சனி, 14 டிசம்பர், 2019

மகள் கையை அம்மா பிடித்து கொள்ள.. மகனை அப்பா இறுக பிடிக்க.. கொடைரோடு தற்கொலை கடன் கொடுமை .

கோயில்
tamil.oneindia.com - hemavandhana : திண்டுக்கல்: சாக போகிறோம் என்று தெரிந்துதான் 2 குழந்தைகளும் பெற்றோருடன் ரயில்முன் விழுந்துள்ளன... தற்கொலைக்கு முன்பு ஓட்டலுக்கு போய் வயிறார சாப்பிட்டு வந்து 4 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மகன் கையை அப்பா பிடித்து கொள்ள... மகள் கையை அம்மா பிடித்து கொள்ள.. 4 பேருமே ரயில் முன் போய் விழுந்தனர். நேற்று ஒரே நாளில் 2 சம்பவம் தமிழக மக்களை உலுக்கியது.. விழுப்புரத்தில் 3 சீட்டு லாட்டரி வாங்கி கடன் கழுத்தை நெறிக்க.. ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது.. சாக போகிறோம் என்று தெரியாமலேயே அந்த 3 பிஞ்சுகள் சயனைடு கொடுக்கப்பட்டு இறந்தன.
ஆனால், கொடைக்கானலில் 2 பிள்ளைகளும் தெரிந்தேதான் தற்கொலைக்கு துணிந்துள்ளனர். உறையூரை சேர்ந்த உத்தராபதி - சங்கீதா தம்பதி. இவர்களுக்கு 18 வயதில் அபினயஶ்ரீ என்ற மகளும், 13 வயதில் ஆகாஷ் என்ற மகனும் இருந்தனர்.
இவர்களுக்கும் கடன் பிரச்சனைதான்.. வாழ முடியாத அளவுக்கு கடன் விரட்டி கொண்டு வந்துள்ளது.. தற்கொலை முடிவுக்கு எல்லோருமே வந்துவிட்டனர். ஆனால், அதற்கு முன்பாக சாமி கும்பிட்டு விட்டு சாகலாம் என்று முடிவெடுத்தனர்.

We were. We are We will . Secular india


Devi Somasundaram : Citizenship amendment bill ..CAB .
இரு கோடுகள் என்று ஒரு பால சந்தர் படம்.அதில் ஒரு கோட்டை சின்னதாக காட்ட அதன் அருகில் பெரிய கோடு வரைந்தால் முதல் கோடு சிறியதாகிடும் என்று கூறி இருப்பார் . அமித் ஷா அரசு ஒவ்வொரு பிரச்சனையையும் சரி செய்ய முயலாமல் அடுத்து அடுத்து பெரிய கோடு போடுகிறது. காஷ்மீர் 370, அயோத்தி, எகானமி, CAB, அடுத்து
பொது சிவில் சட்டமா என்று தெரியவில்லை.. தெளிய வச்சு தெளிய் வச்சிலாம் இல்ல..தெளியவே விடாம அடிக்கிது
மூன்று அண்டை மாநிலத்தில் இருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை கிடையாது என்று குறிப்பிட்டு .இஸ்லாமிய மதத்தை மட்டும் தவிர்த்து , ஈழத்தில் இருந்து வருபவர் பற்றி எந்த தகவலும் இல்லாமல் அவசர அவசரமாக இயற்றப்பட்ட சட்டம் ஒரு வகையில் மக்களை இந்திய பொருளாதார பிரச்சனயை மறக்க வைத்து இருக்கின்றது ..
அவர்கள் போட்ட கணக்கை தாண்டி பில் பாஸ் செய்யப் பட்ட அன்றே டெல்லி உஸ்மானியா பல்கலை மாணவர்கள் போராட்டம் செய்தனர் .கடும் தடியடி செய்து அரசு அதை அடக்கியது .அந்த தகவல் வெளிலயே வராமல் பார்த்து கொண்டது .ANI ல ஒரு சின்ன காலம் தவிர அந்த செய்தி எதிலும் வரவில்லை

தமிழ்நாட்டில் உள்ள வெளி மாநிலத்தவர் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்...:பெ.மணியரசன் பேட்டி

தினகரன் :  தஞ்சை: டிசம்பர் 20ல் பிரமாநிலத்தவரை வெளியேற கூறி போராட்டம் நடத்தப்போவதாக பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,தமிழர்களை புறக்கணிக்கக்கூடிய நிறுவனங்களை நாம் புறக்கணிக்க வேண்டும். பிறமாநிலத்தவர்களுடன் ஒத்துழையாமை இயக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் எவ்வளவு வெளிமாநிலத்தவர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும். 1956க்கு பிறகு தமிழகத்துக்கு வந்தவர்களை வெளியார் என அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்


பாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்
ரவுடி ஆசிட் வீசியதில் காயம் அடைந்த பொதுமக்கள்  maalaimalar :  ராசிபுரம் அருகே பெண் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்துவிட்டு, பதுங்கி இருந்த ரவுடியை பொதுமக்கள் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராசிபுரம நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள குருசாமிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி விஜயா (வயது 38). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ரவிக்குமார் கடந்த 3 ஆண்டு முன்பு விபத்தில் இறந்து விட்டார்.
இதையடுத்து விஜயா தனது 3 மகள்களுடன் அந்த பகுதியில் வசித்து வந்தார். விஜயா பள்ளிபாளையம் பகுதியில் வேலைக்கு சென்றார். அப்போது தர்மபுரி மாவட்டம் தடங்கம் அவ்வையார் காலனி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சாமுவேல் (40) என்பவருக்கும், விஜயாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். பின்னர் விஜயாவும், சாமுவேலும் அந்த பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்தனர். இதற்கிடையே விஜயாவின் மூத்த மகளுக்கு திருமணம் ஆனது. 2-வது மகள் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

பரூக் அப்துல்லாவுக்கு மேலும் 3 மாதங்கள் சிறை நீடிப்பு!


jknakkheeran.in - ஆதனூர் சோழன் : ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த கையோடு அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோர் உள்ளிட்ட மக்கள் தலைவர்கள் பலரை மத்திய பாஜக அரசு சிறை வைத்தது. காஷ்மீர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட சேக் அப்துல்லாவின் மகனான பரூக் அப்துல்லா மூன்று முறை மாநிலத்தின் முதல்வராகவும் ஐந்துமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய மகனும் முதல்வர் பொறுப்பு வகித்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி 370 ஆவது பிரிவை ரத்து செய்த பாஜக அரசு பரூக் அப்துல்லாவை வீட்டிலேயே சிறை வைத்தது.

மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு .. குடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு. வீடியோ .


Citizenship Act protest: 5 empty trains set on fire in West Bengal tamil.oneindia.com - veerakumaran : கொல்கத்தா: வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமைச் சட்டம் தொடர்பாக போராட்டம் வலுத்துள்ளது. மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் லால்கோலா ரயில் நிலையத்தில் பயணிகள் இன்றி நிறுத்தப்பட்டிருந்த ஐந்து ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன.
அசாம் மாநிலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராடினர். இதை ஒடுக்க போலீஸ் பிரயோகித்த, துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
பிற வடகிழக்கு மாநிலங்களில் நிலைமை பெரும்பாலும் அமைதியானதாக உள்ளது. முக்கிய பகுதிகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் லேசாக தளர்த்தப்பட்டன.
இன்று காலை ஹவுராவில் உள்ள சங்க்ரயில் ரயில் நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும், நூற்றுக்கணக்கான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ரயில் நிலைய வளாகத்தின் ஒரு பகுதியை தீ வைத்தனர்.
"பிற்பகலில், அவர்கள் ரயில் நிலைய வளாகத்திற்குள் நுழைந்து டிக்கெட் கவுண்டருக்கு தீ வைத்தனர். ஆர்.பி.எஃப் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அவர்களைத் தடுக்க முயன்றபோது, ​​அவர்கள் தாக்கப்பட்டனர்" என்று ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான பி.டி.ஐ.யிடம் தெரிவித்தார்.

