சனி, 16 மார்ச், 2013

பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு மசோதாவுக்கு பாஜ கடும் எதிர்ப்பு

பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு மசோதாவில் விருப்பத்துடன் பாலியல் உறவு கொள்ளும் வயது 16 ஆக குறைக்கப்பட்டிருப்பதற்கு பாஜ, திரிணாமுல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. டெல்லி மாணவி பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து பலாத்கார குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத்தை கடந்த மாதம் மத்திய அரசு கொண்டு வந்தது. விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு புதிய விதிமுறைகளுடன் புதிய சட்டம் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது புதிய மசோதா ஒன்றை மத்திய சட்ட அமைச்சகம் தயாரித்துள்ளது. அதில் விருப்பத்துடன் பாலியல் உறவு கொள்ளும் வயது 18ல் இருந்து 16 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ரியாவை காதலிக்கிறேன் பாசில் மகன் அறிவிப்பு

ஆண்ட்ரியாவை காதலிக்கிறேன் என்று இயக்குனர் பாசிலின் மகனும் நடிகருமான பஹாத் அறிவித்துள்ளார். ‘பச்சைக்கிளி முத்துச்சரம், ‘ஆயிரத்தில் ஒருவன், ‘விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஆண்ட்ரியா. இவர் ‘அன்னெயும் ரசூலும் என்ற மலையாள படத்தில் நடித்தார். இதில் பஹாத் பாசில் ஹீரோ. இவர் பிரபல இயக்குனர் பாசிலின் மகன். பஹாத் ஒரு பேட்டியில், ‘ஆண்ட்ரியாவை காதலிக்கிறேன்‘ என பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி மலையாள இதழ் ஒன்றுக்கு பஹாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அன்னெயும் ரசூலும் பட ஷூட்டிங்கின்போது ஆண்ட்ரியாவுடன் அதிகம் பேசியதுகூட கிடையாது. சென்னையில் இப்படத்தின் எடிட்டிங் செய்யப்பட்ட படத்தை  பார்க்க வந்தபோது ஆண்ட்ரியா மீது எனக்கு காதல் இருப்பதை உணர்ந்தேன். ஆண்ட்ரியாவின் பாட்டு திறமையும், நகைச்சுவையாக பேசும் உணர்வும், புத்திசாலித்தனமும் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது என்றார். பஹாத்தை ஆண்ட்ரியாவும் காதலிக்கிறாரா என்பது உறுதியாகவில்லை. இது பற்றி கருத்து கேட்க முயன்றபோது, ஆண்ட்ரியாவை தொடர்புகொள்ள முடியவில்லை. ஏற்கனவே இயக்குனர் செல்வராகவன், அதன் பின் இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோரை ஆண்ட்ரியா காதலித்து பிரிந்தது குறிப்பிடத்தக்கது .tamilmurasu.org

அரை உண்மைகளின் அபாயம்


B.R. மகாதேவன் tamilpaper.net இஸ்லாமியர்களைப் போட்டது போட்டபடி துரத்தியடித்ததில் இருந்து அவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று கண்டந்துண்டமாக வெட்டியும் வெடி குண்டு வைத்தும் கண்மூடித்தனமாகக் கொன்றழித்திருக்கிறார்கள். பாலசந்திரனை விட மிகச் சிறிய குழந்தைகளையெல்லாம் கூட மசூதியில் தொழுது கொண்டிருந்தபோது நேருக்கு நேர் நின்று சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். இதைவிட தமிழ் இனத்துக்குள்ளேயே பிற போராட்டக் குழுவினரை சரமாரியாகக் கொன்று குவித்திருக்கிறார்கள். ஆயுதக் கடத்தலில் ஆரம்பித்து அனைத்துவகையான திரைமறைவு வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
லயோலா கல்லூரி மாணவர்களின் ‘தன்னெழுச்சியான’ போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகமெங்கும் புரட்சி அலை பொங்கி எழ ஆரம்பித்திருக்கிறது. ஏற்கெனவே கொந்தளித்துக் கொண்டிருந்த இணையவெளியைத் தொடர்ந்து இப்போது ஊடக வெளியும் கொதிக்கத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ், திமுகவை தேர்தலில் தோற்கடிக்க இந்த ‘எழுச்சி’ உதவும் என்பதால், அதிமுக புன்முறுவலுடன் இந்த போராட்டங்களை மறைமுகமாக ஊக்குவித்துவருகிறது. ஆனால், ஜெயலலிதாவின் கையை மீறி இந்தப் போராட்டம் போக அனைத்து வாய்ப்புகளும் உண்டு. இந்தப் போராட்டத்தின் சில கோரிக்கைகள்: இலங்கை அரசை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும். வெறும் போர்க்குற்றம் அல்ல; இனப்படுகொலை செய்த அரசு என அதற்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். இந்தியா இலங்கையுடன் அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டும். இந்தியாவுக்கும் இந்தப் பேரழிவில் முழு பங்கு உண்டு. தமிழகத்துக்கு என்று தனியாக வெளியுறவுத்துறை அமைக்கப்படவேண்டும். இதையெல்லாம் செய்யவில்லையெனில் நாங்கள் வரி கட்டமாட்டோம்.
இந்தத் ‘தன்னெழுச்சியான’ கோரிக்கைகள் மாணவர்களுடையதுதான் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வரவேண்டும் என்பதற்காக சில மாணவத்தனமான கோரிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன. மற்றபடி இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம், இலங்கை செய்தது இனப்படுகொலை. இந்தியாவும் அதற்கு முழு உடந்தை. இந்த இரண்டு விஷயங்களைத் தமிழக மக்கள் மத்தியில் பரப்பவேண்டும் என்பதுமட்டுமே.
மிகவும் உணர்வுபூர்வமான இந்தப் பிரச்னையில் தமிழகத்தில் இப்போது ஒருவித பாசிச மாற்று அமைப்பு கட்டமைக்கப்பட்டுவருகிறது.

சேலத்தில் ஒரு கவிதை திருவிழா


சேலத்தில் திருவிழா நடக்கிறது. கவிதைக்கான திருவிழா. கிட்டத்தட்ட நாற்பது கவிஞர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒரு கவிஞனிடம் சிக்கினாலே சிதைச்சு சின்னாபின்னமாக்கிவிடுவான், இதில் நாற்பது பேர் கலந்து கொள்ளும் கூட்டமா என்று ஜெர்க் ஆக வேண்டாம். உங்கள் கழுத்துக்கு நான் கியாரண்டி
சமீபத்தில் வெளிவந்த பதினெட்டு கவிதைத் தொகுப்புகள் மீதான உரையாடலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஒரு தொகுப்பு மீதான உரையாடலே தலைவலி வரச் செய்துவிடும். இதில் பதினெட்டு தொகுப்புகள் என்றால் எனக்கும் சற்று பயமாகத்தான் இருக்கிறது. இருப்பினும் ஆனது ஆகட்டும். ஒரு கை பார்த்துவிடலாம் என்று கிளம்புகிறேன். அதிகாலை நான்கு மணிக்கு பெங்களூரில் பஸ் ஏறினால் ஒன்பது மணிக்கு சேலத்தை அடைந்துவிடலாம். 
Jokes apart. உரையாடல் சரியாக அமையுமெனில் கவிதையியலில் இது ஒரு மிக முக்கியமான நிகழ்வாக அமைந்துவிடும் வாய்ப்பிருக்கிறது என நம்பலாம்.
முக்கியம், முக்கியமின்மை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். சமகாலத்தில் கவிதைகளை எழுதியும், கவிதைகள் பற்றி பேசிக் கொண்டும்  இருக்கும் நாற்பது கவிஞர்களை ஒரே இடத்தில் சந்திப்பது உற்சாகமான ஏற்பாடு.
சேலம் மற்றும் சேலம் பக்கத்திலிருக்கும் நண்பர்கள் வாய்ப்பிருப்பின் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டால் ஒருவேளை நீங்கள் கவிதை பிரியராக மாறிவிடக் கூடும் அல்லது இனிமேல் கவிதையை தொடக் கூடப் போவதில்லை என்று முடிவெடுத்துவிடக் கூடும். இரண்டில் எது நடந்தாலும் நல்லதுதான் என்பதை மனப்பூர்வமாக நம்புங்கள். nisaptham.com/

பரதேசி... நிச்சயம் ஒருமுறை பாருங்கள்

வெளிநாடுகளில் நேற்றே ரிலீஸ் ஆகியுள்ள பரதேசிக்கு கிடைத்துள்ள ரெஸ்பான்ஸ், சமீப நாட்களில் வேறு எந்த தமிழ் படத்துக்கும் கிடைக்காதது என்பதை அடித்துச் சொல்லலாம். படம் பார்த்த பலர், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளார்கள் என்பது பேச்சில் தெரிகிறது. வார்த்தைகள் வராத நிலையில் பலர்!
பாலா படங்களில் (இதுவரை) பெஸ்ட் இதுதான் என்ற கருத்து பலரிடம் உள்ளது.
கமர்ஷல் சினிமா படமல்ல இது. பாலா படத்தில் வழமையாக உள்ள நகைச்சுவை இருக்கிறது, ஆனால், அதுவே ஒரு கனத்த சோகம் கலந்த நகைச்சுவைதான். நல்லவனான ஹரோவும் கிடையாது, கெட்டவனான வில்லனும் கிடையாது. நல்லது, கெட்டது கலந்த மனித கதாபாத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படம்.
சீரியஸ் சினிமா, அல்லது யதார்த்த சினிமா ரசிகராக நீங்கள் இருந்தால் கண்களை மூடிக்கொண்டு பார்க்கலாம். அதேநேரத்தில், ஸ்பை த்ரில்லர், ரொமான்டிக் காமெடி படம் மட்டும் பார்க்கும் என்னையும் கடைசிவரை லயிப்புடன் உட்கார வைத்த படம்.
படத்தில் நிச்சயமாக ஏதோ ஒரு லயிப்பு இருக்கிறது இருக்கிறது. இந்தப் படத்துக்கு பாடல்கள் அவ்வளவு அவசியம் என்று தோன்றவில்லை. பின்னணி இசை பலருக்கு பிடிக்கவில்லை, அல்லது, இளையராஜா இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தை ஏற்படுத்தியுள்ளதை தியேட்டரில் பார்க்க முடிந்தது.
ஆனால், நிஜம் அதுவல்ல

வெள்ளி, 15 மார்ச், 2013

மதச்சார்பற்ற’ கட்சிகளின் கோழைத்தனமும், வாஜ்பாயி முகமூடியும்!

வினவு
மோடி”சங்க பரிவாரத்தின் முகமூடிதான் வாஜ்பாய்” என்று ஒருமுறை சொன்னார் கோவிந்தாசார்யா. உண்மையில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., பெர்னாண்டஸ் போன்ற ”மதச்சார்பற்ற” கூட்டாளிகளின் பிழைப்புவாதத்திற்கும், காங்கிரசு முதல் மார்க்சிஸ்டுகள் வரையிலான ”மதச்சார்பற்ற” எதிர்க்கட்சிகளின் கோழைத்தனத்திற்கும்தான் திருவாளர் வாஜ்பாயி ஒரு முகமூடியாகப் பயன்பட்டு வருகிறார்.

