சனி, 28 செப்டம்பர், 2019

துப்பரவு பணிக்கு முதுகலை பயின்றவர்கள் போட்டி ..

    Vivekanadan T : கொடுமை ..கொடுமை ...இன்று நியூஸ் 18 தொலைக்காட்சியில் பார்த்த செய்தி அதிர்ச்சியை கொண்டு வந்தது.. அது , துப்பரவு பணிக்கு முதுகலை பயின்றவர்கள் போட்டி - படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத அவலம் என்று செய்தி .....
வடக்கில் ஒருத்தர் படிச்சவன் எல்லாம் பக்கோடா விக்க சொல்லுறான்.....ஆனால் , தமிழகத்தில் திட்டமிட்டு மத்திய மாநில அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டுக்குள்ளேவே தமிழர்களுக்கான வாய்ப்புகளை புறக்கணித்தது மட்டுமல்லாமல் சம்ஸ்கிருதம் ஹிந்தி திணிப்பை வெவ்வேறு ரூபத்தில் நுழைப்பதை பற்றி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தவிர பிஜேபி கட்சியின் அடிமை கட்சிகள் வாயை திறப்பதில்லை...
எல்லாவற்றையும் விட கொடுமை...As on January 2017, across all ten ministries, unfilled reserved vacancies for SCs figure at 8223, STs at 6955 and OBCs at 13,535. Out of the 92,589 total backlog vacancies for the year ending 2016, some 63,876 were filled up...
மேலும் ஒட்டுமொத்தமாக கடந்த ஐந்து வருடங்களில் நாடு முழுவதும் 24 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்படாமல் இருப்பதாக தினமணி மற்றும் News 18 சொல்லி உள்ளது( ஜூலை அண்ட் ஆகஸ்ட் edition- URL link comment section ) ...
கடைசியாக எட்டு ஆண்டுகள் கிழித்துவிட்டு , தமிழகத்தில் இப்போழுது தான் அவசரஅவசரமாக பன்னாட்டு கம்பெனிகளுடன் ஒப்பந்தம் என்று முதல்வர் பேசி இருக்கிறார்...இனிமேல் தான் தொழிற்சாலை கட்டமைப்பு தொடங்கி என்று அப்புறம் தான் வேலைவாய்ப்பு அறிவிப்பு வரும்...... நிலைமை மோசமாகி போய் விட்டது என்பதை உணர்த்தி இருக்கிறது இந்த முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பம்.....
என்ன செய்யப்போகிறார்கள் அதிமுக அரசும் ஆளும் பார்ப்பனிய பிஜேபி அரசுக்கும்..?.....ஒன்று மட்டும் தெரிகிறது...எல்லா பொதுத்துறை நிறுவங்களை தனியாரிடம் தாரை வார்த்து சமூகநீதியை ஒழிக்க பார்க்கிறார்கள் போல..

ஸ்டாலினின் : புதிய பாடத்திட்டத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டம்!

ஸ்டாலினின் அடுத்த போராட்டம்!மின்னம்பலம் : குரூப்-2 புதிய
பாடத்திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
குரூப்-2 பணிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று கட்டங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்துகிறது. முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகியவை இடம்பெறும். இந்நிலையில் இதுவரை தனிப் பகுதியாக இருந்த மொழிப்பாடம், முதல்நிலைத் தேர்விலிருந்து நீக்கப்படுவதாகவும், மொழித் தாளுக்குப் பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 28) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலையில்லாமல் தவிக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலக் கனவுக்கு அடிப்படையாக டிஎன்பிஎஸ்சி திகழ்கிறது. க்ரூப்-2 பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வில் தமிழ்மொழித் தேர்வை நீக்கியிருப்பதால், கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள ஏழை மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் ஆபத்து சூழ்ந்துள்ளது.

ஐ நாவில் இம்ரான் கான் பேச்சு வீடியோ

Kalai Selvi : Yes இம்ரான் பேச்சு மிக மிக அருமை மொழிவள ஆளுமை, கருத்துச் செரிவுடன் உண்மையான அக்கறையுடன் செம்மையாக பஞ்ச் பேச்சு

மின்னம்பலம் :  ஐ.நா சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உரை காஷ்மீரில் தூண்டுதலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீரில் சிறப்பு வரையறை சட்டநீக்கத்திற்குப் பின் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், “காஷ்மீரில் இந்தியா தனது கட்டுப்பாடுகளை நீக்கியவுடன் ஒரு இரத்தக் களரி இருக்கும்” என ஐ.நா பொதுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று(செப்.27) பேசியிருந்தார்.
நேற்றி நள்ளிரவில் இம்ரான் கான் பேசியதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து, இம்ரானுக்கு அதரவாகவும், காஷ்மீரின் சுதந்திரத்திற்காகவும் கோஷங்களை எழுப்பினர்.
இன்று(செப்.28) ஒலிபெருக்கிகளுடன் பொருத்தப்பட்ட போலீஸ் வேன்கள், ஸ்ரீநகரின் சில பகுதிகளில் இயக்க கட்டுப்பாடுகள் குறித்து பகிரங்க அறிவிப்புகளை வெளியிட்டன.

துப்புரவு பணிக்கு விண்ணப்பித்த இஞ்சினீயர்கள், பட்டதாரிகள்.. தமிழக அரசு செயலகத்தில்

துப்புரவு பணிக்கு விண்ணப்பித்த இஞ்சினீயர்கள், பட்டதாரிகள்!மின்னம்பலம் : தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் 14 துப்புரவு பணியாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு இஞ்சினீயரிங் பட்டதாரிகள் உள்பட 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் 10 பெருக்குபவர்கள், 4 துப்புரவு பணியாளர்கள் என 14 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக கல்வித் தகுதி எதுவும் குறிப்பிடப்படாமல், உடல் வலிமையோடு இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் அந்த அறிவிப்பில், சம்பள விகிதம் ரூ.15,700 முதல் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் ரூபாய் வரை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கல்வித் தகுதியே தேவையில்லாத இந்த பணிகளுக்கு பி.இ., பி.டெக்., எம்.டெக், எம்.இ படித்தவர்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்து 607 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 677 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 3 ஆயிரத்து 930 பேருடைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்றுவந்தது. நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடந்துவருகிறது.

இனி சுயஸ் நிறுவனம் கொடுக்கும் நீரைத்தான் கோயம்புத்தூர் மக்கள் குடிக்கவேண்டும் ... நீர்மேலாண்மை பிரெஞ்சு கம்பனிக்கு

Coimbatore City Municipal Corporation has chosen SUEZ to manage and operate the water distribution system within the entire city to ensure continuous drinking water access to its 1.6 million inhabitants. The 26-year project, worth near €400 million, is the largest water services contract won by SUEZ in India.
கோவையில் கேரளா எல்லை அருகில் கோவைப்புதூரில் மிக வேகமாக சத்தமின்றி கட்டப்பட்டு வருகின்றது. சூயஸ் நிருவனத்துக்கு இடம் கொடுத்து பிரம்மாண்டமாக நீர் நிலைகள் கட்டப்பட்டு வருகிறது. தடுக்கும் சக்தி யாரிடமும் இல்லாமல் மௌனிக்கும் பல மொழி பேசும் மக்கள்
காஞ்சிமாநதியில் உலகிலேயே சுவையான சிறுவாணி நீரை அள்ளி குடித்து வளர்ந்து மக்களே தற்போது உங்களுக்கு குடிதண்ணீரை பிரஞ்சு நாட்டு Suez (சுயஸ்) என்னும் தனியார் கம்பனி வழங்க உள்ளதை அறிவீர்களோ !
ஆம், கோயம்புத்தூர் மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை கடந்த பிப்ரவரி மாதம் 3,150 கோடிக்கு பிரஞ்சு நாட்டின் சுயஸ் Suez என்னும் தனியார் நிறுவனத்திற்கு அரசு வழங்கிவிட்டது.
ஆதாரம் இதோ : https://www.suez.com/…/SUEZ-wins-a-contract-worth-near-400-…
இந்தியாவில் மிகப்பெரிய உரிமத்தை பெற்றுவிட்டோம் என அந்நிறுவனம் தனது Website ல் மார்தட்டி சொல்லி இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
இந்தியாவிலேயே டெல்லி மாளவியா நகருக்கு பிறகு இரண்டாவதாது கோயம்புத்தூரை கண்டுபிடித்து வந்துள்ளது இந்நிறுவனம்.
இனி இந்த தனியார் நிறுவனம் கொடுக்கும் நீரைத்தான் கோயம்புத்தூர் மக்கள் குடித்தாக வேண்டும்.

