சனி, 26 நவம்பர், 2011

4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல்


Check out this exclusive video shot during the recording of the song with the music composer Anirudh,Dhanush,Shruti Hassan, Aishwarya and Sound Engineer Sivakumar

சென்னை, நவ.23: ’3' படத்தில், தனுஷ் எழுதி அவரே பாடியிருக்கும் கொலவெறி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த நான்கு நாட்களில் சுமார் 10 லட்சம் பேர் இந்தப் பாடலைக் கேட்டுள்ளனராம். தமிழ் சேனல்கள் மட்டுமல்லாமல், வட இந்திய டிவிக்களிலும் இந்தப் பாடல் மீண்டும் மீண்டும் போடப்பட்டு ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் முதல் படமான 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.

Anna ஹஸாரே அடித்த பல்டிகளில் லேட்டஸ்ட் பல்டி

“இந்தியாவிலேயே ஊழலற்ற மாநிலம் குஜராத்தான். நரேந்திர மோதி அப்பழுக்கற்றவர், மிகச் சிறந்த நிர்வாகி”, என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார். மோதியும், இப்படியெல்லாம் என்னைப் புகழ்ந்தால் உங்களைச் சிலர் களங்கப் படுத்த முயல்வர் என்று கடிதம் எழுதினார் ஹஸாரேவுக்கு. அதற்கெல்லாம் சளைத்தவன் நானல்ல என்று மார் தட்டினார் அன்னா. கடைசியில் என்னவாயிற்று? அன்னா ஹஸாரேயின் மதச்சார்பின்மை கேள்விக்குரியதாகிறது, அவர் பாஜக அனுதாபி, ஆர் எஸ் எஸ் ஸ்வயம்சேவக் போல் பேசுகிறார் என்று மதச்சார்பற்ற மாந்தர்கள் குரலெழுப்பவும், எதற்கு வம்பு என்று, “குஜராத்தைப் போல் ஊழல் மலிந்த மாநிலம் உலகிலேயே இல்லை” என்று ஒரே போடாகப் போட்டார். முன்பு அப்படிச் சொன்னீர்களே, பிறகு ஏன் இப்படி என்று மீடியாக்கள் இவரைக் கேட்கவில்லை, அதுவும் மதச்சார்பின்மைக்கு எதிராக முடியுமென்பதால்.

ஆயிரத்தில் ஒருவன் 2 தனுஷுக்காக...

தனுஷின் ’மயக்கம் என்ன’  படம் தியேட்டர்களில் திரைடப்பட்டு ரசிகர்களால் படம் ஹிட் என்ற பெருமையை பெற்றுள்ளது.  அடுத்ததாக தனுஷ் தனது மனைவியான ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் ’3’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 3 படத்தின் ஒரே ஒரு பாடல் வெளியிடப்பட்டு அந்த பாடலும் சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாகி வெற்றி வாகை சூடிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது பற்றிய யோசனையில் செல்வராகவன் உள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படத்தின் முடிவில் தூதுவனாக நடித்த நடிகர் கார்த்தி, சோழ இளவரசனை காப்பாற்றி அழைத்து செல்வது போன்று முடித்திருந்தார். 
எனவே அந்த சோழ இளவரசனாக தனுஷை நடிக்க வைக்கும் முயற்சியில் இயக்குனர் ஈடுபட்டுள்ளார்.

நிதி மோசடி, ஏமாற்று புகார்... கிரண்பேடி மீது உடனடி வழக்கு - டெல்லி நீதிமன்றம் உத்தரவு!!


டெல்லி: தொண்டு நிறுவனத்துக்கு நிதி சேர்த்ததில் பெரும் மோசடி செய்ததாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி மீது புகார் தரப்பட்டுள்ளது.
இந்தப் புகாரில் கிரண் பேடி மீது அடுத்த 24 மணிநேரத்துக்குள் எப்ஐஆர் போட்டு வழக்குப் பதியுமாறு டெல்லிநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
நவஜோதி தொண்டு நிறுவனத்திற்கு நிதி சேகரிப்பதில் முறைகேடு செய்தாகவும், தொண்டு நிறுவனம் தந்த சலுகைகளை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தப் புகாரை விசாரித்த நீதிமன்றம், 24 மணிநேரத்துக்குள் மோசடி வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையாகப் பேசி வந்தவர் கிரண் பேடி. அன்னா ஹஸாரேயின் இயக்கத்தில் இணைந்து டீம் அன்னா குழுவின் முக்கிய புள்ளியாக திகழ்ந்தார்.

நான் வாயைத் திறந்தால் பலர் ஜெயிலுக்குப் போக வேண்டி வரும் - ஆ ராசா



Raja
டெல்லி: நான் வாயைத் திறந்தால் பலர் உள்ளே போக வேண்டி வரும். எனவே இப்போதைக்கு நான் ஜாமீன் கேட்கப் போவதில்லை. முதலில் கனிமொழி வெளியில் வரட்டும். பிறகு நான் ஜாமீன் பற்றி யோசிக்கிறேன், என்று ஆ ராசா தெரிவித்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் தொலைத் தொடர்பு துறையின் அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டார். ஓராண்டாக அவர் திகார் ஜெயிலில் உள்ளார்.
இந்நிலையில் ஆ.ராசா நீதிமன்ற அறையில் பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், "திகார் ஜெயில் வாழ்க்கை, தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வகையிலும் என்னை மேலும் செம்மையாக்கி உள்ளது.
எனது வாழ்க்கையில் 12 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்து விட்டேன். சிறையில் இந்த புதிய வாழ்க்கையை கிட்டத்தட்ட 12 மாதங்கள் அனுபவித்து விட்டேன். இந்த இரண்டிலும் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.
நான் தற்காலிக விடுதலையை விரும்பவில்லை. இந்த வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை பெற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். ஆகவே நான் ஜாமீன் கேட்டு எந்த கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யவில்லை. நான் வாயை திறக்கும் போது, பலர் ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும்.
ஒவ்வொரு விஷயத்தையும் நான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நான் நிரந்தரமாகவே ஜெயிலிலேயே இருந்து விடுவேன் என்று நீங்கள் கருதி விடக்கூடாது.

வீட்டில் அடைத்து மாதக்கணக்கில் சீரழித்தனர்: மாயாவதி கட்சி எம்.எல்.ஏ.மீது பெண் புகார்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஆளுங் கட்சி எம்.எல்.ஏ. நீரஜ் மவுரியா மீது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார். உ.பியில், பாலியல் புகாருக்கு ஆளாகும் 10வது பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. நீரஜ் என்பது குறிப்பிடத்தக்கது.


உத்தர பிரதேச மாநிலம் ஜலால்பூர் தொகுதி எம்.எல்.ஏ. நீரஜ் மவுரியா. ஆளும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். அவர் மீது ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார்.

ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் பருல்பவார் முன்பு அந்த பெண் அளித்த வாக்குமூலம் வருமாறு,
கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் நீரஜ் மவுரியாவின் ஆட்கள் என்னை கடத்திச் சென்று ஜலாலாபாத்தில் உள்ள அவரது வீட்டில் ஒரு மாதத்துக்கு மேலாக என்னை அடைத்து வைத்திருந்தனர். அப்போது எம்.எல்.ஏ.வும், அவரது கூட்டாளிகளும் என்னை பலமுறை கற்பழித்தனர். பின்னர் ஹரியானாவில் உள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று அங்கு எனக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்து கொடுத்தனர்.
தினமும் பலர் என்னை கற்பழித்தனர். இதில் நான் கர்ப்பமானேன். அப்படியும் அவர்கள் என்னை விடவில்லை. குழந்தை பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை கற்பழித்தனர். எனக்கு ஆண் குழந்தை பிறந்தவுடன் என்னை அந்த பண்ணை வீட்டிலேயே விட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.

நிதீஷ்குமாரின் பீகார் சாதனை: இரகசியம் தெரியுமா?

சொத்து விஷயத்தில் துரைமுருகன், பழனி முருகன் ரேஞ்சில் இல்லை!


Chennai, India: The residences and business premises of D Duraimurugan, former law minister in the DMK government, and those of his close relatives were raided yesterday (Thursday) on charges of amassing wealth disproportionate to his known sources of income. These raids were conducted by The Directorate of Vigilance and Anti-Corruption ( DVAC). Earlier, the same agency raided the residences and office premises of former DMK Ministers KN Nehru, TM Anbarasan, K Ponmudi, N Suresh Rajan and MRK Panneerselvam.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான நில அபகரிப்பு புகார் ரவுண்ட் முடிந்து, சொத்துக் குவிப்பு ரவுண்ட் வேகம் எடுக்கத் விட்டது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், துரைமுருகன் தொடர்பான வேறு இடங்களிலும் புகுந்து புறப்பட்டுள்ளனர்.சொத்துக் குவிப்பு ரவுண்ட் ஏற்கனவே தொடங்கியதுதான். தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் நேரு, பொன்முடி, சுரேஷ்ராஜன், அன்பரசன் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியிருந்தனர். அடுத்த கட்டத்தில் வருகிறது துரைமுருகன் விவகாரம்.

ஜெயா ஆட்சியை நாடகமாக நடித்த ‘குற்றத்திற்காக’ குழந்தைகள் உட்பட 60 பேர் சிறை!

 வினவு, 
ஜெயா ஆட்சியை நாடகமாக நடித்த குற்றத்திற்காக குழந்தைகள் உட்பட 60 பேர் சிறை!பாசிச ஜெயாவின் விலையேற்ற அறிவிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதைக்கூட போலீசு விரும்பவில்லை. 7 குழந்தைகள், உட்பட 60 தோழர்களை சிறையில் அடைத்திருக்கிறது
பாசிச ஜெயா அரசு பால், பேருந்து, மின்சாரம் ஆகியவிற்றின் மீது ஏற்றியுள்ள கடுமையான கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு.சார்பாக  22.11.2011 அன்று காலை 10 மணியளவில் ரயில்வே ஜங்சன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
முதலில் ஜெயலலிதாவின் பாசிச ஆட்சியை கண்டித்து விண்ணதிர முழக்கமிடப்பட்டது. அடுத்த நிகழ்வாக ஒரு சிறு நாடகம்.  ஜெயலலிதா வேடமணிந்து வந்த பெண் தோழர் ” நான் தான் ஜெயலலிதா,  தமிழகத்தின் முதல்வர்,  விலைவாசி ஏற்றம் கடுமையாகத்தான் இருக்கும், மருந்து கசப்பாகத்தான் இருக்கும், பழகிக்கொள்ளுங்கள்” என்று கூறியவுடன் பொதுமக்கள் அவரை நோக்கி வந்து  ”உனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சதுக்கு இதுவும் சொல்லுவ, இதுக்கு மேலயும் சொல்லுவ! உனக்கெல்லாம் நாலு சாத்து வச்சாதான் சரிபடும்” என்று கூறிக்கொண்டே தாக்க ஆரம்பித்தனர்.

