சனி, 6 ஏப்ரல், 2019

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி பிரகதி கொலை:உடல் சாலையில் ...

murder pollachi college girl murdernakkheeran.in - kalaimohan : கோவை பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் பிரகதி என்ற மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டள்ளார்.& கல்லூரிக்கு சென்ற மாணவியை காணவில்லை என பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த மாணவி சடலத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.  மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை அதனையடுத்து கோவை துடியலூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை இப்படி பரபரப்பை ஏற்படுத்திவந்த நிலையில் தற்போது சாலையில் மாணவி கொலை செய்யப்பட்டு சடலம் கண்டெடுக்கப்பட்டது மேலும் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் கூட்டியுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்த நபர்களை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.

கமலஹாசன் சில ஆயிரம் வாக்குகளை சிதறடிக்க ... தாம்பிராஸ் சபலம்

thetimestamil.com : சந்திர மோகன் : நடிகர் கமலஹாசன் உருவாக்கியுள்ள மக்கள் நீதி மையம் கட்சியானது, காங்கிரஸ் கட்சி மூலமாக திமுக கூட்டணியில் இடம் பெற செய்த முயற்சி தோல்வியுற்றதால், தனித்து போட்டியிடுகிறது.
ஆனாலும், MNM கட்சிகாரர்களும், சில செய்தி ஊடகங்களும் மாற்று அரசியல் மூன்றாவது அணி என்றெல்லாம் ஊதிப் பெருக்க முயற்சிக்கின்றன. உண்மை என்ன?
தமிழகத்தில் பார்ப்பனர் தலைமையிலான கட்சிகள்/ இயக்கங்கள் வரவேற்பு பெறுவதில்லை!
சுதந்திரப் போராட்ட காலத்தில், காங்கிரஸ் கட்சி வாயிலாக மயிலாப்பூர், மாம்பலம் பார்ப்பனர்கள், சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்ற தலைவர்களின் முயற்சிக்கு பிறகு, 50 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் பார்ப்பனர் தலைமையிலான கட்சிகள், இயக்கங்கள் உருவானதாகவோ, வெற்றி பெற்றதாகவோ வரலாறு இல்லை.
பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கம், திராவிட இயக்கத்தின் எழுச்சிக்கு பிறகு, பார்ப்பனர்கள் தலைமையில் கட்சி அமைக்கும் முயற்சிகள் நடைபெறவில்லை. ஜெயலலிதா வின் வருகை & எழுச்சியும் கூட, ஏற்கெனவே இடைநிலை சாதிகளின் கட்சியாக உருவெடுத்து இருந்த அதிமுக வில், திறமையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதில் இருக்கிறது.
2009 ல் தாம்பிராஸ் பிரமாணர் சங்கம் ஆதரவுடன் எஸ்.வி.சேகர் கட்சி அமைக்க எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஜெயலலிதா மறைவினால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை vacuum கைப்பற்ற பார்ப்பனர்கள் விரும்புகின்றனர். கமல், ரஜினி முயற்சிகளை இப்படியாக புரிந்து கொள்ள வேண்டும்.

பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்.. முன்னாள் நீதிபதிகள், துணைவேந்தர்கள் பிரஸ் மீட். வீடியோ


tamiloneindia : சென்னை: பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என பல்கலை. முன்னாள் துணைவேந்தர்கள், முன்னாள் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர
பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பல்கலை. முன்னாள் துணைவேந்தர்கள், முன்னாள் நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில் மத்திய அரசு அலுவலகங்களில் பாஜகவின் தலையீடு அதிகரித்துள்ளது. தற்போது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் இதற்கு முன்னால் இந்தியாவில் நடந்தவை போல் அல்ல. அரசியல் கட்சிகளுக்காகவோ கூட்டணி கட்சிகளுக்காகவோ நடக்கிற அதிகார போட்டி அல்ல.
🔷 5 ஆண்டுகள்..!
இந்தியா ஒரு குடியரசு நாடாக, ஜனநாயக நாடாக, மனித நெறிமுறைகளை காப்பாற்றிக் கொள்கிற நாடாக தொடர போகிறதா இல்லையா என்பது நம் முன்னால் உள்ள கேள்வி.

எடப்பாடி விவசாயிகளிடம் தூது.. பி ஆர் .பாண்டியன் மட்டுமல்ல... விவசாயிகள் யாரு சொல்லியும் கேட்க மாட்டங்களாம்..

மின்னம்பலம் :வித விதமான சர்வேக்கள் வந்தபடியே இருக்கின்றன. யாருக்கு எத்தனை சீட் என ஒவ்வொரு நாளும் மாறி மாறி வரும் சர்வேக்கள் மக்களை
குழப்பிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தனியாக ஒரு சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த சர்வே ரிப்போர்ட்டில், திருச்சியில் தொடங்கி, டெல்டா மாவட்டங்களில்
அதிமுகவுக்கான செல்வாக்கு மிகவும் குறைவாக இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிதம்பரம் தொகுதிகளில் அதிமுகவுக்கான செல்வாக்கு குறையக் காரணம், பிஜேபிதான். கஜா புயல் பாதித்த சமயத்தில் பிரதமர் ஆறுதலுக்காகக்கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை என்ற கோபம் மக்களிடம் இருக்கிறது. அதுதான் அதிமுகவுக்கான செல்வாக்கு குறையக் காரணம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு 20 முதல் 22 தொகுதிகள் வரை கிடைக்கும் என அந்த சர்வேயில் சொல்லப்பட்டு இருக்கிறது.

காங்கிரஸ் . ஆம் ஆத்மி கூட்டணி .. Congress 3 .. aam aadmi 4..

தினகரன் :டெல்லி: நீண்ட இழுபறிக்கு பின்னர் டெல்லி மாநிலத்தில்
காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரஸ் 3 தொகுதியிலும், ஆம் ஆத்மி 4 தொகுதியிலும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங், ஷீலா தீக்ஷித், பி.சி.சாக்கோவுடனான ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதுபோல தேர்தல் அறிக்கைகளும் அனைத்து கட்சிகளும் வெளியிட்டு வருகிறது.

