மின்னம்பலம் - vanangamudi : தேர்தல் வந்துவிட்டாலே சில விஷயங்களும் தீவிரமாகத்தான் இருக்கும்..
அப்படித்தான்.. திமுகவின் சீனியர் அமைச்சரான திண்டுக்கல் ஐ. பெரியசாமியை குறிவைத்து அமலாக்கத்துறை களமிறங்கியிருக்கிறது. அதுவும் 2006-2011-ல் தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கின் அடிப்படையில்தான் இந்த ரெய்டு.
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் ஐ.பெரியசாமி வீடு, சென்னை பசுமைவழிச் சாலை வீடு, திண்டுக்கல் சீலப்பாடியில் ஐபி செந்தில்குமார் வீடு, மதுரை சிவாஜி நகரில் மகள் இந்திரா வீடு, ஒட்டுப்பட்டியில் மகள் இந்திராவின் மில்கள், வத்தலகுண்டுவில் மகன் செந்தில்குமார் எம்.எல்.ஏ.வின் நிறுவனம், சென்னை எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் செந்தில்குமாரின் அறை என பல இடங்களில் ரெய்டு நடத்தி இருக்கின்றனர்.
சனி, 16 ஆகஸ்ட், 2025
'ரெய்டு வலை'யில் 4 திமுக அமைச்சர்கள்.. பின்னணியில் 'நெல்லை விருந்து'?
நிவேதா முருகன் vs குத்தாலம் அன்பழகன்: மயிலாடுதுறையில் ரத்த களரியான திமுக கூட்டம் - ஸ்டாலின் டென்ஷன்!
மின்னம்பலம் - vanangamudi : மயிலாடுதுறையில் இன்று ஆகஸ்ட் 16-ந் தேதி நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அடிதடி ஏற்பட்டு ரத்த களரியானதால் முதல்வர் ஸ்டாலின் கடும் கோபத்தில் இருக்கிறார் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கும், சீனியரான குத்தாலம் கல்யாணம் மகன் அன்பழகனுக்கும் இடையே நீண்டகாலமாக பனிப்போர் நீடித்து வருகிறது.
குத்தாலம் அன்பழகனிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவியை பறித்துதான் நிவேதா முருகனுக்கு கொடுக்கப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் இருவரும் எம்.எல்.ஏ. சீட்டுக்கு முட்டி மோத, நிவேதா முருகனுக்கு ஜாக்பாட் கிடைத்தது.
மலையாள சினிமா சங்க AMMA தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி! சங்கிகளின் ஆபாச பிரசாரங்களை முறியடித்தார்
தினமணி : கேரளத்தில் மலையாள திரையுலகில் அம்மா (Association of Malayalam Movie Artists) என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படும் நடிகர் சங்கத்தின் தலைவருக்கான தேர்தலில், முதன்முறையாக பெண் ஒருவராக நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்றுள்ளார்.
1994-ல் தொடங்கப்பட்ட மலையாள நடிகர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களில் பெண்கள் குறைந்தளவிலேயே உள்ளனர். சமீபத்தில் ஹேமா கமிட்டி சர்ச்சையால் கலைக்கப்பட்ட தற்போதைய செயற்குழு உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே பெண்கள்.
வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025
முதல்வரைச் சந்தித்த தூய்மை பணியாளர்கள் : பேசியது என்ன?
மின்னம்பலம் - Kavi : தூய்மை பணியாளர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
தூய்மை பணியை தனியார்மயமாக்க கூடாது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் அமைச்சர்கள் நேரு, சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
தூய்மை பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, சுயதொழில் மானியம்: அமைச்சரவை ஒப்புதல் அளித்த 6 புதிய திட்டங்கள்
hindutamil.in :சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்.
சென்னை: பணியின்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், சுயதொழில் தொடங்க ரூ.3.50 லட்சம் வரை மானியம், இலவச காலை உணவு என்பது உட்பட 6 புதிய திட்டங்களுக்கு தமிழகஅமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு திட்டங்கள், 6 புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பிறகு, முதல்வரின் லண்டன், ஜெர்மனி பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நாம் தேடாமலே வந்த செல்வம் என்றால் அதை தெருமீது வீணே எறிவதா?
ராதா மனோகர் : இந்த தமிழ் பாடல் ஒரு காலத்தில் தமிழ் மக்களை மட்டுமல்ல தெலுங்கு மலையாளம் கன்னட மக்களையும் கட்டி போட்டது!
தமிழுக்கு அழகு சேர்த்த இசை மன்னர்களும் காவிய நாயகர்களும் வாழ்ந்த காலம் அது!
ஏனோ இது கடந்த பல வருடங்களாக பொது வெளியில் கொஞ்சம் காணமல் போய்விட்டது.
யார் பையன் என்ற படத்தில் இடம்பெற்ற சுயநலம் பெரிதா பொதுநலம் பெரிதா என்ற இந்த பாடல் இரண்டு நாட்களாக என்னை தூங்க விடாமல் செய்கிறது.
இப்போது மீள் பதிவு செய்யும் போதுகூட என்னை என்னவோ செய்கிறது இப்பாடல்.
ஒரு யுகத்துக்கு இப்படி ஒரு பாடல்தான் உருவாக முடியும் என்று கூறக்கூடிய ஒரு காந்தர்வ காவியம் இந்த பாடல் என்று கூறினால் மிகையாகாது.
வியாழன், 14 ஆகஸ்ட், 2025
வாக்காளர் பட்டியல்.. ராகுல் பற்ற வைத்த நெருப்பு – மா.செ.க்களுக்கு ஸ்டாலின் ‘கறார்’ கட்டளை!
மின்னம்பலம் : ‘களம் 8-ல் தேர்தல் ஆணையத்தை எதிர்கொள்ள திமுக தயாராக இருக்கிறது’ என கமெண்ட் அடித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து ராகுல் காந்தி அம்பலப்படுத்திய உண்மைகள் நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சியும் வாக்காளர் பட்டியல் மோசடி பற்றி அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டு கொண்டே இருக்கின்றன..
இப்போது திமுகவும் இந்த விவகாரத்தில் ஜரூராகவே களமிறங்கிவிட்டது. சென்னையில் இன்று ஆகஸ்ட் 13-ந் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
இலங்கை வடக்கு கிழக்கில் அரச படைகள் புலிகள் மட்டுமல்ல இந்திய ராணுவ குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் - ஐ நாவுக்கு வேண்டுகோள்
![]() |
Annesley Ratnasingham : .இந்திய ராணுவத்தின் இலங்கையில் வடகிழக்கில் செய்த கொலைகளையும் , பலாத்காரங்களையும் விசாரிக்கவேண்டும் ..
புலிகள் மட்டும் அல்ல மற்றைய தமிழ் இயக்கங்களையும் அவர்கள் செய்த கொலைகளையும் அத்துமீறல்களைம் விசாரிக்கவேண்டும் ...
.இந்திய ராணுவம் இருந்த நிலங்களையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.. ·
The killings and rapes committed by the Indian Army in the North-East of Sri Lanka should be investigated...not only by the LTTE but also by other Tamil movements and the killings and abuses they have committed...
.The lands where the Indian Army was located should also be inspected. hirunews.lk : அரச படைகளும் விடுதலை புலிகளும் குற்றங்களை ஒப்புக்கொள்ள வேண்டும் என டர்க் வலியுறுத்து!
பல தசாப்தங்களாக நிலவி வந்த தண்டனை விலக்கீட்டை ரத்துச் செய்துக்கொள்ளவும்,
புதன், 13 ஆகஸ்ட், 2025
அவுஸ்திரேலியாவில் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் . கார்த்திகேய சிவசேனாதிபதி கலந்து கொண்டார்
![]() |
![]() |
சுமதி விஜயகுமார் : மன நிறைவான நிகழ்வு. வந்திருந்தவர்களில் PATCA அமைப்பினரை தவிர ஓரிருவரை மட்டுமே தெரிந்திருந்தது.
ஆனாலும் யாருமே அந்நியமாய் படவில்லை. நிகழ்ச்சி துவங்க கொஞ்சம் காலதாமதம் ஆகியது.
பின்னால் நின்று, பேசிக் கொண்டிருந்துவிட்டு முன்னால் திரும்பினால்,
மூன்று சிறப்பு விருந்தினர்களும் வந்திருந்தார்கள்.
அவசரமாக இருக்கைக்கு திரும்புகையில், ஆஸ்திரேலியா தேசிய பாடலை தொடர்ந்து, தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
தமிழ் தாய் வாழ்த்தை பள்ளிகளில் பாடிய பொழுது, அதன் அர்த்தம் புரிந்திருந்தாலும், அதற்கு பின்னால் இருக்கும் அரசியலை புரிந்து கொண்டு பாடும் பொழுது மயிர்கூச்செரிப்பை தவிர்க்க முடியவில்லை.
மையிலாப்பூர் மைத்திரேயன் திமுகவில் சேர்ந்தார் - மண் மொழி மானம் காக்கவாம் ..
மின்னம்பலம் easwari : தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று (ஆகஸ்ட் 13) திமுகவில் இணைந்தார்.
இதைத்தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மைத்ரேயன், “தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு என்ற ஸ்டாலினின் ஆணைக்கிணங்க இன்றைக்கு அவர தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை நான் இணைத்துக் கொண்டுள்ளேன்.
தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு மிகப்பெரிய முன்னேறிய மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
தீ மிதித்தலின் தந்திரம் இதுதான்!
![]() |
S T Nalini Ratnarajah : அண்மையில் இஸ்லாமியர்களாக அடையாளம் காட்டி உடை அணிந்திருக்கும் சிலர்,
(தொப்பி போட்டாலோ அல்லது புர்கா ஹிஜாப் போட்டாலோ அவர்கள் இஸ்லாமியர்கள் என்று நாங்கள் முடிவு எடுத்து விட முடியாது),
தீ மிதிப்பதையும் நெருப்பு தனல்களை அள்ளி வீசுவதையும் வீடியோவாக பார்த்தேன்
இஸ்லாமியராக இருந்தால் என்ன மாரியம்மன் பேச்சியம்மன் காளியம்மன் முருகன் இன்னும் யார் யாரெல்லாம் தீமிதிப்பு வைபவம் நடைபெறுகிறது பலர் தீமிதிக்கின்றார்கள் நேத்திக்கடன் இருக்கின்றார்கள்
ஆனால் சில விடயங்களை அறிவுப்பூர்வமாக யோசிக்க வேண்டும்.
அதாவது இந்த நெருப்பு தனல்களுக்கு இரும்பு துண்டுகளாக இருந்தால் யாருமே தீ மிதிக்க மாட்டார்கள் எந்த கடவுளும் வந்து காப்பாத்தாது. இதுதான் அடிப்படை.
செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025
மன்னார் காற்றாலைக்கு கடும் எதிர்ப்பு - நேற்றிரவு உருவான பதற்ற நிலைக்கு இன்று நீதிமன்றத்தில் இணக்கத் தீர்வு.
ஹிருனியஸ் : மக்களின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் நாளை விசேட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 04 மணியளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர்.
பிகார் தேர்தல் தில்லுமுல்லு : உயிரோடு ஆஜராகி உச்ச நீதிமன்றத்தை அதிர வைத்த இருவர்.. தேர்தல் ஆணையத்திற்கு அதிர்ச்சி
tamil.oneindia.com - Velmurugan P : டெல்லி: பீகாா் மாநில வாக்காளா் பட்டியல் தொடர்பாகதேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (Special Intensive Revision - SIR) எதிரக்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தியாவே எதிர்பார்க்கும் மிகமுக்கியமான வழக்கில், சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் முக்கியமான வாதங்களை வைத்து வருகிறார்.
தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்களாக குறிப்பிடப்பட்ட நபர்கள் நேரில் ஆஜர்படுத்தி இன்று உச்ச நீதிமன்றத்தையே அதிர வைத்துள்ளார்.
சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் பீகாரின் வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவில் வாக்காளர்கள் நீக்கப்படுவதாகவும், இந்த நீக்கம் தற்செயலானது அல்ல என்றும், அது திட்டமிடப்பட்ட செயல் என்றும் உச்ச நீதிமன்றத்தில் இன்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
கோயில்கள் தோறும் கொண்டாட்டம் குடமுழுக்கு .பொருளாதார வளர்ச்சியோ ஸிரோ .. இலங்கை வடக்கில்
Veluppillai Thangavelu : வடக்கு மாகாணத்தில் இருக்கும் அத்தனை கோயில்களிலும் தேர், தீர்த்தம், குடமுழுக்கு என ஒரே கொண்டாட்டம்.
விடிய விடிய 10-20 சோடி நாதசுரக் கச்சேரி. பெரிய கோயில், சின்னக் கோயில் என்ற வேற்றுமை கிடையாது. இந்த விழாக்களுக்கு கோடிக்கணக்கான பணம் செலவாகிறது. நேரச் செலவு எவ்வளவு?
ஆனால் வடமாகாணம் பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடத்தில் இருக்கிறது. கல்வி வளர்ச்சியில் ஒன்பது மாகாணங்களில் கடைசி இடம். மக்கள் தொகையில் 19 விழுக்காடு வீழ்ச்சி.
இந்த விழாக்களால் ஏதாவது பயன் இருக்கிறதா? நோய், நொடி இல்லாமல் போய்விட்டதா? நேற்றுக் கூட டெங்கு நோயால் ஒருவர் மரணித்துள்ளார்.
இராவணனின் 19 விமானங்களை தேட ஏற்பாடு!
hirunews.lk இராவணனின் 19 விமானங்களை தேடும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க ஏற்பாடு
சுமார் 25 இடங்களில் இராவணனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 19 விமானங்களை கண்டுபிடிக்க இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஆராய்ச்சிப் பிரிவு தயாராகி வருகிறது.
