சனி, 1 டிசம்பர், 2018

டில்லி சுல்தானிய ஆட்சிக்கு திராவிடம் சவால் .. திமுக மீதான வரலாற்று தாக்குதல்கள் .

LR Jagadheesan : டில்லியில் கொஞ்சகாலமேனும்
வாழ்ந்த அல்லது வாழ
நேர்ந்தவர்களுக்கு ஒரு விஷயம் நன்கு தெரியவரும். டில்லிவாசிகளுக்கு தமிழர்கள் மீது ஒருபக்கம் அசூயையும் மறுபக்கம் வெறுப்பும்/அலட்சியமும் இயல்பாகவே இருக்கும். தமிழர்கள் மிரட்டலுக்கு அடிபணியும் சரியான பயந்தாங்கொள்ளிகள், அடிமைகள் என்பது டில்லியின் பொதுசமூகத்தின் புரிதல். அதனால் தான் டில்லியில் தமிழர்களுக்கு மிக எளிதில் வீடு வாடகைக்கு தருவார்கள். தமிழர்கள் தகறாறு செய்யமாட்டார்கள், தேவைப்படும்போது மிரட்டினால் காலிசெய்வார்கள் என்பதால்.
அந்த டில்லி சுல்தானிய ஆணவத்துக்கு அரசியலில் உண்மையான சவால் விடுத்ததால் தான் பொதுவாக திராவிட இயக்கம் மீதும் குறிப்பாக திமுக மீதும் அதன் நீட்சியாக பெரியார், அண்ணா, கலைஞர் மீதும் இன்றுவரை ஆழ்மன
வன்மத்தோடே டில்லி இருந்தது; இருக்கிறது; இருக்கும். வாய்ப்புகிடைத்த போதெல்லாம் தன் வஞ்சம் தீர்க்க டில்லி சுல்தானியம் தயங்கியதே இல்லை. கலைஞரின் ஆட்சி இருமுறை அநியாயமாக கலைக்கப்பட்டது முதல் அவர் மகளையும் அவரது கட்சி அமைச்சரானதால் ஆ ராசாவையும் ஜாமீனில் கூட வெளியில் விடாமல் சிறையில் அடைத்து மகிழ்ந்ததும் அந்த வரலாற்று வன்மத்தின் வெளிப்பாடுகள்.

சபரிமலையில் சரிந்த வருமானம்!

விகடன் - சிந்து ஆர் : அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்கும் விவகாரத்தை யொட்டி ஏற்பட்ட பிரச்னைகளைத் தொடர்ந்து, ஐயப்பன் கோயிலில் கணிசமாக வருமானம் குறைந்துள்ளது.
இது தொடர்பாக, ஆளும் தரப்பினரும் பி.ஜே.பி-யினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொள்கிறார்கள். ஐயப்பன் கோயிலில் வருமானம் குறைந்திருப்பதாகக் கூறப்படுவது குறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு வட்டாரத்தில் பேசினோம்.
 “கேரளத்தில் திருவிதாங்கூர், கொச்சி என இரண்டு தேவசம்போர்டுகள் உள்ளன. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கீழ் 1,249 கோயில்கள் உள்ளன. அவற்றில், சபரிமலை உள்ளிட்ட 61 கோயில்களில் மட்டுமே வருமானம் கிடைக்கிறது. திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு 2017-18 நிதியாண்டில் ரூ.683 கோடி வருவாய் வந்தது.
அதில் அனைத்துக் கோயில்களுக்கான செலவுகள், ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் என ரூ.678 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கையிருப்புத் தொகையை வைத்துக்கொண்டு, இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியும்.

கேரளா உள்ளாட்சி .. இடது ஜனநாயக முன்னணி வெற்றி!..

கேரளா: இடது ஜனநாயக முன்னணி வெற்றி!மின்னம்பலம் : கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மொத்தமுள்ள 39 இடங்களில் 21 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி வந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இதனால் கேரளாவில் கலவரம், வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டன. எனினும் பாஜகவுக்கு ஆதரவாகப் பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சபரிமலை பிரச்சினை மூலம் அங்குத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள

 200 தென்னைகள் தப்பிய அதிசயம்: துல்லியமான கணிப்பு, துணிச்சலான முடிவு.. பல்லாயிரம் மரங்களை பறிகொடுத்த கிராமத்தில்


மட்டைகள், தேங்காய், இளநீர் வெட்டப்பட்ட தென்னைமரம்
tamil.thehindu.com/ வி.தேவதாசன் : பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களைப் பறிகொடுத்த திரு வாரூர் மாவட்ட கிராமம் ஒன்றில், வானிலை ஆய்வாளர் செல்வ குமாரின் துல்லியமான கணிப்பும், ஒரு விவசாயியின் துணிச்சலான முடிவும் சேர்ந்து, ஒரே ஒரு தோப்பில் உள்ள 200 தென்னை மரங்களைக் காப்பாற்றியிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அருகே உள்ளது இடும்பா வனம் கிராமம். கஜா புயலின் கோர தாண்டவத்தால் அதிக அளவில் தென்னை மரங்களை பறிகொடுத்த கிராமங்களில் இதுவும் ஒன்று. இந்த கிராமத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதே கிராமத்தில், சீனு என்ற விவசாயி மட்டும் குறைந்த சேதங்களோடு தப்பியுள்ளார். இதற்கு காரணமாக இருந்தது, ஆசிரியர் செல்வகுமார் கூறிய வானிலை முன்னறிவிப்பு.

டெல்லி. மனைவியை பழிதீர்க்க 3 பெண்குழந்தையை பாலியல் .....தந்தை

வெப்துனியா :டெல்லியில் மனைவி மீது உள்ள கோபத்தில் தந்தை 3 வயது குழந்தையை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் 3 வயது குழந்தையுடன் ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார். அந்த நபர் மனைவியிடம் அவ்வப்போது சண்டையிடுவார். அதே போல் நேற்று முன் தினம் தனது மனைவியிடம் அவர் சண்டையிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார். மனைவி வெளியே சென்ற ஆத்திரத்தில்,
அந்த கொடூரன் குடித்துவிட்டு தனது 3 வயது மகளை சீரழித்துள்ளான். சற்று நேரம் கழித்து வீட்டிற்கு வந்த மனைவி குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இதையடுத்து புகாரின்பேரில் அந்த கொடூர அப்பனை கைது செய்த போலீஸார், அவன் மீது போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

‘அபு’ வந்து விட்டார் ..மோடியை காமடி பீசாக ஆஜர்ன்டினா தொலைக்காட்சி ..

