கு வைரஸ் தடுப்பு மருந்தாக பேவிபிராவிர் மாத்திரைகள் தரப்படுகின்றன. அந்த மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கும் சோதனை முறையில் டாக்டர்கள் தருகின்றனர். இந்த மாத்திரைகள் எந்தளவுக்கு பலன் அளிக்கின்றன என்பது தொடர்பாக இந்தியாவில் 7 முக்கிய இடங்களில் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனையை, அவற்றை தயாரித்து சந்தையிடுகிற மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற கிளென்மார்க் நிறுவனத்தார் நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இஸ்லாமாபாத் : பெண் கொடுக்காத ஆத்திரத்தில் 14 வயது சிறுமி எரித்து கொலை

இஸ்லாமாபாத் : பெண் கொடுக்காத ஆத்திரத்தில் 14 வயது சிறுமி எரித்து கொலை தினத்தந்தி :   இஸ்லாமாபாத்தில் தன் மகனுக்கு பெண் கொடுக்காத ஆத்திரத்தில் 14 வயது சிறுமியை எரித்து கொலை செய்த கொடூர சம்பவம் நடந்து உள்ளது.
பாகிஸ்தானில் 14 வயது சிறுமியை தன் மகனுக்கு ஒருவர் பெண் கேட்க, பெண்ணின் தந்தை மறுத்ததால், அந்த பெண்ணை உயிருடன் கொளுத்தப்பட்டார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர் முகமது யூசுப் என்பவரது மகள் சாதியா (14). அவரை தனது மகனுக்கு பெண் கேட்டுள்ளார் யூசுபின்= சகோதரரான முகமது யாகூப். ஆனால், சாதியாவை ஏற்கனவே வேறொரு உறவினருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக தான் வாக்குக்கொடுத்துவிட்டதாக யூசுப் கூறியுள்ளார்.
தன் மகனுக்கு பெண் கொடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த யாகூப் வீட்டுக்குள் புகுந்து சாதியா மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் தீவைத்து கொளுத்தி உள்ளார்.

பெற்றோரைக் கொன்ற தாலிபான்களை சுட்டுக்கொன்ற சிறுமி! ஆப்கனிஸ்தான் .. வீடியோ

மின்னம்பலம் : ஆப்கானிஸ்தானில் பெற்றோரைக் கொன்ற இரண்டு தலிபான் பயங்கரவாதிகளைச் சுட்டுக்கொன்ற சிறுமிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் நிலவி வரும் சூழலில், அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் பொதுமக்களையும் தலிபான் பயங்கரவாதிகள் கொலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோர் மாகாணம் தியோரா மாவட்டத்தைச் சேர்ந்த கமர் குல் என்பவர் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்ததால், கடந்த 16ஆம் தேதி நள்ளிரவு அவர் வீட்டுக்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள் சிறுமியின் கண்முன்னே அவருடைய பெற்றோரை படுகொலை செய்தனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி, அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாகச் சுட்டதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர் தம்பியும் அந்தத் துப்பாக்கியை வாங்கி சுட்டதில் மீதமிருந்தவர்கள் தப்பியோடினர்.

நைஜீரியாவிலும் தீண்டாமை "ஓசு" எனும் நைஜீரிய பஞ்சமர்கள் !

Dhinakaran Chelliah : நைஜீரியாவிலும் தீண்டாமை ! "ஓசு" எனும் நைஜீரிய பஞ்சமர்கள் !!!
கிழக்கு நைஜீரியாவில் உள்ள இக்போ மக்களில் "ஒசு"(Osu) எனப்படுவோர் இன்றைய தேதியிலும் தீண்டத்தகாதவர்களாகவும் சபிக்கப்பட்டவர்களாகவும் ஒதுக்கிவைக்கப் பட்டுள்ளனர்.
இன்றைய தென்கிழக்கு நைஜீரியாவில் இக்போ எனும் ஒரு தனித்துவமான பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பேசும் மொழியை இந்தப் பிராந்தியத்தில் (Igboland) வேறு யாரும் பேசுவதில்லை. இக்போ மக்கள் இங்கு குடியேறியது எப்படி அல்லது எப்போது என்பதை சரித்திர ஆசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் தெளிவாக கண்டுபிடிக்கவில்லை.
இக்போ சமூக அமைப்பில் இரு பகுதி உள்ளது, ஒன்று ஓசு; அதாவது ஆச்சாரிய சாதி அல்லது அவரிடமிருந்து வந்தவர்கள், மற்றொன்று "டயலா" ; இவர்கள் மண்ணின் மைந்தர்கள். பண்டைய காலத்தில், இவர்களுக்குள் முரண்பாடுகள் இருந்ததில்லை.

ராஜஸ்தான் ரூ.900 கோடி மோசடி: மத்திய மந்திரி (BJP) ஷெகாவத்திடம் விசாரணை .. கூட்டுறவு சங்கத்தில்


தினத்தந்தி :  ராஜஸ்தான் கூட்டுறவு சங்கத்தில் நடந்த ரூ.900 கோடி மோசடி தொடர்பாக மத்திய மந்திரி ஷெகாவத்திடம் விசாரணை நடத்த போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஜெய்ப்பூர், ராஜஸ்தானை சேர்ந்த சஞ்சிவனி கடன் கூட்டுறவு சங்கத்தின் ஜெய்ப்பூர் கிளையில் ஆயிரக்கணக்கான மக்கள் பணம் சேமித்து வந்தனர். இந்த சங்கத்தில் ரூ.900 கோடி அளவுக்கு மோசடி நடந்தது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக ராஜஸ்தான் போலீஸ் சிறப்பு நடவடிக்கைக்குழுவினர் கடந்த ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோசடியில் மத்திய மந்திரியும், ராஜஸ்தான்பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டினர்.

விவசாயம் பற்றி பல இதழ்களில் வரும் ஓவர் பில்ட் அப் கதைகள் ..

அமெரிக்க நாசாவில் வேலையை விட்டுவிட்டு விவசாயம் பார்க்க கழனி புகுந்த என்ஜினீர்', 'குறைந்த  முதலீடு, அதிக லாபம்', 'கார்ப்பரேட் அழுத்தங்கள் இல்லாத மன நிம்மதியான விவசாய வாழ்க்கை', மற்றும் பல 'பெப்பப்' வரிகளும் விவசாயத்தை புனிதப்படுத்தும் வசனங்களும் கேட்டு அதை தொட்டால் கெட்டோம் என்பதை பின்னாளில் சில நண்பர்களின் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்.
பிலன் காமராஜ் : ஐந்து வயசு இருக்கும் பொழுது அப்பாவுடன் அவர் கிராமத்துக்கு போயிருக்கேன். எதுக்குன்னா, நரி பார்ப்பதற்கு. கரும்பு தோட்டத்தில் அறுவடையின் பொழுது பரண் மீதிருந்து பார்த்தால் நரி குட்டிகளுடன் ஓடுவது தெரியும். தோட்டத்திலேயே வெல்லம் காச்சுவார்கள்.
பத்து வயசு இருக்கும் பொழுது எங்க அப்பாவின் கிராமத்துக்கு கோடை விடுமுறைக்கு போனால் செம கொண்டாட்டமாக இருக்கும். ஊர் ஒருபுறம் வயல் மறுபுறம் இடையில் ஆறு ஓடிக் கொண்டிருக்கும். வயலில் பம்பு செட் கிணற்று நீரை இரைக்கும் தொட்டிக்குள் கும்மாளம் போட்டு, ஆற்று மீனை பிடித்து வந்து வீட்டுத் தொட்டியில் விட்டு என விளையாட ஏக மகிழ்ச்சி.
அதுக்கப்புறம் அதிகம் சென்றதில்லை. பொறியியல் படிக்கும் பொழுது வீட்டிலிருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான மோட்டார் பம்பை கட்டுப்படுத்த நான் செய்திருந்த மின்னனு கட்டுப்பாட்டு கருவியை பார்த்து சித்தப்பா வயலில் இருக்கும் மோட்டார் பம்பிற்கும் ஒன்று செய்து கொடுக்க சொன்னார்.

ஈ பாஸ் இல்லாமல் ரஜினி லம்போர்கினி பயணம் ..

Rebel Ravi : · முந்தாநாள் 5 கோடி ரூவா லம்போர்கினிய..எளிமையா அவரே ஓட்டினாருன்னு.. பப்லிசிட்டி. வேற .
தன்னோட பண்ணை வீட்டுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் போன இவர் 65+ வயதானவர்... இப்படிப்பட்டோர் அநாவசியமாக வெளியே போகாதீர் எனப் பிரதமர் கெஞ்சுகிறார்..
ஆனால் ரஜினி  போனார்.. ஈ பாஸ் எடுத்தாரா என எல்லோரும் கேட்டனர்..
உலக உத்தமன் வேடம் போடும்..இந்தக் கஞ்சமகாப்ரபு..கபட வேடதாரி...
இன்று ஈ பாஸ் எடுக்கிறார் அன்று போனதற்கு...அதுவும் மெடிக்கல் எமர்ஜென்சி எனப் பொய் கூறி..எடப்பாடியை விடக் கேவலமான பிறவி. இது சார் மாதிரி ஒரு யோக்கியனை ஈ லோகத்தில் பார்க்க இயலுமோ?
முந்தாநாள் போனதற்கு இன்றைக்கு ஈ பாஸ் எடுத்து இருக்கிறார்
Poovannan Ganapathy. : ஈ பாஸ்.
ரஜினிகாந்த் அவர்களின் ஈபாஸ் பார்த்ததால் இந்த பதிவு. இந்த கொரோனா காலகட்டத்தில் அரசும் போல்சியும் நடத்தும் சாடிஸ வெறியாட்டத்தில் இந்த ஈபாஸ் க்கு முக்கிய பங்கு இருக்கிறது.

வியாழன், 23 ஜூலை, 2020

மகராஷ்டிரா 2019 தேர்தலில் பாஜகவின் தில்லு முல்லு ... தேர்தல் ஆணையமே உடந்தை?

Muralidharan Pb : பாஜக 2019ல் மராட்டிய மாநிலத்தில், எவ்வளவு தில்லு முல்லு செய்துள்ளது கவனியுங்கள்.
இப்போது வெளியாகியுள்ளது.
இதோ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு.
நேரடியாக தேர்தல் ஆணையத்தோடு கூட்டணி வைத்துள்ளது அம்பலமானது.
இணைய முகவரி
www.eci.gov.in
ஆனால் கொடுக்கப்பட்ட தபால் முகவரி
அம்பு குறியிட்ட இந்த முகவரி 202 Pressman House was also used by a digital agency called "Social Central".
Devang Dave தேவாங் தாவே என்று முகவரியில் ஒருவரின் பெயரில் பதிவாகியுள்ளது.
அவர் யார்?
பாஜகவின் இளைஞர் அணியின் ஐடி மற்றும் சமூக ஊடகங்களின் தேசியத் தலைவர்.
அவருடைய கஸ்டமர் யாரென்று மற்றொரு படத்தில் காணலாம்.
பாஜக கட்சி
தேர்தல் ஆணையம்
போன்றவை
"The Fearless Indian", "I Support Narendra Modi" உள்ளிட்ட இயக்கங்களை நடத்தி வருகின்றார் தேவாங் தாவே.
அப்பேற்பட்ட ஆசாமியின் நிறுவனத்தின் கையில் தேர்தல் ஆணையம் தங்களது முகநூல் பக்கத்தை தந்துள்ளது கோரமான உண்மை, அதிர்ச்சியான உண்மை.

கொரோனா கவாச் (கவசம்).. Insurance Regulatory Development Authority of India

Karthikeyan Fastura : கொரோனா கவாச் (கவசம்)
கொரோனா தொற்று ஏற்பட்டால் ரூ 5 லட்சம் மதிப்பில் தனியார் மருத்துவமனைகளில் பணம் செலுத்தாமல் சிகிச்சை எடுத்துக்கொள்ள Insurance Regulatory Development Authority of India கரோனா கவாச் (கவசம்) பாலிசியை அறிவித்துள்ளது.
பாலிசி எடுத்த 16 வது நாளில் இருந்து சிகிச்சை பெறலாம்.
ரூ 5 லட்சம் வரை சிகிச்சை பெற
பிறந்தது முதல் 45வயது வரை கட்டணம் ரூ . 2243
46 வயது முதல் 65 வயது வரை கட்டணம் ரூ. 2692
தனி நபருக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சிகிச்சை பெறலாம்.
நம் குடும்பத்திற்கான பாதுகாப்பு
எ.கா.
S.I: 5 லட்சம் கரோனா கவாச் பாலிசி
குடும்ப தலைவர் வயது: 41
மனைவி வயது: 37
குழந்தை 1: வயது: 15
குழந்தை 2: வயது: 10
பாலிசி டேர்ம்: 9. 1/2 மாதங்களுக்கான எடுத்துக்காட்டு: =