அடையாளம் காணப்பட்ட 25 இடங்கள் குறித்த பல குறிப்பிட்ட விபரங்களை இந்தப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விமானங்கள் இராவணனால் தயாரிக்கப்பட்டதாகவும், பாதரசம் மற்றும் பிற இரசாயனங்களைப் பயன்படுத்தி அவை பறக்கவிடப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ராகுல் + பிரியங்கா - அதிரும் தலைநகர்; போராட்டமாக மாறிய பேரணி - எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது செய்த போலீஸ்!
நக்கீரன் செய்திப்பிரிவு : கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா தேர்தல், 2023இல் நடந்த கர்நாடகா தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களிலும் பா.ஜ.கவுக்காக ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக,
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வந்தது. இதனால், தேர்தல் ஆணையத்துக்கும் ராகுல் காந்திக்கும் இடையே வார்த்தை தொடர்பான மோதல் நடந்து வந்தது.
இதனிடையே, பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்கான தரவுகளை ஆதாரங்களோடு ராகுல் காந்தி கடந்த 7ஆம் தேதி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் ராஜண்ணா பதவி பறிப்பு! - வாக்கு திருட்டு: ராகுல் காந்தி மீது விமர்சனம்..
மின்னம்பலம் - Mathi : வாக்கு திருட்டு: ராகுல் காந்தி மீது விமர்சனம்.. கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் ராஜண்ணா பதவி பறிப்பு!
வாக்குகள் திருட்டு விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்த கர்நாடகா அமைச்சர் ராஜண்ணா, அம்மாநில அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை விரிவாக விளக்கி பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறார் ராகுல் காந்தி.
இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025
மாணவனை அடித்து உதைத்து மின்சாரம் பாய்ச்சி ராகிங் செய்த சீனியர்ஸ் - : ஆந்திர அரசுக் கல்லூரியில் ஜூனியர்
மாலை மலர் : ஆந்திர மாநிலத்தில் அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவன் சீனியர்களால் குரூரமான முறையில் ராகிங் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஆந்திராவின் பலநாடு மாவட்டத்தில் உள்ள தச்சபள்ளி அரசு ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர், சீனியர் மாணவர்களால் தாக்கப்பட்டு, மின்சார அதிர்ச்சி அளிக்கப்பட்டு ராகிங் செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் என்றும், அவர்கள் இந்த ராகிங் சம்பவத்தை வீடியோ எடுத்து, ஜூனியர் மாணவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
Calicornia “சாதிப் பாகுபாடு நடந்தால், அரசாங்கம் தலையிடும்” - கலிபோர்னிய நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு!
![]() |
![]() |
மின்னம்பலம் - மதி : கார்திகேயன் S.சான்-ஹொசே, கலிபோர்னியா
அருள்மொழி சியாட்டில், வாஷிங்டன்
அமெரிக்காவில், ஹிந்து அமெரிக்கன் ஃபவுண்டேசனுக்கும் (HAF) கலிபோர்னிய மாகாணத்தின் சிவில் உரிமை ஆணையத்துக்கும் (CRD) நடந்த வழக்கில், கடந்த ஜூலை 18 அன்று ஒரு முக்கியத் தீர்ப்பு வந்துள்ளது. உலக அரங்கில் சமூகநீதி சார்ந்த அமைப்புகளால் பரவலாக கவனிக்கப்பட்டுவரும் சாதிப்பாகுபாடு சார்ந்த இவ்வழக்கின் தீர்ப்பானது, அமெரிக்காவில் இந்துத்துவ வல்லாதிக்க சக்திகளின் முடிவுக்கான ஆரம்பமாக அமைகிறது. சாதிப் பாகுபாடுகளுக்கு எதிராக சட்ட ரீதியான பாதுகாப்பை அடைவதற்கான ஒரு முக்கியப் படிக்கல்லாக அமைவதோடல்லாமல், இத் தீர்ப்பு, இந்துத்துவ வல்லாதிக்க சக்திகள் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக எப்படி மத உரிமைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது.
முத்துஐயன்கட்டு குளத்தில் இளைஞன் ஒருவரது சடலம் மீட்கப்பட்ட விவகாரம்
![]() |
Mahan Siva : முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தில் இளைஞன் ஒருவரது #சடலம் மீட்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த இளைஞனை இராணுவத்தினரே அடித்துக் கொன்றுவிட்டு, குளத்தில் சடலமாக வீசியிருப்பார்கள்…. இல்லை… வீசினார்கள் என்ற முடிவுக்கு தமிழர்களில் பலர் வந்துவிட்டார்கள் போல தெரிகிறது!
இந்த விவகாரத்தில் 3 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவ முகாமுக்கு 5 தமிழ் இளைஞர்கள் செல்கிறார்கள், அவர்களை இராணுவம் தாக்கியது, ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார், 3 இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்… அப்படியானால் அந்த இளைஞனை இராணுவத்தினரே அடித்துக் கொன்றிருக்குமென கருதலாமல்லவா?