BBC : சீனா - வங்கதேச கூட்டணியால் திருப்பூர் தொழிலாளர்களுக்கு இழப்பு?


எந்தத் தொழிலும் தெரியாமல், உள்ளூர் மொழியான தமிழும் தெரியாமல் திருப்பூர் நகரத்துக்கு காலையில் வந்திறங்கியவர்கள், ஐந்து தெருக்களில் அலைந்து திரிந்து, பத்து பின்னலாடை நிறுவனப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால் அன்றைய பொழுது சாய்வதற்குள் அவர்களுக்கு வேலை கிடைத்துவிடும். இது ஒருவேளை மிகையாக தெரியலாம். ஆனால், கடந்த இரண்டு - மூன்று ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் இதுதான் உண்மை நிலவரம். இப்போது அப்படி இல்லை.
'வேலைக்கு ஆட்கள் தேவை' என்று எழுதப்பட்ட பதாகைகளால் நிரம்பியிருந்த ஊரில், தொழில் நிறுவனங்கள் பலவும் மூடப்பட்டதால், 'கட்டடம் வாடகைக்கு விடப்படும்' என்ற பதாகைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
சுமார் 10 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் இந்த நகரின் போக்குவரத்து நெரிசல் இந்தியாவின் மெட்ரோ நகரங்களுக்கு இணையானதாகவே இருந்தது. அவற்றில் பெரும்பாலான வாகனங்கள் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான பட்டன்கள் முதல் துணி மூட்டைகள் வரை சுமந்து சென்றவை.
"முன்பெல்லாம் இங்கு வாகனப் போக்குவரத்தால் உண்டாகும் இரைச்சலால் கடைக்குள் அமர்ந்திருக்கவே முடியாது.
கடந்த ஐந்து - ஆறு மாதங்களாக இங்கு ஆள் நடமாட்டமே இல்லை" என்கிறார், திருப்பூரின் பிரபலமான 'பனியன் பஜாரில்' 15 ஆண்டுகளாக கடை வைத்திருக்கும் தேவி.

நாங்குநேரியில் சென்னை ரூபி மனோகரனுக்கு சீட் ... குழப்பத்தில் நெல்லை காங்கிரசார்.

ruby manoharan
nakkheeran.in - manikandan : குமரிஅனந்தன், ஊா்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் என மூன்று போ் கொண்ட பெயா் பட்டியலோடு டெல்லி்க்கு பறந்தார் காங்கிரஸ் தலைவா் கே.எஸ் அழகிரி. மூன்று பேருமே தொகுதிக்கும் மாவட்டத்துக்கும் சம்மந்தம் இல்லாதவா்கள். இதில் குமரி அனந்தன் ஏற்கனவே நான்கு முறை எம்எல்ஏ ஆகவும் ஒரு முறை எம்பி ஆகவும் இருந்தவா். அவா் தம்பி வசந்தகுமார் ஏற்கனவே நாங்குநேரி எம்எல்ஏ ஆக இருந்து இ்ப்போது கன்னியாகுமரி எம்பி ஆக இருக்கிறார். இவரால் தான் இந்த தொகுதிக்கு இடைத்தோ்தல் நடக்கிறது. இப்போது அண்ணன் குமரி அனந்தனுக்கு சீட் கேட்கிறார். இதனால் தொகுதி மக்களும் நெல்லை காங்கிரசாரும் அதிருப்தி. அதுபோக குமரி அனந்தன்  முதுமை காரணத்தால் அவருக்கு டாட்டா காட்டியது காங்கிரஸ் தலைமை.

காங்கிரசில் சித்தராமையாவை ஓரங்கட்ட முயற்சி

காங்கிரசில் சித்தராமையாவை ஓரங்கட்ட முயற்சிமாலைமலர் : காங்கிரசில் சித்தராமையாவை ஓரங்கட்ட முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூத்த தலைவர்கள் ஒன்று சேர்ந்து புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பெங்களூரு : கர்நாடக காங்கிரஸ் கட்சியில் அசைக்க முடியாத சக்தியாக சித்தராமையா வலம் வந்து கொண்டிருக்கிறார். காங்கிரசை பொறுத்தவரையில் முதல்-மந்திரியாக இருப்பவர், தேர்தலில் தோற்றுவிட்டால் அப்படியே ஒதுக்கிவிடுவார்கள்.
பங்காரப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா, வீரப்பமொய்லி, தரம்சிங் உள்ளிட்டோர் தேர்தலுக்கு பிறகு படிப்படியாக ஒதுக்கப்பட்டனர். வீரப்பமொய்லி, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் தேசிய அரசியலில் கால் பதித்தனர். ஆனால் எஸ்.எம்.கிருஷ்ணா நீண்ட காலம் நீடிக்கவில்லை. அவரை முழுமையாக ஒதுக்கியதால், பா.ஜனதாவுக்கு தாவினார். 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் முழுமையான ஆட்சி காலத்தை சித்தராமையா நிறைவு செய்தார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொண்டது. அதில் தோல்வியை சந்தித்தபோதும், காங்கிரசில் சித்தராமையாவின் செல்வாக்கு மட்டும் இதுவரை குறையவில்லை.

அரசியல் தலைவர்களுக்கு மாணவிகளை ... - 5 பெண்களுக்கு போலீஸ் காவல்

ஆர்த்தி தயாள்அரசியல் தலைவர்களுக்கு மாணவிகளை விருந்தாக்கி வீடியோ - 5 பென்களுக்கு போலீஸ் காவல்தினமலர் : மத்தியபிரதேசத்தில் மாணவிகளை அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு விருந்தாக்கி, வீடியோ எடுத்து காரியம் சாதித்த சம்பவத்தில் சிக்கிய 5 பெண்களும் விசாரணை காவலில் அடைக்கப்பட்டனர். ;போபால்: மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் சுவேதா விஜய் ஜெயின். இவர் சமூக சேவை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இதன் மூலம் அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட சுவேதா அவர்களை செக்ஸ் வலையில் சிக்க வைத்துள்ளார். இந்த விவகாரம் பற்றிய தகவல் போலீசாருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சஞ்சீவ் சமி மேற்பார்வையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.< சீனியர் சூப்பிரண்டு ருச்சிவரதன் சிங் தலைமையிலான இந்த குழு முழுமையான விசாரணையை மேற்கொண்டது. அதில் மத்தியபிரதேசத்தில் மிகப்பெரிய அளவில் சுவேதா ஜெயின் செக்ஸ் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஐ.ஏ.எஸ்.-ஐ.பி.எஸ். அதிகாரிகள், முன்னாள் மந்திரிகள், அரசியல் தலைவர்கள் என பலரை அவர் தனது செக்ஸ் வலையில் வீழ்த்தி இருந்ததும் தெரியவந்துள்ளது.

'நீட்' தேர்வு... மேலும் 7 மாணவர்கள் பெயர்களை வெளியிடாமல் இருக்க ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய புரோக்கர்

'நீட்' தேர்வு, ஆள் மாறாட்டம்,மேலும் 7 மாணவர்கள்,பெயர்களை வெளியிடாமல்,இருக்க,ரூ.1 கோடி, கேட்டு மிரட்டிய, புரோக்கர் தினமலர் :  தேனி,: ''உதித்சூர்யா போல 'நீட்' தேர்வு ஆள் மாறாட்டத்தில் மேலும் 7 மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்,'' என சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., விஜயகுமார் தெரிவித்தார். ஆள்மாறாட்ட மாணவர்களின்பெயர் விபரங்களை வெளியிடாமல் இருக்க புரோக்கர் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியது தெரியவந்துள்ளது
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர் வெங்கடேசன் மகன் உதித்சூர்யா 21. தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் கடந்த மாதம் எம்.பி.பி.எஸ்., சேர்ந்தார். 'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து 'சீட்' பெற்ற பிரச்னையில்சி.பி.சி.ஐ.டி., போலீசார் உதித்சூர்யாவை குடும்பத்துடன் திருப்பதியில் பிடித்தனர்.பின்னர் தேனிக்கு கொண்டு வந்து நடத்தப்பட்ட விசாரணை முடிவில் உதித்சூர்யா, தந்தை வெங்கடேசனை கைது செய்தனர். நேற்று முன்தினம் இரவு தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி பன்னீர்செல்வம் அக்.,10 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

உபி ..மருத்துவர் கபீல் கான் மீதான யோகி அரசின் பொய்குற்ற சாட்டுகளில் இருந்து விடுதலை

Prakash JP‎ : உங்களுக்கு இந்த கொடுமை மறந்திருக்காது..
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவ மனையில் 2017ஆம் ஆண்டு ஆக்சிசன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 60 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் கம்பெனிக்கு பல ஆண்டுகளாக அம் மாநில அரசாங்கம் பணம் கொடுக்காததால் திடீரென்ற சப்ளையை நிறுத்தியது..
தங்கள் மீதான தவறை மறைக்க, ஆக்சிஜன் சப்ளை கம்பெனிகளுக்கு பணம் தர வக்கற்ற அம்மாநில பிஜேபி அரசாங்கம், அந்த மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் கபீல் கான் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி பிரச்சினையை திசைத் திருப்பியது. அவர் கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் பிணை இன்றி சிறையில் இருந்தார்.
தான் நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு சிலிண்டர் கடத்தி விட்டார், டெண்டர் எடுத்ததில் ஊழல் செய்து விட்டார், சிலிண்டர் கம்பனிக்கு தரவிருந்த தொகையை திருடி விட்டார் என்று எண்ணற்ற புகார்கள் அள்ளி வீசப்பட்டது. இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் வாய் பொத்தி வேடிக்கை பார்த்தது.

சமஸ்கிருதத்தின் தொன்மை பற்றி உருப்படியான ஒரு சான்று இதுவரை கிடையாது .. கட்டுக்கதைகளே அதிகம் ..

Nagaraja Chozhan MA :; சம்ஸ்க்ருதம் மற்றும் அதன் தொன்மை பற்றி இணையத்தில் தேடினால் சரியான தகவல்களைப் பெற முடியவில்லை. முற்றிலும் அறிவியலுக்குப் (pseudo science) புறம்பான தகவல்களால் தான் நிரம்பி உள்ளது. இந்திய மொழியியல் (linguistics), தொல்லியல் (arechealogy) வல்லுநர்கள் கூட அனுமானங்களையே சொல்லி இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக சம்ஸ்க்ருதம் எப்படி உருவாகியது என்பதற்கு, சிவபெருமான் உடுக்கையில் இருந்து வலது புறம் சம்ஸ்க்ருதமும் இடது புறம் தமிழும் உருவானதாக சொல்கிறார்கள். இது அறிவியலுக்கும் மொழியியலுக்கும் புறம்பானது.
ஒரு மொழி என்பது முதலில் மக்களால் நூற்றாண்டுகளாகப் பல இன/குடி மக்கள் பேசி அதன் பின் எழுத்து உருவாகி பின் எழுதப்பட்டு, செழுமைப்படுத்தப்பட்டு, இலக்கணங்கள் உருவாகி அதன்பின் இலக்கியங்கள், காப்பியங்கள் உருவாகி இருக்கும். ஆனால் வேதகால சம்ஸ்க்ருதம் உருவாகி 10000 ஆண்டுகள் இருக்கும், அது வாய்மொழி வழியாகவே பல ஆயிரம் ஆண்டுகள் கடத்தப்பட்டது என சமய அறிஞர்கள் சொல்வதை ஆய்வாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
எந்த ஒரு பழமையான மொழியும், ஹீப்ரு, தமிழ், கிரேக்கம் போன்றவை எழுத்துருக்களை சம்ஸ்க்ருதத்திற்கு முன்னரே பெற்றுக் கொண்டன. அஃதாவது அந்த மொழிகளுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான கல்வெட்டுக்கள், பானைகள், தாழிகள், பழங்காலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
ஆனால் சம்ஸ்க்ருதத்திற்கு கிமு முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டுத் தான் கிடைத்திருக்கிறது. கிடைத்த மற்ற கல்வெட்டுக்கள் எல்லாமே கிபியில் எழுதப்பட்டவை தான்.
சமீபத்திய ராக்கிகடி (Rakhigarhi) டிஎன்ஏ ஆய்வின் முடிவில், சிந்துசமவெளி நாகரிக மக்களின் டிஎன்ஏவில் மத்திய ஆசிய மக்களின் ஸ்டெப்பி (steppe) கலப்பு இல்லை என உறுதியாகியுள்ளது.
ஆகவே சிந்துசமவெளி மக்களுக்கும் வேதகால நாகரிகம்/சம்ஸ்க்ருதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

40 பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களையும் விடலையாம்..சேலம் மோகன்ராஜ் இன் கண்ராவி கதை


Hemavandhana - tamil.oneindia.com : 40 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள்.. மிரட்டி மிரட்டியே சீரழித்த ஆட்டோ டிரைவர்..வீடியோ சேலம்: 40 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள் மட்டுமில்லை.. ஹோமோசெக்ஸிலும் ஈடுபட்டு வந்திருக்கிறாராம் சேலம் ஆட்டோக்காரர் மோகன்ராஜ்! சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் வசித்து வருபவர் மோகன்ராஜ். 42 வயதாகிறது. இவர்தான் அந்த ஆட்டோ டிரைவர். ஒரு கட்சியில் இவர் ஆட்டோ தொழிற்சங்க தலைவராகவும் இருக்கிறாராம். ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தார். ஆனால் இந்த மோகன்ராஜ் தந்த பாலியல் வக்கிரம் தாங்காமல் ஓடியே போய்விட்டார். அடுத்ததாக 2-வது கல்யாணம் செய்தார் மோகன்ராஜ். அந்த பெண்ணும் இவர் செய்த பாலியல் தொல்லை தாங்காமல் பிரிந்து சென்றுவிட்டார்.
அதற்கு பிறகு மோகன்ராஜ், பல பெண்களை மிரட்டி பாலியல் வக்கிரங்களை அரங்கேற்ற தொடங்கினார். காகாபாளையம் பஸ் ஸ்டாப் பக்கம்தான் மோகன்ராஜ் ஆட்டோ ஸ்டேண்ட். அங்கு இரவு நேரங்களில் தனியாக வரும் பெண்களிடம் சிரித்து பேசி மயக்கி, போன் நம்பரை வாங்கி கொண்டு, பண உதவி செய்வது போல பேச்சு தந்து.. பிறகு அவர்களை தந்திரமாக வீட்டுக்கு வரவழைத்து.. மிரட்டி... உல்லாசமாக இருப்பார்.

54 ஆண்டுகளாக எம் எல் ஏ ஆக இருந்த கே .எம் மாணி .. காங்கிரசை தோற்கடித்த கம்யூனிஸ்ட்..

left wing won pala constituency in keralaநக்கீரன் : கேரள மாநிலம் பலா தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கூட்டணி வேட்பாளர், மணி சி கப்பான் சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள பலா கடந்த 1965 ஆம் ஆண்டு சட்டமன்ற தொகுதியாக அறிவிக்கப்பட்டது. சட்டமன்ற தொகுதியாக அறிவிக்கப்பட்ட பின்பு இதுவரை அத்தொகுதியில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று கடந்த 54 ஆண்டுகளாக எம்.எல்.ஏ வாக ஒருவரே இருந்து வந்துள்ளார். இந்த 54 ஆண்டுகால வரலாற்றை தற்போது இடதுசாரி கூட்டணி முறியடித்துள்ளது.

6 மாதம் பேச மறுத்த மகளுக்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை .. வீடியோ


BBC : திருத்துறைப்பூண்டி அருகே தன்னுடன் பேசாமல் இருந்த மகளுடன் பேசுவதற்கு தந்தை குளத்தை சுத்தம் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ செய்துள்ளது. அத்தோடு சுற்றுச்சுழல் மற்றும் நீர் நிலைகள் மீது சமூக பொறுப்போடு சிந்தித்த சிறுமி நதியாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மருதாவனம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (37). இவர் பூ கட்டும் தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி அருள் மொழி (33), மகன் விவேகானந்தம், மகள் நதியா. குழந்தைகள் இருவரும் அருகே உள்ள மருதாவனம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
சிவக்குமார் குடித்து விட்டு வீட்டில் மனைவியிடம் சண்டை போடுவது வழக்கமாக இருந்துள்ளது. தந்தையின் இச்செயலால் ஏழாம் வகுப்பு படித்து வரும் மகள் நதியா கடந்த 8 மாதங்களாக தந்தையிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.
மகளிடம் பேச முடியாமல் கடந்த 8 மாதங்களாக தவித்து வந்த தந்தை சிவக்குமார் மகள் தன்னிடம் பேசுவதற்கு அவர் என்ன செய்ய வேண்டும் என மகளிடம் கேட்டுள்ளார்.

டொரோண்டோ தமிழ் இளைஞர் சாரங்கள் சுட்டு கொலை .. சரண்குமார் கைது

625.0.560.350.160.300.053.800.668.160.90 கனடாவில் துப்பாக்கிச்சூட்டில் பலியான இலங்கை இளைஞர்: கொலையாளி சிக்கினார்! கனடாவில் துப்பாக்கிச்சூட்டில் பலியான இலங்கை இளைஞர்: கொலையாளி சிக்கினார்! 625 வீரகேசரி : கனடாவில் துப்பாக்கிச்சூட்டில் இலங்கை இளைஞர் ஒருவர் பலியான வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கூடுதல் தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது.
கனடாவின் ஸ்கார்பரோவில் நடந்த துப்பாக்கிச்சூடு ஒன்றின்போது, வாகனம் ஒன்றிற்குள் ஒரு இளைஞர் குண்டுக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரை மீட்க அவசர உதவிக்குழுவினர் எடுத்த முயற்சி வெற்றிபெறாமல், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது பெயர் சாரங்கன் சந்திரகாந்தன் என்பதாக தெரியவந்துள்ள நிலையில், பொலிசார் அந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக மேலும் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் - மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல்

மாலைமலர் : மிழகத்தில் நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்களின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் வகையில் அதிரடியாக தேர்தல் அட்டவணையையும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் எஸ்.சி. எஸ்.டி., பிரிவுகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தது. தமிழக தேர்தல் ஆணையம் இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.
சுப்ரீம் கோர்ட்டும் சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது, அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.

டீபேக்ஸ்: தினமும் பிளாஸ்டிக்கை குடிக்கிறோமா... பிளாஸ்டிக் ஆபத்து ....

மின்னம்பலம் :
டீபேக்ஸ்: தினமும் பிளாஸ்டிக்கை குடிக்கிறோமா?
தேயிலையைச் சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயாரிக்கப்படுகிறது. இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால் தேயிலையின் சாரம் இறங்கி தேநீர் தயாராகிறது.
இந்த டீ பேக்குகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது? அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா? என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாம் அதனை உட்கொள்கிறோம். இந்நிலையில், ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், டீ பேக் பயன்படுத்தி தேநீர் தயாரிக்கும் போது, பில்லியன் கணக்கான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் தேநீரில் இறங்கும் என்பது தெரியவந்திருக்கிறது.
கனடாவின் McGill University ஆராய்ச்சியாளர்கள், ஒரு கப் கொதிக்கும் நீரில் (95 சி) மூழ்கும்போது, 11.6 பில்லியன் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மற்றும் 3.1 பில்லியன் சிறிய நானோபிளாஸ்டிக் துகள்களை டீ பேக் கோப்பையில் வெளியிடுகிறது என்று தெரிவித்துள்ளனர். ஒரு ஆண்டு முழுவதும் ஒரு நபர் உட்கொள்ளும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்களின் அளவை விட இந்த அளவு கணிசமாக அதிகமாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஆய்வொன்றின் படி, சராசரி நபர் ஆண்டுதோறும் குறைந்தது 50,000 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உணவுகள் மூலம் தெரியாமல் உட்கொள்வது தெரியவந்துள்ளது.

இந்திராணி போராவை சந்தித்ததே இல்லை: சிதம்பரம்

இந்திராணியை சந்தித்ததே இல்லை: சிதம்பரம்மின்னம்பலம் : இந்திராணி முகர்ஜியை ஒருபோதும் சந்தித்ததாக நினைவில் இல்லை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பு தெரிவித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த செப்டம்பர் 5ஆம் தேதியிலிருந்து நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குடும்பத்தினர் மூலமாக தொடர்ந்து கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்.

எனக்கு தொடர்பே இல்லை: கைவிரித்த கமல் தரப்பு!

மின்னம்பலம் : எனக்கு தொடர்பே இல்லை: கைவிரித்த கமல் தரப்பு!கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் பிரச்சினை தமிழ் சினிமாவில் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. கமல் ஏமாற்றுகிறார் என்று புகார் கொடுத்த ஞானவேல் ராஜாவுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
உத்தம வில்லன் படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டபோது உதவ முன்வந்தவர் ஞானவேல் ராஜா. அவர் உதவிக்கு பிரதிபலனாக, ஒரு படம் நடித்துக்கொடுப்பது அல்லது வாங்கிய 10 கோடியை திருப்பிக் கொடுப்பது என கமல் உத்திரவாதம் கொடுப்பதாக ஞானவேல் ராஜாவின் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அப்படியொரு ஒப்பந்தமே எங்களுக்குள் இல்லையென ராஜ்கமல் நிறுவனம் தடாலடியாக அறிவித்திருக்கிறது.

சுபஸ்ரீ மரணம்; அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது!

Former AIADMK councilor jayagopal arrestednakkheeran.in - kalaimohan : சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ வாகனத்தின் மீது விழுந்தது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி, அவர் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார்.