பிரதமர் மோடியை காமெடி பீஸ் ஆக சித்தரித்த அர்ஜென்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்
மாலைமலர் : ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள பிரதமர் மோடியை அர்ஜென்டினா நாட்டின் பிரபல கார்டூன் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு செய்தி வெளியிட்டது. #ArgentineTV #Modi #G20 #Apu
பிரதமர் மோடியை காமெடி பீஸ் ஆக சித்தரித்த அர்ஜென்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்
பியுனஸ் அய்ரெஸ் என்பது  அர்ஜென்டினா நாட்டில் மிக பிரபலமான தொலைக்காட்சி சேனலான ‘குரோனிக்கா டி.வி.’யில் ஒரு ‘சிம்ப்சன்ஸ்’ என்ற காமெடி கார்டூன் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த ஒரு கடைக்காரர் அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவதுபோல் நைய்யாண்டித்தனமான ஒரு கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது.
‘அபு’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கதாபாத்திரத்தை மேற்கத்திய நாடுகளில் வாழும் சில இந்தியர்களுடன் தொடர்புப்படுத்தி இங்குள்ளவர்கள் கிண்டல் செய்வதுண்டு.

திராவிடத்தால் மீண்டோம் . திராவிடத்தால் எழுந்தோம்... நாம் 50 வருடங்கள் முன்னே சென்று கொண்டிருக்கிறோம்

Sumathi Vijayakumar : திராவிடத்தால் வீழ்ந்தோம் . ஆனால் நாம் நினைப்பது
போல் 1967ல் இருந்து வீழவில்லை. அதற்கும் 47 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திராவிடத்தால் வீழ்ந்து கொண்டிருக்கிறோம்? அந்த வரலாறை ஏன் யாரும் பேச மறுக்கிறார்கள் என்பதை அறிய நாம் வரலாறை பின் நோக்கி பார்த்தே ஆக வேண்டும்.
காங்கிரஸ் கட்சி பலர் நினைப்பதை போல் ஆங்கிலேய அரசை எதிர்க்க போராட துவங்கப்படவில்லை. இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேய அரசின் ஆட்சியில் இந்தியர்களுக்கும் பங்கு வேண்டும் என்பதை வலியுறுத்த துவங்க பட்ட கட்சி. அதாவது ஆங்கிலேய அரசுடன் ஆட்சியை பகிர்ந்து கொள்வது. அதன் பிறகாக இந்தியர்களும் உயர் பதவிகளில் பங்கு பெற்றார்கள். ஆனால் அதில் அநேக பேரும் பார்ப்பனர்களே. பதவிகளில் மட்டுமல்லாது வேலை வாய்ப்புகளிலும், உயர் கல்விகளிலும் அவர்களே இருந்தார்கள். குறிப்பாக சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வியில் பார்ப்பனர்களை தவிர வேறு யாரும் பயிலவில்லை. இதனை அடுத்து சசுப்ரமணியம் மற்றும் புருஷோத்தம நாயுடு என்ற இரண்டு வழக்கறிஞர்கள் 1909ஆம் ஆண்டு 'Non - Brahmin Association' என்ற அமைப்பை துவங்கினார்கள். இது தான் திராவிடத்தின் துவக்கம்.

பாட நூல்களில் பாசிச பாம்பு.. Savukku


பொன் மாணிக்கவேல் தேவதூதனா ?

savukkuonline.com : இன்று பொன் மாணிக்கவேல் பணியிலிருந்து ஓய்வு பெறும் கடைசி நாள்.   அவருக்கு 60 வயது நிறைவடைந்து விட்டது. பணி நிறைவடைகையில் அவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்தார். இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தபோதுதான், யானை ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.  அதில், சிலை கடத்தல் தொடர்பான பல்வேறு வழக்குகள் சரியாக விசாரிக்கப்படவில்லை என்றும், வழக்கு தொடுக்கிறார்.  அந்த வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, ரயில்வே ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேலை நீதிமன்றம் முன்பு ஆஜராகச் சொல்லி உத்தரவிடுகிறார் நீதிபதி மகாதேவன். அப்போது பொன் மாணிக்கவேல் சொன்னதாக கீழ்கண்டவாறு எழுதுகிறார் மகாதேவன். ‘

ராஜபக்சேவுக்கு மேலும் நெருக்கடி: மந்திரிகளுக்கு சம்பளத்தை நிறுத்தியது இலங்கை பாராளுமன்றம்

ராஜபக்சேவுக்கு மேலும் நெருக்கடி: மந்திரிகளுக்கு சம்பளத்தை நிறுத்தியது இலங்கை பாராளுமன்றம்  தினத்தந்தி :அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் ராஜபக்சேவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொழும்பு, இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவால் சர்ச்சைக்குரிய முறையில் பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் அரசு நிதியைப் பயன்படுத்துவதற்கும்,  சம்பளம், பயண சலுகைகள் உள்ளிட்டவற்றைப்  பெறவும் அந்த நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது. ஏற்கெனவே, அரசு நிதியை ராஜபக்சே பயன்படுத்துவதற்குத் தடை விதித்து வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மந்திரிகள் நிதியை பயன்படுத்துவதற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக 122 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் வெளிநடப்பு செய்ததால், தீர்மானத்துக்கு எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை. ஏற்கனவே, பிரதமருக்கான  அலுவலக செலவுகளைச் செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில், மந்திரிகளும் நிதியை செலவு செய்ய தடை விதித்து இருப்பது ராஜபக்சேவுக்கு மிகப்பெரிய அடியாக  பார்க்கப்படுகிறது.

மருத்துவக் காப்பீடு: ரூ.5 லட்சமாக அதிகரிப்பு!.. Flashback ..கலைஞர் காப்பீடு திட்டம்

மருத்துவக் காப்பீடு: ரூ.5 லட்சமாக அதிகரிப்பு!கலைஞர் காப்பீடு திட்டம் என்பது தமிழ்நாட்டில் ஏழை மக்கள், உயிருக்கு
ஆபத்தான 51 நோய்களுக்கு, Indian Rupee symbol.svg 1,00,000 (ஒரு இலட்சம்) வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்யும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும். ஜூலை 2009ல் கலைஞர்  தலைமையிலான திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் ஜூன் 2011ல் ஜெ. ஜெயலலிதாவின் அதிமுக அரசால் விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்போது இத்திட்டம் கூடுதல் பலன்களுடன் திருந்திய வடிவில், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் 2011(Chief Minister's Comprehensive Health Insurance Scheme, 2011) என்ற பெயரில் மாற்றி அமைக்கப்பட்டு சூலை 2011 ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது
கலைஞ‌ர் கா‌ப்‌பீடு ‌தி‌ட்ட‌த்த‌ி‌ல் 1.34 கோடி குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு அடையாள அ‌ட்டை வழ‌ங்கக‌ப்ப‌ட்டு‌ள்ளது. கா‌ப்‌பீடு ‌நிறுவன‌ம் மூல‌ம் ரூ.415 கோடி மரு‌த்துவமனை‌க்கு வழ‌‌‌‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மின்னம்பலம்: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (நவம்பர் 30) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைத்திட வேண்டும் என்ற நோக்கில், 2012ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண் மீது போக்சோ வழக்கு பதிவு