குஜராத் 2002  முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 3

முன்னுரை:
குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்தவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

பின்லேடன் கொலை ஆபரேஷனில் உதவிய டாக்டர் அஃப்ரீடியின் நர்ஸூகள் 17 பேரும் எங்கே?

 viruviruppu.com பின்லேடனை கொல்வதற்காக சி.ஐ.ஏ. போட்ட திட்டத்துக்கு உதவியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட 17 பாகிஸ்தான் நர்ஸூகளை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளும்படி பாகிஸ்தான் அரசுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2011 மே மாதம், பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க சீல் அதிரடிப் படையினரால் பின்லேடன் கொல்லப்பட்டார்.
அவரது மறைவிடத்தை உறுதி செய்வதற்காக சி.ஐ.ஏ. போட்ட திட்டம்தான், பின்லேடன் ரகசியமாக தங்கி இருந்த வீட்டில் உள்ளவர்களின் ரத்த சாம்பிள்களை பெற்று, டி.என்.ஏ. சோதனை செய்வதன் மூலம், அவர்கள் பின்லேடன் குடும்பத்தினர் என்று உறுதி செய்து கொள்வது. (பின்லேடனின் டி.என்.ஏ. சாம்பிள் ஏற்கனவே சி.ஐ.ஏ.யிடம் இருந்தது.)
இதற்காக சி.ஐ.ஏ., தொடர்பு கொண்ட நபர்தான், டாக்டர் ஷாஹில் அஃப்ரீடி. இவர், சி.ஐ.ஏ.க்கு ஒத்துழைக்க சம்மதித்தார்.
டாக்டர் ஷாஹில் அஃப்ரீடி, பாகிஸ்தான் அரசு சுகாதாரத் துறையில் சீனியர் பதவியில் இருந்தவர். சி.ஐ.ஏ.வுக்காக அவர், தனக்குக் கீழ் பணிபுரியும் சில நர்ஸ்களை உபயோகித்து தகவல் திரட்டிக் கொடுப்பதுதான் திட்டம். ஆனால், இந்த திட்டம் எதுவும், அந்த நர்ஸூகளுக்கு தெரியாது.
சி.ஐ.ஏ., பின்லேடன் மறைந்து வாழ்ந்த வீட்டைக் கண்காணித்து வந்ததில், அங்கு பத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிப்பது தெரியவந்திருந்தது.

அமலாபால் சாக்கடையில் குதித்து நடித்திருக்கிறார்

;சாக்கடையில் விழுந்தார் அமலாபால்! சமுத்திரக்கனி இயக்கத்தில் ’நிமிர்ந்து நில்’ திரைப்படம் படுவேகமாக உருவாகி வருகிறது. தமிழில் நிமிர்ந்து நில் என்ற பெயரி உருவாகி வரும் இத்திரைப்படம், தெலுங்கில் ’ஜண்டா பை கபிராஜு’ என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் ஜெயம் ரவி, அமலா பால் ஜோடியாக நடிக்க, தெலுங்கில் ‘நான் ஈ’ புகழ் நானி அமலா பாலுடன் ஜோடி சேர்கிறார்.சமீபத்தில் நடைபெற்ற ’ஜண்டா பை கபிராஜு’ படப்பிடிப்பின் போது ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக நானியையும், அமலா பாலையும் சாக்கடையில் குதிக்கச் சொன்னாராம் இயக்குனர் சமுத்திரக்கனி. எவ்வித தயக்கமும் இல்லாமல் சட்டென அமலாபாலுடன் சாக்கடையில் குதித்துவிட்டு கிட்டத்தட்ட 30 நிமிடம் அந்த காட்சியில் நடித்திருக்கிறார்கள் இருவரும்.இது பற்றி தனது டுவிட்டர் வலைதளத்தில் அமலா பால் “ நான் கூட பாதி தான் சாக்கடையில் மூழிகியிருந்தேன். ஆனால் நானி கிட்டத்தட்ட கழுத்துவரை அந்த சாக்கடையில் மூழ்கியிருந்தார். அவருடன் நடித்தது நல்ல அனுபவத்தை தந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

கட்சியின் தலைவராக 16ம் ஆண்டில் சோனியா

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக, 16ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சோனியா, ""சவால் நிறைந்த தலைவர் பதவி, சாதாரணமானது அல்ல; தொண்டர்களின் அன்பும், ஆதரவுமே அதை எளிதாக்கியது,'' என, மனம் நெகிழ குறிப்பிட்டார்.
ராஜிவ் மறைவுக்கு பின், காங்கிரஸ் கட்சி பொறுப்பை ஏற்ற, சோனியா, தலைவர் பொறுப்பில், 16ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார். 127 ஆண்டு வரலாறு கண்ட காங்கிரஸ் கட்சியில், நீண்ட காலம் தலைவர் பதவியில் இருந்தவர் என்ற சாதனையை சோனியா படைத்துள்ளார். தலைவர் பொறுப்பில், நான்காவது முறையாக தொடரும், சோனியாவின் பதவி காலம், 2015ல் முடிவுக்கு வருகிறது. சோனியாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க, அவரது இல்லத்திற்கு, நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சென்றனர். மத்திய அமைச்சர்கள் கபில்சிபல், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா ஆகியோர், இதில் இடம் பெற்று இருந்தனர். மேலும், கட்சித் தொண்டர்கள் பலரும், சோனியா வீடு முன் குழுமியிருந்தனர்.
கட்சி தலைவர்கள் மத்தியில், சோனியா பேசியதாவது: காங்கிரஸ் தலைவர் பதவி என்பது சாதாரணமானது அல்ல; சவால்கள் நிறைந்தது. இதை எளிதாக்கியது, தொண்டர்களின் அன்பும், ஆதரவுமே. அடிமட்ட தொண்டர்கள், என் மீது காட்டிய பாசம் அளவற்றது. இவ்வாறு, அவர் கூறினார். "சோனியாவின் சாதனையை பெரியளவில் கொண்டாட வேண்டும்' என, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். நாட்டில் சில மாநிலங்களில் வறட்சி நிலவுவதால், விழா நடத்துவதற்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வடிவேலுவுக்கு உள்ளே ஓர் எழுத்தாளன் . பாடகன், இசை அமைப்பாளன், இயக்குநரு... எல்லாம் இருக்காய்ங்க

ஒரு காமெடியனா நான் விஜயகாந்த்கிட்ட தோத்துட்டேன்: வடிவேலு
திடீர் என்று நிகழும் சில அற்புதமான சந்திப்புகள். வடிவேலுவை நீண்ட காலத்துக்குப் பின் சந்தித்தது அந்த ரகம்! 
‘‘நலமா?’’
 ‘‘நல்லா இருக்கேண்ணே... நல்லா இருக்கேன். நல்லா ஆரோக்கியமா இருக்கேன். பார்த்தீங்களா... ஒடம்பைக் கட்டுக்குள்ள கொண்டுவந்திருக்கேன் (புஜத்தைக் காட்டுகிறார்).’’
‘‘ரஜினியே படம் செய்தால்கூட, ‘வடிவேலுவிடம் முதலில் தேதி வாங்குங்கள்’ என்று சொல்லும் நிலை இருந்தது. ஆனால், இப்போது நீங்கள் படம் நடித்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. என்ன நடக்கிறது?’’
‘‘ஒரு உண்மையைச் சொல்லட்டுங்களா? யாருமே என்கிட்ட பேசுறதே இல்லண்ணே. யாரும் போன்கூடப் பண்றது இல்லை. ஆனா, அதைப் பத்தி நான் கவலைப்படலை. மௌனமா கவனிச்சுக்கிட்டு இருக்கேன். இது ஒரு காலம். இதையும் தாண்டி வருவோம்னு இருக்கேன்.’’
‘‘உங்களைவைத்துப் படம் பண்ணப் பயப்படுகிறார்களா?’’‘‘தெரியலண்ணே... தெரியல.’’
‘‘முதல்வருக்கு உங்கள் மீது கோபம் ஏதும் இருப்பதாக நினைக்கிறீர்களா?’’
 ‘‘ம்ஹூம்... சும்மா சொல்லக் கூடாது. அவங்க பாட்டுக்கு அரசாங்க வேலையில கவனத்தைக் காட்டுறாங்க. அவங்களுக்கு இருக்குற வேலைக்கு முன்னால நாம எல்லாம் ஒரு பொருட்டா? அப்புறம், அவங்க என் மேல கோவப்படற மாதிரி நான் நடந்துக்கவும் இல்லையே? அவங்க இன்னைக்குச் சொல்றதைத்தானே நான் அன்னைக்கே சொன்னேன்? இது வேற கதை. நம்ம கூடவே திரிஞ்சுக்கிட்டு எப்படா நாம கீழே விழுவோம்னு பார்த்துக்கிட்டு இருப்பாய்ங்க இல்ல... அப்படி ஒரு கூட்டம் இதுக்குப் பின்னாடி இருக்கு.’’
‘‘தொழில் போட்டியைச் சொல்கிறீர்களா?’’

ஜே.கிருஷ்ணமூர்த்தி பள்ளிக்கூடம் தேர்வுகள் கிடையாது போட்டிகள் கிடையாது

ஒரு பள்ளிக்கூடத்தின் கதை இந்தியாவின் சிறந்த பள்ளிகளில் ஒன்று அது. ஆச்சர்யம்... அதை ஒரு நாளும் அவர்கள் விளம்பரப்படுத்திக்கொண்டது கிடையாது. ஏனென்றால், அவர்களுக்குப் போட்டிகள் ஒரு பொருட்டல்ல. வெற்றிகள் பொருட்டல்ல. பரிசுகளும் பொருட்டல்ல! ஐந்து வயது நிரம்பிய ஒரு குழந்தை ‘‘எனக்கு மூடு சரியில்லை, வகுப்பில் உட்கார்ந்திருக்கப் பிடிக்கவில்லை’’ என்று ஆசிரியரிடம் சொல்லி--விட்டு, பள்ளியின் பூங்காவில் மரத்தடியில் தனிமையில் உலவ முடியும் என்றால், அது ‘தி ஸ்கூலில்’ மட்டுமே சாத்தியம். சென்னையில் 1973-ல் நிறுவப்பட்ட இந்தப் பள்ளி, ஜே.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நடத்தும் 9 பள்ளிக்கூடங்களில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்டது.  ‘‘சரியான கல்வியானது, தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கும்போதே, அதைவிட மிக முக்கியமான ஒன்றைச் சாதிக்க வேண்டும். அதாவது, வாழ்வின் முழுப் பரிமாணத்தை மனிதன் உணரும்படிச் செய்ய வேண்டும்’’ என்று சொல்வார் ஜே.கே. ‘‘போர்கள் அற்ற அமைதியான உலகம் வேண்டும் என்றால், அது முதலில் போட்டிகள் அற்ற உலகமாக இருக்க வேண்டும்’’ என்பது ஜே.கே-வின் நிலைப்பாடு.  போட்டிகள் கிடையாது; தேர்வுகள் கிடையாது; ஒப்பீடுகள் கிடையாது; வெற்றிகள் கிடையாது; தோல்விகள் கிடையாது; பரிசுகள் கிடையாது; தண்டனைகளும் கிடையாது என்று ஜே.கே-வின் எண்ணங்களுக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களை நடத்துவது என்பது இன்றைய சூழலில் அவ்வளவு எளிமையானது அல்ல. ஒட்டுமொத்த உலகின் போக்குக்கும் எதிர் திசையில் பயணிப்பதற்கு ஒப்பானது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிப்பில் மட்டும் அல்ல; விளையாட்டிலும் பாலினப் பாகுபாடின்றி, சேர்ந்தே பங்கேற்கும் மாணவ - மாணவியரால் எப்படி விகல்பம் இல்லாமல் பழக முடியும்? எட்டாம் வகுப்பு வரை தேர்வுகளே இல்லாமல் படிப்பவர்களால், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எப்படி வெற்றிகரமாக எழுத முடியும்? அசந்தால், நம் காலின் மேலேயே கண நேரத்தில் ஏறி நின்றுவிடக் கூடிய இன்றைய போட்டிச் சூழ் உலகை, போட்டிகளைச் சந்திக்காமல் வளரும் குழந்தைகள் எதிர்கொள்வது எப்படி? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு, குழந்தைகளைப் பதில்களாக்கி நடமாடவிட்டு இருக்கிறது இந்தப் பள்ளிக்கூடம். ஆசிரியர்களை அண்ணா, அக்கா என்று அழைக்கிறார்கள் குழந்தைகள். ஆசிரியர்கள் மேல் துளி பயம் இல்லாமல் அவர்களை அணுகுகிறார்கள். எதைப் பற்றி, யாரிடம் வேண்டுமானாலும் கேட்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. அவரவருக்கு விருப்பமான உடைகளை அணிந்து இருக்கிறார்கள். பாடங்களைப் படிக்கிறார்கள், பாட்டு - நடனம் கற்றுக்கொள்கிறார்கள், ஓவியங்கள் வரைகிறார்கள், விளையாடுகிறார்கள், மரத்தடியில் அமர்ந்து விவாதம் நடத்துகிறார்கள், நெசவு நெய்கிறார்கள்... எல்லாமும் அவர்களுடைய  விருப்பப்படியே நடக்கிறது. ஆனால், அவர்களிடமிருந்து வெளிப்படும் ஆற்றல் பிரமிக்கவைக்கிறது. ஆசிரியர்கள் ஒவ்வொருவருமே ஆச்சர்யப்படுத்துகிறார்கள். இந்தப் பணிக்காக மிகப் பெரிய பதவிகளை, சம்பளத்தை எல்லாம் விட்டுவிட்டு பணியாற்றுபவர்கள் நிறையப் பேரைப் பார்க்க முடிகிறது.

வியாழன், 14 மார்ச், 2013

Director Bala Beating and slapping artists in Paradesi shooting


இந்த பாலா ஒரு மனநோயாளி போல நடிகர் நடிகைகளை படு மோசமாக தாக்குகிறார் எங்கே போய் விட்டனர் மனித உரிமையாளர்களும் தொழிலாளர் தலைவர்களும் ? அட நடிகர் சங்கம் கூட ஒரு மூச்சும் காட்டவில்லையே ? 

பாலாவை பெரிய டைரக்டர் என்று ஓவராக புகழ்வதால்


பாலாவை பெரிய டைரக்டர் என்று ஓவராக
புகழ்ந்துகொண்டிருப்பதன் விளைவுதான் இது :
 அ. மார்க்ஸ் ஆவேசம்
 பாலா இயக்கியுள்ள புதிய படம் பரதேசி. நாளை 15-ந்தேதி இப்படம் வெளியாகிறது. முன்னதாக நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் ஒன்று வெளியானது. அதில் காட்சிகளை பாலா நடிப்பவர்களுக்கு விளக்கியதுபோன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அப்போது, அவர் ஒருவரை எட்டி மிதிப்பது போன்றும், இன்னொரு காட்சியில் அதர்வா, தன்சிகா உள்ளிட்டோரை காலால் எட்டி மிதித்து தள்ளுவது. கம்பால் கடுமையாக தாக்குவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.இதைப்பார்த்து  பலரும் பாலா மீது சாடியுள்ளனர். மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர். அ.மார்க்ஸ் நக்கீரன் இணையதளத்திற்கு இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்தார்.அவர்,  ‘’ அந்த வீடியோவை பார்த்தேன்.  நடிப்பதற்காக இப்படி நடிகர்கள் அடிவாங்குவதை பார்த்தபோது மனம் பதறியது. இந்த கொடூர ச்செயல்  மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம். ரொம்ப அநாகரிகமா நடந்துக்கிட்டிருக்காரு இயக்குனர் பாலா. மிகவும் மோசமாக மனிதத்தன்மைக்கு அப்பார்ப்பட்டதாக நடந்துகொண்டிருக்கிறார். திரைப்பட கோட்பாடு என்று பார்த்தாலும் கூட  காட்சிகளை தத்ரூபமாக அப்படியே திரையில் இயக்கி காட்டுவது என்பதை சிறந்த திரைப்பட கோட்பாட்டாளர்கள்   ஏற்பதில்லை. பார்ப்பது திரைப்படம்தான் என்கிற உணர்வு பார்வையாளர்களுக்கு இருக்கும்வரைதான் அந்தக்காட்சி குறித்து மனதில் அசைபோட்டு ஒரு விமர்சனமான கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளமுடியும். தத்ரூபமான காட்சி என்கிறபோது காட்சியுடன் ஒன்றி பாத்திரங்களோடு அழுது அல்லது  சிரித்து விட்டுப்போய்விடுவார்களே ஒழிய அந்த காட்சி குறித்த ஒரு சிந்தனை பார்வையாளர்களுக்கு ஏற்படுவதில்லை . அதனால்,  ஒரு  நல்ல திரைப்பட கோட்பாட்டாளர்கள் தத்ரூபம் என்பதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.  பாலாவின் இந்த செயல்பாடு ஒரு நல்லத்திரைப்பட கோட்பாடும் அல்ல. அடிப்படையில் இது மனித உரிமைமீறல்.  முதலாளி தொழிலாளி பிரச்சனையாக பார்க்கவேண்டும். ;திரைப்படத் துறையில் நிறைய எழுத்தாளர்கள் நுழைகிறார்கள். இவர்கள் எழுத்துத் துறையில் வீர ஆவேசமாக பேசிக்கொண்டு மற்றவர்களை ஆமோதித்து எழுதிக்கொண்டிருப்பவர்கள், திரைப்படத் துறைக்குப் போய்விட்டால் மட்டும் கமல்சார்,  ரஜினிசார், பாலா சார் என்று  அவங்களுடைய தகுதிக்கு மீறி புகழ்வது...இப்படி சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் புகழும்போது பாலா போன்றவர்களுக்கு திமிறும் வந்துவிடுகிறது. குறிப்பாக பாலாவை பெரிய டைரக்டர் என்றும் ரியல் டைரக்டர் என்று ஓவராக புகழ்ந்துகொண்டிருப்பதன் விளைவுதான் இது. இப்படி தொடர்ந்து திரைப்பட தொழிலாளர்களை தாக்கி மனித உரிமை மீறும் வகையில் நடந்துகொண்டால் சட்டரீதியாக அவர்மீது நடவடிக்கை எடுக்கவைக்கவும் தயங்கமாட்டோம்’’ என்கிறார் எச்சரிப்பாக.cinema.nakkheeran.in/Talkies.aspx?T=2083

இத்தாலி தூதர் நாட்டை விட்டு வெளியேற தடை

மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

டெல்லி: இத்தாலி தூதர் டேணியல் மன்சினி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. அவரை மத்திய அரசு வெளியேற விடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிபந்தனையின் பேரில், இத்தாலி நாட்டை சேர்ந்த கடற்படை பாதுகாவலர்கள் மாஸ்சி மிலியானோ லாட்டோரே, சல்வாட்டோராகி ரோனே ஆகிய 2 பேரும் இத்தாலிக்கு சென்று விட்டு 4 வார காலத்துக்குள் இந்தியா திரும்பி வர ஜாமீனில் அளிக்கப்பட்டது. எனவே இத்தாலி வீரர்கள் இருவரும் 22ந்தேதி இந்தியா திரும்பி வரவேண்டும்.ஆனால் திடீரென, தங்களது நாட்டு வீரர்கள் 2 பேரும் இந்தியா திரும்ப மாட்டார்கள் என இத்தாலி அரசு என நேற்று முன்தினம் அறிவித்தது.எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு:இத்தாலியின் இந்த அறிவிப்புக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இப்படியொரு சோகத்தை நான் கண்டதேயில்லை

பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு

    குஜராத் 2002  முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 2

    முன்னுரை:
    குஜாரத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும். இந்த இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரயத்தனம் செய்து வருகிறார். ஆகவே வருங்கால பிரதமர் போட்டிக்குரியவரின் கடந்த கால தகுதிகளை சீர்தூக்கி பார்ப்பது அவசியம் . 2002ஆம் ஆண்டு புதிய கலாச்சாரத்தில் வந்த இந்தக் கட்டுரையை காலப்பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். படியுங்கள், குற்ற உணர்வு கொள்ளுங்கள்!
    - வினவு
    ______________________________________________________________________________
    ஹர்ஷ் மந்தர்
    ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர்.
    குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் போலீசும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.
    _____________________________________________________________________________
    யங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய குஜராத்திலிருந்து வருகிறேன். வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட்டது. குற்றவுணர்வையும் அவமானத்தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.
    அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக்கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…. அவர்களது முகத்தில் ததும்பும் துயரம்… இப்படியொரு துக்கத்தை நான் இதுவரை கண்டதில்லை.