குடியாத்தம் குமரன்... திமுக கட்சியில் இருந்து இடை நீக்கத்திற்கான பின்னணி

Arsath Kan | /tamil.oneindia.com :   சென்னை: திமுக கொள்கை பரப்பு துணைச்
செயலாளராக இருந்த குடியாத்தம் குமரன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
இதற்கு காரணம் திமுக பொருளாளர் துரைமுருகன் தான் என திமுக சொற்பொழிவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.  வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை பூர்வீகமாக கொண்ட குமரன் தனது மாணவப் பருவத்தில் இருந்து திமுக மேடைகளில் முழங்கி வருகிறார். தொடக்கத்தில் துரைமுருகனின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், ஒரு கட்டத்தில் அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறினார். துரைமுருகனை நம்பி காலம் தான் கரைந்ததே தவிர வேறொன்றும் நடக்கவில்லை என குமரன் கூறியதாக திமுக பேச்சாளர் ஒருவர் கூறுகிறார். இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்தை நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளார். இது தொடர்பாக கட்சிக்காரர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசிய குடியாத்தம் குமரன், போட்டியிட வேறு ஆளே இல்லையா எனத் தொடங்கி துரைமுருகனை பற்றி தனது உள்ளக்குமுறலை கொட்டினாராம்

அண்ணாவை இழிவுபடுத்திய அண்ணா பல்கலைகழக துணைவேந்தர்! புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கண்டனம்

Revolutionary Student Youth Frontஅறிஞர் அண்ணாவை இழிவுபடுத்திய அண்ணா பல்கலைகழக துணைவேந்தர்! புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கண்டனம்!.nakkheeran.in - ஜெ.டி.ஆர். அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி. சி.இ.ஜி, உள்ளிட்ட வளாகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதையை பாடமாக அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளதற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் த.கணேசன் கண்டன அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில், தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள 4 ஆம் தொழிற்நுட்பப் புரட்சிக்கு ஏற்ப இந்திய பொறியியல் கல்லூரிகளும், மாணவர்களும் தரமாக இல்லை என்று கார்ப்பரேட் முதலாளிகள் கூக்குரலிடுகிறார்கள். அதற்கு தலைவணங்கி மோடி அரசு தரத்தை உத்தரவாதப்படுத்தப் போகிறோம் என்ற பெயரில் அகில இந்திய அளவில் நீட் போன்ற கடுமையான நுழைவுத்தேர்வுகள், படிப்பை முடித்தபின் எக்ஸிக் எனும் தகுதி தேர்வுகள், ஏ.அய்.சி.டி.இ, யூ,ஜி.சி போன்ற உயர்க்கல்வி அமைப்புகளை கலைக்கவும், புதிதாக உயர்க்கல்வி ஆணையத்தையும் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது.. இன்னொரு பக்கம் அறிவியலுக்கு புறம்பான வேதத்தையும், புராண கட்டுக்கதைகளையும் திணித்து வருகிறது.

தாய் தந்தையை தேடி டென்மார்க்கில் இருந்து தஞ்சாவூருக்கு. .. இன்னும் கண்டு பிடிக்கவில்லை.. சாந்தகுமாரின் ஏக்கம்

டேவிட் சாந்தகுமார்டேவிட் சாந்தகுமார்தாயைத் தேடும் டேவிட் சாந்தகுமார்விகடன் : தாயைத் தேடி டென்மார்க் டு தஞ்சாவூர்... சினிமாவை மிஞ்சும் 39 வருட பாசப்போராட்டம்!
சி.ய.ஆனந்தகுமார் என்.ஜி.மணிகண்டன் -  "வறுமையின் காரணமாகப் பெற்றோர், குழந்தையாக இருந்த என்னை தத்து கொடுத்திட்டாங்க. நான் வளர்ந்தது டென்மார்க்கில், நல்லவேலை, கைநிறைய சம்பளம். ஆனால், எனது உண்மையான பெற்றோரை பார்க்க முடியலையே!” - பெற்ற தாயின் முகத்தைப் பார்க்க தஞ்சை வீதிகளில் அலைகிறார் டேவிட் சாந்தகுமார்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை, சின்னக்கடைத் தெருவை சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி மற்றும் தனலட்சுமி தம்பதியர். வறுமை காரணமாக சென்னைக்குக் குடிபெயர்ந்த இவர்கள் கடந்த 1979-ம் ஆண்டு, தங்களின் மகனைத் தத்துக் கொடுத்துவிடுகிறார்கள். சென்னை, பல்லாவரத்தில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் டென்மார்க் நாட்டில் வாழும் தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட சாந்தகுமார், டானிஸ் எனும் தம்பதியால் டேவிட் கில்டென்டல் நெல்சன் என்ற பெயருடன் பாசமாக வளர்க்கப்பட்டார்.

ரயில்வே அமைச்சகம் நீக்கப்படுகிறதா? எச்சரிக்கும் கம்யூனிஸ்ட்!

ரயில்வே அமைச்சகம் நீக்கப்படுகிறதா? எச்சரிக்கும் கம்யூனிஸ்ட்!மின்னம்பலம் :
ரயில்வே துறை மறுசீரமைப்பு தொடர்பான விவேக் தேவ்ராய் குழுவின் பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ரயில்வே நிர்வாகத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு ரயில்வே வாரிய சீரமைப்பு ஆலோசனைக் குழுவின் தலைவர் விவேக் தேவ்ராய் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைத்தது. இக்குழு 300 பக்கங்களைக் கொண்ட பரிந்துரையை மத்திய அரசுக்கு 2015ஆம் ஆண்டு வழங்கியது. அதில், ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தேவையில்லை என்றும், ரயில்வேயை மத்திய போக்குவரத்துத் துறையுடன் இணைத்து விட வேண்டும் என்பது உள்பட பல பரிந்துரைகளை அளித்திருந்தது. அதில் ரயில்வே துறைக்கான தனி பட்ஜெட் நீக்கப்பட்டது.

நாங்குநேரியைத் திருப்பிக் கேட்கும் திமுக? நெருக்கடியில் அழகிரி...

டிஜிட்டல் திண்ணை:  நாங்குநேரியைத் திருப்பிக் கேட்கும் திமுக?  நெருக்கடியில் அழகிரிமின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைன் காட்டியது. லொக்கேஷன் சத்தியமூர்த்தி பவன் காட்டியது.
“நாங்குநேரி. விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தான் போட்டியிடும் விக்கிரவாண்டியில், திமுக தனது வேட்பாளராக புகழேந்தியை அறிவித்து விட்டது . அதிமுக விக்கிரவாண்டிக்கு முத்தமிழ்ச்செல்வன், நாங்குநேரிக்கு ரெட்டியார்பட்டி நாராயணன் என இரு தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்து விட்டது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி மட்டும் நாங்குநேரி தொகுதிக்கான தனது வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை.
ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் அழகிரியிடம் திமுக தலைவர் ஸ்டாலின், தங்களால் நாங்குநேரி தொகுதிக்கு பொருளாதார ரீதியாக உதவ முடியாது என்று சொல்லிவிட்டது குறித்து மின்னம்பலத்தில் தனி செய்தியாகவே வெளியாகியிருக்கிறது. இந்த அதிர்வின் தாக்கத்திலிருந்து காங்கிரஸ் இன்னும் விடுபடவில்லை.

நீட் ... மேலும் 5 மாணவர்கள் ஆள்மாறாட்டம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிர்ச்சி தகவல்

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் முறைகேடு மேலும் 5 மாணவர்கள் ஆள்மாறாட்டம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிர்ச்சி தகவல்தினத்தந்தி : மருத்துவ  நீட் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மேலும் 5 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து இருக்கும் அதிர்ச்சி தகவலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்து உள்ளனர். சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் இவருடைய மகன் உதித்சூர்யா (வயது19). இவர் 2019-2020-ம் ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றதாக, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்தார். ஆனால், மாணவர் உதித்சூர்யா ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் உதித்சூர்யா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்தியத்திற்கு நிரந்தர பிராமணிய சாயம்பூச ராஜீவின் கொலை .. சப் காண்ட்ராக்ட் பெற்ற புலிகள் ....

வளன்பிச்சைவளன்' : ஈழப்போரும் தமிழக ஈழத் தமிழர்களின் பொறுப்பும் கடமையும்
இந்தியத்திற்கு நிரந்தர பிராமணிய  பூசவே ராஜீவ்  படுகொலை;
;சப்காண்ட்ராக்ட் கொடுத்த சுப்ரமணியன்சுவாமி சந்திரசாமி ;பதவிஉயர்வுபெற்றசிபிஐஅதிகாரிகள் கார்த்திகேயன்  ரகோத்தமன்; சந்திரசாமியின் உறவை துண்டிக்காத  மார்கரெட்ஆல்வா
இந்தியத்திற்கு நிரந்தர பிராமண சாயம் பூசவும் மதசார்பற்ற அரசியல்
தத்துவத்தில் இருந்து மாற்று தத்துவத்திற்கு மாற்றவும் முதலாளிகளிடம் தேசத்தை விற்று கைமாறாக அவர்கள் துணையோடு பிராமணியத்தை நிலைநிறுத்தவே ராஜீவ் படுகொலை.
ஒரு சமுதாயத்தின் வரலாற்று வளர்ச்சி போக்கு இன விடுதலை என்பது இனத்தின் பரிமணாவளர்ச்சி அதை தடுத்து மீண்டும் பிராமண பிரமிடில் தமிழனத்தை மண்டியிட வைத்த பிராமணியம்.
பணம் ஆயுதம் என்ற சித்தாந்தம் கொண்ட புலிகள் பிராமணீயத்தை புரிந்து கொள்ள அவர்களிடம் திராவிடர் இயக்க அரசியல் பார்வை இல்லை. அதனால் தாங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக் கொண்டதோடல்லாமல். இந்தியாவின் அரசியல் போக்கை அறியாமையால் மாற்றி மதவாத சக்திகள் தலையெடுக்க துணை போயினர் என்பதே மறுக்க முடியாத வரலாற்று உண்மை.
#இந்தியத்திற்கு நிரந்தர பிராமணிய சாயம்பூச
ராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது’ என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்மது என்கிற பத்திரிக்கையாளர் எழுதி இருக்கிறார்.

வியாழன், 26 செப்டம்பர், 2019

BBC :தலித் சிறுவர்கள் திறந்த வெளியில் மலம் கழித்ததால் அடித்துக் கொலை.. மத்திய பிரதேசம்

Rashmi (left) and Avinash who were killedAdd caption
Two Dalit Children Beaten to Death for Defecating in Open in Shivpuri dist of MP
திறந்த வெளியில் மலம் கழித்துக் கொண்டிருந்த இரு தலித் சிறுவர்களை அடித்துக் கொன்றதாக மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த மாநில காவல்துறை இன்று, வெள்ளிக்கிழமை, தெரிவித்துள்ளது.
தங்கள் வீட்டில் கழிவறை வசதி இல்லை என்று 12 வயதாகும் ரோஷினி மற்றும் 10 வயதாகும் அவினாஷ் ஆகிய இருவரின் குடும்பத்தினர் பிபிசி இந்தி சேவையிடம் தெரிவித்துள்ளனர்.
"தினக்கூலித் தொழிலாளியான என்னால் வீட்டில் கழிவறை கட்ட இயலவில்லை. ஏழைகளுக்கு கழிவறை கட்ட அரசு வழங்கும்
மானியத்தையும் என்னால் பெற இயலவில்லை," என்று அவினாஷின் தந்தை மனோஜ் கூறியுள்ளார்.
"கிராம பஞ்சாயத்துக்கு நான் கழிவறை கட்டுவதற்கான நிதி வந்தது. ஆனால் அவர்கள் யாரும் என்னை கழிவறை கட்ட விடவில்லை," என்று வால்மிகி சமுதாயத்தைச் சேர்ந்த மனோஜ் கூறியுள்ளார்.
மனோஜ் வசிக்கும் பாவ்கேடி கிராமம் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் திறந்த வெளியில் மலம் கழிப்பது இல்லாத கிராமம் என்று அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.

சவூதி இளவரசர் சல்மான் : ஜமாலைக் கொன்றது நாங்கதான்!' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi

bin Salman Khashoggi - bin Salman vikatan.com : `பத்திரிகையாளர் கஷோகி கொலையில் எனது பங்கு என்ன?' - முதல்முறையாக மௌனம் கலைத்த சவுதி இளவரசர் சல்மான் `பத்திரிகையாளர் கஷோகி கொலை, தான் பொறுப்பில் இருக்கும்போது நடந்தது; அதற்கு தாமே முழு பொறுப்பு' சவுதி இளவரசர் சல்மான் கூறியதாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.
சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்கு, கடந்த வருடம் அக்டோபர் மாதம் 2-ம் தேதி சென்றார். பிறகு, அவர் திரும்பி வரவேயில்லை. இதையடுத்து, ஜமால் கொலை செய்யப்பட்டுவிட்டதாக துருக்கி அறிவித்தது. இதை அமெரிக்காவும் உறுதிசெய்தது. அதிலிருந்து, துருக்கிக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவியது.
தங்கள் நாட்டில் நடைபெற்ற கொலையைக் கண்டுபிடித்து, சவுதியின் சதியை வெளியில் கொண்டுவருவோம் என துருக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜமால் கொலையில் உள்ள பல மர்மமான விஷயங்களை துருக்கி அரசும், அந்நாட்டு ஊடகங்களும் கண்டுபிடித்து, தொடர்ந்து வெளியிடத் தொடங்கினர். ஜமால் கொலை செய்யப்பட்டு, அவரின் விரல் சவுதி மன்னருக்குப் பரிசாக அளிக்கப்பட்டது என்றும், ஜமாலின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்டது.

தூக்கு தண்டனை ! நகைக்காக.. பெண்ணை கொன்று.. துண்டு துண்டாக்கி.. 3 சூட்கேஸில் ... கோவை

3 சூட்கேஸ்கள் /tamil.oneindia.com - hemavandhana : கோவை: நகைக்காக..துண்டு துண்டாக பெண்ணை வெட்டி கொன்று, 3 சூட்கேஸ்களில் அடைத்து வைத்த கொடூர வழக்கில் நீதிமன்றம் இன்று குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை விதித்துள்ளது.
2013.. பிப்ரவரி மாதம் நடந்த சம்பவம் இது: அவிநாசி ரோடு, "ரஹேஜா' தனியார் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் நடராஜ். இவரது மனைவி சரோஜினி. வயது 54!
இவர் வீட்டுக்கு எதிரே யாசர் அராபத் என்ற 23 வயது இளைஞர் குடியிருந்தார். 16ம் தேதி திடீரென சரோஜினியை காணவில்லை. இதனால் ரேஸ்கோர்ஸ் போலீசில்குடும்பத்தினர் புகார் செய்தனர். அந்த சமயத்தில், யாசர் அராபத் தங்கியிருந்த வீட்டிலிருந்து மிக மோசமான துர்நாற்றம் வீசியதாக அங்கு வசித்து வந்தோர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

BBC : இலங்கை ஐ தே க கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ அறிவிப்பு

இலங்கை ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கை ஜனாதிபதி
வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீகொத்தவில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது, இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால், அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட சஜித் பிரேமதாஸவிற்கு, கட்சியின் செயற்குழு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறங்கிய பின்னர், இந்த கட்சி சார்பில் முதல் முறையாக ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவே களமிறங்குகின்றார்.