BBC :இலங்கைத் தமிழ் அகதிகள் – “எங்களுக்கு குடியுரிமை வழங்க முடியாதென்றால் கடலில் தள்ளி கொன்றுவிடுங்கள்”

_110113378_b868f1ab-add2-4b11-9660-e60237745d3f cab மசோதா குறித்து இலங்கைத் தமிழ் அகதிகள் - CAB மசோதா குறித்து இலங்கைத் தமிழ் அகதிகள் - "எங்களுக்கு குடியுரிமை வழங்க முடியாதென்றால் கடலில் தள்ளி கொன்றுவிடுங்கள்” 110113378 b868f1ab add2 4b11 9660 e60237745d3f
CAB மசோதா குறித்து இலங்கைத் தமிழ் அகதிகள் – “எங்களுக்கு குடியுரிமை வழங்க முடியாதென்றால் கடலில் தள்ளி கொன்றுவிடுங்கள்”
_110113376_bd536ccd-25cc-4e8c-a669-26bd61a54a2e cab மசோதா குறித்து இலங்கைத் தமிழ் அகதிகள் - CAB மசோதா குறித்து இலங்கைத் தமிழ் அகதிகள் - "எங்களுக்கு குடியுரிமை வழங்க முடியாதென்றால் கடலில் தள்ளி கொன்றுவிடுங்கள்” 110113376 bd536ccd 25cc 4e8c a669 26bd61a54a2eCAB மசோதா குறித்து இலங்கைத் தமிழ் அகதிகள் – “எங்களுக்கு குடியுரிமை வழங்க முடியாதென்றால் கடலில் தள்ளி கொன்றுவிடுங்கள்” இலங்கையில் இந்திய தமிழர் என்று அடிக்கிறர்கள், இங்கே வந்தால் இலங்கை தமிழர்கள் என்று ஒதுக்குகிறார்கள், எங்கே தான் செல்வது நாங்கள். குடியுரிமை இல்லையென்றால் எங்களை கடலில் தள்ளிவிடுங்கள் என கடலூர் அகதிகள் முகாமில் இலங்கை தமிழர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்து, சீக்கியர், பௌத்தம், சமணம், பார்சி மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கு குடியுரிமை வழங்குவதற்கான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. மத்திய அரசு குறிப்பிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்த முஸ்லீம்கள் மற்றும் இலங்கை அகதிகள் ஆகியோர் குடியுரிமை சட்ட திருத்த பட்டியலில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.< பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா வாழ் இலங்கை அகதிகளை குடியுரிமை பட்டியலில் சேர்க்காதது குறித்து முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தடுமாறி விழுந்த பிரதமர் மோடி... கங்கை வெவகாரம் வீடியோ


மின்னம்பலம் : கங்கையை சுத்தப்படுத்தும் நோக்கில், மத்திய அரசினால் தொடங்கப்பட்ட ‘நமமி கங்கா’ திட்டத்தை பார்வையிடச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, படிக்கட்டுகளில் ஏறும்போது திடீரென கால் இடறி கீழே விழுந்தார்.
தேசிய கங்கை ஆணையம் அமைக்கப்பட்டு கங்கை நதியை சுத்தப்படுத்துவது, பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது குறித்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது மத்திய அரசு. இதற்கு கங்கா நமமி புராஜெக்ட் என்று பெயரிட்டு, இதன் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று(14.12.19) கான்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள கான்பூர் வந்த மோடி, சந்திரசேகர் ஆசாத் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு வந்தடைந்தார். அங்கு படிக்கட்டுகளில் ஏறியபோது, ஒரு பகுதி படிகளில் கடைசி படிக்கட்டில் கால் வைத்தபோது, அதில் கால் இடறி கீழே விழுந்தார்.

நாட்டின் பல இடங்களிலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான் போராட்டங்கள்...

மும்பை டெல்லி கொல்கொட்டா போன்று ஏனைய பல இடங்களிலும் புதிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கடுமையான போராட்டங்கள நடக்கின்றன் . பெரும்பான்மையான் ஊடகங்கள் போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை

போருக்கு அழைக்கிறதா சமஸ்கிருதம்? ஆ.ராசா நாடாளுமன்றத்தில் பேசியது ஏற்புடையதா?

சமஸ்கிருத சட்ட வரைவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஆ. ராசா ஆற்றிய உரையானது மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடி முழக்கத்திற்கு ஒப்பானது .
இந்திய உபகண்டத்தில் ஆரிய வடமொழியும் திராவிட குடும்ப மொழிகளும் எப்படிப்பட்ட தன்மை வாய்ந்தது , அவற்றின் வரலாற்று சான்றுகள் பற்றிய விளக்கமான உரையாகும் .
எனக்கு தெரிந்த வரையில் இந்திய நாடாளுமன்றம் இது போன்ற ஒரு தெளிவான விரிவான ஆணித்தரமான ..எல்லாவற்றிகும் மேலாக ஒரு வீரம் மிக்க உரை இது என்று கூறலாம்.
உண்மையில் இது ஒரு போர் முழக்கம்தான்.
சம்ஸ்கிருத ஆரிய மேலாண்மைக்கு எதிராக ஒரு போர் புரியவேண்டிய நிலைக்கு திராவிட மொழிக்குடும்பம் தள்ளப்பட்டு விட்டது.
இதை வெளிப்படையாக எதிர்கொள்ள வேண்டிய நிலை இன்று உள்ளது.
இந்த உண்மையை முழு இந்தியாவும் உணர்ந்து இருந்தாலும் .
முன் எப்போதும் இல்லாத அளவில் ஆரிய சம்ஸ்கிருத சக்திகள் அசுர பலத்தோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து உள்ளது.
இந்த ஆரிய சம்ஸ்கிருத சக்திகள் சமுகத்தின் எல்லா தரப்பினருக்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.
அந்த ஆரிய சமஸ்கிருத சக்திகள் ஏறக்குறைய ஆரிய ஹிட்லரின் நாசி தத்துவத்திற்கு இணையானது.
முதலில் மாற்று மதங்கள் . அடுத்தபடி மாற்று மொழிகள் . அதற்கு அடுத்தபடி ஜாதீய அடுக்குகள் அதற்கும் அடுத்த படி பெண்கள் .. இப்படியாக ஒரு ஆணாதிக்க பார்ப்பன பனியா மேலாதிக்கத்தை உள்நோக்கமாக இந்த சம்ஸ்கிருத ஆரிய மேலாதிக்கம் கொண்டுள்ளது.

வேதியர் : உன் மனைவியை விரும்பியே வந்தேன்’.. (பெண்கள் ஒரு commodity போலத்தான் ..63 நாயன்மாரின் வண்டவாளம்

Dhinakaran Chelliah : எப்படிப்பட்ட கதைகளை உயர்வாகக் கருதி நமது மூளைச்
சலவையாகி போயிருக்கு என்பதற்கு இன்னுமொரு உதாரணம்தான்,63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனாரின் கதை. இவரை ‘இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்’ என திருத்தொண்டத் தொகை வர்ணிக்கிறது.
வேதியர் வேடம் பூண்டு,திருநீறு பொன்மேனியில் அணிந்து, சிவன் பெருமான் இயற்பகையாரின் இல்லம் வந்து சேர்கிறார். (பெரும்பாண்மையான கதைகளில் சிவன் வேதியர் வேடத்திலேயே வருகிறார்?).அவரை அடிபணிந்து நின்று இயற்பகையார், வேதியரின் விருப்பம் கேட்க, வேதியரோ உம்மிடத்தில் உள்ள ஒரு பொருளை விரும்பி வந்தேன் என்கிறார். அதற்கு இயற்பகையார் தன்னிடமுள்ள பொருள் எதுவானாலும் வேதியரின் உடைமை, விரும்பிய பொருளைக் கொடுப்பேன் என்கிறார்.
அது கேட்ட வேதியர் ‘ உன் மனைவியை விரும்பியே வந்தேன்’ என்கிறார். (பெண்கள் ஒரு commodity போலத்தான் ஆண்களால்,ஏன் இறைவனாலும் நடத்தப்பட்டிருக்கிறார் என்று சொல்ல விரும்பவில்லை!)
இயற்பகையார் மகிழ்ந்து மனைவியை வேதியருடன் அனுப்பத் துணிகிறார்.
இதைக் கண்ட உறவினர்களும் ஊர் மக்களும் இயற்பகையாரின் செயலை எதிர்க்கிறார்கள். தன்னையும் இயற்பகையாரின் மனைவியையும் ஊர் எல்லை வரை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்படி வேண்டுகிறார் வேதியர். அப்படி
அழைத்துச் செல்லும்போது தடுத்த உறவினர் ஊர் மக்கள் பலரைக் கொன்று ஊர் எல்லை வரை அழைத்துச் செல்கிறார். இயர்பகையார் அத்தனை பேரையும் ஆயுதங் கொண்டு கொன்று குவிப்பதை அவரது மனைவியும் வேதியராக வந்த சிவபெருமானும் வேடிக்கை பார்த்தார்கள் என்ற செய்தி சொல்லப்படவில்லை.!

மேற்கு வங்கத்தில் வன்முறை.. பற்றி எரிகிறது தலைநகர்.. குடியுரிமை சட்ட வரைவுக்கு எதிர்ப்பு..



tamil.oneindia.com - vishnu-priya : டெல்லி: அஸ்ஸாம், திரிபுரா மாநிலங்களைத் தொடர்ந்து மேற்கு வங்கம், தலைநகர் டெல்லியிலும் குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதனால் ஏற்படும் வன்முறைச் சம்பவங்களால் அந்த இடங்கள் பற்றி எரியும் நிலையில் உள்ளன.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்து, கிறிஸ்துவர், பார்ஸி, சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜோரோஸ்டியர்கள் ஆகிய 6 பிரிவினருக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இதில் முஸ்லீம்களின் பெயர் இடம்பெறாததால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களாக மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.

மம்தா பானர்ஜி : குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும்படி எந்த மாநிலத்தையும் வற்புறுத்த முடியாது


மாலைமலர் : பா.ஜனதா கட்சியால் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும்படி எந்த மாநிலத்தையும் வற்புறுத்த முடியாது என்று மம்தா பானர் கொல்கத்தா: மேற்குவங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் இந்த மாநிலத்தில் இந்திய குடிமக்கள் தேசிய பதிவேடுக்கான கணக்கெடுப்பு நடத்த அனுமதிக்கமாட்டோம். அதேபோல குடியுரிமை சட்டத்தையும் அனுமதிக்கமாட்டோம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை நாங்கள் அமல்படுத்தமாட்டோம்.
மாநிலங்கள் இதனை அமல்படுத்த வேண்டும் என்று பா.ஜனதா மிரட்டி வற்புறுத்த முடியாது. குடியுரிமை சட்டம் இந்தியாவை பிரித்துவிடும். நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை இந்த மாநிலத்தில் உள்ள ஒரு நபர் கூட நாட்டை விட்டு வெளியேறமாட்டார். குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

சபரிமலை செல்ல அனைத்து வயதினருக்கும் அனுமதி: பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு


சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயதினருக்கும் அனுமதி: பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
 தினத்தந்தி : சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது. புதுடெல்லி, கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சென்று வழிபட அனுமதிக் கப்படுவது இல்ல நீண்ட காலமாக இருந்து வரும் இந்த நடைமுறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதி வழங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி தீர்ப்பு கூறியது. இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்றன. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து சபரிமலை கோவிலுக்கு சென்ற சில பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

“லக்ஸ் நடிகை, பணம் முக்கியம், அறிவு தேவையில்லை!’’ – தி.மு.க-விலிருந்து விலகிய பழ.கருப்பையா

கருணாநிதியுடன் பழ.கருப்பையாபழ.கருப்பையாvikatan.com -.பழனியப்பன் : `லக்ஸ் சோப்பை விளம்பரப்படுத்துவதற்கு நடிகைகள் முன்னிறுத்தப்படுவதைப்போல தி.மு.க-வையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் விளம்பரப்படுத்த பிரசாந்த் கிஷோர் போன்றவர்கள் கொண்டுவரப்படுகிறார்கள்’ என்று விமர்சிக்கிறார் பழ.கருப்பையா. தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பழ.கருப்பையா, தி.மு.க-விலிருந்து அதிரடியாக வெளியேறியுள்ளார். ஜெயலலிதா காலத்தில் இவர் அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச்செயலாளராக இருந்தவர். 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட இவருக்கு ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். இவருக்கு சபாநாயகர் பதவி தரப்படலாம் என்று பேச்சு அடிபட்டது. ஆனால், அந்த வாய்ப்பு தரப்படவில்லை. ``கட்சித் தாவலை விஞ்சும் கம்பெனி தாவல்” - பிரசாந்த் கிஷோர் தி.மு.க-வுக்குள் என்ட்ரி! எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்கவரான பழ.கருப்பையா ஒரு தனித்த சிந்தனையாளர். அந்த வகையில், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்திலேயே `துக்ளக்’ பத்திரிகை நடத்திய நிகழ்ச்சியில் பங்கு கொண்டு ஆட்சியின் செயல்பாடுகளையும் அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் வெளிப்படையாக விமர்சித்தார். அதனால் அவரை அ.தி.மு.க-விலிருந்து ஜெயலலிதா நீக்கினார். உடனே, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் பழ.கருப்பையா.

“திருநர் பாதுகாப்பு மசோதா – 2019” பெரும் எதிர்ப்புகளுக்கும், போராட்டங்களுக்குமிடையே நிறைவேற்றப்பட்டுள்ளது

thetimestamil.com :
மு.வி.நந்தினி : பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன். 
திருநங்கை, திருநம்பி, இடையிலங்க (இன்டர்செக்ஸ்) மற்றும் பல பைனரி அல்லாத பாலின அடையாளங்களை கொண்ட மாற்றுப்பாலின மக்களுக்கான “திருநர் பாதுகாப்பு மசோதா – 2019” அம்மக்களின் பெரும் எதிர்ப்புகளுக்கும், போராட்டங்களுக்குமிடையே இன்று மத்திய அரசால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா இப்பொழுது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்துத்துவா சித்தாந்தத்துடனும், பிற்போக்கு மனப்பான்மையுடனும் பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட இம்மசோதா மாற்றுப்பாலின சமூகத்தின் எந்த ஒரு அடிப்படை கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்காமல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர்-26 அன்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. குறைந்த பட்சம் தேர்வு குழுவிற்கு அனுப்பி மறுஆய்வு செய்யுங்கள், மக்களின் குறைகளை கேட்டறியுங்கள் என்பதை கூட ஆளும் அரசு ஏற்க தயாராக இல்லை.

வெள்ளி, 13 டிசம்பர், 2019

Self policing.- won't be a victim anymore ... பெண்கள் பாதுகாப்பு ..

Devi Somasundaram : பெண்கள தங்கள பாதுகாத்துக் கொள்ள சில dos and don't s .
1 . எப்பவும் அலர்டா இருங்க .தனியா இருட்டான பகுதில போக வேண்டிய அவசியம் நேர்ந்தா நம்மை சுற்றி அட்லிஸ்ட் 10 அடி தூரத்திற்குள் யாரும் இல்லன்றத உறுதி செய்துக் கொள்ளுங்கள் .
2 . மிக குறைந்த தூரத்திற்குள் யாரும் வரும் வரை அனுமதிக்காம டிஸ்டன்ஸ் அதிகமாக்குங்க ..அது எளிதா நம்மை ஒருவர் பிடிப்பதை தடுக்கும்.
3 . தனியா போக வேண்டிய இருட்டான பகுதிக்கு முடிந்த வரை நாலைந்து பெண்களா போக முயற்சி செய்ங்க ..முடியாத போது போவதை தவிர்க்க என்ன வாய்ப்பு இருக்குன்னு யோசிங்க..உதாரணமா இருட்டு அண்டர் கிரவுண்ட் பார்க்கிங்ல வண்டி இருந்தா ஆண் நண்பர் கிட்ட சொல்லி மேல எடுத்து தரச் சொல்லலாம் .. நைட்ல பஸ்ல இறங்கி தனியா நடக்கனும் என்றால் அந்த பக்கம் போக இருக்கும் சக பயணி கூட சேர்ந்து போகலாம். அந்த மாதிரி மாற்று வழியும் இல்லாத போது முடிந்த வரை இருட்டில் இல்லாமல் வெளிச்சத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள் ..அது எதேச்சையான உதவிக்கு வழி செய்யும் .

இங்கிலாந்துத் தேர்தல் முடிவுகள்-2019.. போரிஸ் ஜோன்ஸனின் 'Brexit' வெற்றி'

Rajes Bala : 'போரிஸ் ஜோன்ஸனின் 'Brexit' வெற்றி'
இங்கிலாந்துத் தேர்தல் முடிவுகள்-2019
இங்கிலாந்தில் பலரும் எதிர்பார்த்படி கொன்சர்வேட்டிவ்(பழமை தழுவும்) கட்சியின்; தலைவர் போரிஸ் ஜோன்ஸன் நேற்று நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். தேர்தல் ஆய்வுகளும் பத்திரிகைகளும் சொல்லிக்கொண்டு வந்த தொகுதிகளைவிடக் கூடத்தொகுதிகளைவென்றிருக்கிறார். பிரபுக்கள்,முதலாளிகள்,நில உடமையாளர்களின் கட்சி எனச் சொல்லப்படும் கொன்சர்வேட்டிவ் கட்சி பிரித்தானிய சரித்திரத்தில் முதற்தடவையாகத் தொழிற்கட்சியின் கோட்டை என்று சொல்லப் பட்ட,இங்கிலாந்தின் வடகிழக்கின் பல தொகுதிகளையும் வென்றெடுத்து வெற்றிவாகை கொண்டாடுகிறது.
கொன்சர்வேட்டிவ் கட்சி 45 விகித வாக்குகளையும், தொழிற்கட்சி 33 விகித வாக்குகளையும் பெற்றிருக்கிறது. புpரித்தானியாவின் 650 தொகுதிகளில் கொனசர்வேட்டிவ் கட்சி 364 இடங்களையும்,தொழிற்கட்சி 203 இடங்களையும், மிகுதிகளை மற்றக் கட்சிகளும் பெற்றிருக்கின்றன. தேர்தல் பிரசாரத்தில் போரிஸ் ஜோன்ஸன் 68 இடங்களை மேலதிகமாக வென்று அரசு அமைப்பேன் என்றர்.ஆனால் 78 தொகுதிகளை மேலதிகமாக வென்று அமோக வெற்றி பெற்றிருக்கிறார். ரோனி பிளேயார் 1997ல் 20.000 மேலதிக வாக்குகளால் வென்றெடுத்த செட்ஜ்பீல்ட் என்ற தொகுதியும் பறிபோனது தொழிற்கட்சியினரான எங்களைத் துன்பப்படுத்தியது.கொன்சர்வேட்டிவ் கட்சியின் மகத்தான வெற்றி. தொழிற்கட்சி 59 தொகுதிகளைக் கொனசர்வேட்டிவ் கட்சியிடம் பறிகொடுத்த படுதோல்வி இந்தத் தேர்தலில் வெளிப்படுகிறது.

அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமர் வருகை ரத்து!

Japanese PM cancels visitnakkheeran.in - ஆதனூர் சோழன் : அசாமில் மோடியும் ஜப்பான் பிரதமரும் அபேயும் சந்தித்து பேச இருந்த இடத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி தீவைத்ததால் ஜப்பான் பிரதமரின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டது.;
பாஜக கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டம் கலவரமாக வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுவோரை சுட்டுக் கொன்று மிரட்டும் நிலை உருவாகி இருக்கிறது. ஆனாலும் போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். வரும் 15 ஆம் தேதி முதல் 17 தேதிவரை அசாம் தலைநகர் கவுகாத்தியில் பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் அபேயும் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார்கள்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடுதினகரன் : சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 மாலைமலர் :தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி 9 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களுக்கு திட்டமிட்ட தேதியில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.
இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் களப்பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள முதல் வேட்பாளர் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் கைது ... வழக்கு ! வீடியோ


வெப்துனியா :பொதுவாக அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டம் என்றாலே போராட்டக்காரர்கள் காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்படுவதும் அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படுவதில்லை என்பதும் வழக்கமாக இருந்து வருகிறது
ஆனால் இன்று சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் திமுக
நடத்திய குடியுரிமை சட்ட நகலை எரித்து நடத்திய போராட்டம் வழக்குப் பதிவு செய்யும் அளவுக்கு சீரியஸாகி உள்ளது. குறிப்பாக சென்னையில் குடியுரிமை சட்ட நகலை எரித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுமேலும் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 644 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதேபோல் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் இன்று போராட்டம் செய்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

குழந்தைகள் ஆபாச வீடியோ- அரசியல் பிரமுகர் உள்பட 30 பேரிடம் விசாரணை

மாலைமலர் : திருச்சியில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு அனுப்பிய குற்றத்துக்காக கைதான கிறிஸ்டோபருடன் தொடர்பில் இருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட 30 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி: இணையதளங்களில் சிறுவர்-சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பரப்புவது மற்றும் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக அமெரிக்காவில் இருந்து மத்திய அரசுக்கு ஒரு தகவல் அனுப்பப்பட்டது. இதனை தமிழக போலீசுக்கு அனுப்பிய மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ரவி, சில நாட்களுக்கு முன்பு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
தமிழகத்தில் ஆபாச படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பவர்களின் ஐ.பி. முகவரி தயாராக இருப்பதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இது செல்போனில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

ரேப் இன் இந்தியா: நாடாளுமன்றத்தை அதிரவைத்த கனிமொழி . வீடியோ


மின்னம்பலம் : இந்தியாவில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது என்பதை ஹைதராபாத், உன்னாவ் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்நிலையில் நேற்று ஜார்கண்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாலியல் வன்கொடுமைகள் குறித்துப் பேசியிருந்தார்.
ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டம் சிறப்பாக நடப்பதாகக் கூறுகிறார். ஆனால் இந்தியாவிலோ, பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் ரேப் இன் இந்தியா திட்டம்தான் அவர்களால் நடத்தப்படுகிறது. இதுபற்றி மோடி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை’ என்று கடுமையாக விமர்சித்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்து டிசம்பர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. கேள்வி நேரத்தின்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் பாஜக பெண் எம்பிக்கள் சேர்ந்துகொண்டு, ‘ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று முழக்கமிட்டார்கள். நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடைசி நாளான இன்று பாஜக பெண் எம்.பிக்கள், ராகுலின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். போபால் எம்.பி, பிரக்யா தாக்கூர், லாக்கெட் சட்டர்ஜி உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் ராகுல் காந்திக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

ரேப் இன் இந்தியா .. மன்னிப்பு கேட்க முடியாது - ராகுல் காந்தி திட்டவட்டம்


 தினமணி : ரேப் இன் இந்தியா” எனக்கூறியது தொடர்பாக மன்னிப்பு கேட்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 புதுடெல்லி,; ஜார்க்கண்ட் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி, என்று எங்கு சென்றாலும் மேக் இன் இந்தியா குறித்து பேசி வரும் நிலையில், பாலியல் வன்முறைகள் அரங்கேறி, ரேப் இன் இந்தியாவாக தற்போது நாடு உள்ளதாகவும் விமர்சித்தார். இந்த கருத்துக்கு, ராகுல்காந்தி மன்னிப்புக் கேட்கக் கோரி மக்களவையில் பா.ஜ.க. எம்.​பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில், பதிலளிக்க ராகுல் காந்திக்கு சபாநாயகர் அனுமதி மறுத்த நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி, “ நான் மன்னிப்பு கேட்க போவதில்லை, நான் என்ன கூறினேன் என்பதை தற்போது தெளிவுபடுத்துகிறேன்.  பிரதமர் மோடி மேக் இன் இந்தியா பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். எனவே, ஒருவர் செய்தித்தாளை திறந்து பார்க்கும் போது, அது பற்றிய செய்தியை தான் பார்க்கப் போகிறோம் என்று ஒருவர் நம்பிக்கையில் இருப்பார். ஆனால், நாம் செய்தித் தாளை திறக்கும் போது நான் என்ன செய்தியை பார்க்கிறோம். பாலியல் வன்கொடுமை தொடர்பான பல செய்திகளை நாம் பார்க்கிறோம்” என்றார்

இங்கிலாந்து - நாடாளுமன்ற தேர்தலில் கண்சர்வேடிவ் கட்சி வெற்றி ..இந்தியர்கள் 15 பேர் வெற்றி

இங்கிலாந்து - பாராளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 பேர் வெற்றிமாலைமலர் : இங்கிலாந்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 650 உறுப்பினர்களைக் கொண்ட இங்கிலாந்தின் பாராளுமன்ற தேர்ந்தல் நேற்று  நடைபெற்றது. உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் வெற்றிக் கணக்கை கன்சர்வேட்டிவ் கட்சி முதலில் தொடங்கியது.
அந்தக் கட்சி 364 இடங்களை கைப்பற்றி வெற்றியடைந்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சி 203 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான போரிஸ் ஜான்சன் தான் போட்டியிட்ட தொகுதியில் வென்றுள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற முடிவில் மக்கள் உறுதியாக உள்ளதை தேர்தல் முடிவு காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட்டில் தாமரை; மத்திய அரசு விளக்கம்

Passport,lotus,Indian_Passport,lotus_symbol,kerala,Raveesh_Kumar,Spokesperson,MinistryofExternalAffairs,பாஸ்போர்ட்,தாமரை,மத்தியஅரசு,விளக்கம்மாலைமலர் : புதுடில்லி: பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தாமரை, நம் நாட்டின் தேசிய மலர் என்பதாலும், புதிய பாஸ்போர்ட்டுகளில், அதன் படம் அச்சிடப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
கேரள மாநிலத்தில், புதிதாக வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளில், தாமரை படம் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து, லோக்சபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். 'தாமரை, பா.ஜ.,வின் தேர்தல் சின்னம் என்பதால், பாஸ்போர்ட்டில், அதன் படம் அச்சிடப்பட்டுள்ளது' என, எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

பிரிட்டன் பொதுத்தேர்தல் முடிவுகள்- பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சி முந்துகிறது

பிரிட்டன் பொதுத்தேர்தல் முடிவுகள்- பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சி முந்துகிறது
வாக்கு எண்ணிக்கை  மாலைமலர்: பிரிட்டன் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பிரதமர் போரீஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது. லண்டன்: 650 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 10 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் கன்செர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, தாராளவாத ஜனநாயகவாதிகள், ஸ்காடிஷ் நேஷனல் கட்சி, கிரீன் கட்சி, பிரெக்ஸிட் கட்சி, பிளைட் சிம்ரு ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். எனினும் பிரதானமான கட்சிகளான பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ், தொழிலாளர் கட்சி ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவியது.

மாநில செய்திகள் குழந்தைகள் ஆபாச வீடியோ - சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஐபி அட்ரஸ்களை வைத்து போலீசார் ரகசிய விசாரணை

குழந்தைகள் ஆபாச வீடியோ - சென்னை உள்பட 4  மாவட்டங்களில் ஐபி அட்ரஸ்களை வைத்து போலீசார் ரகசிய விசாரணை தினதட்ன்ஹி : திருச்சி கிறிஸ்டோபர் குழுவில் இருந்த 30 பேரிடம் இன்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சென்னை, உலக அளவில் இந்தியாவில்தான் அதிகம்பேர் ஆபாச படங்களை பார்ப்பதாகவும், அதிலும் தமிழகத்தில் மிக அதிகம்பேர் பார்ப்பதாகவும், குழந்தைகளின் ஆபாச படங்கள் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அமெரிக்க உளவுத்துறை மத்திய உள்துறைக்கு தகவல் அனுப்பியது.
இதையடுத்து தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்களின் செல்போன் எண்கள், கம்ப்யூட்டர் ஐ.பி. முகவரி அடங்கிய பட்டியலை மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு அனுப்பி வைத்தது. இதைவைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது தமிழகத்தில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் பட்டியலில் சென்னை மாநகரம் முதல் இடத்தை பிடித்தது.

ஆ. ராசா சம்ஸ்கிருத சட்ட வரைவை தமிழால் அடித்து துவைத்து... நாடாளுமன்றத்தில் வீடியோ

இந்த  சம்ஸ்கிருத பல்கலைகழக மசோதாவில் நான் பங்கேற்கின்ற வாய்ப்பினை வழங்கியமைக்காக நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இந்த நாடாளுமன்றத்தில் நான் ஐந்து முறை தேர்ந்து எடுக்கப்பட்டு . மூன்று முறை அமைச்சராக  பணியாற்றி இருந்தாலும்  முதல் முறையாக என்னுடைய தாய் மொழியில் பேசுகின்ற வாய்ப்பை அவசியத்தை பெற்றிருக்கிறேன்.
முதலில் நான் பேரவை தலைவர் அவர்களை கேட்டு கொள்வது பொதுவாக மசோதாக்களை பேசும் நேரங்கள் ஒதுக்கும்போது அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நேரம் ஒதுக்குவது வழக்கம்.
ஆனால் இந்த முறை நடைபெற்று கொண்டிருக்கின்ற விவாதம் சற்று வித்தியாசமான கோணத்திலே சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால் எண்ணிக்கை அடிப்படையில் நேரத்தை ஒதுக்காமல் கருத்துக்கு கருத்து என்ற அடிப்படையில் சற்று அதிக நேரத்தை ஒதுக்குமாறு உங்களை பணிவன்போடு கேட்டுகொள்கிறேன்.
இந்த சட்டத்தின் நோக்கம் சமஸ்கிருதத்திலே மேற்படிப்பு முனைவர் படிப்பு ஆராய்ச்சி படிப்பு சாஸ்த்திர கலையை கற்பிப்பது  என்ற நோக்கத்திலே கொண்டு வரப்பட்டிருக்கிறது .
நானோ நான் சார்ந்திருக்கும் திராவிட முன்னேற்ற கழகமோ எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல.
ஆனால் எந்த ஒரு மொழியும் இன்னொரு மொழியின் மீது ஆதிக்கம் செலுத்துமானால் ,
எந்த மொழியும் தான்தான் சிறந்த மொழி என்று சொல்லி கொண்டிருக்கும் காரணத்தினால் இன்னொரு மொழியை அழுத்த நேருமானால் ,
அதை ஒரு போதும் திராவிட முன்னேற்ற கழகம் ஒப்ப்புக்கொள்ளாது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன் .

2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு அயோத்தி மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி : அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு, அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேற்கண்ட 3 தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். மேலும் சிலரும் மேல்முறையீட்டு மனுக் கள் தாக்கல் செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்களை அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து கடந்த நவம்பர் 9-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

திராவிடர்களின் இசை கலையும், ஆடற்கலையுமே! சமற்கிருத இசை, ஆடற்கலைகளாக மாற்றப்பட்டன.


Manjai Vasanthan : தமிழர்களின்(திராவிடர்களின்)
இசை கலையும், ஆடற்கலையுமே! சமற்கிருத இசை, ஆடற்கலைகளாக மாற்றப்பட்டன.

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.
சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற் றிய கருத்தரங்கில், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி இசை ஆராய்ச்சியாளர் ப.தண்டபாணி அவர்கள் உரை வருமாறு.
வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங் களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்ம நூற்பயிற்சி மிக்குடையாராயும் கலையுணர்ச்சி சான்றவ ராயுமிருந்தமைப்பற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்க ளுக்குப் புராணங்கள் வகுத்தனர்........ இன்னும் அவர்தம் புத்திநலங் காட்டித் தமிழரசர்களிடம் அமைச்சர்க ளெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர்; தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங் களையும் மொழிப்பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தனர் போலவும் வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.(1)) இப்படிக் கூறியவர் சமற்கிருத மொழியிலே மிகுந்த பற்றுக்கொண்டிருந்த தமிழ்ப் பண்டித ரான வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் என்னும் அறிஞர். அவ்வாறுதான் இசைக்கலையும் ஆடற்கலை யும் சமற்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்தன என்று எண்ணும்படியாகிவிட்டது.

இன்டர்நெட் தொடர்பு முற்று முழுதாக முடக்கப்படும் அபாயம்...? Digital Assets..

Umamaheshvaran Panneerselvam : உங்களுக்கு நெருக்கமான நண்பர், அல்லது கொள்கைசார்ந்து நீங்கள் இயங்கும் நண்பர் குழாம் ஆகியவற்றின் தொடர்பு எண்கள் , முகவரிகள் போன்றவற்றை எழுதி வையுங்கள். ஆம் "எழுதி " வையுங்கள். அல்லது தொடர்பு துண்டிக்கப்பட்ட காலத்தில் எங்கே கூடலாம், எப்படி தகவல் பரிமாறிக்கொள்ளலாம் என்று இப்பொழுதே ஊகித்து வையுங்கள்.
நாளை உங்களுக்கு என இருக்கும் " Digital Assets" மொத்தத்தையும் முடக்க இவர்களால் முடியும். உங்கள் தொடர்புகள் மொத்தத்தையும் முடக்க முடியும். தொலைப்பேசி, இணையம் , மின்னஞ்சல் எல்லாம் முடங்கினால் எப்படி கூட்டாக இயங்குவது, எப்படி தகவல் பரிமாறிக்கொள்வது என்று வியூகித்து வையுங்கள்.
அந்த நிலை வருகையில் எந்த ஊடகத்தையும் முழுக்க நீங்கள் நம்பிவிட முடியாது. நாஜி ஜெர்மனியில் Gestapo என்ற ரகசிய போலீஸ் மக்களை தனிமைப்படுத்த , தகவல்களை சென்றுவிடாமல் தடுக்க, திரிப்புவாதம் செய்ய ஊடகங்களை தனது கட்டுக்குள் தான் வைத்திருந்தார்கள்.
என்ன இது கிட்டத்தட்ட Emergency கால நடவடிக்கைப் போல் இருக்கிறதே என்று எண்ணினால், believe me, it is only a matter of time when the tiger actually comes.

நாம் சுயநலவாதியாக மாறியதற்கு வேதங்களே காரணம்.. யக்ஞம்! யாகம்! வேள்வி! ஹோமம்!

Dhinakaran Chelliah : நாம் சுயநலவாதியாக மாறியதற்கு வேதங்களே காரணம்!
யக்ஞம்! யாகம்! வேள்வி! ஹோமம்!
தங்களை வேத வைதீகர்களாகவும்,
சனாதனவாதிகளாகவும், இந்துத்துவ வாதிகளாகவும்,துவிஜர்களாகவும்( இருபிறப்பாளர்கள்),சங்கரர், ராமாநுஜர்,மத்வர் இவர்களைப் பின்பற்றுபவர்களாகவும், வேதங்களை உயர்வாக கருதுபவர்கள் தயவு செய்து இந்தக் கட்டுரையைப் படிக்கவும்!
உங்களது மேலான கவனத்திற்காக இருக்கு (ரிக்)வேதத்தின் முதலாவது மண்டலத்தில் உள்ள சில சூக்தங்களில்(மொத்தம் 191) சில
மந்திரங்களை(இருக்குகள் மொத்தம் 2006) மட்டும் இணைத்துள்ளேன். இணைத்துள்ள பக்கங்களைப் படித்தாலே வேதங்களில் கூறப்பட்ட செய்திகள் எப்படிப்பட்டவை என்பதை எளிதாக உங்களால் புரிந்து கொள்ள இயலும்.
முதல் மண்டலம் மொத்தம் 343 பக்கங்களைக் கொண்டுள்ளது( சான்றுக்காக சில பக்கங்களை முதலாவது மண்டலத்திலிருந்து மட்டும் இணைத்துள்ளேன்), அதில் ஒரு சில பக்கங்களைத் தவிர எல்லாப் பக்கங்களிலும் யக்ஞம் பற்றிய குறிப்புக்கள் வருகிறது.மந்திரங்களை வாயால் சொல்லிக் கொண்டு, அதோடு கூட அதற்கான ஒரு காரியத்தையும் அக்னி முகமாகப் பண்ணுவதுதான் யக்ஞம்.இதை யாகம் என்றும் சொல்கிறார்கள்.
யாகம்,வேள்வி,ஹோமம், யக்ஞம் போன்றவை உளவியல் ரீதியாக நமக்கு பெரிய தாக்கங்களை உண்டுபண்ணியிருக்கிறது. அதில் முக்கியமானது “சுயநலமும், பயமும்!”. நமக்குள்ள பய மற்றும் சுயநல எண்ணங்களுக்கும் இந்த வேத வைதீக சடங்கு முறைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதை விளக்குவதற்கே இந்தப் பதிவு!

