![]() |
| Queen Catherine |
ராதா மனோகர் : 1544 ஆம் ஆண்டு மன்னாரில் சங்கிலியனும் அவனின் குண்டர் படையும் 600 க்கு மேற்பட்ட தமிழ் கிறிஸ்தவர்களை சகோதர படுகொலை சம்பவம் போர்த்துகீசிய கிழக்கிந்திய கம்பனியை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருந்தது The massacre of about 600 to 700 Christians in Mannar in 1544 by Cankili
போர்த்துகீசிய அரசி Queen Catherine இந்த படுபாதக செயலுக்கு காரணமான சங்கிலியனையும் அவன் பரிவாரங்களையும் கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்
![]() |
| Viceroy Dom Constantino de Bragança |
இந்த பணியை நிறைவேற்றுவதற்கு போர்த்துகீசிய வைஸ்ரோய் Viceroy Dom Constantino de Bragança தலைமையில் from Goa to Jaffna with 20 galleys, 10 galiots, and 70 ships. The forces consisted of 1,200 soldiers; September 1560 கோவாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்தனர்
இவர்களை (யாழ்ப்பாணம் )கொழும்பு துறையில் எதிர்கொண்ட சங்கிலியன் படைகள் சண்டையில் தோற்று கோப்பாய் பற்றை காடுகளை நோக்கி ஓடி தப்பினார்கள்.
அங்கும் போர்த்துகீசிய படைகள் சென்று அவர்களின் இருப்பிடங்களை தீவைத்து கொளுத்தியது
கோப்பையிலும் பாதுகாப்பு கேள்வி குறியானதும் சங்கிலியன் படை வன்னி காட்டுக்கு தப்பி ஓடிச்சென்றது.
பின்பு அங்கிருந்து கொண்டே போர்த்துகீசிய வைஸ்ரோய்க்கு ஒரு சமாதான தூது அனுப்பினான்
கெஞ்சினால் மிஞ்சுவதும் மிஞ்சினால் கெஞ்சுவதும் அவனின் குணம்
இவனின் தூதை போர்துகீசிய அரசி ஏற்றுக்கொள்ளவில்லை
ஆனால் வைஸ்ரோய் வேறு விதமாக கணக்கு போட்டார்
இவனை கொல்வதிலும் பார்க்க இவனை கொண்டு பல காரியங்களை செய்து கொள்ளலாம் என்று கருதினார்.

