தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் செல்வதற்காக மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இன்று (சனிக்கிழமை) சென்னையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தனர்.< வரவேற்க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு சேரன் ஆகியோர் தலைமையில் மதிமுகவினரும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமையில் நாம் தமிழர் கட்சியினரும் விமான நிலைய வாசலில் தங்களது கட்சி கொடிகளுடன் காத்திருந்தனர்.
வைகோ, சீமான் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் விமானத்திலிருந்து இறங்கி டெர்மினலுக்குள் வந்தனர். அப்போது மதிமுக பொதுச் செயலர் வைகோ முதலில் அங்கிருந்து வெளியேறி, வாசல் பகுதிக்கு வந்தார். அவருக்கு வாழ்த்து முழக்கங்கள் எழுப்பி மதிமுகவினர் வரவேற்றனர்.

.
மின்னம்பலம்: திமுக செயல் தலைவரான ஸ்டாலின் இன்று புதுவை மாநில நிர்வாகிகளுடன் கள ஆய்வு
மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாக திமுகவின் சார்பு அணி
நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, கழக இலக்கிய அணி, தொண்டர்
அணி என எல்லோரையும் சந்தித்தார். இந்த அணி நிர்வாகிகள் எல்லோருமே
ஸ்டாலினிடம் புலம்பித் தீர்த்துவிட்டார்களாம். தொண்டர் அணிக்கு மாநிலச்
செயலாளராக இருப்பவர் மாசிலாமணி. அவர் ஸ்டாலினிடம் நேரடியாகவே சில
விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்.











