கரும்பு தோட்டத்தில் தீ: 400 ஆடுகள் உடல்கருகி பலி,, வந்தவாசி

கலைமோகன் நக்கீரன்:  திருவண்ணாமலை வந்தவாசி அடுத்த பையூர் ஏரி பகுதியில்
அமைந்துள்ள கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயில் சிக்கி சுமார் 400 ஆடுகள் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த 7 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி 400 மேற்பட்ட ஆடுகள் உடல் கருகி உயிரிழந்தன. ஆடு மேய்த்து கொண்டிருந்த காளியம்மாள் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

76 வன்னிய சொத்துக்களின் பட்டியல் .. இவற்றை அனுபவிப்பவர்கள் யார்?

mahalaxmi : டாக்டர் .ச.இராமதாஸ் MBBS பல..வன்னிய. பொதுச்சொத்துக்களை அபகரித்து வைத்துள்ளார். மேலும் தன் அடிமைகள் மூலம் பெரிய வன்னிய
அறக்கட்டளைகளில் மேல் வாடகை கோடியில் வசூலிப்பதாலும், வன்னிய.பொதுச்சொத்து நலவாரியம் ,அமைவதை பத்து ஆண்டுகளாக தடை_ செய்து வருகிறார். தற்போதும் தடுத்து வருகிறார் மூன்று லட்சம் கோடி மதிப்புள்ள,கீழ்கண்ட வன்னிய பொதுச் சொத்துக்களை மேலும் சுயநல வன்னிய தலைவர்கள் அபகரித்துள்ளதால், ஒரு_வன்னிய_ இளைஞனுக்கு, கல்விக்கு உதவி தொகையோ, தங்குமிடமோ, வேலை வாய்ப்போ சிறு_உதவி_கூட_
கிடைப்பதில்லை. வன்னியர் பொது சொத்து நலவாரியம் தமிழக அரசால் ஆணை வழங்கப்பட்ட பின் கண்டுபிடிக்கப்பட்ட வன்னிய சொத்துக்களின். விவரங்களின் எழுபத்தி ஆறு சொத்துக்களின்.பட்டியல்.... சொத்தின் மதிப்பு . மூன்று லட்சம் கோடியாகும். வளமான வன்னியர்களிடம். பெரும்பாலான சொத்துக்கள். சுயநலத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. சென்னை மாவட்டம்
01. பி.டி.லீ செங்கல்வராய நாயகர் டிரஸ்ட்,
2-3 EVK சம்பத் சாலை ,
வேப்பேரி, சென்னை -600 007
02. வன்னியர்குல ஷத்திரியர் மகா சங்கம் ,
164 , சூரியநாராயண செட்டி தெரு , ராயபுரம், சென்னை - 600 013 .
03. கே. கோபால நாயகர் வன்னியர் சங்கத்தலைவர் பள்ளி ,
20 , தமிழக தெரு, மயிலாப்பூர் , சென்னை -600 004 .
04. வள்ளல் எட்டியப்ப நாயகர் வன்னியர் சங்கத்தலைவர் பள்ளி ,
164, சூரியநாராயண செட்டி தெரு , ராயபுரம், சென்னை - 600 013 .
05. குலகுரு அர்த்தனாரிச வர்மா வன்னியர் சங்கத்தலைவர் பள்ளி ,
164 , சூரியநாராயண செட்டி தெரு , ராயபுரம், சென்னை - 600 013
06. அக்னிய தர்மாதீர்த்த சேபா தோட்டம்,

தேர்தல் மோசடி ஒன்று அரங்கேற போகிறது ...

Venkat Ramanujam : தேர்தல் சம்யத்திலே சந்திரபாபு நாயுடு ஆளும் ஆந்திரவின் தலைமைசெயலாளர் மாற்ற படுகிறார், மம்தா ஆளும் கொல்கத்தா போலிஸ் கமிஷனர் மாற்ற படுகிறார் ..
ஆனாலும் இந்தியாவிலே அதிகம் அளவு பணம் பிடிக்கப்பட்ட தமிழக தலைமை செயலாளர் கிரிஜா, DGP ராஜேந்திரன் மட்டும் கொஞ்சி குளிப்பாட்டுதே தேர்தல் ஆனையம் ஏன் சார்...
21 கட்சிகள் 50% #VVPAT எண்ணனும் சொன்ன போது..
இல்ல நாங்க 0.4% மட்டுமே எண்ணுவோம் அப்படி சொன்ன ஒப்பற்ற சுதந்திர தன்னாட்சி பெற்ற அமைப்பு தேர்தல் ஆனையம்..
காரணம் கேட்டா அதுக்கு ஆறு நாள் ஆகும்ம்ன்னு கூசாம பொய் சொன்ன தன்னாட்சி பெற்ற அமைப்பு சார் தேர்தல் ஆனையம்..
அடேய் அண்டி நேஷ்னல் எப்படிடா படவா கூசாம பொய்ன்னு உயர்ந்த தேர்தல் ஆனையத்தை அடிச்சி விடுற அப்படின்னு நீங்க கோச்சுகிறது புரியுது சார் ..
உங்களுக்கு கதைஇல்லா பட் ஒரு கணக்கு சொல்றேன் ..
90 கோடி வாக்களர்களில் அதிகபட்சமான 68% ஓட்டு போடுறாங்கந்னு வச்சிகோங்க ..அதில் 50% என்பது 30.6 கோடி தானே சார் (90 x 0.8 / 2 )
1989 க்கு பிறகு தானே சார் படிபடியா EVM வந்துச்சி ..அதுக்கு முன்னாடி paper counting தானே
சரி 1989 விவரம் பார்ப்போமா (படத்திலே தேர்தல் ஆணயம் தகவலையும் இனைச்சி இருக்கேன்)
மொத்த வக்களார்கள் : 498906129
அதில் ஓட்டு போட்டவங்க : 309050495
ஓட்டு போட்ட சதவிதம் = 61.9%
ஆதாவது இன்றைய advance communication இல்லா காலத்திலே 30.9 கோடி தேர்தல் முடிவை ரெண்டே நாளில் சொன்ன தேர்தல் ஆணையம் அதே 30 கோடி ஓட்டை இன்னிக்கி எண்ண ஏன் ஆறு நாள் ஆகுமுன்னு சொல்லனும் சார் ..

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவு

sellappaதினமணி :சென்னை: தமிழகமெங்கும் சிலம்பை ஒலிக்கச் செய்தவர் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்(91) வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். 'சிலம்புச் செல்வர்' மபொசிக்குப் பிறகு இன்றுவரை தமிழகமெங்கும் சிலம்பு ஒலித்துக் கொண்டிருப்பதற்கு தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்தான் காரணம் என்று அறியப்பட்டவர்.
நூல்களின் திறனாய்வுக்குப் பெரும்பாலும் மேற்கத்திய அறிஞர்களின் மேற்கோள்களே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் அதை முழுமையாகத் தவிர்த்தவர் சிலம்பொலியார். தமிழ் நெறி சார்ந்த நிலையில் முற்றிலும் தமிழ் நூல்களை மட்டுமே முன்னோடியாகக் கொண்டு படைப்பிலக்கியங்களைத் திறனாய்வு செய்தது சிலம்பொலி செல்லப்பன் வகுத்த தனித்த நெறியாகும். செம்மொழியான தமிழ் மொழிக்கு இன்றளவும் வேறெந்த மொழியையும் இணையாகக் கொள்ளாத பண்பாளர் அவர். மூன்று முதல்வர்களிடம் பணியாற்றிய பெருமைக்குரிய தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்.

360 இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் முடிவு!

360 இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் முடிவு!மின்னம்பலம் : பாகிஸ்தான் சிறைகளிலுள்ள 100 இந்திய மீனவர்கள் வரும் திங்களன்று (ஏப்ரல் 7) விடுவிக்கப்படுவார்கள் என்று பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். விடுவிக்கப்படும் மீனவர்கள் வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
பாகிஸ்தானில் உள்ள 385 இந்திய மீனவர்களையும், 10 கைதிகளையும் விடுவிக்கும்படி டெல்லியிலுள்ள பாகிஸ்தான் உயர் ஆணையத்துக்கு அண்மையில் இந்திய அரசு ஒரு கடிதத்தை அனுப்பியது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இயக்குனர் மகேந்திரனின் மிகப்பெரிய வருத்தம்.. முள்ளும் மலரும் - உதிரிப்பூக்கள் படங்களைத் தேசிய விருதுக்கு அனுப்பாத...


