திங்கள், 30 ஆகஸ்ட், 2010

புலிகளின் 6 விமானங்கள் எரித்திரியாவில் பாதுகாக்கப்படுகின்றன

விடுதலைப் புலிகளின் ஆறு விமானங்கள் எரித்திரியாவில் பாதுகாக்கப்படுகின்றன
- பேராசிரியர் சேனக ஜயசேகர தகவல்
தனி இயந்திரங்களைக் கொண்டு இயங் கக் கூடிய ஆறு விமானங்களை புலிகள் எரித் தியாவில் பாதுகாப்பதாக சர்வதேச பயங்கர வாத ஒழிப்பு தொடர்பான நிபுணர் பேராசிரியர் சேனக ஜயசேகர தெரிவித்துள்ளார்.பேராசிரியர் சேனக ஜயசேகர பயங்கர வாத ஒழிப்பு மற்றும் புலனாய்வுத் தொடர்பான சிட்னி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுகிறார். அவர் இது தொடர் பில் மேலும் தெரிவித்ததாவது,

தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லாதொழிக்கும் அர சாங்கத்தின் முயற்சிகளுக்கு குமரன் பத்மநா தன் தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே திகழ்வ தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் குமரன் பத்மநாதன் தொடர்ச்சியாக உறவுகளைப் பேணிவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதன், ராஜன் மற்றும் எம்.வீ.கிறிஸ்டியானா கப்பல் ஆகியவற்றை கைது செய்தமை இலங்கை பாதுகாப்புத் தரப்பு எய்திய மிகப்பெரிய வெற்றிகளாக கரு தப்படவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மொத்த சொத்துக்களை மதிப்பீடு செய்வதில் சிக்கல் நிலைமை காணப் படுவதாகவும் அனேகமான சொத்துக்கள் மறைக்கப்பட்டு அல்லது வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தலைவர் ரெஜியிடம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் காணப்படுகின்றன.

தனி எஞ்சின்களைக் கொண்டு இயங்கக் கூடிய ஆறு விமானங்களை தமிழீழ விடு தலைப்புலிகள் எரித்திரியாவில் பாதுகாப்பாக பேணிவருகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற் கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத ஆட்கடத் தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டு மானால் அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் புகலிடக் கோரிக்கையா ளர்கள் குறித்த சட்டங்களில் திருத்தம் ஏற் படுத்தப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்றவகையில் உலக நாடுகள் இலங்கையர்களுக்கு அடைக்கலம் வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: