Special Correspondent
www.splco.me/tamil/karuthukal/karuthu14.  :  இந்திய பணக்காரர்கள் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக ஹூரன் நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது. தற்போது 6-ஆவது ஆண்டாக, இந்திய பெரும்பணக்காரர்களின் பட்டியலை அது வெளியிட்டுள்ளது.
1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து வைத்துள்ளவர்களை மட்டுமே ஆய்வில் ஹூரன் சேர்த்துள்ளது.
இந்திய பெரும்பணக்காரர்களில் எப்போதும் போல, முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். நடப்பாண்டு அவரது சொத்து மதிப்பு சுமார் 58 சதவிகிதம் வரை அதிகரித்து மொத்த சொத்தின் மதிப்பு 2 லட்சத்து 57 ஆயிரத்து 900 கோடியாக ரூபாயாக உயர்ந்துள்ளது.

Special Correspondent இந்தியாவில் 2016-ஆம் ஆண்டில், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 339 பேர்களாக இருந்தது. அதுவே இந்தாண்டு 617 பேர்களாக அதிகரித்துள்ளது.இதில் எப்போதுமில்லாத வகையில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 287 பேர் புதிதாக 1,000 கோடி ரூபாய் என்ற அளவை தாண்டி பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். இந்தாண்டு பார்மா மற்றும் எப்எம்ஜிசி துறையைச் சேர்ந்தவர்களின் சொத்து மதிப்பே இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
2017-ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் பார்மா துறையில் இருந்து 79 பேரும், எப்எம்ஜிசி துறையில் இருந்து 63 பேரும் இடம்பெற்றுள்ளனர்.இதில் யோகா சாமியார் ராம்தேவ் நடத்தும் பதஞ்சலியும் அடக்கம் .