வியாழன், 12 டிசம்பர், 2019

ஆப்சண்ட்டான எம்.பி.க்கள்.. குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவின் போது கலந்துகொள்ளாமல்...


எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது
Samayam Tamil : டெல்லி: மாநிலங்களவையில் நிறைவேறிய குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதவின் போது அவைக்கு வராத எம்.பி.க்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தாலும் நீண்ட விவாதத்துக்கு பின்னரே மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியது.

பங்களதேச அமைச்சரின் இந்திய வருகை நிறுத்தம் - ராஜதந்திர உறவுகளில் விரிசல் ..?


.tamil.oneindia.com - veerakumaran : டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வட கிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், தனது இரண்டு நாள் இந்திய, அரசுமுறை சுற்றுப் பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் நிறைவேறியுள்ளன. இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து, அங்கு மத ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டு, 2014ம் ஆண்டு டிசம்பர் 31க்கு முன்புவரை இந்தியா வந்துள்ள இந்து, சீக்கிய, பவுத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள், சட்டவிரோத குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள், இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

ஹிட்லரின் ஜெர்மனி : வரலாற்றில் இருந்து பாடம் கற்க தவறினால் வரலாறு உங்களுக்கு பாடம் கற்பிக்கும்

Karthikeyan Fastura : ஹிட்லர் ஜெர்மனியை ஆட்சி செய்தபோது அவர் கைக் கண்டு அஞ்சினர், வெறுத்தனர், சிலர் போர்க்கொடி பிடித்தனர். அவ்வாறு போர்க்கொடி பிடித்தவர்களை துரோகிகள் என்று தம்மவர்களையே கொலை செய்யத் தொடங்கினார்.
செய்ததெல்லாம் சரி என்று சொல்ல மக்களின் பெரும் கூட்டம் இருந்தது. அதனால் அவர் நன்றாக சென்று கொண்டிருந்த ஜெர்மனியின் பொருளாதாரம் வேகத்தை
மட்டுப்படுத்துவதோடு கூடவே அண்டை நாடுகளின் மீது தாக்குதலை தொடங்க ஆரம்பித்தார். அந்த தாக்குதலானது வெறும் போராக மட்டுமில்லாமல் யூதர்களின் இன அழிப்பில் கொண்டு சேர்த்தது. அது தீராத களங்கத்தை ஜெர்மனிக்கு அதன் வாழ்நாள் முழுக்க கொடுத்துக் கொண்டே இருக்கிறது. முதலில் ஆதரவளித்த தலைவர்களும் மக்களும் கூட ஹிட்லரின் போக்
பிறகு உலக நாடுகள் அவர்மீது பதில் தாக்குதல் நிகழ்த்தி நெருக்கடி கொடுத்து இறுதியில் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு நாசி என்ற சித்தாந்தமே படு பாதகமான, எல்லோரையும் அழிக்கக்கூடிய ஒரு சிந்தனை வாதம் என்று ஜெர்மனிய மக்களால் ஒதுக்கப்பட்டது. முற்றிலுமாக கைவிடப்பட்டது.

BBC : அசாம் பற்றி எரிகிறது ..: துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

bbc :ரவி பிரகாஷ் - பிபிசி ஹிந்தி : இந்திய மக்களவை மற்றும் மாநிலங்களைவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அசாமில் .கடும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் பெருமளவில் வீதிகளில் இறங்கி போராடிவருகின்றனர். போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறங்கியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர் என்பதை பிபிசி ஹிந்தி சேவையிடம் அசாம் டிஜிபி உறுதி செய்துள்ளார். ஆனால் இது போலீஸ் துப்பாக்கிச்சூட்டில்தான் நடந்ததா என்று அவர் கூறவில்லை.
போராட்டக்காரர்கள் தரப்பில் இருந்தும் தாக்கியதில் போலீசார் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை மதவேறுபாடு பாராமல் வெளியேற்றவேண்டும் என்று அசாம் மக்கள் 6 ஆண்டுகள் போராடியதன் பலனாக, அரசுக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையில் 1985-ம் ஆண்டு புகழ்பெற்ற அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

BBC :குடியுரிமை திருத்த மசோதாவை கேரளா ஏற்காது: முதல்வர் பினராயி


Kerala CM Pinarayi Vijayan: Kerala will not accept #CitizenshipAmendmentBill (CAB). CAB is unconstitutional. The central government is trying to divide India on religious lines. This is a move to sabotage equality and secularism. (file pic)
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த மசோதாவை கேரள மாநிலம் ஏற்காது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்த சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்தியா வை மத அடிப்படையில் பிளவுபடுத்த மத்திய அரசு முயல்வதாக கூறிய அவர், இந்த நடவடிக்கை சமத்துவத்தையும், மதச்சார்பின்மையையும் நாசம் செய்வதற்கானது என்றும் கூறியுள்ளார். மேற்குவங்கம் இந்த சட்டத் திருத்தத்தை ஏற்காது என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்

இலங்கை அகதிகளுக்கு இதற்காகதான் குடியுரிமை கொடுக்கவில்லை! – எச்.ராஜா விளக்கம்!

tamil.webdunia.com :இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை சட்டத்தில் இடமளிக்காதது ஏன் என எச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார். குடியுரிமை சட்ட மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்துள்ள நிலையில் அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. குடியுரிமை பெற தகுதியுடையோர் பட்டியலில் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் இணைக்கப்படாதது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.

குடியுரிமை சட்ட வரைவுக்கு எதிராக டிசம்பர் 17-ல் திமுக போராட்டம்

மாலைமலர் :பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக
டிசம்பர் 17-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.  சென்னை: பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நேற்று நிறைவேறியது. இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு நிலவிவருகிறது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17-ம் தேதி மாவட்டம் தோறும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த பா.ஜ.க.- அ.தி.மு.க.வை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன் என்கிறார் ரிச்சர்ட் பிரான்சன்.Virgin Mobile Richard Branson

ரெபெல்ரவி  : தமிழண்டா…. .. ரிச்சர்ட் ஜார்ஜ் நிக்கோலஸ் பிரான்சன், ஒரு பிரிட்டிஷ்
தொழிலதிபர்.
அவரது வர்ஜின் குழுமம் உலகின் மிகப்பெரிய செல்வந்தக் குழுமங்களில் ஒன்றாகும்.
சிறு வயதிலே இவருக்குச் சரியாக படிக்க வரவில்லை.
டிஸ்லெக்ஸியா என்கிற வியாதி அவருக்கு இருந்ததால் படிப்பில் கவனம் செல்லவில்லை. அந்தக் காரணத்தால் அவர் பள்ளியை விட்டு விலகினார். பள்ளியின் கடைசி நாளன்று அவரது ஹெட்மாஸ்டர் ரோபட் ரேசன், பிரான்ஸனிடம் கூறினார்: ஒன்று நீ சிறைக்கைதியாவாய் அல்லது கோடீஸ்வரன் ஆவாய்..
தொழிலதிபர் ஆகவேண்டும் என்று விருப்பப்பட்ட பிரான்சன் தனது 16வது வயதில் ஸ்டுடென்ட் என்கிற பத்திரிகையை ஆரம்பித்தார். அதற்குப் பிறகு வர்ஜின் ரெக்கார்ட்ஸ் என்கிற நிறுவனத்தைத் துவக்கிப் பல பாடல்களை அதன் மூலமாக வெளியிட்டு 1972இல் இருந்து அந்தத் துறையிலேயே கோலோச்சி வந்தார்.
அவரது பெற்றோர் அவரது எல்லா தொழில் முனைவுக்கும் ஊக்கம் தந்து உதவி புரிந்தனர்.அந்தக் காரணத்தால் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது.
ஒருமுறை அவர் போர்ட்டோ ரிக்கோவுக்கு விமானத்தில் செல்ல இருந்தார். ஆனால், அவர் செல்ல இருந்த விமானம் ஏதோ காரணங்களால் ரத்தாகிவிட்டது. உடனே அவர் ஒரு விமானத்தையே சார்ட்டர்ட் என்கிற முறையில் வாடகைக்கு எடுத்து, ரத்தான விமானத்தில் பயணிக்கவிருந்த மற்ற பயணிகளையும் என்னோடு வாருங்கள் ஒரு சிறிதளவு பணம் கொடுங்கள் என்று கூறி அவர்களையும் அந்த விமானத்தில் அழைத்துச் சென்றார்.