காயத்ரி தம்மை லெஸ்பியன்  உறவுக்கு அழைத்ததாகவும் விஸ்வதர்ஷினி குற்றம்சாட்டியிருந்தார்.
tamil.indianexpress.com/ நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.< விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு : சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த விஸ்வதர்ஷினி என்ற பெண், தனது வீட்டில் இருந்து நடிகர் விஷால் அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அந்த பெண் மீது தற்போது  பாக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள பத்திரிகையாளர் பிரகாஷ் எம்.சுவாமி மீது டான்ஸர் காயத்ரி புகார் கூறியிருந்தார். இந்த டான்ஸர் காயத்ரியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் விஸ்வதர்ஷினி. சமீபகாலமாக காயத்ரிக்கும் விஸ்வதர்ஷினிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அரசியல்வாதிக்கு கூழைக்கும்பிடுபோடும் ஒரு அரசு அதிகாரி .. சாமியாடும் நேர்மை குஞ்சுகள்

LR Jagadheesan : இப்படித்தான் சகாயம் என்று உலகத்திலேயே ஒரே உத்தமர்
தான் கிரானைட் முறைகேட்டை கண்டுபிடித்து தண்டிக்கக்கூடிய ஒரே ஆள் என்று சாமியாடினார்கள். நீதிமன்றமும் சேர்ந்து ஆடியது. சகாயமும் தன்பங்குக்கு நட்டநடுராத்திரியில் சுடு காட்டுக்கெல்லாம் போய் photoவுக்கு pose எல்லாம் கொடுத்தார்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய இயற்கை வளக்கொள்ளைகளில் ஒன்றான கிரானைட் கொள்ளை வழக்கு என்ன ஆனது?
எத்தனைபேர் தண்டிக்கப்பட்டனர் என்று யாராவது பட்டியலிட்டால் தேவலாம்.
சகாயம் ஃபார் சி எம் என்கிற கோஷத்தை வைத்து அலுத்துப்போனவர்கள் இப்போது இவரை வைத்து சாமியாடிக்கொண்டிருக்கிறார்கள்.
மாநில அரசியலில் இருப்பதிலேயே கேடுகெட்ட அரசியல்வாதிக்கு கூழைக்கும்பிடுபோடும் ஒரு அரசு அதிகாரி தான் உங்களின் நேர்மைக்கான இலக்கணம் என்றால் உங்கள் நேர்மையை கொண்டுபோய் அந்த கூவத்தில் கொட்டுங்கள்.

அம்ஷன்குமாரின் ‘மனுசங்கடா’ படம் சிறப்பு திரையிடல்

உலகத் திரைப்பட விழாவில் விருதுகள் பெற்ற
#மனுசங்கடா தமிழ் திரைப்படம் திரையிடல் மற்றும் இயக்குனர் #அம்ஷன்குமார் மற்றும் குழுவினருடன் உரையாடல்.
நன்கொடை: ரூபாய் 100/
நுழைவுச்சீட்டு கிடைக்குமிடங்கள்: பரிசல் புத்தக நிலையம் – திருவல்லிக்கேணி 044-48579646, பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை 044-24332924, நியூ புக்லேண்ட் – தி .நகர் 044-28158171, டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர் 9566236967, கூகை திரைப்பட இயக்கம் – வளசரவாக்கம் 9710505502, பனுவல் புக் ஸ்டோர் – திருவான்மியூர் 044-43100442.
தொடர்புக்கு :9382853646,9445124576,7338823667,8939114423

வெள்ளி, 30 நவம்பர், 2018

கேரளா பஞ்சாயத்து தேர்தல் இடதுசாரிகள் 21.. காங்கிரஸ் 12. ..பாஜக 2.. சபரிமலை அய்யப்பன் பாஜகவை அடித்து நொறுக்கினார்


The LDF’s tally of victories in 21 wards came from Thrissur district
(5 out of 5 wards), Kannur district (2 out of 4 wards), Kozhikode district (1 out of 1 ward), Malappuram district (2 out of 4 wards), Alappuzha district (1 out of 5 wards) and Palakkad district (2 out of 2 wards).
The local body bye-elections held in 14 districts of Kerala for a total of 39 seats saw the Left Democratic Front (LDF) emerge victorious, winning a total of 21 seats. Meanwhile, the United Democratic Front (UDF) secured 12 seats, the Bharatiya Janata Party (BJP) secured two seats, the Social Democratic Party of India (SDPI) secured two seats and two more seats were secured by independent candidates. This victory for the LDF comes at a time when BJP and Congress groups are protesting against the Pinarayi Vijayan-led state government for their stand in the Sabarimala issue.

பா.ம.க-வால் கலங்கும் காடுவெட்டி குரு குடும்பம்.. பிரச்னைக்கெல்லாம் காரணம் ராமதாஸும், வைத்தியும் தான்


திருமணம்
குரு குடும்பம்vikatan.com - k.gunaseelan: அரியலூர் மாவட்டம் காடுவெட்டியைச் சேர்ந்தவரும், வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை, குருவின் தங்கை மகன் மனோஜ்கிரண் இருவரும் நேற்று முன்தினம் கும்பகோணத்தில் திருமணம் செய்துகொண்டு காவல் நிலையத்தில் தங்களின் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.
இந்த நிலையில், நேற்று குருவின் மற்றொரு சகோதரி மீனாட்சியின் வீட்டில் குருவின் குடும்பத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது குருவின் மகன் கனல்அரசு,  ``எனது தந்தையை கட்சிக்காக நல்லா பயன்படுத்திக் கொண்டனர். வன்னியர் சங்கத்தையும், பா.ம.க-வையும் வளர்க்க தந்தை கடுமையாகப் பாடுபட்டார். என் தந்தை மருத்துவமனையில் இருந்தபோது, யாரும் உதவி செய்யவரவில்லை. மருத்துவமனையில் இருந்தபோது டியூப்பை கழட்டி அதை வீடியோவில் பேச வைத்து வெளியிட்டால்தான் கட்சிக்கு எந்த கெட்ட பெயரும் வராது என கட்சிகாரர்கள் கூறினார்கள்.

மறைந்த ஐராவதம் மகாதேவன் எம்ஜியாரை எதிர்த்து பதவியை ....

