சனி, 27 டிசம்பர், 2025

அமெரிக்க வலதுசாரி பாலக்காட்டு விவேக் ராமசாமி யார்

 Mo Jo  :  Loose lips sink ships...  நமக்கெல்லாம் "விவேக் ராமசாமி" பற்றி தெரிந்திருக்கும்.
அமெரிக்காவில் நெடுங்காலம் வாழும் பாலக்காடு தமிழ் குடும்பத்தில் பிறந்த அமெரிக்க சங்கி. அமெரிக்க அரசியலில் காலூன்ற முயற்சி செய்து கொண்டிருக்கும் வலதுசாரிய கொள்கைகளை போற்றும் ஒருவர். பெரிய ஆச்சரியம் இல்லை.
நான் பார்க்கும் வரையில்,  அரசியலில் ஈடுபாடு கொள்ளும் அமெரிக்காவில் பிறந்த / அல்லது சிறு வயது முதல் அமெரிக்காவில் வாழும் முதல் தலைமுறை இந்திய-அமெரிக்கர்கள் தேர்ந்தெடுப்பது வலது சாரிய கட்சியாகவே இருக்கிறது. Bobby Jindal, Nikky Haley போன்ற முன்னுதாரணங்கள் உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் வலதுசாரிகளை ஆதரிப்பவர்களுக்கு பிறந்தவர்கள் என்பது காரணமாக இருக்கலாம்.

முன்னாள் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா கைதும் அதன் பின்னணியும்

 Suhan Kanagasabai  :  சென்னை சூளைமேடு கொலைவழக்கில் தான் செய்யாத கொலையை தார்மீகப் பொறுப்பேற்று இன்றும் அவ் வழக்கில் விசாரணைக்குச் சென்றுகொண்டிருக்கும் தோழர் டக்ளஸ் அவர்களின் பண்புகளில்  ஒன்று தன்னைச் சேர்ந்தவர்களைக் காட்டிக்கொடுக்காது கடைசிவரை காப்பாற்றுவது . 
25 வருடத்திற்கு முற்பட்ட ஒரு கைத்துப்பாக்கி , 2001 இல் .
ஒருசிலர் ஈ பி டி பி இலிருந்து பணம் ,துப்பாக்கி இவற்றோடு தலைமறைவாகியிருக்கிறார்கள்.
புலிகளால் வேட்டையாடப்பட்ட மிகக் கொடுமையான காலக்கட்டம் இறுதி 10 ஆண்டுகள்.
இயக்கங்களிலிருந்து துப்பாக்கிகளுடன் தப்பியோடியோர் அந்தத் துப்பாக்கிகளை விற்றே ஏதும் செய்யலாம் என்ற நிலை செய்திகளில் கூட இருந்தது. 
இராணுவத்திலிருந்து ஆயுதத்துடன் தப்பியோடியோர் துப்பாக்கிகளை விற்று பிடிபட்டு மன்னிப்பளிக்கப்பட்ட செய்திகள் ஏராளம் உண்டு.
இந்த மதுகந்த விவகாரமும் இப்படித் தப்பியோடிய ஒருவரால் ஏற்பட்ட சிக்கலாகவே இருக்க வாய்ப்பு.

காங்கிரஸ் திமுக கூட்டணி தள்ளாடுதே .. ஸ்டாலின் திருப்பி அடிப்பாரா?

 மின்னம்பலம் :  ஸ்டாலினிடம் ப.சி. ‘பாஸ்’ செய்த ’அந்த’ மெசேஜ் என்ன? சீண்டும் ராகுல் ‘கோஷ்டி’
திமுக கூட்டணியில டிசைன் டிசைனா குடைச்சல் கொடுக்கிற காங்கிரஸ் பத்திதான் சொல்றேன்யா..
ஐவர் குழுன்னு ஒன்னை அமைச்சு சிஎம் ஸ்டாலினுடன் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமா பேச்சுவார்த்தை நடத்துச்சு.. கூட்டணியே கன்பார்ம் ஆகிடுச்சுன்னுதான் அறிவாலய வாசல்ல நின்னுகிட்டு செல்வபெருந்தகை பேட்டியும் கொடுத்தாரு..
அதுல என்னய்யா இப்ப சந்தேகம்?
திமுகதான் கூட்டணி கன்ஃபார்ம்னு நினைக்குது.. ஆனா, காங்கிரஸோ விஜய் கட்சிகிட்ட ரொம்பவே மும்முரமா பேசிகிட்டே இருக்கு..
இதுல சிஎம் ஸ்டாலின் கிட்ட ஒன் டூ ஒன் பேசுன மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கொடுத்த பேட்டி திமுகவை ரொம்பவே அப்செட் ஆகிடுச்சு.. அந்த பேட்டியில, ‘கூட்டணியை பத்தியே ஸ்டாலின் இன்னும் எதுவும் சொல்லலை. டிசம்பர் 15-க்குள் சொல்லுங்கன்னு சொன்னோம்.. இன்னும் பதிலே வரலை.. எங்களுக்கு ஆட்சியிலயும் பங்கு வேணும்”எனு பல்டி அடிச்சு பேசியிருந்ததுதான் சிஎம் ஸ்டாலின் உட்பட திமுக சீனியர்களை ரொம்ப கோபப்படுத்தியிருச்சு..

95 இலட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு ஒருவாரம் - திமுகவின் எதிர்வினை?

 Sundara Cholan :  95 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு ஒரு வார காலம் ஆகி விட்டது.
அதற்கு எதிராக திமுக எவ்வித எதிர்வினையும் செய்ததாகத் தெரியவில்லை.
ஒரு ஆர்ப்பாட்டமோ போராட்டமோ கிடையாது.
அநியாயமாகப் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற அவர்களை நேரில் சந்தித்து, விண்ணப்பிக்க உதவி செய்வது போன்றவற்றை இந்நேரம் திமுக முன்னெடுத்து இருக்க வேண்டாமா? அப்படி எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.
அவசரமாக அள்ளித் தெளித்த கோலம் என்கிற கதையாக தயாரித்த வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு தேர்தல் நடத்தக் கூடாது என்று உச்சநீதி மன்றத்தை அணுகலாம். பயனிருக்குமா என்பது வேறு விஷயம்.
என்ன தான் திட்டம் வைத்திருக்கிறது திமுக? பாஜக திட்டம் பலிக்காது என்று வசனம் மட்டும் போதாது.

வெள்ளி, 26 டிசம்பர், 2025

மலையக மக்களுக்கு வடக்கு கிழக்கு மேற்கில் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுமா?

இலங்கை வித்வா பெருமழை வெள்ளத்தினால் பாதிக்க பட்ட மலையக மக்கள் இனியும் அங்கு வாழ முடியுமா?
கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது . பல கிராமங்கள் அடியோடு அழிந்து போய்விட்டது. பலர் மண்ணோடு மண்ணாக புதைந்து போய்விட்டனர்.
இவர்களில் பலர் நாட்டின் பெரும் சம தரைப்பகுதியான வடக்கு கிழக்கு மேற்கு பகுதிகளில் குடியேற கூடிய வாய்பினையே எதிர்பார்த்து உள்ளனர்.
மலையக மக்களின் வாக்கு வங்கியை நம்பி இருக்கும் மலையக அரசியல்வாதிகள் இந்த கருத்தை அவ்வளவாக ரசிக்கவில்லை.
இந்த மக்கள் வேறு இடங்களுக்கு போய்விட்டால்  இவர்களை வைத்து அரசியல் செய்யவோருக்கு வில்லங்கம்தான்.
இது பற்றி ஒரு காணொளி பேட்டியை தேசம் நெட் காணொளி வெளியிட்டது!
இதில் பிரபல மலையக கவிஞர் எஸ்தர் நாதனியால் கலந்து கொண்டார்.

சட்டமன்ற தேர்தலில் கனிமொழி போட்டி? எந்த தொகுதி? பரபரக்கும் திமுக!

 minnambalam  :திமுகவின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி, இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாம்னு ஒரு தகவல் அடிபடுதுய்யா.. இதை பத்தி திமுக வட்டாரங்களில் கேட்டப்ப, “2007-ல் கனிமொழி முதல் முறையா ராஜ்யசபா எம்.பி.யானாங்க.. 
அப்ப காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான்.. அவங்க மத்திய அமைச்சராகல.. 2-வது முறையா 2013-ல் ராஜ்யசபா எம்.பியானாங்க.. ஆனால் 2014-ல் இருந்து மத்தியில பாஜக கூட்டணி ஆட்சிதான்..

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ிட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றிடம் குறித்த ஆயுதம் கையளிக்கப்பட்டதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டி மாவட்டத்தில் 5 கிராமங்கள் ஆள் நடமாட்டத்திற்கு தகுதி இல்லாதவைகளாக பிரகடனம்-

jafnamuslim : டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர பகுதியை ஒட்டியுள்ள ஐந்து கிராமங்கள் ஆள் நடமாட்டத்திற்கு தகுதி இல்லாத பகுதிகளாக அரசாங்கம் அறிவித்துள்ளது 

இந்தப் பகுதியில் பெரும் நிலப்பகுதிகள் சுமார் 40 அடி ஆழத்திற்கு இடிந்து விழுந்ததால், இந்த கிராமங்கள் மனித வாழ்விற்குப் பாதுகாப்பற்றதாக மாறியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் உதவி இயக்குநர் எல்.ஏ.கே.ரணவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

வியாழன், 25 டிசம்பர், 2025

கோவை நட்சத்திர ஹோட்டலில் மோதல் – பாஜக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் கைது

மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : கோவை பீளமேடு பகுதியில் ஹோட்டல் முன்பு , பார்ட்டி ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை முன்விரோதம் காரணமாக தாக்கிய ஈரோடு பா.ஜ.க பிரமுகர் உட்பட 9 பேரை இன்று (டிசம்பர் 25) பீளமேடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரு கார்கள் மற்றும் இரு அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையில் உள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் ரெஸ்ட்ரோபார்களில் மதுபானத்துடன் நடன நிகழ்ச்சிகளுக்குஏற்பாடு செய்யும் நிறுவனம் பிரபல பிக்டாடி . இந்த நிறுவனம் கோவை அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் கடந்த 20 ம் தேதி நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாம் யார்? கடவுள் உண்டா? எம்மை சுற்றி நடப்பது என்ன?

 வாழ்வியல் சிந்தனைகள் – 64 – ராதா  மனோகர்   
நாம் யார்? கடவுள் உண்டா? எம்மை சுற்றி நடப்பது என்ன? 
இதில் எந்த கேள்வி உதித்தாலும் உடனடியாக ஒரு ஆயத்த ஆடைகள் போன்ற  பதில்களை தர சகல சமயங்களும் வழிகாட்டிகளும் குருமார்களும் காத்திருக்கிறார்கள்!
எமது  கேள்விகளுக்கு பதில் சொல்வது மிகவும் தித்திப்பான ஒரு காரியமாக அவர்கள் எதிர்கொள்கின்றனர். எமது கேள்விகளில் அவர்கள் உயிர் வாழ்கின்றனர். 
அவர்களை பின்பற்றுபவர்களுக்கு சொர்க்கம் காத்திருப்பதாக நம்பிக்கை அளிக்கின்றனர் 
நாம் அவர்களின் பதில்களில் இருந்து தற்காலிகமான போதை உணர்வுகளை பெறுகிறோம்.
ஆனால் அறிவை பெறுகிறோமா என்றால் அனேகமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். 