    அன்பே சிவம் மாதிரியான படங்களை இனி இயக்கமாட்டேன்” - சுந்தர்.சி

    இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படம் என்று ரசிகர்களால் இன்றும் பாராட்டப்படும் திரைப்படம் ‘அன்பே சிவம்’. கமல்ஹாசனின் கதை நல்ல முறையில் இயக்கி, கதைக்கருவை சிறிதும் குலைக்காமல் கொடுத்திருந்தார் சுந்தர்.சி. இன்று எவ்வளவு பாராட்டப்பட்டாலும் அன்பே சிவம் வெளிவந்த போது படுதோல்வி அடைந்தது.சுந்தர்.சி-க்கு சம்பள பாக்கி, தயாரிப்பாளருக்கு நஷ்டம் என பல சங்கடங்களை ஏற்படுத்தியது அன்பே சிவம். சுந்தர்.சி அன்பே சிவம் மாதிரி மறுபடியும் ஒரு படம் கொடுப்பாரா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் ஒரு வாரப்பத்திரைக்கு அளித்துள்ள பெட்டியில் சுந்தர்.சி “ அன்பே சிவம் மாதிரி இன்னொரு படமா? சான்ஸே இல்ல.அன்பே சிவம் படம் எடுத்தபின் ஒரு வருடம் வீட்டில் சும்மா உட்காந்திருந்தது மாதிரி மறுபடியும் என்னால சும்மா உட்கார முடியாது. கமல் நடிப்பு நல்லா இருந்துது, அன்பே சிவம் நல்ல கதைனு டி.வில பார்த்துட்டு சொல்றவங்களுக்காக ஒருத்தன் வாழ்க்கையை அடமானம் வச்சு படம் எடுக்க முடியாது.  பேங் அக்கவுண்ட் பிளாக் பண்ணி, பணமே இல்லாம எத்தனை நாள் கஷ்டப்பட்டேன் தெரியுமா.இன்னைக்கு படத்தை காவியம்னு சொல்லும் போது கோவம் தான் வருது.மக்களுக்கு தேவையானது கமெர்ஷியல் காமெடி சப்ஜெக்ட். அதை நல்லபடியா கொடுத்தா போதும்” என்று கூறியுள்ளார்.

    புதிய உலகமயமாக்கம்: யார் பலன் பெறுகிறார்கள்?

    price_of_civilization_jeffrey_sachs200 ஆண்டுகளுக்கு முன்பாக, ஐரோப்பாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் தொழிற்புரட்சியை மேம்படுத்துவதும் மனிதத்தன்மையை ஏற்படுத்துவதும்தான் மிகப் பெரிய சவாலாக இருந்தது. 150 ஆண்டுகளுக்கு முன்பாக, தொழிற்சாலைகள் மிகுந்த நகரங்களில் அதிக எண்ணிக்கையில் குடி பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பையும், நகரங்களில் வாழ்வதற்கேற்ற சூழலை ஏற்படுத்துவதும் சவாலாக இருந்தது. 75 ஆண்டுகளுக்கு முன்பாக, மக்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்குவதே சவாலாக இருந்தது. ஆனால் இன்று உலகம் எதிர் கொள்கிற மிகப் பெரிய சவால், புதிய உலகமயமாதல்தான் என்கிறார் The Price of Civilisation நூலாசிரியர் ஜெஃப்ரி சாக்ஸ் (Jeffrey Sachs).
    உலகமயமாதல் எளிதாக சாத்தியமானதற்கு என்ன காரணங்கள்?  உலகமயமாதலை அமெரிக்கா சரியாக எதிர் கொண்டுள்ளதா? மேலும், இப்புதிய உலகமயமாதலால் பலனடையும் நாடுகள் எவை? உலகமயமாதலின் தாக்கத்தால் ஏற்படப் போகும் உலக அரசியல் மாற்றங்கள் என்னவாக இருக்கும்? எம்மாதிரியான சமூகம் இதனால் பலன் பெறுகிறது? புதிய உலகமயமாதல் ஏற்படுத்திய தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள் என்ன? அமெரிக்கா இனிவரும் காலங்களில் உலகமயமாதலை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும்? இது போன்ற கேள்விகளை இந்தப் புத்தகம் எதிர்கொள்கிறது.
    அதென்ன புதிய உலகமயமாக்கல்?

    இசுலாமிய தீவிரவாதத்திற்கு பாரதீய ஜனதாவின் அழைப்பு!

    குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் முடிந்துவிட்டது. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும். இந்த இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரயத்தனம் செய்து வருகிறார். ஆகவே வருங்கால பிரதமர் போட்டிக்குரியவரின் கடந்த கால தகுதிகளை சீர்தூக்கி பார்ப்பது அவசியம்.  2002ஆம் ஆண்டு புதிய கலாச்சாரத்தில் வந்த இந்தக் கட்டுரையை காலப்பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். படியுங்கள், குற்ற உணர்வு கொள்ளுங்கள்!

    காபியில் மயக்க மருந்து : அம்மா மயங்கியதும் மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்

    மதுரை ரயில் நிலையத்தில் தாய்க்கு காபியில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து இளம் பெண்ணை கற்பழித்ததாக வாலிபர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
    திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலஞ்சியை சேர்ந்தவர் ரேவதி (வயது30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக தாயுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
    அங்கு சிகிச்சை பெற்றபிறகு நேற்று இரவு ஊருக்கு செல்வதற்காக மதுரை ரயில் நிலையம் வந்தனர். அங்கு அவர்கள் அமர்ந்து இருந்தபோது ஒரு வாலிபர் ரேவதி தாயாருடன் பேசி உள்ளார். அப்போது அவர் வாங்கி கொடுத்த காபியை தாய் குடித்ததும் மயங்கி விட்டார்.
    நீண்ட நேரத்திற்கு பிறகு கண் விழித்த அவர் மகளுடன் ரயில் ஏறி தென்காசி புறப்பட்டார். திருமங்கலம் அருகே ரயில் சென்றபோது ரேவதிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    அப்போது மகளிடம் விசாரித்தபோதுதான் அவளை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்த வாலிபர் அதன் பிறகு ரேவதியை தனியாக அழைத்து சென்று கற்பழித்து விட்டதாக தாய் தெரிவித்துள்ளார். காமவெறி பிடித்து அலைகிறது ஒரு கூட்டம் முதல்ல இதை கவனிங்கப்பா ஐ நா உண்ணாவிரதமெல்லாத்தையும் விட உங்க வீட்டை முதல்ல சுத்தமாகுங்க  

    Jayalalitha: தேர்வு மாற்றங்கள் தமிழர்களுக்கு இழைக்கும் அநீதி

    சென்னை:"ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளை தமிழில் எழுத, தமிழ் வழியில் பட்டம் பெற்றவர்கள் தான் தகுதியானவர்கள் என, யு.பி.எஸ்.சி., கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாட்டை, உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.இதுகுறித்து, பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,), ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத முடியாதவாறு, புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. வரும் கல்வியாண்டில் முதல், இது நடைமுறைக்கு வருகிறது.யு.பி.எஸ்.சி., நான்கு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. முதல் மாற்றத்தில், உயர்நிலைக் கல்வி, பட்டப்படிப்பு ஆகியவற்றை தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும். அப்போது தான், ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுத முடியும் என, கூறியுள்ளது. இவ்விதி, இந்தி மொழிக்கு விதிக்கப்படவில்லை.இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின், 8ம் அட்டவணையில், இந்தி, தமிழ் ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், இந்த புதுவிதி தமிழ் பேசும் மாணவர்களுக்கும் மட்டும் எனக் கூறுவது, தமிழ் பேசுவதாலேயே, தண்டனை விதிப்பது போல் உள்ளது.கிராமப்புற மாணவர்கள், குறிப்பாக, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்கள், இதனால் கடுமையாக பாதிக்கப்படுவர். அசியல் அமைப்புச் சட்டம், 14 மற்றும் 16வது பிரிவில் அளிக்கப்படும், அனைவரும் சமம் என்ற உரிமையைப் பறிப்பதாக உள்ளது. கருணாநிதியின்  முன்மொழிதலை ஜெயா வழிமொழிந்து வருவது நல்லாத்தான் இருக்கு. அப்பறம் ஏன் அவர் தொடங்கிய திட்டங்களை சின்னாபின்னப் படுத்தி வருகிறார்.

    எழுத்துப் பூர்வ கோரிக்கையை ஏற்க ராஜா மறுப்பு

    புதுடில்லி: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில், பார்லிமென்ட் கூட்டு குழு முன் நேரில் ஆஜராவதற்கு பதில், எழுத்துப் பூர்வமாக விளக்கம் தரும்படி கூறிய, பி.சி.சாக்கோவின் கோரிக்கையை, முன்னாள் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் ராஜா ஏற்க மறுத்தார். நேரில் ஆஜராகவே விரும்புவதாக கடிதம் எழுதியுள்ளார்"2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, ஜே.பி.சி., - பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதன் அறிக்கையை, நடப்பு பார்லிமென்ட் தொடருக்குள் தாக்கல் செய்ய, இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில், இக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்த, அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, மத்திய தொலை தொடர்பு துறையின் முன்னாள் அமைச்சர், ராஜாவின் செயல்பாடுகள் குறித்து, கடுமையாக விமர்சித்து இருந்தார்.இதையடுத்து, தன் தரப்பு கருத்தையும், பார்லிமென்ட் கூட்டுக் குழு முன் தெரிவிக்க, அனுமதிக்க கோரி, லோக்சபா சபாநாயகர் மீரா குமாருக்கும், கூட்டுக் குழுவின் தலைவர், பி.சி.சாக்கோவுக்கும், ராஜா கடிதம் எழுதி இருந்தார்.

    Manmohan Sing:வாக்குறுதியை காப்பாற்றா விட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்

    கொடுத்த வாக்கை காப்பாற்றா விட்டால், அதற்குரிய விளைவுகளை, இத்தாலி அரசு சந்தித்ததே தீர வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபாவில் எச்சரிக்கை விடுத்தார்.கடந்த ஆண்டு பிப்ரவரியில், கேரளாவைச் சேர்ந்த, இரு மீனவர்களை, இத்தாலி நாட்டுக் கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் இருவர், சுட்டுக் கொன்றனர். கடற்கொள்ளையர்கள் என நினைத்து, மீனவர்களை தவறுதலாக சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது.கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள், "இத்தாலியில் நடக்கும் தேர்தலில் ஓட்டு போட வேண்டும்' எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், அவர்கள் இத்தாலி சென்று வர, நான்கு வாரங்களுக்கு அனுமதி வழங்கியது.அவர்களை திரும்ப இந்தியா கொண்டு வந்து ஒப்படைப்பதாக, இத்தாலி நாட்டு தூதரகம், சுப்ரீம் கோர்ட்டில் உறுதி அளித்தது.
    இந்நிலையில், "கடற்படை வீரர்களை, திரும்பவும் இந்தியாவுக்கு அனுப்பும் திட்டம் இல்லை' என்று இத்தாலி அரசு, இரண்டு நாட்களுக்கு முன் திடீரென அறிவித்தது.

    புதன், 13 மார்ச், 2013

    360 கோடி ஹெலிகாப்டர் ஊழல் : விமானப்படை முன்னாள் தளபதி தியாகி மீது எப்ஐஆர் பதிவு

    tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
    புதுடெல்லி-: இத்தாலி ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி, முன்னாள் மத்திய அமைச்சரின் சகோதரர் ஆகியோர் மீது சிபிஐ இன்று எப்ஐஆர் பதிவு செய்தது. மேலும் டெல்லி, குர்கான், சண்டிகரில் உள்ள 14 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிகள் உபயோகத்துக்காக இத்தாலியை சேர்ந்த பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து ரூ.3600 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க கடந்த 2010ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் பெறுவதற்காக இந்தியர்கள் சிலருக்கு ரூ. 360 கோடி லஞ¢சம் இத்தாலி நிறுவனம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த ராணுவ அமைச்சர் அந்தோணி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து முதல்கட்ட விசாரணை அறிக்கையை சிபிஐ தயார் செய்தது.