Kerala Tamilnadu பீதி ஏற்படும் வகையில் பிரசாரம் செய்ய கூடாது

புதுடெல்லி : ‘‘தமிழக & கேரள மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் பிரசாரத்தில் ஈடுபட வேண்டாம்’’ என்று கேரள அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவிடம் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்தார். முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கூறிவரும் கேரள அரசு, அதற்கு பதிலாக புதிய அணை கட்ட தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக தமிழகம் & கேரள மாநிலங்களுக்கு இடையே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க் கள் குழு நேற்று டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தது.
பிரதமரிடம் அளித்த மனுவில், ‘முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் கேரளாவின் திட்டத்தை ஏற்கும்படி தமிழக அரசை பிரதமர் வலியுறுத்த வேண்டும். இந்த பிரச்னை தொடர்பாக பேசித் தீர்க்க இரு மாநில முதல்வர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கேரள மக்களை காப்பாற்றவே புதிய அணை கட்ட கேரளா முயற்சிக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

யார் இந்த அனிருத்? - பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும் கொலவெறி யின் சொந்தக்காரர்!


வொய் திஸ் கொலவெறி தான் இன்று மார்க்கெட்டின் மவுஸ் பீஸ். அட்றா அவள... ஒதறா அவள... என லோ கிளாஸ் ரசிகனின் மடியில் உட்கார்ந்து மனசை படிக்க ஆரம்பித்துவிட்டார் தனுஷ்.
இந்த வரிகள் தாறுமாறாக ஹிட் ஆகி, தனுஷை ஒரு மிகச்சிறந்த பாடலாசிரியராகவும் உருவாக்கிவிட்டது. திரைப்பட பாடல் எழுத ஒரு கவிஞன் அவசியமில்லை. அவன் கவிஞனாக இருந்தால் தப்பில்லை என்றார் வைரமுத்து. தப்பி தவறி கூட கவிஞனாக முடியாத தனுஷ், தரை டிக்கெட் பாடலாசிரியர் ஆனதுதான் ஊரே கொண்டாடும் உச்சாணி விஷயம்.

இது ஒருபுறம் இருக்கட்டும். இந்த வொய் திஸ் கொலவெறி பாடலின் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் செம அப்ளாஸ் கிடைத்து வருகிறது. இவரது புகைப்படத்தை மட்டுமே தனியாக பிரசுரித்து விளம்பரங்களில் தனி அட்ராக்ஷன் ஏற்படுத்தி வருகிறார் 3 படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா.
எவ்வளவுதான் ஹிட் பாடல்களை போட்டுக் கொடுத்தாலும், அவரை ஸோலோவாக விளம்பரங்களில் பயன்படுத்துகிற பெரிய மனசு யாருக்கும் வராது.அதுவும் முதல் படத்திலேயே இப்படி ஒரு அந்தஸ்து அவருக்கு கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு பின்னணி என்னவாக இருக்கும்?
மண்டையை குழப்பி மசாலா தடவியெல்லாம் யோசிக்க தேவையில்லை. இந்த அனிருத்,  லதா ரஜினிகாந்த்தின் சகோதரர் மகன்தானாம்.

புலிகளின் சித்திரவதை முகாம்கள் இருந்த இந்த வளவுகள் முறைப்படி அகழ்வாராய்ச்சி

deadbodyபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (24)
24. புலிகளின் முகாம்கள் இருந்த இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்வது அவசியம்!
வசீகரனிடமிருந்து மீண்டும் விபரீதம் எதுவும் எனக்கு ஏற்படவில்லை. “ஐயா தப்பீட்டியள்” எனச் சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து அகன்றுவிட்டான். தயாபரனின் விசாரணை தொடர்ந்தது.

ஆனாலும் உண்மையான விசாரணை இன்னமும் ஆரம்பமாகவில்லை. அங்கு சென்றபின்னர்தான் புலிகளின் விசாரணை முறைகளை அறிந்துகொள்ள முடிந்தது. முதலில் அவர்கள் ஒருவரின் குடும்பப் பின்னணியை முழுமையாக அறிந்துகொள்ள முயற்சிக்கின்றனர்.
அதாவது என்னுடைய பெயர், தாய் தந்தையரின் பெயர்கள், சகோதரர்களின் பெயர்கள், அவர்களின் துணைவர்கள் மற்றும் பிள்ளைகளின் பெயர்கள், பிள்ளைகள் திருமணம் செய்திருந்தால் அந்த விபரங்கள், தாய் தந்தையரின் சகோதரர்களின் பெயர்கள், அவர்களது துணைவர்கள் பிள்ளைகளின் பெயர்கள் என அது நீண்டுகொண்டே போகும்.
அதுமாத்திரமின்றி, நான் பிறந்ததிலிருந்து வாழ்ந்த இடங்கள், படித்த இடங்கள், செய்த வேலைகள், நெருங்கிய நண்பர்கள், திருமணம் செய்திருந்தால் மனைவியின் பிள்ளைகளின் பெயர் மற்றும் விபரங்கள், மனைவியின் குடும்ப அங்கத்தவர்களின் விபரங்கள் என்பனவும் விசாணையில் தெரிவிக்கப்பட வேண்டும்.
மேலும் ஏதாவது அரசியல் கட்சிகள் அல்லது இயக்கங்களில் அங்கம் வகித்திருந்தால் அந்த விபரங்கள், வேறு பொது விடயங்களிலான ஈடுபாடுகள் எனப் பல விடயங்களைப் புலிகளின் விசாரணையாளர்கள் ஒவ்வொரு கைதியிடமும் முழுமையாக விசாரித்துப் பதிவு செய்து கொள்வர். அதன்படி என்னிடமும் பூரண விபரங்கள் பெறப்பட்டன. இந்த விசாரணையே இரண்டு மூன்று தினங்கள் நீடித்தன.

வெள்ளி, 25 நவம்பர், 2011

ஜெயலலிதா ஆட்சியா, இல்லை ஹிட்லர் ஆட்சியா?: பிரேமலதா கேள்வி!

Premalatha Vijayakanth
சென்னை: அதிமுகவுடன் ஏன் கூட்டணி வைத்தோம் என்று ஒவ்வொரு நிமிடமும் வருத்தப்படுகிறோம். தமிழகத்தில், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சி நடக்கிறதா? அல்லது ஹிட்லர் ஆட்சி நடக்கிறதா என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா.

சென்னையில் நேற்று நடந்த தேமுதிக உண்ணாவிரதப் போராட்டத்தின்போது பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
அதிமுகவுடன் கூட்டணி வைப்பது என்பது மக்களுக்காக கட்சி எடுத்த முடிவு. ஆனால் இன்றைக்கு அந்த கட்சியுடன் ஏன் கூட்டணி வைத்தோம் என்று ஒவ்வொரு நிமிடமும் வருத்தப்பட வேண்டியிருக்கிறது. அதிமுக செயல்கள் அப்படி இருக்கிறது.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு- 'வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி'


Retail
சென்னை: வெளிநாடுகளில் அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை, வெள்ளைப் பணமாக மாற்றும் முயற்சி தான் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவாகும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூறியுள்ளது.
இந்த அமைப்பின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடந்தது. இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்ரளிடம் பேசிய அவர்,
பன்பொருள் சில்லறை வணிகத்தில் (multi brand retail) அன்னிய முதலீட்டை 51 சதவீதமும், ஒரு பொருளின் சில்லறை வணிகத்தில் (single brand retail) அன்னிய முதலீட்டை 100 சதவீதமும் அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது. இதனால் சில்லறை வணிகம் முற்றிலும் அழிந்துவிடும். சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பறிபோகும்.

Dam 999 படத்துக்கு கிடைத்ததில் 25% தியேட்டர்கள் கூட கிடைக்கலியே!' -பாலை படக் குழு

தமிழருக்கு எதிரான டேம்999 படத்துக்கு கிடைத்த தியேட்டர்களில் 25 சதவீதம் கூட தமிழகத்தில் எங்களின் பாலை படத்துக்குக் கிடைக்கவில்லையே என அந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் குழுவினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் செந்தமிழன் ஊடகங்களுக்கு எழுதியுள்ள கடிதம்:
முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்.
‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். ‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது.
‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே. ‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’.
சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் 'இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.
சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள்.

பவார் மீது தாக்குதல்: டெல்லியிலேயே சட்டம்- ஒழுங்கு குலைந்துள்ளது நல்லதல்ல- கருணாநிதி

மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் மீதான தாக்குதலுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கணடனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய அரசின் வேளாண்மைத் துறை அமைச்சருமான நண்பர் சரத்பவார் டெல்லியில் நேற்றைய தினம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, திரும்பும்போது செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மத்திய அமைச்சர் ஒருவரையே இவ்வாறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது தாக்குகின்ற அளவிற்கு சட்டம்-ஒழுங்கு தலைநகரிலேயே குலைந்திருப்பது நல்லதல்ல.

இலங்கையில் 2012 மும்மொழி .கலாம் கொழும்பு செல்கிறார்


Abdul Kalam
கொழும்பு: வரும் 2012ம் ஆண்டை மும்மொழிகள் ஆண்டாக கடைபிடிக்கப் போவதாக இலங்கை அறிவித்துள்ளது. இது தொடர்பான மாநாட்டில் பங்கேற்க வரும் ஜனவரி மாதம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை செல்கிறார்.
கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நினைவு மையத்தில் நடந்து வரும் நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் என்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் கூறுகையில்,
2012ம் ஆண்டை மும்மொழிகள் ஆண்டாக அதிபர் மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார்.
Breaking News : கனிமொழி ஜாமீன் மனு விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு

சுப்ரீம் கோர்ட் ஜாமீன் கொடுத்தால் நாங்களும் தர வேண்டுமா? கனிமொழி வக்கீலிடம் உயர்நீதிமன்றம் கேள்வி!

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேரின் ஜாமீன் மனுக்கள் இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது உச்சநீதிமன்றம் ஜாமீன் கொடுத்து விட்டது என்ற ஒரே காரணத்திற்காக நாங்களும் ஜாமீன் அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா என்று நீதிபதி ஷாலி கேள்வி எழுப்பினார்.

கனிமொழி கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் உள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் 4 முறை டெல்லி சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி நடக்கும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

நடிகர் மன்சூர் அலிகான் மீது கந்துவட்டி புகார்

சென்னை, நவ.25: நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கந்துவட்டி புகார் அளித்துள்ளார்.அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்த ஷேக்மாதர் என்பவர் துணி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.நடிகர் மன்சூர் அலிகான் தன்னிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டி வருவதாக இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் விவரம்: நான் தொழில் வளர்ச்சிக்காக இடைத்தரகர் மூலம், மன்சூர் அலிகானிடம் 2 தவணையாக ரூ.30 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். இந்த கடனுக்கான அசலையும், வட்டியையும் கட்டி வந்தேன்.ரூ.30 லட்சம் வாங்குபோதே வட்டியாக ரூ.6 லட்சத்து 37 ஆயிரத்தை பிடித்துக்கொண்டுதான்  கொடுத்தார். இதுவரை ரூ.26 லட்சத்து 37 ஆயிரம் திருப்பி கொடுத்துவிட்டேன். மேலும் ரூ.4 லட்சம் தருவதாக நான் மன்சூர் அலிகானிடம் கூறினேன். ஆனால் அவர் இன்னும் ரூ.25 லட்சம் தரவேண்டும் என்று என்னை மிரட்டி வருகிறார்.

Nano விற்பனை மந்தம்: உற்பத்தி பாதியாக குறைப்பு

விற்பனை மந்தமாக இருப்பதால் நானோ கார் உற்பத்தியை பாதியாக குறைத்துள்ளது டாடா மோட்டார்ஸ்.
பல்வேறு காரணங்களால் நானோ கார் விற்பனை எதிர்பார்த்தபடி அமையவில்லை. நானோ கார் விற்பனையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் தீவிர முயற்சிகள் மேற்கொண்டும் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை.
இந்த நிலையில், கூடுதல் வசதிகள் மற்றும் அம்சங்களுடன் புதிய நானோ கார் கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பழைய விலையிலேய புதிய நானோ மாடல் வந்துள்ளதால் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டும் என்று பரவலாக கருத்து எழுந்துள்ளது.
இந்த நிலையில், நானோ கார் உற்பத்தி செய்யப்படும் சனந்த் ஆலையில் உற்பத்தி 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.
ஆனால், தற்போது மாதத்திற்கு 10,000 நானோ கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதால், ஆண்டுக்கு 1.20 லட்சம் கார்கள் என்ற மட்டுமே உற்பத்தி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி கொல்லப்பட்டார்


Kishenji
கொல்கத்தா: மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி மேற்கு வங்கத்தில் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொல்கத்தாவிலிருந்து ஒளிபரப்பாகும் டிவி சேனல்கள் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளன. ஜார்கிராம் அருகே உள்ள குஷ்பானி வனப்பகுதியில் நடந்த சண்டையின்போது கிஷன்ஜி சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கூட்டுப் படையினர் இங்கு கிஷன்ஜி உள்ளிட்ட மாவோயிஸ்டுகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டையில் இறங்கியதாகவும், அதில் கிஷன்ஜி கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சண்டைக்குப் பின்னர் அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்தபோது கிஷன்ஜியின் உடலையும், அவருக்கு அருகே ஒரு ஏ.கே. 47 துப்பாக்கி இருந்ததையும் பாதுகாப்புப் படையினர் கண்டு மீட்டுள்ளனர். இந்த சண்டையில் கிஷன்ஜி தவிர மேலும் 3 மாவோயிஸ்ட்களும் கொல்லப்பட்டனர்.

5 ஆண்டுகளில் 10 அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும்: நாராயணசாமி

டெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 10 புதிய அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவி்த்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கூடங்குளம் விவகாரம் குறித்த பேச்சு எழுந்தது. அப்போது கூங்குளம் அணுமின் நிலையத்தி்ற்கு எதிராக நடந்து வரும் போராட்டம் குறித்து உறுப்பினர்கள் விளக்கம் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது,
தற்போது இந்தியாவில் 19 அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றின் மூலம் நாட்டிற்கு 4,650 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. கூடங்குளம் உள்பட 7 இடங்களில் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகள் நடந்து வருதிறது. அந்த பணிகள் முடிந்தவுடன் அந்த 7 அணுமின் நிலையங்களில் 5,300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ் ஆதரவின் 40.0%, அன்புமணி ஆதரவின் 66.6% காடுவெட்டி குருவுக்கு!

Less than 500 Pattali Makkal Katchi (PMK) activists and party founder Dr S Ramadoss performed a protest in Viluppuram on Wednesday. According to information gathered from other districts, 300 PMK activists in Thiruvallur led by Anbumani and, 200  activists in Perambalur led by Kadu-Vetti Guru demonstrated against milk and, bus fare price hike! பால் விலை, பஸ் டிக்கெட் கட்டண உயர்வைக் கண்டித்து பா.ம.க. நேற்று வரலாறு காணாத மாபெரும் ஆர்ப்பாட்ம் (அப்படித்தான் போஸ்டரில் உள்ளது) ஒன்றை நடாத்தி முடித்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான பா.ம.க. தொண்டர்கள், மற்றும் ஆதரவாளர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள நினைத்திருந்தும், அவர்களுக்கு வேறு சோலிகள் வந்துவிட்ட காரணத்தால், நூற்றுக் கணக்கில் ஆட்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தலைநகர் சென்னையில் பா.ம.க. நிறுவனரே ஆர்ப்பாட்டம் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று ஆரம்பத்தில் திட்டம் இருந்தாலும், சென்னை மக்களுக்கு பா.ம.க.-வின் கொள்கைகள் புரிவதில் ‘டியூப் லைட்டாக’ இருப்பார்கள் என்று டாக்டர் ஐயா கருதியதால், அவர் சென்னையில் கலந்து கொள்ளாமல் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

வியாழன், 24 நவம்பர், 2011

கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க இருந்ததை, நீங்கள்தான் கெடுத்தீர்கள்


“கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காததன் காரணம் நீங்கள்தான்” என்று பந்தை தி.மு.க. பக்கமாக காங்கிரஸ் தள்ளி விட்டிருப்பதாக தெரியவருகின்றது. “நாம் உங்களுக்காக பாதையை திறந்து விட்டிருக்கிறோம். ஆனால் உங்கள் வக்கீல்களால் அதில் சரியாக போக முடியவில்லை” என்று சமீபத்தில் டில்லியில் இருந்து சொல்லப்பட்டதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் சொல்லி மனம் வருந்தியதாக தி.மு.க. வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
இதில் ஓரளவுக்கு உண்மையும் உள்ளதாகவே கருணாநிதி நினைக்கிறாராம். அத்துடன் இதே மனநிலையில் ராசாத்தி அம்மாளும் உள்ளதாகவும், கனிமொழிக்காக ஆஜராகும் வக்கீல்களை ஒட்டு மொத்தமாக மாற்றி விடுமாறு அவர் கருணாநிதிக்கு பிரஷர் கொடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது.
கனிமொழி கைது செய்யப்பட்டவுடன் அவருக்கு வாதாட ஏராளமான பணச் செலவில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானியை தி.மு.க. தரப்பு அமர்த்தியிருந்தது. அவர் ஒரு கேஸை எடுத்துக் கொண்டால், ஜெயித்துக் காட்டாமல் விடமாட்டார் என்ற பொதுவான கருத்து ஒன்று உள்ளது.
ஆனால் கனிமொழி வழக்கில் அது பொய்த்துப் போனது. ராம் ஜேத்மலானி வாதாடியும் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் அவர் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக கேஸை ஆபத்தான திசையிலும் திருப்பிவிட்டு போனார். “கனிமொழிக்கு ஏதும் தெரியாது, எல்லாமே ஆ.ராசா செய்ததுதான்” என்று வாதாடி ஆ.ராசாவை மேலும் இறுக வைத்ததுதான் ராம் ஜேத்மலானி செய்த ஒரு கைங்கார்யம்.
இவர் போகும் போக்கு நல்லாயில்லை என்று, மூத்த வழக்கறிஞர் அல்டாப் அஹமதுவை வாதாட அழைத்து வந்தார்கள். இவரும் கை நிறைய பீஸ் வாங்கும் வெற்றிகரமான வக்கீல். அவர் வந்து வாதாடியும் ஜாமீன் கிடைக்கவில்லை.
“கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்” என்று சி.பி.ஐ. தெரிவித்த பின்னரும், ஜாமீன் பெற முடியவில்லை என்பது, உங்கள் வழக்கறிஞர்களில் குறைபாடுதான் என்று காங்கிரஸ் தரப்பு சொல்வதை தி.மு.க. தலைமை நம்பத் தொடங்குவதாக தெரிகின்றது.

ராணாவுக்கு முன் ரஜினி நடிக்கும் கோச்சடையான்... அவதார் ஸ்டைலில் 3 டி படம்!

ராணா படம் இப்போதைக்கு இல்லை என்பதை ஒருவழியா ரஜினி தரப்பில் அறிவிக்கப்பட்டுவிட்டது.
ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்துக்கு கோச்சடையான் என பெயரிடப்பட்டுள்ளது. அவதார் பாணியில் 3டி முறையில் உருவாகும் இந்தப் படத்துக்கு கே.எஸ்.ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார்.
சௌந்தர்யா ரஜினி இயக்குகிறார். கேஎஸ் ரவிக்குமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார்.
கோச்சடையான் படத்தை அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளனர். கோச்சடையான் படம் முடிந்தபின் ராணாவில் ரஜினி நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் புதிய படத்தையும் ராணா தயாரிப்பாளர் ஈராஸ் மற்றும் மீடியா குளோபல் ஒன் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

BJP பாஜக ஆட்சியில் தொலைத்தொடர்பு துறையில் ரூ.43,523 கோடி நஷ்டம்!