அவர்களிடமே இல்லாத அறிவை அவர்கள் எப்படி எமக்கு தரமுடியும்? 
நம்மை தங்கள் கோட்பாடுகளில் நம்பிக்கை கொள்ளப்பண்ணியே எம்மை ஆட்டு மந்தைகளாக்கி விட்டார்கள். 
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அப்படியே  நம்பி பின்னால் சென்றததனால் எதையுமே சுயமாக சிந்திக்க முடியாதவர்களாகி விட்டோம். 

புதன், 24 டிசம்பர், 2025

1000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 மின்னம்பலம் -Kavi : முதல்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒப்பந்த செவிலியர் சங்கங்களுடன் 19.12.2025 மற்றும் 22.12.2025 ஆகிய நாட்களில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.
இன்றும் (டிசம்பர் 24) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அடுத்தவர் குடும்பங்களை சீரழித்த ஆறு நடிகைகள்

May be an image of one or more people, people smiling and text

 நண்பன்  :  மற்றவர்களின் குடும்பங்களை சீரழித்த 6 நடிகைகள் பற்றித்தான் இங்கே பேசப்படுகிறது…
முன்பும் இருந்தது, இப்போதும் இருக்கிறது – குடும்பங்களை சீரழித்த நடிகைகள்.
முதல் நடிகை நம்முடைய K.R. விஜயா.
தமிழில் அவரை “சிரிப்பழகி” என்று அழைப்பார்கள்.
அவர் திருமணம் செய்துகொண்டது திரைப்பட தயாரிப்பாளரும் வட்டிக்கடன்காரருமான வேலாயுத நாயர் என்பவரை.
K.R. விஜயாவை திருமணம் செய்வதற்கு முன்பே அவருக்கு இன்னொரு குடும்பம் இருந்தது.
எப்படியிருந்தாலும், விஜயா பிடித்தது புளியங்கொம்பில் தான்.
வேலாயுதம் நாயர் விஜயாவுக்கு தங்கம், சொத்து, விமானம் வரை பரிசாக கொடுத்தார்.
இவ்வாறு வேலாயுதம் நாயரின் குடும்பம் விஜயாவால் சீரழிக்கப்பட்டது.

என்.டி.ஏ-வில் ஓபிஎஸ், டிடிவி - க்ரீன் சிக்னல் கொடுத்த ஈபிஎஸ்? உருவாகும் மெகா கூட்டணி... OPS TTV in NDA EPS

minnambalam.com - Kavi  : 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.
குறிப்பாக அதிமுகவை பொறுத்தவரை தற்போது பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. அதேசமயம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் மீண்டும் ஒன்றிணைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது என தமிழக அரசியலில் பல மாதங்களாக பேசப்பட்டு வருகிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் கவர்ச்சித் திட்டங்கள் இருக்காது” - கனி​மொழி எம்​.பி hint

 hindutamil.in - இரா.கார்த்திகேயன் :  முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பங்​கேற்​கும் ‘வெல்​லும் தமிழ் பெண்​கள்’ எனும் தலைப்​பிலான மேற்கு மண்டல திமுக மகளிரணி மாநாடு பல்​லடம் அருகே வரும் 29-ம் தேதி நடை​பெறுகிறது. இதை​யொட்​டி, காரணம்​பேட்​டை​யில் நேற்று நடந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தில் பங்​கேற்ற திமுக துணைப் பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி பேசி​ய​தாவது:
தமிழ் பெண்​கள் இல்​லாமல் யாரும் வெல்ல முடி​யாது. இந்த மாநாடு மிகப்​பெரிய வெற்​றியை உறுதி செய்​யும் மாநா​டாக அமை​யும். திமுக-வுக்கு ‘மேற்​கு’ சரி​யில்லை என்ற நிலை ஏற்​பட்​டுள்​ளது. ஆனால், மேற்கு என்​பது திமுக-​வின் கோட்​டை​யாகும். அதை மீட்​டெடுக்​கும் வகை​யில் இந்த மாநாடு அமை​யும். இந்த மாநாட்​டுக்​குப் பிறகு மகளிருக்கு சரிசம​மாக இடம் கிடைக்​கும்.

செவ்வாய், 23 டிசம்பர், 2025

காங்கிரஸிடம் நேரடியாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்! காங்கிரஸ் தவேக ரகசிய பேச்சு வார்த்தை!

 tamil.oneindia.com -Rajkumar R  : சென்னை: பிரதமர் மோடிக்கு எதிரான தேசிய அளவிலான எதிர்க்கட்சி கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 
இதன் ஒரு பகுதியாக, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் புதிய அரசியல் வியூகங்களை காங்கிரஸ் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. 
இந்த சூழலில்தான், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வெளியான தகவல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து, விஜய் தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தி வருகிறார். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தில் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யு என் பி தலைமையை விட்டுக்கொடுக்க தயார்

பிரச்சினைகளைத் தீர்க்க அரசுக்கு திறமையில்லையேல் நாடே அழியும்: ரணில் விசேட  அறிக்கை - Murasu.lk

 வீரகேசரி : நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட இந்த அரசாங்கம், ரணில் என்ற தனி மனிதனைக் கண்டு இந்தளவு அச்சமடைந்து, அவரை அரசியலில் இருந்து நீக்குவதற்கு ஏன் இவ்வளவு முயற்சிக்கிறது என்பதற்கான காரணங்கள் இப்போது மிகத் தெளிவாக வெளிப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தில் இருப்பவர்களின் பேச்சைப் போலவே அவர்களது செயல்களும் இருக்கும் என்று இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நினைத்ததுடன், அதனைத் தலைமேல் வைத்து நம்பினார்கள்.
நாட்டின் கையிருப்பு பூச்சியமாக வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில், நாட்டை பொறுப்பேற்று கண்முன்னே அதைக் கட்டியெழுப்பிய மனிதனைப் புறக்கணித்துவிட்டு, தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள், இன்று வீதிச் சந்திகளிலும் கடைகளிலும் நின்று அரசாங்கத்தைத் திட்டித் தீர்க்கின்றனர் என தலத்தா அத்துகோரல குறிப்பிட்டார்.

விசா புதுப்பிக்கச் சென்ற இந்தியர்களுக்கு அதிர்ச்சி: அமெரிக்காவின் புதிய சரிபார்ப்புக் கொள்கை அமல்

 ceylonmirror.net  -தமிழினி  : இந்த டிசம்பரில் தங்கள் பணி அனுமதிகளைப் புதுப்பிக்க நாட்டிற்குத் திரும்பிய நூற்றுக்கணக்கான இந்திய H-1B விசா வைத்திருப்பவர்கள், இந்தியாவில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னறிவிப்பில்லாத
குறித்த விவகாரத்தால், நீண்ட காலம் தங்கியிருக்க நேரிடும் அபாயம் காரணமாக, சில ஊழியர்களை சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்குமாறு கூகிள் அறிவுறுத்த உள்ளது.
டிசம்பர் 15 மற்றும் 26 ஆகிய திகதிகளுக்கு இடையில் நடந்த இந்த முன்னறிவிப்பில்லாத நடவடிக்கையால் நூற்றுக்கணக்கான, ஒருவேளை ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது! வேளாங்கண்ணி TO இலங்கை!

வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!