இளையராஜா மகேந்திரன்
director mahendranஎனக்கு டைம் முடிஞ்சிடுச்சு சார், நான் கிளம்புறேன்!” – இயக்குநர் மகேந்திரனின் கடைசி நிமிடங்கள்">எனக்கு டைம் முடிஞ்சிடுச்சு சார், நான் கிளம்புறேன்!” – இயக்குநர் மகேந்திரனின் கடைசி நிமிடங்கள்..
vikatan.com - அலாவுதின் ஹுசைன் : மறைந்த இயக்குநர் மகேந்திரன் உடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார், தயாரிப்பாளர் தனஞ்செயன்.“பத்து வருட பழக்கத்தில், அவருடன் நெருங்கிப் பழகின, பயணித்த இந்தக் கடைசி நான்கு வருடங்கள் எனக்குக் கிடைத்த பாக்கியம்!” – இயக்குநர் மகேந்திரன் உடனான தன் நட்பையும் அவரின் கடைசி நிமிடங்களையும் நம்மிடம் பகிர்கிறார், தயாரிப்பாளரும் ‘போஃப்டா’ திரைப்படக் கல்லூரியின் நிறுவனருமான தனஞ்செயன். “மார்ச் 5-ம் தேதி, மகேந்திரன் சார் வீட்ல இருந்து எனக்கு போன். ‘சார், ஹாஸ்பிட்டலுக்குப் போக மறுக்கிறார்’னு சொன்னாங்க. ஏற்கெனவே டயாலிஸிஸ் பண்ணாததுனால, அவருக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்னு டாக்டர்கள் சொல்லியிருந்தது, எனக்குப் பயமா இருந்தது. நேரா அவர் வீட்டுக்குப் போனேன்’அடம்பிடிக்காதீங்க சார். ஹெல்த் ரொம்ப முக்கியம்’னு சொல்லி விடாப்பிடியா அவரை மருத்துவமனையில் சேர்த்தோம்.
அவருக்கு ஹாஸ்பிட்டல் சூழல் சுத்தமா பிடிக்கலை. அங்கிருந்து போகணும்னு பிடிவாதமா இருந்தார். உடம்பு தனக்கு ஒத்துழைக்கலைனு அவருக்கு புரிஞ்சிடுச்சு. டயாலிஸிஸ் பண்ணும்போது ஏற்படுற முதுகு வலியை  அவரால் தாங்க முடியல, பத்து நாள்களுக்கு முன் பேசும்போது, ‘இயற்கைக்கு மாறா என்ன வாழவெச்சு என்ன சார் பண்ணப்போறீங்க. என்ன விட்ருங்க’ன்னு சொன்னார்.

கலைஞரின் வாழ்வொளி திட்டம் . மூட்டு வாத இருதய நோயால்( acute rheumatic fever ) பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச ..

Dr.Ezhilan_Naganathan : 1980 1990 களில் மூட்டு வாத இதய நோய் பெரும் அளவில் தமிழ்நாட்டை உலுக்கி வந்த நேரம்.
பள்ளி  குழந்தைகளுக்கு சாதாரண தொண்டை காய்ச்சல் மற்றும் தோள் கிருமி கட்டி உண்டாகும் கிருமி "streptococcus"
இந்த நோய் வந்து போன பிறகு பாதிக்கப்பட்ட குழந்தைகள் acute rheumatic fever பாதிக்கப்படுவர்.
பரவி பரவி மூட்டி வீக்கம் வலி , நீண்ட நாள் காய்ச்சல், வலிப்பு தன்மை , உடம்பில் சிகப்பு படை போன்ற நோய் விளைவுகளால் பாதிக்கப்படுவர்.
அதோடு நிற்காமல் அந்த குழந்தைகள் பருவ மட்டும் நடுத்தர வயது வரும் போது இருதய வால்வுகள் பழுது அடைந்து இருதய பலவினம் ஏற்பட்டு இறந்து விடுவார்கள். இந்த இருதிய நோயினால்(rheumatic heart disease ) பாதிக்கப்பட்டு இறுப்பு சதவிகிதம் 28% ஆக இருந்தது. பல இளம் கர்பணி பெண்களும் இதன் பாதிப்புக்கு உள்ளாகினர்.
லட்சக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு சிலருக்கு மட்டுமே வால்வுகள் மாற்றம் இருதய அறுவை சிகிச்சை வாய்ப்பு கிட்டும்.மற்றவர்கள் இறுந்து போவார்கள்.

நீட் தேர்வை கொண்டு வந்த பாசிஸ்டுகளே வரிசையில் வாருங்கள் .... எலீட்டுக்கு உதவிய நீட்

பழூரான் விக்னேஷ் ஆனந்த் : நீட் தேர்வு ஆதரவு தெரிவித்த கல்வியாளர்களை தேடி கொண்டு இருக்கிறேன்
அரசாங்க மருத்துவ கல்லூரியில் அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 22
2015 -2016 : 33
2016-2017 : 27
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 04

அரசாங்க மருத்துவ கல்லூரியில் அரசாங்கம் உதவி பெரும் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015: 0
2015 - 2016 :59
2016 -2017 :58
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 03
அரசாங்க மருத்துவ கல்லூரியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 2226
2015 -2016 : 2247
2016-2017 : 2321
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 20 ( huge difference)
அரசாங்க மருத்துவ கல்லூரியில் CBSE பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 0
2015 -2016 : 0
2016-2017 : 14
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 611
——————————————————————
தனியார் மருத்துவ கல்லூரியில் அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 12
2015 -2016 : 3
2016-2017 : 3

திருடர்களுக்கு தேள் கொட்டிவிட்டது, இனி பேசவே மாட்டார்கள் - ஈரோட்டில் கமலஹாசன்

கமலஹாசன்களுக்கு தெரியாத அந்த 3 காண்டேயினர் பணம்
nakkheeran.in - jeevathangavel : "இந்த தேர்தலில் மக்கள் சிந்தித்து நல்லவருக்கு
ஓட்டுப்போட வேண்டும். அந்த  நல்லவராக மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் இருப்பார் என ஈரோட்டில் இன்று மாலை நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேரிய கமலஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஈரோடு மக்களவைத் தொகுதி வேட்பாளர் எ.சரவணகுமாரை ஆதரித்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
"காமராஜர், எம்ஜிஆர் போன்ற பெரிய தலைவர்கள் பெரிதாக படித்தவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் மக்களைப் படித்தவர்கள், அவர்களை பார்த்து, படித்து நான் இங்கு வந்திருக்கிறேன். இந்த தேர்தல் பிரதமர் யார் என்று முடிவு செய்வதற்கான தேர்தல் அல்ல. நம்முடைய எதிர்காலம் என்ன என்று நாம் முடிவு செய்யும் தேர்தல். நாட்டுக்கு நல்லது எது என முடிவு செய்யும் தேர்தல். யார் பிரதமர் என்பதை தேர்ந்தெடுக்கப்படும் எம்பிகள் சேர்ந்து தான் முடிவு செய்ய வேண்டும்.இப்போதே முடிவு செய்து சொல்வது என்பது அரசியல் மாண்பு இல்லை. ஓட்டுப்போடுவதை அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் என இளைஞர்கள் விட்டுவிடக்கூடாது. அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் என 30 ஆண்டுகளை கடந்துவிட்டீர்கள். நீங்கள் எல்லாம் இளைஞர்களாக இருந்தபோது, அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டதைதான், உங்கள் முதுமையில் இப்போதுள்ள இளைஞர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மனைவி கௌரம்பாள்.. .ஆவணப்படம் ..20 மாதங்களே மணவாழ்க்கை.. வீடியோ


mm
பட்டுகோட்டையாரின் மகனும் மனைவியும்
nakkheeran.in bagathsingh : பட்டுக்கோட்டை என்றாலே அது கல்யாணசுந்தரம் என்ற பாட்டுக்கோட்டை என்பது பாட்டாளி மக்களும் அறிந்த ஒன்று. பாட்டுக்கட்ட ஆரம்பித்து சில ஆண்டுகளில் 29 ம் வயதில் இயற்கை அவரை அழைத்துக் கொண்டது. இயற்கையின் அந்த அழைப்பை கேட்ட பாட்டாளிமக்களும் திரைத்துறையும் கதறி அழுதது. இது நடந்து 60 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதன் பிறகு தன்னந்தனியாக தன் மகனை வளர்த்து அரசு அதிகாரி ஆக்கிய பட்டுக்கோட்டையாரின மனைவி கௌரவம்பாள் சொந்த ஊரான செங்கப்படுத்தான்காட்டில் ஏப்ரல் 3 ந் தேதி இரவு 9 மணிக்கு இயற்கை எய்தினார். மகன் குடும்பத்தோடு சென்னையில் வசித்தாலும் தான் கணவர் வாழ்ந்த வீட்டில் தான் கடைசி வைர வாழ்வேன் என்று சொந்த ஊரிலேயே இறுதி காலம் வரை வாழ்ந்தவர். பாட்டாளிகளின் மகா கவியான பட்டுக்கோட்டையோடு கௌரவம்பாள் வாழ்ந்த காலம் 20 மாதங்களே..

வெள்ளி, 5 ஏப்ரல், 2019

நண்பர்கள் முன் ஆட மறுத்த மனைவியின் ஆடையை கலைத்து மானபங்கம் செய்த கணவர்!!


நண்பர்கள் முன் ஆட மறுத்த மனைவியின் ஆடையை கலைத்து மானபங்கம் செய்த கணவர்!!zeenews.india.com : நண்பர்கள் முன் ஆட மறுத்த மனைவியின் தலையை மொட்டையடித்து சித்தரவதை செய்த கணவன்!!
இந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில சம்வம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சிலை நகைச்சுவையிலும் ஆழ்த்தும். இந்நிலையில், தனது நண்பர்கள் முன்னால் நடனம் ஆட மறுத்ததால் மனைவியின் தலையை மொட்டையடித்து சித்தரவதை செய்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம், பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடந்துள்ளது. பாகிஸ்தான் லாகூரை சேர்ந்த பெண் அஸ்மா ஆஸிஸ்-க்கும், மியான் பைசல்-க்கும் கடந்த சில அவருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் ஆஸிஸ் பரபரப்பு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

மீண்டும் மக்கள்நலப் பணியாளர்கள்: ஸ்டாலின் உறுதி!


மீண்டும் மக்கள்நலப் பணியாளர்கள்: ஸ்டாலின் உறுதி!மின்னம்பலம் : திமுக ஆட்சிக்கு வந்தால் ஏற்கெனவே பணிபுரிந்த மக்கள்நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என்று ஈரோட்டில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்திக்கு ஆதரவாக நேற்று (ஏப்ரல் 4) மாலை ஈரோட்டில் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. சாமானியருக்காகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்று அனைவரும் கூறுகிறார்கள். தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று குறிப்பிட்டிருந்தோம்.

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை லைகா வாக்குகிறது?

லைகா - அல்லிராஜா சுபாஸ்கரன்
வீரகேசரி : ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய
நிறுவனமொன்றிற்கு விற்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. விடுதலைப்புலிகளின் நிதியுடன் இயங்கும் நிறுவனமொன்றிற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை விற்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது இதனை அனுமதிக்கமாட்டோம் என சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகவும் அவை எச்சரித்துள்ளன விடுதலைப்புலிகளின் நிதியுடன் இயங்கும் நிறுவனமொன்றிற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்சை விற்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன

திமுக- 33, அதிமுக -5,அமமுக-2 : பண்பாட்டு மக்கள் தொடர்பகம் கருத்து கணிப்பு முடிவுகள்

ப்nakkheeran.in - kathiravan- stalin" : மக்களை ஆய்வது மக்களுக்கவே என்ற முழக்கத்துடன் லயோலா கல்லூரி முன்னாள் மாணவா்கள் மற்றும் பண்பாடு மக்கள் தொடா்பகம் இணைந்து நடத்திய நாடாளுமன்ற சட்டமன்ற இடைத்தோ்தல்  க௫த்து கணிப்பு இன்று வெளியிடப்படடது.   வ௫ம் நாடாளும்மன்ற தோ்தல் சட்டமன்ற இடைத்தோ்தலில் உங்கள் வாக்கு யா௫க்கு என்று கடந்த 17.03.2019 முதல் 03.04.2019 வரை  16 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் நான்கு குழுக்களாக பிரிந்து சென்று மக்களை எண்ணஓட்டத்தை அறிந்து உங்கள் வாக்கு யா௫க்கு என்று கள ஆய்வு நடத்தபட்டது. நடுநிலையாளா்கள், பொதுமக்கள், இளம் வாக்களா்கள், கல்லூரி  மாணவ,மாணவிகள் என்று ஒ௫ நாடாளுமன்றத்தில் குறைந்த பச்சம் 400-500 வரை மக்களை சந்தித்து உங்கள் வாக்குகள் யா௫க்கு என்று நாடாளும் மன்றம், சட்டமன்ற இடைத்தோ்தல் க௫த்து கணிப்பு நடத்தபட்டது. 21,464  பேரிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் 05.04.2019, வெள்ளிக்கிழமை சேப்பாக்கத்தில் வெளியிடப்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி 40 மக்களவை தொகுதிகளில் 27 முதல் 33 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.   அதிமுக கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அமமுக கூட்டணி 1 முதல் 2 தொகுதிகளில் வெற்றி பெற வய்ப்பு என்றும்  தெரிவிக்கிறது.

திருச்சியில் திக கூட்டத்தில் செருப்பு வீச்சு, தாக்குதல் – இந்து முன்னணி நிர்வாகிகள் கைது!

தாக்குதல்விகடன் : தி.க.தலைவர் வீரமணி கலந்துகொண்ட திருச்சி தி.மு.க தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் செருப்பு மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதுடன், வீரமணியின் கார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்  தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் திருச்சி மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை ஆதரித்து கூட்டணிக் கட்சிகள் சார்பில் பிரசாரப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
திருச்சி தி.க பொதுக்கூட்டம் - வீரமணி இந்த நிலையில், திருச்சி காந்தி மார்க்கெட்டையடுத்த தாராநல்லூர் கீரைக்கொல்லை பஜார் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்துப் பேசினார். இந்நிகழ்ச்சிக்காக காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அமர்ந்திருக்க, இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பிரசார மேடையில் பேசிக்கொண்டிருந்தனர்.

அன்புமணியின் "பூத்ல நாம மட்டும் இருக்கும் போது என்ன நடக்கும்.. தேர்தல் ஆணையத்தில் புகார்.. நம்ப முடியுமா?

தினமணி :சென்னை: வாக்குச் சாவடியைக் கைப்பற்றத் தூண்டும் வகையில் பேசிய பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி மீது தேர்தல்
ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 135ஏ - மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் வகையில் அன்புமணி ராமதாஸ் பேசியிருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருப்போரூர் மற்றும் காஞ்சிபுரத்தில் நேற்று பாமக வேட்பாளர்களை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்கே கட்டுக்கடங்காமல் இருந்த கூட்டத்தினரிடையே பேசிய அன்புமணி, வாக்குச் சாவடியில் நாம மட்டுமே இருப்போம். யார் இருப்பாங்க.. நாம மட்டும்தான் இருப்போம். நீங்கள் இருப்பீங்கல்ல, நீங்க இருப்பீங்கல்ல.. அப்புறம் வாக்குச்சாவடியில் நாம மட்டுமே இருக்கும் போது பூத்ல என்ன நடக்கும்? என்று கேட்க பாமகவினர் கரகோஷத்துடன் முழக்கம் இட்டனர்.

அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிக்கு லோக் ஆயுக்தா அமைப்பில் பதவி: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

தமிழ்நாடு லோக் ஆயுக்தாவுக்கு கோவை மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி செயலர் உட்பட இருவர், நீதித்துறை சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
கரூர் வெங்கமேடு பதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.ராஜேந்திரன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: "இந்தியாவில் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் செய்தல் ஆகியவற்றை விசாரிக்க லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் கடந்த 2013-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது ஒவ்வொரு மாநில அரசுகளும் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

சோதிடத்தால் கெட்ட சரவணபவன் ராஜகோபால்... உறவினர்கள் கூறுவது என்ன?

திரு. ஜெயகிருஷ்ணன் கனி. : என்னுடைய அப்பாவின் ஒன்று விட்ட
அக்காவின் மகள்தான் திருமதி. வள்ளி அண்ணி. ஒவ்வொர் ஆண்டும் பள்ளி விடுமுறையின் போது சிறுத்தொண்ட நல்லூரில் உள்ள எங்கள் ஆச்சி வீட்டுக்கு செல்லும்போது, பெரும்பாலும் அவர்கள் வீட்டில்தான் விளையாடிக் கொண்டிருப்போம். அவர்களை திரு. ராஜகோபால் நகை, ரொக்கம் என்று எதையும் எதிர்பார்க்காமல் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணத்துக்கு நாங்கள் எல்லோரும் சென்று இருந்தோம். தன் உறவினர்கள், நண்பர்களுக்கு உதவும் குணம் அவருக்கு இருந்தது. அசோக் நகரில் இருந்த அவரது மளிகைக் கடையில் நின்று பொட்டலம் போடுவதை நான் பார்த்து இருக்கிறேன். அவர் உணவகத் தொழிலில் ஈடுபட்டு வெற்றி அடைந்த பிறகு அவரைச் சுற்றிலும் பிராமணர்கள் கூட்டம்.
வழக்கம் போல் தமிழர்கள் பெரிய வெற்றி அடைந்த பிறகு, நாம் இந்த அளவுக்கு வளர்ந்து விட்டோமா என்று தன் வெற்றியையே பார்த்து அஞ்சுவதைப் போல இவரும் அஞ்சினார். தீவீர பக்தராக மாறினார். கோயில்களுக்கு வாரி வழங்கினார். கார்த்திகை நட்சத்திரம் உள்ள பெண்களைத் திருமணம் செய்து கொண்டால், இன்னும் பெரிய ஆளாகலாம் என்று பரிகாரம் சொன்ன சோதிடர்களை நம்பி அப்படிப் பட்ட பெண்களைத் தேடி திருமணம் செய்து கொண்டார். முதலில் திருமணம் செய்து கொண்டது ஒரு பிராமணப் பெண்ணை. அவர் கூட இன்னொருவரின் மனைவி. அடுத்து கார்த்திகை நட்சத்திரம் உள்ள இன்னொரு பெண். அவரும் இன்னொருவர் மனைவி. இவர்கள் ஜாதகங்களைப் பார்த்து தேர்ந்து எடுத்துக் கொடுத்தவர்கள், அவர் நம்பிய சோதிடர்கள்.

இந்தியா எதையுமே சுடவில்லை- புல்வாமா பதிலடி குறித்து அமெரிக்கா அறிக்கை.

india did not shoot any pakistan fightjets claims american media nakkheeran.in - kirubahar : புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய வான்படை பால்கோட் பகுதியில் நடத்திய தாக்குதலில் இந்திய வான்படையின் விமானங்கள் எந்த பாகிஸ்தான் விமானத்தையும் சுட்டு வீழ்த்தவில்லை என அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய வான்படை பாகிஸ்தானின் எப்-16 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி விமான பாகங்களை காண்பித்தது. இந்நிலையில் அமெரிக்க ஊடகம் இப்படி செய்தி வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த செய்திப்படி, அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வாங்கிய எப்-16 ரக விமானங்கள் சுடப்பட்டதாக செய்தி வெளியாகியவுடன், பாகிஸ்தான் சார்பில் அமெரிக்க அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு அழைக்கப்பட்டதாகவும், அவர்கள் அங்குள்ள விமானங்களை கணக்கெடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு... கோவை ,,

/tamil.oneindia.com - veerakumaran : . பொல்லாத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது..மு.க.ஸ்டாலின் பேச்சு-வீடியோ
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கோவை போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக, பார் நாகராஜ் மற்றும் அமைச்சர் ஒருவர் இடையே தொடர்பு இருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார். தனக்கும் பெண் குழந்தை இருப்பதாகவும், பொள்ளாச்சி சம்பவம் மிகவும் வேதனையை தருவதாகவும் ஸ்டாலின் உருக்கமாக கூறினார்.
இந்த நிலையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ராமச்சந்திரன் என்பவர் கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக ஒரு புகார் அளித்திருந்தார்.