News 18 ஹாசிஃப் முஹம்மது.. நிர்பந்தம் காரணமாக வெளியேறினார்

 ஹாசிஃப் முஹம்மது : ஆம். நிர்பந்தம் காரணமாகதான் News18ல் இருந்து வெளியேற்றப்பட்டேன்.
இது News18 எனும் ஒரு சேனலோடு சுருக்கி பார்க்கவேண்டிய விசயமல்ல. 2014 முதலே இந்த நெருக்கடியை எல்லா ஊடகங்களும் சந்திக்கிறது. பாராளுமன்ற தேர்தலின்போது ஊடகங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதுபோல் தமிழக தேர்தலுக்கான நெருக்கடியை இப்போதே தருவதாக உணர்கிறேன்.
இது என்னோடு முடிந்துவிடும் பிரச்சினை அல்ல. எனக்கு பிறகும் சில முக்கியமானவர்களை ஊடகத்துறையில் இருந்து விரட்ட முழு முனைப்போடு செயல்படுகிறார்கள்.
எனக்கும் கறுப்பர் கூட்டத்திற்கும் தொடர்பு உள்ளது என கூறுபவர்கள் ஒரே ஒரு ஆதாரத்தை கொடுத்தால் நான் ஊடகத்தை விட்டும், சங்கத்தை விட்டும் சென்றுவிடுகிறேன் என சவால் விட்டும் இதுவரை ஒருவர்கூட அதற்கு ஆதாரம் தரவில்லை.

ஆஸ்திரேலியா திறந்த வெளி கடை... விற்பனையாளர் கிடையாது .

Dhinakaran Chelliah : இது ஒரு திறந்த வெளிக் கடை.
உரிமையாளர் யாரும் இல்லாத கடை இது.தங்களது விவசாயப் பண்ணைக்கு முன்பாக இத்தகைய கடைகள் இருப்பது ஆஸ்திரேலியாவில் வாடிக்கை..
ஆரஞ்சு பழங்கள், முட்டை, எழுமிச்சை, தேன் என பண்ணையின் விளை பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பர். பொருளுக்கான விலையை சிறு அட்டைகளில் எழுதி வைத்திருப்பார்கள்.
விருப்பமுள்ளவர்கள் பொருளை எடுத்துக் கொண்டு உரிய பணத்தை அங்குள்ள சிறு பெட்டியில் போட்டுவிட்டுச் செல்லலாம். மனிதமும், சக மனிதனிடம் உள்ள நம்பிக்கையும் மட்டுமே இந்த வியாபாரத்தின் ஆதாரம்.

தமிழகத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது வீடியோ


மாலைமலர் : தமிழகத்தில் எஸ்ஆர்எம் கல்லூரியில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது.
சென்னை: கொரோனாவை தடுக்க உருவாக்கப்பட்டுள்ள கோவாக்சின் என்ற மருந்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி செயல்பாட்டிற்கு கொண்டு வர இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதையடுத்து அந்த தடுப்பூசியை  மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க தமிழகத்தின் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விசாகப்பட்டினம், ரோஹ்டாக், டெல்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கொரோக்பூர், ஹைதராபாத், ஆர்யா நகர், கான்பூர் மற்றும் கோவா உட்பட  நாடு முழுவதும் சுமார் 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
டெல்லி மற்றும் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ‘கோவாக்சின்’ பரிசோதனை தொடங்கிவிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் சோதனை இன்று தொடங்கியது.

வனிதாவுக்கு கொலை மிரட்டல் : சூர்யா தேவி கைது!.. வீடியோ

வனிதாவுக்கு கொலை மிரட்டல் : சூர்யா தேவி கைது!மின்னம்பலம் : நடிகை வனிதா விஜயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சூர்யா தேவி என்பவரை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகையும், பிக் பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை கடந்த ஜூன் 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணம், என்பதால் அதனைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவரைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். அந்த நேரத்தில் பீட்டர் பால் அவரது முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெற்றுக்கொள்ளாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக புதிய சர்ச்சை கிளம்பியது.
பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் இது தொடர்பாக வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  இதுதான் அந்த விவகார வீடியோ

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு: அதிமுகவினர் போராட்டம்!

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு: அதிமுகவினர் போராட்டம்!மின்னம்பலம் : எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் வில்லியனூர் சந்திப்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு ஆளுயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பகல் அவரது சிலைக்கு மர்ம நபர்கள் காவித் துண்டு அணிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். காவித் துண்டு அணிவிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி அதிமுகவினர், எம்.எல்.ஏ அன்பழகன், வையாபுரி, மணிகண்டன் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், அங்கு கூடிய அதிமுகவினர் காவித் துண்டு அணிவித்த மர்ம நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்த வில்லியனூர் காவல் துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

இலங்கை மாபியா தலைவன் அங்கோட லோக்கோ இந்தியாவில் கொலை .

வீரகேசரி : தலைவன் அங்கொட லொக்கா இந்தியாவில் படுகொலை ; இலங்கையிலிருந்து சென்ற பெண் பானத்தில் விஷம் கலந்து கொலை செய்துள்ளதாக தகவல்
பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா இந்தியாவில் படுகொலை ; இலங்கையிலிருந்து சென்ற பெண் பானத்தில் விஷம் கலந்து கொலை செய்துள்ளதாக தகவல் இலங்கையில் இருந்து சென்றுள்ள பெண் ஒருவரே அவரை சக்தி பானம் ஒன்றில் விஷம் கலந்து கொலை செய்துள்ளதாக அந்த தகவல்கள்  தெரிவித்தன.
பாதுகாப்புத் தரப்பின்  உள்ளக தகவல்கள் பிரகாரம் அறிய முடிவதாவது,
கடந்த 2019 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி பாதாள உலகக்கோஷ்டியின் தலைவர்களில் ஒருவரான சமயங் உள்ளிட்ட சில கைதிகளை ஏற்றிச்சென்ற சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அதன் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் அங்கொட லொக்கா இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தார்.
இந் நிலையிலேயே இந்தியாவில் அங்கொட லொக்கா மறைந்திருந்த நிலையில், இலங்கையில் இருந்து அங்கு சென்று அங்கொட லொக்காவுடன் இருந்ததாக கூறப்படும்  அழகுக் கலை நிலைய பெண் ஒருவர் இவ்வாறு சக்தி பானம் ஒன்றில் விஷம் கலந்து அங்கொட லொக்காவை கொலைசெய்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பின் உள்ளக தகவல்கள் தெரிவித்தன.

தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவன் உட்பட 19 அமைச்சர்கள் எம் எல் ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி

தூத்துக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று
மாலைமலர் :தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. களத்தில் நின்று பணியாற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்களை தொடர்ந்து கொரோனா பதம் பார்த்து வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உள்ளனர். இதனால் அமைச்சர்களும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.   கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர்  வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.
மேலும்  கீதா ஜீவனின் மகள் மற்றும் மருமகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர்களும் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டனர்.
தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என இதுவரை 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆ .ராசா : திமுக இந்து விரோத கட்சியல்ல ... தமிழ் மக்களுக்கு காவி அரசியல் நன்றாகவே புரிந்திருக்கிறது.

Nanthivarman:    பலரின் சந்தேகங்களுக்கு தெளிவான பதிலை திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா (A Raja) அவர்கள் விகடனில் தெரிவித்து உள்ளார்.. அதில் மிக முக்கிய மூன்று கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே....
1. தி.மு.க இந்து விரோத கட்சி என்று தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? தி.மு.க இந்து மக்களுக்கு என்ன செய்துள்ளது?
தி.மு.க 'இந்துக்கள்' என்றழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களாக விளங்கும் சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்குமான உரிமை மீட்பு இயக்கம். தன் வாழ்நாளுக்குள்ளாகவே, தமிழ் நாட்டளவிலாவது இம்மக்களுக்கு சூத்திர பட்டமும், பஞ்சம பட்டமும் ஒழிய வேண்டும் என்று தன்னலமற்று போராடியவர் தந்தை பெரியார். பெரியாரின் எண்ணப்படிதான் காமராஜர் ஊரெங்கும் பள்ளிக்கூடங்களை திறந்தார். பின்னர், கலைஞர் கல்லூரிகளை திறந்து, சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும் ஆக்கப்பட்ட இந்துக்களை பட்டதாரிகளாக மாற்றினார்.

லடாக் எல்லையில் 40 ஆயிரம் சீன துருப்புக்கள இன்னும் நிலை கொண்டுள்ளது

தினதந்ததி : லடாக் எல்லைப்பகுதியில் ஊடுருவிய சீனா அனைத்து பகுதிகளிலிருந்தும் பின்வாங்கவில்லை 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் உள்ளனர்.மீண்டும் சிக்கல் நீடிக்கிறது.
புதுடெல்லி லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு\காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோதலால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
அதேசமயம் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய-சீன ராணுவ கமாண்டர் அளவிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில்
பங்கோங் டெசோ பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீன படைகள், கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்க வேண்டும் எனவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், சீனர்களுடனான தனது பேச்சு வார்த்தையின்  போது, ​​பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பினரும் தங்கள் நிரந்தர இடங்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும் என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

கறுப்பர் கூட்டம் .. திரு கொளத்தூர் மணி : உடனே செயல்படுங்கள்! விரைந்து செயல் படுங்கள்!

அன்பார்ந்த தோழர்களே! வணக்கம். நேற்று (22.07.2020) கோவை மாவட்டம்,
அன்னூரில் பெரியாரிய இயக்கத் தோழர்களும், ஜனாயக சக்திகளும் இணைந்து முன்னெடுத்த ஒரு போராட்டம், நம்மைப் போன்ற முற்போக்கு இயக்கங்களைச் சார்ந்த தோழர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது.
என்னதான் நடந்தது? அன்னூருக்கு அருகிலுள்ள நல்லி செட்டிப் பாளையம் எனும் ஊரைச் சேர்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் சண்முகநாதன் என்பவர் மோடி குறித்தும் கந்தசஷ்டிக் கவச சிக்கல் குறித்தும் முகநூலில் பதிவிட்டிருந்தார் என்பதற்காக இந்து அமைப்பினர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
உடனே, அன்னூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்றினைப் பதிவு செய்து 21.07.2020 அன்று மாலை அத்தோழரைக் கைது செய்துள்ளனர்.
அதேவேளையில் பெரியார் குறித்து மிகக்கேவலமாக முகநூலில் பதிவுகளைப் போட்டுள்ள அன்னூர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியும், அன்னூர் காவல் நிலையத்துக்கு அருகிலேயே கடை வைத்துள்ள நந்தகுமார் என்பவர் மீது புகார் அளித்தும், வழக்கும் பதிவு செய்யவில்லை; கைதும் நடக்கவில்லை

’உள்ளம் உருகுதையா முருகா… கந்த சஷ்டி கவசம் . சாவித்திரி கண்ணன்

சாவித்திரி ண்ணன் : முருக பக்தனாக இருந்த போதிலும் தனிப்பட்ட முறையில் கந்தசஷ்டி கவசம் பாடலை நான் ஒரு முறை கூட பாடியதே இல்லை! பாடவேண்டும் என்று தோன்றியதும் இல்லை!
ஆனால்,சின்னஞ் சிறிய வயதில் இருந்து அந்தப் பாடலை பல நூறு முறை யதேச்சையாக கேட்டு வந்துள்ளேன்! நானாக விரும்பி ஒலிக்கவிட்டு கேட்டதில்லை!
டி.எம்.எஸ்சின் நிறைய முருகன் பாடல்களை மீண்டும்,மீண்டும் கேட்டு உள்ளம் கனிந்து கசிந்துருகியுள்ளேன்!
’’உள்ளம் உருகுதையா முருகா…’’
’’அழகென்ற சொல்லுக்கு முருகா’’
இந்த இரண்டும் என் நெஞ்சுக்கு நெருக்கமானவை!
’’சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா..’’என்ற பாடலில் வரும்
’’உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது – அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ..’’ என்ற வரியில் நெஞ்சம் நெக்குருகிவிடும்!
என் வாழ்க்கையில் இடையில் ஒரு பதினைந்து ஆண்டுகள் எனக்கு கடவுள் நம்பிக்கையே இல்லாமலிருந்தது! ஆனால்,அப்போதும் கூட இந்தப் பாடல்களை நான் விரும்பி கேட்டுள்ளேன். உருவ வழிபாடுகள் அனைத்தும் நமது கற்பிதங்கள் என்பதை இன்றும் நான் நன்கு உணர்ந்தாலும் கூட, பக்தி இசையில் மனம் லயிப்பது ஏதோ ஒரு வகையில் எனக்கு மகிழ்வைத் தருகிறது.

புதன், 22 ஜூலை, 2020

RSS Formula!.. பொய்களை பரப்பி நாட்டை சூறையாடும் குள்ள நரி கூட்டம்

Kandasamy Mariyappan : RSS Formula!
மாநிலத்தில் உள்ள பிரபலமான கட்சியின் மீது அபாண்டமாக ஒரு பொய் சொல்லனும், பிறகு அதை அப்படியே Maintain பன்னனும். எதிர்ப்புகள் பற்றி கவலைப்பட கூடாது! 10% மக்கள் இந்த பொய்யை ஏற்றுக் கொண்டால் போதும்!
News 18 விவாதத்தில் திரு. நாராயணன்...
70களில் தமிழ்நாடு வந்த திரு.மண்டல் அவர்களை திமுக தலைவர் திரு. மு. கருணாநிதி மற்றும் திராவிட கழக தலைவர் திரு.கி. வீரமணி இருவரும் பார்க்க மறுத்து விட்டனர் என்கிறார்.
News 18 திரு. குணா, அந்த சந்திப்பு நடந்த இடமே பெரியார் திடலில் தானே நாராயணன் என்கிறார்.
விவாதம் முடியும் பொழுதும் நாராயணன் மீண்டும் அதே பொய்யை கூறி முடிக்கிறார்.

News 7ல் திருமதி வானதி அவர்கள், சம்மந்தமே இல்லாமல்...
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை திமுக ஆட்சியில் உருவானது என்கிறார்.

புலிகளின் அரசியலே, ஈழத் தமிழரின் வீழ்ச்சிக்கு முழுக் காரணம்... flashback

தமிழ் மாணவன் : பகுதி-1 வன்னியில் என்ன நடந்தது?
களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு
உண்மைகள் சொல்லப்படாதவரையில் பொய்களின் ஊர்வலமே நடக்கும் என்பார்கள். இந்தப் பொய்கள் எப்போதும் எல்லோரையும் எல்லாவற்றையும் மயானத்துக்கே அழைத்துச் செல்லும். வன்னியுத்தமும் ஈழத்தமிழர் போராட்டமும் ஏறக்குறைய இத்தகையதொரு நிலையையே இன்று எட்டியுள்ளன. விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் பற்றியும் உற்பத்தி செய்யப்பட்ட புனைவுகள் ஒருபுறமும், சிறிலங்கா அரசினதும் சிங்களத் தரப்பினதுமான புனைவுகள் மறுபுறமுமாகப் பெரும் புனைவுகள் நம்மைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் புனைவுகளுக்கெதிரான மறுப்புக் குரல்களோ எதிர்க் குரல்களோ கலகக் குரல்களோ உரியமுறையில் வெகுசனத்திரளால் கவனத்திற்கொள்ளப் படவில்லை. எனவே இன்று வன்னி யுத்தம் பற்றியோ புலிகளின் இறுதி நாட்களைப் பற்றியோ அங்கே இருந்த மக்களின் நிலை பற்றியோ கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்தோ எதுவும் தெரியாதவாறு இந்தப் புனைவு மண்டலம் நீள்கிறது. இது மிகத் துயரமான ஒரு நிலை; அது மட்டுமல்ல ஆபத்தான நிலையும்கூட.
வன்னியில் என்ன நடந்தது? புலிகள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டனர்? அல்லது எப்படித் தோற்றனர்? உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இது போன்ற ஏராளமான கேள்விகள் நம் முன் விரிந்து கிடக்கின்றன.
ஐ.நா. உட்படப் பல்வேறு தரப்பினரும் இந்த நிலைமைகள் மற்றும் விவரங்கள் தொடர்பாகப் பலவகையான அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருகின்ற போதும் உண்மை நிலவரத்தை எந்தத் தரப்பும் இன்னும் முழுமையாகக் கண்டறியவில்லை. உண்மை நிலவரத்தை அறிந்தவர்கள் வன்னி மக்கள் மட்டுமே. ஆனால் அவர்களோ இப்போது வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் நலன்புரி நிலையங்கள் என்ற தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் வெளியுலகத்துடன் தொடர்புகொண்டு பேசக்கூடிய நிலைமை உருவாகுமானால் எல்லாவற்றினதும் மெய்விவரங்களும் வெளித்தெரிய வரும். ஆச்சரியமளிக்கூடிய அதிர்ச்சியளிக்கூடிய உண்மைகள் அப்போது வெளியாகும்.

கலைஞர் கட்டமைத்த மின்சார மேலாண்மை .. ..முழு விபரம் .. பட்டியல்

A Sivakumar. : கலைஞரும் மின்சாரத்துறையும்
கலைஞரின் சாதனைகள் என்று துறைவாரியாக எல்லாத்தையும் எழுதுறீங்களே மின்சாரத்துறை பற்றி எழுதுங்களேன் என்று தம்பி Meera Sarkhan கேட்டிருந்தார்.
அதற்காக தகவல்களை தேட துவங்கியதும் தான் திமுக ஆட்சியில் மின் உற்பத்தி திட்டங்களே இல்லை, அதனால் மின்வெட்டினால் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எத்தனை அபாண்டமானது என்று புரிந்தது.
காமராஜருக்கு பிறகு தமிழ்நாட்டில் அணைகளே கட்டப்படவில்லை என்ற கேவலமான பொய்க்கு இணையான கேவலம் தான் இந்த மின்சாரம் தொடர்பான குற்றச்சாட்டும்.
அது எப்படி என்று புரிந்துக்கொள்ள திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை பார்க்கலாம்,
1. ஆழியாறு 60 MW மின் திட்டம், 1970
2. கோதையாறு (Power House I) 60 MW மின் திட்டம், 1970
3. சோலையாறு 95 MW மின் திட்டம், 1971
4. கோதையாறு (Power House II) 40 MW மின் திட்டம், 1971
5. வைகை 6 MW மின் திட்டம், 1990
6. கீழ் பவானி 8 MW மின் திட்டம், 1990
7. கீழ் பவானி (RBC) 8 MW மின் திட்டம், 1998
8. குந்தா பவர் ஹவுஸ்-6 (Unit 1), 30 MW மின் திட்டம், 2000
9. முக்குருத்தி Micro Power House (Unit 1), 350 KW மின் திட்டம், 2001
10. பவானி கட்டளை பேரேஜ்-II, 30MW, 2011
11. பெரியாறு வைகை மினி - I, 4 MW, 2011