டெல்லி: உரிமக் கட்டண முறைக்கு பதிலாக வருவாய் பங்கீட்டு முறையை பாரதிய ஜனதா கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியதால் 1999-ல் தொலைத் தொடர்புத் துறையில் ரூ.43,523 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா தெரிவித்தார்.
மக்களவையில் புதன்கிழமை இந்த பதிலை எழுத்துப்பூர்வமாக அளித்த மிலிந்த் தியோரா மேலும் கூறுகையில், "நிர்ணயிக்கப்பட்ட உரிமக் கட்டண முறைக்கு பதிலாக வருவாய் பங்கீட்டு முறையை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 1999-ல் அறிமுகப்படுத்தியது.
நிர்ணயிக்கப்பட்ட உரிமக் கட்டண முறையையே கையாண்டிருந்தால் அரசுக்கு ரூ.58,354.62 கோடி வருவாய் கிடைத்திருக்கும். ஆனால், புதிய தொலைத்தொடர்புக் கொள்கையால் அரசுக்கு ரூ.14,830.70 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது.
இதன் மூலம் அரசுக்கு ரூ.43,523.92 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது," என்றார்.

இதுதொடர்பாக 2000-ம் ஆண்டில் வெளியான சிஏஜி அறிக்கையில், அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக் கட்டணத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முறையாகச் செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
உரிமம் தொடர்பான ஒப்பந்தங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து மீறிவந்தபோதும், அந்த நிறுவனங்களுக்கு சலுகை மேல் சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனிமொழி கோரிக்கை ஏற்பு-நாளையே ஜாமீன் மனுவை விசாரிக்கிறது டெல்லி ஹைகோர்ட்

2ஜி வழக்கில் கைது செய்யப்பட்ட 5 கார்பரேட் அதிகாரிகளுக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து தனது ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்குமாறு திமுக எம்.பி. கனிமொழி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு மீது நாளை காலை 10.30 மணிக்கே விசாரணை நடக்கவுள்ளது. முன்னதாக இந்த மனு வரும் டிசம்பர் 1ம் தேதி விசாரிக்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.
2ஜி வழக்கில் கைதான திமுக எம்.பி. கனிமொழி கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் உள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் 4 முறை டெல்லி பாட்டியாலா சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி நடக்கும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இரட்டை வேடம் போடுவது யார்? என்ன சாதீத்தீர்கள்? ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் கேள்வி


பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் காலை முதல் உண்ணாவிரதம் இருந்த விஜயகாந்த் மாலையில் பேசுகையில்,
பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வை கண்டித்தால், கூட்டணிக் கட்சிகள் இரட்டை வேடம் போடுகிறது என்கிறார்கள். இரட்டை வேடம் போடுவது யார்? 100 நாள் ஆகிவிட்டது விஜயகாந்த் பாராட்டவில்லை. 100 நாள் ஆட்சியில் என்ன சாதீத்தீர்கள் பாராட்டுவதற்கு. அதற்குத்தான் அன்றைக்கே சொன்னேன் 6 மாதம் ஆகட்டும் ஆட்சியைப் பற்றி சொல்கிறேன் என்று.
சமச்சீர் கல்வி கொண்டுவரக் கூடாது என்பதற்காக எவ்வளவு செலவு செய்தீர்கள். புதிய சட்டமன்றத்தை பூட்டி வைத்திருக்கிறீர்கள். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றப்போகிறோம் என்கிறீர்கள். அதை ஏன் மாற்றுகிறீர்கள் என்றால் மருத்துவமனை வரும் என்கிறார்கள். மருத்துவமனை அமைக்க இடம் இல்லையா.
இதற்கெல்லாம் செலவழிக்கும் பணத்தை மாற்றி பால் விலை உயர்வை தடுக்கலாம் இல்லையா. பஸ் கட்டணத்தை ஏன் உயர்த்துகிறீர்கள். அதிகாரிகள் தவறு செய்கிறார்கள். அதை கண்டுபிடியுங்கள் என்றார்.

கமலா செல்வராஜ் மருத்துவமனை உள்பட பிரபல மகப்பேறு மருத்துவமனைகளில் ஐடி ரெய்டு


Kamala Selvaraj
சென்னை: நடிகர் ஜெமினிகணேசனின் மகளும் பிரபல மகப்பேறு மருத்துவருமான கமலா செல்வராஜ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதேபோல சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள பிரபல மகப்பேறு மருத்துவர்களின் வீடுகள், மருத்துவமனைகளிலும் ரெய்டு நடந்துள்ளது.
இந்த சோதனையில், ஏராளமான ஆவணங்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நடிகர் ஜெமினிகணேசனின் மகளும் பிரபல மகப்பேறு மருத்துவருமான கமலா செல்வராஜ் சோதனைக்குழாய் குழந்தை பிறப்பிற்கு பிரசித்தி பெற்ற மருத்துவராவார். இன்று காலையில் சென்னை நுங்கம்பாக்கம் திருமூர்த்தி சாலையில் உள்ள கமலா செல்வராஜின் வீட்டில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 5 மணி சோதனை மேற்கொண்டனர். மேலும், கமலா செல்வராஜுக்கு சொந்தமான ஜி.ஜி மருத்துவமனையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கனிமொழி ஜாமீனுக்குப் பின் மத்திய அமைச்சரவையில் மாற்றம்?

Kanimozhi
டெல்லி: 2ஜி வழக்கில் திமுக எம்பி கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்த பின்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்த விவகாரத்தில் பதவி விலகிய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரின் இடங்கள் இன்னும் காலியாகே உள்ளன. கனிமொழி கைது நடவடிக்கையால் மத்திய அரசு மீது கடும் கோபத்தில் இருந்த திமுக, அந்த இடங்களை நிரப்ப மறுத்துவிட்டது.
இதையடுத்து இந்த இடங்கள் திமுகவுக்காக எப்போதுமே காத்திருக்கும் என்று பிரதமர் அறிவித்தார்.
இந் நிலையில் கனிமொழிக்கு ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கனிந்திருப்பதால், திமுக தனது நிலையை மாற்றிக் கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தள் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவுள்ளது. மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பலம் மிகுந்த இந்தக் கட்சிக்கு மொத்தம் 60 இடங்களை விட்டுத் தர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது

இந்தக் கூட்டணியை அமைப்பதற்கு பிரதிபலனாக, மத்திய அமைச்சரவையில் இடம் கேட்கிறார் அஜீத் சிங். இதனால் அவர் விரைவிலேயே மத்திய அமைச்சராக்கப்பட உள்ளார்.

BJP Ex மத்திய அமைச்சர் அருண்ஷோரி கைது ஆகிறார்

2ஜி ஒதுக்கீட்டில் ரூ.508 கோடி இழப்பு:
பா.ஜ.க. முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஷோரி கைது ஆகிறார்
ஊழல் ஒழிப்பு வேடதாரிகளின் இலட்சணம்!
 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைதாகி உள்ள னர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை சி.பி.அய். நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அதிக  இழப்பீடு ஏற் படுத்தியவர்கள் மீது இன்னும் சி.பி.அய். நடவடிக்கை எடுக்க வில்லை. விரைவில் அதற்கான  விசா ரணை தொடங்க உள்ளது.
இந்த நிலையில் பா.ஜ.க. ஆட்சி யின்போது நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிலும் இழப்பு ஏற்பட்டுள் ளதை சி.பி.அய். கண்டுபிடித்துள் ளது. 2001 முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த விதிமீறல்கள் காரணமாக ரூ.508 கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. 

கம்போடியா படுகொலை விசாரணை ஆரம்பம்

நாம்பென்: கம்போடியா நாட்டின் கெமர் ரூச் ஆட்சியில் நடந்த படுகொலைகள் குறித்த விசாரணை ஆரம்பமானது. கம்போடியாவை ஆண்ட போல் பாட், கடந்த 75ம் ஆண்டு முதல் 79ம் ஆண்டு வரை வியட்நாம் வம்சாவளி மக்கள் பலரை கொன்று குவித்தார். இவரது ஆட்சியில் 17 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஐ.நா.,வின் தலையீட்டின் பேரில் இந்த படுகொலை குறித்த விசாரணை ஆரம்பமானது. இந்த படுகொலையை நடத்திய போல் பாட், கடந்த 98ல் காலமானார்.இவருக்கு உடந்தையாக இருந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் நுவான்சியா, சமூக விவகாரத்துறை முன்னாள் அமைச்சர் லெங் திரித் உள்ளிட்ட மூன்று பேர் மீது தற்போது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. இவர்கள் மூன்று பேரும் 80 வயதை தாண்டியவர்கள், என்பது குறிப்பிடத்தக்கது.

நீரா ராடியாவுக்கு எதிரான மனு தள்ளுபடி

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஊழல் பற்றி ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி, டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா,
பிரபல அரசியல் தரகர் நீரா ராடியா ஆகியோரிடம் விசாரிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி எம்.பர்ஹான் என்ற பத்திரிகையாளர் டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான பெஞ்சு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பில் நடைபெற்று வருவதால், அதன் தன்மை பற்றி தெரியாமல் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்

7 மணி நேர மின்வெட்டு.. இருளில் தவிக்கும் மக்கள்- தொழில்கள் பாதிப்பு

தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி குறைந்துள்ளதால் ஏழு மணி நேரம் மின் வெட்டு அமலாக்கப்படுகிறது. இந்த மின் வெட்டினால் மாநிலம் முழுவதும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மூன்று முதல் நான்கு மணிநேரமாக இருந்த மின்வெட்டு தற்போது 7 மணி நேரமாக அதிகரித்துள்ளது.
தமிழக மின் நிலையங்களின் மூலம் 3,560 மெகாவாட், தனியார் மின் நிலையங்களால் 940 மெகாவாட், மரபுசாரா எரிசக்தி மூலம் 100, காற்றாலைகளால் 1,150, மத்திய தொகுப்பால் 2,060 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது. 800 மெகாவாட் மின்சாரம், தனியாரிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது.
இதுபோக 3,700 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் கடும் மின்வெட்டு அமலாக்கப்பட்டு வருகிறது.

புதன், 23 நவம்பர், 2011

அன்னா ஒரு தீவிரவாதியா?காந்தியவாதியா ?

மது அருந்துவது நல்ல பழக்கம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அதற்காக, குடிப்பவர்கள் எல்லாரையும் தெருவிளக்கு கம்பத்தில் கட்டி வைத்து சாட்டையால் அடிக்க வேண்டும் என்று சொல்வது சரியாகுமா? அதுவும், அகிம்சை வழி நிற்கும் இரண்டாவது மகாத்மா என்று போற்றப்படும் அன்னா ஹசாரே சொல்லலாமா? சொன்னாலும் தவறில்லை,  அடித்தாலும் தவறில்லை என்கிறார் பெரியவர்.

