ஞாயிறு, 18 ஜனவரி, 2026

தமிழகத்தின் ஆங்கில மேலாண்மைக்கு சங்கிகள் குறி

 ராதா மனோகர் : திமுக ஹிந்திக்கு எதிராக போராடி விட்டு இன்று ஆங்கிலத்திற்கு அடிமையாகி விட்டது என்று திடீர் தமிழ் பற்றாளர்கள் பலர் கண்ணீர் வடிக்கிறார்கள்!
இவர்களின் எஜமானர்கள் தமிழர்களின் வெற்றிகளை பார்த்து புழுங்குபவர்கள்.
இவர்கள் ஏவல் பேய்கள் மட்டுமே.
இந்த விடயம் பற்றிய எனது பழைய பதிவு ஒன்றுள்ளது. 
இந்த திடீர் தமிழ் பற்றாளர்கள் அறிவு கண்ணை அக்கட்டுரை திறக்கும் என்று நம்புகிறேன்.
மீள் பதிவு : தமிழர்களின் ஆங்கில மொழி மேலாண்மைக்கு குறி 
பெரியார் இருந்த காலத்தில் ஆங்கிலம் ஒரு மேட்டுக்குடி சொத்தாகவே இருந்தது .அதிலும் பார்ப்பன வீடுகளில் மிகவும் சாதாரணமாக புழக்கத்தில் இருந்தது . அறிவியல் நூல்கள் பெரிதும் ஆங்கிலத்தில்தான் இருந்தது
தமிழ் மட்டுமே வாசிக்க எழுத தெரிந்தவர்கள் இன்றைய வாட்சப் மேதாவிகள் ரகத்தில்தான் இருந்தனர்.
விஞ்ஞானம் மருத்துவம் போன்ற துறைகள் எல்லாம் தமிழ் மட்டுமே தெரிந்த சமூகத்தால் எட்டிவிட முடியாத உயரத்தில் இருந்தது.
இன்றும் உலகம் முழுவதும் பார்ப்பனர்கள் பரவி இருப்பதற்கு அவர்களின் ஒரு நூற்றாண்டு ஆங்கில கல்வியே பெரிய காரணமாக இருந்தது.

காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொடரும்! மாணிக்கம் தாகூர் பிரவீன் காந்தி மீது நடவடிக்கை?

புதிய செய்தி காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொடரும்! திமுகவுக்கு எதிராக பேசியவரும் மாணிக்கம் தாகூர் பிரவீன் காந்தி மீது நடவடிக்கை?
May be an image of text that says "PPT Express 37m BREAKING X திமுக உடனான கூட்டணிக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைமை ஆதரவு டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்ற ஒரு வேளையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது மேலும் ஆட்சியில் பங்கு கேட்பதில்லை எனவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பேசி வரும் எம்.பி. மாணிக் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில காங்கிரஸ் தலைமை பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்"

 மின்னம்பலம் -Mathi  :  ‘கூட்டணி ஆட்சி’: டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது காங்கிரஸ். அதே நேரத்தில், கூட்டணி ஆட்சி; அதிக தொகுதிகள் என்கிற நிபந்தனைகளையும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக முன்வைக்கிறது. இதனை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார்.