சென்னை ஓஎம்ஆர்.. வெறிச்சோடியது ...காற்று வாங்கும் வானுயர்ந்த கட்டிடங்கள்.. காலியான வீடுகள்

அலுவலகங்கள் காலி tamil.oneindia.com - VelmuruganP : சென்னை: கொரோனா அதிகரித்த காரணத்தால் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய சொல்லிவிட்டு சென்னையில் செயல்பட்டு வந்த பல ஐ.டி நிறுவனங்கள் அலுவலகத்தை காலி செய்துவிட்டன. இதனால் சென்னை ஓஎம்ஆர் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.
வானுயுர்ந்த ஐடி கட்டிடங்கள் ஆள் இல்லாமல காற்று வாங்குகின்றன. 25K. 20K என்று வாடகை வாங்கிய வீட்டு ஓனர்கள் இப்போது மொத்தமாக வீடுகள் காலியாக கிடப்பதால் என்னசெய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். சென்னை முழுக்க ஏராளமான வீடுகளில் டூலெட் போர்டு தொங்குகிறது
சென்னை நகரில் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாக சரிவை சந்தித்துள்ளது. கட்டிட தொழிலாளர்கள் பல்லாயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. அத்துடன் நிலத்தின் மதிப்பும் சரியும் அபாயமும் உள்ளது. ஒரு வேளை நிறுவனங்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை நடைமுறைப்படுத்தினால் கற்பனைக்கும் அப்பாற்றப்ப்டட வீழ்ச்சியை சென்னை சந்திக்கும்.

கூட்டு குடும்பத்திற்குள் கொரோனா: 18 பேருக்கு பாதிப்பு - 9 நாட்களில் சகோதரர்கள் 3 பேர் உயிரிழப்பு

கூட்டுக்குடும்பத்திற்குள் புகுந்த கொரோனா: 18 பேருக்கு பாதிப்பு - 9 நாட்களில் சகோதரர்கள் 3 பேர் பலிமாலைமலர் : கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்த 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் 9 நாட்களில் வைரஸ் தாக்குதலுக்கு அடுத்தடுத்து 3 சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பிரிம்பிஹான் கிராமத்தை சேர்ந்தவர்கள் போபட்ராவ் கலப்யூர் (66), டைனேஸ்வர் கலப்யூர் (63) திலீப்ராவ் கலப்யூர் (61). 
சகோதரர்களான இவர்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். மனைவி, மகன்கள், மகள்கள் என இவர்களின் கூட்டுக்குடும்ப உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 18 பேர் ஆகும். இந்தியாவையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கலப்யூரின் கூட்டுக்குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை. கலப்யூரின் குடும்ப உறுப்பினர்களில் முதல் நபராக வாலிபர் ஒருவருக்கு கடந்த ஜூலை 5 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.

டெல்லியில் நான்கில் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று - அதிர்ச்சி

பெரும்பாலான மக்கள் அறிகுறிகளற்ற கொரோனா தொற்றைக் கொண்டிருக்கின்றனர்BBC : கொரோனா வைரஸ்: டெல்லியில் நான்கில் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று - அதிர்ச்சி தரும் ஆய்வு பெரும்பாலான மக்கள் அறிகுறிகளற்ற கொரோனா தொற்றைக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் வசிப்பவர்களில் நான்கு பேரில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார் எனப் பரவலாக எடுக்கப்பட்ட ஆண்டிபாடி பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. டெல்லியில், 21,387 பேரிடம் எடுக்கப்பட்ட கோவிட்-19 'ஆண்டிபாடி' பரிசோதனையில் 23.48 சதவீதம் பேரின் உடலில் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு அணுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள எண்ணிக்கையை விட, டெல்லியில் கொரோனா தொற்று இன்னும் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.

பத்திரிக்கையாளர் மகள்கள் முன்பு துப்பாக்கியால் சுட்டு கொலை .. உத்தர பிரதேசத்தில் வீடியோ


மின்னம்பலம் : உத்தர பிரதேச பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி, தனது இரண்டு மகள்களுடன் டெல்லி அருகேயுள்ள காசியாபாத்தில் கடந்த 20ஆம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். சுமார் 10.30 மணியளவில் அவரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளார் விக்ரம். ஆனால், பைக்கை சுற்றிவளைத்த அந்த கும்பல், அவரை கீழே தள்ளி சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.
தாக்குதலால் அதிர்ச்சியடைந்த விக்ரமின் இரண்டு மகள்களும் பீதியுடன் சம்பவ இடத்திலிருந்து உதவிக்காக ஓடினர். தாக்கிய கும்பல் விக்ரமை தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியது. சிசிடிவி காட்சிகள் சாலையில் காயத்துடன் விக்ரம் ஜோஷி விழுந்து கிடப்பதையும், அவரது மகள்களில் ஒருவர் அழுதுகொண்டே உதவிக்காக கத்தியதையும் காட்டியது. இந்த சம்பவம் பத்திரிகையாளர் வீட்டின் அருகிலேயே நிகழ்ந்துள்ளது.

சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா!

சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா!மின்னம்பலம் : தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 3000த்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி, சாத்தான்குளம் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும், போலீசார் தாக்குதலால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த இரட்டை கொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

இது பார்ப்பனீயத்துக்கு எதிரான போர்.. சவுக்கு சங்கர்

savukkuonline.com : பெரியார் தொடங்கிய ஆரிய / பார்ப்பனீயத்துக்கு எதிரான போரை மீண்டும் தமிழர்கள் கையிலெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மத்தியில் மோடியின் ஆட்சி இருந்தாலும் கூட, ஜெயலலிதாவோ, கருணாநிதியோ உயிரோடு இருந்த வரையில், பார்ப்பனீய சக்திகள் அடக்கியே வாசித்தன.   கருணாநிதி, தன் வாழ்நாளின் இறுதி வரையில் பார்ப்பனீய சதியை புரிந்தே வைத்திருந்தார்.  சமயம் கிடைக்கும்போதெல்லாம்பார்ப்பனீயத்தின்ஆபத்தை சுட்டிக்காட்ட கலைஞர் தவறியதேயில்லை.
‘ஆமாம் நான் ஒரு பாப்பாத்தி தான்’ என்று சொன்னாலும், பார்ப்பனர்கள் குருவாக வணங்குகிற ஜெயேந்திரனையும், விஜயேந்திரனையும் சிறையில் அடைத்தது ஜெயலலிதா தான் என்பதை நாம் மறுக்க முடியாது.
ஜெயலலிதா மீதும், கருணாநிதி மீதும் நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கிறது.   ஆனால்,  இவர்கள் இருவருமே, , இந்துத்துவா அமைப்புகள் எத்தகைய தீயசக்திகள் என்பதை உணர்ந்தே இருந்தனர்.   