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை தூக்கில் போடவேண்டும் என்று சொன்னபோது அன்னா ஒரு காந்தியவாதியா அல்லது தீவிரவாதியா என்ற கேள்வி எழுந்தது. இப்போது குடிப்பவர்களுக்கு அரபுநாடுகளிலும் தலிபான் பிடியில் உள்ள ஆப்கானிஸ்தானிலும் அமலில் இருப்பதை போன்ற தடாலடி தண்டனை வழங்க சிபாரிசு செய்கிறார்.
அவரது கிராமத்தில் குடிகாரர்களை இப்படி தண்டித்து திருத்தியதாக அவர் விவரித்துள்ளார்.

Puttaparthi loses grandeur?Satya Sai's birth anniversary

PUTTAPARTHI: There were times when Puttaparthi teemed with devotees from various parts of the country and across the globe in the month of November, eager to participate in the grand celebrations of the birthday of Sri Satya Sai Baba.
But today, not even a year after his demise, the picture is vastly different. The streets are no longer filled with visitors and the railway station and the bus station can hardly be described as busy as they had been all these decades. Traders and other businessmen, who did a roaring business, are sitting idle wearing a disappointed and dejected look on their faces.
One wonders what a change the absence of just one person has brought to the town.
In Puttaparthi, there are about 400 small and big lodges, apart from the hundreds of rooms at Prashanti Nilayam. They were always full with devotees during Baba's birthday celebrations, but today most of them are vacant.

புட்டபர்த்தியில் சாய்பாபா பிறந்த நாள் விழா ; விமரிசையாக நடந்தது

புட்டபர்த்தி: சத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் ( 23 ம் தேதி) புட்டபர்த்தியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.விழாவில் தமிழக கவர்னர் ரோசய்யா கலந்துகொண்டு சாய்பஜன் பாடல்கள் அடங்கிய குறுந்தட்டு மற்றும் ஆண்டறிக்கையை வெளியிட்டார். பிறந்த நாளை முன்னிட்டு வழக்கம் போல பக்தர்கள் திரளாக அதிகாலை முதலே புட்டபர்த்தியில் உள்ள குல்வந்த் ஹாலில் குழுமியிருந்தனர்.

டாப்' கதாநாயகிகளுடன் 'ஹாட் ட்ரிங்க்ஸ்' சாப்பிட்டவன் நான் - கவிஞர் வாலி கலகல பேட்டி

வசந்த் தொலைக்காட்சியின் ‘வாலி 1000′ என்ற சிறப்பு நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. 60 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் பல தலைமுறைகளைக் கடந்து சாதனை புரிந்து வரும் கவிஞர் வாலியை, அவருடன் பழகியவர்கள், பணியாற்றுபவர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், நடிகைகள், பத்திரிகையாளர்கள் என பலரும் பேட்டி காண்கிறார்கள்.
கூடவே வாலியின் தேர்ந்தெடுத்த 1000 பாடல்களை சாதகப்பறவைகள் சங்கர் குழுவினர் பாடுகிறார்கள்.
மருதுசங்கர் இயக்கும் இந்நிகழ்ச்சியின் நிர்வாகத் தயாரிப்பாளர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி. ஜனவரி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, பாடலை பெற்ற ஸ்தலம், கோலிவுட் vs வாலிவுட், நினைவோ ஒரு பறவை, உன்னால் முடியும் தோழா, காஃபி வித் கவிஞர் என்ற ஐந்து பிரிவாக ஒளிபரப்பாகவிருக்கிறது.

8 ஆதரவற்ற இந்திய குழந்தைகளுக்கு யு.எஸ். விசா மறுப்பு

டெல்லி: 8 ஆதரவற்ற இந்திய குழந்தைகளுக்கு அமெரிக்கா விசா கொடுக்க மறுத்துள்ளது.
8 முதல் 10 வயதுள்ள 8 ஆதரவற்ற குழந்தைகள் அமெரிக்காவில் நடக்கும் வேர்ல்டு கொயர் நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பாடவிருந்தனர். இதற்காக அவர்கள் கடந்த 8 மாதங்களாக கடும் பயிற்சி மேற்கொண்டனர். அமெரிக்காவுக்கு புறப்பட இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அவர்களுக்கு விசா கொடுக்க அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளது.
இதனால் அந்தக் குழந்தைகள் பெரும் ஏமாற்றமும், வருத்தமும் அடைந்துள்ளனர்.
நாங்கள் ஆதரவற்றவர்கள். அதனால் நாங்கள் எல்லாம் கனவு காணவே கூடாது என்று ஒரு குழந்தையும், நாங்கள் கடந்த 8 மாதங்களாக மேற்கொண்ட பயிற்சி எல்லாம் வீணாகப்போகப் போகிறது என்று இன்னொரு குழந்தையும் வருத்தம் தெரிவித்தார்கள்.

என் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்


Jayalalitha
பெங்களூர்: என் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவிப்பாக சேர்த்துள்ளது தவறு என்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் கட்சி நிர்வாகிகள் ‘1 நாள் முதுகு இன்ஷூரன்ஸ்’ செய்ய ஆர்வம்!

Viruvirupu; Chennai, India: Actor-politician and DMDK Founder Vijayakanth will lead one day token fast tomorrow (Thursday) in front of party headquarters at Koyambedu. His party is demanding roll back of the hike in bus fares and milk prices. As per a statement from DMDK,  party regional leaders and MLAs would observe the fast in their respective districts.
சுவத்தில் கால்வைத்து ஜம்ப் பண்ணி அடித்து (சினிமா) பழக்கப்பட்ட விஜயகாந்த் அகிம்சாவாதியாக உண்ணாவிரதம் இருக்கும் காட்சியை நீங்கள் நாளை பார்க்க முடியும். பால் விலை, பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து அவரது கட்சியான தே.மு.தி.க. சார்பில், உண்ணாவிரதப் போராட்டம் நாளை நடைபெறவுள்ளது.
கட்சி நிர்வாகிகளுக்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளதாக தெரிகின்றது. இவர்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பந்தலை விட்டு வெளியேறக் கூடாது என்பது முக்கிய கண்டிஷன். பந்தலுக்கு உள்ளே இருக்கும்வரை சோமபான தாகசாந்தி செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (தலைவருக்கும் அதே கண்டிஷனா?)

கன்னியாகுமரி மீனவர்களுடன் ஒரு உரையாடல்!


‘இராமேஸ்வரம் என்றால் ராமர் பூசை செய்த இடம்-கோவில்-பாம்பன் பாலம், மெரீனா கடற்கரை என்றால் உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரை, அதை அழகுபடுத்தினால் நன்றாக இருக்கும்’ என்ற பிம்பங்கள்தான் நமக்கு இருக்கின்றன. ‘கடற்கரைக்குப் போனால் மணலில் விளையாட, கடலில் கால் நனைக்க வசதிகள்  இருக்க வேண்டும், படகில் உல்லாச பயணம் போய் வர ஏற்பாடுகள் இருக்க வேண்டும். ஆண்டுக்கு ஓரிரு முறை சுற்றுலா போய் வருவதற்கு தயாராக கடற்கரை இருக்க வேண்டும்’ என்பதுதான் நமது எதிர்பார்ப்பாக இருக்கின்றன.

மும்பை 'தலால் ஸ்ட்ரீடை' கைப்பற்றும் போராட்டம் வரும்-ராமதாஸ் எச்சரிக்கை


Ramadossதிண்டிவனம்: அமெரிக்காவில் நடக்கும் வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் போராட்டம் போல இந்தியாவில் மும்பை 'தலால் ஸ்ட்ரீடை' கைப்பற்றும் போராட்டமும் வரலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், அமெரிக்காவில் நியூயார்க் நகர 'வால் ஸ்டீரிட்டை' கைப்பற்றுவோம் என்ற போராட்டம் செப்டம்பர் மாதம் 17ம் தேதி தொடங்கி, தொடர்ந்து உலகமெங்கிலும் 82 நாடுகளில் நடந்து வருகிறது.
'வால் ஸ்டீரிட்' ஆக்கிரமிப்பு என்பதன் கருப்பொருள் பேராசைக்கு எதிரான போராட்டம். உலகின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான உலக வங்கிகள், பெரும் முதலாளித்துவ அரசாங்கங்கள் என இவர்கள் எல்லோரையும் எங்கே அடித்தால் வலிக்குமோ, அங்கே அடிப்பதாக இந்த போராட்டம் உருவெடுத்துள்ளது.
சர்வதேச அளவில் பார்க்கும்போது உலகின் 42 சதவீத வருமானம் மேல்தட்டைச் சேர்ந்த 10 சதவீத மக்களுக்குத் தான் செல்கிறது. கீழ்தட்டு மக்களுக்கு ஒரு சதவீதம் தான் செல்கிறது. இதனால் நாளுக்கு நாள் ஏழை, பணக்காரர்கள் வேறுபாடு அதிகரித்து கொண்டே செல்கிறது.

5 நிறுவன அதிகாரிகளைப் போல எல்லோருக்கும் ஜாமீன் தர வேண்டும்- ராசா வக்கீல்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 5 நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதை முன்னாள் அமைச்சர் ராசாவின் வக்கீல் வரவேற்றுள்ளார். இதேபோல இந்த வழக்கில் கைதாகியுள்ள மற்றவர்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான அனைவரும் கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைபட்டுள்ளனர். அவர்கள் யாருக்குமே ஜாமீன் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் முதல் முறையாக இந்த வழக்கில், ஐந்து நிறுவன அதிகாரிகளுக்கு இன்று ஜாமீன் கிடைத்தது. இது கைதாகி சிறையில் அடைபட்டுள்ள கனிமொழி உள்ளிட்ட மற்ற அனைவருக்கும் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ராசாவின் வக்கீல் சுஷில் குமார் கூறுகையில், இது வரவேற்கத்தக்க உத்தரவு. கைதான மற்ற அனைவருக்கும் புதிய கதவை இது திறந்து விட்டுள்ளது.

விசாரணையை திஹார் சிறை கோர்ட்டுக்கு மாற்றும் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை

டெல்லி: 2ஜி வழக்கு விசாரணையை டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டிலிருந்து திஹார் சிறை வளாகத்திற்கு மாற்றும் தனது உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றமே இன்று இடைக்காலத் தடை விதித்தது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சிறப்பு சிபிஐ கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இதன் விசாரணையை நளை முதல் திஹார் சிறை வளாகத்திற்கு மாற்ற டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை நேற்று தெரிவித்த சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.ஷைனி வியாழக்கிழமை முதல் விசாரணை திஹார் சிறை வளாக கோர்ட்டில் நடைபெறும் என்று அறிவித்தார்.
இதற்கு ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோர் அனைவரும் ஏமாற்றம் தெரிவித்தனர். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகப் போவதாக அவர்கள் கூறியிருந்தனர்.

