சனி, 5 ஜூன், 2010

போலி பாஸ்போர்ட்: திருச்சி கும்பலில் இலங்கைக்கு ஆட்களை அனுப்புவது


போலி பாஸ்போர்ட்: திருச்சி கும்பலில் ஒருவர் கைது
போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் பெற்றுத்தரும் கும்பலை சேர்ந்த ஒருவரை, போலீசார் கைது செய்தனர்.
வத்தலக்குண்டைச் சேர்ந்த பாலமுருகன், அருண்குமார், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 2009ல், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தனர். இவர்களுடன், மேலும் இரண்டு பேர் வந்தனர். இவர்கள் வைத்திருந்த ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் மீது சந்தேகப்பட்ட வருவாய்த் துறையினர், விசாரித்தனர். இதையறிந்த நான்கு பேரும் தப்பி விட்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜீவகனி, திண்டுக்கல் எஸ்.பி., முத்துச்சாமியிடம் புகார் தெரிவித்தார்.
குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலமுருகன், அருண்குமார் ஆகியோர் போலியான பெயரில் விண்ணப்பித்துள்ளதும், அவர்கள் கொடுத்த முகவரி, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போலியாக தயாரிக்கப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்தனர். இந்த கும்பல், திருச்சியில் இருந்ததை அறிந்த போலீசார், கும்பகோணத்தை சேர்ந்த வடிவேல்(39) என்பவரை கைது செய்தனர்.
கூடுதல் எஸ்.பி., பொன் சிவானந்தம் கூறியதாவது: பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்களின் ரேஷன் கார்டுகளை வைத்து, நாங்கள் விசாரணை நடத்தினோம். திருச்சியை சேர்ந்த சிவா, இவரது நண்பர் கும்பகோணத்தை சேர்ந்த வடிவேலு இருவரும், வத்தலக்குண்டைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, முரளிதரன் குடும்பத்தினரிடம் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக, ரேஷன் கார்டை பெற்றனர். இந்த கார்டை, திருச்சியில் பாஸ்போர்ட் வாங்கித்தரும் ஏஜன்ட் சுதாகர் என்பவரிடம் கொடுத்தனர்.
இவர், இலியாஸ் என்பவர் மூலம் போலி ஆவணம் தயாரித்து, பாஸ்போர்ட் பெற்று, இலங்கைக்கு ஆட்களை அனுப்புவது தெரிய வந்தது. இவர்களுக்கு உடந்தையாக, திருச்சியை சேர்ந்த விஸ்வா என்ற மற்றொரு ஏஜன்ட்டும் இருந்துள்ளாõர். தற்போது, வடிவேலுவை மட்டும் கைது செய்துள்ளோம். இந்த கும்பலின் முக்கிய நபரான சுதாகரை கைது செய்தால் தான் முழுவிவரமும் தெரியவரும் என்றார்.

அவுஸ்திரேலிய கடற்பரப்பில் வைத்து மேலும் இரு அகதிகள் படகுகள் முற்றுகையிடப்பட்டுள்ளளதாக

அவுஸ்திரேலிய கடற்பரப்பில் வைத்து மேலும் இரு அகதிகள் படகுகள் முற்றுகையிடப்பட்டுள்ளளதாக அவுதிஸ்திரேலிய உள்விவகார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.முற்றுகையிடப்பட்ட முதலாவது படகில் 54 அகதிகளும், இரண்டாவதாக முற்றுகையிடப்பட்ட படகில் 28 அகதிகளும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விரு படகுகளிலும் இலங்கை அல்லது ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அகதிகளே பயணித்திருக்கலாமென அவுஸ்திரேலியா அரசு சந்தேகம் வெளியிட்டுள்ளது.முற்றுகையிடப்பட்டுள்ள இரு படகுகளிலும் பயணித்த அகதிகள் கிறிஸ்மஸ் தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் சுமார் 750 அகதிகள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் ஊடுருவ முயற்சித்து கைது செய்யப்பட்டு, கிறிஸ்மஸ் தீவுகளிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.தஞ்சம் கோரும் அகதிகளின் விண்ணப்பங்களை ஏற்பதை கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் அவுஸ்திரேலியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவை "துக்ளக்" பத்திரிகையின் ஆசிரியர் சோ திடீரென நேரில் சந்தித்துப


அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவை "துக்ளக்" பத்திரிகையின் ஆசிரியர் சோ ராமசாமி இன்று திடீரென நேரில் சந்தித்துப் பேசினார்.
இன்று காலை ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் இச்சந்திப்பு நிகழ்ந்தது.இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தமிழக அரசியல் நிலவரம், வரும் சட்டமன்றத் தேர்தல் மற்றும் தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக சோவுடன் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா ஆளுநர் பதவிக்கு ் போட்டியிடும் இந்தியப் பெண் ுமீது பாலியல் புகார்

"ல'கர "ழ'கரங்களைக் கூடச் சரியாக உச்சரிக்கத் தெரியாத நிலையில்

கோவையில் நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பரவலாக ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருப்பதைக் காண முடிகிறது. 14 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த அறிஞர்கள் பலருடைய ஆய்வுக் கட்டுரைகள் அரங்கத்தில் பதிவு செய்யப்பட்டுத் தமிழுக்குச் செழுமையும், வளமையும் சேர்க்க இருக்கின்றன.
நடக்க இருப்பது ஒரு தமிழ்த் திருவிழா என்பதை நினைவில் நிறுத்தி, அரசியல் காழ்ப்புணர்ச்சி, மனமாச்சரியங்கள் போன்றவற்றைத் துணிந்து அகற்றி, ஈழக்கவிஞர் முனைவர் சச்சிதானந்தனின் கவிதை வரிகளான ""தேவர்க்கரசுநிலை வேண்டியதில்லை; அவர் தின்னும் சுவையமுது வேண்டியதில்லை; சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்; என்றன்   சாம்பல் தமிழ்மணந்து வேக வேண்டும்'' என்பதை உணர்வில் இருத்தித் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் தமிழினத்தின் ஒற்றுமை மாநாடாக்கிக் காட்ட வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.
சமீபத்தில் கோவை மாநகரின், செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளைப் பார்வையிடச் சென்றிருந்த முதல்வர் கருணாநிதி விடுத்திருக்கும் வேண்டுகோளை ஆளும் கட்சியினர் மனதில் இருத்தக் கடமைப்பட்டவர்கள். "செம்மொழி மாநாட்டைக் கட்சி மாநாடாக்கி விடாதீர்கள்' என்கிற முதல்வரின் வேண்டுகோளை முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே, தமிழை நேசிக்கும் மாற்றுக் கட்சியினரும், இந்தத் தமிழ்த் திருவிழாவில் கலந்து கொள்ள முன்வருவர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டியதில்லை. உடன்பிறப்புகள் தங்கள் தலைவரின் கட்டளையை மீறமாட்டார்கள் என்று நம்புவோமாக! எதிர்க்கட்சியினர் மனமாச்சரியங்களை மறந்துவிட்டு மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்போமாக!
செம்மொழி மாநாட்டுக் குதூகலங்களுக்கு இடையே மனதில் சற்று வருத்தம். தமிழுக்கு மாநாடு எடுக்கிறோம். உலகெங்கிலும் இருந்து தமிழறிஞர்கள் கோவையில் வந்து கூட இருக்கிறார்கள். தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு சரித்திர நிகழ்வு நடைபெற இருக்கும் வேளையில், தாய்த் தமிழகத்தில் தமிழின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை நினைத்தால் வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.
ஒருபுறம் தமிழே தெரியாத, தாய்மொழி தெரிய வேண்டும் என்கிற உணர்வே இல்லாத ஒரு தலைமுறை வளர்ந்து வருகிறது. இன்னொருபுறம், "ல'கர "ழ'கரங்களைக் கூடச் சரியாக உச்சரிக்கத் தெரியாத நிலையில் நாமமது தமிழரென வாழ்ந்திடுவோர். நுகர்வோர் பொருளாதாரமும், பன்னாட்டு நிறுவனங்களின் வருகையும், தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கும் கலாசாரச் சீரழிவும், பண்பாட்டுச் சிதைவும் மிக அதிகமாகப் பாதித்திருப்பது தமிழ் மொழியைத்தான். ஊடகங்களும் தமிழுக்கு எதிரான தாக்குதல்களுக்குத் துணைபோகின்றன என்பதுதான் அதனினும் கொடிய வேதனை.
இவையெல்லாம் போகட்டும். அறுபதுகளில் காணப்பட்ட தமிழின எழுச்சி என்ன ஆனது?  தமிழ் படிப்பது பெருமை என்று கருதிய தலைமுறையினரேகூடத் தங்களது சந்ததியர் தமிழ் படிக்க வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கிவிட்டனரே, ஏன்? இன்னார் தமிழ் வித்வான், தமிழ்ப் புலவர் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டு வந்த காலம்போய், யாரும் தங்களைத் தமிழாசிரியர் என்று பெருமைப்பட்டுக் கொள்ளத் தயார் இல்லையே, ஏன்?
தமிழின் இழிநிலையைப் போக்க, 1901-ம் ஆண்டு, மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி மண்டபத்தில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை அறிவித்த கையோடு, சேதுபதி செந்தமிழ்க் கலாசாலையையும் நிறுவினார் வள்ளல் பாண்டித்துரைத் தேவர். அதைத் தொடர்ந்து, திருவையாறு அரசர் கல்லூரி, தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை, கணேசர் செந்தமிழ்க் கல்லூரி என்று கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில், அந்நியர் ஆட்சிக் காலத்தில் தமிழுக்குக் கல்லூரிகள் கண்ட பெருமை இப்போது பழங்கதையாகி விட்டதே ஏன்?
தருமபுரம், திருப்பனந்தாள், மயிலம், பேரூர் போன்ற சைவத் திருமடங்கள், தங்களது பணி சைவத்தை வளர்ப்பதுடன் நின்றுவிடவில்லை என்று தமிழ் வளர்க்கும் குறிக்கோளுடன் தமிழ்க் கல்லூரிகளை நிறுவி நடத்த முற்பட்டன. காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி மற்றும் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் குன்றக்குடி ஆதீனத்தால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரி போன்றவை தமிழார்வம்மிக்க மாணவர்களின் மொழிப் பற்றைத் தமிழ் வார்த்து வளர்த்தன. சுமார் பத்துத் தமிழ்க் கல்லூரிகள், தமிழ் மொழி வளர்ச்சியை மட்டுமே மனத்தில் கொண்டு நிறுவப்பட்டு, நடத்தப்பட்ட நிலைமை மாறி இப்போது காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியைத் தவிர ஏனைய கல்லூரிகள் அனைத்துமே கலை அறிவியல் கல்லூரிகளாக மாறிவிட்டனவே, ஏன்?
இந்தத் தமிழ்க் கல்லூரிகளில் தமிழ் படிக்க மாணவர்கள் வருவதில்லை என்பதுதான் அடிப்படைக் காரணம். மாணவர் சேர்க்கை இல்லாத நிலையில் கல்லூரிகளை மூடிவிடவா முடியும்? சுயநிதிப் பிரிவில் வணிகவியல், கலை, அறிவியல் கல்லூரிகளாக அவை செயல்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்வழிக் கல்விக்கே யாரும் தயாராக இல்லாத நிலையில், தமிழைப் பாடமாகப் படிக்க மாணவர்கள் வராததில் வியப்பென்ன இருக்கிறது? இப்படிப்பட்ட ஓர் இழிநிலை தமிழுக்கு வரக் காரணம் என்ன? தமிழ் படித்தால் வேலை இல்லை என்கிறபோது மாணவர்கள் எப்படி தமிழ்க் கல்லூரிகளில் சேரத் துணிவர்? தமிழ் படித்தவர்கள் ஆசிரியராகக் கூடப் போக முடியாத நிலைமை அல்லவா காணப்படுகிறது? இடைநிலை ஆசிரியர்கள், தமிழைப் பாடமாக எடுத்து இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றுத் தமிழாசிரியர்களாக உயர்வு பெற்று விடுகிறார்கள். நேரடியாகத் தமிழ் படித்தவர்களுக்கு இங்கும் வாய்ப்பில்லை என்கிற நிலைமை.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்க இருக்கும் இந்த நேரத்தில், தமிழ் படித்தவர்களுக்கு அரசுப் பணியிலும், தமிழாசிரியர் பணியிலும் முன்னுரிமை என்கிற சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே மீண்டும் தமிழுக்குப் புத்துணர்வும், புத்துணர்ச்சியும் ஏற்படும். தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அடுத்த முன்னுரிமை தரப்பட வேண்டும்.
தமிழ் உள்ளளவும், கோவையில் நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழனின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, சரித்திர நிகழ்வாக நிலைபெற வேண்டுமானால், துணிந்து இப்படியொரு முடிவை எடுத்துத் தமிழைக் காப்பாற்றியாக வேண்டும். இதை முதல்வர் கருணாநிதியால் செய்ய முடியும் என்று சொன்னால் தவறு. அவரால் மட்டுமே செய்ய முடியும் என்பதுதான் உண்மை!
தினமணி தலையங்கம்