கறுப்பர் கூட்டம் சுரேந்தர் சுந்தர வள்ளி கூட்டுசதி.... ?

Kalai Selvi சுரேந்தர் - கருப்பர் கூட்டம்- சுந்தர வள்ளி கூட்டுசதி
கூட்டுசதி -1
சுரேந்தரை முதலில் Cpim ன் செம்புலம் U tube மூலம் பேட்டி கண்டது சுந்தர வள்ளி.
பின்னர் கறுப்பர் கூட்டத்தை 6 மாதம் முன்பே மாரிதாஸ் டார்கெட் செய்த போதும் அப்போது கைது இல்லை.
கூட்டுசதி -2
நாதக &இந்து மக்கள் கட்சிVs சுந்தரவள்ளி என பி.ச்சனை வந்தபோது நாதகவின் அடையாளமான முருகனை சுரேந்தரை வைத்து பேச வைப்பது என சுந்திரவள்ளி பிளானாக இருக்க வாய்ப்பு அதிகம். அதைதான் மேலே உள்ள U tube video காட்டுது
கூட்டுசதி - 3
சுரேந்தரின் கருப்பர் கூட்டம் அலுவலகம் செயல்படும் இடம் T.nagar மிக முக்கியமான இடம். கிட்டதட்ட மாதம் லட்சம் வாடகை வரும் இடம் எப்படி இவர்களுக்கு கிடைத்தது.?
சுரேந்தர் U to brutus U tube பேட்டியில்கறுப்பர் கூட்டைம் எந்த வருமானமும் வரவில்லை என்று கூறியுள்ளார்.பின்னர் எப்படி இவ்வளவு வாடகை உள்ள இடத்தில் வைத்து Channel நடத்த முடியும்?
கூட்டுசதி -4
இ.பாஸ் இல்லாமல் புதுவை மாநிலத்திற்கு சுரேந்தர் ஓடியது ஏன்?
ஒரு கருத்தை சொல்லிவிட்டு அதனை நெஞ்சு உயர்த்தி நிற்பதுதான் பெரியார் ஸ்டைல். ஆனால் பழைய Rss காரர்னான சுரேந்தரின் செயல் சரியா?

வனிதா லக்ஷ்மி ராம்கி சண்டையில் சூடாகும் ட்விட்டர் வார்.. சீண்டிய கஸ்தூரி .

Parthiban Pakirisamyy : நீ புகுந்து விளையாடுமா ! 
நம்முடைய வனிதாக்களை நாம் ஆதரிக்கவேண்டிய தருணம் இது என்றால் மிகையல்ல. ஒரு பெண் தைரியமாக தனித்து இந்த சமூகத்தில் வாழ்வதென்பது எத்தகைய செயற்கரிய செயல் என்பதற்கு இன்னுமோர் சான்று தேடவேண்டியதில்லை. திரௌபதி எனும் புராண கதாபாத்திரத்தை ஆதரிக்கும் நம்மால் வனிதாக்களை ஆதரிக்க இயலவில்லை என்பது வியப்புதான். ஆம், குண்டி காட்டி மானியத்தை ஆதரிப்பவர்களால் ஆங்கிலம் பேசும் வனித்தாக்களின் வளர்ச்சியை தன்னம்பிக்கையை தனித்து போராடும் துணிவை பொறுத்துக்கொள்ள முடியாதுதான். ஆனால் சக சூத்திர பெண்கள் ஏன் எதிர்க்கவேண்டும்? உங்கள் பெண்ணியத்தின் கடைசி பக்கங்களும் எரிந்துபோயிற்றா?
சூடாகும் ட்விட்டர் வார்..பயந்துட்டியா குமாரு? சீண்டிய கஸ்தூரி.. கிறுக்குத்தனம் பண்ணாத..எகிறிய வனிதா!
/tamil.filmibeat.comசென்னை: நடிகை கஸ்தூரியை, வனிதா மீண்டும் கண்டபடி சாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  வீட்டு
சண்டை வீதிக்கு வந்தது • Lakshmi யை ஓடவிட்ட வனிதா நடிகை வனிதா விஜயகுமார், லட்சுமி ராமகிருஷ்ணன் வாக்குவாதம் கொரோனாவை விட கொடுமையாக நடந்து முடிந்திருக்கிறது, ட்விட்டரில். இன்னும் தொடரும் போலிருக்கிறது இந்தக் காட்டமான பஞ்சாயத்து. அதிரடியாக பேசி, அமைதியான லட்சுமி ராமகிருஷ்ணனை ஆக்ரோஷமாக்குகிறார் வனிதா; முறையாக விவாகரத்து பெறாத பீட்டர்பாலை, மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார் நடிகை வனிதா. எப்போதும் பரபரப்பாக இருக்கும்வனிதா, இதன் மூலம் பரபரப்பானார். வனிதாவின் திருமணம் குறித்து நடிகை கஸ்தூரியும், நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் கருத்து தெரிவித்திருந்தனர். இவர்களுக்கும் வனிதாவுக்கும் ஏற்கனவே ஏகப்பட்ட வாய்க்கா வரப்பு பஞ்சாயத்து

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இந்தியாவில் நவம்பர் மாதம் ரூ.1000 விலையில் கிடைக்கும்- இந்திய நிறுவனம் நம்பிக்கை

தினத்தந்தி : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும்,
இந்த தடுப்பூசி ரூ .1,000 விலையில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்தூள்ளது.
புதுடெல்லி: உலகை உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
இந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