டெல்லிக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பை விட யாழ்பாணத்துக்கும் சென்னைக்குமான உறவும் தொடர்பும் அதிகம்

Don Ashok -Ashok.R : சென்னைக்கும் டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்காரனுக்கும்
வடநாட்டானுக்கும் உள்ள தொடர்பைவிட சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்குமான உறவும் தொடர்பும் அதிகம். வாழ வக்கற்ற வடநாட்டான்கள் இங்கே குடியேறலாம், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் குடியேறக் கூடாது என்றால் சூடுசொரணை உள்ள எவனாவது அதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பானா? முதலில் மனிதனை மத ரீதியில் தரம்பிரிக்க இவர்கள் யார்?
ஒருவேளை 'நாட்டின் நலனுக்காகவே' மத/சாதி ரீதியிலேயே மக்களைப் பிரித்தால் கூட, இந்த நாடு எந்த மதத்தினரால் எந்த சாதியினரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என நாம் ஒரு கணக்கெடுப்போம். பார்ப்பனச் சாதி என்றுதான் முடிவுகள் வரும். முகாலயர்கள், வெள்ளையர்கள் காலத்திலிருந்து, பின் ஹிட்லர் ஜெயிக்கிறான் எனத் தெரிந்தவுடன் முதல் ஆளாக ஜெர்மன் மொழி படிக்கப்போனதுவரை வந்தாரின் கால்களுக்கிடையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டது எந்த சாதி? காற்றுபுகாத இடங்களில் கூட காட்டிக் கொடுத்தது எந்த சாதி? எந்த முஸ்லிம் வெள்ளைக்காரனிடம் மன்னிப்பு கேட்டான்? உங்கள் சாவர்க்கர் முஸ்லிமா? பாரதியார் முஸ்லிமா? வாஜ்பாய் முஸ்லிமா? இவர்கள் எல்லோரும் இந்துக்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்கள் என்பதை நினைவில் கொள்க. ஆனால் அப்படிப்பட்டவர்களைக் கூட ஒருநாளும் நாம் பிரித்துப் பார்த்ததில்லையே? ஏதோ வாழ்ந்துவிட்டுப் போ, நாங்கள் போராடிக்கொள்கிறோம் என்றுதானே விட்டுவைத்திருக்கிறோம்.
இதெல்லாம் கூட விடுங்கள். நாடு என்பதற்கான வரையறை என்ன? ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு வரை டெல்லி என்பது தமிழர்களுக்கு வெளிநாடு. இப்போதிருக்கும் இந்தியா என்கிற நாடே வரலாற்றில் இல்லை.

ஸ்டாலின் : எடப்பாடி ஆட்சி இப்போது தமிழர்களுக்கு துரோகம் செய்யும் ஆட்சியாக மாறியிருக்கிறது

தினகரன் : சென்னை:  “இதுவரையில் ஊழல் ஆட்சி, கொலைகார ஆட்சி, கொள்ளைக்கார ஆட்சி என்று சொல்லக் கூடிய நிலையில் இருந்த எடப்பாடி ஆட்சி, இப்போது தமிழர்களுக்கு துரோகம் செய்யும் ஆட்சியாக மாறியிருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் வழக்கு தொடுத்த நிலையில், 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இடஒதுக்கீட்டின்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தி இருந்தோம். அதை ஏற்றுக்கொண்டு, சில அறிவிப்புகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டு உள்ளது. 2016ல் திமுக ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடுத்த நேரத்தில் அப்போது அரசு செயலாளராக இருந்த ஹன்ஸ்ராஜ் வர்மா ஒரு பிரமாண வாக்குமூலத்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்தியாவை மதச்சார்புள்ள நாடாக மாற்ற பாஜ முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு


dinakaran : சென்னை: இந்தியாவை மதச்சார்புள்ள நாடாக மாற்ற பாஜ அரசு முயற்சிக்கிறது என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் குற்றம்சாட்டியுள்ளார்.  பாரதியாரின் 138வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு முன்னாள் தலைவர் தங்கபாலு தலைமையில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய்தத், ரிவல்ல பிரசாத் மற்றும் கோபண்ணா, தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், வக்கீல் செல்வம், செல்வபெருந்தகை, சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்ன், மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது, உள்நோக்கத்துடன் கூடிய இந்த சட்ட திருத்தத்தை காங்கிரஸ் ஆதரிக்காது. இது இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியாக அமையவில்லை.இந்தியாவை மத சார்புள்ள நாடாக மாற்ற வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் கொள்கை. அதன் அடிப்படையில் திட்டமிட்டு மத்திய பாஜ அரசு செயல்பட்டு வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை! உச்சநீதிமன்றம்

தினமலர் : புதுடில்லி : தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்த, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி, தி.மு.க., தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், '2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரு வகையான உள்ளாட்சி அமைப்புகளில், 1.50 லட்சம் பதவிகள் உள்ளன.
இப்பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில், மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டது. இதற்காக, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வார்டு வரையறை செய்யப்பட்டது. இட ஒதுக்கீடு அடிப்படையில், சில உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமே பிரிக்கப்பட்டன. இதற்கிடையே, விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, வேலுார் மாவட்டங்களைப் பிரித்து, அரசு, ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்கியது. மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு, நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டு, அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.
ஊரக உள்ளாட்சிகளில் உள்ள ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டும், மாநில தேர்தல் ஆணையம், கடந்த, 2ம் தேதி, தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது.

குடியுரிமை சட்ட வரைவை எதிர்க்கும் தமிழக எம்.பிக்களின் வாதங்கள்! CAB

குடியுரிமை மசோதாvikatan.com - மோகன் இ : குடியுரிமைச் சட்டத்திருத்த வரைவுக்கு  அ.தி.மு.க தவிர தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி-க்கள் இந்த மசோதாவை எதிர்த்துப் பேசியுள்ளனர். குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தமிழர்களின் குரல் வலுவாக ஒலித்துள்ளது.
மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில்,
"சிறுபான்மையினரின் உரிமையைப் பாதுகாப்பதில்தான் பெரும்பான்மை சமூகத்தின் பெருந்தன்மை அடங்கியிருக்கிறது என்று அம்பேத்கர் கூறியிருக்கிறார். பெரும்பான்மை என்கிற பெயரில் சிறுபான்மையினரின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவது ஜனநாயகத்துக்கு புறம்பானது மட்டுமல்ல, பாசிசப் போக்கு. நம்முடைய தேசம் பாசிசத்தை நோக்கி நகர்கிறது என்பதற்குச் சான்றாக இந்தச் சட்டத்திருத்த மசோதா விளங்குகிறது. குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் விலக்கிவைத்து அவர்களுக்கு இங்கே இடமில்லை எனச் சொல்வது பாசிசத்தின் உச்சம். அடைக்கலம் தேடி வருபவர்களை அரவணைப்பதுதான் மனித நாகரிகத்தின், மனித நேயத்தின் உச்சமாகும்.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளும் புலம் பெயர் தமிழ் அகதிகளும்


உலகம் முழுவதும் பரவி இருக்கும் புலம் பெயர் ஈழத்தமிழ் அகதிகளே!
உங்களின் உடன் பிறப்புக்கள் சுமார் இரண்டு இலட்சம் பேர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அகதி முகாம்களில் வசிக்கின்றனர் ..
அங்கு வசிக்கும் இளம் சந்ததியினர்க்கு இலங்கையே தெரியாது.
அவர்களில் கணிசமானவர்கள்  இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்து இந்தியர்களாகவே வளர்ந்து விட்டவர்கள் ..
அதாவது இலங்கை தமிழ் அகதிகளாகவே வளர்ந்து விட்ட இந்திய தமிழர்கள் அவர்கள். .
அவர்களை எல்லாம் ஊருக்கு திரும்பி போகலாம்தானே என்று உங்களில் பலர் கருதுவது தெரியும் .
அதற்கு காரணம் , நீங்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியேறி புலம் பெயர் நாடுகளில் நிரந்தரமாக் தங்கியதால் அங்கு உள்ள தமிழர்களின் குடிசன தொகை குறைந்து விட்டது என்பதுதான் .
அதனால் அங்கு தமிழர்களின் தேர்தல் தொகுதிகளும் குறைந்து விட்டன. உங்கள் இடப்பெயர்வினால் ஏற்பட்ட அந்த குடிசன வெற்றிடத்தை இவர்களை கொண்டு நிரப்பலாம் என்று நம்புகிறீர்கள்?
இந்தியாவில் பிறந்து வளர்ந்து ஒரு சராசரி இந்தியர்களாகவே மாறிவிட்ட உங்கள் உடன் பிறப்புக்கள், மீண்டும் வந்து அந்த இடங்களை நிரப்ப வேண்டும்? அதாவது உங்களின் அரசியல் பொழுது போக்கிற்கு இரையாக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் ?
அவர்கள் இந்திய குடியுரிமை பெறுவதை நீங்கள் விரும்பவில்லை என்று கருத இடமுண்டு .
எனவேதான் இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என்று பாஜகவும் அதிமுகவும் கூறுவதை உங்கள் கள்ள மௌனத்தால் ஏற்று கொள்கிறீர்கள்.?