    சென்னையை கலக்கும் MGR படங்கள்

    எம்.ஜி.ஆரின் பழைய படங்கள் சென்னை தியேட்டர்களில் மீண்டும் ரிலீசாகி வசூல் குவிகின்றன. தற்போது 4 படங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.மகாலட்சுமி தியேட்டரில் ‘நினைத்ததை முடிப்பவன்’ படம் திரையிடப்பட்டு ஒரு வாரத்தை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. பிராட்வே தியேட்டரில் ‘வேட்டைக்காரன்’ படமும், பாடி சிவசக்தியில் ‘ரகசிய போலீஸ் 115’ படமும், ஓட்டேரி பாலாஜி தியேட்டரில் ‘விக்கிரமாதித்தன்’ படமும் திரையிடப்பட்டு உள்ளது. அடுத்த வாரம் ‘சக்கரவர்த்தி திருமகள்’ படம் வருகிறது. நிறைய புது படங்கள் ஓரிரு நாட்களிலேயே கூட்டம் இல்லாமல் தியேட்டர்களில் இருந்து தூக்கப் படுகின்றன. ஆனால் எம்.ஜி.ஆர். படங்களை திரையிடும் தியேட்டர்கள் லாபம் ஈட்டுகின்றன. எம்.ஜி.ஆர். படம் ஒவ்வொன்றும் ரிலீசாகும் போதெல்லாம் ரசிகர்கள் தியேட்டர்களில் எம்.ஜி.ஆர். கட் அவுட்கள், கொடி தோரணங்கள் அமைத்து விழாவாக கொண்டாடுகிறார்கள்   nakkheeran.in

    Pakistan 300 பேரால் வாலிபர் கல்லால் அடித்துக்கொலை

     பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் 'குர்ரம்' என அழைக்கப்படும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.  பஞ்சாப் மாவட்டம், மியான்வலி பகுதியை சேர்ந்தவர் நூர்தீன். இவர் பரச்சினர் என்ற இடத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வந்தார். அங்கு நூர்தீனுக்கும் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளத்தொடர்பாக மாறியது.;இது உள்ளூர்வாசிகளுக்கு தெரிய வந்தது. எனவே அவரை அங்கிருந்து பணிமாற்றம் செய்ய வேண்டும் என போராடினார்கள். இதனையடுத்து அவர் வேறு ஊருக்கு மாற்றப்பட்டார்.  என்றாலும், அந்த பெண்ணை அவர் ரகசியமாக சந்தித்து பழகி வந்தார். நேற்று முன் தினம் மாலை, அந்த பெண்ணை தன்னுடன் அழைத்து செல்வதற்காக பரச்சினருக்கு வந்த நூர்தீனை பெண்ணின் உறவினர்கள் ஒரு அறைக்குள் பூட்டி வைத்து 'ஜிர்கா' எனப்படும் கிராம பஞ்சாயத்தினருக்கு தகவல் அளித்தனர்.கள்ளத்தொடர்பு வைத்திருந்த இருவரையும் சாகும் வரை கல்லால் அடித்து கொல்லுமாறு ஜிர்கா தலைவர் உத்தரவிட்டார்.இதனையடுத்து, பரச்சினர் பகுதியில் உள்ள ஒரு மயானத்தின் அருகே கண்கள் கட்டப்பட்ட நிலையில் நூர்தீன் நேற்று வெட்டவெளியில் நிறுத்தப்பட்டார். அவர் மீது 300க்கும் மேற்பட்டவர்கள் கற்களை எறிந்துக் கொன்றதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.அவருடன் தனிமையில் இருந்த பெண்ணின் கதி என்னவாயிற்று? என்பது குறித்த தகவல் ஏதும் தெரிய வில்லை. nakkheeran.in

    போலீஸ் ஸ்டேஷனில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம்

    A 70-year-old retired police officer has been sentenced to 10 years in jail by a fast track court for wrongfully detaining and raping a woman in a police station 15 years ago. விதவைப் பெண்ணை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம்: வழக்கில் அதிரடி தீர்ப்பு
    டில்லியைச் சேர்ந்தவர், பரம்ஜித், 70. ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி. கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், டில்லி ஜப்பார்பூர் கலான் பகுதியில், எஸ்.ஐ.,யாக பணியாற்றினார். அப்போது, டில்லியைச் சேர்ந்த, ஒரு விதவைப் பெண்ணை, போலீஸ் ஸ்டேஷனுக்கு, வலுக் கட்டாயமாக அழைத்து வந்து, பல முறை பாலியல் பலாத்காரம் செய்தார்.பாதிக்கப்பட்ட பெண், வழக்கு தொடர்ந்தார். டில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின், பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகள் அனைத்தும், விரைவு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டன. இதன்படி, இந்த வழக்கும், விரைவு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. விரைவு கோர்ட் நீதிபதி, வீரேந்திர பட் முன், இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி, பரம்ஜித், "எனக்கு வயதாகி விட்டது. மற்றவர் உதவியின்றி, என்னால் செயல்பட முடியாது. எனவே, இந்த வழக்கில் எனக்கு கருணை காட்ட வேண்டும்' என, கோரிக்கை வைத்தார்.இந்த வழக்கில் நீதிபதி 12.03.2013 தீர்ப்பளித்தார். தீர்ப்பில் அவர் கூறியதாவது: பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிக்க, தற்போதுள்ள சட்டத்தில், போதிய அளவு கடுமையான தண்டனைகள் இல்லை. என்னை பொறுத்தவரை, இதுபோன்ற குற்றங்கள், மீண்டும் நடக்காமல் தடுக்க வேண்டுமானால், சம்பந்தபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டியது, அவசியம்.இந்த வழக்கை விசாரித்த போலீசார், தங்களின் சக அதிகாரியை காப்பாற்றுவதற்காக, மிகவும் தரக்குறைவாக நடந்துள்ளனர். இது, கண்டிக்க தக்கது. விதவைப் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, வயதை காரணமாக வைத்து, கருணை காட்ட முடியாது.அவருக்கு, 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, அவர் செலுத்த வேண்டும்.

    நடிகை ஷ்ரேயா தீபா மெஹ்தாவின் Midnight children

    நடிகை ஷ்ரேயா  தீபா மெஹ்தாவின்  Midnight children படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தாராம். முதல்ல வெளிநாடுகள்ல ரிலீசான படம் அங்கே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தலையாம்.  சரி, இந்தியால கலக்கும்னு நம்பினாராம். வந்ததும் தெரியாம, போனதும் தெரியாம பாக்ஸ் ஆபீஸ்ல படம் அபீட் ஆயிருச்சாம்... .. இதால ரொம்ப வருத்தமாம்....இருந்தாலும் தனக்கு உரிய ஸ்தானம் எப்படியும் யாராலும் அசைக்க முடியாது என்று நம்பிக்கையாக உள்ளாராம் 

    சோஹ்னா: மனிதர்கள் பெண்களை எப்படி மதிக்க வேண்டும்

    தமிழ், தெலுங்கு படங்களில் சிறு வேடங்களில் நடித்திருப்பவர் சோஹ்னா. இவர் கன்னடத்தில் ‘சவல் என்ற படத்தில் ராஜ்வால் தேவராஜ் ஜோடியாக  நடிக்கிறார். இவர் பெங்களூரில் உள்ள ஒரு மது பாரில் குரூப் டான்ஸராக இருந்தவர் என்று அந்த ஓட்டல் அதிபர் கூறியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. ‘என்னுடைய ஓட்டலின் பின்புற சுவற்றில் ஒரு படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் இடம்பெற்றிருந்த சோஹ்னாவின் போட்டோவை பார்த்து ஷாக் ஆனேன். சோஹ்னா என்னுடைய ஓட்டலில் உள்ள மது பாரில் குரூப் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தவர். இந்த குரூப் எம்ஜி ரோட் பகுதியில் உள்ள சில ஓட்டல்களில் மாறி மாறி நடனம் ஆடுபவர்கள் என்றார் ஓட்டல் உரிமையாளர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார் சோஹ்னா. அவர் கூறும்போது ‘அந்த நபர் சொல்வதில் உண்மை இல்லை. அப்படி பாரில் நடனம் ஆடியதற்கான ஆதாரம் எதையாவது அவர் காட்டினால் சினிமாவை விட்டே நான் போய்விடுகிறேன். என் மீது பொறாமை கொண்டவர்கள் எனது இமேஜ் மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இதுபோல் புரளி கிளப்புகிறார்கள். இது எனக்கு சோதனை காலம். இதுபோன்ற புரளியால் நான் வெறுப்பு அடைய மாட்டேன். பெண்களை இழிவு படுத்தும் இதுபோன்ற மனிதர்கள் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

    வைரங்கள் முத்துக்கள் குவிந்து கிடக்குது பேமிலிக்குள்ள சந்தோஷம் இல்லியே

    அன்பு பாசத்தை பற்றியும், குடும்பம் பற்றியும் மேடைகளில் கவிதை பொங்க பேசும் பெரிய அரசு கவிஞரின் பேமிலிக்குள் நடப்பது அதற்கு நேர் எதிர்மாறானதுதானாம். கவிஞரும் அவரது பொன்னான மனைவியும் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்வது கோலிவுட்டின் கோலி சோடாவுக்கு கூட தெரிஞ்ச ரகசியம்தான். சமீப காலமாக கம்யூனிஸ்ட் தலைவர் பெயர் கொண்ட மகனுக்கும், கவிஞருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசிக்கிறதில்லையாம். கவிஞரோடு இப்போ இருகிறது இளைய புத்திரன் மட்டும்தானாம். அவனை தன்னைப்போலவே பெரிய கவிஞனாக்குவதுதான் இப்போது கவிஞரின் இலக்காம். "கடலுக்கு அருகில் கடல் மாதிரி வீடு இருக்கு. வைரங்கள் ஒரு புறமும், முத்துக்கள் மறுபுறமும் குவிந்து கிடக்குது. ஆனால் பேமிலிக்குள்ள சந்தோஷம் இல்லியே" என்று வருந்துகிறது கவிஞரின் நட்பு வட்டாரம்.