Savithri Kannan : ஏதேச்சதிகார எம் ஜி ஆரை எதிர்த்து ஐ
ஏ எஸ் பதவியை தூக்கி
எறிந்தவர் ஐராவதம் மகாதேவன். அவரை நினைக்கும் போது எனக்கு அவரது தமிழ் புலமை,கல்வெட்டுத் துறை அறிஞர் என்பதையெல்லாம் கடந்து அவரது தன்மான உணர்ச்சி தான் நினைவுக்கு வருகிறது...!
எம் ஜி ஆருக்கு அதிகாரிகள்,பைல்கள்..என்றாலே ஒரு வெறுப்பு இருந்தது.எதிலும்சந்தேகம்,குழப்பம்..மனதில் ஒன்று, நடைமுறையில் ஒன்று என்பதே எம் ஜி ஆர் வாடிக்கையாக இருந்தது.பைல்கள் அவர் மேஜையில் முடிவு காணாமல் குவிந்து கிடக்கும்.யாருமே அவரை சந்திப்பது அரிது!
தமிழகத்தை பொறுத்தவரை அதற்கு முன்னால் முதலமைச்சராக இருந்த காமராஜராகட்டும்,கருணா நிதியாகட்டும் பார்வையாளர்கள் சந்திப்பு நேரத்தில் குருவிக்காரன் தொடங்கி குபேரன் வரை யார் வேண்டுமானாலும் சந்திக்கக் கூடிய நிலைமை இருந்தது.ஆனால், எம் ஜி ஆரை நிர்வாகத்தின் நாடி நரம்புகளாகச் செயல்பட்டு வந்த ஐ ஏ எஸ் அதிகாரிகளே சந்திக்க முடியாது என்பது மட்டுமல்ல,அவர்களை கீழ்த்தரமாகவும் நடத்தினார்.

எங்களுக்கும் ராயல்டி தரவேண்டும் –தயாரிப்பாளர்கள் கோரிக்கை! மொத்த செலவும் எங்களுடையதே !


வெப்துனியா: இளையராஜாவின் முடிவுக்கு கோரிக்கை வைத்த கச்சேரி கலைஞர்கள் !
இந்த முயற்சிக்கு திரையுலகின் அனைத்துத் தரப்பில் இருந்து பலத்த வரவேற்புகள் வந்த வண்ணம் உள்ளன. அதில் ஒரு இப்போது முக்கியத் திருப்பமாக தயாரிப்பாளர்கள் சிலர் அந்த தொகையில் தங்களுக்கும் ராயல்டீ தரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அதில் ஒரு தயாரிப்பாளர் ‘இந்த முயற்சியை நாங்கள் மனமார வரவேற்கிறோம். ஆனால் பாடல் உருவாக்கத்திற்காக செய்யப்பட்ட மொத்த செலவும் அந்தந்த படத்தின் தயாரிப்பாளர்களின் பணம். அதில் பல தயாரிப்பாளர்கள் இப்போது நலிவடைந்த நிலையில் உள்ளனர். எனவே வரும் ராயல்டீ தொகையில் ஒரு பகுதியினை தயாரிப்பாளர்களுக்கும் தரவேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்

BBC :மட்டக்களப்பு இரு போலீசார் சுட்டுக் கொலை!

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு போலீஸ் அலுவலர்கள் கொலை
செய்யப்பட்ட சம்பவத்திற்கும், முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் (கருணா) இடையில் தொடர்புள்ளதா என்பது தொடர்பிலான தெளிவூட்டல்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத் தொடரின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்தே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் விரைவில் தெளிவூட்டல்களை வழங்குமாறு தான் ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு போலீஸ் உத்தியோகஸ்தர்கள், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நேற்றிரவு உயிரிழந்திருந்தனர்.

ஐஜி பொன் மாணிக்கவேல் ஒருவருடம் பணி நீட்டிப்பு

THE HINDU TAMIL " நீதிமன்றம் அளித்த பணி நீட்டிப்பை திறம்படச் செயலாற்றி ஓராண்டில் அனைத்துப் பணிகளையும் முடிப்பேன், சம்பளமே இல்லாவிட்டாலும் பணியாற்றுவேன் என ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.
பணி நீட்டிப்புக்குப் பின் சென்னையில் செய்தியாளர்களிடம் பொன் மாணிக்கவேல் கூறியதாவது:
;நீதிமன்றத் தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மிகுந்த சந்தோஷம். இதே பணியைச் செய்ய மீண்டும் ஒருவருடம் நீட்டித்துத் தந்துள்ளனர். முன்பு கடுமையாக இரவு பகலாக வேலை பார்த்தோம். இப்போது உறுதியாக வேலை பார்த்து கொண்டுவரப்படவேண்டிய சிலைகளை இன்னும் கொஞ்சம் வேகப்படுத்துவோம். மேற்கொண்டு துறைக்கும், அரசாங்கத்துக்கும், நீதிமன்றத்துக்கும் எங்களுடைய பணிவரனுக்கும் மேலாக சிறப்பாகப் பணியாற்றி பெருமை சேர்ப்போம். எள்ளளவும் எங்களால்  யாருக்கும் எந்த நேரமும் சிறுமை வராது. ஒன்றுமே இல்லையென்றாலும் வேலை பார்க்கத் தயார்.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராபர்ட் காலமானார்!

ஒளிப்பதிவாளர் ராபர்ட் காலமானார்!மின்னம்பலம் :பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராபர்ட் ஆசீர்வாதம் இன்று (நவம்பர் 30) காலமானார். அவருக்கு வயது 68.
தமிழ்த் திரையுலகில் 80 களில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைபோல் பேசப்பட்டவர்கள் ராபர்ட்-ராஜசேகர். மாபெரும் வெற்றிப் படங்களான பாலைவனச் சோலை, மனசுக்குள் மத்தாப்பு, சின்னப்பூவே மெல்ல பேசு ஆகிய படங்களை இயக்கியவர்கள். ஒரு தலை ராகம், குடிசை உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளனர். இதனையடுத்து இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததன் விளைவு அடுத்த படங்கள் அவர்களால் வெற்றிக் கொடுக்க முடியாமல் போனது.

மேகதாது - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு...

மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவை அனுமதிக்கக் கூடாது என்றும், மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு இன்று இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு, ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கில் இடைக்கால மனுவாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள நிலையில், வழக்கில் தொடர்புடையவர்களுக்கும் மனுவின் நகலை தமிழக அரசு அனுப்பியுள்ளது.

அன்னை மீனாம்பாள் சிவராஜ் நினைவு தினம் .. பெரியாருக்கு பெரியார் பட்டம் வழங்கிய பெண் பெரியார் !.