சசி, இளவரசி, சுதாகரனிடம் 142 கேள்விகள் கேட்கிறது பெங்களூர் கோர்ட்-நவ. 29ல் விசாரணை

பெங்களூர் முதல்வர் ஜெயலலிதாவிடம் நடந்து வந்த விசாரணை முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து அடுத்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனிடம் விசாரணை நடைபெறவுள்ளது. இதற்காக இந்த மூவரும் நவம்பர் 29ம் தேதி ஆஜராக பெங்களூர் தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தவிர அவரது தோழி சசிகலா, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஜெயலலிதாவிடம் மட்டுமே விசாரணை முடிவடைந்துள்ளது. முக்கியக் குற்றவாளியாக ஜெயலலிதா சேர்க்கப்பட்டுள்ளதால் அவரிடம் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
நான்கு நாள் அவர் விசாரிக்கப்பட்டுள்ளார். அடுத்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. இதற்காக மூவரும் வருகிற 29ம் தேதி ஆஜராக நீதிபதி மல்லிகார்ஜூனய்யா உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதாவிடம் விசாரணை முடிவடைந்து விட்டதால் பரப்பனஅக்ரஹாராவில் அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டும், தற்போது வழக்கமான பெங்களூர் சிவில் கோர்ட் வளாகத்திற்கே மாற்றப்பட்டுள்ளது.
நவம்பர் 29ம் தேதி மூவரும் அங்கு ஆஜராக வேண்டும். அவர்களிடம் கேட்பதற்கு 142 கேள்விகளை தனி நீதிமன்றம் தயாரித்துள்ளது.

ஜெ.விடம் விசாரணை முடிந்தது- 192 கேள்விகளுக்கு பதிலளித்தார்

பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று 4வது முறையாக ஆஜராகி மீதமுள்ள 192 கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக 1,339 கேள்விகள் தயார் செய்யப்பட்டன. அதில் ஜெயலலிதா இதுவரை 1,147 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். மீதமுள்ள 192 கேள்விகள் இருந்தன.
நேற்றைய விசாரணை முடிந்தவுடன் சென்னை திரும்பிய ஜெயலலிதா இன்று காலை தனி விமானம் மூலம் பெங்களூர் வந்தார். நேற்றைய விசாரணையின்போது தனது வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பரமான திருமணம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். நேற்று மட்டும் அவர் 580 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இன்று காலை 11 மணிக்கு விசாரணை துவங்கியது. ஜெயலலிதா மீதமுள்ள 192 கேள்விகளுக்கு பதில் அளித்ததுடன் எழுத்துப் பூர்வமான விளக்கமும் அளித்தார். பிற்பகல் 2.30 மணிக்கு இந்த விசாரணை முடிந்தது.
கடந்த அக்டோபர் மாதம் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி 571 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இநத் வழக்கில் ஜெயலலிதாவிடம் நடத்தப்பட வேண்டிய விசாரணை இன்றுடன் முடிவடைந்துள்ளது. வரும் 29ம் தேதி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசியிடம் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்தார்.

டெலிகாம் அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்- கனிமொழிக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு!

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 5 தொலைத் தொடர்புத்துறை நிறுவன அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோருக்கு இன்று ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

5 அதிகாரிகளுக்கு ஜாமீன்- டிபி ரியால்டி, யுனிடெக், ஆர் காம் பங்குகள் கிடுகிடு உயர்வு

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ஐந்து நிறுவன அதிகாரிகளுக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து இவர்கள் சார்ந்த டிபி ரியால்டி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், யுனிடெக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலையில் இன்று கிடுகிடு உயர்வு காணப்பட்டது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்வழக்கில், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக இந்த ஐந்து பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்த ஐந்து பேருக்கும் இன்று ஜாமீன் கிடைத்து விட்டது.
இதையடுத்து இவர்கள் சார்ந்த நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு இன்று கிடுகிடுவென உயர்ந்தது.

Broker Su.Swamy:2ஜி ஊழல்: ராசா, சிதம்பரம் கூட்டாக செயல்பட்டனர்- சு.சாமி

சென்னை: முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவும், அப்போதைய நிதியமைச்சரான ப.சிதம்பரமும் சேர்ந்து தான் 2ஜி அலைக்கற்றை விலையை நிர்ணயித்தார்கள் என்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. துவங்கிய முதல் நாளே உபி விவகாரத்தை எழுப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
மேலும் லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் ப.சிதம்பரத்தை பேச விடுவதில்லை என்றும், 2ஜி விவகாரத்திற்குப் பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்யும் வரையிலும் அவரைப் புறக்கணிப்பது என்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவும், அப்போதைய நிதியமைச்சரான ப.சிதம்பரமும் சேர்ந்து தான் 2ஜி அலைக்கற்றை விலையை நிர்ணயித்தார்கள் என்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணிய சாமி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
2ஜி அலைக்கற்றை விலை நிர்ணயத்தில் ப. சிதம்பரத்திற்கு பங்கு இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம்-அரசின் அப்பீல் மனு தள்ளுபடி

சென்னை: மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியமர்த்துவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில் பணியில் அமர்த்தப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை 13 ஆயிரம் பேரை கடந்த வாரம் பணி நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த தனிநீதிபதி சுகுணா, பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்ததுடன், அனைவரையும் உடனடியாக பணியில் சேர்க்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்தநிலையில், இடைக்கால தடையை நீக்கக்கோரி, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஓய். இக்பால், டி.எஸ். சிவஞானம் அடங்கிய பெஞ்ச் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
மக்கள் நலப்பணியாளர்களை பணியில் மீண்டும் அமர்த்துவது தொடர்பான வழக்கு தனி நீதிபதி சுகுணா முன்பு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதன்பின்னர் அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விஜய் அடுத்து நடிக்கும் துப்பாக்கி!

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ’நண்பன்’ படத்தில்  நடித்துக்கொண்டிருக்கிறார்.  படம் பாதி முடிவடைந்துவிட்ட நிலையில்  தனது அடுத்த படத்தை பற்றி திட்டம் போட்ட விஜய்க்கு நல்ல வாய்ப்பு கிட்டியது. இப்பொது அவர் தனது அடுத்த படத்திற்காக ஏ.ஆர்.முருகதாஸுடன் கைகோர்த்திருக்கிறார்.
இதில் விஜய்க்கு ஜோடியாக சூர்யாவுடன் ’மாற்றான்’ படத்தில் பிஸியாக இருக்கும் காஜல் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுவிட்டார். படப்பிடிப்பு 
வருகிற நவம்பர் 23-ம் தேதி முதல் ஆரம்பிக்கவிருக்கிறது. ஆனால் படத்தின் பெயர் கேள்விக்குறியாகவே இருந்த நிலையில்,  இயக்குனர் படத்தின் பெயரை ”துப்பாக்கி” என்று வைத்துள்ளார்.
இயக்குனர் படத்தின் கதாநாயகனை அஜித்தின் பில்லா படத்தைப் போல, கையில் துப்பாக்கியை கொடுத்து மும்பையின் ’தாதா’வாக வலம்வர வைக்கப் போகிறார் என சினிமா வட்டாரம் கூறுகிறது.
படத்தின் கேமராமேன் சந்தோஷ் சிவன். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்கிறார். படத்தின் பட்ஜட் 65கோடி.
நண்பன் படத்தை தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் விஜய் நடிக்கும் இந்த படத்திற்க்கும் இசையமைக்கிறார்.

பஸ் கட்டணம் 80 சதவீதம் உயர்த்தியது ஏன்? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை : பஸ் கட்டணம் 80 சதவீதம் உயர்த்தப்பட்டது ஏன் என்பது குறித்து 3 வாரத்துக்குள் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் புகழேந்தி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்  தனித்தனியே  மனு தாக்கல் செய்தனர். அதில்  கூறியிருப்பதாவது:
சென்னையில் மட்டும் 55 லட்சம் பேர் அரசு பஸ்சில் பயணம் செய்கிறார்கள்.  திடீரென்று முன் அறிவிப்பு இல்லாமல் கட்டணம் உயர்த்தியது சட்டவிரோதமானது.  பொதுமக்களிடம் கருத்து கேட்டு அதன்பிறகு தான் கட்டணத்தை உயர்த்த வேண்டும். அந்த நடைமுயையை அரசு பின்பற்றவில்லை. கட்டண உயர்வினால் தமிழகம் முழுவதும் தினமும் பயணம் செய்யும் 2.5 கோடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மாதாந்திர சீசன் டிக்கெட் பெற்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தால் அணுமின் கழகத்திற்கு ரூ.1,500 கோடி நஷ்டம்: லாபம் அடைந்தது யார்?

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தால், தற்போதைய சூழலில் அணுமின் சக்தி கழகத்திற்கு, 1,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பணி முடக்கம்:"மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை, அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்' என, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அணு உலைக்குள் வெறும், 40 பேர் மட்டுமே சென்று, அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்."ரஷ்ய விஞ்ஞானிகளை உள்ளே அனுமதிக்கக் கூடாது' என்பதில், போராட்டக் குழுவினர் தீவிரமாக உள்ளதால், அணுமின் நிலைய பணியில் ஈடுபட்ட 150 பேர் உட்பட, 960 பேர், பணிக்குச் செல்லாமல், ஒரு மாதமாக ஓய்வில் உள்ளனர்.வரும் டிசம்பர் மாதம், உற்பத்திப் பணி துவங்க இருந்த நிலையில், மார்ச் மாதத்திற்கு மின் உற்பத்தி தள்ளிப்போடப்பட்டதால், மின் நிலையத்தில் இருந்து வினியோகிக்கப்பட வேண்டிய, 2,000 மெகாவாட் மின்சாரத்திற்கான மூன்று மாத விற்பனைத் தொகை, அணுமின் கழகத்திற்கு நஷ்டமாகி உள்ளது.

நஷ்டம்:கூடங்குளத்திலிருந்து, யூனிட் 2.51 ரூபாய் விலைக்கு, ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் தலா, ஆறு கோடி ரூபாய்க்கு மின்சாரம், தினமும் வினியோகம் செய்யப்படும்.