கல்லூரி மாணவி உள்பட 7 பெண்களை மிரட்டி வன்புணர்வு ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் கைது

கல்லூரி மாணவி உள்பட 7 பெண்களை மிரட்டி கற்பழித்த ஆட்டோ டிரைவர் கைதுநக்கீரன் :சேலம் அருகே கல்லூரி மாணவி உள்பட 7 பெண்களை மிரட்டி கற்பழித்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சேலம்: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பின்புறம் வசித்து வருபவர் மோகன்ராஜ். ஆட்டோ டிரைவர். இவர் அந்த பகுதியில் ஒரு கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராகவும் இருந்து வருகிறார்.
மோகன்ராஜ் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். அந்த பெண் இவரது பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல் பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் அந்த பெண்ணும் இவரது வக்கிர காமத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சில மாதங்களிலேயே பிரிந்து விட்டார்.
இந்த நிலையில் காகாபாளையம் பஸ் ஸ்டாப் அருகே மோகன்ராஜ் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் மீது ஆட்டோவில் சென்ற ஒரு பெண் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதனை வீடியோ எடுத்து தொடர்ந்து தன்னை படுக்கைக்கு அழைத்து வற்புறுத்துவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்தார். அரசியல் பின்புலத்துடன் சுற்றி வந்த மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பொறியியலில் இந்துத்வாவை திணிக்க்கும் மத்திய மாநில அரசுகள் .. ஹிந்தியை திணிப்பதை விட இது இலகுவாம் ..

sdhபகவத் கீதை சர்ச்சை ஒருபுறம்... பொறியியலில் என்னென்ன புதிய பாடப்பிரிவுகள் உள்ளது தெரியுமா..? 
ghநக்கீரன் : சில வாரங்களுக்கு முன் ஹிந்தி தின விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டின் தேசிய மொழியாக ஒருமொழி இருந்தால் நாடு வளரச்சி அடையும், கலாச்சாரம் வளரும் என்று தெரிவித்திருந்தார். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு எழவே, நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை என்று அமித்ஷா பல்டியடித்தார்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு தினங்கள் முன்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்த புதிய பாடப்பிரிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்படி, புதிதாக தத்துவவியல் படிப்பு அறிமுகப்படுத்தபடுவதாக பல்கலை நிர்வாகம் அறிவித்தது. அதில் பகவத் கீதை பாடத்திட்டமும் இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பான அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " பொறியியல் மாணவர்களின் மூன்றாவது செமஸ்டரில் தத்துவவியல் பாடம் இடம்பெறும். சென்னையில் உள்ள எம்.ஐ.டி, சிஇஜி, ஏசிடி, எஸ்.ஏ.பி வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு முதல் தத்துவவியல் படிப்பு அறிமுகமாக உள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும அறிவுறுத்தலின்படி இந்த பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது " என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நாங்குநேரியில் காங்கிரஸ் தமிழ்செல்வன் சுயேட்சையாக போட்டியிட போவதாக அறிவிப்பு!

nakkheeran.in - manikandan இடைத்தேர்தல் நடக்கயிருக்கும் நாங்குநேரி தேர்தல் களம் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து வருகிறது. அதிகாரிகளும், காவல்துறையும் இதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் முக்கிய கட்சியான அதிமுகவும் வேட்பாளரை அறிவித்துவிட்டது. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி பிரமுகர்களை சந்தித்து வருவதோடு, அதிமுக தலைமையும் முனுசாமி தலைமையில் தேர்தல் பணிக்குழுவையும் அறிவித்து விட்டது. அடுத்து பிரதான கட்சியான காங்கிரஸ் இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை.
ஆனால் அதன் கூட்டணி கட்சியான திமுக நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்காக ஐ.பெரியசாமி தலைமையில் கனிமொழி உட்பட தேர்தல் பணிக்குழுவை அறிவித்து விட்டது. இந்தநிலையில் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நான்கு நாட்களில் சுயேட்சை வேட்பாளர்கள் தச்சநல்லூரை சேர்ந்த ராகவன் மற்றும் எல்லா தேர்தல்களிலும் போட்டியிடும் தேர்தல் மன்னன் பத்மராஜன் ஆகிய இருவர் மட்டும் தான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மகனை டாக்டராக்க வேண்டும் என்ற ஆசையில் செய்துவிட்டேன்!' - உதித் சூர்யா தந்தை வாக்குமூலம்

Investigation
vikatan.com : நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக விசாரணை வளையத்திற்குள் இருக்கும் சென்னையைச் சேர்ந்த மாணவன் உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோர்கள் சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்த உதித் சூர்யாவைக் கைது செய்யத் தேனி தனிப்படை கடந்த வாரம் சென்னை விரைந்தது. குடும்பத்தோடு உதித்சூர்யா தலைமறைவானார். இந்நிலையில், தனிப்படையின் தீவிர தேடுதல் வேட்டையில், நேற்று திருப்பதி மலை அடிவாரத்தில் உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள், நள்ளிரவு 2மணிக்குத் தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி விஜயகுமார் தலைமையில், டி.எஸ்.பி ஹாட்வின் ஜெகதீஸ்குமார், தேனி சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் சித்ரா தேவி ஆகியோரது குழுவினர் தொடர் விசாரணை செய்தனர். விசாரணை செய்த போது, தவறு செய்ததை உதித்சூர்யாவும், அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனும் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

அமைச்சர்களுக்கு தந்த கோடிகள்: திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஓப்பன் வாக்குமூலம்!

அமைச்சர்களுக்கு தந்த கோடிகள்: திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஓப்பன் வாக்குமூலம்!மின்னம்பலம் : சென்னையில் நேற்றைய தினம்(25.09.19) தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் சைதாப்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணி அறிவித்த தகவல்கள் தமிழ் சினிமாவிலும் உளவுத்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த வருடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு தமிழக அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியது. அதன் பின்னர் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். முத்தரப்பு பேச்சுவார்த்தையில் திரையரங்கு உரிமையாளர்கள் சார்பாக சில கோரிக்கைகள் தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
அதில்,
;உடனடியாக திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்திக் கொள்வது,
;சமமற்ற, சீரற்ற டிக்கெட் கட்டணத்தை ஒழுங்குபடுத்தி உயர்த்தி அரசு ஆணை பிறப்பிப்பது,
;திரையரங்கு உரிமத்தை வருடந்தோறும் புதுப்பிக்கும் நடைமுறையை, மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மாற்றுவது
;தற்போதுள்ள பெரிய திரையரங்குகளை அதன் கட்டமைப்புக்குள் இரண்டு அல்லது மூன்று திரையரங்குகளாக கட்டிக்கொள்வதற்கு அனுமதிப்பது
ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இவற்றை வெற்றிகரமாக நடத்திக்கொடுக்க திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு கொடுப்பதற்கு என்று தியேட்டர் உரிமையாளர்களிடம் நிதி வசூலிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

திணித்ததை எல்லாம் திங்க இது வடநாடு இல்லை. தமிழ்நாடு!

டான் அசோக்:   அந்தக் காலத்து பார்ப்பனர்களைப் போல இந்தக் காலத்து
பார்ப்பனர்கள் புத்திசாலிகள் இல்லை. அந்தக் காலத்தில் சமஸ்கிருதம் புனிதமானது எனச் சொன்னார்கள். ஆனால் யாரையும் படிக்கவிடவில்லை. அதேபோல் பகவத் கீதையில் அது இருக்கிறது, இது இருக்கிறது, பகவத் கீதைதான் உலகின் மிகப்பெரிய தத்துவம் என்றெல்லாம் அளந்தார்கள். ஆனால் அதையும் யாரையும் படிக்கவிடவில்லை. ஏன்?
சமஸ்கிருதத்தை எல்லோரும் படித்தால் அதில் புனிதத்தன்மை எல்லாம் ஒன்றுமில்லை என்பது தெரிந்துவிடும். அதைப்படித்தாலும்கூட வாய் மணத்துக்கிடக்காது, காலையில் பல் துலக்கித்தான் ஆகவேண்டும் என்பது புரிந்துவிடும்.
கீதையை எல்லோரும் படித்தால் அதில் மனித இனத்தின் ஒற்றுமைக்கு, சகோதரத்துவத்துக்கு, சமூகநீதிக்கு, மனிதாபிமானத்துக்குத் தேவையான தத்துவமெல்லாம் எதுவுமே இல்லை என்பதும் அது வெறும் வர்ண பேத, சாதி பேத ஆண்-பெண் பேத, பாவ-புண்ணிய கர்மக் கதைகளைத் தலையில் கட்டும் நூல் என்பது புரிந்துவிடும். அதனால்தான் மறைத்துவைத்து ஒளித்துவைத்து பில்டப்பை மற்றும் சத்தமாகக் கொடுத்துவந்தார்கள். நம் முன்னோர்கள் "அப்படிங்களா சாமி. ஆகட்டும் சாமி," போட்டு வாழ்ந்தார்கள்.
திராவிட இயக்கத்தினர்தான் அதையெல்லாம் எடுத்துப் படித்து பொதுமக்களிடம் அதன் உண்மைத்தன்மையை கொண்டுபோனார்கள். கம்பரசம், ஆரியமாயை, கீதையின் மறுபக்கம், கடவுளர் கதைகள் என திராவிட இயக்கத்தின் நூல்கள்தான் இந்தக் கதைகளை எல்லாம் புட்டுப்புட்டு வைத்தது. அதைப் படித்தவர்கள், புரிந்தவர்கள் "இதுக்காடா இவ்ளோ பில்டப் கொடுத்தீங்க... அட அயோக்கிய ராஸ்கல்களா.." எனத் தெளிந்தார்கள், நிமிர்ந்தார்கள்.