Kiruba Munusamy : டாக்டர் அம்பேத்கர் அவர்களால் தங்கை என்று அன்பாக மான ஐயா கலி. பூங்குன்றன் அவர்களையே சாரும்! 06.11.1990 அன்று அன்னை மீனாம்பாள் அவர்கள் கண் பார்வையற்ற நிலையில் இருந்த போதும், அவரின் சமூக-அரசியல் அனுபவங்களை தெளிவாக நினைவுகூர்ந்திருக்கிறார். அவற்றில், நான் குறிப்பெடுத்தது:
அழைக்கப்பட்டவரும், தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு 'பெரியார்' என்று பட்டம் வழங்கியவருமான அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களின் நினைவு தினம் இன்று! அன்னை மீனாம்பாள் என்ற மிகப்பெரும் பெண் ஆளுமையின் வாழ்வனுபவங்கள் அனைத்துமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அத்தகைய விலைமதிப்பற்ற செய்திகளை, அவரின் இறுதி காலக்கட்டத்தில் கடைசியாக பேட்டி கண்டு நமக்கு வழங்கிய பெருமை திராவிடர் கழகத் துணைத்தலைவரும், விடுதலை நாளிதழின் பொறுப்பாசிரியரு
1) அம்பேத்கர் குறித்து:
அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் அமைப்பிற்கு (All India Scheduled Caste Federation) உத்திரப்பிரதேசம், வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் எம்.சி.ராஜா அவர்களைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். மத்தியப் பிரதேசத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

கேரளா தேர்வு அறையில் மானபங்கம்:ரயில் முன் பாய்ந் மாணவி ராக்கி கிருஷ்ணா தற்கொலை


ராக்கி கிருஷ்ணா
வெப்துனியா :கேரள மாநிலத்தில் 19 வயதான மாணவியை தேர்வு அறையில்
செக்கிங் என்ற பெயரில் மானபங்கம் படுத்தியதால் விரக்தியில் ரயில் முன் பாய்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் இரவிபுரம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகள் ராகி கிருஷ்ணன். தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வரும் இவர் தேர்வு எழுத சென்றார்.
 அப்போது தேர்வு அறைக்குள் நுழைந்த மேற்பார்வையாலர்கள், இவரது துப்பட்டாவில் சில எழுத்துக்கள் எழுதி இருப்பத்தை பார்த்து, காபி அடிக்கிறார் என நினைத்து அனைவரின் முன்பு துப்பட்டாவை இழுத்தனர்.
மேலும், தனி அறைக்கு அழைத்து சென்று பெண் ஊழியர்கள் உதவியுடன் அவரது மேலாடையை அவிழ்த்து சோதனை செய்தனர்.
இதனால் மனமுடைந்த மாணவி சோதனையின் போதே தப்பி ஓடியுள்ளார். ஊழியர்கள் அவரை துரத்தி சென்றுள்ளனர். ஆனால், அந்த மாணவியை பிடிக்க முடியாததால் பாதியில் வந்துவிட்டனர்.  அந்த மாணவி நேராக ரயில் தண்டவாளம் அருகே நின்றார். அப்போது வந்த திருவனந்தபுரம் - கொல்லம் இடையேயான கேரள எக்ஸ்பிரஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

2.0 எந்திரன்.. லைகா போட்ட முதலை எடுக்குமா? ஒரு விரிவான விடியோ


வெப்துனியா :ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷ்ய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் 2.0.
இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பெரும் பொருட்செலவில் படம் எடுக்கப்பட்டுள்ளதால் படத்தின் வசூல் குறித்த தகவல் அனைவரும் எதிர்ப்பார்த்தாகும்.
அந்த வகையில் தற்போது 2.0 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும் என்ர தகவ்ல் வெளியாகியுள்ளது.
கணிப்பின் படி, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படம் முதல் நாள் ரூ.100 கோடி வசூலிக்கும் என்றும் தமிழகத்தில் மட்டும் முதல் நாள் ரூ.30 கோடி வரையில் வசூல் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை ரூ.60 கோடிக்கும், வட மாநில உரிமை ரூ.80 கோடிக்கும், ஆந்திரா, தெலுங்கானா உரிமை ரூ.70 கோடிக்கும், கர்நாடகா உரிமை ரூ.25 கோடிக்கும், கேரளா உரிமை ரூ.15 கோடிக்கும் விற்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுமனின் சாதியைக் கண்டுபிடித்த ஆதித்யநாத் : பிராமணர் சங்கம் கடும் ஆத்திரம்…!

தீக்கதிர் : ;லக்னோ: மனிதர்களில் சாதி பிரிக்கும் சங்-
பரிவாரங்கள், தற்போது கடவுள்களிலும் சாதியைத் தோண்டிப் பார்த்து வருகின்றனர். அந்த வகையில்தான், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில், பாஜக-வுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், ‘கடவுள் அனுமன் ஒரு தலித்’ என்று கண்டுபிடித்துக் கூறியுள்ளார்.“அனுமன் ஒரு காட்டுவாசி. ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். அவர் ஒரு தலித். இந்தியாவை வடக்கிலிருந்தும் தெற்குவரையும், கிழக்கிலிருந்து மேற்குவரையும் இணைப்பதற்காக அவர் பாடுபட்டார். ராமரின் விருப்பத்தை நிறைவேற்றவே அவர் இவ்வாறு செய்தார். அந்த அனுமனைப் போல நாமும் ராமரின் விருப்பதையே நிறைவேற்ற வேண்டும். ராம பக்தர்களுக்கே (பாஜக-வுக்கு) வாக்களிக்க வேண்டும். ராவணர்களுக்கு அல்ல” என்று ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு 3700 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர் ... மருத்துவ கனவு ....?

Not a single ST student from government or aided schools likely to get MBBS seat this yea
பழூரான் விக்னேஷ் ஆனந்த் : கடந்த ஆண்டு 1,14,602பொதுப்பிரிவில் +2 மதிப்பெண் அடிப்படையில் ) சேர்ந்துள்ளனர் .
மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் தகுதி பெற்றவர்கள் 39.6% அதாவது 45,336 மாணவர்கள் . அரசாங்க பள்ளிகளில் படித்து தகுதி பெற்ற மாணவர்கள் 1.12% அதாவது 1,337 மாணவர்கள் . இந்த 1,337 மாணவர்களில் 2 மாணவர்களுக்கு மட்டுமே அரசாங்க மருத்துவ கல்லூரிகளில் MBBS சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் 2,447 Mbbs சீட்டுகள் உள்ளன . அரசாங்க பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் 0.16 % . 2016 நீட் தேர்வு இல்லாத பொழுது 30 அரசாங்க பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகள் (இட ஒதுக்கீடு இன்றி
(தகுதி பெற்றவர்வள் அனைவருக்கும் மருத்துவம்
படிக்கும் வாய்ப்பு அமைந்துவிடாது என்பது இந்த தகுதித் தேர்வின் கூடுதல் சிறப்பு )
ST பட்டியலில் இருக்கும் ஒரு மாணவர் கூட இந்த ஆண்டு மருத்துவத்துறையில் நீட் தேர்வினால் சேர இயலவில்லை.
இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் பத்து இருபது வருடங்கள் அல்ல கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒப்பீடு இது..