செல்போன் சைக்கிள் சார்ஜரை நோக்கியா ஒய்ஜ் நிறுவனம் நெதர்லாந்தின்

செல்போனை சார்ஜ் செய்யாமல் வெளியில் சென்றுவிட்டீர்களா? கவலை வேண்டாம். சைக்கிள் இருந்தாலே போதும் செல்போன் சார்ஜ் ஆகிவிடும். ஆம், செல்போன் சைக்கிள் சார்ஜரை நோக்கியா ஒய்ஜ் நிறுவனம் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நேற்று அறிமுகம் செய்தது.

விரைவில் இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின்சார தட்டுப்பாடு உள்ள இந்த காலத்தில், மின்சார பயன்பாட்டைக் குறைப்பதற்காக இதை தயாரித்துள்ளதாக நோக்கியா தெரிவித்துள்ளது.
‘‘ஐரோப்பிய நாடுகளில் அலுவலகம், ஷாப்பிங் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சைக்கிளில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில்தான் சைக்கிள் வழி செல்போன் சார்ஜரை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
குறிப்பாக ஆம்ஸ்டர்டாமில் சைக்கிள் பயன்படுத்துபவர்கள் அதிகம்.எனவேதான் இதை இங்கு அறிமுகம் செய்துள்ளோம். பின்னர் உலகின் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்’’ என நோக்கியா நிறுவன செய்தித் தொடர்பாளர் லியோ மெக்கே தெரிவித்துள்ளார்.
இந்த சார்ஜர், சைக்கிள் சக்கரம் சுற்றும்போது அதிலிருந்து முகப்பு விளக்கு எரிவதைப் போலவே, செல்போனுக்கு தேவையான மின்சாரத்தை கிரகித்துக் கொள்ளும். இதனால் மின்சார பயன்பாடு குறையும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித கேடும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வர உள்ள இதன் விலை ரூ.850 ஆகும்.