செய்தி ஊடகங்களை அச்சுறுத்தும் சக்திகளை எதிர்க்க ஒன்றுபடுங்கள் – கூட்டறிக்கை*

செய்தி ஊடகங்களை அச்சுறுத்தும் சக்திகளை எதிர்க்க ஒன்றுபடுங்கள் – கூட்டறிக்கை*
ஊடகத்துறையினர் இன்று தொழில்ரீதியாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் பல்முனை தாக்குதலைஎதிர்கொள்ள நேரிட்டுள்ளது. வெறுப்பை பரப்பும் சில சக்திகள் ஊடகங்கள், பத்திரிகைகள் இதைத்தான் பேச வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கில் உத்தரவிட முயல்கின்றன.
பல கருத்து உடையவர்கள் ஊடகத்தில் இணைந்து பணியாற்றும் நிலையில் குறிப்பிட்ட சித்தாந்தம் கொண்டவர்கள் மட்டும் ஊடகத்தில் இடம் பெறக்கூடாது என்ற பிரச்சாரத்தை அந்த சக்திகள் முன்வைக்கின்றன. அந்த சக்திகள், சில ஊடகங்களின் உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதி குறிப்பிட்ட சிலரை நீக்க வேண்டுமென்றும் அச்சுறுத்துகின்றன.
சுதந்திரப் போராட்ட காலத்திலும் எமர்ஜென்சியிலும் பத்திரிகைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் தணிக்கை முறையை சந்தித்து அந்த அடக்குமுறையிலிருந்து வெற்றிகரமாக மீண்டு உள்ளன. இன்றைய சூழலில் தங்களைத் தாங்களே நடுநிலையாளர்கள், தேசபக்தர்கள், என்று நாமகரணம் சூட்டிக்கொண்டு புறப்பட்டுள்ள சக்திகளின் அச்சுறுத்தல் அதிகமாகி விட்டது. தமிழ்நாட்டில் திட்டமிட்ட நோக்கத்துடன் அவர்கள் செயல்படுகின்றனர்.

செவ்வாய், 21 ஜூலை, 2020

Youtube நோகாமல் நுங்கு தின்னும் போலி யூட்டூப் சேனல்கள்

Shalin Maria Lawrence : நோகாமல் நுங்கு திண்ணுபவர்கள்.
யூட்டுப் சேனலில் காசு பார்க்க வேண்டுமென்றால் உழைக்க வேண்டும்.புதிதாக சிந்திக்க வேண்டும்.புதிய வடிவங்களில் நிகழ்ச்சிகளை கொடுக்க வேண்டும்.மூளையை உபயோகிக்க வேண்டும்.
ஆனால் இதயெல்லாம் செய்யாமல் பணம் சேர்க்கும் கேடுகெட்ட கும்பல் ஒன்று இருக்கிறது. என்டேர்டைன்மெண்ட் சேனல் என்கிற பெயரில் அபத்தமான குப்பைகளை பொழுது போக்கு என்கிற பெயரில் மணிக்கொரு முறை யூட்டுபில் உலவ விட்டு கொண்டிருப்பவர்கள்.அதிலும் காணொளிக்கு சம்பந்தமே இல்லாத தலைப்பு ,படங்களோடு.
"இந்த பிரபல நடிகை இறந்து விட்டாரா?!!"
"பட்டப்பகலில் இந்த tv நடிகை செய்வதை பாருங்கள்!!"
"முன்னாள் காதலனுடன் கிளுகிளுப்பாக போட்டோ பிடித்த நடிகை"
இது போன்ற மூன்றாம் தர தலைப்புகள் கட்டாயம் இருக்கும்.அப்படி இல்லையென்றால் உலகில் யூட்டுப் சேனல்களை அப்பட்ட மாக காப்பியடித்த நிகழ்ச்சிகள்."இவர் ஹேண்ட்பேகில் என்ன இருக்கிறது?!! அய்யயோ இந்த பிரபலத்தின் பேகில் இதுவா!!!" போன்ற உலக தர நிகழ்ச்சிகள். ஆங்கர்கள் என்கிற பெயரில் இங்கீதம் மயிரு மட்டை இல்லாத ஒருவர் உட்கார்ந்து கொண்டு நடிகைகளிடம் அத்துமீறி நடந்து கொண்டிருப்பார்.
இது போன்ற சேனல்களில் இது தான் உழைப்பு, இதுதான் க்ரியேட்டிவிட்டி.
சில சமயம் அதீத உழைப்பை போடுவார்கள்.
காலை சேனலுக்கு வந்ததும் "மச்சி இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? ஏதாவது celebrity வீடியோ வந்து இருக்கா? ஏதாவது மேட்டர் தேரறுமா " என்று கேட்டு விட்டு கண்ணில் மாட்டிய வீடியோ சண்டைகளை வைத்து உருட்ட ஆரம்பிப்பார்கள்.

BBC தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனை தொடங்கியது ..கோவாக்சின்:

கோப்புப்படம்கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவாக்சின் மருந்தை, மனிதர்கள் மீது செலுத்தும் சோதனை, இன்று (ஜூலை 21) சென்னையில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.
இந்திய அளவில் நான்கு இடங்களில் மனிதர்கள் மீதான கொரோனா தடுப்பு மருந்து சோதனை நடைபெறும் இடங்களில், தமிழகமும் இடம் பெற்றுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்து சோதனை , ஏற்கனவே மற்ற மூன்று இடங்களில் தொடங்கிவிட்டது. பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, ஹரியானாவில் உள்ள பண்டிட் பகவத் தயாள் ஷர்மா முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனம், ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் முதல் முறை சோதனைக்கான மருந்து செலுத்தப்பட்டுவிட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வில் சாதித்த குடுகுடுப்பை சமூக மாணவி

தெய்வானையின் தேர்ச்சி குறித்து கேள்விப்பட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாணவியின் கல்லூரி படிப்பு செலவை ஏற்றுக்கொள்ளப்போவதாக தெரிவித்தார்தெய்வானைபிரமிளா கிருஷ்ணன் - >பிபிசி தமிழ் : மதுரையில் குடுகுடுப்பை வைத்து குறி சொல்லும் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், 12ஆம் வகுப்பு தேர்வில் 500/600 மதிப்பெண்கள் வாங்கி, அவர் பயின்ற அரசு பள்ளியில் முதலிடத்தை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் குடுகுடுப்பை வைத்து குறி சொல்லும் சுமார் 50 குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் வசிக்காமல் பயணம் செய்வது அல்லது ஒரு சில மாதங்கள் மட்டும் ஒரு இடத்தில் தங்குவது என நாடோடி சமூகமாக உள்ளனர்.
குறி சொல்லுவதற்காக பெற்றோரோடு பல ஊர்களுக்குச் சென்றுவந்த தெய்வானை, படிப்பிலும் அதிக ஈடுபாடுடன் இருந்ததால், திருப்பரங்குன்றம் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
''என் சமூகத்தில் பெண்கள் பள்ளிப்படிப்பை முடிப்பது அரிதுதான். நான் ஒரு தொடக்கமாக இருக்க விரும்புகிறேன். நான் பி.காம் படிக்கப்போகிறேன். வங்கியில் வேலை செய்வது என் கனவு. என் சமூக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவேண்டும்,'' என்கிறார் தெய்வானை.