2005ல் புலிகளுக்கு மகிந்த ராஜபக்ச கொடுத்த 200 மில்லியன் பணம் ! ரணில் ஜனாதிபதி தேர்தலில் தோற்றது எப்படி?

பசில் ராஜபக்சவுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்ததாகவும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 200 மில்லியன் பணமும் தேர்தலுக்கு பின்னர் பல்வேறு வகையில் பல பில்லியன் பணமும்
Ajeevan Veer : 2005ல் ரணிலின் ஜனாதிபதி பதவி இழக்கப்பட்ட இரகசியம் !
புலிகளுக்கு மகிந்த ராஜபக்ச கொடுத்த 200 மில்லியன் பணம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்ட 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்தமைக்கான  காரணங்கள் வெளிவந்துள்ளது.
மஹிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்ட 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்களின் கருத்துக்களை மாற்றுவதற்காக புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரதமரிடம் கோரியுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த விசாரணைகளுக்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மை பெற்றது,186,000 என்ற சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்திலே என்பதும் குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகள் அமைப்பு யாழ்ப்பாணம், வன்னி மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொண்ட தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிட்டத்தட்ட 3 லட்ச மக்கள் வாக்களிக்க செல்லவில்லை.

2.0 : சினிமா விமர்சனம் அம்பி முதற்கொண்டு இறுதியாக பக்ஷிராஜன் வரை பார்ப்பன .. சங்கர்

Karundhel Rajesh :  சங்கர் ..  வழக்கமாக ஜென்டில்மேன் படம்
தொடங்கி ஒரு பார்ப்பன பெயர் கொண்ட ஒருவர் நாட்டில் உள்ள எல்லோரையும் கொலை செய்வார் என்று ஆக சங்கர் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாக செய்து கொண்டேதான் இருக்கிறார் கிச்சாவில் தொடங்கி நடுவே அம்பி முதற்கொண்டு இறுதியாக பக்ஷிராஜன் வரை சங்கர் தெளிவாகத்தான் இருக்கிறார்

BBC : 2010ல் ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் பின்னணியை வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம். அதாவது விஞ்ஞானி வசீகரன் மற்றும் அவரது கண்டுபிடிப்பான 'சிட்டி' ரோபோவின் அடுத்த சாகசம். பறவையியல் நிபுணரான டாக்டர் பக்ஷிராஜன் (அக்ஷய் குமார்) செல்போன்களாலும் அதற்காக அமைக்கப்படும் டவர்களாலும் உருவாகும் கதிர்வீச்சுகளால் பறவைகள் பாதிக்கப்படுவதைக் கண்டறிந்து, அவற்றை கட்டுப்படுத்தப் போராடுகிறார்.
ஆனால், அது நடக்காமல் போக, ஒரு செல்போன் டவரில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.
இதற்கிடையில், நகர் முழுவதும் செல்போன்கள் பறிக்கப்படுகின்றன. யார் பறிப்பது, பறிக்கப்பட்ட செல்போன்கள் எங்கே செல்கின்றன என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கும்போதே, கோரமான கொலைகள் நடக்க ஆரம்பிக்கின்றன. இதையடுத்து டாக்டர் வசீகரனை (ரஜினிகாந்த்) அரசு உதவிக்கு அழைக்க, அவர் தன் முந்தைய கண்டுபிடிப்பான 'சிட்டி' வந்தால்தான் இதை எதிர்கொள்ள முடியும் என்கிறார். இதையடுத்து சிட்டி மீண்டும் உருவாக்கப்படுகிறது.

சோறு போடாத மகனின் சொத்து பத்திர பதிவை ரத்து செய்த மாவட்ட ஆட்சியர் .. திருவண்ணாமலை

கலெக்டர் கந்தசாமி
Mahalaxmi : சொத்தை வாங்கி விட்டு சோறு போடாத மகன்கள் ; பத்திர பதிவை
ரத்து செய்து உத்தரவிட்ட கலெக்டர்.!
இது ஒரு நல்ல தொடக்கம் தானே..!
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகா, வேடனத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(75). விவசாயி. அவரது மனைவி பூங்காவனம்(63). இவர்களது மகன்கள் பழனி(40), அரசு பஸ் கண்டக்டர். செல்வம்(37), கட்டிட தொழிலாளி. இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயி கண்ணன் தனது 5 ஏக்கர் நிலத்தை, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மகன்களுக்கும் தலா 2.5 ஏக்கர் வீதம் தான செட்டில்மென்ட் பத்திரப் பதிவு மூலம் எழுதி வைத்தார். அதன்பிறகு, மகன்களின் நடவடிக்கைகள் மாறி, பெற்றோருக்கு சோறு போடாமல் தவிக்கவிட்டனர். இளைய மகன் செல்வம், தந்தையை அடித்து துன்புறுத்தவும் தொடங்கினார். உணவுக்கும் வழியின்றி மனைவியுடன் தவித்த கண்ணன், இருவரும் தலா 60 சென்ட் நிலத்தையாவது ெகாடுங்கள், விவசாயம் செய்து சாப்பிடுகிறோம் என கேட்டும், மகன்கள் மறுத்துவிட்டனர். இதனால் கண்ணன், அவரது மனைவி பூங்காவனம் ஆகியோர், கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், கலெக்டர் கந்தசாமியிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தனர்.

வியாழன், 29 நவம்பர், 2018

சமூகப் புரட்சியாளர் - மகாத்மா ஜோதிபா பூலே மராட்டிய பார்ப்பனர்களுக்கு எதிராக போர்க்கொடி....