வளர்ப்பு மகன் திருமண செலவு ரூ.6 கோடி நான் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை

பெங்களூர் : சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆஜரானார். வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண செலவு ரூ.6 கோடி பற்றி அவரிடம் சரமாரி கேள்விகள் கேட்கப்பட்டன. ‘நான் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை’ என்று அவர் பதில் அளித்தார். ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. 14 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு 6 ஆண்டுகளாக பெங்களுர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.  முக்கிய கட்டமாக குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 313ன் கீழ் கேள்வி பதில் விசாரணை இப்போது நடக்கிறது.

டாஸ்மாக் பார் விண்ணப்பம் மாசெக்களிடம்

சென்னையில் தற்போதுள்ள, டாஸ்மாக் மதுபான பார்களின் உரிமக் காலம் முடிவதால், புதிய உரிமம் வழங்குவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த உரிமங்களை, போட்டியின்றி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையிலுள்ள டாஸ்மாக் கடைகளின், "பார்'களுக்கான உரிமம், அடுத்த மாதத்துடன் முடிகிறது. பார்களை நடத்துவதற்கான புதிய உரிமம் வழங்குவதற்கு, டெண்டர் விடப்பட்டுள்ளது. இதேபோல, விழுப்புரம், திருச்சி மாவட்டங்களிலுள்ள பார்களுக்கும், டெண்டர் விடப்பட்டுள்ளது.ஒரு கடையின் மதுபான விற்பனை அடிப்படையில், குறைந்தபட்ச டெண்டர் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. உரிமம் பெறுபவர்கள், "பார்' வைத்து தின்பண்டங்கள் விற்பது, குளிர்பானம், தண்ணீர் விற்பது மற்றும் காலி பாட்டில்களை எடுத்துக் கொள்வது போன்றவற்றை செய்யலாம்.ஒரு கடையின் ஆண்டு விற்பனை, 2 கோடியே, 40 லட்சம் ரூபாய் என வைத்துக் கொண்டால், மாதம் 20 லட்சம் ரூபாய் என்று கணக்கிடப்படுகிறது. அக்கடையில் சராசரி விற்பனை அதிகரிப்பு, பத்து சதவீதம் என்று வைத்துக் கொண்டால், அந்த தொகையான இரண்டு லட்சம் ரூபாய் இத்துடன் சேர்க்கப்படுகிறது.

2G Case: இன்று ராஜா-கனிமொழிக்கு நீதிபதி கொடுத்த இரட்டை அதிர்ச்சி!

Viruvirupu
New Delhi, India: The 2G-Spectrum case trial has been shifted from Patiala House courts complex to high-security Tihar Jail effective next Thursday, November 24th. This announcement was made at 3.30 PM today (Tuesday) by Special CBI Judge O.P. Saini, and in conjunction with an order by the Delhi High Court. This decision was opposed by former Telecom Minister A Raja, DMK MP Kanimozhi and others accused.2ஜி-ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு விசாரணையை பட்டியாலா ஹவுஸ் கோர்ட் காம்பிளெக்ஸில் மாற்றுவதாக அறிவித்து, தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உட்பட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி. டில்லி ஹைகோர்ட்டின் உத்தரவுப்படி இந்த அறிவிப்பு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு, மிகவும் நெரிசலாக இருந்த கோர்ட்ருமில் வைத்து இந்த இடமாற்ற அறிவிப்பை மிகச் சுருக்கமாக வாசித்தார் நீதிபதி ஓ.பி.சைனி. அவரது அறிவிப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் வக்கீல்கள் உட்பட அங்கிருந்த பலருக்கும் அதிர்ச்சி அளித்ததை காணக்கூடியதாக இருந்தது.

எம்.ஜி.ஆர் எழுந்து இன்னொரு பிரச்னையைக் கிளப்பினார்


க – 28
தனிக்கட்சி தொடங்கிவிட்டார் எம்.ஜி.ஆர். இனி பிரச்னை இல்லை என்றுதான் எல்லோருமே நினைத்தனர். ஆனால் கருணாநிதியால் அப்படி நினைக்கமுடியவில்லை. காரணம், எம்.ஜி.ஆரைப் பற்றி முழுமையாகப் புரிந்தவர். ஒருவேளை அவர் அமைதியாக இருந்தாலும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் அமைதியாக இருக்கவிட மாட்டார்கள். குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சியின் கல்யாணசுந்தரம் இருக்கிறார். மோகன் குமாரமங்கலம் இருக்கிறார். ஈ.வெ.கி. சம்பத் வேறு அவ்வப்போது பேசிக்கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆரை அமைதியாக இருக்கவிடமாட்டார்கள். இதுதான் கருணாநிதியின் கணிப்பு.
அடுத்தது என்ன செய்யப்போகிறார் எம்.ஜி.ஆர் என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது.

செவ்வாய், 22 நவம்பர், 2011

இஷ்ரத் ஜஹன்என்கவுன்ட்டர் போலியானது: சிறப்புப் புலனாய்வுக் குழு

ஆமதாபாத், நவ.21: குஜராததில் இஷ்ரத் ஜஹன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட என்கவுன்ட்டர் சம்பவம் போலியானது என உயர்நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை அளித்துள்ளது. இதையடுத்து இந்த போலி என்கவுன்ட்டர்  சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் 302-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது நரேந்திர மோடி அரசுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.இஷ்ரத் ஜஹன், ஜாவீத் ஷேக், அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஜோஹர் ஆகியோர் 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி ஒரு என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.எனினும் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையின் விவரங்களை உயர்நீதிமன்றம் முழுமையாக வெளியிட மறுத்துவிட்டது. அது விசாரணையை பாதிக்கும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது

Kingfisher வழியில் Jet Airways.. திட்டமிட்ட நாடகம்?

மும்பை: நிதி நெருக்கடி என்ற கிங்ஃபிஷரின் ஒப்பாரியை விரைவில் ஜெட் ஏர்வேஸும் பாடக்கூடும் எனத் தெரிகிறது.
அதற்கு முன்னோட்டமாக, ஜெட் ஏர்வேஸ் விரைவில் கூடுதல் நிதியை உருவாக்க வேண்டும், பண ஓட்டத்தை சீராக்க வேண்டும் என்று அந்நிறுவன ஆடிட்டர்கள் எச்சரித்துள்ளனர்.
கிங்ஃபிஷர் நிறுவனம் கிட்டத்தட்ட திவால் என்று கூறிக் கொண்டு வங்கிகள் மற்றும் தனியார் முதலீட்டாளர்களிடம் கடன் கேட்டு நிற்பதற்கு முன், இதே ஆடிட்டர்கள் இப்படித்தான் 'எச்சரித்தனர்' என்பதால், இது திட்டமிட்ட நாடகமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ்தான் இந்தியாவில் மிகப்பெரிய தனியார் விமான சேவை நிறுவனம். லாபத்தில் இயங்குவதாக கூறிக் கொண்டாலும், அடிக்கடி நஷ்டக் கணக்கும் காட்டி வருகிறது.

விலையேற்றம்: பாசிச ஜெயாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் பேருந்துக் கட்டணம், பால் விலை, மின்சாரக் கட்டணம் போன்ற மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய தேவைகளின் விலை இரண்டு மூன்று மடங்கு என ஜெயலலிதாவால் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலைவாசி உயர்வு உழைக்கும் மக்களின் கழுத்தை நெறிப்பதாக உள்ளது. தினசரி வருமானம் சராசரியாக 20 ரூபாய்க்கு கீழே உள்ள 80 கோடி மக்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டில் அடிக்கடி உயர்த்தப்படும் விலைவாசி என்பது மக்களை கடுமையான நெருக்கடியில் தள்ளியுள்ளது.
உழைக்கும் மக்களின் வருமானத்தை, வாழ்வாதாராத்தை உயர்த்தாமால் திட்டமிட்டு அவர்களின் வாழ்வை அழிப்பது போல் உள்ள இந்த விலையேற்றம் தனியார் முதலாளிகள் லாப நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வினை தனியார் பேருந்து முதலாளிகள் வரவேற்பதிலிருந்தே இந்த அரசு தனியார் முதலாளிகளுக்காக செயல்பட்டது நிரூபணமாகி உள்ளது.
இந்த அரசின் உள் நோக்கத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும், தினசரி பேருந்திற்கு மட்டும் 50 ரூபாயக்குமேல் மக்களிடம் பறிக்கும் ஜெயலலிதாவின் தடாலடி அறிவிப்பினை கண்டித்தும்,

திகார் ஜெயிலில் விசாரணை; நீதிபதி அதிரடி

புதுடில்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை இனி திகார் ஜெயிலுக்குள்ளேயே நடக்கும் என வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி ஓ.பி.,சைனி அறிவித்துள்ளார்.

கைதிகள் கோர்ட்டுக்கு அழைத்து வரும் சிரமம் இனி போலீசாருக்கு இருக்காது என்றாலும் விசாரணை என்ற நேரத்தில் திகார் ஜெயிலில் இருந்து பாட்டியாலா சிறப்பு கோர்ட்டுக்கு வந்து செல்லும் வாய்ப்பு பறிபோனது. இந்த நேரத்திலாவது வெளி உலகை பார்க்கும் நிலை இழக்க வேண்டியிருப்பதால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜா மற்றும் கனிமொழி உள்பட . கைதிகள் கோர்ட்டுக்கு வரும்‌போது உறவினர்கள் பலரும் கூடுவதாலும், இவர்கள் சந்திப்பை தவிர்க்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கோர்ட் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் நீதிபதி தரப்பில் இதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

நமீதா, ஸ்ரேயா குட்டை பாவாடை அணிவதை எதிர்ப்பதா? குஷ்பு கண்டனம்


நடிகைகள் சினிமா விழாக்களில் குட்டை பாவாடை அணிந்து பங்கேற்பது வழக்கம். கவர்ச்சி நடிகைகள் மட்டுமின்றி முன்னணி கதாநாயகிகளும் இதுபோல் கவர்ச்சி ஆடை அணிந்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்புகளும் காட்டப்பட்டு வருகிறது.நடிகை ஸ்ரேயா, சிவாஜி பட விழாவில் குட்டை பாவாடை அணிந்து பங்கேற்றார். இதனை இந்து மக்கள் கட்சி கண்டித்தது. போலீசிலும் புகார் அளித்தது. இதையடுத்து ஸ்ரேயா மன்னிப்பு கேட்டார். இதுபோல் நமீதாவும் கவர்ச்சி ஆடை அணிந்து விழாக்களுக்கு வருகிறார். இருக்கையில் அமர்ந்து இருக்கும்போது போட்டோ கிராபர்கள் படம் எடுப்பதை தவிர்க்க கால்கள் மேல் துண்டை போட்டு மறைத்துக்கொள்கிறார்.நடிகைகள் கவர்ச்சி ஆடை அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை நடிகை குஷ்பு கண்டித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நமீதாவை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அவர் குட்டை பாவாடை அணிவதை எப்போதும் விரும்புவார். அதோடு கூடவே ஒரு துண்டையும் எடுத்துச்செல்வார்.ஒருத்தர் அணியும் ஆடை என்பது அவரது தனிப்பட்ட வசதியையும் விருப்பத்தையும் பொருத்தது. மற்றவர்கள் உத்தரவு போட முடியாது. சினிமாவில் இருப்பவர்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. வெளியில் உள்ள சில சுயநல சக்திகள் இரண்டு நிமிட புகழுக்காக எதிர்ப்பு காட்டுகின்றன. இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

பால்...Bus...Gas...'மேடம், நீங்க சொன்ன மாதிரியே ஆயிடுச்சு. நாங்க நல்லாவே அனுபவிக்கிறோம்









''இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழக மக்கள் அனுபவிக்கப் போகிறார்கள்'' என்று தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி, அ.தி.மு.க. மாபெரும் வெற்றிவாகை சூடிய நிலையில் சொன்னார் நடிகை குஷ்பு.