தி.க தலைவர் வீரமணி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் கல்வீச்சு! தி.க.வினர் 2 பேருக்கு காயம்

attack nakkheeran.in-ஜெ.டி.ஆர்: . ஹிந்து மதக் கடவுள் கிருஷ்ணர் குறித்து, திராவிடர் கழக தலைவர் வீரமணி, விமர்சித்த வீடியோ,வேகமாக பரவி வருகிறது. அதில் தி.க., தலைவர் வீரமணி, ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமான கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஹிந்துக்களிடம், குறிப்பாக கிருஷ்ணரை வழிபடுவோரிடம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும், கிருஷ்ணரை வழிபடும் ஹிந்து அமைப்பினர், தி.மு.கவுக்கு எதிராகவும், வீரமணிக்கு எதிராகவும், போராட்டங்களை துவக்கி உள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றது. ஆசிரியர் வீரமணி அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களும் எழுப்பபட்டு வருகிறது. இந்தநிலையில் 

ஹிந்தி பெல்ட்டில் பாஜக காலி .. ரகசிய கணிப்புக்கள் அத்தனையும் பாஜகவின் வீழ்ச்சியை ,,,

மின்னம்பலம் : தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து பாஜக - ஆர்எஸ்எஸ்
நடத்திய ரகசிய ஆய்வில் காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்றும், மாநிலக் கட்சிகள் உதவியுடனேயே எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியும் என்று முடிவு கிடைத்திருப்பது பாஜக - ஆர்எஸ்எஸ் வட்டாரத்தில் அதிர்ச்சி அலையை உண்டாக்கியுள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆய்வும் ஒவ்வொரு விதமான முடிவைத் தந்துள்ள நிலையில், பாஜக - ஆர்எஸ்எஸ் தரப்பிலும் ரகசிய கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கருத்துக் கணிப்பில் கிடைத்த முடிவுகளை நாக்பூர் டுடே ஊடகம் பிரத்தியேகமாக வெளியிட்டுள்ளது. அந்தத் தகவல்களைக் காணலாம்.

அன்புமணி வெற்றி நிச்சயம்.. தில்லுமுல்லு செய்து ஜெயிப்போம் .. தேர்தல் ஆணையம் உடந்தை... ஒப்புதல் வாக்குமூலம் .. வீடியோ


LR Jagadheesan : படித்தது மருத்துவம்; வகித்தது இந்திய அரசின் சுகாதார அமைச்சர் பதவி; ஐநா முதல் அமெரிக்காவரை பயணித்தவர். இறுதியில் வாக்குச்சாவடியை கைப்பற்றும்படி பொது மேடையில் தன் கட்சிக்காரர்களை கூச்சமே இல்லாமல் தூண்டிவிடுகிறார்.
கட்சி எல்லைகளைக் கடந்து தமிழக அரசியலின் ஒட்டுமொத்த அதளபாதாள வீழ்ச்சிக்கும் விபரீத எதிர் பரிணாம வளர்ச்சிக்கும் அன்புமணி ராமதாஸின் இந்த பேச்சு இன்னும் ஒரு உதாரணம்.
அன்புமணி இந்த பேச்சில் சொல்வது வெறும் அரசியல் கட்சிகள் செய்யக்கூடிய வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் ரௌடித்தனமும் அராஜகமும் மட்டுமல்ல. அதையும் தாண்டிய விபரீதம்.
ஒற்றை ஜாதி ஆள்பலத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் கிராமங்களில் ஜாதிய குண்டர்படைகள் வாக்குச்சாவடிகளை தைரியமாக கைப்பற்றுங்கள் என்கிறார் அன்புமணி.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் இப்படியானதொரு விபரீத யோசனையை இதுவரை பகிரங்கமாக பொதுமேடையில் இப்படி ஊக்குவித்ததில்லை.

பார்ப்பனர் அல்லாத ஒரு வாக்காளர் : அன்பார்ந்த பிராமண வாக்காளர்களே !

savukkuonline.com - Naachiyar :  அன்பார்ந்த பிராமண வாக்காளர்களே.
உங்களுக்கு ஒரு கடிதம் என்றதும் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் நீங்கள் இதனை எழுத வைத்து விட்டீர்கள்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 2019 தேர்தலை நினைத்து நீங்கள் பதற்றப்படுகிறீர்கள். மீண்டும் மோடி தலைமையின் கீழ் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஒரு வாக்காளராக யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது உங்களது உரிமை தான். ஆனால் அதை நீங்கள் தனிப்பட்ட முறையில் வைத்திருந்தால் இந்தக் கடிதத்துக்கு அவசியமே இருந்திருக்காது. உங்களுக்கு சலுகைகளையும், ஆதரவையும் தரும் கட்சி என்பதால் இந்தத் தேசமே பாஜகவைக் கொண்டாட வேண்டும் என்று நினைப்பதில் தான் பிரச்சனைத் தொடங்குகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிடக் கட்சிகளும், கழகங்களும் பார்ப்பன எதிர்ப்பை முக்கியக் கொள்கையாகக் கொண்டிருந்தன. அதனால் அவர்கள் மீது எப்போதும் உங்களுக்கு எரிச்சல் உண்டு.
அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதா மேல் உங்களுக்கு நல்லதொரு அபிப்ராயமே பொதுவாக உண்டு.  ஜெயலலிதாவை வாரது வந்த மாமணியாக கொண்டாடினீர்கள்.   1996 தேர்தலில், ஜெயலலிதாவுக்கு எதிராக, திமுக தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கிய, அதே சோ ராமசாமி, 2001ல் ஜெயலலிதா திருந்தி விட்டார் என்று கூறினார்.   ஆனால் ஜெயலலிதா அவர் மறையும் வரை திருந்தவேயில்லை.   அவர் உங்கள் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், சங்கராச்சாரியை கைது செய்தாலும், அவரை நீங்கள் ஆதரித்தீர்கள்.

75 வயது மூதாட்டி ..1000 பென்சனில் மினி்மம் பேலன்ஸ் இல்லை ..350 அபராதம் ... SBI வங்கியில்

Gomathy Bsr : ஆலங்குளம் #SBI வங்கியில் வரிசையில் ஒரு 75 வயது
மதிக்கதக்க பாட்டியின் OAP அக்கவுண்டில் பென்சன் பணம் 1000 ரூபாயில் மினி்மம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் 350 அபராதம் பிடிக்கபட்டு மீதம் 650 தருகிறார்கள். அந்த பாட்டிக்கு 3000 மினிமம் பேலன்ஸ் என்றால் என்னனு கடைசி வரை புரியவில்லை, பாட்டி கண்ணிரோடு வெளியே போனதை பார்க்கும் போது மனதை பிசைந்தது. இது என்ன தேசம் - படித்தவர்கள் எப்போதும் எதாவது பெயரில் இந்த தேசத்தை சுரண்டுகிறார்கள். இதை எல்லாம் வேடிக்கை பார்த்தும் நாம் எதுவும் செய்யாமல் இருக்கிறோம். நமக்கும் பிணங்களுக்கும் என்ன வித்தியாசம் . ஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்.... பாட்டியின் சுருக்கு பையில் இருந்து பணத்தை திருடுவது தான் உங்கள் - புதிய இந்தியா வா?

வியாழன், 4 ஏப்ரல், 2019

ஸ்டாலின் : கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி

A Sivakumar : கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி என்று திமுக தலைவர் நேற்று அறிவித்துள்ளார்.
இதை ஒழுங்கா உழைக்கும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே போதும்.
ஓட்டுக்கு யார் பணம் கொடுத்தாலும் அதைப் பற்றி திமுக கவலைப்படவே தேவையில்லை.
தலைவர் ஸ்டாலின் செய்த அறிவிப்பால் 1 சவரன் நகை அடமானம் வைத்தவர்களுக்கு குறைந்தது சுமார் 12000 ரூபாய்க்கு தள்ளுபடி கிடைக்கும்.
நகரம் & கிராம பகுதிகளில் 90% மக்கள் கூட்டுறவு வங்கிகளில் தான் நகையை குடும்ப செலவுக்கு , விவசாய செலவிற்காக வைத்து உள்ளார்கள்.
5 சவரன் என்றால் ரூ.60000 கடன் தள்ளுபடி ஆவதோடு நகைகள் வேறு உடனே கையில் கிடைத்துவிடும்.
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் ரத்து
குடும்ப பெண்களுக்கு நகைக் கடன் ரத்து
கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து
பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு ரத்து
அனைத்து மாணவர்களுக்கும் இலவச ரயில் பயண வசதி
என முத்து முத்தான வாக்குறுதிகள்.

ஆந்திராவில் ஜெகன் வெற்றி பெறுகிறார் .. நடிகை ரோஜா அமைச்சராகிறார் ...? வீடியோ


மின்னம்பலம் : தமிழகத்தில் பிரபலமான நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்றத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார்.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 11 ஆம் தேதி நடக்கும் இத்தேர்தலில் ஆட்சியைத் தக்க வைக்க சந்திரபாபு நாயுடுவும், ஆட்சியைப் பிடிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்கள்.
இந்நிலையில் தேர்தல் பணிகளை அடுத்து சன் டிவியில் தான் வழங்கி வந்த லொள்ளுப்பா என்ற நிகழ்ச்சி உட்பட பல்வேறு டிவி நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிட்டு முழுக்க முழுக்க நகரியில் முகாமிட்டுள்ளார் ரோஜா.
தமிழக-ஆந்திர எல்லையான திருத்தணியை ஒட்டியிருக்கும் நகரியில் ரோஜாவுக்காக அவரது கணவர் ஆர்.கே. செல்வமணியும் தங்கி தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ரோஜா தொகுதிக்குள் வருவதை அத் தொகுதி மக்கள் ஆச்சரியமான விஷயமாக கருதவே இல்லை. தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோடநாடு .. ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

tamil.thehindu.com : கோடநாடு விவகாரம் தொடர்பான அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டாலின் தொடர்ந்து அதுபற்றிப் பேசினால் அவதூறு வழக்கு தொடர்பான தடை நீக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோடநாடு கொலை, கொள்ளை குறித்தும் முதல்வர் எட்ப்பாடி பழனிசாமி குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். இதையடுத்து அவர் மீது  தமிழக அரசு  சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து ஸ்டாலின் தரப்பில் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடைகோரிய மனு மீது விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கோடநாடு கொலை, கொள்ளை குறித்துப் பேசவும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மனைவி கௌரவம்மாள் காலமானார்

Pattukkottai Kalyana Sundarams wife died tamil.oneindia.com - hemavandhana : சென்னை: 'மக்கள் கவிஞர்' பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மனைவி கெளரவம்மாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 80.
தேனினும் இனிமையான பாடல்கள்தான்.. ஆனால் ஒவ்வொன்றும் தத்துவம் நிறைந்த பாடல்களை தந்தவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். பலமான சமூக சீர்திருத்த கருத்துக்களை கூட எளிய தமிழில் தனது பாட்டால் உணர்த்தியவர். பத்தாண்டு காலத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாட்டெழுதினார். சிந்தனைத் தெளிவும், கருத்துச் செறிவும் நிறைந்த பாடல்கள் இன்றும் காலத்தில் அழிக்க முடியாத சிறப்பை பெற்றவை. அதனால்தான் அவை அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

3000 ஆண்டுகள் ..ஆதிச்சநல்லூரில் பொருள்களில் ஒன்று கி.மு. 905, மற்றொன்று கி.மு 791 .. திராவிடர்களே மூத்த குடி.. கார்பன் டேட்டிங் நிருபணம்


திணையகம் : ஆதிச்சநல்லூர் அகழாய்வு பொருட்களில் இரு பொருட்களின் கரிம ஆய்வு முடிவுகளை நீதிமன்றத்தில் அறிக்கையாக தந்தது இந்திய ஒன்றிய அரசு.
 நாகரீகம் என்ற உண்மையை குழிதோண்டி புதைத்து ஆரியர்களே மூத்தவர்கள் என பிதற்றி வரலாற்றைத் திரித்து எழுதி வைத்திருந்த திருடர்களுக்கு தேள் கொட்டியது போல, மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் கண்டிப்பான ஆணையை அடுத்து வேறுவழியில்லாமல் இன்று கொடுத்த ஆய்வறிக்கையில் இரு பொருட்களின் வயதைச் சொல்லியுள்ளது இந்திய ஒன்றிய அரசு. அதன்படி ஒரு பொருள் பொது ஆண்டு முன் 905 என்றும் மற்றொரு பொருள் பொது ஆண்டு முன் 791 எனச் சொல்லியுள்ளது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீக வளர்ச்சியடைந்த,சிறந்த வளர்ச்சியடைந்த மொழிக்கு சொந்தக்காரன் தமிழன் என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆய்வை ஒன்றிய அரசு தொடருமா அல்லது தமிழக அரசுக்கு அதற்கான அனுமதியைத் தருமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்தியாவின் மூத்தமொழி தமிழ் என உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கேரளா ராகுல் பேரணி! சும்மா அதிருதில்ல? ... இடதுசாரிகளுக்கு எதிராக ஒருவார்த்தை பேசமாட்டேன் .. வீடியோ


மின்னம்பலம் : வயநாடு தொகுதியில் இடது சாரிகளை எதிர்த்து ஒரு வார்த்தை பேசமாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தின் தலைநகர் அமேதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, இன்னொரு தொகுதியாக கேரளாவில் இருக்கும் வயநாட்டை தேர்வு செய்தார். இன்று (ஏப்ரல் 4) தனது தங்கை பிரியங்கா காந்தியோடு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். குட்டியானையில் ஏறி தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்த அடுத்த நிமிடமே பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில், “என் அண்ணன், என் உண்மையான நண்பன், அதையெல்லாம் தாண்டி உறுதிமிக்க மனிதனை வயநாட்டிடம் ஒப்படைக்கிறேன். அவரைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் உங்களை ஒருபோதும் தாழவிடமாட்டார்” என்று பதிவு செய்திருக்கிறார்.
ராகுல் காந்தி வயநாட்டுக்கு மற்றும் ஒரு தொகுதி அல்ல... வயநாட்டுக்கும் ராகுலுக்கு உணர்வுபூர்வமான பந்தம் இருக்கிறது.

குஷ்பூ பிரசாரத்துக்கு வர மறுப்பு .. ஷூட்டிங் இருக்காம் .. அதிருப்தியில்..