இந்தியாவிலிருந்து 500 பஸ்களை இ.போ.ச.வுக்குக் கொள்வனவு செய்யவுள்ளதாக

இந்தியாவிலிருந்து 500 பஸ்களை இ.போ.ச.வுக்குக் கொள்வனவு செய்யவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் எம்.டி. பந்துசேன கூறினார். அடுத்த வருடம் மேலும் 1000 பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்களுக்கு சிறந்த சேவை வழங்கும் நோக்குடனும் தனியார் துறைக்குப் போட்டியாக இ.போ.சபையை பலப்படுத்துவதற்காகவும் கூடுதலான பஸ்களைத் தருவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் தருவிக்கப்படவுள்ள பெரிய ரக ‘அசோக் லேலண்ட்’ பஸ்கள் பிரதான வீதிகளிலும், கிராமப்புற வீதிகளிலும் ஈடு படுத்தப்பட உள்ளதோடு, மீள் குடியேற்றம் நடத்தப்பட்ட பகு திகளிலும் ஈடுபடுத்தப்படும் எனவும் இ.போ.ச. தலைவர் கூறினார்.இதுதவிர யாழ்ப்பாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக சொகுசு பஸ்களை தருவிக்கவும் இ.போ.ச. திட்டமிட்டுள்ளது. வடக்கில் மீள்குடி யேற்றப்பட்ட பகுதிகளில் 300க்கும் அதிகமான பஸ்கள் ஏற்கெனவே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், மீன்பிடித்துறை முகங்கள், ரயில்வே பாதைகள் என்பன நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையின் மீதும் அதன் பொருளாதாரக் கொள்கையின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையினாலேயே சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை இந்தியா இலங்கையில் நடத்த முன்வந்துள்ளது. அது மட்டுமன்றி இலங்கையில் அதிகளவு முதலீடுகளைச் செய்யவும் இந்தியா தற்போது முன்வந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவின் முன்னோடியாக நேற்று இந்திய – இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் விசேட அமர்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.வர்த்தக சம்மேளன அமர்வினை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அதிதியாக வருகை தந்திருந்தார்.
ஜனாதிபதியுடன் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் தலைவர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்தியாவின் பிரபல ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான அனுபம் கெர்ருக்கும் ஜனாதிபதி விருது வழங்கி கெளரவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பேசுகையில்:-
பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை ஒரு வருடங்களுக்கு முன்னர் தான் நாம் வெற்றி கண்டோம். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், சிறுவர் போராளிகள், குண்டுத் தாக்குதல்கள் என பயங்கரவாதத்துக்கு வேறு பரிமாணத்தை எல். ரி. ரி. ஈ. யினர் அறிமுகப்படுத்தினார்கள்.
இருப்பினும் இராணுவ ரீதியான எங்கள் வெற்றியானது உலகளாவிய ரீதியில் அறியப்பட்டபோதும், பொருளாதார ரீதியாக நாங்கள் அடைந்த வெற்றி பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை. ஆதலால் பொருளாதார ரீதியாக நாங்கள் அடைந்த வெற்றியைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவதாயின் 2005 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை வருடம்தோறும் 6 சதவீதத்திலும் பார்க்கக் கூடுதலான வளர்ச்சியை எமது நாடு அடைந்திருந்தது. 2008 ஆம் ஆண்டில் பணவீக்கம் 22 சதவீதமாகவும் 2009 இல் 4 வீதத்திலும் பார்க்கக் குறைவாகவும் இருந்தது.
உட்கட்டமைப்புகள் நாம் என்றும் எதிர்பாராத வகையில் அபிவிருத்தி கண்டு வருகின்றன. துறைமுகங்கள், விமான நிலையங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், மீன்பிடித்துறை முகங்கள், ரயில்வே பாதைகள் என்பன நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
எமது நாட்டின் வேலை வாய்ப்பின்மை 5.7 சதவீதத்திலும் குறைவாக இருக்கின்றது. உலகில் வேலை வாய்ப்பின்மை மிகக் குறைந்தளவில் இருப்பது இலங்கையில் மட்டும் தான். நாட்டிலுள்ள அனைவரும் 24 மணி நேரமும் மின்சாரம் பெறுவது இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
தனிநபர் வருமானம் கடந்த 5 வருடங்களில் 2000 அமெரிக்க டாலர்களாக இருக்கின்றது. இது அடுத்த 5 வருடங்களில் 4000 டொலராக அதிகரிக்கப்படுவதை இலக்காகக் கொண்டு நாம் செயற்படுகின்றோம்.
உலகப் பொருளாதாரச் சிக்கலை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டோம். எமது எந்தவொரு வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ பொருளாதாரச் சிக்கலால் மூடப்படவில்லை. சர்வதேச உணவுச் சிக்கலையும் நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டோம்.
பயங்கர வாதத்துக்கெதிராகப் போரிட்டுக் கொண்டே நாம் அடுத்தடுத்து எழுந்த இச் சிக்கல்களையும் எதிர்கொண்டோம். அபிவிருத்தியல்லாமல் சமாதானம் இல்லையென்பதை நாம் திடமாக நம்புகின்றோம்.
இடம் பெயர்ந்தவர்களை மிகக் குறுகிய காலத்தில் மீளக் குடியமர்த்திய நாடு இலங்கையே. எல். ரி. ரி. ஈயினரால் பலவந்தமாக யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்ட சிறார்களை புனர்வாழ்வளிப்பதிலும் நாம் வெற்றி கண்டிருக்கின்றோம். இலங்கையின் ஒவ்வொரு பிரஜையும் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தைக் காணச் செய்வதே எமது இலக்கு. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் நாம் ஆரம்பித்த துறைகள் எல்லாம், எமது மக்களுக்கு பல்வேறுபட்ட வாய்ப்புகளை வழங்குகின்றன.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமைவாய்ந்தவை. இராமாயண காலத்தில் இருந்து தொடர்பவை. ஒரு பொதுவான மரபு ரீதியான பொருளாதார வர்த்தக முயற்சிகளே இரண்டு நாடுகளிலும் காணப்படுகின்றன. தற்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் மேலும் வலுச்சேர்க்கின்றோம் என்றார்.
இலங்கையில் நீங்கள் முதலிடவிரும்பினால் உங்களுக்கு பல்வேறுபட்ட வாய்ப்புகள் இங்கு நிறைந்து காணப்படுகின்றன. ஆற்றல், திறமை, அர்ப்பணிப்பு, ஆர்வம் போன்ற தனித்துவத்தன்மைகளையும் நீங்கள் இங்கு காணலாம். இந்த வர்த்தக சம்மேளனம் இரு நாடுகளுக்குமிடையிலான புதிய உறவுகள் புதிய வர்த்தக முயற்சிகளுக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாக அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசி தருர் ஆகியோரும் உரையாற்றினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

வெள்ளி, 4 ஜூன், 2010

கனடா புலிகளின் CTR,CMR,TVI ஊடகங்களிற்குள் தொடரும் சொத்து பிரிப்பு குத்துவெட்டு!நெருப்புக்கு வந்த மடல்:

ரி.வி.ஐ – சி.எம்.ஆர் – சி.ரி.ஆர் –இணைப்பு ஏற்படுவதற்கு நல்லதொரு சந்தர்ப்பத்தை மக்களின் அழுத்தம் தந்துள்ளது. இரண்டு தரப்பும் மீண்டும் இணைந்து செயற்பட பேச்சுக்கள் நடத்தும் போது கீழ்க்காணும் விவகாரங்களை தற்போது பணியாற்றும் ஊடகவியாளாலர். தொழில்நுட்பவியலாளர்கள். கலைஞர்கள் சார்பில் விவாதிக்கப்பட வேண்டும்.

படித்தவர்களும். பண்பான குணம் உள்ளவர்களுமான ரி.வி.ஐ. நிர்வாகிகள் தாயக விடுதலைக்காக தமது முதலீட்டையும் நேரத்தையும் செலவளித்து உருவாக்கியதே இந்தத் தமிழ் ஊடகம் என்பதை பணியாளர்கள் சகலரும் தெளிவாக அறிவோம். எனவே ரி.வி.ஐ முதலீட்டாளர்களின் கோரிக்கையான இந்த ஊடக நிறுவனங்களை trustee company யின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதை நாங்கள் அனைவரும் முழுமனதோடு ஏற்கிறோம்.
உள்வீட்டுப் பிரச்சினையை நான்கு சுவர்களிற்குள் தீர்க்காமல் மக்களிடையே விசமத்தனமான அறிவித்தலாக எடுத்துச் சென்று. ஒன்றாகப் பணிபுரிபவர்களை. சக நண்பர்களை. துரோகிகள் என்று குறிப்பிட்ட செயலின் மூலம் தான் இந்தப் பதவிக்கு அனுபவமோ. தகுதியோ இல்லாத ஒருவர் என்பதை சி.எம்.ஆர். சி.ரி.ஆர் பணிப்பாளர் நிரூபித்துவிட்டார். எனவே அவரிற்கு எதிராக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணியாளர்களாகிய எங்களது நலன்கள் நோக்கப்படாமலே ரி.வி.ஐ சம்பந்தமாக விசமத்தனமான வானொலி அறிவித்தல் ஒரு பகுதியால் விடப்பட்டது. எங்களைத் துரோகிகளாக்கும் வகையிலமைந்த அந்த அறிவித்தலால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் நாங்களே. எனவே மீண்டும் இணைவது சம்பந்தமான பேச்சுவார்த்தையின் போது எங்கள் சார்பில் ஆகக்குறைந்தது மூவர் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். சி.ரி.ஆரில் ஒலிபரப்பப்பட்ட அறிவிததலைக் கீழே இணைத்துள்ளோம். இன்றுவரை ஒன்றாக பணிபுரியும் எமக்கு ஒருவரின் கீழ்த்தரமான அறிவித்தல் எவ்வளவு ஆபத்தை விளைவிக்கும் என்பதை ஒரு இதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
நிர்வாகத்துடனான பிணக்கிற்காக தனியார் பாதுகாப்புத்துறையை கட்டடத்திற்கு வரவழைத்து அவர்கள் மூலம் எம்மை எமது வேலைத் தளத்திலிருந்து வெளியேற்ற முயன்ற சி.எம்.ஆர். சி.ரி.ஆர் பணிப்பாளர் அச்சமயம் வேலை செய்து கொண்டிருந்த 12 பேருக்கும் ஏற்படுத்திய உயிர்ப் பயத்திற்கும். மன உலைச்சலிற்கும் தகுந்த நஸ்டஈடு தர நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். தனியார் பாதுகாப்புத் துறை தவிர ஏம்மைக் கட்டத்தை விட்டு வெளியேற்ற முயற்சிப்பதற்காக கொண்டு வரப்பட்ட “இளையோர்கள்” இனி இவ்வாறான நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதம் தரப்பட வேண்டும். இவ்வளவு எதிர்ப்பையும் மீறி நாங்கள் தொடர்ந்து இச் சம்பவம் நடந்த அந்த இரவு முழுவதும் பணியாற்றியது எவ்வளவு பயத்தையும். மன உளைச்சலையும் தந்திருக்கும் என்பதை நீங்கள் உணர முடியும்.
வேறு அமைப்புக்களைச் சார்ந்த மூன்றாம் நபர்களின் தலையீடு பணியாளர்களோடு தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறான நபர்கள் ஊழியர்களுடன் நேரடியாத் தொடர்பு கொள்வதைத் தடுக்கும் வகையிலான அலுவலக ஒழுக்கக் கோவையொன்று உருவாக்கப்பட்டு ஊழியர்கள் அனைவருக்கும் அது வழங்கப்பட வேண்டும்.
நாங்கள் பணியாளர்களின் நலன்களை பேணும் வகையில் அமைக்கும் பணியாளர்கள். தொழில்நுட்பவியலாளர்கள் நலன்புரி அமைப்பிற்கு எந்தவிதத் தடையுமின்றி இயங்க பரிபூரன ஒத்தாசை வழங்க வேண்டும். பணியாளர்களின் சம்பளக் கட்டமைப்பு மீளாய்வு செய்யப்பட்டு தகுதியற்ற சம்பள உயர்வுகள் நிராகரிக்கப்பட்டு மீள்நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
ஓன்றாரியோவில் சட்டம் வேலைத்தளங்களில் அழுத்தம். பயமுறுத்தல். அச்சுற்றுத்தல். உள ரீதியாக. உடல் ரீதியாக தொல்லைதருதல் போன்றவற்றைத் தடுக்கிறது. இச் சட்டத்திற்கு உட்பட்டதே எமது நிறுவனம் இயங்குகிறது என்ற எழுத்து மூல அறிவுறுத்தல் எமக்குத் தரப்பட வேண்டும். இந்தச் சட்டத்தை மதிக்காத நிறுவனங்கள் செயற்படும் அனுமதியை இழக்க நேரிடும் என்பதோடு. பெரிய நஸ்ட ஈட்டையும் தொழிலாளர்களிற்கு வழங்க வேண்டுமென்பதால் இதனை நிர்வாகத்தின் நன்மைக்காகவே தெரியப்படுத்துகிறோம்.
இன்றுவரை ஒன்றாக வேலை செய்யும் எங்களைப் பற்றியும். இந்த நிறுவனங்களைத் தொடங்குவதற்காக முதலீடு செய்து இன்றுவரை பொறுமையோடு இருக்கும் இரண்டு கருணை கொண்ட உள்ளங்களைப் பற்றியும் சி.எம்.ஆர் நிர்வாகியின் ஏவலில் வெளியிடப்பட்ட கருத்தைக் கேளுங்கள்.
இன்றுவரை இவர்களிற்காக உழைத்துக் கொண்டிருக்கும் எங்களை ஒரு செக்கன் நேரத்தில் துரோகிகளாக்கிய இவர்கள் பற்றிய உண்மைகளை தமிழ்ப் பிரமுகர்கள் சார்பிலான ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரிக்க வேண்டும்.
-CTR,CMR,TVIபணியாளர்கள்

சென்னையில் இன்று அருந்ததி ராய் பேசுகிறார்


சட்டீஸ்கார், ஒரிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மாவோயிஸ்ட்களை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டுவரும் பச்சை வேட்டை என்ற நடவடிக்கையை எதிர்த்து எழுத்தாளர் அருந்ததி ராய் இன்று சென்னையில் பேசுகிறார்.

பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், மே 17, தமிழர் உரிமை இயக்கம், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உறுப்பினர்களாகக் கொண்ட உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாக பச்சை வேட்டையைக் கண்டித்து மாபெரும் அரங்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தியாகராயர் நகர், வேங்கட நாராயணா சாலையில் உள்ள செ.தெ. நாயகம் மேனிலைப் பள்ளியில் (திருப்பதி தேவஸ்தானம் எதிரில்) இன்று மாலை 5 மணிக்கு இந்த அரங்கக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், சமீபத்தில் பச்சை வேட்டை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவரும் தண்டகாரண்ய காட்டுப் பகுதிக்குச் சென்று அங்குள்ள பழங்குடி மக்களையும், மாவோயிஸ்ட்டுகளையும் சந்தித்துப் பேசிவிட்டு வந்த எழுத்தாளர் அருந்ததி ராய் இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.

ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலர் விடுதலை இராசேந்திரன் வரவேற்புரை நிகழ்துகிறார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தோழர் தியாகு அறிமுக உரை நிகழ்த்துகிறார்.

டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் அமித் பாதுரி, பேராசிரியர் கிலானி, பேராசிரியர் சாய்பாபா ஆகியோர் உரை நிகழ்த்தியப் பிறகு அருந்ததி ராய் சிறைப்புரையாற்றுகிறார்.

பன்னாட்டு உள்நாட்டு பெரு முதலாளிகளின் நலனுக்காக சொந்த நாட்டு மக்களின் மீது போரைத் திணிக்காதே என்றும், பச்சை வேட்டை நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான போரல்ல, அது மக்களுக்கு எதிரான போர் எனற முழக்கங்களுடன் இந்த அரசங்கக் கூட்டம் நடக்கிறது.

சாதி ஒழிப்பு விடுதலை முன்னணியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் நன்றி கூறுகிறார்.

அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய்,ஷாருக்கான் இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி

இந்திய நடிகர்களான அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய்,ஷாருக்கான் ஆகியோர் உட்பட சில முன்னணி இந்திய நடிகர்கள் இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐஃபா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் இந்திய நடிகர்களான அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய்,ஷாருக்கான் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், மேற்படி விழாவில் கூடியளவிலான இலாபங்களை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தவறியிருப்பதாகவும் றோஸி சேனநாயக்க தெரிவித்தார்.

அங்காடி தெரு, சிங்கம், சுறாகோரிப்பாளையம்,போன்ற படங்களின் திருட்டி சிடிக்கள் விற்பனையை

நெல்லை தூத்துக்குடி, நாகர்கோவி்ல் பகுதிகளில் சிங்கம், சுறா படங்களின் திருட்டு சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக திரைப்பட வினியோகஸ்தரர்கள் சங்கத்தினர் டிஐஜியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட திரைப்பட வினியோகஸ்தரர்கள் நெல்லை டிஐஜி சண்முகராஜேஸ்வரனிடம் அளித்துள்ள புகாரில்,

நெல்லையில் 100க்கும் மேற்பட்ட வினியோகஸ்தர்கள் உள்ளனர். திருட்டு சிடிக்களால் வினியோகஸ்தர்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, கோவில்பட்டி, நாகர்கோவில் பகுதிகளில் பல கடைகளில் புதிய பட சிடிக்கள் திருட்டு தனமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சிங்கம், சுறா, அங்காடி தெரு, கோரிப்பாளையம் போன்ற படங்களின் திருட்டி சிடிக்கள் விற்பனையை ஆதாரபூர்வமாக கண்டறிந்துள்ளோம். இதுபோல் திருட்டு சிடிக்கள் சந்தையில் விற்கப்பட்டால் மிகப்பெரிய தொழில் பாதிப்பு ஏற்படும்.

திருட்டு சிடிக்கள் தயாரிக்கப்படுவதால் பல கோடி ரூபாய் முதலீடு செய்து திரைப்படத்தை வாங்கிய வினியோகஸ்தரர்கள் நஷ்டத்திற்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே திருட்டு சிடிக்கள் விற்பனையை அடியோடு ஓழிக்கவும், தயாரிப்பாளர்கள், விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறோம் என்று கூறியுள்ளனர்.

ஹிந்திக்குக்வாய்ப்பை எதிர்பார்த்து ,நடிகர்கள் புலம்பெயர் புலி ஆதரவாளர்களிடம் தமது கலையை அடகு

தமிழகத்திலுள்ள சில சில்லறைகள் தமிழீழம் எனவும் இலங்கைத் தமிழ்மக்களுக்காக போராட்டம் நடாத்துவதாகவும் போர்த்திக்கொண்ட போர்வையினுள் புலம்பெயர் புலி ஆதரவு பயங்கரவாதிகளின் பணம் அவர்களின் அன்றாட வாழ்வை வழமாக்கியுள்ளது. இந்நிலையில் தமிழக நடிகர்கள் புலம்பெயர் புலி ஆதரவாளர்களிடம் தமது கலையை அடகு வைக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். இதனால் தமிழ்படத் தயாரிப்பாளர்கள் ஹிந்திப் படங்களை தயாரிப்பதற்கான வழிவகைகளை தற்சமயம் நாடுகின்றனர்.
அதற்கமைய அஜித்தின் “அசல்’ படத்துக்குப் பின் ஹிந்தியில் படம் இயக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார் சரண். இதற்காக சல்மானிடம் கதை சொல்லியிருக்கிறார். சல்மானின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது சரண் தரப்பு.
இதே போல் “கந்தசாமி’ படத்துக்குப் பின் சுசிகணேசனும் தன்னுடைய “திருட்டுப் பயலே’ படத்தை ஹிந்திக்குக் கொண்டு செல்கிறார். இதற்காக சில முன்னணி நட்சத்திரங்களிடம் பேச்சு நடக்கிறது. இயக்குநர் மாதேஷ் “அரசாங்கம்’ படத்தை ஹிந்தியில் முடிக்கும் தருவாயில் உள்ளார்.
பிரபுதேவா சிலரிடம் கதை சொல்லி காத்திருக்கிறார். தமிழில் இயக்கும் படம் முடிந்த பின் பிரபுதேவாவின் ஹிந்திப் படம் தொடங்குகிறது.

வெளிநாட்டு நாணயங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சகல வரிகளையும் ரத்துச் செய்ய அரசாங்கம்

இலங்கைக்கு எடுத்துவரப்படும் வெளிநாட்டு நாணயங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சகல வரிகளையும் ரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.
இதன்படி வெளிநாட்டு நாணயங்கள் மீதான துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, தேசத்தை கட்டயெழுப்பும் வரி, வற்வரி, அடங்கலான 22% வீத வரிகள் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. அதிக வரி காரணமாக வர்த்தக வங்கிகள் வெளிநாட்டு நாணயங்களை கொண்டு வருவதை மட்டுப்படுத்தியுள்ளன. இதனால் சட்டவிரோதமாக நாயணங்களை தருவிப்பது அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதனாலே குறித்த வரிகளை ரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சட்டங்கள் திருத்தப்படவுள்ளன

மத போதகர்கள் கைது ,ஆண் குழந்தை ரூ.1 லட்சம்-பெண் குழந்தை ரூ.20,000: கடத்தல் கும்பலிடம்


சென்னை: சமீபத்தில் பிடிபட்ட குழந்தை கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளிகளான கிரிஜா, லலிதா மற்றும் 7 பேரிடம் இருந்து 9 குழந்தைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

இந்தக் கும்பல் ஆண் குழந்தைகளை ரூ. 1 லட்சத்துக்கும், பெண் குழந்தைகளை ரூ. 20,000க்கும் விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஒசூர் விசாரணையில் கிடைத்த துப்பு...

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சிகிச்சை பெறுவதற்காக பஸ்சில் வந்த ராமாத்தாள் என்பவரின் 3 மாத குழந்தையை, உடன் பயணித்த ஒரு பெண் கடத்திச் சென்றார்.

இது குறித்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தி அதே ஊரைச் சேர்ந்த தனலெட்சுமி, சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவா, அவரது மனைவி கிரிஜா, இவர்களது கூட்டாளி ராணி ஆகியோரை கைது செய்தனர்.

சிக்கிய மதபோதகர்கள்...

இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சென்னை படப்பையைச் சேர்ந்த அல்போன்ஸ் சேவியர் (48), திண்டிவனத்தைச் சேர்ந்த செல்வம் (44) ஆகிய மத போதகர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து ராமாத்தாளின் 3 மாத கைக்குழந்தையும் மற்றும் 3 வயது ஆண் குழந்தையும் மீட்கப்பட்டது.

முக்கிய புள்ளி கிரிஜா...

கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் கிரிஜா தான் முக்கிய புள்ளி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை தங்கள் காவலில் எடுத்த போலீசார் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

மனித உரிமை அமைப்பு லலிதா...

அப்போது கிரிஜா கொடுத்த தகவலின்பேரில் புதுச்சேரி மாநிலம் முத்தையால்பேட்டையைச் சேர்ந்த லலிதா என்ற பெண்ணும் நேற்று முன்தினம் பிடிபட்டார். இவர் தனது குழந்தை கடத்தல் தொழிலை மூடிமறைக்க அகில இந்திய மனித உரிமைகள் அமைப்பின் மகளிர் அணி தலைவியாகவும் இருந்து வந்துள்ளார்.

இந்தக் கும்பல் இதுவரை மொத்தம் 9 குழந்தைகளை கிருஷ்ணகிரி மற்றும் காவேரிபட்டிணம் பகுதிகளில் இருந்து கடத்தி சென்னை, புதுச்சேரி, பண்ருட்டி, செஞ்சியில் விற்றுள்ளது தெரியவந்துள்ளது.

ரூ. 20,000 முதல் ரூ. 1 லட்சம் வரை விலை...

சென்னை பெரம்பூரில் 2 குழந்தைகளையும், புதுச்சேரியில் 3 குழந்தைகளையும், பண்ருட்டியில் 2 குழந்தைகளையும், செஞ்சியில் ஒரு குழந்தையையும் விற்றுள்ளனர்.

இதில் 6 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் அடக்கம்.

ஆண் குழந்தைகளை ரூ. 1 லட்சத்துக்கும், பெண் குழந்தைகளை ரூ. 20,000 முதல் ரூ.80,000க்கும் விற்பனை செய்துள்ளனர்.

இந்தக் கும்பலிடமிருந்து 9 குழந்தைகளும் மீட்கப்பட்டுவிட்டன.

இதற்கிடையே கிரிஜாவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பஸ் ஸ்டாப்கள், பஸ் ஸ்டாண்டுகளில் குழந்தைகளை வைத்து பஸ்சுக்காக காத்து நிற்கும் பெண்களுக்கு உதவுவது போல நடித்து தான் இந்தக் கும்பல் குழந்தைகளை கடத்தியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பின்னணியில் பெரும் கும்பல்?...

இந்தக் குழந்தை கடத்தல் பின்னணியில் மேலும் பெரிய கும்பல் இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அடுத்ததாக கிருஷ்ணகிரி தனலெட்சுமியையும் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தென்னிந்தியத் திரைப்படங்களை இலங்கையில் திரையிடுவதை தடை

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஃபா) அமிதாப்பச்சன் உட்பட முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ளாததன் காரணமாக தென்னிந்தியத் திரைப்படங்களை இலங்கையில் திரையிடுவதை தடை செய்ய வேண்டிய அவசியமில்லையெனத் தெரிவிக்கும் அரசாங்கம், சர்வதேச ரீதியில் புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தூண்டுதலின் பேரிலேயே தென்னிந்தியாவில் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லையென்றும் அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,தென்னிந்தியாவில் எமக்கு எதிராக எவ்வாறான எதிர்ப்புகள் எழுந்தாலும் இந்திய மத்திய அரசாங்கம் எமது நாட்டுக்கு சாதாகமான ரீதியிலேயே தீர்மானங்களை மேற்கொள்கின்றது.அண்மையில் மேலும் இரண்டு வருடங்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக பிரகடனப்படுத்தியமை இதற்கு சிறந்த உதாரணமாகும். எனவே எந்த ரீதியில் அழுத்தங்கள் வந்த போதிலும் ஐஃபா நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுகிறது. இதன் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் முயற்சி தோல்வி கண்டுள்ளது.

திடீர் தேர்தலுக்கு தயாராகுங்கள்: அதிமுகவினருக்கு ஜெயலலிதா கோரிக்கை

தமிழக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

இன்று அக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்த ஜெயலலிதா, அங்கு நடந்த இளம் பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பாசறையின் மாநிலச் செயலாளரான சசிகலாவின் உறவினர் டாக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா,

அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைத்த பிறகு ஒவ்வொரு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் மூலம் சில ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் எடுத்துச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

ஒவ்வொரு ஒன்றியத்திலும், நகரத்திலும் செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதில், எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதை மாவட்டச் செயலாளர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு ஒன்றிய நகர, பேரூர், அளவிலும் பொதுக் கூட்டங்கள் நடத்துங்கள். அந்த கூட்டத்திற்கு நகரச் செயலாளர் பேரூர் செயலாளர், ஒன்றியச் செயலாளர், மாவட்டச் செயலாளர்களை அழைக்க வேண்டும்.

பொதுக் கூட்டத்தில் உங்கள் பகுதி திமுகவினரின் செயல்பாடுகளை விமர்சியுங்கள்.

தமிழக சட்டமன்றத்துக்கு விரைவிலேயே தேர்தல் வரவுள்ளது. எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். வாக்குச் சாவடிகளில் நீங்கள் தான் பணியாற்ற வேண்டும், விழிப்புடன் இருந்து வாக்குச் சாவடிகளை கண்காணிக்க வேண்டும்.

பாசறை உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பாசறை செயலாளர்கள் வழி காட்ட வேண்டும் என்றார் ஜெயலலிதா.

முன்னதாக சேலம் புறநகர் மாவட்டதைச் சேர்ந்த 39 பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

பின்னர் ஆந்திர மாநில அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றனர்.

அதிமுக வேட்பாளர்கள்-ஜெ முன்னிலையில் மனு தாக்கல்:

இந் நிலையில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மனோஜ் பாண்டியன், ஈரோடு கே.வி.ராமலிங்கம் ஆகியோர் இன்று ஜெயலலிதா முன்னிலையில் மனுத் தாக்கல் செய்தனர்.

இதற்காக ஜெயலலிதா இன்று பகல் 12.20 மணிக்கு கோட்டைக்கு வந்தார். அவர் முன்னிலையில் சட்டமன்றச் செயலாளரும், ராஜ்யசபா தேர்தல் அதிகாரியுமான செல்வராஜிடம் அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்தனர்.

'உளமாற' வேண்டாம்.. 'ஆண்டவன் மீது சூளுரைத்து'...

மனுத் தாக்கலின் போது அதிமுக வேட்பாளர்கள் உறுதிமொழி எடுத்தனர். அவர்கள் 'உளமாற' என்று சொல்லி உறுதிமொழி எடுக்க இருந்தனர்.

ஆனால், ஜெயலலிதா கேட்டுக் கொண்டபடி 'உளமாற' என்பதற்கு பதில் 'ஆண்டவன் மீது சூளுரைத்து' என்ற வாசகத்தை சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மனுத்தாக்கல் செய்து முடித்ததும் வேட்பாளர்கள் இருவரும் ஜெயலலிதாவிடம் ஆசி பெற்றனர்.

அப்போது இந்த வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிக்கவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குணசேகரன், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ ஆகியோரும் உடனிருந்தனர்.

பதிவு செய்தவர்: முத்துராஜா
பதிவு செய்தது: 04 Jun 2010 5:56 pm
ஏண்டி ஜெயா மன்னார்குடி அலை விட்டால் தமிழ் நாட்டில் வேறு யாரும் இல்லையா

பதிவு செய்தவர்: கருணாநிதி
பதிவு செய்தது: 04 Jun 2010 5:39 pm
நான் ஆத்திகனாக இருந்திருந்தால் ஆத்ம திருப்தி என்றிருப்பேன் ஆனால் நாத்திகனாக் இருப்பதாம் மனநிறைவு கொள்கிறேன் என்று சொன்னதற்கு ஆத்திக ஜெயலலிதா நன்றாகவே ஆப்பு வைக்கிறார். வாழ்க சிறுதாவூர் சீமாட்டி.

