புதன், 1 செப்டம்பர், 2010

24ஆணிகளுடன் ரியாத்திலும், கட்டுநாயக்காவிலும் பரிசோதனை கருவியைக் கடந்து செல்லமுடியாது ?

பணிப்பெண் உடலிலிருந்த ஆணிகள் தொடர்பில் சவூதி கிளப்பும் சந்தேகம்



இலங்கைப் பணிப்பெண்ணான எல்.ரி.  ஆரியவதியின் உடலில் இருந்து 24 ஆணிகள் மீட்கப்பட்டது தொடர்பில் சவூதி அரேபியா சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சவூதி அரேபிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அவரது உடலில் 24 ஆணிகள் இருந்திருக்குமானால் அதனுடன் பரிசோதனை   சாவடியைக் கடந்து சென்றிருக்க முடியாது எனவும் அதன்போது அவை கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் எனவும் சவூதி வேலை வழங்குநர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச் சாட்டில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன. உடலில் ஆணிகளுடன் ரியாத்திலும், கட்டுநாயக்காவிலும் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த பரிசோதனை   கருவியைக் கடந்து செல்லமுடியாது என்று தெரிவித்துள்ளது.
அத்துடன், இது தொடர்பில் சவூதி அரேபிய தூதுவர் தனிப்பட்ட கவனம் செலுத்துவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடன் அவர் தொடர்ந்து தொடர்புகளைப் பேணி வருவதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ள

கருத்துகள் இல்லை: