சனி, 4 ஆகஸ்ட், 2018

ஜெர்மனி ..முன்னாள் புலி போராளி சிவதீபன் கைது! .. போர் குற்றச்சாட்டில் .. Duesseldorf Germany

BERLIN — German authorities have arrested a Sri Lankan man suspected of involvement in killing captured government soldiers as a member of the Tamil Tigers rebel group a decade ago. Federal prosecutors said a judge ordered Thursday the 36-year-old, identified only as Sivatheeban B. because of German privacy rules, detained pending a potential indictment. He was arrested Wednesday in the Duesseldorf area, suspected of committing war crimes and membership in a foreign terrorist organization.
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க
முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ புலிகளின் பிடியில் இருந்த இராணுவத்தினரைக் கொல்வதற்கு உதவியதுடன் அவர்கள் கொல்லப்பட்ட இடத்தில் இருந்தார் என்றே குறித்த உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ஜெர்மனி சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவிக்கின்றது.
 பி.சிவதீபன் என்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜேர்மனியின் டுசெல்ட்டோவ் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தும் வாய்ப்பு இருப்பதன் அடிப்படையில் ஜேர்மனியின் தனியுரிமை சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராகப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவர் தடுத்து வைக்கப்பட்டார்.

ஊடகத் தணிக்கை: மோடியின் ஸ்டைல்! ,, சவுக்கு ஆன்லைன்

ஏபீபி நியூஸ் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் இரண்டு தொலைக்காட்சி ஆசிரியர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். மூன்றாவது ஆசிரியர் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். ஆளும் கட்சியின் இணக்கத்தைப் பெறுவதற்காக முன்னணி ஊடகம் ஒன்று அரசுக்கேற்ப வளைந்து கொடுப்பதற்கான சமீபத்திய உதாரணமாக இந்தச் சம்பவங்கள் மீடியா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகின்றன கடந்த புதன்கிழமை அன்று, இந்த சேனல் நிர்வாகம், எடிட்டர் இன் சீப் மிலிந்த் காண்டேகர் ராஜினாமா செய்வதாக அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து, புகழ்பெற்ற மாஸ்டர் ஸ்டிரோக் நிகழ்ச்சித் தொகுப்பாளர் புண்ய பிரசூன் பாஜ்பாய் விலகும் தகவல் வெளியானது. பாஜ்பாய் தானாகவே பதவி விலகினாரா அல்லது விலகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டாரா என்பது தெரியவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, தனது கிராமப்புறத் திட்டங்களின் வெற்றிக்கதையாக சத்தீஸ்கர் பெண்மணி ஒருவரின் உதாரணத்தை முன்னிறுத்தினார். ஆனால், அந்தப் பெண்மணி மோடி கூறியதுபோல வருமானத்தை இரட்டிப்பாக்கவில்லை என்பதை அம்பலமாக்கும் செய்தியை பாஜ்பாய் வெளியிட்டார். மத்திய அமைச்சர்களை அதிருப்திக்கு உள்ளாக்கிய இந்தச் செய்தி வெளியான சில வாரங்கள் பிறகு இந்த விலகல் நிகழ்ந்துள்ளது. அவர் மாஸ்டர் ஸ்டிரோக் நிகழ்ச்சியை இனிமேல் தொகுத்து வழங்க மாட்டார் என இரண்டு நாட்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ரஜினிகாந்த் இணைய வாய்ப்புள்ளது.. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் (பாஜகவின் சிலீபப்ர் செல்) தகவல்

கட்சி துவங்குவது கஷ்டம் Veera Kumar  ONEINDIA TAMIL ON  அதிமுக தலைமைக்கு ரஜினிகாந்த்.. ஆட்சியை பிடிக்க பாஜக வியூகம்?  - சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலுக்கு வருவதாக நீண்ட காலம் கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அரசியல் குறித்த பேச்சுக்களை மீண்டும் ஆரம்பித்தார். கடந்த ஆண்டின் இறுதியில் தனது ரசிகர்களை தொடர்ச்சியாக சந்தித்த ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ஒரு வழியாக அறிவித்தார்.
இதன் பிறகு ரஜினிகாந்த் தனது மன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மற்றொரு பக்கம் திரைப்படங்களில் வரிசையாக புக் செய்யப்படும் வருகிறார்.
இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது

சாதி தெரியாததால் அடக்கம் செய்ய மறுத்த கிராமம் ... சுமந்து சென்ற எம் எல் ஏ ஒடிஷா மாநிலம்

tamilthehindu :பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ரெங்காலி தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ ரமேஷ் பட்டுவா இந்த மனிதநேயச் செயலைசெய்து அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார். ஒடிசா மாநிலம், ஜர்சுகுதா மாவட்டத்தில் ரெங்காலி சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியின் எம்எல்ஏ ரமேஷ் பட்டுவா. ஒடிசா மாநில எம்எல்ஏக்களில் மிகவும் வசதியற்றவர், இன்னும் சாதாரண வாடகை வீட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சுதாமல் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட அமனபள்ளி கிராமத்தில் ஒரு ஏழை மூதாட்டியும், அவரின் சகோதரரும் சாலை ஓரத்தில் வாழ்ந்து வந்தனர்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம்


சென்னை: ஆகஸ்ட் 7-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக சென்னை
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவியேற்க உள்ளார். வினீத்சரண் மற்றும் குட்டியில் மேத்யூ ஆகியோரையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

மாலைமலர் :சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி வினீர் சரண் மற்றும் உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்தது. கொலிஜியத்தின் பரிந்துரை அனைத்தையும் மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது.