 கலைஞர் செய்திகள் - KL Reshma  : வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல முற்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான மெஸ்கலின் (Mescaline) போதைப் பொருள் பறிமுதல் செய்த போலீசார், இந்து மக்கள் கட்சி நிர்வாகி உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளது.
நாகப்பட்டினத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு படகு மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வருகை தந்து ரகசியமாக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

திமுகவின் ‘234 வேட்பாளர்கள்’ ரெடி.. ஸ்டாலின் அதிரடி! கூட்டணி கட்சிகள் குழப்பம்

 மின்னம்பலம் - Mathi  : முன்னாடி ஒரு ப்ளாஷ்பேக்கை சொல்றேன்.. 2014-ல் மக்களவைத் தேர்தல் நடந்தப்ப தமிழகம் வித்தியாசமான களமா இருந்துச்சு.. அதிமுக கூட்டணியில சிபிஐ, சிபிஎம் எல்லாம் அப்ப ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாங்க.. ஆனா தொகுதிகளை ஒதுக்குறதுல உடன்பாடு ஏற்படாம போச்சு.. அப்ப அதிமுக தனிச்சே போட்டியிடும்னு ஜெயலலிதா அறிவிச்சாங்க.. அந்த தேர்தல்ல திமுக ஒரு அணி, இடதுசாரி கட்சிகள் ஒரு அணி, பாஜக ஒரு கூட்டணி, காங்கிரஸ் தனித்து போட்டியிட ரொம்ப பரபரப்பா இருந்தது களம்.. கடைசியில ஜெயலலிதா 37 தொகுதிகளில் ஜெயிச்சாங்க.. அகில இந்திய அளவில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்ததாக 3-வது பெரிய கட்சியாக அதிமுக விஸ்வரூபம் எடுத்துச்சு..
ஆமாய்யா.. ரொம்ப முக்கியமான தேர்தல்தான் அது.. இப்ப எதுக்கு இந்த ப்ளாஷ்பேக்?
சொல்றேன்.. இப்ப 2026 எலக்‌ஷனும் நெருங்கிடுச்சு.. ஆனா தேர்தல் களம் அப்படி ஒன்னும் தெளிவா இல்லை…. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் வருது.. எந்த கூட்டணியும் பைனலாகவும் இல்லை..

திங்கள், 22 டிசம்பர், 2025

கேரளாவில் சத்தீஸ்கார் மாநில தலித் தொழிலாளி பாஜக குண்டர்களால் அடித்து கொலை!

 கேரளாவில் சத்தீஸ்கார் மாநில தலித் தொழிலாளி அடித்து கொலை!
இவரை பங்களாதேஷில் இருந்து வந்தவர் என்ற சந்தேகத்தில் கேரளா பாஜக தொண்டர்கள் இந்த கொடூரத்தை செய்துள்ளார்கள்!
இந்த தலித் இளைஞனை அடித்துக் கொன்றவர்கள் ஆர் எஸ் எஸ் இன் மற்றுமொரு கிளையான சனாதன சாந்தி மார்க்கத்தைச் சேர்ந்த அனு, பிரசாத், முரளி, ஆனந்தன் மற்றும் பிபின்..இவர்கள் கேரளா பாலக்காட்டை சேர்ந்தவர்கள் ஆகும் 
இவர்கள் மீது ஏற்கனவே வன்முறை வழக்குகள் உள்ளன.
இது மட்டுமல்ல கோவையை அடுத்துள்ள பாலக்காடும் 
ஒரு RSS/ பாஜக கலவர பூமிதான். 
இங்கும்  வெட்டு குத்துக்கு பஞ்சமில்லை. இங்கு நகராட்சியிலும் பாஜக தான் வெற்றி பெற்றுள்ளது

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

2025-ஆம் ஆண்டில் உலகில் மக்கள் தொகை வீழ்ச்சி சவாலாக உருவெடுத்துள்ளது.

 மாலைமலர் : 2025 REWIND: சரியும் மக்கள் தொகை .. குழந்தை பிறப்புக்கு குட்டிக்கரணம் போடும் நாடுகள்  Population decline... Countries scrambling to boost birth rates - Is the human race slowly becoming extinct?
2025-ஆம் ஆண்டில் உலக நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக மக்கள் தொகை வீழ்ச்சி உருவெடுத்துள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தைப் பற்றி கவலைப்பட்ட உலக நாடுகள், இப்போது போதிய குழந்தைகள் பிறக்காதது குறித்து அச்சமடைந்துள்ளது.
இதனால் ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பல சலுகைகளை அறிவித்தும் பெரிய பயன் கிடைக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றன.

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை- சென்னை

 மாலைமலர் : சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. பிசியோதெரபி படித்து வருகிறார். 4-ம் ஆண்டு மாணவியான இவர் பெரம்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார்.
அந்த ஆஸ்பத்திரியில் ரூ.4 ஆயிரம் சம்பளத்துடன் பயிற்சி பெற்ற மாணவி அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளரான டாக்டர் ஒருவர் மீதுதான் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்.

மென்டல் செல்வராகவனை விட்டு கீதாஞ்சலி பிரிய காரணம் இதுதானா?

 tamil.oneindia.com - Hema Vandhana : சென்னை: தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியை 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் செல்வராகவன்.. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள செல்வராகவனின் அனைத்து போட்டோக்களையும் கீதாஞ்சலி நீக்கியிருந்தார். இதன் மூலம் இவர்கள் பிரிய இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், செல்வராகவன் பற்றி திண்டுக்கல் வெங்கடேஷ் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Aramnaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சினிமா விமர்சகர் திண்டுக்கல் வெங்கடேஷ், "சொன்ன நேரத்துக்கு படங்களை செய்யாததால் சில தயாரிப்பாளர்கள் பாதிப்புக்கு ஆளாகிவிட்டார்கள்..
Geethanjali Selvaraghavan dhanush

ராமேஸ்வரத்துக்கு ரயில் டிக்கெட் எடுக்காமல் வந்த 300 உ.பி. பக்தர்கள் பலரும் தப்பி ஓட்டம்

 மின்னம்பலம் - மதி : ராமேஸ்வரத்துக்கு மதுரையில் இருந்து ரயில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 300க்கும் மேற்பட்ட உ.பி. பக்தர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் மற்றும் ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வட மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் வந்த ரயிலில் 300க்கும் மேற்பட்ட உத்தரப்பிரதேச மாநில பக்தர்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள நடிகர் திரைப்பட கதை வசனகர்த்தா ஸ்ரீநிவாசன் காலமானார்

ராதா மனோகர் :   இன்று இந்திய திரை உலகம் ஒரு மிக பெரிய ஆளுமையை "ஸ்ரீநிவாசன்" இழந்து விட்டது 
மறைந்த மலையாள நடிகர் திரைப்பட கதை வசனகர்த்தா ஸ்ரீநிவாசன் விட்டு சென்ற இடத்தை நிச்சயமாக வேறு எவராலும் நிரப்ப முடியாது!
திரு ஸ்ரீநிவாசன் படங்களை பற்றி பேசும்போது அவரின் கதை வசனங்களை பற்றி பேசுவதா அவரின் நடிப்பை பற்றி பேசுவதா என்ற குழப்பம் நிச்சயமாக எல்லோருக்கும் ஏற்படும்.
மிக சாதாரண மக்களின் உள்ளத்தை உள்ளபடி தொட்டு பேசிய மகா மகா நடிகன் . அதை விட ஒரு கதை வசன மேதாவி!
அவரின் ஒவ்வொரு படங்களும் திரைப்பட பாடங்களாக பயில்வதற்கு உரியது.
சமூகத்தின் நலிந்த பிரிவினரின் வாழ்வியலை வெறும் சோக காவியங்களுக்காக படைக்காமல் நகைச்சுவையோடு காட்சி படுத்துவது ஸ்ரீனிவாசனின் தனி சிறப்பு.
ஸ்ரீனிவாசனின் ஏராளமான படங்கள் ஞாபகத்திற்கு வருகிறது.