ராஜபக்ஸவுக்கும் ஏனையவர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க பாராட்டு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் வென்றெடுக்கப்பட்டமைக்கு காரணமாக இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் ஏனையவர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க பாராட்டு தெரிவித்துள்ளார்.
too late too little madam

செம்மொழி மாநாட்டுக்கு வரக் கூடாது மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி

டெல்லி: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி, கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வரக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரத் தகவல்கள் கூறுகையில், கோவையில் ஜூன் 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டுக்கு ராமசாமி வருவதை தமிழக காவல்துறை விரும்பவில்லை.

இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ராமசாமி பேசியிருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கும், பிரபாகரனின் மறைவுக்கும் இந்தியத் தலைவர்களே காரணம் என்றும் ராமசாமி பேசியுள்ளார். இதையடுத்து ராமசாமியை இந்திய உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

அவரது கருத்துக்கள் கோபத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. அவர் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வராமல் இருந்தால் தமிழக காவல்துறையினர் மகிழ்ச்சி அடைவார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தலைவர்களை தமிழக அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழகத்தில் அடைக்கலம் கிடைத்து விடாமல் பார்த்து வருகின்றனர்.

நாங்கள் வெளிநாட்டினரை வரவேற்கிறோம். அதேசமயம், நமது விவகாரங்களில் அவர்கள் தலையிடுவதை ஏற்க முடியாது. இந்தியாவுக்கு எதிராக, அதுவும் இந்திய மண்ணுக்கு வந்து பேசுவதை அனுமதிக்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் ராமசாமி இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது அவர் ஈழத் தமிழர்கள் குறித்தும், ஈழத் தமிழர் போராட்டம் குறித்தும் தெரிவித்த கருத்துக்களையே தற்போது தமிழக அரசு ஆட்சேபித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

மேலும், விடுதைலப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை மத்திய அரசு நாடு கடத்திய செயலையும் ராமசாமி கடுமையாக கண்டித்திருந்தார்.

இந்த நிலையில்தான் ராமசாமி கோவை மாநாட்டுக்கு வருவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் தான் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஏற்கனவே ராமசாமி தெளிவுபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை மீது சீனா செலுத்தி வரும் ஆதிக்கத்தை உடைப்பதற்கு இந்தியா கங்கணம்

இலங்கை மீது சீனா செலுத்தி வரும் ஆதிக்கத்தை உடைப்பதற்கு இந்தியா கங்கணம் கட்டி உடனடியாக செயலில் இறங்கி உள்ளது என்று இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன. அச்செய்திகள் தெரிவிப்பவை வருமாறு:

”சீனா இலங்கையின் இராணுவ பொருளாதார, அரசியல் விவகாரங்களில் மிகுந்த செல்வாக்கு செலுத்தி வருகின்றது. சீனா அளவுக்கு இலங்கை விவகாரங்களில் இந்தியாவால் ஈடுபட முடியாமல் போய் விட்டது. இந்நிலையிலேயே இலங்கை விவாரங்களில் காத்திரமான வகையில் பங்கெடுப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா முழு மூச்சாக இறங்கி உள்ளது.

இதன் முதற்கட்டமாக சீபா என்கிற வர்த்தக உடன்படிக்கையை இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்று பாரதத் தரப்பு அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது. இந்த உத்தேச உடன்படிக்கையின் படி இந்தியர்கள் கணிசமான அளவில் இலகுவாக இலங்கையில் தொழில் வாய்ப்புக்களைப் பெற முடியும். குறிப்பாக ஆசிரியர்கள், சட்டத்தரணிகள்,வைத்தியர்கள் போன்ற தொழில் சார் நிபுணர்கள் இலங்கையில் வேலை பார்க்க முடியும். இதனால் இவர்களின் நலன்களைப் பேணுதல் என்கிற போர்வையிலும் இலங்கையின் விவகாரங்களில் பெரிதும் தலையிட இந்தியாவுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. ”

த‌மிழ‌ர்க‌ள் த‌ங்‌கி‌‌யிரு‌ந்த குடிசை ‌வீடுகளை டெ‌ல்‌லி மாநகரா‌ட்‌சி

காம‌‌ன்வெ‌ல்‌த் போ‌ட்டியையொ‌ட்டி பால‌ம் க‌ட்டு‌ம் ப‌ணி‌க்காக டெ‌ல்‌லி‌யி‌ல் வ‌சி‌த்த த‌மிழர்க‌ளி‌ன் குடிசை ‌வீடுக‌ள் அ‌ப்புற‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன.

பிழை‌ப்பு‌த்தேடி தலைநக‌ர் வ‌ந்த த‌மிழ‌ர்க‌ள் தெ‌ற்கு டெ‌ல்‌லி ‌நிஜாமு‌தி‌ன் இர‌யி‌ல் ‌நிலைய‌ம் அரு‌கி‌ல் சுமா‌ர் 700 குடிசைகளை அமை‌த்து அ‌ங்கு பல ஆ‌ண்டுகளாக வ‌சி‌த்து வரு‌கிறா‌ர்க‌ள்.

கூ‌லி வேலை பா‌ர்‌த்து வரு‌ம் த‌மிழ‌ர்க‌ள் த‌ங்‌கி‌‌யிரு‌ந்த குடிசை ‌வீடுகளை டெ‌ல்‌லி மாநகரா‌ட்‌சி நே‌ற்று பல‌த்த பாதுகா‌ப்புட‌ன் பொ‌க்லை‌ன் எ‌ந்‌திர‌ங்க‌ள் மூல‌ம் இடி‌த்து த‌ள்‌ளின‌ர்.

காம‌‌ன்வெ‌ல்‌த் போ‌ட்டியையொ‌ட்டி த‌மிழர்க‌ள் வ‌சி‌த்த பகு‌தி‌யி‌ல் பால‌ம் க‌ட்டுவத‌ற்காக குடிசை ‌வீடுக‌ள் அ‌ப்புற‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ப்பதாக டெ‌‌ல்‌லி மாநகரா‌ட்‌சி அ‌‌திகா‌ரிக‌ள் ‌வி‌ள‌க்க‌ம் அ‌ளி‌த்தன‌ர்.

பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்ட ம‌க்களு‌க்கு மா‌ற்று இட‌ம் வழ‌ங்க‌வி‌ல்லை எ‌ன்பது த‌மிழ‌ர்க‌ளி‌ன் புகா‌ர் ஆகு‌ம். எ‌வ்‌வித மு‌ன் அ‌றி‌வி‌ப்பு இ‌ல்லாமலு‌ம், பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட த‌மிழ‌ர்களு‌க்கு மா‌ற்று இட‌ம் வழ‌ங்காமலு‌ம் டெ‌ல்‌லி மாநகரா‌ட்‌சி அ‌திகா‌ரிக‌ள் அ‌திரடி நடவடிக்கை எ‌டு‌த்து‌ள்ளன‌ர்.

இதனா‌ல் தலைநக‌ரி‌ல் ‌வீடு, வாச‌ல்களை இழ‌ந்து குழ‌ந்தை, கு‌ட்டிகளுட‌ன் த‌மிழ‌ர்க‌ள் ‌வீ‌திக‌ளி‌ல் அ‌ல்லாடிய கா‌ட்‌சி ப‌ரிதாபமாக இரு‌ந்தது.

செரின மீது ஜெயலலிதா அரசினால் பொய்யாக கஞ்சா வழக்கு

 செரின மீது ஜெயலலிதா அரசினால் பொய்யாக கஞ்சா வழக்கு போடப்பட்டது. செல்வி சேரின் சசிகலாவின் கணவர் நடராஜனின் காதலி என்றும் அவரிடம்தான் ஜெயலலிதா சசிகலா வகையராகளின் பணம் முடங்கி உள்ளதாகவும் பேசப்பட்டது.அப்பணத்தை வெளிக்கொணரும் முகமாகத்தான் இந்த பொய்வழக்கு போடப்பட்டதாகவும் பேசப்பட்டது தெரிந்ததே