புதுச்சேரி .. தலித் மக்களுக்கு ஆலய அனுமதி மறுப்பு! போராடிய மக்கள் மீது தடியடி!

untouch நக்கீரன் : சுந்தர பாண்டியன்< புதுச்சேரி கூனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ளது  திரௌபதியம்மன் கோயில் உள்ளது.
 கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்கோயிலுக்கு  அப்பகுதியை சேர்ந்த ஒரு தலித் பெண் நுழைய முயன்றார். அப்போது ஊர் மக்கள், கோவில் நிர்வாகிகள் அப்பெண்ணை அனுமதிக்க மறுத்தனர். அதனால் அப்போது ஊர் மக்களுக்கும்,  தலித் மக்களுக்கும்  பிரச்சனை ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு  சமாதான பேசியதனடிப்படையில் அப்பிரச்னை தற்காலிகமாக திர்வு காணப்பட்டது. இந்நிலையில் இன்று தின்டாமை எதிர்ப்பு முன்னணி மற்றும்  தலித் அமைப்புகள் சார்பில் ஆலய நுழைவு போராட்டம்  அறிவிக்கப்பட்டது. அதனால் முன்னெச்சரிக்கையாக  கோயில் அருகிலுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதேசமயம்  தலித் அமைப்புகளின் ஆலய நுழைவு அறிவிப்பினை  கண்டித்து கூனிச்சம்பட்டு ஊர் மக்கள்,  பெண்கள் நூற்றுக்கணக்கானோர்  திரண்டு வந்து ஆலயத்தின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது லேசான தள்ளு முள்ளும்,  தடியடியும் நடந்தது.

தேவ கௌடா : கலைஞர் நூறாண்டுகளைக் கடந்து வாழ்வார்

மின்னம்பலம்:  “கருணாநிதி நூறாண்டுகளைக் கடந்து வாழ்வார்” என்று காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த பிறகு முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக பல்வேறு தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் தினமும் காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா நேற்று மாலை பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். காவேரி மருத்துவமனைக்குச் சென்ற அவர், அங்கு ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். தேவகவுடாவிடம் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கினர்.

டென்மார்க் . பொதுவெளியில் முக்காடு அணிந்த பெண்ணுக்கு அபராதம்

BBC :டென்மார்க்கில், பொதுவெளியில் முகத்தை மறைப்பது போன்று முக்காடு அணிந்த பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெண்கள் பொது வெளியில் முகத்தை மறைப்பது போன்று உடை அணிவதற்கு அந்நாட்டில் விதிக்கப்பட்ட தடை கடந்த புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக 28 வயது பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டென்மார்க் பாராளுமன்றத்தில் தாக்கலான இந்த புதிய சட்டத்தில் புர்கா அல்லது நிக்காப் என்று குறிப்பிடப்படவில்லை என்றாலும், பொது வெளியில் முகத்தை மூடுவது போன்று உடை அணிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு மனித உரிமை குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

உத்தரப்பிரதேசம் தலித் பெண் மருத்துவருக்கு தண்ணீர் தர மறுத்த இந்துத்வா ஜாதி வெறியர்கள்

upper and lower class issues, a deputy chief veterinary officer was allegedly denied drinking water by village head in Uttar Pradesh's Kaushambi district because of her Dalit identity, officials said
Chinniah Kasi : உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறிய தீண்டாமை
தலித் பெண் மருத்துவருக்கே குடிக்க தண்ணீர் தர மறுத்த கொடுமை!
லக்னோ, ஆக. 3 -
உத்தரப்பிரதேசத்தில் பெண் மருத்துவ அதிகாரி ஒருவருக்கே, அவர் தலித் என்பதால்குடிக்க தண்ணீர் தர மறுத்த கொடுமை நடந்துள்ளது. -உத்தரப்பிரதேச மாநிலம் கசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் சீமா. கால்நடைத்துறை துணை தலைமை அதிகாரியாக இருக்கிறார். இவர், உயர் அதிகாரிகளின் உத்தரவு பேரில், கசாம்பி மாவட்டத் தில் உள்ள ஆம்பவா பூராக் கிராமத்துக்கு சென்று வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்துள்ளார். 2 கிராமங்களை சேர்ந்த ஊராட்சித்தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற் றும் அதிகாரிகள் இந்த ஆய்விற்கு வந்திருந்த நிலையில், இதுவரை மேற்கொள்ளப் பட்ட பணிகள் குறித்த விவரங்களை டாக்டர்சீமா ஆய்வு செய்துள்ளார்.ஒருகட்டத்தில், உடல் சோர்வுற்ற நிலை யில் அங்கிருந்தவர்களிடம் குடிப்பதற்கு டாக்டர் சீமா தண்ணீர் கேட்டுள்ளார்.ஆனால், டாக்டர் சீமா தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அங்கிருந்த ஒருவர் கூட தண்ணீர் தர முன்வரவில்லை. இத னால், சுமார் இரண்டரை மணி நேரம் தண்ணீரின்றி அவர் தவித்துள்ளார்.

இந்து அறநிலைய துறையை ஒழித்துக்கட்ட பார்ப்பனர்கள் சதி! சி பி ஐ விசாரணையை திராவிடர் கழகம் வரவேற்கிறது! ...


கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்*
*இந்து அறநிலையத் துறையில் பணியாற்றும் நேர்மையான பார்ப்பனரல்லாத அதிகாரிகளைப் பழிவாங்குவதா?*
*இந்து அறநிலையத் துறையையே ஒழித்துக்கட்டி மீண்டும் பார்ப்பன ஆதிக்கத்திற்குக் கொண்டுவரும் முயற்சி - சூழ்ச்சிக்கான முன்னோட்டம்!*
*சி.பி.அய். விசாரணை மாற்றம் வரவேற்புக்குரியதே!*
*சூழ்ச்சிகளையும், புரட்டுகளையும் அம்பலப்படுத்தி கி.வீரமணியின் முக்கிய அறிக்கை*
நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்து அறநிலையத் துறை சட்டத்தினை ஒழித்து, மீண்டும் பார்ப்பன ஆதிக்கத்தின்கீழ் கோவில்களைக் கொண்டுவர பார்ப்பனர்கள் மேற்கொண்டுவரும் சூழ்ச்சியை அம்பலப்படுத்தி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் *ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:*
இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை (Hindu Religious Endowment Board) என்னும் அத்துறை, அரசின் தனிச் செயலாளரைக் கொண்ட துறையாகவும், 'நீதிக்கட்சி' ஆட்சியில் பனகல் அரசர் முதலமைச்சராக இருந்தபோது, காங்கிரசு பார்ப்பனர்களால், குறிப்பாக சத்தியமூர்த்தி போன்ற வைதீக வெறிகொண்ட பார்ப்பனர்களாலும் கடுமையான எதிர்ப்புக் கிடையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சமூகப் புரட்சியை உருவாக்கிய சட்டம் ஆகும்!
*பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டம்!*
இதன்வரலாற்றை வாசகர்கள் தெரிந்துகொண்டால்தான் இப்போது நடைபெறும் வழக்குகளும், சட்ட நடவடிக்கைகளும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற பிரச்சினையின் அடிநீரோட்டமாகக் கொண்டது என்ற சூழ்ச்சி விளங்கும்.

எளியவர்களின் வலிமையே திராவிடம்.,,, ஷாலின் மரியா லாரன்ஸ்

இதை எழுத கூடாது என்று பலமுறை எனக்கு நானே
சொல்லிக்கொண்டேன். ஆனாலும் எழுதாமல் இருக்க முடியவில்லை.
இன்று மதியம் இந்த புகைப்படங்களை பார்த்ததில் இருந்தே மனது இதை சொல்லியே ஆக வேண்டும் என்று அடித்து கொண்டிருக்கிறது.
இலவச பிரியாணி கேட்டு கிடைக்கவில்லை என்கிற ஆத்திரத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகியால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட அந்த எளிய மனிதர்களை பார்த்து ஆறுதல் கூற திரு ஸ்டாலின் அவர்கள் நேரிடையாக சென்றிருக்கிறார்.சரி.நல்லது.
இதை நேர்மறை கண்ணோட்டத்தோடு பார்க்க விரும்பவில்லை.ஆங்கிலத்தில் சொல்லுவது போல "IT was a really good gesture" .
இந்த புகைப்படத்தை பார்த்தால் ஒரு விஷயம் தெரியும். அது திரு ஸ்டாலின் அவர்களின் முகத்தில் ஒரு சின்ன சங்கோஜம் தெரிகிறது..ஒரு guilty feel... தன் கட்சியை சேர்ந்தவர் தவறு செய்துவிட்டார் அதற்காக ஸ்டாலின் வருந்துவது முகத்தில் நன்றே தெரிகிறது.

ஆனால் இந்த புகைப்படங்களில் நாம் காணாமல் விட்ட ஒரு விஷயம் என்னவென்றால் அடி வாங்கிய அந்த அப்பாவி ஹோட்டல் ஊழியர் கைகளில் இருக்கும் பையில் உள்ள பச்சை கலர் பொன்னாடை தான் அது.

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

டிராபிக் ராமசாமி முறையீடு! சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றுவதை எதிர்த்து

டிராபிக் ராமசாமி, பொன் மாணிக்கவேல், உயர் நீதி மன்றம்
tamil.thehindu.com;சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, டிராபிக் ராமசாமி முறையீட்டுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக கோயில்களில் சிலைகள் திருட்டு போனது குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரித்து வந்தார். அவரது அதிரடி நடவடிக்கையால் பல பத்தாண்டுகளுக்கு முன் திருடுபோன கோயில் சிலைகள் மீட்கப்பட்டன. பல வழக்குகளில் தவறு செய்த அறநிலையத்துறையைச் சேர்ந்த பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவெடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழக அரசு இது தொடர்பான அரசாணையை நேற்று வெளியிட்டது. இதை எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டித்தனர்.

சிலை திருட்டு வழக்கில் ஐ ஜி பொன்மாணிக்கவேலுக்கு நெருக்கடி .. கவிதாவுக்கு ஆதரவாக நீதிமன்றம்...

ஆதாரங்கள் உள்ளன Kalai Mathi ONEINDIA TAMIL ON சரியான ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்தால் கடும் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்-
சென்னை: இந்து அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை கைது செய்தது ஏன்? என சிலை தடுப்புப்பிரிவு அதிகாரி ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆதாரமின்றி கவிதாவை கைது செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டிருக்கிறார்.
 ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டு, டிஎஸ்பி வீரமணி தலைமையிலான குழு, சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை முறைகேடு பற்றி விசாரணை நடத்தியது. சில வாரங்களுக்கு முன்பு, ஐஐடி நிபுணர் குழு மூலம், சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

எட்டுவழிசாலைக்கு எதிராக மார்க்சிஸ்ட் நடைபயணத்தில் கைது செய்ப்பட்டவர்கள் விடுதலை

tamil.thehindu.com :   என் நிலம் என் உரிமை மார்க்சிஸ்ட் நடைபயணம்  எட்டு வழிச்சாலையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட நடை பயணத்தில் சென்றவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்ய போலீஸார் ஆஜர்படுத்தினர், வழக்கில் முகாந்திரமில்லை என நீதிமன்றம் அனைவரையும் விடுவித்தது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''இயற்கை வளங்களையும் விவசாய நிலங்களையும் நீர் நிலைகளையும் அழித்து உருவாக்கப்பட உள்ள சேலம்-சென்னை எட்டு வழிச் சாலையினை கைவிட வேண்டுமெனவும், இதற்காக நிலம் கையகப்படுத்துவது என்ற பெயரில் விவசாயிகளையும், கிராமப்புற மக்களையும் மிரட்டி வரும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபயணம் நடத்துவது என திட்டமிட்டிருந்த அடிப்படையில், திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி காலை நடைபயணம் தொடங்கியது.