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்; ரிக்டரில் 6.5 ... earthquake of magnitude 6.5 hit Indonesia’s ...

 தினத்தந்தி :   இந்தோனேசியாவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்தோனேசியாவில் இன்று காலை 5.16 மணியளவில் செராம் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.5 ஆக பதிவு ஆகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் அலறியடித்தபடி தெருக்களில் ஓடி வந்தனர். எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் உடனடியாக விடப்படவில்லை. இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் பிற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
 .reuters.com : JAKARTA (Reuters) - An earthquake of magnitude 6.5 hit the island of Seram in Indonesia’s eastern province of Maluku on Thursday, damaging to some buildings, but there was no risk of a tsunami, the geophysics agency said.

தென்னக பண்பாட்டு மையம் தஞ்சாவூர் .. ஆர் எஸ் எஸ் பிரசாரத்தை முழு மூச்சுடன் முன்னெடுக்கும் மத்திய அரசு நிறுவனம்


South Zone Cultural Centre, Tanjavur  என்ற பெயரில் ஒரு மத்திய அரசு நிறுவனம்
கடந்த சில வருடங்களாக இயங்கி கொண்டுவருகிறது . மறைந்த காஞ்சி ஜெயேந்திரன் ஆலோசனைப்படி அவரது சிபார்சுக்கு அமைய முழுக்க முழுக்க பார்பனர்களை கொண்டு இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
மத்தியஅரசின் பணம் தாரளமாக அள்ளி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு ஒரு  பார்ப்பனர் தலைவராக இருக்கிறார். பெரும்பாலும் பார்ப்பனர்களும் இந்த்துவா கொள்கையை கொண்டவர்களுமே இதில் பணிபுரிகிறார்கள் .
தென்னகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் இன் கொள்கைகளை முழு மூச்சுடன் இந்த அமைப்பு முன்னெடுத்து செல்கிறது .
கல்லூரிகளில் யோகா பகவத் கீதை பிரசாரம் கோயில்களையும் பள்ளிகளையும் இணைத்து தமிழகத்தை ஆர் எஸ் எஸ் காலனியாக மாற்றும் முயற்சியை மிக கடுமையாக இது மேற்கொள்கிறது.
சகல துறைகளிலும் பொறுப்பில் இருக்கும் பார்ப்பனர்களை ஒருங்கிணைத்து பார்ப்பன மேலாண்மையை இது கட்டமைத்து வருகிறது .
இவர்களின் கடைக்கண் கிடைத்தால் பதவி உயர்வு . ஸ்காலர்ஷிப் வாய்ப்பு வெளிநாட்டு பிரயாண வாய்ப்புக்கள் போன்றவை தாரளமாக கிடைக்கும். அந்த அளவுக்கு மத்திய அரசின் பணம் இங்கு விளையாடுகிறது.
மிகவும் ஆபத்தான ஆழத்தில் இது வேலை செய்கிறது.
இந்த நிறுவனம் தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் இன்  மினி அரசாங்கம் மாதிரி செயல்படுகிறது .
ஜெயலலிதா அரசு 25 ஏக்கர் நிலத்தையும் பணத்தையும் கொடுத்து ஒரு பெரிய செயலக கட்டிடத்தையும் கட்டி கொடுத்திருக்கிறது .>அந்த கட்டிடத்தை அண்மையில் காஞ்சி விஜயேந்திரன் திறந்து வைத்தார் . அந்த காணொளிதான் இங்கே பதிவிட்டு இருக்கிறோம் .
தஞ்சாவூரில் இருக்கிறது ஆனால்  இங்கு தமிழே கிடையாது ..
இவர்களின் கண்காணிப்பில்தான் பகவத் கீதையை தமிழக கல்விக்குள் திணிக்கும் முயற்சி நடைபெறுகிறது.

எண்ணெய் ஆலைத் தாக்குதலில் 25 ட்ரோன்கள், `யா அலி’ கப்பல் ஏவுகணை .. சவூதி அறிவிப்பு

Saudi press conferenceSaudi press conference விகடன் - சத்யா கோபாலன்:   சவுதி எண்ணெய் ஆலைத் தாக்குதலுக்குப் பின்னால் யார் யார் உள்ளனர் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது சவுதி அரேபியா. சவுதி அரேபியா தலைநகர் ரியாத்திலிருந்து 330 கி.மீ. தொலைவில் உள்ளது அப்கைக் என்னும் இடம். இங்குள்ள அரம்கோ நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயல் மீது கடந்த செப்டம்பர் 14-ம் தேதி ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடந்தது. அப்கைக் சுத்திகரிப்பு ஆலையில் நாளொன்றுக்கு 70 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்தத் தாக்குதல் காரணமாக நாளொன்றுக்கு 57 லட்சம் பேரல் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக, சவுதி எரிசக்தித்துறை தெரிவித்தது.

பொறியியல் படிப்பில் பகவத் கீதை!

பொறியியல் படிப்பில் பகவத் கீதை!மின்னம்பலம் : அண்ணா பல்கலைக் கழக பொறியியல் படிப்பில் பகவத் கீதை பாடம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் 2019ஆம் ஆண்டுக்காக பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தனது புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, தத்துவவியல் படிப்பும், அதில் பகவத் கீதை பாடத்திட்டமும் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், “பொறியியல் மாணவர்களின் மூன்றாவது செமஸ்டரில் தத்துவவியல் பாடம் இடம்பெறும். சென்னையில் உள்ள MIT, CEG,ACT,SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு முதல் தத்துவவியல் படிப்பு அறிமுகமாக உள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும (AICTE) அறிவுறுத்தலின்படி இந்த பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தத்துவவியல் பாடத்தில் நான்காவது யூனிட்டில் பகவத் கீதையில் அர்ஜுனருக்கு, கிருஷ்ணர் வழங்கிய போதனை உள்ளிட்டவை பாடமாக இடம்பெற்றுள்ளது. ஆனால், இதற்கு அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கைவிரித்த திமுக: பசையான வேட்பாளர் தேடும் காங்கிரஸ்

கைவிரித்த திமுக:  பசையான வேட்பாளர் தேடும் காங்கிரஸ்மின்னம்பலம் : வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடக்க இருக்கும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுகவும், அதிமுகவும் அறிவித்துவிட்ட நிலையில்- திமுக கூட்டணியில் நாங்குநேரியில் போட்டியிடும் காங்கிரஸ் தனது வேட்பாளரை இன்னமும் அறிவிக்கவில்லை.
23,24 ஆம் தேதிகளில் சத்தியமூர்த்தி பவனில் விருப்பமனுக்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் சார்பில் யார் வேட்பாளர் என்று விசாரித்தோம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 21 ஆம் தேதி அறிவாலயத்தில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போது அழகிரியோடு தனியாக கொஞ்ச நேரம் ஆலோசித்தார். ‘இந்த இடைத் தேர்தலில் நாங்குநேரியில் போட்டியிட வேண்டும் என்று மாவட்ட திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.