தற்போது... பால் மற்றும் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு, மின் கட்டணமும் விரைவில் உயரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில்... ''குஷ்பு சொன்னது சரியாத்தான் போச்சு... இன்னும் 5 வருஷத்துக்கு எப்படி தாக்குப் பிடிக்கப் போறோமோ...!'' என்று தமிழகம் முழுக்க தாய்மார்கள் கண்ணீர் மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள்.
இதைப்பற்றி குஷ்புவிடமே கேட்டபோது... ''முதல்வரோட அறிவிப்பு வெளியான நிமிஷத்துல இருந்தே... 'மேடம், நீங்க சொன்ன மாதிரியே ஆயிடுச்சு. நாங்க நல்லாவே அனுபவிக்கிறோம்’னு பலரும் போன் பண்ணி வருத்தப்படறாங்க.
காலையில பேப்பர்ல... 'டெய்லி எங்க வீட்டுக்கு ஒரு லிட்டர் பால் வாங்குவேன். இனி, அரை லிட்டர்தான் வாங்கி புள்ளைங்களுக்கு கொடுக்க முடியும்' என்று கண்ணீரோட ஒரு அம்மா சொல்லியிருக்காங்க.
இன்னொரு பொண்ணு, 'எனக்கு சம்பளம் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய். இதுல பஸ்ஸுக்கே 600 ரூபாய் போய்க்கிட்டிருந்தது. இனி, பஸ்ஸுக்கே ஆயிரம் போயிடும். 500 ரூபாய்தான் மிஞ்சும். இந்தப் பணத்துக்காக வேலைக்கு போயாகணுமானு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்'னு சொல்லியிருக்காங்க.
இதையெல்லாம் படிச்சதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு.
சமச்சீர் கல்வியில் கைவெச்சாங்க, தலைமைச் செயலகத்தை மாத்தினாங்க, நூலகத்த ஆஸ்பத்திரியா மாத்த பார்த்தாங்க. இப்போ... பால், பஸ்ஸுனு நேரடியாவே மக்கள் தலையில கைவெச்சுட்டாங்க. மக்கள் மாற்றத்தை விரும்பினாங்க... ஏமாற்றமா முடிஞ்சு போச்சு'' என்று சொன்னார் குஷ்பு.

'ஏமாந்தது ஒருபக்கம் இருக்கட்டும். இந்த இக்கட்டான நிலைமையை சமாளிச்சு, குடும்பத்தை எப்படி ஓட்டறது?' என்று பஸ் மற்றும் பால் விலை உயர்வு வந்த நிமிடத்திலிருந்தே யோசிக்க ஆரம்பித்து, சூப்பர் சூப்பர் பிளான்களை போட்டு வைத்துவிட்ட நம் பெண்கள் சிலர், குமுறலோடு சேர்த்து அந்த பிளான்களையும் இங்கே பகிர்கிறார்கள்!

ஜெ. 300 கேள்விகளுக்குப் பதிலளித்தார்- நாளையும் விசாரணை

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் ஜெயலலிதா ஆஜரானார். அவருடன் தோழியும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருமான சசிகலாவும் ஆஜரானார்.இன்றைய விசாரணையின் போது 300 கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளித்தார்.
காலை 11 மணிக்கு பெங்களூர் பரப்பன அக்ரஹாரவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஆஜரானார்கள். இதையடுத்து ஜெயலலிதாவிடம் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா விசாரணையை தொடங்கினார்.
இன்று மட்டும் ஜெயலலிதாவிடம் 300 கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு அவர் பதிலளித்தார். இதுவரை மொத்தம் 3 நாட்கள் ஜெயலலிதா விசாரிக்கப்பட்டுள்ளார். மொத்தம், கிட்டத்தட்ட 1000 கேள்விகள் வரை அவர் பதிலளித்துள்ளார். இன்னும் கிட்டத்தட்ட 450 கேள்விகள் வரை கேட்கப்பட வேண்டியுள்ளது.

Dam 999 முல்லைப் பெரியாறு அணை உடைந்தால்.... சர்ச்சைப் படம் எடுத்த மலையாள இயக்குநர்!


Dam 999
தமிழக மக்களின் உணர்வுப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி ஒரு படம் ஆங்கிலத்தில் உருவாகியுள்ளது. டேம்999 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை எடுத்திருப்பவர் ஒரு மலையாளி. இந்தப் படம் தமிழிலும் வெளியாகப் போகிறது. இந்தப் படத்தில் அணை உடைந்தால் என்னவாகும் என்பதை கிராபிக்ஸில் காட்டி மக்களைப் பீதிக்குள்ளாக்கியுள்ளனர்.
சொத்தை விற்று அணை கட்டிய பென்னி குக்
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது முல்லைப் பெரியாறு அணை. ஆங்கிலேயர்தான் என்றாலும் பென்னிகுக் என்ற மக்கள் நல விரும்பியால் கட்டப்பட்ட இந்த அணை தமிழகத்தின் ஜீவாதாரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த அணை கட்டும் பணியின்போது நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதால் இங்கிலாந்தில் இருந்த தனது சொத்துக்களை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு அணை கட்டினாராம் பென்னி குக்.

பெங்களூர் கோர்ட்டில் : 3வது முறையாக ஜெயலலிதா ஆஜர்!

பெங்களூர் : தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்பு விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா நேரில் 3வது முறையாக இன்று ஆஜரானார். இதையொட்டி தனிநீதிமன்றம் அமைந்திருக்கும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயலலிதா 1991 1996ல் முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

நியூயார்க் செய்தி வாசிப்பாளர் விஸ்வரூபத்தில் கமலுக்கு ஜோடி

ஒருவழியாக விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடி கிடைச்சாச்சு. அவர் பெயர் பூஜா குமார். இவர் நியூயார்க்கில்  தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். மன்மதன் அம்பு படத்திற்கு பிறகு நடிகர் கமல் இயக்கி, நடிக்கும் படம் விஸ்வரூபம். ஆரம்பத்தில் இந்தபடத்தில் கமலுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தான் நடிப்பதாக இருந்தார். இதற்கான அறிவிப்பு எல்லாம் வெளியாகி இருந்த வேளையில், படத்தின் சூட்டிங் தள்ளிபோனதால் விலகிக்கொண்டார் சோனாக்ஷி. இதனையடுத்து ஒரு நல்ல நடிகையை தேடி வந்தார் கமல். அனுஷ்கா, ஸ்ரேயா என்று பல நாயகிகளின் பெயர் அடிபட்டது. ஆனால் எந்த ஒரு நடிகையும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் படத்தின் நாயகி இல்லாமலே விஸ்வரூபம் படத்தை தொடங்கினார் கமல். தொடர்ந்து சூட்டிங் நடந்து வரும் நிலையில், விஸ்வரூபம் படத்திற்கான நாயகியை உறுதி செய்துள்ளார் கமல். இதுகுறித்து கமல் அளித்த பேட்டியில், விஸ்வரூபம் படத்தில் பூஜா குமார் என்றை பெண்ணை கதாநாயகியாக்கியுள்ளேன். அவருக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். நல்ல திறமையான நடிகை," என்று கூறியுள்ளார்.

எந்தக் கல்லூரியிலும் நன்கொடைக்கான ரசீது வழங்கப்படுவதில்லை

தொழில்நுட்ப, மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மாணவர்களைச் சேர்க்கும்போது நன்கொடை பெற்றால் ரூ.1 கோடி அபராதம் விதிக்க வகைசெய்யும் சட்டமுன்வரைவுக்கு மத்திய அமைச்சரவை சென்ற வாரம் அனுமதி அளித்துவிட்டது. இந்த சட்டமுன்வரைவு இப்போது தொடங்கியுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும்.  பல மாதங்களாகத் தூங்கிக் கொண்டிருந்த மசோதாக்களில் இதுவும் ஒன்று. தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் முறையற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் மசோதா என்று இருந்ததை, இப்போது சிறு மாற்றங்களுடன் உயர் கல்வி நிறுவனங்கள் மசோதா 2011 என்று மாற்றியிருக்கிறார்கள். முந்தைய மசோதாவில் நன்கொடை வசூலித்தால் ரூ.50 லட்சம் அபராதம் என்றிருந்ததை இப்போது இரட்டிப்பாக்கி, ரூ.1 கோடி அபராதம் என்று திருத்தப்பட்டுள்ளது.  இது நல்ல நடவடிக்கை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஏறக்குறைய 90 விழுக்காடு கல்வி நிறுவனங்கள் அரசியல்வாதிகளால் அல்லது அவர்தம் பினாமிகளால் நடத்தப்படும் கல்லூரிகளாக இருப்பதால், இந்தச் சட்டம் வெறும் காகிதப் புலியாக இருக்குமா அல்லது நிஜமாகவே பாயும்புலியாக இருக்குமா என்பதை சற்று ஐயத்துடன்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.  கல்வி நன்கொடையைப் பொருத்தவரை எந்தக் கல்லூரியிலும் அதற்கான ரசீது எதுவும் வழங்கப்படுவதில்லை.