ஆந்திரா .. வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை! அமஈச்சரவையில் முடிவு!

tamilthehindu : ஆந்திராவில் 22 முதல் 35 வயது வரையிலான
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு மாநில அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆந்திர மாநில அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமராவதியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, பஞ்சாயத்து ராஜ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் லோகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘முதல்வர்-யுவ நேஸ்தம்’ என பெயரிடப்பட்ட புதிய திட்டத்தின் படி, 22 முதல் 35 வயது வரையிலான வேலைவாய்ப்பற்ற இளைஞர் களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் இம்மாத இறுதிக்குள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை வீட்டுக்கு ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

போக்கிலிகளின் கடைசி புகலிடம் தமிழ் தேசியம் +இந்துத்வா ... ஹீலர். ஈமு,, நம்முன்னோர்கள் கோஷ்டி .... ஆர்கானிக் ... மாட்டுமூத்திரம்

Ashok.R : இன்று கொலைகாரன் ஹீலர் பாஸ்கருக்கு ஆதரவாக கொடி த்து வைத்த ஆர்கானிக் மாஃபியா, ஹீலர் பாஸ்கர் போன்ற மரபு மருத்துவ கும்பல், செம்மைவனம் செந்தமிழன் போன்ற இயற்கை மருத்துவ, தடுப்பூசி மறுப்பு கும்பல், பாரிசாலன் போன்ற சாதிவெறி கும்பல் என சமூகவிரோத செயல்களை எல்லாம் தமிழ் என்கிற பெயரில் விற்கும் அத்தனை பேரும் தமிழ்தேசியம் என்கிற குடையில் ஒன்றாக கூடுவார்கள்.
பிடிக்கிறவர்கள் எல்லாம் யார்? ஒரு கையில் தமிழ்தேசியம் பேசிக்கொண்டே, இன்னொரு கையில் ‘தமிழ் மரபு’ என்ற பெயரில் வீட்டில் பிரசவம், தடுப்பூசி மறுப்பு, மருந்து மறுப்பு என உயிர்கொல்லி மூடத்தனங்களை விற்பனை செய்கின்றவர்கள். தமிழ் மரபு என்கிற வார்த்தையில் மயங்காமல் நீங்கள் ஒன்றை நிதானமாக
பொறுத்திப்பாருங்கள். ‘பஞ்சகவ்யம்’ (சாணி, மாட்டு மூத்திரம், பால், வெண்ணை, நெய் கலவை) சாப்பிட்டால் எய்ட்ஸ் குணமாகும் எனச் சொன்ன விஞ்ஞானி நம்மாழ்வார் ஆரம்பி
2009 காலகட்டத்திற்குப் பின் அயோக்கியப்பயல்கள் அத்தனை பேரும் ஒன்றுகூடி குலாவும் ஒரு கூரையாக தமிழ்தேசியம் என்கிற வார்த்தை மாறிப்போய் இருக்கிறது. திராவிட அரசியல் முன்வைத்த அறிவியல், மூடநம்பிக்கை மறுப்பு, முற்போக்கு சிந்தனைகள் என அத்தனைக்கும் ஒரு மாற்றாக இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். திராவிட அரசியலுக்கு எதிராக தமிழ்தேசியத்தை நிறுத்தும் ஆட்கள் யாரும் இந்த அயோக்கியத்தனத்தை கேள்வி கேட்பதில்லை. மக்களை மடையர்கள் ஆக்கி பணத்தையும், உயிரையும் பறிக்கும் கும்பல் எல்லா சமூகவிரோத செயல்களையும் ’தமிழ்’ என்கிற பெயரில் செய்வதைவிட ஒரு கேவலம் தமிழ்தேசியத்திற்கு இருக்க முடியுமா? தமிழ்தேசியம் என்பது என்ன? கற்காலத்திற்கு போய் கல்லுடைப்பதா? அம்மணமாகத் திரிவதா? தடுப்பூசியால் ஒழிந்துபோன போலியோ போன்ற நோய்களை தடுப்பூசி மறுப்பு பேசி உயிர்ப்பித்து தமிழ் குழந்தைகளை ஊனமாக்குவதா?

மோடியை சந்தித்த தமிழக தொலைக்காட்சிகள் ... ஏன் டிவி விவாத மேடைகளுக்கு வரவில்லை? பணம்?

Muralidharan Pb : 1991 - 1996ல் அரசியலை கவனித்து
வந்தவர்களுக்கு நன்கு
தெரியும். அன்றைய ஆட்சியில் நடந்த அராஜகங்களை தோலுரித்து காட்டி மக்கள் மத்தியில் உண்மையை உரைத்ததில் பெரும் பங்கு ஆங்கில இந்து மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ், தமிழில் திணமணி மற்றும் ஜூனியர் விகடன், நக்கீரன், தராசு. குறிப்பாக ஆட்சி அவலங்களை எந்த சார்புமின்றி படம் பிடித்து காட்டியது மேற் சொன்ன கடைசி மூன்று இதழ்கள்.
அதன் விளைவே ஆட்சி மாற்றம் என்றால் அதில் தவறில்லை.
அதைவிட பன்மடங்கு தவறுகள் நடந்தது 2011-2016 ஆட்சி. அதை மக்களுக்கு சொல்லத் தவறியதால் நிறைய தொல்லைகள் இன்று வரை தமிழ்நாடு அனுபவிக்கிறது.

கலைஞரின் புதிய தலைமை செயலகத்திற்கு எதிரான ஜெயாவின் ரகுபதி கமிஷனை கலைக்க நீதிமன்றம் உத்தரவு

புதிய தலைமை செயலகம் விவகாரத்தில் அமைக்கப்பட்ட ரகுபதி கமிஷனை கலைக்க ஐகோர்ட் உத்தரவுமாலைமலர் : புதிய தலைமை செயலகம் கட்டியதில் ஊழல் நடந்திருப்பதாக கூறி அதனை விசாரிக்க அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்தை கலைக்க சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #MadrasHC #RagupathiCommission சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து, அது குறித்து விசாரணை நடத்த 2012-ம் ஆண்டு, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையத்தை எதிர்த்தும், ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரியும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், 2015-ம் ஆண்டு ரகுபதி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, 3 ஆண்டுகள் செயல்படாமல் இருந்த ஆணையத்திற்கு செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு, இதுவரை எவ்வளவு  ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.

பேராசிரியர் உமா .. மறு கூட்டல் விண்ணப்ப வியாபாரம் ... 400 கோடி சம்பாத்தியம் ..கமிஷன் பிரிப்பு ,, ஜெயா காலத்தில் இருந்தே ,,

அண்ணா பல்கலைக்கழகம்
400 கோடி ரூபாய் முறைகேட்டில் சிக்கிய  உமாவிகடன் -எஸ்.மகேஷ் : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் உமா டீம் நடத்திய ரூ.400 கோடி கூட்டல் கழித்தல் கணக்கு, பூதாகரமாக வெடித்துள்ளது.
 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்தவர் உமா. இவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக ஐ.டி துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பதவி காலியாக இருந்ததும், அதற்கு உமா மற்றும் சிலர் போட்டியிட்டனர். உமாவுக்கு மட்டும் சில கூடுதல் தகுதிகள் இருந்ததால், அந்தப் பதவி எளிதில்  அவருக்குக் கிடைத்தது. இந்தச் சமயத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக இருந்ததால், அண்ணா பல்கலைக்கழகத்தைப் பதிவாளர் உள்ளிட்ட உயர்கல்வித்துறை அதிகாரிகள் தலைமையிலான கமிட்டி வழிநடத்தியது. அப்போது, பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச் சாட்டுகள் எழுந்தன. இருப்பினும் அரசியல், அதிகார செல்வாக்கு காரணமாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தப்பினர். பல்கலைக்கழக வளாகமே புரோக்கர்களின் கூடாராமாக மாறியது. புரோக்கர்களைப் பிடித்தால் காரியத்தை முடித்துவிடலாம் என்ற நிலை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிலவியது.
இந்தச் சூழ்நிலையில், உயர்கல்வித்துறையில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவருக்கும் உமாவுக்கும் இடையே நாற்காலியில் உட்காருவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, உமாவின் கை ஓங்கியிருந்தது. இதனால், அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பிறகு, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு  துணை வேந்தராக  சூரப்பா நியமிக்கப்பட்டார்.

கோவையில் 6 பேரை காரால் மோதி கொன்றவன் குடிபோதையில் இருந்தது நிருபணம்

ஆர்.கிருஷ்ணகுமார் tamil.thehindu.com : கோவையில் அதிவேகமாக காரை
ஓட்டி 6 பேர் இறப்பதற்குக் காரணமாக இருந்த சொகுசு கார் ஓட்டுநர், குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் மீது கூடுதல் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்குமார்(34). கோவை ஈச்சனாரியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி உரிமையாளரிடம் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை கல்லூரியிருந்து, போத்தனூரில் உள்ள கல்லூரி உரிமையாளர் வீட்டுக்கு காரில் புறப்பட்டுள்ளார் ஜெகதீஷ்குமார். மிகுந்த வேகத்துடன் காரை ஓட்டிய ஜெகதீஷ்குமார், சுந்தராபுரம் ஐயர் ஆஸ்பத்திரி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது நிலைதடுமாறி, சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியுள்ளார்.
இதில், கல்லூரி மாணவி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஜெகதீஷ்குமாரைக் கைது செய்தனர்.

கேரளா ஐ ஐ டி மாணவியும் மாணவனும் ரெயிலில் பாய்ந்து தற்கொலை?

Kozhikode: Two students of Government ITI Koyilandy were found run over by a train, on the Vellarakk... Read more at: https://english.manoramaonline.com/news/kerala/2018/08/02/iti-students-run-over-train-kozhikode.html
வெப்துனியா : திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே ெகாயிலாண்டி பகுதியைச் சேர்ந்தவர் ரிஜோ ராபர்ட் (20). கோழிக்கோடு நடுவண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் பஷ்மிதா (19). இவர்கள் இருவரும் கோழிக்கோட்டில் உள்ள ஐஐடியில் படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஐஐடி சென்ற அவர்கள் வீடு திரும்பவில்லை. இருவரின் பெற்றோரும் கொயிலாண்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் வெள்ளறக்காடு ரயில் நிலையம் அருகே இருவரும் ரயில் மோதி இறந்த நிலையில் காணப்பட்டனர். போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர்களது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

10 வருடங்களுக்கு முன்பு கமல் வாங்கிய 4 கோடி! வட்டியுடன் தருமாறு சாயி மீரா வழக்கு

நக்கீரன் :சி.ஜீவா பாரதி    :  மர்மயோகி என்ற திரைப்படத்தை
தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே கடந்த 2008 ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட இந்த படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக 6.90 கோடி ரூபாயும், படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 4 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது. ஆனால் மர்மயோகி படத்தை தயாரிக்காமல் "உன்னைபோல் ஒருவன்" படத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

Bidari Mafia .. TN CM’s blue eyed girl, and camera fame Rohini IAS. her Husband Vijayendra Bidar IPS.i

Shankar A : Sources : Shankar Bidari, IPS, an officer of Karnataka cadre was a notoriously corrupt
officer. His son Vijayendra Bidari, is a TN cadre IPS officer of 2005 batch.
While the father is notoriously corrupt and enjoys a rotten reputation, Vijayendra Bidari, is learning the ropes, and luckily he managed to enter CBI.
Sources say, the CBI Director has posted, Vijayendra Bidari, as CBI’s chief officer in Bengaluru. Shankar Bidari, who tried to get a BJP ticket in 2014, has been entrusted with the task of pulling down the HD.Kumarasamy government, say sources.
All of a sudden, Vijayendra Bidari, is posted as Chief of CBI, Bengaluru.
Coincidentally, Vijayendra Bidari happen to be the husband of TN CM’s blue eyed girl, and camera fame Rohini IAS.

அத்தனை போலி விளம்பரங்களும் தமிழகத்தில் .. அதிலும் கொங்குதான் முதலிடம் ,,,, ஜூவியின் பங்கு சாதரணமா?

அநிருத்த பிரம்மராயன் :  ஷேர் மார்க்கெட்களில் ஒரு scam உண்டு. யாருமே
சீந்தாத நட்டத்தில் இருக்கும் பங்குகளை குறைந்த விலையில் வாங்கி வைத்துக் கொள்வர். பிறகு அந்த கம்பெனிகள் பெரும் லாபம் பெறப் போகிறது என நம்பும் படி செய்தி பரப்புவர். அந்த பங்கின் விலை உச்சத்திற்கு செல்லும். அப்போது அனைத்தையும் விற்றுவிட்டு வெளியேறிவிடுவர். கொஞ்சநாள் கழித்து அது ஒரு உதவாக்கரை பங்கு என தெரியவரும். மற்ற அனைவருக்கும் பெருத்த நட்டம்.
உதாரணமாக பஞ்சாப் நேசனல் வங்கியின் பங்கைப் பார்க்கலாம். தொடர்ச்சியான நட்டத்தால் 2016 பிப்வரி மாதத்தில் அதன் விலை ரூபாய் 72.50 ஆக இருந்தது. பிறகு திட்டமிட்டு செய்தி பரப்பப் படுகிறது. பொதுத்துறை வங்கிகளுக்கு மோடி அரசு இரண்டு லட்சம் கோடி கொடுக்கப் போகிறது எனும் செய்தி வருகிறது. வங்கித்துறை பங்குகள் விலை ஏறுகின்றன. PNB விலை கிட்டத்தட்ட மும்மடங்கு உயர்ந்து 207 ரூபாய் ஆகிறது. அதாவது 2016 பிப்ரவரியில் ஒரு கோடி போட்டால் 2017 நவம்பரில் மூன்று கோடி. வாங்கியோர் எல்லாம் விற்று வெளியேறிய பிறகு குமிழி பட்டென்று உடைகிறது. நீரவ் மோடி மோசடி வெளிவருகிறது. தற்போது PNB பங்கின் விலை 85.25 ரூபாய்.
ஆனால் நான் சொல்ல வந்த விசயம் இதுவல்ல. நாட்டு மாடுகளை வைத்து இதே போல ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆதாரமே இல்லாமல் A1 பால் A2 பால் என தெருவில் போறவன் எல்லாம் உளறினான்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஸ்டாலினிடம் தொலைபேசியில் கலைஞர் நலம் விசாரித்தார்

மாலைமலர்:  திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை
குறித்து மு.க.ஸ்டாலினிடம்
தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே விசாரித்தார்.
கருணாநிதி உடல் நலம்- ஸ்டாலினிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் இலங்கை பிரதமர் ரணில் சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஹீலர் பாஸ்கர் கைது ! வீட்டிலேயே சுகப்பிரசவம் மேற்கொள்ள பயிற்சி என 5000 ரூபாய் வாங்கியுள்ளார்

BREAKING | இயற்கை முறையில் பிரசவம் பார்க்க பயிற்சி என விளம்பரம் செய்து  .. இலவச பயிற்சி என கூறி ஒவ்வொருவரிடமும் நபருக்கு 5000 கட்டணம் வாங்கியதாக ஹூலர் பாஸ்கர் மீது புகார்
வீட்டிலேயே சுகப்பிரசவம் மேற்கொள்ள பயிற்சி என விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கர் கைதுமாலைமலர் :  வீட்டிலேயே சுகப்பிரசவம் மேற்கொள்ள பயிற்சி அளிக்க முகாம் நடப்பதாக விளம்பரம் செய்த நிஷ்டை என்ற அமைப்பின் நிறுவனர் ஹீலர் பாஸ்கர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை: சமீபத்தில் திருப்பூரில் யுடியூப் வீடியோ பார்த்து வீட்டிலேயே சுகப்பிரசவம் மேற்கொண்ட பெண் பலியானார். இதனை அடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், வீட்டிலேயே சுகப்பிரசவம் மேற்கொள்ள கோவையில் இலவச பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இணையதளத்தில் ஒரு போஸ்டர் உலா வந்தது. இதனை அடுத்து, சுகாதாரத்துறைக்கு புகார் சென்றதை அடுத்து இந்த முகாம் நடத்தப்படுவது தடுக்கப்பட்டது. மேலும், இந்த முகாமை நடத்தும்  நிஷ்டை என்ற அமைப்பின் நிறுவனர் ஹீலர் பாஸ்கரை குனியமுத்தூர் போலீசார் இன்று கைது செய்தன

வீட்டு வேலை: குறைந்த ஊதியம் கொடுத்தால் சிறை!