    திருவனந்தபுரம், புனே விடுதிகளில் நெல்லை மாணவிகள் 4 பேர் பலாத்காரம்

    நெல் லையில் மாயமான பள்ளி மாணவிகள் 4 பேர் திருவனந்தபுரம், மும்பையில் ரவுடி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.நெல்லையை சேர்ந்த 4 மாணவிகள் அங்குள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 1 படித்து வந்தனர். அவர்கள் 4 பேரும் கடந்த 23ஆம் தேதி பள்ளியில் சிறப்பு வகுப்பு உள்ளதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு மற் றும் பல இடங்களில் தேடியும் மாணவிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதுகுறித்து பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வந்த நிலையில் காணாமல் போன மாணவிகளுடன் பிளஸ்1 படிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவன்  மற்றும் டூட்டோரியலில் படிக்கும் 2 மாணவர்களும் உடன் சென்றது தெரியவந்தது.இவர்களில் ஒரு மாணவி வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 40 ஆயிரத்தை எடுத்து சென் றார். இவர்கள் அனைவரும் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ரயிலில் மும்பை சென்றுள்ளனர். பின்னர் புனே சென்றனர். தகவல் அறிந்து தனிப்படை போலீசார் புனே சென்று அவர்களை மீட்டு, நெல்லை குற்றவியல் முதலாம் எண் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ராமலிங்கம் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

    இந்தியா வரமுடியாது, நாம் இங்கே மகிழ்ச்சியாய் உள்ளோம்!” -இத்தாலிய கடற்படை வீரர்கள்

    ரொம்ப.. ரொம்ப மகிழ்ச்சிங்க!
    viruvirupu

    ரொம்ப.. ரொம்ப மகிழ்ச்சிங்க!
    கடந்த வருடம் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்றுவிட்டு தற்போது இத்தாலியில் உள்ள கடற்படை வீரர்கள் இருவரும், “நாம் இத்தாலியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.
    இந்தியாவில் கொலைக் குற்ற விசாரணை குற்றவாளிகளான அவர்களை, உடனே திரும்ப அனுப்பி வைக்க இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.
    அவர்களை விசாரணைக்காக இந்தியா அனுப்ப முடியாது என்று இத்தாலி மீண்டும் உறுதியாக கூறியுள்ளது.
    கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி கேரள கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது, மஸிமிலானோ, சால்வடோர் ஆகிய இந்த இருவரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு மீனவர்கள் பலியாகினர். இரு இத்தாலியர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
    இவர்கள் இருவரும் தங்கள் நாட்டில் நடைபெறும் தேர்தலில் பங்கெடுக்க வேண்டி, இத்தாலி அரசின் உத்தரவாதப்படி உச்ச நீதிமன்ற ஜாமீனில் அனுப்பப்பட்டனர். இந்நிலையில் பன்னாட்டு கடல் எல்லையில் நடந்த இந்த சம்பவத்திற்கு பன்னாட்டு நீதிமன்றத்தில் தான் விசாரணை நடைபெறவேண்டும் என்று இத்தாலி கூறி, இவர்களை மீண்டும் இந்தியா அனுப்ப முடியாது என்று சொல்கிறது.
    இந்த இருவரும் Italia-1 டி.வி. சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் இருவரும் சிறிதுகாலம் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம். இத்தாலிய கடற்படை வீரர்கள் என்ற முறையில் நாட்டுக்கான எங்கள் பணியை திரும்ப செய்ய இங்கு வந்துவிட்டோம். தாய்நாட்டில் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்தனர்.
    இத்தாலி அரசின் உத்தரவாதப்படி இவர்களை அங்கு அனுப்பி வைத்த மத்திய அரசு, மகிழ்ச்சியாக இல்லை!

    பல பெண்களுடன் தொடர்பு,, கலெக்டருக்கு எதிராக மனைவி புகார்!

    அரியலூர்: அரியலூர் மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் செந்தில் குமாருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி, தற்போதைய கலெக்டரிடம்  பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அரியலூர் கலெக்டராக பணியாற்றிய செந்தில்குமார் மீது பல்வேறு புகார்கள் வந்ததை தொடர்ந்து, கடந்த வாரம் நாகர்கோவில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
    இந்நிலையில், அவரது மனைவி செல்வ நாயகி ( 45 ) ,  இன்று தனது மகள் ஷாலினியுடன் வந்து,  அரியலூர் மாவட்ட கலெக்டர் ரவிக்குமாரை நேரில் சந்தித்து, தமது கணவருக்கு எதிராக பரபரப்பான புகார் மனு ஒன்றினை அளித்தார்.
    அதில், " நான் தற்பொழுது தர்மபுரி மாவட்டம் ஹரூர் டவுண் அரசினர் பெண்கள் மேனிலை பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறேன். எனக்கும், செந்தில் குமாருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த பெண் ஷாலினி, எஸ். ஆர். எம். மருத்துவக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டும், இளைய மகள் யாழினி, ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளியில் பிளஸ் டூவும் படித்து வருகின்றனர்.

    பாலியல் குற்றங்கள் தடுப்பு மசோதா விவகாரத்தில் கருத்து வேறுபாடு

    புதுடில்லி:பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்கும், சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில், நேற்று நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதையடுத்து, இதுபற்றி விவாதிக்க, வரும், 18ம் தேதி, அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை அடுத்து, இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, கடுமையான தண்டனை வழங்கவும், பெண்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவும், குற்றவியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்தது. "பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண், இறந்து விட்டாலோ அல்லது செயல்பட முடியாத அளவுக்கு முடங்கி விட்டாலோ, அந்த குற்றத்தை செய்தவருக்கு, மரண தண்டனை அளிக்க வேண்டும். சிறார் சட்ட வயது வரம்பை, 18லிருந்து, 16 ஆக குறைக்க வேண்டும்' என்பது உட்பட, பல முக்கிய விதிமுறைகள், இந்த சட்ட திருத்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

    செவ்வாய், 12 மார்ச், 2013

    பரதேசி.. பிரிட்டிஷ்காரன் காலத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்

    இம்மாதம் 15-ம் தேதி ரிலீசாக போகிறது பாலாவின் பரதேசி. வழமையாக பாலா ஒரு படத்தை முடித்து தியேட்டருக்கு அனுப்பும்போது, ஊரெல்லாம் கடன்வாங்கி, அவரே கிட்டத்தட்ட ஒரு ‘பரதேசி’ ஸ்டேஜூக்கு வந்து விட்டிருப்பார். ஆனால் இப்போது, ஆளே மாறிவிட்டார். இந்த பரதேசி, பாலாவை பரதேசி ஆக்கவில்லை. ஒவ்வொரு முறை இவர் படம் எடுத்து அது தியேட்டருக்கு வரும்போதும் இவர் கடனாளியாகி நிற்பார். முதல் பிரதி அடிப்படையில் படம் இயக்கி தரும் பாலா, தான் சொன்ன பட்ஜெட்டை தாண்டி பணம் கரையும் போது, தன் செல்வாக்கை வைத்து ஊரெல்லாம் கடன் வாங்கி படத்தில் போடுவாராம். இப்படி செய்து செய்தே கடனாளியானவர், பரதேசியை சொந்தமாகவே தயாரிக்க முடிவு எடுத்தபோது, “தொலைந்தார் இவர்” என்று ஊகம் செய்தவர்கள் பலர். ஆனால் இந்த படத்தின் பட்ஜெட்டும் பாலாவின் கையை மீறி போகவில்லை. படத்தையும் 90 நாட்களில் எடுத்து முடித்து விட்டார். வியாபாரமும் படு அமர்க்களம். “இது கோடம்பாக்கம்தானா… இவர் பாலாதானா..?” என்று அவரது அசிஸ்டென்ட்களே வியக்கும் அளவுக்கு, எவ்ரிதிங் அன்டர் கன்ட்ரோல்!
    பிரிட்டிஷ்காரன் காலத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பட்ட அவஸ்தைதான் படத்தின் கதை. இந்த கதை பாலாவை தேடி வந்ததே, மற்றொரு சுவாரசியமான கதை!

    ஜக்கி வாசுதேவை ஆதரங்களுடன் தோலுரிக்கும் சவுக்கு!

    ஈஷாவுக்கு விருதுvinavu.com  ஜக்கி வாசுதேவை ஆதரங்களுடன் தோலுரிக்கும் சவுக்கு!"
    ஜக்கி வாசுதேவ் மோசடியாக எப்படி ஒரு ஆன்மீக தொழிலதிபரானார் என்பதை, அரசு ஆணைகள், புகைப்படங்கள் என விரிவான ஆதாரங்களுடன் சவுக்கு வெளியிட்டிருக்கும் இந்தக் கட்டுரையை படிப்பதோடு பரப்புமாறும் பரிந்துரைக்கிறோம். ஒரு கேடி கிரிமினல் ஆன்மீகம் எனும் பெயரில் ஊரை ஏமாற்றி வளைத்துப் போட்டுக் கொண்டதோடு, இருக்கும் சட்ட நடைமுறைகளை மயிரளவுக்கும் மதிக்காமல் திமிர்த்தனமாக நடந்து வருவதை விரிவான ஆதாரங்களோடு சவுக்கு கட்டுரை அம்பலப்படுத்தியிருக்கிறது.

    படம் : சவுக்கு
    ஜக்கியின் மோசடிகள் மற்றும் திருட்டுத்தனங்கள் எனும் அளவில் சவுக்கின் கட்டுரை சரியான முறையில் எழுதப்பட்டிருந்தாலும், ஒரு தொகுப்பான புரிதலுக்காக மேலும் சில விவரங்களையும் இணைத்துப் புரிந்து கொள்வதே சரியானதாக இருக்கும் என்று இந்த சிறு குறிப்பையும் சேர்த்து வினவு வாசகர்கள் கவனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோருகிறோம்.
    ஜக்கி வாசுதேவை ஆனந்த விகடன் வளர்த்து விட்டதும், கடந்த தி.மு.க ஆட்சியில் கருணாநிதியோடு ஜக்கிக்கு ஏற்பட்ட நெருக்கமும் அனைவரும் அறிந்த ஒன்று தான். எனினும், இவை மாத்திரமே அவரது இமாலய வளர்ச்சிக்குக் காரணமில்லை. மகரிஷி மகேஷ் யோகியின் வழிவந்தவரான ஸ்ரீ ரிஷி பிரபாகர் என்பவரிடமிருந்து ‘யோக’ (தியானம், மூச்சுப்பயிற்சி, ஆசனம் இன்னபிற) முறைகளைக் கற்றுக் கொள்ளும் ஜக்கி வாசுதேவ், மைசூரிலிருந்து தமிழகம் வந்து தனது கடையைத் திறந்த ஊர் திருப்பூர். ரிஷி பிரபாகரிடமிருந்து பிரிந்து வந்து தனி கம்பேனி ஆரம்பிக்கும் ஜக்கி, அங்கே தான் முதன் முதலாக தனது அறக்கட்டளையை பதிவு செய்தார்.
    திருப்பூர் பனியன் முதலாளிகளைப் புரவலர்களாக கொண்டு தொண்ணூறுகளின் துவக்கத்திலேயே தனது “சகஜஸ்திதி யோகா” வகுப்புகளைத் துவங்குகிறார். சற்றேறக்குறைய அதே காலகட்டத்தில் கோவையில் ஆலந்துறையை அடுத்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இடங்களை வளைக்கிறார். 1999-ம் ஆண்டு அங்கே தியான லிங்கத்தை நிறுவியதில் இருந்து அவரது அசுர(தேவ) வளர்ச்சி துவங்குகிறது. இரண்டாயிரங்களின் துவக்கத்திலேயே இவர் நடத்தும் சிவராத்திரி நிகழ்ச்சிகளுக்கு (கார்ப்பரேட் மார்கெட் உத்திகளால்) லட்சக்கணக்கானவர்கள் வரத் துவங்கினர். நல்ல பிரபலம் அடைந்த பின் தான் “அத்தனைக்கும் ஆசைப்படு” தொடர் விகடனில் வெளியாகத் துவங்கியது.