க.ம. மணிவண்ணன் : மராட்டிய மண்ணில் தீண்டத் தகாதவர்களுக்காகவும்,
பெண்களுக்காகவும் முதலில் செயல்வடிவப் போராட்டத்தைத் தொடங்கியவர் ஜோதிபா பூலேதான். ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நிலவி வந்த அறியாமையையும், மூடநம்பிக்கையையும் அகற்ற அவர்களின் அடிமை விலங்குகளை உடைத்தெறியக் களம் புகுந்தவர் பூலே.
முதன்முதலில் சனாதனிகள் கொடி கட்டிப் பறந்த பூனேவில், சிங்கத்தின் குகைக்குள்ளேயே புகுந்து அதற்கு சவால் விடுவதுபோல் அடித்தள மக்களுக்கும், பெண்களுக்கும் பள்ளியைத் திறந்தவர் பூலே. சமூக சமத்துவம், நீதி, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் சமூக ஒழுங்கை நிறுவச்செய்வதே அவரது இலட்சியமாக இருந்தது.
ஜோதிபா பூலேவின் காலச் சூழலைப் புரிந்து கொண்டால்தான் அவரது பணி எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அது பேஷ்வாக்கள் ஆட்சி செய்த காலம், மக்கள் அனைத்து தார்மீக நெறிகளையும் இழந்து நின்றனர்.
சித்பவன் பார்ப்பனர்களே அனைத்துப் பதவிகளையும் பிடித்துக் கொண்டனர். பிற சாதியினர் அமர்த்தப்பட்டிருந்தாலும், எவ்வளவு திறமையானவராகவும், உறுதியானவராகவும் இருந்தாலும், சூழ்ச்சியால் விரட்டப்பட்டனர்.
அறநெறியில் ஒரு தேக்கம்,கலாச்சாரத்தில் ஒரு சீரழிவு, மதவிசயங்களில் ஒரு இறுக்கம். அறிவு, உழைப்பு ஆகிய செயல்பாடுகளில் ஏற்பட்டிருந்த தளர்ச்சியானது வீழ்ச்சியையும், சீரழிவையும் கொண்டு வந்தது. இதுவே அன்றைய நிலை.

டெல்லியில் நாளை மாலை நிர்வாண போராட்டம். 5 லட்சம் அகில இந்திய விவசாயிகள் கலந்து கொள்வார்கள்


எத்தனை பேர்
கிண்டல் செய்தனர் tamil.oneindia.com -shyamsundar : டெல்லி: டெல்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று மாலையில் இருந்து நாளை மாலை வரை மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளது.
நாம் நட்ட விதையொன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது என்று தமிழக விவசாயிகள் சந்தோசமாக மார்தட்டிக் கொள்ள முடியும். தமிழக விவசாயிகள் டெல்லியில் சென்று வருடம் முழுக்க நடத்திய போராட்டம் தற்போது இந்திய விவசாயிகளின் போராட்டமாக மாறியுள்ளது.
டெல்லியில் இன்று நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் வந்துள்ளனர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் டெல்லியை உலுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் சென்றவருடம் தமிழக விவசாயிகள்தான் டெல்லியில் இப்படி போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அப்போது இந்தியாவின் பிற மாநில மக்கள் தமிழர்களை கிண்டல் செய்தனர். விவசாயிக்கு ஒன்று என்றால் விவசாயிதான் வருவான் என்பதை போல சில நாட்களில் மகாராஷ்டிராவில் விவசாயிகள் போராட தொடங்கினர். இதோ இன்று இந்தியா முழுக்க உள்ள விவசாயிகள் ஒன்றாக போராட இருக்கிறார்கள்.

கனிமொழி :அந்த அடுப்பு அணையவே கூடாது!' - புயல் பாதித்த பகுதிகளில் ....


அந்த அடுப்பு அணையவே கூடாது!' - 'கஜா' பாதிப்புக்குக் கரம் கொடுத்த
கனிமொழி
'அங்கு தயாராகும் உணவுகளை அக்கம் பக்கம் கிராமங்களுக்குக் கொண்டு போய்விடுங்கள். அந்த மக்கள் கையேந்துவதற்கு முன்னதாகவே உணவைக் கொடுத்துவிடுங்கள்' எனக் கூறிவிட்டார் கனிமொழி.
'கஜா' புயல் பாதிப்புப் பகுதிகளில் அரசின் நிவாரண உதவிகளைவிட, கனிமொழி செய்த செயலைப் பாராட்டுகின்றனர் பேராவூரணி பகுதி மக்கள்.
"தினமும் மூன்றாயிரம் பேருக்கு உணவு வசதி செய்து கொடுத்திருக்கிறார் கனிமொழி. இதை வெளியில் சொல்வதைக்கூட அவர் விரும்பவில்லை" எனவும் அம்மக்கள் நெகிழ்கின்றனர்.
காவிரி டெல்டா பகுதிகளை ஒட்டுமொத்தமாகச் சிதைத்துவிட்டது 'கஜா' புயலின் கோர தாண்டவம். வீடுகள், தென்னை மரங்களை இழந்து வீதிகளில் உணவுக்காகக் காத்திருக்கின்றனர் சோறுபடைத்த சோழநாட்டு மக்கள்.
புயல் குறித்து மக்களுக்கு அலர்ட் கொடுத்த அரசாங்கம், பாதிப்புகளுக்குப் பிறகான தேவைகளைக் கணிப்பதில் தவறிவிட்டது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: வழிப்பறி, கொள்ளை என வழக்கு பதிவு

வெப்துனியா :தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடியில் பல்வேறு காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு முதலில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
;ஆனால் சிபிசிஐடி விசாரித்தால், இந்த வழக்கு நியாயமாக இருக்காது என்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்குகளை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ முதற்கட்டமாக 7 பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது.அதாவது, கூட்டுச்சதி, ஒரே திட்டத்தின் அடிப்படையில் கூட்டாக செயல்படுதல், வழிப்பறி, கொள்ளை, கொலை வெறி தாக்குதல், பிறருக்கு காயம் ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசு ஊழியர்கள் சட்டத்தை மதிக்காமல் செயல்படுதல், தவறான ஆவணங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.

குஜராத் ..குடிபோதையில் டாக்டர் சிகிச்சை ..தாயும் சேயும் உயிரழப்பு ...


இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் குடிபோதையில் பெண்ணுக்கு பிரசவ அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். அறுவை சிகிச்சையின்போது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் தாயும் உயிரிழந்தார்.
மருத்துவர் மது அருந்தியிருந்தாரா என்பதை கண்டறிய செய்யப்பட்ட சோதனையில் அவர் குடிபோதையில் இருந்தது உறுதியானது என போலீஸார் தெரிவித்தனர்.
கவனமின்மையால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதா அல்லது பிற மருத்துவ காரணங்களால் ஏற்பட்டதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மருத்துவர் லக்கானி ஓர் அனுபவமிக்க மூத்த மருத்துவர். மேலும் அரசாங்கத்தால் நடத்தப்படும் சோனாவால மருத்துவமனையில் கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
உயிரிழந்த காமினி சாச்சி பிரசவ வலியுடன் திங்களன்று மாலை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

ஐராவதம் மகாதேவன் இறுதிச் சடங்கில் வெறும் 40 பேர்' - கேஎஸ் ராதாகிருஷ்ணன்

'அறிஞர் ஐராவதம் மகாதேவன் இறுதிச் சடங்கில் வெறும் 40 பேர்' - கேஎஸ் ராதாகிருஷ்ணன் வேதனைசிந்துசமவெளி எழுத்துகளுக்கும் திராவிட மொழி குடும்பத்துக்கும் உள்ள உறவை சொன்னவர் ஐராவதம் மகாதேவன்.
tamil.indianexpress.com/ 'மாமனிதர் ஐராவதம் மகாதேவன் இறுதிச் சடங்கில் வெறும் 40 பேர்' - கேஎஸ் ராதாகிருஷ்ணன் வேதனை
 சர்க்கார் போன்ற திரைப்படங்கள், மீடு போன்ற தேவையற்ற பிரச்சனைகளை பேச்சுகளில் அக்கறை காட்டுவது தான் நமக்கு முக்கியம்.
 சென்னையில் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்த புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், கடந்த நவ.26ம் தேதி தனது இல்லத்தில் உடல் நலக் குறைவால் காலமானார். ஐராவதம் மகாதேவன், 1930ல் திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் பிறந்தார். 1987-1991 வரை இவர் தினமணி ஆசிரியராக பணியாற்றிய இவர் சிந்தி எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள் தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். கல்வெட்டு எழுத்தியல் துறையில் மிக முக்கியமான அறிஞராக பார்க்கப்பட்டார்.

தமிழ் ராக்கர்ஸ் 2.0: யாராலும் அழிக்க முடியாதோ!

மின்னம்பலம் :முன் குறிப்பு: இந்த செய்தியின் நோக்கம் தமிழ் ராக்கர்ஸை
புரமோட் செய்வதோ, தமிழ் சினிமாவின் அமைப்புகளைப் புண்படுத்துவதோ இல்லை. உண்மையைத் தேடுவது மட்டுமே இதன் நோக்கம்.
தமிழ் சினிமாவின் சாபக்கேடு ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்கிறார்கள். ஆனால், உண்மையில் மிகப்பெரிய வாய்ப்பினைத் தமிழ் சினிமாவுக்கு அவர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். படம் ரிலீஸான அன்றே இணையத்தில் பதிவேற்றுவதும், இதைச் செய்யக் கூடாது என்று நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டிருக்கும்போதும் அதனை மீறுவதும் ‘டிஜிட்டல் தீவிரவாதம்’ என மேற்குலக நாடுகளில் விவரிக்கும் அளவுக்குத் தீவிரமான குற்றம். ஆனால், எவ்வித பயமும் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்ததும் இல்லாமல் ‘படத்தின் ஒரிஜினல் அனுபவத்தை உணர தியேட்டரில் பாருங்கள்’ என்று குசும்பாகப் பின்குறிப்பு கொடுக்கும் அளவுக்குத் தமிழ் ராக்கர்ஸ் வளர்ந்துவிட்டதால்தான் ‘தமிழ் ராக்கர்ஸ் 2.0’ எனக் குறிப்பிட வேண்டியதிருக்கிறது.
2.0 படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்ததும் நூற்றுக்கணக்கில் சமூக வலைதளங்களில் அந்தத் தகவல் பகிரப்படுகிறது. எப்படி இத்தனை சீக்கிரம் ரிலீஸ் செய்ய முடிந்தது? என்று ஒரு குழுவும், ‘எப்படி ஒரிஜினல் ஆடியோ கிடைத்தது’ என்று ஒரு குழுவும் விவாதத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், பேச வேண்டியவர்கள் யாரும் பேசவே இல்லை.

மேகதாது அணைக்கட்டு.. அனைத்து கட்சி கூட்டம் அறிவாலயத்தில் .. முக்கிய தீர்மானங்கள் ..!

tamil.thehindu.com : மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது குறித்து ஆலோசிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
திமுக கூட்டணியில் மதிமுக உள்ளதா? விசிக உள்ளதா? என்கிற சர்ச்சை எழுந்த நிலையில் மேகதாது அணை கட்டும் பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணி அளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. திமுக சார்பில் ஸ்டாலின்,  துரைமுருகன்,  டி.ஆர்.பாலு, ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், மதிமுக சார்பில் வைகோ, மல்லை சத்யா, காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர், விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கே.பாலகிருஷ்ணன், சண்முகம், விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன், ரவிகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சு சார்பில் முத்தரசன், மு. வீரபாண்டியன், திக சார்பில் கலி.பூங்குன்றன், மனித நேய மக்கள் கட்சி சார்பில் அப்துல் சமது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் முகமது அபூபக்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின் தொடக்கத்தில் கஜா புயலின் கோர தாண்டவத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.  அதனைத் தொடர்ந்து பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு சோனியா உட்பட அனைத்து மத்திய மாநில எதிர்கட்சிகளையும்..

கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி சென்னை வருகிறார் - திமுகஅண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கலைஞர்  சிலை திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னைக்கு வருகிறார் என திமுக தெரிவித்துள்ளது. சென்னை: கடந்த ஆகஸ்டு மாதம் மரணம் அடைந்த கலைஞருக்கு  தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிரமாண்டமான முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. கலைஞர்  சிலையுடன் தி.மு.க. நிறுவனர் அண்ணாவுக்கும் புதிய சிலை அமைக்கப்பட உள்ளது.
மேலும் மிக பிரமாண்டமான தி.மு.க. கொடி கம்பம் ஒன்றும் அங்கு நிறுவப்பட உள்ளது.
 பேரறிஞர் அண்ணா-  கலைஞர்  ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா டிசம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
பாஜகவுக்கு எதிராக உள்ள காங்கிரஸ் மற்றும் அனைத்து மாநில கட்சிகளையும் கலைஞர்  சிலை திறப்பு விழாவுக்கு அழைப்பதற்கு மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் தி.மு.க. மூத்த தலைவர்களை பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

இளையராஜா பாடல்களின் ராயல்டி தொகை உரிமையை இசைக்கலைஞர் சங்கத்திற்கு கொடுத்தார்

ஆனந்த்குமார் சித்தன் : · இசைக்கலைஞர் சங்கத்திற்காக , தனது பாடல்களின் காப்புரிமையை பெற்ற இசைஞானி இளையராஜா , அதை முறைப்படி தன் காப்புரிமையின் ராயல்டி தொகையை அவர்களே பெற்றுக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்து விட்டார்..
அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை..
 அவர் சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே..
அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம் ஒப்படைத்தார்.. .
தனக்காக வாசித்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக தன்னால் ஆன நிரந்தர உதவியை செய்த இவரைத்தான் அவதூறும் அசிங்கமும் பேசி வருகிறது இணையத்தின் குப்பைகள்.. நியாயமாக பாராட்ட வேண்டிய விஷயம் இது..

சென்னை நடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை

காலைல வரேன் tamil.oneindia.com-/hemavandhana :சென்னை: இளம் தமிழ் திரைப்பட நடிகை ரியாமிகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 வயதான நடிகை ரியாமிகா. குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோஸ், அகோரி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். தனது தம்பி பிரகாஷ் துணையுடன் இந்த வீட்டில் வசித்து வருகிறார். ரியாமியாக தினேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.