வீட்டு வேலை: குறைந்த ஊதியம் கொடுத்தால் சிறை! மின்னம்பலம் : தமிழகத்தில் முதல் முறையாக வீட்டு வேலை செய்பவர்களுக்கான ஊதியத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. அரசு நிர்ணயம் செய்த ஊதியத்தை விடக் குறைவாக கொடுத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
வீட்டு வேலை செய்பவர்கள் குறித்து, கோவை தொழிலாளர் நலத் துறை துணை ஆணையர் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், வீட்டு வேலை செய்பவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செவிலியர் தினமும் ஒரு மணி நேரம் பணிபுரிந்தால் அதற்காகக் குறைந்தது மாநகராட்சி பகுதிகளில் 39 ரூபாயும், நகராட்சி பகுதிகளில் 35 ரூபாயும் ஊதியமாகத் தர வேண்டும். வீட்டு வேலை செய்பவர்கள் 8 மணி நேரம் பணிபுரிவதற்கு முறையே 8,050 ரூபாயும், 7,246 ரூபாயும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகரங்களைப் பொறுத்தவரை, சமையல் தோட்ட வேலை செய்பவர்களுக்கு மாத ஊதியமாகக் குறைந்தபட்சம் 7,823 ரூபாய் மற்றும் 7,041 ரூபாய் ஊதியமாகத் தர வேண்டும்.

தமிழக முன்னணி ஊடகங்கள் மோடி மீட்டிங்... டீல் டன்! .மக்கழே .. இனி இந்த ஊடகங்களை நம்பாதீர் ?

savukku : சினிமாவுக்கு போன சித்தாளு 
திங்களன்று, தமிழகத்தின் முன்னணி ஊடகங்களின்  உரிமையாளர்கள்  / 
செய்தி ஆசிரியர்கள் டெல்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்து வந்துள்ளனர்.  ஊடக உரிமயாளர்களும், பத்திரிக்கையாளர்களும் ஒரு பிரதமரையோ, முதல்வரையோ சந்திப்பது என்பது இயல்பானதே.  ஆனால் இவர்கள் சந்தித்தது  மோடி என்பதும், இந்த சந்திப்பு மிக மிக ரகசியமாக  வைக்கப்பட்டது என்பதுமே இதை விவாதப் பொருளாக்குகிறது.
கடந்த முறை மோடி சென்னை வந்தபோது, இதே போல ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அந்த சந்திப்பு ராஜ்பவனில் நடைபெற்றது.  மோடியை சந்திக்கச் சென்ற ஊடகத்தினர், இரண்டு மணி நேரம் காத்திருந்தனர்.   அன்று #GoBackModi உலக அளவில் ட்ரெண்ட் ஆனதில், சமூக வலைத்தளங்கள் மூலமாகவே கட்சி நடத்தி, சமூக வலைத்தளங்கள் மற்றும் மென்பொருட்கள் மூலமாகவே பல கலவரங்களை உருவாக்கி பழகிய பரிவாரத்தினருக்கு அது பெரும் அதிர்ச்சி.
ட்விட்டரிலேயே அரசியல் செய்யும் மோடிக்கும் இது பெரும் அதிர்ச்சி.  இதன் காரணமாக, சென்னை ஐஐடியின்  இண்டு இடுக்குகளிலெல்லாம் புகுந்து வந்த மோடி #GoBackModi ட்ரெண்ட் ஆனதில் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார்.   இதனால் எதிர்ப்பார்த்த் போல அந்த ஊடகவியாளர்கள் சந்திப்பு
நடைபெறவில்லை.  இரண்டு மணி நேரம், குடும்பத்தினரோடு சென்று காத்திருந்த ஊடகவியலாளர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர்.  மோடி அவர்களோடு செலவிட்டது வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே.

100பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் டிராக் வியு என்ற செயலி மூலம் ... தினேஷ்குமார் ராமநாதபுரம்

Prakash S - tamil.gizbot.com : ராமாநாதபுரம் அருகே உள்ள தாமரைக்குளம் என்ற
பகுதியை சேர்ந்தவன் தினேஷ் குமார், இவன் எம்.சி.ஏ வரை படித்துள்ளான். ஆனால் இவன் படிப்புக்கு தகுந்த வேலைக்கு செல்லாமல், ராமாநாதபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் லேப்டெக்னீசியனாக பணியாற்றி வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 
 மேலும் அந்த கல்லூரியில் பணியாற்றிய பெண்கள் மற்றும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் வேலையை இழந்தான் தினேஷ்குமார். பின்பு அவன் கற்றுக் கொண்ட சில தொழில்நுட்பங்கள் மூலம் பெண்களை பாலியல்விருப்பத்திற்கு இணங்க வைக்க முடிவு செய்துள்ளான். 

 டிராக் வியூ என்று செயலியைப் பயன்படுத்தி அவனுக்கு தெரிந்த பெண்கள் மற்றும் உறவுக்கார பெண்களின் செல்போனில் அவர்களுக்கு தெரியாமலே தரவிறக்கம் செய்து, அதை தனது செல்போன் மூலம் கட்டுப்படுத்தியுள்ளான்.

அதன்பின்பு பெண்களின் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட டிராக் வியூ செயலியை தனது செல்போன் மூலம் இயக்கி, பெண்களின் செல்போன் கேமரா பதிவு செய்யும் காட்சிகளை அவனது செல்போனில் கண்காணித்துள்ளான் என்று கூறப்படுகிறது.