    மணியம்மையாரின் பொதுவாழ்க்கை கடவுள் மதம் ஜாதி


    வரலாற்றை ஆழ்ந்து படித்தால் ஆதிச் சமூகம் என்பது தாய் வழிச்சமூகமாகத்தான் இருந்ததுள்ளது என்பதை அறியமுடியும்.ஆனால்,காலப் போக்கில் பெண்களை இல்லத்தரசி(?)ஆக்கிவிட்டு குடும்பத்தலைவர்கள் ஆளுமை செலுத்தத் தொடங்கிவிட்டார்கள்.பொருள் தேடல் பின்னால் வருவாய் ஈட்டல் என்கிற முக்கியப் பணியை மட்டும் ஆண்கள் எடுத்துக்கொண்டனர். அதேநேரம் குழந்தைகளை ஈன்றல், வளர்த்தல், சமைத்தல், பெரும்பகுதி நேரம் பராமரித்தல் என பல பணிகள் பெண்களுக்கென ஆனது.
    பெண்ணுரிமைக் குரல் ஒலிக்கத் தொடங்கிய காலத்தில்கூட பொது வாழ்க்கைக்குப் பெண்கள் வராமலேயே இருந்தனர். விதி விலக்குகள் ஒன்றிரண்டு இருக்கலாம்; அவையும் அரச மரபுப் பெண்களாக இருந்தனர். இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் சில பெண்கள் ஈடுபட்டதுண்டு. அவர்களும் முழுமையாக ஈடுபட்டதாகச் சொல்லமுடியாது.அக்காலகட்டத்தில் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலில்,வைக்கம் சத்யாகிரகத்தில் ஈடுபட்டவர்கள் பெரியாரின் மனைவி நாகம்மையாரும், கண்ணம்மையாரும்தான் தீவிரமாகக் களத்தில் குத்தித்தவர்கள் என்பதற்கு காந்தியாரின் வாக்குமூலமே ஆதாரம்.
    இத்தகைய பின்புலத்தில் தமிழக வரலாற்றில்...அல்ல...அல்ல...இந்திய வரலாற்றிலேயே ஒரு பெண் தன்னை முழுமையாக பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்தார் என்றால், அவர் அன்னை மணியம்மையார்தான் என்பதே மறுக்கமுடியாத உண்மை.

    வேலைகேட்டு வந்த பெண்களை அறையில் அடைத்து கொடுமை

    வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர், மகன் கைது நாகர்கோவில் கோட்டாறு பர்வதவர்த்தினி தெருவில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் வெளிமாவட்டங்களிலிருந்து ஆட்களைத் தேர்வு செய்து வீட்டு வேலை, நோயாளிகளைக் கவனித்தல் போன்ற வேலைகளுக்கு அனுப்பி வந்தது.இந்நிலையில், கோட்டாறு காவல் நிலையத்தை ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் 3 பெண்கள் அறையில் அடைத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாகத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீஸார் அந்த வேலைவாய்ப்பு நிறுவனத்துக்குச் சென்றனர்.அங்கு ஓர் அறையில் மூன்று பெண்கள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை போலீஸார் மீட்டு விசாரித் ததில், அவர்கள் அரியலூர் புதிய மார்க்கெட் தெருவைச்  சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி ராஜாமணி (39), கரூர் மாவட்டம், குளித்தலை  மஞ்சள்குழிபட்டியைச் சேர்ந்த சின்னத்துரை மனைவி காளியம்மாள் (45), மதுரை  பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி செண்பகவல்லி (53) என்பது  தெரியவந்தது.இந்நிறுவனத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இவர்கள் நாகர்கோவில் வந்துள்ளனர். வீட்டு வேலைக்கு இவர்களைத் தேர்வு செய்துள்ளதாக, நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனராம். இதையடுத்து, சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு வேலையில் வந்து சேர்வதாக மூன்று பெண்களும் தெரிவித்தபோது, வீட்டுக்கு செல்லக் கூடாது எனக் கூறிய நிர்வாகிகள், ஓர் அறையில் 3 பேரையும் அடைத்துள்ளனர். அவர்களுக்கு உணவும் தரவில்லையாம்.>விசாரணையில் இந்தத் தகவல்கள் தெரியவந்ததையடுத்து, ராஜாமணி அளித்த புகாரின்பேரில், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து வேலைவாய்ப்பு நிறுவன  உரிமையாளர் தமிழ்வேந்தன் (65), இவரது மகன் ராஜா சாலமோன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.nakkheeran.in

    8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி

    லக்னோ: உ.பி.,யில், 8 கோடி ரூபாய் மதிப்பிலான, உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கான, விழாக்களுக்காக, 12 கோடி ரூபாயை, அம்மாநில அரசு செலவிட்ட, பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசு, வேலை வாய்ப்போற்றோருக்கு, உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, காசோலைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு, 8 கோடி ரூபாய்.இந்நிலையில், உதவித் தொகை வழங்குவதற்காக, கடந்தாண்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விழாக்கள் நடத்தப்பட்டன. "இந்த விழாக்களுக்காக, எவ்வளவு தொகை செலவிடப்பட்டது? அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது' என்பது பற்றிய தகவலை தெரிவிக்கும்படி, ஊர்வசி சர்மா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்திருந்தார்.இதற்கு அளிக்கப்பட்டுள்ள பதில்:கடந்தாண்டு, லக்னோ உள்ளிட்ட பல இடங்களில், வேலை வாய்ப்போற்றோருக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கான விழாக்கள் நடத்தப்பட்டன.

    கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் BJP க்கு பலத்த அடி

    பெங்களூரு:கர்நாடகாவில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான, "செமி பைனல்' என, கருதப்பட்ட உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் அபரா வெற்றி பெற்றுள்ளது.ஆளும் கட்சியான, பா.ஜ., வில் நிலவிய கோஷ்டி பூசலால், அக்கட்சிக்கு வாக்காளர்கள் பலத்த அடி கொடுத்துள்ளனர். "பா.ஜ., வுக்கு பாடம் புகட்டுவோம்' என்று கூறிய, எடியூரப்பா, ஸ்ரீராமுலுவின் கட்சிகளும் படுதோல்வி அடைந்துள்ளன.கர்நாடகாõவில், ஏழு மாநகராட்சிகள், 43 நகராட்சிகள், 93 டவுன் பஞ்சாயத்துகள் உட்பட, 208 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள, 4,976 வார்டுகளில், 24 வார்டுகளில் யாரும் மனு தாக்கல் செய்யாததாலும், 85 வார்டுகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாலும், 4, 867 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தது இவற்றில், 1,960 வார்டுகளில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. தேவகவுடாவின், மதசார்பற்ற ஜனதா தளமும், பா.ஜ., வும் தலா, 906 வார்டுகளிலும்; எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி, 274 வார்டுகளிலும்; ஸ்ரீராமுலுவின், பி.எஸ்.ஆர்., காங்கிரஸ், 86 வார்டுகளிலும்; சுயேச்சைகள், 776 வார்டுகளிலும்; மார்க்., கம்யூ., 13 வார்டுகளிலும்; தேசிய வாத காங்கிரஸ், இந்திய கம்யூ., தலா, ஒரு வார்டிலும்; மற்றவர்கள், 29 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    Shiv Shankar Menon: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் வராது

    புதுடில்லி : "" எதிர்காலத்தில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும், போர் நடப்பதற்கு, மிக குறைந்த வாய்ப்புகளே உள்ளன,'' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சிவசங்கர் மேனன் கூறினார். டில்லியில் நேற்று நடந்த ஒரு விழாவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சிவசங்கர் மேனன் பங்கேற்றார். அவரிடம்,"அடுத்த, 30 ஆண்டுகளில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் போர் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளதா?' என, செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, அவர் அளித்த பதில்: எதிர்காலத்தில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் போர் நடப்பதற்கான வாய்ப்பு, மிகவும் குறைவு. இரு நாடுகளுக்கும் இடையே, பல, 1,000 ஆண்டுகளாக, கலாசார ரீதியிலான உறவும், தொடர்பும் உள்ளது. எனவே, போர் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.சமீபத்தில் கூட, இரு நாடுகளுக்கும் இடையே, கடற்பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்தன. இரு நாடுகளுக்கும் இடையே, நல்ல உறவு இருப்பதை, இதன்மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, சிவசங்கர் மேனன் கூறினார்.

    திங்கள், 11 மார்ச், 2013

    சிம்பு-ஹன்சிகா காதல்? கோலிவுட்டில் பரபரப்பு

    சென்னை: சிம்பு-ஹன்சிகா காதல் வலையில் விழுந்திருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சிம்பு-நயன்தாரா சில வருடங்களுக்கு முன் நெருக்கமாக பழகி வந்தனர். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர்கள் உறவில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் ‘தான் காதல் வலையில் விழுந்திருப்பதாகவும் கடந்த ஒரு வருடமாக ஒரு நடிகையுடன் நட்பு மலர்ந்திருக்கிறது. அவர் தமிழ் நடிகை அல்ல. உறுதியாகும் வரை தனது காதல் பற்றி எதையும் வெளிப்படையாக சொல்லப்போவதில்லை என்று சிம்பு கூறி வந்தார்.