இந்தியாவின் முதல் 10 பணக்கார சாமியார்களின் சொத்து மதிப்பு பட்டியல்

Surya Thozhar: இந்தியாவின் முதல் 10 பணக்கார சாமியார்களும் அவர்களின் சொத்து மதிப்பு பட்டியல்.
1.ஆச்சார்யா பாலகிருஷ்ணா-17,000 கோடி
2.நித்தியானந்தா- 10,350 கோடி
3.ஜக்கி வாசுதேவ்- 6,300 கோடி
4.பாபா ராம்தேவ் - 4,500 கோடி
5.டபுள்ஸ்ரீ ரவிசங்கர்- 3,500 கோடி
6. பால் தினகரன் - 2,200 கோடி
7. அமிர்தானந்தமாயி - 1,500 கோடி
8. ஆசாராம்பாபு - 900 கோடி
9. குர்மீத் ராம் ரஹீம் சிங் - 700 கோடி
10. அவதூத் சிவானந்த் மகாராஜ் - 400 கோடி
இதில் குர்மித் ராம் ரஹீம் சிங்கும், ஆசாராம் பாபுவும் பாலியல் பலாத்கார குற்றத்திற்காக சிறையில் உள்ளனர்.
நித்தியானந்தா வெளிநாடு தப்பி ஓடியாச்சி..
இப்போது ராம்தேவ் ஓடத் தயாராகிறான்...

புதன், 11 டிசம்பர், 2019

ஸ்டாலின் : குடியுரிமை சட்ட வரைவு ... அதிமுக கட்சியிலிருந்து அண்ணா பெயரை நீக்கிவிடலாம்.


Veerakumar - /tamil.oneindia.com/ சென்னை: அதிமுக கட்சியின் பெயரில் உள்ள அண்ணாவின் பெயரை நீக்கிவிடலாம் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் அதிமுக ஆதரவு வழங்கியது. இதுகுறித்து டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார், ஸ்டாலின்.
குடியுரிமையை மதத்துடன் இணைப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019 என்பது மதச்சார்பின்மை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் மீதான நேரடித் தாக்குதல் - எந்தவொரு ஜனநாயகத்திற்கும் அவசியமான கொள்கைகள்
CitizenshipAmmendmentBill2019-க்கு ஆதரவு தெரிவித்து, சிறுபான்மையினர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
பாஜக-வின் கொள்கைதான் அதிமுக-வின் கொள்கை என்றால், உங்கள் கட்சியின் பெயரில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு? இவ்வாறு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், லோக்சபாவில் குடியுரிமை சட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்ததாக சில ஊடகங்களில் வெளியான செய்திக்கு அதிருப்தி வெளிப்படுத்திய ஸ்டாலின், அந்த செய்திகள் உண்மையில்லை என்று தெளிவுபடுத்தினார்.

நித்தியின் ஆன்லைன் ஆசீர்வாத வசூல் வேட்டை ,,,,

நித்தியின் ஆன்லைன் ஆசீர்வாத வசூல்!மின்னம்பலம் : நித்யானந்தாவின் பாதபூஜை பிசினஸ் பற்றி பாதி பார்த்தோம், மீதி பார்ப்போம்.
பாத பூஜை என்பது குருவுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் என ஆரம்பித்து நித்தி அளிக்கும் விளக்கங்களில் மயங்கி, உலகம் முழுவதிலிருந்தும் தினந்தோறும் காலை நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் நித்யானந்தாவுக்கு பாத பூஜை செய்து வருகிறார்கள்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி சீடர்கள் எங்கிருந்தாலும் நித்தியின் போட்டோவை முன்வைத்து அதற்கு பாத பூஜை செய்யும் அபரிமிதமான பக்தி அவர்களுக்குள் இருக்கிறது.
எத்தனை நாளைக்குத்தான் எங்கோ இருக்கும் நித்திக்கு இங்கே அமர்ந்து நான் பாத பூஜை செய்வது? அவருக்கு நேருக்குநேர் பாத பூஜை செய்ய என்னால் முடியாதா? எனக்கு வாய்ப்பு இல்லையா? என்று கேட்பவர்களுக்காகவே நித்தியானந்தா அறிமுகப்படுத்தி இருக்கும் பாதபூஜை பெயர்தான் பிரத்யக்ஷ பாத பூஜை. அதாவது நேரில் சென்று செய்யும் பாதபூஜை.இதற்காக பக்தர்கள் தங்களது கிரெடிட் கார்ட் மூலம் ஆன்லைனில் புக்கிங் செய்து கொள்ளவேண்டும். ரெட் பஸ் போன்ற செயலிகளில் பேருந்துக்கு எப்படி முன்பதிவு செய்கிறீர்களோ, இந்திய ரயில்வேயின் ஆன்லைன் பக்கத்தில் எப்படி ரயில் இருக்கைகளுக்கு முன்பதிவு செய்கிறீர்களோ... அப்படித்தான் நித்தியின் பாதங்களுக்கு பூஜை செய்யவும் நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

பாரதியின் மறுபக்கம் . உள்ளே பார்ப்பனீய பெருமை ..வெளியே சமரசம் ..?

க.ம.மணிவண்ணன்  : பாரதி(யார்? பாரதியின் கவிதைகளைப் படித்துவிட்டு
அவரை வானளாவப் புகழும் நம்மில் பல பேர் அவர் சுதேசமித்திரன், இந்தியா ஏடுகளில் எழுதியவைகளையும் அவரது கட்டுரைகளையும் முழுமையாக வாசிப்பதில்லை, அவ்வாறு வாசித்திருந்தால் இன்றைய ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி களுக்கு அவர்தான் முன்னோடி என்பதும் அவர் மகாகவி அல்ல மகா"காவி" என்பதும் தெளிவாக விளங்கும்.
1) சுதேசமித்திரன் ஏட்டில் 1906ல் “எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்” என்ற தலைப்பில், “ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேசமாயினதே” என்று எழுதியவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
2) 1907 இல், சுதேசமித்திரனில் “வந்தே மாதரம்” பாடலில் “ஆரிய பூமியில் நாரியரும் நர சூரியரும் சொலும் வீரிய வாசகம் வந்தே மாதரம்” என்றெழுதி இந்தியாவை ‘ஆரிய பூமி’ என்றழைத்தவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
3) “சுதேச கீதங்கள்” என்னும் தலைப்பில் தமிழ்த்தாய் கூறுவதாக “ஆன்ற மொழிகளினுள்ளே – உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்” என்று ஆரியத்தை உயர்த்தி எழுதியவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
4) சமஸ்கிருதம் ஒன்றே தெய்வபாஷை மற்றவைகள் எல்லாம் மனிதர்கள் பேசும் சாதாரண பாஷை என்று எழுதியவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா? (ஆதாரம்: பாரதியார் கட்டுரைகள், ப.46, வானதி பதிப்பகம், சென்னை, 1981)

உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்: ஸ்டாலினுக்கு துரைமுருகன்...

உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்: ஸ்டாலினுக்கு யோசனை சொன்ன துரைமுருகன்மின்னம்பலம் : உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்று (டிசம்பர் 11) உச்ச நீதிமன்றத்தில் நடந்த வாதப் பிரதிவாதங்கள் பற்றிய செய்திகளை அறிவாலயத்தில் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
ஒருமணிக்கு மேல், ‘உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தடையில்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு’என்ற பிரேக்கிங் நியூஸ் வெளிவந்ததைப் பார்த்ததும் ஸ்டாலின் அப்செட் ஆகிவிட்டார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்ன என்பதை தீர்ப்பின் நகல் வந்த பிறகு சொல்லுமாறு டெல்லி வழக்கறிஞர்களுக்கு நிர்வாகிகள் மூலம் தெரிவித்த ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி தனது அதிருப்தியை துரைமுருகனிடம் தெரிவித்தார்.