சனி, 28 மே, 2011

எந்திரன் கதை திருட்டு விவகாரம்: கலாநிதி மாறன், ஷங்கருக்கு கோர்ட் சம்மன்

எந்திரன் படக்கதை விவகாரம் தொடர்பாக, அப்படத்தின் இயக்குநர் ஷங்கரும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் கோர்ட்டில் ஆஜராக எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட்டு கோர்ட் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

சன் பிச்சர்ஸ் கலாந்தி மாறன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் எந்திரன். இப்படம் 2010 அக்டோபர் 1ல் வெளியானது. எந்திரன் படத்தின் கதை தனக்கு சொந்தமானது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் உரிமை கோரி எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:

நான் 1996ல் ஜுகிபா என்ற பெயரில் சிறுகதை எழுதினேன். அக்கதை இனிய உதயம் என்ற தமிழ் மாத இதழில் வெளியானது. இதே கதையை அந்த நிறுவனம் திக் திக் தீபிகா என்ற பெயரில் புத்தகமாக 2007ல் பிரசுரித்தது. அது புத்தக கண்காட்சிகளில் விற்பனையானது. அரசு நூலகங்களுக்கும் வாங்கப்பட்டன.
அந்த கதையை தழுவி இயக்குனர் ஷங்கர் எந்திரன் என்ற படத்தை எடுத்து வெளியிட்டு உள்ளார். எந்திரன் படத்தை பார்த்த என்னுடைய வாசகர்களும், நண்பர்களும், உங்களுடைய ஜூபிகா கதைதான் எந்திரன் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். பிறகு நானும் அப்படத்தைப் பார்தது அதிர்ச்சி அடைந்தேன். என்னுடைய கதையை அப்படியே காப்பி அடித்து படம் எடுத்துள்ளனர்.
இது இந்திய காப்புரிமை சட்டத்தை மீறியதாகும். மேலும் மோசடி மூலமும் குற்றம் புரிந்துள்ளார்கள். எனவே இவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த வழக்கை 13வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சிவகுமார் விசாரித்தார். ஆரூர் தமிழ்நாடன் சார்பில் வக்கீல்கள் ராஜகோபால், எட்விக், சிவகுமார் ஆகியோர் ஆஜரானார். இந்த வழக்கில் ஜூன் மாதம் 24ந் தேதி இயக்குனர் ஷங்கரும், தயாரிப்பாளரும் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்ப மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இதுகுறித்து ஆரூர் தமிழ்நாடன் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது கதை திருட்டு தொடர்பாக ஷங்கர் மீதும் தயாரிப்பாளர் மீதும் மோசடி காப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்தேன். அந்த கதையின் காப்புரிமை <
என்னிடமே உள்ளதென்றும் என்னிடம் அனுமதி பெறாமல் படம் எடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினேன்.

ஆனால் தயாரிப்பாளர் பெயரை புகாரில் இருந்து நீக்கினால்தான் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று வாய்மொழியாக என்னிடம் தெரிவித்தனர். நான் மறுத்து விட்டேன். இதனால் புகாரை கிடப்பிலேயே போட்டு வைத்திருக்கிறார்கள். அதனால்தான் பிரைவேட் வழக்கு தொடர்ந்தேன். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பலமாக இருக்கிறது என்றார்

ரவுடி மரியம்பிச்சை மரணம்! அதிமுக-தமுமுக ரவுடித்தனம்!! நேரடி ரிப்போர்ட்!!!

மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!அமைச்சர் மரியம்பிச்சை சாலை விபத்தில் இறந்த பிறகு பலரும் மனிதாபிமான நோக்கில் இரங்கல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரக் கொழுப்பில் ஏற்பட்ட அந்த சாலை விபத்தும் சரி, அதன் பின் அ.தி.மு.க மற்றும் த.மு.மு.க காலிகள் திருச்சியில் செய்த கலவரங்களும் சரி மரியம்பிச்சையின் யோக்கியதையை நிரூபிக்கின்றன. அந்த கலவரங்கள் குறித்தும், ரவுடி மரியம்பிச்சை மந்திரியான கதையும் இங்கே தரப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த காலத்தில் இந்த ரவுடி மரியம்பிச்சை ம.க.இ.கவோடு மோதி மூக்குடைபட்டதும் இப்போது நினைவுக்கு வருகிறது. ஆக ‘அம்மா’ ஆட்சியில் நாம் நிறைய போராட்டங்களுக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்பதை ரவுடி மரியம்பிச்சையின் மரணம் தெரிவிக்கிறது. படியுங்கள், பயம் கொள்ளாதீர்கள், அணி சேருங்கள் திருச்சி மேற்குத் தொகுதியில் தி.மு.க முன்னாள் அமைச்சர்  கே.என்.நேருவை தோற்கடித்து அ.இ.அ.தி.மு.க-வின் சட்ட மன்ற உறுப்பினராகவும், சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பொறுப்பேற்ற மரியம்பிச்சை கடந்த 22.05.2011 ஞாயிறு அன்று சென்னை செல்லும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலியானார். உடன் வந்த நண்பர்கள், காவல் துறை ஆய்வாளர் ஆகியோரர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்கண்ட விபத்து நடப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் திருச்சி அமெரிக்கன் மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள பெரும்பிடுகு முத்திரையர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மரியம்பிச்சையும், அமைச்சர் என்.ஆர்.சிவபதியும் ஒன்றன் பின் ஒன்றாக தனித்தனி காரில் சென்னைக்கு புறப்பட்டனர்.
11 மணிக்கு  அம்மாவைப் பார்க்க வேண்டும், எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற அவசரத்தில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணித்ததாகவும் முன்னாள் சென்ற டிரெய்லர் லாரியை முந்திச் செல்வதற்காக ஹாரன் அடித்துக்கொண்டே வேகமாக சென்ற போது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது என்றும் அவரது கார் டிரைவர் ஆனந்தன் கூறியுள்ளார். பாதுகாவலரும், படுகாயத்துடன் உயிர் தப்பிய துணை ஆய்வாளருமான மகேஷ்-ம் இதை உறுதி செய்துள்ளார். நிலைமை இப்படி இருக்க விபத்தில் மீட்கப்பட்டவர்கள் திருச்சி தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வேகத்தில் அமைச்சர் மரியம்பிச்சை பலியான செய்தி ஊடகங்கள் வாயிலாக காட்டுத்தீயாக பரவியது.
காலை  8.30 மணிக்கெல்லாம் அ.இ.அ.தி.மு.க காலிகளும், இஸ்லாமிய அமைப்பான த.மு.மு.க-வும், “கே.என்.நேரு.ஆள் வைத்து லாரி ஏற்றி கொன்றுவிட்டான்” என வதந்தி பரப்பி, கடைகளையும், பொது வாகனங்களையும் தாக்கத் துவங்கினர். மக்கள் நெருக்கமுள்ள பல இடங்களில் அருவருக்கத்தக்க வார்த்தைகளை கூறி கற்களையும், கட்டானையும் வீசவே பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும், பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பதற்றம் பற்றிக்கொண்டது. அரசு பேருந்துகள் மற்றும் சில தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளும் நொறுக்கப்பட்டன. தி.மு.க.கொடிமரங்கள், பெயர்ப் பலகைகள், கலைஞர் படிப்பகம் என பலவும் இவ்வாறே உடைத்து நொறுக்கப்பட்டன.
விபத்து நடந்த அன்றும்  அடக்கம் செய்யப்பட்ட இரண்டாம் நாளும் இரு சக்கர வாகனங்களில் தலா 3 பேர் வீதம் த.மு.மு.க மற்றும் அ.தி.மு.க. காலிகள் கொடிகளுடனும், கட்டானுடனும் கத்திக் கொண்டே கடைகளை மூட வைத்தனர். இதைத்தான்  மரியம்பிச்சையின் இறப்புக்கு  அனுதாபம் தெரிவித்து கடைகள் அனைத்தும் இரண்டு நாட்கள் மூடப்பட்டது போல செய்தி ஊடகங்கள் சித்தரித்தன.
இறுதி அஞ்சலி செலுத்த வந்த பாசிச ஜெயலலிதாவும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு அரசியல் பழி வாங்குதலுக்கான தனது பங்கை செவ்வனே செய்து தனது கூட்டணி கட்சி காலிகளையும் ஊக்கப்படுத்தினார்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பயன்படுத்தி தி.மு.க – வின் மீது பழிபோட்டு கொடி கம்பங்களை சாய்த்தும் அலுவலகங்களை நொறுக்கியும் கலவரம் செய்தது போலவே இப்போதும் மாவட்ட அளவில் நடந்து கொண்டனர்.
ஊழல் வழக்கில் ஜெயாவுக்கு தண்டனை வழங்கப்பட்டவுடன் 3 விவசாயக்கல்லூரி மாணவிகளை எரித்துக்கொன்ற அதே வெறியோடு இங்கும் ரத்தத்தின் ரத்தங்கள் களமிறங்கினர். த.மு.மு.க,தே.மு.தி.க போன்ற புதிய பங்காளிகளும் சேர்ந்து கொண்டபின் கேட்கவா வேண்டும்?
சாவு செய்தி கேட்டு அரசு மருத்துவமனை முன்பாகக் குவிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். மினி லாரியில் லுங்கி கட்டிக்கொண்டு சலம்பிக்கொண்டு வந்த கும்பல் எல்லாக் கடைகளையும் பூட்டவைத்தனர். கடைக்குப் பொருள் வாங்கவந்த பெண்கள், முதியவர்களையும் அடித்து விரட்டினர். கறிக்கடைக்கு வந்த கும்பல், அங்கு தொங்கிய உரித்த ஆட்டை வெட்டிவீசியது.
கிராமங்களிலிருந்து காய் கறிகளை தலைச்சுமையாக கொண்டு வந்த பெண்கள் அவற்றை மார்க்கெட்டில் விற்கமுடியாமல் தெருவுக்கு கொண்டு சென்று பஸ்ஸுக்கு காசு கிடைத்தால் கூடப்போதும்; மீண்டும் இதைத் தூக்கி சுமக்க முழயாது என்று பதறியதும் 10 ரூபாய்க்கு 10 வாழைக்காய் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கதறியதும் பார்ப்போரை கண்ணீர் விட வைத்தது.
மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மேலப்புதூர் பகுதியில் தி.மு.க கொடி கம்பங்கள் சாய்க்கப்பட்டதுடன் போக்குவரத்தை நிறுத்துவதற்காக இந்த கும்பல் போட்ட வெறியாட்டத்தில் ஒரு புங்க மரமே வெறும் கையால் சாய்க்கப்பட்டது. அது விழுந்ததில் கார் ஒன்று அடியில் சிக்கி நொறுங்கியது. (படம் இணைக்கப்பட்டுள்ளது.)
மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மல்லிகைபுரம் பகுதியில் தி.மு.க அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. கடை மூடப்பட்டதைவிட வண்டியில் வலம்வந்து வெறியாட்டம்  போட்ட விடலைகளின் வசவுகள், பல கடைக் காரர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. இருப்பினும் புலம்புவதைத்தவிர அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இவர்களின் வெறியாட்டத்திற்கு அத்தியாவசிய பொருளான மருந்துக் கடைகள் கூட தப்பவில்லை. பேருந்துகளின் கண்ணாடிகள் பல நொறுக்கப்பட்டன. காவல் துறையே பல பகுதிகளின் போக்குவரத்தை நிறுத்தி மக்களை அல்லாடவைத்தது. எப்போதாவது ஒரு அரசுப்பேருந்து மட்டும் பந்த் நடக்கவில்லை எனறு காட்டுவதற்காக ஆட்சியாளர்களால் இயக்கப்பட்டன.
மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!இவ்வளவு வெறியாட்டங்களும் காவல்துறையின் கண்ணெதிரில்தான் நடந்தது. கை கட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்ப்பதற்கு மேல் அவர்கள் வேறெதுவும் செய்யவில்லை. காலித்தனத்தை எதிர்த்துக்கேட்டு அடிவாங்கிய தி.மு.க காரர் மீதே பொய் வழக்குப்போட்ட கொடுமையும் நடந்தது. போலீசே கடையை ழூடிட்டுப் போ என்று விரட்டி காலித்தனத்துக்கு துணை நின்றனர். அதே போலீசார் சில இடங்களில் ரொம்ப ஆடுறாங்க என்று புலம்பியதும் நடந்தது. குடும்பம் இல்லாமல் நகரத்தில் தங்கி வேலை செய்யும் ஏராளமான இளைஞர்கள் உணவு, டீ கூட கிடைக்காமல் திண்டாடினர். இது முதல் நாளோடு முடியவில்லை. இரண்டாம் நாள் கடை திறக்கலாமென வந்த பலரும்கூட விடலைகளின் வெறியாட்டத்துடன் ஏச்சு பேச்சுகளை வாங்கிக்கட்டிக்கொள்ள நேர்ந்தது.
மரியம்பிச்சை ஒரு முசுலிம் என்பதால் கூடுதல் உரிமை எடுத்துக் கொண்ட த.மு.மு.க- வினர், அமைச்சரின் உடலை தங்கள் அமைப்பு பெயர் பொறித்த பெட்டியில்தான் வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து மாற்றியது முதல் இருசக்கர வாகனங்களில் சுற்றி வந்து கடை மூடச்சொல்லி கட்டாயப்படுத்தியது, சவஅடக்கம் நடக்கவிருந்த பள்ளிவாசல் பகுதியில் சாலையையே அடைத்து மேடை போட்டு போக்குவரத்தை ஸதம்பிக்கச் செய்தது வரை அனைத்திலும் செய்த அலப்பரை மக்களால் தாங்கமுடியவில்லை. அம்மா வந்தவுடனே ஆட்டமும் தொடங்கிவிட்டது என்றே புலம்பத்தொடங்கினர்.
மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல், குடும்ப ஆட்சி என்ற பல வெறுப்புகள் காரணமாக அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப்போட்ட மக்கள் தற்போதே ஏண்டா போட்டோம் என்று உணரும் நிலையை உருவாக்கிவிட்டனர். என்னதான் பத்திரிக்கைகளும் அறிவாளிகளும் இடது,வலது போலிகளும் “அம்மா மாறிட்டாங்கன்னு” டயலாக் பேசினாலும் தான் பழைய காட்டேறிதான் என்பதை மறைத்துக் கொள்ள அம்மா எப்போதுமே முயன்றதில்லை. இரத்தத்தின் இரத்தங்களும் இத்தனை ஆண்டுகளாக அடக்கிவைத்த தங்களின் ஆட்டத்தையெல்லாம் பத்தே நாளில் காட்டி விட்டார்கள். இது மீண்டும் தி.மு.க-வுக்கு ஆதரவான அனுதாபமாக மாறலாம். அது எந்த வகையிலும் மக்களுக்குப் பயன்படப்போவதில்லை. மக்கள் இதே ஓட்டுச்சீட்டு பாதையில் மாற்றைத்தேடி எந்த பயனும் இல்லை. மக்கள்கையில் அதிகாரம் கிடைக்கக் கூடிய புதிய மாற்றத்திற்காக சிந்திக்கவேண்டும் என்பதையே நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.


ஒரு ரவுடி மந்திரியான கதை!யார் இந்த மரியம்பிச்சை?

க்களின் நலனுக்காக பாடுபட்டவர் போல் காட்டப்படும் இந்த மரியம்பிச்சை இராமநாதபுரம் கமுதி பனையூர் கிராமத்திலிருந்து பிழைப்புத்தேடி சிறுவயதிலேயே திருச்சியில் குடியேறி தட்டு வண்டியில் காய்கறி விற்று மிக எளிமையாக வாழத்துவங்கியவர். ஆனால் நாளடைவில் கள்ளச்சாராயம் விற்பதில் துவங்கி காவல்துறையுடன் ஏற்பட்ட மாமுல் நெருக்கத்தில் அர்ச்சுனன் என்ற எஸ்.ஐ. க்கு பினாமியாக, ரவுடியாக இருந்து செல்வாக்கடைந்தார். நாளடைவில் அவருடைய மனைவியோடு மரியம்பிச்சைக்கு ஏற்பட்ட கள்ள உறவால் மனம் நொந்து அந்த காவல் துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டதால் அந்த சொத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆனார். சக சாராய ரவுடி பிச்சமுத்தோடு ஏற்பட்ட சண்டையில், தன்னைக் கொல்ல முயன்று பதிலாக தன் தம்பியை கொடூரமாக கொன்றதற்கு பழிவாங்க பிச்சைமுத்து கும்பலோடு ஏற்பட்ட பல மோதல்கள், ஆள்கடத்தல் சம்பவங்கள். இறுதியாக காவல் துறையோடு தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி ரவுடி பிச்சைமுத்துவையும் முட்டை ரவியையும் என்கவுண்டரில் கொன்றொழித்து தன்னை பாதுகாத்துக் கொண்டவர்.  இதுதான் மரியம்பிச்சையின் வரலாறு.
இப்படி கள்ளச்சாராயம், கட்டபஞ்சாயத்து என திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக வளர்ந்து மரியம் திரையரங்கம், மரியம் திருமண மண்டபம், மரியம் நகர், ஜோதி ஆனந்த் திரையரங்கம், திருச்சி கலையரங்கம் திரையரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது என கோடிகளில்  புரண்ட மரியம்பிச்சை அரசியல் பாதுகாப்புக்காக அ.தி.மு.க-வில் தஞ்சம் அடைந்து ஜெயா,சசியின் பினாமியாக செயல்பட்டு ஜெயாவின் தீவிர பக்தராகவும் விசுவாசியாகவும் மாறினார்.
இந்த காலகட்டத்தில் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை ஒழித்துகட்டுவோம், நக்சல் பாரிப்  பாதையை முன்னெடுப்போம் என தமிழகம் முழுவதுமம் ம.க.இ.க. இயக்கம் எடுத்த நேரத்தில் இந்த மரியம்பிச்சையும் திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக அறிவிக்கப்பட்டார். அதற்கான பொதுக்கூட்டத்தில் தகராறு செய்ய வந்து மூக்குடைபட்டு அடங்கினார்.
சொந்த  வாழ்க்கையில்  நேர்மையில்லாமலும், அடுத்தவர் மனைவியோடு கள்ள உறவ, அத்துடன் கஸ்தூரி, லில்லி, பாத்திமாகனி என பலரை மனைவிகளாக்கி கொண்டது அனைத்தும் சங்கிலியாண்டபுரம் மக்கள் அறிந்த கதைதான்.
மேலும் தான்  வார்டு உறுப்பினராக, கவுன்சிலராக, கோட்டத்தலைவராக இருந்த காலத்தில் குடிநீர் இணைப்புக்காக 8 ஆயிரம், 10 ஆயிரம் என பொதுமக்களிடம் பணம் பிடுங்கியதாலும் சாலைகள், கழிப்பிடங்கள் கட்டுவதில் நடந்த முறைகேடுகள் காரணமாகவும் பொதுமக்கள் காறி உமிழ்ந்தனர். செந்தணீர்புரத்தில் அரசு புறம்போக்கை வளைத்து அந்த இடத்தில் சிமெண்ட் தயாரிக்கப் பயன்படும் நச்சுக்கழிவுகளை கொட்டியதால் சுற்றுப்புறச்சுழலும், நிலத்தடிநீரும் நஞ்சானது இதை எதிர்த்து ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் போராடிய போது பொன்மலை ஆய்வாளர் காதர் பாட்ஷா மற்றும் காக்கிகள் பொன்மலை காவல் நிலையத்தின்  கதவுகளை சாத்திக்கொண்டு 16 தோழர்களை மிருகத்தனமாக தாக்கியது. எனினும் அந்தப் போராட்டத்தில் மக்கள் வெற்றி பெற்றனர். இதிலும் மக்கள் விரோதியாக அம்பலமானவர்தான் இந்த மரியம்பிச்சை.
இப்படிப்பட்ட ஒரு சமூக விரோத நபராக இருந்த மரியம்பிச்சை கடந்த இரண்டு தேர்தல்களில் நின்று தோற்றுப் போனாலும் விலைவாசி உயர்வு, மின்வெட்டு கருணாநிதி கும்பலின் கொள்ளைக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கு தஞ்சத்தில் மந்திரியாக மாறிய கதை இதுதான்.
அ.தி.மு.க. கும்பல் மரியம்பிச்சையின் மரணத்தை வைத்து திருச்சியில் தனது செல்வாக்கை உயர்த்தி கொள்வதற்கும், பழிவாங்குவதற்கும் எப்படி பயன்படுத்திக் கொண்டதோ அதே நோக்கத்தில் த.மு.மு.க- வும் இதை தங்களின்  மீட்சி மற்றும் பழிவாங்குதலுக்கான ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டது.
திருச்சி நகரத்தின் முக்கிய வீதிகளிலே இரு தினங்களும்  கடை அடைப்பை கட்டாயமாக்கி காலித்தனங்களில் ஈடுபட வைத்ததும், காவல் துறையினர் முன்பே கற்களை வீசி கடைகளை அடைக்கவைத்ததும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அனுமதிக்காத பாலக்கரை பிராதன மெயின் ரோட்டை மறித்து இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்ததும், காவல் துறையினரே விலகிக்கொள்ளுங்கள் என தன் நிகழ்ச்சியாக மாற்றி நடத்தியதும், இஸ்லாமிய மக்களே முகம் சுழிக்கும் அளவுக்கு மரியம்பிச்சை புகழ்பாடியதும் அரங்கேறின.
மரியம்பிச்சை சடலம் இருந்த குளிர்சாதனப்பெட்டிக்கு அருகே இவர்கள்தான் முக்கியமான பாதுகாவலர்கள் போல காட்டிக் கொண்டதும், ஜெயா வந்த போது கூட போஸ் கொடுத்ததும் இங்கே பதிவு செய்யத் தக்கது.
மொத்ததில் மக்கள் விரோத ரவுடி மரியம்பிச்சையின் மரணத்தில்    தி.மு.க.வினரை இணைத்து பழிவாங்க துடிக்கும் ஜெயலலிதாவின எண்ணம் ஒருபுறம் , தி.மு.க.வோடு போட்டியிட்டு த.மு.மு.க-வும் கடந்த காலங்களில் தோல்வியுற்ற கணக்கை இம்மரணத்தில் சரி செய்து கொண்டது மறுபுறம் என இரு வேறு அரசியல் நோக்கில் இந்த மரணம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
விபத்தால் ஏற்பட்ட மரணமோ அரசியல் ரவுடிகளுக்குள்ளே மோதிக்கொண்டதால் ஏற்பட்ட மரணமோ எப்படியிருப்பினும் மக்கள் விரோதிக்காக மக்கள் யாரும்  கண்ணீர் சிந்தவோ, கவலை கொள்ளவோ போவதில்லை. அவர்கள்  போட்ட வெறியாட்டத்தை எதிர் கொள்ள தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய உடனடித் தேவை.
உறையூர் கடைவீதியில் கடை வைத்துள்ள ம.க.இ.க தோழர் சீனிவாசன் இந்த நாட்களில் கடையை மூடாததும் மக்கள் செல்வாக்குடன் அவர் அப்பகுதியில் கடையை திறந்து நடத்தியதும் பின்பற்ற வேண்ழய முன்னுதாரணமாகும். கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் அப்பகுதியில் கும்பலாக சென்ற போதும் கூட இவரை மூடச் சொல்ல யாரும் துணியவில்லை. இதையே நகரம் முழுக்க உள்ள வணிகர்கள் சங்கமாய் இருந்து அறிவிப்பு கொடுத்து திரண்டு நின்றிருந்தால் இந்த காலித்தனங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்திருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.

குறிப்பு :

1.         மரியம்பிச்சை இறப்புக்கு பின்னர் 25-05-2011 அன்று தி.மு.க செயல்வீரர் கூட்டத்தில் பேசும் போது முன்னாள் அமைச்சர் நேரு, “தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மரியம்பிச்சை எனக்கு நல்ல நண்பர், கொலை செய்யும் அளவுக்கு என்னை மோசமாக சித்தரித்து விட்டனரே” என்று புலம்பியுள்ளார்..உடல் அடக்கம் செய்யப்பட்டபின் திருச்சி சிவா மற்றும் பலர் மரியம்பிச்சையின் இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்து வந்துள்ளனா. அ.தி.மு.க. வில் ஒருவர் கூட இதற்கெல்லாம் எதிர்ப்பு காட்டவில்லை. தி.மு.க. செயல்வீரர் கூட்டத்தில் உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என தீர்மானம் போட்டுள்ளனர். இதிலிருந்து இரண்டு கட்சிகளும் கூட்டுக் கொள்ளையர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
2.         பெரும்பிடுகு முத்துரையர் சதய விழாவில் பங்கேற்ற மரியம்பிச்சை விபத்தில் மரணம் அடைந்த பிறகும் சதய விழா நிகழ்ச்சிகள் எந்த குறையும் இல்லாமல் அன்று முழுவதும் நடந்தது. இவ்வளவு கலவரம் செய்து துக்கம் கொண்டாட வைத்தவர்கள் யாரும் அவர்களை  கண்டிக்கவில்லை. அவர்களும் குறைந்தபட்ச நாகரீகம் கருதிக்கூட மாலை அணிவிப்பு, போட்டா எடுப்பது முதல் ஊர்வலமாக டெம்போ வண்டியில் ஏறி கூச்சலிட்டு ரகளை செய்தது வரை எதையும்  குறைத்துக்கொள்ள தயாரில்லை.

Kalaignar எனது பாடலை நீக்கிவிட்டு சமச்சீர் கல்வியை அமல் செய்யலாமே?

"நான் எழுதிய பாடல் சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டத்தில் இடம்பெறுவதை விரும்பவில்லை என்றால், அதை எடுத்துவிட்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்தலாமே?' என, முன்னாள் முதல்வர் கருணாநிதி, அரசுக்கு கேள்வி எழுப்பிஉள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமச்சீர் கல்வியை அமல் செய்ய, சமச்சீர் கல்வி முறை அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. பள்ளி கல்வித் துறை அமைச்சர் தலைமையில், கல்வியாளர்களிடம் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அதன்படி, 2010 - 2011 கல்வி ஆண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு வரையும், 2011-12 கல்வி ஆண்டில் எஞ்சிய வகுப்புகளுக்கும், சமச்சீர் கல்வியை அமல் செய்யலாம் என, முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, சமச்சீர் கல்விச் சட்டத்தை தள்ளுபடி செய்ய தொடரப்பட்ட வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும், "பாடத்திட்ட நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும். தனியார் பதிப்பகம் வெளியிடும் பாடப் புத்தகங்களை ஏற்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, பாடத்திட்ட நெறிமுறை வெளியிடப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடத்திட்டங்கள் வழங்கப்பட்டு, கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி அமல்செய்யப்பட்டது.

சமச்சீர் கல்வி முறைக்கு, சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தடை கோரி செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அரசின் கொள்கை முடிவுப்படி, இரண்டு முதல் 10ம் வகுப்புகளுக்கு (6ம் வகுப்பு தவிர) 200 கோடி ரூபாய் செலவில் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, 2011-12ம் கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை அமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு கட்டமாக பணிகளை மேற்கொண்டு, சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. சமச்சீர் கல்வியை கைவிடுவது, மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. சமூகநீதியை நிலைநாட்ட கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை தள்ளி வைப்பது, விவாதத்தைக் கிளப்பியுள்ளது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. சமச்சீர் கல்வி முறை ரத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில், வல்லுனர்களைக் கொண்டு ஆராய்ந்து கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை எளிதில் புறக்கணித்துவிட முடியாது. இதுபற்றி, அரசுக்கு அட்வகேட் ஜெனரல் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சமச்சீர் கல்வி முறையை எதிர்ப்பது, தி.மு.க., கொண்டு வந்த திட்டம் என்பதால் மட்டுமே என புரிந்து கொள்ள முடிகிறது. இதைத் தவிர வேறு காரணம் என்ன கூறமுடியும்? ஒருவேளை, தொல்காப்பியம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி, குண்டலகேசி, ராமாயணம் பேன்ற இலக்கியங்களை இணைத்து, நான் எழுதிய பாடல், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் இருப்பதால் சமச்சீர் கல்வியை விரும்பவில்லையா? அப்படி இருந்தால், அந்தப் பாடலை எடுத்துவிட்டு சமச்சீர் கல்வியை அமல் செய்யலாமே? இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Arumugam Eswaran - Tirupur,இந்தியா
2011-05-28 06:54:32 IST Report Abuse
இங்கே கருத்துச்சொன்னவர்களில் யாராவது சென்ற வருடம் அமுல் படுத்திய ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கான புதிய பாடப்புத்தகத்தை(சமச்சீர்) பார்த்துள்ளார்களா...இல்லை தற்போது வந்துள்ளதைத்தான் பார்த்துள்ளார்களா எனத்தெரியவில்லை..சமச்சீர் கல்வி பாடத்தில் கருணாநிதி பாடலுக்காக மட்டும் எடுக்கப்படவில்லை..அது மேலோட்டமாக கூறப்படுவது..சமச்சீர் கல்வி என்பது ஏதோ கருணாநிதி கொண்டுவந்தது அல்ல..கடந்த ௦பத்து வருடங்களுக்கும் மேலாக கல்வியாளர்களும்,இடதுசாரிகளும் வற்புறுத்தி வந்ததுதான். இவர்களின் போராட்டம் காரணமாகவே வேறு வழியில்லாமல் கருணாநிதி ஓரளவு அமுல்படுத்தினார். ஐயப்பன் கோவிலில் பதினெட்டு படிகள் சென்று சாமி தரிசனம் செய்ய முதல் படியில் காலடி எடுத்து வைப்பது போல சமச்சீர் கல்வியை நோக்கி வைத்த முதல்படி தான் கருணானிதி செய்தது.சமச்சீர் கல்வியென்றால் அனைவருக்கும் ஒரே பாடப்புத்தகம் மட்டுமல்ல..அனைத்து அரசு/தனியார் பள்ளிகளிலும் ஒரே மாதரியான வகுப்பறைகள்/கல்வி உபகரணங்கள்/தகுதிபெற்ற ஒரே மாதிரியான ஆசிரியர்கள் இப்படி பலவும் அடங்கும். ஏற்கனவே இதுவரை இருந்த பாடப்புத்தகங்கள் மனப்பாடத்தை அடிப்படையாகக்கொண்டவை..மாணவர்களின் கேள்வி கேட்கும் இயல்பை மழுங்கச்செய்யும் கல்வி முறை..தற்போது பல குறைகள் இருந்தாலும் இப்பாடங்கள் குழந்தைகளின் தேடலை ஊக்குவிப்பதாக, கேள்வி கேட்கும் ஞானத்தை ஊக்குவிப்பதாகும்..மூன்று வயது வரையில் நமது குழந்தைகள் கேள்வி மேல் கேள்வி கேட்டு பதிலை அறியும் முயற்சியில் ஈடுபடும்..பள்ளியில் கொண்டு விட்டவுடன் கையைக்கட்டு, பேசாதே!சத்தம் போடாதே! வாய்மேல் விரலை வை என மிரட்டப்படுவதால் , இது என்ன? அது என்ன? என்று ஆராயும் திறனை நமது குழந்தைகள் இழந்து விடுகின்றன..இதை மாற்றும் ஒரு சிறு முயற்சி தான் தற்போது குப்பைக்கூடைக்கு போய்விட்டது.. ஆ.ஈசுவரன்/திருப்பூர்.
Thennavan - Chennai,இந்தியா
2011-05-28 04:18:19 IST Report Abuse
கலைஞர் தன்னுடைய அறிக்கையில் தெளிவாக எடுத்து சொல்லி இருக்கிறார்...இங்கு அது முழுமையாக வெளிடப்டவிட்டாலும்......கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு அறிங்கர்கல் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட திட்டத்தை ஆட்சிக்கு வந்து ஒரு வார காலத்திற்குள் அதில் தரம் இல்லை என்று எந்த அதாரம் இன்றி.....என்று சொல்கிறார் இன்றைய முதல்வர்.... முதலில் இவர் விளக்கட்டும் தரம் இல்லை என்று சொல்வதிற்கு இவர் என்ன அய்ய்வு செய்தாரா அதுவும் ஆட்சிக்கு வந்த முன்றே நாளில்....கலைஞர் இயற்றிய இலக்கிய பற்றிய பாடல்தான் பிரச்சினை என்றால் அதை நிக்கி விட்டு 200 கோடி மக்கள் வரி பணத்தை வினடிக்காமல் இருக்கலாமே......அது மட்டும் இல்லை இது உச்சநிதி மன்றம் முலம் அனுமதி பெற்று கொண்டு வரப்பட்டது சமிச்சிர் கல்வி.....நினைத்தை எல்லாம் செய்வதிற்கு இது ஒன்றும் 1991 கிடையாது என்பதை விரைவில் புரிந்து கொள்வார் ....நேற்றைக்கு தான் ஐகோரட் நீதிபதி வாசுகி.....உச்ச நிதிமன்றம் உத்தரவை மீறி செயல்பட மாநில அரசக்கு உரிமை உள்ளதா என்று தமிழக அட்டர்னி ஜெனெரல் நவநித கிருஷ்ணன்ன கேட்டு உள்ளார்ர்...அது மட்டும் இல்லாமல் தமிழக அரசுக்கு சட்டத்தை பற்றி சரியாக அறிவுரை சொல்ல் சொல்லி இருக்கிறார்.....தமிழக அரசே நல்ல முடிவு எடுத்து மக்கள் வரி பணத்தை வீண் அடிக்கமால் இருப்பதே நல்லது....உச்ச நீதிமன்றம் உத்தரவு ப்ரபித்தால் பின் மீற முடியாது அது அரசுக்கு கெட்ட பெயர்தான் பெற்று தரும்...
Siva Kumar S - l.india,சிங்கப்பூர்
2011-05-28 07:18:07 IST Report Abuse
படிச்சது தமிழ்நட்டு மக்கள் வரி பணத்தில், வேலை பாக்குறது வெளிநாட்டு காரனுக்கு நீ முதலில் தமிழனாய் இருந்து அதன் பின் அவரை நீக்க முயற்சி செய்... பல கல்விமான்கள் ஆராய்ந்து அவர்களது அனுமதி பெற்று அச்சடிக்கப்பட்ட 200 முதல் 500 கோடிரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை தவறில்லை... தமிழின் பெருமையை பரப்பியவரில் இவருக்கும் துளி பங்குண்டு அந்தவகையில் பாடபுத்தகத்தில் பாடல் எழுத(முதல்வராய் இருக்கும் போது ) உரிமை இருக்கும். இதை சொன்னால் கால்புனர்சி என்பீர்கள் அப்படிதானே ......
 
சந்தோஷ் கோபால் அவர்களே ,அம்மாவுக்கு தெரியாதா சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆட்சியில் அறிவித்தது.அவர் எதிர்கட்சியாய் இருக்கும் போது இந்தமாதிரி திட்டங்களில் குறைகள் இருந்தால் தட்டி கேட்பதற்கு அல்லவே மக்கள் இவருக்கு ஓட்டளித்தனர்.இவர் ஆட்சி பொறுப்பேற்கும் வரை தமிழ் நாட்டில் என்ன நடந்ததாலும் கண்டுக்க மாட்டார் இவர் ஆட்சி ஏறிய உடன்தான் தெரிந்ததா இது எல்லாம் தவறு என்று.கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சியாய் என்ன செய்தார்.மம்தாவை பாருங்கள் சிங்கூர் தொழிற்ச்சாலை கட்டுவதை தடுத்து நிறுத்தி அவர் தனது கடமையை சிறப்பாக செய்தார் அப்படி உங்கள் அம்மாவும் கடந்த ஆட்சியில் தவறான திட்டங்களை நிறுத்தி இருந்தால் மக்களின் வரிப்பணத்தில் எவ்வளவு மிச்சபடுத்திஎருக்க முடியும்.இவரது வழக்குகாக இருக்கிற அத்தனை நீதி மன்றங்களிலும் தடை வாங்க தெரிந்த இவரால் இந்த மாதிரி மக்கள் நலத்திட்டங்களில் குறைகள் ஏற்படும்போது தடைவாங்க தெரியாதா சமச்சீர் கல்வியையே நீக்கிவிட்டு பழைய பாடத்திட்டங்கள் படி புத்தகம் அச்சடிக்கும் muyarchikku பதில் இந்த புதிய சசீர்கல்வியில் குறைகள் இருந்தால் நீக்குவது அல்லவே சரியானது....
 

டெல்லி கோர்ட்டில் கோபாலபுரம்! எமோஷனல் கெட்-டு-கெதர்


எமோஷனல் கெட்-டு-கெதர்அழகிரிக்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையே நிலவிய மனக் கசப்பு முடிவுக்கு வந்தபோது, 'கண்கள் பனித்தன... இதயம் இனித்தது!’ என மனம் உருகிச் சொன்னார் கருணாநிதி. மீண்டும் மொத்தக் குடும்ப உறவுகளும் ஒன்று கூடும் வைபோகம் பாட்டியாலா நீதிமன்றத்திலும் திகார் சிறைச்சாலையிலும் கடந்த சில நாட்களாக நடந்தது. அதாவது கோபாலபுரமே டெல்லிக்கு இடம் பெயர்ந் தது மாதிரி இருந்தது. அழுகை, ஆதங்கம், கோபம், கூச்சல் என மீடியாக்களின் பார்வைக்கு அப்பால் நடந்த அத்தனை நிகழ்வுகளும் அப்படியே இங்கே...
சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு 23-ம் தேதி வந்த கனிமொழியை மத்திய அமைச்சர் அழகிரி சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 'மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை நீதிமன்றத்தில் சந்திக்கக் கூடாது’ என்பதால், தன் மனைவி காந்தி, மகள் கயல்விழி, மகன் துரை தயாநிதி ஆகியோரை அங்கே அனுப்பிவைத்தார் அழகிரி.
கனிமொழி மீது மிகுந்த அன்பு பாராட்டுபவர் கயல்விழி. அதனாலோ என்னவோ... கனிமொழியைக் கண்டதும் 'அத்தே...’ எனக் கதறத் தொடங்கிவிட்டார் கயல். கனிமொழியைத் தோளோடு சாய்த்து காந்தி ஆறுதல் சொல்ல, ராஜாத்தி அம்மாளுக்கும் கண் கலங்கிவிட்டது. மதுரையில் துரை தயாநிதியின் திருமணத்துக்குப் பிறகு, காந்தியும் ராஜாத்தியும் அன்றுதான் சந்தித்தனர். நடுவில் கனிமொழி, இடப்புறம் காந்தி, வலப்புறம் கயல்விழி என அமர்ந்து நிறைய நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
''இந்த விவகாரத்தில் என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியவே இல்லை அண்ணி. கலைஞர் டி.வி-யில் நான் பங்கு கேட்கலை. கையெழுத்துப் போடச் சொன்னாங்க, போட்டேன்...!'' என காந்தியிடம் கனிமொழி உருக்கமாகச் சொல்ல, ''எல்லாத்தையும் அண்ணன் பார்த்துப்பார். நீ தைரியமா இரு!'' என்றார் அவர் ஆறுதலாக!
கயல்விழியிடம் நெடுநேரம் பேசிய கனிமொழி, சகஜ நிலைக்கு வந்தார். சரத்குமாரின் உறவினர்களிடம், 'தைரியமாக இருங்கள்!’ என கனிமொழியே ஆறுதல் வார்த்தார். ''கோர்ட்டில் விசாரணை தொடங்க இன்னும் நேரம் ஆகுமா?'' என காந்தி அப்பாவியாகக் கேட்க, ''தாமதம் ஆகுறது நல்லதுதான் அண்ணி. உங்களோட இன்னும் கொஞ்ச நேரம் இங்கே பேசிக்கிட்டு இருக்கலாம். இல்லேன்னா, சீக்கிரமே ஜெயில்ல போய்த் தனி ஆளா உட்கார்ந்து இருக்கணும்!'' எனச் சொல்லி கனி சிரிக்க, எல்லோருக்குமே கண்ணில் நீர் கோத்துக்கொண்டது.

நீதிமன்ற நிகழ்வுகள் முடிந்து சிறைக்குச் செல்லும் நேரம் வந்ததும், ''ஆதியைப் பத்திரமா பார்த்துக்கோங்க!'' என்றபடியே கையசைத்துக் கிளம்பினார் கனி.
அன்று மாலை திகார் சிறைக்கு கருணாநிதி வர, அங்கே பெரிய பாசப் போராட்டமே நடந்தது. கனிமொழிக்கு ஆறுதல் சொல்லும் விதமாக, 'நான் டெல்லியிலேயே தங்கிடவாம்மா?’ எனக் கருணாநிதி தழுதழுக்க, 'எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன்பா... நீங்க தைரியமாப் போங்க!’ என நம்பிக்கை ஊட்டினார்.
சிறை சந்திப்பு முடிந்தும் கருணாநிதிக்கு சென்னை திரும்ப மனம் இல்லை. ஜெகத்ரட்சகன், ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரிடம், 'சட்டரீதியா மேற்கொண்டு என்ன செய்ய முடியும்?’ என்பது குறித்து விசாரித்தார். இதற்கிடையில், அடுத்த நாள் ஸ்டாலின் டெல்லிக்கு வந்தார். சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்திருந்த கனிமொழியிடம் இந்தத் தகவல் சொல்லப்பட, அவருக்கு நம்ப முடியாத ஆச்சர்யம்.
ஸ்டாலினை சந்தித்தபோது மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார் கனி. ''என்னால் அப்பா ரொம்ப சங்கடப்படுறார். அதான் வருத்தமா இருக்கு!'' என்பது மட்டுமே கனி காட்டிய ஆதங்கம். கனி, ஸ்டாலின், ஆதித்யன் மூவரும் ஒரு பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, அதனை ஒருவர் செல்போனில் படம் எடுத்தார். இதில் கடுப்பான ஸ்டாலின், 'அவனைப் பிடிங்கய்யா...’ என்றார் ஆவேசமாக. தி.மு.க. புள்ளிகள் அந்த நபரைத் துரத்திப் பிடித்து அந்தப் படத்தை அழித்தனர். அடுத்த கட்ட சட்டரீதியான முன்னேற்பாடுகள் குறித்து சொல்லி, ஸ்டாலின் கனிமொழியைத் தேற்ற, ''அவ்ளோ சீக்கிரம் பெயில் கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும். சிறையில் இருப்பதை ஒரு புது அனுபவமா நினைச்சு என்னை நானே தேத்திக்கிறேன்!'' என்றார் கனி. ராஜாத்தி அம்மாளும் ஸ்டாலினுடன் சில நிமிடங்கள் பேசினார்.
அன்று மாலை... டெல்லி மீடியாக்களுக்கே தெரியாதபடி முக்கியமான ஒரு சந்திப்பு திகார் சிறைச்சாலையில் நடந்தது. மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரியும் தயாநிதி மாறனும் சிறையில் கனியை சந்திக்க அனுமதி கேட்டனர். தயாநிதி மாறன் வந்திருப்பதை, கனியால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை!
ஸ்பெக்ட்ரம் பிரச்னைக்குப் பிறகு தயாநிதியை, கனிமொழி சந்திப்பதே இப்போதுதான். அழகிரியிடம் மனம்விட்டுப் பேசிய கனிமொழி, தயாநிதியிடம் நலம் விசாரித்தார். அப்போது ஆறுதலாக தயாநிதி சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறார். இருவரை யும் சமாதானப்படுத்தும் விதமாக அழகிரி, குடும்ப விவகாரங்களை உரக்கப் பேசி இருக்கிறார். இறுதியில் கனிமொழியைத் தட்டிக்கொடுத்து, ''நானும் சிறைவாசம் அனுபவிச்சவன்தான். ஆனா, அப்போகூட இந்த அளவுக்கு சங்கடப்பட்டது இல்லை. நீ தைரியமாப் பேசினாலும் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்மா. சீக்கிரமே உன்னை வெளியே எடுத்திடுவோம். குடும்ப ரீதியான அத்தனை கசப்புகளும் நிச்சயம் முடிவுக்கு வந்திடும்!'' எனச் சொன்னாராம். தயாநிதி அதிகம் பேசவில்லை என்றாலும், குடும்ப சமாதானத்துக்கான முதல் முயற்சி அங்கே நிகழ்ந்ததாக அடித்துச் சொல்கிறார்கள் டெல்லிவாலாக்கள்.
அடுத்து நிகழ்ந்த சந்திப்புதான் நம்ப முடியாத ஆச்சர்யம். ஆ.ராசா உடனான சந்திப்புதான் அது. ஆ.ராசா சகஜமாகப் பேசவில்லை என்றாலும், அழகிரியின் ஆறுதல் அவரைத் தெம்பாக்கி இருக்கிறது. தயாநிதி மாறனும் ராசாவுடன் கை குலுக்கி நிறையப் பேசி இருக்கிறார். 'சரத்குமாரை வரச் சொல்லுங்கள். நாங்கள் பார்க்க வேண்டும்!’ என ஆ.ராசாவிடம் சொல்லி அனுப்பினர் இருவரும். 'தயாநிதி மாறனை சந்திக்கும் நிலையில் நான் இல்லை!’ எனச் சரத்குமார் சொல்லிவிட்டதாக டெல்லி நிருபர்கள் வட்டாரம் சொல்கிறது.
சரத்குமாரின் சகோதரியின் வீடு டெல்லியில்தான் இருக்கிறது. அங்கே இருந்தும் கனிமொழிக்கும் சரத்துக்கும் சாப்பாடு வருகிறது. துணிமணிகள் பரிமாற்றமும் சரத் மூலமே நடக்கிறது. மூன்று வேளையும் வீட்டு சாப் பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தும், மதியம் தவிர்த்து இரு வேளைகளும் சிறை உணவைத்தான் கனிமொழியும் சரத்தும் சாப்பிடுகிறார்கள்.

25-ம் தேதி, சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு வந்த கனிமொழியை, மு.க.தமிழரசு, செல்வி, துர்கா ஸ்டாலின், மோகனா என பெரிய உறவு வட்டாரமே சந்தித்தது. குடும்ப ரீதியான பிரச்னையில் பெரிய பனிப் போர் நிகழ்ந்தது, செல்விக்கும் கனிமொழிக்கும் இடையேதான். ஆனால், அதை எல்லாம் மறந்துவிட்டு அத்தனை பேர் மத்தியிலும், ''உனக்கு இப்படி ஆயிடுச்சேம்மா'' என செல்வி தழுதழுத்தார். கனிமொழிக்கு மிகுந்த ஆறுதலாக அமைந்தது செல்வியின் வார்த்தைகள் தான். செல்வியின் கைகளைப் பற்றியபடியே துர்காவிடம் சிறை வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார் கனிமொழி. அடுத்த சில நிமிடங்களில் முரசொலி மாறனின் மனைவி மல்லிகாவும் அங்கே ஆஜர். ''என்னைப் பார்க்க நீங்க எல்லாம் வருவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. கெட்டதிலும் ஒரு நல்லதுன்னு சொல்வாங்களே... அதை நினைச்சே மனசைத் தேத்திக்கிறேன்!'' என அவரைப் பார்த்து கலங்கிவிட்டார் கனி.
ஆனால், ராஜாத்தி என்ன நினைத்தாரோ... செல்வி, துர்கா உள்ளிட்ட உறவுகள் வந்த உடனேயே அவர் பட்டும் படாமல் ஒதுங்கிக்கொண்டார்.
உறவுகளின் சந்திப்புகள் குறித்துப் பேசும் தி.மு.க-வின் டெல்லிப் புள்ளிகள், ''கனிமொழிக்கு இந்த அளவுக்கு சிக்கல் வராது என்ற நம்பிக்கையில்தான் ஆரம்பத்தில் உறவினர்கள் பலரும் அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டார்கள். கனிமொழியின் பிறந்த நாளுக்குக்கூட வாழ்த்து சொல்லாத அழகிரி, இப்படித் தேடி வந்து சந்தித்ததில், கனி மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். குறிப்பாக தயாநிதி மாறனும் செல்வியும் நேரில் வந்து சந்தித்ததை எங்களால் இன்னமும் நம்ப முடியவில்லை. ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் இருந்து வெளியே வர, முதலில் குடும்ப மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என தலைவர் நினைக்கிறார். அதற்குத் தக்கபடி குடும்ப உறவுகள் கைகோத்து இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. அதே நேரம், சிறைக்குள் தயாநிதி மாறனை சந்திக்க சரத்குமார் மறுத்ததும், செல்வி, துர்கா ஆகியோருடன் ராஜாத்தி அம்மாள் சரிவரப் பேசாமல் முறுக்கிக்கொண்டு நின்றதும்... குடும்ப மோதல்களை இன்னமும் பெரிதாக்கிவிடும் என்றே தோன்றுகிறது.
'எனக்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என சிறைக்குள் புலம்பித் தவிக்கிறார் சரத். இவற்றை எல்லாம் தாண்டி, சட்ட ரீதியாகவும் இன்னும் சில திருப்பங்கள் இருக்கும்....'' என்கிறார்கள் டெல்லி சிறைத் துறை வட்டாரத்தில்!

ஊத்தங்கரை முரளிக்கு குறும்பட ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது

ஊத்தங்கரை: சிறந்த குறும்பட ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த புனே திரைப்படக் கல்லூரி மாணவர் ஜி. முரளிக்கு கிடைத்துள்ளது.

கடந்த வருடத்திற்கான திரைப்பட, குறும்பட விருதுகள் கடந்த வியாழனன்று (மே 19) அறிவிக்கப்பட்டது. இதில் அருனிமா ஷர்மா இயக்கிய ஷயம் ராத் ஷெகர் என்ற குறும்படத்திற்குச் சிறந்த இயக்கம் மற்றும் ஒளிப்பதிவுக்கான விருதுகள் கிடைத்துள்ளன.

புனே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இக் குறும் படத்தை உருவாக்கியுள்ளனர்.

இப் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பெற்றுள்ள ஜி. முரளி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர்கள் கே.சி. கோவிந்தராஜூம், சரோஜாவும் அரசுப் பள்ளி ஆசிரியர்களாக உள்ளனர்.

சிறந்த குறும்பட ஒளிப் பதிவாளருக்கான வெள்ளித்தாமரை விருதுடன் ரூ 50 ஆயிரம் பரிசுத் தொகை குடியரசுத் தலைவரால் முரளிக்கு வழங்கப்பட உள்ளது

கமிஷனர் அலுவலகத்தில் உண்ணாவிரதமிருக்க வனிதா முயற்சி!


Vanitha
சென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட மகன் விஜய் ஸ்ரீ ஹரி விஷயத்தில் இன்னும் தீர்வு கிடைக்காததால், சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று உண்ணாவிரதமிருக்க முயற்சி செய்தார் நடிகை வனிதா.

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் நடிகை வனிதா. வனிதாவுக்கும், அவரது முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரி. அவனை தன்னிடம் ஒப்படைக்க கோரி வனிதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் அந்த சிறுவன் தாயிடம் வர மறுக்கிறான். அவனுக்கு வனிதாவின் முன்னாள் கணவர் ஆகாஷ் மூளைச் சலவை செய்துள்ளதாக குற்றம்சாட்டி வனிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உளவியல் நிபுணர்களிடம் ஆலோசித்தபிறகு, வனிதாவிடம் குழந்தையை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என வனிதா குற்றம்சாட்டியுள்ளார். எனவே சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து வனிதா புதிய புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி மத்திய சென்னை இணை கமிஷனர் சங்கர் ஆலோசனையின் பேரில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ஜெயகர்சாலி நேற்று மாலை வனிதாவிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள ஆகாஷின் வீட்டுக்கு பெண் போலீசார் வனிதாவுடன் சென்றனர். அங்கிருந்த விஜய் ஸ்ரீஹரி, வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான். இதனால் போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர்.

வனிதாவும் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று இரவு 11.30 மணி அளவில் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வனிதா திடீரென வந்தார். எனது மகனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று கூறிய அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார். உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறினார்.

இதையடுத்து போலீசார் மீண்டும் ஆகாஷின் வீட்டுக்கு வனிதாவை அழைத்துச் சென்றனர். அப்போதும் விஜய் ஸ்ரீஹரி அவருடன் செல்ல மறுத்து விட்டான். இதுதொடர்பாக வனிதா கூறுகையில், "வாரத்தில் 3 நாட்கள் (வெள்ளி, சனி, திங்கள்) விஜய் ஸ்ரீஹரி என்னுடன் இருக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை நான் ஓயமாட்டேன். ஆகாசிடமிருந்து அவனை மீட்காமல் விடமாட்டேன். நிச்சயம் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்", என்றார் அவர்.

சோனியாவுடன் தயாநிதி சந்திப்பு-கூட்டணியை காக்க முயற்சி?: கனிமொழியுடன் அழகிரி சந்திப்பு

டெல்லி: திமுக எம்பியும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி சிறையில் உள்ள நிலையில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நேற்று முன் தினம் இந்தச் சந்திப்பு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாதும் உடனிருந்தார்.

கனிமொழியை திகார் சிறையில் கருணாநிதி கடந்த திங்கள்கிழமை சந்தித்தார். ஆனால், சோனியாவையோ பிரதமரையோ அவர் சந்திக்கவில்லை. மாறாக கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா, நாராயணசாமி, காங்கிரஸ் எம்பி ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இந் நிலையில் வரும் ஜூன் மாதத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 3வது குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கு மேலும் சிக்கல்கள் ஏற்படலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையே காங்கிரஸ் கூட்டணியில் இடம் பிடிக்க அதிமுக பல மறைமுக முயற்சிகளில் இறங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் சோனியா காந்தியை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் திடீரென்று சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

English summary
DMK central minister Dayanidhi Maran met Sonia at her residence on Thursday. It is widely believed that it was an effort to save congress-DMK alliance

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செருப்பு வாங்கினார்!

முதல்வர் ஜெயலலிதா இருக்குமிடம் கோவில் என்று கூறிக் கொண்டு, ஜெயலலிதாவின் வீடு, அவர் பணியாற்றும் தலைமைச் செயலகம், சட்டசபை ஆகிய இடங்களில் செருப்பே அணியாமல் வந்த தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இனிமேல் செருப்பு அணியாமல் வரக் கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக மாநில மாணவரணி பொறுப்பில் இருந்த உதயகுமார் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அவரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ஜெயலலிதா நியமித்தார்.

ஆனால், முதல்வர் மீதுள்ள அதீத பக்தியால், செருப்பு போடாமல் தலைமை செயலகத்திற்கு உதயகுமார் வந்து சென்றார்.

இது பற்றி அவர் கூறுகையில், கோவிலுக்குள் செல்லும் போது, செருப்பை கழற்றி வைத்து விட்டுத் தான் செல்கிறோம். முதல்வர் 'அம்மா' இருக்குமிடம் தான் எனக்குக் கோவில். இதனால் அவர் இருக்கும் இடத்திற்கு செருப்பு அணியாமல் சென்று வருகிறேன் என்றார்.

அமைச்சராக பதவியேற்றபோதும், சட்டசபையில் எம்எல்ஏவாக பதவியேற்றபோதும், தலைமைச் செயலக வளாகத்திலும் சட்டசபையிலும் செருப்பு அணியாமல் நடமாடி வந்தார் உதயகுமார்.

இந் நிலையில் நேற்று கோட்டைக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவை உதயகுமார் ஓடிச் சென்று வணங்கினார். அவரை அழைத்த ஜெயலலிதா, "இனிமேல் செருப்பு அணியாமல் கோட்டைக்கு வரக் கூடாது'' என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை உடனடியாக பின்பற்றுவதாகக் கூறிய அமைச்சர் இப்போது செருப்பு அணியத் துவங்கியுள்ளார்.

அதே போல கடந்த வாரம் அமைச்சர்கள் பதவியேற்றபோது யாரும் தனது காலில் விழக் கூடாது என்றும் ஜெயலலிதா உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா-ஸ்டாலின் நேருக்கு நேர்:

இந் நிலையில் நேற்று சபாநாயகராக ஜெயக்குமாரும், துணை சபாநாயகராக தனபாலும் பொறுப்பேற்றபோது ஜெயலலிதா சட்டசபைக்குள் வந்தார். அவர் வரும்போது திமுக எம்எல்ஏ மு.க.ஸ்டாலின் உள்பட சபையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். பதிலுக்கு ஜெயலலிதாவும் ஸ்டாலினைப் பார்த்து வணக்கம் தெரிவித்தார்.

அதேபோல சபை நிகழ்ச்சிகள் முடிந்ததும் வெளியில் வந்த சபாநாயகர் ஜெயக்குமாருக்கு ஸ்டாலின் உள்பட முன்னாள் திமுக அமைச்சர்கள் அனைவரும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
English summary
TN IT minister Udaya kumar who was avoiding wearing chappal before CM Jayalalithaa as he was calling her as god and place she dwell is temple is changed man now. He is wearing slipper after CM's advice to do so

வழக்கம் போல் மாணவியரே அதிக அளவில் சாதனை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம்

நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், வழக்கம் போல, மாணவி யரே அதிகளவில் சாதனை படைத்தனர். எஸ்.எஸ்.எல்.சி., தேர் வில், மாநில அளவில், ஐந்து மாணவியர் முதலிடத்தைப் பிடித் துள்ளனர். அவர்கள் எடுத்த மதிப்பெண், 496. மார்ச், ஏப்ரல் மாதங்களில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, எட்டு லட்சத்து 38 ஆயிரத்து 165 மாணவர்களும், மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 960 மாணவர்களும் எழுதினர். ஆங்கிலோ இந்தியன் தேர்வை, 4,865 மாணவர்களும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வை, 1,392 மாணவர்களும் எழுதினர். இவர்களுடன், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்தேர்வு மாணவர்களும் தேர்வெழுதினர்.

புதிய சாதனை: தேர்வு முடிவுகள், நேற்று காலை 10 மணிக்கு, தேர்வுத் துறை இயக்குனரகத்தில் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளைப் பார்த்து, தேர்வுத் துறை அதிகாரிகளே ஆச்சரியப்பட்டனர். அந்தளவிற்கு தேர்ச்சி சதவீதம், 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை, "ஜெட்' வேகத்தில் உயர்வு, மாநில அளவிலான முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு என, பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் புதிய சாதனை படைத்தனர். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், மாநில அளவிலான முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை வழக்கமாக 10க்குள் தான் இருக்கும். ஆனால், முதல் முறையாக, இந்த ஆண்டு 40 மாணவர்கள் இடம் பெற்று, கல்வித் துறையை மலைக்க வைத்துள்ளனர். 500க்கு 496 மதிப்பெண்களுடன் ஐந்து மாணவியர் முதலிடத்தையும், 495 மதிப்பெண்கள் பெற்று 11 மாணவர்கள் இரண்டாமிடத்தையும், 494 மதிப்பெண்களுடன் 24 மாணவர்கள் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

முத்திரை பதித்த மாணவர்கள்: முதல் மூன்று இடங்களைப் பிடித்த 40 பேரில், 27 பேர், மாணவியர் என்பது, மற்றொரு சாதனை. பிளஸ் 2 தேர்வில், மாநில அளவிலான இடங்களைப் பிடிக்காமல், கோட்டைவிட்ட வட மாவட்டங்கள், பத்தாம் வகுப்பு தேர்வில் சாதித்துள்ளன.

பின்தங்கிய மாவட்டங்கள் அபாரம்: கல்வியில் மிகவும் பின்தங்கிய பட்டியலில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி மின்னலாதேவி, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். திருவள்ளூர், தர்மபுரி, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மாவட்டங்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிகுலேஷன் ஆகிய தேர்வுகளிலும், தலைநகர் சென்னை உட்பட, பல வட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், முன்னணி இடங்களைப் பிடித்தனர். ஆங்கிலோ இந்தியன் தவிர, இதர மூன்று போர்டு தேர்வுகளின் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதமும், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

தேர்ச்சி சதவீதம் உயர்வு: எஸ்.எஸ்.எல்.சி.,யில், 85.30 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட (82.50%), 2.8 சதவீதம் உயர்ந்துள்ளது. ஓ.எஸ்.எல்.சி., தேர்வில், 94.40 சதவீதம் பேரும், மெட்ரிகுலேஷன் தேர்வில், 95.90 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். ஆங்கிலோ இந்தியன் தேர்வில், 95.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், ஓ.எஸ்.எல்.சி., 6.2 சதவீதமும், மெட்ரிக் 1.2 சதவீதமும் தேர்ச்சி அதிகரித்துள்ளது. ஆங்கிலோ இந்தியன் தேர்ச்சி மட்டும் 0.8 சதவீதம் குறைந்துள்ளது.

"சென்டம்' உயர்வு: பாட வாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் எண்ணிக்கையும், இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., கணிதத் தேர்வில், 12 ஆயிரத்து 532 பேர், 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டை விட, ஐந்து மடங்கு (2,399) உயர்ந்துள்ளது. இதேபோல், அறிவியலில் 3,677 பேரும், சமூக அறிவியலில் 756 பேரும், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மெட்ரிக் தேர்விலும், 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கருத்து .அவதார் சென்னை : 
மாணவர்களுக்கு வேறு பல முக்கிய சோலிகள் உள்ளது தெரியாமல் பிதற்றாதீர்கள் நடிகர்களின் கட் அவுட்டுக்களுக்கு பால் அபிஷேகம் செய்யவேண்டும்  அரசியல்வாதிகளுக்கு ஆலவட்டம் பிடிக்க வேண்டும் தங்களை ஒரு சினிமா ஹிரோ வாக கனவு கண்டு கொண்டு சதா செல்போனும் கையுமாக அலையவேண்டும் இதெல்லாம் எவ்வளவு முக்கியம் ? இதை விட்டு விட்டு எதோ படிப்பு பருப்பு என்று .....

ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுகிறேன்....... ; பரபரப்பு ஆடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இரவு மருத்துவ சிச்சைக்காக சிங்கப்பூர் புறப்பட்டுச்சென்றார். மனைவி, மகள்,மருமகன்கள் உடன் புறப்பட்டுச் சென்றனர்.
அவர் புறப்பட்டுப்போகும்போது ஏராளமான ரசிகர்கள் வழியனுப்பக்காத்திருந்தனர்.; ரஜினி முகத்தை பார்த்துவிடலாம் என்று இருந்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஆம்புலன்ஸில் ரஜினியை அழைத்துச்சென்றதால்; பார்க்க முடியவில்லை. உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் முகத்தை காட்டாமல் ரசிகர்களுக்காக தனது குரலை பதிவு செய்து கொடுத்திருக்கிறார் ரஜினி.
அந்த ஆடியோவில் ரஜினியின் குரல் மிகவும் தளர்ந்திருக்கிறது. அவர் உடல் நிலையை அவரின் குரல் உணர்த்துகிறது.
அந்த ஆடியோ :
’ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுறேன். ஹா..ஹா...ஹா...ஹேப்பியா போய்கிட்டு இருக்குறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்திடறேன்.
பணம் வாங்குறேன்... ஆக்ட் பண்றேன்... அதுக்கே இவ்ளவு அன்பு வச்சிருக்கீங்க. இதுக்கெல்லாம் நான் என்ன செய்யப்போறேன்.
என் ரசிகர்கள் எல்லாம் தலை நிமிர்ந்து நிற்கும்படி செய்வேன்.  கடவுள் கிருபை இருக்கு.
எல்லாத்துக்கும் மேல கடவுள் ரூபத்துல இருக்குற உங்களோட கிருபை இருக்கு. நான் சீக்கிரமே திரும்பி வந்துடறேன்.; ஓகே.;பாய் .குட்’’

Nano Car அடுத்த மாதம் இலங்கைக்கு நானோ ஏற்றுமதி-டாடா திட்டம்

டெல்லி: வரும் ஜூன் மாதம் முதல் நானோ காரை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

குறைந்த விலை என்ற அஸ்திரத்தை பயன்படுத்தி நானோ காரின் விற்பனையை பல மடங்கு அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் கணக்கு போட்டு செயல்பட்டு வருகிறது. விளம்பரங்கள், சலுகைககளால் உள்நாட்டு சந்தையில் நானோ காரின் விற்பனையை டாடா தூக்கி நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில், விற்பனையை மேலும் உயர்த்தும் நோக்கில் அண்டை நாடுகளுக்கும் நானோவை ஏற்றுமதி செய்ய டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் இலங்கைக்கு நானோவை ஏற்றுமதி செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முதலில் 500 நானோ கார்கள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக டாடா மோட்டார்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து, மாதத்திற்கு 200 நானோ கார்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மற்ற வெளிநாடுகளுக்கு நானோவை ஏற்றுமதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்தந்த நாட்டு பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப காரில் சில மாறுதல்கள் செய்ய வேண்டி உள்ளதே காலதாமத்திற்கு காரணம் என டாடா வட்டாரங்கள் கூறுகின்றன

நன்றி அறிவிப்பு’, ‘கட்சிப் பணி’ என்று மீண்டும் சுறுசுறுப்பாகிவிட்டார் மு.க.ஸ்டாலின்.

எதிர்பாராத  தோல்வி, காலைச் சுற்றும் ஸ்பெக்ட்ரம் வழக்கு என தி.மு.க. திக்கித் திணறிப் போய் உள்ளது. தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை சகஜநிலைக்கு வர சில மாதங்கள் கூட ஆகலாம். இருந்தாலும், ‘நன்றி அறிவிப்பு’, ‘கட்சிப் பணி’ என்று மீண்டும் சுறுசுறுப்பாகிவிட்டார் மு.க.ஸ்டாலின்.
சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்து நிற்கிறது. ‘மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்கு கிறோம், தொடர்ந்து மக்கள் பணி செய்வோம்’ என்ற வழக்கமான அறிக்கைக்குப் பதில், ‘தமிழக மக்கள் எனக்கு ஓய்வளித்து விட்டார்கள்’ என்று அவர் கூறியிருப்பதே அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவில்லை என்பதற்கு உதாரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இந்நிலையில், கனிமொழி கைதுப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால், அவரைக் காப்பாற்றும் வேலைகளில் மட்டுமே கருணாநிதி கவனம் செலுத்துகிறார் என்கிறார்கள் தி.மு.க.வினர்.

இந்நிலையில், ஆட்சி போன பிறகு, கனிமொழி விவகாரத்தில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவதால், கட்சியில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தி.மு.க. தொண் டர்கள் குழம்பிப் போனார்கள்.

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தி.மு.க.வில் என்ன நடக்கிறது என்று சில சீனியர் தலைவர்களிடம் பேசினோம்.

‘‘தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திக்குத்தெரியாத காட்டில் விடப்பட்டதாக உணர்கிறோம். கட்சியில் என்ன நடக்கிறது என்று குழம்பிக் கொண் டிருந்தோம். அப்போதுதான் தேர்தல் தோல்வியிலிருந்து ஸ்டாலின் மீண்டார்.

‘தொண்டர்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டு கட்சிக்கே பிரச்னை ஏற்படும்’ என்று நினைத்தார் ஸ்டாலின். சரியான எதிர்க்கட்சியாக செயல்படாவிட்டால் மக்கள் மன்றத்திலும் விஜயகாந்த் இடம் பிடித்துவிடுவார் என்பதை தளபதி உணர்ந்தார்.

இதனால், தான் வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியை மூன்று நாட்கள் வலம் வந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதன் பிறகே தி.மு.க.வினர் மத்தியில் உற்சாகம் பிறந்தது. தற்போது தன்னைச் சந்திக்க வரும் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரிடம் தேர்தல் தோல்வி பற்றி தளபதி வெளிப்படையாகப் பேசுகிறார். ‘குடும்ப அரசியல்தான் தேர்தல் தோல்விக்குக் காரணம்’ என்று விமர்சிக்கும் கட்சிக்காரர்களிடம் அவர் கோபப்படுவதில்லை.

கட்சியைக் காப்பாற்ற ஸ்டாலின் எடுத்திருக்கும் அடுத்தகட்ட முயற்சி தி.மு.க.வினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அடிமட்டத் தொண்டனை ஊக்குவிப்பதன் மூலமே கட்சியை ஸ்திரப்படுத்த முடியும் என்று நம்புகிறார் ஸ்டாலின்.

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் தங்கியிருந்து கிளைச் செயலாளர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசி தேர்தல் தோல்வி பற்றி ஆய்வு செய்வதோடு கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து அவர்களிடம் விவாதிப்பதன் மூலம் மறுபடியும் கட்சிப் பணிகளை முடுக்கி விட முடிவு செய்திருக்கிறார்.

பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின்னர் தொண்டர்கள் தரிசனத்தை தளபதி தொடங்குகிறார்’’ என்கிறார்கள் தி.மு.க. சீனியர் தலைவர்கள்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க 5 நீதியரசர்களை கொண்ட ஆணைக்குழு!


வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிப்பதற்காகவும் அது தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் வகையிலும் 5 நீதிபதிகளை கொண்ட விசாரணை ஆணைக்குழுவொன்றினை அரசாங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்தக் குழுவில் இடம்பெறும் நீதிபதிகள் ஓய்வுபெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களில் மூவர் சிங்களவராகவும் ஒருவர் தமிழராகவும் மற்றொருவர் முஸ்லிமாகவும் இருப்பார்கள் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜுன் மாதம் இந்த விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது. இந்த ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறும் சாட்சியங்களின் அடிப்படையில் மனித உரிமை ஆணைக்குழு சட்டங்களின் கீழ் நீதிபதிகள் சுயாதீனமாக கடமையாற்றுவார்கள். வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் இந்த ஆணைக்குழுவில் கடமையாற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்றும் பிரியந்த பெரேரா மேலும் கூறியுள்ளார்.
உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்களினால் மேற்கொள்ளப்படும் முøறப்பாடுகள் குறித்து இந்த ஆøணக்குழு முக்கிய கவனம் செலுத்தும். எவ்வாறெனினும் நாட்டின் ஏனைய பிரதேசங்களை சேர்ந்தவர்களும் தமது முறைப்பாடுகளை மேற்கொள்ளமுடிய>ம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமை ஆøக்குழுவின் சிபார்சுகளை செயற்படுத்தாமல் விடுபவர்களை அழைத்து விசாரணை நடத்தப்படும். மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிப்பதற்கு ஒவ்வொரு பிராந்தியத்திலும் மனித உரிமை உயர் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவார்கள் ன்றும் ஆணைக்குழுவின் தலைவர் பிரியந்த பெரேரா மேலும் கூறியுள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டதையடுத்து மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளது. இதேபோல் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படவேண்டியது அவசியமென இந்தியாவும் வலியுறுத்தியிருந்தது. இதனையடுத்தே இந்த விசாரணை ஆணைக்குழுவினை அமைப்பதற்கு அரசாங்கம திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தமிழர்களின் ஏகப் பிரதிநிதியாக அரசாங்கம் எவரையும் ஏற்கவில்லை : லக்ஷ்மன் யாப்பா!


தமிழர்களின் ஏகப் பிரதிநிதியாக அரசாங்கம் எவரையும் ஏற்றுக்கொள்ளவில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகைளத் தீர்த்து வைப்பதில் அரசாங்கம் முன்னுரிமை வழங்கி செயற்பட்டு வருகின்றது. புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் அறவிடப்பட்ட பெருந்தொகைப் பணம் தமிழ் மக்களின் நலனுக்காக செலவிடப்படவில்லை. அவை அழிவை ஏற்படுத்தும் யுத்த தளவாடங்கள் கொள்வனவுக்கே பயன்படுத்தப்பட்டன.
ஆனால் இன்று யுத்தம் முடிந்த நிலையில் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் நிதி அறவிடும் நடவடிக்கையினால் தமிழ் மக்கள் நன்மையடையப்போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்

எமது உள்வீட்டுப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் எமது மக்கள் எமக்கு உதவுவர். அதில் வெளியார் தலையீட்டுக்கு ஒருபோதும் இடமில்லை: ஜனாதிபதி


mahinda-1804தேசிய ஒருமைப்பாட்டுடன் வட, கிழக்கு வாழ் மக்களுக்கான ஜனநாயக உரிமையினை வழங்குவதற்கு நாங்கள் ஒருபோதும் தயங்கவில்லை. இருப்பினும் பிரிவினைவாதக் குழுக்கள் கேட்பதை கொடுக்க நாங்கள் தயாராக இல்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்

சர்வதேசத்தைப் பயன்படுத்தி இந்த பிரிவினைவாதக் குழுக்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் சாத்தியமாகப் போவதில்லை. உள்வீட்டுப் பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வோம். அதில் வெளியார் தலையீட்டுக்கு ஒருபோதும் இடமில்லையெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

காலிமுகத்திடலில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற யுத்த வெற்றிக்கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'பழைய காயங்களை பெருப்பித்து மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சித்து வருகின்றன. அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை என்பதை அனைத்து அரசியல் கட்சிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அரசாங்கத்துடன் இணைந்து நாட்டையும் நாட்டு மக்களையும் அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் இந்த கட்சிகள் ஈடுபட வேண்டுமே தவிர, அரசாங்கத்துக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாடு தற்போது ஐக்கியப்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து இன மக்களும் சமமாக வாழ வழிசமைத்த வெற்றியாகவே இந்த யுத்த வெற்றி விழா கருதப்படுகிறது. யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் அரசியல் அமைப்புக்குள் மனித உரிமைகளை உள்ளடக்கி சர்வதேசத்திடம் சமர்பிப்பதன் மூலம் நாட்டினதும் நாட்டு மக்களினதும் மனித உரிமையை பாதுகாக்க முடியாது. மக்கள் சுதந்திரமாகவும் தங்களது ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தும் வாழக்கூடியதொரு சூழ்நிலையை உருவாக்குவதன் மூலமே மனித உரிமைகளை பாதுகாக்க முடியும்.

எமது மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் நாம் எப்போதும் ஈடுபட்டு வருகின்றோம். யுத்தத்தால் இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் வெறுமனே மீள்குடியேற்றத்திற்கு உட்படுத்தவில்லை.தலையணை, படுக்கை, நுளம்புத்திரி உள்ளிட்ட சகலவற்றையும் வழங்கியே அவர்களை மீள்குடியேற்றினோம்.

அபிவிருத்தியின் சூரிய உதயம் வடக்கு, கிழக்கில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகள் எமது மக்களின் சொத்துக்களையே அழித்தனர். அவற்றை நாம் மீளப் பெற்றுக்கொடுத்து வருகிறோம்.

வெளிநாடுகளில் வாழும் பழைய பயங்கரவாதிகள் மீண்டும் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் செல்லும் அவர்கள், அந்நாடுகளிலுள்ள ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது அனைவரும் அறிந்த உண்மையே.

இதேவேளை, உண்மையின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதன் மூலமே ஒரு நாட்டில் குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது. அந்த நிலைமையே எமது நாட்டிலும் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதனாலேயே யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த எமது போர் வீரர்களுக்கு எதிராக தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில் மனிதாபிமானத்தையும் வைத்துக்கொண்டே எமது படையினர் யுத்த களத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் ஜாதி, மதம் என்பவற்றைப் பார்க்கவில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதை அடுத்து அவரது பெற்றோரை எமது படையினரே கவனித்து வந்தனர். அவ்வியக்கத்தைச் சேர்ந்த மேலும் பல முக்கியஸ்தர்களின் குடும்பங்களை நாம் இன்றும் எமது பாதுகாப்பில் வைத்து கவனித்து வருகின்றோம்.

அத்துடன், பயங்கரவாதிகளுக்கான உணவு, மருந்து மற்றும் அனைத்துத் தேவைகளையும் வழங்கிக்கொண்டு அவர்களால் தொடுக்கப்படும் தாக்குதல்களை எதிர்கொண்டு யுத்தம் செய்த நாடு என்ற பெருமை இலங்கைக்கு மாத்திரமே உண்டு.

இவ்வாறானதொரு நிலையில், எமது படையினருக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையானது மிகவும் பாரதூரமானதாகும்.

படையினரே!, யுத்த காலத்தில் நாம் உங்களுடன் இருந்தோம். எமது இதயங்களில் நீங்கள் குடிகொண்டிருக்கின்றீர்கள். இந்நிலையில் உங்களை நாம் ஒருபோதும் காட்டிக்கொடுக்கப்போவதில்லை. உங்களது ஒழுக்கம், கௌரவம் மற்றும் தனித்துவத்தை நாம் எப்போதும் பாதுகாப்போம்.

எமது நாட்டை அழிப்பதற்காக நாம் எமது படையினரைப் பயன்படுத்தவில்லை. நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்டு, நாட்டை ஐக்கியப்படுத்துவதற்காகவே அவர்களைப் பயன்படுத்தி கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம்.

அத்துடன் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளில் படையினர் தங்களது அயராத ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நாம் தகர்ப்போம். எமது மக்கள் அவற்றைத் தகர்ப்பார்கள்.
நாட்டு மக்களின் அனுமதியின்றி இங்கு எதுவும் நடக்காது. எமது உள்வீட்டுப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் எமது மக்கள் எமக்கு உதவுவர். அதில் வெளியார் தலையீட்டுக்கு ஒருபோதும் இடமில்லை.

சர்வதேச நாடுகளைப் போன்று நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை மீறும் சம்பவங்கள் இங்கு இல்லை. வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பிரதேச மக்களும் யுத்தமின்றிய நாட்டில் சுதந்திரக் காற்றை சுவாசித்து இயல்பு வாழ்க்கையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றனர். மக்களின் சந்தோஷமே எமக்கு முக்கியம்' என்றார்.

வெள்ளி, 27 மே, 2011

அந்த பெண்மணி தமிழ்நாட்டுக்காக எதாவது சாகசங்கள் புரிந்து உடல் உறுப்பை

ல்காசு என்றாலும் கவர்மெண்ட் காசு வேண்டும் என்று கிராமத்தில் சொல்வார்கள்
 அந்த அளவிற்கு அரசு உத்தியோகத்தின் மேல் மக்களுக்கு அபிமானம் இன்னும் இருக்கிறது
 சாதாரண மக்களை பற்றி சொல்வானேன் படித்து பட்டம் பெற்றவர்களும் இளையத்தலைமுறையினரும் கூட அரசாங்க வேலையை காதலிக்கிறார்கள்

 எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் தனது மகளை தனியார் துறையில் நல்ல வேலையிலிருந்த நல்ல நல்ல மாப்பிள்ளைக்கெல்லாம் கொடுக்காமல் வெகு நாள் காத்திருந்து சற்று வயசான கவர்மெண்ட் மாப்பிள்ளைக்கு கொடுத்தார்

 இப்போதெல்லாம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளம் கொடுக்கிறார்களே என்று நான் கேட்டபோது சம்பளம் முக்கியமல்ல உத்தியோகப் பாதுகாப்புத்தான் முக்கியமானதனப் பதில் சொன்னார்

இது சரியான நம்பிக்கையா? அவநம்பிக்கயா என்று நமக்குத் தெரியாது ஆனால் நம்ம தமிழ்நாட்டு ஜனங்க இப்படி நம்புகிறார்கள்
 இந்த நம்பிக்கையை சாதகமாகப்பயன் படுத்திக் கொண்டு அரசியல் கட்சிகளை சேர்ந்த வட்டம் மாவட்டம் எனத் துவங்கி அமைச்சர்கள் வரையில் தனி மகசூலே நடக்கிறது
 சென்ற ஆட்சி துவங்கியவுடன் அமைச்சரான ஒருவரிடம் தனது மகனுக்கு பேருந்து நடத்துனர் வேலைக்காக இரண்டு லச்ச ரூபாய் கொடுத்து விட்டுஆட்சி முடியும் வரை காத்திருந்தார் எனக்குத் தெரிந்த பெரியவர்
 இப்படி ஏராளமானவர்களை தமிழ்நாடு முழுவதும் பார்க்கலாம்
 அரசாங்க வேலை பெருவதற்கு ஆள் சிபாரிசு வேண்டும் பெட்டி நிறைய லஞ்சம் கொடுக்க வேண்டும் சிறிதளவு திறமை இருந்தால் கூட போதுமானது எப்படியும் வேலை வாங்கிவிடலாம் என பலர் நம்பிக்கொண்டிருந்தனர்

ஆனால் இப்போது அந்த நம்பிக்கையிலும் இடிவிழுந்திருக்கிறது

 அரசு வேலைக்கு சிபாரிசு லஞ்சம் திறமையெல்லாம் போதாது நாக்கையும் வெட்டிக் கொள்ள வேண்டும் என்று புதிய பார்மூலாவை ஒரு பெண்மணி தமிழ்நாட்டிற்கு வழங்கியிருக்கிறார்
 நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது ஒருவேளை தமிழ்நாட்டில் இனி எல்லா புதிய அரசு ஊழியர்களும் நாக்கறுத்தவர்களாய் காது வெட்டியவர்களாய் தலையில்லாதவர்களாய் தான் காண நேறிடுமா என நடுக்கமாகவும் இருக்கிறது
 ஒரு ஏழைப் பெண்ணுக்கு உதவி செய்ததை எப்படி தப்பென்று சொல்ல முடியும்? என சிலர் கேட்கலாம்
 உதவி செய்ததை யாரும் விமர்சிக்க வில்லை ஆனால் நாக்கை அறுத்து கொண்டதை மட்டுமே காரணமாக வைத்து அரசு வேலை கொடுப்பதை எப்படி ஏற்று கொள்ள முடியும்?

  அந்த பெண்மணி தமிழ்நாட்டுக்காக எதாவது சாகசங்கள் புரிந்து உடல் உறுப்பை பறி கொடுத்தார் என்றால் அவருக்கு அரசு உதவி செய்வதில் நியாயம் இருக்கிறது
 தமிழ் மக்களுக்காக எதாவது செய்திருந்தால் கூட பாராட்டலாம்
 ஆனால் அவர் செய்திருப்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் வெற்றிக்காக
இதை பாராட்டுவதோ பரிசு அளிப்பதோ தவறுதலான முன்னுதாரனமாகும்

பொதுவாக திமுக ஆட்சி என்றால் தலைவர்களை காக்கா பிடிக்க தோரணங்கள் வைப்பது ஆடம்பர கட் அவுட்டுகள் வைப்பது என்பது வழக்கம்

  அதிமுக ஆட்சி என்றால் தலைவிக்காக பால் குடம் சுமப்பது அலகு குத்துவது நெருப்பு மிதிப்பது என்று நடப்பது வழக்கம்
 ஆனால் இப்போதைய இந்த பழக்கம் மிகவும் விபரிதமானது ஒரு வேளை முதல்வர் ஜெயலலிதா இப்படி பட்ட மூட தனத்தை விரும்புகிறாரோ என்னவோ?

 ஒரு வேளை அது தான் நிஜம் என்றால் ஜெயலலிதா இன்னும் மாற வில்லை ஆப்படியே தான் இருக்கிறார் என்று நாம் எடுத்துக்கொள்ள வகை ஏற்படும்
தலைமை செயலகத்தை மாற்றுவது அச்சிட்ட புத்தகங்களை குப்பையில் போடுவது நாக்கை அறுத்தவருக்கு அரசாங்க வேலை கொடுப்பது என்ற தொடர்ச்சியான நிகழ்வுகளை காணும் போது தமிழக மக்களுக்கு கிலி ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை

 கருணாநிதி அரசு செய்த தவறுகளுக்கு மக்கள் தண்டனை கொடுத்து சூடு இன்னும் தனிய வில்லை

அதற்குள் அதே தவறுகளை இவரும் ஆரம்பித்தால் மக்கள் கையில் உள்ள சாட்டை திரும்பி விடும்
செய்ய வேண்டிய ஆக்க பூர்வ பணிகள் எத்தனையோ உண்டு அதை விட்டு விட்டு இத்தகைய காரியங்களில் ஈடு படுவது யானை தலையில் மண்ணை வாரி போட்டது போல் ஆகி விடும்
அதனால் பழைய ஆசைகளை கழற்றி வைத்து விட்டு புதிய செயல்களை முதல்வர் செய்வது அவசியம்
இதை மறந்தால் நாட்டுக்கும் நல்லது நடக்காது அவருக்கும் நல்லது கிடைக்காது

10 வயதில் Cisco சிஸ்கோ தேர்வு எழுதி நெல்லை சிறுமி அறிவு சாதனை

ருநெல்வேலி: இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார்.
அவரது ஐகியூ.,திறன் அதிகரிப்பு : கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அபார திறமை கொண்ட சிறுமியை மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், "பென்னட் காமத்' என்ற அறிவியல் முறைப்படிசோதித்து பார்த்ததில் அவரது ஐகியூ.,எனப்படும் அறிவுத்திறன் அளவு 225 ஆக இருப்பது தெரியவந்தது.வழக்கமாக மனிதர்களின் அறிவுத்திறன் 110க்குள்தான் இருக்கும். 110க்கு மேல் இருந்தால் அறிவுத்திறன்மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் இச்சிறுமியின் திறன் 225 ஆக உள்ளது என்றார். எனவே முதல் வகுப்பு, 4ம் வகுப்புகளில் டபுள் புரமோசன் எனப்படும் இரட்டை தேர்ச்சி பெற்றார். வரும் கல்வியாண்டில் 6ம் வகுப்பு பயில வேண்டிய சிறுமி விசாலினி 8ம் வகுப்பு பயில உள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் நெல்லையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் படித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.சி.பி.,தேர்வினை ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்றார்.

தொடர்ந்து இம்மாதத்தில் அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனத்தினர் நடத்தும் சிசிஎன்ஏ எனப்படும் நெட்வொர்க் தேர்வினையும் திருவனந்தபுரத்தில் ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.

இவருக்கு சிறுவயதில் சிகிச்சையளித்த டாக்டர் ராஜேஷ், மதுரை டாக்டர் நம்மாழ்வார், நெல்லை கம்ப்யூட்டர் மைய நிர்வாக சுந்தரபாண்டியன் ஆகியோர் பாராட்டினர். பாகிஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுவன் ஹைதர் இத்தகைய சாதனையை கடந்த ஆண்டு செய்துள்ளான். ஆனால் பத்து வயதிலேயே சிறுமி விசாலினி சிஸ்கோ தேர்வினை எழுதியுள்ளார். அவரது முயற்சிகள் குறித்து சிறுமி விசாலினியின் தாய் கூறுகையில், எதை படித்தாலும், கேட்டாலும் எளிதில் புரிந்துகொள்ளும் ஞாபகசக்தி உள்ளது.

ஒரு முறை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்டு தேர்வினை எழுதினாள். இரட்டை தேர்ச்சி பெறுவதால் இவளை விட பெரிய மாணவர்களுடன் வகுப்பில் படிக்க வேண்டியுள்ளது. மேலும் இதற்காக இவளை சில பள்ளிகள் அனுமதிக்கவே மறுத்தன. ஒரு கல்விஆண்டில் 3 பள்ளிகளில் சேர்த்து பின்னர் வெளியேற்றப்பட்டு அலைந்தோம். எனவே இவள் வயது மீறினாலும் உயர்கல்வி பயில முறைப்படி அனுமதியளிக்க அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

டாக்டருக்கு படிப்பதுதான் தமது நோக்கம் என்கிறார் சிறுமி விசாலினி. ஏற்கனவே சிறுவயதிலேயே இத்தகைய திறமை படைத்த நெல்லையை சேர்ந்த மாணவன் சந்திரசேகர் போன்றவர்களுக்கும் வயது தொடர்பாக இத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. எனவே சிறுமி விசாலினிக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திதரவேண்டும் என்பதே அவரதுபெற்றோரின் விருப்பமாகும்.

இந்தியர்களுக்கு விசா: இலங்கை புது முடிவு

: இலங்கை செல்லும் இந்தியர்கள் கொழும்பு விமான நிலையம் சென்று விசா பெறும் நடைமுறையை நிறுத்தி வைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. தற்போது அந்த நிலையை மாற்றி, இலங்கை பயணத்திற்கு முன்பாக ஆன்லைன் மூலம் விசா பெறும் முறையை கொண்டுவரவும் இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தற்சமயம் இலங்கை சென்று விசா பெறும் நடைமுறை சிங்கப்பூர் மற்றும் மாலத்தீவு நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் என அந்நாடு அறிவித்துள்ளது.

திருநங்கைகள் கணக்கெடுப்பை முறையாக நடத்த நலவாரிய உறுப்பினர்கள் கோரிக்கை


திருநங்கைகள் கணக்கெடுப்பை முறையாக நடத்த நலவாரிய உறுப்பினர்கள் கோரிக்கை திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர்களான நூரியம்மா, ஜீவா, மோகனா, விஜி, சலீமா, பிரியாபாபு ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது:
கடந்த ஆட்சியில் திருநங்கைகளுக்கு நலவாரியம் தொடங்கியது பெருமையான விஷயம். ஆனால், நலவாரியம் சரியாக செயல்படவில்லை. பல கோரிக்கைகள் வைத்தும், அது முழுமையாக நிறைவேறவில்லை.
எனவே, புதிய அரசு அதை நிறைவேற்றித்தரும் என்ற நம்பிக்கையில் கோரிக்கைகள் வைக்க உள்ளோம். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், திருநங்கைகளின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கி, அவர்களின் வாழ்வு மலர ஆவன செய்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பினை ஒட்டுமொத்த திருநங்கைகள் வரவேற்பதுடன், முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, எங்களின் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழகத்தில் திருநங்கைகள் கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும்.

தற்போது நலவாரியத்தில் உள்ள உறுப்பினர்களையே, தொடர்ந்து உறுப்பினர்களாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், 31 மாவட்டங்களுக்கு ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டும். முதலில், திருநங்கைகளுக்கு மாவட்டந்தோறும் இலவச தொகுப்பு வீடுகள் வழங்கப்பட வேண்டும். எங்களின் பாலின அடையாளத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும்.
அனைத்து திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். பொருளாதார மேம்பாட்டிற்கு சுயதொழில் கடன் உதவியும் வழங்க வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும். பாலின மாற்று அறுவை சிகிச்சை காலத்தில் உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Sun TV சன் டிவி லாபம் ரூ.772 கோடி!

சென்னை: சன் டிவி குழுமத்தின் லாபம் 36 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் ரூ. 772 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது இந்த நிறுவனம்.

கடந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் ரூ. 567 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு இது 36 சதவீதம் அதிகரித்து ரூ. 772 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டில் மொத்த வருமானம் ரூ. 1,437 கோடியாக இருந்தது. இது இந்த ஆண்டு ரூ. 1,970 கோடியாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு (மதிப்பு ரூ.5) ரூ. 3.75 டிவிடன்ட் வழங்க இந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழு முடிவெடுத்துள்ளது.

மிக மோசமான முன்னுதாரணம் இது. அரசாங்க வேலை வாங்க

எதிர்பார்த்தபடியே சட்டமன்ற மேலவையை ரத்து செய்து விட்டார் முதல்வர். “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., சட்டமன்ற மேலவையே வேண்டாம் என்றார். எனவே சட்டமன்ற மேலவை தேவையில்லை என்பது தான் அதிமுகவின் கொள்கை முடிவு” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
இன்னமும் எது எதெல்லாம் தேவை இல்லை என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருக்கிறார் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்!
‘நானே கேள்வி,நானே பதில்’ ரீதியில் இல்லாமல் ஆட்சிப் பொறுப்பேற்ற தினத்தன்று சொன்ன மாதிரியே செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார் முதல்வர். அதுவும் வாய் கொள்ளாத சிரிப்பாக பிரஸ் மீட்! கிள்ளிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் அத்தனை செய்தியாளர்களும்! நிருபர்களைப் பார்த்து, “தம்பிகளே” என்று அன்பொழுக அழைத்திருக்கிறார் அன்புச் சகோதரி! தொடர்கிறதா என்று பார்ப்போம்!
O
அம்மா ஆட்சிப் பொறுப்பேற்ற அன்று ஆந்திராவுக்கு ஓடிய நகைத் திருடர்கள் போகும் போது கூட்டாளிகளில் ஒருவனை மட்டும் இங்கேயே விட்டுவிட்டு ஓடி விட்டார்கள் போல! அதிமுக எம்.எல்.ஏ., பழ. கருப்பையாவின் வீட்டில் புகுந்து 10 சவரன் தாலிச் சங்கிலியை கொள்ளை அடித்து ஓடியிருக்கிறான். தமிழக சட்டமன்ற சபாநாயகர் என்று தலைப்புச் செய்தியை எதிர்பார்த்திருந்தவர் இப்படி ஒரு செய்தியில் அடிபடுவோம் என்று நினைத்திருப்பாரா?! ஆனால் அவன் அப்ரண்டீஸ் திருடனாக இருந்திருப்பான் போல! திருடிவிட்டு போகும் போது கை ரேகையை மட்டுமில்லாமல் தன்னுடைய செல் ஃபோனையும் விட்டு விட்டு ஓடியிருக்கிறான். ஆள் இப்போது திஹார்… ஸாரி, நம்மூர் ஜெயிலில்!
O
அடுத்ததாக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொஞ்சம் மாற்றங்களுடம் எம்.ஜி.ஆர். காப்பீட்டுத் திட்டமாக உருமாறப் போகிறதாம்! ரைட்டு!
ரேஷன் பைகளில் ஆரம்பித்து கருணாநிதி படம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் மாற்றியாக வேண்டும். ஜெ.ஜெ. நகர் கடந்த ஆட்சியில் முகப்பேர் கிழக்காக உருமாறி இப்போது மீண்டும் ஜெ.ஜெ.நகராக ஆகி விட்டது! கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு யாரால் கட்டப்பட்டது என்ற சரித்திர உண்மையை எதிர்கால சந்ததியினர் எப்படித் தெரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை! பூமி பூஜை போட்டது ஒருவர், திறந்து வைத்தது ஒருவர் என மூலா மூலைக்கு கல்வெட்டாக இருக்கிறது கோயம்பேட்டில்!
நாம் எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தமிழ்ப் புத்தாண்டு மீண்டும் சித்திரை 1-ம் தேதிக்கே மாற்றப்பட்டு விடும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?!
O
34 (மைனஸ் 1) அமைச்சர்களில் 24 பேர் பட்டதாரிகளாம்! அதனாலென்ன? எதுவும் மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறதா என்ன? அம்மா காலில் விழக்கூடாது, ராத்திரி நேரத்தில் கரண்ட் கட் செய்யக்கூடாது, கூழைக் கும்பிடு போடக்கூடாது என்று பல கூடாதுகள் காதில் விழுகின்றன! எவையெல்லாம் அப்படியே தொடர்கின்றன என பொறுத்திருந்து பார்ப்போம்!
O
அம்மா ஆட்சி வந்ததற்காக நாக்கை அறுத்த பெண்ணுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதாம். மிக மோசமான முன்னுதாரணம் இது. அரசாங்க வேலை வாங்க இப்படி(யும்) ஒரு வழி இருக்கிறது என்று ஆளாளுக்குப் பின்பற்றாமல் இருந்தால் சரி! வழக்கு போட்டு அந்த அம்மணியை உள்ளே தள்ளியிருக்க வேண்டும்! அதான் நியாயம்! நாக்கை அறுத்த பெண்மணிக்கு சத்துணவில் வேலையாம்! சாப்பாடு ருசியாக இருக்கிறதா என்று எப்படி சரிபார்ப்பாரோ?! இதையே சாக்காக வைத்து எதிர்காலத் தேர்தல் முடிவுகளன்று ஊர் முழுக்க கோயில் உண்டியல்களில் நாக்கு, விரல் என காணிக்கைகள் குவியலாம், எச்சரிக்கை.
O
ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கியிருக்கிறார்கள் (மீண்டும்!). ஆட்சி மாற்றங்கள் நிகழும் போதெல்லாம்  ‘உள்ளே வெளியே’ டான்ஸ் ஆடும் திட்டங்களில் இதுவும் ஒன்றாகி விட்டது.  இந்த முறையாவது 5 ஆண்டுகளும் இதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவார்களா என்று பார்ப்போம்! கூடவே டூ-வீலர்களை எந்த டிராக்கில் ஓட்ட வேண்டும் என்றெல்லாம் மக்களுக்கு சட்டம் கொண்டு வந்து தான் திருத்த வேண்டும். ஆட்டோ, மீன்பாடி வண்டிகளை விட எல்லாம் இந்த டூ வீலர் ஓட்டுநர்கள் தான் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம்! அதே போல சீட் பெல்ட் அணிந்துதான் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்ட வேண்டும் என்ற சட்டத்தையும் கொண்டு வர வேண்டும்!
O
கேபிள் டி.வி. அரசுடமையாக்கப்படுமா?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். பத்திரிகையாளர்கள் அலுவலகத்திற்கு செல்வதற்குள் முதல் பக்கத்தில் வெளியிட ஒரு விளம்பரம்! ‘ஜாக் டி.வி. – தெள்ளத் தெளிவாக குறைந்த கட்டணத்தில் அனைத்து சானல்களையும் ஒளிபரப்ப சென்னை மாநகர் முழுவதும் கேபிள் ஆபரேட்டர்கள் வரவேற்கப்படுகிறார்கள்’ என்கிறது அந்த விளம்பரம்! திமுக – அதிமுக போல சுமங்கலி – ஜாக் கம்பெனிகளுக்கிடையிலான போட்டி மாறவே மாறாது போல!
O
மாயவரத்தான்

சமச்சீர் கல்வி: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. சட்டத்தை மீறும் வகையில், அரசு கொள்கை முடிவெடுக்க முடியுமா? எனவும், ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்படும் என, கடந்த தி.மு.க., அரசு அறிவித்தது. அதன்படி, 200 கோடி ரூபாய் செலவில் பாடப்புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டன. ஆட்சி மாறியதும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டுக்கு நிறுத்தி வைப்பது என, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. "சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே தொடர வேண்டும்' என, உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஷியாம் சுந்தர் என்பவர் மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கே.பாலு, சேஷாச்சலம் என்பவர் சார்பில் சீனியர் வக்கீல் வில்சன், அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு பிளீடர் வெங்கடேஷ் ஆஜராகினர். கோர்ட்டில் நடந்த வாதம்:

வக்கீல் கே.பாலு: சமச்சீர் கல்வி சட்டத்தின்படி, இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை தொடர வேண்டும்.

நீதிபதிகள்: அதற்கான உத்தரவு உள்ளதா?

வக்கீல் பாலு: தமிழக அரசு இதற்கான சட்டம் கொண்டு வந்துள்ளது. அந்தச் சட்டம் செல்லும் என, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளன. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. ஒன்பது கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் படிப்பை துவங்கி விட்டனர். சமச்சீர் கல்வி சரியில்லை என, எந்த அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

அட்வகேட் ஜெனரல்: முந்தைய அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி, எதிர்கால தலைமுறையினருக்கு உதவாது. நல்ல, தரமான கல்வியை ஒவ்வொரு பெற்றோரும், மாணவர்களும் விரும்புகின்றனர். குறிப்பிட்ட முறையிலான பாடத் திட்டத்தைத் தான் படிக்க வேண்டும் என, குழந்தைகளை கட்டாயப்படுத்த முடியாது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டுக்கு அரசு நிறுத்தி வைத்துள்ளது. சட்டப்படி அரசு முடிவெடுத்துள்ளது. அது கொள்கை முடிவு.

சீனியர் வக்கீல் வில்சன்: அரசு கொண்டு வந்த சட்டம், கோர்ட் உத்தரவுகளை மீறுவதாக அரசின் முடிவு உள்ளது. அரசின் கொள்கை முடிவானது, ஒரு சட்டத்தை அல்லது கோர்ட் உத்தரவை செல்லாததாக ஆக்க முடியுமா? சட்டத்துக்கு எதிராக அமைச்சரவையின் முடிவு உள்ளது. சட்டத்தை மீறும் வகையில் கொள்கை முடிவு எடுக்க முடியுமா? ஒரு அரசு எடுத்த கொள்கை முடிவை, அடுத்து வரும் அரசு மாற்ற முடியுமா?

நீதிபதிகள்: சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்களுக்காக ஏற்கனவே 200 கோடி ரூபாய் அளவில் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக தற்போது புதிதாக பாடப் புத்தகங்கள் அச்சடிக்க இன்னும் செலவு செய்ய வேண்டியது வருமே?

அட்வகேட் ஜெனரல்: இது பணம் செலவு பற்றியது அல்ல.

நீதிபதிகள்: அதுவும் இழப்பு தானே? சட்டத்தை மீறும் வகையில் அரசு முடிவெடுக்க முடியுமா? மாணவர்கள், பொதுமக்களின் நலனை பரிசீலிக்க வேண்டும். சட்டத்தின் நோக்கம் தெளிவாக உள்ளது. நிபுணர்களின் பரிந்துரைகளை புறக்கணிக்க முடியுமா? நீங்கள் (அட்வகேட் ஜெனரல்) அரசுக்கு ஆலோசனை கூறலாம்.

இதையடுத்து, மனுக்கள் மீதான விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு "டிவிஷன் பெஞ்ச்' தள்ளிவைத்தது. விரிவான பதில் மனுவை அரசு தாக்கல் செய்யவும், "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.

பண்ருட்டியைச் சேர்ந்த சேஷாச்சலம் என்பவர் தாக்கல் செய்த மனு: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பால், அரசுக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்பது கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் முடிவானது, சட்டப்படியானது அல்ல. பல பள்ளிகள் சமச்சீர் கல்வியை பின்பற்றத் துவங்கி விட்டன. தற்போதைய அரசின் முடிவால், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி சட்டத்தில் பிரிவு 14 ஐ, ஐகோர்ட் ரத்து செய்தது. இதன் மூலம், கல்வி போர்டின் முடிவில் அரசின் தலையீடு தடுக்கப்படுகிறது. எனவே, இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Gullu Bai - Doha,கத்தார்
2011-05-27 02:17:09 IST Report Abuse
கேவலமான பழிவாங்கும் அரசியல் நடத்தும் ஜெ.,வுக்கு இந்த வழக்கில் சரியான மூக்குடைப்பு வரும்

ஜெயலலிதா: அமைச்சர்கள், அதிகாரிகள் வாய் திறக்க கூடாது

அரசு திட்டங்கள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் வாய் திறக்க கூடாது என்ற நிலையை, முதல்வர் ஜெயலலிதா மாற்ற வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான முந்தைய ஆட்சியின் போது, அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து அவர் மட்டுமே பேசுவார்; அறிவிப்புகளை வெளியிடுவார். விழாக்களிலும், செய்தியாளர்கள் கூட்டத்திலும் அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்பட எவரும் வாய் திறக்க மாட்டர். மக்களுக்கு உத்தரவாதம் வழங்குதல், நம்பிக்கையான வாக்குறுதி அளித்தல் போன்றவற்றுக்கும் இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மீறுபவர்கள் பதவி பறிக்கப்பட்டதும் உண்டு. தீர்க்கக்கூடிய பொதுவான பிரச்னையை சாதாரண மனிதன், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனுவாக அனுப்பி, அது முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நிறைவேற்றப்பட்ட பல சம்பவங்கள் உண்டு. ஆனால், அமைச்சர், அதிகாரிகளிடம் மனுவாக கொடுத்து, அது நிறைவேறிய சம்பவம் மிகச்சொற்பம் தான். அரசு விழாக்களில் அமைச்சர்கள் பேசும் போது கூட, "அம்மா அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தான் கூறுவரே தவிர, தங்கள் துறை தொடர்பான தகவல்கள், முன்னேற்றங்கள், திட்டங்கள் பற்றி வாய் திறக்க மாட்டர்.

தற்போது, அ.தி.மு.க., ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள், பேச்சு, செயல்பாடுகள் பெரிதும் மாறியுள்ளன. தன் கையால் அனைவருக்கும் இனிப்பு வழங்கியது, தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, போயஸ் கார்டனில் ஒன்றுக்கு இரண்டு முறை மாடியில் நின்று மக்களைப் பார்த்து கையசைத்து புன்னகைத்தது, பல முறை செய்தியாளர்களை சந்தித்தது, போக்குவரத்து நெரிசலின்றி தன் பயணத்திட்டத்தை வகுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டது, அமைச்சர்கள் தங்கள் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துதல், செல்லுதல் கூடாது என, உத்தரவிட்டது போன்றவை சில உதாரணங்கள். முக்கியமாக, "பதவியேற்பு விழாவில் எந்த அமைச்சரும், தன் காலில் விழக் கூடாது' என, முதல்வர் உத்தரவிட்டார். "செய்தியாளர்கள் தன்னை வழிமறித்து கேள்விகள் கேட்கக்கூடாது. வாரம் ஒரு முறை நானே பதிலளிக்கிறேன்' என்றும் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலக இடமாற்றம், கேபிள், "டிவி' அரசுடமை போன்றவை குறித்து நிருபர்களின் கேள்விக்கு, "இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளேன். விரைவில் அனைத்தையும் செய்து முடிப்பேன். அதற்காக தனித்துறையும், தனியாக அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளார்' என, வித்தியாசமான அணுகுமுறையை முதல்வர் கையாண்டுள்ளார். இந்த மாற்றம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வரிடம், மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மக்களின் அவசியமான கோரிக்கைகள், தேவைகள் மீது முடிவெடுக்கவும், தீர்வுக்கான வழிகளை கூறவும், திட்டங்களை அறிவிக்கவும் அமைச்சர்களுக்கு அனுமதி தர வேண்டும். அதன் பின், முதல்வர் அனுமதி பெற்று அத்திட்டங்களை செயல்படுத்துவதில் தவறில்லை. "தவறு செய்பவர்கள் மீது சாட்டை சுழலும்' என, எப்போதும் அதிரடியாக தெரிவிக்கும் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்களும், அதிகாரிகளும் தன்னிச்சையாக செயல்பட, அவர்களது வாய்ப்பூட்டு, கைக்கட்டுக்களை அவிழ்த்து, அவர்கள் மக்களுக்கு கூடுதல் சேவையாற்ற பணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

- நமது சிறப்பு நிருபர் -
kunjumani - Chennai ,இந்தியா
2011-05-27 02:53:50 IST Report Abuse
போட்டோவுல அந்த வழுக்க தலையா இருக்கிறவர் சரியா கும்பிடாததுமாதிரி தெரியுது அனேகமா இந்த வாரத்தோட அவர் பதவி காலின்னு நினைக்குறேன் , விஜயகாந்த் சொன்ன மாதிரி மந்திரி பதவிய அனுபவிக்காமலேயே போகப் போறார். இவங்களோட கம்பேர் பண்ணும்போது ஜெ., வை பற்றி சொன்ன சொன்ன அழகிரி உண்மையிலேயே அஞ்சா நெஞ்சன் தான்