    வழக்கு நடத்த பணமில்லாமல் தடுமாறும் அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள்

    கடந்த 2006 திமுக ஆட்சியின் போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை சட்டமன்றத்தில் இயற்றியது திமுக. சட்டத்தை கொண்டு வந்தது மட்டும்மில்லாமல் தமிழகத்தில் மதுரை, திருவண்ணாமலை, திருச்சி என 6 இடங்களில் அர்ச்சக பயிற்ச pபள்ளிகளை திறந்தது. அதில் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அப்பள்ளிகளில் சேர்ந்து பயிற்சி பெற்றனர். இரண்டு வருட பயிற்சியை 206 மாணவர்கள் முடித்தனர்.இந்நிலையில் சாமி சிலையை மற்ற சாதியினர் தொட்டால் தீட்டாகிவிடும், சிலையில் இருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என அனைத்து சாதியினரும் அர்ச்சகாராகும் சட்டத்தை எதிர்த்து மதுரை சிவாச்சாரியார்கள் உச்சநீதிமன்றத்தின் மூலம் இச்சட்டத்துக்கு இடைக்கால தடை வாங்கினர். இதனால் இச்சட்டம் கேள்விக்குறியானதோடு அர்ச்சகருக்கு படித்த மாணவர்களின் நிலையும் கேள்விக்குறியாது. அர்ச்சகர் பயிற்சி பள்ளியும் இழுத்து மூடப்பட்டது. தடையை உடைக்க கடந்த திமுக அரசு முயன்றபோது, அவ்வழக்கை எடுக்கவிடாமல் செய்தது ஒரு தரப்பு.சிவாச்சாரியார்கள் - தமிழக அரசுக்கு இடையிலான இவ்வழக்கில் தங்களையும் ஒரு பிரதிவாதியாக வேண்டும்மென கேட்டு அர்ச்சக பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பாக மனித உரிமை பாதுகாப்பு மையம் மனு தாக்கல் செய்து நீண்ட போராட்டத்துக்கு பின் அவர்களையும் ஒரு மனுதாரராக சேர்த்துக்கொண்டது உச்சநீதிமன்றம்.5 ஆண்டுகளுக்கு பின் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வந்துள்ளது. கடந்த 30.1.13ந்தேதி நடந்த விசாரணையின் போது சிவாச்சாரியார்கள் சார்பில் பிரபல மூத்த வழக்கறிஞர் பராசரன்னும், தமிழகரசு சார்பில் ஜெவுக்கான வழக்குகளில் ஆஜராகும் பி.பி.ராவ்வும், அர்ச்சக மாணவர்கள் சங்கம் சார்பில் பிரபல மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் காலின்கான்சலே ஆஜராகினர்.வரும் 13.3.13ந்தேதி வழக்கு விசாரணை நடைபெறவுள்ள நிலையில் அர்ச்சக மாணவர்கள் வழக்கறிஞருக்கு பணம் தர முடியாத நிலையில் உள்ளனர். அதோடு, வழக்குக்காக டெல்லி செல்லும் மாணவ பிரதிநிதிகள் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் தடுமாறுகின்றனர். இதற்கு முன் இரண்டு முறை டெல்லி சென்றவர்கள் திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி வேணுகோபால்க்காக ஒதுக்கப்பட்ட இல்லத்தில் தங்கி வழக்கை கவனித்து விட்டு தமிழகம் திரும்பி வந்துள்ளனர் தற்போது டெல்லி செல்லும் மாணவ பிரதிநிதிகள் வழக்கறிஞர்க்கு தர வேண்டிய பீஸ் தர முடியாத நிலையில் இருப்பதால் மிக முக்கியமான இந்த வழக்கில் தாங்கள் தோற்றுவிடுவோமோ என பயப்படுகின்றனர் அர்ச்சக மாணவர்களும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தினரும். இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு இந்தியாவுக்கு மிக முக்கியமானது. இந்த தீர்ப்பு தந்தை பெரியாரின் கனவை நனவாக்கும்மா அல்லது பொசுக்குமா என்பது தெரியும். ஆண்டாண்டு காலமாக கருவறைக்குள் நுழை முடியாமலும், பிராமணர்களை தவிர மற்ற சாதியினர் அர்ச்சகராக முடியாத நிலையிலும் இருக்கும் மக்களுக்கான வழக்குயிது. இதில் தோற்றால் இன்னும் ஒரு பல நூற்றாண்டுகளுக்கு பிராமணர்களிடம் அடிமையாகவே இருக்க நேரிடும். மனம் உள்ளவர்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்திற்கு உதவினால் சிறப்பாகயிருக்கும் என கேட்கிறார் அச்சங்கத்தின் மாநில தலைவர் ரங்கநாதன். து. ராஜா

    தனுஷின் ‘கொலவெறி’ பழைய பாக்கி: அடுத்த படத்தின் தந்திர HOP STEP & JUMP பிசினெஸ்!


    Viruvirupu சமீபகால படங்கள் எதுவும் கைகொடுக்காத நிலையில், மீண்டும் தனது அண்ணனும் டைரக்டருமான செல்வராகவனுடன் ஒரு புதிய படத்தில் இணைகிறார் நடிகர் தனுஷ். இந்தப் படத்தை அவரே தயாரிக்கிறார் என்பது உபரி தகவல். ‘3’ படம் தம்மை உச்சத்தில் கொண்டுபோய் விடும் என்று தனுஷ் நினைத்திருந்தார். அந்த படத்தின் வியாபாரமும், உச்ச அளவிலேயே நடந்தது. தனுஷ் படத்துக்கான மார்க்கெட் ரேட்டைவிட, சுமார் 30 சதவீதம் அதிக விலைக்கு போனது. படத்தின் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா என்பதால், வந்த பணமும் குடும்பத்துக்கு உள்ளேயே நின்று கொண்டது!
    ஒய் திஸ் கொலவெறி பாடல் ஹிட் ஆனதைத் தொடர்ந்து அந்த பாடல் இடம்பெற்றிருந்த ஒரே காரணத்தால், 3 படத்தின் விநியோக உரிமையை தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா ஏலத்தில் விற்றார் என்றும் கூறப்பட்டது. ஏற்கனவே தனுஷ் நடித்த திருடா திருடி என்ற படத்தின் வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு விநியோக உரிமை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
    தமிழை விடுங்கள். ஆந்திராவில் பெரியளவில் மார்க்கெட் வேல்யூ இல்லாத தனுஷூக்கு இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு, ஒரு ஏரியாவில் மட்டும் ரூ.3 கோடிக்கு விற்பனையாகியது. எல்லாம் ஒரே பாடல் கொடுத்த எதிர்பார்ப்பு.
    பிசினெஸ் சென்ஸ் தெரிந்தவர்கள், இது மிக ரிஸ்க்கியான பபுள் என்றார்கள். நடந்ததும் அதுதான். பபுள் உடைந்தது.

    Delhi Rape ராம் சிங் கோழைத்தனமாக ஜெயிலில் தற்கொலை

    டெல்லி மருத்துவ மாணவியை பலாத்கார சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகிய ராம் சிங் என்பவர் திகார் ஜெயிலில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார் . இவர் இறுதி வரை திருந்தவே இல்லை. தான் செய்த படு பாதக செயலை எண்ணி வருந்தி இருந்தால் நீதிமன்றில் நடந்த சம்பவத்தை ஒப்புதல் வாக்கு மூலமாக சொல்லி இருக்கவேண்டும் . அதை செய்ய திராணி இல்லாமல் கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார் . தான் செய்த தவறை பகிரங்கமாக ஒப்பு கொண்டு தான் செய்ய கூடிய இறுதி நல்ல காரியமாக அந்த ஒப்புதல் வாக்கு மூலத்தை வழங்கி இருக்கலாம் .

    எதிர்நீச்சல் மீண்டும் தனுஷ் தயாரிப்பில் வருகிறது

    தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கும் தனுஷ் தற்போது ‘எதிர்நீச்சல் படத்தை தயாரித்து வருகிறார். அடுத்து இவர் தயாரிக்கும் படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்க உள்ளார். தனது தங்கை ஷகுன் நடிக்க வரும் தகவல்களை மறுக்கிறார் டாப்ஸி. அவரது தங்கை ஒரு பணியில் இருக்கிறார். அவர் நடிக்க வருவதாக இருந்தால் டாப்ஸியே அறிவிப்பாராம். அமீரின் ஆதிபகவன் பட ரிலீஸையொட்டி சிங்கப்பூர், மலேசியாவுக்கு சென்று வந்தார் ஜெயம் ரவி. தன் நடிப்பை ரசிகர்கள் பாராட்டியதை மறக்க முடியாதென்று இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்.

    பூரண மதுவிலக்கே இன்றைய தேவை

    ;எம்.டி.முத்துக்குமாரசாமி  :
    Fiscal Year
    Revenue in Crores
     % Change
    2002 - 03
    2,828.09
    2003 - 04
    3,639
    pastedGraphic.pdf 28.67%
    2004 - 05
    4,872
    pastedGraphic_1.pdf 33.88%
    2005 - 06
    6,086.95
    pastedGraphic_2.pdf 24.94%
    2006 - 07
    7,300
    pastedGraphic_3.pdf 19.93%
    2007 - 08
    8,822
    pastedGraphic_4.pdf 20.85%
    2008 - 09
    10,601.5
    pastedGraphic_5.pdf 20.17%
    2009 - 10
    12,491
    pastedGraphic_6.pdf 17.82%
    2010 - 11
    14,965.42
    pastedGraphic_7.pdf 19.80%
    2011 - 12
    18,081.16
    pastedGraphic_8.pdf 20.82%
    பூரண மது  விலக்கினை தமிழ் நாட்டில் அமல்படுத்தியே ஆகவேண்டிய சூழல் நிலவுவதாகவே நான் நம்புகிறேன். முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு தமிழ் நாட்டில் மது அடிமைகள் மிக அதிகமான அளவில்  பெருத்துள்ளனர். தனி நபர்கள் ஆரோக்கியம் கெட்டு, குடும்பங்கள் சீரழிய குடி இன்று தமிழகத்தின் தலையாய சமூகச் சீர்கேடாக உருவெடுத்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு தலைமுறையே முழுமையாகக் குடியினால் சீரழிந்து போயிருக்கிறது. இளம் தலைமுறையினரோ மேலும் மேலும் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். இன்றைக்கு குடியின் ஆதிக்கத்துக்கு உட்படாத கல்லூரி வளாகங்களோ விடுதிகளோ இல்லை எனும் அளவுக்கு குடி இளைஞர்களின் வாழ்வினை ஆக்கிரமித்திருக்கிறது. எந்த குறைந்த பட்ச வாழ்க்கைக்கும் லாயக்கற்ற ஊளைச் சதை தொங்க முப்பது முப்பத்தைந்து வயதிலேயே சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், நரை, மூப்பு எய்திய சோதாக்களால்  நிரம்பிய சமூகமாக ஏற்கனவே பலவீனப்பட்டு கிடக்கிறது தமிழகம். சோப்ளாங்கிகளுக்கு வர்க்கமில்லை; ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரர்கள், படித்தவர், படிக்காதவர்கள் என்று எங்கும் அவர்கள் விரவியிருக்கிறார்கள். 
    உடல் ஆரோக்கியத்தை பேணும் பண்பாடற்ற தமிழ் சமூகம் குறித்தான இரண்டு ஆய்வேடுகளை சமீபத்தில் நான் படித்தேன். இந்த ஆய்வேடுகளின் வழி தமிழ் சமூக வாழ்வு குறித்து வெளிப்படுகின்ற சில பொது முடிவுகளை கீழே தருகிறேன்.
    1. நடுத்தர வர்க்க  பெண்கள் இன்னும் அதிக அளவில் குடிக்கு அடிமையாகவில்லை என்றாலும் அவர்களும் மது அருந்த ஆரம்பித்துள்ளனர். ஆண்களுக்கும் பெண்களுக்குமான பிரிவினை மிக அதிகமாக மது அருந்துவதை ஒட்டி ஏற்படுகிறது.