வெப்துனியா : காங்கிரஸ் சார்பில் சீட் வழங்கப்படாததால் குஷ்பு டென்சனில் இருப்பதாகவும் பிரச்சாரத்திற்கு வர முடியாது என அவர் அடம் பிடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு காங்கிரஸில் சேர்ந்து 4 வருடங்கள் ஆகியும் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இந்த தேர்தலில் தமக்கு சீட் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருந்தார் குஷ்பு.
ஆனால் காங்கிரஸ் மேலிடம் அவருக்கு சீட் கொடுக்காமல் ஏமாற்றி விட்டது. நேற்று கட்சியில் வந்து இணைந்தவர்களுக்கெல்லாம் சீட் கொடுக்கும் போது இத்தனை வருடங்களாக கட்சிக்காக உழைக்கும் தமக்கு சீட் வழங்காததால் அவர் அதிருப்தியில் உள்ளார்.

போலீஸ் வாகனத்தில் ஆளுங்கட்சியினர் பணம் கடத்தல்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

tamil.thehindu.com : தேர்தல் ஆணைய பறக்கும் படையினர் சாதாரண பொதுமக்கள் வாகனத்தைப் பிடித்து சோதனையிடுகிறார்கள். காவல்துறை வாகனத்தில் ஆளுங்கட்சியினர் பணம் கடத்துகிறார்கள். காவல்துறை வாகனங்களையும் பிடித்து சோதனையிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பொள்ளாச்சியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணைய செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அவரது பேச்சு: ''தற்சமயம் வாட்ஸ் அப்பில் செய்திகள் வருகின்றன. காரில் வருகின்ற பொழுது நான் பார்த்தேன். காவல்துறை வேனில் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு போவதாக செய்தி.

கூடலூரில் ஓ.பி.எஸ். பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்து.. அதிமுகவினர் தாராளமாக சேலைகள் விநியோகம்

பன்னீர்செல்வத்தின் தம்பி  சேலை விநியோகம்
இரட்டை இலை சின்னம் பொறித்த சேலைகளை அதிமுகவினர் விநியோகம்.. துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தம்பி ஓ.ராஜா
அவர்களும், பெரியகுளம் ஒன்றிய அதிமுக செயலாளர் அன்னபிரகாஷ் அவர்களும் அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் ரவிந்திரநாத் அவர்களின் சார்பாக  வாக்காளர்களுக்கு விநியோகம் செய்கின்றனர். 
vikatan.com - கே.அருண் நீலகிரி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் நேற்று இரவு ஊட்டி வந்திருந்தார். இன்று கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், காலை ஊட்டியிலிருந்து கிளம்பினார். அவரது பிரசார வாகனமும் முன்னே கிளம்பியது. கூடலூர் நோக்கி வந்தபோது நடுவட்டம் அருகே பிரசார வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் சேர்ந்து வாகனத்தைத் தூக்கி சமநிலைக்குக் கொண்டுவந்தனர். கூடலூர் சென்றபின் பிரசார வாகனத்தில் ஏற ஓ.பி.எஸ். முடிவு செய்திருந்தார். இந்த விபத்தில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.

ஸ்டாலின் :நக்கீரன் பத்திரிகை மிரட்டப்படுகிறது...!

mkstalin நக்கீரன் :பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை விஷயத்தில் 'நக்கீரன் பத்திரிகை மிரட்டப்படுகிறது' என்று பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து குனியமுத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ''பொள்ளாச்சி விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே காவல்துறை திட்டமிட்டே மறைத்திருக்கிறது. அந்த வீடியோவை வைத்து பணம் வசூல் செய்து பின்னர் குற்றவாளிகளை காப்பாற்றியிருக்கிறது. விவகாரம் வெளியே வந்த பிறகு சிலரை தப்பிக்க வைக்கிற முயற்சியில் காவல்துறை ஈடுபடுகிறது. ஆபாச படம் எடுப்பவர்களை காப்பாற்றுகிற முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது மிக மிக மோசமானது. அதை காவல்துறை செய்து கொண்டிருக்கிறது. ஆகையால்தான் 20ஆம் தேதி நான் பிரச்சாரத்தை தொடங்கிய நேரத்தில் தொடர்ந்து இந்த விவகாரத்தை பேசிக்கொண்டிருக்கிறேன்.

பான்பராக் போட்டுக்கொண்டு, எதிர் சீட்டில் கால் வைத்துக்கொண்டு, இடதும் வலதும் எச்சில் துப்பிக்கொண்டு ஹிந்தி மட்டும்

Shankar Ji : தன் பதின்ம வயது வரை தமிழே தெரியாத ஒரு ிழைக்க முடியும். ஆகவே, ஹிந்தி கற்காததால் என் வாழ்க்கையே வழுக்கிவிட்டது என்று அங்கலாய்க்கும் அன்பர்கள் கீழே உள்ளவைகளை ஆழ்ந்து யோசிப்பது நலம்.
வடநாட்டுவாலாவால் தேமே என்று முகத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் பிழைக்க முடியுமென்றால், ஹிந்தியே தெரியாமல் வடநாட்டிலும் ப
01. ஹிந்தி மட்டுமல்ல எந்த மொழியும் கற்க யாருக்கும் தடையில்லை.
02. இந்தியா போன்ற நாடுகளில் பள்ளிகளில் ஒரு மாநில மொழியும், ஆங்கிலமும் போதும்.
03. மாநில மொழி தன் மக்களிடையே உரையாடவும், ஆங்கில மொழி நாட்டில் பல மொழி பேசும் இந்தியர்களுடன் இந்தியாவிற்கு வெளியேயும் உரையாடவும் போதும்.
04. பிற மொழிகள் உங்கள் வாழ்க்கை, வசதி, வேலை சார்ந்து நீங்கள் கற்றுக்கொண்டு முன்னேறலாம். அல்லது உங்கள் தாய் மொழி மற்றும் ஆங்கிலம் கொண்டு பிழைப்பு நடத்தலாம்.

இந்திய ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை

vinavu.com - சுகுமார் : தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 44 வீரர்கள் பலியானதற்கு பதிலடி தருவதாகக் கூறிக்கொண்டு பாகிஸ்தானிற்குள் அத்துமீறி நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதலை நடத்தியது. இதில் இந்திய விமானப்படை தவறுதலாக தமது சொந்த இராணுவ ஹெலிகாப்டரையே ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதில் ஆறு விமானப்படை வீரர்கள் உள்ளிட்ட எழுவர் பலியாகியுள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன்னதாக 25 பாகிஸ்தானிய போர்விமானங்கள் இந்திய வான் எல்லையை கடக்க முயற்சி செய்ததாகவும் அப்பொழுது தற்காப்பிற்காக ஏவப்பட்ட ஏவுகணை இலக்குத் தவறியிருக்கலாம் என்றும் இந்திய அதிகாரிகள் கூறினர். Mi-17 V5 ஹெலிகாப்டர் ஒன்று தன்னுடைய சுற்றோட்டத்தை முடித்து திருப்பும் நேரத்தில் இந்த ஏவுகணை தாக்குத