உயரநீதிமன்உத்தரவுப்படி, கஞ்சவழக்கிலவிடுதலையாசெரினபானுவிடமவருமாவரி பிடித்தமபோூ.30 லட்சத்து 35,117 ரொக்கமும், 21 லட்சமதொகைக்காவட்டிபபத்திரமுமஒப்படைக்கப்பட்டது.
மதுரை, தாசில்தாரநகரஅன்பநகரைசசேர்ந்தவரசெரினபானு. இவரையும், இவருடைதாயாரரமீஜபானு, காரடிரைவரசதீஷஆகியோரையும், கடந்த 2003-ஆண்டில் 30 கிலகஞ்சகடத்தியதாகாவ‌ல்துறை‌யின‌ர் கைதசெய்தனர்.
அவர்களிடமஇருந்தஅப்போது 1 கோடியே 40 லட்சத்து 18 ஆயிரமரூபாயரொக்கமும், 21 பவுனநகைகளும், காரஒன்றுமகருப்பாயூரணி காவ‌ல்துறை‌யினரா‌ல் பறிமுதலசெய்யப்பட்டது. இதுதொடர்பாவழக்கில், செரினபானு, அவரததாயாரஉள்பட 3 பேரையுமமதுரநீதிமன்றம் 2006ஆமஆண்டவிடுதலசெய்தது.
இந்நிலையில், செரினபானுவிடமஇருந்தகைப்பற்றிபணத்துக்கவருமாவரி செலுத்தவில்லஎனககூறி, அந்தபபணத்ததங்களவசமஒப்படைக்வேண்டுமஎன்றவருமாவரிததுறையினரமதுரநீதிமன்றத்திலமனசெய்தனர். அந்மனுவநீதிமன்றம் ‌நிராக‌ரி‌த்தது.
இந்உத்தரவஎதிர்த்தவருமாவரிததுறசார்பில், உயரநீதிமன்மதுரைககிளையிலமேல்முறையீடசெய்யப்பட்டது. இம்மனுவவிசாரித்நீதிமன்றம், செரினபானுவிடமஇருந்தகைப்பற்றப்பட்பணத்துடனஅதற்காவட்டிததொகையைககணக்கிட்டு, வருகின்மொத்தபபணத்திலஇருந்தூ.97 லட்சத்து 18 ஆயிரத்து 131 ரூபாயவருமாவரிக்காஎடுத்துக்கொண்டு, மீதிபபணத்தசெரினபானவசமஒப்படைக்கும்படி உத்தரவிட்டது.
இதுதவிர, செரினாவிடமஇருந்தகைப்பற்றப்பட்கார், தங்நகைகள், பாஸ்போர்டஆகியவற்றையும் காவ‌ல்துறை‌யின‌ர் திரும்ஒப்படைக்வேண்டுமஎன்றஉத்தரவிட்டது.
இந்நிலையில், உத்தரவபிறப்பிக்கப்பட்டசிமாதங்களாபணமதிருப்பி ஒப்படைக்கப்படாததால், உயரநீதிமன்உத்தரவுப்படி வருமாவரி பிடித்தமபோமீதபபணத்தையும், காரஉள்ளிட்பொருள்களையுமதரககோரி, செரீனதரப்பிலமதுரமாவட்போதைப்பொருளதடுப்பநீதிமன்றத்திலமனசெய்யப்பட்டது.
இந்நிலையில், மதுரமாவட்போதைப்பொருளதடுப்பநீதிமன்றத்திலநீதிபதி (பொறுப்பு) பாண்டுரங்கன், வருமாவரி பிடித்தமபோஉள்ூ.30 லட்சத்து 35,117 ரொக்கம், 21 லட்சத்துக்காவட்டிபபத்திரம், காரசாவி, பாஸ்போர்டஆகியவற்றசெரினபானுவிடமஒப்படைத்தார்.
காவ‌ல்துறை‌யின‌ரிடமிருந்தவரததாமதமானதாலநகைகளமட்டுமஒப்படைக்கப்படவில்லஎன்றதெரிகிறது. செரினபானுவுடனஅவரதவழக்கறிஞர்களகனகராஜ், சந்திரசேகரனஉள்ளிட்டோரவந்திருந்தனர்.

அருந்ததிராய்,மாவோயிஸ்டுகளை ஆதரிப்பதற்காக என்னை கைது செய்தாலும் கவலை இல்லை

மாவோயிஸ்டுகளை ஆதரிப்பதற்காக என்னை கைது செய்தாலும் கவலை இல்லை என்று எழுத்தாளர் அருந்ததிராய் கூறினார்,பிரபல ஆங்கில எழுத்தாளரான அருந்ததிராய் (வயது 48). பிரசித்தி பெற்ற புக்கர் பரிசு பெற்றவர். சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர். இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரித்து கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்து காங்கிரசிடமிருந்தும், பாரதீய ஜனதாவிடமிருந்தும் ஒரே நேரத்தில் வாங்கிக் கட்டிக்கொண்டவர் இவர்.

இப்போது மறுபடியும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். இம்முறை அவர் குரல் கொடுத்திருப்பது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி மனித வேட்டை நடத்தி வரும் மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கு ஆதரவாகத்தான்.

காந்தீயம் வெற்றி பெறுவதில்லை...

மும்பையில், ஜனநாயகத்தை காக்கிற உரிமைக்குழுவின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், மக்கள் மீதான யுத்தம் என்ற தலைப்பில் அருந்ததி ராய் ஆற்றிய உரையின் போது கூறியதாவது:-

தற்போதைய சூழலில் காந்தீயக் கொள்கைகள் வெற்றி பெறுவதில்லை. எனவேதான் நக்சலைட்டுகள் (மாவோயிஸ்டுகள்) ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் நான் வன்முறையை ஆதரிப்பவள் அல்ல. அதேபோன்றுதான் அரசியல் ஆய்வு அடிப்படையிலான கடுமையான கொடுஞ்செயல்களுக்கு முழுமையாக எதிரானவள்.

இது (மாவோயிஸ்டுகள் போராட்டம்) ஆயுதப்போராட்டம். காந்தீய வழியிலான எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தேவை. ஆனால் இங்கே அது இல்லை. இந்த வழியிலான போராட்டத்தை (ஆயுதமேந்திய போராட்டம்) கையில் எடுப்பதற்கு முன் அவர்கள் வெகுவாக விவாதித்திருக்கிறார்கள்.

நான் அவர்களுக்கு ஆதரவானவள். இதற்காக நான் கவலைப்படவில்லை. என்னை வேண்டுமானால் பிடித்து சிறையில் தள்ளுங்கள்.

கனிமங்கள், தண்ணீர், காடுகள் போன்ற இயற்கை வளத்தினை அடைவதில் பழங்குடியினருக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையே நடைபெறுகிற யுத்தத்தின் தொடர் விளைவுதான் நக்சலைட்டுகளின் வன்முறை.

99 சதவீத மாவோயிஸ்டுகள்-பழங்குடியினர் ஆவார்கள். அதே நேரத்தில் 99 சதவீத பழங்குடியினர்-மாவோயிஸ்டுகள் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

குறிகட்டுவான் நயினாதீவு பயணிகள் போக்குவரத்திற்கென புதியபடகு

குறிகட்டுவான் நயினாதீவு பயணிகள் போக்குவரத்திற்கென புதிய படகொன்றை ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

குறிகட்டுவான் ஊடான கடற்போக்குவரத்து தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து இன்றைய தினம் குறிகட்டுவான் இறங்குதுறைப் பகுதியைச் சென்றடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்குள்ள நிலவரங்களைக் கேட்டறிந்தும் நேரில் பார்வையிட்டார்.

இதன் போது வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதம பொறியியலாளர் சுதாகர் வேலணை உதவி அரச அதிபர் நந்தகோபன் நெடுந்தீவு உதவி அரச அதிபர் திலிங்கநாதன் குமுதினிப் படகோட்டிகள் கடற்படை அதிகாரிகள் உளளிட்ட பல்வேறு தரப்பினரும் அங்கு வருகை தந்திருந்தனர்.

பயணிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளையும் தாம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளையும் குமுதினிப் படகோட்டிகள் அமைச்சருக்கு எடுத்து விளக்கினர்.

அத்துடன் நெடுந்தீவு ப.நோ.கூ. சங்கத்தால் நடாத்தப்பட்டு வந்த படகுசேவை தற்போது பழுதடைந்துள்ளதால் அப்படகுச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த நிலையில் குமுதினிப் படகு மட்டுமே சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் இந்நிலையில் குமுதினிப் படகும் திருத்தம் செய்ய வேண்டியிருப்பதாகவும் அமைச்சரிடம் சுட்டிக் காட்டப்பட்டது.

நடிகர் விவேக் ஒபரோய் சிறுவர்,சிறுமியர்களுக்கென வவுனியாவில் பாடசாலையொன்றை அமைக்கவுள்ளதாக

இலங்கையில் யுத்தத்தால் தமது இள¨மைப் பருவம் சூறையாடப்பட்ட சிறுவர்,சிறுமியர்களுக்கென வவுனியாவில் பாடசாலையொன்றை அமைக்கவுள்ளதாக பிரபல இந்திய நடிகர் விவேக் ஒபரோய் தெரிவித்தார். சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நிறைவுபெற்றதும் வவுனியாவுக்குச் சென்று இப்பாடசாலையை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற் கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக ஆரம்பமாகியது.
முதலாம் நாளான நேற்றுக் காலை கொழும்பு, கொள்ளுப்பிட்டி சினமன்கார்டன் ஹோட்டலில் சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விவேக் ஒபரோய் இதனைத் தெரிவித்தார். தமிழ் நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காய் தனது தந்தையின் ஒபரோய் பவுண்டேஷன் மூலம் உதவக்கிடைத்ததை நினைவு கூர்ந்த விவேக் ஒபரோய், அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டுக்கும் தனக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவுக்கு நான் இலங்கை செல்வதை அறிந்த இலங்கையில் உள்ள எனக்கு நெருக்கமான அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகத்தினர் என்னை இலங்கை செல்ல வேண்டாம் என்று தடுத்தனர். இலங்கையில் தமிழர்களின் கஷ்டங்கள் தீர்க்கப்பட சர்வதேச இந்திய திரைப்பட அகடமி வழிசெய்ய வேண்டும் என்று என்னை வேண்டினர்.
அன்றே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்ச் சிரார்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதயமானது. அதனை சர்வதேச இந்திய திரைப்பட அகடமியிடம் சொன்னேன் அவர்களும் அதற்குக் சம்மதித்தார்கள். அதன்படி வவுனியாவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான பாடசாலையொன்றை சர்வதேச இந்திய திரைப்பட அகடமி இலங்கை கிரிக்கெட் சபை என்பவற்றின் உதவியோடு நிறுவத் திட்டமிட்டிருக்கிறேன்.
இது கல்வி புகட்டும் நிலையமாக மாத்திரம் அல்லாது பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான சுகாதார, போஷாக்கு நலனோம்புகை நிலையமாகவும் இருக்கும். இது பின்னர் வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப் படும் என்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களை மீள்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களை மீள்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது நேற்று மாலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முல்லை மாவட்ட த்துகான மாநாட்டில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கபடுகின்றது.