தாக்கப்பட்ட பிரியாணி கடைக்கு ஸ்டாலின் நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார்.,, குண்டர்களுக்கு கடும் எச்சரிக்கை


ஆர் எஸ் எஸ் பதிவு
ஸ்டாலின், பிரியாணி கடை,  திமுக யுவராஜ்,  சென்னை விருகம்பாக்கம் பிரியாணி கடை,  பிரியாணி கடை மீது தாக்குதல், பிரியாணி கடை ஊழியர்கள், 
Stalin, Brihanmani hotel, Chennai Chennai Wickramambakkam Biyani hotel, DMK Yuvraj, attack on Brihani hotel, Brihani hotel staff,
தினத்தந்தி: சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். இவரது தம்பி பிரகாஷ் (வயது 42), கடையை நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இரவு உணவுகள் தீர்ந்து போனதால் கடையின் முன்பக்கத்தில் உள்ள ஒரு ‘ஷட்டரை’ சாத்தி விட்டு கணக்கு பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது விருகம்பாக்கம் தி.மு.க. நிர்வாகி பாக்சர் யுவராஜ் தலைமையில் வந்த 10-க்கும்
மேற்பட்டோர் கடைக்குள் சென்று பிரகாசிடம் சாப்பிட பிரியாணி வேண்டும் என்று கேட்டனர்.< அவரோ, “நேரம் ஆகிவிட்டதால் உணவுகள் தீர்ந்துவிட்டன” என்று கூறினார். அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த பாக்சர் யுவராஜ் “நான் லோக்கல் ஆளு எனக்கே பிரியாணி இல்லையா?” என்று கேட்டு அங்கு இருந்த பொருட்களை கைகளால் தள்ளிவிட்டார். அப்போது கடை ஊழியர்கள் 2 பேர், “ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்?” என்று கேட்டனர். இதில் மேலும் ஆத்திரம் அடைந்த பாக்சர் யுவராஜ் தனது ஆதரவாளர்களுடன் புடை சூழ தனக்கே உரிய ‘பாக்சிங்’ பாணியில் பிரகாஷின் முகத்தில் ஓங்கி குத்துவிட்டார்.

கலைஞர் நாற்காலியில் அமர்ந்தார்.. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்

மாலைமலர் :காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க.
தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் அவர் நாற்காலில் அமரவைக்கப்பட்டார்.
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 27-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் உடல் நிலை தேறிவருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று கருணாநிதி உடல் நிலை பற்றி விசாரித்து வருகிறார்கள்.
 அவரது உடல் நிலை பற்றி கவலை அடைந்த தொண்டர்கள் ஆஸ்பத்திரி முன் 5 நாட்களாக விடிய விடிய காத்து கிடந்தார்கள்.
துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை பார்த்த படங்கள் வெளியிடப்பட்ட பின்புதான் தொண்டர்கள் நிம்மதி அடைந்தனர்.
 ராகுல் காந்தி கருணாநிதியை பார்க்க வந்த போது அவரது காதில் மு.க.ஸ்டாலின் ராகுல் வந்திருக்கும் தகவலை சொல்வதும் கருணாநிதி கண் திறந்து பார்க்கும் காட்சியும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சிலை கடத்தலும் H Raja வும்

Venkat Ramanujam :   Gayathri Karthik அவர்கள் எழுதிய பதிவில் உட்கருத்தை
எடுத்து சில திருத்தங்கள் செய்து ..
மே 31 2018 :குஜராத்தில் இருந்து திருடப்பட்ட சிலைகளை IG (Idol Wing ) பொன் மாணிக்கவேல் மீட்டு வந்தார்..ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்து முன்னணி ஆரவார வரவேற்பு.
"தமிழகத்தில் 7000 சிலைகள் திருடப்பட்டிருக்கின்றன, கோவிலில் பணிபுரிபவர்களும் அர்ச்சகர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்"_
IG பொன்மாணிக்கவேல் பேட்டி.....ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்து முன்னணி சங்கிகள் பதுங்கு குழிக்குள் பாய்ச்சல்..
ஜூன் 21 2018 : பாஜக பொது செயலாளர் எச் ராஜா எடப்பாடி சந்திப்பு.
ஜூன் 27 2018 : தன்னை பணியிட மாற்றம் செய்ய முயல்வதாக ஐஜி பொன் மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார்
ஜூலை 20 2018 :நீதிமன்றம் கண்டனம்..
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வை அமைத்தது உயர் நீதிமன்றம்.
ஆகஸ்ட் 1 2018 : விசாரணையை சிபிஐ-க்கு கொடுப்பதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில்..

இந்து அறநிலைய துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது- சிலை கடத்தல் .. டி டி வி தினகரன் உறவினர்

கவிதா ttv உறவினர்

THE HINDU TAMI : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயி லில் சோமாஸ்கந்தர் சிலை செய்த தில் மோசடி நடந்தது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம் பரநாதர் கோயில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது. சிவன், பார்வதி, முருகப்பெருமான் சேர்ந்தவாறு அருள்பாலிக்கும் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமாஸ்கந்தர் சிலை இக்கோயிலில் இருந்தது. அது சேதம் அடைந்ததால், அதற்கு பதிலாக புதிய சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டது.
இந்த நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஒரு புகார் கொடுத்தார். ‘காஞ்சி புரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சோமாஸ்கந்தர் சிலை செய்ய பொதுமக்களிடம் இருந்து காணிக் கையாக தங்கம் வசூலிக்கப்பட்டது. ஆனால், புதிய சிலையில் சிறிதள வுகூட தங்கம் இல்லை’ என்று அதில் தெரிவித்திருந்தார்.
அதன்பேரில், சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் தொண்டைக்குள் ஒன்பது ஊசிகள் .. மந்திரவாதி கொடுமை ... மருத்துவர்கள் காப்பாற்றினர்


சிறுமியின் தொண்டைக்குள் 9 ஊசிகள்!மின்னம்பலம்: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியின் உடலில் இருந்து ஒன்பது ஊசிகளை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.
மேற்கு வங்க மாநிலம் கிரிஷ்நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடும் தொண்டை வலி காரணமாகக் கடந்த ஜூலை 29ஆம் தேதியன்று நில் ரதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாய் பேச முடியாமல் இருந்த அந்தச் சிறுமியின் தொண்டைப் பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவரது தொண்டையில், உணவுக் குழாயைச் சுற்றிலும் ஒன்பது ஊசிகள் இருந்தன. சுமார் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்த ஊசிகளை வெளியே எடுத்தனர் மருத்துவர்கள். இதன் மூலமாக, அந்தச் சிறுமி பெரும் பாதிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டார்.