எதிர்வரும் 7ஆம் திகதி இவர்களை மீள்குடியமர்த்த பணிக்கப்பட்டுள்ளது . அதே வேளை மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ கடந்த வாரம் இந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் புலிகள் பாரியளவில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருக்கின்றனர். இவற்றை அகற்றும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலேயே அதிகளவில் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளமை இப்போது தெரிய வந்துள்ளது. இருப்பினும் அந்த மாவட்டத்தில் கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமான அறிக்கை எமக்குக் கிடைத்த பின்னரே அகதி முகாம்களிலுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற முடியும் என தெரிவித்தமை குறிபிடதக்கது.

முல்லைத்தீவு மாட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீண்டும் மீள்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு இம்மாநாட்டின் போது முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாக தெரிவிக்க படுகின்றது. இன்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தலமையில் இடம்பெற்ற உயர் மாநாட்டிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் கண்ணி வெடிகளை மிக விரைவில் அகற்றி மக்களை மீள்குடியமர்த்துமாறும் வியாபார நோக்கத்திற்காக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வரும் மக்களை பிரதேச செயலகங்களில் பதிவு செய்து அரசாங்க அதிபர் ஊடாக அதனை இராணுவத்திடம் சமர்ப்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகின்றது .

வியாழன், 3 ஜூன், 2010

தமிழ்நாட்டில் 2 ஆயிரம் போலி டாக்டர்கள்

தமிழ்நாட்டில் 2 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் போலி டாக்டர்கள் செயல்படுவதாக இந்திய மருத்துவ சங்கத்துக்கு புகார்கள் வந்தன. அதன்படி மாவட்ட வாரியாக யார்  யார் போலி டாக்டர்கள், எம்.பி. பி.எஸ். படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் போலி டாக்டர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு இந்திய மருத்துவ சங்க செயலாளர் டி.என்.ரவிசங்கர் கூறுகையில், போலி டாக்டர்கள் பட்டியலை டி.ஜி.பி.யிடம் ஒப்படைத்துள்ளோம். டி.ஜி.பி.யும், கூடுதல் டி.ஜி.பி.யும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக எங்களிடம் உறுதி அளித்துள்ளனர்.

தகுதியில்லாத போலி டாக்டர்கள் தவறானமுறையில் சிகிச்சை அளித்து நோயாளிகளை மேலும் பாதிப்படையச் செய்கிறார்கள். சிலர் ஆபரேஷன் கூட செய்து நோயாளி சாவுக்கு காரணமாகிறார்கள் என்றார்
சில அறைகுறை வைத்தியர்கள் ஆங்கில மருத்துவம் பார்க்கிறார்கள். சில சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். ஆங்கில மருந்துகளை நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கிறார்கள் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் கே.பிரகாசம் தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளை தலைவர் எஸ்.எஸ்.சுகுமார், சேர்மன் கே.விஜய்குமார் ஆகியோர் கூறுகையில், போலி மருத்துவர்கள் தற்போதுள்ள சட்டப்படி 6 மாதம் ஜெயில் தண்டனை அல்லது ரூ. 1000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றனர்.

குஷ்பு பேச்சு என் பேச்சை ;மழலை பேச்சாக எடுத்துக்கொள்ளுங்கள்-

என் பேச்சை கன்னிப்பேச்சாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;மழலை பேச்சாக எடுத்துக்கொள்ளுங்கள் குஷ்பு பேச்சு
முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவான்மியூரில் வடக்கு மாட வீதியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இன்று மாலை பொதுக்கூட்டம் துவங்கியது.
தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின்,முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம் வழுதி, எஸ்.பி.சற்குண பாண்டியன், கவிஞர் கனிமொழி எம்.பி., நடிகை குஷ்பு மற்றும் கழக முன்னணியினர் ஆகியோர் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், திமுகவில் இணைந்துள்ள நடிகை குஷ்பு 8.15க்கு கலைஞருக்கு வாழ்த்துரை வழங்கினார்.

பொதுக்கூட்டத்திற்கு வந்திருக்கும் அனைத்து திமுக முக்கிய பிரமுகர்களையும் குஷ்பு வரவேற்று பேசினார்.  துணைமுதல்வர மு.க.ஸ்டாலினை வரவேற்று பேசும் போது,

‘’தலைவரால் பலருக்கு பெருமை. ஆனால் தலைவருக்கே பெருமை சேர்க்கிறார் ைமுதல்வர்’’என்று குறிப்பிட்டார்.
மு.க.அழகிரியை வரவேற்றுப்பேசும் போது,சினிமாவில் ரஜினி பேரைச்சொன்னாலே அதிரும். அரசியலில் இவர பேரைச்சொன்னாலே அதிரும்.அவர்தான் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி’’ என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய குஷ்பு,  ‘’என்னுடைய பேச்சை கன்னிப்பேச்சாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மழலை பேச்சாக டுத்துக்கொள்ளுங்கள்.&
நான் ஏன் திமுகவில் இணைந்தேன் என்று  பலரும் கேட்கிறார்கள்.   திமுகவில் பெண்களூக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.  அதனால்தான் திமுகவில் இணைந்தேன்.
மேலும்,  மூடநம்பிக்கைகளூக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது திமுக.   மற்ற மாநிலங்களில் நடக்கும் மூடநம்பிக்கை கொடுமைகளை டிவியில் பார்த்திருக்கிறேன்.   ஆனால் தமிழ்நாட்டில் மூடநம்பிக்கைகள் குறைவு.   அதற்கு காரணம்..திமுகவும், தலைவரும்தான்.
தலைவர் ஆட்சியில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக இருக்கிறார்கள்.  தலைவர் ஆட்சியில்தான் பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைத்திருக்கிறது.
தனது திரைப்படங்களில் கூட தலைவர்,  பெண்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்துவருகிறார்.  மந்திரிகுமாரி, பராசக்தி, அரசிளங்குமரி என்று படைத்தார்.

தலைவர்  மகன் மு.க.முத்து  படம் எடுத்தபோது ராஜகுமாரன் என்று எப்படியெல்லாமோ படத்திற்கு தலைப்பு வைத்திருக்கலாம்.    ஆனால்  அந்த படத்திற்கு  கூட பூக்காரி என்று பெயர் வைத்தார்.
இப்போதும் கூட கண்ணம்மா, பெண்சிங்கம் என்று படைக்கிறார்.

சிங்கம், புலி என்று ஆண்களை மையப்படுத்தி இப்போது டைட்டில் வைக்கும் காலத்திலும் பெண் சிங்கம் என்று பெண்ணுக்கு
பெருமை சேர்க்கிறார் தலைவர்.  அதனால்தான் நான் திமுகவில் இணைந்தேன்.

நாம்  சரித்திரத்தை படித்துக்கொண்டிருக்கிறோம்.  ஆனால் தலைவர் சரித்திரத்தை படைத்துக்கொண்டிருக்கிறார்.  தலைவர்
நல்லா இருந்தால்தான் தமிழ்நாடு நல்லா இருக்கும்.  நீங்க நல்லா இருக்கனும் தலைவரே’’என்று தெரிவித்தார்.

’’எனக்கு பேச வாய்ப்பு தந்த தலைவருக்கு நன்றி.  ஹெய்ஹிந்த்!’’ என்று தனது பேச்சை நிறைவு செய்தார் குஷ்பு.

Cannes 2010 திரைப்பட விழாவில் தேர்வாகித் திரையிடப்பட்ட பிரதீபன் ரவீந்திரனின்

திரைப்பட விழாவில் தேர்வாகித் திரையிடப்பட்ட பிரதீபன் ரவீந்திரனின் குறும்படம், மற்றும் Directors Fortnight பிரிவில் தேர்வாகிய ஆறு குறும்படங்களின் பிரத்தியோகக் காட்சி:
மேற்கின் அகதி வாழ்வில் தங்களைத் தொலைத்துக்கொண்டவர்களின் விலகிப்போன நினைவுகளும் வரண்டு கிடக்கும் கனவுகளும்
  • இயக்கம்: பிரதீபன் ரவீந்திரன்
  • ஒளிப்பதிவு: கிருஷ்ணா நாகன்பிள்ளை
  • படத்தொகுப்பு: முத்துலஷ்மி வரதன்
  • தயாரிப்பு: Exil image - Lamplighter films